Page 162 of 210 FirstFirst ... 62112152160161162163164172 ... LastLast
Results 1,611 to 1,620 of 2097

Thread: Makkal Thilagam MGR Part 26

  1. #1611
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இணைய*தளத்தின்*பதிவாளர்கள், பார்வையாளர்கள்,ஆதரவாளர்கள் ,அனைவருக்கும் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். நல்லாசியுடன்* இனிய ஆங்கில*புத்தாண்டு வாழ்த்துக்கள்* 2021.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1612
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    புரட்சித் தலைவரின் தொண்டர்களுக்கும் உண்மையை புறந்தள்ளும் கைபிள்ளைகளுக்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் உரித்தாகுக.

    அந்தக்காலத்தில் குள்ளநரி மனம் படைத்த ஒரு சிலர் புறம்போக்கு இடத்தை வளைத்து போட்டுக்கொண்டு ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள், அண்ணன் தம்பிகள் என்று வைத்துக் கொள்ளுங்கள், நீதிமன்றத்துக்கு செல்வார்களாம்.
    இதில் நான்தான் 10 வருடங்களாக அனுபவத்தில் இருக்கிறேன் என்று அண்ணனும், நானும் பல வருடங்களுக்கு மேல் இருக்கிறேன் என்று தம்பியும் சொல்வார்களாம். விசாரித்து முடிவில் இது உனக்கு, இது அவனுக்கு என்று தீர்ப்பு வந்ததும் இருவரும் கொண்டாடுவார்களாம்.

    ஏனென்றால் புறம்போக்கு இடத்துக்கு மன்றத்தின் அனுமதி கிடைத்தாயிற்றே. இது ஒரு வகை யுக்தி. அதுபோல நம்ம கைஸ்களும் புறம்போக்கு அய்யன் படத்துக்கு பட்டறை மூலம் வசூல் தயார் செய்து ஒன்றிரண்டு படங்களை தவிர மற்ற படங்களுக்கு ரொம்ப அதிகமாக போட மாட்டார்கள். தலைவர் படத்துக்கு 60 சதவீதத்திலிருந்து 80 சதவீதம் வரை போட்டு பதிவிடுவார்கள். நாம் சரி குறைவாகத்தானே இருக்கிறது என்று நம் படத்துடன் ஒப்பீடு செய்தால் போதும் அந்த டூப்ளிகேட் வசூலுக்கு பட்டா போட்டு விட்டு அதையே குறிப்பிட ஆரம்பித்து விடுவார்கள்.

    இப்படித்தான் அந்தக்காலத்தில் 'சிம்மக்குரல்' என்று இலங்கையில் இருந்து வெளிவந்த மஞ்சள் பத்திரிகையில் 'கனடா காண்டா' ஒன்று பொய் வசூலை பரப்பி எழுதியதை தற்போது மேற்கோள் காட்டி போட்டு அதை உண்மையாக்கப் பார்க்கிறது. ஆதலால் இந்த பட்டறை வசூல் என்பது எள்முனையும் உண்மையில்லை.
    அப்படி உண்மையாக இருந்திருந்தால் அய்யனும் நல்ல சம்பளம் வாங்கி இறுதி வரையில் நடித்திருப்பார். அய்யனை திரையுலகத்தை விட்டே ஓட ஓட விரட்டியிருக்க மாட்டார்கள்.

    இந்த 'மதிஒளி' 'சிம்மக்குரல்' 'திரைமன்னன்' 'நவசக்தி' இது போன்ற எலும்பு தின்னி பத்திரிகைகளில் வந்தால் அது உண்மையாகி விடாது. உதாரணமாக 'திரைமன்னன்' பத்திரிகையில் வந்த தலைப்பு செய்தியை பாருங்கள். 'ராஜா' வசூலில் 'ரிக்ஷாக்காரனை' முந்தி விட்டதாம். ஆனால் இந்த 'ராஜா' 'ரிக்ஷாக்காரனின்' காலடியை வருடி பிழைத்த கதையை நாடறியும்.. இதுபோன்ற அண்டப்புளுகுகளையும் ஆகாசப்புளுகுகளையும் அரங்கேற்ற இதுபோன்ற கேவலமான பத்திரிகைகளை கைகூலி கொடுத்து வளர்த்து விட்டது யார் குற்றம்?

    மேலும் கண்மூடித்தனமான பட்டறை வசூலை கொடுத்தும் அய்யனின் மார்க்கெட்டை தூக்கி நிறுத்த முடியாமல் இறுதியில் 'புதியவான'த்தில் புரட்சித்தலைவரை போற்றிப்பாடியும் ஒன்றும் கதையாகமல் போனது யார் குற்றம்? மொத்தத்தில் கைஸ்களை கற்பனை வசூல் கதையை அளக்க விட்டு டிக்கெட் கிழிக்க விட்டதுதான் கொடுமையின் உச்சக்கட்டம்.. அதை நன்கு புரிந்து கொண்டு இது போன்ற துர்பத்திரிகைகளின் வாந்தியை ஒதுக்கி வைத்து விட்டு வரும் நல்லோர் முகத்திலே விழிப்போம் என்று சபதமேற்போம். ஒரு சில கைஸ்கள் 'உரிமைக்குரலி'ல் வருகின்ற வசூல்கள் போலியானது என்று எக்காளமிடுகின்றன.

    "உரிமைக்குரலி"ன் ஆசிரியர் தன் வாழ்நாளின் பெரும்பகுதியை தலைவரின் நற்பணிக்கென்று ஒதுக்கி தமிழகம் முழுவதும் தேடி தேடி பல சிறப்பு மலர்களை ஆய்வு செய்து அதில் வெளியான வசூல் விபரங்களை பிரசுரம் செய்கிறார். தவறு எங்கேயும் நடந்து விடக்கூடாது ஏன்பதில் மிகவும் எச்சரிக்கையாகவும் விழிப்பாகவும் இருப்பவர். கைஸ்களை போல போலி பட்டறை வசூல் தயாரிப்பவர் அல்ல. தாங்கள் செய்யும் வசூல் மோசடிகளை அடுத்தவர் மீது பழி சுமத்துவதில் வல்லவர்கள்தான் இந்த பரமார்த்த குருவின் சீடர் கைஸ்கள்.

    இதில் 'கனடா காண்டா' ஒன்று ஓட்டை வீட்டுக்குள் புகுந்து உள்ளே இருந்த 3 நாட்கள் அனுமதி டிக்கெட் அனைத்தையும் பிராண்டி தூக்கிக் கொண்டு போனதாக செய்தி ஒன்று கூறுகிறது. 'கனடா காண்டா'வின் பாவச்செயலை புரிந்து கொண்ட. அவருடைய தமையன் தலைவர் பாசறையில் சேர்ந்து தீட்சை பெற்று 'கனடா காண்டா'வின் புழுகுமூட்டைகளை வெளிச்சம் போட்டு காட்டி வருகிறார்.

    ஊர்க்குருவி ஒரு நாளும் பருந்தாகப் போவதில்லை, உளறித் திரியும் கைஸ்கள் ஒரு நாளும் உத்தமன் ஆகப்போவதுமில்லை. 'பொய்மை எப்போதும் ஓங்குவதும் இல்லை உண்மை எப்போதும் தூங்குவதும் இல்லை' என்ற புரட்சி தலைவரின்
    பாடலின் உட்கருத்தை புரிந்து கொண்டு ஏமாற்றும் கைபிள்ளைகளின் கீழ்த்தரமான செயலை விரட்டி அடிப்போம்.

    மீண்டும் உ...த்தமன் தொடர் பதிவில் சந்திப்போம்..........ksr.........

  4. #1613
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    இது எம்.ஜி.ஆர் படம்!
    -------------------------------
    எம்.ஜி.ஆர் சினிமாப் பதிவுடன் இன்றைய வருடத்தை நிறைவு செய்யும் உத்தேசம்!
    அது பெற்றால் தான் பிள்ளையா படம்!
    இந்தப் படத்தின் ஷூட்டிங்கை அடுத்து தானே அவருக்கு
    ஷூட்டிங்கும் நடந்தது??
    அந்தப் பாடல் பதிவு செய்யப்பட்ட பிறகு அது எம்.ஜி.ஆரின் பார்வைக்குப் போனது! பாடலைக் கேட்ட எம்.ஜி.ஆரின் முகம் வேர்வைக்குப் போனது?
    அந்த அளவு டென்ஷன் ஆகிறார் எம்.ஜி.ஆர்--
    உதவி இயக்குனர் வரிசையில் இருந்த மாதவனிடம் கோபத்தில் இரைகிறார்--
    இது உங்க யாரு படமும் கிடையாது.
    இது இந்த ராமச்சந்திரனோடப் படம்!
    எந்தப் பாட்ட யாருக்கு வைக்கணும்ன்னு தெரியாதா??
    கடுப்பில் இருக்கும் எம்.ஜி.ஆர்,,வாலியை அழைத்து அவரையும் குதறுகிறார்?
    ஏங்க இந்தப் பாட்டு எனக்குத் தான் செட் ஆகும்ன்னு நீங்க டைரக்ட்டர் கிட்டே சொல்லக் கூடாதா??
    எம்.ஜி.ஆர்,,இயக்குனர் கிருஷ்ணன் பஞ்சுவை முகத்துக்கு நேரேக் கடிந்து கொள்ள மாட்டார்!
    காரணம்,,அவரது சீனியாரிட்டி!
    நான்,,என்னோட வழக்கமான ஸ்டைலை விட்டுட்டு இந்தப் படத்துல என் நடிப்பக் காட்டி சக்சஸ் ஆகணும்ன்னு பாடுபட்டுக் கிட்டு இருக்கேன்
    நான் நடிக்கும் படத்துல இந்தப் பாட்டக் காமெடியன் பாடினா ரசிகங்க எப்படி ஏத்துப்பாங்க??
    இவ்வளவு ஆவேசம் எம்.ஜி.ஆர் அடைந்ததற்குக் காரணம்??

    தங்கவேலு பாடுவதாக எடுக்கப்பட்ட அந்தப் பாடல்--

    நல்ல நல்லப் பிள்ளைகளை நம்பி--இந்த
    நாடே இருக்குது தம்பி
    சின்னஞ்சிறு கைகளை நம்பி--ஒரு
    சரித்திரம் இருக்குது தம்பி!!
    எம்.ஜி.ஆர் பாடுவதாக மீண்டும் அந்தப் பாடல் ரீ-ஷூட் செய்யப்பட்டு எடுக்கப்பட்டது!
    படம்---எம்.ஆர்.ராதாவின் பினாமி எடுத்தது!
    எம்.ஜி.ஆரின் டென்ஷன் நியாயம் தானே???...vtr...

  5. #1614
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    திரைக் கவித் திலகம்:22.
    ********************

    காதல்.இந்த வார்த்தையை கேட்கும்போதே மனதிற்குள் பூ பூக்கிறதா?. வாலிபத்தைக் கடந்தவர் எவரும் இதிலிருந்து தப்பிக்க முடியாது.இனக் கவர்ச்சி என்பதையும் தாண்டி இதில் அப்படி என்னதான் இருக்கிறது.?. மலரில் தேன் சுரப்பதைப் போல் மனிதனிடம் காதல் சுரக்கிறது.ஆனால் தேனின் அருமை அந்த மலருக்குத் தெரிவதில்லை.காதலின் மகத்துவம் மனிதனுக்கும் புரிவதில்லை.காதலைக் கொண்டாடும் அவன் தான் அதை கொச்சைப்படுத்தவும் செய்கிறான்.எல்லாம் ஹார்மோன் செய்யும் வேலை என்கிறான்.அப்படியென்றால் அந்த ஹார்மோனை மனிதனிடம் வைத்தவன் வேலையில்லாதவனா?.இந்த பிரபஞ்சத்திற்கு எது மூலமோ அதுவே காதலுக்கும் மூலம்.எண்ணங்களையும் கனவுகளையும் விஞ்ஞானத்தால் விளக்க முடியாது.அதே போல் தான் காதலும்.இந்த காதல் தான் சங்க காலம் தொட்டு இன்று வரை நிறைய கவிஞர்களை வாழ வைத்துக்கொண்டிருக்கிறது.மொத்த திரைத் துறையும் இதை நம்பித் தான் இருக்கிறது.பத்து பாடல்கள் இருந்தால் அதில் பாதி காதலைத் தான் பாடும்.அதிலொரு அழகான பாடலை ஐயா மருதகாசி அருமையாகத் தந்திருப்பார்.

    திரைக் கவித் திலகத்தின் தொடரில் இன்று எனக்குப் பிடித்த பாடல்.ஆண்டு இறுதியில் எனது ஆசையாக இங்கே மலர்கிறது.ஐம்பதுகளில் திரைத் துறையில் தனது பயணத்தைத் தொடங்கிய ஐயா மருதகாசி அறுபதுகளில் கொஞ்சம் ஓய்வெடுத்தார்.திரைத் துறையில் அவருக்கு ஏற்பட்ட சில கசப்பான அனுபவங்களே அவரை சொந்த ஊருக்குத் துரத்தியது.ஆரம்ப காலகட்டத்தில் வளர்ந்து வரும் இரு இளம் ஹீரோக்களான இரு திலகங்களுக்கும் ஐயா நிறைய பாடல்களை எழுதியிருந்தார்.அவர்கள் வளர்ந்து விஸ்வரூபம் எடுத்தபோது தேடினால் ஆளைக் காணோம்.நடிகர் திலகத்தை இவராகவே தவிர்த்தார் என்பதை ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்.மக்கள் திலகத்திற்கும் மகத்தான பாடல்களை தந்திருக்கிறார்.அவரும் தேட ஐயா சொந்த ஊருக்குப் போய்விட்டார் என்ற செய்தியை அவினாசி மணி எம்.ஜி.ஆரிடம் தெரிவித்தார்.பாண்டியராஜனின் மாமனாரான மணி தான் ஆரம்ப காலங்களில் மருதகாசிக்கு உதவியாளராக இருந்தவர்.மணியான கையெழுத்துக்குச் சொந்தக்காரர் மட்டுமல்ல அருமையான எழுத்துக்கும் சொந்தக்காரர்.உடனடியாக எம்.ஜி.ஆர்.கவிஞருக்கு உதவ முன்வந்தார்.கடனில் மூழ்கிய அவரது வீட்டை மீட்டெடுத்தார். ஆனால் கவிஞரோ பத்திரம் உங்களிடமே இருக்கட்டும் என சொல்லிவிட்டார்.மக்கள் திலகத்திற்கும் மருதகாசிக்கும் நீண்ட கால நட்பு.என்னை வாழ வைத்த தெய்வம் தென்னையைப் போன்ற வள்ளல் என வானளாவப் புகழ்ந்த கவிஞர் தனது நூலை அவருக்குத் தான் காணிக்கையாக்கினார்..ஒரு வயது தான் வித்தியாசம் என்றாலும் அண்ணே என்று தான் அழைப்பார்.அப்படிப்பட்ட மக்கள் திலகம் குண்டடிபட்டு ஓய்விற்குப் பிறகு தேவருக்காக படம் ஒப்புக்கொண்டபோது மீண்டும் கவிஞரைத் தேட அவரோ சென்னையில் இல்லை.எப்படியாவது அவரைப் பிடிங்க என தேவரிடம் சொல்ல விலாசம் தேடிப் பிடித்து கடிதம் எழுதினார் தேவர்.

    மறுபிறவி எடுத்து வந்த எம்.ஜி.ஆருக்காக மறுபிறவி படம் எடுக்கிறேன் கவிஞரே உங்களுக்கும் அது மறுபிறவியா இருக்கட்டும் மெட்ராஸ் வந்து சேருங்க என கடிதத்தில் அவர் குறிப்டிட்டிருந்தார்.இந்த முறை மருதகாசியால் தட்டிக் கழிக்க முடியவில்லை.அந்தப் படம் ஒரு பாடலோடு நின்றுவிட குறுகிய காலத்தில் ஒரு படத்தை எடுங்கள் என எம்.ஜி.ஆர்.சொல்ல விரைவாக எடுத்த படம் தான் தேர்த் திருவிழா.இந்தப் படத்தின் வெளிப்புறப் படப்பிடிப்பு முழுவதும் கவிஞரின் சொந்த ஊரான கொள்ளிடக் கரையில் தான் படமாக்கப்பட்டது.கும்பகோணம் டி.எஸ்.ஆர்.குடும்பத்தார் உதவியோடு கவிஞரே மொத்த உதவிகளையும் படக் குழுவிற்கு செய்துகொடுத்தார்.குடந்தையின் சுற்று வட்டாரப் பகுதிகளில் படம் வேகமாக வளர்ந்தது.ஏறக்குறைய இருபது நாள் தங்கியிருந்து 26 நாட்களில் மொத்தப் படத்தையும் திருமுகம் பரபரப்பாக எடுத்துத் தர தேவர் படத்தை நல்ல விலைக்கு விற்று லாபம் பார்த்தார்.எதிர்பார்த்த அளவிற்கு அந்தப் படம் வசூலை குவிக்காவிட்டாலும் அருமையான பாடல்களை இசைத் திலகம் அமைத்துத் தர அதிலொரு டூயட்டிற்கு மருதகாசி வரிகளில் அசத்தியிருந்தார்.

    68 ல் வெளியான தேர்த்திருவிழாவில் பழைய நண்பர் இணைந்தாலும் ஏற்கனவே இருந்த நண்பர் காணாமல் போனது ஒரு திரையுலக சோகம் தான்.தேவர் பிலிம்ஸின் ஆரம்ப கால தூணாக இருந்த ஆரூர்தாஸ் எம்.ஜி.ஆர்.பேச்சையும் மீறி இயக்குநர் அவதாரம் எடுத்ததால் தேவர் பிலிம்ஸிலிருந்து கழற்றிவிடப்பட்டார்.இந்தப் படத்தின் வசனங்களை மதுரை திருமாறன் தான் எழுதினார்.காவிரியில் பரிசல் ஓட்டும் சரவணன் பாத்திரத்தில் மக்கள் திலகம் வர அவரது காதலி வள்ளியாக ஜெயலலிதா.இரு வருங்கால முதல்வர்களை அந்த கொள்ளிடக் கரை அப்போது கண்டது.தனது தங்கையின் வாழ்வை நாசமாக்கிய ஒரு திரைப்பட இயக்குநரைத் தேடி கிராமத்திலிருந்து பட்டணம் வரும் பரிசல்காரன் படத்தில் நடிப்பது போன்ற திரைக்கதையில் ஒரிஜினல் எம்.ஜி.ஆரே.திரையில் வரும் எம்.ஜி.ஆருக்கு கை கொடுக்கும் காட்சி அன்றைக்கு வித்தியாசமான அனுபவம்.மாயவநாதனோடு மருதகாசியும் பாடல்கள் தர துள்ளல் இசையோடு ஒரு டூயட்டில் இசைத் திலகம் மருதகாசி கூட்டணி பழைய பாணியை உடைத்து அறுபதுகளின் ரசிகர்களுக்கு இசை விருந்து அளித்தது.ஐயா டி.எம்.எஸ்.இசையரசி குரல்களில் அட்டகாசமான ஆட்டத்தோடு பல்லவியை அழகாக்கியிருப்பார் ஐயா மருதகாசி.காதல் பாடல்களில் இது ஒரு புது அனுபவம்.வார்த்தைகளை அவ்வளவு அழகாக கோர்த்திருப்பார் மருதகாசி.ஒவ்வொரு வார்த்தையும் எந்தெந்த தொணியில் ஒலிக்க வேண்டும் என்ற இலக்கணத்தை இந்தப் பாடலில் எடுத்துக்காட்டியிருப்பார் இசைத் திலகம் மகாதேவன்.இசையை கொஞ்சம் பின்னுக்குத் தள்ளி வார்த்தைகளை முன்னிலைப்படுத்தி ஏற்ற இறக்கத்தோடு மெட்டுக்கட்ட இன்பமாகிறது இந்தப் பாடல்.முன்னிசை அழகாக பின் தொடர ஐயா டி.எம்.எஸ்.தொடங்க அந்த சித்தாடை கட்டியிருக்கும் சிட்டு செமையானதொரு ஃபோக் சாங்.தந்தான தானன னான தானா.

    சித்தா...டை கட்டியிருக்கும் சிட்டு..
    சின்னச் சிட்டு உன் பார்வை மின்வெட்..டு.

    வெறும் வார்த்தைகளை ராகத்தோடு இணைத்தால் தான் அவை நம் நெஞ்சைத் தொடும்.ஒவ்வொரு வார்த்தையும் இங்கே உயிர் பெற்றிருக்கும்.கிராமத்தில் தூக்கிக் கட்டிய கண்டாங்கிச் சேலைகள் தான் இங்கே சித்தாடையாக மாறியிருக்கிறது.அந்த சின்னச் சிட்டின் பார்வையை கவிஞர் வெட்டும் மின்னலாக இங்கே மாற்றியிருப்பார்.அந்த மின்வெட்டை அவ்வளவு அழகாக்கியிருப்பார் ஐயா டி.எம்.எஸ்.அவரது ஜோடிக் குரலாக வரும் இசையரசி அடுத்த அடியில் இன்னும் அசத்தியிருப்பார்.

    சிங்கா...ரக் கைகளில் என்னைக் கட்டு
    நெஞ்சைத் தொட்டு..
    உன் அன்பை நீ கொட்..டு..

    அதே மீட்டரில் வருகிறது இந்த வரிகள்.சிங்காரத்தை கொஞ்சம் கூட்டி கட்டு தொட்டு என சிக்கென முடித்து கொட்டு இன்னும் கொஞ்சம் இனிமையாக்க அழகாக செதுக்கிய வரிகளில் இசையரசி இன்னும் அழகு.இடையிசையாக திலகத்தின் அம்சமான ஃப்ளூட்டோடு அவரது அசத்தலான தப்லாக்கள் .இனிமை கூட்ட பியானோ பேங்கோஸ் வகையறாக்கள்.கே.வி.எம்மின் ட்ரேட் மார்க் தாளத்தில் செமையானதொரு அனுபவம்.மக்கள் திலகம் கலைச் செல்வியை அருமையாக ஆட்டுவிக்கும் தங்கப்பன் மாஸ்டர்.சிம்ப்ளான காஸ்டியூம்கள்.அவுட்டோரில் அருமையானதொரு பூங்காவில் வர்மாவின் கேமிரா வளைந்தாட வாளிப்பான சரணங்களை வாரி வழங்குகிறார் ஐயா மருதகாசி.வாழ்க்கையின் எல்லாப் பக்கங்களையும் தனது வரிகளில் கொண்டு போய் வைக்கிறார் கவிஞர்.காதலின் மகத்துவம் தெரிந்த கவிஞர்.இங்கு ஆண் பெண் என்பது இரண்டல்ல.ஒன்றின் பாதி தான் இருவரும்.அந்தப் பாதிகள் தான் இணையத் துடிக்கிறது.எல்லாப் படைப்புகளையும் இயற்கை ஆண் பெண் என இரு கூறாகவே படைத்திருக்கிறது.அதன் உள்ளே ஈர்ப்பு சக்தியை பொருத்தியிருக்கிறது.இதுவே கூடலாகிறது.இந்த சங்கமத்தில் தான் சக்தி பிறக்கிறது.இந்தக் கூடலில் சில நேரம் ஊடல் பிறக்கிறது.இந்தக் ஊடலே மீண்டும் காதலாகிறது.இதைத் தான் வள்ளுவன் தனது இன்பத்துப் பாலிலும் சொல்கிறான்.

    ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
    கூடி முயங்கப் பெரின்.

    என்கிறான்.இந்த ஊடலை சங்கத் தமிழில் ஏராளமான இடங்களில் காணலாம்.மருத நிலத்தின் குறியீடே ஊடல் தான்.ஊடல் வேறு வெறுத்தல் வேறு.ஊடல் உயிருக்குள் உயிர் கலந்தவர்களுக்கு மட்டுமே உண்டாகும்.அதைத் தான் கவிஞர் தனது சரணத்தில் குறிப்பிடுகிறார்.காதல் மேடையில் கவனமாக ஆடுகிறது இந்த ஜோடி.இசைத் திலகம் தனது மெட்டை வார்த்தைகளுக்குத் தகுந்த மாதிரி மாற்றியமைக்கிறார்.மருதகாசியின் வார்த்தைகளை அவர் எங்கேயோ கொண்டு சென்றிருப்பார்.

    இது கா..தல் நா...டக மேடை
    என ஆண் குரல் அழகாக எடுத்துத் தர பெண் குரல் அதன் அர்த்தம் புரிந்து அழகாக பதில் தருகிறது.

    விழி கா..ட்டுது ஆ..யிரம் ஜாடை.

    இங்கு ஆ...டலுண்டு
    இன்ப பா...டலுண்டு
    சின்ன ஊ...டலுண்டு
    பின்னர் கூ...டலுண்டு

    தலைவியின் குரலோடு இணைந்து விளையாடும் தலைவனின் மறு மொழி.காதல் வானில் சிறகடிக்கும் இரு பறவைகள்.அன்பு ஆறாகப் பெருக்கெடுத்து காதல் களிப்பில் மிதக்கும்போது உண்டாகும் தவிப்பு.அதன் பின் அணைப்பு.காற்றின் வடிவம் கண்களுக்குத் தெரியாதது போல் காதலரின் மனதின் ஓட்டமும் சில நேரங்களில் புரியாமல் தான் போகிறது.காதலர் மேடையில் விழிகளின் ஜாடையில் ஆடலும் பாடலும் கூடவே கொஞ்சம் ஊடலும் பின்னர் வரும் கூடலும் இங்கே கவனமாக கையாளப்பட்டிருக்கும்.அந்த உணர்வுகளை அவ்வளவு அழகாக எடுத்துத் தருகிறது அந்தக் குரல்கள்.காதலில் கட்டுண்டு கிடக்கும்போது கால நேரம் தெரியாது.அது ஒரு சுகமான போதை.கள்ளில் கிடைக்காத போதை.அதை விடக் கூடுதல் போதை.சொல்வது நானல்ல வள்ளுவன்.

    உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும் கள்ளுக்கில்
    காமத்திற்கு உண்டு.

    இங்கே காதலின் உச்சம் தான் காமம்.பிறன் மனை நோக்காத காமம்.கட்டுப்பாட்டோடு இருக்கும் காமம் தான் காதலின் உச்சம்.இங்கு கவிஞர் காதலின் உச்சத்தை நமக்குக் காட்டுகிறார்.மதுவின் போதையை ஒத்திருந்தபோதிலும் காதலின் போதை அன்பின் வெளிப்பாடு.மது போதை உடலைச் சிதைக்கும்.உள்ளத்தைக் குலைக்கும்.துன்பமான நோயில் தள்ளும் காதலின் போதை உள்ளத்திற்கு ஊக்கம் தரும்.இன்பமான நோயது.அது மனிதனை பரிபூர்ண பாதைக்கு அழைத்துச் செல்லும்.சுயநலவாதியான மனிதனை மற்றொரு உயிருக்காக தன்னலம் துறக்கும் தியாகத்தை கற்றுத் தரும்.தான் என்ற அகந்தையை அழிக்கும்.இந்த மொத்தச் சாற்றையும் ஐயா மருதகாசி தனது வரிகளில் கொண்டு வந்திருப்பார்.

    மதுவுண்டால் போ...தையைக் கொடுக்கும்
    அந்த மயக்கம் கா...தலில் கிடைக்கும்
    தன்னை தான் மறக்கும்
    அது போர் தொடுக்கும்
    இன்ப நோய் கொடுக்கும்
    பின்பு ஓய்வெடுக்கும்ம்ம்ம்.

    மனிதன் காதலில் தான் தன்னையே இழக்கிறான்.தன்னை இழப்பவனே காதலை அடைகிறான்.பாசமும் நேசமும் ஏன் பக்தியும் கூட காதலின் வெளிப்பாடு தான்.கடவுளிடம் கொண்ட காதல் தான் இங்கு பக்தியாகிறது.இயற்கையின் மீது கொண்ட காதல் தான் எல்லா உயிர்களையும் மதிக்கிறது.காதல் எப்போதுமே சுகமானது.எதிர் துருவமான இரு உள்ளங்களின் காதலைத் தான் மருதகாசி இங்கே அவ்வளவு அழகாகத் தருகிறார்.அடுத்த சரணத்தில் அந்த உள்ளங்கள் இன்னும் அழகாகிறது.ஆண்கள் எப்போதுமே தரும் இடத்தில் இருக்க பெண்கள் பெறுவதையே விரும்புகிறார்கள்.தந்தவன் எப்போதும் கைம்மாறு எதிர்பார்ப்பான்.காதலில் இதுவும் ஒரு அழகு தான்.இதயத்தையே தந்த எனக்கு என்ன கொடுப்பாய்?. என்னையே கொடுக்கிறேனே என்பதில் தான் அவன் பூரிப்படைகிறான்.காதலின் உச்சம் தொடும் வரிகளை கவிஞர் அவ்வளவு அழகாக காட்டியிருப்பார்.

    இங்கு தரவா நா...ன் ஒரு பரிசு
    அதை பெறவே தூ...ண்டுது மனசு
    ஒன்று நா...ன் கொடுத்தால்
    என்ன நீ... கொடுப்பாய்?.
    உண்ண தேன் கொடுப்பேன்
    என்னை நா...ன் கொடுப்பேன்ன்ன்.

    ஒரு டூயட் பாடல் என்பது எப்படியிருக்க வேண்டும் என்பதற்கு இந்தப் பாடல் ஒரு சாட்சி.சாதாரணமாகத் தோன்றும் வார்த்தைகளில் ஒரு அசாதாரணம் இருக்கும்.காதலின் இலக்கணம் இப்படித் தான் இருக்க வேண்டும் என்பதை ஊரிலுள்ள அத்தனை காதலர்களுக்கும் ஒரு உபதேசமாகவே கவிஞர் சொல்லியிருப்பார்.காதல் வெறும் உடல் சம்பந்தப்பட்டதல்ல.அது உணர்வுகள் சம்பந்தப்பட்டது.இரு உள்ளங்கள் சங்கமமாகும்போது வெளிப்படும் உணர்வுகளில் உண்மைத் தன்மை இருக்க வேண்டும்.என்னை நான் கொடுப்பேன் என பெண்மை வந்து நிற்பது வெறும் வார்த்தைகளல்ல. நம்பிக்கையின் உச்சம்.அதை கட்டிக் காப்பாற்ற வேண்டியது ஆண்மையின் கடமை.அது தான் காதலின் மகிமை.இந்தப் பாடலில் மருதகாசி அதைத் தான் ஒட்டு மொத்த காதலர்களிடம் எதிர்பார்க்கிறார்.இந்த இனிமையான பாடல் காலம் கடந்தும் நமக்கு காதலை போதிக்கிறது.மக்கள் திலகம் கலைச்செல்வியின் இந்தப் பாடலை அவ்வளவு அழகாகச் செதுக்கியிருப்பார்கள் இந்த திரையுலக மேதைகள்.இதே கூட்டணியின் பல பாடல்களைப் பற்றி பேசலாம் வரும் நாட்களில்.இசைக் குடும்பத்து அன்பு உள்ளங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

    வளரும்...... Abdul Samad Fayaz...

  6. #1615
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    Happy New Year 2021... Wishes to All...

  7. #1616
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    அனைத்து தலைவர் நெஞ்சங்களுக்கும் 2021 இல் முதல் தலைவர் பதிவில் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி..

    என்னை தெரியுமா...பகுதி 1.

    தலைவர் அவர்களை உலகு எங்கும் வாழும் உண்மை நல்ல நெஞ்சங்களுக்கு பிடிக்கும்...தலைவர் அனைவரையும் விரும்புவதும் தெரியும்.

    தலைவருக்கு மறக்க முடியாத சில நெஞ்சங்கள் வரிசையில் இவரும் உண்டு...

    தலைவர் திமுக கட்சியில் பொருளாளர் ஆக நியமிக்கப்பட்ட உடன் அவர் இல்லம் சென்று மாலை அணிவித்து காலில் விழ போக தலைவர் தவறு என்று தடுக்கப்பட்டவர்...

    தலைவர் பட்டு ஜிப்பா பறக்கும் தலைமுடி உடன் பலமுறை அவரை சந்திக்கும் வாய்ப்பு பெற்றவர்..

    இவர் பெயர் கோடம்பாக்கம் ஏழுமலை....இவர் ஒருநாள் தலைவர் இடம் கையொப்பம் கேட்க அதில் தலைவர் அவர் கையொப்பம் போடாமல் என் ரசிகன் செவன் வாழ்த்துக்கள் என்று ஏழுமலை அவர்களை எண் 7 கொண்டு அழைத்த பெருமை கொண்டவர்.

    தலைவர் இயக்கம் கண்ட போது அவரை மலையாளி என்று ஒருவர் திட்ட தீயசக்தி சார்ந்தவர் அவரை அடித்து தன் வேலையை இழந்தவர்.

    வேலை நீக்கம் செய்தவர் அந்த நாள் மேயர்...மோகனரங்கம்.. அனகை ராமலிங்கம் கே.ஏ கிருஷ்ணசாமி அவர்களுடன் பயணம் செய்தவர்.

    முதலில் வட்ட அமைப்பாளர் ஆக இவரை கட்சி பொறுப்பில் அமர்த்தி அன்று அந்த காவல் சரகத்தில் பணி புரிந்த குழந்தை கனி என்ற ஆய்வாளர் கொண்டு இவரை பற்றி தகவல்கள் சேகரித்து.

    பின் செவன் அவர்களை சென்னையை சுற்றி உள்ள 24 பள்ளி சத்துணவு கூடங்களுக்கு கண்காணிப்பளர் பொறுப்பை கொடுத்தார் தலைவர்.

    அங்கே யார் மீதும் இவர் தவறுகளை சொன்னால் ஏழை குழந்தைகள் சாப்பிடும் விஷயம் அவர்களுக்கு புரிய வை செவன்..

    இவர்களும் இந்த வேலையை விட்டு விட்டால் அவர்கள் குடும்பம் கதி என்ன என்பதை சொல்லி அன்பால் திருத்து என்று ஆணை இட பட்டவர் நம் அறிவுசால் ஆசான் அவர்களால்..

    இவரின் நேர்மை நடத்தை கண்டு இவருக்கு ஒதுக்கி கொடுத்த கோடம்பாக்கம் குடிசை மாற்று பகுதி வீட்டுக்கு செவன் அவர்களின் குழந்தை காது குத்து நிகழ்வுக்கு வந்து அங்கே அனைவரையும் மகிழ்வித்தவர் நம் பொன்மனம்....

    தீயசக்தியின் நெருங்கிய உறவினர் கு.க செல்வம்...தற்போது மைய கட்சியில் இணைந்தவர் வகித்து வந்த தொகுதி அமைப்பாளர் பொறுப்பை எடுத்து இந்த எளிய தொண்டன் செவனுக்கு கொடுத்து அழகு பார்த்தார் தலைவர்....

    செவனை பலமுறை பலர் தலைவர் இடம் மறித்து யார் நீ எங்கே அவரிடன் முண்டி அடித்து ஓட என்று கேட்க தலைவர் அவர் கையை நீட்ட சொல்லி அங்கே அண்ணாவின் உருவம் காட்டி இவர் என் நெருங்கிய தொண்டன் என்று சொல்லும் அளவுக்கு பெயர் வாங்கியவர்..

    அமரர் கண்ணதாசன்..
    ஏ .பி நாகராஜன் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகளில் தலைவர் உடன் சரிசமம் ஆக நடக்கும் வாய்ப்பை பெற்ற எளிய தொண்டர்..

    இவர் பகுதியில் இருந்த மகளிர் அணி தொகுதி பொறுப்பாளர்...ஒரு கட்டத்தில் தனக்கு உயர் பதவி கிடைக்கவில்லை என்று தலைவரை விமர்சிக்க...அது தலைவர் காதுகளுக்கு எட்ட....

    அவரை பொறுப்பில் இருந்து நீக்க... வருந்திய அவர் செவனை சந்தித்து வருத்தம் தெரிவிக்க நிரம்பிய மகளிர் கூட்டம் அடுத்த சில தினங்களில் தலைவரை சந்தித்து முறையிட..

    இனி வாய்ப்பு இல்லை கொஞ்ச நாள் அவர் அப்பிடியே இருக்கட்டும் என்று சொல்ல மகளிர் கூட்டம் மன்றாடி கேட்க

    இது உங்களின் குரல் போல இல்லை இதன் பின்னணியில் நிச்சியம் செவன் இருப்பார் போல என்று சரியாக கணிக்க.

    தலைவர் வீட்டு மரத்து நிழலில் நின்ற செவன் உள்ளே அழைத்து செல்ல பட.

    தவறு செய்த அந்த பெண்ணை செவன் சொல்லி மன்னித்து அடுத்த வாரத்தில் அவரை மாவட்ட மகளிர் அணி பொறுப்பில் அழகு பார்க்க அவர் யார் என்று இந்த பதிவில் சொல்வது அழகு அல்ல...

    அவரே இன்று வலம் வரும்...முழுமதி

    இந்த நீண்ட பதிவு தலைவர் தான் நம்பிய உண்மை தொண்டர் குரலுக்கு எப்படி மதிப்பு கொடுத்தார் என்பதை குறிக்கும் நோக்கில் பதிவிட பட்டது...

    இன்றும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார் செவன் சென்னையில் தலைவர் நினைவுநாள் பிறந்த நாள் அன்று அவரால் முடிந்த நினைவுகள் உடன்..

    இன்றும் தொடர்பில் இருக்கிறோம் அவருடன்...

    வாழ்க தலைவர் புகழ்.

    வாழ்க தலைவரின் உண்மை பக்தர்கள்.

    என்னை தெரியுமா பகுதி...2..தொடரும்.

    நன்றி...உங்களில் ஒருவன்....

    பதிவில் தலைவர் உடன் படத்தில் அவரே..

    பின்குறிப்பு.

    கு.க .செல்வம் அவர்களுக்கு மறைந்த கருணாநிதி அவர்கள் இல்லம் அருகே ஒரு வீட்டை வாங்கி கொடுத்தார் நம் தங்க தலைவர் என்பது கொசுறு செய்தி நன்றி.

    எப்படி பட்ட தலைவர்..
    எப்படி பட்ட உண்மை தொண்டர்கள்............nm...

  8. #1617
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் செல்வாக்கு மக்கள் திலகத்திற்கு மட்டும் தான் என்ற பெருமையை பெற்றவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவருடைய உருவம் தான் மறைந்தது. அவருடைய புகழ் மறையவில்லை. குறையவில்லை. மலைபோல் உயர்ந்து வளர்ந்து கொண்டு இருக்கிறது .அந்த வள்ளலின் புகழை நாடெங்கிலும் மண்ணிலே விதைத்து வைத்திருக்கிறார்கள். மக்கள் அவரை மறைக்கவும் முடியாது. மறக்கவும் முடியாது. மக்கள் திலகம் மக்களுக்கு தொண்டு செய்து மக்களின் அன்பைப் பெற்றவர். பொதுமக்களே என் சொத்து என்று சொன்னவர். மக்களால் உயர்ந்தது தான் என் புகழ். நான் மக்கள் சொத்து என்று அடிக்கடி சொல்பவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள்.

    வள்ளல் எம்ஜிஆர் வாழ்க்கை வரலாறு நூலிலிருந்து புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் உதவியாளர் எம்.ஜி.ஆர் முத்து எழுதியது.

    கொடைவள்ளல் எம்.ஜி.ஆர் புகழ் வாழ்க.....agm

  9. #1618
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது, பரமத்திவேலூர் என்ற இடத்தில் அதிமுக பொதுக்கூட்டம். அதில் கலந்து கொள்வதற்காக எம்.ஜி.ஆருடன் ஹண்டே சென்றார். ஹண்டேயின் கையில் அன்றைய மாலை நாளிதழ் இருந்தது. ‘‘என்ன நியூஸ்?’’ என்று எம்.ஜி.ஆர். கேட்டார். சொல்வதற்கு ஹண்டேக்கு தயக்கம். என்றாலும் தயங்கியபடியே சொல்லிவிட்டார்.

    ‘‘திமுக தலைவர் கருணாநிதி உங்களுக்குப் பொருளாதாரம் தெரியாது என்று விமர்சித்திருக்கிறார்’’ என்றார் ஹண்டே.
    அதைக் கேட்டு எம்.ஜி.ஆர். கோபமோ, வருத்தமோ அடையவில்லை. நிதானமாகச் சொன்னார்…

    ‘‘திமுக தலைவர் கூறுவது உண்மைதான். நான் பெரிய படிப்பு படித்தவன் அல்ல. பொருளாதாரம் பற்றி எனக்கு சொல்ல, அதுபற்றி நன்கு அறிந்த உயர் அதிகாரிகள் இருக்கிறார்கள். ஆனால்,

    பல முதல் அமைச்சர்களுக்குத் தெரியாத விஷயம் எனக்குத் தெரியும். பசி என்றால் என்னவென்று எனக்குத் தெரியும். அந்தக் கஷ்டம் புரியும். மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய முதல் அமைச்சருக்கு இது தெரிந்தால் போதும்.’’ - தி இந்து,... Poongodi...

  10. #1619
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    அருகே இருந்து சுட்டாலும் குண்டு சரியாகப் பாயாமல் சிகிச்சை தரப்பட்டு ஒரு வருடத்தில் மீண்டு வந்து விட முடியும்.*
    சுட்டதும் மீண்டதுமே ஒரு பெரிய இயக்கத்திற்குத் துணையாக இருந்தன.

    சிறுநீரகம் கெட்டுப் போய் அந்த மனிதன் சிகிச்சை பெற்றுத் திரும்பிய போது தமிழக மக்கள் காட்டிய அனுதாபமும் அன்பும் தவிப்பும்* சரித்திரத்தில் பொன்னெழுத்தில் பொறிக்கப்பட வேண்டியவை. வேறு யாருக்கும் அந்த மரியாதை கிடைக்கவேயில்லை.

    தமிழ் தமிழ் என்று பலரும் கூவிக் கொண்டிருக்க, ஒரு மனிதன் அன்பினால் வெகு எளிதாக ஜெயித்து விட்டுப் போனார்.

    - பாலகுமாரனின் "இது போதும் "*...

  11. #1620
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    உலகில் காண முடியாத அதிசயம் எம் ஜி ஆர்

    பொன்மன செம்மலின் பொற்க்கால ஆட்சியில் ஒரு முறை இயற்க்கை புயலால் பாதிப்பு முதல்வர் எம் ஜி ஆரு அவசரகால உத்தரவு போடுகிறார் மக்கள் பாதுகாக்க படுகிறார் என்றாலும் நேரில் மக்களின் துயர் நீக்க புறப்படுகிறார் எம் ஜி ஆர்

    முழங்கால் அளவு சேறு தண்ணீரில் இறங்கி மக்களிடம் குறை கேட்க வருகிறார் சூரியனே பூமியில் வந்தது போன்ற ஓளியோடு எம் ஜி ஆர்

    இதற்க்கு மேல் நடந்தது தான் சிறப்பு

    தங்களை காண வந்த எம் ஜி ஆரிடம் தங்கள் உடமைகள் எல்லாம் சேதம் அடைந்த நிலையிலும் அவர்கள் கூறியது
    மகராஜா உங்க ஆட்சியில் எங்களுக்கு எல்லா நிவாரணமும் கிடைத்தது ஒரு குறையும் இல்லை நீங்க இந்த சேறு தண்ணீரில் நடக்காதீர்கள் எங்களால் தாங்க முடியாது என கூறினர்
    மக்களி அன்பை இதை விட எந்த மனிதனாலும் பெற முடியாது
    எம் ஜி ஆர் ஒரு அதிசய புகழின் சொந்தகாரர்

    வாழ்க எம் ஜி ஆர் புகழ்...vrh...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •