Page 83 of 400 FirstFirst ... 3373818283848593133183 ... LastLast
Results 821 to 830 of 3996

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 21

  1. #821
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    322
    Post Thanks / Like
    காஷ்மீர் மாநிலத்தில் குழந்தைகள் கல்வி வளர்ச்சி நிதி கவர்னர் மீர்காசிமிடம்
    டெல்லி வாழ் தமிழர்களுக்குவீடுகட்ட அன்னை இந்திராவிடம் நிதி
    மும்பை கொய்னார் டேம் உடைந்நபோது இந்தியாவிலேயே முதல்நபராக நிதி
    மும்பை வீரசிவாஜி சிலை வைக்கநிதி
    பீகார் வெள்ள சேதநிதி...
    அமெரிக்க குழந்தைகளை மகிழ்விக்க தனி விமானத்தில் யானை குட்டி
    சீனபோரின்போது யுத்தநிதி
    பாகிஸ்தான் போரின் போது தன்மகளின் திருமண நகைககள் லால்பகதூரிடம்
    சத்துணவு திட்டத்திற்கு மமுதல்நபராக பெருந்தொகை நேருவிடம்
    தன் உழைப்பால் ரத்தம் சிந்தி சம்பாதித்த பணத்தில் அரசியல்
    இதெல்லாம் இன்றைய அரசியல் பதவி வகிக்கும் வாதிகளுக்கு தெரியுமா
    நேர்மையான அரசியல்னா தெரியுமா




    நன்றி சிவாஜி வெற்றிவேல்
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #822
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    322
    Post Thanks / Like
    தனி மனிதர்....
    அந்த ஒருவர் தோற்றதுதான் சரித்திரம்.எதிரிகளாலாயே தாங்கிக் கொள்ள முடியாத தோல்வி அது.அந்த தோல்வியை அவரது ரசிகர்களுக்கே நினைவூட்டுவது அவரது அரசியல் பங்காளிகள்தான்.அதை தோல்வியாக அவரது ரசிகர்களே இன்றுவரை நினைப்பது இல்லை. பின் ஏன் அடிக்கடி நினைவூட்டல்?
    அவர் எப்படி தோற்கலாம் என்பது தான் புரியாத புதிராக உள்ளது? இது கூட எதிர்க் கூடாரமிருந்தே!
    கலையுலகை உச்சத்திற்கு கொண்டு சென்றவர் பயணித்த பாதையானது மிகவும் சுத்தமானது. அவர் வந்திருந்தாரென்றால் அரசியலின் சில சாக்கடைகளாவது ச...ுத்தமாயிருக்கலாம் என்ற எண்ணமும் ஒரு காரணமாயிருக்கலாம்.தங்களின் கசடான
    அரசியல் செயல்கள் அவர்களுக்கே சலிப்பை தந்திருக்கலாம்.ஆனாலும் மொத்த கட்சியின் செயல்பாடுகள் தடைகளை ஏற்படுத்தும் சூழலில் தான் கட்சிகள் நடந்து கொண்டிருப்பதால் அதை மீறி என்ன செய்ய முடியும்? ஓரத்தில் உறுத்திக் கொண்டிருக்கும் அந்த 10000 ஓட்டு வித்தியாசத்தை தங்களின் மனச்சாந்திக்கு பயன்படுத்திக் கொள்கின்றனர்.
    யார் யாரெல்லாம் ஜெயித்திருந்தார்கள் என்ற வரிசையை தமிழக அரசியலில் பார்த்தோமானால் அந்த வரிசை ஓட்டுப் போட்ட மக்களுக்கே அறுவெறுப்பை தரும்.
    சுதந்திரத்திற்கு பின்னால் கடைசியாக காமராஜருக்கு பின்னால் வந்த44 வருட அரசியல் தேர்தல் ஒரே ஒருவரின் தோல்வியைத்தான் தாங்கிக் கொள்ள முடியாதது என்ற வகையிலே பிரஸ்தாபிக்கப்படுகிறது.அப்படியானால் தோல்வியுற்றவர் எப்படிப் பட்டவராக இருந்திருக்க வேண்டும்?
    கண்டிப்பாக அவர் ஜெயித்திருக்க வேண்டுமே என்ற எண்ணம் அவரது தொண்டர்களை விட எதிர் முகாமுக்கே அதிகம் இருந்திருக்கின்றது என்பது தான் புலனாகின்றது.
    உங்களுக்கெல்லாம் 100 ரூபாய் தருகிறேன்.அரசாங்க கஜானாவில் 1000 ரூபாய் எடுத்துக் கொள்வேன் என்று மறைமுகமாய் விளையாடப்படும் அரசியல் களத்தில் புரியாத பாமரர்களின் ஓட்டுகள்
    எந்த நல்ல உண்மை வீரனுக்கு கிடைக்கும்?
    ஆகவே எம் திலகம் நல்ல மனிதர்.
    அந்த பெயர் போதும் எமக்கு!
    ஆனால் இந்தஅரசியல் அவலமானது , என்றுதான் சரித்திரம் பேசப்படும்.

    நன்றி Senthilvel Sivaraj (Sivaji Group)
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  4. #823
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    322
    Post Thanks / Like
    முதல் சுற்றில் 31 அரங்குகளில் 50 நாட்களைக் கடந்ததோடு மட்டுமன்றி, ஆறே வாரங்களில் தமிழகத்தில் 31 லட்ச ரூபாய் வசூல் செய்து, மதுரையில் 182 நாட்கள் ஓடிய கருப்பு- வெள்ளையின் கடைசி ஆல்ரவுண்ட் பிளாக்பஸ்டர் திரைப்படம்
    #பட்டிக்காடா_பட்டணமா 1972



    நன்றி nilaa
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  5. #824
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    322
    Post Thanks / Like
    அமெரிக்காவில் MGR சிகிச்சை பெற்றபோது நேரில் சந்தித்த கலைக்கடவுள் சிவாஜி யிடம் MGR தன் மனைவி ஜானகி அம்மாளை காட்டி இவள் ஏதும் அறியாதவள் எனக்கு ஏதும் ஆச்சுதுன்னா த...ம்பி கணேசா இவளை நீ பார்த்துக்கணும்னு சொன்ன ஒரே சொல்லு க்காக 89 தேர்தலில் அன்று தோற்றார் எங்கள் தெய்வம் ஆனால் அன்று தோற்றது சிவாஜி அல்ல MGRன் மனைவி ஜானகி அம்மாள் ஆட்சி யார் விசுவாசமாக இருந்தது(இது நடிகர் அண்ணன் திரு ராஜேஷ் அவர்களிடம் ஜானகி அம்மாள் சொன்னது) MGRக்கு யார் துரோகம் செய்தனர் இன்று பதவிக்காக காலை பிடுச்சு வந்தவர்கள் சொல்கிறார்கள் சிவாஜி அரசியலில் தோற்றார் என்று உண்மை அதுவல்ல உங்கள் தலைவர் MGR உங்கள் போன்ற தொண்டர்களிடம் தோல்வியடைந்தார் அன்று இதை சொல்லுங்க விசுவாசம் னா என்னவென்று


    நன்றி Shanmugaraj Madthur
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  6. #825
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    322
    Post Thanks / Like
    மொத்தத்தில் கர்ணனும்.....
    எங்களின் திலகமும் ஒன்றே....
    கர்ணன் நண்பனுக்காக தன்னையே இழந்தான்...
    எங்கள் திலகமும்,நண்பனாய்...சகோதரனாய் கொண்ட உங்கள் தலைவனுக்காக...
    நன்றி என்ற ஒரு கொள்கைக்காக...
    உங்கள் நலனுக்காக உழைத்து, அன்று தி.மு.க.தலைவர் விரும்பி அழைத்தும்,
    நன்றிக் கடனுக்காக ...உங்களுக்கு உழைத்தாரே..ம்ம்ம்...நன்றி கெட்ட ஜென்மங்கள்....உங்களுக்கு எங்கே புரியப் போகின்றது....


    நன்றி Rajendran Rajendran
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  7. #826
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    322
    Post Thanks / Like
    நெஞ்சில் வாழும் அய்யனுக்கு....
    பரந்து விரிந்த பாயும் காவிரி போல்,
    பிரளயத்தின் சண்டவாயு போல்,
    ஓங்கி அடிக்கப்பட்ட பேரிகையின் முழக்கம் போல்,
    மோதி தெரித்த முகில்களில் புறப்பட்ட விண்ணேறு போல்,
    ஜலம் பெருக்கி பீதி காட்டும் வேலம் போல் நீ உச்சரித்த வார்த்தைகளின் கர்ஜனைகளை கேட்டுத்தான் மானிடமே வியக்கிறதே!
    துள்ளும் தமிழே!
    தூய தமிழ் ஓசையே!
    துவளாத தெள்ளு தமிழ் உச்சரிப்பே!
    உன் வெடியோசை குரலால் திரைகளெல்லாம் தீப்பற்றாததுதான் மிச்சமே! எங்களின் விம்மியெலும் நரம்புகள் வெடித்துச் சிதறாதுதான் மீதமே!
    எழிலோவியமாய் உன் வதனம் திரைகளை அலங்கரிப்பது எவ்வாறு உள்ளதென்றால் வெண் பட்டில் வைரங்களையும், முத்துக்களையும், கோமேதங்களையும், மரகதங்களையும் ஒன்றாக குவித்து வைத்து பார்ப்பது போலல்லவா உள்ளது.
    அன்னம்தான் பெண்டிரின் நடையழகு உதாரணம் என்றால் அரிமாவின் நடையழகு வீரர்களுக்கு. ஆனால் உன் நடையழகில் நூறு வகை உண்டே! இதைச் சொல்லி எவற்றை உவமைப்படுத்த முடியும்? சிறுத்தாலும் கடுகு கொண்ட காரமே அதன் வலிமை.நீ மலையல்லவோ!
    அதை என் சொல்வது?
    ஆயிரம் பாவம் காட்டும் விழிகளை கொண்டவனே! வேல் அம்பு வீசி சைதன்யங்களை சாய்ப்பது தான் படை வீரனின் வீரம்.அவருக்கெல்லாம் வேலும் அம்புமே துணை.உனக்கோ உன் விழிகளோ அல்லவா.உன் விழி பார்த்து
    எவன் நிற்பான் எதிரில்.
    விழிகளில் காட்டும் வீரத்தை சொல்வதா?வீரத்துடன் காட்டும் காதலை சொல்வதா? காதலுடன் காட்டும் கனிவைச் சொல்வதா?
    கனிவுடன் பார்க்கும் ரசத்தை சொல்வதா?
    நவரசத்தையும் பிழியும் பாவங்களை சொல்வதா?
    பாவங்களில் ஆயிரம் காட்டும் விந்தையைச் சொல்வதா?
    அதே விழிகளில் ஒரு துளி நீர் இறக்கி நிற்க வைக்கும் அதியசந்தான் என்ன?
    வேந்தனுக்கு ஒரு விழி
    வீரனுக்கு ஒரு விழி
    ஏமாளிக்கு ஒரு விழி
    கோமாளிக்கு ஒரு விழி
    பைத்தியத்திற்கு ஒரு விழி
    பாமரனுக்கு ஒரு விழி
    வித்தகனுக்கு ஒரு விழி
    உத்தமனுக்கு ஒரு விழி
    உங்களுக்குத்தான் இது சாத்தியம்
    சத்தியமாய் மானிடருக்கெல்லாம்
    விழிகள் ஒன்றல்லவா?
    உன் விழிகளை பாட,
    கம்பனே நொந்து கொள்வானே
    வார்த்தைகள் கிடைக்காமலே!
    வளரும் வளர் பிறையும், தேயும் தேய்பிறையும் இயற்கைதானே. அதனால்
    அதில் ஏதும் விந்தையில்லை .உன் புருவ ஏற்றலும், சுருக்கலும் எங்களது நெஞ்சத்து தசைநார்களை அசைக்கிறதே! தசைநார்களில் குருதியின் ஓட்டம் கூடுகின்றதே! இதை எந்த விந்தையில் சேர்ப்பது?
    எதுவென்றே எண்ண முடியாத வான்வெளியில் இருட்டும் சேர்ந்தது போல்
    இருக்கும் நிலையில், தூரத்தில் பிரகாசிக்குமே விண்மீன், அந்த விண்மீனின் ஜோதி வடிவத்தில் பிரபஞ்சத்தின் நம்பகத்தன்மைக்கு விடிவு பிறப்பதுபோல் வந்த கலைஜோதியே!
    உங்கள் விரல்கள் பிடிக்கும் அபிநயத்தில் பரதம் கூட தாழ் பணியுமே!
    இக்கூற்றை பாமரனின் சொல்லாய் கொண்டாலும் கூட புறந்தள்ளுதலில் நெறி உண்டு.
    ஆனால், பெரும் ஞானவான்கள்கூட
    நின்
    நடை பார்த்து,
    நடையின் அழகு பார்த்து,
    நாவின் சரஸ்வதி கடாட்சம் பார்த்து,
    உள்ளம் பார்த்து,
    உள்ளத்தின் சாத்வீகம் பார்த்து,
    உயர்ந்தவரே என்று புகழப்பட்டவரே!
    கற்றோரை கற்றோரே காமுறுவர்.
    இகத்தில்,
    வெற்றிமுரசு கொட்டிய வேந்தர்களைத்தான் பார்ப்பதெங்கே.?
    புராணம் எடுத்தியம்பிய புண்ணியவான்களின் திருக்கோலம் காண்பதெங்கே?
    காவிய நாயகர்களின் திருக்கோலங்களைத்தான் காண்பதெங்கே?
    சிவனைத்தான், அவன் அடியார்களைத்தான், தேவர்களைத்தான்,
    தெய்வ சிந்தனையாளர்களைத்தான், அவதாரங்களைத்தான் கண் கொண்டு பார்ப்பதெங்கே?
    அனைத்திற்கும் ஆறுதலாய் நின் கோலமே சாட்சியல்லவோ?
    அதிசயமே!
    ஆனந்தமே!
    இடி குரல் வேந்தனே
    ஈர நெஞ்சு கொண்டோனே!
    உதவும் கரத்தோனே!
    ஊர் புகழும் கலையே!
    எழிலின் இலக்கணமே!
    ஏடு படிக்கா மேதையே
    ஐயனே!
    ஒருவனில் ஒருவனே!
    ஓங்கார நாதனே!
    ஔவியம் அற்றவனே!
    வாழிய நின் புகழ்



    நன்றி Senthilvel Sivaraj (Sivaji Group)
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  8. #827
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    322
    Post Thanks / Like
    சிவாஜியின் அரசியியல் தெரியாமல் உளறிய எடபாடிக்கு ,ரவீந்திரன் துரைசாமி சாட்டை அடி !
    நியூஸ் 18 சேனலில் பங்கேற்று பேசிய அரசியல் விமர்சகரும் பத்திரிகை ஆசிரியருமான ...திரு ரவீந்தரன் துரைசாமி அவர்கள் சிறப்பாக கருத்தை பதிய வைத்தார்
    அதாவது சிவாஜியின் அரசியல் பற்றி பேசும் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சரியான வரலாறு தெரியாமல் பேசி இருக்கிறார்,
    எம்ஜிஆர் எமர்ஜென்சி காலத்தின் போது தனது கட்சி அதிமுகவைக் காப்பாற்றி கொள்ள பிரதமர் இந்திரா அவர்களிடம் சரணடைந்து தான் கட்சி பதவி என தக்க வைத்துக் கொண்டார், பின்னாளில் மொரார்ஜி தேசாய் பிரதமர் ஆன போதும் கூட அவரிடமும் சரணடைந்து ஆட்சியை தொடர்ந்து நடத்தினார்,
    பிரதமர்களிடம் சரணடைந்தவர் எம்ஜிஆர்
    அதே தருணத்தில் சிவாஜியிடம் பிரதமர்கள் தான் சரணடைந்தார்கள் என்பது வரலாறு,
    அதற்கு உதாரணம் 1984 தேர்தலில் சிவாஜியின் நிபந்தனையை ஏற்று பிரதமர் ராஜீவ் காந்தி வேட்பாளர்கள் பட்டியலை மாற்றி அறிவித்தது
    அந்தச் சூழலில் சிவாஜி தனது நிலையை மாற்றிக் கொள்ளாமல் இருந்து இருந்தால் அரசியலில் சிவாஜியின் சகாப்தம் வேறு மாதிரி அமைந்திருக்கும்
    நன்றி ! திரு இரவீந்திரன் துரைச்சாமி அவர்களுக்கு,


    நன்றி Ranganathan Kalyan (F Book)
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  9. #828
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    322
    Post Thanks / Like
    திரைப்படம் மட்டுமல்ல... நாடகமும் ஒரு வரலாற்று வெற்றிதான்!



    மதிய உணவுத் திட்டத்திற்காக 1959 ம் ஆண்டு


    Thanks Nilaa
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  10. #829
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    322
    Post Thanks / Like
    தேசியத் தலைவர்களை நாட்டிற்கு அடையாளம் காட்டியும் அவர்களின் நினைவுகள் மக்களிடையே நிலைத்து நிற்பதற்கும் காரணங்கள் நடிகர் திலகத்தின் படங்களே..............

    இன்றைய இந்து தமிழ் திசை நாளிதழில்





    Thanks Lakshmanan Lakshmanan (Nadigar Thilagam Sivaji Visirigal)
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  11. #830
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    322
    Post Thanks / Like
    தமிழ்த் திரையுலகில் 13:04:1944 அன்று வெளியாகி ( 8) எட்டு திரைகளில் வெள்ளிவிழா ஓடிய வெற்றிப்படமான பி.யூ. சின்னப்பாவின் #ஜகதலப்பிரதாபன்

    திரைப்படத்தின் சாதனையை 35 ஆண்டுகள் கழித்து 1979-ல் எட்டுத் (8) திரைகளில் வெள்ளிவிழா ஓடி சமன் செய்த படம் நடிகர்திலகத்தின் 200 வது படமான #திரிசூலம்

    சென்னை மாநகரில் திரையிடப்பட்ட 3 அரங்குகளிலும் ஒரு காட்சிகூட மாற்றப்படாமல் மூன்றிலும் வெள்ளிவிழா ஓடிய நடிகர்திலகத்தின் மூன்றாவது படம் #திரிசூலம்









    நன்றி Vaannila Vijayakumaran

    ;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

    பாண்டிச்சேரி , தஞ்சை , திருவண்ணாமலை முதலிய இடங்களில்
    ஷிப்டிங்கில் வெள்ளிவிழா கண்டது குறிப்பிடத்தக்கது
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •