நன்றி சதா வெங்கட்ராமன் அண்ணன் சிவாஜி அவர்களின் இல்லத்தை திரையுலகத்தை சார்ந்தவர்கள் அண்ணன் சிவாஜியின் சொந்தங்கள் மற்றும் அவரை சார்ந்த நண்பர்கள் அவரது வீட்டிற்கு சென்றால் ......
பெரிய வீட்டிற்கு போகிறோம் என்பார்கள்

... அண்ணன் சிவாஜியின் இல்லம் அவரது அண்ணன் தம்பி தங்கை குழந்தைகள் நிறைந்த கூட்டு குடும்பம் அது இன்று வரை நீடிக்கிறது
நடிகர் V. K.ராமசாமி யும் மேஜர் சுந்தர்ராஜன் அவர்களும் அண்ணன் சிவாஜி இல்லத்திற்கு சென்றால்......
அன்ன சத்திரத் ரத்திற்கு போறோம் என்பார்கள்
ஏன் என்றால் அண்ணன் சிவாஜி இல்லத்தில் எந்த நேரமும் சமையல் நடந்து கொண்டே இருக்கும்
படபிடிப்பு தளத்தில் அண்ணன் சிவாஜியிருந்தால் அவரது வீட்டில் இருந்து ஐந்து அடி உயர கேரியரில் சாப்பாடு எடுத்து செல்வார்கள் அண்ணன் சிவாஜியுடன் நடிக்கும் அனைத்து நடிகர்களுக்கும் உணவுபரிமாறபடும் அவரது இல்ல சாப்பாட்டை சாப்பிட்ட திரையுலக பிரமுகர்கள் ஏராளம்
அதை விட ஞாயிற்றுகிழமையில் உறவினர்கள் ஒன்று கூடி கொண்டாடும் திருவிழா போல் காட்சி அளிக்கும் அந்த பெரிய விடு ( அன்னை இல்லம் )
அப்பேற்பட்ட நம் அண்ணன் கணேசன் வாழ்ந்த இல்லத்தின் வாசலில் ......
அருள் பாலித்து வரும் கணேசர் கோவில் வாசலில்
அண்ணன் சிவாஜி அவர்களின் அன்பு இதயம் திரு.கணேசன் அவர்கள்
அள்ள அள்ள குறையாத அட்சத பாத்திரமாக விளங்கிய அன்னை இல்லத்தின் நினைவுகளை போற்றுகின்ற வகையில்
52 வாரம் ஞாயிற்றுகிழமையில் தொடர்ந்து அன்னதானம் செய்து அண்ணன் சிவாஜியின் புகழுக்கு பெருமை சேர்த்த அவருக்கும் அவரது குருப் ஆப் கர்ணன் நிர்வாகிகளுக்கும் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
ஒரு நிகழ்ச்சி நாம் செய்ய எப்படி எல்லாம் கஷ்டபட வேண்டி உள்ளது ஆனால் அவர் அதே வேலையாக இருந்து தொடர்ந்து செய்து வெற்றி கண்டுள்ளதை என்னிபூரிப்படைய செய்கிறது
தொடர்ந்து இனி சனி ஞாயிறு இரு தினங்களும் அன்னதானம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது இரட்டிப்பு மகிழ்ச்சியாக உள்ளது
1952ல் பராசக்தி வெளிவந்து

35 வாரங்களுக்கு மேல் ஒடி சாதனை செய்தது அதே போல திரு.கணேசன் அவர்களும் அவரது நண்பர்களின் இந்த 52 வார அன்னதான நிகழ்ச்சி மென்மேலும் சிறப்புற்று வெற்றி வாகை சூடி வளம் பெற வாழ்த்துக்கள்
இந்த தலையாய பணியில் எங்களது பங்களிப்பும் இம்முறை இடம் பெறும்
வாழ்க அண்ணன் சிவாஜி புகழ்
வளர்க தொண்டு ள்ளம்




நன்றி Vijaya Raj Kumar