-
15th November 2020, 06:46 PM
#621
Senior Member
Devoted Hubber
வசூல் சக்ரவர்த்தி அய்யன்தான் என்பதில் எவருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.
கருப்பு வெள்ளை படங்களில், இன்றளவும் எவராலும் முந்திட முடியாத வசூல் படம், அய்யனின் பட்டிக்காடா பட்டணமா மட்டுமே.
வண்ண படங்களில் இன்றளவும் வசூலில் சக்ரவர்த்தியாக திகழ்வது அய்யனின் திரிசூலம்தான்.
திரு.எம்ஜி.ஆர் அவர்களின் படங்களும் வெற்றிகள் பெற்றன. ஆனால், எம்.ஜி.ஆர் அவர்களின் படங்களின் வெற்றியை மிக பிரமாண்டமான வெற்றி என்று மக்களிடம் மிகை படுத்தி சொன்னவர்கள், திராவிட கட்சியை வளர்ப்பதற்காக மேடைகள் தோறும் கூச்சமின்றி முழங்கியவர்கள். அதை மக்களும் நம்பினார்கள்.
உண்மையில் அய்யனின் படங்களை விட திரு. எம்.ஜி.ஆர் அவர்களின் படம்தான் வசூலில் உயர்வு என்றால், பெரிய நிறுவனங்கள், உயர்ந்த இயக்குன்கள் திரு.எம்.ஜி.ஆர் அவர்களை படம் எடுப்பதற்காக ஏன் அணுகவில்லை? என்பது ஆயிரம் கேள்விகள்.
திரு.எம்.ஜி.ஆர் அவர்களின் படங்கள் அய்யனின் படங்களை விட உயர்வான வசூல் என்றால், திரு. எம்.ஜி. ஆர் அவர்களின் படங்களின் எண்ணிக்கை அய்யனின் படங்களின் எண்ணிக்கையை விட ஏன் ?குறைந்தது என்ற கேள்விகளும் எழுகின்றது.
எம்.ஜி.ஆர் அவர்களின் படங்களும் வசூலித்தது. ஆனால் வசூலில் அய்யனின் படங்களை வென்றது என்பதை ஏற்க முடியாது.
அய்யனுக்கு முன்பே திரை உலகம் கண்ட திரு. எம்.ஜி.ஆர் அவர்ளை பிறகு வந்த அய்யன் அவர்கள் முந்தி செல்ல காரணம், அய்யன்தான் உண்மையான வசூல் ராஜா என்பதே சாட்சி.
மணமிருக்கும் மலர்களையே வண்டுகள் மொய்க்கின்றன. வியாபாரம், நல்ல லாபமும் ஈட்டுகின்ற பொருள்களுக்கே தேவைகள் கூடுகின்றன. நல்ல பொருள்களே சந்தையை அலங்கரிக்கின்றது.
எம்.ஜி.ஆர் அவர்கள் ஒரு கொள்கையை கடைபிடித்தார்கள். அதாவது, தனது படமானது ஓரவிற்கு ஓடிய பிறகே தனது அடுத்த படத்தை வெளியிட செய்வார்கள்.
ஆனால் அய்யனின் படங்கள் வெளியிட பட்டுக்கொண்டே இருக்கும். காரணம், அய்யனின் படங்களின் அசையாத வசூல் நம்பிக்கை.
திரு. எம்.ஜி.ஆர் அவர்களின் படங்கள் பி சென்றர்களிலும், அதிகமாக சி சென்றர்களிலுமே அதிகமாக ஓடும். எம்.ஜி.ஆர் அவர்களின் படங்கள் விளம்பரமாவதற்கு இந்த பி , சி சென்றரகளும் ஒரு காரணமே.
அய்யனின் படங்கள் எ , பி சென்றர்களிலே அதிகமாக வெற்றியை சூடியது என்பதும் ஒரு காரணம்.
அய்யனின் படங்களின் வெற்றிகள் மேடைகளின் முழங்கவில்லை. அதற்கான தேவையும் இருந்ததில்லை.
திரு.எம்.ஜி.ஆர் அர்களின் படங்கள் மேடைகளிலே மிகையாக முழங்கப்பட்டது. அதனால் மக்களும், விவேக் போன்ற நாய்களும் நம்பின. நம்புகின்றனர்.
திரை உலகில் அய்யன், திரு. எம்.ஜி.ஆர் இவர்களின் காலங்களில் வசூலின் சரித்திரங்களை கண்டது அய்யனின் சித்திரங்களே என்பதை மறுப்பவர்கள், தங்களையே தாங்கள் ஏமாற்றுகின்றார்கள். நன்றிகள்.
Thanks Selvaraj.f
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
15th November 2020 06:46 PM
# ADS
Circuit advertisement
-
15th November 2020, 06:52 PM
#622
Senior Member
Devoted Hubber
நண்பர் அடிமைப்பெண் சென்னை வசூல் முதலில் ரூபாய் 13.6 என்றார்
அப்புறம் 14.4 என்கிறார்
ஒரே குழப்பமா இருக்காம்,
Thanks Sekar.P
.................................................
பின்னூட்டம்
ஏற்கனவே "ஜென்டாவின் கைதி" (ஜென்டா என்பது ஒரு இடத்தைக் குறிக்கும்)என்பதை அப்பட்டமாகக் காப்பி எடுத்து படமாக வெளியிட்டாரு டோப்பா நாடோடிமன்னன் என்ற பெயர்ல இப்படத்தின் முடிவில் எமது அடுத்த தயாரிப்பு அடிமைப்பெண் என்று டைட்டில் காட்டப்பட்டது கூட அடிமைப்பெண் படப்பிடிப்பின் போதுதான் சேர்க்கப்பட்டது சரி அடிமைப்பெண்? A SLAVERY MOTHER என்ற ஆங்கில நாவலின் அப்பட்டமான காப்பி ஆக "THE PRISONER OF ZENDA"-ஜென்டாவின் கைதி எழுதிய பிரபல ஆங்கில நாவலாசிரியர் அந்தோணி ஹோப் அதுபோல "ஸ்லேவரி மதர்" எழுதியது ஆலன் பேட்டன் என்ற மற்றொரு ஆங்கில நாவலாசிரியருடையது என்பது ஒரு விசிலடிச்சான் குஞ்சுகளுக்கும் இவ்விஷயம் தெரியவே தெரியாது டோப்பாவும் அவங்ககிட்ட சொல்லவே இல்ல என்பது ஒரு சிறப்பு ஆஹாஹாஹாஹா(S N)
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
15th November 2020, 11:46 PM
#623
Senior Member
Devoted Hubber
(2018 ல் பதிவிடப்பட்டது மீள்பதிவாக)
எனக்கு தெளிவான விளக்கம் மட்டுமே தேவை,
14 நாட்களில் நாடோடி மன்னன் படத்தை பார்த்தவர்கள் 10,35,665 பேர்,
25 நாட்களில் கப்பலோட்டிய தமிழன் படத்தை பார்த்தவர்கள் 40,00,000 பேர்
அப்படியே நாடோடி மன்னன் படத்தை 25 நாட்களில் பார்த்தவர்கள் என்று பார்த்தால் 20 லட்சம் கூட வராது
அப்படி இருக்கும் போது நாடோடி மன்னன் பிரம்மாண்டமான வெற்றி
கப்பலோட்டிய தமிழன் தோல்வி என்று வரலாற்றில் இடம்பெற காரணம்?
தியேட்டர் எண்ணிக்கைக் கூட பெரிய வேறுபாடு இல்லை,
படங்களுக்கு இடையே மூன்று வருட இடைவெளி மட்டுமே,
நன்றி சேகர் .ப
.....................................
பின்னூட்டங்கள் சில
பெரும் சரிவை நோக்கி சென்ற எம்ஜிஆர் க்கு நாடோடி மன்னன் படத்தின் வெற்றிக்கு ஊடகங்கள் பெரிதும் துனை இருந்து இருக்கின்றன
.................................................. .
BOOM LIFT வைத்தாளும் எட்டாது. 1936 (சதி லீலாவதி)முதல் 1950(மந்திரி குமாரி) வரை MGR junior artiste போலத்தான் இருந்தார்.1950 மந்திரிக்குமாரியில் கூட S.A. Natrajanக்கு இருக்கும் வசனமோ, Heroismகாட்சிகளோ MGRக்கு இருக்காது. அடுத்து 1952ல் மலைக்கள்ளன்தான் அவரை முழு ஹீரோ ஆக்கியது.கிட்டதட்ட 17வருடங்கள்.(சிவாஜி நடிக்க வந்த அன்றிலிருந்து 17வருடங்களில்
உட்சத்தில் இருந்தார்)p.u.chinnappa 1951ல் இறந்தார். MKT சிறையில்..
T.R.M, K.R.R and M.K.R.ஆகியோர் இரண்டாம் கட்ட நடிகர்களே. இனி "நாம்தான்" என நினைத்த MGRன் கனவு 1952ல் சிவாஜியின் பிரவேசம் தகர்த்தது.
.................................................. ........
1958 ல் வெளிவந்த எம் ஜீ ஆரின் ஒரே ஒரு படம் நாடோடி மன்னன் மட்டுமே. அந்த வருடத்தில் ஒரு படத்தை மட்டும் வெளியிட்டும் 10 தியெட்டர் வரையில்தான் 100 நாட்கள் காட்டமுடிந்தது வெள்ளிவிழா கிடையாது ஆனால் சேலத்தில் 3 தியேட்டர் மாற்றி ஓட்டிவிட்டு கடந்த 50 வருடங்களாக சேலத்தில் நாடோடி மன்னன் வௌவெள்ளிவழா ஓடியதென எல்லோரையும் ஏமாற்றியதுமட்டுமல்லாமல் தங்களையும் ஏமாற்றி தங்களை சார்ந்தவர்களையும் ஏமாற்றிக்கொண்டு திரிந்தார்கள் தற்பொழுது இணையத்தளங்கள் பாவனைக்குவந்து அதன்மூலம் சிவாஜி ரசிகர்கள் முன்னைய சினிமா நிலவரங்களை தேடி எடுத்து பொக்கிஷங்களை கிளறியதில் பல உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன நாடோடி மன்னன் தனி அரங்கில் வெள்ளிவிழா ஓடவில்லை என்ற விபரத்தை சிவாஜி ரசிகர்கள் ஆதாரத்துடன் நிரூபித்தபின் தற்பொழுது பொய்என்று தெரிந்தும் பொய்யான தகவலை எழுதிவந்த எம் ஜீ ஆர் ரசிகர்கள் ஒப்புக்கொள்கின்றார்ர்கள் அதேநேரத்தில் விடயம் தெரியாமல் பொய்மையால் வளர்க்கப்பட்ட எம் ஜீ ஆர் ரசிகர்கள் பொய்மையில் ஊறி வெளிவரமுடியாமல் உளறிக்கொண்டு திரிகிறார்கள். எம் ஜீ ஆர் சாதனை சக்கரவர்த்தி என்கிறார்கள் ஆனால் சேலம் நகரில் ஒரு வௌவெள்ளிவிழா படம் கிடையாது . பெரும் சோகம் என்னவென்றால் நாடோடி மன்னன் படத்தால் பெயர்தான் கிடைத்தது பணம் கிடைக்கவில்லை என்று எம் ஜீ ஆரின் அண்ணன் சாரங்கபாணி சொன்னதுதான்.
.................................................. .....................
அந்தத் தருணத்தில் தி.மு.க தலைகள் எல்லோரும் சிவாஜியைத்தான் எதிரியாகப் பார்த்தார்கள். அவரை வளர்ந்துவிட்டால், தங்கள் தலைமைக்கு ஆபத்து என்று நினைத்து ராமச்சந்தரை வளர்த்தார்கள். கடைசியில் அவர்தான் அவர்களுக்கு ஆப்பு வைத்தார். சிவாஜி தன்னை வளர்த்துவிட்டவர்களுக்கு எப்போதுமே விசுவாசமாக இருந்திருக்கிறார். உதாரணம், பராசக்தி பெருமாள் முதலியார். அரசியலிலும் காமராஜர் சிவாஜியை வளர்க்கவில்லை என்றாலும்கூட, அவர்பால், அவர் கொள்கையின்பால் ஈர்க்கப்பட்டு, ஆட்சியில் இல்லாவிட்டாலும், அவர் மறைந்தபிறகும் கூட அவர் புகழ் பாடினார். இதனை சிலர் மிகவும் லேட்டாகத்தான் உணர்ந்தார்கள்....
.................................................. ..........................
நடுநிலையற்ற
வீணாய்ப்போன மீடியாக்காரன்கள், சினிமாக்காரன்கள்,
அக்காலத்தில் கூட நிறையப் பேர் இருந்து இருக்கிறார்கள்போல!
.................................................. ...............
அனைத்தும் அவரது எடுபிடிகளால் பரப்பப்பட்ட பொய்கள்...
பத்திரிக்கைகளும் இதற்கு உடந்தையாக இருந்துள்ளனர்.
.................................................. ...........
எம்ஜிஆர் ஒரு வசூல் சக்ரவர்த்தி அவர் ஆரம்பித்த சாராயக்கடை இன்றைய தீபாவளி வசூல் 560 கோடி ஆதாரம் வேண்டுமா அவர்களிடம் உண்டு
Last edited by sivaa; 15th November 2020 at 11:55 PM.
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
16th November 2020, 07:05 PM
#624
Senior Member
Devoted Hubber
Originally Posted by
sivaa
நண்பர் அடிமைப்பெண் சென்னை வசூல் முதலில் ரூபாய் 13.6 என்றார்
அப்புறம் 14.4 என்கிறார்
ஒரே குழப்பமா இருக்காம்,
Thanks Sekar.P
நடிகர் திலகத்தின் படங்கள் சாதனை செய்துவிட்டால் அதனை தங்கள் நடிகரது படங்கள் முறியடித்துவிட்டது என காட்டுவது எம் ஜீ ஆர் ரசிகர்களது வழமையான ஒரு செயல்பாடு.1961 ல் பாவமன்னிப்பு சென்னை நகரில் முதன் முதலாக வசூலில் 10 லட்சம் கண்டு சாதனை படைத்திருந்தது.இதனை 4 வருடங்கள் கடந்து அவர்களது எ வீ பிள்ளை தாண்டியிருந்தது. எனினும் அதே வருடம் நமது திருவிளையாடல் வந்து எ வீ பிள்ளை வசூலை தாண்டி அவர்களது இன்பக்கனவை சிதைத்துவிட்டது. 4வருடங்கள் கடந்து அ பெண் முறியடிக்குமென எதிர்பார்த்தார்கள் முடியாமல்போய்விட்டது.எனவே அவர்களாக தங்களுக்கு ஏற்றவிதமாக வசூல்களை ஏற்றி இறக்கி வெளியிட்ட போலிவசூல்தான் இவை. அவர்களே வெளியிட்டுவிட்டு எது சரியென தெரியாமல் அவர்களுக்கே குழப்பம்.உண்மை ஒன்றிருந்தால் குழம்பத்தேவையில்லை.சென்னை வசூல் விபரங்கள் திருவிளையாடல் 13,82,000.00 எ வீ பிள்ளை 13,23,000.00 அ பெண் 13,60,000.00 எனவே அ பெண் திருவிளையாடல் வசூலை தாண்டிவிட்டதாக காட்ட 14,40,000.00 என வசூலை தயார்படுத்தி பதிவிட்டு தங்களுக்குத்தாங்களே மகிழ்ந்துகொண்டார்கள்.
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
16th November 2020, 07:50 PM
#625
Senior Member
Devoted Hubber
எதிர் முகாமிலிருந்து கொண்டு தன்னை இழிவாக பேசிய அசோகன் ,தேங்காய் ஸ்ரீனிவாசன் , தங்கவேலு போன்றவர்களை காழ்ப்புணர்ச்சி இன்றி தன படங்களில் வாய்ப்பு அளித்தார் அவர் சொன்னது " ஒரு நடிகனின் இயல்பு வேறு தொழில் வேறு இரண்டையையுந் நான் ஒப்பிட்டு பார்ப்பதில்லை " என்று . பராசக்தி படம் ஒரு ரீல் படமாக்க பட்ட பின்பு ஏ.வி எம் செட்டியாருக்கு சிவாஜியின் நடிப்பு பிடிக்க வில்லை அப்போது பிரபலமாக இருந்த கே ஆர் ராமசாமியை அந்த வேடத்திற்கு நடிக்க வைக்க விரும்பினார் ஆனால் அவரது பாகஸ்தரான நேஷனல் பெருமாள் சிவாஜியை வைத்து படமெடுத்தால் நான் பாகஸ்தராக இருக்கிறேன் இல்லை என்றால் அதிலிருந்து விலகி கொள்ளுகிறேன் என்று சொல்லவே செட்டியார் வேண்டா வெறுப்பாக ஒப்புக் கொண்டார் . அந்த நன்றியை மறக்காத சிவாஜி ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் அன்று பெருமாளுக்கு பரிசளித்து அவரிடம் ஆசிர்வாதம் வாங்குவதை கடைசி வரை கடை பிடித்தார் . பராசக்தி படம் வருவதற்கு முன்பே அஞ்சலிதேவி சிவாஜியின் நடிப்பை ஒரு நாடகத்தில் பார்த்து தனது இரு மொழி படமான பரதேசி , பூங்கோதை அவரை ஒப்பந்தம் செய்தார் . பராசக்திக்கு முன்பாகவே பூங்கோதை வெளி வர தயாராக இருந்தது . பெருமாளின் வேண்டு கோளுக்கு இணங்க பராசக்தி முதலில் வெளிவந்தது சிறிது காலம் கழித்து அஞ்சலிதேவி " பக்த துக்காராம் ' தெலுங்கு படத்தில் சிவாஜியாக நடிக்க அழைத்தார் நன்றி மறவாத சிவாஜி சத்ரபதி சிவாஜிக்கான ராஜ உடைகளை தன செலவிலேதைத்து அந்த படத்தில் பணம் வாங்காமல் நடித்து கொடுத்தார்
Thanks Kumbakonam Srimanth Govindan
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
20th November 2020, 10:27 PM
#626
Senior Member
Devoted Hubber
தாம்பத்தியம் 20/11/1987 இன்று 33 வருடங்கள் நிறைவு.
Thanks Vcg Yhiruppathi
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
20th November 2020, 10:59 PM
#627
Senior Member
Devoted Hubber
திரையுலக வரலாற்றில் ஒரு திரைப்படம் நூறு நாட்களைக் கடந்தும் தொடர் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிய திரைப்படம் "திரிசூலம்' எனத் தெரிந்து வைத்திருந்த எனக்கு இதற்கு முன் பாகப்பிரிவினையும் இதுபோன்ற சாதனையை நிகழ்த்திய வெற்றிக் காவியம் என தெரிந்து கொள்ளாமல் தான் வந்திருக்கிறேன்,
நடிகர் திலகம் திரைப்படங்களது வெற்றிச் செய்திகளை கொஞ்சம் உன்னிப்பாக கவனித்தால் அதிலிருக்கும் மேலும் பல சாதனைகளை பிடிக்க முடிகிறது,
கடந்த காலங்களில் நிகழ்ந்த நடிகர் திலகத்தின் திரைப்பட வெற்றிகளை அதுவும் மதுரை நகர சாதனைகளை ஆவணப்படுத்தும் தொடர் பதிவுகளை நண்பர் திரு Vaannila Vijayakumaran
அவர்கள் தொடர் பதிவுகளை செய்திருந்தார், அதில் பாகப்பிரிவினை திரைக்காவியம் மதுரையில் சிந்தாமணி திரையரங்கில் தொடர்ந்து 216 நாட்கள் ஓடியிருந்த தகவலோடு ஒட்டுமொத்த வசூல் தொகை ரூபாய் 3,36,184-54/- என்பதோடு விநியோகபங்குதாரர் பங்கீட்டு தொகையையும் கூட துல்லியமாக குறிப்பிட்டிருந்தார்,
அதிலிருந்து நமக்குத் தெரிய வருவது யாதெனில்
மதுரையில் முதன் முதலாக வசூலில் 3 இலட்சத்தை கடந்த திரைக்காவியம் உறுதியாக பாகப்பிரிவினை மட்டுமே.என்ற
இந்தச் செய்தியை நான் முன்னர் ஒரு பதிவில் காட்டும் போது நண்பர் ஒருவர் மதுரையில் முதன் முதலாக 1956 ல் மதுரை வீரன் தான் சாதனை செய்தது அதன் பிறகு தான் பாகப்பிரிவினை எனக் குறிப்பிட்டார்,
விவரங்களை அலசுவோம்,
பாகப்பிரிவினை வெளியான சிந்தாமணி திரையரங்கு 1560 இருக்கைகளை கொண்டது,
திரையரங்கு அன்றைய நாளில் தினம் இரண்டு காட்சி மற்றும் சனி ஞாயிறு நாட்களில் மூன்று காட்சிகள் என கணக்கில் கொண்டு பார்த்தால்
வாரத்திற்கு 16 காட்சிகள் நடைபெற்று இருக்கும்,
100 நாட்களுக்கான 15 வாரங்களில்
15weeksX16 shows
= 240 shows
240 showsX 1560 seats
= 3,74,400 viewers
1959 வெளியான பாகப்பிரிவினையின் 100வது நாள் வெற்றி அறிவிப்பில் பார்வையாளர்கள் எண்ணிக்கை மற்றும் வசூல் தொகையை அறிவித்து இருக்கிறார்கள்
100 நாட்களில்
3,72,446 பார்வையாளர்கள் அதன் மூலம் வசூலான தொகை ரூ 2,29,060
அதாவது ஓடிய 100 நாட்களும் அரங்கு நிறைந்து ஓடியதால் மட்டுமே இந்த வசூல் தொகை,
தொடர்ந்து 216 நாட்கள் ஓடியதால் அடுத்த 116 நாட்களில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான தொகையை வசூலாக பெற்றிட முடியும் என்பதால்
216 நாட்களில் வசூல் ரூ 3,36,184/- ஆகியிருக்கிறது,
சராசரியாக டிக்கெட் கட்டணம் ரூ 61 பைசா என கணக்கில் கொள்ளலாம்,
இல்லை மதுரை வீரன் தான் முதலில் மூன்று லட்சம் வசூலாகி இருக்குமா?
அதையும் பார்ப்போமே?
அதாவது மதுரை செண்ட்ரல் திரையரங்கில் வெளியான மதுரை வீரன் தொடர்ந்து 181 நாட்கள் ஓடியிருக்கிறது,
180 நாட்களில் வசூலான தொகை என சொல்லப்படுவது ரூ 3,67,000/- ஆகும்,
ஆனால் இந்தத் தொகையை மதுரை வீரன் வசூலித்து இருக்க வேண்டும் என்றால்
1620 இருக்கைகளை கொண்டிருந்த செண்ட்ரல் திரையரங்கு தொடர்ந்து 180 நாட்களும் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடியிருந்தாலும் வசூலித்து இருக்காது
எப்படி?
16shows X 26 weeks
= 416 shows
416 shows X 1620 seats
= 673920 viewers
பாகப்பிரிவினை 1959 ல் வெளியான திரைப்படம் அதன் டிக்கெட் கட்டணம் ரூ 0.61 பைசா என்றால்
1956 ல் வெளியான மதுரை வீரன் மேலும் குறைவான கட்டணமாகத் தான் இருந்து இருக்க வேண்டும்
6,73,920 viewers X 0.55 பைசா
= ரூபாய் 3,70,656-00
இதற்கு மேலும் விளக்கம் வேண்டுமா?( காட்சிகள் பற்றிய சந்தேகம் இருந்தால் அது பாகப்பிரிவினைக்கும் பொருந்தும்)
பாகப்பிரிவினை வசூலை ஏற்கனவே வசூலித்து விட்டதாக கூறுவதற்கு என்றே ஒரு தொகையை பின்னாளில் உருவாக்கி இருக்கிறார்கள்,
இதற்கு மேலும் புரியாதவர்களுக்கு
1956 ல் மதுரை வீரன் 180 நாளில் ரூ 3,67,000
1965 ல் எங்க வீட்டு பிள்ளை-176 நாளில்
ரூ 3,85,000
ஓடிய நாட்கள் ஏறக்குறைய ஒன்று தான்
ஆண்டு இடைவெளி 9 வருடங்கள்
எப்படி ஏறக்குறைய ஒரே தொகையை வசூலிக்க முடியும்?
தங்கம் தியேட்டரா?
அதில் 1960 கள் வரை எந்தத் திரைப்படமும் இரண்டரை லட்சத்தை கூட வசூலித்து இருக்க வாய்ப்பில்லை அங்கு கட்டணம் மிகவும் குறைவாகவே இருந்து இருக்கிறது,
என்னை ஒருத்தர் கணக்கில் நீ என்ன புலியா எனக் கேட்டிருந்தார்??
Thanks Sekar.P
...........................................
மதுரைவீரன் ,நாடோடி மன்னன் இரண்டினதும் மதுரை வசூல் எம் ஜீ ஆர் ரசிகர்களால் வெளியிடப்பட்டவை இட்டுக்கட்டிய போலி வசூல்கள். நாடோடி மன்னன் மதுரை தங்கம் 133 நாள் சரியான வசூல் 2,13,935.58. ம.வீரன் சரியான வசூல் கிடைக்கவில்லை . பாகப்பிரிவினை 3 லட்சம் தாண்டிவிட்டதென்ற பொறாமையில் எம் ஜீ ஆர் ரசிகர்களால் ம வீரனும் நா மன்னனும் 3லட்சம் தாண்டியதாக காட்டுவதற்கு வெளியிடப்பட்ட போலி வசூல்கள்தான் அவை.(இனி கீழ்ப்பாக்கத்தில் இருந்து புலம்பப்போகிறார்கள் பாவம்.)
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
22nd November 2020, 07:40 PM
#628
Senior Member
Devoted Hubber
அரசியல் காழ்ப்புணர்வின் காரணமாக சிவாஜியின் படங்களை ஓட விடாமல் தடுத்து யாருக்கோ "வசூல் சக்கரவர்த்தி" என்ற மகுடத்தைச் சூட்ட, சில நாலாந்திர மனிதர்கள் செய்த சதி வேளைகளின் வெளிப்பாடே இதெல்லாம்.
1970 ஜனவரி 14 ல் கற்பகம் பிக்ச்சர்ஸ் நிறுவனத்தின் மாட்டுக்கார வேலன், எங்க மாமா இரண்டையும் சென்னையில் வெளியிட்டு இருந்தனர்.
நன்றாக ஓடிக்கொண்டிருந்த எங்க மாமாவை வெலிங்டன் திரையரங்கில் 50 நாட்களை கடந்த நிலையில் யாருடைய தூண்டுதலினாலோ திடீர் என மாற்றி விட்டார்கள். ஏன் மாற்றினார்கள் என்பது இன்றளவும் மர்மமாகவே உள்ளது.
மதுரை தங்கத்தில் 7 நாட்களில் 57000 ரூபாயை வசூலித்த எங்க மாமா வசூலில் புதிய சாதனை படைத்தது. முதல் வாரத்தில் அதிக வசூல் தந்த திரைப்படம் என்ற பெயரைத் தட்டிச் சென்றது. அதற்கு முன் அன்னை இல்லம் திரைப்படம் 51000 ரூபாயை வசூலித்து இருந்தது.
சிவாஜி நடித்து 40 க்கும் மேற்பட்ட படங்கள் தொண்ணூறு நாட்களை தாண்டிய நிலையில் எக்காரணமும் இன்றி நல்ல வசூல் நிலையிலும் மாற்றப் பட்டது.
சிவாஜி வானிஸ்ரீ நடித்த " நிறை குடம்" வசூல் மழையோடு ஓடிக்கொண்டிருந்த போதும் யார் தூண்டலிலோ திரையரங்கிலிருந்து எடுக்கப்பட்டது.
நேரிடையாக போட்டியிட முடியாதவர்கள் சிவாஜியின் திறமையைத் தகர்க்க மறைமுகமாக முதுகில் குத்தியதின் வலிகள் எங்க மாமாவுக்கும் ஏற்ப்பட்டது.
* செல்லுலாய்ட் சோழன் தொடரில் இனிய எழுத்தாளர் நாஞ்சில் இன்பா அவர்கள் எழுதி வருவது ( தமிழக அரசியல் வாரமிருமுறை இதழ்)
(மீள் பதிவு)
Thanks Sekar .P
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
22nd November 2020, 10:19 PM
#629
Senior Member
Devoted Hubber
பொய் பெருமைகள் கொண்ட செய்திகள் மக்களிடையே திணிக்கப்பட்டதற்கு ஓரு உதாரணம் சொல்லுங்க என்றார் நமது நண்பர்,
எங்களைப் பொறுத்த அளவில் நடிகர் திலகம் சிவாஜிக்கு எதிராக பின்னப்பட்ட செய்திகள் தான் பொறி தட்டும்,
அதற்கு ஓரு உதாரணம்
பேரறிஞர் அண்ணா அவர்கள் மேடையில் பேசினாராம்
"எம்ஜிஆர் பிரசார மேடையில் முகத்தை காட்டினாலே போதும் ஓரு லடசம் வாக்குகள் வந்து விடும் நான் முதல்வர் ஆகி விடுவேன்"
என்று,
ஆனால் நடந்த வரலாறு என்ன?
1957, 1962 தேர்தல்களில் தமிழகம் முழுவதும் பிரச்சார மேடைகளில் எம்ஜிஆர் மக்கள் முன் தோன்றி அண்ணா அவர்களுக்கு வாக்கு கேடடார்,
ஆனால் அந்த இரண்டு தேர்தல்களிலுமே அண்ணா அவர்களால் வெற்றி பெற்று முதல்வராக முடியவில்லை,
மாறாக எம்ஜிஆர் பிரச்சாரமே செய்யாத 1967 ல் நடந்த தேர்தலில் தான் அறிஞர் அண்ணா அவர்களால் முதல்வராக அமர முடிந்தது,
( ஓரு வேளை எம்ஜிஆர் அவர்கள் துப்பாக்கி சூடு படாமல் இருந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படாமல் இருந்து பிரசாரம் செயது இருந்தால் முடிவு மாறி இருக்குமோ? )
இப்படி நடந்த உண்மையான வெற்றி தோல்விகளை மறைத்து மக்களிடம் உண்மைக்கு நேர்மாறான கருத்துக்கள் தொடர்ந்து திணிக்கப்பட்டு வந்தன,
Thanks Sekar.P
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
23rd November 2020, 08:42 AM
#630
Senior Member
Devoted Hubber
வசூல் சக்கரவர்த்தி செவாலியே சிவாஜி கணேசனின் ஆலயமணி
வெளியான நாள் 23/11/1962 .இன்று 58 ஆண்டுகள் நிறைவு.
சென்னையில் 4 தியேட்டர்களில் 100 நாட்கள் ஓடிய முதல் படம்.
Biggest box office movie - ஆலயமணி
சென்னையில் முதன் முதலாக திரையிடப்பட்ட நான்கு திரையரங்குகளிலுமே 100 நாட்களைக் கடந்த வெற்றித் திரைக்காவியம்,
1962 ல் அப்படியான வெற்றி அடைந்ததோடு தொடர்ந்து மறு வெளியீடு ஆகி வெற்றி நடைப்போட்ட நிகழ்வுகள் கணக்கிலடங்காது, (சேகர்.ப)
Last edited by sivaa; 23rd November 2020 at 08:44 AM.
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
Bookmarks