-
11th November 2020, 07:43 AM
#1271
Junior Member
Diamond Hubber
நவீன விஞ்ஞானம் இன்று உலகில் பல மாற்றங்களையும் முன்னேற்றங்களையும் ஏற்படுத்தி வருகின்றது. ஆனால் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே இந்திய சித்தர்கள், முனிவர்கள் பல அரிய உண்மைகளை அற்புதங்களை மக்களின் அறிவுக்கு விருந்தாக படைத்துள்ளார்கள். அவற்றில் ஒன்றுதான் ஹிட யோகசித்தி கைவரப்பெற்றவர். நீரிலே நடக்கலாம் , நெருப்பிலே படுக்கலாம் உடலை பஞ்சைப் போல் லேசாக்கி கொண்டு காற்றில் பறக்கலாம் என்ற கண்டுபிடிப்பாகும். பதஞ்சலி முனிவர் அருளிய யோக சித்தாந்தங்கள் என்ற நூலில் இவை குறிப்பிடப்பட்டுள்ளன இந்நூலை சுவாமி விவேகானந்தர் மொழிபெயர்த்திருக்கிறார்.
இவற்றை அடிப்படையாக வைத்து நவீன ஜேம்ஸ்பாண்ட் பாணியில் தயாரான படம் தான் தலைவன். புரட்சித் தலைவராக அரசியலில் அடையாளம் காணப்பட்ட எம்ஜிஆர் அதற்கு முன்னரே திரையுலகில் தலைவன் ஆகிவிட்டார்.அதற்கமைய இப்படத்திற்கு தலைவன் என்று பெயரிடப்பட்டது. சில ஆண்டுகள் தயாரிப்பில் இழுபடட இப்படம் 1970 ஆண்டுதான் திரைக்கு வந்தது.
ஜமீன்தாரை சுட்டுக் கொன்றுவிடும் சங்கிலி அப்பழியை ஜமீன்தாரிணி மீது போட்டு விடுகிறான். ஜமீன்தாரணியோ தலைமறைவாகிவிட்ட அவளின் குழந்தை சித்த மருத்துவரிடம் வளர்ந்து துப்பறியும் நிபுணராக ஆகிறது. சங்கிலியை கண்டுபிடிப்பதுதான் அவனின் கடமையாகிறது, வழக்கம்போல் ஒரு பெண்ணின் காதலும் குறுக்கிடுகிறது. இப்படி அமைக்கப்பட்ட கதையில் சித்த வைத்தியத்தின் மகிமை அட யோக சித்தியின் மகான்மியம் காட்டு பெண்ணின் களங்கம் இல்லாத காதல், துப்புரவு பணியாளர்களின் பெருமை, என்று பல விஷயங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. எல்லாவற்றையும் சமாளிக்கத்தான் தலைவன் எம்ஜிஆர் இருக்கிறாரே.
எம்ஜிஆருக்கு ஜோடியாக இதில் நடித்தவர் வாணிஸ்ரீ , சங்கிலியாக நம்பியார் நடிக்க, துப்புரவு பணியாளராக நாகேஷ் நடித்தார். அவருக்கு ஜோடி மனோரமா இவர்கள் இருவரும் ஜோடியாக நடித்த கடைசி படம் இதுவாக இருக்கலாம். இவர்களுடன் அசோகன், ஜோதிலட்சுமி, ஜெயபாரதி, ஓ ஏ கே தேவர் ஆகியோரும் நடித்தனர் படத்தின் கதையை அப்துல் முத்தலிப் எழுத, ஆர் கே சண்முகம் வசனங்களை எழுதியிருந்தார். வாலியின் பாடல்களுக்கு இசையமைத்தவர் எஸ் சுப்பையா நாயுடு, நீராழி மண்டபத்தில் பாடலை எஸ் பி பாலசுப்ரமணியம் சுசிலா உடன் இணைந்து பாடினார் . எம்ஜிஆருக்கு இவர் பாடிய இரண்டாவது பாடல் இது வாகும். அறிவுக்கு வேலை கொடு பகுத்தறிவுக்கு வேலை கொடு, ஓடையிலே ஒரு தாமரை பூ , ஆகிய பாடல்களும் இதமாக இருந்தன.
பி தோமஸ் படத்தை தயாரித்து இயக்கி இருந்தார், அவருடன் இணைந்து படத்தை இயக்கியவர் கே சிங்கமுத்து, படத்தின் டைட்டிலில் புதுமையாக மனித எலும்புக் கூடுகளில் இருந்து எழுத்துக்கள் வருவதுபோல அமைக்கப்பட்டிருந்தன.
கலர் படங்களில் எம் ஜி ஆர் தொடர்ந்து நடிக்க தொடங்கியபின் மீதமிருந்த 3 கருப்பு வெள்ளை படங்களில் ஒன்றான தலைவன் வசூல் ரீதியாக சுமாரான வெற்றியையே பெற்றது.......sbb...
-
11th November 2020 07:43 AM
# ADS
Circuit advertisement
-
11th November 2020, 02:05 PM
#1272
Junior Member
Diamond Hubber
கைபிள்ளைங்க "சிவந்த மண்" சென்னையில் "உரிமைக்குரல்" வசூலை முந்தி விட்டதாம். அப்பப்பா!
என்ன சந்தோஷம். இது நாள் வரையில் சாந்தி தியேட்டரை காரணம் காட்டியே ஏமாற்றி வந்தவர்கள் இப்போது "சிவந்த மண்ணு"க்கு வந்திருக்கிறார்கள்.
சாந்தி தியேட்டர் ஹவுஸ்புல் வசூல் மற்ற திரையரங்கை விட அதிகம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான்.
இருப்பினும் சாந்தியை வைத்தே வசூலில் சாதனை என்பார்கள். அதே போல் "சிவந்தமண்" திரையிட்ட குளோப், அகஸ்தியா, மேகலா, நூர்ஜகான் திரையரங்குகள் "உரிமைக்குரல்" திரையிட்ட அரங்குகளை விட மிகப்பெரியது. அதனால் வசூல் சற்று அதிகம் வந்ததில் வியப்பில்லை. அப்படி கம்பேர் செய்பவர்கள் தமிழகம் முழுவதும் வசூலை கம்பேர் செய்ய வேண்டும். மற்ற இடங்களிலெல்லாம் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம். அது ஏன்? புரியவில்லையா கைபிள்ளைகளுக்கு?. "சிவந்தமண்தா"ன் ஸ்ரீதரையே சீரழித்த மண்ணாயிற்றே.
அதேபோல் "உரிமைக்குரல்" வசூலை தருகிறேன் வேறு எங்காவது ஒரு திரையரங்கில் "சிவந்தமண்" முந்தியிருந்தால் பதிவிடவும். தியேட்டர் வசூல் அதிகமிருந்தால் முதல் வாரத்தில் தெரிந்து விடும். இது கூட தெரியாதா கைபிள்ளைகளுக்கு. இப்போது "சிவந்தமண்" ஒரு வார வசூலை வெளியிட்டிருக்கிறார்கள். இதைவிட வசூல் அதிகம் வந்தால் "சிவந்தமண்" படுதோல்விப்படம் என்பதை ஒத்துக்கொள்வீர்களா?
நான் தலைவரின் 69க்குப்பின் வந்த புதிய படங்களை பற்றி சொல்லவில்லை. 1965 ல் சபையரில். வெளிவந்த
"கன்னித்தாய்" முதல் வார வசூலை எடுத்துக் கொள்வோம். "சிவந்தமண்ணி"ன் 4 திரையரங்குகளில் ஏதாவது ஒரு அரங்கிலாவது "கன்னித்தாய்" வசூலை முந்த முடிந்ததா?
அப்படியானால் "கன்னித்தாய்" காலடியில் "சிவந்த மண்" என்று சொல்லலாமா? சொல்லுங்க கைபிள்ளைகளே.
தமிழ்நாடு முழுவதும் சிவாஜி படங்களில் "தங்கப்பதக்கம்தா"ன் அதிகம் வசூலான படம் என்று கைபுள்ளைங்க சொல்கிறார்கள். ஆனால் தூத்துக்குடியில் மட்டும் "தங்கப்பதக்க"த்தை காட்டிலும் "சிவந்தமண்தா"ன் அதிகம் வசூல் பெற்ற படம் என்றால் சிரிப்பு வருகிறதா?. அந்த அளவுக்கு "சிவந்த மண்"ணை செத்துப் போன பிணத்தை வெறித்தனமா தூக்கிக் கொண்டு 101 நாட்கள் ஓடியிருக்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
தூத்துக்குடியில் "தங்கப்பதக்கம்" பெற்ற மொத்த வசூலே ரு105000 தான். ஆனால் "சிவந்தமண்" வசூலோ ரூ 107000 . இது என்ன கொடுமை sp சவுத்ரி. சினிமாவில்தான் யோக்கியமான போலீஸ் அதிகாரி.
ஆனால் வெளியே சகல மோசடிகளையும் கைபிள்ளைகள் அரங்கேற்றும் போது பார்த்துக் கொண்டு அதற்கு உடந்தையாகவும் இருக்கும் போலி சவுத்ரி.
சவுத்ரி மாமா!
ஊருக்கு ஒரு பிரச்னைனா போலீஸ் கிட்ட சொல்வாங்க! போலீஸூக்கு ஒரு பிரச்னைனா sp சவுத்ரி கிட்ட சொல்லுவாங்க. சவுத்ரியோட கைபிள்ளைகளே மோசடி செய்தால் யாருகிட்ட போய் முறையிடுவாங்க.
சொல்லுங்க சவுத்ரி மாமா! சொல்லுங்க!
அது மட்டுமா? "சிவந்த மண்" 101 நாட்கள் ஓட்டினார்களாம்.
ஆனால் "உரிமைக்குரலோ" 68 நாட்கள் தான் ஓடியதாம். இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம் "சிவந்தமண்ணை" என்னா ஓட்டு ஓட்டினார்கள் என்று. "சிவந்த மண்" 50 நாட்கள் வசூல் ரூ 91000. "உரிமைக்குரல்" 50 நாட்கள் வசூல் ரு 145000/ இதில் எது அதிகம். நம்ம செந்தில் சொன்ன ஜோக் ஞாபகத்துக்கு வருதா? நீங்க 10 ம் கிளாஸ் பெயில் நான் 8ம் கிளாஸ் பாஸ். பாஸ் பெரிசா?பெயில் பெரிசா? சொல்லுங்கண்ணே.
"சிவந்த மண்" பிற்பகுதி 51 நாட்கள் வசூல் வெறும் ரூ 15000 தான். ஆனால் "உரிமைக்குரல்" பிற்பகுதி 18 நாட்களில் பெற்ற வசூல் ரூ23000.
ஆனாலும் படத்தை 100 நாட்கள் ஓட்டவில்லை. "சிவந்த மண்" பிற்பகுதி 51 நாட்களில்
1 நாள் சராசரி வசூல் சுமார் ரூ300 தான். ஆனால் "உரிமைக்குரல்" பிற்பகுதி 18 நாளில் 1 நாள் சராசரி வசூல் சுமார் ரூ1300 .
சொல்லுங்க, கைபிள்ளைகளே 300 பெரிசா?1300 பெரிசா? இதில் வெற்றி வெளியீடு என்ற கேள்விக்குறி வேறு.
மேலும் கோவை ராயலில் கோடிக்கணக்கில் செலவு செய்து எடுக்கப்பட்ட "சிவந்த மண்" 50 நாட்களில் பெற்ற வசூல் ரூ255000 .இன்னொரு பதிவில் 259000 என்று கொடுத்திருக்கிறீர்கள். பொய் சொன்னாலும் ஒரே மாதிரி சொல்லுங்கள் கைபிள்ளைகளே.
பல கோடிக்கணக்கான ரசிகர்களை பெற்ற புரட்சி தலைவரின் "உரிமைக்குரல்" கோவை கீதாலயாவில் 50 நாட்களில் பெற்ற வசூல் ரூ 426000/ போதுமா ஆதாரம்?.
மதுரையை எடுத்துக் கொண்டால் "சிவந்தமண்" சென்ட்ரலில் 50 நாட்களில் பெற்ற வசூல் ரூ 227530.50. ஆனால் "உரிமைக்குரல்" சினிப்பிரியாவில் 50 நாட்களில் பெற்ற வசூல் ரூ 350728.40. மதுரையில் ஓடிமுடிய "சிவந்தமண்" மொத்தமே ரு337000 தான். "உரிமைக்குரலோ" ஓடி முடிய ரு701000/ . என்ன கண்கட்டுதா? இல்லை தலை சுற்றுதா? ஸ்ரீதர் ஏன் "சிவந்தமண்ணா"ல் சீரழிந்தார் என்று தெரிந்திருக்குமே. பிணந்தூக்கி பிழைத்தவன் வேறு தொழிலுக்கு போக மாட்டான் என்பது திண்ணம்.
ஊழலின் ஊற்றுக்கண்ணான உங்களை நாடாள விட்டால் தீயசக்திக்கு சற்றும் குறைந்தவனில்லை என்பதை நிரூபித்திருப்பீர்கள் என்பதால் அறிவார்ந்த தமிழக மக்கள் உங்களை முளையிலே கிள்ளி எறிந்து தமிழகத்தை காப்பாற்றினார்கள் என்றே சொல்லலாம்.........ksr.........
-
11th November 2020, 07:08 PM
#1273
Junior Member
Platinum Hubber
பாட்டாலே புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர்.- வின் டிவியில் சகாப்தம் நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*09/11/20 அன்று அளித்த*தகவல்கள்*
--------------------------------------------------------------------------------------------------------------------------
நாடோடி மன்னன்,மன்னாதி மன்னன், எங்க வீட்டு பிள்ளை, உங்க வீட்டு பிள்ளை யாக இன்றைக்கும் நமது இல்லங்களில் எல்லாம் தெய்வமாக திகழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் வாழ்க்கை வரலாறை*தொடர்ந்து ஆராய்ந்து கொண்டிருக்கிறோம் .* அவர் காலத்தை வென்று காவியமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதற்கு இன்றைக்கும் சாட்சியாக எத்தனை* ஆயிரம் பேர், லட்சம் பேர், கோடி க்கணக்கானவர்கள்* வின் டிவி*தொலைபேசியை தேடி தேடி* பொழிச்சலூர் மகாலட்சுமி , ஆண்டிபட்டி வசந்தி, தேனீ பிரேமலதா, திருச்சி*அப்துல் மஜீத், மும்பை*தாராவி*ராமச்சந்திரன் ,போன்றவர்கள் தொடர்பில்*இருந்து பேராதரவு தந்து கொண்டிருக்கிறார்கள் .*சென்னையில் உள்ள* லோகநாதன் என்பவர் தினசரி நமக்கு*தனியார் தொலைக்காட்சிகளில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் படங்கள்* ஒளிபரப்பாகும் விவரங்கள், தமிழகம் முழுவதும் திரை அரங்குகளில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். படங்கள்* எந்தெந்த நகரங்களில் வெளியாகின்றன ,மற்றும் பத்திரிகை செய்திகள் பலவற்றையும் நமக்கு*ஆர்வமாக*பகிர்ந்து கொண்டு தகவல்கள் தெரிவித்து கொண்டிருக்கிறார் .* தங்களுடைய வாழ்க்கையை புடம் போட்ட தங்கமாக*மாற்றி கொள்வதற்காக, எம்.ஜி.ஆர். அவர்களின்*செய்திகள், தகவல்களை*மக்களோடு*மக்களாக*மக்களுக்கு எடுத்து சொல்லி கொண்டிருக்கிறார்கள் .அப்படி ஒரு மகோன்னதமான வாழ்க்கையை*அவர் வாழ்ந்து காட்டினார்**என்பதற்காகத்தான் இந்த சகாப்தம் நிகழ்ச்சி இவ்வளவு பெரிய சரித்திரம் படைத்திருக்கிறது* *இந்த தொடர் 150 நாட்களை கடந்து இப்படி ஒரு பெரிய வரவேற்பைமக்கள் மத்தியில்* பெற்றிருக்கிறது என்றால் அந்த மாமனிதரின் ஆன்மா நமக்கு அளித்த ஆசிர்வாதம்தான் .**
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் எப்போதும்*வினோதமான பின்னணி*உடைய திரைக்கதை அமைப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்*.* அதனால்தான் அவர் அந்த காலத்திலேயே அரேபிய இரவுகள்*கதைகளான அலிபாபாவும் 40 திருடர்களும், குலேபகாவலி, பாக்தாத் திருடன் போன்ற திரைப்படங்களில் மிகுந்த ஆர்வத்துடன் நடித்தார் .* அவர் அந்த காலத்தில் நிறைய ஆங்கில படங்களை*பார்த்ததுண்டு*.* பென்* ஹர்*போன்ற பிரம்மாண்ட*படங்களை பார்த்து*விட்டு, அவரது சொந்த படங்களில் அந்த பிரம்மாண்டங்களை புகுத்தியதுண்டு .**அடிமைப்பெண் படத்தில்*வரும் ஆயிரம் நிலவே வா பாடலை* நடிகர் சிவாஜி கணேசன் அவர்கள் மிகவும் ரசித்து, தான் விரும்பிய*பாடலாக*அடிக்கடி* கேட்டதாக* ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார் .* அது மட்டுமல்ல . அண்ணன் எம்.ஜி.ஆர். அவர்கள் மிகவும் ரிஸ்க் எடுத்து இந்த படத்தை*மிக சிறப்பாக**எடுத்துள்ளார் . எந்த ஒரு தயாரிப்பாளருக்கும், நடிகருக்கும் இப்படி ஒரு ரிஸ்க்*எடுக்கும்*துணிச்சல், திறமை போன்றவை*வருமா என்பது*சந்தேகம்*என்று கூறி இருக்கிறார். அடிமைப்பெண் படம் மும்பையில்*பிலிம்*பேர் பரிசு பெற்ற படம் .* 1969ம் ஆண்டின்*ஈடு இணையற்ற வசூல் சாதனை புரிந்து வெள்ளிவிழா கண்ட*படம் .* தமிழக அரசால்*சிறந்த படம் என*தேர்வான படம்*இந்த படத்தில் எம்.ஜி.ஆர். அவர்களின்*வித்தியாசமான தோற்றங்கள், உடைகள்,*சிங்கத்துடன் போடும் சண்டை,* எழில்மிகு*ஒகேனக்கல் அருவி காட்சிகள்,*ஜெய்ப்பூர் அரண்மனை காட்சிகள், ஜோத்பூர் கோட்டை கள், ராஜஸ்தானில் தார் பாலைவன காட்சிகள் , ஜெயலலிதாவிற்கு இரட்டை வேடம், திரை இசை திலகம் கே.வி. மகாதேவனின்* இனிமையான பாடல்கள், பின்னணி இசை , ஜெயலலிதாராணியாக*அறிமுகம் செய்யும் காட்சி, அரங்க அமைப்புகள், திரைக்கதை அமைப்பு, கம்பீரமான சண்டை*காட்சிகள் , தொழில்நுட்பம் எல்லாவற்றிற்கும் மேலாக அவருக்கு ஒரு விஷன்*,அதாவது சொந்த படத்தை, பிரமாண்டமாக,*இதைவிட* வேறு**யாரும்*தயாரித்து வெளியிட முடியாத வகையில்*இருக்க நினைப்பது*என்று சொல்லிக்கொண்டே போகலாம் .**
திரு.கா. லியாகத் அலிகான் பேட்டி ;* *ஒருமுறை அமைச்சர் காளிமுத்து அவர்கள் அனுப்பிய ஒரு கோப்பிலே*புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். குறிப்பிட்டு எழுதுகிறார் .அக்ரோ*வாரியத்தின் தலைவராக*உள்ள திரு. லியாகத் அலிகான்*குறிப்பிட்டு இருக்கக்கூடிய ஜப்பான், பிலிப்பைன்ஸ், ஹாங்காங், சிங்கப்பூர் ,,மலேசியா ,தாய்லாந்து*போன்ற நாடுகளில் மட்டுமல்ல, உலகத்தில் உள்ள இன்னும் பிற நாடுகளில்* எந்த நாட்டிற்கு அவர் செல்ல*விரும்புகிறாரோ, அந்த நாட்டிற்கு சென்று* அந்த நாட்டின்* முக்கிய*வேளாண்*பணிகளை அறிந்து வர நான் அனுமதிக்கறேன் என்று அந்த கோப்பிலே*எழுதிய போது, அரசு அதிகாரிகள் ,*ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் எல்லாம் மிரண்டு போய் விட்டார்கள் என்று சொல்லலாம் .* உங்கள் மீது இந்த அளவிற்கு*அன்பு வைத்து, உலகத்தின் எந்த நாட்டிற்கு வேண்டுமானாலும் லியாகத் அலிகான் சென்று வர நான் அனுமதிக்கிறேன் என்று கோப்பில்*எழுதி இருக்கிறார் எம்.ஜி.ஆர்.அவர்கள் .* வேறு ஏதாவது நாட்டிற்கு*செல்லுகிறீர்களா என்று கேட்ட நேரத்தில் இல்லை, குறிப்பிட்ட இந்த நாடுகளுக்கு மட்டும் சென்றுவிட்டு வருகிறேன் என்று கூறி சென்றுவிட்டு வந்த நினைவுகள் எல்லாம் என் நெஞ்சை*துளைத்துக் கொண்டிருக்கின்றன . அடுத்த முறையாக* எம்.ஜி.ஆர். அவர்கள் குறிப்பிட்ட அமேரிக்கா*, ரஷ்யா , இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, போன்ற நாடுகளுக்கு நான் சென்றுவர, ஓராண்டு இடைவெளியில்*தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் எனக்கு*நல்லதொரு வாய்ப்பை*வழங்கி அதே போன்று இன்னொரு குழுவின் மூலம் சென்று வரும் வாய்ப்பை பெற்றேன் .* இப்படிப்பட்ட சாமான்ய*மனிதன் லியாகத்*அலிகான், புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.அவர்களின் இயக்கத்திற்கு உழைத்தேன்* ஆனால் உரிய அளவிற்கு*உழைத்தேனா என்றால் எனக்கு திருப்தி இல்லை . தலைவருக்காக இன்னும் உழைத்திருக்கலாம் ,உழைத்திருக்க வேண்டும் என்கிற மன உளைச்சல் என்றுமே எனக்கு இருக்கிறது. காரணம் என்னை போன்று பன்மடங்கு உழைத்தவர்கள் எங்களை போன்று**பதவிகள் எதுவம்*பெறாமல்*சாதாரண தொண்டர்களாகவே இருந்து மறைந்தும்*போய்விட்டார்கள்* பலபேர் . அப்படி இருக்கின்ற சிலர்* மிகவும் கடினமான, கஷ்டமான சூழ்நிலையில் இருக்கின்றபோது அவர்களை எல்லாம்* பார்த்து* நான்**குறிப்பிட்டு* கொள்வதெல்லாம் என்னிடத்திலே வின் டிவி*மூலம் தொலைக்காட்சியில் நான் பேசும்போது*கணிசமான நபர்களின் தொலைபேசி அழைப்புகள் எனக்கு*வந்துவிடும் . நான் அதை உரிய நேரத்தில் பேசுவதை பார்த்தால் , பல பேர் மிக அருமையாக*பேசினீர்கள் என்று* பாராட்டியதோடு, தலைவர் எம்.ஜி.ஆருடன் உள்ள தங்களின் தொடர்புகளை பற்றி பேசும்போது எங்களுக்கு மீண்டும் புத்துணர்ச்சி கிடைத்தது*போலுள்ளது என்கிறபோது, நான் மனதார பூரிப்பு அடைவதோடு* என் கண்கள் எல்லாம் குளமாகி விடுகின்றன .* தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள்மீது*இவ்வளவு, அன்பு ,பாசம் வைத்திருக்கும் நீங்கள் என்ன தொழில், வேலை பார்க்கிறீர்கள் என்று கேட்டால் அவர்கள் எல்லாம் சிரமத்தில் உள்ளது போல் இருக்கிறார்கள். எனக்கு அவர்கள் நிலையறிந்து வேதனைப்பட்டு*சொல்வேன், ஜெயலலிதா*அவர்களுக்கு பிறகு, எடப்பாடி*பழனிசாமி*அவர்கள், ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் அ.தி.மு.க. தலைமை நிலையத்திற்கு அடிக்கொரு தடவை வருகிறார்கள் .* நீங்கள் உங்கள் குறைகளை,கஷ்டங்களை விவரித்து*அவர்களுக்கு கிடைக்கும் வகையில்*தலைமை நிலையத்திற்கு எழுதுங்கள் .நிச்சயம் உங்களுக்கு ஆதரவான*பதில் கிடைக்கும் என்று நம்புகிறேன் .*இவ்வாறு திரு.லியாகத் அலிகான் பேட்டி அளித்தார் .
நிகழ்ச்சியில் ஒலித்த*பாடல்கள் /காட்சிகள் விவரம்*
---------------------------------------------------------------------------------
1.போயும் போயும்*மனிதனுக்கு இந்த - தாய் சொல்லை தட்டாதே*
2.ஒன்றே சொல்வான் , நன்றே செய்வான்*-சிரித்து வாழ வேண்டும்*
3.ஆயிரம் நிலவே வா* - அடிமைப்பெண்*
4.திரு.லியாகத் அலிகான் பேட்டி .
-
11th November 2020, 07:18 PM
#1274
Junior Member
Platinum Hubber
துக்ளக்*வார இதழ் - 11/11/20
-------------------------------------------
கே.ஆர்.ஜி.ஸ்ரீராமன், பெங்களூரு*
கேள்வி*:* எம்.ஜி.ஆர். படத்தை*அ. தி.மு.க. வினரை தவிர மற்றவர்கள் பயன்படுத்த கூடாது*என்று அ. தி.மு.க. வினர்*கூறுவது பற்றி ?
பதில் : கம்யூனிஸ்ட்களின் நாயகனான* காரல்*மார்க்சின்*படம் இப்போது பா.ம.க.வுக்கும் , வி.சி.க.வுக்கும் சொந்தம்*.* தி. மு.க. கூட சமயத்தில் அதற்கு*சொந்தம் கொண்டாடுகிறது .* டாக்டர் அம்பேத்கார் துவக்கிய குடியரசு கட்சியின்* அவரது பிம்பம், இன்று திருமாவளவன்* கட்சியின்*பிராண்ட்*அம்பாசிடர்*காரல்*மார்க்ஸ், அம்பேத்கார்* படங்கள் திராவிட*, ஜாதி கட்சிகளின் மேடைகளை*அலங்கரிக்கின்றன .
* எம்.ஜி.ஆர். படத்திற்கு*வருவோம் . கருணாநிதி காலத்திலேயே எம்.ஜி.ஆர். படத்தை*போட்டது*தி.மு.க.* *அது தி.மு.க.விற்கு தலைகுனிவே*தவிர, எம்.ஜி.ஆருக்கும் , அ . தி.மு.க.விற்கும் பெருமையே .* டீ கடை துவங்கி, மளிகை கடைவரையில்*எங்கும்,எதிலும்*பிள்ளையார் படம் போல மிக பிரபலமான எம்.ஜி.ஆர்.. படத்தை*யார் வேண்டுமானாலும் போடலாம் .* எம்.ஜி.ஆர். படத்தை போட்டு பொன்மன செம்மலின் அம்சமாக*மோடியை*கண்டோமே, என்று பா.ஜ.க.பாடுவது ,அவர்களுக்கு பொருந்துகிறதோ இல்லையோ , எம்.ஜி.ஆருக்கும்*அ .தி.மு.க.விற்கும்*பெருமையே.**
-
12th November 2020, 07:45 PM
#1275
Junior Member
Diamond Hubber
மறு வெளியீடு சக்கரவர்த்தி எங்கள் தங்கம் எம்ஜிஆர்.. 10-11-20 முதல் தஞ்சாவூர் ஜி.வி, திருவானக்காவல் வெங்கடேசுவரா, கரூர் அமுதா, சீர்காழி ஓ எச் எம் தெயேட்டர், திருவாரூர் தைலம்மை ஆகிய தியேட்டர்களில் புரட்சித் தலைவர் டிஜிட்டலில் மினுங்கும் ஆயிரத்தில் ஒருவர். திவ்யா பிலிம்ஸ் சொக்கலிங்கத்துக்கு ஆயிரத்தில் ஒருவர் இன்னும் அள்ளிக் கொடுக்கின்றார்.வேறு எந்த நடிகர் பழைய படமும் இந்த மாதிரி மறுவெளியீடு சாதனை செய்யமுடியாது....மறு வெளியீடு சக்கரவர்த்தி எங்கள் தங்கம் எம்ஜிஆர்.. திருச்சி பேலசில்.. 10-11-2020 முதல் உரிமைக்குரல்.. வேறு எந்த நடிகர் பழைய படமும் இந்த மாதிரி மறுவெளியீடு சாதனை செய்யமுடியாது.......மறு வெளியீடு சக்கரவர்த்தி எங்கள் தங்கம் எம்ஜிஆர்.. மதுரை செண்ட்ரல் 14 -11-2020 தீபாவளி முதல் தர்மம் தலைகாக்கும்..வேறு எந்த நடிகர் பழைய படமும் இந்த மாதிரி மறுவெளியீடு சாதனை செய்யமுடியாது........மறு வெளியீடு சக்கரவர்த்தி எங்கள் தங்கம் எம்ஜிஆர்.. திருச்சி முருகன் தியேட்டர் 14 -11-2020 தீபாவாளி முதல் ரிக்*ஷாக்காரன்..வேறு எந்த நடிகர் பழைய படமும் இந்த மாதிரி மறுவெளியீடு சாதனை செய்யமுடியாது......rrn.........
-
12th November 2020, 07:46 PM
#1276
Junior Member
Diamond Hubber
#இனிய_நினைவுகளில்...
#"உலகம்_சுற்றும்_வாலிபன்"...
மக்கள் திலகம் (இரு வேடங்களில்),அசோகன், நம்பியார்(சிறப்பு தோற்றம்), மனோகர், நாகேஷ், தேங்காய் சீனிவாசன், மஞ்சுளா, லதா, சந்திரகலா, மீட்டாருங்ராட்....
இயக்கம்: மக்கள் திலகம்
வெளியான வருடம்:1973
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்.
இடியின் முழுச்சக்தியையும் ஒரு மாத்திரை வடிவத்தில் அடக்கி சாதனை புரிகிறார் விஞ்ஞானி முருகன் (மக்கள் திலகம்) அதை ஹாங்காக் விஞ்ஞானிகள் மாநாட்டில் சோதித்தும் காட்டுகிறார். அதனை உலக மார்க்கெட்டில் விட்டால் கோடிக்கணககில் பணம் பார்க்கலாம் என்றும், தானே அந்த விஞ்ஞான பார்முலாவை பல மில்லியன் டாலர் கொடுத்து வாங்க தயாராக இருப்பதாக பைரவன் (அசோகன்) கூறுகிறார்.
விஞ்ஞானிமுருகன், இந்த அணு ஆயுதத்தை போன்ற அழிவு சக்தியை வெளிவிட்டால் அது மூன்றாம் உலகப்போருக்கு வழி வகுத்து, அழிவுக்கு காரணமாகும் என்று கூறி அந்த ஃபார்முலாவை அங்கேயே எரித்து அழித்து விடுகிறார்.
பின்னர் தன் காதலி விமலா (மஞ்சுளா)வுடன் சுற்றுப்பயணம் செல்லும்போது, உண்மையில் தான் அந்த ஃபார்முலாவை அழிக்கவில்லை என்றும், அதனை நான்கு பகுதிகளாக பிரித்து உலகின் நான்கு மூலையில் உள்ள நல்லவர்களிடம் ஒப்படைத்திருப்பதாகவும், நேரம் வரும் போது பயன்படுத்திக்கொள்வதாகவும் தெரிவிக்கிறார்.
இதனை ஒட்டுக்கேட்ட பைரவன் ஒரு புதுவித துப்பாக்கியால் முருகனை சுட்டு மனச்சிதைவு ஏற்படுத்தி அவரையும், விமலாவையும் ஃபார்முலா இருக்கும் இடத்தை தெரிந்து கொள்ள பணயக்கைதி போல் வைத்திருக்கிறார்.
இப்போது அண்ணன் முருகனை தேடி வருகிறார் சி.ஐடி.ராஜீ (மக்கள் திலகம்) அவர் லில்லி(லதா) ரத்னா(சந்திரகலா) மார்க்கண்டேயன் (நாகேஷ்) உதவியுடன் இந்த ஃபார்முலாவையும் கண்டுபிடித்து அண்ணன் முருகனையும் மீட்கிறார்.
மக்கள் திலகத்தின் வழக்கமான படங்களிலிீருந்து இது மிகவும் மாறுபட்டது...தாய்ப்பாசம், ஏழைகளின் பங்காளன், தொழிலாளர்களின் போராளி என்ற வழக்கமான தனது களத்திலிருந்து மாறி..ஒரு விஞ்ஞான காரணியை கையிலெடுத்து, ஒரு Treasure hunt போல தெரிக்க விட்டிருக்கிறார் மக்கள் திலகம்.
அந்த கப் அண்ட் சாசர் பாட்டு; எக்ஸ் போ 70யில் லட்சக்கணக்கானவர் முன்னிலையில்ஆடல் பாடல் ; அவள் ஒரு நவரச நாடகம் பாடலில் வித்தியாசமாக தண்ணீருக்கடியில் படமாக்கியிருக்கும் விதம்,; மீட்டா ருங்ராட் என்ற தாய்லாந்து பெண்ணை "பச்சைக்கிளி " பாடலுக்கு வாயசைத்து நடனமாட விட்டிருக்கும் விதம்; குறுகலான நீரோடையில் போட் சேசிங்; டால்பின் ஷோ; இறுதியில் சுழன்றடிக்கும் காமிராவுடன் பொறிபறக்கும் அந்த ஸ்கேட்டிங் ஸ்டன்ட் ; என்ற இந்த விஷயமெல்லாம் 70 களிலே, தொழில் நுட்ப வசதி அறவே இல்லாத காலத்தில் மக்கள் திலகத்துக்கு மட்டும் எப்படி சாத்தியமானது என்பது அதிசயத்திலும் அதிசயம்.
இந்த படம் வெளியான போது ஏற்பட்ட அரசியல் சூழலை சமாளித்து போஸ்டரே ஒட்டாமல் படத்தை வெளியிட்டது; படத்தை ரஷ் போட்டு பார்த்தபோது பல இடங்களில் நிழல் படிந்து இருந்ததை கண்டு தளராமல் சத்யா ஸ்டூடியோவில் அச்சு அசலாக செட்டுபோட்டு, நிஜமா, நிழலா என தெரியாமல் படம் எடுத்த சாமர்த்தியம்; இவையெல்லாம் மக்கள் திலகத்தின் தன்னம்பிக்கைக்கும், பாதகத்தை சாதகமாக்க தன்னால் முடியும் என்பதற்கு சிறந்த உதாரணங்கள்.
மற்ற அத்தனை பேரும், நம்பியார் தவிர மக்கள் திலகத்தின் விஸ்வரூபத்தின் முன் காணாமல் போகிறார்கள்.
" பாட்சா" படத்தில் ரஜினியை பார்த்து , போலீஸ்காரரான அவர் தம்பி சொல்வார் " நாடி நரம்பெல்லாம் ரத்தவெறி உள்ளவனால்தான் இந்த அடி அடிக்கமுடியும்" என்பார். இந்த வரிகள் இந்த படத்தை பொருத்த வரை மக்கள் திலகத்துக்கு அப்படியே பொருந்தும்...வெறும் நடிப்போடு தன்னை நிறுத்திக்கொள்ளாமல், தாயாரிப்பு, இயக்கம், ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, கதை-திரைக்கதை என அத்தனை துறைகளிலும் ஈடுபடுத்திக்கொள்ள வேண்டுமானால் சினிமாவை அவர் நாடி நரம்பிலிருந்து எவ்வளவு நேசித்திருக்கவேண்டும்..???
இந்த படத்தின் பாடல்களை பொருத்த வரை இசை மெல்லிசை மன்னராக இருந்தாலும்...அத்தனை பாடல் ட்யூன்களையும் சிறப்பாக வரும் வரை விடாமல் தெரிவு செய்தவர் மக்கள் திலகம். மெல்லிசை மன்னர் இதை பற்றி பல பேட்டிகளில் சொல்லியிருக்கிறார்.
இந்த படம் உலகெங்கும் வசூல் மழை பொழிந்தது...ப்ளாக் பஸ்டர், சூப்பர் ஹிட் எல்லாம் இந்த படத்தை பொருத்தவரை மிக சாதாரண வார்த்தைகள். இந்த படம் நிகழ்த்திய வசூல் சாதனை 90 கள் வரை முறியடிக்கபடாமலே இருந்தது.
உ.சு.வா...என்றென்றும் வாலிபன்.....Sr.Bu...
-
12th November 2020, 07:48 PM
#1277
Junior Member
Diamond Hubber
குழுவினர் அனைவருக்கும் இனிய வணக்கங்கள்...
படத்தில் பதிவில் தன் குடும்பத்துடன் இருப்பவர் மறைந்த மலேசிய நாட்டின் புகழ் பெற்ற நடிகர் பி.ரெம்லி அவர்கள்....
என்ன அதற்கு என்று கேட்டால் அங்கேயே பதிவு ஆரம்பம்...அந்த நாட்டின் புகழ் பெற்ற நடிகர் ஆக விளங்கிய ரெம்லி அவர்கள் நம் இதயதெய்வத்தின் தீவிர ரசிகர்..
நம் தலைவரின் நடிப்பில் வெளிவந்த "அலிபாபாவும் நாற்பது திருடர்களும்" படத்தை அப்பிடியே உள்வாங்கி அந்த நாட்டு மொழியில் அப்போதே நடித்து அந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது...
ஒரு சாதாரண தலைவர் ரசிகர் போல அங்கே வெளியாகும் தலைவர் படங்களை முதல் காட்சி பார்த்து விட்டு தலைவரிடம் படத்தை பற்றி பகிர்ந்து கொள்பவர் இந்த ரெம்லி.....
தலைவர் பாரத் பட்டம் வென்ற படம் "ரிக்க்ஷாக்காரன்" படத்தை அப்பிடியே எடுத்து அந்த படம் வரலாறு காணாத வெற்றியை அந்த நாட்டில் பெற்றது.
ஒரு மாபெரும் நடிகருக்கு ஒரு மாபெரும் நடிகர் ரசிகர் ஆக இருந்த செய்தி புதுமையானதே...
பி.ரெம்லி அவர்கள் மறைந்த உடன் அந்த நாட்டு அரசு அவருக்கு மிக பெரிய நினைவு இல்லம் அமைத்தது..
திரு ரெம்லி அவர்களை தன் உ.சு.வா...படத்தில் நடிக்க தலைவர் ஒப்பந்தம் செய்த செய்தி அதிசயம் ஆனது...அவரும் மகிழ்வுடன் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு தலைவர் மலேசியா சென்று காட்சிகள் எடுக்க வேண்டிய இடங்கள் கூட முடிவாகி அப்போது இங்கே ஆட்சியில் இருந்த ஒரு சக்தி அந்த நாட்டு அரசாங்கத்தை தொடர்பு கொண்டு மிரட்ட அந்த தலைவரின் எண்ணம் கை விட பட்டது.
அந்த நடிகர் ரெம்லி அவர்கள் நலன் கருதி தலைவர் தன் முடிவை மாற்றிக்கொண்டார்.
படத்தின் காட்சி அமைப்பு சம்பந்தம் ஆக அந்த நாட்டில் தலைவர் அவருடன் மற்றும் உ.சு.வா...நடிகைகள் உடன் எடுத்து கொண்ட அபூர்வ படம் பதிவில் இணைக்க பட்டு உள்ளது...
மறைந்த ரெம்லி அவர்கள் நினைவில்லத்தில் தலைவருடன் அவர் எடுத்து கொண்ட புகைப்படம் வரவேற்பு அறையில் இன்றும் ஜொலிக்கிறது.
நினைவில்லம் வாசலில் ரெம்லி அவர்கள் பயன்படுத்திய காரும் அவர் தலைவர் படத்தை தழுவி எடுத்த படத்தில் இடம் பெற்ற ரிஃசாவும்
அங்கே இன்னும் இடம் பெற்று இருப்பது அதிசியமே....
புரட்சிநடிகர்..... தலைவர் புகழ் என்பது நேற்று பெய்த மழையில் இன்று பூத்த காளான்கள் போல அல்ல... அவை காவியம் ஆனவை...காலத்தை வென்றவை.
வாழ்க தலைவர் புகழ்.
நன்றி...தொடரும்..
உங்களில் குரல் ஆக உங்களில் ஒருவன் நெல்லை மணி.
சந்திப்போம் சாதிப்போம் அடுத்த பதிவில் நன்றி நன்றி.......
-
12th November 2020, 07:49 PM
#1278
Junior Member
Diamond Hubber
#மக்கள்_திலகத்தின்_வெற்றிப்படங்கள்...
#உழைக்கும்_கரங்கள்...!!!
கோவை செழியன் தயாரிப்பு- கே.சங்கரின் இயக்கம்-நாஞ்சில்.கி.மனோகரனின் வசனம்-மெல்லிசை மன்னரின் இசை ஆகியவற்றோடு 1976 ம் ஆண்டு வெளிவந்த மாபெரும் வெற்றிப்படம்.
மக்கள் திலகம் தனி இயக்கம் கண்டு, 1977 ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தில், ரங்கன் என்ற கதாபாத்திரத்தில் ஏழைப்பங்களனாய் வருகிறார்.அசத்துகிறார்.
ஊரை அடித்து ஊழல் செய்யும் சேர்மேன் நாகலிங்கத்தையும் (தங்கவேலு) அவரது கலப்பட தொழிலையும் மக்களிடம் அம்பலப்படுத்துகிறார்.
நாகலிங்கத்தின் விதவை தங்கை கெளரி ((குமாரி பத்மினி)) ஒரு போலிச்சாமியார் கபாலியிடம் ((தேங்காய் சீனிவாசன்))தன்னை இழக்கும் போது, அவனுக்கே அவளை மணமுடித்து தன் தாய் போல மதிக்கும் அன்னம்மாளின் ((பண்டரிபாய்))குடும்ப மானத்தை காக்கிறார்
தன்னை காதலிக்கும் கிராமத்து முத்தம்மா ((லதா)) விற்கு வாழ்வளிக்கிறார்.
பக்தி வேண்டியதுதான்..ஆனால் பக்தி என்ற போர்வையில் போலிச்சாமியார்களுக்கு ((தேங்காய்-நாகேஷ்)) இடமளிக்கவே கூடாது என சொல்கிறார்.
தன்னை ஒரு தலையாய் காதலித்த பெண்ணை பங்கஜம்.. ((பவானி)) இசையரசியாய் வாழ வைக்கிறார்.
விவசாயமே நம் நாட்டின் முதுகெலும்பு என்பதை படம் முழவதும் கிராமத்து விவசாயியாய் வாழ்ந்து காட்டுகிறார்.
இந்த படத்தில் அன்றும்-இன்றும்-என்றும் பேசப்பட்டது கோவில் திருவிழாவில் நடக்கும் அந்த மான் கொம்பு சண்டை, மக்கள் திலகத்தின் வேகத்தில், காமிராவே திணறுகிறது. அதே போல வைக்கோல் போரில் ஜஸ்டினுடன் போடும் சண்டையும ரசிகர்களால் பெரிதும் சிலாகித்து பேசப்பட்டது.அப்போது மக்கள் திலகத்திற்கு 59 வயது, இந்த வயதிலும் மான் கொம்பு, சிலம்பாட்டம் என்று பட்டையை கிளப்பினார் மக்கள் திலகம்.
"நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே" இந்த பாடலாக மட்டுமின்றி ஒரு பாடமாகவும் இன்று வரை ஒலிக்கிறது. இதை தவிர "வாரேன்...வழி காத்திருப்பேன்", "கந்தனுக்கு மாலையிட்டாள்" பாடல்களும் சூப்பர் ஹிட்டாகின.
அருமையான கதை, நடிப்பு,பாடல்கள், வசனங்களை கொண்ட இப்படம் நூறு நாட்களை கடந்து சூப்பர் ஹிட்டானது..!!!
Source :https://en.m.wikipedia.org/wiki/Uzhaikkum_Karangal Sr.babu
-
12th November 2020, 11:35 PM
#1279
Junior Member
Platinum Hubber
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். திரைக்காவியங்கள் மறுவெளியீடு*தொடர்ச்சி ...............
------------------------------------------------------------------------------------------------------------------------
திருப்பூர் அனுப்பர்பாளையம் கணேஷ் -* தினசரி இரவு 8 மண் காட்சி மட்டும்*
10/11/20,11/11/20, 12/11/20* நாட்களில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின்*
நீதிக்கு தலை வணங்கு .
கரிக்கலாம்பாக்கம்* திவ்யாவில்* இன்று முதல் (12/11/20) மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
*இரு வேடங்களில் கலக்கிய டிஜிட்டல் நினைத்ததை முடிப்பவன்*
தினசரி 3 காட்சிகள் .
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
12th November 2020, 11:36 PM
#1280
Junior Member
Platinum Hubber
தனியார் தொலைக்காட்சிகளில் நடிக*மன்னன் எம்.ஜி.ஆர். திரைக்காவியங்கள்*07/11/20 முதல் 12/11/20 வரை ஒளிபரப்பான*பட்டியல்*
------------------------------------------------------------------------------------------------------------------------
07/11/20* முரசு டிவி - மதியம் 12 மணி/இரவு 7 மணி - நல்ல நேரம்*
* * * * * * * *ராஜ் டிஜிட்டல் -பிற்பகல் 12.30 மணி - மாட்டுக்கார வேலன்*
* * * * * * *சன் லைப்* - மாலை 4 மணி - மன்னாதி மன்னன்*
08/11/20 -மெகா 24- பிற்பகல் 2.30 மணி - குடும்ப தலைவன்*
* * * * * * * ராஜ் டிஜிட்டல் - இரவு 10 மணி - குடியிருந்த கோயில்*
* * * * * * *ஜெயா மூவிஸ் - இரவு 10 மணி - ஒரு தாய் மக்கள்*
09/11/20 - சன் லைப் - காலை 11 மணி - ராமன் தேடிய சீதை*
* * * * * * * * வசந்த் டிவி -பிற்பகல் 1.30மணி - சங்கே முழங்கு*
* * * * * * * *பாலிமர் டிவி- இரவு 11 மணி - நவரத்தினம்*
10/11/20* வெளிச்சம் டிவி -பிற்பகல் 2 மணி - தாயை காத்த தனயன்*
* * * * * * * சன் லைப் - மாலை 4 மணி - எங்கள் தங்கம்*
* * * * * * *புது யுகம் -இரவு 7 மணி - நீதிக்கு தலைவணங்கு*
* * * * * * *ராஜ்*டிஜிட்டல் - இரவு 7 மணி - பறக்கும் பாவை*
** * * * * * மீனாட்சி*டிவி*-இரவு* 10.30 மணி - வேட்டைக்காரன்*
11/11/20- சன் லைப்*- காலை*11 மணி - நினைத்ததை முடிப்பவன்*
* * * * * * * சித்திரம் டிவி*-காலை*11 மணி/மாலை 6மணி -அபிமன்யு*
* * * * * * * மெகா டிவி*- மதியம் 12 மணி - தாயின் மடியில்*
* * * * * * *மூன்*டிவி* - பிற்பகல் 12.30 மணி - தாய்க்கு பின் தாரம்*
* * * * * * வசந்த் டிவி*- பிற்பகல் 1.30 மணி - ராமன்*தேடிய சீதை*
* * * * * * வெளிச்சம் டிவி*- பிற்பகல் 2 மணி - நல்ல நேரம்*
* * * * * * *பாலிமர் டிவி*-இரவு 11 மணி* -* ராமன் தேடிய சீதை*
12/11/20 சன்* லைப்*-* *மாலை 4 மணி -* திருடாதே*
* * * * * * *
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
Bookmarks