Results 1 to 10 of 3049

Thread: Nadigar Thilagam : The Greatest Actor of the Universe & The One & Only BO Emperor

Hybrid View

  1. #1
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    'பொங்கல்' வாசுதேவன் சார்,

    தங்களை 'வருக! வருக!' என இரத்தின கம்பளம் விரித்து மனமார வரவேற்கிறோம்..!

    மடை திறந்த வெள்ளமென 'பொங்கலோ பொங்கல்' என்று பொங்கி வந்துள்ளீர்கள்..!

    அந்தப் பொங்கலின் விளைவாக இங்கு எத்தனை வகையான படையல்..!

    'முக்கண் முதல்வ'ரை முதல் புகைப்படமாக அளித்த பதிவு முதல்வரே,

    'அம்பிகையே ஈஸ்வரியே' பாடல் வீடியோ என்ன..,

    [இன்றும் இப்பாடலின் முதல் இரண்டு சரணங்களும் கூட என்னமாய்ப் பொருந்துகின்றன..

    வேலையிலே மனசு வெச்சோம் முத்துமாரி
    இப்போ வெற்றிக்கொடி நாட்டுகிறோம் முத்துமாரி
    ஆலமரம் போலிருக்கும் எங்கள் கூட்டம்
    எமை ஆதரிச்சு வாழ்த்துதடி முத்துமாரி

    ஏழைகள ஏய்ச்சதில்ல முத்துமாரி
    நாங்க ஏமாத்தி பொழச்சதில்ல முத்துமாரி
    வாழவிட்டு வாழுகிறோம் முத்துமாரி
    இனி வருங்காலம் எங்களுக்கே முத்துமாரி

    கவியரசருக்கு ஒரு ராயல் சல்யூட்..]

    நாணயத்தையும், நா நயத்தையும் நடிகர் திலகத்தின் 'நாணயம் மனுஷனுக்கு அவசியம்' அறவுரைப் பாடல் மூலம் தெரிவித்த விதம் என்ன..,

    தம்மை ஈன்றெடுத்த தெய்வத்துடன் கலைதெய்வம் அமர்ந்திருக்கும் 'சிவாஜி புரொடக்ஷன்ஸ்'ஸின் அன்றைய-இன்றைய Logoவை இடுகை செய்து, உண்மையிலேயே உச்சி முதல் உள்ளங்கால் வரை சிலிர்க்க வைத்த சிறப்பு என்ன..,

    'சிவாஜி புரொடக்ஷன்ஸ்'ஸின் முழுமுதற் தயாரிப்பான "அமர்தீப்(1958)"பின் கிடைத்தற்கரிய ஸ்டில் என்ன, டைட்டில் வீடியோ என்ன..,

    என்ன என்ன என்ன.., என்ன என்ன என்ன..,

    எதைச் சொல்வது எதைச் சொல்லாமலிருப்பது..,

    அரிய பதிவுகளுக்கு ஆனந்தமான பாராட்டுக்கள்..!

    தங்களின் இணையில்லா அன்புக்கும், பாசமான பாராட்டுதல்களுக்கும், பொன்னான வாழ்த்துக்களுக்கும் எனது ஆத்மார்த்தமான நன்றிகள்..!

    இனி இந்தத் திரியில்,

    கலக்கப் போவது யாரு.. நீங்கள் தான்..!

    பாசப்பெருக்கில்,
    பம்மலார்.
    pammalar

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    லேட்டஸ்ட்

    இதயதெய்வத்தின் 11வது அவதார நிறைவு நாள்

    [21.7.2012 : சனிக்கிழமை]

    பக்தகோடிகளின் பக்தி வெளிப்பாடுகள்








    தொடரும்...

    பக்தியுடன்,
    பம்மலார்.
    pammalar

  4. #3
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    திரைக்காவிய முதல் வெளியீட்டு விளம்பரங்கள் : 3

    நடிகர் திலகத்தின் 32வது காவியம்

    அமரதீபம் [வெளியான தேதி : 29.6.1956]

    100 நாட்களுக்கு மேல் ஓடிய சூப்பர்ஹிட் காவியம்

    பொக்கிஷாதி பொக்கிஷம்

    10வது வார விளம்பரம் : The Hindu : 1.9.1956


    தொடரும்...

    பக்தியுடன்,
    பம்மலார்.
    pammalar

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •