Page 62 of 117 FirstFirst ... 1252606162636472112 ... LastLast
Results 611 to 620 of 1167

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 22

  1. #611
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    322
    Post Thanks / Like
    கக்கனுக்கு சிவாஜி செய்த உதவிகள் பற்றி தெரியுமா ? TR




    .................................................. ......

    பின்னூட்டம்

    ஸ்ரீபெரும்புத்தூரில் இருந்து சுங்குவார் சத்திரம் போகும் வாய்ப்பு கிடைத்தால் இரண்டு ஊர்களுக்கும் இடையில் உள்ள நசர த்பேட்டை என்ற ஊரில் உள்ள அரசாங்க நடுநிலை பள்ளியில் உள்ள வகுப்பறை கட்டிடங்கள் மற்றும் சுற்று சுவர்களு க்கும் நடிகர் திலகத்தின் நன்கொடையால் கட்டப்பட்டவை என்று கட்டிடத்தின் மேல் பொறிக்கபட்டு இருக்கும்.இது நாம் வாகனத்தில் இருந்து பிரயாணம் செய்யும் இடது பக்கம் பார்த்தாலே தெரியும்.(S N D )
    .................................................
    ஸ்ரீபெரும்புத்தூரில் இருந்து சுங்குவார் சத்திரம் போகும் வாய்ப்பு கிடைத்தால் இரண்டு ஊர்களுக்கும் இடையில் உள்ள நசர த்பேட்டை என்ற ஊரில் உள்ள அரசாங்க நடுநிலை பள்ளியில் உள்ள வகுப்பறை கட்டிடங்கள் மற்றும் சுற்று சுவர்களு க்கும் நடிகர் திலகத்தின் நன்கொடையால் கட்டப்பட்டவை என்று கட்டிடத்தின் மேல் பொறிக்கபட்டு இருக்கும்.இது நாம் வாகனத்தில் இருந்து பிரயாணம் செய்யும் இடது பக்கம் பார்த்தாலே தெரியும்.(I G )
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #612
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    322
    Post Thanks / Like
    1971 ஆண்டில் வெளிவந்த செய்தி என நினைக்கிறேன்,

    எம்ஜிஆர் க்கு கண்டனம் தெரிவித்த ஜெயலலிதா ரசிகர்கள் மன்றத்தினர்,.

    இன்றைய எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பி.எஸ் ஆகியோர் எல்லாம் ஜெயலலிதா ரசிகர்கள் மன்ற உறுப்பினர்களாக இருந்திருப்பார்களோ?

    அதனால் தானே இது அம்மா ஆட்சி என சொல்லி வருகிறார்கள்,


    Thanks Sekar.P

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  4. #613
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    322
    Post Thanks / Like
    நாளை 15-11-2020 மெகா டிவியில் பகல் 12 மணிக்கு "தங்கச் சுரங்கம்" ஒளி பரப்பாகிறது,

    தங்கச் சுரங்கம் வசூலிலும் தங்கச் சுரங்கம் என நிரூபித்துக் காட்டியது,

    வெளியான முதல் 25 நாட்களிலேயே 23 லட்சங்களை குவித்து பிரமிக்க வைத்தது,

    கிடைத்த ஆவணங்கள் படி
    சென்னை, கோவை,நீலகிரி,மதுரை, ராமநாதபுரம்,திருச்சி, தஞ்சை,சேலம் மற்றும் பெங்களூர் ஆகிய விநியோக மாவட்டங்களில் மட்டுமே
    ரூபாய் 15,03,625-55 வசூலையும்

    வேலூர், திருவண்ணாமலை, நெல்லை, விருதுநகர், நாகர்கோயில், தூத்துக்குடி, விழுப்புரம், கடலூர், பாண்டி, காரைக்கால், காஞ்சிபுரம், தாம்பரம் ஆகிய செண்டர்களில் 25 நாட்கள் வரை வசூலித்த ஒட்டுமொத்த தொகை ரூ 8,12,355-75 ஆகும்

    ஒட்டுமொத்தமாக முதல் 25 நாளில் மட்டுமே ரூ 23,15,981.30 வசூலித்து மாற்றுக் கூடாரத்தை யோசிக்க விட்டது,



    Thanks Sekar .P

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  5. #614
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    322
    Post Thanks / Like
    Thanks to Mr Neyveli Vasudevan

    தீபாவளி சிறப்புப் பதிவு (புதிய பதிவு)

    ************************************

    அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

    .


    அஞ்சலிதேவி 'பக்த துக்காராம்' படத்தை தெலுங்கில் எடுத்தார். அதில் 'வீர சிவாஜி' ரோலுக்கு தலைவரை புக் செய்திருந்தார். (வேறு யாரை தேர்வு செய்ய முடியும்!) ஆரம்பகாலங்களில் தனக்கு பூங்கோதை, பரதேசி படங்களில் அஞ்சலியம்மா வாய்ப்பு கொடுத்ததை நன்றியுடன், கடுகளவும் மறக்காத தலைவர் அஞ்சலிதேவியான தனது பாஸிற்கு ('முதலாளியம்மா') 'வீர சிவாஜி' பாத்திரத்தை இலவசமாக நடித்துக் கொடுத்தார்.

    1973-ன் காலகட்டங்களில் தலைவர் செம பிஸி. (அவர் எப்பதான் பிஸி இல்லை!) தமிழ்த் திரையுலகின் வியாபாரத்தில் மூன்றில் இரண்டு பங்கு தலைவரை மட்டுமே நம்பி இயங்கி வந்தது. இது பொய்யோ புரட்டோ அல்ல...அப்படிப் புளுக அதற்கெல்லாம் தனித்திறமை வேணும். அப்படிப்பட்ட கேவலமான திறமை சிவாஜி ரசிகனுக்கு என்றும் வேண்டாம். வரவும் வராது. சந்தேகம் உள்ளவர்கள் தமிழ்வாணன் எழுதிய 'நடிகர் திலகம் சிவாஜி கணேசன்' என்னும் நூலைப் படித்து தெளிவடையலாம்.

    இடைவிடாத ஷூட்டிங். ஒய்வு ஒழிச்சலில்லாத பணி. தொட்டதெல்லாம் இன்னும் துலங்கிய நேரம். அத்தனை படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட். கேமரா ஒருநாளில் இரண்டு மணி நேரம் மட்டுமே அவர் மேல் வெளிச்சத்தை உமிழாமல் இருந்தது. சரியான தூக்கம் இல்லை. உணவு இல்லை. ஆனால் நடிப்பில் பிரமாண்டம் வளர்ந்து கொண்டேதான் இருந்தது. படங்களின் வசூல் எதிரிகளின் வயிற்றில் வழக்கத்தைவிட அதிகமாக புளியைக் கரைத்தன என்பதுதான் நிதர்சனமான உண்மை.

    அப்படிப்பட்ட நிலையில் 'பக்த துக்காராம்' படத்தில் 'வீர சிவாஜி' பங்கு கொள்ளும் குதிரைகள் சம்மந்தப்பட்ட சண்டைக்காட்சி ஒன்று மட்டுமே படமாக்கப்பட வேண்டி இருந்தது. மற்ற எல்லாக் காட்சிகளும் எடுத்து முடிக்கப்பட்டுவிட்டன

    நடிகர் திலகம் அப்போது ஹைதராபாத்தில் ஷூட்டிங்கில் இருந்தார். சென்னை கிண்டியில் நிறைய குதிரைகள்...நூற்றுக்கும் மேற்பட்ட ஜுனியர் ஆர்டிஸ்ட்ஸ், குதிரை ஸ்டன்ட் வீரர்கள். எல்லோரும் அடுத்த நாள் ஷூட்டிங்கிற்கு ரெடி. ஹைதராபாத்தில் இருந்த தலைவர் அஞ்சலிதேவியிடன் போனில் "கரெக்டாக ஷூட்டிங் தொடங்குங்கள்... நான் காலை ஏழு மணிக்கெல்லாம் சென்னை கிண்டி மைதானத்திற்கு நேராக வந்து விடுவேன்" என்று தகவல் அளித்து விட்டார் .

    சொன்னது போலவே அடுத்த நாள் ஹைதராபாத்திலிருந்து விமானத்தில் சென்னை வந்து நேராக 'அன்னை இல்லம்' கூட செல்லாமல் கிண்டியில் படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கே தலைவர் வந்து விட்டார். வீர சிவாஜியாக மைதானத்திற்குள் மேக்-அப் போட்டு குதிரையில் அமர்ந்தவர் அப்படியே மயக்கம் போட்டு தரையில் விழுந்து விட்டார். (இடைவிடாது படப்பிடிப்புகளில் கலந்து கொண்டதால் நேர்ந்த சோகம்) அங்கிருந்த அஞ்சலிதேவி அதிர்ச்சியில் அலறியே விட்டார். மொத்த யூனிட்டும் அலறியது.

    பின் முகத்தில் தண்ணீர் தெளித்து மயக்கம் தெளிந்தவுடன் அஞ்சலி தேவியிடம்,

    'பயப்படாதே... எனக்கு ஒன்றும் இல்லை... ஷூட்டிங் தொடங்கலாமா?' என்று அஞ்சலிதேவியிடம் சொல்லி சர்வ சாதாரணமாய் ஒரு சிங்கம் போல ஷூட்டிங்கிற்குத் தயாராகிவிட்டார் தலைவர்.

    ஆனால் அஞ்சலி தேவி பயத்தில் இருந்து மீளாமல் 'இன்றைக்கு ஷூட்டிங் கேன்சல்' என்று குரல்தர, உடனே தலைவர்,

    'அதெல்லாம் கேன்சல் கிடையாது'

    என்று அதட்டலாகக் குரல் கொடுத்தார். அதுமட்டுமல்ல... காலை எட்டு மணியிலிருந்து மாலை மூன்று மணிவரை அந்த குதிரை சண்டைக் காட்சியில் அற்புதமாக நடித்த்துக் கொடுத்து விட்டார்.

    நாமே எத்தனை தடவை அந்த வீர சிவாஜியின் குதிரை சண்டைக் காட்சிகளை ரசித்து இங்கே பதிந்திருக்கிறோம். அப்படி பார்க்கும் நமது தலைவர் மயக்கம் அடைந்த நிலையில் எழுந்து பின் நடித்துக் கொடுத்த காட்சிதான் அது. நம்மால் நம்ப முடிகிறதா? குதிரையில் அவ்வளவு உடல் சுகவீனமான போதும் கம்பீரமாக வீர சிவாஜியாகவே உருமாறி, கம்பீரம் காட்டி, வாள் வீசி, அந்தக் காட்சியை இன்றளவும் நம்மை சிலாகித்து ரசித்து பாராட்டும்படி செய்த அந்த மகானை என்னவென்று புகழ்வது!

    அது மட்டுமா! அந்த தனது ஒருநாள் ஷூட்டிங் கேன்சல் ஆனால் அஞ்சலிதேவிக்கு எவ்வளவு நஷ்டம் ஏற்படும் அது கூடாது என்ற நல்மனது... பெருந்தன்மை... ஆரம்ப காலத்தில் தனக்கு ஆதரவளித்த அஞ்சலிதேவிக்கு செய்து தீர்த்த நன்றிக்கடன்...தொழில் பக்தி..தொழிலில் நேர்மை, உண்மை, சிரத்தை, அர்ப்பணிப்பு என்று அந்த மேதையின் நற்குணங்கள்தான் எத்தனை எத்தனை!...

    ஷூட்டிங் முடிந்தவுடன் நேராக அஞ்சலியிடம் வந்து,

    'அஞ்சலியம்மா... இன்னைக்கு ஒருநாள்தான் என் கால்ஷீட் பிரீ ஆ இருக்கு...நான் நடிச்சிக் கொடுத்துட்டா உங்களுக்கு ஒரு வேலை முடியும் ..படத்தை நீங்க சீக்கிரம் ரிலீஸ் பண்ணிடலாம்..அதுக்காகத்தான் கேன்சல் செய்யாதீங்க என்று சொன்னேன்'

    என்று தலைவர் சொன்னாராம்.

    'அதுதாங்க நடிகர் திலகம்' என்று அஞ்சலி அம்மா வியக்கிறார்.

    தன்னால் படத் தயாரிப்பாளர்களுக்கு எவ்வித சங்கடமும் ஏற்பட்டுவிடக் கூடாது என்று தன் உடல்நிலையையும் பொருட்படுத்தாது நடித்துக் கொடுத்த உத்தமன்...மற்றவர் போல் அடுத்துக் கெடுத்தவர் இல்லை நம் தலைவர்.


    Thanks Vasudevan Srirangarajan

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  6. #615
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    322
    Post Thanks / Like
    அன்னை இல்லம் 15/11/1963 57 வருடங்கள் நிறைவு



    Thanks Vcg Thiruppathi
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  7. #616
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    322
    Post Thanks / Like
    அன்னை இல்லம் 15/11/1963 57 வருடங்கள் நிறைவு.

    1964 அக்டோபர் கடைசிவாரத்தில் இலங்கையில் திரையிடப்பட்ட
    அன்னை இல்லம் 50 நாட்களுக்குமேல் ஓடி சாதனை செய்தது.


    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  8. #617
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    322
    Post Thanks / Like
    லட்சுமி கல்யாணம் 15/11/1968....52 வருடங்கள் நிறைவு.

    1/09/1969 ஆம் ஆண்டு இலங்கையில் திரையிடப்பட்டது
    லட்சுமி கல்யாணம்.
    கொமும்பு.ஜெஸிமா அரங்கில் ..81 நாட்கள்.
    யாழ்நகர்..ராணி அரங்கில்..48 நாட்கள்
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  9. #618
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    322
    Post Thanks / Like
    டைரக்டர் ஸ்ரீதர் வைரநெஞ்சம் படம் படப்பிடிப்பு நடந்தது கொண்டிருந்தபோதே உரிமைக்குரல் படத்தின் கதையின் கருவை ஐயன் சிவாஜி அவர்களிடம் சொல்லி அதற்கும் ஓ.கே வாங்கி வைத்திருந்தார்கள். வைரநெஞ்சத்தின் போது இருவருக்கும் ஏற்பட்ட பிரச்சனையில் ஸ்ரீதர் அவர்கள் வெளியேற நேரிட்டது.

    வைரநெஞ்சம் வெளி இடப்பட்டது. அன்று டாக்டர் சிவா திரைப்படமும் வெளியாகியது. பிறகு அய்யனிடம் செல்லாத ஸ்ரீதர் அவர்கள் வருடங்கள் தாண்டி அந்த கதையை எம்.ஜி.ஆர் அவர்களுக்காக மாற்றி அமைத்து படத்தின் பெயரையும் உரிமைக்குரல் என்று மாற்றி தயாரித்தார்கள்.

    பிறகு எம்ஜிஆரை நடிக்க வைத்த படம் மீனவ நண்பன். இதற்கு மீனும் கிடைக்கவில்லை, நண்பனின் வரமும் கிடைக்க
    வில்லை. அன்றுதான் ஸ்ரீதர் அவர்களுக்கு சனி திசை தொடங்கியது. துக்கம், கடன்,மனவேதனை. மீண்டும் அய்யனிடம் ஸ்ரீதர் வந்தார்கள். அப்போதுதான் மோகன புன்னகை( சிவாஜி அய்யன், ஜெயபாரதி கேரள) தயாரிப்பதற்க்கான பேச்சு வார்த்தை நடந்தது . அய்யன் இந்த படத்திற்கு பணம் ஏதும் வாங்காமல் இனாமாக நடித்து கொடுத்தார்கள்.

    ஐயனின் சிவந்த மண்ணும் , எம்.ஜி.ஆர் அவர்களின் நம்நாடும் ஒரே நாளில் வெளிவந்தது. நம்நாடு இப்போதைய தமிழ்நாடுபோலவே ஆகிவிட்டது. சிவந்த மண் முதலாவதாக வெளிநாட்டில் எடுத்த படம் என்பதாலும், இனிய பாடல்கள் என்பதாலும் வெற்றி படமாக அமைந்தது. சிவந்த மண் திரைப்படத்திற்கு முதல் இருவாரம் நுழைவு சீட்டு கிடைப்பதற்கே அரும்பாடாக இருந்தது. எம்ஜிஆர் ரசிகர்களே, சிவந்த மண் பார்ப்பதற்கு நம்மவர்களிடம் நுழைவு சீட்டு கேட்ட தாமசுகள் நடந்தது.

    இனத்துரோகி திரு.சுந்தரராஜன் (நடிகர்) அவர்களுக்கு பண பிரச்னை வந்தபோது, அவர் ஐயனின் காலில் விழ முத்துக்கள் மூன்று (அய்யன் சிவாஜி, சத்யராஜ், பாண்டியராஜன் ) என்ற படம் நடித்து அவரின் பிரச்சனையை முடித்து வைத்தர்கள் அய்யன்.

    எம்ஜிஆர் அவர்களின் படம், வருடத்திற்கு 2 அல்லது 3 படங்கள் மட்டுமே வெளி வரும். பிறகு அது சுருங்கி வருடத்திற்கு ஒரு படம் என்றானது. உண்மையிலே எம்ஜிஆர் வசூல் சக்கரவர்த்தி என்றால் அவர் ஏன் வருடத்திற்கு ஒரு படம் என்று சுருங்கினார். எங்கள் ஐயனை போல் வருடத்திற்கு 6 முதல் 11 படம் வரை நடித்திருக்கலாமே ? அனைத்தும் வெற்றியே. உரிமைக்குரலுடன் வெளியான சிரித்து வாழவேண்டும் என்ற படம் அழுதுகொண்டே ஓடியதே.

    அய்யனை வைத்து படம் எடுத்தவர்கள் நட்டம் அடைந்தியிருந்தால் பெரிய, பெரிய தயாரிப்பாளர்கள் ஏன் அய்யனிடம் திரு அண்ணாமலை மூலம் காத்து கிடக்க வேண்டும்? இதே தயாரிப்பாளர்கள் எம்ஜிஆர் ரிடம் ஏன் தங்கள் படத்தில் நடிக வாருங்கள் என்று கேட்கவில்லை? சில நன்றி கெட்ட நாய்கள் அய்யனிடமிருந்து விலகி எம்ஜிஆரிடம் சென்றார்கள். பிறகு அவரை விட்டு ஓடியதும், இவுலகை விட்டு போனதும் அனைவரும் அறிவர். சிவந்த மண் சினிமா வெற்றியை தொடர்ந்தே தென்னிந்தியர்கள் வெளி நாடு சென்று படம் எடுக்க தொடங்கினார்கள் என்பதே மறுக்க முடியாத உண்மை.

    ஸ்ரீதர் அவர்களுக்கு பணம் நட்டம் ஏற்படுத்தியது ஹிந்தியில் எடுத்த (தர்த்தி)சிவந்த மண். என்பதே உண்மை. அய்யன் அவர்கள், தன்னால் நட்டம் என்று தெரிந்தால் இனமாக நடித்து கொடுப்பதும், தேடி வருபவர்களுக்கு அவர்கள் குறைகள் தீர்க்க நடித்து கொடுப்பதும் தமிழ் திரை உலகம் தெரிந்த விஷயமே .அய்யன் திரையில் மட்டுமே கர்ணனாக நடிக்கவில்லை. வாழ்க்கையிலும் கர்ணனாகவே வாழ்ந்தார் என்பதை அவரிடம் பழகியவர்களுக்கு நன்கு தெறியும்.

    அய்யன் சிவாஜியை வைத்து படம் எடுப்பதற்கு ஒரு சிண்டிகேட் அமைக்கப்பட்டது. பாலாஜி, ஸ்ரீதர் ஏ.வி.எம் , பீம்சிங், ஏ .பி நாகராஜன். இவர்களே நடிகர்திலகத்தின் தேதிகளுக்கு சொந்தக்காரர்கள். இது போன்ற ஆயிரமாயிரம் சரித்திரங்கள் எங்கள் ஐயனுக்கு உண்டு என்பதை விசிலடிக்கும் கூட்டங்களும், சுவரில் பசை ஒட்டிய நாய்களுக்கும் எப்படி தெரிய முடியும். சந்திரனை பார்த்து நாயும் குறைக்குமாம். அதே சந்திரனை பார்த்து மலர்களும் சிரித்து மலருமாம். எங்கள் அய்யன் சந்திரன். குறைப்பவர்கள் நாயாகட்டும். சிரிக்கும் மலர்களோ நாமாகட்டும் .

    ஐயனே, சரித்திரமும் நீயே, சாதனையும் நீயே, வெற்றிகளும் நீயே, வெற்றி நாயகனும் நீயே. நடிகனும் நீயே, நடிக மன்னனும் நீயே. தூற்றுவார் தூற்றட்டும். போற்றுவோர் போற்றட்டும். என்றும் வசூல் சக்ரவர்த்தி நீயே. உன்னை வெல்ல ஐயனே, உன்னால் மட்டுமே முடியும் .வாழ்க அய்யன் புகழ்.

    Thanks Selvaraj.f
    .................................................. .........................பின்னூட்டம்
    )]ஸ்ரீதர்-"சரியான நேரத்தில் டோப்பா என்னை கைதூக்கிவிட்டார் தொடர்ந்து அவரை வைத்து உரிமைக் குரல் போன்ற வெற்றிப்படங்களைத் தயாரிப்பேன்" இப்படி உரிமைக் குரல் படத்தின் வெற்றி விழாவில் பேசியவர் மீனவ நண்பனை எடுத்தார் அதோடு அவர் தொடர்ந்து என்கிற வார்த்தை டோப்பாவை வைத்துக்கு பொருந்தாமல் போனதும் இரண்டு வருடங்கள் முடிந்து இளமையை ஊஞ்சலாட வைத்தார் ஏ சென்டர்களில் வெற்றி பி சி செனடர்களில் 50 நாட்கள் ஓடியது பிறகு இளமையைத் தொடர்ந்து எடுத்தாரு பாருங்க ஒரு சரியான தகர டப்பா படம் சௌந்தர்யமே வருக வருக என்று ஒரே வாரத்துல நல்லவே ஓடியது எப்படி ரிலீஸான அனைத்து தியேட்டர்களையும் விட்டு அத்தோட ஐயா அம்பேல் ராணிப் பேட்டையிலுள்ள தனக்குச் சொந்தமான தோல் தொழிற்சாலையை கவனிக்கப் போயிட்டாரு அம்புட்டுத்தான்(S N R )

    Last edited by sivaa; 15th November 2020 at 04:05 PM.
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  10. #619
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    322
    Post Thanks / Like
    அன்றைய சில பிரபலமான பத்திரிகைகளில் வாசகர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு, ஆசிரியரின் சுவையான பதில்களும்...

    பாவேந்தர் பாரதிதாசனின் குயில் பத்திரிகையிலிருந்து....
    கேள்வி :
    சிவாஜி கணேசனுக்கு திருச்சி நகரசபை வரவேற்பளித்தது பற்றி உங்கள் எண்ணம் என்ன?
    பதில் :
    இலக்கம் இலக்கமாகக் கல்வி முதலியவற்றிற்கு வாரிக் கொடுத்த, கொடுத்துவரும் கணேசனுக்கு வரவேற்பளிக்காவிடில் திருச்சி நகரசபை இருந்தென்ன! தொலைந்தென்ன!
    ******* ****** *******
    2. பேசும்படம், ஜனவரி - 1963
    என். முருகன், திருநெல்வேலி.
    கேள்வி :
    "ஆலயமணி" யில் ஓசையே இல்லையே?
    பதில் :
    யார் சொன்னது?
    தயாரிப்பாளர் வீரப்பாவுக்கு கலகலவென்று சில்லறைகள் வந்து விழுந்து " ஆலயமணி "யின் ஓசையையும் தூக்கி அடித்து வருகிறதே!
    ********* ******** ********
    3. பொம்மை, ஜூலை 1969
    ப. பூலோகநாதன், சென்னை - 1.
    கேள்வி:
    சிவாஜி கணேசனின் சீரிய பண்புகளில் சிலவற்றைக் கூறுங்களேன்?
    பதில் :
    நண்பர்களுக்கு உதவ வேண்டும் என்ற நல்ல நோக்கம் கொண்டவர். S.V. சுப்பையாவின் " காவல் தெய்வத்தில்" இலவமாகவே நடித்துக் கொடுத்தார் அவர். தன்னடக்கம் நிறைந்தவர்.
    ********* ********** ********
    4. பொம்மை, ஜூலை 1970
    எஸ். சந்தானம், டேராடூன்.
    கேள்வி:
    பராசக்தியின் அருளால் நமக்குக் கிடைத்திருக்கும் உயர்ந்த மனிதரை வாழ்விலே ஒருநாள் பார்த்தால் ( என் ) பசி தீரும். ஏழைபால் அன்புக் கரங்களை நீட்டும் நான் வணங்கும் தெய்வத்தைக் காணும் அந்தநாள் விரைவில் வருமா?
    பதில் :
    ஆண்டவன் கட்டளை அதுவானால் நீர் நினைப்பது நடக்குமே. அப்போது பாலும் பழமும் உண்ட மகிழ்ச்சி உமக்கு ஏற்படும் இல்லையோ?
    ******** ********** *******
    5. பேசும்படம், ஜூலை - 1964.
    .மு. சுந்தரவதனம், மாயூரம்.
    கேள்வி :
    சிவாஜி கணேசன் தர்மம் செய்வதில்லை என்று கூறுபவர்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
    பதில் :
    அவருக்கு நடிக்கத் தெரியாது என்று சொல்வதற்கு சமமாக....
    ********* ********* ********
    6. பொம்மை, ஜுலை - 1970.
    அ. ஞானபாஸ்கரன், திருவண்ணாமலை.
    கேள்வி :
    சிவாஜி கணேசன் கல்லூரி கட்டட நிதிக்காக பணம் உதவியது எதைக் காட்டுகிறது?
    பதில் :
    தான் படிக்காவிட்டாலும் பிறர் படிக்கட்டுமே என்ற உயரிய எண்ணத்தை.
    ******** ******** ********
    7. கல்கண்டு, 24:08:1995.
    உஷா செந்தில், கூந்தளிர்..
    கேள்வி :
    நான் ஏமாந்தவன் என்று சிவாஜி வருத்தப்படுகிறாரே?
    பதில் :
    தேவையில்லை. நம் காலத்தில் அரசியலில் நேர்மை காத்த ஒரே மனிதர் சிவாஜி. பதவியில் இருப்பவர்கள்கூட ஊட்ட முடியாத தேசப்பற்றை, பதவியில் அமராத போதும் தமிழக மக்களுக்கு உணர்த்தியவர். தொழிலில் ஈடுபாடு; நேரந் தவறாமை; திறமையை வெளிப்படுத்துவதில் 100க்கு 110 சதவிகிதம் முயற்சி ஆகியவை சிவாஜியின் வாழ்க்கையிலிருந்து மற்றவர்கள் கற்க வேண்டிய பாடங்கள். இந்தப் பொருள் பொதிந்த வாழ்க்கையைப் பற்றி சிவாஜிக்கு இப்படி ஒரு தாழ்மையான எண்ணம் தேவையல்ல.
    ******** ********* *********
    தொகுப்பு : வான்நிலா விஜயகுமாரன் நன்றி : பம்மலார்.
    கலைத்தெய்வம் இதழிலிருந்து

    Thanks Nilaa

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  11. #620
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    322
    Post Thanks / Like
    தயாரிப்பாளர்களை கோர்ட்டுக்கு இழுத்த எம்.ஜி. ஆர் - ஆலங்குடி வெள்ளைச்சாமி


    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •