Page 9 of 401 FirstFirst ... 78910111959109 ... LastLast
Results 81 to 90 of 4003

Thread: Nadigar_Thilagam_Sivaji_Ganesan_Part 16

  1. #81
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Cloud O'Nine songs of NT Vs Passing Cloud Songs of NT!

    ஒன்பதாம் அடுக்கு மேகங்கள் Vs கடந்து செல்லும் மேகங்கள்
    ஒன்பதாம் மேக அடுக்கு என்பது சொர்க்கத்தின் நுழைவாயிலைத் தாங்கி நிற்கும் திரண்ட மேகக்கூட்டத்தைக் குறிப்பதே! அதை வைத்தே சந்தோஷத்தின் உச்சத்தை feeling as if we are on a Cloud 9 என்று சொல்லும் பழக்கம் வந்திருக்க வேண்டும்!
    கடந்து செல்லும் Passing Clouds மேகங்களோ சிலசமயம் குளிர்ச்சியாகவும் சிலசமயம் வெறுமையாகவும் நம்மை மேனியைத் தழுவிச் செல்லும் போது ஒரு சிலிர்ப்பை மட்டுமே உண்டாக்கும் !
    நடிகர்திலகத்தின் மகத்தான படங்களிலும் இசைக்கோர்வையும் பாடல்களும் உள்ளத்தை அள்ளினாலும் பலபாடல்கள் நம்மை ஒன்பதாம் மேக அடுக்கின் உச்சிக்கு கொண்டு சென்று ஆனந்த அதிர்வுகளை உண்டாக்கின! சில பாடல்கள் படத்தில் பார்க்கும்போது மட்டுமே சிலிர்ப்பை உண்டுபண்ணி கடந்து செல்லும் மேகங்களாக முடிந்து விட்டன !!

    நேற்று சன்லைப் சானலில் உத்தமபுத்திரன் திரைக்காவியத்தை ஈடுபாட்டுடன் ரசித்த போது சில பாடல்கள் இந்த எண்ணத்தை தூண்டி விட்டன !

    பகுதி 2 : உத்தமபுத்திரன் (1958) : என் கண்ணோட்டத்தில்.....
    Cloud O'9 songs : உள்ளம் சொர்க்கவாசலுக்கே சென்றுவிட்ட உணர்வினைத் தந்தவை!











    படம் பார்க்கும்போது மட்டும் நினைவில் நிற்பவை!!Passing Clouds!





    mannulakellam ponnulakaka maaridium vaelai! song with Padmini and Ragini introduction!
    Last edited by sivajisenthil; 27th July 2015 at 08:29 PM.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #82
    Senior Member Diamond Hubber joe's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Singapore
    Posts
    9,462
    Post Thanks / Like
    Quote Originally Posted by SUNDARAJAN View Post



    சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல... எவரும் எட்டாத அதிசயம்.
    சின்ன சந்தேகம் .. இதில் பதிவிறக்கம் (download) என்பதற்கு பதில் பதிவேற்றம் (upload) என்று தானே இருக்க வேண்டும்.
    பாசமலருக்கு அழாதவன் மனுஷனாடே ! - சுயம்புலிங்கம்

  4. #83
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like








    Info & Images courtesy: Mr. Annadurai, Trichy.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  5. Thanks eehaiupehazij thanked for this post
    Likes Georgeqlj, Russellmai liked this post
  6. #84
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Date: 26.07.15


    12.00 PM Gowravam - Jaya Movies

    3.00 PM Vazhkkai - Vasanth

    5.00 PM Preview of VKPB at Four Frames

    6.00 PM Kungumam - NTFANS

    7.00 PM Pava Mannippu - Murasu

    7.00 PM Uthama Puthiran - Sun Life

    10.00 PM Ennai Pol Oruvan


    Complete domination by NT in Satalite Channels.

  7. Thanks vasudevan31355, eehaiupehazij thanked for this post
    Likes RAGHAVENDRA, Georgeqlj liked this post
  8. #85
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    Rks - மிகவும் அருமையாக விவரித்துள்ளீர்கள் . நாம் வேண்டுவது எல்லாம் இந்த படம் கர்ணனையும் மிஞ்சி வெள்ளி விழா கொண்டாடவேண்டும் - பாகுபாடுகள் இல்லாமல் எல்லா தரத்தினரும் வந்து பார்க்க வேண்டும் - இது நம் நாட்டுக்கு செய்யும் மிகப்பெரிய மரியாதை - தேசபக்தி நிறைந்துள்ள ஒவ்வொருவனும் , அவன் குடும்பத்தினரும் வந்து பார்க்க வேண்டும் - அப்படி பார்க்க வராதவர்கள் இந்த நாட்டின் அசல் வித்துக்களாக இருக்க தகுதி அற்றவர்கள் . பல படங்கள் வந்த வண்ணம் இருக்கின்றன - இந்த படத்திருக்கும் கர்ணன் போல மார்க்கெட்டிங் மிகத்தேவை . நகைச்சுவை காட்சிகள் , அவர்கள் பாடும் பாடல்கள் நீக்கப்படவேண்டும் - நீக்கி உள்ளார்களா ? - படம் எப்பொழுது வெளிவர இருக்கிறது ?? சாந்தியில் வர வாயிப்பு இருக்கிறதா ?

  9. Thanks eehaiupehazij thanked for this post
    Likes vasudevan31355, eehaiupehazij liked this post
  10. #86
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  11. Likes Georgeqlj, eehaiupehazij, Russellmai liked this post
  12. #87
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    நடிகர்திலகம் சிவாஜி மணிமண்டபத்தை அமைக்க தமிழக அரசை வலியுறுத்தி, நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை சார்பில் நடிகர்திலகத்தின் 14 ஆம் ஆண்டு நினைவு நாளான 21-07-2015, செவ்வாய்க்கிழமை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது. தமிழகம் முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கலந்து கொண்ட இந்த உண்ணாவிரதத்தில், அனைத்துக் கட்சித் தலைவர்கள், திரையுலகப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

    இந்த உண்ணாவிரதம் குறித்த சில பத்திரிகைச் செய்திகள்.











    நன்றி.
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  13. Thanks eehaiupehazij thanked for this post
    Likes Georgeqlj, eehaiupehazij liked this post
  14. #88
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    ஒரே ரூம்.ஒரெ டிரஸ்.எந்தவித ஆட்டங்களும் இல்ல.உடல்மொழிகளாலும்.,முகத்தில் காட்டுகிற உணர்ச்சிகளாலும் மட்டுமே
    பாட்டைக் கொண்டு போகணும்.இந்தப் பாட்டோ சோகத்தோட சந்தோசத்தையும் கலந்து பாட வேண்டிய பாட்டு வேற.சோகம் தூக்கலாயிச்சுன்னா பாட்டோட ரசனை மாறிப்போய்விட வாய்ப்புகள் அதிகம்..இந்த பாடலின் சிச்சுவேசனை கேட்கிற யாராயிலிருந்தாலும் அவங்க மனசுல சோகம்தான்தங்கும்.நடிக்கிறவர்களும் சோகத்தைக் காட்டியேதான் நடிப்பாங்க.அதனால் இந்த மாதிரி பாடல்கள் நன்றாக இருந்தாலும் உணர்ச்சி மயமாக நடிப்பு அமையாதபோது அந்த பாடல்கள் காலம்தாண்டி நிற்பதில்லை.

    அந்தந்த கோணங்களில் காட்டப்பட்ட நடிகர்திலகத்தின் பாவனைகளும் அசைவுகளும் இப்பாடலை உயரத்துக்கே கொண்டு சென்று விட்டது.அலட்டிக்கொள்ளாத நடிப்பில்அசர வைக்கும் பாடலாக மாறிய அதிசயம் இந்தப் பாடல்.


    (கல்யாணமாம் கச்சேரியாம்
    பொன்னூஞ்சலாம் பூமாலையாம்
    ஜோர் ஜோர் ஜோர் ஜொஜொ ஜொஜோர்)

    ஜோர் ஜோர்னு பாரதியின் முகத்திற்கு அருகில் சென்று அந்த வார்த்தைகளை பாடும்போது அந்த காட்சிக்குமேற்கூறிய விளக்கம் மேம்படுத்தப்பட்டிருக்கும்.
    TMS ன்குரல் வெளிப்படுத்திய உச்சரிப்பை
    பலமடங்காக உயர்த்திக்காட்டிய பாவனை அது.அது காட்சிப்படுத்தப்பட்ட பின்பு தான்TMSக்கே அதன்பலம் புரிந்திருக்கும்.

    அதன் பின் ஒரு சிறுநடை.அந்த உடம்பு அசையற பாணியே தனிதான்.சோகப்பாட்டாவது.
    வாழ்த்துப்பாடாவது.
    அவர் நடந்தாலே போதும்யா.என்ன அழகு.நடைதிலகம்யா.

    மறுபடியும் கல்யாணமாம்..,

    கல்யாணியில் ஆலாபனை
    கண்ணீரில்ஆராதனை(கல்

    ஆலாபனையில் முகம் சொக்கவைக்கும்
    ஆராதனையில் முகம் மயங்க வைக்கும்.
    ஆராதனை என்று முடிக்கும்போது அவர்
    மெல்ல கண்மூடி திறக்கும்போது நம்மையுமஅதுபோல் மெல்ல கண்முடி திறக்க வைக்கும் உணர்வைக் கொண்டு வரும்.


    இப்போது Backround music

    இதுல வருதய்யா அந்த சீன்.நடந்து வந்து
    டீப்பாய்அருகில் வந்துமெல்லக் குனிந்து
    காகிதங்களைப ப்ப்பூபூ என்று ஊதி தள்ளும் ஸ்டைலுக்கு எந்த நடிப்பிலக்கணம் யாரால் எழுதப்பட்டு உள்ளது?
    அட்டகாசமான ACT(K)ING.


    நான் வளர்த்த பூங்குருவி வேறிடம்தேடி

    இப்போதுகையசைவில் கலங்கடிப்பார்

    செல்ல நினைத்தவுடன்அமைந்தம்மா

    அதற்கொரு ஜோடி

    நிழல்படமாய் ஓடுதம்மா என் நினைவுகள் கோடி

    அவரின் நிழலும் நடிப்பதற்கு உண்டான ஆதாரம் இப்போது காட்சிகளாய்...

    அந்த நினைவுகளால் வாழ்த்துகிறேன் காவியம் பாடி
    (கல்
    பாடலை உச்சத்துக்கு கொண்டு சென்ற காட்சி.அழகியல் நடிப்பு எதுஎன்பதற்கு இதுவே சாட்சி.

    ஏடெடுத்தேன் எழுதிவைத்தேன்நான் ஒரு பாட்டு

    silhouette எனப்படும் நிழல் படத்தில் கூட நடிப்பை காட்டக்கூடிய நடிகன் உலகில் நீ மட்டுமே
    .அதை சாதாரணனும்எளிதில் புரிந்து கொள்வான் இந்தக் கணமே.


    அதை உனக்களித்தேன் பாடுக நீ ராகத்தைப் போட்டு
    அமைதியை நான் வாங்கிக் கொள்வேன்இறைவனைக் கேட்டு
    அவன் நினைத்தது போல் மணமுடிப்பான் மாலையைச் சூட்டு
    (கல்
    மறுபடியும் அந்த ஜோர் ஜோர் பாவனை..
    அட்டகாசப்படுத்தும்.




    இப்போது Backround music

    ஒன்பது வகையான பாவங்களை தொன்னூறு வகையாகக் காட்டும் உன்னத நடிப்பைச் சொல்வேனா?
    இது கண்ணாதாசன் சொன்னது.
    தொன்னூறு வகை பாவங்கள் காட்டப்படும் காட்சிகளின்அணிவகுப்பு நடைபெற்றுக்கொண்டிருக்கும்.


    காவியத்தில் ஓவியத்தில் இருப்பது காதல்
    அது நடைமுறையில் என் வரையில் ஒரு வகை காதல்
    தனிமரமாய் இருப்பதற்கே பிறந்தவன் நானே
    உந்தன் தலைவனுடன் நலம் பெறுவாய் வாழிய மானே!
    இடது கையை தூக்கி ஒரு விரலை காட்டி வாழிய மானே என்று வாழ்த்தும் ஸ்டைலுக்கு வயது வித்தியாசமின்றி கைதட்டல் பறக்கும்.'
    அனைவருக்கும் இப்பாடல் பிடிக்கும்.


    காமிரா உலாவலும், கோணங்களும் ரசிப்பை தூண்டும்.
    Last edited by senthilvel; 27th July 2015 at 04:30 PM.

  15. Thanks RAGHAVENDRA, vasudevan31355 thanked for this post
  16. #89
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் நினைவுப் பொதுக்கூட்டத்தில் செந்தமிழன் சீமான் அவர்கள் ஆற்றிய எழுச்சியுரை


  17. Thanks RAGHAVENDRA, vasudevan31355 thanked for this post
  18. #90
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    சிவகாமியின் செல்வன் சிவாஜியுடன் லதா நடித்த ஒரே படம்

    பதிவு செய்த நாள் : வெள்ளிக்கிழமை, ஜூலை 24, 10:25 pm ist



    நடிகை லதா, எம்.ஜி.ஆருடன் பல படங்களில் நடித்திருந்தாலும் சிவாஜியுடன் "சிவகாமியின் செல்வன்'' என்ற படத்தில் மட்டுமே நடித்தார்.

    இதுபற்றி லதா கூறியதாவது:-

    "15 வயதில் நடிக்க வந்து விட்டாலும் என் ஒவ்வொரு பிறந்த நாளன்றும் எம்.ஜி.ஆர். எனக்கு போன் செய்து வாழ்த்துவதுண்டு. என் 18-வது பிறந்த நாளன்றும் காலையிலேயே போனில் வாழ்த்தினார். "மதியம் ஆபீசுக்கு வரமுடியுமா?'' என்று கேட்டார்.

    போனேன். என்னைப் பார்த்ததும், "உங்கம்மாவுக்கு நான் பண்ணின வாக்குறுதியை நிறைவேற்றி விட்டேன். இப்ப நான் ஒண்ணு கேக்கறேன். செய்வியா?'' என்று கேட்டார்.

    அவர் கேட்ட கேள்வி எனக்குப் புரியவில்லை. அவரே விளக்கினார். "லதா! உனக்கு 18 வயது பிறந்து விட்டது. இப்போது நீ மேஜராகி விட்டாய். உங்கம்மா உன் நடிப்பு தொடர்பாக முன்பு போட்டுக் கொடுத்திருந்த காண்டிராக்ட் இனி செல்லுபடியாகாது. இப்போது நான் போட்டிருக்கும் புதிய காண்டிராக்டில் கையெழுத்து போடுவாயா?'' என்று விளக்கி என் பதிலை எதிர்பார்த்தார்.

    நான் எதுவும் பேசாமல், அவரிடம் இருந்த காண்டிராக்ட் பேப்பரை வாங்கி கையெழுத்துப் போட்டுக் கொடுத்தேன்.

    என்ன ஏதென்று கூட கேட்காமல் நான் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தது, அவருக்கு மிக ஆச்சரியமாக இருந்திருக்கும். ஆனாலும், பட உலகத்தில் அவர் என்னை அவரது படங்களில் ஜோடியாக நடிக்க வைத்திராவிட்டால் நான் ஏது?

    ஆனால் புது ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டுக் கொடுத்ததால், மற்ற நடிகர்கள் படங்களில் நடிக்க கேட்டு வந்த வாய்ப்புகளை நான் ஏற்க முடியாமல் போயிற்று. சிவாஜி படத்தில் கூட "டாக்டர் சிவா'', "அவன்தான் மனிதன்'' என்று என்னைத் தேடி வந்த 2 படங்களில் நடிக்க முடியாமல் போயிற்று.

    ஆனாலும், எம்.ஜி.ஆர். என்னிடம், மற்றவர்கள் படங்களில் நடிக்கக் கூடாது என்று ஒருபோதும் சொன்னதில்லை. "என்னிடம் ஒரு வார்த்தை கேட்டுக்கொண்டு நடி. அப்படிச் செய்தால் படப்பிடிப்பு தேதிகள் இடிக்காமல் இருக்கும்'' என்றுதான் சொல்லியிருந்தார்.

    சிவாஜியுடன் ஒரு படத்திலாவது நடித்து விடவேண்டும் என்ற ஆசை எனக்கு இருந்தது. அப்போதுதான் சிவாஜி நடிக்கும் "சிவகாமியின் செல்வன்'' படம் தயாராக இருந்த நேரம். படத்துக்கு 2 கதாநாயகிகள். ஒரு கதாநாயகி வாணிஸ்ரீ. இன்னொரு கதாநாயகியின் கேரக்டர் படத்தின் பிற்பகுதியில்தான் வரும் என்றார்கள். அதாவது பெரிய சிவாஜியின் மனைவி வாணிஸ்ரீ. அவரின் வாரிசாக உருவாகும் சிவாஜிக்கு யாரைப் போடலாம் என்று பரிசீலித்துக் கொண்டிருந்தார்கள்.

    இந்த தகவல் என் காதுக்கு வந்ததும் இந்த கேரக்டரையாவது ஏற்று நடிப்போமே என்று தோன்றியது. அதோடு மிகக்குறைந்த நாட்களே கால்ஷீட் கேட்டார்கள். அதனால் சிவாஜி படத்தில் நடிக்கும் ஆர்வத்தில் அந்த கேரக்டரில் நடிக்க `ஓ.கே' சொல்லிவிட்டேன்.

    செட்டில் என்னை ரொம்ப மரியாதையாக நடத்தினார், சிவாஜி. "அண்ணனுடன் (எம்.ஜி.ஆர்) நடிக்கிறீங்க. என் கூட இது முதல் படம். நடிப்பில் எந்த மாதிரி சந்தேகம்னாலும் தயங்காம கேளுங்க'' என்று சொன்னவர், "உங்க அப்பா என்னோட நல்ல நண்பர் தெரியுமா?'' என்றும் சகஜமாக பேசி, பதட்டமில்லாமல் நடிக்க வைத்தார். ஆனாலும் தொடர்ந்து அவரது படத்தில் நடிக்கும் வாய்ப்பு அமையாமலே போய்விட்டது.''

    இவ்வாறு லதா கூறினார்.

    எம்.ஜி.ஆர். முதல்- அமைச்சரான நேரத்தில் நடிகர் சங்க அரங்கத்தின் திறப்பு விழா நடந்தது. எம்.ஜி.ஆர். தலைமையில், சிவாஜி முன்னிலையில் நடந்த இந்த விழாவில் லதாவின் நடனம் இடம் பெற்றது.

    அதுபற்றி லதா கூறியதாவது:-

    "நடிகர் சங்க விழாவில் உன் நடனம் முத்தாய்ப்பாக இருக்க வேண்டும் என்று எம்.ஜி.ஆர். சொல்லியிருந்தார். 45 நிமிட நேரம் எனது நடனத்துக்கு ஒதுக்கியிருந்தார்கள். எனவே புராணக்கதையான மகாபாரதக் கதையை எடுத்துக்கொண்டு அதில் வருகிற திரவுபதி போன்ற கேரக்டர்களை `மோனோ' ஆக்டிங்கில் வெளிப்படுத்தி நடனமாடினேன்.

    இந்த நடனத்துக்காக நான் ரிகர்சல் பார்த்தபோது காலில் ஒரு ஆணி குத்திவிட்டது. மறுநாளே நடன நிகழ்ச்சி என்பதால் வலியைப் பொறுத்துக்கொண்டு ரிகர்சலை முடித்தேன்.

    மறுநாள் நிகழ்ச்சியின்போது மேடையில் ஆடும்போது காலில் இருந்து ரத்தம் கொட்டுகிறது. மேடை முழுக்க ரத்தம் கோடுகளைப் போல காணப்பட்டது. முந்தினநாள் என் காலில் ஆணி குத்தியிருந்தது எம்.ஜி.ஆருக்கு மட்டுமே தெரியும்.

    எனவே, மேடையில் நான் ஆடியபோது மற்றவர்கள் கரகோஷம் செய்து கொண்டிருக்க, எம்.ஜி.ஆரின் முகம் மட்டும் இறுக்கமாக இருந்தது.

    நடனம் முடிந்ததும் மேடையேறி என்னைப் பாராட்டியவர், காலில் ஆணி குத்திய நிலையில் நான் நடனமாடியதை குறிப்பிட்டார். "கலை மீது எத்தகைய பற்று இருந்தால், இப்படி காலெல்லாம் ரத்தம் ஒழுக நடனமாடமுடியும்'' என்று அவர் பேசியபோது, அரங்கு முழுக்க ஒரு கணம் அமைதி. மறுகணம் அரங்கே அதிர்ந்து போகும் அளவுக்கு கரகோஷம். நெகிழ்ந்து போனேன்.

    நிகழ்ச்சி முடிந்ததும், மேக்கப் ரூமுக்கு வந்து என்னைப் பாராட்டிய சிவாஜி, "நடனம் ரொம்ப நன்றாக இருந்தது. அதோடு அண்ணன் (எம்.ஜி.ஆர்) சொன்ன மாதிரி தொழிலில் ஈர்ப்பு இருந்தால் மட்டுமே வலியைப் பொறுத்துக் கொண்டு ஆடமுடியும்'' என்று பாராட்டினார்.

    இரு பெரிய திலகங்களின் பாராட்டும், என் கால் வலிக்கு மிகப்பெரிய ஒத்தடமாக அமைந்தது.''

    இவ்வாறு லதா கூறினார்.

Page 9 of 401 FirstFirst ... 78910111959109 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •