Results 1 to 10 of 1139

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 22

Threaded View

  1. #11
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    293
    Post Thanks / Like
    அன்றைய சில பிரபலமான பத்திரிகைகளில் வாசகர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு, ஆசிரியரின் சுவையான பதில்களும்...

    பாவேந்தர் பாரதிதாசனின் குயில் பத்திரிகையிலிருந்து....
    கேள்வி :
    சிவாஜி கணேசனுக்கு திருச்சி நகரசபை வரவேற்பளித்தது பற்றி உங்கள் எண்ணம் என்ன?
    பதில் :
    இலக்கம் இலக்கமாகக் கல்வி முதலியவற்றிற்கு வாரிக் கொடுத்த, கொடுத்துவரும் கணேசனுக்கு வரவேற்பளிக்காவிடில் திருச்சி நகரசபை இருந்தென்ன! தொலைந்தென்ன!
    ******* ****** *******
    2. பேசும்படம், ஜனவரி - 1963
    என். முருகன், திருநெல்வேலி.
    கேள்வி :
    "ஆலயமணி" யில் ஓசையே இல்லையே?
    பதில் :
    யார் சொன்னது?
    தயாரிப்பாளர் வீரப்பாவுக்கு கலகலவென்று சில்லறைகள் வந்து விழுந்து " ஆலயமணி "யின் ஓசையையும் தூக்கி அடித்து வருகிறதே!
    ********* ******** ********
    3. பொம்மை, ஜூலை 1969
    ப. பூலோகநாதன், சென்னை - 1.
    கேள்வி:
    சிவாஜி கணேசனின் சீரிய பண்புகளில் சிலவற்றைக் கூறுங்களேன்?
    பதில் :
    நண்பர்களுக்கு உதவ வேண்டும் என்ற நல்ல நோக்கம் கொண்டவர். S.V. சுப்பையாவின் " காவல் தெய்வத்தில்" இலவமாகவே நடித்துக் கொடுத்தார் அவர். தன்னடக்கம் நிறைந்தவர்.
    ********* ********** ********
    4. பொம்மை, ஜூலை 1970
    எஸ். சந்தானம், டேராடூன்.
    கேள்வி:
    பராசக்தியின் அருளால் நமக்குக் கிடைத்திருக்கும் உயர்ந்த மனிதரை வாழ்விலே ஒருநாள் பார்த்தால் ( என் ) பசி தீரும். ஏழைபால் அன்புக் கரங்களை நீட்டும் நான் வணங்கும் தெய்வத்தைக் காணும் அந்தநாள் விரைவில் வருமா?
    பதில் :
    ஆண்டவன் கட்டளை அதுவானால் நீர் நினைப்பது நடக்குமே. அப்போது பாலும் பழமும் உண்ட மகிழ்ச்சி உமக்கு ஏற்படும் இல்லையோ?
    ******** ********** *******
    5. பேசும்படம், ஜூலை - 1964.
    .மு. சுந்தரவதனம், மாயூரம்.
    கேள்வி :
    சிவாஜி கணேசன் தர்மம் செய்வதில்லை என்று கூறுபவர்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
    பதில் :
    அவருக்கு நடிக்கத் தெரியாது என்று சொல்வதற்கு சமமாக....
    ********* ********* ********
    6. பொம்மை, ஜுலை - 1970.
    அ. ஞானபாஸ்கரன், திருவண்ணாமலை.
    கேள்வி :
    சிவாஜி கணேசன் கல்லூரி கட்டட நிதிக்காக பணம் உதவியது எதைக் காட்டுகிறது?
    பதில் :
    தான் படிக்காவிட்டாலும் பிறர் படிக்கட்டுமே என்ற உயரிய எண்ணத்தை.
    ******** ******** ********
    7. கல்கண்டு, 24:08:1995.
    உஷா செந்தில், கூந்தளிர்..
    கேள்வி :
    நான் ஏமாந்தவன் என்று சிவாஜி வருத்தப்படுகிறாரே?
    பதில் :
    தேவையில்லை. நம் காலத்தில் அரசியலில் நேர்மை காத்த ஒரே மனிதர் சிவாஜி. பதவியில் இருப்பவர்கள்கூட ஊட்ட முடியாத தேசப்பற்றை, பதவியில் அமராத போதும் தமிழக மக்களுக்கு உணர்த்தியவர். தொழிலில் ஈடுபாடு; நேரந் தவறாமை; திறமையை வெளிப்படுத்துவதில் 100க்கு 110 சதவிகிதம் முயற்சி ஆகியவை சிவாஜியின் வாழ்க்கையிலிருந்து மற்றவர்கள் கற்க வேண்டிய பாடங்கள். இந்தப் பொருள் பொதிந்த வாழ்க்கையைப் பற்றி சிவாஜிக்கு இப்படி ஒரு தாழ்மையான எண்ணம் தேவையல்ல.
    ******** ********* *********
    தொகுப்பு : வான்நிலா விஜயகுமாரன் நன்றி : பம்மலார்.
    கலைத்தெய்வம் இதழிலிருந்து

    Thanks Nilaa

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •