மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.திரியின் பாகம் 24 ஐ துவக்கியுள்ள அருமை நண்பர் திரு.
கலியபெருமாள் ,புதுவை அவர்களை இருகரம் கூப்பி வணங்கி வரவேற்கிறேன் .

தாங்கள் கூறியதை போல நிழலுக்கும், நிஜத்திற்கும் வித்தியாசம் காட்டியதோடு
இரண்டையும் உலகிற்கு உணர்த்தியவர் .திரையுலகம், அரசியல் உலகம் இரண்டிலும் உச்சத்தை தொட்டதோடு,பல காலம் தக்க வைத்து, இப்பூவுலகில் வேறு எவரும் தொடமுடியாத பல சாதனைகள், சகாப்தம், வரலாறு படைத்தவர் .
அதனால்தான் என்னவோ, மாற்று முகாமில், காழ்ப்புணர்ச்சி காரணமாக மிகவும் கீழ்த்தரமாக, தரம் தாழ்ந்து மக்கள் தலைவரை பற்றி விமர்சனம் செய்வது, பொய் செய்திகளை பதிவிடுவது வாடிக்கையாகவும், வேடிக்கையாகவும் உள்ளது .
அதை நாம் பொருட்படுத்த வேண்டிய அவசியமில்லை . நண்பர் திரு.வினோத்
தெரிவித்த கருத்துகளின்படி நாம் பரிதாப படவேண்டிய விஷயம்தான் .

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரையுலகில் முடிசூடாமன்னனாக வலம் வந்த நேரம் வாழ்க்கையில் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல சோதனைகளை கடந்து வெற்றிமேல் வெற்றி கண்டவர் .1959ல் காலில் அடிபட்டு சிகிச்சை பெற்று ஒய்வு எடுக்கும்போது இனி முன்போல சண்டை காட்சியில் நடிக்க முடியாது என்று செய்திகளை எதிரிகள், விரோதிகள் பரப்பினர். சமூக காட்சியில் இவர் நடிக்க லாயக்கு இல்லை. என்று ஒரு கூட்டம் பிதற்றிக் கொண்டிருந்தது .1967ல் குண்டடி பட்டு , சிகிச்சை பெற்று மீண்டு வந்தபோது , இனி நடிப்பது சுலபமில்லை. அப்படியே நடித்தாலும் சொந்த குரலில் பேச முடியாது என்று புலம்பினர் .சினிமாவில் என் ரசிகர்கள் எனது சொந்தக்குரலை விரும்பாவிட்டால் நடிப்பதையே விட்டுவிடுகிறேன்.பின்னணி குரல் மட்டும் பயன்படுத்தமாட்டேன் என்று உறுதியாக இருந்து , நடித்து வெற்றி மேல்.வெற்றிகளை திரையுலகிலும்,அரசியலிலும் குவித்தார் .

1967ல் மருத்துவமனையில் உட்கார்ந்து கொண்டு , தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்லாமலேயே சட்ட மன்ற உறுப்பினராக பரங்கிமலை தொகுதிக்கு தேர்வானார் பெரும் வாக்கு வித்தியாசத்தில்.

1984ல் அமெரிக்காவில் படுத்துக்கொண்டு , தேர்தல் பிரச்சாரம் செய்யாமலேயே ,
தேர்தலில் வெற்றி கண்டு , முதல்வராக சிகிச்சைக்கு சென்று, முதல்வராகவே
மீண்டும் தேர்வாகி, உடல் நலம் பெற்று மக்களாட்சி தத்துவத்துடன் மக்களை ஆண்டு பல நல்ல திட்டங்களை வகுத்தவர்.

இந்த இரண்டு சாதனைகளை நிகழ்த்த இந்த உலகில் வேறு எவரும் இதுவரை பிறக்கவில்லை. அப்படி பிறந்தாலும் முறியடிக்க சாத்தியமில்லை .


விலைவாசி கட்டுப்பாடு, ரேஷனில்
அனைத்து பொருட்களும் மக்களுக்கு தாராளமாக கிடைத்தல் ,பேருந்து கட்டணம் உயர்வு தவிர்ப்பு, சினிமா கட்டணம் கட்டுக்குள் வைத்தல், சத்துணவு திட்டம் விரிவாக்கம் , கோயம்பேடு பேருந்து நிலையம் , வணிக வளாகம் அமைப்பு பற்றிய ஆலோசனை ,தெலுங்கு கங்கை குடிநீர் திட்டம் , தமிழ் எழுத்து சீர்திருத்தம் , பெரியார் நூற்றாண்டு விழா , மதுரையில் உலக தமிழ் மாநாடு,
தஞ்சை தமிழ் பல்கலை கழகம், மதுரை காமராஜர் பல்கலை கழகம், அன்னை தெரசா மகளிர் பல்கலை பழக்கம், பெரியார், அண்ணா, நேசமணி, ஜீவா, பட்டுக்கோட்டை அழகிரி, பல்லவன், சேரன், சோழன், பாண்டியன், கட்டபொம்மன், தீரன் சின்னமலை, திருவள்ளுவர் போன்றவர்கள் பெயர்களில் போக்குவரத்து கழகங்கள் போன்றவை அவருடைய சாதனைகளில் சில.
இன்னும் எழுதிக்கொண்டே போகலாம்.எல்லாவற்றையும் ஆண்டு அனுபவித்த நிலையில் மக்கள் அனைத்தும் அறிவர் .என்பதே என் கருத்து .

திரு.கலியபெருமாள் அவர்கள் துவக்கிய பாகம் 24 துரிதமான பதிவுகளுடன் ஏற்றம் கண்டு வெற்றிநடை போட இறைவன் எம்.ஜி.ஆர். அவர்கள் ஆசி என்றும் இருக்கும் என்கிற வகையில் எனது பணியும், ஆதரவும் தொடரும் என்று
கூறிக்கொள்கிறேன் .

ஆர். லோகநாதன்,
ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு .