.
Quote Originally Posted by Sudhaama
..
. இறைவன் கூறாது குறிப்பு-உணர்த்தும் செய்தி.!!!

.ஏ.! மனிதா.!! வாழ கற்றுக்கொள்.!!

.. இதோ ஒரு அனுபவ-பாடம்.!!!


Quote Originally Posted by app_engine
[tscii]சொப்பன வாழ்க்கை என்ற தலைப்பில் உள்ள கட்டுரையிலிருந்து (மேலே சொன்ன குமுதம் லிங்க்):

==============
அந்த வீட்டுக்குள் நுழைந்தபோது `எப்படி வாழ்ந்த குடும்பம்' என்று ஒரு நிமிடம் உடம்பை உலுக்கிப் போட்டது.

சென்னை சூளைமேட்டில், தெருக் கோடியில் ஒரு பழைய வீட்டின் மாடியில் ஒதுக்குப்புறமாக இருக்கும் போர்ஷனில்தான் தமிழ்த்திரை மற்றும் இசையுலகின் ஏகபோக சக்கரவர்த்தியாக ஒரு காலத்தில் ராஜாங்கம் நடத்திய எம்.கே. தியாகராஜ பாகவதரின் மனைவி, வாழ்க்கை யோடு போராடிக் கொண்டிருக்கிறார்!

..................

இப்போதெல்லாம் சொப்பன வாழ்வையும், ஜெய கிருஷ்ணா முகுந்தாவை யும் கேட்கப்பிடிக்கவில்லை!.
===========
Very many Thanks Dear "app_engine"

Sudhaama.
.
சொப்பன வாழ்வில்.! மகிழ்ந்து.!!

...அறிவு-இழந்து ஆழ்-நரகில் உழல்வாரே!.. மாந்தர்.! அந்தோ.!! விந்தை இதே.!!

...தனது வாழ்-நாளெல்லாம் பாழ் செய்வார்...!!


அன்பர்களே.!

நம் யாவர்க்குமே வாழ்வில் ஒரு பாடமாக பயன்பட-கூடும் என்ற அன்பார்ந்த நோக்கத்திலே... இசையோடு கலந்த சில தகவல்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்... இதோ.

ஏற்கனவே பத்திரிகைகளில் அக்காலத்தில் வெளி-வந்த தகவல்கள்... சான்றோரின் கருத்துக்கள், அபிப்ராயங்கள் (Public Opinions) இவை.

ஏழிசை மன்னர் திருவாளர் எம்.கே.டியுடன் நான் நேரில் பழகியவன்.!

...அவர் சீரிய நற்பண்பாளர்... கருணை மிகு கொடையாளர்.! குணத்தில் தங்கமோ தங்கம்.!! அன்பு மேலோங்கிய இன்முகத்தவர்.!

காண்போர் எவரும்... உன்னை கண்டு மயங்காத பேர்கள் உண்டோ.? .. என்னலாம்படி கவர்ச்சி மிக்கவர்.

மிக உயர்ந்த தர்ம-சீலன் கர்ணனும்... பிற்காலத்தில் தடம்-புரண்டு இழி- குணத்தாலும் தெய்வ- தர்மத்திற்கு மாறான கொள்கையாலும் கெட்டான்...

விளைவாய் புகழ் இழந்து இழிவு கொண்டான்... அவனது தாயும் தந்தையும் தெய்வங்களும் கூட (!)... அவனை கைவிட்டனர்... பரிதாபத்திற்கு உரிய பேதை... என்பது போன்ற ஒரு வரலாறு இது.!

தமிழ் கூறும் நல்லுலகம் என்றென்றுமே மறக்கவொண்ணா தேவ-கான மாமன்னர் திரு எம்.கே. தியாகராஜ பாகவதரை நினைத்தால் இன்றும்... எனக்கு அடக்க-மாட்டா கண்ணீர் பெருகுகிறது.

...ஆம். அவரை நான் முதன் முதலாக சந்தித்து... இன்றைக்கு சுமார் 70 ஆண்டுகள் ஆன பின்பும் கூட.!!

காரணம் அவரது இசை வசந்த மணம் வீசும் இனிய கானம் மட்டும் அல்ல. இசை-திறமை மட்டும் அல்ல.

இந்திர-ராஜனாய் உலாவி வந்த அவரது வாழ்க்கையில் பேரிடி... அவர் மீது சாட்டப்பட்ட கொலை-வழக்கு.!

சுவர்க்க போகத்தோடு புவியுலகில் என் உடல் தனில் ஒரு அங்கமும் தங்க-நகை பூணாது இருக்கலாமோ.? என்று கருதி எப்போதும் சுமார் 700 சவரன் பொன் நகை அணிந்து அங்கமெல்லாம் தங்கமாக... நடமாடும் நகைக்-கடையாக மிடுக்குடன் உலாவி வந்த பெரும் கோடீசுவர செல்வந்தர்....

...கோடி கணக்கில் இருந்த சொத்துக்கள் அனைத்தையும் இழந்து சுகங்களையும், மானம் கௌரவத்தையும் அநியாயமாக பறிகொடுத்து சிறையில் வாடியபின்...

...ஐயம் திரிபற நிரூபணம் ஆகியது... எதிரியரின் சதி-திட்டத்தால் தொடுக்கப்பட்ட வீண் அவதூறு.! பழி.! அவமானம்.!!!

சுமார் மூன்று ஆண்டுகள் கடுமையான போராட்டங்களுக்கு பின்னர் நிரபராதி என்ற தீர்ப்பு கிட்டி விடுதலையானார்.

புதுவாழ்வு துவக்கினார். பின்னும் அவரது விதி விடாது துரத்தி துரத்தி... அவரை குடும்பத்தோடு அதள பாதாளத்திலேயே தள்ளி விட்டது...!

மேலும் வாழ்க்கையையே ஆழ்-நரகம் ஆக்கிவிட்டது. ஏன்.?

உன்னையல்லால் ஒரு துரும்பு அசையுமோ.? ... என்று கடவுளை உளமார நம்பிய தீவிர பக்தரை இறைவனும் கைவிட்டானா.?.. அவர் வணங்கி வேண்டிய எல்லா கடவுள்களுமே கை- கொடுக்கவில்லையா.?

உலகில் எவர் ஆயினும்... மகா-பாரத கர்ணனின் வரலாற்றையும் அந்த கொடை-வள்ளல் குண-சீலனது பரிதாப முடிவையும் கேட்டு... ஒரு சொட்டு கண்ணீராவது சிந்துவர்...

...அவனது வாழ்க்கை-தோல்விக்கும் பரிதாப முடிவுக்கும் அவனே தான் முழு காரணம்... என்று தெரிந்த பின்பும் கூட.!..

ஆம். அந்த தர்ம-சீலனை, நற்குண- நல்லானை, கொடைக்கு இலக்கண-மாந்தனை... இறுதி காலத்தில் அனைவருமே கைவிட்டனர்... தாயும் தந்தையும் தெய்வமே கூட எதிரியாகி சதி செய்தனர்... இறைவனும் தன் மீது பாரம் ஏற்றுக்கொண்டு... அவனது சோக- முடிவுக்கு காரணம் ஆனான்.!

ஏன்.?. சேரத்-தகாத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தவன்... வாழ்-நெறி அறியாது... கீழ்-வெறி தலைக்கு- ஏறிய பேதை அவன்....

...எவ்வளவு உயர் சீலனும் அடிக்கீழ் தாழ்ந்து இழிந்து வீழ காரணம் ஆவது எது என்ற கேள்விக்கு விடையே கர்ணனது வாழ்க்கை சரித்திரம்...

...தன்னை தானே நரகில் ஆழ்த்திக்-கொண்ட அறியாமை.. பேதைமை.!

அதே போல் எம்.கே.டியின் வாழ்க்கை முடிவுமே.!...

ஆம். அவர் கொண்ட அளவுக்கு-மீறிய கௌரவ-பிரச்சினையால் தவறான முடிவுகள் எடுத்தார்.

அது மட்டும்-அல்ல. பணம் தந்த போதையால் தன்னை தானே குணத்தாலும் கொள்கையாலும் தாழ்த்திக்கொண்டு... அகந்தையால் நரகத்திற்கு பாதை வகுத்துக்கொண்டார் அந்த பேதையான மேதை நல்லார்...

...விளைவு.? கடைசி காலத்தில் நெருங்கிய நண்பர்களும் உறவினர்களும்... அவருக்கு பெரிதும் நன்றிக்-கடன் பட்ட பலப்பல கனவான்களும் (!) கூட... அவரை முற்றிலும் கைவிட்டு அனாதை ஆக்கினர்....

தெய்வமே கூட இடைக்காலத்தில் ஓரளவுக்கு ஆசை காட்டி அவரை ஏமாற்றிவிட்டது.! ஏன்.? இதென்ன இறைவனின் அற்புத லீலைகளில் ஒன்றா.?

ஓர் ஆறுதல்.! அவர் சுமந்த பழியும் தண்டனையும் ஓர் நிரபராதிக்கு வழங்கப்பட்ட கொடுமை.!, செய்யாத கொலைக்கு தண்டனை என்று உலகோர் அறிய முடிந்தது... கோர்ட் தீர்ப்பின் மூலமும்.. நிகழ்சிகளின் விவரங்கள் மூலமும்.!... ஆம் பெரிதும் வியப்பிற்கு உரிய செய்தி அது.!!

ஆக, இறுதியில் நீதி வென்றது. கடவுள் ஒருவன் "நான் இருக்கிறேன்" என்று மீண்டும் உணர்த்தினான்.

அதற்கு முன்பு ஏன் கடவுளே எதிரி ஆனான்.?... கர்ணனுக்கு நிகழ்ந்தது போல.?

கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரமா.? ஞான உதயமா.?

தன் வினை தன்னை சுடும்.!! ஆம்.

(1) மித மிஞ்சிய பணத்தால் மனிதன் பேயாட்டம் போட்டால்.?.. அகந்தை மேலோங்கி நடந்து-கொண்டால்.?... ஒழுக்கம் தவறி குடி-போதையில் பிறரை ஏளனம் செய்தால்.?... அதிகார செல்வாக்கு மிக்கோர் செல்வந்தர்களையும் கூட பகைத்துக்-கொண்டால்.?

...அற-நெறி மீறிய செயல்களை பின்பற்றினால்.?.. அற-நெறி மீறிய செயல்களா.? என்ன.? எப்படி?

ஆரம்பகாலத்தில் மிக மிக தர்ம-நெறி பிறழாது வாழ்ந்தவர் தான்... பிற்காலத்தில் தடம் புரண்டார்.

(2) தன்னை நாடி வருகிறார்கள் செல்வந்தர் வீட்டு மகளிர்.. அழகு ரதிகள்.. கணவனுக்கு எதிர்த்து வாதாடி ஓடி வந்தும்... கன்னிப்-பெண்கள் பெற்றோர்க்கு தெரிந்த பின்னும் திருட்டுத்தனமாக... படுக்கைக்கு வந்தால்.? அத்தகைய மாதர்களோடு கள்ள-உறவு கொள்ளலாமா.?...

..."ஆகா.! என்னே எனது அழகும் தகுதியும்" என்று இறுமாப்பு கொள்ளலாமா.? ஒரு புறம் அருள்-மாந்தனாய் பொருள்-வேந்தனாய்... அற-நெறி வழுவா பக்தனாகவும் வெளியே காட்டிக்கொண்டு மறுபுறம் இருள்-உறவா.? அதர்ம கொடுமையா.?

(3) பத்து விரல்களுக்கும் மோதிரம் போட்டுக்கொள்ள வேண்டும் என்ற பேராசையால்... எந்த சக்கரவர்த்தியுமே அணியாத வகையில்... ராஜன் மகாராஜனாய்... செல்வந்தர் எவருமே கொள்ளாத அளவுக்கு அணிந்து கொண்டார்...

...அதில் ஒரு பெரும் தோஷம் குற்றம் அவர் செய்தது... கட்டை-விரலுக்கும் மோதிரம் அணிந்தது தான். ஆம். கட்டை விரலில் மோதிரம் அணியக்கூடாது என்பது மரபு.. அதிலும் வைர மோதிரம் கூடவே கூடாது. அப்படி அணிந்தால் எவ்வளவு உயரிய தர்மவான் நல்லவனையும் திமிர் பிடித்தவனாக.. ஆணவம் மேலிட குருட்டாம்-போக்கான தீர்மானங்களும் செய்ய- வைத்து விளையாடும்... ஏனெனில் வைரம் என்னும் சுக்கிர கிரக-ரத்தினம் அவ்வளவு சக்தி வாய்ந்தது... விரலுக்கு தக்க பலன் தருவது. மாறினால் மீறிவிடும்.

சிலப்பதிகார கண்ணகி அறியாமையால் சிறு வயதில் ஓர் தவறு செய்தாள்.. காலில் தங்க-சிலம்பு அணிந்தாள்...

தர்ம சாஸ்திரப்படி... மக்களில் எவ்வளவு பெரிய செல்வந்தரே ஆயினும் எவருமே... இடுப்புக்கு கீழே தங்க அணிகலன் அணியக்கூடாது. அவ்வாறு அணிவது லட்சுமி தேவியை காலால் மிதிப்பதற்கு சமம்.

அந்த சாஸ்திர-விதியை மீறியதால் அந்த அணிகலனே அவளுக்கு வினை ஆயிற்று.... என்னும் உண்மை இங்கு நினைவு கூறற்பாலது.

(4) நண்பர் ஒருவரது தீதான அறிவுரையின் பேரில் ஒரு பெரும் கனமான வெள்ளி டிபன்-கேரியர் செய்து கொண்டார்... திருவாரூர் தியாகேசர் கோயில் கோபுர வடிவிலே... பல அடுக்கு டப்பாக்களுடன்.! இது மற்றும் ஓர் பெருத்த அபச்சாரம். தெய்வ குற்றம்... இதிலிருந்து தான் அவருக்கு சரிவு துவக்கம்.

உண்மையில் இவற்றை எல்லாம் என்னால் நம்பவே முடியவில்லை.!... அடக்கம் பண்பு மேலோங்கியிருந்த அவரா இப்படி மாறினார் என்று வியக்கிறேன்.!

தர்ம-நெறியும் வழுவி... ஒழுக்கம் தவறி... ஆணவம் தலைக்கு-ஏறியதா.... என் மதிப்பிற்குரிய பாகவதருக்கு என்று எண்ணி எண்ணி விழிக்கிறேன்.!

ஆங்கிலத்தில் ஒரு பழமொழி... The Victor who could reach the Pinnacle... should not Jump there.! (Because he will miserably slip down)... மலை- குன்றின் மீது ஏறி... உச்சியை எட்டி-விட்ட வெற்றியாளன் அங்கே குதிக்கக்-கூடாது என்பது பொருள்.. ஏனெனில் குதித்தால் சரிவு ஒன்றே தான் கதி.

எம்.கே.டியின் அமர-கானங்கள் சற்றும் அலுப்பு தட்டாதவை.... கவலையை தீர்ப்பது .

கடைசி காலத்தில் உலகறிய கூறிக்கொண்டார்... "என்னைப்-போல இதுவரை 'ஓகோ' என்று வாழ்ந்தவரும் இல்லை.. 'ஐயோ' என்று வீழ்ந்தவரும் இல்லை. இனி இருக்கப்-போவதும் இல்லை".... என்று

அனைத்திலும் பரிதாபம்... கொடும் ஏழ்மையோடு கண்-பார்வையும் இழந்து பிறர் துணையில் தான் அந்த மகா-ராஜன் நடமாடவே இயன்றது என்னும் அவல- நிலை தான்

ரசிகர்களின் மனங்களில் இன்றும் நீங்காது உறைந்த... அந்த மாமன்னனின் உச்சாணி புகழும்... பின்னர் அவரது பரிதாப வாழ்க்கை- சரிவும்.!... சந்திர-சூரியர் வாழும் காலம் வரை... பிற்காலத்தையவருக்கு என்றென்றும் மறக்கவொண்ணா ஓர் வாழ்க்கை- பாடம்.!!!

ஆம்.! ...http://<b>மானிட ஜன்மம் மீண்டும் வந்த...;்.!</b>

எவராயினுமே... தத்தமது வாழ்வு-வரம்பு உணர்ந்து நீந்தினால்...

...அலை-கடல் வாழ்க்கையில் எல்லாம் இன்பமே.!!!
.
.