PDA

View Full Version : சாப்பிடத் தான் தெரியும் - சைவம்



RAGHAVENDRA
30th November 2012, 11:44 PM
ஆஹா ... சாம்பார் சாதம் என்றால் இதுவல்லவோ ... என்று வாய் ருசிக்க கை மணக்க சாப்பிடுவோம் .. அல்லது சாப்பிட்டிருப்போம் .. அல்லது சாப்பிட விரும்பியிருப்போம் .. அந்த மாதிரி சைவ சாப்பாடு பிரியர்கள் தாங்கள் எப்படியெல்லாம் சாப்பிட ஆசைப்படுவார்கள், சாப்பிட்டிருப்பார்கள் ... அந்த அனுபவங்களை, அல்லது அந்த ஆசைகளை இங்கே சொல்லுங்களேன். தமிழ்நாட்டில் எந்த சைவ ஹோட்டலாயிருந்தாலும் சரி .. எந்தெந்த ஹோட்டலில் எந்த ஐட்டம் விரும்பி யிருக்கிறீர்கள் .. இப்படி...தமிழ்நாட்டுக்கு வரும் வெளிநாட்டு சைவ உணவுப் பிரியர்களுக்கு இது ஒரு வழிகாட்டியாகவும் இருக்கட்டுமே ....

http://static.ifood.tv/files/images/konkani_veg_thali.jpg

ஜமாயுங்க...

Madhu Sree
22nd February 2013, 08:57 PM
Nice thread...!!!!!!!!!!

Must try is Creme center... oru murai hub meet anga irundhudhu... it was so nice...

I am a fan of their dum biriyani :slurp:

RAGHAVENDRA
6th June 2013, 10:01 AM
சென்னை நகரில் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பிருந்த சைவ உணவகங்களில் பிரசித்தி பெற்றவை பல. திருவல்லிக்கேணியில் பார்த்த சாரதி கோயில் அருகில் வைத்தா ஹோட்டல் என்ற பெயரில் புகழ் பெற்ற கோபால கிருஷ்ண விலாஸ், சுவைக்கு மிகவும் பாப்புலர். குறிப்பாக காலை வேளைகளில், பொங்கல், மெது வடையும் சட்னியும் அங்கு மிகவும் புகழ் பெற்றவை. மாலை வேளைகளில் காஞ்சிபுரம் இட்லியும் உண்டு. அதே போல் டி.பி.கோயில் தெருவில் பொம்மு ஹோட்டல் என்று புகழ் பெற்ற லட்சுமி கபே மிக மிக பிரசித்தம். சமையல் அறையிலேயே தரையில் ஒரு பெஞ்சு போட்டு அமர்ந்து சுடச்சுட இட்லியும் தோசையும் சாப்பிடும் அனுபவம் அலாதியானது. காபி பித்தளை டம்ளரில் வழங்கப் படும். உடைத்த கடலையை மிகவும் கொஞ்சமாகவும் தேங்காய் கூடவும் புளி கூட சேர்த்து அரைத்து பெருங்காயம், கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து அங்கேயே நம் கண் எதிரிலேயே தயார் செய்வார்கள். இரண்டு இட்லி, ஒரு தோசை, காபி, 25 பைஸாவில் முடிந்து விடும்.

http://cdn.sailusfood.com/wp-content/uploads/2012/05/hotel-coconut-chutney.jpg

அதே போல பைக்ராப்ட்ஸ் சாலையில் முரளி கபேயும் மிக பிரசித்தம். அங்கு இட்லி அருமையாக இருக்கும். இந்த ஹோட்டலின் ஸ்பெஷாலிட்டி ரவா தோசை மற்றும் ரவா பாத். ரவா பாத் இரவில் மட்டுமே கிடைக்கும். ரவா தோசை இன்று வரை அந்த மாதிரி எங்குமே நான் பார்க்க முடியவில்லை.

திருவல்லிக்கேணி ஹோட்டல்கள் ... தொடரும். ...

RAGHAVENDRA
6th June 2013, 10:05 AM
இந்த முரளி கபேயின் ரெகுலர் வாடிக்கையாளர்

http://www.kalyanamalaimagazine.com/images/Major_Sundarrajan.jpg

பெரும்பாலான நாட்களில் இரவில் சுமார் 9 மணியளவில் அந்த ஹோட்டலில் அவரைப் பார்த்திருக்கிறோம். அந்த ஹோட்டல் உரிமையாள் மேஜர் சுந்தரராஜன் அவர்களின் நெருங்கிய நண்பர். சில சமயம் சமையல் குறிப்புகளையும் சுந்தர்ராஜன் தருவார். சமையலறை உள்ளேயும் சென்று ஆலோசனைகள் வழங்குவார்.


...

RAGHAVENDRA
6th June 2013, 10:12 AM
திருவல்லிக்கேணி ஓட்டல்களுக்கு மிகவும் பிரசித்தமானது. அது இன்று வரை தொடருகிறது.

அடுத்து

http://www.veethi.com/images/city-images/fullsize/Chennai-15642.jpg

கிட்டத் தட்ட 60 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் உணவகம். உலக அளவில் திருவல்லிக்கேணியின் புகழைப் பாடுவதில் பார்த்தசாரதி கோயில் பெரும் பங்கு வகிக்கிறது என்றால் ஒரு, 1 சதவீத அளவிற்கு ரத்னா கபேயும் பங்கு வகிக்கிறது. இன்று தமிழகமெங்கும், ஏன் உலகமெங்கும் இட்லி சாம்பார் பெயர் பெற்று விட்டது என்றால் அதற்கு முழு முதற் காரணம் ரத்னா கபே தான். நிர்வாகம் மாறி விட்டாலும் உணவின் தன்மை சற்றும் பாதிக்காமல் தொடர்ந்து புதிய நிர்வாகத்தினர் நடத்தி வருவது பாராட்டிற்குரியது. காலப் போக்கிற்கேற்ற வாறு சைவ தந்தூரி வகைகளும் தற்போது இடம் பெற்றுள்ளன என்றாலும் இன்றளவில் வாடிக்கையாளர்கள் வந்து அமர்ந்தவுடனே ஆர்டர் கொடுப்பது இட்லி சாம்பார் தான்.

http://image3.mouthshut.com/images/ImagesR/2008/10/Ratna-Cafe---Chennai-925008706-1317408-1.jpg

vasudevan31355
7th June 2013, 09:57 AM
ராகவேந்திரன் சார்!

வாய் ஊறவைக்கும் திரியை தொடங்கிய தங்களுக்கு நன்றி! எனக்கேற்ற திரி!

vasudevan31355
7th June 2013, 10:03 AM
கடலூரில் அதுவும் முதுநகரில் நடராஜ் லஞ்ச் ஹோம் அப்போது ரொம்ப பிரசித்தம். ஆனால் கூட்டம் அவ்வளவு இருக்காது. நான் சிறுவனாய் இருக்கையில் தாத்தா எப்போவாவது கூடிப் போவார். காபி மட்டுதான் வாங்கித் தருவார். தேவாமிர்தமாய் இருக்கும். அங்குதான் முதன் முதலில் இங்கு செய்யப்பட்ட பலகாரங்கள் அசல் நெய்யினால் செய்யப்பட்டவை அல்ல என்ற அறிவிப்புப் பலகையை பார்த்தது இப்போது நினைவுக்கு வருகிறது. அந்த ஓட்டலை மூடி இருபது வருடங்களுக்கு மேலாகி விட்டது.

RAGHAVENDRA
7th June 2013, 10:08 AM
வாசு சார்,
தங்களின் பங்களிப்பு இத்திரிக்கு மேலும் மேலும் மெருகூட்டும் என்பதில் ஐயமில்லை. தொடருங்கள்.