Page 202 of 210 FirstFirst ... 102152192200201202203204 ... LastLast
Results 2,011 to 2,020 of 2097

Thread: Makkal Thilagam MGR Part 26

  1. #2011
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #டூப்_எம்ஜிஆரை_மறக்காத
    #ஒரிஜினல்_எம்ஜிஆர்...

    ஒகேனக்கல் நீர்வீழ்ச்சிக்கும் தலைவருக்கும் நிறை பாசப்பினைப்புகள் உண்டு.. அந்த நீர்வீழ்ச்சி மீது அவருக்கு ஏனோ அளவுகடந்த பிரியம்.. தான் நடித்த பல படங்களில் ஏதாவது ஒரு இடத்தில் காண்பித்துவிடுவார்

    அந்த வகையில் காலத்தால் அழியாத காவியமான #அடிமைப்பெண் படப்பிடிப்பு ஒகேனக்கல்லில் நடந்தது.. தமிழகத்தின் மற்ற நீர்வீழ்ச்சிகளை காட்டிலும் ஆபத்து நிறைந்தது ஒகேனக்கல்... எந்த பகுதியில் எவ்வளவு ஆழம் இருக்கும் எங்கு சுழல் அதிகம் இருக்கும் என்பது உள்ளூர் ஆட்களுக்கு மட்டுமே தெரியும்..

    சென்னையிலிருந்து சென்ற படப்பிடிப்பு குழுவினர் நீர்வீழ்ச்சி பகுதியில் நடிக்க தயங்கி நிற்க பல ரிஸ்க்கான காட்டிகளிலு தலைவருக்காக டூப் போட்டு நடித்தும் படக்குழுவினருக்கு பல உதவிகளையும் செய்கிறார் உள்ளூரை சேர்ந்த #சென்னியப்பன் என்பவர்... பல காட்சிகளில் உயிரை பணயம் வைத்து நடிக்கிறார் தலைவருக்காக... படப்பிடிப்பு முடிந்ததும் தனக்கே உரிய பாணியில் சென்னியப்பனை கவனிக்கிறார் தலைவர்... ஆனாலும் சென்னியப்பனுக்கு இன்னும் ஏதாவது செய்ய வேண்டும் என அவரின் உள் மனம் ஏங்குகிறது... அதே சமயம் சென்னியப்பனுக்கே ஒரே மகிழ்ச்சி... தலைவராக தலைவருக்கு டூப்பா நடித்ததில் உள்ளூரில் அவருக்கான மதிப்பு கூடுகிறது... பாராட்டுக்கள் குவிகிறது.. இது நடந்தது 1969 ல்...

    காலம் ஓடுகிறது.. நடிகர் தலைவராகிறார்.. தமிழக ஆட்சி பீடத்தில் முதல்வராக அமர்கிறார் 1977ல்...

    ஒரு நாள் சுற்றுலா சம்மந்தமாக பேச்சு வரும் போது நமது வள்ளலுக்கு சென்னியப்பன் நினைவு வருகிறது.. அவரை கோட்டைக்கு அழைக்கிறார்.. என்ன பிரச்சினையோ என்னை ஏன் தலைவர் அழைக்கிறார் என்ற பயத்துடன் கோட்டைக்கு வருகிறார்...

    ஒகேனக்கல் #படகுதுறை பொறுப்பை உன்னிடம் ஒப்படைக்கிறேன்.. அதைநல்லபடியாக கவனித்து சுற்றுலாத்துறை மேம்பட உதவ வேண்டும் அதை நன்றாக பராமரித்து நல்ல பெயர் வாங்கி தரவேண்டும் என்று அன்பு கட்டளையிட்டு அவரிடம் பொறுப்பை ஒப்படைக்கிறார்.. சுமார் 8 ஆண்டுகளுக்கு முன் செய்த உதவிக்கு இவ்வளவு பெரிய #பதவியா என்று கண்கலங்கி நிற்கிறார் சென்னியப்பன்...

    இன்றும் ஒகேனக்கலுக்கு வருவோரிடம் #எம்ஜிஆர் புகழை பாடுக்கொண்டிருக்கிறது சென்னியப்பன் குடும்ப வாரிசுகள்.
    kv.........BPG

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2012
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ஸ்ரீ எம்ஜிஆர் வாழ்க
    மாசி மாதம் 12 ம்தேதி புதன் கிழமை
    உலக எம்ஜிஆர் ரசிகர்களே
    இந்திய எம்ஜிஆர் ரசிகர்களே
    தமிழக எம்ஜிஆர் ரசிகர்களே
    உங்கள் அனைவருக்கும் கோடி நமஸ்காரங்கள்

    எம்ஜிஆர் புகழ் தீர்க்காயுக்ஷ்மான்பவ

    படத்தில் இருப்பவர் பெயர்

    டி கே ராமமூர்த்தி

    விஸ்வநாதன் ராமமூர்த்தி என்று அழைக்கப்பட்டவர்களில் இவர் ஒருவர்

    விஸ்வநாதன் ராமமூர்த்தி இரண்டு பேரும் இணைந்து

    எம்ஜிஆர் அவர்களின் பல படங்களுக்கு இனிமையான இசையை கொடுத்து

    நம்மை மெய்மறக்க வைத்தார்கள்

    இன்னும் அந்த இனிமையான வசந்த காலத்தில் இருந்து நம் மனது பின்னோக்கி வர மறுக்கிறது

    அந்த அளவிற்கு தமிழ்நாட்டு மக்களை இனிமையான இசையால் மெய்மறக்க செய்தார்கள்

    இவர்கள் இரண்டு பேரும் ஒன்றாக இசையமைத்த கடைசி திரைப்படம்

    எம்ஜிஆர் நடித்த ஆயிரத்தில் ஒருவன்

    இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டார்கள்

    மெல்லிசை மன்னர்
    டி. கே. இராமமூர்த்தி எனப் புகழ்பெற்ற திருச்சிராப்பள்ளி கிருஷ்ணசுவாமி

    டி.கே.ராமமூர்த்தி (15 மே 1922 - 17 ஏப்ரல் 2013) தமிழ் இசையமைப்பாளர் மற்றும் வயலின் கலைஞர்.

    இவரும் எம். எஸ். விஸ்வநாதன் அவர்களும் இணைந்து விஸ்வநாதன் - இராமமூர்த்தி என இணையாக 700க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு தமிழ், தெலுங்கு, மலையாள திரைப்படங்களில் இசையமைத்து முடிசூடா மன்னர்களாக விளங்கினர்.

    விஸ்வநாதனிடம் இருந்து பிரிந்த பிறகு ராமமூர்த்தி அவர்கள்
    19 படங்களுக்கு தனியாக இசையமைத்துள்ளார்.
    அவற்றில் சில.

    சாது மிரண்டால்
    தேன் மழை
    மறக்க முடியுமா
    நான்
    மூன்றெழுத்து
    தங்கச் சுரங்கம்
    காதல் ஜோதி
    ஆலயம்
    சோப்பு சீப்பு கண்ணாடி
    சங்கமம்
    சக்தி லீலை
    அவளுக்கு ஆயிரம் கண்கள்

    தமிழ் சினிமா உலகில் * விஸ்வநாதன் ராமமூர்த்தி க்கு இணையான இசை அமைப்பாளர்கள்

    எக்காலத்திலும் உருவாக முடியாது

    இவர்கள் இனிமையான பாடல்களை இனிமையான இசையை கொடுத்தது போல் இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் எந்த இசை அமைப்பாளர்களாலும் கொடுக்க முடியாது

    விஸ்வநாதன் அவர்களும் ராமமூர்த்தி இரண்டு பேரும் பிரிந்த பிறகு

    எம் எஸ் விஸ்வநாதன் தனியாக இசை அமைத்த முதல் படம்

    வள்ளல் எம்ஜிஆர் நடித்த.

    "கலங்கரை விளக்கம்"...

  4. #2013
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    1957ல் ஒரு முக்கியமானவரிடம் மக்கள் திலகம் அவர்கள் சொன்ன விஷயம்
    மக்கள் திலகம் அவர்களிடம் உங்களுடைய முன்னேற்றத்திற்கு வழிகாட்டி உங்களுக்கு அறிவுரைகளை சொன்னது யார், யார், என்பதை தயவுடன் சொல்லுங்கள் என்று ஒரு முக்கியமானவர் கேட்டார். உடனே திரு. எம்.ஜி.ஆர் அவர்கள் சற்றும் யோசிக்காமல் அந்த விஷயத்தை சொன்னார் சுருக்கமாக.
    1. எனது தாயுடைய அறிவுரைகள், கண்டிப்பான வளர்ப்பும் தான்.
    2. அடுத்து நான் நாடக கம்பெனியில் வேலைக்கு சேர்ந்த பிறகு எனக்கு நாடகத்தில் நடிக்க சொல்லி தந்த வாத்தியார்.
    3. கம்பெனி முதலாளி
    4. நடனம், சண்டை பயிற்சிகள் சொல்லிக் கொடுத்தவரும் எனக்கு நல்ல முறையில் மிகவும் கண்டிப்பான விதத்தில் சொல்லிக் கொடுத்தார்கள். நானும் அவர்களுடைய கண்டிப்பு, அடி, இவைகளையெல்லாம் சமாளித்து கொண்டு எல்லாவற்றிலும் கண்ணும் கருத்துமாக கற்றுக்கொண்டேன். எல்லாவற்றிலும் நல்ல பையன் சுறுசுறுப்பானவன் நல்ல அறிவுள்ளவன் என்று அவர்களால் புகழப்பட்டேன். நாடகத்தில் நடித்து கொண்டு இருக்கும் போது கூட திரை மறைவில் நின்று கொண்டு பிரம்பால் அடிப்பார்கள் அதை எல்லாம் அன்றைக்கு சமாளித்ததால் தான் சினிமாவில் நல்லா நடிக்க முடிந்தது என்றார் மக்கள் திலகம். அன்றைக்கு குருவாக இருந்தவர்கள் மதுரை பாய்ஸ் கம்பெனி முதலாளி சச்சிதானந்தம் பிள்ளை அவர்களும், ஆசிரியர் கிருஷ்ணசாமி அவர்களும் திரு. கந்தசாமி, காளி. என். ரத்தினம் அவர்களும் சண்டைப் பயிற்சியாளர் இவர்கள் தான் இதற்கு மேல், பி.யு. சின்னப்பா, கிட்டப்பா, எம்.கே. ராதா இவர்களை விட தன் உடன் பிறந்த தம்பிபோல் பாவித்து என் மனம் கவலைபடாத அளவிற்கு குடும்ப விஷயத்திலிருந்து அதாவது குடும்ப விஷயத்தை பற்றி கூட அறிவுரைகளை சொல்லக்கூடியவர் திரு. என்.எஸ்.கே அவர்கள் தான்.எனக்கு மனதில் சஞ்சலம் ஏற்பட்ட போதெல்லாம் அவரிடம் போய்விடுவேன். அவரிடம் ஒரு மணி நேரம் பேசிக்கிட்டு இருந்தால் போதும், அவர் ஒரு காலகட்டத்தில் வெள்ளைக்கார ஆட்சியில் ஜெயிலுக்கு போகவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அதாவது என்.எஸ்.கே. தியாகராஜபாகவதர் இவர்கள் மீது ஒரு பத்திரிகை ஆசிரியர் கொலை சம்பந்தமாக 1944ல் ஜெயிலில் போட்டு விட்டார்கள். அது சமயம் நான் மிக மிக வேதனை அடைந்தேன். பிறகு, அவர்கள் ஜெயில் தண்டனை, முடிந்து விடுதலை ஆகி 1947க்க வீட்டுக்கு வந்த பிறகு, எல்லோரையும் பார்த்து நடந்த சம்பவத்தை பற்றி ஆறுதல் செய்திகள் சொன்னேன். பிறகு, என்.எஸ்.கே. அவர்களுக்கு என்னால் முடிந்த எல்லா உதவிகளையும் செய்து கொண்டு இருந்தேன். அவர் கேட்காமலேயே நானும் அந்த சமயம் கொஞ்சம் வசதி உள்ளவன் ஆகிவிட்டேன். அப்படி நான் செய்யும் உதவிகளை நினைத்து மிகவும் சந்தோஷப்படுவார்கள். கடவுள் தான் ராமச்சந்திரன் உருவத்தில் வந்து இருக்கிறாரோ என்று கலைவாணர் நினைப்பாராம்....Baabaa

  5. #2014
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    புரட்சித்தலைவர்
    பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர்.
    அவர்களின் ஆசியோடு நண்பர்கள் அனைவருக்கும் இனிய வியாழக்கிழமை காலை வணக்கம்...

    புரட்சி தலைவர் எம்ஜிஆர் திரைப்படங்களை பற்றிய என்னுடைய இந்த தொடரில் தலைவர் நடித்த படங்கள் பற்றி அனைத்தையும் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று எண்ணி வரிசையாக ஒவ்வொரு படத்தை பற்றி இங்கே பதிவிட்டு வருகின்றேன்..
    நேற்று தலைவரின் 30 வது படமான
    பணக்காரி படத்தை பற்றி பதிவிட எண்ணிய போது அந்த படத்தை youtube ல் கிடைக்க வில்லை... அதனால் அந்த படத்தை பற்றி பதிவிட முடியவில்லை..
    நேற்று மாலை சென்னை பிராட்வே பகுதியில் ஒரு பெரியவரை சந்திக்க நேர்ந்தது அவர் புரட்சி தலைவர் புகைப்படங்களை தனது ஆட்டோரிக்க்ஷா வில் வைத்து ஒரு பெரியவர்... அவரிடம் இருந்து பணக்காரி படத்தை பற்றிய விவரங்களை சேகரித்து இங்கே பதிவிடுகிறேன்...

    எம்.ஜி.ராமச்சந்திரன்
    வி.நாகையா,
    ஜவர் சீதாராமன்,
    டி.எஸ்.துரைராஜ்,
    கே.ஏ.தங்கவேலு,
    டி.ஆர்.ராஜகுமாரி,
    மங்களம்,
    டி.எஸ்.ஜெயா,
    கே.ஆர்.செல்லம்,
    சி.வி.பந்துலு,
    (யோகம்) -மங்கலம்
    ஆகியோர் நடித்து இருந்தனர்.

    லியோ டால்ஸ்டாயின் கிளாசிக் ‘அண்ணா கரேனினா’ என்ற ரஷ்ய நாவலின் தழுவல் தான் இந்த பணக்காரி திரைப்படம் 1935 ஆம் ஆண்டில் கிளாரன்ஸ் பிரவுன் என்ற ஒரு ஹாலிவுட் திரைப்படமாக உருவாக்கப்பட்டது. இது 1928 ஆம் ஆண்டில் லவ் என்ற அமைதியான திரைப்படமாக படமாக்கப்பட்டது, மீண்டும் கிரெட்டா கார்போ அண்ணாவாகவும், ‘சிறந்த காதலன்’ ஜான் கில்பர்ட் ஆண் கதாபாத்திரத்திலும் படமாக்கப்பட்டது. இந்த நாவலும் 1935 ஹாலிவுட் பதிப்பும் இந்தியாவில் பிரபலமாக இருந்தன, புகழ்பெற்ற நியூட்டோன் ஸ்டுடியோ நிறுவனர்-ஒளிப்பதிவாளர்-திரைப்படத் தயாரிப்பாளர் ஜிதன் பன்னெர்ஜியின் தொழில்நுட்ப மேற்பார்வையின் கீழ் இந்த கதையை 1953 ஆம் ஆண்டில் கே.எஸ். கோபாலகிருஷ்ணன் (சக்ரதாரி தயாரிப்பாளர்) பணக்கரியாக படமாக்கினார்.

    அப்போதைய கனவுக் கன்னியாக வலம் வந்த டி. ஆர். ராஜகுமாரி, மற்றும் சித்தூர் வி.நாகையா ஆகியோரை ஒரு ராணுவ அதிகாரியாக (எம்.ஜி.ஆர்) நட்பாக இருந்ததற்காக அவதூறாக நடந்து கொண்ட கணவனாக நடித்தார். வேறொரு ஆணுடன் மனைவியின் நட்பின் காரணமாக தம்பதியினரிடையே தவறான புரிதலின் அசல் கதை தமிழ் பதிப்பில் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ பின்பற்றப்பட்டது. எம்.ஜி.ஆரின் பங்கு ஓரளவு வில்லத்தனமாக இருந்தது. பழைய டைரக்டர்களான ‘ஜாவர்’ சீதாராமன் மற்றும் வி.பந்துலு ஆகியோர் தங்களது துணை வேடங்களை திறம்பட நடித்தபோது, ​​மங்கலம், ராணுவ வீரர் நிராகரித்த பெண்ணும் சுவாரஸ்யமாக இருந்தது. ஒரு காட்சியில், பந்துலு (ஒரு வயதான கணவனாக நடித்து) தனது இளம் மகளின் கவர்ச்சிகரமான நடன ஆசிரியருடன் சென்று, அவளை தனது படுக்கையறைக்கு வருமாறு சமிக்ஞை செய்கிறார், மகளை கிராமபோன் பதிவுக்கு நடனமாட விட்டுவிடுகிறார்! நடனக் கலைஞர் மாடியில் பிஸியாக இருக்கும்போது, ​​ஒரு கிராக்ஃபோன் பதிவு, அதே வார்த்தையை வாசித்துக்கொண்டே செல்கிறது, அதைக் கேட்டு மனைவி சமையலறையிலிருந்து வெளியேறி கணவனையும் நடன ஆசிரியரையும் பிடிக்கிறார். இந்த காட்சி பெருங்களிப்புடையது என்றாலும், அந்த நாட்களில் திரைப்பட பார்வையாளர்கள் இது மோசமானது என்று நினைத்தார்கள். தமிழ் பார்வையாளர்கள் அதிகம் விரும்பாத மற்றொரு காட்சியும் உள்ளது - கணவர் (நாகையா) தனது அழகான மனைவியை (ராஜகுமாரி) தனது இராணுவ நண்பருக்கு அறிமுகப்படுத்துகிறார், மேலும் ஆணும் பெண்ணும் கைகுலுக்கிறார்கள் வயதான கணவர் இருப்பதால் இளம் வயது ராணுவ வீரர் மீது மோகம் கொள்ளும் காட்சி நடிகர்கள் மற்றும் தயாரிப்பு அளவு மதிப்பாக இருந்தபோதிலும், பொதுமக்கள் இந்த திரைப்படத்தை நிராகரித்தனர்.

    இப்படத்தில் பாபனாசம் சிவன், தஞ்சை ராமையா தாஸ், லட்சுமண தாஸ் மற்றும் குயிலன் ஆகியோரின் பாடல்களுடன் இன்பமான இசை (எஸ். வி. வெங்கடராமன்) இருந்தது. பட்டதாரியான கோபாலகிருஷ்ணன் சுதந்திர இயக்கத்தில் பங்கேற்று திரைப்படங்களிலும் பணியாற்றினார். எஸ்.எஸ்.வாசனுடன் தொடர்பு கொண்டிருந்த அவர், 1948 ஆம் ஆண்டின் ஜெமினி ஸ்டுடியோவின் பாக்ஸ் ஆபிஸ் வெற்றியைப் பெற்றார், சக்ரதரி. அவர் ஒரு சில படங்களைத் தயாரித்த போதிலும், அவர் அதிக வெற்றியைப் பெறவில்லை. அவர் இன்று அரிதாகவே நினைவுகூரப்படுகிறார், மேலும் வெற்றிகரமான தமிழ் திரைப்பட தயாரிப்பாளரான மற்ற கே.எஸ். கோபாலகிருஷ்ணனுக்காக பலர் அவரை தவறு செய்கிறார்கள்.
    இருப்பினும், பனக்கரி பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்தது, முக்கியமாக அதன் ‘சென்டிமென்ட் எதிர்ப்பு’ கதைக்களம் காரணமாக. அதே காலகட்டத்தில், மற்றொரு படம், பிச்சைக்காரி, ஒரு மலையாள திரைப்படத்தின் ரீமேக், ஒரு பெரிய வெற்றியை பெற்றது மற்றும் மெட்ராஸ் திரைப்பட வட்டாரங்களில் ஒரு பேச்சை உருவாக்கியது

    'பணக்காரியை வாங்கியவர் பிச்சைக்காரர்கள் ஆனார், அதே நேரத்தில் பிச்சைக்காரியை வாங்குபவர்கள் பணக்காரர்களாக ஆனார்கள் என்று...

    நாகையா, ராஜகுமாரி மற்றும் எம்.ஜி.ஆர் ஆகியோரின் வித்தியாசமான கதைக்களம், உயர் உற்பத்தி மதிப்புகள் மற்றும் ஈர்க்கக்கூடிய நடிப்பு அருமையாக இருந்தும் அப்போதைய மக்கள் ஒரு முரணான கதையை ஏற்க வில்லை

    வெளியிடப்பட்டது: 15-03-1953

    அன்புடன்
    படப்பை
    ஆர்.டி.பாபு..........SKT...

  6. #2015
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    இது ஒரு அந்தக்காலத்து செய்தி:
    தலைவர் எம்.ஜி.ஆர் 1958 நாடோடி மன்னன் காலத்திற்கு முன்னர் ரயிலில் மூன்றாம் வகுப்பில் பயணம் செய்தார்.கோவையில் இருந்து கேரளாவுக்கு பயணம் ஆனார்.அப்போது அதே ரயிலில் கர்நாடக இசை மேதை செம்பை வைத்தியநாத பாகவதர் ஏறி தலைவருக்கு எதிரில் அமர்ந்து பயணம் செய்தார்.அப்போது தலைவர் முகத்தை மறைத்துக்கொண்டு பயணமானார்.அதை கண்ணுற்ற இசை மேதை அவர் எம்.ஜி.ஆர் என்று தெரிந்துகொண்டு அறிவுரை வழங்கினார்.ஒரு புகழ் மிக்க கலைஞன் பயணம் செய்யும்போது அவர் மீது அபிப்பிராயம் கொண்ட ரசிகர்களும் பயணம் செய்வது வழக்கம்.அவர்கள் பேச விருப்பப்பட்டும் படம் எடுக்கவும் விரும்புவார்கள்.அவர்கள் அடிப்படை உரிமையை நாம் மதிக்கவேண்டும்.அவர்களுடன் அளாவளாவி படம் எடுத்து மகிழ்விக்கவேண்டும்.ஏனெனில் நாம் இந்த அளவுக்கு வந்ததிற்கு அவர்கள் தான் விதை என்றார்.அதை நமது மக்கள் திலகம் தேவ வாக்காக எடுத்துக்கொண்டு ரசிகர்களுடன் பிற நண்பர்கள் விசுவாசுகளுடன் பேசவும் படம் எடுக்கவும் செய்து கொண்டார்.அதை தன் வாழ்நாளில் கடைசிவரை செயல் படுத்தினார் தலைவர் எம்.ஜி.ஆர்..........nssm...

  7. #2016
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ஜூபிடர் நிறுவனம் அதுவரை சிறுசிறு வேடங்களில் ஆரம்பித்து துணை நடிகராக தனது நடிப்பாலும் அழகினாலும் மெல்ல மெல்ல முன்னேறிக்கொண்டிருந்த ஒரு இளம் நடிகரை முதல் முறையாகக் கதாநாயகனாக ஒப்பந்தம் செய்து ஒரு படத்தை ஆரம்பித்தது.

    அந்தக் கதாநாயக நடிகர்..... நமது "மக்கள் திலகம்" எம்.ஜி.ஆர் அவர்களே தான். ஆம்.. ஜூபிடரின் 'ராஜகுமாரி' படம் தான் அவர் கதாநாயகனாக நடித்த முதல் படம்.

    அதற்கு முன்பே ஒரு படம் எம்.ஜி.ஆர். அவர்கள் கதாநாயகனாக நடித்து சில ஆயிரம் அடிகள் வரை எடுக்கப்பட்டு பிறகு நிர்ப்பந்தம் காரணமாக அவரை விலக்கிவிட்டு வேறு ஒரு பிரபல நடிகரை வைத்து மறுபடியும் ஆரம்பிக்கப் பட்ட கொடுமையும் நடந்தது. அகவே தனது திரை வாழ்க்கைக்கு ஒரு திருப்புமுனைப் படமாக "ராஜகுமாரி" படத்தைக் கருதினார் எம்.ஜி.ஆர்.

    படத்திற்கு கதை வசனம் எழுதியவர் கலைஞர் கருணாநிதி அவர்கள். ஆனால் படத்தின் டைட்டில் அவரை வசனகர்த்தாவின் உதவியாளராகவே அறிமுகம் செய்தது. படத்தில் எம்.ஜி.ஆரின் நண்பனாக இரண்டாவது கதாநாயகனாக நடித்தார் எம்.என். நம்பியார்.

    இந்தப் படத்திற்கு முழு இசை அமைப்பாளராக அனைத்துப் பாடல்களுக்கும் இசை அமைத்தார் எஸ்.எம். சுப்பையா நாயுடு. அதுவரை பாடும் நட்சத்திரங்களின் ஆதிக்கத்தில் இருந்து இரண்டாம் கட்டத்தை நோக்கி தமிழ்த் திரையுலகம் நகரத் தொடங்கிய நேரம்.

    தனது "நந்தகுமார்" படத்தில் யசோதையாக நடித்த நடிகைக்கு லலிதா வெங்கட்ராமனைப் பாடவைத்து பிண்ணனி பாடும் முறையை ஏ.வி.எம். அவர்கள் நடைமுறைப்படுத்தி இருந்தார்.

    ஆனால் ஆண் பாடகர்கள் அதுவரை படவுலகில் நுழையவில்லை. கதாநாயக நடிகர்களே பாடவும் செய்ததால். ஆனால் "ராஜகுமாரி" படத்தின் கதாநாயகன் எம்.ஜி.ஆர். அவர்களுக்கோ குரல் வளம் அவ்வளவாக இல்லை. அவருக்கு இசை பற்றிய ஞானம் அபரிமிதமாக இருந்தாலும் பாடுவதற்கேற்ற வல்லமை அவரிடம் இல்லை.

    அதனால் என்ன? திரு. ஏ.வி.எம். அவர்கள் காட்டிக் கொடுத்த வழியில் இரண்டு பாடகர்கள் "பாய்ஸ்" நாடகக் கம்பெனியில் இருந்து படவுலகுக்கு வந்தார்கள்.

    திருச்சியைச் சேர்ந்த எம்.எம். மாரியப்பாவும், அவரது ஒன்றுவிட்ட சகோதரனான லோகநாதனும் (ஆம். நமது திருச்சி லோகநாதனே தான்) தமிழ் சினிமாவின் முதல் பின்னணிப் பாடகர்கள் என்ற பெருமைக்குரிய பாடகர்களாக "ராஜகுமாரி" படத்தின் மூலம் அறிமுகம் ஆனார்கள்.

    அவர்களை ராஜகுமாரி படத்தில் பாடவைத்தார் எஸ்.எம். சுப்பையா நாயுடு. அந்த வகையில் தமிழ் சினிமாவின் முதல் பின்னணிப் பாடகர்களை அறிமுகப் படுத்திய பெருமை அவருக்கு கிடைத்தது.
    ராஜகுமாரி படத்தில் எம்.ஜி.ஆருக்கு பிண்ணனி பாடிய - அதுவும் முதல் முதலாக எம்.ஜி.ஆருக்கு பாடிய பெருமை எம்.எம். மாரியப்பாவுக்கு கிடைத்தது. நம்பியாருக்கு பிண்ணனி பாடினார் திருச்சி லோகநாதன்.

    முதல் முதலாக எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்த படத்துக்கு இசை அமைத்த பெருமையும் எஸ்.எம். சுப்பையா நாயுடுவுக்கு கிடைத்தது. இன்னும் சொல்லப்போனால் "ராஜகுமாரி" படம் தான் அவர் தனியாக இசை அமைத்த முதல் படமும் கூட.

    சாதிக்கத் துடித்துக்கொண்டிருந்த ஒரு இளைஞர் பட்டாளம் (எம்.ஜி.ஆர்., கலைஞர், எஸ்.எம். சுப்பையா நாயுடு) தங்கள் திறமையை வெளிப் படுத்தி வெற்றிச் சிகரத்தில் ஏற ஆரம்பித்த தருணம் என்று கூட "ராஜகுமாரி" படத்தைச் சொல்லலாம்.

    எம்.ஜி.ஆர். அவர்கள் கதாநாயகனாக நடித்த முதல் படத்தின் குறுந்தகடு இன்றும் காணக் கிடைக்கிறது. (பாகவதர் கிராப் வைத்துக் கொண்டு எம்.ஜி.ஆர். அவர்களை நாம் பார்க்கலாம்) படத்தில் டைட்டிலில் அவர் பெயர் "எம்.ஜி. ராம்சந்தர்" என்றே ஆரம்ப காலங்களில் குறிப்பிடப்பட்டுவந்தது. இந்தப் படத்திலும் அவர் "ராம்சந்தர்" தான். அவருக்கு ஜோடியாக மாலதி என்ற நடிகை நடித்தார். (பின்னாளில் வெளிவந்த "பாதாள பைரவி" படத்திலும் இவர் நடித்திருந்தார். ஏனோ தமிழ் படவுலகில் அவ்வளவாகப் பிரகாசிக்காத இந்த நடிகை தெலுங்குப் படவுலகில் முன்னணி கதாநாயகியாக பல படங்களில் நடித்தார்) எல்லாம் சரி.. படத்தின் பாடல்கள் எப்படி இருந்தன. ? அந்தக் காலத்து வழக்கப்படி சுத்தமான கர்நாடக ராகங்களிலேயே பாடல்கள் அமைக்கப் பட்டிருக்கின்றன. சுப்பையா நாயுடுவின் இசைப் புலமை பாடல்களில் நன்கு புலப்படுகிறது.

    "அன்பின் பெருமை அருமை அதனை மனம் அன்றி வாயால் சொல்லத் தரமா" - எம்.ஜி.ஆரின் முதல் டூயட். அவருக்காக எம்.எம். மாரியப்பாவும் கதாநாயகிக்காக யு. ஆர். ஜீவரத்தினமும் பாடி இருக்கின்றனர். இந்தப் பாடல் ஆனந்த பைரவி ராகத்தில் அமைக்கப் பட்டிருக்கிறது.

    இரண்டாவது டூயட் "திருமுக எழிலை திருடிக்கொண்டது தாமரை" - இந்தப் பாடல்கள் இன்றைய காலகட்டத்துக்கு மிகவும் அந்நியப்பட்டிருக்கும் மெட்டுக்கள். ஆனால் படம் வெளிவந்த புதிதில் கண்டிப்பாக சக்கைபோடு போட்டிருக்கவேண்டும். படத்தின் வெற்றி இதனை உறுதிப்படுத்துகிறது. படத்தின் வெற்றிக்கு பாடல்களும் முக்கிய பங்கு வகித்த காலகட்டம் அல்லவா அது?

    மந்திரவாதி அபகரித்துச் சென்ற ராஜகுமாரியை தேடிச் செல்லும்போது, "கண்ணாரக் காண்பதெப்போ காதல் வளர்த்த பெண்மானைக் காண்பதெப்போ என்று சிந்துபைரவியில் எம்.ஜி.ஆர். பாடிக்கொண்டு வருவார். எம். எம். மாரியப்பாவின் குரலில் அழுத்தமாக உணர்வு பூர்வமாகப் பாடப்பட்டிருக்கும் இந்தப் பாடல் இப்பொழுது கூட மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுகிறது என்றால் படம் வெளிவந்தபோது நிச்சயம் வெற்றிப் பாடலாகவே இருந்திருக்க வேண்டும். அப்படி தேடிக்கொண்டு வரும்போது எம். ஜி.ஆருக்கு எம்.என். நம்பியாரின் தோழமை கிடைக்கிறது. நம்பியாரின் அறிமுகக் கட்டத்தில் அவருக்கும் ஒரு பாடல். (அந்தக் காலத்து நாடக மேடை மரபு படத்தில் பின்பற்றப் பட்டிருப்பது இந்தக் காட்சியில் தெளிவாகிறது) "காசினி மேல் நாங்கள் வாழ்வதே சுக வாழ்வு தான்" - திருச்சி லோகநாதன் பாடிய முதல் பாடல் இது.

    கருத்தாழம் மிக்க எளிய வரிகள். இனிமையான மெட்டுடன் சேரும் போது கேட்பவர் செவிகளை மட்டுமல்ல. மனதையும் நிறைக்கத் தவறுவதில்லை என்பதற்கு எடுத்துக் காட்டு இந்தப் பாடல். உடுமலை நாராயண கவிராயரின் வரிகளுக்கு அருமையாக மெட்டமைத்து பாடல்களைப் பிரபலமாக்கினார் சுப்பையா நாயுடு.

    அருமையான தொய்வில்லாத திரைக்கதையும், கலைஞரின் வசனங்களும், எம்.ஜி. ஆரின் நடிப்பும், பாடல்களும், அருமையான இயக்கமும் சேர்ந்த "ராஜகுமாரி" மகத்தான வெற்றி பெற்றது..........Baabaa

  8. #2017
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    With high esteem he kept one small booklet as the greatest asset in his underground room…!
    எம்.ஜி.ஆர் ராமாவரம் வீட்டைக் கட்டும் போது ஒரு நிலவறை வைக்கச் சொன்னார். அதன்படி வைத்தார்கள். கருப்புப் பணத்தை பதுக்க அவர் அப்படிச் செய்கிறார் என அவரை எப்போதும் தூற்றுபவர்கள் சொல்லிக் கொண்டார்கள்.
    ஆனால் அந்த சுரங்க அறையில் ஒரு பெரும் நூலகத்தை அமைத்தார். பல்லாயிரக்கணக்கான நூல்கள்.ஏராளமான தமிழ்க் காவியங்கள்.
    ஒருமுறை எம்.ஜி.ஆரைப் பார்க்க வந்த சிலம்புச் செல்வர் ம.பொ.சி, "ஏன் இந்தூல்களை கீழறையில் வைத்திருக்கிறீர்கள் ?" என்று கேட்டபோது, "அறிவு தண்ணீரைப் போன்றது.அது கீழ் நோக்கியே தேங்கும். ஆணவம் நெருப்பைப் போன்றது.அது மேல் நோக்கியே எரியும்" என விளக்கம் கொடுத்தாராம் எம்.ஜி.ஆர்.
    வள்ளல் சீதக்காதி பேரில், அவரது உயிர் நண்பர் படிக்காசுப் புலவர் ஒரு நொண்டி நாடகம் என்ற பிள்ளைத் தமிழ் காவியம் எழுதினாராம். அது அன்றைய காலகட்டத்தில் ராணி மங்கம்மா, சீதக்காதி இல்லத்திற்கு வந்த போது அரங்கேற்றம் செய்யப்பட்டதாம். 'இந்த நொண்டி நாடகத்துக்குப் பரிசாக நானாக எதையும் கொடுக்க முடியாது. என் பொக்கிஷத்தைத் திறந்து விடுகிறேன். வேண்டியதை நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள்' என்று அழைத்துப் போய் கோடிகோடியாய் நிறைந்துள்ள முத்து,வைர, வைடூரியங்களைக் காட்டினாராம் சீதக்காதி.
    ஆனால் படிக்காசுப் புலவர் அங்கு சற்று உயரமான இடத்தில் வைக்கப்பட்டிருந்த ஒரு சிறு வெள்ளி மூக்குத்தியைக் காட்டி, 'இது என்ன?' என்று கேட்க, 'இதுதான் என்னுடைய ஒரே பெரும் சொத்து. என் தாய் அணிந்திருந்த ஒரே நகை. அதைமட்டும் யாருக்கும் தரமாட்டேன்' என்றாராம் சீதக்காதி.
    அதைப் போலவே, எம்.ஜி.ஆரின் அந்த நிலவறை நூலகத்தில் தன் அன்னையின் படத்தின் முன் ஒரு சிறு கண்ணாடி பேழையில் ஒரு சிறு பழைய புத்தகம் இருந்தது. அது மலையாளத்தில் இருந்தது. குருவாயூரப்பன் சுலோகம். "என் அன்னை தினமும் அதை பாராயணம் செய்து வருவார். அது ஒன்றுதான் என் பெரும் சொத்து " எனறு கூறினாராம் எம்.ஜி.ஆர்....BPG

  9. #2018
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ரெண்டு கோடி ரூபாய் செலவு செய்து எடுத்த "உலகம் சுற்றும் வாலிபன்" வசூலித்து கொடுத்த தொகை ஒன்னேகால் கோடி
    ஆனால் 30 லட்சம் செலவில் தயாரிக்கப்பட்ட "தங்கப் பதக்கம்" வசூலித்து கொடுத்த தொகை ஒன்னரை கோடி
    இதில் எது வெற்றி?
    இங்கு ஒன்றைக் கவனிக்க வேண்டும் எது என்றால்
    நடிகர் திலகம் சிவாஜி படங்கள் 100 நாள் ஓடி வெற்றி பெற்றவை என நாம் பெருமை பேசும்போது தடாலடியாக விழுந்தடித்து ஓடி வந்து வசூல் எம்புட்டு? எனக் கேட்கும் டனால் தங்கவேலுவால் புகழப்பட்டவரின் ரசிகர்கள் தங்கப் பதக்கம் வசூலித்து கொடுத்த தொகையை கேட்க மறுத்து ஹூகும் ஹூகூம் என சமாளித்து விட்டு தூத்துக்குடியில் எவ்வளவு எனக் கேட்டாலும் கேப்பார்கள் போல?
    தூத்துக்குடியில் தான் Box office collectionக்கு head office எல்லாம் இருக்குதாம்,
    இன்னமும் விவரமா அடுத்த பதிவில் சொல்லுவோம்,
    ( சிவந்த மண் தயாரிப்பு செலவே 80 லட்சம் ருபாய் எனக் கண்டுபிடித்த தூத்துக்குடி சிற்றரசுக்கு உலகம் சுற்றும் வாலிபன் படத்தை தயாரிக்க ரெண்டு கோடி ஆகியிருக்கும் என தெரியாதா என்ன) sekar

    இது ஒரு கைஸின் அங்கலாய்ப்பு.

    சாகர் விரசுவின் விஷமம் தீர்ந்த பாடில்லை. "தங்கப்பதக்கம்" ஒரு பிளாக்பஸ்டர் படமல்ல. "உலகம் சுற்றும் வாலிபனி"ன் முதல் ரவுண்ட் வசூல் சுமார் 1.5 கோடிக்கும் அதிகம்.
    ஆனால் "தங்கப்பதக்கத்தி"ன் முதல் ரவுண்ட் வசூல் சுமார் 70 லட்சம்தான்.
    அதைக்கொண்டு வர சுமார் 10 லட்சத்துக்கும் அதிகமாக சொந்தப் பணத்தை செலவு செய்தது ஊரறிந்த ரகசியம்.

    "உலகம் சுற்றும் வாலிபனி"ன் அடுத்தடுத்த வெளியீடுகளில் பல கோடியை வசூலாகப் பெற்று இதுவரை லாபம் மட்டுமே 10 கோடியை தாண்டியது சாகருக்கு புரியவில்லையா? இல்லை புரியாத மாதிரி நடிக்கிறாரா. தூத்துக்குடியில் "தங்கப்பதக்கம்" 41 நாட்கள் சிரமப்பட்டு ஓட்டியதற்கு தகுந்த காரணங்கள் கூறுவதை விட்டுவிட்டு தூத்துக்குடிதான் box office Head office என்ற கிண்டல் வேறு. " அப்படியென்றால் "சிவந்தமண்ணை" ஏனப்பா தூத்துக்குடியில் 101 நாட்கள் ஓட்ட வேண்டும்.

    நீங்கள் ஓட்டினால் வெற்றி.! இல்லையென்றால் தூத்துக்குடி தேவையில்லை. !ஒன்று புரிகிறது தூத்துக்குடியை பொறுத்தவரை "தங்கப்பதக்கத்தை" (41)விட "சிவந்தமண்"(101) தான் வெற்றிப் படம். ஆனால் "சிவந்தமண்" ஒரு தோல்விப் படம். அப்படியானால் "தங்கப்பதக்கம்" ஒரு வெற்றிப் படமா? ஊர் ஊருக்கு ஒவ்வொரு மாதிரி ஓட்டுகிறீர்கள். என்ன தலை சுற்றுகிறதா?!

    4 வாரம் கூட ஓட தகுதியற்ற படத்தை 101 நாட்கள்
    ஓட்டும் உங்கள் திறமை அலாதியானது என்றே சொல்ல வேண்டும். திருநெல்வேலியில் "உலகம் சுற்றும் வாலிபனின்" 50 நாட்கள் வசூலை கூட "தங்கப்பதக்கத்தை" 100 நாட்கள் ஓட்டியும் வெல்ல முடியவில்லையே. "தங்கப்பதக்கம்" தூத்துக்குடியில் ஓடவில்லை. நெல்லையில் மட்டமான வசூல். மதுரையில் கருப்புவெள்ளை "பட்டிக்காடு" படத்தின் வசூலையே நெருங்க முடியவில்லை. பிறகு எப்படி அதை ஒரு பெரிய வெற்றி படமாக ஏற்க முடியும். பல லட்சங்கள் செலவழித்து சென்னையில் மட்டும் ஓட்டிக் காண்பித்தால் போதுமா?

    இன்னும் பல ஊர்களில் "உலகம் சுற்றும் வாலிபனின்" வெற்றியின் கால்பங்கை கூட பெற முடியாதவர்கள் வாயினால் வடை சுடுவதை நிறுத்த வேண்டும். அய்யனின் படங்கள் 100 நாட்கள் வசூலோடு ஓடியிருந்தால் யார் கேட்கப் போகிறார்கள். படத்தை வடக்கயிறு போட்டு இழுப்பதையே தொழிலாக வைத்திருப்பவர்கள்
    இதை எப்படி ஏற்றுக் கொள்வார்கள்.
    நெல்லையில் "பட்டிக்காட்டுப் பொன்னையா" ஓடிய நாட்கள்தான் "வசந்த மாளிகை"யும் ஓடியது.

    "பட்டிக்காட்டு பொன்னையா" தோல்விப் படமென்றால் நெல்லையில் "வசந்த மாளிகை" வெற்றிப் படமா? அதெப்படி? "உலகம் சுற்றும் வாலிபன்" தயாரிப்பு செலவு 2 கோடி என்று எந்த செய்தியும் வரவில்லை. ஆனால் அய்யனை வைத்து படமெடுத்த தயாரிப்பாளர்களும் விநியோகஸ்தர்களும் கதறிய சத்தம் எல்லாப் பத்திரிகைகளிலும் வந்ததுதானே. "கர்ணன்" "சிவந்தமண்" "ராஜராஜ சோழன்" "தர்மம் எங்கே" இந்த நாலு படத்தின் நஷ்டம் பல கோடியை தாண்டியதை நாடறியும்.

    அவ்வளவு தயாரிப்பாளர்களையும்
    ஐபி கொடுக்க வைத்த அய்யனின் படவசூலை பொய்யாக சித்தரிக்காதே. ஏன் அய்யனை வைத்து எடுத்த சிவாஜி புரடொக்ஷன்ஸ் அவர் படத்தை காசு செலவழித்து ஓட்டிய சாந்தி தியேட்டர் என்று ஏதாவது மிச்சமிருக்கிறதா?.
    தன்னை யே காப்பாற்றிக் கொள்ள வக்கில்லை. இவர்கள் வசூலில் வாய்ப்பந்தல் போடுவதை பார். சும்மா உளறாதே முட்டாள் கைஸ்களா?

    சும்மா குப்பையில் கிடந்த "வியட்நாம் வீட்டை" தூசி தட்டி திரையிட்ட சுப்புவின் நிலை யாருக்கும் வர வேண்டாம்.
    உங்கள் அய்யன் நடித்த சுமார் 300 படங்களின் உரிமங்களை விற்றாலும் ஒரு "படகோட்டி" ஒரு "ஒளி விளக்கி"ன் உரிமை யை பெறமுடியுமா? இப்போதும் கோடிக்கணக்கில் விலை போகிறதை பார்த்த பிறகாவது நேற்று அடித்த போதை தெளியுமா?
    நடந்து செல்லும் பாதை புரியுமா?..........KSR.........

  10. #2019
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    புரட்சித்தலைவர்
    பொன்மனச்செம்மல்
    மன்னாதி மன்னன் எம்.ஜி.ஆர்
    ஆசியோடு நண்பர்கள் அனைவருக்கும்
    இனிய சனிக்கிழமை காலை வணக்கம்...

    புரட்சி தலைவர் எம்ஜிஆர் நடித்த படங்கள் பற்றிய தகவல்களை ஒவ்வொரு படமாக வரிசையாக பதிவிட்டு வருகின்றேன்
    (நேற்று மருத்துவமனைக்கு அதிகாலையிலேயே செல்ல வேண்டிய நிலை ஆதலால் நேற்று பதிவிட முடியவில்லை மன்னிக்கவும்)...
    அந்த வகையில் இன்று நாம் காண இருப்பது அந்த கால கட்டத்தில் பாக்ஸ்ஆபிஸ் ஹிட் மற்றும் பல சாதனைகளை புரிந்த புரட்சி தலைவரின்
    திரைப்படங்களில் முக்கியமான முதலுமான திரைப்படம்.. அந்த படம் என்ன என்று கண்டுபிடித்து இருப்பீர்கள்
    ஆம் புரட்சி தலைவர் நடித்த 31 வது படம் "மலைக்கள்ளன்" பற்றி பார்ப்போம் வாருங்கள்..

    மலைக்கள்ளன் 1954 ஆம் ஆண்டு வெளிவந்த அதிரடி திரைப்படம் பி இந்த படம் 22 ஜூலை 1954 அன்று வெளியிடப்பட்டது, இது ஒரு வியக்கத்தக்க வெற்றியாகவும், ஆண்டின் மிக உயர்ந்த படமாகவும் இருந்தது.
    இது சென்னை மற்றும் பிற முக்கிய நகரங்களில் 140 நாட்களுக்கு மேல் ஓடியது. ஜனாதிபதியின் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் தமிழ் படம் இதுவாகும். மற்றும் ஐந்து மொழிகளில் ரீமேக் செய்யப்பட்ட முதல் இந்திய திரைப்படம் இதுவாகும்.
    பக்_ஷிராஜா ஸ்டுடியோஸ்
    சார்பில் தயாரித்து விநியோகம் செய்யப்பட்டது

    விஜயபுரி,ஒரு அழகான மலைப்பாங்கான குக்கிராமம் ஒரு சாதாரண வழிப்போக்கருக்கு அமைதியாகவும் அழகாகவும் தோன்றும். ஆனால் அங்கு நடக்கும் நிகழ்வுகள் அமைதியானவை அல்ல. மோசடிகள், கொள்ளைகள் மற்றும் கடத்தல் போன்ற நிகழ்வுகளாகத் தெரிகிறது. குறைந்த பட்சம் சில குற்றங்களைச் செய்த ஒரு குற்றவாளி காதவராயன், அவரது ரகசிய கூட்டாளிகள் பணக்கார வீரராஜன் மற்றும் குட்டிப்பட்டி ஜமீன்தார் போன்ற நன்கு அறியப்பட்ட ஊர் முக்கிய நபர்களாக உள்ளனர்.

    மர்மமான மலைக்கள்ளன்
    அதே காட்டு பகுதியில் ஒழுக்கமற்ற பணக்காரர்களை அவமதிப்பது, ஏழைகள் மற்றும் ஏழைகள் மீதான அக்கறை ஆகியவற்றில் மறைக்கப்பட்ட மலையடிவாரத்தில் அவர் ஒரு உண்மையான சாம்ராஜ்யத்தை நடத்தி வருகின்றார் உண்மையில் யாரும் அவரைப் பார்த்ததில்லை.
    செல்வந்த வியாபாரியாக அப்துல் ரஹீமுமாய் வேடம் பூண்டு ஊரிலும் இருக்கிறார், அவர் விஜயபுரியிலிருந்து சரியான இடைவெளியில் காணாமல் போகின்றார், மற்றவர்களிடம் தொலைதூர இடங்களில் வணிக அழைப்புகள் இருப்பதாகக் கூறுகிறார். சொகேசா முதலியாரின் மகள். பூங்கோதை வீரராஜன் பூங்கோதையின் தாயின் உறவினர் மற்றும் அவளை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார், ஆனால் அவரது தீய குணங்கள் மற்றும் கெட்ட பெயர் உள்ளதால் சொகேசா முதலியார் தன் மகளான பூங்கோதையை திருமணம் செய்து தர மறுக்கின்றார்... சிறு வயதிலேயே தாயை இழந்த பூங்கோதை அவரது விதவை அத்தை காமாட்சி அம்மாவாள் வளர்க்கப்படுகிறார். காமாட்சி அம்மாவின் ஒரே மகன் குமாரவீரன் பல ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனார்.

    துணிச்சலான குற்றங்களைச் எதிர்கொண்ட சப் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் விஜயபுரத்திற்கு வருகிறார். ஆனால் அவரது உதவியாளர் கான்ஸ்டபிள் கருப்பையா ஒரு கோழை மற்றும் விசாரணையில் ஒரு உதவியை விட ஒரு தடையாக இருக்கிறார். இந்த சந்தர்ப்பத்தில்தான் ஒரு இரவு முதலியார் மாப்பிள்ளை பார்க்கும் விஷயமாக வெளியூர் பயணம் சென்று இருக்கும்போது, ​​பூன்கோதை அவரின் மாமாவால் கடத்தப்படுகிறார். அந்த வினோதமான இரவின் நிகழ்வுகள் கதாவாராயனின் இரண்டு அடியாட்க்கள் கட்டப்பட்டு தலைகீழாக தொங்கிக்கொண்டு இருக்கின்றனர், பூன்கோதையின் நகைகளில் ஒரு துண்டு அவர்களிடமிருந்து சப் இன்ஸ்பெக்டரால் மீட்கப்பட்டு விசாரணை நடத்துகின்றார். காமாட்சி அம்மா கட்டப்பட்ட மற்றும் மயக்க நிலையில் காணப்படுகிறார், அவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர் வருகின்றார் அவரும் சிகிச்சை அளிக்கின்றார் ஆனால் மயக்கம் தெளியவில்லை மருத்துவரிடம் ஒருவன் வந்து வன மூலிகையை ஒப்படைக்கிறான் அதை நுகர செய்தஉடன் மயக்கம் அனைவருக்கும் தெரிகின்றது.

    கதவாராயணனின் ஆட்களை புத்திசாலித்தனமாக வழிமறித்து பூங்கோதையை காப்பற்றி அழைத்துச் சென்ற மலைக்கள்ளனின் காவலில் பூங்கோதை இருக்கின்றார்... கடத்தலை வடிவமைத்த வீரராஜனின் உத்தரவின் பேரில் கதவராயன் வீராஜனின் கோபத்தையும் ஏளனத்தையும் எதிர்கொள்கிறார். இந்த அவமானத்தால் கஷ்டப்பட்ட அவர், இப்போது பூங்கோதையைத் தேடி தனது ஆட்களை தொலைதூரத்திற்கு அனுப்புகிறார். இதற்கிடையில் பூங்கோதை மலைக்கல்லனின் அற்புதமான மறைவிடத்தில் பாதுகாப்பாக இருக்கிறார், தாழ்த்தப்பட்டவர்கள் மீதான அவரது உண்மையான அக்கறையையும், அவர் தனது மக்களிடம் வைத்திருக்கும் பயபக்தியையும் அறிந்து கொள்கின்றார், முதலில் மலைகள்ளன் மீது இருந்த அவளுடைய அவமதிப்பு மற்றும் அவநம்பிக்கை படிப்படியாக போற்றுதலாக மாறி அன்பிற்கு வழிவகுக்கிறது.
    பின்பு பானுமதி அவர்களை
    அவர் வீட்டிற்கு அனுப்பி வைக்க பாடுகின்றார்..
    நாட்டில் நடக்கும் கொலை கொள்ளை
    போன்றவைகளை செய்வது மலைகள்ளன் தான் என்று ஒரு மாயை உருவாக்கி வைக்க பட்டு உள்ளது..
    இந்த நிலையில் முதலியார் கடத்த படுகின்றார்..
    முதலியார் காப்பாற்ற படுகின்றாரா?
    மலைகள்ளன் மீது விழுந்து இருக்கும் பழி தீர்க்க பட்டதா?
    ஊர் பெரியவர்கள் வேடத்தில் நடித்து நய வஞ்சகம் செய்யும் அந்த மூவரும்
    போலீஸ் அதிகாரி கைது செய்தாரா?
    காணாமல் போன குமாரவீரன் யார் என்பதை விறுவிறுப்பாக காட்டுகின்றது மலைகள்ளன்...

    படத்தில் புரட்சி தலைவரின் மலைகள்ளன் மற்றும் சாஹிப் வேடம் அருமை.. போலீஸ் அதிகாரியாக வரும் பெரியவரின் ரோல் பிரதானமாக காட்ட பட்டு உள்ளது அவருக்கு உதவும் சாஹிப் ரோலில் தலைவர் நடிப்பு அருமை...

    மலைகள்ளனாக
    புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்
    குமாரவீரன், அப்துல் ரஹீம் ஆகிய மூன்று ரோல்

    வீரராஜனாக ஸ்ரீராம்

    எய்ட் கருப்பையாவாக டி.எஸ். துரைராஜ்

    சொக்கேஷா முதலியாராக டி.பாலசுப்பிரமணியம்

    துணை ஆய்வாளராக எம்.ஜி.சக்ரபாணி

    கதவராயனாக ஈ.ஆர்.சாதேவன்

    சத்தியானாக வி.எம்.ஜெமலை

    குட்டிபட்டி ஜமீன்தாராக
    எஸ்.எம். திருப்பதி சாமி

    பழைய மல்லைக்கல்லனாக கே.துரைசாமி

    எஸ்.எம்.சுப்பையா டாக்டராக

    போலீஸ் ஜவான்களாக தாமஸ் & ராயப்பன்

    கண்ணப்பராக கன்னையா

    பாண்டிமனாக முருகேசன்



    பி.பனுமதி பூங்கோதை

    காமாட்சி அம்மாவாக பி.எஸ். ஞானம்

    ஜானகியாக சுராபி பாலசரஸ்வதி

    சின்னியாக சந்தியா

    செங்கமலமாக சாந்தா

    அல்லியாக சயீ

    வள்ளியாக சுப்புலட்சுமி

    நடனம்

    சயீ & சுப்புலட்சுமி

    தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் ஏ.பி.நாகராஜன் ஒரு தலைப்பாகை அணிந்த போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்தார். இருப்பினும், அவருடன் சில காட்சிகளை படமாக்கிய பின்னர், நாயுடு சில காரணங்களால் அவருக்கு பதிலாக எம். ஜி. சக்ரபாணியை தேர்வு செய்தார்.
    எஸ்.எம். சுப்பையா நாயுடு இசையமைத்தார், பாடல் வரிகளை நமக்கல் கவிஞர் எழுதியுள்ளார். ராமலிங்கம் பிள்ளை,
    கு.மா.பாலசுப்பிரமணியம்,
    தஞ்சை என்.ராமையாதாஸ்

    பின்னணி பாடகர்கள் பி. ஏ. பெரியநாயகி மற்றும்
    டி.எம். சௌந்தரராஜன்
    எத்தனாய் கலாம் தான் ஏமாற்றுவார்
    இந்த நாட்டிலே பாடல் மிகவும் பிரபலமானது,
    புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் பின்னர் தனது எதிர்கால படங்களில் இதுபோன்ற ஒரு தத்துவ பாடலையாவது வைக்க முடிவு செய்தார் என்றால் அது மிகையாகாது.
    எம்.ஜி.ஆருக்கு டி.எம். சௌந்தராஜன் பாடிய முதல் பாடல் இது, இந்த வெற்றிக்குப் பிறகு அவர் பல பாடல்களைப் பாடினார் அவரின் குரல் புரட்சி தலைவர் குரலாக மாறியது.

    இது ஆண்டின் அதிக வசூல் பெற்ற திரைப்படம் ஆகும் தமிழ் பத்திரிகை ஆனந்த விகடன் 1954 செப்டம்பர் 12 தேதியிட்ட தனது மதிப்பாய்வில் "பார்வையாளர்களின் இதயத் துடிப்பை அதிகரிக்கும் பல அற்புதமான தருணங்கள் உள்ளன ... பல்வேறு சண்டைக் காட்சிகள், நடனங்கள் மற்றும் நகைச்சுவைக் காட்சிகள் படத்தை ஒரு மாஸ் என்டர்டெய்னராக ஆக்குகின்றன" என்று குறிப்பிட்டுள்ளது.

    6 மொழிகளில்-
    தமிழ் (எம்.ஜி.ஆருடன் மலைக்கள்ளன்), தெலுங்கு (என்.டி.ராமராவ் உடன் அகிராமுடு) ,
    மலையாளம் (சத்யனுடன் தாஸ்காரவீரன்),
    கன்னடம் (கல்யாண் குமாருடன் பெட்டாடா கல்லா)
    இந்தி (திலீப் குமாருடன் ஆசாத்)
    மற்றும்
    சிங்கள மொழியில் (சுரசேனா).

    சி.ராம்சந்திரா இசையமைத்த ஆசாத் தவிர, எஸ்.எம். சுப்பையா நாயுடு மற்ற எல்லா மொழிகளிலும் இப்படத்திற்கு இசை அமைத்தார்.

    இந்த படம் தான் "ராபின் ஹூட்" என்ற கருத்தின் போக்கை தமிழ் சினிமாவில் உருவாக்கியது மற்றும்
    நீலமலை திருடன் (1957),
    மலையூர் மம்பட்டியான் (1983), ஜென்டில்மேன் (1993)
    மற்றும் சிவாஜி (2007) போன்ற பல்வேறு படங்களுக்கு முன்னோடி எனலாம் இந்த படம் முன்னணி நடிகர்களுக்கான தத்துவ பாடல்கள் மற்றும் அறிமுக பாடல்களின் போக்கையும் உருவாக்கியது எனலாம்.

    இந்த படம் 1954 ஆம் ஆண்டில் 2 வது தேசிய திரைப்பட விருதுகளில் தமிழில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட - ஜனாதிபதியின் வெள்ளிப் பதக்க விருதை வென்றது..

    அன்புடன்
    படப்பை
    ஆர்.டி.பாபு.............skt.........

  11. #2020
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எம்.ஜி.ஆரின் வெற்றிக்கு உதவிய சண்டைக் காட்சிகள் .........

    எம்.ஜி.ஆர் தன் சண்டைக் காட்சிகள் சிறப்பாக அமைய வேண்டும் என்பதற்காக சம வலிமையுள்ள வில்லன், அவனது அடியாட்களாக வரும் ஸ்டன்ட் பார்ட்டி, சண்டைக் கருவிகள், சண்டையின் தீவிரத்தை அதிகரிக்கும் மழை, பாறை, மின்சாரம், பெண்களின் ஆர்வத்தை தூண்டக்கூடிய வகையில் சண்டைக்கு இடையே மாட்டிக்கொள்ளும் கதாநாயகி, குழந்தைகள் போன்ற எமோஷனல் விஷயங்கள் என ஒவ்வொரு படத்துக்கும் வித்தியாசமாக அமைப்பார். இவற்றுடன் புலி சிங்கம் பாம்பு போன்றவையும் இவரது சண்டைக் காட்சிகளில் இடம்பெறுவதுண்டு.

    குலேபகாவலியில் புலியோடு மோதும் சண்டை

    1955ம் ஆண்டில் பொங்கல் அன்று கேவா கலரில் வெளிவந்து வெற்றி விழா கொண்டாடிய அலிபாபாவும் நாற்பது திருடர்களும் படத்தை தொடர்ந்து ஜூலை 24இல் வெளிவந்த வெற்றிப் படம் குலேபகாவலி. இப்படத்தை தயாரித்து இயக்கியவர் ஆர்.ஆர் பிக்சர்சின் ராமண்ணா. இவர் டி.ஆர் ராஜகுமாரியின் தம்பி. இப்படத்தில் எம்.ஜி.ஆர் குலேபகாவலி என்ற மலரைத் தேடி வருவார். அந்த மலர்ச்செடிக்கு ஒரு புலி பாதுகாப்பாக இருக்கும். அந்த மலரைப் பெற எம்.ஜி.ஆர் புலியுடன் சண்டை போட்டுக் கொல்ல வேண்டும். அந்தக்காலத்தில் புலிக்குட்டி கோவிந்தன் என்பவர் புலி,பாம்பு,சிறுத்தை இவற்றை வளர்த்து படப்பிடிப்புக்குத் தருவார். அவரே சண்டைக்காட்சியில் டூப்பாகவும் நடிப்பார். ஆறடி பள்ளம் வெட்டி அதற்குள் கூண்டு அமைத்து புலியை வெளியே வர விடாமல் வைத்து சண்டைக் காட்சியைப் படமெடுக்க திட்டமிட்டனர்.

    எம்.ஜி.ஆர் ஷூட்டிங்குக்கு வந்தார். வெளியே கிரேனில் இயக்குநரும் ஒளிப்பதிவாளரும் இருந்தனர். கோவிந்தன், புலியைக் கூண்டை விட்டு வெளியே வா என்று அழைத்ததும் புலி விருட்டென்று வெளியே வந்து ஆறடி பள்ளத்தை தாவி மேலே ஸ்டுடியோவுக்குள் புகுந்து விட்டது. கோவிந்தன் ஐயோ ஐயோ என் புலி புலி என்று ஓடுகிறார். கிரேன் சட்டென்று மேலே போனது. அதனால் இயக்குநரும் ஒளிப்பதிவாளரும் உயரே இருக்கின்றனர். ஆனால் எம்.ஜி.ஆர் எங்கும் ஓடவில்லை, பதற்றப்படவில்லை. தன் கையில் துப்பாக்கியுடன் கேமராவின் ஸ்டாண்ட் அருகே புலியைக் குறி பார்த்தபடி நிற்கிறார். அந்த ராஜ உடைக்குள் எங்கே துப்பாக்கியை மறைத்து வைத்திருந்தாரோ?. ஆனால், சமயம் வந்ததும் சட்டென்று துப்பாகியால் குறி பார்த்தபடி அங்கேயே நின்றுவிட்டார். இதுதான் எம்.ஜி.ஆரின் சமயோசித புத்தி, துணிச்சல், நிதானம். பிறகு மறுநாள் முதல் ஒரு வாரம் வரை சண்டைக் காட்சி எடுக்கப்பட்டது.

    எம்.ஜி.ஆர் படங்களில் சிங்கம்

    வேட்டைக்காரன் படத்தில் சிங்கம் ஒரு கதாபாத்திரமாகவே வரும். ஒரு காட்சியில் சிங்கம் வலியுடன் படுத்திருக்கும். அப்போது எம்.ஜி.ஆர் அதன் காலில் குத்தியிருந்த முள்ளை எடுத்துவிடுவார். அது பிறிதொரு சமயம் நன்றிக்கடனுக்காக எம்.ஜி.ஆரின் மகனை சிறுத்தையிடம் சண்டை போட்டு காப்பாற்றும். Androcles and the Lion கதை நினைவுக்கு வருகிறதா..!

    ராமாவரம் தோட்டத்தில் வளர்க்கப்பட்ட சிங்கம்

    அடிமைப்பெண் படத்தின் சண்டைக் காட்சியில் பயன்படுத்துவதற்காக எம்.ஜி.ஆர் இரண்டு சிங்கங்களை வாங்கிவந்தார். அதில் ராஜா என்ற ஆண் சிங்கத்தை மட்டும் சண்டைக்காகப் பழக்கினார். சிங்கத்தை வைத்துக்கொள்ள மாநகராட்சியிடம் அனுமதி பெற்றார். அதற்கு நல்ல சாப்பாடு போட்டார். சிங்கத்தை சர்க்கஸில் பார்த்துக்கொண்டவர், ’சர்க்கஸில் கூட நாங்க இப்படி சாப்பாடு போட்டதில்லை’ என்றார். அவ்வளவு கவனிப்பு. தினமும் எம்.ஜி.ஆர் சிங்கத்திடம் போய் அதற்கு உணவளிப்பார்.

    அடிமைப்பெண் ஷூட்டிங்கில்

    சிங்கத்துக்குச் சண்டைக் காட்சியில் நடிக்க மயக்க மருந்து கொடுத்த போதும் அது உர் உர் என்று உறுமிக்கொண்டே இருந்தது அதனால செட்டில் இருந்தவர்கள் பயந்தபடியே இருந்தனர். முதல் நாள் சிங்கம் எம்.ஜி.ஆரை சட்டென்று அறைந்துவிட்டது. அங்கிருந்த ஒருவர் ஐயோ அண்ணனை சிங்கம் அடிச்சுடுச்சு என்று கத்தியதும் எம்.ஜி.ஆர் அவரை ஒரு அறைவிட்டார். ஏன் பீதியைக் கிளப்புகிறாய் என்று அதட்டினார். அதன்பின்பு அங்கிருந்த வசனகர்த்தா சொர்ணம் முதற்கொண்டு சண்டைக்காட்சிக்குத் தேவையில்லாதவர்களை வெளியேற்றினார். பிறகு படப்பிடிப்பு தொடர்ந்து நடந்தது. காலையில் அடி கொடுத்தவருக்கு மாலையில் ஆயிரம் ரூபாய் அன்பளிப்பு கொடுத்து இனி அவர் அப்படி உணர்ச்சிவசப்பட்டு எங்கேயும் கத்தக் கூடாது என்று அறிவுரை கூறினார்.

    அடிமைப்பெண் படத்துக்குத் தொடர்ந்து பத்து நாள்கள் சிங்கத்துடனான சண்டைக் காட்சிகள் எடுக்கப்பட்டன. சிங்கம் எம்.ஜி.ஆரின் தோள் மீது முன்னங்கால் இரண்டையும் போட்டு நிற்கும்போது அதன் முழு எடையைத் தாங்கக்கூடிய வலிமை எம்.ஜி.ஆருக்கு இருந்தது. சிங்கத்துடன் உருளும்போது அதன் முழு எடையை எம்ஜி ஆர் தாங்கிகொண்டு உருண்டார். எம்.ஜி.ஆரின் உடல்வலிமையும் மனதுத்துணிவும் அந்தக் சண்டைக் காட்சியை வெற்றி பெறச் செய்தது. அந்தக் காட்சியில் ஜெயலலிதா, பண்டரிபாய் போன்ற பெண்களும் இடம்பெற்றது, படப்பிடிப்பை மிகவும் ரிஸ்க் உடையதாக்கியது.

    எம்.ஜி.ஆர் நினைவில்லத்தில் அதே சிங்கம்

    அடிமைப்பெண் படப்பிடிப்பு முடிந்ததும் இந்தச் சிங்கம் சர்க்கஸுக்குத் திருப்பித் தரப்பட்டது. சிங்கம் அங்கே இறந்ததும் அதன் உடலை எம்.ஜி.ஆர் பம்பாய்க்கு அனுப்பி பாடம் செய்து வாங்கினார் . இப்போது அது எம்.ஜி.ஆர் நினைவில்லத்தில் கண்ணாடிக் கூண்டுக்குள் கம்பீரமாக நிற்கிறது.. எம்.ஜி.ஆர் ரசிகர்கள் இந்தச் சிங்கத்தின் அருகே நின்று படம் எடுத்துக்கொள்கின்றனர்.

    கதைக்கு ஏற்ற சண்டைக் காட்சி வடிவமைப்பு

    படத்தில் எம்.ஜி.ஆர் என்ன தொழில் செய்கின்றாரோ அதற்கேற்ப சண்டைக் காட்சி அமைக்கப்படுவதும் உண்டு, கதை நடக்கும் இடத்துக்கேற்ப சண்டைக்காட்சிகள் அமைக்கப்படுவதும் உண்டு. அவற்றுள் சிலவற்றை இங்கு காண்போம்.
    விவசாயி படத்தில் கடைசிக் காட்சியில் அறுவடைக்குக் காத்திருக்கும் நெற்கதிர்கள் மீது நம்பியார் முகமூடி அணிந்து பூச்சி மருந்து அடித்ததால் எம்.ஜி.ஆர் அவருடன் சண்டையிடுவார். இந்த முகமூடிச் சண்டை ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.
    மாட்டுக்காரவேலன் படத்தில் எம்.ஜி.ஆர் தன் குடிசைக்குள் தோசை சுட்டுக்கொண்டிருப்பார். அப்போது வெளியே அசோகனின் ஆட்கள் வந்து அவரை சண்டைக்கு இழுக்கும்போது எம்.ஜி.ஆர் மாட்டுக்குக் கழுத்தில் அணிவிக்கும் சலங்கை கோத்த கழுத்துப்பட்டியை வைத்து சண்டை போடுவார். அதன் வீச்சால் எதிரிகளின் முகத்தில் விழும் கீறல்கள் ஆங்கில எழுத்துகளைப் போல தோன்றும். இதுவும் ரசிகர்கள் ஆரவாரம் செய்து பார்க்கும் காட்சி ஆகும்.

    உரிமைக்குரல் படத்தில் நம்பியாரின் ஆட்கள் எம்.ஜி.ஆரின் ரேக்ளா வண்டி வரக் கூடாது என்பதற்காக அவர் வரும் பாலத்துக்கு தீ வைத்து விடுவர். ஆனால், எம்.ஜி.ஆர் சரியாக டைமிங் பார்த்து ரேக்ளாவுடன் அந்தப் பாலத்தை கடந்துவிடுவர். இந்தக் காட்சியில் எம்.ஜி.ஆர் டூப் போடாமல் செய்திருப்பார். அவர் படம் முழுக்க ரேக்ளாவில் வருவதால் ரேக்ளாவைச் சண்டைக்காட்சியிலும் சேர்த்திருப்பார்.

    ரிக்*ஷாக்காரன் படத்தில் ரிக்*ஷாவில் இருந்தபடியே எதிரிகளைக் கம்பு சுற்றி விரட்டியடிப்பார். படகோட்டியில் எம்.ஜி.ஆர் வயதான தாத்தாவாக மாறு வேடத்தில் வந்து தன் படகில் இருந்தபடி அடுத்த படகில் இருந்த அசோகனின் கம்பை அடித்துத் தூக்கி கடலில் எறிவார். கலங்கரை விளக்கம் படம் மாமல்லன் ஒரு கதாபாத்திரமாகவும் அவன் எழுப்பிய மகாபலிபுரமே கதைக்களமாகவும் கொண்டிருந்ததால் அந்த மலைப் பாறைகளில் சண்டைக் காட்சிளை அமைத்திருப்பார்.

    கடைசி சண்டையில் இயற்கையோடு போராட்டம்

    படத்தின் கடைசி சண்டைக்காட்சி வரும் போது வாழ்வா சாவா போராட்டம் போல தோன்றும். இதில் எம்.ஜி.ஆர் வென்றால் அது நீதியின் வெற்றி வில்லன் வென்றால் அது அநீதியின் வெற்றி என்ற இக்கட்டான நிலையில் எம்.ஜி.ஆர் சில இயற்கை சீற்றங்களையும் இரக்க உணர்வுகளையும் இடம்பெறச் செய்வார். இயற்கை சீற்றம், படம் பார்க்கும் ஆண்களை கவர்வதற்கான உத்திமுறை ஆகும்.

    அடுத்ததாக வெள்ளமும் நெருப்பும் சூழ்ந்து ஆபத்தை விளைவிக்கும் சண்டைக் காட்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகளையும் எம்.ஜி.ஆர் இடம்பெறச் செய்வார். இரக்க உணர்வை மிகுவிக்கும் இச்சூழ்நிலையில் இயற்கையோடு போராடும் நிலையும் எம்.ஜி.ஆருக்கு ஏற்படும். இது பெண் ரசிகைகளை கவர்வதற்கான உத்திமுறை ஆகும். இவற்றிற்கு இரண்டு மூன்று உதாரணங்களை மட்டும் இங்குக் காண்போம்.

    நாடோடி மன்னன் படத்தில் கடைசி காட்சிகளில் கழுகுக்குகை சிதைந்து வெள்ளமாக நீர் வெளியேறும். அந்த வெள்ளத்தில் மன்னன் மார்த்தாண்டனைக் காப்பாற்றும் முயற்சியில் நாடோடி போராடுவதை பார்க்கும் ரசிகர்கள் இருக்கையின் நுனிக்கே வந்திருப்பர்.

    என் கடமை படத்தின் கடைசிக் காட்சியில் எம்.ஜி.ஆரும் சரோஜாதேவியும் சிக்கியிருக்கும் இடத்தில் தண்ணீர் மேலே மேலே ஏறி அவர்களை மூழ்கடிக்கும். மேலும் கடைசியில் எம்.ஜி.ஆரின் ஷூவும் மாட்டிக்கொண்டு படம் பார்ப்பவர்களுக்கு டென்ஷனை அதிகப்படுத்தும். தண்ணீரின் மட்டம் உயர்வதும் சரோஜாதேவி மயங்கிக் கிடப்பதும் படம் பார்க்கும் ஆண்களையும் பெண்களையும் டென்ஷனோடு படம் பார்க்க வைக்கும்.

    அரசகட்டளை படத்தில் சரோஜாதேவியைக் காப்பாற்றும் முயற்சியில் எம்.ஜி.ஆர் மணல் மேடாகிவரும் வெற்றி மண்டபத்தை விட்டு வெளியேற முயல்வார். அப்போது ஒவ்வொரு வாயில் வழியாக வெளியேற முயலும் போது அங்கு பாதியில் மணல் கொட்டி வழியை அடைத்துவிடும். அடுத்த முயற்சிகளும் தோல்வியில் முடியும்போது படம் பார்க்கும் பெண்கள் பரிதவித்துப் போவார்கள். நாடோடி மன்னனில் அம்பு பட்டு இறந்து கிடக்கும் மானை காட்டி பானுமதியின் மறைவை குறிப்பாக உணர்த்தியது போல அரச கட்டளையில் நரம்பு அறுந்த வீணையை காட்டி சரோஜாதேவியின் மறைவை உணர்த்துவார்கள் எம்.ஜி.ஆரின் ஜோடி அவரது அத்தை மகள் ஜெயலலிதாதான் என்பதை உணர்த்த அவர் கனவில் பாடிய ஒரு டூயட் பாட்டைக் காட்டுவார்கள். உரிமைக்குரல் படத்திலும் என் அண்ணன் படத்திலும் கடைசி சண்டைக் காட்சிகளில் நெருப்பு முக்கிய இடத்தை பெறும்.

    கடைசிக் காட்சியில் விரட்டுதல் [சேசிங்]

    ஆங்கிலப் படங்களில் கார் சேஸிங், பைக் சேஸிங் என்பன ரசிகர்களால் மிகவும் விரும்பப்படுவன. அது போல தமிழ்ப் படத்தில் வைக்க இயலாவிட்டாலும் தேவையும் இல்லை என்பதாலும் எம்.ஜி.ஆர் தனது படங்களில் தனக்கு முக்கியத்துவம் கிடைக்கும் வகையில் சில சேஸிங் காட்சிகளை வைத்திருப்பார்.

    என் அண்ணன் படத்தில் தன் குதிரை வண்டியைக் கொண்டு காரை விரட்டிச் சென்று பிடிப்பார். தாயின் மடியில் படத்தில் இருவரும் சகோதர முறை என்று தெரிந்தவுடன் ஜீப்பில் படு வேகமாக மலை உயர்த்துக்குப் போய் விழுந்து செத்துப்போக எம்.ஜி.ஆரும் சரோஜாதேவியும் முயல்வர். அப்போது சகோதரர்கள் கிடையாது என்பதைச் சொல்ல நாகேஷ் இன்னொரு வண்டியில் படுவேகமாக இவர்களைத் துரத்தி வருவார். மீனவ நண்பன் படத்தில் கடைசியில் மின்சாரப் படகில் எம்.ஜி.ஆரும் நம்பியாரும் ஒருவரை ஒருவர் துரத்திக்கொண்டு வருவர். இதில் பொம்மை படகுகளும் பயன்படுத்தப்பட்டிருக்கும். ஸ்டுடியோவுக்குள் வைத்து அதிக காட்சிகள் எடுக்கப்பட்டிருக்கும்.

    உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் எம்.ஜி.ஆர் ஸ்கேட்டிங் செய்தபடியே பலருடன் வாள் சண்டை போடுவார். அடுத்து விஷ ஊசியுடன் ஒருவர் தாக்க வரும்போது அவருடனும் மோதுவார். இந்தக் காட்சி சிறப்பாக வரவேண்டும் என்பதற்காக முதலில் நீச்சல் குளத்திலும் பிறகு தன் வீட்டு மொட்டை மாடியிலும் எம்.ஜி.ஆர் 55ஆவது வயதில் ஸ்கேட்டிங் பயிற்சி பெற்றார். பறக்கும் பாவை படத்தில் நடிக்கும் போது பார் விளையாட்டு பயின்றார். டூப் இல்லாமல் அவர் டிரபீஸ் விளையாடியிருப்பதை காணலாம். உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் சண்டையும், பாட்டும் மாறி மாறி வந்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும்.

    இன்றைக்கும் சிறு நகரங்களில் திரையரங்க உரிமையாளர்கள் மின் கட்டணம் செலுத்த வேண்டும் என்றால் எம்.ஜி.ஆர் படம் போட்டால் போதும் என்கின்றனர். அதுவும் உலகம் சுற்றும் வாலிபன் படத்தை போட்டால் வசூல் அள்ளி விடலாம் என்று நம்பும் அளவுக்கு இப்படம் இலாபம் தருகிறது.

    நடிகைகளின் சண்டைக்காட்சி

    எம்.ஜி.ஆர் படத்தில் பெண்களுக்கு முக்கிய ரோல் இருப்பதில்லை என்ற குற்றச்சாட்டு வருவதுண்டு. அது சரியல்ல. கதைக்கு ஏற்ப அவர் முக்கியப் பங்கை வழங்கியுள்ளார். அதிமுக ஆரம்பித்த பின்பு எம்.ஜி.ஆர் படத்தில் லதாவின் விழிப்புஉணர்வு வசனங்களும் காட்சிகளும் ஏராளமாக இடம்பிடித்தன. அதற்கு முன்பு சாவித்திரி மகாதேவி படத்திலும் பி பானுமதி ராஜா தேசிங்குப் படத்திலும் வாள் சண்டை போட்டு தங்களைக் காத்துக்கொள்ள முனைவார்கள். மருத நாட்டு இளவரசியிலும் அடிமைப்பெண்ணிலும் எம்.ஜி.ஆருக்கே கதாநாயகிகள்தான் சண்டை சொல்லிகொடுப்பர். முகராசி படத்தில் எம்.ஜி.ஆர் ஜெயலலிதாவுக்குச் சிலம்பு சுற்ற கற்றுக்கொடுப்பார். இதுவும் பெண்கள் ஏதேனும் ஒரு தற்காப்பு கலையைக் கற்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தவே எம்.ஜி.ஆர் இக்காட்சியை அமைத்திருப்பார்.

    சண்டைக்காட்சிகளில் பாட்டும் ஆட்டமும்

    தமிழ் பாரம்பர்யத்தில் ஒயிலாட்டம், சிலம்பாட்டம், வில்லுப்பாட்டு போன்ற வீர விளையாட்டுகளை ஆட்டம் பாட்டம் என்றே அழைக்கின்றனர். அவற்றிற்கென்று தனி தாளக்கட்டில் பாடல்களும் உள்ளன. அதனை பின்பற்றி எம்.ஜி.ஆர் தன் படங்களில் சில சண்டை காட்சிகளில் ஆடல்பாடலையும் புகுத்தியுள்ளார்.

    நீரும் நெருப்பும் படத்தில் ‘கடவுள் வாழ்த்து பாடும் இளங்காலை நேரக் காற்று’ என்ற பாடல் காட்சி சிறுவர்கள் சண்டைப் பயிற்சி பெறுவதை காட்டும். இதில் எம்.ஜி.ஆர் கையில் இரண்டு வாள்களை ஏந்திய வீசி அபிநயித்தபடி பாட்டுப் பாடிக்கொண்டு வருவார். அப்போது மிகவும் லாகவமாக இரண்டு பக்கமும் வரிசையாக வந்து எட்டு போடும் சிறுவர்கள் மீது படாமல் ஆடிவருவார். ஒரு சிறுவனுடன் மிகவும் மென்மையாக தன் வாளால் அவன் வாளை தட்டிச் சண்டையிடுவார். அவரது வாளின் அசைவில் காணப்படும் மென்மை அவரது நடிப்புக்கு ஓர் உதாரணம் ஆகும்.

    அரச கட்டளை படத்தில் சரோஜாதேவியை ஆட விடாமல் தடுப்போரை விரட்டி அடிக்கச் சண்டையிடும் காட்சியில் ‘ஆடி வா ஆடி வா ஆடி வா --ஆடப்பிறந்தவளே ஆடி வா - புகழ் தேடப் பிறந்தவளே பாடி வா -- ஆடி வா ஆடி வா ஆடி வா’ என்று பாடவும் செய்வார்.

    தெய்வத்தாய் படத்தில் தன்னைச் சிறைப்பிடித்திருக்கும் மூவரை விட்டு தப்பியோடுவதற்கு பார்க்கும் ஒத்திகையாகப் பாட்டோடு கலந்த ஒரு சண்டைக் காட்சி இடம்பெறும் . ‘மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் –அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும் --உள்ளம் என்றொரு ஊரிருக்கும் அந்த ஊருக்குள் எனக்கொரு பேரிருக்கும்’ என்று பாடியபடி சண்டையிடுவார். பாட்டு முடியும் தருவாயில் வெளியேறிவிடுவார்.

    கலைஞரின் எங்கள் தங்கம் படத்தில் திமுகவின் கட்சி நிகழ்வுகளை விளக்கும் ‘நான் செத்து பொழச்சவன்டா – எமனை பார்த்து சிரிச்சவன்டா’ என்ற பாடல் காட்சியில் சண்டைக் காட்சியும் இணைந்திருக்கும். பாட்டு முடியும்போது அனைவரையும் அடித்து போட்டிருப்பார்.

    சண்டை காட்சியில் நகைச்சுவை

    சண்டை காட்சியில் காமெடி நடிகர்கள் எம்.ஜி.ஆருடன் இருந்தால் நகைச்சுவையும் சேர்ந்திருக்கும். இது போன்ற காட்சிகள் கதையின் பிரச்னை தீவிரமடையாத வேளையில் அதாவது படத்தின் தொடக்கத்தில் இடம்பெறும். ஆயிரத்தில் ஒருவன் படத்தில் இதுபோன்ற நகைச்சுவை காட்சி முதல் சண்டைக் காட்சியில் இருக்கும்.

    காவல்காரன் படத்தில் எம்.ஜி.ஆர் ஓங்கி ஒரு பீரோவை குத்துவார் பீரோ உடைந்துவிடும் உள்ளே போன தன் கை வெளியே வந்ததும் அந்தக் கையில்கட்டியிருக்கும் கை கடிகாரத்தை காதில் வைத்து ஓடுதா என்று பார்ப்பார். சண்டையின் தீவிரத்தில் மூழ்கியிருக்கும் ரசிகர்கள் இந்தக் காட்சியைக் கண்டதும் சிரித்துவிடுவர். எதிரியை மடக்கி துப்பாக்கியைப் பறித்து திரும்பவும் அவரிடமே எறிந்துவிடும் காட்சிகளில் எம்.ஜி.ஆர் துப்பாக்கியின் குண்டுகளை எடுத்துவிட்டு சத்தமில்லாமல் எதிரியின் வீரத்தைச் செல்லா காசாக்கும் போது ரசிகர்கள் சிரித்து மகிழ்கின்றனர்.

    தொடர்ந்து 24 மணி நேர படப்பிடிப்பு

    சண்டைக் காட்சிகளில் எம்.ஜி.ஆர் மிகுந்த கவனம் எடுத்துக்கொள்வார் என்பதை இதுவரை கண்டோம். இதனை மேலும் வலியுறுத்த ஒரு முத்தாய்ப்பு சான்று. பணத்தோட்டம் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியின் படப்பிடிப்பு காலை ஏழு மணிக்குத் தொடங்கியது. மறுநாள் காலை வரை நடந்தது. இரவும் பகலும் 24 மணி நேரமும் ஓய்வில்லாமல் உழைத்து இந்தக் காட்சியை நடித்து முடித்தார். இந்தக் காட்சியை நீங்கள் படத்தில் பார்த்து அதன் மதிப்பை புரிந்துகொள்ளுங்கள். அவரது பட வெற்றியில் அவர் காட்டும் அக்கறைக்கு இது ஒரு சோறு பதம் ஆகும்.........Baa

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •