Results 1 to 10 of 3997

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 19

Threaded View

  1. #11
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    293
    Post Thanks / Like
    நடிகர் திலகத்தின் சிலை
    வைப்பதற்கு முன்னரான செய்தி
    மீள் பதிவு

    Sukumar Shan

    நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு சென்னை கடற்கரைச் சாலையில் சிலை வைக்கப்படும்’ _ என்று முதல்வர் கலைஞர் ஆளுநர் உரை வாயிலாக அறிவித்த போதே, சிவாஜி ரசிகர்களும் திரை உலகினரும் சந்தோஷத்துடன் வரவேற்றார்கள்.
    இந்நிலையில், ஜூன் 25_ம் தேதியன்று சின்னத்திரை கலைஞர்கள் சார்பில் கலைஞருக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில், நடிகர் சிவகுமார் பேசும்போது, ‘பராசக்தி படம் வெளியானபோது இருந்த சிவாஜி மாதிரி, இளமையும் அழகும் நிறைந்த சிவாஜியின் உருவத்தைச் சிலையாக வைக்க வேண்டும்’ என்று கலைஞரிடம் கோரிக்கை வைத்தார். இறுதியில் கலைஞர் பேசும்போது, இதை ஏற்க இயலாததைக் குறிப்பிட்டார். ‘‘பெரியார் என்றால், முதிர்ந்த வயதில் தாடி, தடியுடன் இருந்தால்தான் அடையாளம் தெரியும். சாக்ரடீஸ் என்றவுடன் நம் நினைவுக்கு வரும் உருவம், அவரது இறுதிக்கால உருவம்தான். என் படத்தையே எனது இளமைக்கால உருவம் போல வரைந்தால் பலருக்கும் அடையாளம் தெரியாது. எனவே, சிவாஜி மறையும் காலத்தில் இருந்ததுபோல, அவருக்குச் சிலை வைப்பதுதான் சரி. அப்படித்தான் சிலையும் தயாராகி வருகிறது?’’ என்றார் கலைஞர்.
    கூடவே, ‘‘அந்தச் சிலை அமைக்கப்பட்டவுடன் இந்த இடத்திலா? என்று எல்லோரும் ஆச்சரியப்படுவீர்கள். அந்தளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த இடம் அது’’ என்று சொல்லி, இடத்தையும் சொல்லாமல் ஒட்டுமொத்த திரை உலகினரின் ஆர்வத்தையும் அவ்விழாவில் தூண்டிவிட்டு விட்டார் கலைஞர்.
    ‘அந்த இடமா....? இந்த இடமா?’ என்று நடிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ள நிலையில், நமக்கும் ஆர்வம் மேலிட விசாரித்தோம்.
    சிலை வைப்பது என்று அறிவிப்பு வெளியானவுடன், சிவாஜி குடும்பத்தினர் கலைஞரைச் சந்தித்து நன்றி சொல்லப் போயிருக்கிறார்கள். ‘‘எங்கள் குடும்பத்தின் சார்பில் தனிப்பட்ட முறையில் நன்றி’’ என்று ராம்குமாரும் பிரபும் சொல்லும்போதே இடைமறித்த கலைஞர், ‘‘எனக்கு எதற்கு நன்றி? நான் வாழும் காலத்தில் கணேசனுக்கு நான் சிலை வைக்காமல் வேறு யார் வைப்பது? அவருடன் நான் கொண்டிருந்த நட்புதான் உங்களுக்குத் தெரியுமே...’’ என்று சொல்லி உடைந்து கண்ணீர் சிந்தியிருக்கிறார்.
    இதைப் பார்த்து சிவாஜியின் மகள்களான சாந்தி, தேன்மொழி என்று எல்லோருமே கண்ணீர் வடிக்க, அந்தச் சந்திப்பே உணர்ச்சிப் பிழம்பாக நடந்து முடிந்திருக்கிறது.
    அதன் பிறகுதான் சிலையை எப்படி, எங்கே அமைப்பது என்று கலைஞர் தன் மனதுக்குள்ளேயே விவாதித்திருக்கிறார் என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள். சமீபத்தில் தன் சொந்த ஊரான திருக்குவளை போனபோது, பாண்டிச்சேரியில் அமைக்கப்பட்டுள்ள சிவாஜியின் சிலையை, தான் பயணம் செய்த வேனை நிறுத்திப் பார்த்தார் கலைஞர்.
    தான் இறந்த பிறகு இந்த ‘போஸில்’தான் சிலை வைக்க வேண்டும் என்று சிவாஜியே தன் குடும்பத்தினரிடம் சொல்லி, ஒரு ஸ்டில்லைக் கொடுத்திருந்தார். அந்த போட்டோவில் உள்ளபடியே செய்த சிலைதான், தற்போது பாண்டிச்சேரியில் உள்ள சிலை. இதைக் கேள்விப்பட்ட கலைஞர், அதேபோல் சென்னையிலும் அமைக்க முடிவெடுத்தார்.
    அதன்பிறகுதான் இடம் பற்றிய கேள்வி எழுந்தது. கடற்கரைச் சாலையிலேயே பல இடங்கள் பரிசீலிக்கப்பட்டிருக்கிறது. இறுதியில் கலைஞரே ஆசைப்பட்டு, ஓர் இடத்தை முடிவு செய்து, முதலில் சிவாஜி குடும்பத்தினரிடம் அந்த இடத்தைக் குறிப்பிட்டு, அவர்களின் எண்ணத்தைக் கேட்டிருக்கிறார். அவர்களும் ஆச்சரியத்துடன் சந்தோஷமும் அடைந்து ‘முழு திருப்தி’ என்று சொல்லியிருக்கிறார்கள்.
    இதுபற்றி நாம் சிவாஜியின் மகனும் நடிகருமான பிரபுவிடம் பேசினோம்.
    ‘‘சிவாஜி சாருக்கு சிலை வைக்க எல்லோருமே ஆசைப்படுகிறார்கள். ஆனால் அரசே வைப்பது அவரை அங்கீகரித்து, கௌரவப்படுத்துவது மாதிரி உள்ளது. இது பெரியப்பா (கலைஞர்), அப்பா மீது வைத்துள்ள அன்பின் வெளிப்பாடு. எங்கள் இரு குடும்பத்தின் உறவு நீண்ட கால வரலாறு கொண்டது. குறிப்பாக, அப்பாவுக்கும் பெரியப்பாவுக்குமான உறவு பற்றி நாடறியும். அதனால்தான் நாங்கள் நன்றி சொல்ல அவரைச் சந்தித்தபோதுகூட, ‘சிலை வைப்பது என் கடமை’ என்று சொன்ன பெரியப்பா, ‘‘இப்போதும் டி.வி.யில் கணேசனைப் பார்க்கும்போது, திரையிலேயே அவர் கன்னத்தைக் கிள்ளத் தோன்றுகிறது’’ என்று சொல்லி, கண்ணீர் வடித்தார். அந்த அன்பின் வெளிப்பாடாக, சிலை வைப்பதையே பெருமையாக நினைத்தோம். ஒரு முக்கியமான இடத்தில் அதை நிறுவ முடிவு செய்திருப்பது, எங்களை இன்னும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது’’ என்றார் பிரபு. ‘‘எந்த இடம் என்பதை அரசே அறிவிப்பதுதான் முறை. நான் சொல்வது சரியல்ல’’ என்று மறுத்த பிரபு, கடைசிவரை இடத்தைச் சொல்லவேயில்லை. எனினும், செய்தித்துறை வட்டாரங்களில் தொடர்ந்து விசாரித்ததன் பலனாக இடத்தை அடையாளம் காட்டினார் ஓர் அதிகாரி. கடற்கரை காமராஜர் சாலையில் டி.ஜி.பி. அலுவலகம் முன்பாக, ராதாகிருஷ்ணன் சாலையும் கடற்கரைச் சாலையும் சந்திக்கும் இடம்தான் தன் நண்பனுக்காக கலைஞர் தேர்வு செய்துள்ள இடம். அந்த இடத்தில், ரோட்டின் மையத்திலேயே இந்தியக் குடியரசின் பொன்விழா நினைவாக ஒரு அசோகர் ஸ்தூபி இருக்கிறது. அதன் அருகிலேயே உள்ள மணிக்கூண்டை எடுத்துவிட்டு அந்த இடத்தில் சிலையை வைக்க ஏற்பாடாகியிருக்கிறது. மூன்று சாலைகள் சந்திக்கும் அந்த இடத்தில், ராதாகிருஷ்ணன் சாலையை நோக்கி சிலையை வைக்க தற்போது ஏற்பாடாகியிருக்கிறது. ஆனாலும் இடம் பற்றிய சர்ச்சையைத் தவிர்க்க, இப்போதைக்கு இடத்தை வெளியே சொல்லவேண்டாம் என்று கலைஞரே, செய்தித்துறை அமைச்சர் பரிதி இளம்வழுதியிடமும், சிவாஜி குடும்பத்தினரிடமும் கேட்டுக்கொண்டாராம்.
    பாண்டிச்சேரியில் உள்ள சிலையைச் செய்த ஸ்தபதி மணி நாகப்பாதான் இந்தச் சிலையையும் செய்கிறார். தற்போது அவர் அமெரிக்காவில் இருப்பதால், அவரது உதவியாளர், ஸ்தபதி ரவிதான் இறுதிக்கட்ட வேலைகளைச் செய்துவருகிறார்.
    ‘‘சிவாஜி விருப்பப்பட்ட போஸில்தான் பாண்டிச்சேரியில் சிலையைச் செய்தோம். இந்தச் சிலையும் அதே மாதிரிதான். 750 கிலோ எடை கொண்ட வெண்கலத்தில் சிலை தயாராகி வருகிறது. நடிகர்களில் எம்.ஜி.ஆர். தவிர்த்து என்.எஸ்.கே. மற்றும் சிவாஜிக்குத்தான் சிலை உள்ளது. ஒரு மகா கலைஞனின் சிலையை வடிக்கும் பொறுப்பை, ஒரு பெருமையாகவே உணர்கிறேன்’’ என்கிறார் ஸ்தபதி ரவி.
    மிக விரைவில் திறப்புவிழா காண இருக்கிறது இந்தச் சிலை. இடத்தைத் தேர்வு செய்ததற்கான காரணத்தை கலைஞர் அந்த விழாவில் விவரிப்பார் என்று எதிர்பார்க்கலாம்.
    நாராயணி
    Philosopher
    நாராயணி
    Active Members
    0
    1,550 posts
    Posted 30 Jun 2006
    mayoori said:
    முள்ளை வளைத்தது மகுடம் அணிந்தது
    ஆணி அடித்தது சிலுவையில் அறைந்தது
    அன்று நடந்தது ஆவி துடித்தது
    இன்று நடப்பது நெஞ்சு துடிக்குது....
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •