-
21st March 2016, 12:50 AM
#1
Junior Member
Senior Hubber
Nadigar Thilagam Sivaji Ganesan Part-18
எந்த ஒரு நல்ல காரியம் துவக்கினாலும், அந்த கணேசப்
பெருமானை வணங்கித்
துவக்குதல் நலமென்பார்கள்.
நல்ல மனங்கள் மெச்சும் நடிகர்
திலகத்தின் புகழ் மணக்க,
திரியின் பதினெட்டாம் பாகம்
ஆரம்பித்து வைக்கிற நல்ல காரியம் துவக்குகிற நானும்
கணேசப் பெருமானை வணங்கித் துவக்குகிறேன்.
அன்னை பார்வதிக்கும், அப்பன்
பரமனுக்கும் அருந்தவப்புதல்வனாய் அவதரித்து,
அன்றாடங்கள் தருகிற துன்பங்கள் தாங்காமல் அழுதோடி வரும் கூட்டத்தின்
கவலைகள் தீர்த்து வைத்து,
"என்னைத் தேடி வந்தால் இன்பமுண்டு எல்லோருக்கும்"
எனும் உறுதி தந்து சிரிக்கின்ற
அந்த கணேசப் பெருமானை
மட்டுமல்ல...
அன்னை ராஜாமணியாருக்கும்,
அய்யன் சின்னையருக்கும்
அருந்தவப் புதல்வனாய் அவதரித்து,
அன்றாடங்கள் தருகிற துன்பங்கள் தாங்காமல் அழுதோடி வரும் கூட்டத்தின்
கவலைகள் தீர்த்து வைத்து,
"என்னைத் தேடி வந்தால் இன்பமுண்டு எல்லோருக்கும்"
எனும் உறுதி தந்து சிரிக்கின்ற
கலை தெய்வம் சிவாஜி கணேசப் பெருமானையும்
வணங்கித் துவக்குகிறேன்.
-
Post Thanks / Like - 2 Thanks, 5 Likes
-
21st March 2016 12:50 AM
# ADS
Circuit advertisement
-
21st March 2016, 12:56 AM
#2
Junior Member
Senior Hubber
கடவுள் வாழ்த்து.
----------------
சும்மா
பெருமைக்காகச் சொல்லவில்லை நாங்கள்...
நடிகர் திலகத்தைக்
கடவுளென்று.
கடவுளென்பவன் யார்..?
சராசரி மனிதனின்
வேகங்கள், திறமைகள் மீறிய
மகாசக்தி கொண்டவன்
கடவுள்.
எங்கள் நடிகர் திலகத்திற்கு
அந்த சக்தி இருந்தது.
ஆகவே கடவுளென்கிறோம்.
சாதாரண மனிதனின்
சங்கடங்கள் தீர்க்க வல்லவன்
கடவுள்.
எங்கள் நடிகர் திலகம்
தீர்த்திருக்கிறார்.
ஆகவே கடவுளென்கிறோம்.
சார்ந்திருக்கும்
அத்தனை பேரையும்
சந்தோஷமாக வைத்திருப்பவன்
கடவுள்.
எங்கள் நடிகர் திலகம் வைத்திருக்கிறார்.
ஆகவே கடவுளென்கிறோம்.
கடவுளுக்கான ஆடைகளை
அணிந்து,
கடவுளுக்கான ஆபரணங்களை
அணிந்து,
கடவுளுக்கான
விசேஷப் புன்னகையும்
சுமந்து...
இங்கே
எத்தனையோ நடிப்பறிஞர்கள்
கடவுளின் வேடமிட்டு
நடித்திருக்கிறார்கள்.
ஜெயித்திருக்கிறார்கள்.
இன்று, நேற்றல்ல...
கலை உலகத்திற்கும்,
கடவுள் வேடத்திற்கும்
நீண்டகாலமாக நெருக்கம்.
ஆனால்...
ஒரு நடிகன் கடவுளானதும்,
அவன் நடித்தே கடவுளானதும்..
நடிகர் திலகத்திலிருந்துதான்
தொடக்கம்.
-
Post Thanks / Like - 2 Thanks, 5 Likes
-
21st March 2016, 12:58 AM
#3
Junior Member
Senior Hubber
அரை டிராயர் பருவத்தில்,
எங்களூர் பங்குனித் தேரோட்டத்தில் நண்பர்களோடு
நான் தேரிழுத்ததை ஒப்பிடலாம்... இன்று, திரியின்
அடுத்த பாகம் துவக்குகிற
என் செயலை.
பிஞ்சுக் கரங்களால் சுமக்க
இயலாத மிகக் கனமான இரும்பாலான தேர் வட நீளத்தை பல நூறு பலம் மிகுந்த கரங்கள் வியர்வைப்
பிசுபிசுப்போடு பற்றியிருக்க,
கிடைத்த விரலளவு இடைவெளியில் கை பதித்து,
"வேல்..வேல்" என உற்சாகக்
கூவலோடு தேர் அசைந்தாடிக்
கிளம்பிய போது, நானிழுத்துத்
தேர் நகர்வதாய் அன்றைய
என் சந்தோஷம் காட்டிய
"சின்னப்பிள்ளைத்தனம்"
மீண்டும் இன்று திரியின்
பாகம் துவக்கத் திரும்பியிருக்கிறது.
பலம் பொருந்திய பலநூறு கைகள் உங்களுடையவை.
சற்றும் தளராத பேருழைப்பும்,
உழைப்பால் சிந்திய வியர்வைச்
சொட்டுகளும் உங்களுடையன.
ஊருலகமெல்லாம் உயரம்
பார்த்துக் கும்பிடும் கலைக்
கடவுளை உள்ளமர்த்திய
கம்பீரத் தேர், உங்கள் இழுப்பால்
நகர, நகர எழும் பரவசக் கோஷத்தோடு கலந்து விட்ட மெலிதான குரலும்,
அந்தக் கடவுளின் பக்தனென்று
அடையாளப்படுத்திக் கொள்ள
விரும்புகிற ஆர்வ மனமும்
மட்டுமே என்னுடையன.
வடமிழுக்க வாய்ப்பு தந்து,
வரவேற்பும் சொல்லி வாழ்த்திய
சக்தி மிகுந்த அந்த சாதனைக்
கரங்களுக்கு உரிய்வர்களே..
அய்யா திரு.முரளி ஸ்ரீநிவாஸ்,
அய்யா திரு.கோபால்,
அய்யா திரு.சிவாஜி செந்தில்,
அய்யா திரு.ராகவேந்திரா,
திரு.செந்தில்வேல்,
பெரியவர் அய்யா திரு.சுப்ரமணியம் ராமஜெயம்,
திரு.எஸ்.வாசுதேவன்,
திரு.எஸ்.எஸ்.எஸ்,
திரு.எஸ்.பி.சௌத்ரிராம்,
திரு.பரணி,
திரு.சிவா/கனடா,
.................,
.................,
..................,
..................,
இன்னும், இன்னும் பெரிதாய்
நீளும் பட்டியலிலிருக்கும்
திரியின் சான்றோர்களே...
நீங்களனைவரும் தந்த,
தரவிருக்கிற நிலைத்த
ஆதரவுக்கு நன்றி சொல்லி,
இந்தச் சிறுவன் கரங்கள்
கூப்புகிறேன்.
-
Post Thanks / Like - 3 Thanks, 5 Likes
-
21st March 2016, 01:00 AM
#4
Junior Member
Senior Hubber
வெற்றிகள் கிடைக்கிற
திசைநோக்கி விழிகாட்ட...
சான்றோரின் சபை நோக்கி
வழிகாட்ட...
எங்கள் மன்னவன் வந்தான்.
மன்னவன்
விழிகாட்டிய
திசையெந்தன்
திசையென்று...
அவன் வழிகாட்டிய
சபை நின்று
புகழ் வெல்லும்
திடம் கொண்டு...
இந்தச் சின்னவன் வந்தான்.
-
Post Thanks / Like - 1 Thanks, 4 Likes
-
21st March 2016, 01:02 AM
#5
Junior Member
Senior Hubber
இந்த நிமிஷத்திலிருந்து நம்
மனம் பாடும் பாடலெல்லாம்
இந்தப் பாடலின் முதல் வரி கொண்டே துவங்கட்டும்.
மகிழ்வும்,பூரிப்பும், நினைத்தது
கிடைத்து விட்ட பெருமகிழ்வும்,
நிம்மதியுமாய் நடிகர் திலகத்தை நேசிப்போர் வாழ்வில் நலம் துலங்கட்டும்.
-
Post Thanks / Like - 1 Thanks, 4 Likes
-
21st March 2016, 01:04 AM
#6
Junior Member
Senior Hubber
நடிகர் திலகம்-
ஒரு அதிசயம்.
ஒன்றேகால் ரூபாய்
செலவழித்தவனுக்கு
உலகத்தின் மிகச் சிறந்த
மனப் பரசவங்களைப்
பரிசளித்த
மகா அதிசயம்.
பிம்பங்கள் உலவிய
சினிமாத் திரைகளில்
உயிருள்ள, உயிர்ப்புள்ள
மனிதர்களைக் காட்டிய
அதிசயம்.
பாட்டுக் கடலில்
வீழ்ந்து மடியவிருந்த
ஐம்பதுகளின் தமிழை,
வசன சிகிச்சை செய்து
காப்பாற்றிய அதிசயம்.
தமிழ் என்கிற
அற்புதமான மொழியின்
விசாலமான அழகை,
ஒரு சின்னஞ்சிறு சொல்லுக்குள்
காட்டிவிட்ட அதிசயம்.
தொழிலைத்
தவமாகவும்,
கலையை
உயிராகவும்
கொண்ட அதிசயம்.
-----------------------------
நடிகர் திலகத்தின்
புன்னகை-
அதிசயத்தின் அதிசயம்.
ஓர் பள்ளி விடுமுறைக்
காலத்தில், மாமா வீட்டுக்குப்
போயிருந்த போது மதுரையில்
"குலமகள் ராதை" பார்த்தேன்.
அதில் வரும் இந்த "ராதே
உனக்கு" பாடல் எனக்கு
அநியாயத்துக்குப் பிடித்துப்
போனது.
நடிகர் திலகத்தின் மென்பாடல்கள் மீதான என்
ஈர்ப்பைத் துவக்கி வைத்த
பாடலிது.
அழகான காதலன்.
அழகான காதலி.
அழகான கிண்டல்.
அழகான கோபம்.
மீண்டும் அழகான இசைக் கேலி.
அழகான காதல்.
மனசு முழுக்க மகிழ்வோடு
இருப்பவனை ஒரு புன்னகை
கொண்டே நம் முன்னே
காட்சிப்படுத்துகிற வல்லமை,
நடிகர் திலகத்திற்கே வாய்த்திருக்கிறது.
அபிநய சரஸ்வதியைக்
கேலியும், காதலுமாய் துரத்துகிற போது,
கைபிடித்திழுத்து, முகம் திருப்பி, முகத்தில் முகம்
பொருத்தி, பாடாய்ப் படுத்தும்
போது,
"உன்னை மணம் புரி...பவன்
நானல்லவோ...?" என்று
மெலிசான சங்கதியோடு
இரண்டாம் முறை பாடும்
போது,
அகலமான நிலைக்கண்ணாடியில் தமது
அழகு பிம்பங்கள் தெரிய,
காதலியின் உச்சந்தலையில்
முகவாய் பொருத்தி அழகுறப்
பாடும் போது,
காதலி விலகி ஓட, ஓட்டமில்லாத வேக நடையில்
ஒயிலாக விரட்டி வரும் போது,
நடிகர் திலகத்தின் முகத்தோடு
ஈஷிக் கொண்டு, விதவிதமாய்க்
கதை பேசுகிற அந்தப் புன்னகை...
அதிசயத்தின் அதிசயம்.
ஒரு கடமையாக, தன் தொழில்
சார்ந்த செயலாக, அந்தச்
செயலின் விளைவாக
அல்லாமல், நடிகர் திலகத்தின்
அந்த அற்புதப் புன்னகையை,
கடவுள்-ஒரு கலைஞன் வழியே
நமக்களித்த பரிசாகப்
பார்க்கிறேன்.
நடிகர் திலகத்தை நேசித்துப்
பூஜிக்கும் அத்தனை பேருக்கும்
வாழ்வு நெடுக அப்படியொரு
புன்னகை நிலைக்க
பிரார்த்திக்கிறேன்.
-
Post Thanks / Like - 1 Thanks, 4 Likes
-
21st March 2016, 07:18 AM
#7
Senior Member
Seasoned Hubber
ஆதவன் ரவி,
தங்களுடைய பொற்கரங்களால் துவங்கப்பட்டுள்ள இத்திரியும் முந்தைய பாகங்களைப் போல் தொடர்ந்து முன்னிலையில் இருப்பதோடு அபார வரவேற்பினையும் பெறும் என்பதில் சற்றும் ஐயமில்லை.
தங்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
21st March 2016, 07:26 AM
#8
Junior Member
Newbie Hubber
என் மனதில் உறைந்திருக்கும்,நிறைந்திருக்கும் ,எனை கடவா,நான் கடவா ,விழுப்புரம் சின்னையா பிள்ளை கணேச மூர்த்தியை தொழுது ,
இத்திரியின் வெற்றிக்கு வாழ்த்துகிறேன். ஆதவன் ஒளி கடவுள். எங்கள் கர்ணனின் மூலம். திரிக்கு தங்கள் எழுத்துக்கள்
எண்ணையாகட்டும்.பற்றவைக்க ,நானும்,ராகவேந்தரும் உள்ளோம்.(நாராயண நாராயண )
என்னை கடவா கடவுள்தான் என்னுடைய கணினிக்கு கடவு சொல்.
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
21st March 2016, 07:39 AM
#9
Junior Member
Newbie Hubber
திரி ஒளிர வாழ்த்துக்கள். நான் எழுத நினைத்து ,ஆனால் தடித்த தோல் கொண்ட தமிழ் நெஞ்சங்களால், தள்ளி போன ஒரு தொடர். புரிகிறதா ,இல்லையா என்றாவது சொல்லி தொலைத்தால் எழுதுவதை பற்றி மறு சிந்தனையாவது செய்யலாம்.
நடிகர்திலகம்- கலை மரபின் நீட்சி -திசை மரபின் எழுச்சி.-
பகுதி-1
என் பிறப்பிற்கு ஒரு சிறந்த அர்த்தம் அளித்த என் மண்ணின் அசல் வித்து, உலகதிறமைகளின் மொத்த உறைவிடம்,அங்கீகாரம் பெறாத சரஸ்வதி மைந்தன் ,என் கலைஞானத்தை முழுமை பெற செய்த தெய்வ மகன், திறமை தவிர வேறு கண்டிலா உத்தம புத்திரன் பற்றி ஒரு ஆய்வு கட்டுரை தொடங்கும் உத்தேசம் இருந்தது.சரியான பொருட் தேர்வு ஏற்கெனவே செய்து முடித்தது. ஆய்வு தொடங்க இதுவே தருணம். விஷயங்கள் அறிந்திருந்தாலும் , சரி பார்க்க தொகுக்க நேரம் செலவாகும்.(இங்கே உள்ள அங்கத்தினர்களிடம் நான் எதிர்பார்த்த எண்ண எழுச்சி இருக்குமா என்பது சந்தேகம்). ஆனால் ஒரு முரளி,ஒரு ராகவேந்தர்,ஒரு கார்த்திக்,ஒரு வாசு ,ஒரு சாரதி, ஒரு வெங்கி ,ஒரு சி.க,ஒரு கல்நாயக்,ஒரு ஆதிராம்,ஒரு கலைவேந்தன் ,மற்றும் முகம் தெரியா பல அறிவு ஜீவிகள் (PM )இருக்கும் தைரியத்தில் துவங்குகிறேன்.
எந்த ஒரு கலையும் எக்காலத்திலும் முழுமை கண்டதில்லை. நாளும் வளரும், தேயும்,தேய்ந்து வளரும்,மாறும்,புதுப்பிக்கும், எல்லா திசையிலும் உள்ள அம்சங்கள் கவர்ந்து புதுமை காணும்,விஞ்ஞானத்தின் கூறுகளால் அக-புற மாறுதல்கள் எய்தும் ,மனித வாழ்க்கையின் வளர்ச்சிகளால் புற மாறுதல்கள் காணும்,இயல்பு கொண்டது.எந்த புள்ளியிலும் தொடங்கி,எங்கும் முடிவெய்துவதல்ல. அதே போல முழுதும் ஓர் இரவில் மாற்றம் காண்பதல்ல. ஒரு மனிதர்,ஒரு நிகழ்வு,என்று இதனை நிகழ்த்தி விட முடியாது. இது ஒரு பிரத்யேக குழு சார்ந்த எண்ண எழுச்சி,பொழுது போக்கு,கலாச்சாரம்,நுண்ணரசியல்,அயல் நுழைவுகளை அங்கீகரிக்கும் போக்கு இவை சார்ந்து குறுகிய வட்டத்தில் நிகழ்பவை. மொழி சாரா கலைகள் நீட்சி பெரும் கூறுகள் ,அங்கீகாரம் பெரும் சாத்தியங்கள் அதிகம்.(ஓவியம்,சிற்பங்கள் போன்றவை).மொழி சார் கலைகளோ பிரத்யேக குழுவின் அங்கீகாரம் வேண்டுபவை.
இதில் மனிதனின் அறிவின் நீட்சியை,புதுமை வேகத்தை புது திசையில் செலுத்தும் உயர்-ரக கலை முயற்சிகள், மற்ற பொதுமை சார் கற்பனை வளமற்ற கீழ்மை கலைகளால் நசுக்க பட்டு,புரிந்து கொள்ள படாமல் அல்லது வாழும் காலத்தில் அங்கீகாரம் பெறாமல்,காலத்தை மீறி நிற்கும் தன்மை பெறும். இதனை நிகழ்த்தும் அற்புத கலைஞர்கள் மற்றும் கிரியா ஊக்கிகள் , வாழும் காலத்தில் கீழ்நிலை மனிதர்களின் நுண்ணரசியல்,கீழ்தர வியாபார தந்திரம் இவற்றால் பாதிக்க பட்டு துன்புறுதல், காலம் தோறும் நாம் காணும் நிகழ்வுகள்.
இதனால் மொழி-சார் கலைகளில் ,அற்புதம் நிகழ்த்தும் படைப்பாளிகள்,மற்றும் படைப்புகளின் உள்வட்டம் வாழும் காலங்களில் சுருங்கியே நிற்கும்.ஆனால் பிற்காலத்தில் சிலாகிக்க பட்டு அமரத்துவம் பெறும்.
இதனை செலுத்தி,மக்களை ஒரு படி மேற்செலுத்தி செல்லும் கலைஞர்கள்,காலத்தை மீறி நிற்பார்கள்.நினைக்க படுவார்கள்.அறிச்டோபானஸ் ,இப்சென்,லியனார்டோ டா வின்சி ,வாத்ஸ்யாயன் ,மாக்கிய வில் ,ஷேக்ஸ்பியர்,கம்பன்,சாத்தர்,விட்டோரியோ டிசிகா,பிகாசோ,மொசார்ட் ,சிவாஜி கணேசன் போன்ற மேதைகள் ,தான் வாழும் காலத்தை மீறி ,கலைகளை முன்னெடுத்து சென்ற பிறவி மேதைகள்.
கலைகளின் கூறுகள் மாறி கொண்டே இருக்கும். ஓவியர்களின் நிகழ் பட வரைவு(மனிதர்,சுற்று பொருட்கள்),இயற்கை காட்சிகள், புகை பட கலையினால் தேய்வு கண்ட போது ,ஓவியன் தன்னை pointilism ,sur realism ,impressionism ,expressionism ,cubism என்று தன்னை புதுப்பித்து மாற்றம் கண்டு ஜீவித்தது.performing arts என நிகழ் கலைகளோ , கூத்து,பண் ,நாடகம்,திரைப்படம் என வெவ்வேறு வடிவெடுத்து ,அக-புற மாற்றங்கள்,சாத்திய கூறுகள் சார் வடிவ அக-புற மாற்றங்கள்,வியாபார வீச்சுக்கள் சார்ந்த பொருட்புழக்கம்,அந்தந்த கால மக்களின் அறிவு நிலை,எண்ண எழுச்சிகள்,மாற்றம் தேடும் விழைவு, அரசியல்-கலாச்சார நிகழ்வுகள்,வாழ்வு நிலை மாற்றங்கள் இவை சார்ந்து தன்னை இறுக்கி,நெகிழ்த்தி,மாற்றி,நிலையாமையே நிலையாய் கொண்டு மாற்றமே மாற்ற இயலா விழைவாய் கொண்டு , உயிர்பித்து வாழ்வதுமல்லாமல், மற்ற மாற்று கலைகளுடன் போராடி வெல்ல வேண்டிய அவசியமும்,அவசரமும் கொண்டது.
இதனை நிகழ்த்தி காட்டுவோரையே ,சமுகம்,பெருமையுடன் நினைவு கூற கடன் பட்டது. நான் இப்போது, நாடக திரை கலையில் பெரும் மாற்றத்தை நடிப்பு கலையில் நிகழ்த்தி காலத்தை வென்று நிற்கும் சிவாஜி என்ற அற்புத கலைஞன் ,அதனை மரபின் நீட்சியுடன்,திசைகளின் புது வரவின் எழுச்சியை இணைத்து சாதித்த அதிசயத்தை விஸ்தாரமாக எழுத உள்ளேன்.
இது சார்ந்து உங்கள் எண்ணங்களை முன்னோட்டமாக வரவேற்கிறேன்.
(தொடரும்)
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
21st March 2016, 09:05 AM
#10
Junior Member
Seasoned Hubber
Congratulations Mr Aathavan Sir for starting the Part 18 of our Acting God Thread.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks