Results 1 to 10 of 1139

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 22

Threaded View

  1. #11
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    293
    Post Thanks / Like
    கோலிவுட் சினிமா வரலாற்றில் சுமார் 40 வருடங்களில் 310 கோடிக்கும் மேலான தான தர்மங்களை செய்த ஒரே நடிகர் இவர்தான் என்று தற்போது சோஷியல் மீடியாவில் டிரெண்டாகிக் கொண்டிருக்கும் தகவல் ஒன்று ரசிகர்களின் மத்தியில் மிகவும் வைரலாக பார்க்கப்பட்டும் பேசப்பட்டும் வருகிறது...
    யார் அவர்...???
    வாருங்கள்... விரிவாக பார்க்கலாம்...
    கடந்த 40 ஆண்டுகளில் மட்டும் 310 கோடிக்கும் மேலான தான தர்மம் செய்த ஒரே நடிகர் நமது உத்தம தலைவர் நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன் அவர்கள் மட்டுமே...
    தமிழகத்தில் பல கோயில்களுக்கு யானைகளையே தானமாக வழங்கிய வள்ளல்...
    சுமார் 40 ஆண்டுகளாக மன்னன் என்ற வார்த்தைக்கு அர்த்தமாகவே வாழ்ந்த ஒரே தமிழ் நடிகரான நமது இதய தெய்வத்தை இன்றைய இளைய தலைமுறையினர் ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர்...
    ஆரம்பத்தில் மேடை நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்தவர் அதன் பிறகு 1952 ஆம் ஆண்டு பராசக்தி என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான நடிப்புச் சக்கரவர்த்திதான் சிவாஜி கணேசன் அவர்கள்...
    இவர் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தது மட்டுமின்றி தமிழில் மட்டும் 250 படங்களுக்கு மேல் கதாநாயகனாக நடித்து அசத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது...
    இப்போது வரை இளம் நடிகர்களின் இன்ஸ்பிரேஷனாக இருந்து வரும் சிவாஜி, நிஜ வாழ்க்கையில் மன்னன் என்ற வார்த்தைக்கு ஒரு உதாரணமாகவே வாழ்ந்திருக்கிறார்....
    இவர் 1953 முதல் 1993 வரை செய்திருக்கும் தான தர்மத்தினை K.V.S.மருது மோகன் என்ற சினிமா பிரபலம் ஒருவர் பல ஆண்டுகளாக ஆய்வு செய்து அம்பலப்படுத்தி இருக்கிறார். தற்போது இத்தகவல் சோஷியல் மீடியாவில் வைரலாக பரவுவது மட்டுமின்றி சிவாஜியின் இமேஜை வேற லெவலுக்கு எடுத்து சென்று இருக்கிறது...
    அத்துடன், சினிமாவிற்குள் என்ட்ரி ஆன அடுத்த வருடத்தில் தொடங்கி, சுமார் 40 வருடங்களில் சிவாஜி அவர்கள் செய்த தான தர்மங்கள் மட்டும் சுமார் 310 கோடியாம்...
    இலங்கையில் ஒரு மருத்துவமனையையே கட்டி கொடுத்து இருக்கிறார். அத்துடன் பெருந்தலைவர் காமராஜர் துவக்கி வைத்த ஊட்டச்சத்து சத்துணவு திட்டங்கள் மற்றும் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள் அறிமுகம் செய்த பல நல்ல திட்டங்களுக்கு உடனடியாக ஒரு லட்சம் ரூபாயை நன்கொடையாக கொடுத்த முதல் நடிகர் சிவாஜி தான் என்பது இன்று பலரும் அறிந்திராத சத்தியமான உண்மை...
    அதேபோல், இந்தியா பாகிஸ்தான் போர் நடைபெற்ற போதும் கூட அப்போதைய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியை சந்தித்த சிவாஜி அவர்கள் தன்னிடம் இருந்த 100 பவுன் எடையுள்ள தங்கப்பேனாவை நன்கொடையாக கொடுத்ததோடு மட்டுமின்றி அவருடைய மனைவி கமலா அம்மையார் அணிந்து சென்றிருந்த 400 பவுன் நகைகளையும் கழட்டிக் கொடுக்குமாறு கூறியிருக்கிறார் என்றால் அவருடைய கொடைத் தன்மையையும் நாட்டுப் பற்றையும் என்னவென்று சொல்வது...???
    அமெரிக்காவில் உள்ள குழந்தைகள் பூங்காவிற்கு யானைக்குட்டி ஒனறினை பரிசாக அளித்திருக்கிறார். மேலும், தமிழகத்தில் புகழ் வாய்ந்த பல கோயில்களுக்கு குறிப்பாக திருவானைக்காவல் மற்றும் தஞ்சாவூர் புண்ணைநல்லூர் மாரியம்மன் போன்ற புகழ்பெற்ற ஆலயங்களுக்கு யானைகளையே தானமாக வழங்கி இருக்கிறார்...
    அச்சமயத்தில், யானைப்பாகன் ஒருவர் சிவாஜியிடம் வந்து யானையும் தானும் சரியாக சாப்பிட முடியவில்லை என்று உதவி கேட்ட போது இரண்டு ஏக்கர் நிலத்தை வாங்கி அதை பட்டா போட்டு அந்த பாகனிடம் கொடுத்து அதில் விவசாயம் செய்து நீயும் நல்லா சாப்பிடு அத்துடன் யானையையும் பட்டினி போட்டு விடாதே என்று சொல்லி அனுப்பி இருக்கிறார்...
    தமிழகத்தில் பெருந்தலைவர் காமராஜரின் எண்ணற்ற முழுவுருவச் சிலைகளை தனது சொந்த செலவில் திறந்து வைத்திருக்கிறார்...
    கயத்தாறில் வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட இடத்தை வாங்கி அவருக்கு சிலை நிறுவி நீண்ட காலம் பராமரித்து வந்ததுடன் பின்னாளில் அந்த இடத்தை தமிழக அரசிடமே சந்தோஷமாக ஒப்படைத்தார்...
    சென்னை மெரினாவில் உள்ள திருவள்ளுவரின் சிலையை தனது சொந்த செலவில் நிறுவியதோடு மட்டுமின்றி அச்சிலைக்கு தானே முழு வடிவமும் தந்து இன்றும் வள்ளுவர் வடிவில் மெரினாவில் நின்று கொண்டிருக்கிறார்...
    குழந்தைகளின் கல்விக்காகவும் அரசு பள்ளிகளின் சீரமைப்பு பணிகளுக்காகவும் பலமுறை நன்கொடை அளித்திருக்கிறார்...
    சினிமாவில் நலிவடைந்து போன கலைஞர்கள் பலருக்கு கணக்கில் அடங்காத பல உதவிகளை செய்து அவர்களின் மனங்களில் இன்றளவும் தெய்வமாக வாழ்ந்து வருகிறார்...
    இவ்வாறு சொல்லிக் கொண்டே போகலாம்...
    செல்வம் படத்தில் வருகின்ற ''ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல'' என்ற பாடலின் அற்புதமான வரிகளைப் போலவே...
    நமது கலியுக கர்ணன் சிவாஜி அவர்கள் செய்த தான தர்மங்களை சொல்ல ஆரம்பித்தால் இந்த ஒரு நாளும் இந்த ஒரு பதிவும் நிச்சயமாக போதவே போதாது...
    ஆகவே, இந்த புத்தாண்டு முதல் நமது இதய தெய்வம் செய்த கொடைத்தன்மைகளை தனிப்பதிவாக ஆதாரமான புகைப்படங்களுடன் முகநூலில் ஒவ்வொரு நாளில் பதிவு செய்யலாம் என்று முடிவெடுத்து அதற்கு முன்னோட்டமாகவே வரலாற்று சிறப்பு வாய்ந்த இப்பதிவினை வழங்கி இருக்கிறேன்...
    இனி வரும் காலங்களில் நடிகர் திலகத்தின் கொடைத்தன்மை என்ற தலைப்பில் இது போன்ற பதிவுகள் மென்மேலும் தொடரும்...
    அவ்வாறு எண்ணிலடங்கா தான தர்மங்களை செய்த சிவாஜி அவர்கள் தன் வாழ்நாளில் ஒரு போதும் இதைப்பற்றியெல்லாம் எப்போதும் வெளிப்படுத்தியது கிடையாது...
    ஏனெனில், தான தர்மம் செய்வதென்பது ஒரு மனிதனின் தவம் என்பதை ஆணித்தரமாக நம்பியவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என்றால் அது மிகையாகாது...
    வாழ்க பெருந்தலைவர் காமராஜரின் புகழ்...
    வாழ்க உத்தமத் தலைவர் சிவாஜியின் புகழ்...


    Thanks M V Ramkumar (face book)

    siva-232.jpg

    பின்நூட்டம்

    ஆனால், அவருக்கு அதை விளம்பரம் செய்யத் தெரியாது, செய்ததுமில்லை. அவருடன் இருந்தவர்களாவது செய்திருக்கலாம், அவர்களுக்கும் தெரியவில்லை.
    ஆனால் இன்னொரு தரப்பில் அந்த நடிகரும், அவருடைய ஜால்ராக்களும், அவர் அப்போது இருந்த கட்சியும் அந்த டெக்னிக்கை நன்றாகச் செய்து பத்திரிகைகளில் செய்திகள் வரச் செய்ததுடன், அவரது படத்தில் வரும் காமெடி நடிகர்களை வைத்து அவருடைய கொடைத்தன்மையை ஸீன் பை ஸீன் புகழச் செய்து, மேலும் அவர் படத்துக்கு பாட்டெழுதும் கவிஞர்களை வைத்து வள்ளலே, வள்ளலே என்று வருகிற மாதிரி பாடல்கள் புனைய வைத்து 'கொடை வள்ளல்' பட்டம் கொடுத்து அவரைப் பிரபலமாக்கி, அதே சமயத்தில் நடிகர் திலகத்தை கஞ்சர் என்று முத்திரையும் குத்தினார்கள்.
    ஆனால் இப்போது அறிவார்ந்தோர் பலர் ஆராய்ந்து உண்மைகளை வெளிக்கொண்டு வந்ததால் நடிகர்திலகம் பற்றிய உண்மைகளை காலங்கடந்தாவது மக்கள் தெரிந்து கொண்டார்களே என்று ஒரு சிறு நிம்மதி கிட்டியது.

    m n sakthivel
    Last edited by sivaa; 28th December 2022 at 07:27 PM.
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •