-
21st September 2019, 01:25 AM
#1291
Junior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
21st September 2019 01:25 AM
# ADS
Circuit advertisement
-
21st September 2019, 01:39 AM
#1292
Junior Member
Diamond Hubber
-
21st September 2019, 01:39 AM
#1293
Junior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
21st September 2019, 01:40 AM
#1294
Junior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
21st September 2019, 01:41 AM
#1295
Junior Member
Diamond Hubber
-
21st September 2019, 01:42 AM
#1296
Junior Member
Diamond Hubber
-
21st September 2019, 01:46 AM
#1297
Junior Member
Diamond Hubber
-
21st September 2019, 01:55 AM
#1298
Junior Member
Diamond Hubber
-
21st September 2019, 08:31 AM
#1299
Junior Member
Diamond Hubber
-
21st September 2019, 06:04 PM
#1300
Junior Member
Diamond Hubber
எம்.ஜி.ஆரின் ஏழு மணி நேர உண்ணாவிரதம்
(ஜூனியர் விகடன்: 16.02.1983)
பிப்ரவரி 9-ம் தேதி. காலை மணி 9-50. அண்ணா சமாதியில் மலர் வளையம் வைத்து வணங்கி, இரண்டு நிமிடம் மௌனமாக இருந்து, பிறகு சமாதியை வலம் வந்து நேராகக் கம்பன் சிலை அருகே போடப்பட்டிருந்த பந்தலுக்கு வந்தார் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். ஐந்து அடி உயர மேடையில் ஏறி அமர்ந்து ஏழு மணி நேர அடையாள உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார் அவர்.
''கொடுத்துச் சிவந்த கரம் 'தா’ என்று கேட்பது தனக்காக அல்ல; மக்கள் நலனுக்காக! மத்திய அரசே, மத்திய அமைச்சரே, அரிசி கொடு!'' என்று முழக்கங்கள் கேட்கின்றன.
அடையாள உண்ணாவிரதம் இருக்கப் போவதாக முதல் நாள் பிற்பகல் ஒரு மணி சுமாருக்குத் திடீரென்றுதான் முதலமைச்சர் அறிவித்தார். மின்னல் வேகத்தில் இரண்டு 'பக்கா’ பந்தலும், கம்பீர மேடையும் ரெடியாகி விட்டது! ஒரு பந்தலில் எம்.ஜி.ஆர். அமர்ந்த மேடையும், அதைச் சுற்றிக் கட்சிப் பிரமுகர்களும் இருந்தார்கள். வலது பக்கப் பந்தலில் பார்வையாளர்களாகத் திரண்ட பொதுமக்கள்.
பந்தல் ரெடியான வேகத்தைப் பற்றி நிருபர்களில் சிலர் அதிசயமாகப் பேசிக் கொண்டிருந்தபோது...
''நேற்று மேல்சபையில் முதலமைச்சர் உண்ணாவிரதத்தை அறிவித்த மறு கணமே மத்திய அரசு தரப்பில் இருந்து பதில் வந்ததே, அந்த வேகம் எப்படி?'' என்றார் ஒருவர். ''பதிலை ரெடியாக வைத்திருந்தார்கள் போலிருக்கிறது'' என்று சொன்னார் முன்னாள் சட்ட அமைச்சர் மாதவன். (பி.டி.ஐ. அதைவிட வேகமாகச் செயல்பட்டு மத்திய அரசு அறிக்கைக்கு நள்ளிரவில் எம்.ஜி.ஆரிடமிருந்து பதில் வாங்கி வெளியிட்டு விட்டது!)
அரிசி தராத மத்திய அரசுச் செயல் எப்படித் தவறானது என்பதை மாதவன் நிருபர்களிடம் எடுத்துச் சொல்லிக் கொண்டிருந்தார்...
உண்ணாவிரதத்தைத் தொடங்கிய எம்.ஜி.ஆர். தன்னுடன் கட்சியின் பொதுச் செயலாளர் மட்டும் கூடவே அமர்ந்திருக்க அனுமதித்தார். ''எம்.எல்.ஏ-க்கள், எம்.எல்.சி.-க்கள் யாரும் இங்கே இருக்கக் கூடாது... சட்டமன்றத்திற்குப் போங்கள்'' என்று அனுப்பி விட்டார்.
சங்கரய்யா என்ற முதிய தொண்டர் மேடைக்குக் கீழே முக்கிய கட்சிக்காரர்களுடன் உண்ணாவிரதம் இருக்க உட்கார்ந்திருப்பதை எம்.ஜி.ஆர். பார்த்தார். அவரை மேடைக்கு அழைத்தார். ''நீங்கள் வயிற்றுவலிக்காரர். நான் உண்ணாவிரதம் இருக்கிறேன் என்பதற்காக நீங்கள் உண்ணாவிரதம் இருந்தால் உடம்புக்கு நல்லதல்ல... வீட்டுக்குப் போங்கள்...'' என்றார். சங்கரய்யா எவ்வளவோ மறுத்தும் முதல்வர் கேட்கவில்லை. அதேபோல, அலமேலு அப்பா துரையை மேலே அழைத்து அவரையும் வீட்டுக்குப் போகும்படி சொன்னார். அவரும் கேட்க மறுத்தார். ஜேப்பியாரை அழைத்து அவரை காரில் ஏற்றி வீட்டிற்கு அனுப்புங்கள் என்று சொல்லி விட்டார்.
ஜேப்பியார் இங்கும் அங்கும் ஓடி பந்தோபஸ்துக்களையும் கவனித்தார். முக்கிய புள்ளியாக ஜொலித்தார்.
''என்ன, ஜேப்பியார் எம்.ஜி.ஆருக்கு நெருக்கமாகிவிட்டார் போலிருக்கிறதே!''
''அதெல்லாம் சொல்ல முடியாது... சென்னையில் உண்ணாவிரதம் இருக்கிறார். மாவட்ட செயலாளர் என்பதால் ஜேப்பியார் பொறுப்பு இது... மற்றபடி யாரை எந்த இடத்தில் வைக்க வேண்டும் என்பதெல்லாம் தலைவருக்குக் கைவந்த கலை.''
-சிலர் பேசியது இது. அங்கே காதில் விழுந்த இம்மாதிரி பேச்சுக்கள் சுவையானவை.
''மாநில உணவு அமைச்சராக இருந்தாரே ஆர்.வி.சாமிநாதன், அவருக்கு 'கல்தா’ ஏன் கொடுத்தார்கள் தெரியுமா? எம்.ஜி.ஆருக்கு வேண்டியவர் என்பதால்தான்!''
''தமிழ்நாட்டைப் பட்டினி போட விடமாட்டேன் என்று ஆர்.வி. சாமிநாதன் அறிக்கை விட்டு டெல்லி போயிருக்கிறார். மத்திய அமைச்சர் ராவ் பிரேந்திரசிங் அவரை அழைத்துக் கன்னாபின்னாவென்று திட்டியிருக்கிறார். 'இப்படியெல்லாம் யாரைக் கேட்டு அறிக்கை விட்டீர்கள்? அரிசி உங்கள் பாக்கெட்டிலா இருக்கிறது?’ என்று ராவ் பிரேந்திரசிங் இகழ்ச்சியாகக் கேட்டாராம்''. (சரி. தமிழ்நாட்டைப் பட்டினி போடுவேன் என்று சொல்லியிருந்தால் மன்னித்திருப்பார்களோ!)
அதற்குள் சில மூதாட்டிகள் கியூ வரிசையில் வந்து, மேடையில் ஏறி தேங்காயில் கற்பூரம் ஏற்றி எம்.ஜி.ஆருக்குத் திருஷ்டி சுற்றினார்கள். எம்.ஜி.ஆர். படங்களில் நடித்திருக்கும் துணை நடிகை மீனாட்சி அம்மாள், எலுமிச்சம்பழத்தைச் சுற்றி, பிழிந்து வீசி திருஷ்டி சுற்றினார். ''அவருக்கு திருஷ்டி கழிக்கணும்னு ரொம்ப நாளா வெறி'' என்றார்.
ஒரு பையன் எம்.ஜி.ஆருக்கு மாலை போட வர, அந்த மாலையை அவனுக்கே திருப்பிப் போட்டார்
எம்.ஜி.ஆர். ''நீங்கதான் போட்டுக்கணும்'' என்று அந்தப் பையன் வற்புறுத்தி, மீண்டும் மாலையை அவருக்கு அணிவித்தான். இம்மாதிரி காட்சிகளின்போது பொதுமக்களிடமிருந்து கரவொலியும் 'விசில்’ ஒலிகளும் எழுந்தன!
மேடையில் எம்.ஜி.ஆர். பக்கத்தில் அமர்ந்திருந்த ப.உ.சண்முகம் சற்றுத் தெம்புடனும் 'களை’யுடனும் காணப்பட்டார். பழைய தி.மு.க. நாளேடான நம்நாடு இதழ்கள் அடங்கிய பைண்ட் வால்யூமைப் புரட்டியவாறு இருந்தார் அவர். சில இதழ்களில் வந்த செய்தியை முதலமைச்சருக்கு அடிக்கடி சுட்டிக் காட்ட, இருவரும் அந்தச் செய்தியை ரசித்தனர்.
முதல்வர் கவனம், நிருபர்களுடன் பேசிக் கொண்டிருந்த மாதவன் மீது விழுந்தது. அவரை அழைத்துத் தன் பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டார்! ஏனோ நிருபர்கள் உடனே ப.உ.சண்முகம் முகத்தைப் பார்த்தனர்.
கொஞ்ச நேரத்தில் அது உண்ணாவிரத மேடை என்பது மறந்து போகும் நிலை ஏற்பட்டு விட்டது!
முதலமைச்சர் அருகில் பார்த்துக் குறைகளைச் சொல்லி மனுக்கள் தர இது ஒரு நல்ல சந்தர்ப்பம் என்று நினைத்தவர்கள் கெட்டிக்காரர்கள்தான்! ''என் மகளுக்கு வேலை வேண்டும்'', ''ப்யூன் சம்பளம் அதிகப்படுத்த வேண்டும்'',''குடிசை கட்ட இடம் தர மறுக்கிறார்கள்'' என்பது போல, மனுக்களை எடுத்து வந்து கொடுக்க ஆரம்பித்தார்கள். சில பெரிய மனிதர்களும் மாலை போட்டுவிட்டு 'மனு’ கொடுத்தார்கள்! ஒரு பெண் ''வீட்டில் சமைக்க மணி அரிசி இல்லை'' என்று, விக்கி விக்கி ஆனால் கண்ணில் கண்ணீர் வராமல் அழுதாள்! அவளை மேடையில் இருந்து இறக்குவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது!
மதுரை மேயர் பட்டுராஜன் மேடையில் ஏறி மாலை போடுகிறார். எம்.ஜி.ஆருக்கு அணிவித்த மாலைகளும், பொன்னாடைகளும் மேடைக்குப் பின்புறத்தில் மலை போலக் குவிக்கப்பட்டிருந்தது.
''திருச்செந்தூர் தேர்தல் பிரசார துவக்க விழாவிற்கு முதலமைச்சர் இன்று வருவதாக இருந்தது. வரவேற்க ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தபோது, திடீரென்று நேற்று மாலை இந்த நியூஸ் கேள்விப்பட்டவுடன் மெட்ராஸ் புறப்பட்டு விட்டேன்'' என்று நிருபர்களிடம் சொன்னார் மதுரை மேயர்.
''அதோ பார்! ஆப்பிளை எடுத்துண்டு மேடைக்குப் போறார். சி.எம்.கிட்ட கொடுத்துடப் போறார்... நிறுத்து அவரை...''
-யாரோ உரக்கச் சொல்கிறார்கள்.
''இது ஆப்பிள், மனுவெல்லாம் கொடுக்கற இடமா, போங்கள்’: என்று யாரையோ விரட்டுகிறார் ஜேப்பியார்.
பேரறிஞர் அண்ணாவின் சொற்பொழிவு ஒலிபெருக்கியில் வந்து கொண்டிருந்தது. திடீரென்று குரல் மாறுகிறது. ஜேப்பியார் லவுட் ஸ்பீக்கர்காரர்களிடம் ஓடுகிறார்... ''நிறுத்துப்பா... யார் பேச்சு இது? அண்ணா பேச்சு மட்டும் போடு'' என்கிறார். பழைய 'டேப்’ போலும்! நடுவில் 'தலை காட்டியது’ அன்பழகன் குரல்!
'எதிரே சாலையில் ''இந்திரா ஒழிக! எம்.ஜி.ஆர். வாழ்க!'' என்று குரல் கொடுத்தவாறு ஒருவர் தீக்குளிக்க முயன்றிருக்கிறார். கூட்டம் அந்தக் குரல் கேட்டு எழுந்திருக்க, எம்.ஜி.ஆர். கையமர்த்தி உட்கார வைத்தார். போலீஸார் அந்த ஆசாமியைக் கட்டிப்பிடித்து லாரியில் ஏற்றினார்கள். கெரோஸினால் உடம்பு நனைந்திருந்தது. உதட்டில் ரத்தம் வழிந்திருந்தது. நெருப்பு வைத்துக் கொண்டாரா என்று தெரியவில்லை.
உள்ளே மேடையைச் சுற்றியிருந்த கட்சிப் பிரமுகர்களுக்கு அந்த ஆசாமியை ஏற்கெனவே தெரியும் போலிருக்கிறது. ''நேத்து பந்தல் போடறச்சே இங்கிட்டுச் சுத்திக்கிட்டிருந்தான்... தலைவர் கவனத்தைக் கவர வழி பண்ணிட்டான்'' என்று அதிருப்தியுடன் பேசினார்கள்.
பிற்பகல் ஒன்றரை மணிக்கு அமைச்சர் குழந்தைவேலுவும் ஹண்டேயும் வந்தார்கள். குழந்தைவேலு எம்.ஜி.ஆர். அருகில் அமர்ந்து சட்டசபை ரகளையைப் பற்றிய தகவலை முதல் முதலாகக் கொடுத்தார். சற்றைக்கெல்லாம் இன்னும் சில அமைச்சர்கள் வந்தார்கள். ஏதோ அமைச்சரவைக் கூட்டமே அங்கே நடப்பது போல இருந்தது. கடைசியில் சபாநாயகர் ராஜாராம், ஆர்.எம்.வீ., எஸ்.டி.எஸ். ஆகியோர்தான் பாக்கி! சிறிது நேரத்தில அவர்களும் வந்தார்கள்.
ஆர்.எம்.வீ. முதலமைச்சரின் முதுகுப் பக்கத்தில் அமர்ந்துவிட்டு, சபாநாயகரும் மற்றவர்களும் கிளம்பியபோது தானும் கிளம்பிச் சென்றார்.
உண்ணாவிரத மேடையைச் சுற்றிக் கும்பல் மிக அதிகமாகவே, மப்டி போலீஸார் எல்லோரையும் விரட்டினார்கள்.
''அஞ்சு மணிக்கு ஜெயலலிதா ஜூஸ் கொடுக்க உண்ணாவிரதம் முடியுமாம்.''
-என்று ஒரு பொதுஜனம் சொல்ல, கட்சித் தொண்டர் வெறுப்படைகிறார்.
''ஏதாவது இஷ்டப்படி பேசாதீங்க. அவங்க ஊரிலேயே இல்லை'' என்று பதில் கொடுத்தார் முறைப்பாக!
உண்ணாவிரதம் முடியும் நேரம் நெருங்கியது. ''5மணி ஆகிறது'' என்றார். ப.உ.சண்முகம் எம்.ஜி.ஆர். கறுப்புக் கண்ணாடியைத் தூக்கிவிட்டுக் கொண்டு தன் எலெக்ட்ரானிக் கடிகாரத்தைப் பார்த்து, ''இன்னும் எட்டு நிமிஷம் இருக்கிறது'' என்றார்! உடனே ப.உ.ச. எதிரே தெரியும் பல்கலைக்கழக கடிகாரத்தைக் காட்டினார். அதில் நேரம் ஐந்து. ''அது ஃபாஸ்ட்'' என்றார் எம்.ஜி.ஆர்.
சற்றைக்கெல்லாம் ஜேப்பியார் லைம் ஜூஸ் கொடுக்க, ஏழு மணி நேர உண்ணாவிரதம் நிறைவடைந்தது......... Thanks.........
Bookmarks