Page 111 of 117 FirstFirst ... 1161101109110111112113 ... LastLast
Results 1,101 to 1,110 of 1167

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 22

  1. #1101
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    322
    Post Thanks / Like
    415526581_3019593158170674_7972179497676906239_n.jpg

    படம் சொல்லும் கதை..............
    சிவாஜி கணேசன் தன் துணைவியாரோடு தஞ்சைக்கு வருகிறார்........
    காரில் போய்க் கொண்டு இருக்கும் போது ஒரு தெரு முனையில் வண்டியை நிறுத்தச் சொல்லி கட்டளையிடுகிறார்................
    வாகனம் செல்ல முடியாத அளவுக்கு அது மிகவும் குறுகிய அளவுள்ள தெரு (சந்து). எனவே
    வண்டியிலிருந்து இறங்கி தெருவில் நடந்து செல்கிறார் தன் துணைவியாருடன்...............
    ஒரு சாதாரண குடிசை முன் நிற்கிறார்.......
    சிவாஜி வந்ததையறிந்து தெருவில் மக்களின் ஆரவாரங்கள்........
    ஏதோ சத்தம் கேட்கிறதே என எண்ணி வீட்டிற்குள் இருந்து ஒருவர் எட்டி பார்க்கிறார்......
    தன் வீட்டின் வாசலில் வந்து நிற்கும் நடிகர் திலகத்தையும் அவர் மனைவியையும் பார்த்து வார்த்தைகள் வராமல் தவிக்கிறார்.....
    கண்களில் ஆனந்தக் கண்ணீர்........
    "அண்ணே வாங்கண்ணே" என்கிறார்........
    அதற்குள் வீட்டிற்குள் இருந்து பத்து நாட்களுக்கு முன் மணமுடித்த தம்பதியினர் வருகிறார்கள்...
    அவர்கள் இருவரும் காலில் விழுந்து வணங்குகிறார்கள்....
    தம்பதி சகிதம் ஆசி வழங்குகிறார்கள்.......
    டிரைவர் இரண்டு பைகளை கொண்டு வந்து தருகிறார்...அதனை மணமக்கள் கையிலே கொடுக்கிறார் கமலாம்மாள்...........
    இரண்டொரு வார்த்தை பேசி விட்டு நகர்கிறார்கள்.......
    அப்பொழுது குடிசை வீட்டின் உரிமையாளர் நடிகர் திலகத்திடம் "அண்ணே ஏதாவது சாப்பிட்டு விட்டு போங்க" என்று சொல்கிறார்... ............
    உடனே தன் மனையாளை பார்க்கிறார்.......
    தண்ணீர் வாங்கி கைகளை அலம்பி விட்டு குனிந்து குடிசைக்குள் நுழைந்து தரையில் அமர்கிறார்கள்.............
    வீட்டில் என்ன இருக்கிறது என்று தெரியாமல் சாப்பிட அழைத்து விட்டோமே என்று பதட்டத்தில் அழைத்தவர் முழிக்க "பரவாயில்லை இருப்பதை சாப்பிடுகிறேன்" என்று சொல்லி அவர்களால் உள்ளன்போடு பரிமாறப்பட்ட பதார்த்தங்களை ரசித்து ருசித்து சாப்பிடுகிறார்கள்...................
    தன் மகனின் திருமண விழாவிற்கு தனக்கு அழைப்பிதழ் அனுப்பிய ஒரு சாதாரண ரசிகனை ஞாபகத்தில் வைத்து தஞ்சை வந்த நேரத்தில், அவர்களின் இல்லம் சென்று ஆசி வழங்கியதோடு மட்டுமில்லாமல், தரையில் அமர்ந்து சாப்பிட்டு ரசிகனின் ஆசையை நிறைவேற்றிய பாசமிகு சிவஜி கணேசனும் கமலாம்பாளும் ....................
    (இந்த ரசிகர் ஒரு சலவை தொழிலாளி என்று கூடுதல் தகவல் அளிக்கிறார்....மதிப்புக்குரிய கொடிக்குறிச்சி முத்தையா அவர்கள்)
    THANKS TO
    இதயக்கனி எஸ். விஜயன்

    Thanks Devakottai Dolphin AR Ramanathan (nadigarthilagam fans)
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     
  3. #1102
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    322
    Post Thanks / Like
    425703371_391466993472326_1782758851618302999_n.jpg

    சிவாஜி அவர்கள் திமுகவிற்காக
    பட்டி தொட்டியெங்கும் பிரச்சாரம் செய்து,
    நிதி வசூலித்து கொடுத்து, கட்சி வளர்ச்சிக்காக உழைக்கிறார்.
    சிவாஜி செல்லும் இடமெல்லாம்,
    மக்கள் வெள்ளமென திரண்டனர். சிவாஜியின் பேச்சை கேட்க இளைஞர்கள் தவம் கிடந்தனர்.
    அதன்பிறகு, 1956ல் நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்ட திமுக 15 தொகுதிகளில் வெற்றி பெற்றது,
    1962 ல் நடைபெற்ற தேர்தலில், திமுக 50 தொகுதிகளில் வெற்றி பெறுகிறது,
    ஆனாலும், முதல்வர் வேட்பாளர், அண்ணாதுரை அவர்களோ, அவரது சொந்த மாவட்டமான காஞ்சிபுரத்தில் தோல்வியடைந்தார்.
    முதன்முதலாக, திமுக ஆட்சியை கைப்பற்றியது
    1967ல், மேலும், முதல்வர் வேட்பாளர் அண்ணாதுரை அவர்கள் சென்னையில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
    1949ல் ஆரம்பித்த திமுக ஆட்சியை பிடிக்க
    18 ஆண்டுகள் ஆனது...
    ஆனால், சிவாஜி மட்டும் அரசியலில் தோற்றார், என்று பேசும் மேதாவிகளே,
    சிவாஜி அவர்கள் மட்டும், கட்சி ஆரம்பித்து, 6 மாத காலத்தில் நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு வென்று, ஆட்சியை பிடிக்க வேண்டும்...
    இது என்ன நியாயம்.
    சிவாஜி மட்டும் தான் அரசியலில் தோற்றார் என்பது போல் ஒரு மாயையை, இன்றைய அரசியல்வாதிகளும்,. மேலும், ஊடகங்களும் தவறான தகவல்களை மக்களிடத்தில் பரப்புகின்றனர்.

    Thanks Thilak Ganesan ( சிவாஜி சாம்ராஜ்ஜியம் Fb)
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  4. #1103
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    322
    Post Thanks / Like
    Attachment 6039

    ஊருக்கு இளைச்சவன் பிள்ளையார் கோவில் ஆண்டின்னு சொல்வார்கள். நடிகர்களில் பலர் அரசியல் சாக்கடையில் குதித்து இருக்கிறார்கள். அனைவருக்கும் ஒரு இலக்கு. தான் முதல்வராக வேண்டும். விதிவிலக்காக தனக்கென்று இல்லாமல் மக்கள் சேவை ஒன்றே இலக்காக எனக்கு தெரிந்து இறங்கியவர் சிவாஜி கணேசன் ஒருவரே. சிவாஜி கணேசனுக்கு இந்நிலை ஏற்பட்டதற்கு அவரை சுற்றி அன்றிருந்த ஒரு சிலரே காரணம். பணத்தாசை இல்லாமல் திரை உலகிலேயே பயணித்த ஒரே நடிகர் இவராகத்தான் இருக்க முடியும்.
    அரசியல் மேடைகளில் சிவாஜி கணேசன் பேசியதை கொஞ்சம் நினைவு கூறுவோம்.
    ' என்னை எதிர்த்து போட்டியிடும் தம்பி துரை சந்திரசேகர் பண்புடையவர். என்னிடம் மரியாதையுடன்தான் பேசுகிறார். என்னை எதிர்த்து போட்டியிட வேண்டும் என்பது திமுக எடுத்த முடிவு. தம்பியை குறை கூறுவதில் நியாயமில்லை.'
    ' என்னை எனது ஆருயிர் அண்ணன் கேட்டுக்கொண்டதற்கு இணங்க நான் அரசியலில் தாயை பிரிந்து நிற்க வேண்டியதாயிற்று. நானும் காங்கிரஸ் இயக்கமும் வேறு வேறாக இருக்க முடியுமா ? இன்றைய நிலை அதுதான். தேவையற்ற கூட்டுக்கு என்னையும் தூண்டியது, என்னுடைய தம்பிகளை கேவலப்படுத்துவதாக நான் எண்ணி இந்த கட்சியை துவங்கினேன். பாதை தெளிவாக தெரிகிறது. பயணம் துவங்கி இருக்கிறேன்.'
    ' ஜெயலலிதாவை நான் எதிர்ப்பதாக நினைக்காதீர்கள். அரசியலில் அவர் நிதானமிழந்து செயல்பட துவங்கி இருக்கிறார். இன்றுவரை அவர் நான் மதிப்பவர்தான். அரசியல் நிலைப்பாடு வேறு.'
    ' ஏன் கண்கள் கலங்கவேண்டும் எனக்கு. ? கண்ணியத்தை எனக்கு கற்றுக்கொடுத்த அந்த தெய்வம் இல்லையே. எனக்கு என்ன தெரியும் ? நிலைமை சரியில்லை என்பது மட்டும் புரிகிறது. நான் என்ன செய்ய வேண்டும் என்பதை கூற பெரும் தலைவர் இல்லையே.'
    நேரடியாகவே கேட்கிறேன். பொது அரசியல் மேடையில் இத்தனை கண்ணியத்துடன் இயங்கிய ஒரு தலைவரை அடையாளம் காட்ட முடியுமா ? அந்த தோற்ற கட்சிக்குதான் என்றென்றும் நான் தலைவணங்குவேன். விரும்பியது சிவாஜியின் வெற்றியை அல்ல. அவருடைய அபிலாஷையை புரிந்துகொள்ளவேண்டியவர்கள் அன்று புரிந்து நடந்து கொண்டிருக்க வேண்டும் என்பது மட்டுமே. அவருக்கு அன்று முதல் துணைநின்ற அனைத்து உள்ளங்களுக்கும் நன்றியுடன் கூடிய வாழ்த்துக்கள்.
    நன்றி.

    Thanks Thilak Ganesan ( சிவாஜி சாம்ராஜ்ஜியம் Fb)
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  5. #1104
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    322
    Post Thanks / Like
    அரசியல் வரலாறு தெரியாமல், சிவாஜி - யை விமர்சிப்பவரே....
    உங்களுக்கெல்லாம் அரிப்பெடுத்தால் சொறிவதற்கு
    என் தலைவன் சிவாஜி - யின் சாமானதான் வேண்டுமா...??
    1949, செப்படம்பர் 18ம் தேதி திமுக, அண்ணாதுரை தலைமையில் உதயமாகிறது.
    1952ல் அதாவது, பராசக்தி வருவதற்கு முன் நடைபெற்ற தேர்தலில் திமுக போட்டியிடவில்லை.
    பராசக்தி திரைப்படம் வெளிவந்ததற்கு பின்,
    சிவாஜி அவர்கள் திமுகவிற்காக
    பட்டி தொட்டியெங்கும் பிரச்சாரம் செய்து,
    நிதி வசூலித்து கொடுத்து, கட்சி வளர்ச்சிக்காக உழைக்கிறார்.
    சிவாஜி செல்லும் இடமெல்லாம்,
    மக்கள் வெள்ளமென திரண்டனர். சிவாஜியின் பேச்சை கேட்க இளைஞர்கள் தவம் கிடந்தனர்.
    அதன்பிறகு, 1956ல் நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்ட திமுக 15 தொகுதிகளில் வெற்றி பெற்றது,
    1962 ல் நடைபெற்ற தேர்தலில், திமுக 50 தொகுதிகளில் வெற்றி பெறுகிறது,
    ஆனாலும், முதல்வர் வேட்பாளர், அண்ணாதுரை அவர்களோ, அவரது சொந்த மாவட்டமான காஞ்சிபுரத்தில் தோல்வியடைந்தார்.
    முதன்முதலாக, 1967-ல் திமுக ஆட்சியை கைப்பற்றியது ,
    அண்ணாதுரை வெற்றி பெறவில்லை ...!! ஆனால்
    M L C - யாகி முதல்வர் ஆனார்.
    இப்படி .....
    1949ல் ஆரம்பித்த திமுக ஆட்சியை பிடிக்க
    18 ஆண்டுகள் ஆனது...
    ஆனால், சிவாஜி மட்டும் அரசியலில் தோற்றார், என்று பேசும் மேதாவிகளே,
    சிவாஜி அவர்கள் மட்டும், கட்சி ஆரம்பித்து, 6 மாத காலத்தில் நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு வென்று, ஆட்சியை பிடிக்க வேண்டும்...
    இது என்ன நியாயம்..???
    சிவாஜி மட்டும் தான் அரசியலில் தோற்றார் என்பது போல் ஒரு மாயையை, இன்றைய அரசியல்வாதிகளும்,. மேலும், ஊடகங்களும் தவறான தகவல்களை மக்களிடத்தில் பரப்புகின்றனர்.
    Cl Joe

    Thanks Thilak Ganesan ( சிவாஜி சாம்ராஜ்ஜியம் Fb)
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  6. #1105
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    322
    Post Thanks / Like
    23/02/2024 முதல் சென்னை ஆலபுர்ட் அரங்கில்
    வெற்றி விஜயம் வசந்த மாளிகை.

    428632664_1898907113878908_2724790961852489488_n.jpg

    409053347_1898852143884405_2897246447323254400_n.jpg

    422719792_3587762551474204_2936297802911542081_n.jpg

    428378313_1895775247525428_6931088847354088734_n.jpg
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  7. #1106
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    322
    Post Thanks / Like
    தித்திக்கும் செய்தி.

    422753158_3590012934582499_1443618255237508291_n.jpg
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  8. #1107
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    322
    Post Thanks / Like
    23/02/2024 சென்னை ஆல்பர்ட் அரங்கில் திரையிடப்பட்ட
    வசந்த மாளிகை சின்ன ஜமீன்தாரை தரிசிக்க வந்த மக்கள் கூட்டம்.

    417556993_426401293243581_6909878202050235554_n.jpg

    417487108_426401266576917_8101961492770137870_n.jpg

    418426466_426401083243602_2042377883547972471_n.jpg

    419541901_426401153243595_1133796437562060799_n.jpg

    418151050_426401223243588_2659841609817306601_n.jpg
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  9. #1108
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    322
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  10. #1109
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    322
    Post Thanks / Like
    வசந்த மாளிகை இரண்டாவது வாரம்....

    430234522_3594145154169277_8608253185239167244_n.jpg
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  11. #1110
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    322
    Post Thanks / Like
    வாராவாரம் ஆரவாரம்!
    ஆனந்தமான இரண்டாம் வாரம்!!

    ஆனந்தம் நீடிக்கும் இரண்டாம் வாரம்!
    நாளை முதல் (02.03.2024)
    #திருச்சி_பேலஸ் (தினசரி 4 காட்சிகள்)

    429665226_1902898123479807_5250106657082994675_n.jpg
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •