கற்றாழையை எப்படி பயன்படுத்தலாம்?

**கற்றாழையை துண்டாக வெட்டி அதன் மேற்புறத்* தோலை நீக்கி உள்ளே இருக்கும் ஜெல்லை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். இரவில் தூங்கும் போது தலையில் தேய்த்து கொண்டு காலையில் குளிக்கலாம்.*உடல் சூடு குறைவதால் பொடுகு நீங்கும். குளிர்ச்சியான தேகம் கொண்டவர்கள் தவிர்க்கவும்.

* கற்றாழையின் ஜெல்லுடன் ஊற வைத்த வெந்தயத்தை அரைத்து தலையில் ஊற வைத்து குளித்தால் தலைமுடி பளபளப்பாவதுடன் உடலுக்கு குளிர்ச்சியும் கிடைக்கும்.

* எலுமிச்சை சாறு 2 டேபிள் ஸ்பூன் எடுத்துக்* கொண்டு அதனுடன் கற்றாழையின் ஜெல்லை சேர்த்து மிக்ஸியில் அரைத்து தலையில் சேர்த்து ஊற வைத்து குளித்தால் நல்ல பலன் கிடைக்கும்.

* கற்றாழை ஜெல், செம்பருத்திப்பூ, எலுமிச்சைச்சாறு மூன்றையும் சேர்த்து அரைத்து ஊற வைத்துக் குளித்தால் பொடுகு காணாமல் போவதுடன் தலைமுடி கருகருவென வளரும்.

* இந்த மூலிகையை வீட்டில் வளர்க்க இயலாதவர்கள் கடைகளில் கிடைக்கும் ஜெல்லை வாங்கி தேய்த்து குளிக்கலாம்.

எனவே , தலைமுடியை பொடுகு*தொல்லையில் இருந்து பாதுகாக்க இயற்கையில் நமக்கு எளிதில் கிடைக்கக் கூடிய கற்றாழையைப் பயன்படுத்திப் பலன்பெறலாம்.