-
5th August 2020, 08:03 AM
#1
Senior Member
Devoted Hubber
Nadigar Thilagam Sivaji Ganesan - Part 22
Nadigar Thilagam Sivaji Ganesan - Part 22
தன்னடக்கம் கொண்ட தன்நிகரில்லா தவப்பதல்வன்
உலகறிந்த செவாலியே சிவாஜி கணேசன் அவர்களின்
புகழ்பரப்பும் திரி நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பாகம் 22 ஐ
ஆரம்பித்தவைப்பதில் மிக்க மகிழ்ச்சி.
இந்தியாவில் மய்யம் இணையம் தடைசெய்யப்பட்டிருப்பதனால் இந்திய நண்பர்களால்
மய்யம் திரியை பார்வையிடுவதிலும் பங்களிப்பு செய்வதிலும் சிரமம் உள்ளதனால்
திரு முரளி ஶ்ரீநிவாசன் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க இத்திரி பாகம் 22 ஆரம்பிக்கப்பட்டுள்ளது,
சிரமமின்றி மய்யம் இணையத்தை அணுகக்கூடடியவர்கள் தங்கள் பங்களிப்பை
செய்து நடிகர் திலகத்தின் புகழை மென்மேலும் பரப்ப உதவி செய்யும்படி
அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.
நன்றி.
அன்புடன்
சிவா.
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
5th August 2020 08:03 AM
# ADS
Circuit advertisement
-
5th August 2020, 08:18 AM
#2
-
5th August 2020, 08:23 AM
#3
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
5th August 2020, 06:18 PM
#4
Senior Member
Devoted Hubber
1969 ஆம் ஆண்டின் போது கோவையில்
ஒரு திரையரங்கில் மட்டுமே 50 நாளில் சிவந்த மண் திரைப்படத்தை கண்டு ரசித்தவர்களின் எண்ணிக்கை- 2,46,276 நபர்கள்,
1983 ஆம் ஆண்டின் போதும் கோவையில்
ஒரு திரையரங்கில் மட்டுமே 53 நாளில் வெள்ளை ரோஜா திரைப்படத்தை கண்டு ரசித்தவர்களின் எண்ணிக்கை- 2,20,721 நபர்கள்,
எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் ரசிகர்களை தொடர்ந்து திரையரங்கில் குவிய வைத்து ரசிக்க வைத்து இருக்கிறார் நடிகர் திலகம் சிவாஜி என்பது இது போன்ற புள்ளி விபரங்கள் மூலம் தெளிவாகிறது,
Thanks Sekar
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
5th August 2020, 06:34 PM
#5
Senior Member
Devoted Hubber
மதுரையின் திரையுலகச் சரித்திரம் தெரியுமா உங்களுக்கு?
சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மதுரையில் தங்கநிகர் கலைஞன் சிங்கத்தமிழன் சிவாஜியின் தன்னிகரற்ற சாதனையை அறிவீர்.
அங்கு நடிகர்திலகத்துக்கு 100+ நாள்களுக்கும்மேல் ஓடிய திரைப்படங்களின் எண்ணிக்கை 60. இதில், நாற்பதுக்கும் கீழ்தான் மற்றவர்களின் எண்ணிக்கை என்பது வரலாற்றுப் பதிவு.
இதோ, வசூலுடன் கூடிய ஒரு செய்திப்பதிவு உங்களுக்கு...
#பராசக்தி #முதல்வெளியீடு
திரையிட்ட நாள் : 17:10:1952
திரையரங்கம் : தங்கம்
மொத்த இருக்கைகள் : 2593
ஓடிய நாள் : 112 நாள்
மொத்த வசூல் : ரூ.1,63,423.9 - 9
வரி நீக்கிய வசூல் : ரூ.1,30,719.4 - 0
விநியோகஸ்தர் பங்கு : ரூ.68,227.10 - 2
#மறுவெளியீடு ( SHIFTING)
திரையிட்ட நாள் : 06:02:1953
திரையரங்கம் : சிட்டி சினிமா
மொத்த இருக்கைகள் : 1186
ஓடிய நாள் : 126
மொத்த வசூல் : ரூ.74,628.7 - 8
வரி நீக்கிய வசூல் : ரூ.59,419.6 - 9
விநியோகஸ்தர் பங்கு : ரூ. 35,272.10 - 5
( தொடரும்)
நன்றி :
தகவல் உதவி : திரு.சிவனாத் பாபு, மதுரை
தொகுப்பு : வான்நிலா விஜயகுமாரன்
Thanks வான்நிலா விஜயகுமாரன்
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
5th August 2020, 06:37 PM
#6
Senior Member
Devoted Hubber
மதுரை மாநகரில் நடிகர்திலகத்தின் வெற்றிப்பட்டியல்...
1952- 53 ஆம் ஆண்டுகளில் பராசக்தி திரைப்படமே இருவேறு அரங்குகளில் நூறுநாள் ஓடிய சாதனையைக் குறிப்பிட்டிருந்தேன். அதே ஆண்டில் வெளியாகியிருந்த பணம் திரைப்படம் ஸ்ரீதேவி அரங்கில் 84 நாள் ஓடி சாதனை படைத்தது.
1953ல் வெளியான ஐந்து நேரடித் தமிழ்ப் படங்களில் #பூங்கோதை#செண்ட்ரல் அரங்கில் மூன்று வாரங்களும், #திரும்பிப்பார் திரைப்படம் #தங்கம் அரங்கில் 56 நாள்களும் ஓடின.
மேலும், #அன்பு திரைப்படம் #சந்திரா அரங்கில் 84 நாள்களும், #கண்கள் திரைப்படம் #சிந்தாமணி யில் 36 நாள்களும், #மனிதனும்மிருகமும் திரைப்படம் #ஸ்ரீலட்சுமி அரங்கில் 35 நாள்களும் ஓடின.
1954ல் வெளியான திலகத்தின் முதல்படமான #மனோகரா திரைப்படம் வெள்ளிவிழா ஓட்டத்தை நூலிழையில் தவறவிட்ட மாபெரும் வெற்றிப்படமாகும்.
அதன் அசாத்திய சாதனைக் கண்ணோட்டம் உங்களின் பார்வைக்கு...
#மனோகரா
வெளியான நாள் : 03 மார்ச் 1954
திரையிட்ட அரங்கம் : ஸ்ரீதேவி
ஓடிய நாள் : 156
மொத்த வசூல் : ரூ.1,51,690.5-0
வரி நீக்கிய வசூல் : ரூ.1,20,387.1-5
வி.பங்குத்தொகை : ரூ.67,644.5-6
இதே ஆண்டில் வெளியான நடிகர்திலகத்தின் மற்ற படங்களின் சாதனை விவரம் அடுத்தப் பகுதியில்...
நன்றி :
தகவல் உதவி : திரு.சிவனாத்பாபு,மதுரை
பதிவு : வான்நிலா விஜயகுமாரன்
Thanks வான்நிலா விஜயகுமாரன்
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
5th August 2020, 06:41 PM
#7
Senior Member
Devoted Hubber
#மதுரை_மாநகரில்_நடிகர்திலகத்தின்
#வெற்றிப்பட்டியல்
#பகுதி3
1954 ஆம் ஆண்டு வெளிவந்த மனோகரா படத்தின் வெற்றிக்குப்பிறகு #மதுரையில் நூறுநாள் ஓடிய மூன்றாவது படம் 1958 பிப்ரவரியில் வெளிவந்த "உத்தமபுத்திரன்"
இதற்கு இடைப்பட்ட மூன்றாண்டு காலத்தில் நடிகர்திலகம் நடித்து தமிழில் வெளியான படங்கள் 32 ஆகும். அதில், மதுரையில் 50 நாள் முதல் 84 நாள்வரை ஓடியவை 18 படங்களாகும். மேலும், இரண்டு அரங்குகளில் திரையிடப்பட்டு இணைந்து 50+ நாட்களுக்கும்மேல் ஓடிய படங்கள் நான்காகும்.
அந்த பதினெட்டு + நான்கு படங்களின் ஓட்டத்தை மட்டும் இங்கே சுருக்கமாகக் குறிப்பிடுவது நண்பர்களின் புரிதலுக்காக...
#1954ல்
01. இல்லறஜோதி / சிந்தாமணி /63 நாள்
02. அந்தநாள் / மீனாட்சி / 52 நாள்
03. தூக்கு தூக்கி / செண்ட்ரல் / 52 நாள்
04. எதிர்பாராதது / தங்கம் / 71 நாள்
05. க.ப.பிரம்மசாரி/ தங்கம் & நியூசினிமா இணைந்து 83 நாள்
#1955ல்
06. காவேரி / செண்ட்ரல் / 66 நாள்
07. மங்கையர்திலகம் / மீனாட்சி / 79நாள்
மற்றும் சந்திரா / 50 நாள் = 129 நாள்
08. கள்வனின் காதலி / ஸ்ரீதேவி / 83 நாள்
#1956ல்
09. நான் பெற்ற செல்வம் / கல்பனா / 55 நாள்
10. பெண்ணின் பெருமை / தங்கம் / 77 நாள்
11. அமரதீபம் / நியூசினிமா / 71 நாள் +
கல்பனா / 56 நாள் = 127 நாள்
12. வாழ்விலே ஒருநாள் / கல்பனா / 50 நாள்
13. ரங்கோன் ராதா / ஸ்ரீதேவி / 71 நாள்
#1957ல்
14. மக்களைப்பெற்ற மகராசி / கல்பனா / 64 நாள்
15. வணங்காமுடி / தங்கம் / 78 நாள்
16. புதையல் / ஸ்ரீதேவி / 84 நாள்
17. தெனாலிராமன் / மீனாட்சி & சந்திரா
இணைந்து 70 நாள்
18. தங்கமலை ரகசியம் / தங்கம் / 55 நாள்
19. அம்பிகாபதி / செண்ட்ரல் / 66 நாள்
20. பாக்கியவதி / செண்ட்ரல் / 56 நாள்
21. மணமகன்தேவை / மீனாட்சி &
தினமணி இணைந்து 63 நாள்
22. ராணி லலிதாங்கி / மீனாட்சி &
லட்சுமி இணைந்து 59 நாள்
#1958ல்
#23உத்தமபுத்திரன்
வெளியான நாள் : 07:02:1958
திரையங்கம் : நியூசினிமா
மொத்த இருக்கைகள் : 1358
ஓடிய நாள் : 105 நாள்
மொத்த வசூல் : ரூ.1,27,290.71
வரி நீக்கி வசூல் : ரூ.0,99,858.13
வி.பங்குத்தொகை : ரூ.0,55,966.66
இதே ஆண்டு வெளியாகி வெற்றிப்பெற்று நூறு நாள்களைக் கடந்த பிற படங்களின் சாதனைப் பட்டியல் அடுத்தடுத்த பகுதிகளில்...
#பின்குறிப்பு :
இப்பகுதியில் இடம் பெறும் திரையரங்குகளின் இருக்கைகள் தொடர்பான தகவல்கள் 1960 களில் வெளியிடப்பட்டிருந்த பேசும்படம் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டவை. அவை என் யூகங்களல்ல... அதற்கு ஆதாரமாக அந்த புத்தகத்தில் வெளியான திரையங்கு தொடர்பான செய்தியை கீழே பின்னூட்டத்தில் பதிவிட்டுள்ளேன். நண்பர்கள் கவனிக்கவும்.
தகவல் உதவி. திரு.சிவனாத்பாபு, மதுரை
பதிவூட்டம் : வான்நிலா விஜயகுமாரன்
Thanks வான்நிலா விஜயகுமாரன்
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
5th August 2020, 06:43 PM
#8
Senior Member
Devoted Hubber
#மதுரை_மாநகரில்_நடிகர்திலகத்தின்
#வெற்றிப்பட்டியல்
#பகுதி4
கம்பூன்றி நடந்துவரும் வயதான ஒருவரைப் பார்த்துவிட்டு இவர் இளமைப் பருவத்திலும் இப்படித்தான் கோலூன்றி நடந்திருப்பாரோ என்று நினைப்பது எத்தனைப் பெரிய அபத்தமோ, அப்படித்தான் அபத்தத்திலும் அபத்தம் நடிகர்திலகத்தின் இறுதிக்கால படங்களின் ஓட்டத்தை வைத்து அவர் புகழேணியின் உச்சத்தில் நின்று கோலேச்சிய காலத்திலும் இப்படித்தான் ஓடியிருக்குமோ என்று நினைத்துக் கொள்வதும்.
இன்றைக்கு பெரும்பான்மை திரைஆர்வலர்களின் எண்ண ஓட்டம் அப்படியாகத்தான் இருக்கிறது. அவர்களின் சிந்தை முழுதும் மசாலா ஹீரோக்கள்தான் திரையுலக மகாராஜாக்கள் என்று! அவர்களைப் போன்றவர்களுக்குத்தான் திலகத்தின் இந்த சாதனைப்பதிவுகள்.
தமிழ்த்திரையுலகில் நடிகராகவும், நட்சத்திர நாயகராகவும் மின்னிய முதலும் கடைசியுமான நடிகர் நடிகர்திலகம் ஒருவர் மட்டுமே.
இவர் ஒருவருக்குத்தான் சண்டைக் காட்சிகள் இல்லாவிட்டாலும், காதல் பாடல்கள் இல்லாவிட்டாலும், உடல் ஊனம்போல் இருந்தாலும், ஏன்... ஆண்மையின் அடையாளமாய் கருதும் மீசையே இல்லாவிட்டாலும் படங்கள் வெற்றி நடையிட்டன. படம் முழுதும் படுத்துக் கொண்டே நடித்தாலும் நூறுநாள் ஓடின. வசூல் முரசும் கொட்டின. மற்றவர்களை இப்படியெல்லாம் கற்பனை செய்துகூட பார்க்க முடியாது. அப்படி வெல்வதற்கான அறிகுறியும் இல்லாத ஒன்று.
அன்றைய சராசரி நாயகர்களிலிருந்து விலகி, தனக்கென்று தனிப்பாதையிட்டு அதில் வெற்றிநடையிட்டவர்தான் நடிகர்திலகம்.
அன்றைக்கு ஆண்டுக்கு முப்பது நாற்பது படங்கள் வெளிவந்த காலக்கட்டத்திலேயே மூன்றில் ஒரு பங்கும், நான்கில் ஒரு பங்கும் இவர் நாயகனாக நடித்தப் படங்களாகத்தான் அமைந்திருந்தன. ஆம். சினிமாவும் சிவாஜியும் ஒன்றாக வளர்ந்த காலமது.
#அதுஒரு_பொற்காலம்!
தமிழ்த்திரை வரலாற்றில் ஒரே ஆண்டில் அதிகப் படங்களில் நாயகனாக நடித்ததில் இவரே முதலாமவர் என்பது மட்டுமல்ல... ஒரே ஆண்டில் அதிக 100 + நாள் ஓடிய வெற்றிப்படங்களைத் தந்ததிலும் இவரே முதல்வராகவும் திகழ்ந்தார். இன்று வரையிலும் திகழ்கிறார். சான்றாக,
1958ல் நடிகர்திலகம் நடித்த மொத்தத் திரைப்படங்கள் தமிழில் எட்டு; தெலுங்கில் ஒன்று. அவ்வெட்டுத் தமிழ்ப் படங்களில் 100 நாட்களைக் கடந்தவை 5.
உத்தமபுத்திரன், பதிபக்தி, சம்பூர்ண ராமாயணம், சபாஷ்மீனா மற்றும் அன்னையின் ஆணை ( திருச்சி நண்பர்கள் இதனை உறுதிப் படுத்தவும்)
தமிழ்த்திரையுலகில் ஒரே ஆண்டில் (1958) ஐந்து நூறுநாள் படங்களைத் தந்த முதல் நாயகர் இவரே.
இதில் மதுரையில் மூன்று படங்கள் நூறு நாள்களுக்கு மேலும், இரண்டு படங்கள் 70 நாள்களையும் கடந்தன.
#அன்னையின்ஆணை கல்பனா 70 நாள்
#காத்தவராயன் சிந்தாமணி 84 நாள்
#உத்தமபுத்திரன் நியூசினிமா 105 நாள்
#பதிபக்தி கல்பனா 102 நாள்
#சம்பூர்ணராமாயணம் ஸ்ரீதேவி 165 நாள்
மற்ற மூன்று படங்களும் மதுரையைப் பொறுத்தவரை 50 நாள்களுக்குக்கீழ்தான் ஓடின.
இன்றைய நான்காம் பகுதியில் இடம்பெறும் வசூல் பட்டியலின் திரைப்படங்கள் பின்வருவன...
#பதிபக்தி
வெளியான நாள் : 14 மார்ச் 1958
திரையரங்கம் : கல்பனா
ஓடிய நாள் : 102 நாள்
மொத்த வசூல் : ரூ.1,34,748.81
வரி நீக்கிய வசூல் : ரூ.1,13,015.40
வி.பங்குத்தொகை : ரூ. 61, 005.42
#சம்பூர்ணராமாயணம்
வெளியான நாள் : 14 ஏப்ரல் 1958
திரையரங்கம் : ஸ்ரீதேவி
ஓடிய நாள் : 165 நாள் ( ஷிப்டிங் முறையில் மதுரையில் 250 நாள்களுக்கும்மேல் ஓடியது)
மொத்த வசூல் : ரூ. 1,81,592.76
வரி நீக்கிய வசூல் : ரூ.1,35,701.41
வி.பங்குத்தொகை : ரூ.77, 914.57
.......தொடரும்
மதுரை தகவல் உதவி : திரு. சிவனாத்பாபு
பதிவூட்டம் : வான்நிலா விஜயகுமாரன்
Thanks வான்நிலா விஜயகுமாரன்
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
5th August 2020, 06:48 PM
#9
Senior Member
Devoted Hubber
#மதுரை_மாநகரில்_நடிகர்திலகத்தின்
#வெற்றிப்பட்டியல்
#பகுதி6
வீரபாண்டிய கட்டபொம்மன்
Thanks வான்நிலா விஜயகுமாரன்
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
5th August 2020, 06:50 PM
#10
Senior Member
Devoted Hubber
#மதுரை_மாநகரில்_நடிகர்திலகத்தின்
#வெற்றிப்பட்டியல்
#பகுதி 7
பாகப்பிரிவினை
Thanks வான்நிலா விஜயகுமாரன்
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
Bookmarks