Page 103 of 210 FirstFirst ... 35393101102103104105113153203 ... LastLast
Results 1,021 to 1,030 of 2097

Thread: Makkal Thilagam MGR Part 26

  1. #1021
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #தாய்மனம்

    அரசுத்துறை உயரதிகாரி ஒருவர் ஊழல் புரிய அவருக்கு 3 மாதங்கள் சஸ்பென்ஷன் ஆர்டர் வழங்கப்படுகிறது. அந்த ஆர்டரை வாங்கிக்கொள்ள ராமாவத்திற்கு வரச்சொல்கிறார் தமிழக முதல்வர் பொன்மனச்செம்மல். அதிகாரிக்கு நடுக்கம் முதல்வர் என்ன சொல்லப்போகிறாரோ!!! என்று...

    தோட்டத்திற்குப் போய் முதல்வரைப் பார்க்கிறார்... அந்த அதிகாரியிடம் எம்ஜிஆர் கேட்ட முதல் கேள்வி..! 'உள்ள போய் சாப்பிட்டுட்டு வாங்க...' அந்த அதிகாரி, 'சாப்பிட்டாச்சு'ன்னு சொல்ல....
    உங்களைப் பார்த்தா சாப்பிட்ட மாதிரி தெரியலையே, பொய் சொல்லாம முதல்ல உள்ளே போய் சாப்பிட்டு விட்டு வாங்க' ன்னு முதல்வர் சொல்கிறார்...

    அந்த அதிகாரியும் சாப்பிட்டவுடன் முதல்வரை சந்திக்கிறார்...

    அந்த சஸ்பென்ஷன் ஆர்டரை அந்த அதிகாரியின் முகத்திலெறிகிறார் கோபமாக...' நீரெல்லாம் என்னய்யா அதிகாரி... உங்களைப் போல அதிகாரிகளினால் தான்யா அரசுக்குக் களங்கம் விளைகிறது! மக்கள் நம் ஆட்சியைப் பற்றி என்ன நினைப்பார்கள்...' எனச்சொல்ல...

    சப்தநாடியும் ஒடுங்கிப்போன அந்த அதிகாரி மிகவும் கவலையுடன் அங்கிருந்து வெளியேறி தனது வீட்டிற்குச் செல்கிறார்...

    வீட்டினுள்ளே நுழைந்த அந்த அதிகாரிக்கு அதிர்ச்சி...'கண்ணனை சந்தித்துவிட்டு வந்த குசேலனின் வீடு செல்வச்செழிப்பினால் மாறியிருந்தது போல அந்த வீடே மாறியிருந்தது....',

    அதிர்ச்சியில் உறைந்துபோன அந்த அதிகாரியிடம் அவர் மனைவி கூறுகிறார்...
    ' மூன்று மாதங்களுக்கு நம்ம வீட்டிற்குத் தேவையான மளிகை சாமான்கள், துணிமணிகள் அப்புறம் செலவிற்கு 3000/- ரூபாய் இதெல்லாம் நம்ம ஐயா தோட்டத்திலேர்ந்து கொடுத்தனுப்பினார்...'ன்னு சொல்ல உருகிக் கண்ணீர் விடுகிறார் அந்த அதிகாரி...

    அதாவது தவறு செய்பவர்களை ஒருபுறம் சட்டப்படி தண்டித்தாலும், மறுபுறம் தன் கருணையினால் தாய்மனத்தோடு அவர்களை வாழ்விக்கின்ற தெய்வம் நம் இதயதெய்வம் பொன்மனச்செம்மல்...............bsm...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1022
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    முதல்வர் எம்.ஜி.ஆர். காந்தியவாதி
    எமக்கு கருத்து வேற்றுமை வாராது
    சென்னையில் பிரதமர் மொரார்ஜி தேசாய் பேசினார்

    சென்னை , செய் , 22, 1977

    "தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எம்.ஜி. இராமச்சந்திரன் காந்தியத்தில் தம்பிக்கை கொண்டவர் . மத்திய அரசுக்கும் தமிழ்நாடு அரசுக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுவதக்கு இடமில்லை" இவ்வாறு பாரதப் பிரதமர் மொரார்ஜி தேசாய் கூறினார்.

    தமிழ்நாட்டுக்கு வந்துள்ள பிரதமர் சென்னையில் ஜனதா கட்சி ஊழியர்கள் மத்தியில் போகையில் மேலும் கூறியதாவது:

    "மாநிலங்களில் எந்தக் கட்சி ஆட்சியில் இரும்தாலும் மத்தியிலுள்ள ஜனதா அரசு எந்த பாகுபாடும் காட் டாது ஒத்துழைக்கும். உடல் ஊனமுற்றோர் மத்தியில் பிரதமர் பேசுகையில் "உடல் ஊனமுற்றோர் நல்வாழ்வில் நாம் பெரிதும் அக்கறை காட்ட வேண்டும் " என்று கேட்டுக் கொண்டார்.

    எம்.ஜி. ஆர். அறிவிப்பு

    இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் திரு.எம்.ஜி.ஆர். பேசுகையில் உடல் ஊனமுற்றோர் நிதிக்கு முதலமைச்சர் நிதியில் இருந்து ரூ.10,000 வழங்குவதாக அறிவித்தார்....sb...

  4. #1023
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #என்றென்றும்_மக்கள்_திலகம்

    #எங்கள்_தங்கம்...

    மக்கள் திலகத்தின் திரையுலக வாழ்வில் மைல் கல்லான எங்கள் தங்கம் படத்திற்கு பல சிறப்புகள் உண்டு.

    *இந்த படம் மூன்று முதல்வர்கள் இடம் பெற்ற படம். முன்னாள் முதல்வர்கள் மக்கள் திலகம்-ஜெயலலிதா, இணையாக நடிக்க இன்னோரு முதல்வர் டாக்டர் கலைஞர் இப்படத்தை தயாரித்தார்.

    * இந்த படம் வெளிவரும் போது ((அக்டோபர் 1970)) மக்கள் திலகம் சிறுசேமிப்பு துறையின் தலைவராய் இருந்தார். படத்தின் ஆரம்ப காட்சியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆராகவே ஒரு அரசு விழா மேடையில் தோன்றி சிறுசேமிப்பின் அவசியத்தை பற்றி கூறுவதாகவும் அவரை படத்தின் இன்னொரு எம்.ஜி.ஆர் ((தங்கம்)) மேடையில் சந்தித்து வாழ்த்து பெறும் காட்சி அன்றைக்கு மட்டுமல்ல இன்றைக்கும் ரசிகர்களால் மிகவும் சிலாகித்து பேசப்பட்டது.பேசப்படுகிறது.

    * இந்த படத்தில் மக்கள் திலகம் செய்யும் கதாகாலட்சேபம் காட்சி அன்றைய ரசிகர்கள் மட்டுமல்ல கிருபானந்த வாரியார் அவர்களாலும் மிகவும் பாராட்ட பெற்றது. சந்திரமண்டலத்திற்கு ராக்கெட் விட ஆரம்பித்த ஏற்பாட்டினை விஞ்ஞானிகள் அன்று அம்மாவாசையால் வேறு ஒரு நாளுக்கு தள்ளி வைப்பது போன்ற பகுத்தறிவும்-நகைச்சுவையும் கலந்து கொடுக்கப்பட்டது ரசிகர்களை கவர்ந்தது.மீண்டும் மீண்டும் திரையரங்கிற்கு வராவழைத்தது. முற்றிலும் வித்தியாசமான மொட்டை, குடுமியுடன் மக்கள் திலகம் அசத்தியிருந்தார்.

    *மக்கள் திலகம் உணர்ச்சி பொங்க பேசிய "நான் தமிழ் படித்தே சாவேன்" என்ற வசனம் ரசிகர்களிடையே மிகுந்த எழுச்சியை கொணர்ந்தது.

    *இந்த படத்தில் இடம் பெறும் "நா செத்துப் பொழச்சவன்டா, எமனை பாத்து சிரிச்சவண்டா" என்ற பாடல் படத்தில் நகைச்சுவைக்காக சேர்க்கப்பட்டாலும்..மக்கள் திலகம் 1967 ல் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிர் பிழைத்ததையே சுட்டிக்காட்டியது.

    * "ஏமய்யா..ஏமி...நீ எந்த ஊர் சாமி" என்று கலாதேவி (ஜெ.ஜெ) கோபத்தோடு பாட, நம் மக்கள் திலகம் " கேளம்மா கேளு ..'நான் காஞ்சீபுரத்தாளு" என்று நான் அறிஞர் அண்ணாவின் தொண்டன்' என்ற பொருள்படும் வகையில் பதிலுக்கு பாடும் காட்சியில் கைதட்டலால் திரையரங்கம் அதிர்ந்தது மட்டுமல்ல, பின்னாளில் மக்கள் திலகம் ஆரம்பிக்கபோகும் இயக்கத்திற்கு முத்தாய்ப்பாகவும் அமைந்தது.

    *படம் தமிழகம் முழுவதும் வசூலை குவித்தது..சென்னையில் வெள்ளிவிழாவும், தமிழக பெருநகரங்களில் நூறு நாட்களை கடந்தது...அந்த வருடத்தின் வசூல் சாதனைப்படம் என்ற பெருமையையும் பெற்றது.

    இப்படத்தின் வெள்ளி விழாவில்தான் மக்கள் திலகத்திற்கு நாவலர் நெடுஞ்செழியன் வெற்றி கேடையத்தை பரிசளிக்கிறார்.......... Sridhar Babu...

  5. #1024
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    பாட்டாலே*புத்தி சொன்ன*வாத்தியார் எம்.ஜி.ஆர்.-வின் டிவியில்*சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*08/10/20 அன்று அளித்த*தகவல்கள்*
    ---------------------------------------------------------------------------------------------------------
    தமிழகத்தை மன்னாதி மன்னர்கள் ஆண்டு இருக்கிறார்கள் .மகோன்னதமான தலைவர்கள் இருந்திருக்கிறார்கள் .மிக பெரிய அறிஞர்கள் இருந்திருக்கிறார்கள் . ஆனால் வலம்புரி ஜான் அவர்கள் சொல்வார்களே ,மக்கள் தொகையை கணக்கெடுக்க வேண்டுமென்றால் மலை போன்ற இலை வேண்டும் . மனிதர்களை கணக்கெடுக்க வேண்டுமென்றால் மந்தார இலை போதும் .* அந்த மந்தார இலையில் எழுதப்படும் 10 நபர்களின் பெயர்களில் நிச்சயமாக மக்கள் திலகம் எம்.ஜி..ஆர் பெயர் இடம் பெறும்* என்பது ஒரு சரித்திர சாதனை .அந்த சாதனை மிக்க பாடங்களை நாமும் தொடர்ந்து பயில்வோம், வெல்வோம் .

    சேலத்தில் ஒரு அரங்கில் ஒரு முதிய பெண்மணி எம்.ஜி.ஆரின் திரைப்படத்தை தொடர்ந்து 100 நாட்கள் பார்த்து மகிழ்ந்துள்ளார்* .100 வது* நாள் வெற்றி விழாவின்போது* அந்த அரங்கிற்கு எம்.ஜி.ஆர். வருகை புரிந்து இருந்தார் .அப்போது விழாவில் அரங்கின் மேலாளர் அந்த மூதாட்டியை எம்.ஜி.ஆருக்கு அறிமுகம் செய்து வைத்து தொடர்ந்து 100 நாட்கள் படம் பார்த்ததை பற்றி சொன்னார் .எம்.ஜி.ஆர். அந்த மூதாட்டியிடம் ஒரு படத்தை தொடர்ந்து 100 நாட்கள் பார்க்க வேண்டிய அவசியம் என்ன. நேற்று பார்த்த காட்சிதான் இன்று .அதேதான் நாளையும் . இப்படி தொடர்ந்து பார்க்க அப்படி இந்த திரைப்படத்தில் என்ன இருக்கிறது என்று ஆர்வத்தோடு விஷயத்தை அறிந்து கொள்ள கேட்டார் எம்.ஜி.ஆர். பதிலுக்கு மூதாட்டி ,ஒரு தாய்க்கு தன்* பிள்ளையை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பு ஏற்படாது .அலுப்பு இல்லை என்றாராம் .இப்படி தமிழகம் முழுவதும் எண்ணற்ற தாய்மார்கள், சகோதர, சகோதரிகளை உருவாக்கி வைத்தவர் எம்.ஜி.ஆர்.*


    கோவில்பட்டியில் ஒரு வயதான பெண்மணிக்கு ஆறு வீடுகள் இருந்தன .ஆனாலும் அவர் தனிமையில் இருக்கிறார் என்பதற்காக மாதா மாதம் எம்.ஜி.ஆரிடம் இருந்து* மணி ஆர்டர் வரும் .அந்த மூதாட்டிக்கு குழந்தைகளோ, பெற்றோர்களோ,கணவரோ, சகோதர, சகோதரிகளோ யாரும் துணைக்கு இல்லை .இந்த மணி ஆர்டர் எம்.ஜி.ஆரிடம் இருந்து தொடர்ந்து வந்து கொண்டிருந்ததால் அவர் எம்.ஜி.ஆர். அம்மா என்று அந்த பகுதியில் அழைக்கப்பட்டு வந்தார் .


    ஒரு நாள் எம்.ஜி.ஆர். அவர்கள் தாய் வார இதழின் ஆசிரியர் திரு.வலம்புரி ஜான்*வீட்டிற்கு போன் செய்கிறார் .வீட்டில் வலம்புரி ஜான் அவர்கள் இல்லை .அந்த சமயம் வீட்டில் வேலை செய்யும் இளம் பெண் போனை எடுத்து பேசுகிறார் .போனை எடுத்தவுடன், நீ யார், எந்த ஊர் ,என்ன வேலை செய்கிறாய் .உன்னுடைய வயதென்ன . உன்னை நன்றாக பார்த்து கொள்கிறார்களா .உனக்கு மூன்று வேளையும் நல்ல சாப்பாடு கிடைக்கிறதா .உன்னை வேலை மட்டும் வாங்கி* கொண்டு தினமும் அலைக்கழிக்கிறார்களா என்றெல்லாம் அக்கறையாக சில*கேள்விகள் கேட்டுவிட்டு நான் எம்.ஜி.ராமச்சந்திரன் பேசுகிறேன் என்று வலம்புரி ஜானிடம் சொல்ல சொல்கிறார் .வலம்புரி ஜான் வீட்டுக்கு வந்ததும் அந்த பெண்ணை ஏதாவது போன் வந்ததா* என்று கேட்க ஆமாம் எம்.ஜி.ராமச்சந்திரன் என்று ஒருவர் போன் செய்தார் என்று சொன்னாள்*உடனே பயந்து போய்* அண்ணே, நீங்கள்தான் பேசினீர்கள் என்று அந்த சின்ன பெண்ணுக்கு தெரியாது .நான் வீட்டில் இல்லை. மன்னிக்க வேண்டும் .என்று வருத்தத்தோடு சொல்கிறார் . அப்போதுதான் அந்த பெண்ணுக்கு புரிகிறது பேசியது எம்.ஜி.ஆர். என்று .ஆகவே எம்.ஜி.ஆர். என்கிற மூன்றெழுத்து மந்திரம் இருக்கிறதே .அதுதான் பலருக்கும் தெரியும் .எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தாலும் கூட,அவருடன் வருபவர்களை* அமைச்சர்வருகிறார்* ,மாவட்ட ஆட்சியர் வருகிறார் என்றெல்லாம் சொல்வார்கள். ஆனால் எம்.ஜி.ஆரை* முதல்வர் என்று சொல்வதைவிட எம்.ஜி.ஆர். என்று உச்சரிப்பதை கேட்டுத்தான்*அவர் மனம் மகிழ்ந்து இருக்கிறார் .* வலம்புரி ஜானிடம் ,அந்த இளம்பெண்* என்னிடம் பேசியது எம்.ஜி.ஆரா என்று வியப்புடன் கேட்டதோடு முதலில் நம்ப மறுத்தார் .வலம்புரி ஜான் மீண்டும் எம்.ஜி.ஆரை சந்தித்தபோது,உங்கள் வீட்டில் வேலை பார்க்கும் போனில் நன்றாக பேசினார் .* அவருக்கு நான் ஒரு உதவி செய்ய வேண்டும் என்று வலம்புரி ஜான் கையில் கணிசமான பணம் கொடுத்து ,இந்த* பணத்தை அந்த பெண்ணிடம் கொடுங்கள் என்று சொன்னாராம் .இப்படி முகம் தெரியாத ஒரு இளம்பெண்ணுக்குதன்னுடைய கருணை உள்ளத்தால்**ஒரு தாயாக இருந்து பண உதவி செய்துள்ளார்* தாய் வார இதழின் நிறுவனரான எம்.ஜி.ஆர். என்று அந்த பத்திரிகையில் வேலை பார்த்த கல்யாண்குமார் என்பவர்*எழுதியுள்ளார் .


    திரு.கா.லியாகத் அலிகான் : எம்.ஜி.ஆர். அவர்கள் ஒரு புரியாத புதிர் என்று எடுத்து கொண்டால், எனக்கு தெரிந்தது என்னவென்றால் கோவை மாவட்ட செயலாளராக திரு.மருதாச்சலம் என்பவர் இருந்தார் .ஆனால் அந்த காலத்தில் கட்சிக்காரர்கள் பெரும்பாலும் அவரை நன்றாக மதிப்பதில்லை .அதற்கு காரணம் அவர் குறைந்த அளவுதான் படித்திருந்தார் .* சில நேரங்களில், சிலரிடம் காரசாரமாக பேசுவார் . சில சமயம் தகாத வார்த்தைகளை தெரியாமல்* பயன்படுத்துவார் .இதனால் அவருக்கு விரோதிகள் ,எதிரிகள் பலர் உருவானார்கள் .ஆனால் எம்.ஜி.ஆருக்கு மருதாச்சலத்தின் மீது அளவற்று அன்பு, பற்று ,பாசம் இருந்தது காரணம்* எம்.ஜி.ஆர். கட்சியில் இருந்து நீக்கப்பட்டபோது*அவருக்கு ஆதரவாக,மிக பெரிய ஊர்வலம், ஆர்ப்பாட்டம் ,கண்டன பொது கூட்டங்கள் எல்லாம் ஏற்பாடு செய்திருந்தவர் .இதனால் மருதாச்சலத்திற்கு பெரிய* பின்னணி ,பக்கபலம் எதுவுமில்லை .* ஒரு சாதாரண எம்.ஜி.ஆர். மன்ற செயலாளராக இருந்து கொண்டு இப்படி கண்டன குரல்கள், போராட்டங்கள் நடத்தியதால் அதற்கு நன்றி காட்டும் விதத்தில் அவரை எப்போதும் தன்* இதயத்தில் வைத்திருந்தார் .இந்த செயல்களை மறக்கவே மாட்டார் என்பது எம்.ஜி.ஆரின் குணாதிசயம் .அப்படி இருந்தவரை எம்.ஜி.ஆர். கோவை மாவட்ட செயலாளராக நியமித்தார் .ஆனால் அவரை அதன்பின் யாரும் மதிக்கவில்லை .மரியாதை தரவில்லை .எம்.ஜி.ஆர். முதல்வராக கோவை சர்க்யூட் அவுஸில் தங்கி இருந்தபோது ,மருதாச்சலம் சென்று பார்த்தார் . எம்.ஜி.ஆர். அவரிடம் கட்சி நிலவரம் பற்றி கேட்டபோது ,அண்ணே , என்னை யாரும் மதிப்பதில்லை. மரியாதை தருவதும் இல்லை என்று சொன்னவுடன் சரி சரி போ .பிறகு பேசுகிறேன் என்று மற்றவர்கள் முன்னிலையில் கடிந்தவாறு* பேசினார் .இதை கேட்ட மருதாச்சலம் சோர்ந்து ,மன உளைச்சலுடன் ஒரு ஓரமாக நிற்கிறார் .எம்.ஜி.ஆர். நீலகிரி எக்ஸ்பிரஸில் அன்றிரவு புறப்பட ஆயத்தமாகிறார் .ரயில் நிலையத்தில் வாயிலில் மருதாச்சலம் காத்திருக்கிறார் . நிலையத்திற்கு எம்.ஜி.ஆர். வரும்போது ,நூற்றுக்கணக்கான* வி.ஐ.பி.க்கள், ஆயிரக்கணக்கான தொண்டர்கள் காத்திருக்கும் நேரத்தில் அனைவரையும் ஒரு பார்வை பார்த்தபடி எம்.ஜி.ஆர். வருகிறார் .எங்கே மருதாசலத்தை காணோம் என்று தேடுகிறார் .அங்கு, திருப்பூர் மணிமாறன், கோவைத்தம்பி, அரங்கநாயகம், குழந்தைவேலு*நான் அனைவரும் நிற்கிறோம். ஆனால் யாரையும் அவர் கண்டும் காணாமல் ஒருவரை எதிர்பார்த்து நோட்டம் விடுகிறார் .காரணம் என்னவென்றால்,தான்*அனைவரின் முன்னிலையில் மருதாசலத்தை திட்டியதால் அவருடைய உள்ளுணர்வு மீண்டும் அவருக்கு பலருடைய முன்னிலையில் மரியாதை செய்ய வேண்டும், கௌரவப்படுத்த வேண்டும் என்று நினைத்திருக்கிறார் .*அந்த கூட்டத்தில் எப்படியோ மருதாசலத்தை பார்த்துவிட்ட எம்.ஜி.ஆர். கையசைத்து அருகில் வரச்சொல்லி சைகை செய்தார் .ரயில் பெட்டியின் வாசலில் நின்று கொண்டு மருதாசலத்தை படிக்கட்டில் ஏறி வர சொல்லி ,அனைவரின் பார்வையில் படும்படி ,மூன்று* நிமிடங்களுக்கு மேலாக* மருதாச்சலத்தின் காதில் தொடர்ந்து ஏதோ சொல்லியபடி இருந்தார் .தலைவர் அப்படி என்ன சொல்கிறார் தெரியவில்லை என்று வேடிக்கை பார்த்தவர்கள் மனம் அலை மோதியது .மருதாசலத்திற்கும் ஒன்றும் புரியவில்லை .ஆனால் உம உம என்று தலையை மட்டும் ஆட்டுகிறார் . சரி சரி ,எல்லாவற்றையும் நான் பார்த்துக்கொள்கிறேன் .தொடர்ந்து கட்சி பணியாற்று, பத்திரமாக இரு .என்று மட்டும் அனைவரும் கேட்கும்படி இறுதியாக சத்தமாக சொல்கிறார் .எம்.ஜி.ஆர்.*ரயில் புறப்பட்டதும் அனைவருக்கும் கையசைத்து காட்டிவிட்டு எம்.ஜி.ஆர். உள்ளே சென்றுவிடுகிறார் .ஆனால் மருதாச்சலத்திற்கு* ஒரே குழப்பம் . தலைவர் எப்படி என்ன சொல்லி இருப்பார் என்று .மருதாசலத்தை மதிக்காதவர்கள், மரியாதை தராதவர்கள் அனைவருமே அவரை சூழ்ந்து கொண்டு கேள்விமேல் கேள்வி கேட்கிறார்கள் ஆனால் மருதாச்சலம் அதெல்லாம் உங்களிடம் சொல்ல முடியாது .எனக்கும் தலைவருக்கு மட்டுமே தெரிந்த ரகசிய பேச்சுக்கள் என்று சமாளித்தார் .**


    மருதாச்சலம் உடனே இரவு 10.30க்கு புறப்படும் சேரன் எக்ஸ்பிரஸில் சென்னைக்கு பயணமானார் .எம்.ஜி.ஆர்.பயணித்த நீலகிரி எக்ஸ்பிரஸ்* அதிகாலை 5 மணிக்கு சென்னை வந்தடையும். இவர் புறப்பட்ட சேரன் எக்ஸ்பிரஸ் காலை 7 மணியளவில் சென்னை வந்து சேரும் .சென்னைக்கு வந்த மருதாச்சலம் காலைக்கடன் ,சிற்றுண்டி எல்லாம்* முடித்துவிட்டு* நேரடியாக ராமாவரம் தோட்டம் சென்றார் .தலைவர் மருதாசலத்தை பார்த்தவுடன் என்ன ஆயிற்று .நேற்று இரவுதானே கோவையில் சந்தித்து பேசினேன் எதற்கு அவசரமாக புறப்பட்டு வந்தாய் என்ன விஷயம் என்று கேட்க, அண்ணே நீங்கள் கோவை ரயில் நிலையத்தில் என்ன சொன்னீர்கள் என்று புரியவில்லை .விளக்கம் கேட்டு தெரிந்து கொள்ளத்தான் விரைந்து வந்தேன் என்றார் .நான் ஒன்றும் சொல்லவில்லை .அது ஒரு பக்கம் இருக்கட்டும் .நான் புறப்பட்ட பிறகு யாராவது இதை பற்றி விசாரித்தார்களா என்று கேட்டார் .அண்ணே , நீங்கள் புறப்பட்ட பிறகு, உங்களுக்காக வாங்கி வந்த மாலைகள் ,சால்வைகளை எனக்கு போட்டு ,தலைவர் என்ன சொன்னார் என்று சொல்ல சொல்லி என்னை தொந்தரவு செய்தார்கள் .அதற்காகத்தான்,அனைவரும் உன்னை மதிக்க வேண்டும், மரியாதை* தர வேண்டும் என்பதற்காக உன்னிடம் பேசுவது போல பாவனை செய்தேன் . இனிமேல் உனக்கு எந்த பிரச்னையும் இருக்காது . நீ போய்*கட்சி பணியாற்று ,தைரியமாக இரு ..மற்றதை நான் பார்த்து கொள்கிறேன் என்று சொல்லி அனுப்பினார் .இந்த சம்பவத்தின் மூலம் எம்.ஜி.ஆர். அவர்கள் ஒரு புரியாத புதிர் என்று அறிந்து கொள்ளலாம்*


    சில நாட்கள் கழித்து ,எதிர்க்கட்சியில் இருந்த நாஞ்சில் மனோகரன் கோவை மாவட்டத்திற்கு மாற்றம் தேவை என்று எம்.ஜி.ஆருக்கு கடிதம் எழுதினார்*அந்த கடிதத்தின் பேரில் எம்.ஜி.ஆர். நடவடிக்கை எடுத்து கோவை மாவட்ட செயலாளர் மருதாச்சலத்தை நீக்குகிறார் .* இதை அறிந்த மருதாச்சலம் மிகவும் வருந்துகிறார் .1974ல் புரட்சி தலைவர் ரஷ்யாவிற்கு புறப்பட்டு போனார் .அங்கு கிடைத்த ஒய்வு நேரத்தில் முக்கிய நபர்களுக்கு அங்கிருந்து கடிதம் எழுதுகிறார்*அந்த நேரத்தில் மட்டுமல்ல,இன்றைக்கும் முரசொலியில் எம்.ஜி.ஆர் அவர்களை, கோமாளி, கூத்தாடி என்று கேலி செய்வது, அவருடைய படத்தை முக்காடு போட்டது போல் போடுவது .இப்படியெல்லாம்* செய்து அவர்களின் தரத்தை குறைத்து கொள்கிறார்கள். அது ஏன் என்று தெரியவில்லை .புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அமரர் ஆகிவிட்டார் .ஜெயலலிதா அமரர் . கருணாநிதியும் அமரர் மறைந்தவர்களின் கடந்த கால செயல்பாடுகள், அவர்களுடைய பெயரை கொச்சைப்படுத்துவது, கேவலப்படுத்துவது என்பது மிக பெரிய தவறு மட்டுமல்ல கண்டனம் தெரிவிக்க வேண்டிய விஷயம் .எம்.ஜி.ஆர். அவர்கள் ,அவர்களின் கூற்றுப்படி சாதாரண மனிதர் அல்ல. மா மனிதர் .மாபெரும் மேதை . திட்டமிடுதலை வெளியே காட்டி கொள்ளாமல் அந்த திட்டத்தை செய்து முடிப்பதில் எம்.ஜி.ஆருக்கு ஈடு இணையாக இன்றைக்கு வரை யாரையும் குறிப்பிட்டு சொல்ல முடியாது .1977 மே மாதம் பொது தேர்தல் நடைபெறுகிறது .அதுவரையில் தான்தான் முதல்வர் என்று எம்.ஜி.ஆர். குறிப்பிட்டு எங்குமே பேசவில்லை .1977 பிப்ரவரி மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் கூட அ .தி.மு.க. வெற்றி பெற்றால் முதல்வர் யார் என்று இந்த ராமச்சந்திரனுக்கே தெரியாது என்று அறிவித்து இருக்கிறார் .இவ்வாறு திரு.லியாகத் அலிகான் பேட்டி அளித்தார்*


    சம்பந்தம் இல்லாத ஆட்கள்* சம்பந்தம் இல்லாத கேள்விகள் கேட்பதை*எம்.ஜி.ஆர்.தவிர்த்துவிடுவார் .* திருச்சியை அடுத்த புதுக்கோட்டை பக்கத்தில் ஒரு நூற்பாலை திறக்கப்படுகிறது .அந்த நூற்பாலையை*ஒரு மாவட்ட ஆட்சியர் பொறுப்பிலே*எம்.ஜி.ஆர். ஒப்படைக்கிறார் .* அந்த நூற்பாலை லாபகரமாக நடப்பதற்கு இன்னும் கூடுதலான இயந்திரங்கள் இயக்கலாம் என்று விழாவை துவக்கி வைக்க எம்.ஜி.ஆர். செல்கிறார் .விழாவுக்கு போகும்போது ,தனது கட்சியை சார்ந்த தொழிற்சங்க நிர்வாகி ,அந்த நிர்வாகத்தில் இருந்து பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பதை கேள்விப்படுகிறார் .* ஆனாலும் கூட*அந்த மாவட்ட ஆட்சியரிடம் முகம் கொடுத்து பேசாமல் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் .அப்போது ஏன் அ.தி.மு.க. கட்சியில் இருந்து யாரும் பங்கேற்கவில்லை என்று கேட்கிறார் .அதாவது அ.தி.மு.க. தொழிற்சங்க நிர்வாகி தகாத முறையில் இங்குள்ள அதிகாரிகளை தாக்கினார்.அதிகாரமாக நடந்து கொண்டார் . அதனால் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் .என்கிறார் ஆட்சியர் .நீங்கள் சொல்வதில் நியாயம் இருப்பதாக இருந்தால் ,நிச்சயம் தண்டனைக்கு உரியவர்தான் .அவரை எப்படியாவது மன்னித்து மீண்டும் பணியில் சேர்க்க முடியுமா என்று கேட்டார் எம்.ஜி.ஆர். ஒரு மாவட்ட ஆட்சியரை* பொருட்படுத்தாமல் ,உத்தரவு போட்டு ,தொழிற்சங்க நிர்வாகியை மீண்டும் பணியில் அமர்த்தும் பொருட்டு நடவடிக்கை எடுப்பதை கைவிட்டு ,அதே மாவட்ட ஆட்சியரிடம் வேண்டுகோள் வைத்தார் எம்.ஜி.ஆர்.அப்படி ஒரு நியாயத்தோடு நடந்து கொண்ட முதல்வர் .பொதுவாக எந்தவிதமான குழப்பமான விஷயங்கள்* இருந்தால் அதிகாரிகளுக்கு ,அந்த விஷயத்தில் நியாயம் செய்க என்றுதான் குறிப்பு* எழுதி வைப்பாராம் .எம்.ஜி.ஆர்.தன்* வாழ்நாள் முழுக்க தர்மத்தையும், நியாயத்தையும், ஒரு தாயுள்ளத்தையும் கடைபிடித்தவர் எம்.ஜி.ஆர். மற்ற தகவல்கள் அடுத்த அத்தியாயத்தில் தொடரும் .


    நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்*
    ----------------------------------------------------------------------------------
    1.இந்த பச்சைக்கிளிக்கு ஒரு செவ்வந்தி பூவில் -நீதிக்கு தலைவணங்கு*

    2.நான் உங்கள் வீட்டு பிள்ளை - புதிய பூமி*

    3.தம்பிக்கு ஒரு பாட்டு - நான் ஏன் பிறந்தேன்*

    4.திரு.லியாகத் அலிகான் பேட்டி*

    5.நகரசபை தலைவராக ஒரு காட்சியில் எம்.ஜி.ஆர்.- நம் நாடு*

  6. #1025
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எம்ஜிஆரின் நடிப்பை பலவிதமாக பல தரப்பினர்கள் விமர்சனம் செய்து உள்ளார்கள் .

    எம்ஜிஆரின் நடிப்பு என்பது - தென்றல்- மென்மையாக கையாளும் நடிகப்பேரசர்.

    வீரமான காட்சிகளில் - புயலாய் ஜொலித்தவர் .

    காதல் காட்சிகளில் கனிரசம் சொட்ட பல காதலர்களின் உள்ளங்களில் என்றென்றும் வாழும் அளவிற்கு பல காதல் கீதங்களை தந்த உலகபேரழகு மன்மதன் .

    கொள்கை பாடல்கள் - இவரை போல் பாடியவர் எவருமில்லை

    சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மன மகிழ்வுடன் பார்க்கும் அளவிற்கு பொழுது போக்கு

    படங்களை தந்தவர் .

    எல்லா வகை சண்டை காட்சிகளிலும் தனி முத்திரை பதித்து தன்னுடைய திறமைகளை வெளி

    படுத்தி சண்டை பிரியர்களை இன்று வரை தன்னுடைய நிரந்தர ரசிகராக வைத்திருப்பவர் .

    எம்ஜிஆர் என்ற பெயரை கேட்டாலே குதூகலித்து அவருடைய பிம்பத்தை திரையில் பார்க்கும்

    போதும் ஒரு தனி மனிதன் அடையும் இன்பத்தின் எல்லைக்கே சென்று சிரித்து ஆனந்தமடையும்

    ரசிகன் இன்று கோடிக்கணக்கில் இருப்பது உலகில் எம்ஜிஆர் என்ற நடிகருக்கு மட்டுமே

    என்பது வரலாற்று உண்மையாகும் .

    எம்ஜிஆர் என்ற மாபெரும் மன்னாதி மன்னன் - மறையவில்லை .

    ரசிகர்களின் உள்ளங்களில் தினமும் வாழ்கிறார் .-

    ஊடகங்களில் தினமும் தோன்றுகிறார் .....

    திரை அரங்குகளில் பவனி வருகிறார் ...

    மனம் திறந்து மக்கள் திலகத்தை பாராட்டும் நல்லவர்கள் ..புகழ் மாலை சூடுகிறார்கள் ....

    உலக திரைப்பட வரலாற்றில் சாதனை இங்கும் எம்ஜிஆர் வாழ்கிறார் ............vnd...

  7. #1026
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #தலைவர்காலடிபட்டால்...

    குடும்பச் சொத்துக்களை விற்க முனைந்த தாய்மார்கள் !

    விவசாய நிலத்தில் அவர் காலடி பட்டால் மண்ணெல்லாம் பொன்னாய் விளையும்!!

    தலைவர் பலருக்கும் எவ்வளவோ உதவிகள் செய்திருக்கிறார். ஆனால், அவருக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்தில் குடும்பச் சொத்துக்களை விற்க முனைந்த தாய்மார்கள் உண்டு. தலைவரை தங்கள் மகனாகவே கருதிய மூதாட்டிகள், தங்கள் விவசாய நிலத்தில் அவர் காலடி பட்டால் மண்ணெல்லாம் பொன்னாய் விளையும் என்று நம்பினர்!

    வரி பாக்கிகளுக்காக தலைவரின் சொத்துக்கள் ஜப்தி செய்யப்படலாம் என்று வதந்திகள் பரவிய நேரம். திண்டிவனத்தில் ஆசிரியராக பணி யாற்றி வந்த இரா.ஷெரீப் என்பவர், தலைவருக்கு கடிதம் எழுதினார். ‘‘தங்கள் சொத்துக்கள் ஜப்தி செய்யப்படலாம் என்று வரும் செய்திகள் அறிந்து என்னைப் போலவே தங்களையும் தனது மகனாகக் கருதும் எனது தாய் மிகுந்த வருத்தமடைந்திருக்கிறார். குடும்பச் சொத்துக்களை விற்று தங்களுக்கு உதவச் சொன்னார்.

    என் வீடு, மனை ரூ.40 ஆயிரம் விலைபோகும். அதை தங்களுக்கு அளிக்கிறேன். என் தாய் தங்களுக்காக உயிரைக்கூட தர சித்தமாக இருக்கிறார்’’ என்று கடிதத்தில் ஷெரீப் கூறியிருந்தார்.

    தலைவர் தனது தாய் சத்யா அம்மையாரை தெய்வமாக மதிப்பவர். ராமாவரம் தோட்டத்து வீட்டில் தாய்க்கு சிறிய கோயிலே கட்டியிருந்தார். வெளியே புறப்படும் முன் தாயை வணங்கி விட்டுத்தான் புறப்படுவார். மற்ற தாய்மார்களையும் சொந்தத் தாய் போலவே கருதினார். ஷெரீப் எழுதிய கடித விவரங்களைப் பற்றியும் அந்தத் தாயைப் பற்றியும் ‘ஆனந்த விகடன்’ இதழில் வெளிவந்த தனது சுயசரிதையான ‘நான் ஏன் பிறந்தேன்’ தொடரில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

    ‘‘வயதான காலத்தில் அந்தத் தாய் தன் மக்களுடைய எதிர்காலத்துக்கு என்பதைப் பற்றி சிறிதேனும் கவலைப்படாமல் என்னுடைய கடனைத் தீர்க்க, தங்களின் சொத்துக்களை விற்க முடிவெடுத்தார்களே, அந்த மனித தெய்வத்தை நான் வணங்காதிருப்பது எப்படி? அந்தத் தாய் எனக்காக உயிரைத் தரவும் துணிந்து விட்ட நிலையில், நான் அவர்களுக்காக என் உயிரைத் தராவிடினும் உழைப்பையாவது தரவேண்டாமா?’’ என்று மக்கள்திலகம் எழுதியுள்ளார்.

    தனக்காக அவர்கள் சொத்துக்களை விற்பதை ஏற்க தலைவர் மறுத்துவிட்டார். பின்னர், அந்தத் தாயார் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை கடிதம் மூலம் அறிந்து, திண்டிவனம் சென்றார். ஷெரீப்பின் வீட்டுக்குச் செல்வதற்காக சிறிய சந்துகளின் வழியே தலைவர் நடந்து சென்றார். தங்கள் சந்தில் தலைவர் நடந்து வருவதை நம்ப முடியாத மக்கள் மகிழ்ச்சியுடன் அவரை வரவேற்று, ஓட்டமும் நடையுமாய் கூடவே சென்றனர். ஷெரீப்பின் வீட்டை அடைந்த தலைவரை, மூத்த மகனை கண்ட மகிழ்ச்சியுடன் படுக்கையில் இருந்தவாறே கண்ணீருடன் வரவேற்றார் அந்தத் தாய். அவரது கரங்களை ஆதரவாகப் பிடித்தபடி நலம் விசாரித்தார் மக்கள்திலகம்.

    ‘‘எங்கே உன்னைப் பார்க்காமலே செத்துப் போயிடுவேனோன்னு பயந்தேன். லெட்டர் போட்டவுடனே வந்துட்டியே. நல்லா இருப்பா…’’ என்று கண் கலங்கியபடி நெஞ்சு குளிர வாழ்த்தினார் ஷெரீப்பின் தாய்.

    ‘‘அழாதீங்கம்மா. உங்களுக்கு ஒன்றும் இல்லை. சீக்கிரமே உடம்பு சரியாகி விடும்’’ என்று கண்ணீரைத் துடைத்தபடியே தேற்றிய தலைவர் ஒரு கவரை அவரிடம் அளித்தார். அதில் பணம் இருப்பதைப் பார்த்துவிட்டு அதை ஷெரீப்பின் தாய் ஏற்க மறுத்தார்.

    ‘‘அம்மா. உங்களுக்கு கொடுக்க வேண்டியது என் கடமை. நீங்க என்னை மகனா நினைக்கிறது உண்மையா இருந்தா, மூத்த மகன் செய்யற இந்த சிறிய உதவியை ஏத்துக்கணும்’’ என்ற தலைவரின் வார்த்தையைத் தட்ட முடியாமல் மகிழ்ச்சியோடு பணத்தை வாங்கிக் கொண்டார் ஷெரீப்பின் தாயார். இது நடந்தது 1979-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம். பின்னர், ஓரளவு உடல் நலம் தேறிய அந்தத் தாயின் உடல் நிலை 1980-ம் ஆண்டு ஜனவரி மாதம் மோசமடைந்தது. தலைவருக்கு தந்தி அடித்தார் ஷெரீப். அப்போதும், திண்டிவனம் சென்று பார்த்தார் தலைவர். அந்த மகிழ்ச்சியிலேயே கண்ணை மூடினார் அந்தத் தாய்!

    ஒருமுறை மதுரை அருகே எழுமலை என்ற கிராமத்தில் வேனில் தலைவர் சென்று கொண்டிருந்தபோது, ஒரு மூதாட்டி தன் இரு மகள்களுடன் குறுக்கே வந்து நின்றார். வேனில் இருந்து இறங்கிய மக்கள் திலகம், ‘‘என்னம்மா, உங்களுக்கு ஏதாவது உதவி தேவையா?’’ என்றார்.

    அந்த மூதாட்டி, ‘‘மகராசா, உன்னைக் கெஞ்சிக் கேட்கிறேன். என் விவசாய நிலத்தில் உன் பாதம் பட வேண்டும். ஒருமுறை நடந்து விட்டு வா, அது போதும்’’ என்றார்.

    சிரித்தபடியே அவரது கோரிக்கையை ஏற்ற தலைவர், அருகே இருந்த நிலத்துக்குச் சென்று மூதாட்டியின் கரத்தைப் பற்றிய படியே சிறிது தூரம் நடந்தார். அந்த மூதாட்டி கண்களில் நீர் வழிய, ‘‘இதுபோதும் ராசா, இனிமே இந்த நிலத்தில் பொன்னு விளையும்’’ என்றார். தலைவரின் ஜிப்பா பையிலிருந்து பணக் கத்தை அந்தத் தாயின் கரங்களுக்கு இடம் மாறியது!

    மக்கள் திலகம், கே.ஆர்.விஜயா நடித்த ‘நல்ல நேரம்’ திரைப்படத்தில் ‘நீ தொட்டால் எங்கும் பொன்னாகுமே, என் மேனி என்னாகுமோ?…’ என்ற டூயட் பாடல் இடம் பெறும். மற்ற தலைவர் பட பாடல்களுக்கு இல்லாத சிறப்பு இந்தப் பாடலுக்கு மட்டுமே உண்டு.

    வழக்கமாக, பாடல் காட்சிகளில் பார்ப்பவர்களுக்கு உற்சாகம் தொற்றிக் கொள்ளும் வகையில் தலைவர் ஆடுவார், ஓடுவார். ஆனால், இந்தப் பாடலில் வலைப் படுக்கையில் (நெட்) படுத்தபடியே பாடி நடித்திருப்பார். முழு பாடல் காட்சியிலும் படுத்தபடியே நடித்த நடிகர் தலைவராகத்தான் இருப்பார்...!

    ஓடி ஆடி நடிப்பதை விட, படுத்துக் கொண்டே பாடல் காட்சியில் நடிப்பது கஷ்டம். ஆனாலும், படுத்துக் கொண்டே ஜெயித்தவருக்கு படுத்துக் கொண்டே நடிப்பது கஷ்டமா என்ன?

    நல்ல நேரம் திரைப்படத்தில் இடம் பெற்ற இந்த பாடல் சூப்பர் ஹிட் ஆனது.

    நன்றி : திரு. ஸ்ரீதர் சுவாமிநாதன்... தமிழ். தி ஹிந்து. காம்

    #இதயதெய்வம்.........

  8. #1027
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ஆயிரத்தில் ஒருவன்

    பி.ஆர்.பந்துலுவின் பத்மினி பிக்சர்ஸ் பேனரில் எம்.ஜி.ஆர். நடித்த முதல் படம். மெல்லிசை மன்னர்கள் இசை ராச்சியம் நடத்திய படம்.

    நம்பியார்: ”மதம் கொண்ட யானை என்ன செய்யும் தெரியுமா?”

    எம்.ஜி.ஆர்: ”சினம் கொண்ட சிங்கத்திடம் தோற்று ஓடும்!”

    நம்பியார்: ”தோல்வியையே அறியாதவன் நான்!”

    எம்.ஜி.ஆர்: ”தோல்வியை எதிரிகளுக்குப் பரிசளித்தே பழகியவன் நான்!”

    பின்பக்கம் பட்டன் வைத்த, போச்சம்பள்ளிப் பட்டுப்புடவையில் தைத்த சட்டையுடன் எம்.ஜி.ஆரும், லுங்கி ஸ்டைலில் நம்பியார் கட்டிக்கொண்டு வரும் காஞ்சீவரமும் நகைப்பூட்டலாம். ஆனால், இந்தப் படத்தின் அசுரபலம் திரைக்கதையமைப்பும் காட்சியமைப்பும். ’பருவம் எனது பாடல்’, ‘உன்னை நான் சந்தித்தேன்,’ ‘ஆடாமல் ஆடுகிறேன்’ என்று கதாநாயகிக்கு மட்டுமே மூன்று பாடல்களை, அதுவும் ஒரு புதுமுக நாயகிக்கு (ஜெயலலிதா) கொடுத்திருக்கிறார்கள் என்றால், இயக்குனருக்கு இருந்த நம்பிக்கையைக் கவனிக்கவும்.

    ’ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை.”

    ’ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ...”

    ’அதோ அந்தப் பறவைபோல வாழ வேண்டும்...”

    இந்தப் பாடல்களெல்லாம் எம்.ஜி.ஆருக்காகவே எழுதப்பட்ட பாடல்கள் என்பது உள்ளங்கை பூசணிக்கனி. இது தவிர, ‘நாணமோ இன்னும் நாணமோ” என்று ஒரு டூயட். ஒரு வெகுஜனப்படம் என்றால், அதன் சாமுத்ரிகா லட்சணங்கள் என்னென்ன உண்டோ, அத்தனையையும் உள்ளடக்கிய ஒரு படம் ‘ஆயிரத்தில் ஒருவன்’.

    எம்.ஜி.ஆர்.படத்தில் நாலைந்து சண்டைக்காட்சிகள் இருந்தாலும், ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாகப் படமாக்கப்பட்டிருக்கும். சுறுசுறுப்பாய் முகமெல்லாம் புன்னகை பூத்தவாறு, படுகேஷுவலாய் போடுகிற ஜாலி சண்டை; (”பொறு பூங்கொடி! போய் சற்று விளையாடிவிட்டு வருகிறேன்!”) சிலம்பம், வாள், மான்கொம்பு, இடுப்பு பெல்ட், சுருள்வாள், இரும்புக்கம்பி, சவுக்கு என்று ஏதேனும் ஒரு உபகரணத்துடன் போடுகிற ஒரு சண்டை; குண்டுமணி, ஜஸ்டின், சாண்டோ சின்னப்பா தேவர் போன்ற ஸ்டண்ட் நடிகர்களுடன் ஒண்டிக்கு ஒண்டி போடுகிற ஆக்கிரோஷமான சண்டை... என்று எம்.ஜி.ஆரின் ஸ்டண்ட்கள் பலவகைப்படும். இந்தச் சண்டைக்காட்சிகளின் அமைப்பு, திரைக்கதையின் ஓட்டத்துக்கு ஏற்றவாறு அமைக்கப்பட்டிருப்பதையும் கவனிக்க முடியும். உதாரணமாக, ‘ரிக்*ஷாக்காரன்’ படத்தில் சைக்கிள் ரிக்*ஷா ஓட்டியவாறே, வாத்யார் சிலம்பம் சுற்றுகிற காட்சி. படம் ஆரம்பித்து ஏறத்தாழ அரை மணி கழித்து வருகிற முதல் சண்டைக்காட்சி என்பதாலோ என்னவோ, சற்று நீ...ளமாகவும் ஆனால் ஒரு நொடி கூட சலிப்பூட்டாமல், பார்க்கப்பார்க்க உள்ளங்கை சிவக்கக் கைதட்டியே ஆக வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தும். (இது குறித்தும் பின்னால் தனித்தனி இடுகை எழுத நப்பாசை உண்டு!)

    ’ஆயிரத்தில் ஒருவன்’ படத்திலும் அப்படித்தான்! நம்பியாரின் கொள்ளைக்கூட்டம் கன்னித்தீவுக்குள் நுழைந்ததும் எம்.ஜி.ஆரும் கூட்டாளிகளும் அவர்களை எதிர்த்துப் போராடுகிற காட்சி படுசாதாரணமாக, ஒரு ஓடிப்பிடித்து விளையாடுகிற ஆட்டத்தைப் பார்ப்பது போலிருக்கும். ஆனால், எம்.ஜி.ஆரும் நம்பியாரும் ஒற்றைக்கு ஒற்றை போடுகிற சண்டைக்காட்சி மிகவும் இறுக்கமாக, ஆவேசத்தை வெளிப்படுத்துவதாக இருக்கும். எம்.ஜி.ஆர் என்ற ஆளுமையை எள்ளுபவர்களுக்கு இந்தச் சின்னச் சின்ன நுணுக்கங்கள் தென்படாது. ஆனால், இன்றளவிலும் ‘சண்டைக்காட்சிகள்’ என்றால் ‘வாத்யார் படம் தான்’ என்று வியக்கப்படுவதற்குக் காரணம், இத்தகைய வித்தியாசங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டதுதான். அதனால்தான் அவர் இன்னும் வாத்யார்; என்றும் வாத்யார்!

    பாய்மரக்கப்பல், அழகான கடற்கரை, தீவு என்று ஈஸ்ட்மென் கலரில் ‘ஆயிரத்தில் ஒருவன்’ கடலழகின் பல பரிமாணங்களை அப்போதே திரையில் வெளிப்படுத்தி மலைக்க வைத்த படம். ’ஓடும் மேகங்களே,’ பாடலில் எம்.ஜி.ஆர் கடற்கரையில் பாடிக்கொண்டே போக, ஜெயலலிதா பின்தொடர்வது போலவும்; ‘அதோ அந்த பறவை போல’ பாடல் ஒரு பாய்மரக்கப்பலிலேயே அனைவரும் பாடுவதாகவும் அமைத்து, கடலின் அழகைப் பாடலில் வெளிப்படுத்தியிருப்பார் பந்துலு. பாறைகள் நிறைந்த கடல்பகுதியில் எம்.ஜி.ஆர்- நம்பியார் போடுகிற சண்டையிலும் கடலின் இன்னொரு பரிமாணத்தைக் காட்டியிருப்பார்கள். ஒரு எம்.ஜி.ஆர் படத்தின் பெரும்பகுதி ஸ்டூடியோவுக்கு வெளியே எடுக்கப்படுவதற்கு ‘ஆயிரத்தில் ஒருவன்’ ஒரு முன்னோடி என்பதில் சந்தேகமில்லை..........vnd...

  9. #1028
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் எனது சக ஆசிரியர்கள் மத்தியில் காமராசர் முதலில் மதிய உணவு திட்டம் கொண்டுவரவில்லை என டேபிளை தூக்கி வீசி பேசி வருகிறேன். ஒரு முறை ஆசிரியர்களுக்கான கூட்டம் ஒன்றில் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி பேசிய அதிகாரி மதிய உணவுதிட்டத்தை பற்றி காமராசரை புகழ்ந்துபேச ஒரு ஆசிரியர் நம் தலைவர் மதிய உணவு திட்டத்தை காப்பியடித்ததாக கிண்டலடிக்க ஆவேசத்துடன் எழுந்த நான் நீதிக்கட்சி திட்டம் பற்றியும் அதன்பின் அரைவயிறு சோறு போட்டவரை பற்றியும் வயிறார உணவளித்த புரட்சித்தலைவரின் திட்டத்தைப் பற்றியும் ராமாவரம் தோட்டத்து அன்னக்களஞ்சியம் பற்றியும் சிறுவயது முதலே பொன்மனச்செம்மல் ஈகை குணம் பற்றியும் தலைவர் வீட்டில் சாப்பிட்டு வளர்ந்து பின் அவரையே இகழ்ந்த துரோகிகள் பற்றியும் மலைக்கள்ளன் காவியத்தில் தலைவர் பாடிய தீர்க்க தரிசன பாடல்படி சொந்தமாக பள்ளிக்கூடம் நடத்தியது பற்றியும் உலக சுகாதார நிறுவனம் பாராட்டியதைப் பற்றியும் உச்ச நீதிமன்றம் மற்ற மாநிலங்களிலும் எம்ஜிஆரின் திட்டத்தை கடைபிடிக்க ஆலோசனை கூறியது பற்றியும்......(இருங்க மூச்சு வாங்குது தட்டச்சு செய்து விரல்கள் உணர்ச்சி வசத்தில் மரத்துப் போய்விட்டது).... மேற்கண்ட தகவலை பற்றிப் பேச பேச அன்று முழுவதும் அனைவரின் முகமும் இறுகிப் போயிருந்தது. அன்றைய பயிற்சியில் எனது பேச்சே வழக்கமாக நடைபெற இருந்த நிகழ்ச்சியை திசை திருப்பியது.தேனீர் இடைவேளை நேரத்தில் உணவு இடைவேளை நேரத்தில் 'எம்ஜிஆரை குறைகூறிவிட்டு சாமுவேலிடம் யாரும் தப்பிக்க முடியாது' என அவ்வப்போது சில ஆசிரியர்கள் பெருமையாகவும் பேசினர். அடுத்தடுத்த நாட்களில் குறிப்பிட்ட ஒரு ஆசிரியர் ' உங்க தலைவர் அணை கட்டினாரா?' என வம்பிலுக்க ' அணை கட்ட எங்கே இடம் இருந்தது?' ' அணை கட்ட வேண்டிய அவசியம் ஏன்?' ' எத்தனை அணை இருந்தென்ன, தாகத்திற்கு தண்ணீரையே வேறு மாநிலத்திலிருந்து வாய்க்கால் வெட்டி கொண்டு வந்தவர் எம்ஜிஆர்' 'அதிகமாக தடுப்பணைகள், பள்ளி கட்டிடங்கள், தொழில்நுட்ப மற்றும் பல்கலைகழகங்கள் எம்ஜிஆரால்தான் வந்தது' என பட்டியலிட குற்றம் சாட்டியவர் மூச்சுவிட திணறிய வரலாறும் உண்டு.......Saml...

  10. #1029
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ரசிகர்கள் -பலவிதம்
    ****************************************** *

    திரைப்படம் என்பது ஒரு கூட்டு கலவை . அனைவரின் திறமைகள் வெளிப்படும்போது அந்த படம வெற்றி அடைகிறது .திறமைசாலிகள் வெற்றி பெறுகிறார்கள் . அந்த அடிப்படையில் மிகப்பெரிய
    வெற்றி காண்பவர்கள் நடிகர்களே .

    வெற்றி பெற்ற நடிகருக்கு கிடைக்கும் மிகப்பெரிய பரிசு - ரசிகர்கள்

    அந்த ரசிகர்கள் பல விதம்

    1. படம் திரைக்கு வந்து வெற்றி பெறும்போது நடிகரின் ரசிகராக இருப்பது .

    2. நடிகரின் எல்லா படங்களுக்கும் ரசிகனாக தொடர்ந்து நீடிப்பது

    3. குறிப்பிட்ட படங்களுக்கு மட்டும் ரசிகனாக இருப்பது .

    4. கண்மூடி ரசிகனாக - வெறித்தனமான ரசிகராக இருப்பது

    5. நடிகரின் மறைவிற்கு பின் அவரையே மறந்து போவது

    6. அனுதாபியாக இருப்பது .

    7.நடிகரின் வெற்றி - தோல்விகளை தன்னுடயதாகவே கருதுவது

    8. நடிகரின் தோல்வி என்றால் ஒளிந்து கொள்வது

    9. அறிந்தும் அறியாமலும் - தெரிந்தும் தெரியாமலும் - புரிந்தும் புரியாமலும் மற்றவர்கள் கூறும்
    தகவலை வைத்து விருப்புவெறுப்புடன் ஏட்டிக்கு போட்டியாக தப்பும் தவறுமாய் கூறிக்கொண்டு
    பரிதாபமாக உலா வரும் ரசிகர்கள் .

    10.தன்னுடைய அபிமான நடிகரின் செயல்களுக்கு உயிர் கொடுத்து அந்த நடிகரின் படங்களை

    எந்த பேதமின்றி அவருடைய எல்லா படங்களையும் வெற்றி படங்களாக அனுபவித்து

    எக்காலத்திலும் வெற்றி பெற செய்து அந்த நடிகரின் பெருமைக்கு பெருமை சேர்த்து வரும் -
    ரசிகர்கள் .

    இந்த பட்டியலில் 10 வது வகை ரசிகர்கள் - மக்கள் திலகத்தின் ரசிகர்கள் .

    உலக வரலாற்றில் எம்ஜிஆர் ரசிகர்கள் போல் வெற்றி கண்டவர்கள் யாருமில்லை .

    மக்கள் திலகம் அவர்கள் தொட்டதெல்லாம் வெற்றி .. வெற்றி .. வெற்றி

    அவருடைய ரசிகர்கள் என்றென்றும் அவருடைய சாதனைகளை எண்ணி , உலகிற்கு

    அடையாளம் காட்டி வருபவர்கள் .

    மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்கள் கொடுத்து வைத்தவர்கள் ......vnd ..........

  11. #1030
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எம்ஜிஆர் மிகவும் எனக்கு பிடித்த காரணங்கள்......1.வள்ளல்குணம்..2.வசீகரமுகம்..3.யாரை யும் மரியாதையுடன் பேசுவது...4.யாரைக்கண்டாலும் கையெடுத்து வணக்கம் தெரிவிப்பார்.5.தாய்க்குலத்தை போற்றுவது...6.மனைவியைத்தவிர அனைத்து பெண்களையும் அக்கா அண்ணி தங்கையாக பழகுவது வாடி போடி எனக்கூறாமல் நல்ல விழயங்களைச் சொல்வது..7.ஏழைகள் மீது அன்பு இரக்கம் 8.சாதி மதம் கூடாது 9 வாழ்நாளில் கெட்ட வார்த்தை பேசாதிருத்தல்..9.பீடி சிகரெட் வெற்றிலை புகையிலை குடி கஞ்சா கொலை கொள்ளை பாலியல் வன்முறை கடத்தல் ,ஜெயிலுக்கு குற்றம் செய்துவிப்டு போவது கூடாது வாழ்வில் என தானும் நல்வழியில் நடந்து பிறரையும் தன்வழியில் கொண்டு செல்தல் ..10.தமிழ் மொழி தமிழ்நாட்டுக்காக மக்கள் நலமே தன் நலம்.என நினைத்தல்.11.உடற்பயிற்சி தினம் செய்தல் .12.குழந்தைகளைக்கண்டால் தூக்கி கொஞ்சுதல் சிறியவர்களிடம் தினமும் நன்றாக படிக்கவேண்டும் சினிமா டிவி கூடவே கூடாது மாணவ மாணவிகள் என்பார் 13.வயதானவர்கள் அனைவரையும் அரவணைத்தல்..14.தொழில் மீது பக்தி.15.உழைப்பே உயர்வு தரும் என்பார்.......... Ad...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •