Quote Originally Posted by raagadevan View Post
திரைப்படம்: மனதில் உறுதி வேண்டும்
இயக்குனர்: கே. பாலச்சந்தர்
வரிகள்: வைரமுத்து
இசை: இளையராஜா
பாடகி: சித்ரா
நடிகை: சுஹாசினி

https://www.youtube.com/watch?time_c...&v=K0MNzaOonMI

கண்ணின் மணியே கண்ணின் மணியே போராட்டமா
உன் கண்களில் என்ன கண்களில் என்ன நீரோட்டமா
பெண் முன்னேற்றம் எல்லாம் வெறும் பேச்சோடு தானா
பழம் பாட்டோடுதானா அதன் ஏட்டோடுதானா
நாள் தோறும் பாடும் ஊமைகள் தானா

கண்ணின் மணியே கண்ணின் மணியே போராட்டமா
உன் கண்களில் என்ன கண்களில் என்ன நீரோட்டமா

சாத்திரங்கள் பெண் இணத்தை மூடி மறைத்ததம்மா
அந்த ஆத்திரத்தில் பாரதிக்கும் மீசை துடித்ததம்மா
சாத்திரங்கள் பெண் இணத்தை மூடி மறைத்ததம்மா
அந்த ஆத்திரத்தில் பாரதிக்கும் மீசை துடித்ததம்மா
வீடாளும் பெண்மை இங்கே நாடாளும் காலம் வந்தால்
ஊமைகள் போலவே என்றும் ஓயாமல் கண்ணீர் சிந்தும்
ஏனென்று கேட்கத்தான் இப்போது ஆள் இல்லை
சம நீதி கேட்கின்ற சட்டங்கள் ஏன் இல்லை
உலகமெல்லாம் விடிந்த பின்னும்
உங்களின் இரவுகள் விடியவில்லை

கண்ணின் மணியே கண்ணின் மணியே போராட்டமா
உன் கண்களில் என்ன கண்களில் என்ன நீரோட்டமா

பாய் விரிக்கும் பெண்மை என்ன காதல் பதுமைகளா
தினம் ஏவல் செய்ய ஆடவர்க்கு காவல் அடிமைகளா
பொன்னள்ளி வைத்தால் தானே பூமாலை தோளில் ஏறும்
இல்லாத ஏனையர்க்கெல்லாம் பொல்லாத தனிமைக் கோலம்
எரிகின்ற நேரத்தில் அணைக்கின்ற கை இல்லை
சொல்கின்ற வார்த்தைகள் ஒவ்வொன்றும் பொய் இல்லை
கனவுகளில் மிதந்ந்த படி
கலங்குது மயங்குது பருவக் கொடி

கண்ணின் மணியே கண்ணின் மணியே போராட்டமா
உன் கண்களில் என்ன கண்களில் என்ன நீரோட்டமா
பெண் முன்னேற்றம் எல்லாம் வெறும் பேச்சோடு தானா
பழம் பாட்டோடுதானா அதன் ஏட்டோடுதானா
நாள் தோறும் பாடும் ஊமைகள் தானா

கண்ணின் மணியே கண்ணின் மணியே போராட்டமா
உன் கண்களில் என்ன கண்களில் என்ன நீரோட்டமா...
lyrics Vaali . all songs in this movie were by Vaali