சீரியல் இயக்குனர் ஆனார் ராஜ்கபூர்


பெரிய திரை இயக்குனர்கள் தற்போது சின்னத்திரை தொடர் இயக்க வருவதுதான் இப்போதைய டிரண்ட். அந்த வரிசையில் தற்போது வந்திருக்கிறார் ராஜ்குமார். தாலாட்டு கேட்குதம்மா, சின்ன ஜமீன், சீமான், வள்ளல், அவள் வருவாளா, ஆனந்த பூங்காற்றே. சமஸ்தானம், குஷ்தி உள்பட20 படங்களை இயக்கியவர். படங்களில் நடித்தும் வருகிறார். தற்போது ஒளிபரப்பாகி வரும் நந்தினி தொடரை சுந்தர்.சி இயக்குவதாக இருந்தது. தற்போது ராஜ்குமார் இயக்குகிறார். சுந்தர்.சி தயாரிப்பாளராக இருக்கிறார். தொடர் இயக்குவது பற்றி ராஜ்கபூர் கூறியதாவது:


​​நான் பெரிய திரையில் இருந்து சின்னத்திரைக்கு வந்துள்ளேன். பெரிய திரையை சின்னத்திரைக்கு கொண்டு வரும் முயற்சியே தற்போது நாங்கள் செய்துள்ள முயற்சி. இது ரசிகர்களுக்கு தொடர் நிகழ்ச்சி பார்த்த அனுபவமாக இல்லாமல் திரைப்படம் பார்த்த ஒரு அனுபவத்தை கொடுக்கும். இதில் பணியாற்றும் அனைவரும் திரைப்பட துறையை சார்ந்தவர்கள். இதை நாங்கள் சினிமாவாகவே எடுத்து அதை தொடராக உங்களுக்கு கொடுக்கின்றோம். ஒரு பாம்புக்கும் பேய்க்கும் இடையில் நடக்கும் ஒரு சண்டை தான் தொடரின் கதையாகும். இதில் பாம்பாக ஒரு பெண்ணும் பேயாக இன்னொரு பெண்ணும் நடிக்கிறார்கள் . என்கிறார் இயக்குநர் ராஜ் கபூர்

நன்றி: தினமலர்