-
16th October 2010, 12:23 AM
#11
Senior Member
Platinum Hubber
பாடல் : பாடவா உன் பாடலை
படம் : நான் பாடும் பாடல்
பாடலாசிரியர் : வைரமுத்து
இசை : இளையராஜா
பல்லவி :
பாடவா உன் பாடலை
பாடவா உன் பாடலை
என் வாழ்விலே ஓர் பொன்வேளை ஹோ
என் வாழ்விலே ஓர் பொன்வேளை ஹோ
பாடவா உன் பாடலை
சரணம் 1 :
வாடைப்பூங்காற்று என்னைத்தீண்டும்
வாழ்க்கை யாவும் நீ வேண்டும்
வாடைப்பூங்காற்று என்னைத்தீண்டும்
வாழ்க்கை யாவும் நீ வேண்டும்
நதியோடு அலை போல உறவாட வேண்டும்
இலை மூடும் மலர் போல எனை மூட வேண்டும்
என் தேகம் எங்கும் உன் கானம் தங்கும்
நீ வந்து கேளாமல் ஏங்கும் தமிழ்ச்சங்கம்
சரணம் 2 :
உன்னைக்காணாமல் கண்கள் பொங்கும்
அதுவே நெஞ்சின் ஆதங்கம்
உன்னைக்காணாமல் கண்கள் பொங்கும்
அதுவே நெஞ்சின் ஆதங்கம்
உனக்காக என் பாடல் அரங்கேறும் வேளை
நீ கேட்க வழி இல்லை இது என்ன லீலை
பூ மேகம் இங்கே ஆகாயம் எங்கே
நீ சென்ற வழி பார்த்து வாடும் உன் பூ இங்கே
-
16th October 2010 12:23 AM
# ADS
Circuit advertisement
-
16th October 2010, 12:36 AM
#12
Senior Member
Veteran Hubber
koththamalli poovE(kallukkuL eeram)
பாடல்: கொத்தமல்லிப்பூவே
திரைப்படம்: கல்லுக்குள் ஈரம்
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.ஜானகி
கொத்தமல்லிப்பூவே...ஏஏஏ ஏஏஏ ஏஏ
கொத்தமல்லிப்பூவே புத்தம்புது காத்தே
வாசம் வீசு வந்து வந்து ஏதோ பேசு...அரே ரரே
கொத்தமல்லிப்பூவே புத்தம்புது காத்தே
வாசம் வீசு வந்து வந்து ஏதோ பேசு
ஆத்தோரம் கொட்டிவச்ச மல்லி பூ வாசத்துல அள்ளி
ஆகாசம் தூவிவிட்ட வெள்ளி எம் மாமன் வச்ச புள்ளி
நெனைச்சேனே எளைச்சேனே நானு என் நெஞ்சுக்குள்ள தேனு
வட்டமிடும் பூங்காத்து வந்து வந்து மோதும்
தொட்டுத்தொட்டு சூடாக சொந்தக்கத பேசும்
சொந்தத்தில பந்தத்தில சந்தோஷம்
கொத்தமல்லிப்பூவே புத்தம்புது காத்தே
வாசம் வீசு வந்து வந்து ஏதோ பேசு
சேத்தோட ஒட்டிக்கிட்ட நாத்து அத சேத்துக்கிட்ட காத்து
கூத்தாடும் எம்மனசு பாத்து அது தென்னை இளங்கீத்து
வெத போட்டேன் ஒனக்காக நேத்து நான் கண்ட சுகம் சேத்து
தொட்டுவிட்ட பின்னாலே தூக்கம் இல்ல மாமா
தொட்டுக்கிட்டு ஒன்னோட தூங்கவேணும் ஆமா
சொர்க்கத்தில பக்கத்தில நின்னேனே
கொத்தமல்லிப்பூவே புத்தம்புது காத்தே
வாசம் வீசு வந்து வந்து ஏதோ பேசு...அரே ரரே
கொத்தமல்லிப்பூவே புத்தம்புது காத்தே
வாசம் வீசு வந்து வந்து ஏதோ பேசு
-
16th October 2010, 01:24 AM
#13
Senior Member
Veteran Hubber
en dhEgam amudham(oru Odai nadhiyaagiRadhu)
பாடல்: என் தேகம் அமுதம்
திரைப்படம்: ஒரு ஓடை நதியாகிறது
பாடியவர்: எஸ்.ஜானகி
இசை: இளையராஜா
என் தேகம் அமுதம் என் தேகம் அமுதம்
மார்கழி ராத்திரி பிரிவது பாவம்
மார்கழி ராத்திரி பிரிவது பாவம்
என் தேகம் அமுதம்...ம்...ம்...ம்
முல்லை மலர் வாசம் வீசவில்லையா
பெண் மனசின் ஆசை பேசவில்லையா
பூத்திருப்பவள் தாரமல்லவா
காத்திருப்பதே பாரமில்லையா
துள்ளி எழும் பிள்ளை பிஞ்சு
சத்தம் இன்றி முத்தம் கொஞ்சு
விளக்கை அணைத்துவிடு
என் தேகம் அமுதம் என் தேகம் அமுதம்
மார்கழி மார்கழி மார்கழி ராத்திரி பிரிவது பாவம்
என் தேகம் அமுதம் என் தேகம் அமுதம்...ஆ ஆ ஆ
வீணைகளின் மௌனம் ஒட வேண்டுமே
ஆளுக்கொரு ராகம் பாட வேண்டுமே
கூந்தல் இருக்கு போர்வை எதற்கு
காலை வரைக்கும் காமன் வழக்கு
நெஞ்சம் எங்கும் மின்னல் அலை
பஞ்சம் இல்லை பன்னீர் மழை
எனக்கு பொறுக்கவில்லை
என் தேகம் அமுதம் என் தேகம் அமுதம்
மார்கழி மார்கழி மார்கழி ராத்திரி பிரிவது பாவம்
என் தேகம் அமுதம் என் தேகம் அமுதம்...ம்ம்...ஆ ஆ
-
16th October 2010, 01:49 AM
#14
Senior Member
Veteran Hubber
sengamalam sirikkudhu(dhaavaNi kanavugaL)
பாடல்: செங்கமலம் சிரிக்குது
திரைப்படம்: தாவணிக்கனவுகள்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி
செங்கமலம் சிரிக்குது சங்கமத்தை நினைக்குது
செங்கமலம் சிரிக்குது சங்கமத்தை நினைக்குது
கூ கூ...குக்குக் கூ கூ...கூ கூ எனக் கூவும் குயில்
சின்னச் சின்ன சந்தத்தில் அந்திப்போர் நடத்தும்
செங்கமலம் சிரிக்குது சங்கமத்தை நினைக்குது
கூ கூ...குக்குக் கூ கூ...கூ கூ எனக் கூவும் குயில்
சின்னச் சின்ன சந்தத்தில் அந்திப்போர் நடத்தும்
செங்கமலம் சிரிக்குது சங்கமத்தை நினைக்குது
முத்தம் இடும் மாலை...வேளை...மூடுவிழா நாடகமோ
நித்தம் இதழ் தேடும்...நேரம்...நாணம் எனும் நோய் வருமோ
பூமாலை சூடாது போய் தேடக் கூடாது
எல்லைதனைத் தாண்டாது பிள்ளை எனத் தாலாட்டு
மஞ்சள் தரும் நாள் கூறு வஞ்சம் இல்லை தாழ் போடு
காமன் கணை ஏவல் எனை காவல் மீறத் தூண்டுதே
செங்கமலம் சிரிக்குது சங்கமத்தை நினைக்குது
செங்கமலம் சிரிக்குது சங்கமத்தை நினைக்குது
மங்கை இவள் தேகம்...நோகும்...மோஹனமாய் தாளமிடு
கங்கை நதி பாயும்...நேரம்...காதிலொரு சேதி கொடு
நாள்தோறும் ராக்காலம் ஏதிங்கே பூபாளம்
இன்பம் கரை காணாது கண்கள் இமை மூடாது
உன்னைக்கரை சேர்க்காது எந்தன் அலை ஓயாது
சேவல் அது கூவும்வரை நாணம் ஓய்வு காணுமே
செங்கமலம் சிரிக்குது சங்கமத்தை நினைக்குது
செங்கமலம் சிரிக்குது சங்கமத்தை நினைக்குது
கூ கூ...குக்குக் கூ கூ...கூ கூ எனக் கூவும் குயில்
சின்னச் சின்ன சந்தத்தில் அந்திப்போர் நடத்தும்
செங்கமலம் சிரிக்குது சங்கமத்தை நினைக்குது
செங்கமலம் சிரிக்குது சங்கமத்தை நினைக்குது
-
16th October 2010, 02:07 AM
#15
Senior Member
Veteran Hubber
kaNNile enna uNdu(avaL oru thodarkadhai)
Please click on the link below for the list of links to the songs in this thread:
Janaki song lyrics in this thread
Originally Posted by
priya32
S.Janaki is my favorite singer. Please use this thread to post only S.Janaki Amma's lyrics of your favorite songs.
பாடல்: கண்ணிலே என்ன உண்டு
திரைப்படம்: அவள் ஒரு தொடர்கதை
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர்: எஸ்.ஜானகி
கண்ணிலே என்ன உண்டு கண்கள்தான் அறியும்
கண்ணிலே என்ன உண்டு கண்கள்தான் அறியும்
கல்லிலே ஈரம் உண்டு கண்களா அறியும்
என் மனம் என்னவென்று என்னையன்றி யாருக்குத் தெரியும்
கண்ணிலே என்ன உண்டு கண்கள்தான் அறியும்
கல்லிலே ஈரம் உண்டு கண்களா அறியும்
நெருப்பென்று சொன்னால் நீரிலும் அணையும்
நீரென்று சொன்னால் நெருப்பிலும் வேகும்
நெருப்பென்று சொன்னால் நீரிலும் அணையும்
நீரென்று சொன்னால் நெருப்பிலும் வேகும்
நான் கொண்ட நெருப்பு அணைக்கின்ற நெருப்பு
யார் அணைப்பாரோ இறைவனின் பொறுப்பு
என் மனம் என்னவென்று என்னையன்றி யாருக்குத் தெரியும்
கண்ணிலே என்ன உண்டு கண்கள்தான் அறியும்
கல்லிலே ஈரம் உண்டு கண்களா அறியும்
சேலைக்குள் ஆடும் மங்கையின் மேனி
மேனிக்குள் ஆடும் மனமெனும் ஞானி
ஞானியின் மனமும் ஆசையில் தேனீ
ஞானியின் மனமும் ஆசையில் தேனீ
நானொரு ராணி பெண்களில் ஞானி
என் மனம் என்னவென்று என்னையன்றி யாருக்குத் தெரியும்
கோடையில் ஓர் நாள் மழை வரக்கூடும்
கோவில் சிலைக்கும் உயிர் வரக்கூடும்
காலங்களாலே காரியம் பிறக்கும்
காலங்களாலே காரியம் பிறக்கும்
காரியம் பிறந்தால் காரணம் விளங்கும்
என் மனம் என்னவென்று என்னையன்றி யாருக்குத் தெரியும்
கண்ணிலே என்ன உண்டு கண்கள்தான் அறியும்
கல்லிலே ஈரம் உண்டு கண்களா அறியும்
என் மனம் என்னவென்று என்னையன்றி யாருக்குத் தெரியும்
" I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.
-
19th October 2010, 06:06 PM
#16
Senior Member
Veteran Hubber
azhagiya senniRa vaanam(Kashmir kaadhali)
பாடல்: அழகிய செந்நிற வானம்
திரைப்படம்: காஷ்மீர் காதலி
இசை: ஜி.கே.வெங்கடேஷ்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி
அழகிய செந்நிற வானம் அதிலே உன் முகம் கண்டேன்
அழகிய செந்நிற வானம் அதிலே உன் முகம் கண்டேன்
புது ரோஜாவில் ஒன்று பெண்ணென்று வந்து
கண்ணோடு நின்ற அழகோ...ஓஓ ஓ
அழகிய செந்நிற வானம் அதிலே உன் முகம் கண்டேன்
அழகிய செந்நிற வானம் அதிலே உன் முகம் கண்டேன்
புது ரோஜாவில் ஒன்று என்னோடு வந்து
கண்ணோடு நின்ற அழகோ...ஓஓ ஓ
கண்கொண்ட நீல வண்ணம் வான் தந்த சீதனம்
கண்கொண்ட நீல வண்ணம் வான் தந்த சீதனம்
காணாமல் காண்பதெல்லாம் பெண்மானின் சாகசம்
காணாமல் காண்பதெல்லாம் பெண்மானின் சாகசம்
என்னென்னதான்...நாணமோ...பாவமோ...ஓஓ ஓ
அழகிய செந்நிற வானம் அதிலே உன் முகம் கண்டேன்
புது ரோஜாவில் ஒன்று பெண்ணென்று வந்து
கண்ணோடு நின்ற அழகோ...ஓஓ ஓ
ஆகாயம் பூமி அங்கே ஒன்றாக ஆனது
ஆகாயம் பூமி அங்கே ஒன்றாக ஆனது
ஆணோடு பெண்மை இங்கே ஒன்றாக ஆவது
ஆணோடு பெண்மை இங்கே ஒன்றாக ஆவது
அந்தாதி நான்...பாடவோ...கூடவோ...ஓஓ ஓ
அழகிய செந்நிற வானம் அதிலே உன் முகம் கண்டேன்
புது ரோஜாவில் ஒன்று என்னோடு வந்து
கண்ணோடு நின்ற அழகோ...ஓஓ ஓ
-
19th October 2010, 06:11 PM
#17
Senior Member
Veteran Hubber
unnidaththil ennai koduththEn(avaLukkenRu oru manam)
பாடல்: உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
திரைப்படம்: அவளுக்கென்று ஒரு மனம்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர்: எஸ்.ஜானகி
உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
உன்னை உள்ளமெங்கும் அள்ளித் தெளித்தேன்
உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
உன்னை உள்ளமெங்கும் அள்ளித் தெளித்தேன்
உறவினில் விளையாடி வரும் கனவுகள் பலகோடி
உறவினில் விளையாடி வரும் கனவுகள் பலகோடி
உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
உன்னை உள்ளமெங்கும் அள்ளித் தெளித்தேன்
காற்றில் ஆடும் மாலை என்னை பெண்மை என்றது
காற்றில் ஆடும் மாலை என்னை பெண்மை என்றது
காதல் ஒன்று தானே வாழ்வில் உண்மை என்றது
காதல் ஒன்று தானே வாழ்வில் உண்மை என்றது
இதழுடன் இதழாட நீ இளமையில் நடமாடு
நினைத்தால் போதும் வருவேன்
ஆஆ ஆஆ தடுத்தால் கூட தருவேன்
உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
உன்னை உள்ளமெங்கும் அள்ளித் தெளித்தேன்
வெள்ளம் செல்லும் வேகம் எந்தன் உள்ளம் சென்றது
வேகம் வந்த நேரம் இன்ப இல்லம் கண்டது
இனியொரு பிரிவேது அந்த நினைவுக்கு முடிவேது
இரவும் பகலும் கலையே
ஆஆ ஆஆ இருவர் நிலையும் சிலையே
உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
உன்னை உள்ளமெங்கும் அள்ளித் தெளித்தேன்
ஊடல் கொண்ட பெண்மை அங்கே தனியே நின்றது
ஊடல் கொண்ட பெண்மை அங்கே தனியே நின்றது
கூடல் கொள்ள மன்னன் உள்ளம் அருகே வந்தது
கூடல் கொள்ள மன்னன் உள்ளம் அருகே வந்தது
என்னடி விளையாட்டு என்று சொன்னவன் மொழிகேட்டு
ஆசையில் விழுந்தேன் அங்கே
ஆஆ ஆஆ காலையில் கனவுகள் எங்கே
உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
உன்னை உள்ளமெங்கும் அள்ளித் தெளித்தேன்
உறவினில் விளையாடி வரும் கனவுகள் பலகோடி
உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
-
19th October 2010, 06:23 PM
#18
Senior Member
Veteran Hubber
Devan thandha veeNai(unnai naan sandhiththEn)
பாடல்: தேவன் தந்த வீணை
திரைப்படம்: உன்னை நான் சந்தித்தேன்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: பி.ஜெயசந்திரன் & எஸ்.ஜானகி
தேவன் தந்த வீணை
அதில் தேவி செய்த கானம்
தேவன் தந்த வீணை
அதில் தேவி செய்த கானம்
தேடும் கைகள் தேடினால்
அதில் ராகமின்றி போகுமோ
தேவன் தந்த வீணை
அதில் தேவி செய்த கானம்
மேகம் பாடும்...மேகம்...பாடும்
மேகம் பாடும் பாடல் கேட்டேன்
நானும் பாடிப் பார்க்கிறேன்
மேகம் பாடும் பாடல் கேட்டேன்
நானும் பாடிப் பார்க்கிறேன்
மோகமோ...ஓஓ ஓஓ ஓ
மோகமோ சோகமோ
இனியும் நெஞ்சம் தூங்குமோ
நாளும் நாளும் தேடுவேன்
தேவன் தந்த வீணை
அதில் தேவி செய்த கானம்
தேடும் கைகள் தேடினால்
அதில் ராகமின்றி போகுமோ
தேவன் தந்த வீணை
அதில் தேவி செய்த கானம்
வானம் எந்தன் மாளிகை
வையம் எந்தன் மேடையே
வானம் எந்தன் மாளிகை
வையம் எந்தன் மேடையே
வண்ணங்கள் நான் எண்ணும் எண்ணங்கள்
எங்கிருந்தோ இங்கு வந்தேன்
இசையினிலே எனை மறந்தேன்
இறைவன் சபையில் கலைஞன் நான்
தேவன் தந்த வீணை
அதில் தேவி செய்த கானம்
தேடும் கைகள் தேடினால்
அதில் ராகமின்றி போகுமோ
தேவன் தந்த வீணை
அதில் தேவி செய்த கானம்
-
19th October 2010, 06:54 PM
#19
Senior Member
Veteran Hubber
thendRal vandhu ennai thodum(thendRalE ennai thodu)
பாடல்: தென்றல் வந்து என்னைத் தொடும்
திரைப்படம்: தென்றலே என்னைத் தொடு
இசை: இளையராஜா
பாடியவர்கள்: கே.ஜே.யேசுதாஸ் & எஸ்.ஜானகி
தென்றல் வந்து என்னைத் தொடும்
ஆஹா சத்தம் இன்றி முத்தம் இடும்
பகலே போய்விடு இரவே பாய்கொடு
நிலவே பன்னீரைத் தூவி ஓய்வெடு
தென்றல் வந்து என்னைத் தொடும்
ஆஹா சத்தம் இன்றி முத்தம் இடும்
தூரல் போடும் இந்நேரம்
தோளில் சாய்ந்தால் போதும்
சாரல் பாடும் சங்கீதம்
கால்கள் தாளம் போடும்
தெரிந்த பிறகு திரைகள் எதற்கு
நனைந்த பிறகு நாணம் எதற்கு
மார்பில்...சாயும்...போது
தென்றல் வந்து என்னைத் தொடும்
ஆஹா சத்தம் இன்றி முத்தம் இடும்
பகலே போய்விடு இரவே பாய்கொடு
நிலவே பன்னீரைத் தூவி ஓய்வெடு
தென்றல் வந்து என்னைத் தொடும்
ஆஹா சத்தம் இன்றி முத்தம் இடும்
தேகம் எங்கும் மின்சாரம்
பாய்ந்ததேனோ அன்பே
மோகம் வந்து என் மார்பில்
வீழ்ந்ததேனோ கண்ணே
மலர்ந்த கொடியோ மயங்கி கிடக்கும்
இதழின் ரசங்கள் எனக்கு பிடிக்கும்
சாறம்...ஊறும்...நேரம்
தென்றல் வந்து என்னைத் தொடும்
ஆஹா சத்தம் இன்றி முத்தம் இடும்
பகலே போய்விடு இரவே பாய்கொடு
நிலவே பன்னீரைத் தூவி ஓய்வெடு
தென்றல் வந்து என்னைத் தொடும்
ஆஹா சத்தம் இன்றி முத்தம் இடும்
-
19th October 2010, 11:30 PM
#20
Senior Member
Veteran Hubber
oru raagam paadalOdu(aanandha raagam)
பாடல்: ஒரு ராகம் பாடலோடு
திரைப்படம்: ஆனந்த ராகம்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: கே.ஜே.யேசுதாஸ் & எஸ்.ஜானகி
ஒரு ராகம் பாடலோடு காதில் கேட்டதோ
மனதோடு ஊஞ்சல் ஆடுதோ
தினம் உறங்காமல் வாடுதே
சுகம் உறவாட தேடுதே
ஓ நெஞ்சமே ஓராயிரம் சுகம் இது
ஒரு ராகம் பாடலோடு காதில் கேட்டதோ
மனதோடு ஊஞ்சல் ஆடுதோ
மாலை நேரக்காற்றில் மகிழ்ந்தாடும் தென்னங்கீற்றே
மாலை சூடி நாளும் எனை ஆளும் தெய்வம் நீயே
காதல் தேவி எங்கே தேடும் நெஞ்சம் அங்கே
தேரில் போகும் தேவதை நேரில் வந்த நேரமே
என் உள்ளம் இன்று வானில் போகுதே
ஒரு ராகம் பாடலோடு காதில் கேட்டதோ
மனதோடு ஊஞ்சல் ஆடுதோ
ஏதோ நூறு ஜென்மம் ஒன்று சேர்ந்து வந்த சொந்தம்
வாழும் காலம் யாவும் துணையாக வேண்டும் என்றும்
காலம் தந்த பந்தம் காதல் என்னும் கீதம்
ஜீவனாக கேட்குதே சேர்ந்து இன்பம் கூட்டுதே
வராத காலம் வந்து சேர்ந்ததே
ஒரு ராகம் பாடலோடு காதில் கேட்டதோ
மனதோடு ஊஞ்சல் ஆடுதோ
தினம் உறங்காமல் வாடுதே
சுகம் உறவாட தேடுதே
ஓ நெஞ்சமே ஓராயிரம் சுகம் இது
ஒரு ராகம் பாடலோடு காதில் கேட்டதோ
மனதோடு ஊஞ்சல் ஆடுதோ
Bookmarks