-
24th May 2010, 03:55 PM
#21
பாராட்டுகளுக்கு நன்றி திரு ராகவேந்தர் அவர்களே
ராஜேந்திரன் விஜயகுமாரி இருவருக்கும் மணிமகுடம் நாடகத்தை திரை படம் ஆக தயாரிக்க வேண்டும் என்று முடிவு செய்த போது அதில் கதாநாயகி ஆக தானே நடிக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடித்ததாகவும் ஆனால் திரு ராஜேந்திரன் அவர்கள் ஜெயலலிதா அவர்களே தான் இதில் நடிக்கவேண்டும் அப்போதுதான் படம் வெற்றி பெறும் என்று சொன்னதாகவும் இதனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சில காலம் பிரிந்ததாகவும் கேள்விபட்டேன் இது கிட்டத்தட்ட சாவித்திரி அவர்கள் ப்ராப்தம் படம் தயாரிக்கும் போது சாவித்திரி அவர்களுக்கும் அவரது கணவர் ஜெமினி கணேஷ் அவர்களுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு போல் என்று பழைய பேசும் படம் பத்திரிகையில் படித்த நினவு தயுவு செய்து என்னை தவறாக எண்ண வேண்டாம் .
உன்னை சுற்றும் உலகம் நீண்ட நாள் தயாரிப்பில் வந்த படம் என்று கேள்விபட்டேன் jj அவர்கள் சில காட்சிகளில் மெலிந்தும் சில காட்சிகளில் குண்டாகவும் காட்சி அளிப்பார்கள். கமல்ஹாசன் ஆரம்ப கால படங்கிளில் ஒன்று. அவள் ஒரு தொடர்கதை கவிதா மற்றும் arrangettram லலிதா போல் jj குடும்பத்திற்கு ஆக தன்னை வருதிகொள்ளும் பாத்திரத்தில் நடித்திருப்பார். புகுந்த வீடு G .சுப்ரமணிய ரெட்டியார் production என்று நினவு
நட்புடன் gk
-
24th May 2010 03:55 PM
# ADS
Circuit advertisement
-
24th May 2010, 04:48 PM
#22
நதியை தேடி வந்த கடல் மகரிஷி அவர்கள் எழுதிய கதை ப.லெனின் அவர்கள் இயக்குனர் என்று நினவு மகரிஷி அவர்களின் கதைகள் "வட்டர்த்திற்குள் சதுரம்" "புவனா ஒரு கேள்வி குறி " , "சாய்ந்தடும்மா சாய்ந்தாடு" தொடர்ந்து வந்த திரைப்படம் சரத்பாபு/JJ /படாபட் நடித்து வெளி வந்தது ஸ்ரீகாந்த் உண்டு என்று நினைக்கிறன்
"தவிக்குது தயுங்குது உன் மனது" மற்றும் "எங்கயோ ஏதோ பாட்டு ஒன்று கேட்டேன்" என்ற இரு பாடல்கள் பிரபலம் JJ அவர்கள் reentry க்கு ட்ரை செய்த படம் ஆனால் படம் வெற்றி அடையாதலால் திரை துறை யில் இருந்து ஒதுங்கி விட்டார்கள் என்று கேள்வி பட்டேன் ஆடபிறந்தவள் என்று ஒரு திரை படம் விளம்பரம் பார்த்த நினவு 80 கால கட்டங்களில் பின்பு அந்த முயற்ச்சி கைவிடப்பட்டது என்று படித்த நினவு இதற்கு பிறகு வேறு எதாவது திரைப்படம் நடிதர்களா என்று தெரியவில்லை நடிகர் திலகத்துடன் இரண்டு திரைப்படங்கள் வெளி வரவில்லை என்று கேள்வி பட்டேன் மாதவன் இயக்கத்தில் "தேவன் கோயில் மணியோசை" மற்றும் ராமண்ணா direction இல்
"ராஜ" என்று ஆரம்பிக்கும் பாதி எடுத்த படம்
மேலும் ரஜினி அவர்களுடுன் ஜோடியாக நடிக்க முக்தா அவர்கள் ஒரு படம் எடுக்க முயற்சி எடுத்ததாகவும் அது நின்று போனது என்றும் படித்த நினவு
நட்புடன் GK
-
24th May 2010, 07:38 PM
#23
Senior Member
Seasoned Hubber
டியர் கிருஷ்ணாஜி,
தங்களின் நினைவுத்திறன் அபாரமாய் உள்ளது. தேவன் கோயில் மணி ஓசை படம் ஒரு ஷெட்யூல் படப்பிடிப்பு நடந்ததாக நினைவு. பொம்மை அல்லது பிலிமாலயாவில் ஷூட்டிங் ஸ்டில் போட்டிருந்தார்கள். மற்றொரு படம் அறிவிப்போடு சரி. மற்றபடி அவர்கள் ரீ என்ட்ரி ஆக வேண்டும் என்று முனைந்ததாக நான் நினைக்க வில்லை. அந்தக் கதைக்கு இயக்குநரும் தயாரிப்பாளரும் ஜெயலலிதா அவர்கள் தான் பொருத்தமானவர் என்று உறுதியாக தீர்மானித்து வேண்டிக் கொண்டதால் தான் அவர்கள் நடிக்க வந்தார்கள். அப்போது அவர்கள் நாட்டிய நாடகங்களில் அதிக ஈடுபாடு கொண்டு நடத்தி வந்தார்கள். எனவே அதற்குரிய நேரங்களில் எந்த வித பாதிப்பும் வராமல் இருக்கும் வண்ணம் படப்பிடிப்பு வந்தால் நடிப்பதாக கூறியிருந்ததாக நான் படித்த நினைவு.
அவர் நடித்த படங்களில் மற்றொரு முக்கியமான படம் வந்தாளே மகராசி. இரு வேடங்களில் பின்னி யிருப்பார். கிராமத்தில் நியாயம் வேண்டி விவசாயிகளுடன் இணைந்து போராட்டம் நடத்த முயல்வார். அப்போது விவசாயிகளை பண்ணையார் தன் பக்கம் இழுக்க முயல்வார். இறுதியாக மற்றொரு ஜெயலலிதாவிற்காக நியாயம் கேட்கும் போது உள்ளம் உருக வேண்டி மக்களைத் தன் பக்கம் உள்ள நியாயத்திற்காக ஆதரவு கேட்பார். இந்தக் கிளைமாக்ஸ் காட்சியில் அவருடைய நடிப்பு மிகவும் நெஞ்சைத் தொடும் வகையில் சிறப்பாக இருக்கும்.
ராகவேந்திரன்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
25th May 2010, 02:19 PM
#24
நன்றி ராகவேந்தர் அவர்களே
கலைச்செல்வி அவர்கள் நடித்த கண்ணன் என் காதலன் திரைபடத்தின் ஒரு பாடல் "பாடுவோர் பாடினால் ஆட தோன்றும் பாட்டுடன் தேன் கனி சேரவேண்டும் தலைவனை தெய்வமாய் காண வேண்டும் கன்னி நீ இன்னும் ஏன் நாண வேண்டும் " என்ற பாடலில் அவர்களின் நடனம் மெய் சிலிர்க்க வைக்கும் வாணிஸ்ரீ ,முத்துராமன்,தேங்காய் மற்றும் T .கே.பகவதி எல்லோரும் அமைதியாக பார்த்து கொண்டு இருப்பார்கள் பாட்டு ஆரம்பத்தில் mgr அவர்கள் சொடுக்கு போட்டு பியானோ வாசிக்க கலைச்செல்வி அவர்கள் கால் அசைவுகளை யும் கை அசைவுகளையும் காண கோடி வேண்டும். அதே போல் ரகசிய போலீஸ் 115 திரை படத்தில் "சந்தனம குங்கும கொண்ட தாமரை பூ ஏன் இன்று பூமியில் கொண்டாடுது" என்ற பாடலிலும் அவருடைய நடன அசைவுகள் மிக சிறப்பாக இருக்கும் நடிகர் திலகம் அவர்கள் கலைச்செல்வி அவர்களை பற்றி அவர் உடைய நாட்டிய அரங்கேற்றம் நிகழ்ச்சியில் "பொற்சிலை" என்று பாராட்டினார்கள் என்று கேள்விபட்டுள்ளேன் அது பற்றி தெரிந்தால் சற்று விவரமாக சொல்லவும்.
நட்புடன் gk
-
18th September 2010, 05:06 PM
#25
Senior Member
Veteran Hubber
நடிகர்திலகத்துக்கு ஃப்ரான்ஸ் நாட்டின் செவாலியே விருது வழங்கும் விழா சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடந்துகொண்டிருந்தது. அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையேற்றார். இந்தியாவுக்கான பிரெஞ்சு தூதர் விருதை வழங்கினார். விருது வழங்கும் முன்னதாக திரையுலகப்பிரமுகர்கள் பலரும் மைக்கில் பேசும்போது ஜெயலலிதாவை 'மாண்புமிகு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா' என்றே விளித்துப்பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது நடிகர்திலகத்துக்கு காஃபி வந்தது. காஃபியை கையில் வாங்கிய நடிகர்திலகம், தன் அருகில் அமர்ந்திருந்த ஜெயலலிதாவைப்பார்த்து படு கேஷுவலாக "அம்மு... காஃபி சாப்பிடுறியா?" என்று கேட்க, அவர் புன்முறுவலோடு மறுத்துவிட்டார்.
ஜெயலலிதா முதலமைச்சரானபின்னரும் அவரை ஒருமையில் அழைத்தவர் நடிகர்திலகம் மட்டுமே.
-
17th November 2010, 08:01 PM
#26
Senior Member
Veteran Hubber
ஒரு ரூபாய் சம்பளம் துவங்கியது எப்போது...?
ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது மாதம் ஒரு ரூபாய் சம்பளம் வாங்கியது நமக்குத்தெரியும். ஆனால் அந்த ஒரு ரூபாய் சம்பளம் துவங்கியது எப்போது தெரியுமா?.
கதை, வசனகர்த்தா, தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் பேராசிரியர் ஏ.எஸ்.பிரகாசம் சொன்ன விவரம்....
முக்தா வி.சீனிவாசன் இயக்கத்தில், வித்யா மூவீஸின் 'சூரியகாந்தி' படத்துக்கு நான் கதை வசனம் எழுதியிருந்தேன். அது கதாநாயகிக்கு நல்ல ஸ்கோப் உள்ள சப்ஜெக்ட் ஆதலால் அந்த ரோலுக்கு ஒரு பெரிய நட்சத்திரத்தை போடலாம் என்று முடிவடுத்து, யாரைப்போடலாம் என்ற ஆலோசனையின்போது கலைச்செல்வி ஜெயலலிதாவை நடிக்க வைக்கலாம் என்று யோசனை சொன்னேன். முக்தா தயங்கினார். 'என்னுடைய பொம்மலாட்டம் படத்தில் நடித்தபோது அவர் இருந்த ஸ்டேஜ் வேறு. ஆனா இப்போ அவர் பெரிய நட்சத்திரம். இப்போ அவர் வாங்கும் சமபளம் எல்லாம் கொடுக்க நமக்கு கட்டுபடியாகாது' என்றார்.
நல்ல ரோலாக இருப்பதால் ரேட்டில் நான் கன்வின்ஸ் பண்றேன், நீங்க மட்டும் சம்மதம் கொடுங்க என்று நான் சொல்ல முக்தா சம்மதித்தார். ஜெயலலிதா வீட்டுக்குப்போய் கதை சொன்னேன். அவருக்கும் ரோல் பிடித்துப்போகவே அதில் நடிக்க ஒப்புக்கொண்டார். அப்போது செல்போனெல்லாம் கிடையாது, ஆகவே ஜெயலலிதா வீட்டிலிருந்தே முக்தா சீனிவாசனுக்கு போன் செய்து ஜெ. நடிக்க சம்மதம் தெரிவித்து விட்டதைச் சொன்னேன். அதற்கு அவர் 'அம்மு இப்போ ஒரு படத்துக்கு ஒரு லட்சம் வாங்குறாங்க. நமக்கு அதெல்லாம் கட்டுபடியாகாது. நம்ம படத்துக்கு முப்பதாயிரம் ரூபாய்தான் தர முடியும். அதற்கு சம்மதமான்னு கேளுங்க' என்று சொல்ல, நான் போனை கட் பண்ணாமல் கையில் ரிஸீவரை வைத்துக்கொண்டே ஜெயலலிதா அவர்களிடம் விவரத்தைச்சொல்ல, அவர் போனை என் கையிலிருந்து வாங்கி, "டைரக்டர் சார், புரொபஸர் எல்லா விவரமும் சொன்னார். இந்தப்படத்தில் நடிக்க என்னுடைய சம்பளம் 100 நயா பைசா, அதாவது ஒரு ரூபாய். சரியா?. மேற்கொண்டு ஆக வேண்டியதைப்பாருங்க" என்று போனை வைத்து விட்டார்.
'சூரியகாந்தி' படம் வெற்றிகரமாக ஓடி 100வது நாள் விழாவில் தந்தை பெரியார் அவர்கள் கலைஞர்களுக்கு வெற்றிக்கேடயம் வழங்கினார். பின்னர் இரண்டு நாட்கள் கழித்து முக்தா சீனிவாசன் ஜெயலலிதா அவர்களுக்கு சம்பளமாக ரூபாய் நாற்பதாயிரத்துக்கு செக் கொடுத்தார். அதைப்பார்த்த ஜெயலலிதா "நான் ஒரு ரூபாய்தானே கேட்டேன்" என்று தமாஷாகச்சொல்ல, முக்தாவும் தமாஷாக "மீதி 39,999 ரூபாய் அடுத்த படத்துக்கான அட்வான்ஸாக வச்சுக்குங்க அம்மு" என்று சொல்ல அந்த சூழ்நிலையே மிகவும் சந்தோஷமாக இருந்தது.
-
18th November 2010, 04:08 AM
#27
Senior Member
Seasoned Hubber
Originally Posted by
saradhaa_sn
நடிகர்திலகத்துக்கு ஃப்ரான்ஸ் நாட்டின் செவாலியே விருது வழங்கும் விழா சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடந்துகொண்டிருந்தது. அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையேற்றார். இந்தியாவுக்கான பிரெஞ்சு தூதர் விருதை வழங்கினார். விருது வழங்கும் முன்னதாக திரையுலகப்பிரமுகர்கள் பலரும் மைக்கில் பேசும்போது ஜெயலலிதாவை 'மாண்புமிகு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா' என்றே விளித்துப்பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது நடிகர்திலகத்துக்கு காஃபி வந்தது. காஃபியை கையில் வாங்கிய நடிகர்திலகம், தன் அருகில் அமர்ந்திருந்த ஜெயலலிதாவைப்பார்த்து படு கேஷுவலாக "அம்மு... காஃபி சாப்பிடுறியா?" என்று கேட்க, அவர் புன்முறுவலோடு மறுத்துவிட்டார்.
ஜெயலலிதா முதலமைச்சரானபின்னரும் அவரை ஒருமையில் அழைத்தவர் நடிகர்திலகம் மட்டுமே.
திரையுலகலிருந்து நெருங்கி பழகிய நண்பிகள் நண்பர்கள் எல்லாருமே
அம்மு அம்மு என்று இன்னும் ஒருமையில்தான் அழைத்துப் பழகுகிறார்கள்
அவர்கள் மத்தியில் வீண் பந்தா இல்லை மேடையிலும்
சச்சு ராஜஸ்ரீ ம*னோரமா ஆச்சி அத்தனை பேரும் இன்னும் அதிக உரிமையோடு !
Regards
-
18th November 2010, 05:48 PM
#28
Senior Member
Veteran Hubber
ஜெயலலிதாவின் ஒரு ரூபாய் சம்பளம் பற்றி எழுதும்போது, அதே போன்ற இன்னொரு சம்பவம் நினைவுக்கு வந்தது.
தயாரிப்பாளர், இயக்குனர் வி.சி.குகநாதன் தனது 'மஞ்சள் முகமே வருக' படத்தைத் துவங்கியபோது, அவர் கையில் இருந்தது வெறும் இரண்டாயிரம் ரூபாய் மட்டுமே. இதைக்கொண்டுதான் முதல் நாள் படப்பிடிப்பை நடத்த வேண்டும். படப்பிடிப்புக்கு முந்திய நாள் பிரதான நடிகர் நடிகையருக்கு மட்டும் ஆளுக்கு ரூ. 100 அல்லது 150 அட்வான்ஸாகக் கொடுத்து புக் பண்ணினார். அவரது நெருக்கடியான நிலையைப் பார்த்து சிலர் அட்வான்ஸ் வேண்டாம். படம் துவங்கிய பிறகு வாங்கிக்கொள்கிறோம் என்று சொல்லி விட்டனர். S.N.லட்சுமியம்மாவிடம் 100 ரூபாய் கொடுத்தபோது, அதில் 50 ரூபாயைத்திருப்பிக்கொடுத்து, 'இதை இன்னொருவருக்கு அட்வான்ஸா கொடுத்துக்கோ' என்று சொன்னாராம்.
இறுதியாக படத்தின் கதாநாயகனான நடிகர் முத்துராமனிடம் போய் அட்வான்ஸ் எவ்வளவு வேண்டும் என்று கேட்டபோது முத்துராமன், "நான் இரண்டு தொகை மனசுல நினைச்சிருக்கேன். அதுல எதைக்கேட்கலாம்னு பூவா தலையா போட்டுப்பார்ப்போம். அதுக்கு ஒரு ரூபாய் நாணயம் இருந்தால் கொடுங்க" என்று குகநாதனிடம் கேட்க, அவரும் ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்து நீட்டியிருக்கிறார். அதை வாங்கி பூவா தலையா போட்டுப்பார்க்காமல் தன் சட்டைப்பையில் போட்டுக்கொண்ட முத்துராமன், "இப்போ நீங்க கொடுத்த ஒரு ரூபாய்தான் என் அட்வான்ஸ். நீங்க போய் மற்ற வேலைகளைப்பாருங்க" என்று சொல்லி விட்டாராம்.
மிச்சமிருந்த பணத்தில் 460 ரூபாய்க்கு கருப்பு வெள்ளை பிலிம் ரோல் ஒன்று வாங்கி, மறுநாள் குறிப்பிட்டபடி ஒரு மரத்தடியில் படப்பிடிப்பைத்துவங்கி விட்டாராம். முதல்நாள் படப்பிடிப்பைப் பார்க்க வந்திருந்த விநியோகஸ்தர்களில் ஒருவர், ஒரு ஏரியாவைத்தான் வாங்கிக்கொள்வதாக விலைபேசி அப்போதே அட்வான்ஸாக ரூ. 25,000-க்கு செக் கொடுக்க, அதைக்கொண்டு தொடர்ந்து படப்பிடிப்பை நடத்தினாராம் குகநாதன். (கேட்கும் நமக்கு பிரமிப்பாக இருக்கிறது).
திரையுலகில் எல்லோரும் இப்படி தாராள மனதுடன் நடந்துகொள்பவர்கள் அல்ல. பலர் ரொம்ப கறார் பேர்வழிகள். படப்பிடிப்பு துவங்கும் முன்னரே முழுப்பணத்தையும் வாங்கிக்கொள்ளும் சில்க் ஸ்மிதா போன்றவர்களும் இத்திரையுலகில்தான் இருந்தனர், இருக்கின்றனர்.
-
18th November 2010, 10:59 PM
#29
Senior Member
Senior Hubber
same with jai too. he had acted without any renumeration in many movies. those were the days when people had thozhil bhakthi ... ipoo bakthiyavadhu mannavadhu..
-
18th November 2010, 11:46 PM
#30
Senior Member
Seasoned Hubber
ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது மாதம் ஒரு ரூபாய் சம்பளம் வாங்கியது - that's news to me
படப்பிடிப்பு துவங்கும் முன்னரே முழுப்பணத்தையும் வாங்கிக்கொள்ளும் சில்க் ஸ்மிதா போன்றவர்களும் இத்திரையுலகில்தான் இருந்தனர்
really ? ??
Regards
Bookmarks