-
27th April 2020, 03:18 PM
#3811
Junior Member
Diamond Hubber
நெல்லை மாவட்டம் பாளையங் கோட்டையில் வசிக்கும் மக்கள்திலகம் எம்ஜிஆரின் தீவிர ரசிகரான பஸ் டிரைவர் ஒருவருக்கு விபத்து ஏற்பட்டது. காலில் பலத்தகாயம். அறுவை சிகிச்சை செய்து காலை எடுக்காவிட்டால் உயிரே பறி போகும் அபாயம். ‘பிறருக்கு பாரமாக இருப்பதை விட சாவதே மேல்’என்ற எண்ணத்தில் அறுவை சிகிச்சைக்கு டிரைவர் மறுத்தார். பெற்ற மனம் கேட்குமா? மகனைக்காப்பாற்றத் துடித்தார் தாய். ஆனால், அவர் என்ன சொல்லியும் மகன் கேட்கவில்லை. ‘காலை இழந்துவாழ்வதை விட சாவதே மேல்’ என்று உறுதியாகக்கூறிவிட்டார். எம்.ஜி.ஆர். ரசிகனான தன் மகன் அவர் சொன்னால் கேட்பான் என்ற நம்பிக்கை பிறந்தது அந்தத்தாய்க்கு... எம்.ஜி.ஆரை சந்தித்து தன் மகனின்நிலையைக் கூறி அவரைக் காப்பாற்றும் படி கேட்டுக்கொண்டார். அந்த தாயின்வேண்டுகோளை ஏற்று மருத்துவமனைக்கே எம்.ஜி.ஆர் சென்று தனது ரசிகரை சந்தித்து ஆறுதலும் தைரியமும் கூறினார். சூரியனைக் கண்ட பனி போல டிரைவரின்கவலையும் அச்சமும் மிச்சமில்லாமல் பறந்தன. அறுவை சிகிச்சைக்கு சம்மதித்தார். பாதிக்கப்பட்ட கால் அகற்றப்பட்டு டிரைவர் உயிர் பிழைத்தார். எம்.ஜி.ஆரின் செலவிலேயே அவருக்கு செயற்கைக் கால் பொருத்தப்பட்டது. பின்னர், அவர் கடை வைத்து நடத்தவும் எம்.ஜி.ஆர். உதவிசெய்தார். டிரைவராக இருந்தவர் முதலாளியாகிவிட்டார். நல்ல நிலைமைக்கு வந்தவுடன் தாயும் மகனும் எம்.ஜி.ஆரை நேரில் சந்தித்து நன்றி சொல்ல விரும்பினர். தங்கள் விருப்பத்தை எம்.ஜி.ஆருக்கு தெரியப்படுத்தி சந்திக்க அனுமதி கோரினர்... அதற்கு எம்.ஜி.ஆர். அளித்த நெகிழ வைக்கும் பதில் இது...!!! ‘‘தன் மகன்களில் ஒருவனாக கருதித்தான் என்னைத்தேடி அந்த அன்னை வந்தார். டிரைவரை நானும் என் தம்பியாக நினைத்துத்தான் உதவிசெய்தேன். தாயாக, தம்பியாக எப்போது வேண்டுமானாலும் அவர்கள் என்னைப் பார்க்க வரலாம். நன்றி சொல்வதற்கு என்று வந்தால் நான் அந்நியனாகி விடுவேன். அந்த வயது முதிர்ந்த தாயை அந்த சகோதரர் நன்றாக கவனித்துக் கொண்டாலே போதும் அதுவே என்னைப் பார்ப்பதற்கு சமம்.’’ ‘ஆனந்த ஜோதி ' திரைப்படத்தில் இடம் பெற்ற, ‘ஒருதாய் மக்கள் நாமென்போம், ஒன்றே எங்கள் குலமென்போம்...’ பாடலுக்கு வெறுமனே வாயசைத்து விட்டுப் போனவரல்ல , அதன்படியே வாழ்ந்தவர்... நம் இதயதெய்வம் பொன்மனச்செம்மல்....... Thanks...
-
27th April 2020 03:18 PM
# ADS
Circuit advertisement
-
27th April 2020, 03:23 PM
#3812
Junior Member
Diamond Hubber
திரை உலகின் சாதனை மன்னன் :::
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் திரை உலகில் முடிசூடா மன்னனாக விளங்கினார். அவர் நடித்த படங்கள் வசூலில் சரித்திரம் படைத்தன. அவரை வைத்து படமெடுக்க படாதிபதிகள் போட்டி போடுவார்கள். அவர் நடிக்கும் படம் என்றால் பூஜை போடும் தினத்தன்று எல்லா ஏரியாக்களும் விற்பனையாகிவிடும்.
ஆனால் அத்தகைய இமாலய நிலையை அவர் எளிதில் அடைந்துவிடவில்லை. மிக மிகக் கடுமையாக போராடி படிப்படியாக உயர்ந்து தான் அந்த உன்னத நிலையை அடைந்தார் .
இவ்வுலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒரு லட்சியம் இருக்க வேண்டும். அந்த லட்சியத்தை அடைவதே அவருடைய குறிக்கோளாக இருக்க வேண்டும். எதிர்ப்பு ஏற்பட்டால் கடுமையாக எதிர்த்துப் போராட வேண்டும். லட்சியத்தை அடையும் வரை சற்றும் ஓயக் கூடாது .
சரித்திரம் படைத்த சாதனையாளர்கள் அதைத்தான் செய்தார்கள் மக்கள் திலகமாக விளங்கிய எம்ஜிஆரும் அதையே செய்தார்.
அவருடைய முகம் திரையில் தெரிந்ததுமே ஆயிரமாயிரம் ரசிகர்கள் கைகளைத் தட்டித் தங்கள் மகிழ்ச்சியையும் ஆதரவையும் வெளிப்படுத்துவார்கள். தேங்காய் உடைத்து சூடம் கொளுத்தி திரைப்படக் கொட்டகையிலேயே தங்கள் பக்தியை வெளிப்படுத்திய ரசிகர்களும் உண்டு.
ஆனால் ஆரம்பகாலத்தில் அதே முகம் திரையில் தோன்றுவதற்கு இலாயக்கானதாக இல்லை என்று அந்தக் காலத்தில் பிரபலமாக இருந்த டைரக்டர் ஒருவர் சொன்னார் என்பதைக் கேட்கும்போது பலருக்கு ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கலாம் ஆனால் அது உண்மை.
ஆரம்ப நாட்களில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் திரை படங்களில் நடிப்பதற்காக சந்தர்ப்பம் கேட்டு அலைந்து கொண்டிருந்தபோது, ஒரு டைரக்டர் அவருடைய முகத்தை பார்த்துவிட்டு அவருடைய முகநாடி இரட்டையாக அமைந்திருப்பது போல் காணப்படுவதால் அவருடைய முகம் அழகாக தெரியாது என்று கூறி அவருக்கு சந்தர்ப்பம் கொடுக்க மறுத்துவிட்டார்.
பொதுவாக வளரத் துடிக்கும் எந்த நடிகரும் அத்தகைய வார்த்தைகளை கேட்டதும் பெரிதும் மனமுடைந்து போவார்கள். நடிப்பு துறையில் இறங்க வேண்டும் என்னும் எண்ணத்தையே அவர்கள் கை விட்டு விட்டாலும் ஆச்சரியப்பட முடியாது.
ஆனால் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அந்த டைரக்டர் சொற்களைக் கேட்டு மனம் உடைந்து போகவில்லை நடிப்புத் துறையிலிருந்து ஒதுங்கிவிட நினைக்கவில்லை. தன்னுடைய முகம் திரையில் தோன்ற அதற்கு முற்றிலும் ஏற்ற வகையிலேயே இருக்கிறது என்பது அவருக்கு நன்றாகத் தெரியும்.
எதிர்காலத்தில் திரையுலகில் தான் மிகப் பெரிய புரட்சியை உண்டு பண்ணப் போகிறோம் சரித்திரம் படைக்கப் போகிறோம் என்பது அவருக்கு மிக மிக நன்றாக தெரியும்.
எனவே அவர் அந்த டைரக்டர் வார்த்தைகளைக் கேட்டு ஒன்றும் சொல்லவில்லை அமைதியாகவும் மௌனமாக வீடு திரும்பிவிட்டார்.
உலகில் மிகப்பெரிய சாதனைகளைப் புரிந்தவர்களின் மனோநிலையைக் கூர்ந்து கவனித்தால் மற்றோர் உண்மை புலப்படும் . அவர்கள் தங்களைப் பற்றி நன்றாக புரிந்து வைத்திருப்பார்கள். தங்களுடைய திறமையையும் எதிர்காலத்தையும் மிகமிக நன்றாக அறிந்து வைத்திருப்பார்கள்.
புரட்சித்தலைவர் எம்ஜிஆரும். அப்படித்தான் திரையுலகில் நுழைவதற்குத் தான் சிரமப்பட வேண்டியிருந்தாலும் நுழைந்தபின் அத்துறையில் நிச்சயம் சரித்திரம் படைக்கப் போகிறோம் என்று நம்பிக்கை அவருக்கு எப்போதும் இருந்து வந்தது. அது யாருடைய சொற்களை கேட்டும் குறைந்துவிடவில்லை.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் புகழ் வாழ்க....... Thanks...
-
27th April 2020, 05:50 PM
#3813
Junior Member
Diamond Hubber
உண்மை தலைவர்
கண்பட்டாலே புண்ணியம் அதிலும் அவரின் நேரடிபார்வை, அவரைதொட்டவர்கள்,அவர்தூக்கிய மழலைகள் அனைவரும் இன்று உயர்ந்த இடத்தில், தலைவர் ஒரு தெய்வபிறவி (இல்லை) தெய்வம். கல்விகண் திறந்த கடவுள். வாழ்க அவர் புகழ். அவரின் ரசிகனாக,தொண்டனாக, இன்று பக்தனாக இருப்பதற்கு நாம் பெருமைகொள்வோம். ....... Thanks...
-
27th April 2020, 05:51 PM
#3814
Junior Member
Diamond Hubber
வணக்கங்கள்...! சினிமா, திரைப்படம், ஊடகம், மகிழ்ச்சி, சந்தோஷம் இப்படி ஓடிக்கொண்டிருக்கிறோம். கலைத்துறை யானை சினிமாவில் பெரிய பெரிய சாதனையாளர் ஒருவர் எப்படி எல்லாம் வெற்றிய கொடுத்தாங்க, மக்களோட மக்களாக கலந்துக்கிட்டாங்க, மக்களை மகிழ்விக்க மக்களோட வாழ்ந்தாக அப்படிங்கிறது பல நிகழ்வுகளில் பல வடிவத்தில் வாழ்ந்த ஒருவர்தான். வாத்தியார், மக்கள் திலகம், புரட்சித் தலைவர், பொன்மனச்செம்மல் போன்ற பல பெயர்களை பெற்ற ஒருவர் யார் யாரென்றால் .
நெருப்பை அள்ளி தெளித்தாலும்...!!
மங்காத தங்கம் எங்கள் தங்கம்
புரட்சித் தலைவர் ஒருவரே... !!!
அப்போதும் சரி...!
இப்போதும் சரி...!
இனி எப்போதும் சரி...!
மங்காத தங்கம் எங்கள் தங்கம்......... Thanks...
-
27th April 2020, 05:51 PM
#3815
Junior Member
Diamond Hubber
பாரத்,பாரத ரத்னா,புரட்சித்தலைவர்,மக்கள் திலகம்,Dr.MGR,காவியத் தலைவன்,வாத்யார்,இதயக்கனி.பொன்மனச் செம்மல்,இது தவிர கலையுலக சூப்பர் ஸ்டாா்,அரசியல் மெகா ஸ்டார்,எதிரிகளுக்கு சிம்ம சொப்பனம்,தோல்வியையே எப்போதும் பரிசாக கொடுத்த சிங்கத் தலைவன்,மன்னாதி மன்னன்,ராஜராஜன்,அரசியலிலும்,சினிமாவிலும்ரோல் மாடல் மக்கள் மனதை விட்டு நீங்காதவர், நம் தலைவர்....... Thanks...
-
27th April 2020, 05:55 PM
#3816
Junior Member
Diamond Hubber
1967-ஆம் ஆண்டு எம்ஜிஆர் சுடப்பட்டார் எம்ஜிஆரிடம் போலீஸ் அதிகாரிகள் வாக்குமூலம் பெற்றார்கள் பிறகு அந்த வாக்குமூலத்தை வெளியிடாமல் இருந்து விட்டார்கள் அதற்கு காரணம் அன்றைய அரசாங்கம் வாக்குமூலம் வெளியே தெரிந்தால் நாட்டில் கலவரம் ஏற்பட்டு விடும் என்பதற்காக. வாக்கு மூலத்தை வெளியிடவில்லை. கோர்ட்டில் வழக்கு விசாரணைக்கு வந்த போது நீதிபதிகள் முன்னால் எம்ஜிஆர் கூறியதாவது என்னைக் கொலை செய்ய ராதாவிற்கு முக்கியமான காரணம் இருந்தது ராதாவிற்கும் எனக்கும் அரசியலில் மாறுபட்ட கருத்துக்கள் இருந்தன நான் திமுக உறுப்பினர் ராதா பெரியார் கட்சியை சேர்ந்தவர் நான் தொழிலாளி என்ற படத்தில் நடித்துக்கொண்டிருந்த பொழுது அந்தப்படத்தில் தொழிலாளிகள் அனைவரும் ஒன்று சேர்ந்துகூட்டுறவு முறையில் ஒரு பஸ் வாங்கி இயக்குவார்கள் அந்த விழாவில் நான் பேசுவதற்கு ஒரு வசனமும் எழுதி இருந்தார்கள் இன்று தொழிலாளிகளின் வாழ்க்கையில் நம்பிக்கை நட்சத்திரம் பிறந்துள்ளது என்று வசனம் எழுதி இருந்தார்கள் நான் பேசி நடிக்கும் பொழுது இன்று தொழிலாளிகளின் வாழ்க்கையில் நம்பிக்கை சூரியன் உதித்து விட்டது என்று பேசினேன் உடனே எம் ஆர் ராதா அவர்கள் உங்கள் கட்சி சின்னத்தை இங்கு பேச கூடாது என்றார் எனக்கும் எம் ஆர் ராதாவுக்கும் வாக்குவாதம் இந்த சமயத்தில் பட தயாரிப்பாளர் சாண்டோ சின்னப்பா தேவர் அவர்கள் வந்து எங்களை அமைதிப்படுத்தினார் இவ்வாறு எம்ஜிஆர் கோர்ட்டில் நீதிபதி முன்பாக கூறினார் பின் சின்னப்பத்தேவர் அவர்களையும் அழைத்து கோர்ட்டில் விசாரித்தார்கள் சின்னப்பா தேவர் அவர்களும் நான் தயாரித்த தொழிலாளி படத்தில் நம்பிக்கை சூரியன் உதித்து விட்டது என்ற எம்ஜிஆர் வசனம் பேசினார் இதனால் எம் ஆர் ராதா எம்ஜிஆர் அவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது நான் அவர்களை சமாதானப்படுத்தினேன் என்று கூறினார் எம்ஆர் ராதாவின் வக்கீல் என்டி வானமாமலை சாண்டோ சின்னப்பா தேவர் இடம் விசாரணை நடத்தினார் அவரிடமும் ராதா அவர்கள் நம்பிக்கை சூரியன் உதித்து விட்டது என்று எம்ஜிஆர் பேசிய வசனத்தால் எம் ஆர் ராதா வுக்கு எம்ஜிஆருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது என்று கூறினார் இந்த செய்தி தினமணி பத்திரிகையில் வெளிவந்தது இப்படி எல்லாம் உயிரைக் கொடுத்து திமுகவை வளர்த்தவர் எம்ஜிஆர் எம்ஜிஆர் திமுகவை கைப்பற்ற முயற்சிக்கவில்லை எம்ஜிஆர் உதயசூரியன் சின்னத்தை கேட்டு கோர்ட்டுக்கு செல்லவில்லை கருணாநிதியை முதலமைச்சர் பதவியில் இருந்து இறக்குவதற்கு முயற்சி செய்யவில்லை காரணம் எம்ஜிஆருக்கு இருக்கும் மக்கள் சக்தி உலகத்தில் வேறு யாருக்கும் கிடையாது எம்ஜிஆர் தனி மனிதனாக இருந்து அண்ணா திமுகவை ஆரம்பித்தார் தனி மனிதனாக இருந்து அண்ணா திமுக கட்சியை வளர்த்தார் தனி மனிதனாக இருந்து மூன்று முறை முதல் அமைச்சராக வந்தார் வாழ்க புரட்சித்தலைவர் நாமம் வளர்க புரட்சித்தலைவர் புகழ்!!!....... Thanks..
-
27th April 2020, 05:57 PM
#3817
Junior Member
Diamond Hubber
He is Sarithira Nayagan. That's MGR. He is a real Mass Hero of yester years not like now reel hero. Don't bother of the normal and down trodden people. He is still living in their hearts....... Thanks...
-
27th April 2020, 06:02 PM
#3818
Junior Member
Diamond Hubber
வள்ளுவரும் வள்ளல் எம்ஜிஆர்
விருந்தோம்பல்
செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான் நல் விருந்து வானத்தவர்க்கு.
பொருள் : அனுதினமும் தன்னை நாடிவரும் விருந்தினருக்கு விருந்திட்டு உபசரிப்பவனும் இனிவரும் விருந்தினரை எதிர்நோக்கி காத்திருப்பவனுமான ஒரு அற்புதமான மனிதனுக்கு விருந்திட்டு மகிழ்ச்சி அடைய வானத்திலிருக்கும் தேவர்களுமே காத்திருப்பார்கள்.
விளக்கம் : தன் வருமானத்தை விருந்தோம்பல் செய்ய வேண்டும் என்னும் உயர்ந்த நோக்கத்திற்காகவே சேர்த்து வைக்கும் உத்தம குணம் கொண்ட ஒருவன், யாரையும் வீட்டிற்கு வெளியில் காக்க வைத்து தான் மட்டும் உணவு உண்ண மாட்டான். தன்னை வாட்டும் பசியை போக்கும் வல்லமை இவருக்கு மட்டும்தான் இருக்கின்றது என்று நம்பி வருபவரை அன்னமிட்டு ஆதரிக்கப் மேன்மையானவனின் வீட்டில் செல்வத்துக்கு அதிபதியான ஸ்ரீ மகாலக்ஷ்மி மனம் விரும்பி நிரந்தரமாக தங்குவாள். அவனுடைய நிலத்தில் எதையும் விதைக்க வேண்டிய அவசியமில்லாமல் பயிர் செழித்து வளரும். எப்போதும் விருந்தினர்களை எதிர்பார்த்து அன்பு மனதோடு காத்திருக்கும் அந்த அற்புதமான உத்தமனுக்கு விருந்தளித்து மகிழ வானத்திலிருக்கும் தேவர்களே இருகரம் நீட்டிக் காத்திருப்பார்கள் !
இந்தக் குறளுக்கு பொருத்தமான ஒரு மாமனிதர் மக்கள் திலகம் எம்ஜிஆர் மட்டும்தான்.
விருந்தோம்பல் என்னும் அரிய பண்பு புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் இளமைப் பருவத்திலேயே அவரிடம் காணப்பட்ட ஒன்று. திரைத்துறையில் நுழைந்த ஆரம்ப காலங்களில் மாடர்ன் தியேட்டர்ஸில் நடிக்கும் போதே தன்னோடு நாலு பேரையாவது சாப்பிட வைத்து மனம் மகிழ்ந்தவர் அவர்.
தன்னுடைய இளமைக் காலத்தில் உண்ண உணவில்லாமல் பசியால் பலநாள் துடித்ததை அவர் மறந்ததே இல்லை. பசி என்பது என்ன என்பதை உணர்ந்தவன் நான் என்று வெளிப்படையாக சொல்ல நாட்டிற்கே முதல்வரான போதிலும் அவர் தயங்கியதில்லை.
கொடைவள்ளல் எம்ஜிஆரின் ராமாவரம் தோட்டத்தில் அடுப்பில் முதன் முதலாக எந்த நேரத்தில் அக்னி தேவனை ஆராதித்து தீயை ஏற்றினார்களோ யாருக்கும் தெரியாது . ஏனென்றால் இரவும் பகலும் அது அணையாமல் எரிந்து கொண்டே இருந்தது. அதனால் உண்டான உணவு தன்னை சாப்பிட்டவர்களின் வயிற்றுப் பசியை அனுதினமும் அழித்துக் கொண்டே இருந்தது.
தன்னைப் பார்க்க யார் வந்தாலும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் கேட்கும் முதல் கேள்வி, சாப்பிட்டாயா? என்பது தான். அடுத்த வார்த்தை போய் சாப்பிட்டுட்டு வாங்க .... என்று அனுப்பி வைப்பது தான். எத்தனை நாள் பட்டினியால் வாடி இருந்தாலும் அந்த ஒரு வார்த்தை, கேட்பவரை உயிர்ப்பித்து விடும்.
கொடைவள்ளல் எம்ஜிஆரின் வீட்டு சமையல் பாத்திரங்களை பார்த்தாலே பிரமிப்பு வரும். ஒரே நேரத்தில் அறுபது இட்லிகள் வேகு மளவு இருந்த இட்லி பாத்திரமே அதற்குச் சாட்சி.
அவருடைய வீட்டில் பாமரர் சாப்பிட்டாலும் பணக்காரர் சாப்பிட்டாலும் ஒரேவிதமான சாப்பாடே பரிமாறப்படும். தன்னோடு யார் சாப்பிட்டாலும் அவர்களுக்கும் அதே வகையான உணவே பரிமாறப்பட வேண்டும் என்பது புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் கட்டளை. படப்பிடிப்புத் தளங்களில் லைட்மேன் முதல் மற்ற உதவியாளர் வரை சாப்பிட்டார்களா என்பதில் அதிக அக்கறை காட்டுவார்.
ஒரு மனிதனுக்கு அளவிட முடியாத செல்வத்தைக் கொடுத்தாலும் மேலும் வேண்டும் என்றுதான் கேட்பான். ஆனால் எத்தனை அறுசுவை உணவாக இருந்தாலும் ஒரு அளவுக்கு மேல் சாப்பிட முடியாமல் போதும் என்று மறுத்து விடுவான். ஏனென்றால் மனிதனுக்கு திருப்தி தரும் ஒரே விஷயம் உணவுதான் என்று புரட்சித்தலைவர் எம்ஜிஆர் செல்வது வழக்கம்.
இன்னும் ஒரு அற்புதமான கருத்தையும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர். ஒரு கட்டுரையில் எழுதியுள்ளார். பணம் இருப்பது பெரிதல்ல . அதைப் பிறருக்காக செலவு செய்வதும் கூட பெரிதல்ல . பிறருடைய சுவைக்கு உணவு படைப்பது தான் மிகப்பெரிய காரியம் என்று சொல்வேன்.
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நடிக்கும் படப்பிடிப்புத் தளத்தில் கலைஞர்கள், அரங்க உதவியாளர்கள், லைட்மேன், உடை அமைப்பாளர் , துணை நடிகர் நடிகையர்கள் இவர்களோடு சேர்ந்து தான் சாப்பிடுவார். அவர்கள் வெட்கத்துடன் தயங்கினாலும் அவர்களுடன் வேடிக்கையாகப் பேசி சந்தோசப்படுத்துவாராம். தனக்கு ஏதேனும் ஸ்பெஷலாக உணவுப்பொருள் பரிமாறப்பட்டால், அது மற்றவர்களுக்கும் பரிமாறப்படுகிறதா என்று கவனிப்பார். அப்படி பரிமாறப்படாவிட்டால் பரிமாறுபவரை கூப்பிட்டு,
இந்த ஸ்பெஷல் ஐட்டங்களை இந்த தோழர்களுக்கும் பரிமாறுங்கள் இவங்க நல்லா இருந்தாத்தானே நாம நல்லா இருக்க முடியும் என்று சொல்லிச் சிரிப்பார்.
இது ஏதோ ஒரு படப்பிடிப்பில் நடந்த நிகழ்ச்சி அல்ல. எல்லா இடங்களிலும் எங்கெல்லாம் மக்கள் திலகம் எம்ஜிஆர் என்னும் அன்னதாதா இருக்கிறாரோ அங்கெல்லாம் நடந்திருக்கும் உண்மை நிகழ்ச்சி.
பிறர் பசி பொறுக்காத மேன்மையானவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் என்பதை மனசாட்சி உள்ளவர்கள் ஒப்புக்கொள்வார்கள். அவரை பழித்தும் இழித்தும் பேசியவர்களும் கூட அவருடைய விருந்தோம்பலின் மேன்மையை குறை சொல்ல மாட்டார்கள். விருந்தோம்பல் என்னும் உயரிய மாண்புக்கு கண்ணெதிர் சாட்சியாய் நம்மோடு வாழ்ந்த புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மேலும் கோடிக்கணக்கான நல்ல இதயங்களில் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் இதய தெய்வம் எம்ஜிஆர் தன் புகழுடலோடு வானுலகம் சென்ற போது வள்ளுவர் சொன்னது போலவே அந்த அன்னதாதாவுக்கு அங்கிருந்த தேவர்களும் அன்போடு இருகரம் நீட்டி வரவேற்று அன்பின் விருந்திடிருப்பார்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை....
என்றும் என்றென்றும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் புகழ் வாழ்க........... Thanks.........
-
27th April 2020, 06:08 PM
#3819
Junior Member
Diamond Hubber
#தலைவரின்_திரைப்பயணம்_சிறிய #தொகுப்பு_இன்றைய #தலைமுறைகளுக்காக
தீவிர எம்ஜிஆர் ரசிகர்களாக இருந்த போதிலும் ஒரு சிலருக்கு எம்ஜிஆரின் திரையுலகப் பயணம் குறித்த சுவாரஸ்யமான சங்கதிகள் அனைத்தும் தெரிந்திருக்கும் என்று கருத முடியாது. அப்படிப்பட்டவர்கள் மட்டுமல்ல, எம் ஜி ஆர் என்ற ஆளுமையின் சுவாரஸ்யமான திரைப்பயணம் குறித்து அறிந்து கொள்ள விரும்பும் இன்றைய தலைமுறைக்கும் பயனளிக்கும் விதமாக இந்த வாரம் எம்ஜிஆரின் திரைப்பயணம் குறித்து மேலும் சில புள்ளி விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம்.
எம்ஜிஆர் கலையுலகில் இருந்து அரசியல் வானில் முதல்வாரன பிறகு ஒப்பந்தமான திரைக்காவியங்கள்...
உன்னைவிட மாட்டேன்
புரட்சிபித்தன்
உங்களுக்காக நான்
மக்கள் என் பக்கம்
நல்லதை நாடு கேட்கும்
சமூகமே நான் உனக்கே சொந்தம்
நானும் ஒரு தொழிலாளி
அண்ணா நீ என் தெய்வம்
தியாகத்தின் வெற்றி.
அண்ணா பிறந்த நாடு
கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜ்
ஊரே என் உறவு
மீண்டும் வருவேன்
பைலட் ராஜ்
எல்லை காவலன்.
எம்ஜிஆர் நடித்த படங்களின் தயாரிப்பாளர்களும் - கம்பெனிகளும்...
ADVERTISEMENT
1. சதிலீலாவதி - மனோரமா பிலிம்ஸ்
2. இருசகோதரர்கள் - பரமேஸ்வர் சவுண்டு பிக்சர்ஸ்
3. தட்ச யக்ஞம் - மெட்ரோபோலிசன் பிக்சர்ஸ்ட
4. வீரஜெகதீஷ் - வி.எஸ்.டாக்கிஸ்
5. மாயாமச்சேந்தரா – - மெட்ரோபோலிசன் பிக்சர்ஸ்
6. பிரகலாதா - சேலம் சங்கர் பிலிம்ஸ்
7. சீதாஜனனம் - சியாமளா பிக்சர்ஸ்
8. அசோக்குமார் - முருகன் பிக்சர்ஸ்
9. தமிழறியும் பெருமாள் - உமா பிக்சர்ஸ்
10. தாசிப்பெண் - புவனேஸ்வரி பிக்சர்ஸ்
11. ஹரிசந்திரா - ராஜராஜேஸ்வரி பிக்சர்ஸ்
12. சாலிவாகனன் - பாஸ்கர் - பிக்சர்ஸ்
13. மீரா - சந்திரபிரபா சினிடோரியன்
எம்ஜிஆர் இரட்டை வேடங்களில் நடித்த திரைப்படங்கள்...
நாடோடி மன்னன்
ராஜா தேசிங்கு
அடிமைப்பெண்
நாளை நமதே
குடியிருந்த கோயில்
ஆசைமுகம்
மாட்டுக்கார வேலன்
நீரும் நெருப்பும்
சிரித்து வாழ வேண்டும்
எங்கவீட்டுப் பிள்ளை
பட்டிக்காட்டுப் பொன்னையா
உலகம் சுற்றும் வாலிபன்
நினைத்ததை முடிப்பவன்
கலையரசி
நேற்று இன்று நாளை
ஊருக்கு உழைப்பவன்
எம்.ஜி.ஆர் படத்தின் பாடல் ஆசிரியர்கள்...
திரு. தஞ்சை ராமையாதாஸ்
திரு.மாயவநாதன்
திரு. பாபநாசம் சிவன்
திரு. கா.மு.ஷெரீப்
திரு.மு.கருணாநிதி
திரு.கு.சா.கிருஷ்ணமுர்த்தி
திரு.ஆத்மநாதன்
திரு.கே.டி.சந்தானம்
திரு.ராண்டர்கை
திரு.உடுமலை நாராயணகவி
திரு.சுரதா
திரு.பட்டுக்கோடடை கல்யாணசுந்தரம்
திரு.லட்சுமணதாஸ்
திர.கு.மா. பாலசுப்பிரமணியன்
திரு.அ.மருதகாசி
திரு.முத்துக்கூத்தன்
திரு.கண்ணதாசன்
திரு.வாலி
திரு.ஆலங்குடி சோமு
திரு.அவினாசிமணி
திரு.புலமைபிததன்
திரு.விந்தன்
திரு.நா.காமராசன்
திரு.முத்துலிங்கம்
ரோஷனரி பேகம்
திரு.பஞ்சு அருணாசலம்;
எம்ஜிஆர் நடித்த வண்ணப் படங்கள் 40 (இதில் 100 நாட்கள் ஓடி சாதனை பெற்ற காவியங்கள் 35) இது தவிர மற்ற காவியங்கள் 10 வாரங்களுக்கு கீழ் கிடையாது.
108 அடி உயர கட் - அவுட்...
உலகிலேயே ஒரு புது திரைப்படத்திற்கு 108 அடியில் மிகப் பிரமாண்டமாக கட்அவுட் வைக்கப்பட்டது எம்ஜிஆரின்என் அண்ணன் காவியத்திற்கு மட்டும் தான்.
திரைப்படம்: அரங்கு சேலம் அலங்கார்.
திரு.எம்.ஜி.ஆர் இயக்கிய திரைப்படங்கள்...
1. நாடோடி மன்னன்,
2. உலகம் சுற்றும் வாலிபன்,
3. மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்
அதிகப் படங்களில் நாயகியாக நடித்தவர்...
செல்வி ஜெ.ஜெயலலிதா – 28 படங்கள்,
திருமதி சரோஜாதேவி – 26 படங்கள்,
எம் ஜி ஆரை அதிகப்படங்களில் இயக்கியவர்...
திரு.ப.நீலகண்டன் - 17 படங்கள்
திரு.எம்.ஏ.திருமுகம் - 16 படங்கள்
எம் ஜி ஆரை வைத்து அதிகப்படங்கள் தயாரித்த நிறுவனம்...
தேவர் பிலிம்ஸ் - 16 படங்கள்
எம் ஜி ஆர் திரைப்படங்களுக்கு அதிகம் இசை அமைத்தவர்...
திரு.எம்.எஸ்..விஸ்வநாதன் 49 படங்கள்
திரு.கே.வி.மகாதேவன் -37 படங்கள்
அதிக பாடல்கள் பாடியவர்கள்...
திரு.எ.எம்.சௌந்தரராஜன், திருமதி.பி.சுசிலா
வெற்றிவிழா கண்ட திரைப்படங்கள்...
100 நாட்களுக்கு மேல் ஓடி வெற்றி கண்டவை -86 படங்கள்
வெள்ளி விழா கண்டவை -12 படங்கள்
வண்ணப் படங்கள்(கலர்) -40 படங்கள்
300 நாட்களுக்கு மேல் ஓடியது -2 திரைப்படங்கள் ( என் தங்கை
உலகம் சுற்றும் வாலிபன்)
தென்னிந்தியாவில் ஜனாதிபதி விருது பெற்ற முதல் தமிழ் படம் - மலைக்கள்ளன்
தமிழ் திரையுலகின் முதல் வண்ணப்படம் - அலிபாபாவும் 40 திருடர்களும்
தெலுங்கு மொழிக்கு மாற்றம் செய்யவப்பட்டவை - 60 படங்கள்
இந்தி மொழிக்கு மாற்றம் செய்யப்பட்டவை - 9 படங்கள்.
முதன்முதலில்...
முதன் முதலில் தணிக்கையில் A சான்றிதழ் பெற்ற தமிழ் படம் - மர்மயோகி
முதல் பாதி கருப்பு & பாதி வண்ணப்படம் - நாடோடி மன்னன்
முழுநீள வண்ணப்படம் - அலிபாபாவும் 40 திருடர்களும்
இந்தியாவின் சிறந்த நடிகர் - ரிக்க்ஷாக்காரன்............... Thanks...........
-
27th April 2020, 06:13 PM
#3820
Junior Member
Diamond Hubber
எம்.ஜி.ஆரிடம் நமக்கு பிடித்தது என்ன?
எம்ஜிஆரிடம் எனக்கு மிகவும் பிடித்தது
1. கட்சி தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு தந்த மாண்பு .
2. நான் ...எனது ..என்ற வார்த்தையை ஒரு நாளும் கூறாத அடக்கம் .
3. அண்ணாவை என்றென்றும் மறக்காத பணிவு .
4. காலில் விழும் அடிமைத்தனத்தை அடியோடு வெறுத்த பிதாமகன் .
5. அரசாங்க சொத்திற்கும் மக்கள் வரிப்பணத்திற்கும் மரியாதை தந்தவர் .
6. பங்களா , எஸ்டேட் என்று அநியாய மாக வாங்கி சொத்து சேர்க்காதவர் .
7. குற்றவாளி என்று பெயர் வாங்காத ஒரே உன்னத தலைவர்
8.எதிரிகளையும் நண்பனாக்கி கொண்ட நல்லவர் - வல்லவர்
9. மக்கள் மனதில் நேற்றும் வாழ்ந்தார் . இன்றும் வாழ்கிறார் . நாளையும் வாழ்வார் எம்ஜிஆர்.
10. தன் வாழ்நாளுக்குப் பிறகு தன் சொத்துக்களின் பெரும்பகுதியை சமுதாயத்தில் நலிந்தவர்க்கு எழுதி வைத்தவர்.
11. தன் திரைப்படக் கருத்துக்கள் மற்றும் பாடல்கள் மூலமாக மக்கள் மனதில் வாழ்பவர்.
12. புகைப்பிடித்தல், மது, போன்ற தீய பழக்கங்களை தன் திரைப்படங்களில் கூட காட்டாமல் தனி மனித ஒழுக்கம் பேணியவர்.
13. தன் கொள்கைகளுக்கு ஒத்து வராத திரைப்படங்களில், பணம் பெரிதென நினைக்காமல் நடிக்க மறுத்தவர்.அதனாலேயே மற்ற சக நடிகர்களைப் போல படங்களின் எண்ணிக்கை அதிகம் இல்லாதவர். இருப்பினும் படங்கள் குறைவாக இருந்தாலும், வேறு எந்த நடிகர்களை விடவும் இன்றும் அவரது படங்களும், பாடல்களும் தொலைக்காட்சியிலும், திரையரங்குகளிலும் அதிக அளவில் திரையிடப்படுகின்றன.ரசிகர்களும், பொதுமக்கள் அனைத்து தரப்பினரும் விரும்பி பார்த்தும், கேட்டும் மகிழ்கிறார்கள்.......... Thanks.........
Bookmarks