Page 101 of 210 FirstFirst ... 519199100101102103111151201 ... LastLast
Results 1,001 to 1,010 of 2097

Thread: Makkal Thilagam MGR Part 26

  1. #1001
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    1972 - அக்டோபர் புரட்சி - மக்கள் திலகத்தின் புகழின் இமாலய வெற்றி

    புரட்சி நடிகர் எம்ஜிஆர் அவர்கள் திமுகவிலிருந்து நீக்கிய செய்தி அறிந்ததும் அரசியல் - திரை உலக பிரமுகர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள் . ரசிகர்கள் மிகவும் கொதித்து எழுந்தார்கள் . சாதாரண பொது மக்களும் அடிமட்ட ஏழைகளும் அதிர்ந்து போனார்கள் .
    மக்கள் திலகம் அவர்கள் எந்தவித ஆத்திரம் இல்லாமல் மக்களையும் தன்னுடைய ரசிகர்களையும் நம்பி அடுத்த கட்ட நடவடிக்கைகக்கு தயாரானார் . மக்கள் திலகத்திற்கு ஆதரவு தெரிவித்து அன்றைய வலிமையான ஆளும் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் - சட்ட மன்ற - பாராளுமன்ற
    உறுப்பினர்கள் ஒருவர் கூட மக்கள் திலகத்திற்கு ஆதரவாக கட்சியை விட்டு வெளியே வரவில்லை

    மக்கள் திலகத்திற்கு ஆதரவாக தமிழ் நாடே பொங்கி எழுந்தது . சாலையில் சென்ற அனைத்து வாகனங்கள் மீதும் மக்கள் திலகத்தின் போஸ்டர்ஸ் ஒட்டப்பட்டு சென்றதை நாடு முழுவதும் ஆதரவு அலை வீசியதை அன்றைய நாளேடுகள் - வார ஏடுகள் இந்திய - மற்றும் வெளிநாடுகளில் செய்தியாகவும் எம்ஜிஆரின் மாஸ் பற்றிய கட்டுரையாகவும் வந்தது .
    ஒரு நடிகருக்கு ஒரு மாநிலத்தில் இந்த அளவிற்கு மக்கள் செல்வாக்கு - ரசிகர்கள் செல்வாக்கு உள்ளதை வைத்து எம்ஜிஆர் - விரைவில் ஒரு மாபெரும் சக்தியாக உருவெடுக்க போகிறார் என்று
    நாடே உணர்ந்து கொண்டது .

    மக்கள் திலகத்திற்கு நாளுக்கு நாள் மக்களின் ஆதரவு பெருகுவதை ஒரு சிலரால் ஜீரணிக்க முடியவில்லை . சில பத்திரிகைகள் எம்ஜிஆரின் செய்திகளை இருட்டடிப்பு செய்தார்கள் .

    எம்ஜிஆரை வைத்து படம் எடுத்த தயாரிப்பாளர்கள் பலரும் மிரட்டப்பட்டார்கள் . விநியோகஸ்தர்கள் - திரை அரங்கு உரிமையாளர்கள் எச்சரிக்கப்பட்டார்கள் . ரசிக மன்ற நிர்வாகிகள் தாக்கப்பட்டார்கள் - பொய் வழக்குகள் போடப்பட்டது .

    மக்கள் திலகம் எதற்கும் அஞ்சவில்லை . நம்பிக்கையுடன் போராடி வெற்றி கண்டார் .
    மக்கள் திலகத்தின் இதய வீணை படம் வெளிவருவதில் [6.10.1972 வரவேண்டிய படம் ] தள்ளி போடப்பட்டது .
    அன்றைய சூழ் நிலையில் இதயவீணை படத்திற்கு மேலும் ஒரு பாடல் படமாக்கப்பட்டது .
    ஒரு வாலுமில்லே .. நாலு காலுமில்லே என்ற பாடல் படமாக்கப்பட்டு 20.10.1972 அன்று வருவதாக
    விளம்பரம் வந்தது .
    9.10 -1972 முதல் 16-10 1972 அரசியல் உலகிலும் திரை உலகிலும் ஒரு வித பரப்பரப்பான சூழ் நிலை
    நிலவியது . ஒரே கேள்வி ..... எம்ஜிஆர் என்ன செய்ய போகிறார்?!.........vnd..

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1002
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    வரும் வாரம் தனியார் தொலைக் காட்சியில் மக்கள் திலகத்தின் திரைக் காவியங்கள்:
    12-10-2020 பாலிமர் டிவியில் இரவு 11 மணிக்கு " அரச கட்டளை" (91 வது படம் - 19-05-1967ல் வெளிவந்தது)
    12-10-2020 சன்லைப்பில் மாலை 4 மணிக்கு உழைக்கும் கரங்கள் (129வது படம் - 23-05-1976ல் வெளிவந்தது)
    12-10-2020 ஜெயா டிவியில் காலை 10 மணிக்கு - இதய வீனை (118வது படம் - 20-10-1972ல் வெளி வந்தது)
    15-10-2020 பாலிமர் டிவியில் இரவு 11 மணிக்கு பட்டிக்காட்டு பொன்னையா (120 வது படம் - 10-08-1973ல் வெளிவந்தது)
    17-10-2020 ராஜ் டிஜிட்டல் பிளஸில் இரவு 7 மணிக்கு நல்ல நேரம் (1142 வது படம் - 10-03-1972ல் வெளிவந்தது)
    17-10-2020 ராஜ் டிவியில் பகல் 1.30 மணிக்கு ரகசிய போலீஸ் 115 (94வது படம் - 11-01-1968 ல் வெளிவந்தது)
    17-10-2020 ராஜ் டிவியில் இரவு 11.30 மணிக்கு "நாம்" (மக்கள் திலகத்தின் 29வது படம் (05-03-1953ல் வெளிவந்தது)
    முதல் தகவல் மதுரை ராமகிருஷ்ணன்...

  4. #1003
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எம்ஜிஆர் உண்பது, உறங்குவது போல கொடுப்பதும் அவரது இயல்பு!
    M.g.r. பிறருக்கு கொடுப்பது என்று முடிவு செய்துவிட்டால் கையில் பணம் இல்லாவிட்டாலும் மற்றவர்களிடம் கடன் வாங்கியாவது கொடுத்து விடுவார். அப்போதுதான் அவருக்கு நிம்மதி. உண்பது, உறங்குவது போல, கொடுப்பதும் அவருக்கு இயல்பானது.
    ‘இதயவீணை’ படப்பிடிப்புக்காக காஷ்மீருக்கு எம்.ஜி.ஆர். சென் றிருந்தார். அங்கிருந்த பிரபல ஓட்டல் ஒன்றில் தங்கியிருந்தார். இதை அறிந்து ராணுவத்தினர் அவருக்கு வர வேற்பு அளித்தனர். பின்னர், தங்களின் ராணுவ நலச் சங்கம் ஒன்றுக்கு வருகை தர வேண்டுமென்று அழைப்பு விடுத்தனர். அவர்களின் வேண்டு கோளை எம்.ஜி.ஆர். ஏற்றுக் கொண்டார். அவர்தான் எங்கு சென்றாலும் வெறும் கையோடு சென்று பழக்கமில்லையே. ராணுவ நலச் சங்கத்துக்கு நிதி கொடுக்க முடிவு செய்தார். அவரிடம் அப்போது பணம் இல்லை. படத்தின் தயாரிப்பாளரான மணியனிடமும் படப் பிடிப்பு செலவுக்கு வைத்திருந்ததைத் தவிர பெரிதாக தொகை இல்லை.
    அங்கிருந்த தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபரிடம் ஒரு பெரும் தொகையை குறிப்பிட்டு ‘‘கடனாக கிடைக்குமா?’’ என்று எம்.ஜி.ஆர். கேட்டார். அதற்கு தொழிலதிபர், ‘‘தாராளமாக. ஆமாம், அப்படி என்ன தேவை உங்களுக்கு?’’ என்று வினவினார். எம்.ஜி.ஆர். அவரிடம் விஷயத்தைச் சொன்னதும் தொழிலதிபர் அசந்துபோய்விட்டார். ‘கடன் வாங்கி இவ்வளவு பெரிய தொகையை நன்கொடையாக கொடுக்கிறாரே?’ என்று நினைத்தார். தனது எண்ணத்தை எம்.ஜி.ஆரிடமும் சொன்னார்.
    ‘‘தவறாக நினைக்காதீர்கள். ராணு வத்தினர் விரும்பி உங்களை அழைக் கிறார்கள். ஏதாவது தொகை கொடுக்க வேண்டுமென்றால் கொடுங்கள். ஆனால், இவ்வளவு பெரிய தொகை வழங்குவது தேவையா?’’ என்றார். எம்.ஜி.ஆருக்கு கோபம் வந்துவிட்டது.
    ‘‘நீங்களும் நானும் சென்னையில் இருந்து லட்சம் லட்சமாக சம்பாதித் துக்கொண்டு பாதுகாப்பாக இருப் பதற்கு நாட்டை பாதுகாக்கும் இந்த ராணுவத்தினர்தான் காரணம். அவர்களது உழைப்புக்கும் தியாகத்துக்கும் இந்தத் தொகை மிகவும் குறைவு. முதலில் பணத்துக்கு ஏற்பாடு செய்யுங்கள். சென்னை திரும்பியதும் தருகிறேன்’’ என்று தொழிலதிபரிடம் சொல்லிவிட்டு எம்.ஜி.ஆர். வேகமாகச் சென்றுவிட்டார். பிறகு தொழிலதிபரிடம் மறுப்பேது? அவர் ஏற்பாடு செய்து கொடுத்த தொகையை ராணுவ நலச் சங்கத்துக்கு நன்கொடையாக எம்.ஜி.ஆர். வழங்கினார். இதை எதிர்பார்க்காத ராணுவத்தினர் அளவற்ற மகிழ்ச்சி அடைந்து எம்.ஜி.ஆருக்கு நன்றி தெரிவித்தனர்.
    காஷ்மீரில் இன்னொரு சுவையான, ஜில்லென்ற சம்பவம். எம்.ஜி.ஆர். தங்கியிருந்த அதே ஓட்டலில் இன்னொரு பகுதியில் அவரது உதவியாளர்களும் தங்கியிருந்தனர். அந்த ஓட்டலில் உணவு வகைகள் மட்டுமின்றி ஐஸ்கிரீமும் தனிச்சுவையுடன் இருக்கும். ஒரு நாள் சாப்பாடு சாப்பிட்டு முடிந்ததும் ஓட்டல் பணியாளரிடம் ஐஸ்கிரீம் பற்றி எம்.ஜி.ஆரின் உதவியாளர்கள் விசாரித் தனர். விதவிதமான ஐஸ்கிரீம்கள் பட்டி யலை சொல்லிய பணியாளர் அதன் விலைகளையும் சொன்னவுடன் எம்.ஜி.ஆரின் உதவியாளர்களுக்கு ஐஸ் கிரீம் மீதான ஆசையே போய்விட்டது.
    மறுநாள் படப்பிடிப்பு முடிந்து இரவு உணவுக்குப் பின் தங்கள் அறையில் எம்.ஜி.ஆரின் உதவியாளர்கள் படுத்திருந்தபோது, அழைப்பு மணி ஒலியை கேட்டு கதவைத் திறந்தனர். பெரிய தட்டில் வகை வகையான ஐஸ்கிரீம் களோடு வந்த பணியாளர் ஒருவர், உள்ளே வைத்துவிட்டுச் சென்றார். நாம் ஆர்டர் கொடுக்காத நிலையில் யாருடைய அறைக்கோ செல்ல வேண்டிய ஐஸ்கிரீம்கள் தங்களுக்கு வந்ததாக நினைத்த எம்.ஜி.ஆரின் உதவியாளர்கள், ‘வந்தவரையில் லாபம்’ என்று சிரித்துக்கொண்டே ஐஸ்கிரீம்களை காலி செய்தனர்.
    மறுநாள் காலை படப்பிடிப்பில் உதவியாளர்களை பார்த்து எம்.ஜி.ஆர். கேட்ட முதல் கேள்வி, ‘‘என்ன, நேற்றிரவு ஐஸ்கிரீம் அனுப்பினேனே, சாப்பிட்டீர்களா?’’
    உதவியாளர்களுக்கு அதிர்ச்சி...குழப்பம். “வந்தது... நன்றாக இருந்தது” என்று ஒருவர் தட்டுத் தடுமாறி ஒருவழியாகக் கூறிவிட்டார்.
    ‘‘வேறு யாருடைய அறைக்கோ செல்ல வேண்டியது, உங்களுக்கு வந்துவிட்டது என்று நினைத்தீர்களா?’’ என்று அடுத்த ஏவுகணையை கேள்வியாக எம்.ஜி.ஆர். வீசினார்.
    உதவியாளர்களின் உடல் இரவில் சாப்பிட்ட ஐஸ்கிரீமை விட ஜில்லிட்டது. ‘‘இல்லை...’’ என்று மென்று விழுங்கினர். தனக்கே உரிய புன்னகையுடன் எம்.ஜி.ஆர். போய்விட்டார்.
    விஷயம் என்னவென்றால், ஓட்டல் பணியாளர்களை எம்.ஜி.ஆர். அழைத்து தன்னுடன் வந்திருக்கும் எல்லோரும் என்ன வேண்டுமென்று கேட்டனர் என்று விசாரித்து, அவரவர்கள் கேட்ட உணவு வகைகளை தன் செலவில் அனுப்பச் சொல்லியிருக்கிறார்.
    இதை அறியாத எம்.ஜி.ஆரின் உதவியாளர் சபாபதியும் மற்றவர்களும், ‘‘இந்த அதிசய மனிதருக்கு எப்படித்தான் பிறர் மனதில் உள்ளது தெரிகிறதோ?’’ என்று சொல்லிச் சொல்லி வியந்தனர்.
    ஜேம்ஸ்பாண்ட் வேடத்தில் எம்.ஜி.ஆர். நடித்து 100 நாட்கள் ஓடிய வெற்றிப் படம் ‘ரகசிய போலீஸ் 115’. எம்.ஜி.ஆரின் ஸ்டைலான நடிப்பில் பாடல், சண்டைக் காட்சிகள் ரசிகர் களுக்கு பெரும் விருந்தாக அமைந்தன. இந்தப் படத்தில் ஒரு காட்சியில் நடிகை ‘வெண்ணிற ஆடை’ நிர்மலாவுக்கு தங்க வளையலை எம்.ஜி.ஆர். பரிசளிப்பார். அது அவரது கைக்கு சரியாக பொருந்தும். ‘அளவு சரியாக இருக்கிறதே?’ என்று ‘வெண்ணிற ஆடை’ நிர்மலா ஆச்சரியப்படுவார்.
    அதற்கு எம்.ஜி.ஆர். அளிக்கும் பதிலை கவனித்துக் கேட்டால்தான் புரியும். ஏனென்றால், ரசிகர்களின் கைதட்டலாலும் ஆரவாரத்தாலும் தியேட்டரே இடிந்து விழுவது போலிருக்கும். எம்.ஜி.ஆர். கூறுவார்...
    ‘‘நான் எப்பவுமே, யாரையுமே சரியா அளவெடுத்து வெச்சிருப்பேன்!’’.........da...

  5. #1004
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மோகனப்புன்னகை இயக்கம்தான் ஸ்ரீதர். தயாரிப்பு போட்டோகிராபர் சாரதி. இருந்தாலும் அந்தப் படத்தால் தொழிலில் ஸ்ரீதர் சரிந்தது நிஜம். சிவாஜி கணேசனும் அவர் தம்பி சண்முகமும் படத்தயாரிப்பு விஷயத்தில் பணத்தில் கெட்டி. சிவாஜி கணேசனுக்கு பெரியார் வேடத்திலும் திப்பு சுல்தான் வேடத்திலும் நடிக்க ஆசை. இதை அவரே சொல்லி இருக்கிறார். யாராவது தயாரித்தால் நடிக்கத் தயாராக இருந்தார். ஆனால் தனது சிவாஜி புரொடக்ஷன்ஸ் சார்பில் இந்தப் படங்களை தயாரிக்கவில்லை. திப்பு சுல்தானாவது சரித்திரக் கதை என்பதால் செலவாகும். ஏன் ..பெரியார் வேடத்தில் சொந்தப் படத்தில் நடித்திருக்கலாமே. படம் அவுட்டாகும் என்று அவருக்கு தெரியும். அவரைவிட அவர் தம்பி சண்முகத்துக்கும் நன்றாகவே தெரியும். நஷ்டம் வந்தால் அவங்க பணமாச்சே. அதனால் எவனாவது ஏமாந்த தயாரிப்பாளர் மாட்டுவானா என்று பார்த்தார்கள். யாரும் மாட்டவில்லை. சிவாஜி கணேசனின் ஆசையும் நிறைவேறவில்லை. கடைசியில் எம்ஜிஆர் ரசிகரான சத்யராஜ் பெரியார் படத்தில் நடித்தார். இயற்கையாக நன்றாகவே நடித்தார். படமும் வெற்றிபெற்றது. நல்லவேளை சிவாஜி கணேசன் நடிக்கவில்லை. அவர் நடித்திருந்தால் பெரியார் எப்படியும் கைத்தடியால் தன் மண்டையில் தானே அடித்துக் கொண்டு கதறி அழுது ஓவர் ஆக்டிங்கோடு ஒரு சோகப்பாட்டாவது பாடியிருப்பார். அதை எல்லாம் ரசிப்பவர்கள் மக்கள் திலகத்தின் உடையை கிண்டல் செய்வார்கள். நல்லவேளை.. சிவாஜி கணேசன் நடிக்காததால் பெரியார் தப்பித்தார். அதோடு ஐயன் என்றாலே பெரியாருக்கு ஆகாது. அவர் இருந்தால் இந்த போலி ஐயனைப் பார்த்து,.."நான் கொடுத்த சிவாஜி பட்டத்தை திருப்பி கொடுடா கணேசா.." என்று கேட்டிருப்பார்.... Swamy...

  6. #1005
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    காஞ்சிபுரத்தில் சிவந்த மண் திரைப்படம் 85 பைசா டிக்கெட் 25 ரூபாய்க்கு விற்றதாக சிவாஜி கணேசன் ரசிகர்கள் பொய் செய்தி தயாரித்து வெளியிட்டிருக்கிறார்கள் என்பதை ஏற்கெனவே கூறினேன். அது பொய் செய்திதான் என்பதை அவர்களது ஆதாரம் மூலமாகவே உறுதி செய்திருக்கிறார்கள். இந்தச் செய்தியைப் பாருங்கள். காஞ்சிபுரம் ராஜாவில் சிவந்த மண் டிக்கெட் 25 ரூபாய்க்கு பிளாக்கில் விற்றது என்றுதானே கூறியிருக்கிறார்கள். ஆனால், சிவந்த மண் காஞ்சிபுரம் ராஜாவில் ரிலீஸ் ஆகவேயில்லை. காஞ்சிபுரம் கிருஷ்ணா தியேட்டரில்தான் ரிலீஸ் ஆகியிருக்கிறது. இதற்கான ஆதாரத்தையும் அவர்களே கொடுத்துள்ளனர்.

    வெளியிடப்படாத தியேட்டரில் தங்கள் படம் வெளியானது என்றும் அந்தப் படத்துக்கு டிக்கெட் பிளாக்கில் விற்றதாகவும் பொய்களை பரப்பி வருகின்றனர் என்பதை தியேட்டரை மாற்றிச் சொல்வதில் இருந்தே புரிந்து கொள்ளலாம். காஞ்சிபுரம் கிருஷ்ணாவில் சிவந்தமண் வெளியிடப்பட்டது என்பதற்கான அவர்களே அளித்துள்ள ஆதாரத்தை இங்கேயே இன்னொரு பதிவில் தருகிறேன். இங்கே ராஜா தியேட்டரில் சிவந்த மண் வெளியிடப்பதாக அவர்கள் பரப்பி வரும் பொய்யான பதிவு.... Swamy...

  7. #1006
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    காஞ்சிபுரம் ராஜாவில் சிவந்த மண் வெளியாகவில்லை, கிருஷ்ணாவில் வெளியாகி உள்ளது என்பதற்கான அவர்களே கொடுத்த ஆதாரம். இந்த பட்டியலில் 3 என்று நம்பர் போட்டிருக்கும் தியேட்டரைப் பாருங்கள். இந்த ஆதாரத்தை கொடுத்தவர்களுக்கு நன்றி............காஞ்சிபுரம்- ராஜா தியேட்டரில் சிவந்த மண் ரிலீஸ் ஆகவில்லை, கிருஷ்ணா தியேட்டரில்தான் ரிலீஸ் ஆகியது என்பதை உறுதிப்படுத்திவிட்டோம். சரி .. அப்படியானால், காஞ்சிபுரம் -ராஜாவில் சிவந்த மண் வெளியாகவில்லை என்றால் 1969 தீபாவளியை முன்னிட்டு அந்த தியேட்டரில் வெளியாகி ஓடி வெற்றிநடை போட்ட படம் என்ன? மக்கள் திலகத்தின் "நம்நாடு"...தான். வேண்டுமானால் இப்படி நடந்திருக்கலாம். காஞ்சிபுரம்- ராஜாவில் நம்நாடு படத்தின் 85 பைசா டிக்கெட் 25 ரூபாய்க்கு பிளாக்கில் விற்பனை ஆகியிருக்கும். அந்தப் பெருமையை தாங்கள் எடுத்துக் கொள்ளலாம் என்று நினைத்து பொய் செய்தி தயாரித்தவர்கள், சிவந்த மண் வெளியான கிருஷ்ணா தியேட்டருக்கு பதிலாக பொய் சொல்லும் பதட்டத்தில் நம்நாடு வெளியான ராஜா தியேட்டர் பெயரை போட்டு உண்மையை சொல்லிவிட்டனர். நம்நாடு படம் காஞ்சிபுரம் ராஜாவில் வெளியாகி இரண்டாவது வாரத்தில் வெளியிடப்பட்ட விளம்பர ஆதாரம் இதோ. உண்மைதான் எப்போதும் வெல்லும். மக்கள் திலகத்துக்கும் அவர் ரசிகர்களுக்கும் எப்போதும் வெற்றிதான்...... Swamy...

  8. #1007
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    சார் நீங்கள் சொன்னபடி நம் நாடு ப்ளாக்கில் விற்றதை சிவந்தமண் என்று சொல்லிவிட்டார்கள் "பிள்ளைகள்".. போகுதே "மானம் கப்பல் ஏறி போகுதே"!!! Sb...நம்நாடு படத்தின் 85 பைசா டிக்கெட் 25 ரூபாய்க்கு பிளாக்கில் விற்பனை. தானாக முன்வந்து வாக்குமூலம் அளித்த கணேசமூர்த்தி "பிள்ளைகளுக்கு" நன்றி....sb........ (அன்று பம்பாய்) மும்பையில்[அரோரா திரையரங்கு என்று நினைவு] "உலகம் சுற்றும் வாலிபன்" வெளிவந்தபோது ஒரு டிக்கெட் ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்டது. அதற்கு பின்பு வந்த ஹிந்தி படம் ஷோலே வேறு அரங்குகளில் எழுநூறு / ஆயிரம் என்று விற்கப்பட்டது.....sb...

  9. #1008
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    வேட்டைக்காரன் - காவல்காரன் - ரிக்ஷாக்காரன்

    மக்கள் திலகத்தின் மூன்று படங்களும் தமிழ் சினிமாவில் உண்டாக்கிய தாக்கம் ஒரு சரித்திர

    புரட்சியாகும் .

    1964 ல் வந்த வேட்டைக்காரன் படத்தின் மூலம் மக்கள் திலகத்தின் புதிய தோற்றம் - மாறுபட்ட

    வேடம் - படம் முழுவதும் சுறுசுறுப்பாக தோன்றி ரசிகர்களின் பாராட்டை பெற்ற படம் .

    அநேகமாக தமிழில் வந்த முதல் கௌபாய் படம் .மக்கள் திலகம் தன்னுடைய ஸ்டைல் - படம் முழுவதும் காட்டி நடித்திருப்பார் . ரசிகர்களின் ஆவலை பூர்த்தி செய்வதில் மக்கள் திலகத்திற்கு
    நிகர் மக்கள் திலகமே .

    காவல்காரன் - 1967

    துப்பறியும் அதிகாரியாக நடித்த படம் . இந்த படத்திலும் அவருடைய ஆளுமை படம் முழுவதும்
    நிறைந்திருக்கும் .குத்து சண்டையில் புதுமை புகுத்தியவர் .மென்மையான நடிப்பின் மூலம்
    ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை அடித்தவர் .தமிழக அரசின் 1967 ல் சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்பட்ட படம் உலகில் .50 வயதில் இளமையுடன் தோன்றிய ஒரே நடிகர் எம்ஜிஆர் .

    ரிக்ஷாக்காரன் -1971

    மக்கள் திலகம் கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்து 24 ஆண்டுகள் பின்னர் அவர் ஒரு சிறந்த நடிகர்
    என்று இந்திய அரசாங்கம் ஏற்று கொண்டு விருது வழங்க காரணமான படம் . உண்மையிலே
    புரட்சி நடிகர் இந்த படத்தில் பல சாதனைகள் புரிந்துள்ளார் .

    ஒரு ரசிகனின் கனவை , ஆவலை பூர்த்தி செய்து தன்னுடைய பக்கம் ஈர்த்து கொண்டதில் மக்கள் திலகம் மாபெரும் வெற்றி கண்டார் .

    வேட்டைக்காரன் - காவல்காரன் - ரிக்ஷாக்காரன் மூன்று படங்களும் மக்கள் திலகத்தின் ரசிகர்களின் உன்னத காவியங்கள் .........vnd...

  10. #1009
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    திண்டுக்கல் இடைத்தேர்தல் அ.இ.அ.தி.மு.க. பிரம்மாண்ட வெற்றி...

    திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில், அ.தி.மு.க. வேட்பாளர் மாயத்தேவர் வெற்றி பெற்றார். அ.தி.மு.க.வை அமைத்ததும், சென்னை கடற்கரையில் நடந்த பிரமாண்டமான கூட்டத்தில் எம்.ஜி.ஆர். பேசினார். தொடக்கத்திலிருந்தே எம்.ஜி.ஆருக்கு உறுதுணையாக இருந்து வந்த ஜேப்பியாரும், முசிறிபுத்தனும் இக்கூட்டத்துக்கான ஏற்பாடுகளை செய்தனர்.

    (ஜேப்பியார் இப்போது சத்தியபாமா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் வேந்தராக உள்ளார்) இந்தக் கூட்டத்தில் காளிமுத்து, முனுஆதி, எஸ்.எம். துரைராஜ், எட்மண்ட் ஆகியோர் எம்.ஜி.ஆர். முன்னிலையில் அ.தி.மு.க.வில் சேர்ந்தனர்.

    அ.தி.மு.க.வின் வளர்ச்சியை எடுத்துக்காட்டும் வகையில், திண்டுக்கல் இடைத்தேர்தல் வந்தது. திண்டுக்கல் தொகுதி "எம்.பி."யாக இருந்த ராஜாங்கம் (தி.மு.க.) மரணம் அடைந்ததால், 1973 மே மாதம் 20_ந்தேதி அங்கு இடைத்தேர்தல் நடந்தது.

    இந்தத் தேர்தலில், வக்கீல் மாயத்தேவரை அண்ணா தி.மு.க. வேட்பாளராக எம்.ஜி.ஆர். நிறுத்தினார்.

    புதுக்க*ட்சிக்கு சின்ன*ம் தேர்ந்தெடுக்க ஏ.சி.ச*ண்முக*ம், மாய*த்தேவ*ர்,மற்றும் சிலரும் சென்ற*ன*ர். இர*ட்டை இலை உட்ப*ட* மூன்று சின்ன*ங்க*ளில் எதை தேர்வு செய்ய*லாம் என எம்ஜிஆரிட*ம் தொலைபேசியில் கேட்ட*ன*ர். மக்க*ளுக்கு எளிதில் புரியும் வ*கையிலும், தொண்ட*ர்க*ள் எளிதில் வ*ரையும் வ*கையிலும் இருக்கட்டும் என்று எம்ஜிஆர் இர*ட்டை இலையையே தேர்வு செய்தார். அவ*ர் சொல்லும் முன் இவ*ர்க*ளும் இர*ட்டை இலை சின்னமே ந*ன்றாக* உள்ளது என எண்ணினார்க*ளாம். தொண்ட*ர்க*ளின் எண்ண*மும், த*லைவ*ரின் எண்ண*மும் ஒத்துப்போவ*தில் என்னே ஒற்றுமை!

    திண்டுக்கல் தேர்தலுக்கு 9 நாட்களுக்கு முன்னால், "உலகம் சுற்றும் வாலிபன்" காவியம், படத்தை எம்.ஜி.ஆர். ரிலீஸ் செய்தார். அந்தப்படம் வெளியாவதற்கு முன், சினிமா சுவரொட்டி மீதான வரியை சென்னை மாநகராட்சி திடீரென்று உயர்த்தியது. அதனால், சென்னை நகரில் ஒரு சுவரொட்டி கூட ஒட்டாமல் படத்தை எம்.ஜி.ஆர். வெளியிட்டார். ஆட்டோ, டாக்ஸிக*ளில் சிறிய* அள*வில் ஸ்டிக்க*ர் த*யார் செய்து ஒட்ட*ப்ப*ட்ட*து. ஸ்டிக்க*ருக்கான யோச*னையையும் வ*டிவ*மைப்பையும் செய்து த*ந்த*வ*ர் ஓவியரும், ந*டிக*ருமான பாண்டு ஆவார்.

    `தேவி' தியேட்டருக்கு எம்.ஜி.ஆர். சென்று ரசிகர்களுடன் படத்தைப் பார்த்தார். பின்னர் நடந்த கூட்டத்தில், திண்டுக்கல் தேர்தல் நிதியாக தென்சென்னை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ரூ.20 ஆயிரத்தை ஜேப்பியார் எம்.ஜி.ஆரிடம் வழங்கினார்.

    திண்டுக்கல் தேர்தல் பிரசாரத்தில் அனல் பறந்தது. எப்படியும் அந்தத் தேர்தலில் தி.மு.க. வெற்றி பெறவேண்டும் என்று அமைச்சர்கள் திண்டுக்கல்லில் முகாமிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். முதல்_அமைச்சர் கருணாநிதி கிராமம் கிராமமாகச் சென்று ஓட்டு கேட்டார். எம்.ஜி.ஆர். இரவு பகலாக தொகுதி முழுவதும் பிரசாரம் செய்தார்.

    "திண்டுக்கல் தேர்தலில் தி.மு.க. வெற்றி பெறவேண்டும்" என்று பெரியார் அறிக்கை விடுத்தார். திண்டுக்கல்லில் நாகல்நகர் என்ற இடத்தில் மே 13_ந்தேதி தி.மு.க.வினருக்கும், அ.தி.மு.க.வினருக்கும் இடையே பெரும் மோதல் நடந்தது. இருதரப்பினரும், பயங்கர ஆயுதங்களுடன் மோதிக் கொண்டனர். அப்போது சிலர் கத்தியால் குத்தப்பட்டார்கள்.

    கலவரத்தை அடக்க, போலீசார் தடியடி நடத்தி கண்ணீர் புகை வீசினார்கள். இதையொட்டி, மறுநாள் 101 பேர் கைது செய்யப்பட்டனர். திண்டுக்கல்லில் பதற்ற நிலை நிலவியதால், பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரில் கவனிக்க, தமிழ்நாடு தலைமை போலீஸ் அதிகாரி (ஐ.ஜி.) அருள் திண்டுக்கல் சென்றார்.

    20-05-1973 அன்று ஓட்டுப்பதிவு நடந்தது. மறுநாள் ஓட்டுகள் எண்ணப்பட்டு, முடிவு அறிவிக்கப்பட்டது. இந்தத் தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் மாயத்தேவர் வெற்றி பெற்றார்.

    ஓட்டு விவரம்:-

    மொத்த ஓட்டுக்கள் 6,43,704

    பதிவான ஓட்டுக்கள் 5,05,253

    மாயத்தேவர் (அ.தி.மு.க.) 2,60,930

    சித்தன் (ப.காங்.) 1,19,032

    பொன்.முத்துராமலிங்கம் (தி.மு.க.) 93,496

    சீமைச்சாமி (இ.காங்.) 11,423

    சூரியமுத்து (சுயே) 9,342

    சேதுராமதேவர் (சுயே) 695

    கோவிந்தசாமி (சுயே) 687

    வரததேசிகன் (சுயே) 502 (இவ*ர் என*து தாய் மாமா ஆவார்).

    அங்கண்ண செட்டியார் (சுயே) 448

    செல்லாதவை 8,698

    அ.தி.மு.க.வுக்கு அடுத்த இடத்தை காமராஜரின் பழைய காங்கிரஸ் பெற்றது. இ.காங்கிரஸ் வேட்பாளரும், சுயேச்சை வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர். திண்டுக்கல் தேர்தல் முடிவு பற்றி எம்.ஜி.ஆர். ஒரு அறிக்கை வெளியிட்டார்.

    அதில் அவர் கூறியிருந்ததாவது:_

    "திண்டுக்கல் தேர்தலின்போது, `உங்கள் ஓட்டு தமிழனுக்கா, அல்லது அன்னியனுக்கா" என்ற கேள்வியை கருணாநிதி எழுப்பினார். அந்தக் கேள்விக்கு தமிழ்ப்பண்பு, தமிழ் கலாச்சாரம், தமிழ் மரபு, அண்ணாவின் அறவழி, வள்ளுவன் நெறிமுறை இவைகளை இதய சுத்தியோடு பின்பற்றுபவன்தான் தமிழன் என்று, ஒளிவு _ மறைவு இல்லாமல், அ.தி.மு.க.வுக்கு லட்சோப லட்சம் வாக்குகளை வழங்கியதன் மூலம் தீர்ப்பளித்து இருக்கிறார்கள்."

    மேற்கண்டவாறு எம்.ஜி.ஆர். கூறினார்.

    முதல்_அமைச்சர் கருணாநிதி விடுத்த புலம்ப*ல் அறிக்கையில் கூறியிருந்ததாவது:_

    "கழக தோழர்களே! தோல்வி கண்டு துவண்டுவிடாதீர்கள். நமது அண்ணனுக்கு 1962_ல் காஞ்சியில் ஏற்பட்ட சோதனையை நினைவில் வைத்து ஆறுதல் அடையுங்கள். ஊக்கம் பெறுங்கள். நான் ஏற்கனவே, பலமுறை குறிப்பிட்டு இருப்பதுபோல், தமிழ்நாடு முழுமைக்கும் திண்டுக்கல் முடிவு உதாரணமாகாது. ஒரு தொகுதியின் வெற்றி _ தோல்வி தமிழ்நாட்டின் எதிர்கால அரசியலை நிர்ணயிப்பதல்ல.

    ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்ற பழமொழி இதற்குப் பொருந்தாது. இவ்வாறு கூறி தேற்றினார். ஆனால், வ*ர*லாறு கூறிய*து என்ன? அடுத்த*டுத்த தேர்த*ல்க*ளிலும் திமுக*விற்கு ப*டுதோல்வியே ப*ரிசாக* கிடைத்த*து...காலை வ*ணக்கத்துட*ன்.......Shatm...

  11. #1010
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    பாட்டாலே புத்தி சொன்ன*வாத்தியார் எம்.ஜி.ஆர்.- வின்*டிவியில் சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*07/10/20 அன்று அளித்த*தகவல்கள்*
    --------------------------------------------------------------------------------------------------------------------------
    வெற்றி என்பது வானத்தில் இருந்து விழுகின்ற நட்சத்திரம் அல்ல. உண்மை,உழைப்பு, உறுதி, உயர்வு இதைத்தான் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். ஒரு பாடமாக இந்த சமூகத்திற்கு தந்து இருக்கிறார்கள் .எம்.ஜி.ஆர். அவர்களுக்கு மனித மனங்களை படிக்க தெரியும் .அப்படி படித்த ஒரு மேதை என்றே சொல்லலாம் .குறிப்பாக யாரேனும் குழந்தையை அவர் கையில் கொடுத்து பெயர் வைக்க சொல்லும்போது ,அவரது கைகள் நடுங்கி கொண்டே வாங்குமாம் .குழந்தை இல்லாத ஒரு தந்தை என்ற நிலையில் அந்த குழந்தைகளுக்கு பெயர் வைக்க சொல்லி நிர்பந்தம் படுத்தும்போது கைகளில் நடுக்கத்தோடு வாங்கும் ஒரு நுட்பமான மனத்துக்காரர் எம்.ஜி.ஆர்.*


    எத்தனையோ அரசியல்வாதிகள் இருந்தார்கள் . ஆனால் ஒரு நடிகராக இருந்து*அந்த நடிப்பின் மூலமே மக்களின் மனதில் இவ்வளவு பெரிய இடத்தை பிடித்து ,அந்த மக்களிடமே இவ்வளவு பெரிய செல்வாக்கை பெற்றவர் என்பது மற்றஎந்த நாடுகளிலும் இல்லாத ஒரு சரித்திர சாதனை தமிழகத்தில் இருந்தது .ஆங்கில நடிகர் ஒமர் ஷெரிப் ஒருஆங்கில படத்தில்கருணை மிக்க* டாக்டராக வருவார். அதே ஒமர் ஷெரிப்* மெக்கனாஸ் கோல்ட் படத்தில் ஒரு கொடூரமான வில்லனாக வருவார் .* அதெல்லாம் காரெக்டர் இமேஜ் . மக்கள் பார்த்தார்கள்,ரசித்தார்கள் .ஆனால் எம்.ஜி.ஆர். அப்படியல்ல. அவர் ஒரு ஆர்ட்டிஸ்ட் இமேஜ் கொண்டவர் .அவர் எந்த படத்தில் நடித்தாலும், எந்த பாத்திரம் கொண்டு இருந்தாலும் எம்.ஜி.ஆருக்காக தான் பார்க்கிறார்கள் .அதனால்தான் பல படங்களில்,கதைகளிலும் கூட* அவர் தலையீடு இருந்து இருக்கிறது .பாக்தாத் திருடன் படத்தில் மாய கம்பளம் காட்சி வருவது போல இருந்தது* இந்த மாதிரி* அந்த காலத்திலேயே**மூட நம்பிக்கையை வளர்க்கும் காட்சிகள் விதைக்கும் காட்சிகள்* அதுவும் நான் நடிக்கும் படங்களில் இருக்க கூடாது என்று தவிர்த்து, வாதிட்டு ,அன்றைக்கே பகுத்தறிவை விதைத்தவர் எம்.ஜி.ஆர்.*


    ஆணவ சொற்கள், அகம்பாவ சொற்கள் நிறைந்த காட்சிகள் , பாடல்கள் தான் நடிக்கும் படங்களில் கண்டிப்பாக இருக்க கூடாது என்று பார்த்து கொண்டவர் .அன்னமிட்டகை படத்தில் நான் விரல் அசைத்தால்* வெற்றி தன்னாலே ஓடிவரும் என்று கவிஞர் வாலி பாடல் எழுதினார் . அப்படி வேண்டாம் .அவன் விரல் அசைத்தால் வெற்றி தன்னாலே ஓடி வரும் என்று எழுத சொன்னவர் எம்.ஜி.ஆர்.அப்படி தன்னடக்கத்தோடு இருந்தவர் .* அவருக்கு தெரியும் அந்த காலத்தின் சூப்பர் ஸ்டாராக இருந்த எம்.கே. தியாகராஜ பாகவதர் எந்த மாதிரி ஒரு சரிவை கண்டார் என்று .தன் கண் முன்னாலே பார்த்தவர் .* அன்றைக்கு திரைப்படத்திற்கு வசனம் எழுதினாலேயே* *ஒரு லட்சம் சம்பளம் தருவார்கள் என்று பேசப்பட்டவர் திரு.இளங்கோவன் .தமிழ் சினிமாவில்* தமிழ்**உரை நடையை**அப்படி மாற்றி காட்டிய இளங்கோவன் அவர்கள் ஒரு கட்டத்தில் மிக மிக நொடிந்து போய் கடிதம் எழுதி, எம்.ஜி.ஆரிடம் உதவி கேட்கும்போதெல்லாம் உங்கள் தமிழால் எத்தனை லட்சம் பேரை நினைத்தீர்கள் .உங்கள் தமிழ் இப்படி உதவி கேட்டு வரவேண்டுமா என்று வருத்தப்பட்டவர்** எம்.ஜி.ஆர்.*


    ஒரு கட்சி தலைமையை , கட்சி தலைவரை மதிக்கும் பண்பாடு எம்.ஜி.ஆரிடம் எப்படி இருந்தது என்று கருத்து சொல்லுங்கள் .



    திரு.கா. லியாகத் அலிகான் : புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரை பொறுத்தவரையில்*எனக்கு* எதிரியாக இருப்பதற்கு கூட*ஒரு தகுதி வேண்டும் என்று சொல்லுவார் .எல்லோரிடமும் சொல்வார் .தன்னுடைய*எதிரியாக*கருணாநிதியையும், எதிர்க்கட்சியாக தி.மு.க.வையும்*தான் கருதுவார் .ஒருமுறை ஒரு அமைச்சர் (அவர் பெயர் வேண்டாம் )நல்லெண்ணத்தில்* எம்.ஜி.ஆருக்கு*பயந்து கொண்டு சொன்ன*மறுப்பை*எம்.ஜி.ஆர். அவர்களால் சகித்து கொள்ள*முடியவில்லை .ஒருமுறை ரயிலில்*ஒரு அமைச்சர்* முதல் வகுப்பில்*கூப்பே* அறையில்*( இருவர்*மட்டும்* பயணம் செய்வது*)பயணம் செய்கிறார் . அதே*பெட்டியில்*நான்கு நபர்கள் பயணம் செய்யும் கூப்பேயில்*கருணாநிதி அவர்களுக்கு இடம் கிடைத்தது .கருணாநிதியுடன் அவரது உதவியாளர் பயணிக்கிறார் .மேலும் இருவர்* வெளியாட்கள் பயணிக்க உள்ளார்கள் .இந்த நிலையில் உதவியாளர் கருணாநிதியிடம் ஐயா, பக்கத்தில் உள்ள* இருவர்*பயணிக்க கூடிய கூப்பேயில்*அமைச்சர் தன் உதவியாளருடன் பயணிக்கிறார் .உங்களுக்கு இதில் பயணிக்க*சங்கடமாக இருக்கும் என்பதால் நான் அமைச்சரிடம் இருக்கைகளை மாற்றி கொள்வது பற்றி பேசட்டுமா*என்று கேட்டதற்கு ,கருணாநிதி பரவாயில்லை .இரவு நேரம் படுத்திருந்து 8 மணி நேரத்தில் ஊருக்கு சென்றிடுவோம் .அவர்கள் பதவியில் இருப்பவர்கள்.தொந்தரவு செய்ய வேண்டாம் என்றார் .பரவாயில்லை. நான் முயற்சி செய்கிறேன் என்று அமைச்சரிடம் ,அண்ணே*எதிர்க்கட்சி தலைவர் கருணாநிதி அவர்கள் நால்வர் பயணிக்கும் கூப்பேயில்வெளியாட்களுடன்* பயணிக்க சங்கோஜப்படுகிறார் . இந்த கூப்பேவை*அளித்தால் எந்த சங்கடமும் இல்லாமல் சற்று*ஒய்வு எடுத்தபடி*பயணிக்க ஏதுவாக*இருக்கும் என்று சொன்னதற்கு அமைச்சர் யோசித்தார் .அமைச்சருக்கு இரண்டு மனம் . ஒன்று இருக்கைகளை மாற்றி கொடுத்தால்*ஒருவேளை எம்.ஜி.ஆர் நம்மை*தவறாக நினைக்கலாம் . இன்னொன்று , நமக்கு*எதிரிதான் இந்த கருணாநிதி , இவருக்கு நாம் ஏன் உதவ வேண்டும் என்று நினைத்திருக்கலாம்.அமைச்சர் உடனே முடியாது .எனக்கும் உதவியாளர் உள்ளார்*எங்களுக்கும் தனிமை தேவைப்படுகிறது என்றார் .கருணாநிதியின் உதவியாளர் அவரிடம் ஐயா ,நாம் இந்த கூப்பேவிலேயே பயணிக்கலாம் என்று தயக்கத்துடன் சொன்னவுடன் கருணாநிதி நிலைமையை*புரிந்து கொண்டார் .அதாவது இவர் அந்த அமைச்சரை கேட்டிருப்பார் .அவர் மறுத்திருப்பார் என்று .அமைச்சரும் , கருணாநிதியும் ஊர் போய் சேர்ந்துவிட்டார்கள் .


    நான்கு நாட்கள் கழித்து புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரிடம் இருந்து இந்த அமைச்சருக்கு அழைப்பு வந்தது . என்னை வந்து பார் என்றார் .எம்.ஜி.ஆர். அவர்கள் வழக்கமான*அழைப்பு கொடுத்திருப்பார் என்று நினைத்து அமைச்சர் சென்று பார்த்திருக்கிறார் . வந்தவுடன் எம்.ஜி.ஆர் .ரயில் சம்பவம்*பற்றி கேட்டிருக்கிறார் . அவர் எவ்வளவு பெரிய ஆள் .எனக்கு தலைவராக இருந்தவர் .எதிர்க்கட்சி தலைவர்* உன்னிடம் போய் அந்த ஆள் கூப்பேவை*மாற்றிக்கொள்ளலாமா* என்று தன் உதவியாளர் மூலம் கேட்டிருக்கிறார் பார் . அதை ஏற்று கொண்டு*உடனே நீ மாற்றி கொண்டிருந்தால்*நான் உன்னை பாராட்டி இருப்பேன்* ரயில் பயணம் 8 மணி நேரம் தானே .உன்னைவிட வயதில் மூத்தவர் . உடல்நிலையில் பாதிப்பு கூட இருந்திருக்கலாம் .தனிமை தேவைப்பட்டிருக்கலாம் .அந்த உதவியை* நீ செய்வதனால் என்ன குறைந்தா* போய்விடுவாய் .அமைச்சர் உடனே ,இல்லை அண்ணே நீங்கள் தவறாக நினைப்பீர்களோ என்ற எண்ணத்தில்தான் இப்படி நடந்து கொண்டேன்*என்றதற்கு ,நான் ஏன் தவறாக நினைக்க போகிறேன் .பிறருக்கு*அதுவும் எதிர் கட்சி தலைவருக்கு இந்த மாதிரி உதவியை*நீ செய்திருந்தால் நான் மனதார உன்னை பாராட்டி இருப்பேன்*,வரவேற்றிருப்பேன் .இந்த உதவியை நீ செய்வதனால் நான் உன்னை பற்றி தவறாக எண்ணியிருப்பேன் என்று நீ நினைத்ததே*பெரிய தவறு .ஒரு அமைச்சராக இருந்து கொண்டு நீ இப்படி அநாகரிகமாக* நடந்திருக்க கூடாது .,என்று கடினமான வார்த்தைகளால் திட்டி அனுப்பிவிட்டார் .* ஒரு சில நாட்களில் அந்த அமைச்சரின் முக்கிய துறைகளை நீக்கிவிட்டு மிகவும் சாதாரண துறைகளை*மட்டும் அளித்து ,அவரை டம்மி*அமைச்சர் ஆக்கி* தண்டித்தார் .மீண்டும் சில மாதங்கள்*கழித்து சில முக்கிய*துறைகளை ஒதுக்கி*கௌரவம் செய்தார் .* அதாவது மந்திரியாக இருந்தால் கூட ஒருவர் தவறு செய்தால் அவரது முக்கியத்துவத்தை குறைத்து*தண்டிப்பது ,பின்னர் சில காலத்திற்கு பிறகு அவருக்கு*திருந்தியதாக நினைத்து* மீண்டும் முக்கிய பதவிகளை அளித்து* கௌரவிப்பது என்பது புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களிடம் அவர் பாடி நடித்த பாடலின்படியே கற்று கொண்ட பாடமாகும்**,இவ்வாறு* திரு.**லியாகத் அலிகான்*பேசினார்*.*.

    சோழன், சேரன், பாண்டிய மன்னர்களிடம் பல்வேறு வேறுபாடுகள் இருந்தால்கூட .அதையெல்லாம் வரலாற்று பூர்வமாக விவரம் அறிந்தவர்தான் எம்.ஜி.ஆர். அதை தெரியாமல் இருந்தவர்கள்தான்பலர்* ஆட்சி புரிந்தவர்கள் /ஆட்சியில் இருந்தவர்கள் .என்பது ஒரு கதை ..மதுரையில் உலக தமிழ் மாநாடு நடைபெறுகிறது .அந்த மாநாட்டில் வெளிநாட்டவர் பலர் தங்குவதற்காக பிரம்மாண்ட விடுதி ஒன்று கட்டப்படுகிறது .*அந்த விடுதியை திறப்பதற்காக எம்.ஜி.ஆர். மதுரைக்கு வருகை புரிகிறார் .இந்த விடுதிக்கு என்ன பெயர் சூட்டப்போகிறீர்கள் என்று எம்.ஜி.ஆர். கேட்கிறார் . தமிழ்நாடு விளம்பரம் மற்றும் மக்கள் செய்தித்துறை தொடர்பாளர் திரு.கற்பூர சுந்தரபாண்டியன் அதற்கு ராஜராஜன் விடுதி என்று முடிவு செய்துள்ளோம் என்றார் .பாண்டிய மன்னன் ஆண்ட மதுரை விடுதிக்கு ராஜராஜன் பெயரா என்று எம்.ஜி.ஆர். கேள்வி எழுப்பினார் .உடனே அனைவரும் பயந்துபோய்விடவே , ஏற்கனவே மதுரையில் பாண்டியன்* ஓட்டல் இருப்பதால் ,அதை தமிழ்நாடு ஓட்டல் என்று பெயர்* மாற்ற சொன்னாராம் .உடனே இரவோடு இரவாக பெயரை மாற்றி தமிழ்நாடு அரசு விடுதி என்று சூட்டினார்களாம் .இதுபற்றி எம்.ஜி.ஆர். அவர்களிடம் கருத்து கேட்டதற்கு எப்படி பாண்டிய மன்னன் சோழ மன்னனை விரட்டி அடித்துவிட்டாரா என்று கிண்டலடித்தாராம் .மற்ற தகவல்கள் அடுத்த அத்தியாயத்தில் தொடரும் .

    நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்*
    -----------------------------------------------------------------------------------
    1.எங்கே அவள், என்றே மனம்* - குமரிக்கோட்டம்*

    2.நீதிமன்ற காட்சியில் எம்.ஜி.ஆர். - பெற்றால்தான் பிள்ளையா*

    3.என்னை தெரியுமா* -குடியிருந்த கோயில்*

    4.சின்னவளை முகம் சிவந்தவளை - புதிய பூமி*

    5.திரு.கா. லியாகத் அலிகான் பேட்டி*

    6.ஓ* வெண்ணிலா ,ஓ வெண்ணிலா - ராணி சம்யுக்தா*

    *

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •