-
2nd January 2021, 07:32 AM
#1621
Junior Member
Diamond Hubber
புரட்சித் தலைவரின் திரையுலகச் சாதனைகள்!
தமிழ்ப் படங்களிலேயே முதன்முதலில் வெள்ளிவிழா கொண்டாடிய படம் எம்.ஜி.ஆர் நடித்த ‘தக்ஷயக்ஞம்'.
தமிழ்ப் படங்களிலேயே இரண்டாவதாக வெள்ளி விழா கொண்டாடிய படம் 'அசோக்குமார்'.
முதல் படமான 'சதிலீலாவதி'யில் புரட்சி நடிகர் தன் சொந்தக் குரலில் பாடி நடித்தார்.
நாடகமாக நடத்தப்பட்டு முதன்முதலில் படமாக்கப்பட்ட கதை எம்.ஜி.ஆர் நடித்த ‘என் தங்கை’.
முதன் முதலாக ஜனாதிபதியின் வெள்ளிப் பதக்கம் பரிசுபெற்ற தமிழ்ப் படம் எம்.ஜி.ஆர். நடித்த ‘மலைக்கள்ளன்'.
முதன்முதலாக ஆறு மொழிகளில் தயாரான தமிழ்ப்படம் எம்.ஜி.ஆரின் ‘மலைக்கள்ளன்'.
முதன்முதல் முழு நீளக் கலரில் தயாரான தமிழ்ப் படம் எம்.ஜி.ஆர். நடித்த ‘அலிபாபாவும் 40 திருடர்களும்'.
வயது வந்தவர்கள் மட்டும் பார்க்கத் தகுந்தது என்று ‘ஏ’ சர்டிபிகேட் பெற்ற முதல் தமிழ்ப்படம் எம்.ஜி.ஆர். நடித்த ‘மர்மயோகி'.
முதன்முதலாக சென்னையில் திரையிடப்பட்ட 4 தியேட்டர்களில் 100 நாட்கள் ஓடி வெற்றிகண்ட தமிழ்ப் படம் எம்.ஜி.ஆர். நடித்த ‘மதுரை வீரன்’.
முதன்முதலாக சென்னையில் ஒரே சமயத்தில் 6 தியேட்டர்களில் வெளிவந்த தமிழ்ப் படம் எம்.ஜி.ஆர். நடித்த ‘மகாதேவி'
முதன்முதல் ஒரு நடிகர் சொந்தத்தில் படம் தயாரித்து, இயக்கி, சென்னையில் திரையிடப்பட்ட மூன்று தியேட்டர்களில் ஹவுஸ்புல்லாக ஓடிய தமிழ்ப் படம் எம்.ஜி.ஆர். நடித்து இயக்கிய படம் ‘நாடோடி மன்னன்'.
'ஹரிதாசு'க்குப் பின் தமிழகத்தில் அதிக நாட்கள் (236 நாட்கள்) ஓடிய ‘எங்க வீட்டுப் பிள்ளை’ சென்னையில் முதன்முதலாக மூன்று தியேட்டர்களில் வெள்ளி விழா கொண்டாடிய படமாகும்.
தமிழ்ப் படங்களிலேயே இரண்டாம் வெளியீட்டில் நூறு நாட்கள் ஓடியவை எம்.ஜி.ஆர். நடித்த படங்களே. (நாடோடி மன்னன், எங்க வீட்டுப் பிள்ளை)
தமிழ்ப் படங்களில் 100 நாட்கள் ஓடியது எம்.ஜி.ஆர். படங்களே அதிகம். நூறு நாட்கள் ஓடிய படங்கள் 49.
இலங்கையில் அதிகமாக அதிகப் படங்கள் நூறு நாட்கள் ஓடியவை எம்.ஜி.ஆரின் படங்களே.
சென்னையைத் தவிர தமிழகத்தின் வேறு நகரங்களில் தொடர்ந்து 100 காட்சிகள் அரங்கு நிரம்பி சாதனை செய்தவை எம்.ஜி.ஆரின் படங்களே! (4 படங்கள்)
முதன்முதல் ஆங்கிலப் படம் திரையிடப்படும் 'சபையர்' தியேட்டரில் வெளிவந்து அதிக வசூலைத் தந்த தமிழ்ப் படம் எம்.ஜி.ஆர். நடித்த ‘கன்னித்தாய்’.
நாடோடி மன்னன், மதுரை வீரன் சாதனையை முறியடித்தது. 1965-ல் திரையிடப்பட்ட எங்க வீட்டுப் பிள்ளை, நாடோடி மன்னனின் சாதனையை முறியடித்தது.
1956 முதல் 12 ஆண்டுகளாக யாராலும் வெல்ல முடியாமல் தென்னக ரீதியில் வசூல் பேரரசராக விளங்கும் ஒரே நடிகர் சாதனை திலகம் எம்.ஜி.ஆரே.
முதன்முதலாக சென்னையில் திரையிடப்பட்ட மூன்று தியேட்டர்களிலும் நல்ல வசூலாகி 25 வாரங்களுக்கு மேல் ஓடி வெள்ளி விழா கொண்டாடிய ஒரே தமிழ்ப் படம் எம்.ஜி.ஆர். நடித்த ‘எங்க வீட்டுப் பிள்ளை’.
விஞ்ஞான ரீதியில் முயன்று உண்மையிலேயே பறக்கும் தட்டை செய்து படமாக்கப்பட்ட ஒரே தமிழ்ப் படம் எம்.ஜி.ஆர். நடித்த ‘கலையரசி’.
இந்தியாவிலேயே குறைந்த நாட்களில் (13 நாட்களில்) தயாரிக்கப்பட்ட படம் எம்.ஜி.ஆர். நடித்த ‘முகராசி’. அதிகப் படங்களில் அதாவது (ஆறு) படங்களில் இரட்டை வேடம் தாங்கி கதாநாயகனாக நடித்த நடிகர் அகில உலகிலேயே எம்.ஜி.ஆர்.தான்.
மாடர்ன் தியேட்டர்ஸ், சரவணா பிலிம்ஸ், விஜயா கம்பைன்ஸ், ஆர்.ஆர்.பிக்சர்ஸ், ஏ.வி.எம்., ஜெமினி ஆகிய நிறுவனங்கள் தயாரித்த முதல் தமிழ் வண்ணப் படங்களில் கதாநாயகனாக நடித்தவர் எம்.ஜி.ஆரே.
முன்னாள் பிரதமர் நேரு அவர்கள் “பாதுகாப்பு நிதிக்குப் பணம் தாரீர்” என்று வானொலியில் கூறியபோது முதன்முதலாக அதிக தொகை (75 ஆயிரம்) கொடுத்த நடிகர் எம்.ஜி.ஆர். தான்.
இந்தியக் குடியரசுத் தலைவரால் தரப்பட இருந்த ‘பத்மஸ்ரீ’ விருது தமிழை அடிமைப்படுத்த முயலும் இந்தியில் இருப்பதால் ஏற்க மறுத்த முதல் கலைஞர் - ஒரே கலைஞர் எம்.ஜி.ஆரே.
இன்றுவரை எந்த மொழிப் படங்களிலும் கௌரவ நடிகராக நடிக்காத ஒரே கதாநாயக நடிகர் எம்.ஜி.ஆரே.
இன்று வரையில் மருத்துவமனையில் படுத்துக்கொண்டே சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற வேட்பாளர் எம்.ஜி.ஆர். ஒருவரே.
நன்றி: சமநீதி எம்.ஜி.ஆர். மலர் - 1968
#mgrmovies #mgrsuperhitmovies #எம்ஜிஆர் #எம்ஜிஆர்திரைப்படங்கள் #நாடோடிமன்னன்...VRH.........
-
2nd January 2021 07:32 AM
# ADS
Circuit advertisement
-
3rd January 2021, 10:33 AM
#1622
Junior Member
Diamond Hubber
அந்த நாள் ஞாபகம் :
எம்.ஜி.ஆர் ஒரு நிறைகுடம்.பட்டமும்
பதவியும் இல்லாதபோதே பொறுப்பு
வந்தால் அதனை சமாளிக்கும் அளவுக்குத் திறமை பெற்றிருந்தார்.
இதுதான் ஆச்சரியம் .உதவி செய்வதில் அகலமான மனதோடு
நடந்து இருக்கிறார் கணக்குப் போட்டுப்பார்த்தால் வேண்டாதவர்களுக்கே அவர் அதிகமாக செய்திருக்கிறார்.அவரது நடிப்பைப் பற்றிச் சொல்ல வேண்டுமென்றால்,அது அவரது சொந்த நடிப்பு.மற்றவரைப் பார்த்து நடித்ததல்ல.மற்றவர்கள் நடிப்பு கலப்படமாக இருக்கும்.கதாநாயகன் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று வரைமுறை வகுத்து சினிமாவுக்கு பாடம் சொல்லிக் கொடுத்துவிட்டுப் போய் விட்டார்.அவர் ஏழை எளிய மக்கள் மனதில் எப்படி இருக்கிறார் என்று சொல்ல வேண்டியதில்லை,அது எல்லோருக்கும் தெரியும்.
-நடிகர் எம்.என்.நம்பியார்.
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் புகழ் வாழ்க............
-
3rd January 2021, 10:40 AM
#1623
Junior Member
Diamond Hubber
ஒரு முறை சென்னை சாரதா ஸ்டுடியோ அரங்கில் கன்னட நடிகர் ராஜ்குமார் மற்றும் நம் இதயதெய்வம் அவர்களின் படப்பிடிப்பும் அந்த தளத்தில் ஒரே நேரத்தில் காட்சிகள் எடுக்க புக் செய்யப்பட்டு இருந்தன.
தரை மேலாளர் செய்த குளறுபடி காரணம் ஆக இரண்டு பட குழுவை சேர்ந்தவர்களும் அங்கே அவரவர் உடமைகளுடன் வந்து சேர....
ராஜ்குமார் முதலில் அரங்குக்கு வர சற்று நேரத்தில் தலைவரும் வந்து விட ஒரே பரபரப்பு அங்கே நிலவியது....தலைவர் சூழ்நிலையை புரிந்து கொண்டு ராஜ்குமார் அருகில் செல்ல..
அவர் வாங்க உங்க படப்பிடிப்பு நடக்கட்டும் நான் இன்னொரு நாள் வருகிறேன் என்று சொல்ல...தலைவர் அவரை தடுத்து நீங்கள் உங்க படப்பிடிப்பை தொடருங்கள்..
ஒன்றும் இல்லை நான் இன்று இங்கேயே அமர்ந்து உங்கள் காட்சிகள் எடுக்க படுவதை ரசித்து விட்டு போக உங்கள் அனுமதி வேண்டும் என்று சொல்ல.
திகைத்து போன் ராஜ்குமார் என்ன பெருந்தன்மை உங்களுக்கு என்று தலைவரை தழுவி கொள்ள காட்சிகள் எடுக்க பட துவங்க அங்கேயே அரை நாள் இருந்து அதை பார்த்து ரசித்து விடைபெறுகிறார் நம் காவியதலைவர்.
சம்பவம் 2..
தலைவர் ஒரு நிகழ்வில் கலந்து கொள்ள பெங்களூர் நகரம் சென்று இருந்த போது அன்று இந்திய நாட்டின் ஜனாதிபதி அவர்கள் அரசுமுறை பயணம் ஆக அங்கே வருகை தர.
நகரின் முக்கிய பகுதி மெஜெஸ்டிக் சர்கிள் பகுதியில் தலைவரின் கார் ஜனாதிபதி வருகை காரணம் ஆக ஓரம்கட்ட பட்ட வாகனங்கள் இடையே சிக்கி கொள்ள.
தலைவர் தனது கார் கண்ணாடியை இறக்கி வேடிக்கை பார்க்க அப்போது அங்கே திடீர் என்று வந்த ஒரு போக்குவரத்து காவல் உயர் அதிகாரி தலைவரை பார்த்து விட.
உடனே மற்ற கார்களை வாகனங்களை விவரம் சொல்லி தலைவரின் கார் மாண்புமிகு ஜனாபதி கார் சென்ற உடன் அவரை தொடர்ந்து செல்லும் கார்களுக்கு இடையில் தலைவர் செல்ல வழி ஏற்படுத்தி கொடுக்கிறார்.
ஜனாதிபதி அவர்கள் அந்த இடத்தை கடந்த உடன் அருகில் நின்றவர் அது என்ன அந்த தமிழக காருக்கு மட்டும் சிறப்பு அனுமதி கொடுத்து வழி ஏற்படுத்தி கொடுத்தது பற்றி கேட்க.
அவர் சிரித்து கொண்டே நான் இளம் வயது முதல் ராஜ்குமார் அவர்களின் ரசிகன்..
ஒருசமயம் ஒரு விழாவின் போது ராஜ்குமார் அவர்கள் இங்கே கன்னட நடிகர்கள் ஒருவருக்கு ஒருவர் போட்டி பொறாமை கொள்ள.
அங்கே சென்னையில் நான் ஒரு படப்பிடிப்பு க்கு சென்று இருந்த நேரத்தில் தென் இந்தியாவின் பிரபல நடிகர் புரட்சிதலைவர் எம்ஜிஆர் அவர்கள் தனக்காக அந்த ஸ்டூடியோ தளத்தை விட்டு கொடுத்த நிகழ்வை சுட்டி காட்டி அவரை போல பெருந்தன்மை கொண்டு இங்கே நாம் வாழ பழகி கொள்ளவேண்டும் என்று பேசியதை அங்கு அப்போது கேட்டு கொண்டு இருந்த போக்குவரத்து காவல் அதிகாரி..
சம்பவத்தை நினைத்து தலைவரின் பெருந்தன்மை உணர்ந்து அவரை ராஜ மரியாதை உடன் அங்கே அனுப்பி வைத்தேன் என்று சொல்லுகிறார்.
கால சக்கரம் என்றும் நம் நல்ல மனம் கொண்ட தலைவரை சுற்றி சுழன்றே வரும்.
புரிந்தவர்கள் நிலைத்து நிற்பார்...என்றும் எங்கும்.
வாழ்க தலைவர் புகழ்.
நன்றி..தொடரும்.
உங்களில் ஒருவன் ..
நெல்லை மணி..நன்றி..........
-
3rd January 2021, 10:41 AM
#1624
Junior Member
Diamond Hubber
இங்கே உள்ள பதிவில் போட்டிருக்கும் இந்த சுப்புரமணி சுப்புராமன் என்றவர்தான் விளங்காத வீடு படம் டிஜிட்டலில் எடுத்து விட்டிருக்கார். கணேசன் படம் பார்க்க 10 பேர் வந்தாலே ஆகா ஓகோந்னு குதிக்கிற ஆளு படம் பணால் ஆனதில் அடக்கி வாசிக்கிறார். விளங்காத வீடு திரையரங்குகளில்..என்று போஸ்டர் படம் போட்டு கொஞ்ச நேரம் முன்னாடி தன் முக நூலிலும் எல்லா கணேசன் குரூப்பிலும் போட்டு விளம்பரம் பண்றார். பாவம். ஆனா தியேட்டருக்குதான் யாரும் வரவில்லை. கணேசன் ரசிகன் ஒருத்தனாச்சும் இந்தப் படத்தை பத்தி மூச்சு விடலை. நம் தலைவன் படமாவது மறுபடி மறுபடி வெளியீடு வரும். என்னிக்கி இருந்தாலும் வினியோகஸ்தருக்கு லாபம்தான். ஆனா இந்த விளங்காத வீடு இன்னும் 4 நாளில் பொட்டிக்குள் போனால் திருப்பி வராது. சுப்பிரமணி விரல் சூப்புர மணியாகிவிட்டார். ஒருத்தனுக்கு சிரமம் வரும்போது கிண்டல் பண்ணக்கூடாது. அது மனிதாபிமானம் இல்லை. ஆனா, இந்த ஆளுக்கு இந்த அடி வேண்டிதான். எப்ப பாத்தாலும் எம்ஜிஆரை திட்டுறது, உலகம் சுற்றும் வாலிபனை தங்கப்பதக்கம் வசூலில் மிஞ்சியது என்று பொய் சொல்லுவாரு. அதுக்கு தண்டனை கிடைத்து விட்டது. அதிலும் நடிகர் கணேசனே தன் படம் மூலம் இந்த ஆளை தண்டித்து விட்டார். கணேசன் படம் எடுத்து துண்டு போட்டவர்கள் பட்டியலில் சுப்புரமணி சுப்புராமன் இடம்பிடித்து விட்டார். செத்தும் எல்லாருக்கும் இன்னும் கொடுப்பவர் எம்ஜிஆர். செத்தும் தன் ரசிகனையே கெடுப்பவர் கணேசன். இனியாச்சும் எம்ஜிஆர் புகழை உணர்ந்து திருந்துங்கப்பா..........rrn...
-
3rd January 2021, 10:42 AM
#1625
Junior Member
Diamond Hubber
உலகில் காண முடியாத அதிசயம் எம் ஜி ஆர்
பொன்மன செம்மலின் பொற்க்கால ஆட்சியில் ஒரு முறை இயற்க்கை புயலால் பாதிப்பு முதல்வர் எம் ஜி ஆரு அவசரகால உத்தரவு போடுகிறார் மக்கள் பாதுகாக்க படுகிறார் என்றாலும் நேரில் மக்களின் துயர் நீக்க புறப்படுகிறார் எம் ஜி ஆர்
முழங்கால் அளவு சேறு தண்ணீரில் இறங்கி மக்களிடம் குறை கேட்க வருகிறார் சூரியனே பூமியில் வந்தது போன்ற ஓளியோடு எம் ஜி ஆர்
இதற்க்கு மேல் நடந்தது தான் சிறப்பு
தங்களை காண வந்த எம் ஜி ஆரிடம் தங்கள் உடமைகள் எல்லாம் சேதம் அடைந்த நிலையிலும் அவர்கள் கூறியது
மகராஜா உங்க ஆட்சியில் எங்களுக்கு எல்லா நிவாரணமும் கிடைத்தது ஒரு குறையும் இல்லை நீங்க இந்த சேறு தண்ணீரில் நடக்காதீர்கள் எங்களால் தாங்க முடியாது என கூறினர்
மக்களி அன்பை இதை விட எந்த மனிதனாலும் பெற முடியாது
எம் ஜி ஆர் ஒரு அதிசய புகழின் சொந்தகாரர்
வாழ்க எம் ஜி ஆர் புகழ்...
-
3rd January 2021, 10:43 AM
#1626
Junior Member
Diamond Hubber
தொடர் பதிவு- உ...த்தமன். 8
-----------------------------------------------
சார்லஸ் தியேட்டரில் எம்ஜிஆர் படங்கள் வெளியாகும் போது அவர்கள் முறையில்லாமல் அதிக டிக்கெட்கள் வழங்குவதும் அதற்கு கணக்கு காட்டாமல் ஏமாற்றுவதும் வாடிக்கையாக வைத்திருந்ததால் குறிப்பிட்ட தொகை அட்வான்சாக வாங்கிக் கொண்டு ஹையர் அடிப்படையில் படத்தை விநியோகம் செய்தார்கள்.
அதாவது திருநெல்வேலி வசூலில் 75 சதமானம் தந்து விட வேண்டும் என்ற அடிப்படையில் படத்தை விநியோகம் செய்தார்கள். சார்லஸ் அதிபர் வட்டிக்கு அதிகமாக கடன் வாங்கி வட்டியும் ஒழுங்காக செலுத்தாமல் போனதால் அவருக்கு யாரும் கடன் தர மாட்டார்கள். இந்த சூழ்நிலையில் எம்ஜிஆர் படம் ஒன்றுதான் தன்னை காப்பாற்ற முடியும் என்பதால் எம்ஜிஆர் படத்தை விநியோக ஒப்பந்தம் உடனே போட்டு விடுவார்கள்.
ஆனால் படம் வெளிவரும் தருணத்தில் கையில் பணம் இல்லாமல், யாரும் கடன் தர மாட்டார்கள் என்பதால், என்ன செய்வதென்று யோசித்தார். 1967 தீபாவளிக்கு வெளியான "நான்" "ஊட்டி வரை உறவு" "இரு மலர்கள்" "விவசாயி" ஆகிய நான்கு படங்களில் "விவசாயி" சார்லஸில் வெளிவந்தது. "இரு மலர்கள்" ஜோஸப்பில் வெளியாகி 21 நாட்கள் கூட்டமே இல்லாமல் ஓட்டி படத்தை எடுத்து விட்டு அதன் தொடர்ச்சியாக "அன்பே வா" உட்பட தொடர்ச்சியாக தலைவர் படத்தை வெளியிட்டு "விவசாயி"க்கு அதிர்ச்சி அளித்தனர். ஆரம்பத்தில் படத்தை எடுப்பதற்கு கட்ட வேண்டிய டெப்பாசிட் தொகையில் ரூ2000 குறைந்ததால் தியேட்டர் அதிபர் ஒரு காரியம் செய்தார். என்னவென்றால் திகைத்து விடுவீர்கள்.
ரூ2000 ஏற்பாடு செய்ய முடியாமல் படப்பெட்டி வராத சூழ்நிலையில் தீபாவளியன்று 5 காட்சிகள் என்று அறிவித்து விட்டு காலை காட்சி 9 மணிக்கு என்பதால் டிக்கெட் கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள்.ரூ2000 சேரும் வரையில் டிக்கெட் கொடுத்துக் கொண்டே இருந்தார்கள். நானும் அந்தக்காட்சிக்கு சென்றிருந்தேன்.
ஒரு காட்சி ஹவுஸ்புல் என்றால் சுமார் எழுநூற்றி சொச்சம் தான் வரும். ஆனால் இவர்கள் ரூ2000
தாண்டி வசூல் செய்து விட்டு பணத்தை எடுத்துக் கொண்டு திருநெல்வேலிக்கு காரில் சென்று படப்பெட்டியை எடுத்து வர கிளம்பினார்கள். அப்போது மணி சுமார் 11 இருக்கும்.
திருநெல்வேலிக்கு காரில் செல்வதானால் குறைந்த பட்சம் 1 மணி 15 நிமிடங்களாவது ஆகும். சுமார் 1.30 மணிக்கு படப்பெட்டியுடன் திரும்பி வந்தார்கள். அதுவரை மகாநாடு போன்று திரண்டிருந்த ரசிகர்கள் கூட்டத்தை சமாளிக்க முடியாமல் தியேட்டர் நிர்வாகம் அடிக்கடி ஸ்லைடு போட்டு இன்னும் 1 மணி நேரத்தில் படம் துவங்கி விடும் என்று அறிவித்தபடி இருந்தார்கள்.
இருந்தாலும் அவர்களின் மனதைரியம் என்னை வியக்க வைத்தது.
முடிவில் படத்தை 1.30 மணிக்கு திரையிட்டு இன்டர்வெல் இல்லாமல் 4 மணிக்கு முடித்து தொடர்ந்து அடுத்த காட்சியை திரையிட்டார்கள். அன்றைய தீபாவளியில் முக்கால் பாகம் சார்லஸில் "விவசாயி"யுடன் கழிந்தது மறக்க முடியாத அனுபவம்.
வரி ஆபிஸில் சீல் அடித்த டிக்கெட்டை கொடுக்காமல் இவர்கள் சீல் இல்லாமல் விநியோகம் செய்து வரி ஏய்ப்பு செய்வார்கள். அதனால் இவர்கள் மீது அநேக வரி ஏய்ப்பு மோசடி வழக்கு இருந்தது.
வரி ஏய்ப்பு மோசடிக்காக அடிக்கடி தியேட்டரை 3 நாட்கள் சீல் வைப்பார்கள். எத்தனை செய்தாலும் இவர்கள் வரி ஏய்ப்பை தொடர்ந்து கொண்டிருந்ததால் சார்லஸின் பெயர் கெட்டு விட்டது. அதுபோல் விநியோகஸ்தரையும் ஏமாற்றி கணக்கு காட்டுவதால் அவர்களும் தூத்துக்குடிக்கு மட்டும் ஹையர் அடிப்படையில் விநியோகம் செய்ததால் இவர்களுக்கு ரொம்ப வசதியாகி விட்டது. ஒரே வாரத்தில் போட்ட முதலை எடுத்து விட்டு படத்தை விரைவில் தூக்கி விடுவார்கள்.
எம்ஜிஆர் படத்தை தவிர வேறு படங்களை ஷேர் அடிப்படையில் தான் வாங்குவார்கள்.
இதனால் தூத்துக்குடி மட்டும் விநியோகஸ்தர்கள் கட்டுப்பாடின்றி எம்ஜிஆர் படத்தை விரைவில் அதிக டிக்கெட்களையும்,அதிக கட்டணத்தையும் விதித்து தேவைக்கு அதிகமான வசூலை பெற்று விட்டு படத்தை 50 நாட்கள் ஓட்டாமலே எடுத்து விடுவார்கள். இதில் தூத்துக்குடி சார்லஸ்தான் முன்னோடி.
மீண்டும் அடுத்த பதிவில்..........ksr...
-
4th January 2021, 07:30 AM
#1627
Junior Member
Diamond Hubber
சவால்விட்டு சொல்லுவோம். உலகத்தில் எந்த நடிகர் அல்லது தலைவரின் கையைப் பிடித்து ஒரு ஏழைத் தொண்டன் முத்தம் கொடுக்க முடியுமா? தொண்டனின் அன்பு முத்தத்தை ஏற்கும் தலைவரின் முகத்தில் மகிழ்ச்சியை பாருங்கள். இதுதான் மத்த நடிகர்கள்/தலைவர்களுக்கும் நம் தலைவருக்கும் உள்ள வித்தியாசம். மற்ற நடிகர்களின் ரசிகர்கள்/ தொண்டர்களுக்கு இந்த பெருமை கிடைக்காது. தொண்டனை மதிக்கும் ஒரே நடிகர் மக்கள் திலகம், ஒரே தலைவர் புரட்சித் தலைவர். மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகன் .... புரட்சித் தலைவர் பக்தன் என்பதில் நாம் எல்லாரும் காலரை தூக்கிவிட்டு கர்வம் கொள்வோம்............ Swamy.........
-
4th January 2021, 07:32 AM
#1628
Junior Member
Diamond Hubber
எம்.ஜி.ஆரின் 23 பக்க உயில்........ எம்.ஜி.ஆர். உயிரோடு இருந்தபோது 28_4_1986_ல் ஒரு உயில் எழுதினார். பின்னர் அதனை ரத்து செய்துவிட்டு 18_1_1987_ல் (2_வது முறையாக அமெரிக்கா செல்வதற்கு முன்பு) புதிய உயில் ஒன்றை எழுதி வைத்தார். எம்.ஜி.ஆர். மரணம் அடைந்த பிறகு 9_1_1988 அன்று இந்த உயில் வெளியிடப்பட்டது.
சென்னை ராயப்பேட்டை லாயிட்ஸ் ரோட்டில் உள்ள அ.தி.மு.க. தலைமை நிலையத்தில், நிருபர்கள் முன்னிலையில் எம்.ஜி.ஆரின் வக்கீல் என்.சி.ராகவாச்சாரி உயிலில் எழுதப்பட்டிருந்த விவரங்களை படித்தார். அப்போது எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மாள் அங்கிருந்தார். அ.தி.மு.க. அவைத்தலைவர் ஈ.வெ.அ.வள்ளிமுத்து, மூத்த துணைப் பொதுச்செயலாளர் ராகவானந்தம், பொருளாளர் மாதவன் ஆகியோரும் உடன் இருந்தனர். உயில் மொத்தம் 23 பக்கங்கள் கொண்டதாகும். அது தமிழில் எழுதப்பட்டு உள்ளது. உயில் விவரம் வருமாறு:_
செங்கல்பட்டு மாவட்டம் மணப் பாக்கத்தில் இருக்கும் ராமாவரத்தில் உள்ள எம்.ஜி.ஆர். தோட்டத்தில் குடியிருக்கும் எம்.கோபாலன் அவர்களின் குமாரனாகவும், தமிழக முதல்_அமைச்சராகவும் பணியாற்றி வரும் எம்.ஜி.ராமச்சந்திரன் என்னும் நான் இந்த புதிய உயில் பத்திரத்தை சுய நினைவோடும், மனப்பூர்வமாகவும், பிறர் தூண்டுதல் இன்றியும் எழுதி வைத்து இருக்கிறேன்.
எனக்கு குழந்தைகள் கிடையாது. என்னுடைய ஒரே வழிமுறை (வாரிசு) என் மனைவி திருமதி. ஜானகி அம்மாள்தான். அவளைத் தவிர வேறு யாரும் எனக்கு வாரிசு இல்லை. என் காலத்துக்குப்பிறகு என் சொத்துக்கள் சம்பந்தமாக எந்தவித வழக்குகள், தகராறுகள் ஏற்படாமல் இருக்கவும், எனது உறவினர்கள் எவரும் பாத்தியதை உரிமை கொண்டாடாமல் இருக்கவும் சுய சம்பாத்தியத்தின் மூலம் நான் வாங்கிய சொத்துக்கள் விஷயமாக இந்த உயிலில் ஏற்பாடுகளை செய்து இருக்கிறேன்.சென்னை தேசிகாச்சாரி ரோட்டில் 24 எண் உள்ள வீட்டில் குடியிருக்கும் மூத்த வழக்கறிஞர் என்.கி.ரங்கசாமியின் குமாரரான என்.சி.ராகவாச்சாரி மற்றும் சென்னை வீனஸ் காலனியில் குடியிருக்கும் எனது மருமகன் ராஜேந்திரன் அவர்களையும் இந்த உயிலை நிறைவேற்றுபவராக நியமிக்கிறேன்.
அவர்கள் காலத்திற்கு பிறகு சட்டப்படி சென்னை உயர்நீதிமன்ற ஆணைப்படி நிறைவேற்றுபவர்களை நியமிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அடியில் கண்ட அசையாத மற்றும் அசையும் சொத்துக்கள் எனக்கு சொந்தமானவை. அவைகளில் வேறு யாருக்கும் எந்த பாகமும், எந்த உரிமையும் கிடையாது.
1) நான் குடியிருக்கும் மணப்பாக்கம் கிராமத்தில் ராமாவரத்தில் என் பெயரிலுள்ள "எம்.ஜி.ஆர். கார்டன்" என்னும் பங்களாவும், தோட்டமும்.
2) சென்னை தியாகராயநகர் ஆற்காடு சாலையில் 27_வது எண்ணில் இருக்கும் கட்டிடமும், அடி மனையும்.
3) சென்னை சாலிகிராமத்தில் இருக்கும் சத்யா தோட்டம்.
4) ஆலந்தூர் மார்க்கெட் சந்தில் எண் 43_ல் இருந்து 47 வரை உள்ள கட்டிடங்களும் அடிமனையும்.
5) நான் குடியிருக்கும் ராமாவர தோட்ட பங்களாவில் உள்ள அசையும் சொத்துக்களான எனக்கு சினிமா துறையில் கிடைத்த விலை உயர்ந்த பரிசுகளும், மற்றபடி கிடைத்த விலை உயர்ந்த பரிசுகளும். என் சொந்த மர, இரும்பு சாமான்கள், வெள்ளி பாத்திரங்களும், மோட்டார் வாகனங்கள், பசு முதலிய கால்நடைகள்.
6) சத்யா படப்பிடிப்பு நிலையத்தில் என் பெயரில் உள்ள பங்குகள்.
7) இவைகள் எல்லாம் என் சுய சம்பாத்தியத்தில் வாங்கப்பட்டவை. எனக்கு சர்வ சுதந்திரமாக பயன்படுத்தப்பட்டவை ஆகும்.
மேலே சொல்லப்பட்ட நான் குடியிருக்கும் எம்.ஜி.ஆர். கார்டன் என்று பெயருள்ள மணப்பாக்கம் ராமாவரம் தோட்டத்தில் பங்களா, கார்செட், கோவில், பழத்தோட்டம் ஆகியவை என் மனைவி திருமதி வி.என்.ஜானகி அவருடைய ஆயுள் பரியாந்தம் ஆண்டு அனுபவித்துக்கொள்ள வேண்டியது. அவைகளை விற்கவோ, அடமானம் வைக்கவோ, தானமாக கொடுக்கவோ உரிமை கிடையாது.
என் மனைவி காலத்திற்கு பிறகு அவருடைய சொந்தக்காரப் பெண்ணான கீதா (மதுமோகன் மனைவி), நிர்மலா (அப்புவின் மனைவி), ராதா (கோபாலகிருஷ்ணன் மனைவி), ஜனம், சுதா ஆகியோர் ராமாவரம் தோட்டத்தில் ஏற்கனவே குறிப்பிட்ட ஏ.பி.சி.டி. என்று வரைபடத்தில் குறிப்பிட்ட கட்டிடங்களை அவரவர் ஆண்டு அனுபவித்துக் கொள்ளவேண்டியது.
அவர்கள் மேற்படி சொத்துக்களை விற்கவோ, குத்தகைக்கு விடவோ போன்றவை செய்ய உரிமையில்லை. அவர்கள் காலத்திற்கு பிறகு இந்த சொத்துக்களை அவரவர் வாரிசுகள் பெறவேண்டும். மேற்சொன்ன ராமாவரம் தோட்டத்தில் காலி இடங்களை எல்லாம் சேர்த்து இந்த உயிலை நிறைவேற்றுபவர், அதில் "எம்.ஜி.ஆர். ஊமைகள் இல்லம் என்ற பெயரில் ஊமைகள், காது கேளாதவர்கள் இல்லமாக அதை ஏற்படுத்தவேண்டும்.
அந்த ஏழைகள் இலவசமாக தங்கியிருப்பதற்கும், உணவுக்கும் காது கேளாதவர்கள் இலவசமாக கருவிகள் பெறுவதற்கும், உடுத்த உடை, மருந்துகள் வசதி, கல்வி, தொழில் முதலியவைகளுக்காக அந்த காலி இடங்களில் செட்டுகளும், கட்டிடங்களும் போட்டுக்கொள்ள வேண்டும். ஊமைகள் பேசுவதற்கு சிகிச்சையும், பேச்சுப் பயிற்சியும் ஏற்பாடு செய்தாக வேண்டும்.
இதே மாதிரி காது கேளாதவர்களுக்கு இந்த இடத்தில் இதுபோல் தங்கும் வசதி, காது கேட்பதற்கான கருவிகள் வாங்கி கொடுத்தல் போன்றவற்றை செய்தல் வேண்டும். இந்த "எம்.ஜி.ஆர். ஊமைகள் இல்லத்திற்கான செட்டுகள், கட்டிடங்கள் அமைக்கவும், இதர செலவுகளுக்கும் சாலிகிராமத்தில் இருக்கும் சத்யா தோட்டத்தின் வருமானத்தில் இருந்து மேற்படி காரியங்களுக்கான செலவை செய்யவேண்டியது.
என்னுடைய வீட்டில் இருக்கும் பரிசுப் பொருட்கள் ஆற்காடு ரோடு 27_ம் நம்பர் வீட்டில் இருக்கும் பரிசுப் பொருட்கள், புத்தகங்கள், நூல்கள், மேற்சொன்ன தி.நகர் ஆற்காடு 27_ம் நம்பர் கட்டிடத்தில் வைக்கப்பட வேண்டும். 27_ம் நம்பர் வீட்டில் உள்ள மனையும், கட்டிடங்களும் என் காலத்துக்கு பிறகு "எம்.ஜி.ஆர். நினைவு இல்லம்" என்று பெயரிட்டு பாதுகாக்கப் படவேண்டும்.என் நினைவு இல்ல பராமரிப்புகளை சரியாக மேற்கொண்டு அதில் உள்ள பொருட்களையும், அந்த இடத்தையும் மக்கள் பார்வையிட வசதி செய்து கொடுக்க வேண்டும். மேற்சொன்ன எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்தை யாரும் விற்கவோ, அடமானம் வைக்கவோ, குத்தகைக்கு விடவோ உரிமை கிடையாது.
இந்த இல்லத்தின் பராமரிப்பு செலவுக்காகவும், காவல் காப்பது போன்றவைகளுக்காகவும் ஆலந்தூர் மார்க்கெட் கட்டிடங்களில் இருந்து வரும் வருமானத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டியது. அதற்காக அந்த மார்க்கெட் கட்டிடங்களை எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்துக்கு எழுதி வைக்கிறேன்.பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர் ஆகியோரது நினைவு இல்லங்கள் எல்லாம் தமிழக அரசின் செலவிலேயே ஏற்படுத்தப்பட்டன. அரசுக்கு இந்த செலவை தவிர்த்திட என்னுடைய வீட்டையே இந்த நினைவு இல்லமாக ஏற்பாடு செய்து இருக்கிறேன். சத்யா ஸ்டூடியோ கம்பெனியில் எனக்குள்ள பங்குகள் அனைத்தும் நான் ஆரம்பித்த அ.தி.மு.க. கட்சிக்கு கீழே சொல்லப்பட்ட நிபந்தனைக்குட்பட்டு சேரவேண்டும்.
சத்யா ஸ்டூடியோ கம்பெனி பங்குகளை அகில இந்திய அ.தி.மு.க. கட்சி பெற்றுக்கொண்டு நிர்வாகம் செய்து வருகிற வருமானத்தை கட்சியின் பயனுக்காக எடுத்துக்கொள்ள வேண்டும். ஒருவேளை கட்சி பிளவுபட்டாலோ அல்லது கலைக்கப்பட்டாலோ மேற்படி சத்யா ஸ்டூடியோ கம்பெனியின் பங்குகளை எல்லாம் இந்த உயிலை நிறைவேற்றுபவர் கைப்பற்றி மேலே குறிப்பிட்ட எம்.ஜி.ஆர். ஊமைகள் இல்ல செலவுகளுக்கு பயன்படுத்த வேண்டும்.
சத்யா ஸ்டூடியோ கட்டிடத்துக்கு என் தாயின் பெயரான "சத்யபாமா எம்.ஜி.ஆர். மாளிகை" என்று பெயர் வைக்கவேண்டும். என்னுடைய ராமாவரம் தோட்டத்தில் உள்ள விலை உயர்ந்த பரிசுப்பொருட்கள் போக மீதி உள்ள மோட்டார் வாகனங்கள், மர இரும்பு சாமான்கள், கால்நடைகள் எல்லாம் என் மனைவிக்கு உரியதாகும்.
இந்த உயிலில் கண்டுள்ள எல்லா செயல்களையும், நடவடிக்கைகளையும் அடுத்த 6 மாதத்தில் அமலுக்கு கொண்டு வரவேண்டும். இந்த உயிலில் கூறாமல் விடப்பட்டவை மற்றும் ரொக்கப்பணம் எதுவும் இருந்தால் அவை எல்லாம் என் மனைவி ஜானகி அம்மாளுக்கே சேரும். இவ்வாறு அந்த உயிலில் எம்.ஜி.ஆர். எழுதி இருந்தார். பின்னர் வக்கீல் ராகவாச்சாரி சத்யா ஸ்டூடியோ மற்றும் நிலங்கள் பற்றிய விவரங்களை வெளியிட்டார்.
அதன் விவரம் வருமாறு:_ சத்யா ஸ்டூடியோவில் எம்.ஜி.ஆருக்கு 95 சதவீத பங்கும் ஜானகி அம்மாளுக்கு 5 சதவீத பங்கும் உள்ளன. சத்யா ஸ்டூடியோ 95 கிரவுண்டு பரப்பு உள்ளது. சாலிக்கிராமம் சத்யா தோட்டம் 8 ஏக்கர் பரப்பு உள்ளது. ராமாவரம் தோட்டம் 6 ஏக்கர் 34 செண்டு பரப்பு உள்ளது. இதில் எம்.ஜி.ஆர். ஊமைகள் இல்லத்துக்காக 2 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.
மேற்கண்டவாறு வக்கீல் என்.சி.ராகவாச்சாரி கூறினார்.
அ.தி.மு.க. மூத்த துணைப்பொதுச்செயலாளர் ராகவானந்தம் நிருபர்களிடம் கூறியதாவது:_
"இந்த தலைமை கழக கட்டிடமும், அடிமனையும் ஜானகி அம்மாளுக்குத்தான் சொந்தம். அதை கட்சிக்காக பரிசாக கொடுத்து பதிவு செய்துவிட்டார்."
இவ்வாறு அவர் கூறினார். thanks malai malar news
-
4th January 2021, 07:34 AM
#1629
Junior Member
Diamond Hubber
புரட்சிதலைவர் 1982 ஆம் ஆண்டு சத்துணவு திட்டத்தை, திருச்சி மாவட்டம் பாப்பாக்குறிச்சியில், துவக்கிவைத்தார்கள்!!
குழந்தைகளுடன் தரையில் அமர்ந்து கொண்டு சாப்பிடும் தலைவனின் மாண்பைக் காணுங்கள்!!
கோடி ரூபாய் திட்டத்தின் துவக்க விழாவில் சத்துணவு திட்டம் எப்படி உருவானது என்று முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அவர்கள் பேசியது!!
"சிவகாசியில் நடந்த ஒரு விபத்தைப் பற்றி நேரில் அறிய காரில் போய்க் கொண்டிருந்தேன்.
தூத்துக்குடி அருகே என்னைப் பார்க்கத் தாய்மார்கள் பலர் ஓடி வந்தனர்!!
அவர்களது இடுப்பில் குழந்தைகள்.
நான் காரிலிருந்து இறங்கி,
"காலையில் சாபிட்டீர்களா.?? "
என்று கேட்டேன் !!
"இல்லை" என்று பதில் சொன்னார்கள்!!
"குழந்தைகள் சாபிட்டதா.??
என்று கேட்டேன்!!
"இல்லை" எங்களுக்கு காலையில் சமைக்க நேரமில்லை!!
வேலையை முடித்துக்கொண்டு மாலையில் கூலியை வாங்கிச் சென்றுதான் சமைப்போம்.
குழந்தைகளும் அப்போதுதான் சாப்பிடும் என்று அவர்கள் சொன்ன பதில் எனக்கு மனதில் மிகவும் வேதனையை அளித்தது!!
இனி வேலைக்குப் போகும் தாய்மார்கள் குழந்தைகளைத் தங்களுடன் அழைத்துச் சென்று பட்டினி போடத் தேவையில்லை!!
அவர்களது ஊரில் அமைக்கப்பட்டிருக்கும் குழந்தைகள் சத்துணவு மையங்களுக்கு அனுப்பிவிட்டு நிம்மதியாக வேலைக்குச் செல்லலாம்!!
என் மகன் அங்கே சாப்பிட்டுக் கொண்டிருப்பான்!!
சுவையான சத்துணவு அவனுக்கு கிடைக்கிறது!!
என்று மகிழ்ச்சியுடன் வேலையைச் செய்யலாம்!!
அந்தத் தாய்.....
"இந்த நெகழ்ச்சியான சம்பவத்தை முதல்வர் எம்ஜிஆர் அவர்கள் சொன்னபோது,
அந்த விழாவில் உருகாத நெஞ்சம் இல்லை!! !..
-
4th January 2021, 07:36 AM
#1630
Junior Member
Diamond Hubber
#இந்தவையகம்கண்டவள்ளல்...
நடிகை மஞ்சுளா கண்ணீர் பேட்டி...
1984 அமெரிக்காவில் புரூக்ளின் மருத்துவமனையில் புரட்சித்தலைவரை பார்க்க சென்றேன்...
பேச முடியாத நிலையால் என்னை சரியாக அடையாளம் காணமுடியவில்லை...
நான்தான் மஞ்சுளா வந்திருக்கேன் .. என்று அடிக்கடி கூறியும் அவருக்கு நினைவில் வரவில்லை...
அங்கிருந்த ஜானகி அம்மா , " உங்க கூட நடிச்சாளே ..ரிக்ஷாக்காரன், இதயவீணை " படத்தில் .. அதே மஞ்சுளா வந்திருக்கா " என்றார் .
சற்று புரிந்தவராக ... ஜாடையில் கேட்டார் ..
பஸ்ஸுல வந்தியா ? கையில செலவுக்கு காசு இருக்கா ? என்றெல்லாம் கேட்டபோது என் மனம் மிகவும் கவலையில் கண்ணீர் விடாத நிலைக்கு வந்தேன் .
நான் , " விமானத்தில் வந்தேன் . ஊருக்கு போறேன் உங்களை பார்க்கவே வந்தேன் " என்றேன் .
ஜானகி அம்மாவும் நான் யார் என்பதை அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தார்கள் .
சிறிது நேரம் அங்கிருந்து கிளம்பும்போது ....
தலைவர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை ...
தான் படுத்திருந்த தலையணையை தூக்கி ., அதன் கீழே வைத்திருந்த அமெரிக்க டாலர்களை அப்படியே முழுவதும் எனது கையில் வைத்து திணித்து "செலவுக்கு வைத்துக்கொள்" என்று சொன்னார் .
கண்ணீர் விட்டு அழுது கொண்டேன்...
தான் பேசமுடியாத நிலையிலும் , தனக்கு சுயநினைவு இழந்த நேரத்திலும் அந்த தர்மம் கொண்ட சிந்தனை என் கண்முன்னால் இன்றும் நிற்கிறது
--- நடிகை மஞ்சுளா அவர்கள் இதயதெய்வம் புரட்சித்தலைவர் பற்றி கண்ணீருடன் ஒரு பேட்டியில்...
ஏன் மக்கள் தலைவரை இதய தெய்வமாக பாவித்து ஆலயம் கட்டி வழிபாடுகிறார்கள்...?
எத்தனை தலைமுறை கடந்தாலும் நிலைத்து நிற்கும் நம் தலைவர் புகழ்...
#இதயதெய்வம்...vrh...
Bookmarks