சகோதரி சாரதா அவர்களுக்கு என் உளமார்ந்த நன்றிகள், பாராட்டுக்கள். பல வெற்றிப் படங்களுக்கு ஜெயலலிதா அவர்களின் நடிப்பு மிகவும் உறுதுணையாக இருந்திருக்கிறது. பல சுமாரான படங்களைத் தன் நடிப்பால் தூக்கி நிறுத்தியிருப்பார் ஜெயலலிதா அவர்கள். நடிகர் திலகத்துடனும் சரி, எம்.ஜி.ஆர். அவர்களுடனும் சரி, ஜெயலலிதாவின் நடிப்பில் ஒரு போட்டி இருக்கும். அவருடைய 100வது படமான திருமாங்கல்யம் படத்தில் அவருடைய நடிப்பு நம் உள்ளத்தை உருக்கி விடும். அதே போல் சூரியகாந்தியிலும் அத்தனை உணர்வு பூர்வமாக நடித்திருப்பார். நடிகர் திலகத்துடன் பல நடிகையர் ஜோடியாக நடித்திருந்தாலும் ஜெயலலிதா நடித்த படங்கள் தனித்து நிற்கும். கலாட்டா கல்யாணம், சுமதி என் சுந்தரி போன்ற நகைச்சுவை, காதல் உணர்வு மிக்க படங்களானாலும் சரி, கண்ணன் என் காதலன், குரு தட்சணை, எங்க ஊர் ராஜா, போன்ற குடும்பக் கதைகளானாலும் சரி, ராஜா, ரகசிய போலீஸ் 115 போன்ற பொழுது போக்குப் படங்களானாலும் சரி, அவருடைய நடிப்ப சிறந்து விளங்கும். இவையெல்லாம் ஒரு உதாரணத்துக்காக மட்டும் கூறப்பட்டிருக்கின்றன. இனி வரும் நாட்களில் அவருடைய படங்களை அலசலாம்.

ஆயிரத்தில் ஒருவன் - நிச்சயம் தமிழ்ப் பட வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க படமாகும். பழைய Pirates of the Carribean Sea படத்தின் காட்சியமைப்புகள் நினைவு படுத்தினாலும் தொழில்நுட்ப ரீதியிலும் சிறப்புற்று விளங்கியது. விஸ்வநாதன் ராமமூர்த்தியின் இசையமைப்பும் முக்கியமான காரணம். எம்.ஜி.ஆர். அவர்களின் தோற்றமும், நீங்கள் குறிப்பிட்ட காட்சியமைப்புகளும் நடன அமைப்பும் ஒளிப்பதிவும் என அனைத்து அம்சங்களும் நிறைந்த படம் ஆயிரத்தில் ஒருவன்.

அன்புடன்
ராகவேந்திரன்