-
15th September 2008, 01:25 PM
#1
Sivajiyin Sadhanai Sigarangal by Murali Srinivas
வரும் அக்டோபர் 1 நடிகர் திலகத்தின் 80-வது பிறந்த நாள் என்பது அனைவரும் அறிந்த செய்தி. அதை முன்னிட்டு நடிகர் திலகத்தின் சாதனைகள் சிலவற்றை இங்கே தொட்டு காட்ட விரும்புகிறேன். இங்கே அனேகமாக அவரது நடிப்பாற்றலை பற்றி மட்டுமே அதிகமாக பேசியிருக்கிறோம். இது அதிலிருந்து சற்று மாறுபட்டு அவரது சாதனைகளை பற்றிய தகவல்கள் இடம் பெறும்.
முதலில் பராசக்தி.
ஜோ,
1952 -ம ஆண்டு பற்றிய ஒரு தகவல் கேட்டிருந்தீர்கள். இதன் மூலம் அதற்கு ஒரு பதிலும் கிடைக்கும்.
அன்புடன்
-
15th September 2008 01:25 PM
# ADS
Circuit advertisement
-
15th September 2008, 05:25 PM
#2
பராசக்தி
1. நடிகர் திலகத்தின் முதல் படமே தமிழ்நாட்டை கலக்கியது. முதல் படமே அது வரை தமிழ் திரையுலகம் கண்டிராத ஒரு சாதனையை நிகழ்த்தியது, ஆம் அந்த படம் 62 சென்டர்களில் 50 நாட்களை கடந்தது. அதற்கு முன் எந்த படமும் அது போன்ற ஒரு சாதனையை புரியவில்லை.
2. அது போல முதல் படமே தமிழகத்தில் 7 திரை அரங்கங்களில் 100 நாட்களை கடந்து ஓடியது. அவை
சென்னை - பாரகன், பாரத், அசோக்.
மதுரை - தங்கம் (ஆசியாவிலேயே மிக பெரிய திரை அரங்கம்) -112 நாட்கள்.
அங்கிருந்து ஷிப்ட் செய்யப்பட்டு மதுரை - சிட்டி சினிமாவில் 126 நாட்கள்.
கோவை - ஸ்ரீ முருகன்
சேலம் - பாலஸ்
திருச்சி - வெலிங்டன்
3. முதல் படமே வெள்ளி விழாவை தாண்டி 200 நாட்களை கடந்தது.
திருச்சி - வெலிங்டன் - 245 நாட்கள்
4.முதல் படமே வெளி மாநிலத்தில் - 100 நாட்கள்
பெங்களூர் - கீதா, சுபர்ஸ்ரீ அரங்கங்கள் (பெங்களூரில் இதுதான் 100 நாட்களை கடந்த முதல் தமிழ் படம்).
5. முதல் படமே வெளி நாட்டில் ( இலங்கை) வெள்ளி விழாவை தாண்டியது.
கொழும்பு - மைலன் - 294 நாட்கள்
யாழ்பாணம் - வெலிங்டன் - 200 நாட்கள்
6. முதல் முதலாக பராசக்தி படத்தில் தான் டைட்டில் பாடல் வந்தது.
7. முதன் முதலாக பராசக்தியின் வசனம் தான் இசை தட்டாக வெளி வந்தது. விற்பனையில் புதிய சாதனையும் படைத்தது.
8. 16 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் 1968-ல் பராசக்தி வெளியான போது
சென்னை - மகாராஜாவில் - 110 நாட்கள். அங்கிருந்து ஷிப்டிங்கில் 175 நாட்களை கடந்தது.
மதுரை -ஸ்ரீதேவியில் - 49 நாட்கள், ஷிப்டிங்கில் -73 நாட்கள்.
அதே 1952-ம ஆண்டில் நடிகர் திலகம் நடித்த இரண்டாவது படமான பணம் வெளியானது. இதில் சில "முதல்கள்"
என்.எஸ். கிருஷ்ணன் இயக்கிய முதல் படம்
மெல்லிசை மன்னர்கள் முதன் முதலில் இசையமைத்த படம்
தமிழ் திரை உலகில் அதிக படங்களில் ஜோடியாக நடித்த நடிகர் திலகம் - நாட்டிய பேரொளியும் இணைந்து நடித்த முதல் படம்.
(தொடரும்)
அன்புடன்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
16th September 2008, 11:45 PM
#3
சிவாஜியின் சாதனை சிகரங்கள்
தொடர்ச்சி
வருடம் - 1953
1. முதன் முதலாக நடிகர் திலகம் வேற்று மொழி படத்தில் நடித்தது இந்த வருடம் தான். படம் பரதேசி. மொழி தெலுங்கு.
2. நடிகர் திலகத்தின் மனங்கவர்ந்த இயக்குனர் எல்.வி.பிரசாத் முதன் முதலாக நடிகர் திலகத்தை இயக்கியதும் இந்த படத்தில் தான்.
3. இதே வருடம் தான் எல்.வி. பிரசாத் முதன் முறையாக நடிகர் திலகத்தை தமிழிலும் இயக்கினார். படம் - பூங்கோதை.
4. நடிகர் திலகத்தின் நெருங்கிய நண்பர் ஏ.என்.ஆர் (ANR), நடிகர் திலகத்தோடு இணைந்து முதன் முதலாக நடித்ததும் பரதேசி படத்தில் தான்.
5. முதன் முதலாக நடிகர் திலகம் ஆன்டி ஹீரோ (Anti -Hero) ரோலில் நடித்ததும், கதாநாயகன் வில்லனாக நடித்தால் இமேஜ் போய் விடும் என்பதை உடைத்ததும் இந்த வருடத்தில் தான். படம் - திரும்பிப்பார்.
6. முதன் முதலாக தமிழ் படங்களுக்கு டிரைலர் காண்பிக்கப்பட்டதும் திரும்பிப்பார் படத்திற்கு தான்.
7. முதன் முதலாக ஓரங்க நாடகங்கள் திரைப்படங்களில் இணைக்கப்பட ஆரம்பித்ததும் நடிகர் திலகத்தின் படத்திலிருந்து தான். படம்- அன்பு. நாடகம் - ஒத்தல்லோ.
8. ஓரங்க நாடகங்கள் இணைக்கப்பட்ட நடிகர் திலகத்தின் படங்கள் - 34
9. முதன் முதலாக ஸ்லோ மோஷன் (slow motion) டெக்னிக் பயன்படுத்தப்பட்டது நடிகர் திலகத்தின் படத்திற்கு தான். படம் - கண்கள்.
(சாதனைகள் தொடரும்)
அன்புடன்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
17th September 2008, 11:50 PM
#4
சிவாஜியின் சாதனை சிகரங்கள்
தொடர்ச்சி.
வருடம் - 1954
1. முதன் முதலாக ஒரே படம் மூன்று மொழிகளில் எடுக்கப்பட்டு அவை மூன்றும் ஒரே வருடம் வெளியானதும் நடிகர் திலகத்தின் படம் தான். படம் - மனோகரா.
2. மதுரை - ஸ்ரீதேவி திரையரங்கில் முதன் முதலாக அதிக நாட்கள் ஓடிய படம் மனோகரா. ஓடிய நாட்கள் - 156
3. முதன் முதலாக பாடல்கள் இல்லாமல் வெளி வந்த தமிழ் படம் - அந்த நாள்.
4. முதன் முதலாக கதாநாயகன் முதற் காட்சியிலே இறந்து விடுவது போல அமைந்ததும் அந்த நாள் படத்தில் தான்.
5. முதன் முதலாக வேறு தயாரிப்பாளருடன் கூட்டு சேராமல் ஏ.வி. எம்.நிறுவனம் தனியாக தயாரித்த படம் அந்த நாள்.
6. முதன் முதலாக டி.எம்.எஸ். நடிகர் திலகத்திற்கு பின்னணி பாடியது இந்த வருடத்தில் தான். படம் - தூக்கு தூக்கி.
7. முதன் முதலாக ஆன்டி சென்டிமென்ட் கதை தமிழில் திரைப்படமாக வந்ததும் நடிகர் திலகத்தின் படம் தான். படம் - எதிர்பாராதது.
8. சென்னை சினிமா ரசிகர்கள் சங்கம் துவங்கப்பட்ட முதல் வருடத்திலேயே முதன் முதலாக பரிசு பெற்ற படங்கள் - அந்த நாள் மற்றும் தூக்கு தூக்கி.
9. முதன் முதலாக இந்திய அரசாங்கத்தின் திரைப்பட விருது குழுவின் நற்சான்றிதழ் பெற்ற தமிழ் படங்கள் - அந்த நாள் & எதிர்பாராதது.
(சாதனைகள் தொடரும்)
அன்புடன்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
19th September 2008, 12:42 AM
#5
சிவாஜியின் சாதனை சிகரங்கள்
தொடர்ச்சி
வருடம் - 1954 & 1955
1. முதன் முதலாக தமிழில் ஒரே நடிகரின் இரண்டு திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியானது நடிகர் திலகத்திற்கு தான்.
படங்கள் - அந்த நாள் & கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி.
வெளியான நாள் - 13.04.1954.
2. முதன் முதலாக மதுரையில் ஒரே படம் இரண்டு தியேட்டரில் திரையிடப்பட்டது நடிகர் திலகத்தின் படம் தான்.
படம் - கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி.
திரையிடப்பட்ட அரங்குகள் - தங்கம் & நியூசினிமா.
3. அதே நாளில் அந்த நாள் படமும் மதுரை - ஸ்ரீமீனாக்ஷி திரையரங்கில் வெளியானது. ஆக முதன் முதலாக மதுரையில் ஒரே நடிகரின் படங்கள் மூன்று திரை அரங்குகளில் வெளியானதும் நடிகர் திலகத்திற்கு தான்
4. முதன் முதலாக ஒரு நடிகர் நடித்த இரண்டு படங்கள் ஒரு வருடத்தில் ஒரே நாளில் வெளியிட்ட சாதனை மட்டுமல்லாது அதே வருடத்தில் மீண்டும் ஒரு முறை ஒரே நாளில் இரண்டு படங்கள் வெளியானதும் நடிகர் திலகம் மட்டுமே செய்த சாதனைகளாகும். அவை பின்வருமாறு
படங்கள் - அந்த நாள் & கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி.
வெளியான நாள் - 13.04.1954.
படங்கள் - கூண்டுக்கிளி & தூக்கு தூக்கி.
வெளியான நாள் - 26.08.1954
5. முதன் முதலாக சென்னையில் 6 திரையரங்குகளில் வெளியான தமிழ் படம் - எதிர்பாராதது.
6. முதன் முதலாக சென்னையில் 5 திரையரங்குகளில் 80 நாட்களை கடந்து ஓடிய தமிழ் படம் - எதிர்பாராதது.
அரங்குகள் - சித்ரா,காமதேனு, பிராட்வே, மகாலக்ஷ்மி, பாரத்.
7. முதன் முதலாக ஒரே வருடத்தில் ஒரு தமிழ் பட கதாநாயகன் நடித்த அதிகமான படங்கள் வெளியானது இந்த வருடத்தில் தான். நடிகர் திலகம் நடித்த 10 படங்கள், 1954-ல் வெளியானது.
8. இதில் மூன்று படங்கள் 100 நாட்களை கடந்தன.
மனோகரா
கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி -
[சென்னை - காசினோ, சேலம் - நியூ சினிமா, திருச்சி -பிரபாத்.]
எதிர்பாராதது
9. முதன் முதலாக பந்துலுவும் நடிகர் திலகமும் ஒரு முழு நீள படத்திற்கு இணைந்தது இந்த படத்தில் தான். படம் - முதல் தேதி.
10. முதன் முதலாக படம் முழுவதும் கனவு காட்சியாகவே திரைக்கதை அமைக்கப்பட்ட படம் - முதல் தேதி.
11. முதன் முதலாக தமிழ் திரை உலகில் நடிக்க வந்த மூன்றே வருடங்களில் 25 படங்கள் அதுவும் நாயகனாகவே நடித்தவர் நமது நடிகர் திலகம் மட்டும் தான். [1952 -1955]
(சாதனைகள் தொடரும்)
அன்புடன்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
20th September 2008, 12:13 AM
#6
சிவாஜியின் சாதனை சிகரங்கள்
தொடர்ச்சி
வருடம் - 1956
1.இரண்டு வருடங்களுக்கு முன் நடந்தது போல் மீண்டும் ஒரே நாளில் இரண்டு படங்கள் வெளியானது இந்த வருடத்தில் தான்.
படங்கள் - நான் பெற்ற செல்வம் & நல்ல வீடு
வெளியான நாள் - 14.01.1956
2. முதன் முதலாக 43 நாட்கள் வித்யாசத்தில் ஒரு கதாநாயகனின் 6 படங்கள் வெளியானது நடிகர் திலகத்திற்கு தான். அவை
நான் பெற்ற செல்வம் - 14.01.1956
நல்ல வீடு - 14.01.1956
நானே ராஜா - 25.01.1956
தெனாலி ராமன் - 03.02.1956
பெண்ணின் பெருமை - 17.02.1956
ராஜா ராணி - 25.02.1956
3. எதிர்பாராதது படத்தை தொடர்ந்து சென்னையில் 6 திரையரங்குகளில் வெளியான படம் நானே ராஜா.
4. நடிகர் திலகத்தின் காரக்டர் நெகட்டிவாக இருந்தாலும் பொது மக்கள் ஏற்று கொண்டதால் தமிழகத்தில் 5 திரையரங்குகளில் 100 நாட்களை கடந்தது பெண்ணின் பெருமை. அவை
சென்னை - காசினோ, பிராட்வே, மகாலெட்சுமி.
சேலம் - நியூ சினிமா
திருச்சி - ஜுபிடர்
5. சேரன் செங்குட்டுவன் ஓரங்க நாடகத்தில் கலைஞரின் 16 பக்க வசனத்தை ஒரே டேக்-ல் நடிகர் திலகம் பேசி நடித்த படம் ராஜா ராணி.
6. முதன் முதலாக சிவாஜி பிலிம்ஸ் விநியோகித்த தமிழ் படம் - அமர தீபம்.
7. முதன் முதலாக ஒரு தமிழ் படம் 100 தொடர் அரங்கு நிறைந்த காட்சிகளாக (continous 100 House full shows) ஓடிய சாதனையை நிகழ்த்தியதும் நடிகர் திலகத்தின் படம் தான்.
படம் - அமர தீபம்
அரங்கு - காசினோ
8. முதன் முதலாக தன்னை விட வயதான ஒருவருக்கு தந்தையாக நடிகர் திலகம் நடித்த படம் - வாழ்விலே ஒரு நாள்.
9. முதன் முதலாக அண்ணா கதை எழுத, கலைஞர் திரைக்கதை வசனம் தீட்ட, நடிகர் திலகம் நடித்த படம் ரங்கோன் ராதா.
(சாதனைகள் தொடரும்)
அன்புடன்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
23rd September 2008, 12:21 AM
#7
சிவாஜியின் சாதனை சிகரங்கள்
தொடர்ச்சி
வருடம் - 1956
1. முதன் முதலாக ஏ,பி.என் நடிகர் திலகத்தோடு இணைந்த படம் - நான் பெற்ற செல்வம்
2. முதன் முதலாக நடிகர் திலகம் இரட்டை வேடத்தில் (படத்தின் ஒரு காட்சியில்) நடித்த படம் - நான் பெற்ற செல்வம்.
வருடம் - 1957
1. முதன் முதலாக வட்டார வழக்கு மொழி, தமிழ் சினிமாவில் இடம் பெற்றது நடிகர் திலகத்தின் படத்தில் தான். வட்டார மொழி - கொங்கு தமிழ். படம் - மக்களை பெற்ற மகராசி.
2. தமிழகத்தின் திரைப்பட சரித்திரத்திலேயே, ஏன் இந்திய திரையுலகிலே முதன் முதலாக பிரம்மாண்டமான கட் அவுட் வைக்கப்பட்டது நடிகர் திலகத்திற்கு தான்.
படம் - வணங்காமுடி
இடம் - சென்னை சித்ரா திரையரங்கம்
உயரம் - 80 அடி.
3. மதுரை தங்கம் திரையரங்கில் புதிய வசூல் சாதனை படைத்தது வணங்காமுடி படம். 100 நாட்கள் ஓடாமலேயே அதிக வசூல் செய்தது வணங்காமுடி தான்.
ஓடின நாட்கள் - 78
மொத்த வசூல் - Rs 1,26,904 - 11 அணா - 5 ந பை
வரி நீக்கிய வசூல் - Rs 1.00,845 - 8 அணா-7 ந பை
விநியோகஸ்தர் பங்கு - Rs 55,716 - 12 அணா -8 ந பை
[அன்றைய காலக்கட்டத்தில், அதாவது 51 வருடங்களுக்கு முன்பு, இந்த 1.26 லட்சம் என்பது எத்தனை கோடிகளுக்கு சமம் என்பதை படிப்பவர்களின் முடிவுக்கே விட்டு விடுகிறேன்].
4. ஒரு நடிகர் திலகத்தின் படம் தான் இன்னொரு நடிகர் திலகத்தின் படத்திற்கு போட்டியாக அமையும் என்பது வெறும் வார்த்தையல்ல. 78 நாட்களை வெற்றிகரமாக கடந்த வணங்காமுடி நிறுத்தப்பட்டதன் காரணம் தங்கமலை ரகசியம் ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது தான். இல்லாவிடின் மதுரை தங்கத்தில் நடிகர் திலகத்தின் நான்கு படங்கள் 100 நாட்களை கடந்திருக்கும்.
5. முதன் முதலாக தமிழ் படத்தில் டார்ஜான் வேடத்தில் நடித்தவர் நடிகர் திலகம் தான். படம் - தங்கமலை ரகசியம்.
6. தமிழில் ஒரு முன்னணி கதாநாயகன் பாதி படத்திற்கு மேல் ஊமையாக நடித்தார் என்பதும் நடிகர் திலகத்தால் மட்டுமே சாத்தியமாயிருக்கிறது. படம் - தங்கமலை ரகசியம்.
7. தி.மு.கவுடனான உறவு முறிந்த பிறகு கலைஞர் கதை வசனத்தில் நடிகர் திலகம் முதன் முதலாக நடித்தது இந்த வருடத்தில் தான். படம் - புதையல்.
8. முதன் முதலாக நடிகர் திலகம் என டைட்டில் கார்டு வந்தது இந்த வருடத்தில் தான். படம் - அம்பிகாபதி.
9. 1954 -ம் வருடத்திற்கு பிறகு 1956 மற்றும் 1957-ம் வருடங்களிலும் நடிகர் திலகம் தலா 9 படங்களில் நாயகனாக நடித்து மீண்டும் ஒரு முதன் முதல் சாதனை நிகழ்த்தினார்.
(சாதனைகள் தொடரும்)
அன்புடன்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
23rd September 2008, 11:54 PM
#8
சிவாஜியின் சாதனை சிகரங்கள்
தொடர்ச்சி
வருடம் - 1958
1. முதன் முதலாக ஒரு முழு நீள படத்தில் நடிகர் திலகம் இரட்டை வேடங்களில் நடித்தது இந்த வருடம் தான். படம் - உத்தமபுத்திரன்.
2. முதன் முதலாக நடிகர் திலகம் - பீம்சிங் கூட்டணியின் "ப" வரிசை படங்கள் ஆரம்பித்தது இந்த வருடத்தில் தான். படம் - பதிபக்தி.
3. முதன் முதலாக படத்தின் நாயகனாக இல்லாவிடினும், நாயகனை விட பெயரும் புகழும் பெற முடியும் என்பதை நிரூபித்ததோடு, வசூலிலும் சாதனை செய்ய முடியும் என்பதையும் வெளிப்படுத்திய படம் - சம்பூர்ண ராமாயணம்.
4. முதன் முதலாக *சக்கரவர்த்தி திருமகனை" எழுதிய மூதறிஞர் ராஜாஜி அவர்கள் படத்தை பார்த்து விட்டு "பரதனைக் கண்டேன்" என்று சொன்ன படம் - சம்பூர்ண ராமாயணம்.
5. முதன் முதலாக ஒரு ஆண்டில் முதலில் வெளியான மூன்று படங்களுமே 100 நாட்களை கடந்து ஓடிய சாதனையை செய்தது நடிகர் திலகத்தின் படங்கள் மட்டும் தான்.
1958 -ல் முதலில் வெளியானது
உத்தமபுத்திரன்.
வெளியான நாள் - 07.02.1958
100 நாட்கள் ஓடிய திரையரங்குகள்
சென்னை- காசினோ
மதுரை - நியூ சினிமா
மைசூர் - லட்சுமி.
இரண்டாவது படம்
பதிபக்தி
வெளியான நாள் - 14.03.1958
100 நாட்கள் ஓடிய திரையரங்குகள்
சென்னை - கெயிட்டி
மதுரை -கல்பனா
திருச்சி - ஜுபிடர்
கோவை - கர்னாடிக்.
மூன்றாவது படம்
சம்பூர்ண ராமாயணம்
வெளியான நாள் - 14.04.1958
100 நாட்கள் ஓடிய திரையரங்குகள்
மதுரை - ஸ்ரீதேவி (165 நாட்கள்)
திருச்சி -சென்ட்ரல்
சேலம் -ஓரியண்டல்
கோவை - டைமண்ட்
தஞ்சை- யாகப்பா.
6. முதன் முதலாக நடிக்க வந்த 6 வருடங்களில் 50 படங்களில் அதுவும் நாயகனாக நடித்தவர் நடிகர் திலகம் தான்.
பராசக்தி - 17.10.1952 - முதல் படம்
சாரங்கதாரா - 15.08.1958 - 50-வது படம்
7. முதன் முதலாக ஒரே வருடத்தில் நான்கு 100 நாள் படங்களை கொடுத்த சாதனையும் நடிகர் திலகத்திற்கே உரியது.
1958-ல் நான்காவது 100 நாள் படம் - சபாஷ் மீனா.
8. முதன் முதலாக நாயகன் ஒரு வேடத்திலும் துணை நாயகன்/காமெடியன் இரண்டு வேடங்களிலும் நடித்த படம் = சபாஷ் மீனா. இரட்டை வேடம் பூண்டவர் - சந்திரபாபு. அந்த பெருந்தன்மைக்கு சொந்தக்காரர் நடிகர் திலகம்.
9. ஹாட்ரிக் என்று சொல்லுவது போல 1956,1957 -ஐ தொடர்ந்து, 1958 -ம வருடமும் 9 படங்களில் நடித்து மீண்டும் ஒரு சாதனை புரிந்தவர் நடிகர் திலகம்.
(சாதனைகள் தொடரும்)
அன்புடன்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
24th September 2008, 10:48 PM
#9
சிவாஜியின் சாதனை சிகரங்கள்
தொடர்ச்சி
வருடம் - 1959
இந்த வருடம் வெளியான படங்கள் - 6
இந்த ஆண்டு குறிப்பாக மதுரையில் சாதனை சரித்திரம் படைத்த ஆண்டு. இந்த சாதனையை இரண்டு படங்கள் பங்கிட்டு கொண்டன. முதலில்
வீரபாண்டிய கட்டபொம்மன்.
1. முதன் முதலாக சிவாஜி நாடக மன்றம் நடத்திய நாடகம் திரைப்படமாக்கப்பட்டது இந்த படத்தின் மூலமாகத்தான்.
2. படமாக்கப்படுவதற்கு முன்பும், படம் வெளி வந்த பிறகும் மேடையேற்றப்பட்ட நாடகம் இது.
3. முதன் முதலாக ஒரு நாடகத்தின் மூலமாக கல்விக்கூடங்களுக்கு ரூபாய் 25 லட்சம் வரை வசூல் செய்து கொடுத்தது கட்டபொம்மன் தான்.
4. முதன் முதலாக ஜெய்பூர் அரண்மனையில் படமாக்கப்பட்ட தமிழ் படம் கட்டபொம்மன்.
5. முதன் முதலாக டெக்னிக் கலரில் எடுக்கப்பட்ட தமிழ் படம் -கட்டபொம்மன்.
6. முதன் முதலாக லண்டனில் கலர் பிரதிகள் எடுக்கப்பட்ட படம் - கட்டபொம்மன்.
கட்டபொம்மன் வெற்றி சரித்திரம் தொடரும்
(சாதனைகள் தொடரும்)
அன்புடன்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
25th September 2008, 11:06 PM
#10
சிவாஜியின் சாதனை சிகரங்கள்
தொடர்ச்சி
வருடம் - 1959
கட்டபொம்மனின் வெற்றி சரித்திரம் தொடர்கிறது
1. முதன் முதலாக 26 திரையரங்குகளில் 100 நாட்கள் ஓடின தமிழ் கலர் படம் - கட்டபொம்மன்.
2. மதுரையில் வெள்ளிவிழா கொண்டாடிய முதல் தமிழ் கலர் படம் - கட்டபொம்மன்
அரங்கு - நியூ சினிமா
நாட்கள் - 181
3. மதுரையில் முதன் முதலாக 2 லட்சத்திற்கு மேல் வசூல் தந்த படம் - கட்டபொம்மன்
181 நாட்கள் மொத்த வசூல் - Rs 2,77.365.71
வரி நீக்கிய நிகர வசூல் - Rs 2,08,113.44
விநியோகஸ்தர் பங்கு - Rs 1,13, 583.55
4. வெற்றிவிழாவிற்கு மதுரை வந்த நடிகர் திலகம் மதுரை நகராட்சியால் சிறப்பு விருந்தினராக அறிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார். தமிழகத்தில் ஒரு அரசு சார்ந்த அமைப்பின் சார்பாக கௌரவிக்கப்பட்ட முதல் கலைஞன் - நடிகர் திலகம்.
5. வெற்றி விழா பரிசாக 2-ம் வகுப்பு வரை சிலேட்- குச்சியும்,5-ம் வகுப்பு வரை பென்சிலும், 10-ம் வகுப்பு வரை பேனாவும், மதுரை மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளி மாணவ மாணவியருக்கும், அந்தந்த பள்ளிகளுக்கே சென்று நேரிடையாக வழங்கப்பட்டது முதன் முதலாக மட்டுமல்ல இன்று வரை முறியடிக்க முடியாததும் கூட.
6. எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தார் போன்று 1960-ல் கெய்ரோவில் நடந்த ஆசியா -ஆப்ரிக்கா திரைப்பட விழாவில் அது வரை எந்த தமிழ் படமும் செய்யாத சரித்திர சாதனையாக சிறந்த படத்திற்கான விருதை வீர பாண்டிய கட்டபொம்மன் படமும் சிறந்த நடிகர் விருதை நடிகர் திலகமும் பெற்றார்கள்.
கட்டபொம்மனின் வெற்றி சரித்திரம் தொடரும்
(சாதனைகள் தொடரும்)
அன்புடன்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks