PDA

View Full Version : முயற்சிகள்..



venkkiram
13th December 2012, 11:04 PM
உறவு

சந்திப்புக்களை தொடர்ந்து ஏற்படுத்தி
பரிசுகளைக் கொடுத்து வாங்கி
பரஸ்பரம் தொட்டுக் கொண்டு
மடிசாய்ந்து கதைகள் பலபேசி
சிரிப்பும் அழுகையுமாய் ஒன்றி
நேரம் இப்படியே நீளாதென ஏங்கி
ஒவ்வொரு கணத்தையும் கொண்டாடி
பிரியும் வேளையில் கட்டிப் பிடித்து
முத்தங்களை ஆசைத்தீர வழங்கி
கடைசியாய் எப்போதும் ஒரே கேள்வி
எப்பப்பா அம்மாவோட மறுபடியும்
ஒண்ணா வாழப் போறிங்க?

pavalamani pragasam
14th December 2012, 12:24 PM
மிகவும் அருமை! கனமான ஒரு உணர்வை, அறைகின்ற ஒரு பெருகி வரும் அவலத்தின் யதார்த்தத்தை வெகு லகுவாக உறைக்கவைத்துவிட்டீர்கள்!

venkkiram
21st December 2012, 06:39 PM
நன்றி pp!

venkkiram
11th February 2013, 10:19 AM
ஒளி

நேரம் என்ன தம்பி இருக்கும்
கடந்து போகும் முதியவர் கேட்டார்
ஐந்தரை மணி தாத்தா
அங்காடி இன்னும் தொறந்திருக்குமா
சந்தேகம்தான் சீக்கிரம் போங்க
கிருஷ்ணாயில் வாங்கணும் தீந்துபோச்சி
வேலை முடிஞ்சி வந்த சோர்வுல
நேத்திக்கே வாங்க மறந்திட்டேன்
பேத்திக்கு பரிட்சை நாளைக்கு
புலம்பி கொண்டெ நடையை கூட்டினார்
தாமதமாக வந்து நின்ற
டவுன் பஸ்ஸினுள் கூட்ட நெரிசலிலும்
ஏறிக்கொண்டு இன்வெர்ட்டர்
வாங்கும் பணத்தை
இன்னொருமுறை இருக்கிறதா என
சரிபார்த்துக் கொண்டென்

pavalamani pragasam
11th February 2013, 12:22 PM
சோஷியலிச தராசின் ஏற்ற இறக்க தட்டுக்கள்- வாழ்வில் காணும் அவலமான நிதர்சனங்கள்!

tiruttakkan
12th February 2013, 12:54 PM
உறவு40

ஓளி45

இனிய ஆரம்பம்! வாழ்த்துக்கள்!!!

திருத்தக்கன்.

pavalamani pragasam
12th February 2013, 06:36 PM
:redjump:ஹைய்யா! வாத்தியார் வந்துட்டார் மார்க் போட! முனை மழுங்கிய பென்சிலாய் கிடக்கும் பெண் நான் கூராக்கப்படுவேனே!:cheer:

kaveri kannan
3rd March 2013, 09:58 PM
பெருகிவரும் மன -மண முறிவுகள் ---> பிஞ்சு மனங்கள் அதனால் வரண்டுபோகும் அபாயங்கள்...

இருக்கும் தட்டில் இருந்து அடுத்த தட்டுக்கு ஒருக்கால் ஏறிவிட தவிக்கும் பொருள் ஆதார புருஷர்கள்..

உறவு, ஒளி - இரண்டுக்கும் பாராட்டும் வாழ்த்தும் வெங்கிராம் அவர்களே!

venkkiram
11th March 2013, 09:01 PM
தேர்தல்

ஏராளம் எண்ணிக்கையில் தொகுதி வேட்பாளர்கள்
சுறுசுறுப்பாக களத்தில் திரியும் பிரமுகர்கள்
ஓட்டு பிரியுமென்ற அதிர்ச்சியில் பெரிய கட்சிகள்
எல்லாத் திசையிலும் பணம் பொருள் இலவசம்
காற்றில் கலந்து விட்டிருந்த லஞ்ச வாசம்
பரப்பரப்பான வாக்குப் பதிவின் முந்தைய இரவு
பரலோகம் சென்றார் சுயேட்சை ஒருவர் மாரடைப்பில்
வாங்கியவற்றை ஏப்பமிட்டு வரவிருக்கும் இடைத்தேர்தலை
வரவேற்கத் தயார் நிலையில் ஊர் மக்கள்

venkkiram
11th March 2013, 09:02 PM
நன்றி திரு காவேரி கண்ணன்!

venkkiram
31st March 2013, 09:04 AM
நாய்ப்பொழப்பு நாய்ப்பொழப்புன்னு
அடிக்கடி இவங்க பேசுறாங்களே
அதற்கு அர்த்தம் என்னம்மான்னு
அடம்பிடித்து கேட்டும் உன்னிடத்தில்
இதுவரை பதிலில்லையே!

http://www.chinadaily.com.cn/photo/images/attachement/jpg/site1/20130326/f04da2db148412bb5b305a.jpg

A puppy stands by remains of a dog local residents said was its mother, days after it was killed in an area burnt in violence at China.

pavalamani pragasam
31st March 2013, 06:53 PM
:(:(:(

venkkiram
17th July 2013, 08:28 PM
http://w1.nst.com.my/polopoly_fs/1.43469.1328629947!/image/image.jpg_gen/derivatives/landscape_454/image.jpg

திமிறிய கூட்டத்தில் இடித்துக்கொண்டு
திருக்கோயில் நுழைந்தான் ராமன்
திரும்பி வந்தபின் தேடினான் தேடினான்
விட்டுச்சென்ற புத்தம்புது பாதுகைகளை
தேடிக்கொண்டே இருந்தான்
கேட்டு வாங்கிச் செல்லும்
குணம் பரதனுக்கு இல்லை.

pavalamani pragasam
18th July 2013, 08:06 AM
டோக்கன் வழங்காத கோவில் நிர்வாகம் பரதன்களுக்கு வழங்கும் ஆசியோ?!

venkkiram
23rd July 2013, 09:30 AM
டோக்கன் வழங்காத கோவில் நிர்வாகம் பரதன்களுக்கு வழங்கும் ஆசியோ?! :) pp!

SoftSword
23rd July 2013, 03:29 PM
really liked it venki.. good thinkin..

venkkiram
1st August 2013, 08:38 AM
http://christopherfountain.files.wordpress.com/2010/02/che-guevara-tee.jpg

குறைந்த விலையில்
பேரம்பேசி வாங்கி
பேரணிக்கு சீருடையாய்
மிடுக்காய் உடுத்திச் சென்ற
புரட்சி சேகுவேரா டீஷர்ட்
ஒருமுறை துவைத்து
கசக்கும்போதே சாயம் போனது!

venkkiram
1st August 2013, 08:39 AM
really liked it venki.. good thinkin..

மகிழ்ச்சி!

venkkiram
1st August 2013, 09:18 AM
http://graphics8.nytimes.com/images/2012/10/23/world/asia/23-railways-IndiaInk/23-railways-IndiaInk-blog480.jpg

கடைசி நிறுத்தமொன்றில்
தாமதமாய் வந்தடைந்தது
அதிகாலை எக்ஸ்பிரஸ்.
இறங்கையிலும் பெட்டி பைகளோடு
அவசரம் காட்டும் கூட்டத்தை
இடித்து ஏறி கழிப்பறையொன்றைத்
தேடிச் சென்றான் வழிப்போக்கன்!

venkkiram
11th August 2013, 08:33 AM
http://blog.usalaw.com/wp-content/uploads/2012/02/texting-while-driving.jpg

தார்ச்சாலை முழுதும் தற்காலங்களில்
காலன் கயிறு நீண்டுவருவதை காண்
கடக்கும் எருமை வாகனத்தை ஓட்டியபடி
சிரித்துக் கொண்டே செய்தியனுப்பும் அவன்
அழவைக்கப் போவது எந்தக் குடும்பமோ!

venkkiram
14th August 2014, 11:28 PM
http://dimenzion3.com/blog/wp-content/uploads/2013/08/Indian-Flag.jpg

ஆண்டுக்கு ஒருமுறை
அவனிடத்தில் நான்
இப்படிச் சொல்லும்போது பதிலுக்கு
திருப்பி சொல்வதில் கூச்சப்படுகிறான்
அப்படியே திருப்பிச்சொன்னாலும்
எதோ பதிலுக்கு சொல்லவேண்டுமே
என்ற நிமித்தமாக உதிர்த்துச் செல்கிறான்
நான் சொல்வதற்கு முன்பாகவே
அவன் எனக்குச் சொல்லி
நானும் அவனைப் போலவே திருப்பிச்சொன்னாலும்
என்னை ஒரு மாதிரியாய் பார்க்கிறான்
எதற்கும் சொல்லி வைக்கிறேன் இன்று
அவனிடத்தில்.
Happy Independence day!

venkkiram
25th August 2014, 09:32 AM
கிளம்பும் அவசரத்தில்
கிடைக்கும் வெளிச்சத்தில்
மழித்தும் மழிக்கப்படாமல்
தீவுகளாக ஒதுங்கியவைகளை
தொட்டுணரும் அன்றைய பொழுதில்
அவை
மேலும் சற்று
வளர்ந்திருக்கின்றன.

http://comps.fotosearch.com/comp/CSP/CSP580/k5808428.jpg

venkkiram
25th August 2014, 12:02 PM
முகம்பார்த்து உறவாடும் ஒரேபிறவியாம் நிறமொழி
யினம்பார்த்து சுற்றம் பேணுவோர்.

http://unleashyourchampion.com/new/wp-content/uploads/2010/04/world_people_hello_10_15_08_pc_pro_me.jpg

Gopal.s
25th August 2014, 12:24 PM
கிளம்பும் அவரசத்தில்
கிடைக்கும் வெளிச்சத்தில்
மழித்தும் மழிக்கப்படாமல்
தீவுகளாக ஒதுங்கியவைகளை
தொட்டுணரும் அன்றைய பொழுதில்
அவை
மேலும் சற்று
வளர்ந்திருக்கின்றன.



"ரோம" சாம்ராஜ்யம்.

என் மூதாதையர் அளித்து சென்ற ஒரே சொத்து

கரடி போல உடல் முழுதும் வியாபிப்பு.

மாக் மூன்றாலும் மூணு நாள் மட்டுமே

பிடரிகாதுமூக்கெங்கும் வியாபிப்பு

ஒரு புறம் மழித்து மறு புறம் பார்த்தால் சொரசொர



மஞ்சள் பூசிய முக நண்பன் அடிக்கடி சொல்வது

மாமனும் அப்பனும் விட்டு சென்ற நில மதிப்பை

என் உடலில் ரோமங்களாய் சென்னையெங்கும் நிலங்கள்

முக்கிய முகத்திலிருந்து உடல் அக்குள் பேர் சொல்லா இடங்களிலும்

வீட்டிலோ மணமான போது இருந்த நபர்களில் ஒன்று குறை

பழையன கழித்து புதியன பெற இயலாத



நண்பனிடம் காட்டினேன் மூர்க்கத்தை ,புணரும் வித்தை

விட்டு செல்லவில்லையோ மூத்தோர்கள்.

நில மதிப்பு சரிந்து ரோம மதிப்பு உயர்வு

எந்த உலக சந்தையும் பதிக்கவில்லை இதை

chinnakkannan
25th August 2014, 12:57 PM
மதுரம் மாமி
கொள்ளை அழகு
பொன்னிறம்
நாலுவீடு தள்ளி தான்..
முக அழகை விட
கூந்தல் தான்
விட்டால் தரை பெருக்கும்
சின்ன வயது முதல்
நானும் என் அக்காவும்
அவர் ரசிகைகள்..

அவரும்
பார்த்துப் பார்த்துத் தலைசீவுவார்..
ஏதோ மூலிகையாம்..
அடர்த்தியாக
கொட்டாமல் இருப்பதைப் பார்த்து
கல்லூரி செல்லும் வயதில்
இருந்த எங்களுக்கு
நம நம என்றிருக்கும்..
பின் பக்க ப்ளவுஸின்
வெட்டுப்பட்ட் இடத்துடன்
நின்றுவிடும் முடி மீது
கோபம் கோபமாய் வரும்..
இருப்பினும் பழகிவிட்டது..
அவரிடமே சொல்வோம்
உங்களோட கூந்தலிருக்கே
எனச் சொன்னால் சிரிப்பார்..
எங்கள் மீதும் பாசம் அவருக்கு

காலப் போக்கில்
கல்யாணம் ஆகி
நான் துபாய், என் சகோதரி யுஎஸ் எனச்
சென்றுவிட
ஒருசில வருடம் கழித்து மதுரை வந்தால்
மதுரம் மாமி வீடு இல்லை..
வேறுயாரோ வாங்கி விட்டார்களாம்
அம்மாவிடம் கேட்டால் தெரியாதுடி
எப்பவோ காலி பண்ணிட்டுப்போய்ட்டா என்றவள்
பாவம் ரொம்ப க் கஷ்டப் பட்டா
மொதல்ல புருஷன்..
குழந்தைதான் இல்லையோன்னோ..
அப்புறம் இவளுக்குத் தான்..
என்னம்மா ஆச்சு..
இரு நீயே நேர்ல பாரு
அண்ணா நகர் தான்
நாளைக்குப் போலாம்..

அந்த ஃப்ளாட் போய் பெல்லடித்து
கால்மாற்றி கால்மாற்றி நின்று
இன்னும் குட்டையாயிருந்த
கூந்தலைத் தடவியபடி நின்றதில்
கதவு திறக்க
கண்களின் வழியாக நெஞ்சினுள் இடி..

மாமி தான்
ஆனால் மொட்டை அடித்து..
இல்லை இல்லை
முடி கொட்டிவிட்டது போலும்
முக்காடாய் சேலையிட்டு
வாடி க்லா எப்பவந்த உள்ளவா
மாமி வாங்கோ என அம்மாவிடமும்..
அமர்ந்து கை பற்றினேன்..
மாமி என்னாச்சு

என்னமோ வியாதி..
கீமோ பண்றேன்னு சொல்லி..
ம்ம் எல்லாம் கொட்டிப் போச்சு..
ரொம்பப் பெய்ன் டி..
தாங்கத்தான் முடியலை..
இப்போ பெட்டர்..

மாமி ரொம்ப அழகா இருக்குமே மாமி
எனக்குத் தாங்கலை..எனச் சொல்ல
போறதுடி போ..முடி தானே..
தானா வந்துச்சு
பாத்துக்கிட்டேன்
போகணும்னு ஆசப்பட்டுச்சு
போய்டுச்சு எனச் சொல்லி
வெளிறிச் சிரித்தாள்..

venkkiram
18th October 2014, 06:24 AM
http://paulgerald.com/wp-content/uploads/2014/02/thoughts.png

அந்த ஒரு...

இங்கே
முக்கியமானதாக
எதையோ சொல்லநினைத்தேன்
மறந்தே விட்டேன்
எதை சொல்லநினைத்தேன்
என்பதை என்னால்
யோசிக்கவே முடியாவண்ணம்
புதுப்புது எண்ண நீர்க்குமிழிகள்
தொடர்ச் சங்கிலியாய்
மேலெழுந்து கொண்டே
மனதை
திக்குமுக்காட வைக்கின்றன
இவை என்று அடங்கும்
எப்போது மறந்துபோனதை
மீட்டெடுக்கப் போகிறேன் என்பதற்கு
இப்போதைக்கு உத்திரவாதமில்லை
காலம் அதன் திசையில்
மனதைக் கடத்திச் செல்கிறது
இனி அதன் எதோ ஒரு புள்ளியில்
மறந்துபோனது எட்டிப்பார்க்கும்
ஆனால் அப்போது
இதே சூழ்நிலை அமையப்பெறுமா
காலம்தான் அதற்கான
இன்னொரு திரைக்கதையையும்
எழுதி வைத்திருக்கும்
நான் இதுவரை வாசித்திராத
புதியதொரு பக்கத்தில்..

pavalamani pragasam
18th October 2014, 08:33 AM
:clap: யதார்த்தம்!

venkkiram
18th October 2014, 09:19 AM
நன்றி pp மேடம்!

venkkiram
27th December 2014, 07:04 AM
http://agritech.tnau.ac.in/animal_husbandry/images/sahiwal_cow.jpg

சுடலையும் லெட்சுமியும் சில மனிதர்களும்...

அன்று காலை ஆறரைமணி இருக்கும்
என்னச் சத்தம் எனத் தூக்கம் கலைத்து
வாசல் வெளியே வந்து பார்த்தால்
நம்ம லெட்சுமி செனைபிடிக்க கன்னங்கரேரென
ஒரு காளையை ஓட்டிவந்திருந்தார் அசலூர்க்காரர்
சுடலை என்பது அதற்கு வைக்கப்பட்ட பெயராம்
லெட்சுமியை ஓட்டிவந்து பண்ணையாள்
விளக்குக்கம்பத்தில் கட்டி அப்பா சித்தப்பா என மூவரும்
அதை அசையாமல் பிடித்துக்கொள்ள
சுடலையை பணிக்கு ஆயத்தமாக்கினார் காளைக்காரர்
ஏதேனும் உதவிசெய்தால்தான் இங்கே
நிற்க முடியும் என்றெண்ணிய என்னை
இதையெல்லாம் நீ பார்க்கக் கூடாதென்று
அப்பா விரட்ட சித்தப்பாவோ வாய்க்குள்ளேயே சிரித்தார்
அவசர அவசரமாக மாடிப்படியேறி மேலிருந்த
கொட்டகையின் சில கீற்றுகளைத் தூக்கிவிட்டு
ஆர்வத்தோடு பார்க்க ஆரம்பித்தேன்
சுடலையின் முதற்பாய்ச்சலுக்கு மிரண்டு
திமிறி நகர்ந்தது சாதுவான லெட்சுமி
பிடித்துக்கொண்டிருந்த மூவரும்
மூன்று திசையில் வேகமாக தள்ளப்பட்டார்கள்
லெட்சுமி அசையாமலிருக்க இம்முறை கழுத்தில்
மாலைக்கயிறுகட்டி கம்பத்தோடு இறுக்கிவிட்டிருந்தார்கள்
அடுத்த கொஞ்சநேரத்தில் சுடலை ஐந்தாறுமுறை
லெட்சுமிமேல் வேகப்பாய்ந்து அடங்கியது
ஒரே மாதத்தில் பலன் தெரியவருமென
அப்பாவிடம் உறுதிசெய்தார் காளைக்காரர்
லட்சுமியின் தோளைத் தட்டிக்கொடுத்தே கொல்லைக்கு
நம்பிக்கையோடு அழைத்துச்சென்றார் பண்ணையாள்
சுடலையை பராமரிப்பதிலேயே நிறைய செலவாகிறதென
காளைக்காரர் எவ்வளவு புராணம் பாடியும்
கேட்ட பணத்தை கொடுக்காமல் பேரம்பேசி
குறைத்து கொடுத்ததில் அப்பாவுக்கு மகிழ்ச்சி
கீழத்தெரு தெக்குத்தெருவென எங்கூரிலேயே
அன்றைய தினத்தில் அடுத்தடுத்து அழைத்துச்
செல்லப்படும் இடங்களை நோக்கி தளர்ந்த
நடையோடு தனது எஜமானரைப் பின்தொடர்ந்தது சுடலை.

pavalamani pragasam
27th December 2014, 07:29 PM
பாவம் சுடலை, இல்லையா?

venkkiram
27th December 2014, 10:13 PM
பாவம் சுடலை, இல்லையா?
அப்படியும் சொல்லலாம். ஆடுகள் போல சினைப்பிடிப்பு இயற்கையான முறையில் மாடுகளுக்கு நடக்கவே வழிவகை செய்யணும். வாடகைக்கு ஒரு வாரமோ, ரெண்டு வாரமோ அதற்கான தகுந்த இடங்களில் கொண்டு விடலாம். இயல்பாகவே நடந்தேற வேண்டிய ஒன்றாக இருக்கணும்.

venkkiram
17th January 2015, 07:58 AM
கொலை கொலையாய்..

ஒரு கொலைக்கு தீர்வு
இன்னொரு கொலையாம்.
தன்மேல் கொலைப்பழி சுமத்திய
மனிதனையும் கொலை செய்தார் பிரபலம்
சட்டம் குற்றவாளி என சொல்வதற்குள்
பிரபலம் ஒரு பிரபலமாகவே
வாழ்ந்து முடித்திருந்தார்.

http://www.tamilmurasu.org/data1/TmNewsImages/Evening-Tamil-News-Paper_90518915654.jpg

pavalamani pragasam
18th January 2015, 01:02 PM
கொடுமை!

Gopal.s
1st April 2015, 12:42 PM
When we celebrated our Mothers' 80th BirthDay Grandly,I read the following Poem among the invitees.


இவள் அன்னையல்ல.




இவள் அன்னையல்ல. இந்தியாவின் அன்னைகளின் சித்தரிப்பு

நகல்களின் விஸ்தரிப்பு , அத்தனை கோடியிலும் தனி இவள்.




இவள் தெய்வமுமல்ல.




இவளை மக்களிடம் இருந்து பிரித்து பீடத்தில் ஏற்றி ,சூடம் கொளுத்தி

சிலுவையில் ஏற்றி தொழுது அண்ணாந்து பார்க்கும் மக்களை பெற்றவளில்லை




இவள் ஈன்று புறம் தந்தவள் இல்லை.




இவள் ஈன்று அகம் கொண்டவள். பசியாற மீனளிக்கும் அன்னை,தூண்டில் தர தந்தை

குளத்தில் மீன் பிடிக்கும் வித்தை கற்க குரு என மூன்றுமாய் இவளே




செல்ல துரையின் பட்டு பெண்ணிவள்.




பாதம் பட்டால் நோகாது தேவலோக பஞ்சை தரை விரித்த தந்தை

பாரதி சொன்னால் போதுமா, பாருங்கள் வித்தை கற்ற விந்தை பெண்ணை




கல்லாத வித்தையாய் எதிர்நீச்சல் வித்தகியாம்




அன்பின்மையால் சந்திக்கவொண்ணா சோதனைகள் சுமந்து தெப்பமென

சுற்றம் கரையேற்றிய சீலத்தை செப்ப சீரிளமை தமிழால் இயலுமோ.





அந்தரங்கம் தொந்தரவின் புனித பீடமல்ல என புனைநதவள்




வாழ்வின் இருள் மறைவிடத்தில் பதுங்காமல் ,சூரிய ஒளியில் ,சுற்றியிருப்போர்

சூழ வெளிப் படையான வெற்றி வாழ்வுக்கு விதையிட்டவள் இவளே




ஆக்கி மட்டும் பார்த்தவள் அழித்தலை முற்றும் அறியாதவள்




எங்கள் வாழ்வின் பொக்கிஷ அறைகளில் ,மனித எலும்பு கூடு , விடுங்கள்

மிருகங்களின் எலும்பு கூட்டை கூட சேர விடாத அறச் சுற்றத்தின் ஆக்கமிகு தலைவி.




தன்னை பிரதியெடுத்து மறு வெற்றி கண்டவள்




நல்லதோர் வீணையாய் நலன்கெட்டும், மெல்லதோர் மாற்று வீணைகளாய் மக்களை

சொல்லதோர் பிரதிகளாய் ,நாதம் கூட்டி நாலு பேர் இசைக்க,விசையுறு பந்தாகியவள்




ஒப்பாரும் மிக்காரும் இல்லா திறனாளியிவள்




ஒப்பிடுங்கால் மக்களாகிய நாங்களுமே மட்டு திறனாளிகளே ,இவள் கூட்டு

திறன்களை கொள்ள கௌரவர் அனைய கூட்டம் வேண்டும் ,நாங்களோ நால்வரே




தமிழையொத்த இளமை புதுமை இனிமை




அகவை எண்பதாம் , எட்டிலிருந்து எண்பது வரை யார் வரினும் இவள் அகவை அவரினும்

மிக்காது ஒன்றிரண்டை கழித்து தான் கொள்பவள் ,தமிழின் உண்மை தகைமகள்




எனக்கு சுயமில்லாது மாற்று பெயர் மட்டும் இட்டவள்




அன்னையின் நடமாடும் நிழலே நான் சுயத்தை தொலைக்காத இரவல் சுயமாய்

தும்மலிலும் மூச்சிலும் பேச்சிலும் கலையிலும் வாழ்வின் அலையிலும் இவளின் குறை பிரதியாய்

venkkiram
16th April 2015, 06:49 AM
http://www.bikehirechennai.com/images/chennai%20mylapore%20temple.jpg

தமிழ்ப் புத்தாண்டுதின
சிறப்பு அர்ச்சனைகளில் ஒலிக்கும்
சமஸ்கிருத மந்திரங்களுக்கு மத்தியில்
தமிழன் தனது தாய்மொழியை
ஒருகணம் நினைத்துப்பார்க்கிறான்

venkkiram
26th April 2015, 10:32 PM
கனவிலும்கூட ஒருதவறையும்
சரியா செய்யமுடியலையே
யாரிடமாவது வசமாக
அகப்பட்டுக் கொள்கிறேன்
நொந்துகொண்டான் சாமானியன்
நிஜத்தில்கூட அவற்றை
செய்ய நினைக்காதேயென
உன்னை எச்சரிக்கத்தான்
அசரீரியாய் ஒலித்தது ஓர் குரல்.

http://www.injoyfoodfitness.com/wp-content/uploads/2012/07/street-sign.jpg

venkkiram
1st June 2015, 09:21 AM
உருவகம்

இளங்காற்று
இளம்பனி
இளவேனில்
இளங்கீற்று
இளநீர்
இளஞ்சூடு
இளம்பிறை
இளமை
இளம்பெண்
இளங்காதல்
இளையராஜா

http://21c-learning.com/wp-content/uploads/2014/07/MusicWorkShop-Image.jpg

pavalamani pragasam
1st June 2015, 09:11 PM
arumai!