-
25th November 2020, 12:56 PM
#1351
Junior Member
Diamond Hubber
பரமார்த்த குரு கதை தெரியுமா?
அநேகமாக அந்தக்கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அதில் வரும் சீடர்கள் வேறு யாரும் இல்லை. நம்ம அய்யனின் கைபிள்ளைங்கதான். அதில் வரும் சீடர்கள் அவர்களுக்குள்ளே பேசிக்கொண்டு முட்டாள்தனமான முடிவெடுப்பதில் வல்லவர்கள். அதற்கு சற்றும் குறைந்தவர்கள் அல்ல நமது கைபிள்ளைகள். ஒரு 4 பேர் இருந்து கொண்டு சகட்டுமேனிக்கு முட்டாள்தனமாக எதையாவது எந்த ஆதாரமில்லாமல் பேசுவது,அவர்களுக்குள்ளே முடிவு செய்து கொள்வது என்று பார்க்க ரொம்ப தமாஷாக இருக்கும்.
சிவந்தமண் படத்தை தயாரித்த ஸ்ரீதரே படத்துக்கு பல லட்சம் நஷ்டம் என்று சொன்னாலும் இவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இவர்களே தயாரிப்பு செலவை முடிவு செய்து இவர்களே வசூலையும் முடிவு செய்து இவர்களே லாபத்தையும் பேப்பரிலே போட்டு கொடுத்து விடுவார்கள். அந்த லாபத்தை ஸ்ரீதரிடம் கொடுத்திருந்தால் பாவம் அவர் அய்யனை வைத்தே கணக்கை தொடர்ந்திருப்பார்.
கலங்கிய விழிகளோடு ஆதரிப்பார் யாருமின்றி கலியுக கர்ணனை நாடி வந்து உதவி கேட்டதற்கு யார் காரணம். கையில் காசு இல்லையென்றால் கதவை சாத்தடி
என்ற வேசியின் செயலைப்போல கால்ஷீட் கொடுக்காமல் ஹீரோ 72 வை தவிக்க விட்டதால்தானே.
"தர்த்தி 8 திரை அரங்கில் 200 நாட்கள் மேல் ஓடிய படம். 266 நாட்கள் கல்கத்தா இம்பீரியல் திரை அரங்கில் ஓடியது krishna rao
இந்தியிலும் அருமையான வெற்றிப் படமாக அமைந்தது ஆனால் தயாரிப்பாளர் நேரடி பார்வையில் வெளியிடு செய்ததால் சரியாக கணக்கு காட்டப்படவில்லை என்றும் தகவல்"
இதோ கைபுள்ளைங்களின் காட்டுத்தனமான உளறல். "இதுவரை இந்தி "தர்த்தி" தான் தோல்வி என்றவர்கள் இப்போது திடீரென்று தர்த்தி படம் பயங்கர ஹிட்டாம். பல திரையரங்குகளில் வெள்ளிவிழாவும் 200 நாட்கள் தாண்டியும் ஓடி வெற்றி பெற்ற படமாம். அண்டப் புளுகை தாண்டி ஆகாசப் புளுகனாக கைபிள்ளைங்க மாறிவிட்டார்கள்.அய்யன் தலையை காட்டினாலே போதும் எந்த மொழிப்படமானாலும் பணால்தான்.
சுத்த லூஸுப் பயல்களாக இருப்பாங்க போல தெரியுதா? அதைவிட ஒருவன் பாகப்பிரிவினை வெளியான நாள் முதல் தினசரி 2 காட்சிகளாம். 100 நாட்கள் வரை நடந்த அத்தனை காட்சிகளும் ஹவுஸ்புல்லாம். பேஸிக் நாலெட்ஜ் இல்லாதவனெல்லாம் பேஸ்புக்கில் நுழைய தடைவிதித்தால்தான் மீதமுள்ளவர்களாவது நல்ல புத்தியை காப்பாற்றிக் கொள்ள முடியும். அந்தக் காலத்தில் சென்னைக்கு ஒரு சட்டம், மதுரைக்கு ஒன்று என்று ஊர்ஊருக்கு சட்டங்கள் தனித்தனியாக இயற்றியிருப்பார்கள் போல தெரிகிறது."கர்ணனு"ம் லாபம் கொட்டியதாம்.
முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயலும் பரமார்த்தனின் சீடர்களுக்கு உண்மையை சொன்னாலும் ஏற்க மாட்டார்கள். கர்ணனின் தயாரிப்பு செலவு 40 லட்சம் என்று தயாரிப்பாளர்களே சொன்னாலும் இவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அதே போல் சிவந்தமண் 80 லட்சம் என்று ஸ்ரீதர் சொன்னாலும் இவர்கள் சொல்லுகின்ற கணக்கைதான் அவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
உடனே "உலகம் சுற்றும் வாலிபனி"ன் தயாரிப்பு செலவு மற்றும் லாப வரவுகளை இவர்களே சொல்லி ஆகா உ.சு.வா நஷ்டம் என்று பிதற்றுவதை பார்த்தால் முற்றிய நிலையில் திரிகிறார்கள் போல தெரிகிறது. "உ.சு.வாலிபனி"ன் சரியான தயாரிப்பு செலவு படத்தை தயாரித்த எம்ஜிஆருக்கே தெரியாது.
கை நிறைய அள்ளிக்கொடுப்பதற்கே கணக்கு வைத்து கொள்வதில்லை. படத்தை எடுப்பதற்கா கணக்கு வைத்திருப்பார். அதற்கான கணக்கு எந்த பத்திரிகையிலாவது வந்திருந்தால் தெரியப் படுத்துங்கள் கைபிள்ளைகளே. ஆனால் எம்ஜிஆர் யாரிடமும் போய் "உ.சு.வாலிபன்" நஷ்டம் என்று சொல்லவில்லையே ஸ்ரீதர் பந்துலு நாகராஜனை போல.
ஆனால் "உலகம் சுற்றும் வாலிபனின்" வசூல் நீங்க நினைக்கிற மாதிரி கிடையாது. முதல் வெளியீட்டில் ஓடி முடிய 4.5 கோடி வந்தாலும் தொடர் வெளியீடுகளில் ஈட்டிய லாபம் கணக்கு வழக்கிற்கு அப்பாற்பட்டது. சுமார் 10 கோடியை தாண்டி வசூலாகிக் கொண்டிருக்கும் படம். கங்கை வெள்ளம் ஒரு சங்குக்குள் அடைபடாது என்பதை கைபிள்ளைகள் உணரும் அறிவு கிடையாது. ஆனால் உங்கள் "சிவந்தமண்", "தங்கப்பதக்கம்", "திரிசூலம்" ஆகிய படங்கள் அடக்கம் செய்யப்பட்டு பல ஆண்டுகள் ஆகி விட்டன என்பதை மனதில் கொள்ளுங்கள். நீங்கள் "சிவந்தமண்" "கர்ணன்" போன்ற படங்களின் நஷ்டத்தை ஒத்துக்கொண்டால்தான் அடுத்தடுத்து அய்யனால் அல்லல்பட்ட தயாரிப்பாளர்களை பற்றி எழுதமுடியும். ஆதலால் சீக்கிரம் ஒத்துக் கொள்ளுங்கள் கைபிள்ளைகளே. எல்லோருக்கும் ஒரே படத்தை பற்றி எழுதினால் போரடிக்கும் அல்லவா?
எம்ஜிஆர் எங்காவது சென்று படமெடுத்ததில் இவ்வளவு நஷ்டம் என்று கூறினாரா?
ஆனால் ஸ்ரீதரும் BR பந்துலுவும் நாகராஜனும் உமாபதியும் கதறிக்கொண்டு கம்பெனி கடனில் மூழ்கும் சூழ்நிலையில் தலைவரிடம் வந்து மானத்தையும் பணத்தையும் காப்பாற்றி கொண்டதை அவர்களே ஒப்புக்கொண்டாலும் கைபிள்ளைகள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அத்தனை தயாரிப்பாளர்களையும் சூரசம்ஹாரம் பண்ணி தொலைத்து விட்டு வீட்டில் அய்யன் மனம் வெதும்பி விட்டத்தை பார்த்து கொண்டிருந்தாரே, ஏன் கைபிள்ளைகளுக்கு தெரியவில்லையா? ஆனால் பாலாஜியும் பீம்சிங்கும் அய்யன் அகோரமாக எவ்வளவு அடித்தாலும் தாங்கிக் கொண்டு அய்யனை விட்டு ஓடாதகாலிகளாம். மற்றவர்கள் எல்லோரும் ஓடுகாலிகளாம். கைபிள்ளைகளின் கொள்கைகள் வளர காமெடியாயிட்டு உண்டு.
அப்போது வசதி உள்ள கைபிள்ளைங்க அய்யனைப் போட்டு ஒரு படம் எடுத்து இதைப்போல் கணக்கு கொடுத்திருக்கலாம். அய்யன் சீப் ரேட் நடிகர்தானே நீங்கள் டிக்கெட் கிழிக்கும் பணத்தில் அய்யனை வைத்து 5,6 படமாவது எடுத்திருக்கலாம். அப்போதுதான் ஸ்ரீதர் பந்துலு நாகராஜன் உமாபதி பட்ட கஷ்டங்கள் உங்களுக்கு புலப்படும். என்ன அய்யனை
வைத்து படம் எடுக்க சொல்லி கைபிள்ளைகளுக்கு மரணபயம் காட்டி விட்டேனா?.அய்யனின் மிகை நடிப்பை நாடே சொல்வதை உணர்ந்து டிவி மீடியாக்கள் அய்யனின் நடிப்பை கேலி செய்வதை மக்கள் வெகுவாக ரசிக்க ஆரம்பித்து விட்டார்கள்.
கைபிள்ளைகள் வசூலிலும் வாய் வீச்சிலும் உண்மையோடு நடந்தால் இங்கு எனக்கு வேலையே இருக்காது. அவர்கள் கப்ஸாவும் கரடியுமாக விட்டதால்தான் உண்மையை ஆதாரத்துடன் எடுத்துச் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இதை பதிவு செய்கிறேன்..........KSR.........
-
25th November 2020 12:56 PM
# ADS
Circuit advertisement
-
25th November 2020, 05:58 PM
#1352
Junior Member
Platinum Hubber
பாட்டாலே புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர். - வின் டிவியில்*சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*19/11/20 அன்று அளித்த*தகவல்கள்*
---------------------------------------------------------------------------------------------------------
கவிஞர் கண்ணதாசன் எழுதிய பாடல் நாலு பேருக்கு நன்றி என்பது சங்கே முழங்கு படத்தில் இடம் பெற்றது .* அந்த பாடல் எழுதப்படும்போது , இரண்டாவது சரணத்தில் போகும்போது வார்த்தையில்லை. போகுமுன்னே நன்றி சொல்லி வைப்போம் என்று எழுதுகிறார் .* எம்.ஜி.ஆர். அவர்கள் பொதுவாக அறச்சொற்கள் வருவதை பெரும்பாலும் விரும்பமாட்டார் .* அந்த வார்த்தைகளில் சில மாற்றங்கள் தேவை என்று வேண்டுகோள் வைத்தார் . அதன் பின்னர் கண்ணதாசன் அவர்கள் வரிகளை* மாற்றி எழுதி கொடுத்தார் .வாழும்போது வருவோர்க்கெல்லாம் வார்த்தையாலே* நன்றி சொல்வோம். வார்த்தையின்றி போகும்போது மௌனத்தாலே நன்றி சொல்வோம் என்று எழுதி கொடுத்தார் .* எம்.ஜி.ஆர். அவர்கள் தன் இறுதி காலத்தில் சரளமாக பேசமுடியாத காலத்தில் சில முக்கியஸ்தர்களுக்கு* கைகளால் தொட்டு நன்றி தெரிவித்துள்ளார் .* அதனால்தான் தான் பட்ட துன்பங்கள் சிறு குழந்தைகள் ,வளர்ந்த மாணவ மாணவியர் படக்கூடாது என்பதற்காக வாய் பேசமுடியாத, காது கேளாதோர் பள்ளி உருவாக தன் சொத்தில்*ஒரு பகுதியை ராமாவரம் தோட்டத்தில் உயில் எழுதி வைத்தவர் எம்.ஜி.ஆர்.*
மு.கருணாநிதி அவர்கள் மிக பெரிய கதாசிரியர், பல ஆண்டுகள் முதல்வராக பதவி வகித்தவர். ராஜதந்திரி, திறமையான நிர்வாகி என்றெல்லாம் பெயரெடுத்தவர் .நீங்கள் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டால் எப்படி அவருக்கு எதிராக ஆட்சியில் அமர்ந்து பதவியில் நீடிக்க முடியும் என்று நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு எம்.ஜி.ஆர். ,கருணாநிதி அவர்கள் நல்ல கதாசிரியர் தான் .அவரது கதை வசனத்தில் நான் பல படங்களில் நடித்திருக்கிறேன் . அவர் திரைப்படங்களில் எந்த இடங்களில் எந்த மாதிரி திருப்பங்கள் வைத்த மாதிரி கதை வசனம் எழுதுவார் என்பது எனக்கு அத்துப்படி .* அவர் ஒரு கதாசிரியர்தான் .* நான் ஒரு நடிகன் .* நான் 100 கதாசிரியர்களிடம் கதைகள் கேட்டுள்ளேன். வசனங்களை உச்சரித்துள்ளேன் .* அந்த 100 கதாசிரியர்களும் திரைப்படங்களில் எப்படி எல்லாம் திருப்பங்கள் ஏற்படுத்துவார்கள் என்பதும் எனக்கு தெரியும்.* ஆகவே அதெல்லாம் ஒரு பிரச்னை இல்லை. பொறுத்திருந்து பாருங்கள் என்றாராம் .*
திரு.கா. லியாகத் அலிகான் பேட்டி : வின்*டிவி நேயர்களுக்கும் , புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.பக்தர்களுக்கும் ,எனது பணிவான வணக்கங்கள் .* தொடர்ந்து வின்*டிவியில்*புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.பெயரில் சகாப்தம் என்கிற*நிகழ்ச்சியை*ஒளிபரப்பி வரும் நண்பர் திரு.தேவநாதன்*அவர்களுக்கு*எனது அன்பான*வணக்கத்தையும், நன்றியையும் தெரிவித்து கொள்கிறேன் .பல விஷயங்களை*புரட்சி தலைவருடைய கடந்த கால*வாழ்க்கையில்*நடைபெற்ற*சம்பவங்களை , அவருடன் தொடர்பில் இருந்த*எங்களை போன்றவர்களுடைய அனுபவங்களை எல்லாம் சொல்லி*அதன் மூலமாக*பல்வேறு தரப்பில் இருந்து எங்களுக்கு அன்பான*அழைப்புகளும், தொலைபேசி மூலம் மிகுந்த**ஆறுதலான*செய்திகளும் பொதுமக்களும், எம்.ஜி.ஆர். பக்தர்களும்**தரும்போது*உள்ளபடியே* *எனது உள்ளமெல்லாம் பூரிக்கின்றது . புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பற்றிய பல்வேறு சம்பவங்களை, செய்திகளை ஒருநாள்*முழுக்க பேசி கொண்டே இருக்கலாம்.**அந்த அளவிற்கு*இதிகாசங்கள், புராணங்கள் போல அவர் வாழ்க்கையில்*நடைபெற்ற*சம்பவங்கள் அவருடைய வாழிவியல் முறையே**எதிர்கால சந்ததினுடைய* நடைமுறையாக*மாறிவிட்டது என்பதை*நம்முடைய*அனுபவத்திலே* *தெரிந்து கொள்ள முடிகிறது .* தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் குழந்தைகளிடத்தில் மாறாத*பற்று கொண்டவர் .யாரிடமும் பேசும்போது கொஞ்சம் கூட முகம் சுளிக்காமல் இருப்பதில் மிகுந்த அக்கறை கொண்டவர் .***அவர் பேரறிஞர் அண்ணாவின் தலைமையிலான தி.மு.க. வில் இருந்தபோதே குழந்தைகளின் மீது பற்றும்*பாசமும் கொண்டவர் .அந்த பற்று, பாசத்தை*ஆட்சிக்கு வந்ததும்*சத்துணவு வழங்குதல், இலவச*காலணி*,*இலவச பற்பொடி, இலவச சீருடை**என்று பல்வேறு திட்டங்களை*அமுல்படுத்தினார் .* எதிர்க்கட்சியாக இருந்தபோது தலைவர் அவர்கள் காலையில்*படப்பிடிப்புக்கு செல்லும்போது தி.நகர் ,ஆற்காடு*தெருவில்*உள்ள அவரது*அலுவலகம் (தற்போது எம்.ஜி .ஆர். நினைவு இல்லம் )செயல்பட்டது .அங்கிருந்து செல்லும்போது வழியில்*ஒரு பள்ளிக்கூடம் உள்ளது**அந்த பள்ளியில்*குழந்தைகள் விளையாடி கொண்டிருப்பார்கள் மாலை நேரத்தில்..சில*குழந்தைகள்* 1 அடி ஆழத்தில் உள்ள ஒரு குழாய் அருகே தண்ணீர் பிடிக்க கூட்டமாய் நிற்பார்கள்**அந்த இடத்தில சிறிது தண்ணீர் தேங்கி இருக்கும் .அங்குள்ள**குழாய்*மூலம் தாங்கள் சாப்பிட்ட*தட்டுக்களை*கழுவி*சுத்தம் செய்துவிட்டு ,அந்த குழாய்*நீரை*பிடித்து*குடிப்பார்கள். இந்த காட்சிகளை எல்லாம் புரட்சி தலைவர் ஒருநாள்*காரை நிறுத்தி கவனித்துள்ளார் . அங்கிருந்து தலைவர் புறப்படும்போது ,கவனித்த அந்த குழந்தைகள் அதோ எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆர். என்று குரல் கொடுத்த வண்ணம் காரை*நோக்கி படையெடுத்த வண்ணம் இருந்தார்கள் . இதை*பார்த்து பூரிப்பு அடைந்த*தலைவர் மெதுவாக அங்கிருந்து புறப்படுகிறார் . அடுத்த நாள் தலைவர் எம்.ஜி.ஆர். வருவார் என்கிற எதிர்பார்ப்பில் குழந்தைகள் தங்களது வழக்கமான*தட்டுக்களை சுத்தம் செய்வது, தண்ணீர் குடிப்பது போன்ற வேலைகளில் ஈடுபட்டிருப்பதை பார்த்துவிட்டு , அந்த குழந்தைகள் காரை பார்த்து சத்தம் போட்டவுடன்*தலைவர் அங்கிருந்து புறப்பட்டு செல்கிறார் . அதற்கு அடுத்த நாள்* தலைவரின் கார்*அந்த வழக்கமான இடத்தில நிற்கும்போது குழந்தைகள் யாரையும் காணவில்லை .* அது**குறித்து* *விசாரித்ததில்தலைவரின் அன்பை பெற்ற சடகோபன் என்ற கட்சி பிரமுகர் அந்த பள்ளி தலைமை ஆசிரியரிடம் தலைவர் காரில் வரும்போது*குழந்தைகள் சத்தம்*போட்டு தொந்தரவு செய்வதாக புகார் அளித்ததன் பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தன் கார்*ஓட்டுநர் மூலம் தலைவர் தெரிந்து கொண்டார் .* மேலும் கார்*ஓட்டுநர் தலைவரிடம் நாம் படப்பிடிப்புக்கு செல்லும் சமயம்*குழந்தைகள் இடையூறு செய்வதாக நான்தான்*சடகோபனிடம் சொன்னேன்*.அவர் பள்ளி தலைமை ஆசிரியருக்கு புகார் அளித்துள்ளார் என்று சொன்னார் . குழந்தைகளின் நெருக்கடி, பிரச்னைகளை உணர்ந்த*தலைவர் அடுத்த நாள்,குழந்தைகள் குடிப்பதற்காக குடிநீரை நிரப்பும் ஒரு* பெரிய எவர்சில்வர் ட்ரம்*,அதில் குழந்தைகள் குடிநீர்*பிடிப்பதற்கு வசதியாக*ஒரு குழாயை பொருத்தி, அத்துடன் 4 டம்ளர்கள்*சேர்த்து*இலவச*பரிசாக*பள்ளி தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்கப்பட்டது .*இது ஒரு குறைந்தபட்ச செலவுதான் என்றாலும் கூட, அந்த பகுதியில்*வாழக்கூடிய*எத்தனையோ, தொழிலதிபர்கள் , ,மிக* பிரபலமானவர்கள் குழந்தைகளின் செயல்பாடுகளை கண்டும்*காணாமல்தான் சென்றிருக்கிறார்களே தவிர* ஒருவருக்கும் அந்த குழந்தைகளின் பிரச்னைகளை தீர்க்குப்பொருட்டு எந்தவித*உதவி செய்யவும் தயாராக இல்லை .ஆனால் தலைவர் அவர்களுக்கு நல்லெண்ணம் இருந்த காரணத்தால் இந்த உதவியை*செய்தார் . அது மட்டுமல்ல . அந்த குழந்தைகளை தலைவர் நேசித்தார்*என்பதுடன் எல்லா குழந்தைகளையும் அவர் நேசித்தார்*என்பதை*அவரது*முதல்வர் பதவி காலத்தில் நான் நேரடியாக*பார்த்து உணர்ந்தவன், மகிழ்ந்தவன் .**.****
1982ல் சத்துணவு திட்டத்தை முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்கள் கொண்டு வந்து அதற்கு*ஆகின்ற*செலவு*எவ்வளவு என்று* ஆலோசித்த நேரத்தில் இந்த திட்டத்தை*நிறைவேற்றும்*நிலையில்*நிதி ஒதுக்கும் வகையில்*அரசு இல்லை. கஜானாவும் காலியாகிவிடும் என்று அரசு அதிகாரிகள் சொன்னபோது ,கவலை வேண்டாம். நான் பிச்சை எடுத்தாவது இந்த திட்டத்தை*,*குழந்தைகளுக்கு ஒருவேளையாவது சத்துணவு தரவேண்டும்*என்கிற*என் லட்சிய*கனவை*நிறைவேற்றுவேன் என்று அந்த நிலையை உருவாக்கிய* சரித்திர நாயகன்**புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். 60 லட்சம் குழந்தைகளுக்குதிட்டம் தீட்டினார்*.இன்றைக்கு எடப்பாடி திரு.பழனிசாமி*தலைமையிலான அரசு சுமார்*70 லட்சம் குழந்தைகளுக்கு சத்துணவு வழங்கும்*திட்டமாக*விரிவாக்கம் அடைந்துள்ளது .ஆரம்பத்தில் யாரோ ஒரு தனி மனிதனின்*திட்டமாக உருவாகியதை ,பிற்காலத்தில்** புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். என்கிற தனி மனிதனின்*இந்த திட்டமானது இன்றைக்கு 70 லட்சம் குழந்தைகளுக்கு உணவு கிடைக்கும் சூழ்நிலை*உருவானதை பாராட்டி யுனிசெப் என்கிற அமெரிக்க*நிறுவனம் 1982ல் சத்துணவு அருந்திய குழந்தைகள் ஒரு சில*ஆண்டுகளில் இம்மியூனிட்டி பவர்*அதிகமாகி, நல்ல வலுவுள்ள , எதிர்ப்பு சக்தி*நிறைந்த*குழந்தைகளாக மாறி உள்ளதற்கு அத்தாட்சியாக சான்றிதழ் ஒன்றை அளித்திருப்பதாக மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி*ஜெயலலிதா அவர்கள் குறிப்பிட்டு இருந்தார்கள் .* அந்த நேரத்தில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.*அமுல்படுத்திய சத்துணவு திட்டத்தை பாராட்டியதோடு, அதை தொடர்ந்து செயல்படுத்த பொறுப்புடன்* செல்வி. ஜெயலலிதா அவர்கள் பணியாற்றினார்*என்பது குறிப்பிடத்தக்கது .* இந்த சிறிய வயது குழந்தைகளுக்கு பெற்றோர்களாகிய நாம் அவர்களுக்கு ஒழுக்கத்தையும், நல்ல போதனைகளையும் கற்று*தர வேண்டியது மிகவும் அவசியம் . இந்த கால கட்டத்தில் நல்ல போதனைகள், ஒழுக்கங்களை குழந்தைகள் ஏற்று கொள்ள கூடிய*நிலை இல்லாமல் இருக்கலாம்**அந்த நேரத்தில் அவற்றை*வலுக்கட்டாயமாக திணிக்காமல், அன்பான முறையில் எடுத்து சொல்வோமேயானால்* அந்த குழந்தைகள் இன்னும் மிக பெரிய இடங்களுக்கு,*உயர் பதவிகளுக்கு தகுதி உள்ளவர்களாக வருவதற்கு ஒரு வாய்ப்பாக இருக்கும் என்பதை புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள்* *நமக்கெல்லாம் எடுத்து சொல்லி இருக்கின்றார் .* அவர் நடத்திய பள்ளிக்கூடம்எதிர்க்கட்சியில் பேரறிஞர் அண்ணாவின் தி.மு.க வில் இருந்தபோது அன்னை ஜானகி அம்மையார் பெயரில் ஒரு பெரிய கூரை வீட்டை உருவாக்கி, அதில் குழந்தைகளை படிக்க வைத்து .அந்த பள்ளியை பராமரித்து வந்த நேரம், ஒரு கட்டத்தில் மழை அதிகமாகி ,சாலைகளில் வெள்ளம் தேங்கி, வாகனங்கள் செல்ல*முடியாத நிலையில்*ஏ.வி.எம்.ஸ்டுடியோவில் இருந்து வெளியே வரும்போது ஒரு குடையில் தன்னை*மறைத்தபடி நடந்து வந்தார்*புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.*அப்போது அவரை யாராலும் அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை.அந்த கூரைப்பள்ளியில் குழந்தைகள் நனைந்து விடுவார்கள் என்று கருதி,தாயுள்ளத்தோடு, ஒரு தந்தையின் பராமரிப்பு உள்ளதோடு , அங்கிருந்து நடந்து வந்துவடபழனியில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் தங்கவைக்க நினைத்தால் அங்கு ஒரே வெள்ளக்காடாக இருக்கிறது . பாதிப்புக்கு உள்ளான குழந்தைகளை வெளியே அழைத்து**உரிய* இடத்திலே தங்கவைத்து, விட்டு, தன சொந்த செலவில் ஒட்டு வீடு போன்ற ஒரு பள்ளிக்கூடம் அமைத்து*மழையால்*ஒழுகா வண்ணம் அமைத்து கொடுத்தவர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். இது நடந்த ஆண்டு 1959;ல். இந்த சேவைகளை எல்லாம் எதிர்காலத்தில் நாம் அரசியலுக்கு வருவோம்,ஆட்சி பீடத்தில்*பதவியில்**அமருவோம்*என்பதற்காக அல்ல. இயற்கையாகவே அவரது உள்ளத்தில் ஊறியிருந்த சேவை*மனப்பான்மையானது குழந்தைகளின் மீது அவர் காட்டிய அளவு கடந்த பாசம் ,அன்பு ஆகியன என்பது வரலாற்று பதிவுகளில் பொறிக்கப்படவேண்டிய*முக்கிய செய்தி .* அந்த பள்ளியிலே*குழந்தைகளை பராமரிக்கின்ற நேரத்தை பார்த்தால்*ஒரு குழந்தை கண்ணுக்கு தெரிகிறது. அந்த குழந்தையை அழைத்து*நீ தர்மபுரியில் இருந்து வந்தவள்தானே.நீ எங்கே இப்படி என்று கேட்டிருக்கிறார் .ஆமாம் ஐயா, உங்களை எங்கள் ஊரில்*பார்த்திருக்கிறேன். இப்போது உங்கள் உதவியில்தான்* உங்கள் பள்ளியில்**படித்து வருகிறேன் என்று சொன்னாள்*.அதை கேட்டு சிரித்து கொண்ட தலைவர், நான் தருமபுரி வந்தபோது உன்னுடைய பெற்றோரிடம் கேட்டேன். இந்த குழந்தையை நான் நன்றாக வளர்த்து படிக்க வைக்கிறேன் என்றபோது*உன்னுடைய தந்தை சம்மதிக்கவில்லை* எனக்கு இருப்பது ஒரே ஒரு குழந்தை என்றார் .சரி,நீங்களே வளர்த்து கொள்ளுங்கள் என்றேன்.* ஆனால் இப்போது பார்த்தால்*எனக்கே வியப்பாக இருக்கிறது .நீ இங்கே படிப்பது* எனக்கு*மகிழ்ச்சியாகவும் இருக்கிறது .நன்கு புகழடைந்த தலைவர் ,மிக பிரபலமான தலைவர் ஒரு ஊருக்கு*2* ஆண்டுகளுக்கு முன்பு பார்த்த**குழந்தையை இனம் கண்டு* ,நன்கு நினைவில் கொண்டு*,ஞாபகத்தை வரவைத்து* அந்த குழநதையை*நலம் விசாரித்து ,,தன்* பள்ளியில்*படித்து வருவதை அறிந்து*மகிழ்வுற்றார் அல்லவா இதில் இருந்து அவருடைய ஞாபக சக்தியின் வலிமையை* நாம் அறிந்து கொள்ளலாம். மேலும் எல்லா குழந்தைகளின் மீதும் அபரிமிதமான*பாசம், அன்பு காட்டிய*அந்த பாசமிக்க தலைவர் குழந்தைகளையே தத்து எடுத்து வளர்க்க ஆசைப்பட்டவர் .அதுபோலவே அ.தி.மு.க. அரசு குழந்தைகளை தத்து எடுத்து கொள்ள முனைந்தது மட்டுமல்லாமல் அவர்களுக்கு சத்துணவு, ஜாதி மதம் பேதமின்றி,, உயர்வு தாழ்வு மனப்பான்மை தவிர்த்து* அனைவருக்கும் சீருடை, காலணி, பற்பொடி, அனைத்தும் இலவசமாக*தருகின்ற அரசாக*அ.தி.மு.க. அரசு அமைந்தது*என்பது குறிப்பிடத்தக்கது .இவ்வாறு திரு.லியாகத் அலிகான் பேசினார் .
நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள்*/காட்சிகள் விவரம்*
-------------------------------------------------------------------------------------
1.யாரது*யாரது தங்கமா*- என் கடமை*
2.நாலு பேருக்கு*நன்றி - சங்கே முழங்கு*
3.நல்லவேளை நான் பிழைத்து கொண்டேன்*-நான் ஆணையிட்டால்*
.4.திரு.கா. லியாகத் அலிகான் பேட்டி*
-
25th November 2020, 06:18 PM
#1353
Junior Member
Platinum Hubber
மக்கள் திலகம் எம்.ஜி..ஆர்* அகிலம் போற்றும்*ஆயிரத்தில் ஒருவன்* தொடர்ந்து மறு வெளியீட்டில்*சாதனை*..........................
------------------------------------------------------------------------------------------------------------------------------
ஆலங்குளம் ( நெல்லை மாவட்டம்) டி.பி.வி. மல்டிபிளக்ஸ்* ஸ்க்ரீன் 1ல்*23/11/20முதல் தினசரி 3 காட்சிகள்*
சங்கரன் கோயில் (நெல்லை மாவட்டம் ) கீதாலயாவில் 24/11/20 முதல்*(3 நாட்கள் மட்டும் )* -தினசரி மாலை /இரவு -2 காட்சிகள்*
சாத்தான்குளம் லட்சுமியில்* 24/11/20 முதல் 3 நாட்கள் மட்டும் -*தினசரி மாலை / இரவு - 2 காட்சிகள் .
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
26th November 2020, 07:30 AM
#1354
Junior Member
Diamond Hubber
#நாடோடி_மன்னன் படம் குறித்து ஒரு சின்ன பிளாஷ்பேக்...
'மலைக்கள்ளன், 'அலிபாபாவும் 40 திருடர்களும், 'மதுரை வீரன், 'தாய்க்குப் பின் தாரம் என்று வெற்றிப் படிகளில் ஏறி புகழின் உச்சியில் இருந்த எம்.ஜி.ஆர். நடிப்பதற்காக பல் வேறு படவாய்ப்புக்கள் காத்திருந்தன. ஆனால், அதையெல்லாம் ஒதுக்கிவிட்டு தனது முழு கவனத்தையும் 'நாடோடி மன்னன்' படம் எடுப்பதில் திருப்பினார் எம்.ஜி.ஆர்.! அது ஏன் என்பதற்கான விளக்கமும் கொடுத்தார்.
''நான் சொந்தத்தில் 'நாடோடி மன்னன்' படத்தை ஏன் ஆரம்பித்தேன்? எனக்காக எத்தனையோ படங்கள் காத்திருக்கும் நேரத்தில் அதில் நடித்து முடித் தாலே வாழ்க்கைக்கு தேவையான பணம் சம்பாதித்து நிம்மதியாக இருக்கலாம். ஆனால், 'நாடோடி மன்னன்' ஒரு பரி சோதனை முயற்சி. என் விருப்பப்படி செய்து அதற்கு மக்களின் பதில் என்ன? என்று எதிர்பார்க்கிறேன்'' என்றார் எம்.ஜி.ஆர்.
'நாடோடி மன்னன்' படத்துக்கான கனவு 20 வயதிலேயே எம்.ஜி.ஆரின் மனதில் கருக்கொண்டது. படப்பிடிப்பு ஒன்றில் கலந்து கொள்வதற்காக கொல் கத்தா சென்ற எம்.ஜி.ஆர்., அங்கு 'இஃப் ஐ வேர் கிங்' என்ற படத்தைப் பார்த்தார். இந்தப் படமே எம்.ஜி.ஆர். மனதில் விதை யாய் விழுந்து விருட்சமாக வளர்ந்தது. அதன் விளைவுதான் 'நாடோடி மன்னன்.'
படத்துக்காக பணத்தை பணம் என்று பார்க்காமல் எம்.ஜி.ஆர். செலவழித்தார். சில நேரங்களில் அவரது அண் ணன் சக்ரபாணியே கவலைப்படும் அள வுக்கு கடன் வாங்கி செலவு செய்தார். காட்சி களின் பிரமாண்டத்துக்கு மட்டுமல்ல...படத்தில் பணி யாற்றும் நடிகர்களுக் கும் தொழிலாளர் களுக்கும் தாராள மான சம்பளமும் வழங்கப்பட்டது.
படப்பிடிப்பு குழுவினர் விரும்புவதை சாப்பிடுவதற் காக படப்பிடிப் பின்போது மினி ஓட்டலையை எம்.ஜி.ஆர். ஏற்பாடு செய்து விட்டார். அந்தக் காலத்தில் பணக்காரர் கள் மட்டுமே குடிக்கும் 'ஓவல்டின்' என்ற பானம் பெரிய அண்டாக்களில் வைக்கப்பட் டது. முதன்முதலாக பல தொழிலாளர்கள் 'ஓவல்டின்' குடித்ததே அப்போதுதான்.
படம் முடிந்த பிறகு ''வெற்றியோ, தோல்வியோ அது மக்கள் தீர்ப்பைப் பொறுத்தது. படம் ஓடினால் நான் மன்னன், ஓடாவிட்டால் நாடோடி'' என்று சர்வ சாதாரணமாக சொன்னார் எம்.ஜி.ஆர். மக்கள் எம்.ஜி.ஆரை மன்னனாக்கி னர். அதுவரை வெளியான படங்களை வசூலில் புரட்டிப் போட்டு அமோக வெற்றி பெற்றது 'நாடோடி மன்னன்'.
19 ஆண்டுகள் கழித்து தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்து எம்.ஜி.ஆர். நிஜமாகவே முடிசூடியதற்கு கால்கோள் நடத்தியது 'நாடோடி மன்னன்'.
மதுரையில் பல லட்சம் மக்கள் முன் னிலையில் நடந்த வெற்றி விழாவைத் தொடர்ந்து சென்னையிலும் 30.11.1958ல் எஸ்.ஐ.ஏ.ஏ. திடலில் அண்ணா தலைமையில் வெற்றி விழா கொண்டாட்டம் நடந்தது. விழாவில் எம்.ஜி.ஆருக்கு வீரவாளை அண்ணா பரிசளித்தார். இந்தக் கூட்டத்தில்தான், ''மரத்தில் பழுத்த கனி தங்கள் மடியில் விழாதா என்று பலரும் எதிர்பார்த்திருக்க, நல்லவேளையாக அந்தக் கனி என் மடியில் விழுந்தது. அதை எடுத்து என் இதயத்தில் வைத்துக் கொண்டேன். எம்.ஜி.ஆரை பாராட்டுவது என்னை நானே பாராட்டிக் கொள்வது போலாகும்'' என்று அண்ணா பேசினார்....ns...
-
26th November 2020, 07:31 AM
#1355
Junior Member
Diamond Hubber
நம்பியாருக்கு எம்.ஜி.ஆர். செய்த துரோகம்!
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்த முதல் படம் ஜூபிடர் பிக்சர்ஸ் தயாரிப்பில் 1947-ம் ஆண்டு வெளியான ‘ராஜகுமாரி’. படத்தில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும்
எம்.ஜி.ஆர்., வாழ்க்கையே வெறுத்துப்போய் அந்த அறையில் உள்ள தூக்கு மேடையில் தூக்கிட்டுக்கொள்ள முயல்வதாக ஒரு காட்சி.
எம்.ஜி.ஆர். தூக்கில் தொங்குகிறார். காட்சி அமைப்பின்படி அவரது உடலின் கனம் தாங்காமல் உத்தரம் உடைந்து விழவேண்டும். அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இருந்தாலும் அப்படி விழுவதற்குள் விநாடி நேரம் எம்.ஜி.ஆரின் உடல் அந்தரத்தில் தொங்குகிறது.
கழுத்தில் மாட்டப்பட்டிருந்த கயிறு குரல்வளையை மேல்நோக்கி இழுக்க.. உடலின் கனம் கீழ் நோக்கி இழுக்க.. சுருக்குக் கயிற்றால் இழுக்கப்பட்ட கழுத்து வலது புறமாகத் திரும்புகிறது.
எம்.ஜி.ஆரின் உச்சந்தலையில் ரத்தம் ‘சுர்’ரென்று ஏறுகிறது. நெஞ்சிலோ வலி. இன்னும் சில விநாடிகள் அந்த நிலை நீடித்திருந்தால்... எம்.ஜி.ஆரின் இந்த ஜீவ மரணப் போராட்டத்திற்கிடையே உத்தரம் உடைந்துவிட்டது. தலை குனிந்து முன்புறம் சாய்ந்தபடி விழுந்த அவரது முதுகில், மேலே இருந்து உத்தரத்தின் கட்டைகள் உடைந்து விழுந்தன. பரபரப்புடன் படப்பிடிப்புக் குழுவினர் ஓடிவந்தனர்.
அப்போதும் தனது நிலையைப் பற்றிக் கவலைப்படாமல், இக்காட்சியில் நடிப்பதற்குத் தகுதியற்றவன் என்று தன்னை யாரும் சொல்லிவிடக் கூடாதே.. பல்வேறு தடைகளையும் போராட்டங்களையும் தாண்டிக் கிடைத்த கதாநாயகன் வாய்ப்பு கைநழுவக் கூடாதே.. என்றுதான் எம்.ஜி.ஆரின் சிந்தனை ஓடியது. அந்த நேரத்தில் களைப்போடும் கவலையோடும் இருந்த அவரது முகத்தருகே வருகிறது தண்ணீர் நிரம்பிய கோப்பை. தண்ணீர் குடித்து எம்.ஜி.ஆர். ஆசுவாசப்படுத்திக் கொள்வதற்காக நீண்ட அந்தக் கரத்துக்கு சொந்தக்காரர் ‘வில்லன் திலகம்’ எம்.என்.நம்பியார்!
ஆஸ்தான வில்லன்
‘ராஜகுமாரி’ படத்தில் தொடங்கிய எம்.ஜி.ஆர். - நம்பியார் நட்பு கடைசி வரை பிரிக்க முடியாத உறவாக இருந்தது. எம்.ஜி.ஆருக்குப் படங்களில் ஆஸ்தான வில்லன் நம்பியார்தான். எம்.ஜி.ஆர். நடித்த கடைசிப் படமான ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’படத்திலும் நம்பியார்தான் வில்லன்.
நண்பர்களாக இருந்தாலும் திரையில் இருவரும் ஆக்ரோஷமாக மோதுவார்கள். திரையில் நிஜக் கத்தியுடன் சண்டையிடுவார்கள். வாள் சண்டை பொறி பறக்கும். ‘சர்வாதிகாரி’ படத்துக்காக சண்டையிட்டபோது எம்.ஜி.ஆரின் கத்தி, நம்பியாரின் கட்டை விரலில் புகுந்து வெளிவந்தது.
அதேபோல, ‘அரசிளங்குமரி’ படத்தில் நம்பியார் வீசிய வாள் எம்.ஜி.ஆரின் இடது புருவத்தைப் பதம் பார்த்தது. இன்னும் இரண்டு அங்குலம் கீழே பட்டிருந்தால் கண் பார்வையே பறிபோயிருக்கும். கடைசிவரை எம்.ஜி.ஆரின் இடது புருவத்தில் அந்தத் தழும்பு இருந்தது. ஆனாலும், இதெல்லாம் தொழிலில் நடக்கும் தவறுகள் என்ற புரிதலும் சாதாரணமாக எடுத்துக்கொண்ட மனப்பாங்கும் இருவரிடமும் இருந்ததற்குக் காரணம், அவர்களிடம் நிலவிய ஆழமான நட்பு! படப்பிடிப்பின்போது பலர் முன்னிலையில், எம்.ஜி.ஆரை
‘ராமச்சந்திரா...’ என்று நம்பியார் அழைக்கும் அளவுக்கு நட்பின் நெருக்கம். அந்த உரிமையை நண்பர் நம்பியாருக்கு எம்.ஜி.ஆர். வழங்கியிருந்தார்.
நகைச்சுவை மன்னர்!
நம்பியார் என்றாலே உதட்டைப் பிதுக்கி, விழிகளை உருட்டி, உள்ளங்கைகளைத் தேய்த்து, ‘‘டேய்.. மொட்ட..’’ என்று அடியாளைக் கூப்பிடும் கொடூரமான பிம்பம்தான் வெகுமக்கள் மனத்தில் பதிந்துள்ளது. உண்மையில் நம்பியார் கலகலப்பானவர்! படப்பிடிப்பின்போதும் சரி,வெளியிலும் சரி. அவரது நகைச்சுவையால் அவர் இருக்கும் இடத்தில் எல்லாரும் சிரித்த முகத்துடன்தான் இருப்பார்கள்.
அந்த அளவுக்கு அவர் நகைச்சுவை மன்னர்! எம்.ஜி.ஆரும் நகைச்சுவை உணர்வுமிக்கவர்தான். திரையிலும் அரசியலிலும் அவரது பன்முகத் திறமையும், மனிதாபிமானமும், கொடை உள்ளமும், மக்கள் மீது கொண்டிருந்த அன்பும் வெளியே தெரிந்த அளவுக்கு, அவரது நகைச்சுவை உணர்வு வெளியே அதிகம் தெரியவில்லை. நம்பியாரின் ஜாலியான பேச்சுக்கு எம்.ஜி.ஆரும் ஈடுகொடுப்பார்!
‘எங்க வீட்டுப் பிள்ளை’ படத்தில் எம்.ஜி.ஆருக்கு இரட்டை வேடம். படத்தில் வில்லனாக இருக்கும் அவரது அத்தான் நம்பியார் கடைசியில் மனம் திருந்துவார். 7 திரையரங்குகளில் வெள்ளிவிழா கொண்டாடி எம்.ஜி.ஆர். திரையுலகில் இருந்தவரை தகர்க்க முடியாத சாதனை படைத்த ‘எங்க வீட்டுப் பிள்ளை’ படத்துக்கு சென்னையில் வெற்றி விழா!..
படத்தில் நடித்த நடிகர், நடிகையர் தொழில்நுட்பக் கலைஞர்கள் கலந்துகொண்டனர்.கலைஞர்கள் பேசி முடித்தபின் கடைசியாக எம்.ஜி.ஆர். பேசவந்தார். அவரது பேச்சு மக்களுக்குத் தெளிவாகக் கேட்பதற்காக ஏற்கெனவே இருந்த ‘மைக்’குடன் கூடுதலாக இன்னொரு ‘மைக்’ வைக்கப்பட்டது. மேடையில் நாற்காலியில் அமர்ந்திருந்த நம்பியார், ‘மைக்’ அருகே வந்தார்.
‘‘இது அநியாயம்... நாங்கள் பேசும்போது ஒரு ‘மைக்’தான் வைக்கப்பட்டது. எம்.ஜி.ஆர் பேசுவதற்கு மட்டும் இரண்டு ‘மைக்’குகளா?’’ என்று தனக்கே உரிய நகைச்சுவையுடன் நம்பியார் எழுப்பிய கேள்வியால் கூட்டம் கலகலத்தது.எம்.ஜி.ஆர். என்ன லேசா?.. ‘‘படத்தில் எனக்குத்தான் இரட்டை வேடம். அதனால்தான், இரண்டு‘மைக்’குகள் எனக்கு’’ என்று சிரித்தபடி எம்.ஜி.ஆர். பதிலளிக்க, கூட்டத்துடன் சேர்ந்து நம்பியாரும் ஆரவாரம் செய்தார்.
எப்படிப்பட்ட துரோகம்!
எம்.ஜி.ஆர். முதல்வரானபின், திரையுலகை விட்டு விலகி, முதல் அமைச்சர் பணியில் முழுக் கவனத்தைச் செலுத்தினார். சில ஆண்டுகள் கழித்து நம்பியாரின் பேட்டி வார இதழ் ஒன்றில் வெளியானது. ‘எம்.ஜி.ஆர். எனக்குத் துரோகம் செய்து விட்டார்’ என்று பேட்டியில் கூறியிருந்தார் நம்பியார்! அந்த வார இதழின் போஸ்டரிலும் இந்த தலைப்பு.
எங்கும் ஒரே பரபரப்பு. எம்.ஜி.ஆரைப் பற்றி ஏதாவது குறை கூறியிருக்கிறாரா என்று அவரது எதிர்ப்பாளர்களுக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு. கடைசியில், அந்தப் பேட்டியில் நகைச்சுவை ததும்ப நம்பியார் கூறியது இதுதான்:
‘‘எம்.ஜி.ஆர். திரையுலகில் இருந்தவரை கதாநாயகனாக இளைஞராக நடித்தார். அவருக்கு வில்லனாக நானும் இளைஞராக நடித்தேன். அவர் திரையுலகை விட்டு விலகியபின், இப்போது மாமா, அப்பா, தாத்தா போன்ற வயதான பாத்திரங்களில் நரைத்த தலையுடன் நடிக்க வேண்டியிருக்கிறது. தான் மட்டும் இளைஞராகவே நடித்து, திரையுலகில் என்னை வயதானவனாகத் தவிக்க விட்டு எம்.ஜி.ஆர். அரசியலுக்குப் போய்விட்டார். எம்.ஜி.ஆர்.எனக்குத் துரோகம் செய்துவிட்டார்!’’
1987-ம் ஆண்டு டிசம்பர் 24-ம் தேதி எம்.ஜி.ஆர். மறைந்தார். அப்போது நம்பியார் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு மாலை அணிந்து விரதம் இருந்த நேரம். சபரிமலைக்கு அழைத்துச் செல்வதில் பலருக்கு குருசாமியாக நம்பியார் இருந்தார். மாலை அணிந்துவிட்டால் விரதத்தை முறிக்க மாட்டார்.
அதனால், மறைந்த தனது நண்பரை இறுதியாகப் பார்த்து அஞ்சலி செலுத்த முடியாத நிலைமை. தகவல் அறிந்து நம்பியார் மூர்ச்சையானார். மயக்கம் தெளிந்து எழுந்து, ‘‘ஏற்கெனவே அரசியலுக்குப் போனதன் மூலம் திரையுலகில் இருந்து எம்.ஜி.ஆர். என்னை விட்டுப் பிரிந்தார். இப்போது வாழ்க்கையிலும் என்னை விட்டுப் பிரிந்து போய்விட்டாரே..’’ என்று நண்பரின் பிரிவைத் தாங்காமல் கலங்கிய நம்பியாருக்கு ஆறுதல் கூறமுடியாமல் சுற்றி இருந்தவர்களுக்குத் துக்கம் தொண்டையை அடைத்தது.
சபரிமலை சென்று வந்த பிறகு எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்ட வீட்டுக்குச் சென்று நம்பியார் அஞ்சலி செலுத்தினார். இருவருக்கும் இடையிலான ஆத்மார்த்தமான நட்பின் அடையாளமாய் நம்பியாரின் கன்னங்களில் உருண்டது கண்ணீர்....ns......
-
26th November 2020, 07:31 AM
#1356
Junior Member
Diamond Hubber
#மீண்டும்_கிளம்பும்_நாித்தனம்
புரட்சித் தலைவர் காலத்தில் ,
நிவாரண பணிகளில் இடையூறு செய்தனா் , திமுகவினர் .....
ஆம் , அது 1983 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் .....
இன்று போல இதே தஞ்சாவூர் , புதுக்கோட்டை மற்றும் நாகை மாவட்டங்களில் பெரும் வெள்ளம் , பெரும் சேதம் .....
மழையால் மக்கள் மிகவும்
பாதிக்கப்பட்டு இருந்தனர் . டிசம்பர் 22 அன்று வெள்ளம் பாதித்த பகுதிகளைப் பார்வையிட அன்றைய தமிழக முதல்வர் நமது மக்கள்திலகம் வந்தார்கள் .
திருச்சியில் இருந்து
காலை 9 மணிக்குபம புறப்பட்டு
தஞ்சைப் பகுதி கந்தர்வக்கோட்டைக்கு வந்தார் . பாலத்தின் இருபுறமும் நின்று சேதங்களைப் பார்வையிட்டார் .
அருகில் கூடி இருந்த பொதுமக்களிடம் "உணவு உதவிகள் கிடைத்ததா ?" என்று கேட்டார் .
எல்லோரும் "ஆம்" என்று சொல்ல .....
ஒரு பெரியவர் மட்டும் "எங்கள் கிராமத்துக்கு யாரும் வரவில்லை . எந்த உதவியும் சாப்பாடும் கிடைக்கவில்லை" என்றார் .
கோபமாகத் திரும்பி "அவர் சொல்லும் ஊரை குறித்துக் கொள்ளுங்கள்" என்று அரசு துணைச் செயலாளர் மூர்த்தியிடம் சொன்னார் .
உடனே அருகில் இருந்த அதிகாரி கற்பூரசுந்தரபாண்டியன் , "அய்யா அந்த ஊர் பள்ளிக்கூடத்தில் மூன்று நாட்களாக உணவு தயார் செய்யபட்டு மூன்று வேளையும் முறையாக வழங்கப்பட்டு வருகிறது" என்றார் .
உடனே எம்ஜிஆர் அவா்கள் அந்த பெரியவரைப் பார்த்து "உங்கள் ஊரில் பள்ளிக்கூடம் உள்ளதா ? அங்கு உணவு வழங்கப்பட்டு வருவது உங்களுக்குத் தெரியாதா?" என்று கேட்க ......
தயங்கிய பெரியவர் ,
"நான் ஊருக்குப் போய் 3 நாள் ஆச்சு" என்று சொன்னார் .
உடனே புரட்சித் தலைவா் ,
"அய்யா , நீங்கள் விவரம் தெரியாமல் அரசைக் குறை கூறுகிறீர்கள் . இது மிகவும் தவறு . எல்லோரும் பாதிக்கப்பட்ட நேரத்தில் உண்மை நிலவரங்களை மட்டும் தெரிவிக்க வேண்டும்" என்று சற்று கோபமாகக் கூறினார் .
பிறகு அங்கு இருந்து புதுக்கோட்டை மாவட்டம் கடலோரப் பகுதிகளான காட்டுமன்னார் கோவில் , கோட்டைப்பட்டினம் பகுதிக்குச் செல்லும் போது கூட்டமாக நின்ற மக்கள் தலைவர் காரை மறித்தனர் .
கோபம் கொள்ளாமல் இறங்கிய எம்ஜிஆர் , "என்ன சொல்லுங்கள்" என்று கேட்டார் .
"நாங்கள் பலமுறை விண்ணப்பித்தும் தாசில்தார் , ஆட்சியர் எங்களுக்கு பட்டா வழங்கவில்லை" என்று சொன்னார்கள் .
உடனே முதல்வர் அவர்களைப் பார்த்து "கடைசியாக ஆட்சியரை எப்ப பார்த்தீர்கள்" என்று கேட்டாா் .
அவர்களும் "ஒரு 15 நாட்களுக்கு முன் இருக்கும்" என்றார்கள் .
"ஓ அப்படியா ? சரி நல்லது . இங்கு என்னுடன் வந்தவர்களில் ஆட்சியரும் வந்து உள்ளார் . அவரை அடையாளம் காட்டுங்கள்" எனக் கேட்க .....
அவர்களுக்கு அருகில் உயரமாக
இருந்த ஒருவரைக் காட்டி "இவர்தான் ஐயா" என்றனர் .
ஆனால் அவர் அரசுப் பொதுப்பணித் துறைச் செயலாளர் .
முதல்வருக்கு வந்ததே கோபம் ...*..
"எங்கே எஸ்.பி." என்று கேட்க ......
பதறிப் போய் எஸ்.பி ஓடி வந்தார் .
உடனே முதல்வா் எம்ஜிஆர்
"இவர்கள் எல்லோரையும் காவலில் எடுத்து விசாரியுங்கள் . இவர்கள் உண்மை சொல்லவில்லை . என் பணி நேரத்தை வீண் செய்கிறார்கள்" என்றார் .
உடனே கூட்டத்தில் இருந்த ஒரு சிலர் ,
"அய்யா எங்களை மன்னித்து விடுங்கள் .
எங்கள் பகுதியைச் சேர்ந்த திமுக
தலைவர்கள் , 'இன்று எம்ஜிஆர்
வருகிறார் . அவரை மறித்து நாங்கள்
சொல்வதுபோல செய்யுங்கள் அப்பதான்
உங்களுக்கு பட்டா கிடைக்கும்' என்று
எங்களைத் தூண்டி விட்டார்கள்" என்று
சொல்ல .....
"இதை நான் முன்பே கணித்து விட்டேன் .
உங்கள் வாயில் இருந்து வரட்டும் என்று
தான் போலீசை அழைத்தேன் . எப்பவும்
மக்கள் கஷ்டபடும்போதுகூட இருந்து
உதவ வேண்டும் .
'அவன் சொன்னான் , இவன்
சொன்னான்' என்று அரசு வேலைகளை
முடக்கக் கூடாது . குறை இருந்தால்
சொல்ல வேண்டும் . உங்களுக்கு
இன்னும் 10 தினங்களில் பட்டா கிடைத்து
விடும்." என்றார் .
யாரையும் எந்தச் சூழலிலும் தலைவர்
எப்படி கணித்து செயல்பட்டார்
பாருங்கள் .
நயவஞ்சக நரித்தனத்தில் , தில்லுமுல்லு
வேலைகளில் திமுகவினரை மிஞ்ச
ஆளில்லை .*
கழக ஆட்சிகளில் எல்லாம்
திமுகவினாின் கேவல அரசியல்
இப்படித்தான் இருக்கும் .
இப்போதுகூட அப்படியே அந்தக் கூட்டம்
தொடரலாம் ..............
-
26th November 2020, 07:32 AM
#1357
Junior Member
Diamond Hubber
நம் வள்ளலுக்கு இருந்த பல நல்ல குணங்களில் அவரின் நன்றி மறவாத குணம் மிகவும் அனைவருக்கும் பிடித்த ஒன்று ஆகும்.
ஒரு முறை 1972 இல் தனிக்கட்சி கண்ட தலைவர் திருப்பூர் நகருக்கு செல்ல அங்கே திருப்பூர் மணிமாறன் ராயல் நடராஜன் ஜெகந்நாதன் போன்ற கழக தோழர்கள் மற்றும் அலை கடல் என ரசிகர்கள் குவிந்து இருந்தனர் ரயில் நிலையத்தில்.
ரயிலை விட்டு இறங்கி வெளியே வந்த தலைவர் எங்கு தங்க போகிறார் என்று அனைவரும் காத்து இருக்க.....
தலைவர் கூட்டத்தில் இருந்த ஒருவரை அழைத்து உங்கள் கார் எங்கே என்று கேட்டு 6360 என்ற எண் கொண்ட அந்த காரில் ஏறி அந்த கார் உரிமையாளர் எங்கே இப்போ போகவேண்டும் என்று கேட்க....
தலைவர் முத்துக்களை கொட்டியது போல சிரித்து எங்கே உங்கள் இல்லத்துக்கு தான் என்று சொல்ல வியந்து போகிறார் அவர்.
மன்னனை சுமந்து அந்த கார் அவர் வீடு நோக்கி செல்ல அதற்குள் தகவல் பறந்து வாசலில் ரவிக்குமார் சிவகுமார் ஆகிய இருவரும் அந்த வீட்டை சார்ந்தவர்கள் காத்து நிற்க.
மன்னன் அந்த வீட்டுக்குள் இருகரம் குவித்த படி உள்ளே செல்கிறார்...
வள்ளல் காலை கடன்களை முடித்து குளித்து காலை உணவு அருந்தி கொண்டு இருக்கும் போது அன்று தலைவர் உடுத்த வேண்டிய உடைகள் சற்றே கலைந்து இருக்க அந்த சகோதரர்கள் இருவரும் அவற்றை தங்கள் வீட்டில் தேய்த்து கொடுக்க அதுவரை பொறுமை காத்து இருந்து கூப்பிய கரங்கள் உடன் நன்றி சொல்லி நிகழ்வுகள் நோக்கி மன்னவர் கிளம்பி செல்கிறார்.
ஆமாம் யார் அவர்கள் என்று கேட்டால் அவர்கள் தான் திருப்பூர் உஷா திரை அரங்க உரிமையாளர்கள்.....
வள்ளலின் படங்களை நிரப்ப படாத காசோலைகள் கொடுத்து விநியோகம் செய்யும் நபர்கள் இடம் வாங்கி தங்கள் திரை அரங்கத்தில் வெளி இடும் அரங்க முதலாளிகள்.
1973 இல் வள்ளலின் வரலாற்று படம் உ.சு.வா வை தடைகள் மிரட்டல்கள் மீறி அந்த உஷா அரங்கில் வெளியிட்டு தினம் 6 காட்சி 7 காட்சிகள் வரை நடத்தி அந்த படம் அந்த அரங்கில் வெள்ளி விழா காண.
அந்த விழாவுக்கும் வந்து கலந்து கொள்கிறார்...அன்று அந்த விழா நடந்த போது எழுந்த எழுச்சியை போல இன்று வரை திருப்பூர் நகரம் அப்படி ஒரு உணர்ச்சிமிக்க கூட்டத்தை கண்ட வரலாறு இல்லை.
நன்றி மறவாத நல்ல மனம் போதும் என்றும் அதுவே என் மூலதனம் ஆகும் என்று பாடி விட்டு மட்டும் போகவில்லை தலைவர்.
அதன் படி அவரே முதலில் வாழ்ந்து காட்டினார் என்பதில் ஒரு ஐயம் இல்லை என்ன ...சரிதானே தலைவர் நெஞ்சங்களே.
அடாத நிபர் புயலிலும் விடாமல் தலைவர் புகழ் பாடும் இந்த நபர்.
என்றும் உங்களில் ஒருவன்...நன்றி.
வாழ்க தலைவர் புகழ்.
தொடரும்...
அன்று அந்த நேரத்தில் இருந்த திருப்பூர் தலைவர் நெஞ்சங்கள் யாரும் இந்த பதிவை பார்த்து பதில் சொன்னால் மிக்க மகிழ்ச்சி அடைவோம்.
இந்த உலக எம்ஜிஆர் ரசிகர்கள் குழுவினர்..............
-
27th November 2020, 07:58 AM
#1358
Junior Member
Diamond Hubber
தமிழ்த் திரைப்பட வரலாற்றில் அதிக படங்களில் இரட்டை வேடங்களில் நடித்தவர் என்ற சாதனைக்குச் சொந்தக்காரர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., அவர்கள். தன்னுடைய திரையுலக வாழ்க்கையில் மக்கள் திலகம் 16 படங்களில் இரட்டை வேடங்களை ஏற்றிருக்கிறார்.
எம்.ஜி.ஆர். அவர்கள் இரட்டை வேடத்தில் நடித்து முதலில் வெளியான படம்" நாடோடி மன்னன்". 1958ல் வெளியான இந்தப்படத்தில் மன்னர் மார்த்தாண்டன் மற்றும் புரட்சியாளர் வீராங்கன் ஆகிய இரண்டு வேடங்களில் புரட்சித் தலைவர் நடித்தார். இந்தப் படத்தின் வெற்றி கொடுத்த ஊக்கத்தாலும், மக்களின் ரசனையை முழுவதுமாக அறிந்ததாலும் பின்னர் 15 படங்களில் தொடர்ந்து இரட்டை வேடங்களை ஏற்றார்.
image
1960ஆம் ஆண்டில் ராஜா தேசிங்கு படத்தில் ராஜா தேசிங்கு மற்றும் தாவூத் கான் ஆகிய இரண்டு வேடங்களில் மக்கள் திலகம் தோன்றினார். விண்வெளி மற்றும் வேற்றுகிரகவாசிகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தியாவின் முதல் திரைப்படமான கலை அரசி திரைப்படம் எம்.ஜி.ஆர். அவர்களின் நடிப்பில் 1963ஆம் ஆண்டில் வெளியானது. இந்தப் படத்தில் பூமியில் வாழும் மோகனாகவும், வேற்று கிரகத்தில் வாழும் கோமாளியாகவும் இரண்டு வேடங்களில் எம்.ஜி.ஆர். அவர்கள் பாத்திரம் ஏற்றார். 1964ஆம் ஆண்டில் வெளியான ஆசைமுகம் திரைப்படத்தில் மனோகர், வஜ்ரவேலு ஆகிய கதாப்பாத்திரங்களில் எம்.ஜி.ஆர். அவர்கள் தோன்றினார்.
எம்.ஜி.ஆர். அவர்களின் நடிப்பில் 1965ஆம் ஆண்டில் வந்த எங்கள்வீட்டுப் பிள்ளை திரைப்படம் இரட்டை வேடப் படங்களின் இலக்கணமாகவே அமைந்தது. அதில் ராமு என்கிற ராமன், இளங்கோ என்கிற லட்சுமணன் ஆகிய இரண்டு கதாப்பாத்திரங்களில் ஒன்றில் இருந்து மற்றொன்றுக்கு மிகவும் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தினார் புரட்சித் தலைவர்.
1968ஆம் ஆண்டில் குடியிருந்த கோவில் படத்தில் ஆனந்த் மற்றும் பாபு என்கிற சேகர் ஆகிய இரண்டுவேடங்களில் புரட்சித்தலைவர் நடித்தார். 1969ஆம் ஆண்டில் வந்த அடிமைப் பெண் திரைப்படத்தில் வேங்கை மலை அரசனாகவும் இளவரசன் வேங்கையனாகவும் எம்.ஜி.ஆர். தோன்றினார்.
image
1970ஆம் ஆண்டில் வெளிவந்த மாட்டுக்கார வேலன் படத்தில் வேலன், ரகுநாத் ஆகிய இரண்டு வேடங்களை எம்.ஜி.ஆர். அவர்கள் ஏற்றார். 1971ஆம் ஆண்டில் வெளியான நீரும் நெருப்பும் படத்தில் இளவரசன் மணிவண்ணன், இளவரசன் கரிகாலன் ஆகிய இரண்டு வேடங்களில் எம்.ஜி.ஆர் அவர்கள் நடித்தார். எம்.ஜி.ஆரின் பெயருக்கு முன்னர் ‘பொன்மனச் செம்மல்’ என்ற முன்னொட்டு சேர்க்கப்பட்ட முதல் படம் நீரும் நெருப்பும் ஆகும். இந்தப் படத்தின் ஒரு கத்திச் சண்டைக் காட்சியில் எம்.ஜி.ஆருக்கு எம்.ஜி.ஆரே கத்தியைக் கொடுத்து உதவும் போது, அன்றைக்கு ஒவ்வொரு திரையரங்கிலும் ரசிகர்கள் ஆர்ப்பரித்த காட்சி திரையரங்குகள் காணாததாக இருந்தது.
1973ஆம் ஆண்டில் வெளியான உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் முருகன், ராஜு ஆகிய இரண்டு மாறுபட்ட கதாப்பாத்திரங்களில் புரட்சித் தலைவர் தோன்றினார். அதே 1973ஆம் ஆண்டில் வெளியான மற்றொரு படமான பட்டிக்காட்டு பொன்னையா-வில் பொன்னையா மற்றும் முத்தையா ஆகிய இரு வேடங்களில் மக்கள் திலகம் தோன்றினார்.
1974ஆம் ஆண்டில் வெளியான நேற்று இன்று நாளை படத்தில் மாணிக்கம் என்ற ரத்தினம் மற்றும் குமார் ஆகிய இரண்டு வேடங்களை எம்.ஜி.ஆர். அவர்கள் ஏற்றார். அதே 1974ஆம் ஆண்டில் வெளியான சிரித்து வாழ வேண்டும் படத்தில் இன்ஸ்பெக்டர் ராமு மற்றும் உஸ்தாத் அப்துல் ரஹ்மான் ஆகிய வேடங்களில் எம்.ஜி.ஆர். அவர்கள் தோன்றினார்.
image
பின்னர் 1975ஆம் ஆண்டில் வெளிவந்த நினைத்ததை முடிப்பவன் படத்தில், பாடகர் சௌந்தரம், வியாபாரி ரஞ்சித் குமார் ஆகிய பாத்திரங்களை மக்கள் திலகம் ஏற்றார். 1975ஆம் ஆண்டில் வெளியான நாளை நமதே திரைப்படத்தில் சங்கர், விஜயகுமார் ஆகிய இரண்டு கதாப்பாத்திரங்களில் எம்.ஜி.ஆர் அவர்கள் தோன்றினார். இதில் இளவயதில் தொலைந்துபோன சகோதரர்கள், ஒருவரை ஒருவர் அடையாளம் காணப்பாடும் ‘அன்பு மலர்களே’ பாடல், இன்றும் தமிழக திரையுலகின் பெரிதும் விரும்பப்படும் பாடல்களில் ஒன்றாக உள்ளது.
1976ஆம் ஆண்டில் வெளியான ஊருக்கு உழைப்பவன் படத்தில் போலீஸ் அதிகாரி செல்வம் மற்றும் தொழிலதிபர் ராஜா ஆகிய பாத்திரங்களை பொன்மனச் செம்மல் ஏற்றார். இதுவே எம்.ஜி.ஆர். அவர்கள் இரட்டை வேடத்தில் நடித்த கடைசி திரைப்படம் ஆகும்.
அரசியலில் ஒருபோதும் இரட்டை வேடம் போடாத பொன்மனச் செம்மல் அவர்கள், திரைத்துறையில் அதிக இரட்டை வேடங்களை ஏற்றது ஒரு இனிய வரலாற்று முரண்..........MJ.........
-
27th November 2020, 08:03 AM
#1359
Junior Member
Diamond Hubber
**********mgr மதகு************
1979-கோவையில் பெய்த கணமழை காரணமாக
நெய்யல் ஆற்றில்
வெள்ளம் கரைபுரன்டு ஒடியது.
கோவையை சுற்றி உள்ள 32 குளங்களும் நீர் நிரம்பி வழிந்தது.
அதில் செல்வ சிந்தாமணி குளம் மற்று சிங்காநல்லூர் குளங்கள் கரை உடைந்து குடியிருப்பு பகுதியில் வெள்ளம் சூழ்ந்து.
கோவையின் ஒரு பகுதி வெள்ளக்காடாய் மாறியது. செட்டிவீதி,செல்வபுரம்
சுண்டக்காமுத்தூர்
ஸ்டேன்ஸ் காலனி, காமாட்சிபுரம், நெசவாளர் காலனி
ஒண்டிப்புதூர் ரயில்வே பள்ளம், ஆணைவாரி பள்ளம் வழியாக பெருக்கெடுத்தது.
இதனால்
ஒட்டர்பாளையம், பட்டணம், பீடம்பள்ளி
ஆகிய கிராமங்கள் நகரப் பகுதியிலிருந்து முற்றிலும் துண்டிக்கப்பட்டன.
அன்றைய
தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்கள் உடனடியாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வந்தார்.
வேஷ்டியை மடித்துக்கட்டிக் கொண்டு வெள்ளத்தில் இறங்கிய அவர்,
பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி,
நிவாரண உதவிகளை
வழங்க உத்தரவிட்டார்.
எம்ஜிஆருடன் அன்றைய
அமைச்சர்கள்
செ அரங்கநாயகம்,
பா குழந்தைவேலு அவர்களும்
வெள்ள நீரில் நடந்துசென்றார்கள்.
மழை வெள்ளச் சேற்றில் செருப்பு இல்லாமல் நடந்து சென்ற எம்.ஜி.ஆருக்கு முள்குத்தி ரத்தம் வந்தது.
மக்களின்துயரத்தையும்
வெள்ளத்தில் தத்தளித்த குடியிருப்புகளையும் பார்த்த எம்ஜிஆருக்கு அது பெரிய வலியாக தெரியவில்லை.
குளத்தின் கரை உடைந்து பிரதான தார் சாலையை மூழ்கடித்து, இருந்தது வெள்ளம்.
அதிகாரிகளுடன் உடனடி
ஆலோசனையில் இறங்கிய
எம்ஜிஆர்
ஒரு மதகு கட்டி, அதில் திறக்கப்படும் நீர் அங்கிருந்த வாய்க்கால் மூலம் உக்கடம் பெரியகுளத்துக்கு திருப்பி
விட ஆலோசிக்கப்பட்டது.
போர்கால அடிப்படையில் பனிகள் நடந்தது.
பாலம் கட்டி
புதிய மதகும்,
தடுப்புச் சுவரும் அமைக்கப்பட்டது.
இப்போதும் அந்த மதகை எம்.ஜி.ஆர். மதகு என்றே மக்கள் அழைக்கிறார்கள்.
மக்கள் பிரச்சினை என்றால் அங்கே நேரடியாக சென்ற
ஒரே முதல்வர் mgr மட்டுமே !
*எம்ஜிஆர்நேசன்*.........
-
27th November 2020, 08:04 AM
#1360
Junior Member
Diamond Hubber
என்றும் என்றென்றும் கலையுலகின் தனிப்பிறவி மக்கள் திலகம் எம்ஜிஆர் தான்...
கத்திப் பேசுவது தான் நடிப்பு! கத்தியுடன் நடிப்பது நடிப்பா? எனக் கேட்டு பின்னர் கேட்டதையும் சொன்னதையும் மறந்து இன்று கத்தியுடன் தோன்றும் கலைஞர்களையும் தன் உயர்வுக்காக உழைத்த உத்தம நண்பர்களை மறந்து, தனது பெருமைக்கும் புகழுக்கும் பாடுபட்டவர்களை மறந்து , செய்நன்றி கொன்ற கலைஞர்களையும், குறிப்பிட்ட படங்களிலே தான் நடித்த காரணத்தால் தான் மற்ற கலைஞர்களுக்கு பேரும் புகழும் வந்தது என இறுமாப்புடன் கூறும் கலைஞர்களையும், தற்பெருமையுடன் வாழும் கலைஞர்களையும் தாங்கியுள்ள இக்கலையுலகில் இவைகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட ஒர் பிறவி இருந்தார் என்றால் அவர் நம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் தான். அவர் ஒரு தனிப்பிறவி மக்கள் திலகமும் மக்கள் திலகத்தின் அன்பும் , கொடைத் தன்மையும் , புகழும் சாகாவரம் பெற்றவை.
தமிழ் கலை உலகில் நல்லொழுக்கமும் இனிய குணமும் பண்பட்ட இதயம் கொண்ட மக்கள் திலகம், புரட்சி நடிகர், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் தரணி புகழும் தனிப்பிறவி தான்.
மாபெரும் கொடை வள்ளல் எம்.ஜி.ஆர் புகழ் வாழ்க............am ...
Bookmarks