PDA

View Full Version : பஸ் ஸ்டாப் நண்பன்



Madhu Sree
12th September 2012, 09:06 PM
காலை ஐந்து மணி, கண் விழித்தான் ஜெய்...

தன் மனைவி நிஷாவுக்கு கைபேசியில் அழைத்தான், அவள் எடுக்கவில்லை...

நெற்றியை தேய்த்துக்கொண்டே பாத்ரூமுக்குள் சென்றான், oral-B ப்ருஷை எடுத்து, டூத்பேஸ்ட்-ஐ பார்த்தான்,அந்த டூத்பேஸ்ட் தீர்ந்துவிடும் நிலையில் இருந்தது...

'ஐயோ டூத்பேஸ்ட் வாங்க மறந்துட்டேனே ச்ச' என்று தன்னை நொந்துக்கொண்டான், ஹால்-இல் இருந்த கோத்ரேஜ் பூட்டை எடுத்து டூத்பேஸ்ட்-ஐ தேய் தேய் என்று தேய்த்த போது, மெல்ல பிதிங்கிக்கொண்டு வெளியே வந்தது பேஸ்ட்.
'ஹப்பா' என்று சொல்லிக்கொண்டு பல் தேய்த்து, குளித்து மணியை பார்த்தான், சரியாக 6 என்று காண்பித்தது... சுட சுட ப்ரூ காபி போட்டு குடித்தான்...

மறுபடி நிஷாவின் மொபைல் நம்பருக்கு டயல் செய்தான், 'தாங்கள் டயல் செய்த என் சுவிட்ச் ஆஃப் செய்ய பட்டுள்ளது' என்றாள் ஒரு பெண் எந்திரத்தனமாக... 'ஹ்ம்ம்ம்' என்று பெருமூச்சொன்று விட்டு, மணியை பார்த்தான், 7:58 என்றது வால் கிளாக்.

மெல்ல வீட்டு கதவை பூட்டிவிட்டு பஸ் ஸ்டாப்க்கு நடக்க ஆரம்பித்தான் ஜெய்.

பஸ் ஸ்டாப்-ஐ அடைந்த போது கவனித்தான், என்ன ஆச்சர்யம் கூட்டமே இல்லை... திரும்பி பார்த்தான் ஓரமாய் அமர்ந்திருந்த அவனை கவனித்தான்,

சிநேகமாய் சிரித்ததைப் பார்த்தபோது, நட்பை விரும்பும் விதமாய் இருந்தது, மெல்ல அருகில் வந்தான் அவன்.. இருவரும் பேச தொடங்கினர்...
தினம் இது வாடிக்கையாகவே இருந்தது... சில நாட்கள் செல்ல, இருவருக்கும் நல்ல நட்பு மலர்ந்தது...

அன்றும் ஜெய் வழக்கம் போல ஆபீஸ்-க்கு கிளம்பினான்...

'என்ன கெளம்பியாச்சா' என்று பின்னாலிருந்து ஒரு குரல்... பஸ் ஸ்டாப் சிநேகிதன் தான்...

'ஹோ நீயா ம்ம் சொல்லு' என்றான் ஜெய்.

'இன்னிக்காவது நிஷா ஃபோன் பண்ணினாங்களா' என்றான் அவன்

இல்ல... என்று உதட்டை பிதுக்கினான் ஜெய்...

'ஹ்ம்ம்ம் விடு கவலைபடாத, ஒரு நாள் உன்ன கண்டிப்பா புரிஞ்சிப்பாங்க' என்றான் அவன்..

நேத்திக்கு ஷேர் மார்க்கெட்ல வேற 50000 இழந்தேன்..., வாழ்கையே வெறுத்துடும் போல இருக்கு என்று சோகமாய் கூறினான் ஜெய்

உன் life-ல இவ்ளோ கஷ்டம் இருந்தாலும் நீ அதெல்லாம் பொருட்படுத்தாம வாழ்க்கைய ஓட்ற, என்ன பாரு, உயிரை வாங்குறாங்க,
அவங்க பண்ற தொல்லைக்கு எனக்கு உயிரெடுக்கணும் போல வெறி வருது ச்ச, வாழ்க்கைல ஒரு கட்டத்துக்கு மேல பிரச்சன வந்தா செத்துடனும்... என்று நொந்துகொண்டான் அவன்...

ஹ்ம்ம்ம் சாவு ஒரு solution இல்ல, சாவு ஒரு நாள் வரத்தானே போகுது, வரும்போது வரட்டும் என்றான் ஜெய்...

இல்ல ஜெய், life-ல எவ்ளோ தான் கஷ்டம் வரும் சொல்லு, போனவாரம் நீதானே சொன்ன, உன் ஆபீஸ்ல ஞாபகம் இருக்கா, நிலான்னு ஒரு பொண்ணு தற்கொல பண்ணிக்கிச்சு,
எல்லாரும் கோழைத்தனமா பண்ணிகிட்டாளேன்னு சொன்னாங்க, பேப்பர்ல நியூஸ் வேற வந்திச்சு ஆனா அவளுக்கு என்ன பிரச்சனையோ...

என்னவாத்தான் இருக்கட்டும், அதுக்காக தற்கொல பண்ணிகிட்டது... ஹ்ம்ம்... எனக்கு அதுல உடன்பாடு இல்ல அவளாலே எல்லாரோட மனசும் எவ்ளோ சங்கடம் ஆகிடுச்சு தெரியுமா... என்றான் ஜெய்

நான் ஒன்னு கேள்விப்பட்டேன், அந்த பொண்ணு பிடிக்காம கல்யாணம் பண்ணிக்கிட்டாளாம், அதுக்கு மேல வாழமுடியலன்னு அப்டி உயிரை விட்டுட்டாளாம் என்றான் அவன்...

'ஹ்ம்ம்ம் என்னவோ life is not easy ' என்று எங்கேயோ வெறித்து பார்த்தான் ஜெய்...

ஆபீசுக்குள் நுழைந்தான், ஷேர் சைட்-ஐ நோட்டமிட்டான், மறுபடியும் மூன்று லட்சம் இழந்ததாய் தெரிவித்தது... சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை ஜெய்...

தலையில் கைவைத்து சோர்ந்து desk மேல் சாய்ந்து படுத்தான்... அரைநாள் லீவ் சொல்லிவிட்டு வீட்டுக்கு கிளம்பினான் ஜெய்... கோவில் சென்று ஒரு தேங்காய் உடைக்கணும் என்று நினைத்துக்கொண்டே இருக்கையில்,

'என் கண்ணை பிடிங்கிக்கொள் பெண்ணே என்னை காதல் குருடன் ஆக்கிவிடு' என்று ரிங்டோன் ஒலிக்க, நிஷா என்று காண்பித்தது iPhone.

சந்தோஷமாய், 'ஹலோ ஹலோ நிஷா நிஷா' என்றான் ஜெய்...

'ஜெய், எனக்கு இந்த மாதிரி கால் பண்றதுக்கு பதிலா, என்னை divorce பண்ணினா நானாச்சும் நல்லா வாழ்வேன்ல' என்றாள் நிஷா

'நிஷா, ஏன் இப்டி பண்ற, இதனால என் life எவ்ளோ affect ஆகும்னு நீ யோசிக்கவே மாட்டியா' என்று குரல் தழுதழுக்க கேட்டான் ஜெய்

'ஜெய் please try to understand, என்னால உங்க கூட வாழ முடியாது...'

'நமக்கு marriage ஆகி அடுத்த வாரமே நீ போய்ட்ட, இன்னியோட ஒரு மாசம் ஆகுது... என் லைப் ரொம்ப நல்லா இருந்துது, இப்படி என் life-ஆ திருப்பி போட தான் நீ வந்தியா' என்று கதறினான் ஜெய்

'ஜெய், எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு உங்கள இப்படி கதறவிடறதுக்கு, நான் ஏற்கனவே ஒருத்தர லவ் பண்ணி என் அப்பா அம்மா force பண்ணினதால தான் உங்கள marriage பண்ணிக்கிட்டேன் எவ்ளோ தடவ சொல்லுறது'

'அப்புறம் என்ன ம***க்கு என்னை marriage பண்ணிக்கிட்ட, உன் அம்மா அப்பாவ கொல்லனும் டீ, அப்டியே உன் அப்பா அம்மா-வ conference-ல போடு, நாக்க புடிங்கிக்கறா மாதிரி நாலு வார்த்த கேக்கறேன், என்ன நெனச்சிட்டு இருக்கீங்க, ஒட்டுமொத்த குடும்பமே என் life மோசம் பண்றீங்க'

'mind your words ஜெய், ஏதோ பரிதாபமா இருக்குனு, ஃபோன் பண்ணினா, இஷ்டப்படி பேசுறீங்க, நீங்களா divorce பண்ணிடீங்கன்னா உங்களுக்கு நல்லது or else .. ம்ம்ம்ம்... நீங்க ஆம்பளையே இல்லன்னு கண்ட ரீஸன்-அ சொல்லி உங்க பேர கெடுத்து divorce வாங்க வைக்காதீங்க'

'சீ நீயெல்லாம் ஒரு மனுஷியா, get lost' என்று iPhone-ஐ தூக்கி விட்டெறிந்தான் ஜெய்...

அவன் சொன்னது கரெக்ட் தான், வாழ்கையில ஒரு கட்டத்துக்கு மேல வாழவே கூடாது, என்று திரும்ப, ஒரு லாரி வந்து கொண்டிருந்தது, சரக்கென்று பாய, லாரி ஸ்பீட் ப்ரேகர்-இல் ஏறுவது போல் அவன் மேலே ஏறி இறங்கியது... தரதரவென்று இழுத்து சென்று சட்னி ஆக்கியது...

ரோட்டில் இருந்த அனைவரும் அலற, அந்த பஸ் ஸ்டாப் நண்பன், தன்னை நொந்துக்கொண்டு மெல்ல மேலே பறந்து, தனக்காக காத்துக்கொண்டிருந்த காளை மாட்டில் ஏறி பறந்து சென்றான்...!!!!!!!!!!

முற்றும்...!!!!!

chinnakkannan
12th September 2012, 10:09 PM
நல்லா இருக்கு ஸ்ரீ..கடைசி லைன்ல கொஞ்ச்ம் அப்படியே மாத்திட்டீங்க.. குட்.. கீப் இட் அப் :)

(கொஞ்சம் டயலாக்ஸ் இன்னும் கேர்ஃபுல்லா எழுதலாம்..!)

சுஜாதா கதை ஒண்ணும் இது மாதிரி இருக்கு.. அதுல டிவில வருவார்...!

Madhu Sree
13th September 2012, 12:05 AM
Thanks Ck :D...

carefulaa ezhudhanum nu soneenga, u mean about narration or typo or dialogues edhaachum affect panraa maadhiri irukkaaa? sonna thiruthippen :D

sujatha kadhaiyaa idha vida best comment kidaikkumaa :bow:... enna kadha sollunga...

typos thiruththitten :D

pavalamani pragasam
13th September 2012, 07:50 AM
mmm...saathaaraNa masaala kathai!?

chinnakkannan
13th September 2012, 12:12 PM
நான் typos சொல்லலை... என்னத்துக்கு என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்ட-ன்னு எழுதலாம்..

அவன் பல் தேய்ச்சுட்டு முடிச்சுட்டு பஸ் ஸ்டாப் வர்றதுக்கு -ஏழு வரி.. ஒரே வரில்ல சில நாட்கள் ஓடிப் போய் இன்னொரு நாள்ல தான் என்ன கிளம்பியாச்சா ந்னு கேக்கறச்சே..கொஞ்சம் இடிக்குது..! (இதெல்லாம் போக போக ச்ரியாய்டும்) கவலையே படாதீங்க எழுத வருது உங்களுக்கு..எழுதுங்க.

chinnakkannan
13th September 2012, 12:35 PM
சுஜாதா கதையில ஹீரோ டிவி பார்த்துக்கிட்டு இருக்கறச்சே யாரோ ஒருவர் வருவார்.. டேய் ஹீரோ உனக்காகத் தான்காத்துக்கிட்டிருக்கேன்.. வ்ரமாட்டேங்கறியேம்பார்..ஏதோ டிவி சீரியல்னு நினச்சுட்டு ஆஃப்பண்ணிடுவான்.

.அப்புறம் மறுபடியும் பார்க்கறச்சே அந்த ஆளே வருவார்..என்னை வெய்ட் பண்ண வைக்காதம்பார்.. மனைவியிடம் என்ன ப்ரோக்ராம் நு கேப்பான்..மனைவி அப்படி எதுவுமே இல்லன்னு சொல்லிடுவா..

அப்புறம் பஸ்ஸ்டாப் ஆஃபீஸ்லாம் பார்ப்பான்.

ஒரு நாள் ரோட்ல ஒரு வேன்ல அவர் ஒட்கார்ந்துக்கிட்டு இருப்பார் அவர்.. அவனைப்பார்த்து வான்னு கூப்பிடுவார்..

அதுல அவனுக்கு - அவன் முன்னாலேயே பார்த்த சின்ன ப்தினாறு வயசுப் பொண்ணு வேற் இருக்கும்..

அவனும் அந்தப் பொண்ணு எப்ப்டி இவர் வேன்ல உட்கார்ந்துருக்குன்னு நினச்சு அங்க போகறதுக்காக அப்படியே ரோட க்ராஸ்பண்ணி...

வேகமக வந்த பஸ் அவன் மீது ஏற, வாகனங்களின் நெரிசல் க்ள் கூடி கூட்டம் கூட...

அவன் அந்த வேனில் ஏறி அமர்ந்து ஏன் சார் கூப்பிட்டீங்க..

என்னய்யா பண்றது மக்கள் தொகை ஜாஸ்தியாய்டுச்சு..அதான் வேன் வாங்கிட்டேன்..தென்ச்ரி நிறைய எடுக்க வேண்டியிருக்கு..

அவன் புரியாமல் உங்க பேரு..

தர்மராஜா.. சொல்லி முடித்ததும் வேன் கிள்ம்பியது..

( நினைவிலிருந்து எழுதுகிறேன்.. கதை படிக்கறச்சே நல்லாவே இருக்கும்)

Madhu Sree
13th September 2012, 02:25 PM
mmm...saathaaraNa masaala kathai!?

suddenaa thonichu PP maa... naan sujatha sirukadhaigal neraya padichirukken, adhula thejawininu oru short story, adhula thejaswini's father kept on looking for bridegroom for her, but she will keep on reject each and everyone and she will say tht there is no one on earth who is matching her conditions and taste... finally oru payyan varuvaan, she gets attracted to him and she will propose him to marry her, aana avan solvaan, oh kandippa pannikkaren, aanaa nee adhukku enga ulagathukku varanumnu kadasiyaa rekkaiya virichi mela parandhu povaan... semmayaa irundhuchi andha last line edhirpaarkaadha thiruppam... andha maadhiri yosichu try panninen :D avlo thaan :bow:

Madhu Sree
13th September 2012, 02:30 PM
நான் typos சொல்லலை... என்னத்துக்கு என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்ட-ன்னு எழுதலாம்..

:lol2: theriyum neenga adha thaan refer pannineengannu... loveraa thaan marraige pannikkanumnaa marraige pannittu poyirundhirukkanum, edhukku oru payyanoda life spoil pannanum sollunga, ippadi patta ponna ippadi thaan oru payyan kepaan, I just wrote from a boy's point of view... :D indha maadhiri enakku therinja oru payyanukku nadandhurukku :sigh2:


அவன் பல் தேய்ச்சுட்டு முடிச்சுட்டு பஸ் ஸ்டாப் வர்றதுக்கு -ஏழு வரி..

Chumma oru buildup CK :D neengalum kadhai ezhudhareenga, ungalukku idhu puriya vendaamaa :x :hammer: :razz:


ஒரே வரில்ல சில நாட்கள் ஓடிப் போய் இன்னொரு நாள்ல தான் என்ன கிளம்பியாச்சா ந்னு கேக்கறச்சே..கொஞ்சம் இடிக்குது..!

enakku puriyala CK, andha varikku munnaadi irundha varigala padikkalayaa :D

சில நாட்கள் செல்ல, இருவருக்கும் நல்ல நட்பு மலர்ந்தது...

அன்றும் ஜெய் வழக்கம் போல ஆபீஸ்-க்கு கிளம்பினான்...



(இதெல்லாம் போக போக ச்ரியாய்டும்) கவலையே படாதீங்க எழுத வருது உங்களுக்கு..எழுதுங்க.
not at all... idhukkellaam kavalai padalaama, roumba yosikareenga :lol2: Thanks :D

Madhu Sree
13th September 2012, 02:32 PM
andha kadhaikku link kudunga CK :D thanks for sharing, no doubt - sujatha - a legend :bow:
btw, indha maadhiri story referencenaa PMaa anuppidunga inga post pannradhukku... thanks for sharing :D

chinnakkannan
13th September 2012, 03:36 PM
ஏழு வரியை த் தப்பு சொல்லலை..infact எதையுமே தப்பா சொல்லலை..

ஏழுவரிக்கு இண்ட்ரோ கொடுத்துட்டு ஒரே வரில சில நாட்கள் தாண்டிப் போறதுங்கறது கதைல கொஞ்சம் ஒன்றுவதற்குக் கஷ்டமாக இருக்கும் எனச் சொன்னேன்..(அதப் பிரிச்சுப் போட்டு என்னை அடிக்க வேண்டாம்!!)

அப்புறம் அந்த்க் கதை சுஜாதாவோடது என்னோட கலெக்*ஷன்ஸ்ல இருக்கு..தேடிப் பார்த்துச் சொல்றேன்.. நெட்ல இருக்கான்னு தெரியலை..
Chumma oru buildup CK :D neengalum kadhai ezhudhareenga, ungalukku idhu puriya vendaamaa :x :hammer: :razz:


not at all... idhukkellaam kavalai padalaama, roumba yosikareenga :lol2: Thanks :D[/QUOTE]

Madhu Sree
13th September 2012, 03:38 PM
:D cha cha thappaa soneengannu nan sollala CK :D

oru pakka kadhaiyaa ezhudha try panninen, adhaan apdi :D
actually oru pakka kadhaigalnu oru thread potu idha podanumnu nenachen... :D

chinnakkannan
13th September 2012, 04:04 PM
குட்.. நிலவே முகம் காட்டு - ஐயும் தொடர்ந்து முடிச்சுடுங்க..