PDA

View Full Version : Naveena vikramadhithan story - முனி- பாட் டூ - காஞ்சனா



madhu
5th September 2012, 09:03 AM
நவீன விக்ரமாதித்தன் கதை - முனி - பாட்டூ - காஞ்சனா

தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் மீண்டும் மரத்தின் மீதேறி அங்கு தொங்கும் உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் கீழே இறங்கி அதனைச் சுமந்து கொண்டு மயானத்தை நோக்கிச் செல்கையில் அதனுள் இருந்த வேதாளம் எள்ளி நகைத்தது, அதைத் தன் தோளில் போட்டபடி செல்கையில் மீண்டும் சற்றே நகைத்து 'மன்னனே ! நீ என்ன காரணத்தால் இந்த முயற்சியில் ஈடுபடுகிறாய் ? எப்படிப்பட்ட புதிருக்கும் எங்கேயாவது யாரிடமாவது விடை கிடைக்கும். அது எங்கே என்று கண்டுபிடிப்பதே சரியான வழி. இதற்கு உதாரணமாக வருங்காலத்தில் இண்டர் நெட்டில் ஹப் ஃஃபோரம் எனும் இணைய தளத்தில் எழுதப் படப் போகும் ஒரு கதையை உனக்கு நான் கூறுகிறேன். கவனமாகக் கேள். ' எனக்கூறி கதையை சொல்லலாயிற்று

தேவபுரம் என்ற ஊரில் ஜெயசீலன் என்ற இளைஞன் இருந்தான். அவன் இளம் வயதில் தாயை இழந்திருந்தான். அவன் தந்தை அந்த ஊரில் பெரிய வியாபாரியாக இருந்ததால் அவனும் அந்த வியாபாரத்திலேயே அவருக்கு உதவியாக இருந்தான். அவனுக்கு ஒரே ஒரு தமக்கை. அவள் மணமாகி வெளியூரில் இருந்தாள். ஆனால் குழந்தைப்பேறின்றி தவித்திருந்தாள். ஜெயசீலன் காளைப் பருவம் அடைந்தபோது அவனுக்குத் திருமணம் செய்ய எண்ணிய அவன் தந்தை அதற்கான முயற்சியை ஆரம்பிக்கும் முன் அவனிடத்திலும் அதைப் பற்றி அழைத்துக் கூறினார்.

எப்போது தந்தையார் இப்படி கேட்பார் என்று எதிர்பார்த்து இருந்தவன் அவன் "தந்தையே ! எனக்கு ஒரு ஆசை " என்றதும் தந்தை அவன் எது ஆசைப்பட்டாலும் நிறைவேற்றித் தருவதாகக் கூறவே ஜெயசீலன் தன் மனதுக்கு உகந்த பெண்ணைத் தானே தேர்ந்தெடுக்க ஆசைப்படுவதாகக் கூறினான். அதற்கு அவர் சம்மதிக்கவே அன்று முதல் கண்ணில் படும் பெண்களை எல்லாம் லுக்கு விட ஆரம்பித்தான் அப்படியே அவர்களிடம் உள்ள அழகுக்கு ஒரு சார்ட் போட்டு மார்க் போட்டு கூட்டி கழித்து கணக்கு போட்டான்.

அழகான முகம் இருந்தால் மிகப் பருமனாக இருந்தாள். இடை இல்லையானால் முகம் வயல்வெளி ஓரத்துப் பூசணி போல பருத்திருந்தது. நடையழகு நன்கு அமைந்தால் உடையழகில் தவறினாள். மொத்தத்தில் அவன் கணக்குப் படிவத்தில் குறித்து வைத்த பெண்கள் ஒருவருமே தேர்ச்சி பெறும் அள்வுக்கு மதிப்பெண்கள் வாங்கவில்லை.

இந்த நேரத்தில்தான் ஒரு நாள் ஊருக்கு அருகில் இருந்த ஆற்றங்கரைக்கு போகும் வழியில் இருந்த மாமரத்தின் பின்னால் இருந்தபடி ஆற்றில் குளித்து விட்டு திரும்பும் குமரிகளை நோட்டம் விட்டுக் கொண்டு இருந்தான். அங்கேயே மூன்று மணி நேரமாக பழி கிடந்தான். யாரும் அவன் பக்கம் திரும்பிப் பார்க்காமலே போனதால் அவனுக்கு என்ன செய்வது என்ற கவலை வந்தது.

அப்போது அவன் மனதில் சட்டென்று ஒரு எண்ணம் தோன்றியது. "வாட் அன் ஐடியா சர்ஜி" என்பது போல தன் பின் மண்டையில் தானே தட்டிக் கொண்டு பாட்டு ஒன்றை பாட ஆரம்பித்தபோதுதான் அந்த விபரீதம் நிகழ்ந்தது. அவன் நின்ற இடத்திற்கு நேர் மேலே மரக்கிளையில் பிரம்ம ராட்சஸ் என்கிற ஒரு முனி இருந்தது. அதற்கு பாட்டு என்றால் பாக்றாகயை பச்சையாகத் தின்பது போல என்பதை அவன் அறியான். மேலும் அது தினமும் மரத்திலிருந்து ஏறி இறங்கும் வழியில் ஜெயசீலன் நின்றதால் அது கோபத்துடன் அவன் முன்பக்கமாக் தொபுக்கடீர் என்று குதித்து ஆத்திரத்துடன் அவனைப் பார்த்தது.

தன் சிந்தனையில் முழுகிக் கிடந்த ஜெயசீலன் அதைக் கண்டு கொள்ளாததால் கோபத்துடன் "நான் மரத்தில் ஏறி இறங்கும் இடத்தில் மூன்று மணி நேரமாக நின்று வழியை ப்ளாக் செய்தது மட்டுமில்லாமல் கேவலமாக ஒரு பாட்டை வேறு பாடிய நீ எதைப் பற்றி நினைத்தாயோ தினமும் மூன்று மணி நேரம் அதுவாகவே மாறக் கடவாய்" என்று சாபம் விட ஜெயசீலன் அடுத்த நொடி ஒரு சூப்பர் ஃபிகராக மாறி விட்டான். அவனைப் பார்த்த முனிக்கே கொஞ்சம் கிக்கு ஏறி தலை சுற்றி வாயின் வழியே ஜொள்ளு வழிந்தபடி அவ்னை உற்று உற்று பார்க்க பெண்ணாக மாறிய ஜெயசீலன் உடனே தடால் என்று காலில் விழுந்தான்.

"நான் வேண்டும் என்று இங்கே நிற்கவில்லை. எனக்கு ஏற்ற பெண்ணைத் தேடி அலைகிறேன். இப்படி என்னையே பெண்ணாக்கி விட்டால் என் கதி என்ன ? எனக்கு சாபவிமோசனம் கொடுக்க வேண்டும் முனியே ! " என்று கேட்க குனிந்து வணங்கிக் கொண்டு இருந்த அவனை(ளை) மேலும் கீழுமாக லுக் விட்ட முனி " விட்ட சாபம் விட்டதுதான். ஆனால் இதை ஒழுங்கா உபயோகித்தால் இதுவே உனக்கு வரமாகும்." என்று உதட்டோரம் வழிந்த ஜொள்ளைத் துடைத்துக் கொண்டது.

"எப்படி ?" என்று அவன்(ள்) கேட்டபோது அவனைக் கண்டு "வாவ்.. நம்ம சாபத்துக்கு இத்தனை சக்தியா ? நிஜப் பெண்களை விட அழகாகவே இருக்கிறாளே ?" என்று நினைத்தபடி "இன்று முதல் உன் பெயர் காஞ்சனா. நீ இப்படியே பெண் உருவத்தில் மற்ற பெண்களுடன் தினம் நெருங்கிப் பழகினால் உன் மனதுக்குப் பிடித்த மங்கையை கண்டு பிடித்து மணக்கலாம் இல்லையா ? என்று முனி ரோடு போட்டுக் கொடுத்தது

"முனியே முனியே ...நான் இப்படி பால் மாறி பெண்ணாக இருந்தால் என்னுடன் யார் குடும்பம் நடத்துவார்கள் ?" என்று அவன்(ள்) அழ முனியும் தலையைத் தட்டி யோசித்தது.

"நானும் ஆத்திரத்தில் சாபம் கொடுத்து விட்டேன். இதற்கான விமோசனம் ஒரே வழிதான். அதாவது நீ ஒரு நாளில் எப்போது விரும்புகிறாயோ அந்த மூன்று மணி நேரம் பெண் உருவம் எடுப்பாய். அப்படி நீ பெண்ணாக இருக்கும்போதே ஒரு ஆணுடன் மோதிரம் மாற்றி மணம் செய்து கொள்ள வேண்டும். அப்படி செய்து விட்டால் உனக்கு அந்த மூன்று மணி நேரம் முடியுமுன் கொஞ்சம் கூட வலியே இல்லாமல் ஒரு ஆண் குழந்தை பிறக்க வரம் தருகிறேன். அதன் பின் நீயும் என்றுமே ஆணாக மாறி அப்படியே இருக்கலாம். உன் மனதுக்கு இசைந்த மங்கையை மணந்து வாழலாம்".

ஜெயசீலனுக்கு இந்த டீலிங் பிடித்திருந்ததால் அவன் ஒரு கும்பிடு போட்டுவிட்டு ஒட ஆரம்பித்தான். கொஞ்சம் நின்றால் முனியே ஒரு மோதிரத்தை எடுத்துக் கொண்டு அவனைத் துரத்தும் என்ற அச்சம் ஏற்பட்டதும் ஒரு காரணம். அப்படி முனியை மணந்து கொள்ள வேண்டி இருந்தாலும் ராட்சஸக் குழந்தை பிறந்தால் அதை என்ன செய்ய முடியும் ? அதனால் அவன் நடுநடுங்கி ஓடினான். அதன் பின் ஜெயசீலன் தினமும் காஞ்சனா என்ற பெயரில் பெண் உருவத்துடன் பெண்கள் மட்டுமே நடமாடும் இடங்களுக்கு பயமின்றி சென்று தானும் நடமாட ஆரம்பித்தான்.

அப்போதுதான் ஒரு நாள் ஆற்றில் குளிக்கையில் ரத்தின வியாபாரியின் மகள் புனிதவல்லியை சந்தித்தான். பெண்கள் மட்டுமே குளிக்கும் பகுதி என்பதால் அவள் கொஞ்சமும் கவலை இலலாமல் நீந்தியபடி காஞ்சனாவிடம் பேச ஆரம்பித்தாள். மெதுவாக புனிதவல்லியிடம் பழகி பழகி சில நாட்களில் அவள் உயிர்த்தோழியான காஞ்சனா புனிதாவின் மனதில் ஜெயசீலன் தன் ஒன்று விட்ட சகோதரன் என்றும் அழகிலும், ஆண்மையிலும் இணையற்றவன் என்றும் உருவேற்றினாள். புனிதவல்லியும் ஜெயசீலனாக இருந்த சமயங்களில் அவனை நோக்கி தன் மனதைப் பறிகொடுத்தாள்.

இப்போதுதான் ஜெயசீலன் மனதில் குழப்பம் அதிகமானது. காஞ்சனாவாக இருக்கையில் ஒரு ஆணை மணந்து கொண்டு சட்டுபுட்டென்று ஒரு குழந்தை பெற்ற பிறகுதான் மீண்டும் ஜெயசீலனாக மாறி ஆணாக வாழ்நாள் முழுவதும் வாழ முடியும். அப்போதுதான் புனிதவல்லியை மணக்கவும் முடியும். தன் மீது பல ஆண்கள் நோட்டம் விடுவதை காஞ்சனாவாக் இருக்கும்போது அவள் கவனித்தாள். அதில் ஒருவரை சட்டுபுட்டென்று மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டாலும் குழந்தை பெற்றால் அதை என்ன செய்வது என்கிற கவலையும் இருந்தது. இந்தக் குழப்பத்துடன் ஒரு நாள் புனிதவல்லியை சந்திக்க அவள் இல்லம் சென்ற காஞ்சனா அவள் வீட்டில் இல்லாததால் திரும்ப எண்ணினான். ஆனால் அப்போது வெளியூரில் இருந்து வந்திருந்த புனிதவல்லியின் அண்ணன் மதனன் அவளை மடக்கி பேசியபடியே இருந்தான்.

மதனனும் அழகனாக இருந்தான். அவன் தனக்கு காதல் வலை வீசுவதை காஞ்சனா அறிந்து கொண்டதால். இப்போது நேரத் தட்டுப்பாடு வந்து சேர்ந்தது. அவள் ஜெயசீலனாக மாறி இருந்த சமயங்களில் மதனனை சந்திக்க விரும்பாததால் காஞ்சனாவாக இருக்கும்போதே அவன் புனிதவல்லியையும், மதனனையும் சந்திக்க வேண்டி இருந்தது. மூன்று மணி நேரத்துக்குள் இருவரையும் தனித் தனியாக சந்திக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு விட்டது.

அப்போதுதான் காஞ்சனா என்ற ஜெயசீலன் புனிதவல்லியின் அண்ணனையே மணந்து கொண்டு சாபவிமோசனம் பெறலாம் என்று முடிவு செய்தான். எனவே தனக்குள் மீண்டும் கணக்கு போட்டான். அதன்படி சில நாட்கள் சென்றதும் ஒரு நாள் மதனனிடம் காஞ்சனா அன்று இரவு தனியே சந்தித்து இருவரும் களவு மணம் புரியலாம் என்று அழைப்பு விடுத்திருந்தாள். அதற்கு மதனனும் உடன்பட்டான்.

ஜெயசீலன் எனும் காஞ்சனா அன்று அந்த முடிவை எடுத்ததற்கு ஒரு காரணம் இருந்தது. ஏனென்றால் அன்றுதான் அவன் தமக்கையும் அவள் கணவரும் ஊரிலிருந்து வந்திருந்தனர். இருவருக்கும் மகப்பேறு இல்லாததால் ஒரு குழந்தையை தத்து எடுக்கலாம் என்ற முடிவுக்கு வந்திருந்தனர். ஜெயசீலனின் தலைக்குள் ராட்டினம் ஒன்று சுற்ற அவன் அவர்களிடம் தன்க்குத் தெரிந்த ஒருவருக்கு குழந்தை பிறக்கப் போவதாகவும் அதை அவர்கள் சில காரணங்களுக்காக வேறு யாருக்காவது கொடுத்து விட முடிவு செய்திருப்பதாகவும் சொல்லி அதை தன் தமக்கைக்கு வாங்கித் தருவதாக் வாக்களித்து விட்டு கிளம்பினான். அன்று தனியிடத்தில் மதனனை சந்தித்து மோதிரம் மாற்றிக் கொண்டு மணந்து விட்டு இரண்டு மணி நேரம் முடியும் முன் தப்பித்து வந்து விட்டால் மூன்றாவது மணி நேரத்தில் பிரசவமாகி குழந்தையை தமக்கையிடம் தந்து விடலாமே !

மதனனும் காஞ்சனாவும் எதிர்பார்த்து காத்திருந்த அந்த நேரமும் வந்து சேர்ந்தது. மதனனின் அறைக்கு காஞ்சனா வந்து சேர்ந்தாள். ஏற்கனவே முடிவு செய்திருந்தபடி மதனன் புனிதவல்லியை உறவினர் யாருடனோ அனுப்பி இருப்பதாக சொன்னான்.

காஞ்சனா நீலப்பட்டாடையில் ஆம்பல் மலர் போல இருக்க, மதனனும் மாப்பிள்ளை போல உடுத்தி இருந்தான்.

"வைர மோதிரமாக வாங்கி இருப்பீர்கள் என நம்புகிறேன்" என்றபடி காஞ்சனா தன் கையிலிருந்த மாணிக்க மோதிரத்தைக் காட்டினாள். "ஹி ஹி.. நான் என்ன நதிக்கரைத் திருவிழா பந்தலிலா மோதிரம் வாங்குவேன்" என்றபடி மதனன் தன் கையிலிருந்த மரகத மோதிரத்தைக் காட்டினான்.

மதனன் வாயாலேயே "பீப்பீப்பீ" என்று ஊத :"டம் டம் டம்" என்றபடி இருவரும் மோதிரம் மாற்றிக் கொண்டனர்.

" நான் உடனே கிளம்புகிறேன். மற்ற சடங்குகள் எல்லாம் இன்னொரு நாள்" என்றபடி காஞ்சனா கிளம்பியபோதுதான் அறைக்கதவு தானாகவே பூட்டிக் கொண்டது தெரிந்தது. சாவியைத் தேடி தேடி களைத்துப் போன இருவரும் கடைசியாக சாளரத்தின் வழியாக இறங்கி விடலாம் என்று முடிவு செய்தனர்.

"அடடா.. இரண்டு மணி நேரத்துக்கு மேல் ஆகி விட்டதே ! இனி இங்கிருந்தால் பிரச்சினை" என்று எண்ணியபடி காஞ்சனா பரபரத்தாள்.

அப்போது "காஞ்சனா.. உன்னிடம் ஒரு முக்கியமான விஷயம் சொல்ல விரும்புகிறேன்" என்று மதனன் ஆரம்பிக்க "எல்லாமே நாளைக்குப் பேசிக் கொள்ளலாம்" என்றபடி அவள் சாளரக் கதவைத் திறக்க முயற்சித்தபோது அதன் தாழ்ப்பாள் சிக்கிக் கொண்டு விட்டது.

"அய்யகோ.. இது என்ன ஆபத்து ?" என்று அவள் எண்ணும்போதே அவள் வயிறு மெல்ல காற்றடைத்த பையாக ஊதத் தொடங்கியது. அதை மதனன் கண்டால் இன்னும் விபரீதம் நேருமே என்று திரும்பியபோது காஞ்சனாவால் தன் கண்ணையே நம்ப முடியவில்லை. அவள் கண்களின் எதிரிலேயே மதனனின் உருவம் மெல்ல மெல்ல உருமாறி புனிதவல்லி ஆனது.

"புனிதா.. இது என்ன ?" என்று கேட்ட காஞ்சனாவை "என்னை மன்னித்துக் கொள் காஞ்சனா. விவரமாக சொல்கிறென். உண்மையில் நான் புனிதவல்லிதான். ஒரு நாள் ஆற்றுக்கு செல்கையில் சற்றே இளைப்பாற ஒரு மாமரத்தின் கீழே அமர்ந்தேன். மெல்ல பாடியபடியே கீழே கிடந்த ஒரு மாங்காயை எடுத்துக் கடித்தேன். அது புளிப்பாக இருந்ததால் மேலே தூக்கி வீசினேன். அது மரத்தின் கிளையில் இருந்த ஒரு முனியின் மேல் பட்டு விட்டது. அதனால் கோபம் கொண்ட முனி ஒரு ஆண்பிள்ளை போல அலட்சியமாக இருக்கும் நீ ஆணாக இருந்தால்தான் உனக்கு புத்தி வரும்" என்று சொல்லி என்னை ஆணாகும்படி சபித்து விட்டது.

காஞ்சனா இடுப்பைப் பிடித்துக் கொண்டு வாயைப் பிளந்தபடி கேட்டுக் கொண்டு இருக்க புனிதவல்லி "நான் முனியின் காலில் விழுந்து சாப விமோசனம் கேட்டதும் தினம் மூன்று மணி நேரம் மட்டும் ஆணாக இருக்கலாம் என்றும் என்றாவது ஒரு பெண்ணை மோதிரம் மாற்றி மணந்து கொண்டால் அதன் பின் நிரந்தரமாக பெண்ணாகி விடுவேன் என்றும் முனி சொன்னதால் அன்று முதல் குழப்பத்திலேயே இருந்தேன். உன்னைக் கண்டதும் உன் மூலமாக பிறகு உன் அண்ணனைக் கண்டதும் நீங்களே என் வாழ்வை செப்பனிடப்போகும் நபர்கள் என்று முடிவு செய்து விட்டேன். என்னை மன்னித்து விடு. உன் அண்ணன் ஜெயசீலனை நான் மணந்து கொள்கிறேன். உனக்கும் ஒரு நல்லவரை திருமணம் செய்து வைக்கிறேன். அது சரி...ஆனால் ஏன் உன் வயிறு இப்படி வீங்குகிறது ? " என்று கேட்டாள்.

"அடி புனிதா.. இப்போது உன் குழந்தை என் வயிற்றில் வளர்கிறது. இதோ இப்போ பிரசவம் ஆகி ஆண் குழந்தை பிறந்து விடும்" என்று காஞ்சனா சொன்னதும் புனிதவல்லி திகைத்துப் போனாள். பின் காஞ்சனா தானே ஜெயசீலன் என்ற உண்மையையும் பாட்டு பிடிக்காத முனியின் சாபத்தைப் பற்றியும் சொல்ல இருவரும் ஒரு முடிவுக்கு வந்தார்கள்.

அதன்படி அன்று ஆண் குழந்தை பிறந்ததும் ஜெயசீலனாக மாறிய காஞ்சனா அதை தன் தமக்கையிடம் கொடுத்துவிட, அவளும் அதற்கு தாசன் என்று பெயர் சூட்டி தன் ஊருக்கு எடுத்துக் கொண்டு போய்விட்டாள். புனிதவல்லியாக மாறிய மதனனை மணப்பதாக ஜெயசீலன் சொன்னதால் அவன் தந்தையும் அவர்களுக்கு திருமணம் செய்து வைத்து விட்டார். சில காலம் கழிந்ததும் புனிதவல்லிக்கு ஒரு பெண்குழந்தை பிறந்தது. அதற்கு இளமதி என்று பெயரிட்டு மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள்.

இந்த இடத்தில் கதையை நிறுத்திய வேதாளம், "மன்னா ! தாசனும், இளமதியும் ஜெயசீலனுக்கும், புனிதவல்லிக்கும் பிறந்தவர்களே என்றாலும் அவர்கள் தாய், தந்தை ஒருவரே அல்ல. ஒருவரின் தாய் மற்றவருக்கு தந்தையாகிறார். இப்போது உன் அறிவுத்திறனுக்கு ஒரு சவால். ஒரு வேளை அத்தை மகனாக வளரும் தாசன் வாலிபப் பருவத்தில் இளமதி யாரென்று அறியாமல் அவளை விரும்பினால் அவர்கள் மணம் புரிந்து கொள்ளலாமா ? இந்தக் கேள்விக்கு சரியான விடை எங்கே கிடைக்கும் ? இவற்றுக்கு பதில் தெரிந்தும் கூறாவிட்டால் உன் தலை வெடித்து சுக்கு நூறாகும்" என்றது.

அதற்கு விக்கிரமன் "லூசு வேதாளமே ! நீயே சொன்னாய். இது வருங்காலத்தில் ஹப் ஃபோரம் எனும் இணைய தளத்தில் வெளியாகப் போகும் கதை என்று. எப்பேர்ப்பட்ட டகல்பாஸ் கேள்விக்கும் விடை தரக்கூடிய ஆசாமிகள் அங்கே உண்டு இது எல்லாம் முருங்கை மரத்தில் தலைகீழாகத் தொங்கும் உன் மண்டையில் எப்போதான் ஏறுமோ ? கொஞ்சமாவது புத்தி இருந்தால் சீக்கிரமே ஹப்பில் சேர்ந்து நீயும் ஒரு ஹப்பர் ஆகிவிடு அங்கே இன்னும் வசந்த், பிபி அக்கா, சிவன்ஜி, பவர், மயிலம்மா, சிக்கா என்று பல பேரெழுத்தாளர்கள் எழுதும் சூப்பர் கதைங்களை படி" என்று கடுமையாகவே பதில் கூறினான்.

விக்கிரமாதித்தனின் சரியான இந்த பதிலால் அவனது மெளனம் கலையவே வேதாளம் அவன் சுமந்து வந்த உடலோடு உயரக் கிளம்பி மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக்கொண்டது. ஆனால் அப்படியே மந்திரத்திலேயே ஒரு லாப்டாப் வரவழைத்து தொங்கியபடியே ஃபோரம் ஹப் தளத்தை பிரவுஸ் செய்ய ஆரம்பித்தது.

( சுபம் )

chinnakkannan
5th September 2012, 10:10 AM
ஹாய் மது அண்ணா..ஹி.ஹி. கதை... நாசூக்காக நன்கு எழுதி உள்ளீர்கள்... எனக்கு ப் பிடித்திருக்கிறது..

இந்தக் கேள்விக்கு ப் பதிலேது சிலர் வாழ்வுக்குப் பொருளேது என்ற பாட்டு தான் பாடத் தோன்றுகிறது.. ஆனால் முனி பிடித்து சின்னக் கண்ணம்மா ஆக்கிவிடுமோ என்ற பயத்தில் பாடாமல் விட்டு விடுகிறேன்..: :)

madhu
5th September 2012, 10:16 AM
:ty: CK

இப்படி நீங்களே பதில் சொல்லாம போனா நியாயமா ? தர்மமா ? நீதியா ? :cry3:

( சின்னக் கண்ணம்மா கூட நல்லாத்தானே இருக்கு ? :think: )

pavalamani pragasam
5th September 2012, 11:52 AM
சூப்பர் கில்லாடித்தனமான கதை! சிரிப்புத் தாங்க முடியவில்லை! :rotfl3:லாஜிக் இல்லாத இந்த மாதிரி முனிக் கதையை, நவீன விக்கிரமாதித்தன் கதையை இணைய மக்கள் படித்து ரசித்துவிட்டு போவார்களே தவிர விடை தேடி மூளை சக்தியை வீணாய் விரயம் செய்வார்களா, என்ன?:roll:

Madhu Sree
5th September 2012, 02:19 PM
madhu papppppppppppppppppppppppaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa aaaaaaaaaaaaaaaaaaaaaaaa........... :cool2:

naan punidhavalli thaan madhananonu oru idathula yugichen... perfectaa apdiye ezhudhi irukeenga... great minds think alike-nu solluvaanga :lol2:

I like the story... :thumbsup: btw, vedhaalam roumba kashtamaana kelvi kekkudhu, sondhaththula marriage panradhu ippo pazhakkam illa... so rejetted :rotfl2:

madhu
5th September 2012, 02:47 PM
ha ha PP akka..:ty:
intha kathaikku badhil solla mooLai sakthi ellam virayam seyyanuma ? :think:

:ty: mayilamma..
I know u will think like that ! ( sooooper minds appadithanunga ) :happydance:

pavalamani pragasam
5th September 2012, 08:32 PM
fools seldom differ-nnum solvaanga!:yessir:
summaa thamaasu!:noteeth:

madhu
5th September 2012, 10:41 PM
fools seldom differ-nnum solvaanga!:yessir:
summaa thamaasu!:noteeth:
neenga solradhu kareetu PP akka !
( ada naama rendu perum kooda oNNa solrOmE ? :wink: )

pavalamani pragasam
6th September 2012, 08:37 AM
buththisaalikkum muttaaLukkum naduvula oru mellisu kOduthaan!!!:-D

madhu
6th September 2012, 08:55 AM
I know...

தான் புத்திசாலி என்று நினைப்பவன் முட்டாள்
தான் முட்டாள் என்று தெரிந்து கொள்ளாதவனும் முட்டாள்.

rajeshkrv
12th September 2012, 01:58 AM
madhunna pramadham.. besh besh .. keep it up

Shakthiprabha
26th September 2012, 12:09 PM
madhu :lol: nalla kathai ponga...mudivu subama nnu theriyaama "subam" potrukeenga :)
kathai ezhuthum paaNi nandri. ezuthaaLar thiramai nandru.

vethaLathidamirunthu thappikka vikramathithan can say

"ஏ வேதாளமே ...இதுக்கு மட்டும் நீ பதில் சொல்லிட்டா... ஆயுசுக்கு நான் உன் அடிமை" apdeenu vedhaLathukitta question a thiruppi vittutu....adhu yosikara andha idukku nerathula...... athai kadathittu odidalaam :idea:

Designer
9th November 2012, 01:12 PM
Madhu : unga imaginative writing arumaiya irukku ! :thumbsup:

madhu
9th November 2012, 07:45 PM
:ty: Rajesh
:ty: power
:ty: Ramky

SoftSword
9th November 2012, 07:56 PM
madhu... i like the story...
do u hav a valid answer for ur question??

however my take is...
if they both love each other, then they shd live together...
no matter wat.

madhu
9th November 2012, 08:02 PM
:ty: மென்வாள்

I dont know the answer... Hope to get various answers from all :)

PARAMASHIVAN
9th November 2012, 08:08 PM
Madhu anna

ennaku ivalavu varushama ( i mean 10 odd year) ah theriyathu neenga, nalla kathai ezhuthuveenga nu :oops:

Keep up the good work :clap: