PDA

View Full Version : What an embarrassment...!!!!!!!!!!



Madhu Sree
22nd August 2012, 04:38 PM
//After admiring sivan anna, shakthikka, madhuppappa, ppmaa, rsubras... here is My 1st attempt...
You all are great inspirations for me... yedho en paaniyil ezhudhi ullen...!!!!!!! thappirundhaal mannikkavum :bow:...!!!!!!!!!//



'ஹ்ம்ம் நாளைக்கு பிசிக்ஸ் எக்ஸாம்... கருமம் எனக்கு சுத்தமா புடிக்கல...!!!!!! இந்த எழவெடுத்த பிசிக்ஸ் ஏன் நேக்கு மட்டும் வரவே மாடேங்க்றது' புத்தகத்தை அழுத்தினாள் கீர்த்தனா...
இதை பார்த்த அம்மா... 'புஸ்தகத்த வெச்சுண்டு என்ன பேச்சு இதெல்லாம்... ஒழுங்கா படி... புஸ்தகத்த பழிச்சா நோக்கு சுத்தமா படிப்பே வராது சொல்லிட்டேன்...'
'போம்மா உனக்கு வேற வேலையே இல்ல... இதெல்லாம் படிச்சு பாரு, அப்போதான் எனக்கு லைஃப்ல எவ்ளோ கஷ்டம்னு தெரியும்...' என்று சோர்வாய் கூறினாள் கீர்த்தனா

சொல்லி முடிக்கவில்லை, லான்ட்லைன்க்கு என்ன தோனித்தோ அலறியது...!!!!!

கீர்த்தனா சோம்பல் முறித்துக்கொண்டு 'போஃன் எடும்மா' என்றாள் ...

'ஆமா இவ படிச்சி கிழிக்குற கிழிக்கு போஃன் எடுக்க இவளுக்கு ஒரு அஸிஸ்டென்ட்' என்றாள் அம்மா...

'ஹலோ, சொல்லுடா கணேஸா... என்னடா சொல்ற... அய்யய்யோ... எப்போ... குடுகுடு அக்காட்ட போஃன் குடு, என்னடி மஹா இது திடீர்னு..
மனச தளர விடாத நாங்கல்லாம் இருக்கோம்...' அழுதுவிட்டு போஃன் வைத்து விட்டு, முந்தானையை எடுத்து வாயில் பொத்திக்கொண்டாள் அம்மா...

இதை பார்த்த கீர்த்தனாவுக்கு ஒன்னும் புரியவில்லை... 'என்னமா ஆச்சு...'

'உன் பெரியப்பா போய் சேர்ந்துட்டாராம் டீ' என்று தாரை தாரையாய் வழிந்த கண்ணீரை துடைத்துக்கொண்டு சென்றாள் அம்மா...

அப்பா வீட்டுக்கு வந்தார், 'ஏண்ணா என் மாமா மண்டைய போட்டார்ணா... நாம பாவட்டக்குடிக்கு ஒடனே போயாகனும்...!!!!'... அப்பா ஆதரவாய் அம்மாவை தழுவிக்கொண்டார்...

'ஏய் கீர்த்தனா போய் ரெண்டு ட்ரெஸ் எடுத்து வெய்சுக்கோ கெளம்பு' என்றாள் அம்மா......

'அம்மா நாளைக்கு பிசிக்ஸ் மாடல் எக்ஸாம்...'
'நான் மிஸ் கிட்ட சொல்றேன் நீ போ... '

'ஹ்ம்ம்ம் பெரிப்பா போனதுல ஒரே லாபம் இந்த எக்ஸாம்லேர்ந்து தப்பிச்சதுதான்' என்று மனதுக்குள் நினைத்தாள் கீர்த்தனா...
தம்பி க்ருஷ்-உம் கிரிக்கெட் முடிந்து வர, அவனையும் பேக் செய்ய சொன்னார் அப்பா ...
கிளம்பி வீட்டை விட்டு வெளியே வந்து, வீட்டுக் கதவை தாழிட்டு, கோத்ரேஜ் பூட்டை போட்டு பூட்டினார் அப்பா...!!!!!!

ப்ளாக் 18இல் இருக்கும் தோழி சுகந்தி எட்டிப்பார்த்தாள்...

'சுகந்தி என் பெரியப்பா செத்துப்போய்ட்டார் நாங்க ஊருக்கு போறோம்' என்று சோகமாய் முகத்தை வைத்துக்கொள்ள முயற்சித்தாள் கீர்த்தனா...
'ஐயோ... சரி டீ பாத்து போய்ட்டு வா' என்று டாடா காண்பித்தாள் சுகந்தி...

பஸ்-இல் ஏறி பேரளத்திற்கு நான்கு டிக்கெட் எடுத்தார் அப்பா... பஸ் ஆடி ஆடி சென்றுக்கொண்டிருந்தது...
'எப்போவோ போனது பாவட்டக்குடிக்கு இந்த வாட்டி பப்லூ, வசு, ப்ரியாக்கா, ராஜா அண்ணாவெல்லாம், பாத்துட்டு வரலாம்' மனதுக்குள் குஷியாய் இருந்தது கீர்த்தனாவுக்கு...

கீர்த்தனா அப்பாவிடம் 'அப்பா பேரளத்துல ஆபீஸ் தாத்தாவையும் பாட்டியும்(அப்பாவின் அப்பா & அம்மா) பாத்துட்டு வரலாம்பா'
'சும்மா இரு, போறது சாவு வீடுக்கு, போயிட்டு ரெண்டே நாள்ல திரும்பறோம் அப்புறம் இருக்கற சிவிக்ஸ், சோஷியல் சைன்ஸ் எக்ஸாம்லாம் எழுதனுமோனோ என்று கடுப்பேற்றினார் அப்பா...

அப்பா இது சும்மா மாடல் எக்ஸாம் தானேப்பா... அடுத்த வருஷத்துக்கு இப்போவே கோச்சிங், நீ மிஸ்கிட்ட சொல்லிடேன் ப்ளீஸ்ப்பா... எப்படியும் சம்மர் ஹாலிடேஸ்க்கு எங்காச்சும் போன்னும்ல இந்தவாட்டி இங்க இருக்கலாம்பா...

'சும்மா இரு' என்று கண்டிப்பாக சொன்னார் அப்பா... அநியாயத்துக்கு ஆட்டமும் ஓட்டமுமாய் ஊர்ந்து சென்றது பஸ்... அம்மா அழுது அழுது டயர்ட் ஆகி அப்பா தோள் மேல் சாய்ந்துக்கொண்டு தூங்க... தம்பி கிருஷ்ணன் பஸ் வின்டோ மேல் சாய்ந்துக்கொண்டு தூங்க... கீர்த்தனாவுக்கு தூக்கமே வரவில்லை... மனத்திரையில் பெரியப்பா வந்து போனார்...

'டீ... கீர்த்தூ இப்படி குண்டாயிண்டே போனா மாப்ள தேடுறதே கஷ்டம் பாத்துடி' என்று தொடையில் தட்டி தடவினதே ஞாபகம் வந்தது...
'இதெல்லாம் ஒரு பெரியப்பா' என்று மனதில் அடிக்கடி திட்டியதும் ஞாபகம் வந்தது... இதெல்லாம் அம்மாவிடம் சொல்ல தயக்கம் எப்படி எடுதுப்பாளோனு...
இப்போ சொல்லவும் முடியாது செத்துபோனவர் பத்தி என்ன பேச்சும்பா... என்னென்னவோ மனதில் வந்து போக தன்னையும் அறியாமல் தூங்கி போனாள் கீர்த்தனா...

சுரீரென்று முகத்தில் வெளிச்சம் பட, கண் விழித்தாள் கீர்த்தனா, நன்கு விடிந்து சூரியனும் ஹாய் சொல்ல ...

'கீர்த்தூ இப்படியா தூங்குவ, உன்ன எழுப்பி எழுப்பி பாத்தேன்' என்றான் தம்பி க்ருஷ்...
'எங்கடா இருக்கோம்... '
'பேரளம் கிட்ட வந்துட்டோமாம்...'
'ஹோ ஹப்ப்பாடா'...

'பேரளம் பேரளம்' என்று கூவினார் கண்டக்டர்... நால்வரும் கீழே இறங்கினர்...!!!!!!

தொடரும்...

chinnakkannan
22nd August 2012, 04:59 PM
Good start MS..தொடருங்கள்.. :)

Madhu Sree
22nd August 2012, 05:42 PM
'அப்பா பல் தேய்க்கனும்பா...' என்றனர் கீர்த்தனாவும் க்ருஷ்-ம்
''இன்னும் ரெண்டு மணி நேரத்துல பாவட்டக்குடிக்கு போய்டுவோம் அங்க போய் தேய்க்கலாம்' என்றார் அப்பா...

ஒரு மைல் நடத்தியே கூட்டி சென்றார் அப்பா... வளைந்து வளைந்து சென்றது தெரு, ஒரு வழியாக அந்த ஓரம் ஒரு சின்ன பஸ் ஸ்டாப்... அங்கு சென்று நிறுத்தினார் அன்பு அப்பா...

கொள்மாங்குடி கொள்மாங்குடி என்று சத்தத்துடன்...கும்பலுடன் பிதுங்கிக்கொண்டு வந்து நின்றது ஒரு பஸ்...
இடித்து புடித்து தம்பியுடன் ஏறினார் அப்பா, என்னையும் சேர்த்து பிதுக்கிக்கொண்டு ஏறினாள் அம்மா
என்னை இறுக பிடித்துக்கொண்டு நின்றாள் அம்மா,
'ஏம்மா என்னை இப்படி புடிச்சிக்கற'
'நோக்கு ஒன்னும் தெரியாது என் கூடயே நில்லு' என்றாள் அம்மா...

அந்த கூட்ட நெரிசலில் எத்தனை நேரம் சென்றது என்று தெரியவில்லை, ஒரு வழியாக ஒரு முடிவுக்கு வந்தது போல் கொள்மாங்குடி பஸ் ஸ்டாப்பில் வந்து நின்றது அந்த பஸ் ...
மறுபடி பிதுக்கிக்கொண்டு கீழே நால்வரும் இறங்கினர்...

'காமு(அம்மா பெயர் காமாட்சி) அங்க போனா இப்போதைக்கு சாப்ட முடியாது இங்க ஒரு சின்ன ஹோட்டல் இருக்கு அங்க சாப்டுட்டு போயிறலாம் என்றார் அப்பா...

எறும்பு மாற்றொரு எறும்பின் பின் செல்வதுப்போல் கீர்த்தனாவும் கிரிஷும் அம்மா அப்பாவை தொடர்ந்து ஹோட்டலுக்கு சென்றனர் ...
இட்லி பூரி பொங்கல் என ஆர்டர் செய்து சாப்பிட்டனர்...
'டேய் க்ருஷ் அங்க பாத்தியா ஒரு இட்லி ரெண்டு ரூபாயாம்... சென்னைல ஒரு ப்ளேட் இட்லி 10 ரூபா அதுல ரெண்டே இட்லி தான் இருக்கும் என்று ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர் இருவரும்

ஹோட்டலை விட்டு வெளியே வந்து ஒரு பத்தடி நடந்து சென்றனர்... அங்கே மாட்டு வண்டியுடன் காத்துக்கொண்டிருந்தார் பெரிய மாமா கல்யாணராமன்...

அம்மா ஓடி சென்று, 'அண்ணா என்னணா இப்படி ஆயிடுத்து'..
'சரி சரி... வண்டில ஏறு அங்க போய் பேசிக்குவோம்' என்று சமாதனப்படுத்தினார் மாமா...
எங்களை சுமந்துக்கொண்டு இழுத்துக்கொண்டு சென்றன இரு மாடுகளும் ...

பெரிய மாமம்வும் அப்பாவும் என்னவோ பேசிக்கொண்டே வந்தனர்... அதையெல்லாம் கவனிக்காமல்.. மாட்டு வண்டி சவாரியில் களித்தனர் கிரிஷும் கீர்த்தனாவும்...
'டுர் டுர் ஹேய் ஹேய் டுர் டுர்' என்று மாமாவின் பின்னால் சாய்ந்துக்கொண்டு கிரிஷும் கீர்த்தனாவும் மாட்டை ஓட்டுவது போல் நினைத்துக்கொண்டு விளையாடினர்...
அம்மா அதட்ட, மாமா 'விடு அதுங்களுக்கு என்ன தெரியும்' என்றார்...

ஒரு ஓரமாய் சென்று நின்றது மாட்டு வண்டி... அதுவரை அழாத அம்மா, திடீரென்று குழாயை-ஐ திறந்து விட்டதை போல கண்ணீர் விட்டு விசும்பிக்கொண்டு ஓட்டமும் நடையுமாய் சென்றாள் அந்த ஓட்டு வீட்டுக்குள்... இருபுறமும் திண்ணை, விளக்கு மாடம் வைத்த வாசல்... இதை பார்த்து ரசித்துக்கொண்டே வெளியில் நின்று கொண்டிருதாள் கீர்த்தனா...
மாமா 'கீர்துமா உள்ளபோ' என்றார்...
வாசல் முழுக்க வாயை பொத்திக்கொண்டு நின்றிருந்தனர் அனைவரும்...
கூடம் தாவாரம் தாண்டி உள்ளே சென்றாள்...

அங்கே முற்றத்தில் 'நீட்டமாய் உடம்பு முழுக்க துணியால் சுற்றி கிடத்தி இருந்தனர் பெரியப்பாவை, மூக்கில் பஞ்சு , முகம் என்னவோ போல் வீங்கி போயிருந்தது' பார்க்கவே பயம்மாய் இருந்தது கீர்த்தனாவுக்கு...

முற்றத்தை அடுத்து ஒரு சமையலறை, இடதுப்புறம் ஹால்... நடுவில் ஒரு ஊஞ்சல் இருக்கும் பெரியப்பா இறந்ததினால் அதை கழற்றி ஓரமாய் வைத்திருந்தனர்... ஹால்-ஐ தாண்டி படுக்கையறை... உள்ளே சென்றாள் கீர்த்தனா... அங்கே பப்லூவும் வசுவும்(சித்தி பிள்ளைகள்) இருந்ததைப்பார்த்து முகம் மலர்ந்தாள் கீர்த்தனா 'ஏய் பப்லூ, எப்டி டா இருக்க, வசுமா என்னடி எப்படி இருக்க...' என்று குஷியாக, மாமா வந்து 'ச்சு, சும்மா இருங்க இங்க என்ன நடந்திண்டு இருக்கு, என்ன ஆட்டம் இதெல்லாம் எல்லாரும் சோகமா இருக்கா, சும்மா இருங்கோ' என்று அதட்டினார் பெரிய மாமா. பப்லூவும் வசுவும் மாமாவை தொடர்ந்து ரூம்மை விட்டு வெளியே சென்றனர்...

என்ன இது எனக்கு மட்டும் சோகமாவே இல்லையே... கண்ணாடி முன் நின்று சோகமாய் முகத்தை வைத்து பார்த்துக்கொண்டாள் கீர்த்தனா... திடீரென்று தலையை யாரோ தட்ட திரும்பினாள்... சின்ன மாமாதான்... 'என்னடி பண்ணிண்டு இருக்க இங்க, போ போய் அம்மாவோட இரு' என்று கூறி அறையை விட்டு சென்றார்...

கீர்த்தனாவுக்கு அந்த சூழலே பிடிக்கவில்லை, எப்படி சோகமா இருக்குறதாம்... எல்லாரும் இப்படி சோகமா இருக்காளே என்று அதிசயமாய் பார்த்தாள்... மெல்ல அந்த நெல் பத்தாயத்தின் பக்கம் நின்றுக்கொண்டாள்...அனைவரையும் நோட்டம் விட்டுக்கொண்டிருந்தாள், மனதுக்குள் 'பாரேன் இந்த க்ருஷ்-அ எப்படி சோகமா மூஞ்சிய வச்சிக்கறான், அடிப்பாவி வசு இப்படி அழுத்துட்டு இருக்காளே, இந்த மாதிரி இவ எதாச்சும் செய்யறா, வசுவ பாரு அவள மாதிரி இருன்னு என் உயிரை வாங்கறா அம்மா' என்று மனதுக்குள் பொறிமித்தள்ளிக்கொண்டு இருந்தாள்

பாட்டி, 'ஐயோ இப்படி போய்டியேடா தம்பி, உன்ன வளத்து என் பொண்ண குடுத்து உன்ன ஒரு ஆளாக்கி பாத்தேனே, இப்படி ஏமாத்திட்டியேடா கடங்காரா, என் வலதுகை போல இருந்தியே, இப்படி வெட்டி எடுத்துட்டு போயிட்டியே, பாவி பாவி' என்று ஒப்பாரி வைத்தாள்... பாட்டியை ரொம்ப பிடிக்கும் அதனால் பாட்டி அழுவதை பார்த்து மெல்ல சோகமாய் மாறியது கீர்த்தனாவின் முகம்...

அப்பொழுதான் அது நிகழ்ந்தது...!!!!!!!!!!

தொடரும்...

Madhu Sree
22nd August 2012, 06:20 PM
முற்றத்தில் எல்லா சம்ப்ரதாயங்களையும் செய்துக்கொண்டிருந்தனர்... அப்பொழுது சின்ன மாமாவிடம் அந்த வயதானவர்...

'இந்தாங்கோ இத கொஞ்சம் குழைச்சு எடுத்துண்டு வாங்கோ' என்று எதையோ கொடுத்தார், 'பாத்து ரொம்ப நீர்க்க கொழைச்சுடாதீங்கோ' என்றார்...
அங்கிருந்த பப்புலூவிடம், மாமா 'டேய் பப்புலூ இதுல துளியூண்டு தண்ணி ஊத்து.. பாத்து ரொம்ப ஊத்திடாதே... பாத்து பாத்து' என்று ரொம்ப அக்கறையாய் சொன்னதும்...
பப்புலு கொஞ்சம் பயந்தாற்போல் சொம்பை சாய்த்தான்.. சொல்லிவைத்தாற்போல் ஒரே ஒரு சொட்டு நீரை சிந்தினான் அந்த கிண்ணத்தில்...
அதை பார்த்த மாமாவுக்கு கடுப்பாக அவனை முறைக்க, பப்லூ திருதிருவென முழித்தான்...
அதைப் பார்த்த கீர்த்தனாவுக்கு சிரிப்பு வர களுக்கென்று சிரிக்க... பக்கத்தில் இருந்த நாலு பேர் அவளை பார்த்துவிட்டனர்...
பாட்டியும் சுட்டெரிப்பது போல பார்த்தாள்.. ரொம்ப அசிங்கமாய் தர்மசங்கடமாய் போக...
அழுகையாய் வந்தது கீர்த்தனாவுக்கு... அரை மணிநேரம் ஓ-வென்று அழதாள்... பெரியம்மா இவள் அழுவதை பார்த்து வந்துக் கட்டிக்கொண்டாள்...

'அம்மு பெரியப்பா மேல நோக்கு இவ்ளோ ஆசையா... போயிட்டாரே உன் பெரியப்பா' என்று சேர்ந்து அழுதாள்...

இப்பொழுது கீர்த்தனா திருமணம் ஆகி அவள் கணவனின் பெரியப்பா இறந்து போக அங்கு வந்திருந்தபோது இதை நினைத்துக்கொள்ள... சிரிப்பு வந்தது...
சிரித்துக்கொண்டே திரும்பினாள் அங்கே நான்கு பேர் அவளை பார்க்க, இப்பொழுது மாமியார் சுட்டெரிப்பதைப்போல் பார்க்க...
'ஹோ நோ நாட் அகைன்' என்று மனதுக்குள் பதறினாள்... பிறகு விரக்தியில் சிரிப்பதை போல முகத்தை மாற்றிக்கொள்ள... அனைவரும் சகஜ நிலைக்கு திரும்பினர்...
போதுமடா சாமி என்பது போல இருந்தது கீர்த்தனாவுக்கு...!!!!!

முற்றும்...!!!!!!!!

pavalamani pragasam
23rd August 2012, 07:36 AM
வாவ்! இத்தனை நாளா எங்களுக்குத் தெரியாம இத்தனை திறமையை எங்கே ஒளிச்சி வச்சிருந்தீங்க,ms? படு யதார்த்தம்! மிக ஜோரான வர்ணனைகள்! குறும்பு கொப்புளிக்கிறது! தொடர்ந்து விருந்து கொடுங்கள்!

chinnakkannan
23rd August 2012, 10:40 AM
good. ms. கொஞ்சம் கீர்த்தனா வளர்ந்து கல்யாணம் செய்து கொண்டதை நீட்டி இருக்கலாம்..இருந்தாலும் ஓ.கே..சொல்ல வந்தது எம்ப்ரா..எம்ப்ரா..சரி தமிழ்ல்லய சொல்றேன்..
தர்ம சங்கடம் தானே..:) இன்னும் எழுதுங்கள்..

Madhu Sree
23rd August 2012, 01:52 PM
:ty: PPmaa & Ck for the encouragement... oru kadhai ezhudhanumnu romba naal aasai... sudden spark and wrote it down :D

SoftSword
23rd August 2012, 05:20 PM
ah ms... din expect...
dark comedy maadhiri irukku...
its true that most of the people would be keeping longface for the sake of it eventhough they are not sad...
kadhari kadhari azharavangakooda oru break vittu, pakkathu hotel'la poi sambar sadham saaptutu vandhudhaan continue pannuvaanga... mostly... eventhough it was not intentional and u only concentrated on the comic part, the reality is evident... :thumbsup:

competition between madhu and ms now... sabaash...

Madhu Sree
23rd August 2012, 05:31 PM
Thanks vadi... :bow: :D

priya32
23rd August 2012, 06:32 PM
Very nice attempt Madhusree. The story has a nice flow. en thAththA (ammAvOda appAvai hindu muRaippadi adakkam paNNinaanga, since mom's side is hindu based) iRandhappO nadandha sambavangaLai padam pidichchi kaattinA maadhiri irukku unga kadhai!

Keep it going! :thumbsup:

Madhu Sree
23rd August 2012, 06:33 PM
:ty: priyakkaa... :D

SoftSword
23rd August 2012, 06:37 PM
MS maatniya...
priya is asking for a ban claiming its her story... take it to the court i say...

priya...
physics ungalukku varaadhaa :shock:
chemisty ellaam nallaadhane irukkum... ;)

Madhu Sree
23rd August 2012, 06:42 PM
naradhaaaa... :bow: :lol2:

priya32
23rd August 2012, 06:42 PM
Softsword: Believe it or not, I wrote something like this about 6 weeks back like a small story. Planned to post it in my blog. It was a chilhood memory, which involved the pottivaNdi, long distance walk to get the place etc. Who knows, Madhusree must have had a similiar childhood days like mine! :)

SoftSword
23rd August 2012, 06:46 PM
ms must have stolen the idea from ur dream...

Madhu Sree
23rd August 2012, 06:47 PM
ms must have stolen the idea from ur dream...

Yes I have mind reading technique... lemme read ur mind... :think:

:shock: chee chee ... all corrupted thoughts... :lol2:

priya32
23rd August 2012, 06:47 PM
ms must have stolen the idea from ur dream...

nijaththukkum dream-kkum vithyaasam irukku menkaththi! :lol:

SoftSword
23rd August 2012, 06:54 PM
lol... mosappudikkira naaya moonjapaattha theriyaadhaa... idhukku mind reading vaera...

priya,
dreams is a permutation-combination of ur memories, thoughts & wishes...

madhu
23rd August 2012, 08:21 PM
mayilamma.. indha kathaikku piriya royalty ketkirangala ?

Oh.. idhe story-ai power kooda yosichukittu irundhangalam. PP akka kooda same story-than ninaichadhaa kElvipatten.

jaakkirathai.. idhu unmaiyil chinnakannan sonna story-thane ?

( Ok..Ok.. azhadheenga.. adikka varadheenga.. oru slight nOttam vittEn. naaLaikku innoru vaatti deep-a padichuttu ezhudharen :clap: )

sivank
23rd August 2012, 08:23 PM
Hi Ms,

Very nice attempt, canīt believe that this is your first time. Some of the dialogues are really so natural that it shows that there must a lot from your own experience.

I really enjoyed some of it. Esp. as you wrote that kaamu who was not crying so long suddenly started to pour out it was really hilarious.

Very very very good Effort and you should write more and more

Madhu Sree
23rd August 2012, 08:32 PM
Madhu pappaaa, kurumbu :mugavaaikattaiyil_idichings: :lol2:

sivan anna, :redjump: thanks thanks :bow:

yes own experienceum irukku, unmai... :D mukkiyamaa sollanumnaa, puthakatha(physics book thaan enakku pudikkaadha subject) azhutharadhu thookki eriyaradhu.. idhellaam naan neraya senjirukken :lol2:
mmmm innonnu storyline yosichings, koodiya viraivil ezhudhalaamnu irukken... paakkalaam... meendum nandri :D

Shakthiprabha
23rd August 2012, 09:06 PM
Softsword: Believe it or not, I wrote something like this about 6 weeks back like a small story. Planned to post it in my blog. It was a chilhood memory, which involved the pottivaNdi, long distance walk to get the place etc. Who knows, Madhusree must have had a similiar childhood days like mine! :)

priya, do write about it and share the link from ur blog when u do....I am interested to read...many of us are :)

Shakthiprabha
23rd August 2012, 09:08 PM
அழுதுவிட்டு போஃன் வைத்து விட்டு, முந்தானையை எடுத்து வாயில் பொத்திக்கொண்டாள் அம்மா...


ivangalum mundhanai azharatha...oh god! namma dramavai romba parthirupaanga :lol:


ஆட்டமும் ஓட்டமுமாய் ஊர்ந்து சென்றது பஸ்...

loved this..ungaLukku "varNanai" iyalbaaga varathu...great :bow:


என்று தொடையில் தட்டி தடவினதே ஞாபகம் வந்தது... 'இதெல்லாம் ஒரு பெரியப்பா' என்று மனதில் அடிக்கடி திட்டியதும் ஞாபகம் வந்தது...


:) ....


கும்பலுடன் பிதுங்கிக்கொண்டு வந்து நின்றது ஒரு பஸ்..


super!!!


அதுவரை அழாத அம்மா, திடீரென்று குழாயை-ஐ திறந்து விட்டதை போல கண்ணீர் விட்டு விசும்பிக்கொண்டு ஓட்டமும் நடையுமாய் சென்றாள்


romba raishen ms :D


idhu niraya sondha exp pola theriyuthu :razz: I remember we cousins giggling away during my grand father's death.....vayasu apdi :| ....

ms : story writing la unga plus points which I wanna highlight.

1. வர்ணனை ... (romba iyalba varathu...u can take charge in this area)
2. ஹாஸ்யம் ...elaarkkum idhu amaiyaadhu..

try concentrating on these two areas...niraiay ezhuthunga.... keep up....

:clap: :clap:

Madhu Sree
23rd August 2012, 09:38 PM
:ty: SP kaaa... :happydance:

I will sure... thanks again... :D

rajeshkrv
23rd August 2012, 10:06 PM
Madhusree wonderful, romba pramadham andha pazhaya ninaiugalai indrodu mudithu pothathu oru ezhuthalurkke uriya gunam.. vaazhthukkal

Madhu Sree
24th August 2012, 12:25 AM
:ty: rajesh :D

rajraj
24th August 2012, 05:07 AM
Nice story Madhu Sree.
Reminded me of my train rides from Mayavaram(Mayiladuthurai) to Tiruvarur and Tiruvarur to Koradacheri or Nidamangalam depending on where the "maattu vaNdi" was waiting for me to go to my mother's ancestral village (native place). It also brought back the scenery on the way - green paddy fields, ponds with water lilies or lotus, white cranes looking for fish in the ponds and the rivers crossing the railway lines! :)

In your next story consider including the song:

maattu vaNdi kattikittu maappiLLaiyai koottikittu
kaattu vazhi poravaLe kanniyammai un
un kaasu maalai pathiramaa paathukkammaa :lol:

Keep writing! :)

madhu
24th August 2012, 05:11 AM
vathyarayya..

"kaasu maalai" ennannu mayilammavukku sollidunga.. ( roobai note malai-nu nenachikka poraanga :rotfl: )

Madhu Sree
24th August 2012, 03:24 PM
raj uncle thanks a lot :ty: :bow:

Madhu Sree
24th August 2012, 03:25 PM
madhupappaa, kaasu maalana ennennu enakku theriyum... :D

madhu
24th August 2012, 03:52 PM
mayilammaa :clap:

ungalukkulla oru thoongumoonji writer irunthirukkar.. ippo avar parakka parakka muzhichukittu sara sarannu ezhuthi iruppathai paarkumbodhu avarukkulla innum niraiya puthaiyal irukkumnu thonudhu..

( puthaiyal kitta boodham :boo: irukkumnu solvaangale :shaking: )

nijama poyya enru theriyamal azhum periya paruvamum azha mudiyamal sirikkavum mudiyamal thavikkum chinna season0um ellarukkum avangavanga life-leye vandhu povadhu nichayam.
athai azhaga natural-a mayavaram pakkathula kollumangudi vazhiya gramathukke azhaichukittu poyi kaatinadhu unga ezhuthu thiramai.

anegama sondha anubavam polave irundhuchu :ashamed: I mean unga life-la nadanthathO ?

adutha story-ai edhirparkum mun intha storukku oru periya "O" pottudaren :thumbsup: ( By the by adhu ஓ.. neenga zero-nnu ninaichuda poreenga :yessir: )

Madhu Sree
24th August 2012, 03:58 PM
mayilammaa :clap:

anegama sondha anubavam polave irundhuchu :ashamed: I mean unga life-la nadanthathO ?

lightaa :vadivelu_style: :lol2: peralam en appa valarndha idam, paavattakudi paati(ammaavoda amma) valandha idam, anga oru 5,6 times poyirukken, nalla irukkum... I love that place and missing it a lot :cry:

Thanks a lot madhu pappaa, ellaam unga aasirvaadham... :D

rajraj
24th August 2012, 06:35 PM
madhu: Please note! :) I was getting ready to take a picture of aunty's kaasumaalai! She saved me! :lol:


madhupappaa, kaasu maalana ennennu enakku theriyum... :D

madhu
24th August 2012, 06:42 PM
vathyarayya..

still I hv some doubts abt mayilamma's statement

mayilamma

select one

http://www.eshubham.com/shop/catalog/images/kasumalai-1.jpg

http://www.thehindu.com/multimedia/dynamic/00069/18IN_MAYA_69044e.jpg

Madhu Sree
24th August 2012, 06:46 PM
madhupapaa :evil: en ammakitta oru kaasumaala iruku... enakku theiryum :x :hammer: :razz:

rajraj
24th August 2012, 06:49 PM
Madhu Sree: You missed a great opportunity! :( He was offering you one of those! :)


madhupapaa :evil: en ammakitta oru kaasumaala iruku... enakku theiryum :x :hammer: :razz:

madhu
24th August 2012, 07:44 PM
Madhu Sree: You missed a great opportunity! :( He was offering you one of those! :)

vaathyarayya.. ippo டைம் ஓவர் :happydance:

Thirumaran
25th August 2012, 02:26 PM
Good one Sree. Keep writing :thumbsup:

Madhu Sree
25th August 2012, 08:00 PM
Thanks thiru :D

Madhu Sree
28th August 2012, 04:59 PM
En mudhal kadhaikku 711 views... Thanks a lot ... :bow: ...

madhu
28th August 2012, 05:28 PM
En mudhal kadhaikku 711 views... Thanks a lot ... :bow: ...

adhula neengaLe pArthukittadhu ethanai ? :rotfl2:

Madhu Sree
28th August 2012, 05:51 PM
adhula neengaLe pArthukittadhu ethanai ? :rotfl2:

Good one, yen ungalukku andha maadhiri senju pazhakkamaa :rotfl2: but naane paakkuradhu record aagaadhu... oru software engineer coding avlo mosamaa irukaadhungov... :poke:

madhu
28th August 2012, 06:34 PM
Good one, yen ungalukku andha maadhiri senju pazhakkamaa :rotfl2: but naane paakkuradhu record aagaadhu... oru software engineer coding avlo mosamaa irukaadhungov... :poke:

enna coding-nu ungalukku eppadi theriyum ? appa adhula oozhal nadakka chance irukku..:yes:

enakkuthan edhuvum theriyadhe ::poke:

(unmaiyile en posts inge niraiya irukku. adhanala enakku oru special party kodukkanum :slurp: )