-
21st October 2017, 01:51 AM
#621
Moderator
Diamond Hubber
யப் டிவிக்கு விருது
பிரபல இணையதள டிவி சேனலான யப் டிவிக்கு., 2017-ம் ஆண்டுக்கான பிராஸ்ட் அண்ட் சல்லிவன் விருது கிடைத்திருக்கிறது. மும்பையில் நடந்த இதற்கான விழாவில், பிராஸ்ட் அண்ட் சல்லிவனின் சர்வதேச தலைவர் அரூப் ஜட்ஸி, யப் டிவியின் நிர்வாகியான உதய் ரெட்டிக்கு இந்த விருதை வழங்கினார்
இந்த விருது கிடைத்தது பற்றி யப் டிவியின் உதய் ரெட்டி கூறுகையில், யப் டிவியின் ஒட்டுமொத்த குழு சார்பாக இந்த விருதை நான் பெறுவதில் நான் மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறேன். இதற்காக தேர்வுக்குழுவுக்கு எனது நன்றி என்று கூறியுள்ளார்.
இணையதள டிவி உலகில் யப் டிவி., 14 மொழிகளில் 250 சேனல்களை ஒளிபரப்பகிறது. குறிப்பாக தென்னிந்தியாவில் ஒளிப்பரப்பாகும் பல சேனல்களை இந்த இணையதளத்தில் காணலாம். டிவி நிகழ்ச்சிகள் மற்றும் இன்றி பல பொழுதுபோக்கு அம்சம் தொடர்பான நிகழ்ச்சிகளையும் ஒளிப்பரபுகிறது. கிரிக்கெட் போன்ற விளையாட்டு போட்டிகளையும் நேரடியாக ஒளிப்பரப்பி வருகிறது.
நன்றி: தினமலர்
-
21st October 2017 01:51 AM
# ADS
Circuit advertisement
-
21st October 2017, 01:55 AM
#622
Moderator
Diamond Hubber
கடந்த 2004ம் ஆண்டு ஜீ தமிழ் தொலைக்காட்சி தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் சாதரணமாக இருந்த ஜீ தமிழ், தற்போது புதிய புதிய சீரியல்கள், புதிய புதிய ரியாலிட்டி ஷோக்கள், புதிய திரைப்படங்கள் மூலம் வேமாக முன்னுக்கு வந்திருக்கிறது. தற்போது முன்னணி சேனல்களில் முக்கிய சேனல்.
யாரடி நீ மோகனி, பூவே பூச்சூடவா, தலையணை பூக்கள், லட்சுமி வந்தாச்சு, மெல்ல திறந்தது கதவு, மகாமயி, நாகராணி, இனிய இரு மலர்கள், டார்லிங் டார்லிங், உள்ளிட்ட பல தொடர்களை ஒளிபரப்புகிறது. அதிர்ஷ்டலட்சுமி, ஜூனியர் சீனியர், சொல்வதெல்லாம் உண்மை, நம்பினால் நம்புங்கள், டான்சிங் கில்லாடிகள், உளிட்ட பல ரியாலிட்டி ஷோக்களையும் நடத்தி வருகிறது.
13 வருடங்களை கடந்து வந்துள்ள ஜீ தமிழ் சேனல் தற்போது டிஜிட்டல் தொழில்நுட்பத்துக்கு மாறி உள்ளது. சாதாரண தொழில்நுட்பம், டிஜிட்டல் தொழில்நுட்பம் இரண்டிலும் ஜீ தமிழ் சேனலை பார்க்கலாம். டிஜிட்டலுக்கு மாறியதன் அடையாளமாக தனது லோகோவையும் மாற்றி உள்ளது. அதோடு டிஜிட்டல் மாற்றத்தை அறிவிக்கும் வகையில் ஜோதிகா, ஆரி, துளசி நடித்த ஒரு புரமோவையும் வெளியிட்டுள்ளது.
நன்றி: தினமலர்
-
5th November 2017, 04:42 AM
#623
Moderator
Diamond Hubber
தொகுப்பாளினியானார் பிக்பாஸ் ஜூலி
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது பங்கேற்று புகழ் பெற்றவர் ஜூலி. இதில் இவருக்கு கிடைத்த பெயரும், புகழும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூலம் அமுங்கி விட்டது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் எல்லோருடனும் சகஜமாய் இருந்த ஜூலில பின்னர் பொய் பேசுகிறார், நடிக்கிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அதிலும் ஓவியா விஷயத்தில் இவரது பெயர் மேலும் மங்கியது. தொடர்ந்து சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.
ஆனால், அவைகள் எல்லாம் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் தன்னை அந்த போட்டியில் நிலை நிறுத்தி கொள்ள சிலரோடு சேர்ந்து கொண்டு அப்படி அவர் செய்ய வேண்டியதாகி இருந்தது. பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த பின்னர் தான் தன் மீதான தவறுகளை உணர்ந்து கொள்ள தொடங்கியிருக்கிறார்.
இந்நிலையில் சமீபத்தில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அதன்பின்னர் சில டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இப்போது தொகுப்பாளியாக களமிறங்கியுள்ளார்.
கலைஞர் டிவியில் ஓடி விளையாடு பாப்பா என்ற நிகழ்ச்சி ஒளிப்பரப்பாக வருகிறது. இதன் 6வது சீசன் தற்போது துவங்குகிறது. இந்த நிகழ்ச்சியை ஜூலி தான் தொகுத்து வழங்க போகிறார். நடன இயக்குநர் கலா மற்றும் நடிகர் கோகுல் ஆகியோர் இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாகப் பங்கேற்கிறார்கள். திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது.
நன்றி: தினமலர்
-
5th November 2017, 04:51 AM
#624
Moderator
Diamond Hubber
தமிழ் பெண்கள் அழகா? கேரள பெண்கள் அழகா?: நீயா நானா நிகழ்ச்சிக்கு தடை
விஜய் டி.வியின் நட்சத்திர நிகழ்ச்சி நீயா நானா. ஆண்டனி இயக்கத்தில், கோபிநாத் நடத்தி வரும் இந்த நிகழ்ச்சி பல்வேறு சமூக பிரச்சினைகள் பற்றி அலசி வருகிறது. துணிச்சலுடன் பல பிரச்சினைகளை பேசியுள்ளது. இதன் தொகுப்பாளர் கோபிநாத் இந்த நிகழ்ச்சியின் மூலம் பெரும் புகழ் அடைந்தார். சினிமாவில் நடிக்கும் அளவிற்கு உயர்ந்தார். என்றாலும் அவ்வப்போது சில பிரச்சினைகளையும் இந்த நிகழ்ச்சி சந்தித்து வந்திருக்கிறது.
கடந்த சில தினங்களாக இந்த நிகழ்ச்சியின் புரமோ ஒன்று ஒளிபரப்பாகி வந்தது. "யார் அழகு கேரளத்து பெண்களா? தமிழ் பெண்களா?" என்ற தலைப்பில் அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருப்பதாக அந்த புரமோ கூறியது. 20க்கும் மேற்பட்ட கேரள பெண்களும், தமிழ்நாட்டு பெண்களும் இதில் கலந்து கொண்டு பேசியிருக்கிறார்கள். கேரள பெண்கள் மலையாள பாடல்களுக்கும், தமிழ் நாட்டு பெண்கள் தமிழ் பாடல்களுக்கும் ஆடியிருக்கிறார்கள். கோபிநாத் தொகுத்து வழங்கி இருக்கிறார். இந்த புரமோசை ஒரு கோடிக்கும் அதிகமானவர்கள் பார்த்துள்ளார்கள். நிகழ்ச்சிக்கும் நல்ல எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால் இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்ப கூடாது என்று பல்வேறு பெண்கள் அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்தனர், சில இடங்களில் போலீசிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த 22ந் தேதி மதியம் 3மணிக்கு ஒளிபரப்பாக இருந்த இந்த நிகழ்ச்சியை நிறுத்தி விட்டது விஜய் டி.வி. "நிகழ்ச்சி எந்த மாதிரி உருவாகி உள்ளது என்பதை பார்க்காமலேயே அதை நிறுத்தச் சொல்வது எந்த விதத்தில் நியாயம்?" என்று சேனல் தரப்பு கூறுகிறது
நன்றி: தினமலர்
-
10th December 2017, 07:36 AM
#625
Moderator
Diamond Hubber
பாடகியாகும் உஷா எலிசபெத்
கனா காணும் காலங்கள் மூலம் சின்னத்திரைக்கு வந்தவர் உஷா எலிசெபத். அதன் பிறகு அனுபல்லவி, ஒரு மனிதனின் கதை, கலாட்டா குடும்பம், வாணி ராணி உள்பட பல சீரியல்களில் நடித்தார். இடையில் திரைப்படங்களிலும் நடித்தார். நவீன சரஸ்வதி சபதம், வென்று வருவான் படங்கள் குறிப்பிடத்தக்கது. கடைசியாக பிரியமானவள் தொடரில் நடித்து வந்தார். தற்போது அதிலிருந்து விலகி விட்டார்.
தற்போது சில படங்களில் நடித்து வரும் உஷா, தன்னை ஒரு பாடகியாக நிலைநிறுத்தவும் போராடிக் கொண்டிருக்கிறார். முறைப்படி இசை கற்ற உஷா தானே சொந்தமாக இசை அமைத்து பாடிய பாடல்களை இணையதளத்தில் வெளியிட்டு வருகிறார். அவருக்கென்று தனி ரசிகர் வட்டம் உருவாகி வருகிறது.
விரைவில் திரைப்படத்திலும் பாட இருக்கிறார். நடிகையாக மட்டுமே இல்லாமல் வேறு திறமைகளையும் வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காக பாடி அதனை இணையதளத்தில் வெளியிட்டு வருகிறேன். பிரியமானவள் சீரியலில் இருந்து விலகியதற்கு முக்கிய காரணம் எதுவும் இல்லை. என்கிறார் உஷா.
நன்றி: தினமலர்
-
10th December 2017, 07:38 AM
#626
Moderator
Diamond Hubber
மீண்டும் சீரியல் நடிகை ஆனார் ஊர்வசி'
தென்னிந்திய மொழிகளில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருப்பவர் ஊர்வசி. கடைசியாக மகளிர் மட்டும் படத்தில் நடித்தார். அடுத்து அவர் நடித்த இட்லி படம் வெளிவர இருக்கிறது.
ஊர்வசிக்கு சின்னத்திரை புதிதில்லை டேக் இட் ஊர்வசி, பாக்யலட்சுமி, உள்பட பல நிகழ்ச்சிகளை நடத்தினார், பல நிகழ்ச்சிகளுக்கு நடுவராக இருந்தார். 5 வருடங்களுக்கு முன்பு பைரவி தொடரில் நடித்தார். இப்போது மீண்டும் சீரியலில் நடிக்க தொடங்கியிருக்கிறார். ரம்யா கிருஷ்ணன் நடித்து, தயாரிக்கும் வம்சம் சீரியிலில் சுந்தரி என்ற புதிய கதாபாத்திரத்தின் மூலம் என்ட்ரியாகியிருக்கிறார்.
வம்சம் தொடரில் ரம்யா கிருஷ்ணன் முக்கிய கேரக்டரில் நடித்து வந்தார். பாகுபலி படத்திற்கு பிறகு அவருக்கு சினிமா வாய்ப்புகள் பெருகி வருவதால் சீரியலில் நடிப்பதை குறைத்து வருகிறார். இருந்தாலும் வம்சம் சீரியலில் அவர் முக்கிய கேரக்டர் என்பதால் உடனடியாக வெளியேறிவிட முடியாது. இதனால் ஊர்வசியை, ரம்யா கிருஷ்ணனின் தோழி கேரக்டரில் சீரியலுக்கு கொண்டு வந்திருக்கிறார்கள். ரம்யா கிருஷ்ணனுக்கு இணையான முக்கியத்துவம் ஊர்வசிக்கு இருக்கும் என்றும், போகப்போக ஊர்வசியை முக்கிய கேரக்டராக்கி ரம்யா கிருஷ்ணன் வெளியேற வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.
நன்றி: தினமலர்
Bookmarks