Page 88 of 117 FirstFirst ... 3878868788899098 ... LastLast
Results 871 to 880 of 1167

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 22

  1. #871
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    322
    Post Thanks / Like
    சமீபத்தில் 1976-ம் ஆண்டின் 'பொம்மை' மாத இதழொன்றைக் காண வாய்ப்புக்கிடைத்தது. அப்போது அந்தப்பத்திரிகையில் 'மாதம் ஒரு நடிகர் பதில்கள்' என்ற வரிசையில் நான் பார்த்த இதழில், மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் பதிலளித்திருந்தார்...
    ஒரு வாசகரின் கேள்வி:
    "சமீபகாலமாக சிவாஜியின் படங்கள் சரியாக அமையவில்லையே. அவர் திறமை குறைந்துவிட்டதா?"
    திரு. ஜெய்சங்கர் பதில்:
    "தங்கத்தின் விலை ஏறலாம் இறங்கலாம். அது தங்கத்தின் குற்றமல்ல. தரத்தில் தங்கம் என்றைக்கும் தங்கம்தான். அதுபோலத்தான் நம் நடிகர் திலகமும். அவர் திறமை என்றைக்கும் குறையாது. புகழ் என்றைக்கும் சரியாது".
    என்ன ஒரு அருமையான பதில்...

    Thanks Ganeisan Maniam
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #872
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    322
    Post Thanks / Like
    1980 சட்டமன்ற தேர்தலில் கோவை மாவட்டம் சூலூரில் பிரச்சார மேடையில் அதிமுக குண்டர்களால் தாக்குதலுக்கு உள்ளான நடிகர் திலகம் சிவாஜியிடம் நலம் விசாரிக்கும் அகல இந்திய சிவாஜி மன்றத்தின் தலைவரும் சுதந்திர போராட்ட தியாகியுமான திரு சின்ன அண்ணாமலை அவர்கள்

    siva-487.jpg

    Thanks Sekar Parasuram
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  4. #873
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    7
    Post Thanks / Like
    Picture

  5. #874
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    7
    Post Thanks / Like
    Record

  6. #875
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    322
    Post Thanks / Like
    அனைவருக்கும் வணக்கம். ஒரு சிவாஜி ரசிகனின் சினிமா டைரி தொடர்கிறது.
    அந்த நாள் ஞாபகம் - பார்ட் 49
    அக்டோபர் விடைபெற்று நவம்பர் மாதம் துவங்கியது. அனால் நவம்பர் 1 அன்றே ஒரு வருத்தம் ஏற்பட்டது. வசந்த மாளிகை செப்டம்பர் 29 வெளியாகி அக்டோபர் 31 வரை 33 நாட்களில் மதுரை நியூசினிமாவில் நடைபெற்ற 113 காட்சிகளும் தொடர் அரங்கு நிறைந்திருக்க நவம்பர் 1 புதன் மாட்னி 114வது காட்சி. அன்றைய தினம் 3 காட்சிகளும் அரங்கு நிறைந்து விட்டால் 116 ஆகி விடும். மீண்டும் ஒரு சாதனை படைக்கப்படும் என நினைத்திருக்கிறோம். மாட்னி ஷோ நேரத்திற்கு தியேட்டர் பக்கம் போகிறோம் (ஸ்கூல் லீவு). கூட்டம் வரிசை எல்லாம் இருக்கிறது. ஆனால் அரங்கு நிறையும் அளவிற்கு இல்லை. மழை வேறு. அதுவும் எப்படி என்றால் ஒரேடியாக பெய்து விட்டாலும் பரவாயில்லை. இது நச நசவென்று பெய்து கொண்டிருக்கிறது. 3 மணி வரை காத்திருந்தோம். ரசிகர் மன்ற ஆட்களெல்லாம் வந்து தியேட்டருக்குள் போய் பேசுகின்றனர். ஆனால் மழை விடாமல் தொடரவே தொடர் ஹவுஸ் புல் விட்டுப் போனது. ஆனால் ஈவினிங் மற்றும் நைட் ஷோ புல். மறுநாள் மாட்னியும் புல்லானது என்று பார்த்தபோது ஆஹா புதன் மாட்னி மட்டும் ஹவுஸ் புல் ஆகியிருந்தால் ஞாயிறு வரை அனைத்து காட்சிகளும் அரங்கு நிறைந்திருக்கும். (உண்மையிலே அரங்கு நிறைந்தது) அப்படி நடந்திருந்தால் 130 காட்சிகள் தொடர் அரங்கு நிறைந்து பட்டிக்காடா பட்டணமாவின் 129 காட்சிகள் தொடர் ஹவுஸ் புல் ரிகார்டை முறியடித்திருக்கும். இதை வெகு நாட்கள் நாங்கள் பேசி ஆதங்கப்பட்டிருக்கிறோம்.
    1965 தீபாவளிக்கு பிறகு அந்த 1972 தீபாவளிக்குதான் நடிகர் திலகம் படம் வராமல் போனது. ஆகவே பெரும்பாலான ரசிகர்கள் தீபாவளியை வசந்த மாளிகையில்தான் கொண்டாடினார்கள். பட்டிக்காடா பட்டணமாவும் தீபாவளியோடு 182 நாட்களை நிறைவு செய்து சென்ட்ரலிலிருந்து எடுக்கப்பட்டு மற்றொரு அரங்கிற்கு ஷிபிட் செய்யப்பட்டுவிட்டது. சிந்தாமணியில் 70 நாட்களை நிறைவு செய்திருந்த தவப்புதல்வன் மற்றொரு அரங்கிற்கு மாற்றப்பட்டது. நீதி டிசம்பர் மாதம் வந்து விடும் என பேச்சு அடிப்பட்டுக் கொண்டிருக்கிறது.
    நீதி என்றவுடன் invariably நம் நினைவுக்கு வருவது 1972-ம் வருடத்தின் ஆரம்பமும் பாலாஜி,முடிவும் பாலாஜி. 1972-ம் ஆண்டு ஜனவரி 26-ந் தேதி ராஜா வெளியாகி அந்த வருடத்தின் Box Office ராஜா நடிகர் திலகம் எனபதற்கு கட்டியம் கூறியது என்றால் நீதி 72ம் ஆண்டிற்கு நிறைவாக நிறைவு செய்ய வந்தது.
    ராஜா வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும் போதே பாலாஜியின் அடுத்த படம் என்ன என்பதை பற்றிய யூகங்களும், சர்ச்சைகளும் ரசிகர்கள் மத்தியில் உலா வந்து கொண்டிருந்த நேரம். அந்த நேரத்தில் சித்ராலயா வார இதழுக்கு அளித்த பேட்டி ஒன்றில் பாலாஜி தான் இந்திபடங்களை அல்லது பிறமொழி படங்களை தமிழில் ரீமேக் செய்வது பற்றி விமர்சித்த பலரும் இப்போது தன் படங்கள் அடையும் வெற்றியை பார்த்து மலைத்து போய் இருப்பதாக குறிப்பிட்டார். அடுத்தப் படமும் இந்தி படத்தின் தழுவலாகதான் இருக்கும் என்றும் அதில் மேலும் அவர் சொல்லியிருந்தார். ஆனால் என்ன படம் என்று தெரியாமலே இருந்தது.
    1972-ம் ஆண்டு மே 4-ந் தேதி அன்று ராஜா திரைபடத்தின் 100 வது நாள். அன்றைய தினம் வெளியான தினத்தந்தி நாளிதழில் முதல் பக்கத்தில் கீழே இடது கை ஓரத்தில் ராஜா 100-வது நாள் விளம்பரம். வலது கை ஓரத்தில் நீதி விளம்பரம். ராஜாவின் அதே யூனிட் என்பது விளம்பரத்தை பார்த்தாலே தெரிந்தது. மறுபடியும் எந்த இந்திப்படத்தின் தமிழாக்கம் என்று அந்நேரம் தெரியவில்லை. விளம்பரம் வந்த மறுநாள் தந்தி வெள்ளிகிழமை சினிமா செய்திகளில் பாலாஜி நீதி என்ற படத்தை தயாரிக்கிறார். சிவாஜி ஜெயலலிதா ஆகியோர் நடிக்கிறார்கள். சி.வி.ஆர்.இயக்குகிறார் என்று வந்திருந்தது. இதை ஏற்கனவே இந்த தொடரில் நாம் பேசியிருக்கிறோம்.
    நாட்கள் செல்ல செல்ல துஷ்மன் என்ற இந்திப்படத்தின் ரீமேக் தான் நீதி எனபதும் ஒரிஜினலில் ராஜேஷ் கன்னாவும் மும்தாஜும் ஜோடி எனபதும் தெரிய வந்தது. படம் சென்னையில் ரிலீஸ் ஆகி விட்டது என்றும் கேள்விப்பட்டோம். ஆனால் படம் எந்த வகையை சார்ந்தது என்பதைப் பற்றிய ஐடியா இல்லாமலே இருந்தது. ராஜா போன்ற மாடர்ன் ட்ரண்டுக்கு ஏற்றவாறு இருக்குமா இல்லை வேறு மாதிரியா என்பது பற்றி யோசனை. இதனிடையே அன்றைய நாட்களில் படப்பிடிப்பு நடைபெறும் படங்களைப் பற்றிய செய்திகள் நாளிதழ்களிலும் பருவ இதழ்களிலும் தொடர்ந்து வரும். அது போன்ற ஒரு செய்தியாக மாப்பிளையை பாத்துகடி மைனா குட்டி பாடலும் நாளை முதல் குடிக்க மாட்டேன் பாடலும் இசையமைக்கப்பட்டு ஒலிப்பதிவு செய்யப்பட்டதாக செய்திகள் வந்தன.
    நடிகர் திலகம் ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் ஒரு நாளைக்கு 24 மணி நேரம் போதாமல் அவ்வளவு பிஸியாக இருந்த காலம். படங்களின் தொடர் வெற்றியில் ஏற்கனவே உயரத்தில் இருக்கும் அவரின் மார்கெட் உச்சாணி கொம்பில் ஏறி விட்டது. அவர் 22 மணி நேரம் மூன்று ஷிப்ட்களில் நடித்துக் கொண்டிருந்தார். அக்டோபர் 1 அவரின் பிறந்த நாள் அன்று மைசூர் பக்கத்தில் உள்ள ஒரு ஊரில் அவர் நீதி படப்பிடிப்பில் கலந்துக் கொண்டிருந்தார். அங்கேயே பிறந்த நாள் கொண்டாடப்பட்டது என்பதையும் பார்த்தோம்.
    இந்த நேரத்தில் மற்றொரு செய்தியும் வந்தது. ஒய்வு ஒழிச்சல் இல்லாமல் நடிகர் திலகம் சினிமா படப்பிடிப்பில் காங்கிரஸ் கட்சி கூட்டங்களில், நடிகர் சங்க வேலைகளில் மூழ்கி இருக்கும் நேரம், அது அவரது உடல்நிலையை பாதித்து ஒரு நாள் படப்பிடிப்பு முடிந்து வீட்டிற்கு வந்தவர் vomit செய்ய அதில் ரத்தம் கலந்திருந்ததைப் பார்த்துவிட்டு வீட்டில் இருந்தவர்கள் பயந்துபோய் டாக்டரை கூப்பிட, டாக்டர் BP சற்று அதிகமாக இருக்கிறது அதனால் ஒய்வு எடுக்கவேண்டும் என்று கூற நாளை காலை எனக்காக செங்கல்பட்டு பக்கத்தில் எல்லா ஆர்டிஸ்ட்ம் காத்திருப்பார்கள். பாலாஜியும் சிவிஆரும் காத்திருப்பார்கள். அவ்வளவு பேர் கால்ஷீட்டும் வேஸ்ட் ஆகிவிடும். நான் போகவேண்டும் என்று கிளம்பி போய்விட்டாராம்.
    அன்றைக்குத்தான் கிளைமாக்ஸ்-ற்கு முந்தைய அனைவரும் பாடும் பாடல் காட்சியான எங்களது பூமி பாடல் படமாக்கப்பட்ட தினம். படத்தில் இந்த பாடல்காட்சியில் மட்டும்தான் அந்த கருநீல டிரைவர் யுனிபார்ம் தவிர்த்து வொயிட் அண்ட் வொயிட் ஷெர்வானி அணிந்திருப்பார் நடிகர் திலகம். ஒரு துப்பட்டாவும் அணிந்திருப்பார். அது சிவப்பு கலரில் இருக்கும். முதல் நாள் இரவு ஏற்பட்டது போல ரத்த வாந்தி வந்தால் அதை அடக்குவதற்கும் மீறி வந்தால் மற்றவர்களுக்கு தெரியாமல் இருப்பதற்கும்தான் சிவப்பு கலர் துப்பட்டாவை பயன்படுத்தினார் என்று ரசிகர்கள் சொல்லி கேள்விபட்டிருக்கிறேன். அது எந்தளவிற்கு உண்மை என்று தெரியாது. ஆனால் இப்போதும் அந்த பாடல் காட்சியை பார்த்தோம் என்றால் இரண்டு மூன்று ஷாட்களில் அந்த துப்பட்டாவை அவர் வாயின் மேல் பொத்தி பிடிப்பதை கவனிக்கலாம். தன்னால் தயாரிப்பாளருக்கோ மற்றவர்களுக்கோ எந்தவித பாதிப்பும் வந்துவிடக் கூடாது என்ற அந்த பெரிய மனதிற்கு தலை தாழ்ந்த வணக்கம்!
    இந்த நேரத்தில் தீபாவளி வருகிறது. அந்த வருடம் நவம்பர் 4 சனிக்கிழமை அன்று தீபாவளி. சென்ட்ரலில் ராமண்ணாவின் சக்தி லீலை தீபாவளி அன்று வெளியாகுவதாக இருந்தது. ஆனால் படம் அன்று வெளிவராது என்று தீபாவளிக்கு ஒரு வாரம் முன்னர் செய்தி வந்தது. படத்தின் வேலைகள் முடியவில்லை என்பதால் வரவில்லை என்று ஒரு செய்தியும் அன்றைய தீபாவளி தினமே மற்றொரு பக்தி படமான தெய்வம் வெளியானதால் போட்டி வேண்டாம் என்று முடிவு மேற்கொள்ளப்பட்டதாகவும் மற்றொரு தகவல் வந்தது. இந்த முடிவிற்கு பின்னால் அன்றைய நாட்களில் ஆக்டிவாக செயல்பட்டுக் கொண்டிருந்த மூவி மேக்கர்ஸ் கவுன்சில் குழுவும் ஒரு காரணம் என சொல்லப்பட்டது. சக்தி லீலை தீபாவளியன்று வெளியாகவில்லை என்றதும் பட்டிக்காடா பட்டணமாவே தொடர்ந்து ஓடப் போகிறது என்ற செய்தியும் பரபரப்பாக ரசிகர்களுக்கிடையே பேசப்பட்டது. ஆனால் சக்தி லீலை நவம்பர் 10-ந் தேதி வெளி வரும் என்ற உறுதியான அறிவிப்பு வந்ததால் 6 நாட்களுக்கு துஷ்மன் படம் சென்ட்ரலில் வெளியிடப்பட்டது.
    நடிகர் திலகம் படம் தீபாவளிக்கு வரவில்லை என்பதால் மாலைக் காட்சி துஷ்மன் படம் காண சென்றோம். படம் பார்ப்பதற்கு முன்பே படத்தின் கதையம்சதைப் பற்றி ஓரளவு தெரிந்திருந்தது. படம் பார்த்த போது முழு கதையும் புரிந்தது. ஆனால் ஒரு ஏமாற்றம். ராஜா போன்ற ஸ்டைலிஷ் படமாக இது வராது என்பது தெரிந்தது. ரசிகர்களும் பொது மக்களும் இதை எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்பது பற்றிய ஒரு நெருடல் இருந்தது என்றே சொல்ல வேண்டும். ஆனால் என்னுடன் வந்திருந்த என்னுடைய கஸின் வேறொரு விஷயத்தை குறிப்பிட்டார்."உனக்கு நினைவு இருக்கிறதா? சென்ற தீபாவளி [1971 தீபாவளி] அன்றுதான் ராஜாவின் ஒரிஜினலான ஜானி மேரா நாம் பார்த்தோம். ராஜா சூப்பர் ஹிட். அது போல் இந்த தீபாவளி துஷ்மன் பார்க்கிறோம். நிச்சயம் நீதி சூப்பர் ஹிட்" என்றார். பாலாஜியும் சிவிஆரும் படத்தை பார்த்து கொள்வார்கள் என்ற நம்பிக்கையும் இருந்தது.
    நான் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தபடி அரசியல் குழப்பங்கள் தொடர்ந்தன. தினந்தோறும் ஊர்வலங்கள் போராட்டங்கள் என்ற பதட்ட சூழல் அதில் அப்பாவி மாணவர்கள் சிக்கி கொள்வது, வன்முறை சம்பவங்கள் அரேங்கேறுவது என்று இருந்ததால் கல்வி நிறுவனங்கள் தொடர் விடுமுறை அறிவித்து விட்டன. தனி கட்சி ஆரம்பித்த எம்ஜிஆர் இந்திய (வலது) கம்யூனிஸ்ட் தலைவர் கல்யாணசுந்தரம் அவர்களோடு டெல்லி சென்று அன்றைய ஆளும் திமுக அரசுக்கு எதிராக ஊழல் புகார் பட்டியலை பிரதமரிடம் கொடுக்க சென்றார். ஆனால் இது போன்ற புகார்களெல்லாம் குடியரசு தலைவரிடம்தான் கொடுக்க வேண்டும் என்று சொல்லப்படவே அவர்கள் அன்றைய ஜனாதிபதி வி வி கிரி அவர்களை சந்தித்து புகார் அளித்தனர். பின் பிரதமரையும் சந்தித்து அதன் ஒரு நகலை வழங்கியதாக செய்தி வந்தது. அது தமிழக ஆளுநருக்கு அனுப்பப்பட அவர் அதை தமிழக முதல்வருக்கு அனுப்பினார். அதை படித்துவிட்டுதான் அன்றைய முதல்வர் மு.க., "பார்த்தேன் படித்தேன் ரசித்தேன்" என்று கமென்ட் அடித்தார். இவை நடந்து கொண்டிருக்கும் அதே நேரத்தில் (நவம்பர் 15/16) பாளையங்கோட்டை கல்லூரி பேராசிரியர் சீனிவாசன் தாக்கப்பட்டார். இது சற்றே தணிந்திருந்த பதட்டத்தை மேலும் அதிகரித்தது.
    பதட்ட சூழ்நிலை ஒரு பக்கம் என்றால் மழை மற்றொரு பக்கம். மற்ற ஊர்களில் எப்படியோ மதுரையில் அந்த சீசனில் நல்ல மழை. [இதை சொல்ல காரணம் 1973-ல் தமிழகத்திலே வறட்சியும் மின்வெட்டும் கடுமையாக இருந்தன]. இருப்பினும் வசந்த மாளிகை மட்டுமல்ல ஷிப்டிங் செய்யப்பட்ட பட்டிக்காடா பட்டணமாவும் சரி தவப்புதல்வனும் [மதுரை விஜயலட்சுமியில்] சரி பிரமாதமாக ஓடிக் கொண்டிருந்தது. பட்டிக்காடா பட்டணமாவின் வெள்ளிவிழாக் கொண்டாட்டம் சேலத்தில் நவம்பர் 5 ஞாயிறன்று நடைபெற்றது. மிக பிரம்மாண்டமான கூட்டம் நடிகர் திலகத்தை காண கூடவே சேலம் நகரே திணறியது என செய்திகள் வெளிவந்தன. சென்னையில் வெள்ளிவிழா கொண்டாட்டம் அதற்கு அடுத்த ஞாயிற்றுக்கிழமை நவம்பர் 12 அன்று சென்னை உட்லண்டஸ் ஹோட்டலில் நடைபெற்றது. பெருந்தலைவர் விழாவிற்கு தலைமை தாங்கி கலைஞர்களுக்கும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் கேடயம் வழங்கினார். தலைமை தாங்கிய பெருந்தலைவருக்கு ஏர் கலப்பை ஒன்றை நடிகர் திலகம் நினைவு பரிசாக வழங்கினார். அந்த விழாவில்தான் பெருந்தலைவர் நடிகர் திலகத்திற்கு ஒரு அழைப்பு விடுக்கிறார்.
    1969ம் ஆண்டு காங்கிரஸ் பேரியக்கம் பிளவுப்பட்டபின் தமிழகத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் காரிய கமிட்டி புனரமைக்கப்படுகிறது. 1969 டிசம்பரில் பதவியேற்ற அந்த குழுவிற்கும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும் கக்கன்ஜி பொறுப்பேற்கிறார். அந்த கமிட்டியின் ஆயுள் மூன்று வருடங்கள். கட்சியின் அமைப்பு சட்டப்படி மூன்று வருடங்களுக்கு ஒரு முறை காரிய கமிட்டி புனரமைக்கப்பட வேண்டும். ஆகவே 1972 டிசம்பரில் புனரமைக்கப்பட போகும் காரிய கமிட்டியில் நடிகர் திலகமும் இடம் பெற வேண்டும் என பெருந்தலைவர் விரும்புகிறார். அதை அவரிடம் தனிப்பட்ட முறையில் சொல்லியிருக்கிறார். ஆனால் நடிகர் திலகம் அதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார். ஆகவே இதை பொது மேடையில் சொன்னால்தான் நடிகர் திலகத்தை ஒப்புக் கொள்ள வைக்க முடியும் என நினைத்த பெருந்தலைவர் அந்த வெள்ளிவிழா கூட்டத்தில் பேசும்போது சிவாஜி ஏற்கனவே நமது கட்சிக்காக நிறைய செய்து கொண்டிருக்கிறார். அவருக்கு இப்போது கட்சியில் ஒரு பொறுப்பு கொடுக்கலாம் என இருக்கிறேன் என்று சொல்கிறார். கூட்டம் அதை ஆரவாரத்துடன் வரவேற்கிறது. ஆனால் நடிகர் திலகம் ஏற்புரை நிகழ்த்தும்போது அதை பணிவாக மறுக்கிறார். தான் சார்ந்த தொழிலில் இப்போது முழு மூச்சாக ஈடுபட்டுக் கொண்டிருப்பதாகவும் பல தயாரிப்பாளர்கள் தன்னை வைத்து படம் எடுத்துக் கொண்டிருப்பதாகவும் அதுவும் தவிர நடிகர் சங்க தலைவராக பணியாற்றிக் கொண்டிருப்பதால் அங்கும் ஏராளமான வேலைகள் இருக்கின்றன என்றும் ஆகவே இந்த நேரத்தில் கட்சியில் ஒரு பொறுப்பை ஏற்க நேர்ந்தால் அதற்கு நியாயம் செய்ய முடியாது என்றும் சொல்கிறார். தன் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கும் அன்பிற்கும் நன்றி சொன்ன நடிகர் திலகம், எனது பிள்ளைகள் உங்கள் கட்டளையை சிரமேற்கொண்டு செயல் படுவார்கள். கட்சியின் தற்கொலை படையாக களத்தில் நிற்பார்கள் எனவும் கூறிவிட்டு போராட்டக்களத்தில் நானே வரவேண்டும் என்ற சூழலில் நிச்சயமாக கலந்து கொள்வேன் என்று சொல்லி முடித்தார். [பெருந்தலைவர் நடிகர் திலகத்திற்கு ஒன்றுமே செய்யவில்லை என விஷயம் தெரியாமல் சொல்லி வருபவர்களுக்கு இதை சமர்ப்பிக்கிறேன். இது 1975 வரை உள்ள நிலை. அதன் பிறகு அந்த கட்சி நடிகர் திலகத்திற்கு என்ன செய்தது என்பது அனைவருக்கும் தெரியும்]. அந்த 1972 டிசம்பரில் புனரமைக்கப்பட்ட கமிட்டி பதவியேற்க தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக பா.ரா. பொறுப்பேற்றார்.
    அந்த சமயத்தில் மதுரையில் ஷிப்டிங் செய்யப்பட்ட பட்டிக்காடா பட்டணமா 200-வது நாளை நிறைவு செய்தது. மாளிகை 50 நிறைவு செய்தது. நீதி டிசம்பர் 7 அன்று வெளியாவதாக தகவல் வந்தது. சென்னையை பொறுத்தவரை ராஜா வெளியானது போல் மூன்று அரங்குகளில்தான் [பாரடைஸ் பிரபாத்,சரவணா] நீதியும் வெளியாகிறது என்ற செய்தி வந்த அதே நேரத்தில் மதுரையில் தங்கம் தியேட்டரில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாயின. தங்கம் தியேட்டரா என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் எழுந்தது. காரணம் வேறொன்றுமில்லை. பொதுவாக சென்ட்ரல், நியூசினிமா, ஸ்ரீதேவி மற்றும் சிந்தாமணி ஆகியவைதான் முதல் சாய்ஸ். அந்த நேரத்தில் நியூசினிமாவில் வசந்த மாளிகை, ஸ்ரீதேவியில் இதய வீணை, சிந்தாமணியில் தெய்வம் [நீதியின் விநியோகஸ்தரான சேது பிலிம்ஸ்தான் தெய்வதிற்கும் விநியோகம்] ஆகியவை ஓடிக் கொண்டிருந்த காரணத்தினால் சென்ட்ரல் மட்டுமே இருந்தது. ஆனால் என்ன காரணத்தினாலோ சென்ட்ரலில் படம் ஒப்பந்தம் செய்யப்படவில்லை. அந்த நேரத்திலும் சரி அதற்கு பிறகும் சரி அடுத்து வெளியாகும் புதுப் படங்கள் எதுவும் ஒப்பந்தம் செய்யப்பட்டதாக தகவல் வரவில்லை. அப்படியிருக்க ஏன் சென்ட்ரல் சினிமா ஒப்பந்தம் செய்யப்படவில்லை என்பது கேள்விக்குறியாகவே இருந்தது. 1973 பொங்கலுக்கு சென்ட்ரலில் கங்கா கௌரி வெளியானது என்று சொன்னால் கூட அதனால் நீதி அங்கே வெளியாகவில்லை என்பதை ஏற்றுக் கொள்ள முடியாமலே இருந்தது. இத்தனை விளக்கமாக சொல்ல காரணம் அதன் பிறகு பெரிய படமாக மார்ச் 24-ந் தேதி சென்ட்ரலில் பாரத விலாஸ் வெளியானது, எனவே நீதி சென்ட்ரலில் வெளியாகியிருந்தால் 107 நாட்கள் ஓடியிருக்குமே என்ற ஆதங்கம்தான்
    இதற்கு நடுவே நடிகர் திலகத்தின் பல புதிய படங்களும் வேகமாக வளர்ந்து வரும் செய்திகள் வந்துக் கொண்டேயிருந்தன. ஹீரோ 72 ஷூட்டிங் ஆரம்பமாகிவிட்டது. என்னைப் போல் ஒருவன், ரோஜாவின் ராஜா, கெளரவம், ராஜபார்ட், சித்ரா பௌர்ணமி, மன்னவன் வந்தானடி, ஜெயந்தி பிலிம்ஸ் படம், குகநாதனின் அன்னை பூமி, முக்தா பிலிம்ஸ் படம், கிழக்கும் மேற்கும், புனித பயணம் கருப்பு வெள்ளை படங்களான பொன்னுஞ்சல், தாய் முதலிய படங்கள் பற்றிய செய்திகள் பரவலாக வெளிவந்துக் கொண்டிருந்தது.. நீதி வெளியாவதை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்போது டிசம்பர் முதல் வாரத்தில் நடந்த இரண்டு அரசியல் நிகழ்வுகள் மீண்டும் தமிழகத்தில் பதட்ட நிலையை உருவாக்கின.
    திருச்சியில் இருக்கும் செயின்ட் ஜோசப் கல்லூரியின் ஹாஸ்டல்களில் ஒன்றாக விளங்கியது கிளைவ் ஹாஸ்டல். திருச்சி மலைக்கோட்டை கோவில் மெயின் கார்டு கேட் இவைக்கு இடைப்பட்ட இடத்தில அமைந்த தெப்பக்குளத்திற்கு அருகில் இயங்கி வந்த விடுதி. அங்கே தங்கி படித்துக் கொண்டிருந்த மாணவர்கள்மீது தான் தாக்குதல் நடைபெற்றது. ஏன் அந்தத் நிகழ்வு அங்கே நடந்தது என்பது பற்றி எழுதுவது நமது தரத்திற்கு குறைவு என்பதனால் நான் அதை குறிப்பிட விரும்பவில்லை. ஆனால் அன்றைய நாளில் ஆளும் கட்சியில் இருந்த முக்கிய பிரமுகர் [அமைச்சரைவையில் ஒரு அங்கம்] சில தனிப்பட்ட காரணங்களுக்காக கோபம் கொண்டு காவல்துறையை மாணவர்கள் மீது ஏவி விட்டார். நாம் ஏற்கனவே பேசியிருக்கிறோம் அந்த வருடம் கல்லூரி மாணவர் பேரவை தேர்தலில் ஸ்தாபன காங்கிரஸ் மாணவர்கள் 146 கல்லூரிகளில் வெற்றி பெற்றார்கள் என்று. அந்த கோபமும் சேர்ந்து கொள்ள 1972 டிசம்பர் 1, 2 [வெள்ளி சனி] இரவுகளில் ஹாஸ்டலில் போலீசார் புகுந்து வெறியாட்டம் ஆடினார்கள். ஏராளமான மாணவர்கள் மிருகத்தனமாக தாக்கப்பட்டு ரத்தம் வழிய வழிய ஓட ஓட விரட்டப்பட்டனர். அன்றைய மாணவர் காங்கிரஸ் தலைவராக இருந்த நேதாஜி மிக தீரமாக ஹாஸ்டலுக்கு உள்ளே சென்று மாணவர்களை காப்பாற்றினார். நேதாஜி உள்ளே இருக்கிறார் என்று தெரிந்து போலீசார் அவரை எப்படியும் கைது செய்து விட வேண்டும் என்று முயற்சிக்க ஆளும் கட்சியினரும் இதை பயன்படுத்திக் கொண்டு நேதாஜியை தாக்க முயற்சி எடுக்க மாணவர்கள் அரண் போல் நின்று நேதாஜியை நெருங்க விடாமல் செய்தனர். அதற்குள் இந்த கொலை வெறி தாக்குதல் ஊரெங்கும் பரவி விடவே நிலைமையை சமாளிக்க அன்றைய அரசு ஒரு மாவட்ட நீதிபதியை நியமித்து விசாரணை நடத்த உத்தரவிட்டது.
    டிசம்பர் 2 சனிக்கிழமை அன்று தமிழக சட்டசபை கூடுகிறது என அறிவிக்கப்பட்டது. ஆளும் கட்சியில் பிளவு ஏற்பட்டபிறகு நடைபெறும் முதல் கூட்ட தொடர் என்பதால் பரபரப்பு நிலவியது. அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்போவதாக அதிமுக அறிவிக்கிறது. இந்த நேரத்தில் மற்றொரு திருப்பம் நிகழ்கிறது. புதிதாக தொடங்கப்பட்ட அதிமுகவில் 13 எம்எல்ஏக்கள் சேர்ந்திருந்தனர். எம்ஜிஆருடன் சேர்ந்து வெளியேறிய முதல் எம்எல்ஏ கேஏகே என்ற கே ஏ கிருஷ்ணசாமி. அவரின் அண்ணன் கே ஏ மதியழகன் அப்போது பேரவை தலைவராக இருக்கிறார். 1970ல் ஊழல் குற்றச்சாட்டின் காரணமாக பதவி விலகிய மதியழகன் 71 தேர்தலுக்கு பிறகு சபாநாயகராக ஆக்கப்பட்டார். அமைச்சர் பதவி கிடைக்காததன் காரணமாகவே சற்று வருத்தத்திலும் கோபத்திலும் இருந்த மதியழகன் அதிமுகவிற்கு போகப் போகிறார் என்று செய்திகள் அடிப்பட்டுக் கொண்டிருந்தது. சட்டப்பேரவையை பொறுத்தவரை பேரவை தலைவர் எடுக்கும் தீர்மானம்தான் இறுதி என்பதால் அதிமுக கொண்டு வரும் நம்பிக்கையில்லா தீர்மானம் எடுத்து கொள்ளப்படும் என மதியழகன் அறிவிக்கவே ஆளும் கட்சியில் ஒரு கிலி படர்ந்தது. 170 எம்எல்ஏக்கள் இருந்தாலும் நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றது என பேரவை தலைவர் அறிவித்து விட்டால் என்ன செய்வது என்று யோசித்த கருணாநிதி அன்றைய துணை சபாநாயகர் விருதுநகர் சீனிவாசனை சபாநாயகராக்க முடிவு எடுத்தார். சபை கூடியதும் பேரவை தலைவர் மேல் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட, மதியழகனோ அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் விவாதத்திற்கு எடுத்து கொள்ளப்படும் என அறிவிக்க, ஒரே நேரத்தில் மதியழகனும் சீனிவாசனும் சபையை நடத்த, மதியழகனால் பேச அழைக்கப்பட்ட எம்ஜிஆர் பேசிக் கொண்டிருக்கும்போதே அவருக்கான நேரம் முடிந்து விட்டது என்று சீனிவாசன் கூறி அவரை உட்கார சொல்ல, அவர் தொடர்ந்து பேச அவருக்கு கொடுக்கப்பட்ட மைக் அணைக்கப்பட்டு அவர் பேசுவது யாருக்கும் கேட்காமல் போக, ஆளும் கட்சி வரிசையிலிருந்து பல்வேறு பொருட்கள் வீசப்பட்டு ஒரே களேபரமாக, சட்டசபை செத்துவிட்டது என கூறி எம்ஜிஆர் வெளியேறினார். 1967 முதல் 1971 ஜனவரி வரையும் பின் 1971 மார்ச் முதல் 1972 டிசம்பர் வரைக்கும் எனக்கு தெரிந்து எம்ஜிஆர் பதவி பிரமாணத்தை தவிர வேறு ஏதும் சபையில் பேசியதாக தெரியவில்லை. அவர் முதன் முதலாக பேச வந்த அந்த டிசம்பர் 2லும் இது போல் நடக்க அந்த சட்டசபை கலைக்கப்பட்ட 1976 ஜனவரி 31 வரை அவர் பேசவேயில்லை. ஆனால் அந்த சட்டசபை இயங்கிய காலம் முழுக்க அவர் சட்டசபை லாபிக்கு வந்து கையெழுத்து மட்டும் போட்டு உறுப்பினர் அனுகூலங்களை பெற்றுக் கொண்டிருந்தார்.
    இந்த கிளைவ் ஹாஸ்டல் மற்றும் சட்டசபை நிகழ்வு தமிழகத்தில் மீண்டும் பதட்ட நிலையை உருவாக்க டிசம்பர் 4 திங்களன்று மீண்டும் துவங்குவதாக இருந்த கலவி நிலையங்கள் அனைத்தும் காலவரையின்றி மூடப்பட்டன.
    இந்த சூழலில்தான் நீதி டிசம்பர் 7 அன்று வெளியாகிறது. அந்த லாரி டிரைவர் ராஜாவை பார்த்த மகிழ்ந்த கொண்டாடிய நினைவுகள் அடுத்த வாரம்
    (தொடரும்)
    அன்புடன்


    Thanks Murali Srinivasan
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  7. #876
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    322
    Post Thanks / Like
    கல்தூண் 1/05/1981 .இன்று 40 ஆண்டுகள் நிறைவு.

    siva-489.jpg
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  8. #877
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    322
    Post Thanks / Like
    மே தின வாழ்த்துகள்
    இந்த மூன்று பேரும் சகோதரர்கள்
    இவர்கள் மூன்று பெரும் சிவாஜி ரசிகர்கள்
    இந்த காலத்தில் அன்னன் தம்பிகள் வெவ்வேறு கட்சி வெவ்வேறு நடிகரின் ரசிகர்கள் ஆக இருப்பார்கள் ஆனால் இவர்கள் மூன்று பேரும் சிவாஜி ரசிகர்கள் ஆக இருக்கிறார்கள் என்பதுதான் ஆச்சரியம்
    இதில் என்ன விசேஷம் என்றால் மூன்று போருக்கும் முன்னால் சிவாஜி என்கின்ற பெயர் சேர்த்து அழைக்கப்படுவது
    சிவாஜி என்றாலே நாட்டுப்பற்றுக்கு உதாரனம் மட்டுமல்ல குடும்ப ஒற்றுமைக்கும்
    என்பது
    இந்த மூன்று சகோதரர்கள் அதற்கு உதாரணம்
    வாழ்க சிவாஜிகள்.(சங்கர் ,சீனிவாசன் ,பாலு )
    சிவாஜிக்காக வாழ்நாளை அற்பனிப்பவர்களை வாழ்த்த வேண்டியது ஒவ்வொரு சிவாஜி ரசிகனின் கடமையாகும்



    179190993_1144103172735628_5644921218925207048_n.jpg

    Thanks Muniyandi Saminathan
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  9. #878
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    322
    Post Thanks / Like
    நன்றி விசுவாசத்திற்கு எடுத்துக்காட்டு நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.
    "சினிமாத்துறையில் நன்றி என்ற ஒன்றை லென்ஸ் வைத்து தேடினாலும் பார்க்க முடியாது. நூறு பேரில் ஒருவரிடம் நன்றி, விஸ்வாசம் இருந்தாலே பெரிய விஷயம் என்பார்கள்.
    சிவாஜி கணேசன் நடித்த முதல் திரைப்படம் 1952இல் வெளியான ‘பராசக்தி’ திரைப்படம். அந்தப் படத்தின் தயாரிப்பாளர் வேலூரைச் சேர்ந்த பி.ஏ.பெருமாள் முதலியார். அந்தப் படத்திற்கு ஃபைனாஸ் செய்தது ஏ.வி.மெய்யப்பச் செட்டியார். படத்திற்கு கலைஞர் வசனம் எழுதியதும், படம் வெளியானபோது மிகப்பெரிய வெற்றி பெற்றதும் நமக்குத் தெரிந்த விஷயம்தான். அந்த வெற்றி சிவாஜி கணேசனை மிகப்பெரிய உயரத்தில் கொண்டுபோய் வைத்ததும், அதன்மூலம் பெரிய கதாநாயகன் தமிழ்நாட்டில் உருவானதும் வரலாறு.
    அதன் பிறகு பல வருடங்கள் கடந்துவிட்டன. சிவாஜி 300 படங்களுக்கு மேலாக நடித்து, புகழ் குன்றின் உட்சத்தில் இருக்கிறார். நான் கூறும் இந்த சம்பவம் ஒரு தீபாவளி நேரத்தில் நடந்தது. இது பொம்மை பத்திரிகையில் ஆசிரியராக இருந்த என் நண்பர் வீரபத்திரன் என்னிடம் பகிர்ந்துகொண்டது. அவர் சிவாஜி கணேசனுக்கும் நெருங்கிய நண்பர். ஒருநாள் வீரபத்திரனை அழைத்த சிவாஜி, “நாளை எந்த வேலையும் வச்சுக்காதீங்க... நாம் ஓர் இடத்திற்குப் போக வேண்டும்” எனக் கூறியுள்ளார். வீரபத்திரனும் மறுநாள் காலையிலேயே சிவாஜி வீட்டிற்குச் சென்றுள்ளார். சிவாஜி வீட்டில் காலை உணவை முடித்துவிட்டு இருவரும் காரில் ஏறி அமர்கின்றனர். நாம் ஓர் இடத்திற்குப் போக வேண்டும் என்றுதான் சிவாஜி கூறினாரேயொழிய எந்த இடத்திற்குப் போகிறோம் எனக் கூறவில்லை. வீரபத்திரனுக்கும் அவரிடம் கேட்கத் தயக்கம். அதனால் எதுவும் கேட்காமல் காரில் ஏறிவிடுகிறார். கார் சென்னையைத் தாண்டுகிறது... காஞ்சிபுரத்தை தாண்டுகிறது... வீரபத்திரன் அப்போதும் கேட்கவில்லை. கடைசியாகக் கார் வேலூருக்குச் சென்று, அங்கு ஒரு வீட்டின் முன்னால் போய் நிற்கிறது. அந்த வீடு சிவாஜி கணேசனை வைத்து படம் எடுத்த பி.ஏ.பெருமாள் முதலியாருடையது. அவர் முன்னரே மரணமடைந்துவிட்டார். அவர் குடும்பம் மட்டும் அங்கே வசித்துவருகிறது. தீபாவளி வருவதால் அந்தக் குடும்பத்தினர் அனைவருக்கும் புத்தாடைகள் எடுத்துக்கொண்டு சிவாஜி கணேசன் சந்திக்க வந்துள்ளார். அந்த வருடம் மட்டுமல்ல; ஒவ்வொரு வருடமும் சிவாஜி கணேசன் இதேபோல நேரடியாக சென்று சந்திப்பாராம். அப்போது, பெருமாள் முதலியார் மனைவி காலில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து ஆசீர்வாதம் வாங்கிவிட்டுத்தான் சிவாஜி கணேசன் கிளம்புவாராம். தன்னுடைய 60 வயதிலும் அவருடைய காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கியுள்ளார்.
    பின், வேலூரில் இருந்து சென்னை திரும்புகையில் இருவரும் இதுபற்றி காரில் பேசிக்கொண்டு வந்துள்ளனர். அப்போது சிவாஜி, "இவர்தான் என்னை வச்சு ‘பராசக்தி’ படம் எடுத்தார். 2000 அடி படம் எடுத்திருந்தபோதே நான் ரொம்ப ஒல்லியா இருக்கேன்; வசனம் பேசுனா மீன் வாயைத் திறந்து பேசுவது மாதிரி இருக்கு என்றெல்லாம் சொல்லி என்னை படத்திலிருந்து நீக்க முயற்சித்தார்கள். எனக்குப் பதிலாக கே.ஆர்.ராமசாமியைக் கதாநாயகனாக வைத்து எடுக்க வேண்டும் என நினைத்தார்கள். அப்போது நான்தான் படத்தில் நடிக்க வேண்டும் என்பதில் பெருமாள் முதலியார் உறுதியாக இருந்தார். நான் இவ்வளவு பெரிய நடிகரானதற்கு காரணம் பெருமாள் முதலியார்தான். இன்று அவர் இல்லை. ஆனால், இந்தியா முழுக்க தெரிந்த நடிகராக நான் இருப்பதும், உலகெங்கும் வாழும் தமிழர்கள் மத்தியில் பிரபலமான நடிகராக இருப்பதும் அவர் போட்ட பிச்சை. அன்று பெருமாள் முதலியார் இல்லையென்றால் இன்று சிவாஜி கணேசன் இல்லை" என உருக்கமாகக் கூறியுள்ளார். சிவாஜி கணேசன் நினைத்தால் இதை யாரிடமாவது கொடுத்துவிடலாம். அப்படியெல்லாம் இல்லாமல், ஒவ்வொரு வருடமும் அவரே நேரில் சென்று அவர்களைச் சந்தித்து, வாங்கி வந்துள்ளதை அவர் கையால் கொடுத்து, அவர்களிடம் ஆசீர்வாதம் பெற்றுவருவதெல்லாம் எவ்வளவு பெரிய விஷயம்.
    அன்று இரவு 10 மணிக்கு அவர்கள் வந்த கார் வடபழனி அருகே வருகிறது. இப்போதைய கமலா தியேட்டர் அருகே உள்ள விநாயகர் கோவில் தெருவில்தான் வீரபத்திரன் வீடு உள்ளது. அவர், இங்கே நிறுத்துங்கள்... என் வீடு இங்கேதான் உள்ளது... நான் இறங்கிக்கொள்கிறேன் எனக் கூற, இந்த நேரத்தில் நடந்து போவீர்களா எனக் கேட்ட சிவாஜி, அவர் வீட்டிற்கே சென்று இறக்கிவிட்டுள்ளார். நான் முன்னரே கூறியதுதான்... சினிமாவில் நன்றி, விஸ்வாசம் என்பது சுட்டுப்போட்டால்கூட பார்க்க முடியாது. இன்றைய தலைமுறையைச் சேர்ந்த கலைஞர்கள், நடிகர்கள், நடிகைகள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் என யாராக இருந்தாலும் உங்களை அறிமுகப்படுத்தி நீங்கள் புகழ்பெறுவதற்கு மூலகாரணமாக இருந்த உன்னதமான மனிதர்களைக் கைக்கூப்பி வணங்குங்கள் - எழுத்தாளர் சுரா.

    Thanks Subbiah
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  10. #879
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    322
    Post Thanks / Like
    பட்டிக்காடா பட்டணமா? வெளியான நாள் 6/05/1972 . இன்று 49 ஆண்டுகள் நிறைவு.

    வெள்ளிவிழா கண்ட வெற்றிச்சித்திரம்.

    இதுவரை வெளிவந்த கறுப்பு வெள்ளை தமிழ் திரைப்படங்களில்,
    ஒரு கோடி ரூபாய்களுக்கு மேல் வசூல் சாதனை ஏற்படுத்தி இன்றுவரை முறியடிக்கப்படாத,
    சாதனை படமாக திகழ்கிறது பட்டிக்காடா பட்டணமா?.

    siva-492.jpg
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  11. #880
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    322
    Post Thanks / Like
    சத்யம் வெளியான நாள் 6/05/1976 . இன்று 45 ஆண்டுகள் நிறைவு.

    siva-493.jpg
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

Page 88 of 117 FirstFirst ... 3878868788899098 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •