Page 216 of 402 FirstFirst ... 116166206214215216217218226266316 ... LastLast
Results 2,151 to 2,160 of 4011

Thread: Makkal thilagam mgr- part 25

  1. #2151
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    2020 ஆண்டு காலண்டர் புரட்சித்தலைவர் அற்புத புகைப்படங்கள் அடங்கிய... ஒலிக்கிறது உரிமைக்குரல் மாதஇதழ் வெளியீடும் 6 பக்க வண்ணக் காலண்டர் ....பெரிய சைஷ் (14 * 19) விலை : ரூ. 75 /- தங்களுக்கு தேவையான காலண்டர் எத்தனை என்பதை அறிவித்தால் 25 சதவீகிதம் கழிக்கப்படும்! நன்றி உரிமைக்குரல் ராஜு......... Thanks.........

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2152
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    புரட்சித்தலைவரின் புகழை பாடும் ஒரே மாத இதழான நமது ஒலிக்கிறது உரிமைக்குரல் மாதஇதழ் ( டிசம்பர் 2019) பல அறிய தகவல்களுடன் வெளி வந்து விட்டது.மழை காரணமாக டிசம்பர் 5 ம் தேதி முதல் அனைத்து ஊர்களிலும் கிடைக்கும். நன்றி உரிமைக்குரல் ராஜு......... Thanks...

  4. #2153
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    நமது பொன்மனச் செம்மலின் திரைப்பட புகழ் சரித்திரத்தில் மைல்கல்லாக 1970 ம் ஆண்டில் வெளியான கலைப்பேரரசின் திரைப்படங்களுக்கு ( மாட்டுக்கார வேலன், என் அண்ணன், எங்கள் தங்கம், தேடி வந்த மாப்பிள்ளை, தலைவன்) ஆகிய 5 திரைக்காவியங்களுக்கும் சேர்த்து ...2020 ஜனவரி மாதம் நமது ஒலிக்கிறது உரிமைக்குரல் மாதஇதழ் சார்பாக எப்பொழுதும் போல் பொன்விழா ( 50 ஆண்டு திரைப்பட ) மலர் வெளியிடப் படுகிறது ! பற்பல சாதனைகள் புகைப்படங்கள், அறிய தகவல்கள் என ஒரு வரலாற்று பொக்கிஷமாக வெளிவர உள்ளது ! தலைவரின் அபிமானிகள் ஜனவரி மாதம் இப்பொன் விழா மலருக்கு வாழ்த்து செய்தி தந்து தலைவரின் புகழ்பாட ஆதரவு தாருங்கள். பொன்விழா மலர்... 2020 ஜனவரி 26 ஞாயிறு அல்லது பிப்ரவரி 2 ஞாயிறு வெளியிடப்படும்! மலர் வெளியிடபடும் நிகழ்வு மட்டும் விழாவாக நடைபெறும். நன்றி! உரிமைக்குரல் ராஜு........... Thanks..........

  5. #2154
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    இப்படியும் ஒரு சாதனையில் சரித்திர நாயகன்..... மக்கள் திலகத்தின் "ஒளி விளக்கு" - 100 நாளை எட்டி பிடித்த ஊர்கள் .... சென்னை - பிராட்வே 92 நாள். ஈரோடு- முத்துக்குமார் 85 நாள். மயிலாடுதுறை 90 நாள். வேலூர் இரண்டு அரங்கு இணைந்த 88 நாள். சேலம் 86 நாள். மன்னார்குடி 86 நாள். தஞ்சை 85 நாள்.7 ஊரில் 12 வாரங்களை கடந்துள்ளது. அடுத்து.... "நம்நாடு" - தஞ்சை 91 நாள் மயிலாடுதுறை 96 ஈரோடு 85 கருர் 84 பட்டுக்கோட்டை 96 தூத்துக்குடி 83 புதுச்சேரி 85 வேலூர் 80 எட்டு திரைகளில் 100 நாளை கடந்த நம்நாடு மேலும் 8 ஊரில் 100 நாள் ஒடவேண்டியது.... மேலும் தகவல்கள்
    தொடர்வோம்......உரிமைக்குரல் ராஜு....... Thanks...

  6. #2155
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எங்கும், எப்பொழுதும், என்றைக்கும் , எதிலும் எழுச்சி கொண்ட எழில் வேந்தன், ஏழை பங்காளன்.... கலையிலும், காவியத்திலும் கலைமன்னராகவும்....சக்கரவர்த்தியாகவும் அரசியல் என்னும் தூய்மை பக்கத்தில் மட்டும் வலம் வந்த மன்னவரே...எதிலும் நம் முதல்வர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்....... அவர்களின் அன்பு வழியில்.... உண்மை பக்தர்களாகி நாம் என்றும் புகழாரம் சூட்டி மகிழ்வோம்! நன்றி! உரிமைக்குரல் ராஜு........ Thanks...........

  7. #2156
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    'துக்ளக் ' இத*ழின் நிறுவனர் ம*ற்றும் ஆசிரியர், சிற*ந்த* ந*கைச்சுவை ந*டிக*ர், வ*ச*ன*க*ர்த்தா, எழுத்தாள*ர், இய*க்குன*ர், வ*ழ*க்க*றிஞ*ர், அர*சிய*ல் விம*ர்ச*க*ர், புர*ட்சித்த*லைவி, மோடி, வாஜ்பாய், அத்வானி உள்ளிட்ட பெரும்பாலான* த*லைவ*ர்க*ளின் அன்பைப் பெற்ற*வ*ர் ப*த்மபூஷ*ன் விருது பெற்ற சோ.ராமசாமி அவ*ர்க*ளின் மூன்றாம் ஆண்டு நினைவு அஞ்ச*லி!

    இவ*ர் மக்கள் திலகத்துட*ன் க*ண்ண*ன் என் காத*லன், என் அண்ண*ன், ஒளிவிளக்கு,
    ச*ங்கே முழ*ங்கு, கும*ரிக்கோட்ட*ம், ஒருதாய் மக்கள், க*ணவ*ன், அடிமைப்பெண், தேடிவ*ந்த* மாப்பிள்ளை, கும*ரிக்கோட்ட*ம், எங்க*ள் த*ங்க*ம், நீரும் நெருப்பும் வ*ரை 12 ப*ட*ங்க*ளில் ந*டித்துள்ளார். இவ*ர் எம்ஜிஆரை அர*சிய*ல்ரீதியாக விம*ர்சித்த* போதும் இருவ*ருக்குமிருந்த* ந*ட்பில் விரிச*ல் விழுந்த*தில்லை. 1980 பாராளுமன்ற* தேர்த*லில் அண்ணா திமுக*விற்கு இர*ண்டு இட*ங்க*ளே கிடைத்தபோதும், எம்ஜிஆரின் அர*சை இந்திரா காந்தி க*லைத்த*போதும் த*லைவ*ருக்கு ஆதர*வாக துக்ளக்கில் எழுதியுள்ளார். அப்போது அண்ணா திமுக*விற்கு ஆத*ர*வாக சில பொதுக்கூட்ட*ங்க*ளிலும் பேசியுள்ளார். ந*ன்றியுட*ன் நினைவு கூறுகிறோம்.

    துக்ளக் வாச*க*ர் விழாக்க*ள், துக்ளக் கேள்வி ப*தில், துக்ளக் திரை விம*ர்ச*ன*ம் ஆகிய*வ*ற்றில் இவ*ர*து ந*டுநிலைமை க*ருத்தை தெளிவாக* உணரலாம். ப*ழ*குவ*த*ற்கு இனிமையான*வ*ர். அணுகுவ*த*ற்கு எளிமையான*வ*ர். ப*த்திரிக்கை உலகிலும், நாட*க*த்துறையிலும் திரையுலகிலும் இவ*ர*து ப*ணி மகத்தான*து. த*னித்த*ன்மை வாய்ந்த*து. வாழ்க* திரு. சோ.ராம*சாமி அய்யா புக*ழ்......... Thanks.........

  8. #2157
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    பொன்மனச்செம்மலை உயிரென நேசிக்கும் அன்பு
    நெஞ்சங்களே !

    அனைவருக்கும் வணக்கம்!

    மக்கள் திலகம், புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள்
    மறைந்து 32 ஆண்டுகள் கடந்த நிலையில் அவரது பெயரும்
    புகழும், பெருமையும் – நாளுக்கு நாள் உலகெங்கும் பரவி
    வருவதைக் காண முடிகிறது. குறிப்பாக நம் அன்புத் தலைவர்
    பொன்மனச்செம்மல் அவர்களின் நூற்றாண்டு பிறந்த நாள்
    விழா தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும்,
    இந்தியாவில் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி,
    மகாராஷ்டிரா, டில்லி உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் வெகு
    சிறப்பாக கொண்டாடப்பட்டது.
    அது மட்டுமல்ல, பிரான்ஸ், துபாய், கனடா, சிங்கப்பூர்,
    பினாங்கு, மலேசியா, இலங்கை, மொரீசியஸ், மாலத்தீவு
    உள்ளிட்ட – பல நாடுகளிலும் நம் தலைவரின் நூற்றாண்டு
    விழாக்கள் நடத்தப்பட்டன. தொடர்ந்து 101,102, 103 – வது
    பிறந்த நாள் விழாக்களும் கொண்டாடப்பட்டு வருகின்றன.
    அது மட்டுமல்ல, வாட்ஸ் அப்–பேஸ்புக், இன்ஸ்டிராகிராம்,
    யூ டியூப், உள்ளிட்ட இணையதளங்கள் வழியாகவும் இதய
    தெய்வம் எம்ஜிஆர் அவர்களைப் பற்றிய பல்வேறு சிறப்புக்
    குரிய தகவல்கள் பதிவு செய்யப்பட்டு உலகெங்கும் பரவி
    வருகின்றன.
    நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான தலைவரின் பக்தர்கள்
    எந்தவித சுயநல நோக்கமும் இன்றி, எந்த எதிர்பார்ப்பும்
    இல்லாமல் தங்களின் சொந்தப் பணத்தில், நண்பர்கள் மற்றும்
    தலைவரின் அபிமானிகள், பக்தர்களின் உதவியால்
    விழாக்களை, பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்திவருவது கண்டு
    பெருமை அடைகிறோம்.

    இத்தகைய நற்செயல்களில் ஈடுபட்டு தலைவரின்
    புகழ்பரப்பும் பக்தர்களை, அபிமானிகளை, ஆதரவாளர்களை
    ஒருங்கிணைக்க வேண்டும் என்ற அவா என்னுள் எழுந்தது.
    அதற்கான தொடக்கமாகவே, இந்த வேண்டுகோள் கடிதம்
    தங்களுக்கு அனுப்பப்படுகிறது.
    இந்த ஒருங்கிணைப்பு முயற்சியை மேற்கொண்டுள்ள துரை
    கருணா ஆகிய எனக்கு தற்போது 66 வயதாகிறது.
    1970–ம் ஆண்டு வத்தலக்குண்டு நகரில் மக்கள் திலகம்,
    எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் பொறுப்பில்
    இருந்தவன்.
    1973 திண்டுக்கல் இடைத் தேர்தலில் கழக வெற்றிக்காகப்
    பாடுபட்டவன்.
    1973, 1974, மற்றும் 1975 கால கட்டங்களில் விலைவாசி
    உயர்வுப் போராட்டம், எம்எல்ஏக்களிடம் மனு அளிக்கும்
    போராட்டம், காவல்துறை அடக்கு முறை கண்டனப்
    போராட்டம் ஆகியவற்றில் பங்கேற்று சிறை சென்றவன்.
    1976, 77 கால கட்டங்களில் திருச்சி மாணவர் அணியில்
    இணைந்து பல பொதுக்கூட்டங்களில் பங்கேற்றவன்.
    1978 முதல் 1984 ஆம் ஆண்டு வரையிலும் நம்முடைய
    அனைத்திந்திய அண்ணாதிராவிட முன்னேற்ற கழக
    தலைமைக் கழக அலுவலகத்தில் அனைத்துலக எம்ஜிஆர்
    மன்றம் மற்றும் எம்ஜிஆர் இளைஞர் அணி (1982) யின்
    அலுவலக நிர்வாகியாக பணியாற்றியவன்.
    1984 முதல் 1996 வரையிலும் அண்ணா, மன்ற முரசு,
    பொன்மனம், நமது எம்ஜிஆர் ஆகிய கழக நாளேடுகளிலும்
    செய்தியாளனாக பணியாற்றினேன்.
    தொடர்ந்து வெற்றிமாலை, மாலைச்சுடர் ஆகிய
    நாளேடுகளிலும், இதயம் பேசுகிறது, குமுதம், புதிய
    தலைமுறை வாரஇதழ்களிலும் என் பங்களிப்பைச்
    செலுத்தியவன்.
    கடந்த 4 ஆண்டுகளாக தொலைக்காட்சி விசாதங்களில்
    பங்கேற்று சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம்
    பொன்மனச்செம்மல் புகழை, பெருமையை, அவரது
    சிறப்பியல்புகளை எடுத்துச் சொல்லி வருகிறேன்.
    எம்ஜிஆர் அரசியல்பாதை, எம்ஜிஆர் வாழ்வும் நெறியும்,
    ஒரே ஒரு எம்ஜிஆர், இலங்கை பிரச்னையும் இந்திய
    நிலையும், (எம்ஜிஆர் அவர்களின் பங்களிப்பு) ஆகிய
    புத்தகங்களை எழுதி வெளியிட்டுள்ளேன்.
    புரட்சித் தலைவரின் சிறப்புகள் குறித்து நூற்றுக்கணக்கான
    கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
    பொன்மனச்செம்மல் எம்ஜிஆர் புகழ்பரப்பும் கூட்டங்கள்,
    விழாக்கள் எங்கு நடந்தாலும் சென்று பங்கேற்கிறேன்.
    அந்தவகையில், மதுரை, திண்டுக்கல், சேலம், கோவை,
    புதுச்சேரி உள்ளிட்ட பல பகுதிகளுக்குச் சென்று தலைவனின்
    தனிச் சிறப்புக்கள், ஆட்சிக்கால சாதனைகள்
    குறித்துபேசிவருகிறேன்.
    2016 ஆம் ஆண்டுக்குப் பிறகு புதிதாக பிறந்துள்ள எம்ஜிஆர்
    யுகம் ஒளிமயமானது. இன்றைய இளந்தலைமுறை மற்றும்
    அடுத்து வரும் புதிய தலைமுறை யினருக்கு
    பொன்மனச்செம்மல் எம்ஜிஆரின் பெருமைகளை அவரது
    சிறப்புக்களை நாம் கொண்டு சேர்க்க வேண்டும். அதற்கு நாம்
    அனைவரும் ஒருங்கிணைய வேண்டியது அவசியம்.
    இந்த ஒருங்கிணைப்பின் முதற்கட்டமாக, வாட்ஸ் அப்,
    பேஸ்புக், யூடியூப் உள்ளிட்டஇணைய தளத்தில் உள்ள
    தலைவனின் பக்தர்கள், தங்களது புகைப்படத்துடன் சுய
    விவர குறிப்புகளையும், தங்களுடன் தொடர்பில்உ ள்ள
    புரட்சித் தலைவரின் . விசுவாசிகளுடைய சுய விவர
    குறிப்புகள் மற்றும் புகைப்படங்களையும் சேகரித்து கீழ்கண்ட
    முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    முகவரி:
    துரை கருணா
    8/23, பீட்டர்ஸ் காலனி
    ராயப்பேட்டை
    சென்னை 600 104
    கைபேசி எண்கள்: 8939307294, 9940224183......... Thanks.........

  9. #2158
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    குமுதம் வார இதழ் -11/12/19

    ---------------------------------------------

    கற்பகம் படத்திற்கு எம்.ஜி.ஆர். போட்ட கண்டிஷன்*

    ------------------------------------------------------------------------------------


    கற்பகம் படத்திற்கு* திரைக்கதை வசனத்தை முழுமையாக எழுதி முடித்ததும் கே.எஸ். கோபாலகிருஷ்ணனுக்கு* ஒரு யோசனை தோன்றியது .* இதை ஆசை என்றும் சொல்லலாம் .* இந்த**படத்தில் ஏன் எம்.ஜி.ஆர்.அவர்களை* கதாநாயகனாக நடிக்க வைக்க கூடாது* *இந்த படத்தில் ஜெமினி கணேசன் நடித்த வேடத்திற்கு முதலில் எம்.ஜி.ஆர். அவர்களை நடிக்க வைப்பதற்கு* ஏற்பாடுகளை செய்தார் .அவரை நேரில் சந்தித்து இந்த ப டத்தின் கதையை சொன்னார்.* கதையைக் கேட்டதும் எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்துவிட்டது .* மருமகன்* சுந்தரம் வேடத்தில் நடிப்பதற்கு* முழுமையாக சம்மதித்தார் .





    ஆனால் ஒரு கண்டிஷன். நான் சொல்வதை நீங்கள் ஏற்றுக்* கொண்டால் நான் நடித்து தருவதில் எந்த மாற்றமும் இல்லை என்றார் எம்.ஜி.ஆர்.* என்ன கண்டிஷன் சொல்லுங்கள் ?* உங்கள் கண்டிஷன் ஏற்று கொள்கின்ற வகையில் இருந்தால் எனக்கு ஒரு பிரச்னையும் இல்லை என்றார் . கே.எஸ்.ஜி.

    மாமனார் நல்லசிவம் பாத்திரத்தில் யாரை நடிக்க வைக்க போகிறீர்கள் முதலில் அதை சொல்லுங்கள் என்றார் எம்.ஜி.ஆர்.* நான் கதையை எழுதும்போது என் மனசுக்குள் மாமனார் கதாபாத்திரமாகவே வந்தவர் எஸ்.வி.ரங்காராவ் .* இந்த படத்தின் மாமனாராக* எஸ்.வி..ரங்காராவைத்தான் நடிக்க வைக்க* *போகிறேன் என்றார்* கே.எஸ்.ஜி.

    இதை கேட்டதும், எம்.ஜி.ஆர். கொஞ்சம் நேரம்கூட யோசிக்கவிடாமல் , மாமனார் வேடத்தில் டி.எஸ். பாலையா நடிப்பதாக இருந்தால் இந்த படத்தில் நடிப்பதற்கு நான் பரிபூரணமாக சம்மதிப்பேன் என்றார் எம்.ஜி.ஆர்.* இயக்குனர் கே.எஸ்.ஜி.யும்* அதற்கு மறுப்பு தெரிவிக்காமல் ஒப்பு கொண்டார் .* ஆனால் வீட்டிற்கு வந்ததும் ஒரு யோசனை தோன்றியது .**

    மாமனார் நல்லசிவம் வேடத்தில் எஸ்.வி.ரங்காராவ் நடித்தால்தான் கதைப்படி பொருத்தமாக இருக்கும் .* அவரையே நடிக்க வைத்தால்தான் படத்திற்கு மிகவும் சிறப்பாக இருக்கும் என்ற முடிவுக்கு வந்தார் .* அதனால் தனது கருத்தை வலியுறுத்தினார் .* ஆனால் எம்.ஜி.ஆர். அந்த படத்தில் டி.எஸ். பாலையா நடிக்க வேண்டும் என பேசிவிட்ட பிறகு* அவரை மாற்ற நினைப்பது சரி எனப்படவில்லை .அதனாலேயே எம்.ஜி.ஆரும் அந்த படத்தில் நடிக்க மறுத்து விலகி கொண்டார் .* இப்படி அவர் விலகியதற்கு முக்கியமான ஒரு பிளாஷ் பேக்*கதையும் ஒன்று உண்டு.**

    ஜூபிடர் பிக்ச்சர்ஸ் தயாரித்த "மோகினி " படத்தில் இரண்டு கதாநாயகர்களாக*நடிப்பதற்கு பேசப்பட்டவர்கள் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆரும், டி.எஸ். பாலையாவும் தான் .* முதலில் எம்.ஜி.ஆர். வேடத்தில் டி.எஸ். பாலையாவும் பாலையா வேடத்தில் எம்.ஜி.ஆரும் நடிப்பதாக இருந்தது .* அதை எம்.ஜி.ஆர்.தான் அவரிடம் பேசி , நீங்கள் நடிக்கும் வேடத்தில் நான் நடிக்கிறேன் , என் வேடத்தில் நீங்கள் நடியுங்களேன் . எனது எதிர்கால வாழ்க்கைக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் என்று கேட்டு கொண்டார் .* அதனால் எம்.ஜி.ஆர். அந்த படத்தில் கதாநாயகன் வேடத்தில் தோன்றினார் .* *பாலையா இரண்டாவது கதாநாயகனாக நடித்தார் .

    டி.எஸ். பாலையாவுக்கு பதிலாக தான் நினைத்தபடியே எஸ். வி.ரங்காராவை* நடிக்க வைத்தார் கே.எஸ்.ஜி.* படமும் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றது .* எம்.ஜி.ஆர். அந்த படத்தில் நடிக்காமல் போனது ஒரு இழப்புதான்* என்பதை தன்னை சந்திக்கும் நெருக்கமான நண்பர்களிடம் தெரிவித்திருக்கிறார்* கே.எஸ்.கோபால கிருஷ்ணன் .
    Last edited by puratchi nadigar mgr; 7th December 2019 at 10:31 PM.

  10. #2159
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    புரட்சி தலைவர் தன் அரசியல் தலைவராக ஏற்றுகொண்ட அறிஞர் அண்ணாவை முதல்வராக்கியவர்,

    தன் நண்பராக கருதிய கருணாநிதி யை முதல்வராக்கியவர்,

    தன் துணைவி ஜானகி அம்மையார் முதல்வராக வரக்காரணமானவர்,

    தன்னுடன் நடித்த ஜெயலலிதாவை முதல்வராக வரக்காரணமானவர்,

    தன் ரசிகரான ஓ.பி.பன்னீர் செல்வம் முதல்வராக வர அடித்தளமிட்டவர்,

    தன் கட்சி தொண்டரும் முதல்வராக வர மூலகாரணமாக இருந்து, எடப்பாடி பழனிச்சாமி வரை,

    இப்படி பல முதல்வர்கள் தமிழகத்தை ஆள காரணமாக இருந்த "மன்னாதி மன்னன் " புரட்சி தலைவரை பார்த்து சில அரைவேக்காடுகள்

    "எம்ஜிஆர் நடிகர்தானே அவர் முதல்வராக வரும்போது நாங்கள் ஆளக்கூடாதா.. "
    ஏன்று கேள்விகேட்கிறார்கள், பொதுநல சேவை எதுவும் செய்யாமல் " நடிகர் " என்ற ஒரே தகுதியை வைத்துகொண்டு முதல்வராக வரத்துடிக்கிறார்கள்........... Thanks.........

  11. #2160
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    Madurai-based Tamil linguist C Rajeswari presents fascinating insights into the minds of fans of the superstar-turned-politician through a series of 100 books - The Hindu - https://www.thehindu.com/entertainme...le29415679.ece.......... Thanks..........

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •