Results 1 to 10 of 48

Thread: சித்தா- சித்தனின் மருத்துவம்

Threaded View

  1. #21
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    ஆஸ்துமாவை குணப்படுத்தும் சித்த மருதத்துவம்
    .................................................. ............................

    .................................................. ............................

    ஆஸ்மா என்பது என்னெவென்று தெரியாதவர்கள் இருக்க முடியாது. இப்போதைய சுற்றுச்சூழல் பாதிப்பில் ஆஸ்துமா நோய் என்பது 10ல் 2 பேருக்கு இருப்பதாக தெரிய வந்துள்ளது. இழுப்பு, தொய்வு, மூச்சிழுப்பு எனப் பலவாறாக இதனை அழைப்பர். இது மனிதனின் சுவாசத்தொகுதியான நுரையீரலை தாக்கும் ஒரு நோயாகும். இந்த நோய் வயது வரம்பு ஏதும் இல்லை. மனிதனை நீண்ட காலத்துக்கு தொல்லைப்படுத்தக்கூடிய நோயாகும்.

    ஆரம்பத்திலேயே இந்த நோயை கண்டறிந்து உரிய சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், மனிதனின் மரணம் வரை தொடர்ந்து தொல்லை தரக்கூடியது. தொடர்ச்சியாக இல்லாவிடினும் விட்டு விட்டு வரக் கூடிய நோய் இது. ஆரம்பத்தில் நோயை கண்டறிந்து சிகிச்சை மேற்கொள்ளும் வேளையில் அடியோடு குணமானது போலிருக்கும். ஆனால் எங்கிருந்து வந்நது என அதிசயிக்கும் வண்ணம் திடீரென மீண்டும் தாக்கும். ஆரம்பத்தில் தொடர் தும்மல், அடிக்கடி இருமல், சளி, மூச்சிரைப்பு, நெஞ்சு இறுக்கமாக இருப்பதாக உணர்தல் போன்றவை இதன் அறிகுறிகளாகும்.

    ஆஸ்துமாவுக்கான காரணிகள் என்பது, ஒவ்வாமையை ஏற்படுத்தும் பூ மகரந்தங்கள், புற்கள், பூஞ்சாணங்கள், தூசு படலம், சுற்றுச்சூழலை மாசுப்படுத்தும் சிகரட் புகை, ரசாயனப் புகைகள், வாசனைத் திரவியங்கள், விறகு எரித்தல், விறகு எரிக்கும்போது வெளியாகும் நச்சு வாயுக்கள், நுண்துகள்கள், கரப்பன் பூச்சியும், அதன் எச்சங்களும், சைனஸ் போன்ற தொற்று நோய்கள், நெஞ்செரிப்பு, வயிற்று எரிச்சல், சாப்பாடு புளித்து மேலெழுதல் போன்ற அறிகுறிகள் குடலில் உள்ள அமிலம் மேலெழுவதைக் குறிக்கலாம். இதுவும் ஆஸ்துமாவை தூண்டும்.

    அதோடு கடும் குளிர் சீதோஷ்ண நிலை, கடுமையான உடற் பயிற்சி, கடுமையான மனஅழுத்தம் போன்றவையும் ஆஸ்துமாவை வரவழைக்கும். ஆஸ்துமா மற்றும் சைனஸ் பாதிப்புகளுக்கு அலோபதி மருத்துவத்தை விட நமது நாட்டின் பாரம்பரிய வைத்திய முறைகளும், ஓமியோபதி சிகிச்சை முறையும் நிரந்தர தீர்வை தருகிறது.

    பாரம்பரிய வீட்டுமுறை சிகிச்சைகள்:

    துளசிச்சாற்றை ஒரு தேக்கரண்டி காலையும், மாலையும் தினமும் சாப்பிடலாம். மஞ்சள், கறிவேப்பிலையை சேர்த்து அரைத்து ஒரு நெல்லிக்காய் அளவுக்கு தினமும் ஒரு வேளை என ஒரு மாதத்துக்கு தொடர்ந்து சாப்பிட வேண்டும். முருங்கைக்கீரையை பிழிந்த நீரை ஒரு தேக்கரண்டி தினமும் 2 வேளை குடிக்கலாம். மிளகும், கல்கண்டும் சேர்த்து பொடியாக்கி தேனில் குழைத்து காலை, மாலை சாப்பிட வேண்டும். வெற்றிலைச்சாறு, இஞ்சிச்சாறு, தேன் இவை சமமாக கலந்து தினமும் 2 வேளை சாப்பிட வேண்டும்.

    ஆடாதொடா இலையை நீண்ட நாள் தொடர்ந்த சளி, இருமல், தொண்டைக் கட்டு போன்றவற்றுக்கு சிறந்த மருந்தாகும். இலையை மட்டும் எடுத்து நீர் விட்டு கொதிக்கவைத்து, வடித்து, தேன் சேர்த்து கொடுக்க ஆஸ்துமா, இருமல், காய்ச்சல் போன்றவை தீரும். இவைகளுடன் திப்பிலி, ஏலம், அதிமதுரம், தாளிசப்பத்திரி ஆகியவற்றுடன் குடிநீரில் இட்டு கொடுக்க இருமல், இளைப்பு, காய்ச்சல் தீரும். ஆடாதோடா இலையை உலர்த்தி சுருட்டாக, சுருட்டி புகைப்பிடிக்க ஆஸ்துமா தீரும்.

    ஆஸ்துமாவுக்கான சித்த மருத்துவ சிகிச்சை:

    ஆஸ்துமாவுக்கு மருத்துவரின் ஆலோசனையுடன் கூடிய உணவு கட்டுப்பாடுகளை கடைப்பிடிப்பது அவசியம். நோயைக் கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவந்து முழுமையாகச் சிகிச்சை அளிக்க சித்த மருத்துவத்தில் நல்ல மருந்துகள் உள்ளன.

    1. நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் முசுமுசுக்கை, கரிசலாங்கண்ணி இலைகளை நாட்டுச் சர்க்கரை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து வடிகட்டினால் ஆஸ்துமாவுக்கான மூலிகை டீ தயார். இதை தினமும் காலையிலும், இரவிலும் சாப்பிடுவது சிகிச்சையின் ஒரு பகுதி. மூச்சுக் குழலை விரிவடையச் செய்து மூக்கடைப்பை தவிர்க்கவும், சளியை எளிதாக வெளியேற்றவும் இந்த மூலிகை டீ உதவும்.

    2. மிளகு கல்பம் என்பது மிளகுடன் கரிசலாங்கண்ணிச் சாறு, தூதுவளை சாறு, ஆடாதொடைச் சாறு ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. காலை, இரவு ஆகிய இரு வேளையும் சாப்பிடுவதற்கு முன்பு இந்த மிளகு கல்பத்தை தேனுடன் கலந்து அரை தேக்கரண்டி சாப்பிட வேண்டும்.

    3. பூரண சந்திரோதயச் செந்தூரம், வாசாதி லேகியம்: இவற்றை காலை, இரவு இரு வேளையும் உணவு சாப்பிட்ட பிறகு சாப்பிட வேண்டும். பூரண சந்திரோதய செந்தூரத்தைத் தேனில் குழைத்துச் சாப்பிட வேண்டும். வாசாதி லேகியத்தை நெல்லிக்காய் அளவு எடுத்துச் சாப்பிட வேண்டும்.

    எவ்வளவு நாள் சித்த மருந்துகளைச் சாப்பிட வேண்டும்?

    ஆஸ்துமா நோய்க்கு தொடர்ந்து 48 நாள் மேற்சொன்ன சித்த மருந்துகளை சாப்பிட்டு வந்தாலே நல்ல நிவாரணம் கிடைக்கும். எனினும் நோய் தீவிரமாக உள்ள நிலையில் நோய் எதிர்ப்பாற்றலை உடலுக்கு நிரந்தரமாக கொண்டு வர சித்த மருந்துகளை தொடர்ந்து ஓராண்டுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •