Results 1 to 10 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part-18

Threaded View

  1. #11
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நடிகர் திலகமும் அரசியலும் என்பது போய்..இப்போது சிவாஜி சிலையும் மணிமண்டபமும் அரசியலும் என்று ஒரு புதிய அத்தியாயம் இந்த தேர்தலில் தொடங்கிஉள்ளது.

    நடிகர் திலகம் திரி நண்பர்கள் சற்று யோசித்து பார்த்தீர்களேயானால் ஒரு சில வருடத்திற்கு முன்பு இதே திரியில் சமூக நலபேரவை அரசியல் நிலைப்பாடு குறித்து நான் எழுதி இருந்தேன். அப்போது சில நண்பர்கள் எனது பதிவிற்கு கடுமையாக சாடியும் பதிவு செய்தார்கள். சமூக நலபேரவைக்கு அரசியல் சாயம் நான் பூச முயற்சிக்கிறேன் என்று !

    அப்போது மற்றொரு விஷயம் நான் கூறினேன். அதாவது...நான் கூறுவது நடக்கும் நாளில் திரும்ப அதற்க்கு பதில் தருவேன் என்று !

    நினைவிருக்கும் என்று நினைக்கிறன் அனைவருக்கும்...!

    இன்று மேற்கொண்ட பதிவு எனது கணிப்பு சரியே என்கிற ரீதியில் அமைந்துள்ளது ~ என்னை குறை கூறிய கனவான்கள் இப்போது என்ன பதில் வைத்துள்ளார்கள் ? முகத்தை எங்கே வைத்து கொள்ளபோகிறார்கள் என்பது தெரியவில்லை, தெரியவும் விரும்பவில்லை ~

    ஒவொரு அமைப்பு ஒரு கட்சியை ஆதரிப்பது அவர் அவர்கள் வருங்கால அரசியல் எண்ணங்கள், அரசியல் குறிக்கோளை பொறுத்த விஷயம் ! அது எனக்கு தேவை இல்லாதது !

    சிவாஜி சமூக பேரவை இந்த நிலைபாடை எடுத்துள்ளது சற்று ஆச்சர்யம் கலந்த ஒரு விஷயம்.

    அனைவரும் அரசியல் சார்பற்ற ஒரு அமைப்பு சிவாஜி சமூக நல பேரவை என்று நம்பியிருந்தார்கள் ..!

    ஆனால்....ஐயஹோ ! ....அந்தோ பரிதாபம் !!!.

    அன்றைய கட்டபொம்மன் வசனம் இன்று வரை சரியாகதான் உள்ளது ..."நல்லவர்கள் நினைப்பது ஒன்றுதான் நடப்பதில்லை இந்த தமிழ்நாட்டிலே ! "


    திரியில் படிக்க வரும் பொதுவான மக்கள் அனைவரும் ஒரு விஷயத்தை நினைத்து குழப்பம் கொள்ளகூடாது என்பதற்காகவே இந்த பதிவு !

    சிவாஜி சமூக நல பேரவை என்பது வேறு !

    அகில இந்திய சிவாஜி மன்றம் என்கிற அமைப்பு வேறு..!

    அகில இந்திய சிவாஜி மன்றம் மற்றும் அதில் இணைந்துள்ளவர்கள் திராவிட காங்கிரஸ் கட்சிகளை என்றுமே ஆதரிக்காது !

    ஆக்கபூர்வமான ஒரு வேட்பாளருக்குதான் ஒவ்வொருவரும் அவர் அவர் விருப்பத்திற்கு இணங்க தம்முடைய வாக்கை பதிவு செய்வார்கள் !

    சிவாஜி சமூக நல பேரவை திராவிட காங்கிரஸ் கட்சிகளை ஆதரிப்பதால் அனைத்து சிவாஜி அய்யா அவர்களின் ரசிகர்கள் இந்த இரண்டு கட்சிகளையும் ஆதரிக்க வேண்டும் என்றோ வேண்டாம் என்றோ கூறவில்லை.

    உண்மையான சிவாஜி அய்யா பக்தர்களுக்கு திராவிட கட்சிகள் தம்முடைய தலைவனுக்கு செய்த துரோகம் பற்றி நன்றாக தெரியும்....அதே சமயம் காங்கிரஸ் கட்சி செய்த அவதூறு , துரோகம் பற்றியும் மிக நன்றாக தெரியும் !

    ஒரு சிலை வைத்து நடிகர் திலகம் அவர்களுடைய ரசிகர்களை யாரும் விலைக்கு வாங்க முடியாது !

    புதுவையில் திரு ரங்கசாமி அவர்கள் சிலை வைத்த பிறகு தான் இங்கு சிலை வைக்கப்பட்டது !

    முதலில் சென்னையில் வைக்க கூட இல்லை !

    ஆய்யோ ரங்கசாமி பெயர் எடுத்துவிடாரே....இதை செய்துவிட்டாரே முதலில் என்ற எண்ணத்தின் விளைவு தான் சென்னையில் ஒரு சிலை.

    வைத்த சிலை உருப்படியாக GOVT முறைகளை பூரணமாக கூட செய்யவில்லை என்பது வருத்திலும் வருத்தம் !

    கண்டவர்களும் CASE போடும் அளவிற்கு சட்டத்தில் ஓட்டையை வைத்து விட்டு சிலை வடித்தார்கள், அதை திருத்த கூட முயற்சி ஏற்படவில்லை...எடுக்கிறார்கள் என்றவுடன்...திராவிடமும் காங்கிரேசும் வாய் திறந்து கண்டனம் கூட எழுப்பவில்லை...!

    இதனை அனைவரும் ஞாபகத்தில் வைத்துகொள்ளவேண்டுகிறேன் !

    உப்பு சப்பு பெறாத விஷயத்த்ரிக்கு பெரிய அளவில் போராட்டம் நடத்தும் இந்த இரு கட்சிகளும் வாய் மூடி...என்னமோ சமந்தமே இல்லாமல் வேடிக்கை பார்த்தது

    ...இப்போது நமது வோட்டு வேண்டுமாம் ! வோட்டு ! கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் தேர்தலில் ஊறுகாய் நாம் என்ற நினைப்பு !


    திராவிட காங்கிரஸ் கட்சிகளை நம்பி நட்டாற்றில் மூழ்கியது போதும் !

    சிவாஜி சமூக நல பேரவை என்பது அகில இந்திய சிவாஜி ரசிகர் மன்றம் அல்ல ! பொதுவில் உள்ள மக்கள் தயவு செய்து குழம்பவேண்டாம் என்று கேட்டுகொள்ளபடுகிறார்கள் !

    உங்கள் மனதிற்கு யார் நல்லது செய்தார்களோ அவர்களுக்கு வோட்டு அளியுங்கள் !

    திமுக நடிகர் திலகத்தை என்னவெல்லாம் கூறினார்கள் எப்படி எல்லாம் அவமானபடுத்தினார்கள்....ஞாயமாக நடிகர் திலகம் அவர்களுக்கு கிடைக்க இருந்த தேசிய விருதை எப்படி துரோகம் செய்து நமக்கு கிடைக்காமல் செய்தார்கள் அதுவும் தொடர்ந்து மூன்று வருடம் .....என்பது உள்ளங்கை நெல்லிக்கனி...!

    அதே போல...சிவாஜி அவர்கள் மக்கள் திலகத்துடன் இணைந்துவிட்டார் இனி அவர் படங்களுக்கு மேலும் நல்ல கூட்டம் வரும் என்று கூறியவர் கலைஞர் அவர்கள் ! இதை எல்லாம் உண்மையான பக்தர்கள் மறக்கவில்லை, மறக்கவும் மாட்டோம் !

    காங்கிரஸ் கட்சியும் தந்து பங்கிற்கு என்னவெல்லாம் அட்டோழியம் நடிகர் திலகதிற்கு, காங்கிரஸ் மூழ்கிய சமயத்தில் மீட்டுத்த, கரைசேர்த்த கலைஞன் நடிகர் திலகத்திற்கு இழிச்சொல் பழிச்சொல் செய்தது என்பதும் நாங்கள் மறக்கவில்லை. மறக்கவும் மாட்டோம் !

    சிவாஜி சமூக நலபேரவை திராவிட காங்கிரஸ் கட்சியை ஆதரிப்பது அவர்கள் விருப்பம் ....சமூக நலபேரவை என்கிற அரசியல் சார்புடைய அமைப்பு வேறு அனைத்திந்திய சிவாஜி ரசிகர் மன்றம் மற்றும் உண்மையான சிவாஜி ரசிகர்கள் நிலைப்பாது என்பது வேறு !

    எங்களுக்கு திராவிட கட்சிகளும் தேவையில்லை....காங்கிரெஸ் கட்சிகளும் தேவை இல்லை ! இனியும் நாங்க ஏமாற தயாராக இல்லை..!

    Rks

    Last edited by RavikiranSurya; 24th March 2016 at 01:49 PM.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •