-
7th June 2016, 07:29 PM
#351
Moderator
Diamond Hubber
சின்னத்திரையில் மீண்டும் என்ட்ரியான மெட்டிஒலி காயத்ரி!
சினிமாவில் பாசமலர், ராஜாவின் பார்வையிலே உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் காயத்ரி. அப்படி அவர் நடித்த ராஜாவின் பார்வையிலே படத்தில் விஜய்-அஜீத் இருவரும் நாயகர்களாக நடித்திருந்தனர். ஆனால் அதன்பிறகு சினிமாவில் அவர்கள் இருவரும் வளர்ந்து வந்தபோதும், காயத்ரிக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதனால் மெட்டிஒலி சீரியல் மூலம் சின்னத்திரையில் பிரவேசித்தார். அந்த சீரியலில் சேத்தனின் மனைவியாக அவர் நடித்த சரோஜா என்கிற வேடம் பெண்கள் மத்தியில் பெரிய பெயரை வாங்கிக்கொடுத்தது. குறிப்பாக, அந்த சீரியலின் க்ளைமாக்ஸ் காட்சியை லைவாக ஒளிபரப்பு செய்தபோது, சிங்கிள் டேக்கில் நடித்து பாராட்டு பெற்றார் காயத்ரி.
அதைத் தொடர்ந்து மேகலா, நெஞ்சத்தை கிள்ளாதே உள்பட சில தொடர்களில் நடித்த காயத்ரிக்கு மெட்லிஒலி அளவுக்கு பெயர் கிடைக்கவில்லை. பின்னர் திரு மணம் செய்து கொண்டு செட்டிலான அவர், தற்போது ஒரு குழந்தைக்கும் அம்மாவாகி விட்டார். இந்த நிலையில், மறுபடியும் அவர் சின்னத்திரையில் என்ட்ரியாகியுள்ளார். அதோடு, விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அச்சம் தவிர் நிகழ்ச்சியிலும் சில தினங்களுக்கு முன்பு பங்கேற்றார் காயத்ரி. அதில் பங்கேற்றவர்கள் அனைவருமே இளவட்டங்கள் என்றபோதும், திருமணமான காயத்ரியும் அவர்களுக்கு இணையாக காரில் உயரத்துக்கு சென்று சாகசம் செய்தார். அதோடு, குழந்தை பிறந்த பிறகு நான் பங்கேற்கும் முதல் நிகழ்ச்சி இது என்றும் தெரிவித்துக்கொண்டார் காயத்ரி.
நன்றி: தினமலர்
-
7th June 2016 07:29 PM
# ADS
Circuit advertisement
-
7th June 2016, 07:33 PM
#352
Moderator
Diamond Hubber
ஹோம்லி நடிகை என்று பெயர் வாங்க வேண்டும்: ஜீவிதா
ஏவிஎம் தயாரித்த மனதில் உறுதி வேண்டும் தொடர் மூலம் அறிமுகமானவர் ஜீவிதா. அதன் பிறகு வைராக்யம் ஆபீஸ் தேவதை பைரவி நாயன்மார்கள் சித்திரம் பேசுதடி தொடரில் நடித்தார்.
தற்போது பாசமலர் கைராசி குடும்பம் தொடரில் நடித்து வருகிறார். பாசமலர் உமா கேரக்டர் இப்போது மிகவும் பிரபலம்.
அவ்வப்போது சினிமாவிலும் நடித்து வரும் ஜீவிதாவுக்கு சினிமாவில் பெயர் சொல்லும் அளவிற்கு வாய்ப்புகள் அமையவில்லை. சின்னத்திரையின் சுஹாசினி என்ற பட்டப்பெயரும் இவருக்கு உண்டு. பைரவி, மனதில் உறுதி வேண்டும் தொடர்களில் சுஹாசினியை நினைவுபடுத்துகிற வகையில் தான் நடித்தார். “நதியா, ரேவதி, சுஹாசினி மாதிரி ஹோம்லியான நடிகையாகவே நீடிக்க வேண்டும், சினிமாவோ, சீரியலோ கடைசி வரை நடித்துக கொண்டே இருக்க வேண்டும்” என்கிறார் ஜீவிதா.
நன்றி: தினமலர்
-
14th June 2016, 05:56 PM
#353
Moderator
Diamond Hubber
சின்னத்திரைக்கு வந்தது ஏன்? அரவிந்த்சாமி விளக்கம்
அரவிந்த்சாமி நீண்ட இடைவெளிக்கு பிறகு ;தனி ஒருவன் படத்தின் மூலம் சினிமாவில் வில்லனாக என்ட்ரி கொடுத்தார். அடுத்து போகன் படத்தில் அதே ஜெயம்ரவியுடன் நடிக்கிறார். தனி ஒருவன்; தெலுங்கு ரீமேக்கில் வில்லனாக நடிக்கிறார். இந்தியில் டீயர் டாட் என்ற இந்திப் படத்தில் ஓரின சேர்க்கையாளராக நடித்து பரபரப்பு கிளப்பினார். இதற்கிடையில் விஜய் டி.வியில் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி; நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார்.
இதுபற்றி அரவிந்த்சாமி கூறியிருப்பதாவது: நான் டி.வி ஷோக்கள் அதிகம் பார்ப்பதில்லை. அமிதாப்பச்சன் நடத்திய கோன்பனேக்கா குரோர்பதி தான் நான் கடைசியாக பார்த்த நிகழ்ச்சி. எனக்கு பிடித்த நிகழ்ச்சி. அதே நிகழ்ச்சியை தொகுத்து வழங்க என்னை கேட்டார்கள். எனக்கு பிடித்த விஷயங்கள் அந்த நிகழ்ச்சியில் இருந்ததால் ஒத்துக் கொண்டேன்.
இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெறுகிற பணம் அவர்களின் கனவுகளை நனவாக்க உதவுகிறது. வெறும் பணம் மட்டும் முக்கியமில்லை. அதையும் தாண்டி பல விஷயங்கள் இருக்கிறது. பதில் தெரிவதை விட விளையாட தைரியம் வேண்டும். அந்த தைரியத்தை பெற அவர்களுக்கு நான் உதவுகிறேன். இந்த நிகழ்ச்சி மூலம் நிறைய மக்களை சந்திக்க முடிகிறது. அவர்களுடைய வாழ்க்கைய கேட்க முடிகிறது. இந்த அனுபவம் எனக்கு பிடித்திருக்கிறது. இந்த நிகழ்ச்சி என் கண்களை பல விதத்தில் திறந்திருக்கிறது. என்கிறார் அரவிந்தசாமி.
நன்றி: தினமலர்
-
14th June 2016, 06:06 PM
#354
Moderator
Diamond Hubber
சிறிய கேரக்டர்களை தவிர்க்கும் ரேஷ்மா
அமெரிக்காவில் பிறந்து வளர்ந்து விமான பணிப்பெண்ணாக பணியாற்றி அதன் பிறகு மீடியா வாழ்க்கை பிடித்து சின்னத்திரையில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி, சீரியல் நடிகை ஆனவர் ரேஷ்மா. 'வாணி ராணி', 'வம்சம்', 'சுந்தரகாண்டம்' தொடர்களில் முக்கியமான கேரக்டரில் நடித்தார். தற்போது 'என் இனிய தோழியே' தொடரில் நடித்து வருகிறார். ரேஷ்மா பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் பிரசாத் பசுபலேட்டியின் மகளாக இருந்தாலும் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் திறமையால் முன்னுக்கு வந்து கொண்டிருப்பவர்.
தற்போது ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சில தொடர்களில் முக்கியமான சில கேரக்டர்களுக்கு ரேஷ்மாவை அணுகியபோது மறுத்துவிட்டாராம். “ஹீரோயினாகத்தான் நடிப்பேன். அப்போதுதான் என் முழு கவனமும் கேரக்டரில் இருக்கும், எல்லா எபிசோடிலும் நான் வருவேன். மக்கள் மனதிலும் பதிய முடியும்” என்ற அதற்கு காரணம் சொன்னாராம். இன்னொரு தொடரில் ரேஷ்மா ஹீரோயினாக நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
நன்றி: தினமலர்
-
14th June 2016, 06:08 PM
#355
Moderator
Diamond Hubber
பவர்லிப்டிங் சேம்பியன் ஆனார் ரம்யா
சின்னத்திரை தொகுப்பாளினி ரம்யா. தற்போது ரேடியோவில் ஆர்ஜேவாகவும் பணியாற்றுகிறார். மேடை நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்குகிறார். சினிமாவிலும் நடிக்கிறார். இப்போது அவரது இன்னொரு முகம் வெளிப்பட்டிருக்கிறது. அது அவர் ஒரு பவர்லிப்டிங் சேம்பியன்.
சென்னை பவர்லிப்டிங் அசோசியேஷன் நடத்திய பென்ஞ்பிரஸ் சேம்பியன் சிப் பவர்லிப்டிங் போட்டியில் ரம்யா கலந்து கொண்டார். இதில் அவரது எடைபிரிவில் போட்டியிட்டு முதலிடம் பிடித்து சேம்பியன் ஆனார்
“நான் இப்போது பவர்லிப்டிங் தங்க பதக்கத்தோடு இருக்கிறேன். எனது கடைசி கடைசி லிப்ட் எனது வாழ்வின் முக்கியமான தருணம்” என்று தனது டுவிட்டரில் தெரிவித்திருக்கிறார் ரம்யா. அடுத்து மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ள இருக்கிறாராம். பவர்லிப்டிங் பயிற்சிக்காக தினமும் ஒரு மணி நேரம் ஒதுக்குகிறாராம் ரம்யா.
நன்றி: தினமலர்
-
23rd June 2016, 01:05 PM
#356
Senior Member
Seasoned Hubber
Aadhira Serial niraivu perugiradhu.
http://cinema.dinamalar.com/tamil-tv...th-episode.htm
Nandri.Dinamalar.
-
24th June 2016, 11:46 AM
#357
Senior Member
Seasoned Hubber
Singapuril settil aagiraar Dhiya Menon.....
http://cinema.dinamalar.com/tamil-tv...-Singapore.htm
Nandri.Dinamalar.
-
24th June 2016, 11:49 AM
#358
Senior Member
Seasoned Hubber
-
24th June 2016, 11:51 AM
#359
Senior Member
Seasoned Hubber
Ji Tamilil pudhumaiyana "Whats Up" Poatti......
http://cinema.dinamalar.com/tv-seria...ision-News.htm
Nandri.Dinamalar.
-
24th June 2016, 11:54 AM
#360
Senior Member
Seasoned Hubber
Rekka padathil nadikkum Paasamalar Serial Jeevitha.......
http://cinema.dinamalar.com/tv-seria...ision-News.htm
Nandri.Dinamalar.
Bookmarks