PDA

View Full Version : Nadigar Thilagam Sivaji Ganesan - Filmography, News and Events



Pages : 1 2 3 4 5 6 7 [8]

RAGHAVENDRA
20th December 2015, 12:05 PM
Sivaji Ganesan Filmography

127. Thanga Surangam தங்க சுரங்கம்

https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xfa1/v/t1.0-9/1919198_1022122221171783_6723594097239464360_n.jpg ?oh=0702bd4278451e2e6b8130f620065251&oe=5721E456


தணிக்கை 26.03.1969
வெளியீடு 28.03.1969

தயாரிப்பு - E.V.R. பிக்சர்ஸ்

நடிக நடிகையர்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன், நாகேஷ், மனோகர், ஜாவர் சீதாராமன், டி.எஸ்.முத்தையா, ஓ.ஏ.கே.தேவர், சுந்தர்ராஜன், ஹரிகிருஷ்ணன், பாரதி, வெண்ணிற ஆடை நிர்மலா, எஸ்.வரலக்ஷ்மி, குமாரி ராதா மற்றும் பலர்

பாடல்கள் கவிஞர் கண்ணதாசன்

டி.எம்.சௌந்தர்ராஜன், பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி, வி.வி.ராஜாராம் (அறிமுகம்)

நடன அமைப்பு - ஹீராலால், தங்கராஜ், சுந்தரம், ஜோசப், கிருஷ்ணா

உடை - பி.ராமகிருஷ்ணன்- சிவாஜி, சி.கே.கண்ணன், மாஸ்டர் ஜி. மணி

ஒப்பனை - ரங்கசாமி, எம்.ராமசாமி, சீனிவாசன், மோஹன் ராவ், தனகோடி

புகைப்படங்கள் - நாகராஜ ராவ், சங்கர் ராவ், நரசிங்க ராவ்

வசன ஒலிப்பதிவு - எஸ்.ப்ரஸன்னகுமார் - பரணி

ஒளிப்பதிவு - விஜயசுந்தரம், தசரத ராமையா - பரணி
பாபுல் நாத்வாக், ஏ.துலுக்காணம் - வாசு

புரொகிராம் - வி.ராமச்சந்திரன் - பரணி, என்.ஜி.கிருஷ்ணன், ஆர்.கே.ஆர். கோபால்

செட்டிங்ஸ் - ஜேசுதாஸ்

பாடல்கள் ஒலிப்பதிவு - எஸ்.பி.ராமனாதன் - கோல்டன், டி.எஸ்.ரங்கசாமி- சாரதா, ஜே.ஜே.மாணிக்கம் - ரீரிக்கார்டிங் - ஏவி.எம்.

அலுவலக நிர்வாகம் - எஸ்.தேவனாதன், வி.பி.ராமதாஸ், எம்.எஸ்.காசி செட்டியார், ஈ.எஸ்.ஜோஷி

விளம்பர நிர்வாகம் - எஸ்.தேவனாதன்,
பத்திரிகை விளம்பரங்கள் - செம்பி ப்ப்ளிசிட்டீஸ் by மின்னல்

புரொடக்ஷன் மானேஜர் - கே.சண்முகநாதன், உதவி திருச்சி ஆர்.ராமச்சந்திரன், திருச்சேரை கிருஷ்ணமூர்த்தி.

ஸ்டூடியோ - பரணி, வாசு

புரொடக்ஷன் எக்ஸிக்யூடிவ் - வி.எஸ்.ரங்கநாதன்

கலர் ப்ராஸ்ஸிங் by ஜெமினி கலர் லேபரடரி, சென்னை-6.

சண்டைப்பயிற்சி - திருவாரூர் எம்.எஸ்.தாஸ் -

விளம்பர ஓவியம் - பரணி

டைட்டில்ஸ் - எஸ்.எஸ்.லால்
ஆர்டிஸ்ட் - ஈஸ்வர்

கலை செல்வராஜ்

படத்தொகுப்பு - எம்.எஸ்.மணி

உதவி டைரக்ஷன் - பி.எம்.மணிவண்ணன், வி.என்.திருவேங்கடம், யூ.ராஜேந்திரன்

அஸோஸியேட் டைரக்டர் - கனக சண்முக சுந்தரம்

இசை - மெல்லிசை மன்னர் டி.கே. ராம்மூர்த்தி

கதை - ஜி.பாலசுப்ரமணியம்

திரைக்கதை வசனம் - சக்தி டி.கே.கிருஷ்ணசாமி

ஒளிப்பதிவு - ஜி.துரை - அமிர்தம்

தயாரிப்பு - ஈ.வி.ராஜன்

டைரக்ஷன் - ராமண்ணா

RAGHAVENDRA
20th December 2015, 12:12 PM
தங்க சுரங்கம் - விளம்பர நிழற்படங்கள் - ஆவணத்திலகம் பம்மலாரின் பொக்கிஷத்திலிருந்து..



முதல் வெளியீட்டு விளம்பரம் : தினமணி : 28.3.1969


http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/43ffa779-ee22-4302-83a3-f5aa9d2b62ac.jpg

RAGHAVENDRA
20th December 2015, 12:12 PM
தங்க சுரங்கம் - காணொளிகள்

முன்னோட்டம்.. நன்றி நெய்வேலி வாசு சார்

https://www.youtube.com/watch?v=AgUzhulHAvk

சந்தனக் குடத்துக்குள்ளே


https://www.youtube.com/watch?v=lnObODMJnHY

நான் பிறந்த நாட்டுக்கெந்த நாடு


https://www.youtube.com/watch?v=LiK_4pdcvv4

கட்டழகுப் பாப்பா


https://www.youtube.com/watch?v=TojrKH2x7lo

ஓ.. நதியே மதுவானால்


https://www.youtube.com/watch?v=8CKktGVrQvU

சக்தி தன்னாடு


https://www.youtube.com/watch?v=grfh0K9aqko

சண்டைக் காட்சி - நன்றி நெய்வேலி வாசு சார்


https://www.youtube.com/watch?v=Ti7xJd4q18c

RAGHAVENDRA
20th December 2015, 12:18 PM
தங்க சுரங்கம் - பாடல்களின் விவரங்கள்

1. பங்கப் பழனத்து உழும் உழவர்க்கு - வி.வி. ராஜாராம்
2. நான் பிறந்த நாட்டுக்கெந்த நாடு பெரியது - டி.எம்.சௌந்தர்ராஜன்
3. கட்டழகுப் பாப்பா கண்ணுக்கு - டி.எம்.சௌந்தர்ராஜன்
4. சக்தி தன்னாடு தென்னாடு - டி.எம்.சௌந்தர்ராஜன், எல்.ஆர்.ஈஸ்வரி குழு.
5. சந்தனக் குடத்துக்குள்ளே - டி.எம்.சௌந்தர்ராஜன், பி.சுசீலா
6. ஓ.. நதியே மதுவானால் - எல்.ஆர். ஈஸ்வரி
7. பெற்ற மனம் சிறையிலே - எஸ்.வரலட்சுமி

RAGHAVENDRA
20th December 2015, 12:26 PM
தங்க சுரங்கம் - சகோ. சாரதா அவர்களின் ஆய்வுரை -

saradhaa_sn

16th December 2006, 05:27 PM

http://www.mayyam.com/talk/showthread.php?4476-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-(Part-2)&p=192344&viewfull=1#post192344


"தங்கச் சுரங்கம்"

ஒரு காலம் இருந்தது. நடிகர்திலகத்தின் சமூகப்படங்களில் வண்ணப்படங்களைக் காண ஏங்கிய நேரம். ஆம் 1964 ல் ஒரு 'புதிய பறவை', 1967 ல் ஒரு 'ஊட்டி வரை உறவு' என்று அத்தி பூத்தாற்போலவே அவரது சமூகப்படங்களில் வண்ணப்படங்களைக் காண முடியும். மற்றபடி நடிகர்திலகத்தின் வண்ணப்படங்கள் என்றால் அது திரு ஏ.பி.என். எடுத்த (திருவிளையாடல், சரஸ்வதிசபதம், கந்தன்கருணை, திருவருட்செல்வர், திருமால்பெருமை போன்ற) புராணப்படங்கள்தான். அந்த வகையில் இப்போதுள்ள நடிகர், நடிகையர் அதிர்ஷ்டம் செய்தவர்கள். திரைப்படங்கள் என்றாலே வண்ணம்தான் என்று முன்னேறிவிட்ட காலம் இது. அப்போதெல்லாம் அப்படியில்லை. எப்போதாவதுதான் வண்ணப்படங்கள் வரும். 1964ல் அறிமுகமான ஜெய்சங்கர் கூட முப்பது கருப்பு வெள்ளைப் படங்களில் நடித்த பின்பே முதல் வண்ணப்படமாக 'பட்டணத்தில் பூதம்' படத்தில் நடித்தார். இந்த வகையில் ரவிச்சந்திரன் கொடுத்து வைத்தவர். முதல் படமான 'காதலிக்க நேரமில்லை'யே வண்ணத்தில் அமைந்தது. தொடர்ந்து இதயக்கமலம், நான், மூன்றெழுத்து, உத்தரவின்றி உள்ளே வா, அதே கண்கள் என்று வண்ண நடை போட்டார். மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களுக்கு படகோட்டி, எங்கவீட்டுப்பிள்ளை, ஆயிரத்தில் ஒருவன், அன்பே வா, ரகசியபோலீஸ் 115, பறக்கும் பாவை என்று வண்ணத்தில் வந்து கொண்டிருந்தபோது சிவாஜி ரசிகர்கள் வண்ணப்படங்களுக்கு ஏங்கினார்கள் என்பது உண்மை. அவர்களுக்கு தீனி போட்டது ஏ.பி.என்னின் புராணப்படங்கள் மட்டுமே. எம்ஜிஆர் அவர்களை வைத்து வண்ணத்தில் ஒளிவிளக்கு, அன்பேவா படங்களை எடுத்த ஜெமினி வாசன், மற்றும் ஏ.வி.எம் செட்டியார் ஆகியோர் கூட நடிகர்திலகத்தை வைத்து 'மோட்டார் சுந்தரம் பிள்ளை', 'உயர்ந்த மனிதன்' ஆகிய படங்களை கருப்பு வெள்ளையில் எடுத்து சிவாஜி ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தனர்.

மற்றபடி நடிகர் திலகத்துக்கு தன் திறமையைக்காட்ட கருப்பு வெள்ளை ஒரு தடையாக இல்லையென்பதோடு அவரது நடிப்புக்கு சவாலாகவும், திறமைக்கு உரைகல்லாகவும் அமைந்தவை யாவும் (பாவ மன்னிப்பு, பாசமலர், பழனி, நவராத்திரி, ராமன் எத்தனை ராமனடி, தெய்வமகன், வியட்நாம் வீடு உள்ளிட்ட) கருப்பு வெள்ளைப் படங்களே. இருந்தாலும் ரசிகர்களுக்கென்று ஒரு ஆசை இருக்கிறதல்லவா?

எதற்கு இத்தனை பீடிகை போடுகிறாள் என்று உங்களுக்கு தோன்றலாம். ஆம், நடிகர் திலகத்தின் சமூகப்படங்களில் புதியபறவை, ஊட்டிவரைஉறவு படங்களுக்குப்பின் நீண்ட இடைவெளிக்குப்பின்னர் வந்த வண்ணப்படம்தான் "தங்கச்சுரங்கம்".

செயற்கைத்தங்கம் உற்பத்தி செய்து, நல்ல தங்கத்தோடு கலந்து விட்டு, நாட்டின் பொருளாதாரத்துக்கு பெரிய மோசடியையும், பாதிப்பையும் ஏற்படுத்தி வரும் சதிகாரக் கும்பலைப் பிடிக்கும் சி.பி.ஐ.அதிகாரி பாத்திரம் நடிகர் திலகத்துக்கு. அதற்கு ஏற்றாற்போல வாகான ஒல்லியான உடலமைப்பு இருந்தது அப்போது அவருக்கு. அதனால் ரோலுக்கு கனகச்சிதமாக பொருந்தினார். கூடவே வசீகரமான சுருள், சுருளான சொந்த தலைமுடி எல்லாம் சேர்ந்து அப்பாத்திரத்துக்கு மெருகூட்டின. (அப்போதெல்லாம் படங்களில் சி.ஐ.டி.என்பதுதான் புழக்கத்தில் இருந்ததே தவிர சி.பி.ஐ. என்பது ரொம்ப பேருக்கு வித்தியாசமான வார்த்தையாக இருந்தது. இப்போது, சின்னக் குழந்தைக்கு கூட தெரியும்படியாக சி.பி.ஐ.என்ற வார்த்தை புழக்கத்தில் உள்ளது).

படம் துவங்கும்போது, இரண்டாம் உலகப்போரின் பிண்ணனியோடு துவங்கும். ஆங்காங்கே பீரங்கித்தாக்குதல்கள், அதை விட மோசமாக போர் விமானங்கள் குண்டு வீசி பர்மாவின் தலைநகரான ரங்கூனை தாக்கிக்கொண்டிருக்கும்போது இந்தியர்கள் கப்பலில் தாய்நாடு திரும்பிக்கொண்டிருப்பர். அப்போது தன்னுடைய சின்னஞ்சிறு மகன் ராஜனுடன், கப்பலில் ஏறப்போகும் காமாட்சியம்மாளை (எஸ்.வரலட்சுமி), கப்பலில் இடம் நிறைந்து விட்டது என்று அதிகாரிகள் தடுக்க, தான் பர்மாவில் இருந்து அழிந்தாலும் பரவாயில்லை, தன் மகன் ராஜன் இந்தியாவில் எங்காவது போய் நலமாக இருக்கட்டும் என்று, தனக்கு முன்னர் ஏறிய டாக்டரிடம் (ஜாவர் சீதாராமன்) மகனை கண்கலங்க ஒப்படைக்கிறார். காட்சிகள் அத்துடன் கட் பண்ணப்பட்டு டைட்டில் ஓடத்துவங்குகிறது.

'தங்கச் சுரங்கம்' படத்தின் டைட்டில் வித்தியாசமாகவும், துடி துடிப்புடனும் செய்யப்பட்டிருந்தது. புதுமையாக செய்ய வேண்டும் என்ற ராமண்ணாவின் துடிப்பு அதில் தெரிந்தது.

டைட்டில் முடிந்ததும், படம் தற்காலத்துக்கு வந்து விடும். பள்ளிக் குழந்தைகளோடு வந்துகொண்டிருக்கும் வரலட்சுமி எதிரே வரும் பாதிரியாரைக்கண்டு திகைத்து நிற்க பாதிரியாரும் திகைத்து நிற்பார். அந்தப் பாதிரிர்யார் வேறு யாருமல்ல. ரங்கூனில் கப்பலில் ஏறும்போது வரலட்சுமி தன் மகனை ஒப்படைத்தாரே அந்த டாக்டர் ஜாவர் சீதாராமன் தான். காமாட்சியம்மாள் தன் மகனைப்பற்றி ஆவலுடன் விசாரிக்க, அவன் தற்போது குற்றப்பிரிவு இலாக்காவில் உயர்ந்த பதவியில் இருப்பதாக சொல்ல... உடனே காட்சி மாற்றம். டெல்லியிலிருந்து வரும் விமானத்தில் இருந்து டார்க் ப்ரவுன் கலர் ஃபுல் சூட், மற்றும் கறுப்புக்கண்ணாடியுடன் விமானத்திலிருந்து வெளியே வரும் நடிகர் திலகம் அறிமுகம். விமான அதிகாரியிடம் கைகுலுக்கி விட்டு தனக்கே உரிய ஸ்டைலுடன் படிகளில் இறங்கி வருவார்.

அவரது மேலதிகாரியான மேஜர் சுந்தர்ராஜன், போலித்தங்கம் செய்யும் கும்பலைப்பிடிக்கும் பொறுப்பை அவரிடம் ஒப்படைப்பார். அது பற்றி மேலும் தகவல்களைச் சேகரிக்க சிறிது நாளாகும் என்பதால் தன் ஊருக்குச் சென்று தன்னை வளர்த்த பாதிரியாரைப்பார்த்து வர விரும்புவதாகச் சொல்லி அனுமதி பெற்று ஊருக்கு வருவார். அங்கே பாதிரியார், அவருக்கு மிகப்பெரிய பரிசு தருவதாகச்சொல்லி ராஜனின் (சிவாஜி) அம்மாவை அவருக்கு அறிமுகம் செய்து வைப்பார். இன்ப அதிர்ர்ச்சியில், பாசத்தைக் கொட்ட சிவாஜிக்கும் வரலட்சுமிக்கும் அருமையான கட்டம். போட்டி போட்டுக்கொண்டு நடிப்பார்கள். நாள் முழுக்க பேசிக்கொண்டிருந்து விட்டு இரவில் சிவாஜியைத் தூங்கப்போகச்சொல்லும் அம்மாவிடம் சிவாஜி ஒரு அஸ்திரத்தை தூக்கி வீசுவார்.

"அம்மா நானும் காலையில் இருந்து பாத்துக்கிட்டு இருக்கேன். மகனைப் பாத்த சந்தோஷத்தில எல்லா விஷயத்தையும் பற்றி விவரமா பேசினீங்க. ஒரு பெண்ணுக்கு மகன் எப்படி முக்கியமோ அதுபோல கணவனும் முக்கியமல்லவா? அப்பாவைப்பத்தி ஒரு வார்த்தை கூட சொல்லலையே. ஏம்மா?".

மகனின் இந்தக்கேள்வியில் அதிர்ச்சியில் உறைந்து போவார் வரலட்சுமி. எப்படி சொல்ல முடியும்?. சொல்வது போலவா நடந்து கொண்டார் அவர்?. 'ராஜன், இப்போ என்னை எதுவும் கேட்காதே, சமயம் வரும்போது நானே சொல்றேன்' என்று சமாதானப்படுத்துவார்?. ஆனால் அவர் சொன்ன 'அந்த சமயம்' எவ்வளவு தர்ம சங்கடமான, இக்கட்டான சமயமாக அமையும் என்று அவர் நினைத்தே பார்த்திருக்க மாட்டார்.


16th December 2006, 05:53 PM



“தங்கச் சுரங்கம்” (PART – II )

ஆம். எந்த போலித்தங்க கும்பலைப்பிடிக்க சிவாஜி அமர்த்தப்பட்டாரோ, அந்தப்போலித் தங்க கும்பலுக்கு தலைவனே ராஜனின் அப்பா 'மிஸ்டர் பை' (ஓ.ஏ.கே.தேவர்)தான் என்று அறியும்போது வரலட்சுமியே அதிர்ச்சியில் மூழ்கி விடுவார். முன்னதாக தன்னைப்பிடிக்க வந்த சி.பி.ஐ. ஆபீஸர் விட்டுச்சென்ற பர்ஸில் ராஜனின் படமும் தன் மனைவியின் படமும் இருப்பதைப் பார்த்து, அது தன் மகன் தான் என்பதை அறியும் 'பை', பாசத்தையே கேடயமாகக்கொண்டு தப்பிக்க எண்ணி, பர்ஸில் இருந்த விலாசத்தில் வரலட்சுமியை சந்தித்து, கொஞ்சம் கொஞ்சமாக செண்டிமெண்ட் வார்த்தைகள் மூலம் அவரை நிலைகுலையச்செய்து, இறுதியில் தன்னைப்பிடிக்க தன் மகன் போடும் திட்டங்களை தன் மனைவி மூலமாகவே தெரிந்துகொள்ளும் அளவுக்கு தன் மனைவியைப் பக்குவப்படுத்தியிருப்பார். இதையறியாத சி.பி.ஐ ஆபீஸர் ராஜன், மிஸ்டர் பையைப் பிடிக்கப்போகும் திட்டத்தை தன் அம்மாவிடம் சொல்லி விட்டுப்போக, போன இடத்தில் சிவாஜிக்கு தோல்வி. 'மிஸ்டர் பை' தன்னுடைய ஜீப்பில் தனக்கு பதிலாக ஒரு கழுதையை அனுப்பிவைத்து அவமானப்படுத்தியிருப்பார்.

இதைப்பற்றி ஆலோசிக்கும் மேஜரும் சிவாஜியும், 'நம் இருவரைத்தவிர யாருக்கும் தெரியாத இத்திட்டம் 'பை'க்கு தெரிந்தது எப்படி?. நீங்கள் யாரிடமும் சொன்னீர்களா?' என்று மேஜர் கேட்க இல்லையென்று மறுக்கும் சிவாஜிக்கு சட்டென்று ஒரு பொறிதட்டும். அம்மாவிடம் மட்டும் தானே இதைச்சொனோம். 'பை'க்கு தெரிந்தது எப்படி?. சந்தேகம் என்று வந்து விட்டால் யாரையும் சந்தேக வட்டத்தில் இருந்து நீக்க முடியாதே. சிறிது நேரத்தில் திரும்புவதாகச்செல்லும் சிவாஜி நேராக தன் அம்மாவைப் போய்ப்பார்ப்பார். அப்போது நடக்கும் உரையாடல்கள் உணர்ச்சி மயமானவை.

மகனுடைய கூரிய பார்வையின் உக்கிரத்தை நேருக்கு நேர் சந்திக்க முடியாத தாய், தலையைத் தாழ்த்திக்கொண்டு கடைக்கண்ணால் பார்க்க, மகனின் கேள்விக்கணகள்....

"அம்மா, நான் பார்க்கும் உத்யோகம் எவ்வளவு பொறுப்பானது, ஆபத்தானதுன்னு உங்களுக்கு தெரியுமில்லே?" அவள் ஆம் என்று தலையாட்டுவாள்.

"இன்னைக்கு 'பை'யைப் பிடிக்கப்போகும் விஷயத்தை நான் தானே வாய் தவறி உங்களிடம் சொன்னேன்?". அவள் மீண்டும் தலையாட்டல்

"அதை நீங்க யார்கிட்டேமா சொன்னீங்க?"

"ராஜன், நான் யார்கிட்டேயும் சொல்லலைப்பா"

"பொய்.... நீங்க பை கிட்டே சொல்லியிருக்கீங்க...ஏன்...ஏன்.., அதுக்கென்ன அவசியம் வந்தது?. தலைக்கு ஒசந்த மகனை வச்சுகிட்டு அந்த 'பை' கூட ரெண்டாவது வாழ்க்கை வாழறீங்களா அம்மா?"

(ஒரு மகன் தன் தாயிடம் கேட்கக்கூடாத கேள்வி. ஆனால் தோல்வியின் பாதிப்பு, மனத்திலிருந்து இப்படி கேள்வியாக வெடித்துக் கிளம்ப)

"அய்யோ ராஜன், அவர்தாண்டா உங்க அப்பா"

அதிர்ச்சியின் உச்சிக்குப்போவார் நடிகர் திலகம். என்னது அப்பாவா?. நான் பிடிக்கணும்னு கங்கணம் கட்டிக்கொண்டு அலையும் அந்த தேசத்துரோகியா என் அப்பா?.

மகனிடம் விவரத்தைச்சொல்லத் துவங்க, மீண்டும் ஃப்ளாஷ் பேக்கில் ரங்கூனில் நடந்த இரண்டாம் உலகப்போர். இடிபாடுகளில் சிக்கிய காமாட்சியும் கனகசபையும் தப்பிக்கும் சமயம், காமாட்சி மகன் ராஜனை தேடிக்கொண்டிருக்கும்போது கனகசபைக்கு ஒரு பெட்டி நிறைய பணம் கிடைக்க, மனைவியையும் மகனையும் உதாசீனப்படுத்தி விட்டு தான் மட்டும் தப்பித்துப்போய்விட, வேறு வழியிறி மகன் ராஜனுடன் இந்தியா வரும் கப்பலில் காமாட்சி ஏறப்போகும்போதுதான் மகனை டாக்டரிடம் ஒப்படைக்கிறார் (படத்தின் முதல் காட்சியில் வந்தது).

அதன்பிறகு ராஜன் தன் தாயையே கைது செய்வதும், பாதிரியார் அவரை ஜாமீனில் விடுவித்து அழைத்து வருவதும், தொடர்ந்து 'பை' யைப்பிடிக்க ராஜன் முனைந்து ராஜன் வெற்றி பெறுவதும் சுவாரஸ்யமானவை.

பாடலும் இசையும்...

இப்படடத்துக்கு மெல்லிசை மன்னர் டி.கே.ராமமூர்த்தி இசையமைத்திருந்தார். பாடல்கள் அனைத்தும் நன்றாக இருந்தன.

விடுமுறையில் கிராமத்துக்கு வரும் நடிகர் திலகம், தலையில் தொப்பியும் கையில் பெட்டியுமாக பாடிக்கொண்டு வரும் பாடல்

நான் பிறந்த நாட்டுக்கெந்த நாடு பெரியது
இங்கு பெண்ணும் ஆணும் வாழும் வாழ்க்கை இனியது
தென்னாட்டிலே தண்ணீரும் பொன்னீரும் விளையாடுது
மூன்று தமிழ் ஓங்கும் இடம் எங்கள் நாடு.... ஓய்...

பொட்டழகும் கட்டழகும்
பூவழகும் தண்டைக் காலழகும்
எங்கள் மங்கையரின் கலையல்லவா
திருமஞ்சள் முக சிலையல்லவா

நான் பிறந்த நாட்டுக்கெந்த நாடு பெரியது
இங்கு பெண்ணும் ஆணும் வாழும் வாழ்க்கை இனியது

யானைகட்டி போரடிக்கும் பாண்டி நாட்டிலும்
பொன்னி வீடுதோறும் தீபம் ஏற்றும் சோழ நாட்டிலும்
தென்னை இளநீர் சொரியும் சேர நாட்டிலும்
திருக்கோயில் சிறந்தோங்கும் தொண்டை நாட்டிலும்

நான் பிறந்த நாட்டுக்கெந்த நாடு பெரியது
இங்கு பெண்ணும் ஆணும் வாழும் வாழ்க்கை இனியது

மேலை நாடு பரபரப்பில் வாழ்ந்து பார்க்குது
எங்கள் கீழைநாடு தனி வழியே நடந்து பார்க்குது
விஞ்ஞானம் அந்த நாட்டில் போரை நாடுது
எங்கள் மெய்ஞானம் உலகமெங்கும் அமைதி தேடுது

நான் பிறந்த நாட்டுக்கெந்த நாடு பெரியது
இங்கு பெண்ணும் ஆணும் வாழும் வாழ்க்கை இனியது

அருமையான பாடல். பாடியவர்.... வேறு யார்? கம்பீரக்குரலோன் டி.எம்.எஸ் அண்ணாதான். ராமமூர்த்தியின் அருமையான இசையில். துரை-அமிர்தத்தின் கண்ணில் ஒத்திக்கொள்ளும் ஒளிப்பதிவு. அழகான ஒல்லியான உடல்வாகுடன் வெள்லை பேண்ட், சந்தன வண்ண சட்டை, சிவப்பு தொப்பி, கையில் சின்ன பெட்டி மற்றும் ஒரு குச்சியுடன் வழக்கமான ஸ்டைல் நடையில் நடிகர் திலகம்...

ராமண்ணா.... அற்புதம் அண்ணா...


16th December 2006, 06:11 PM
http://www.mayyam.com/talk/showthread.php?4476-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-(Part-2)&p=192359&viewfull=1#post192359



“தங்கச் சுரங்கம்” (PART – III & Last )

பெங்களூரில் இருந்து காரில் வரும்போது, நள்ளிரவில் நடிகர் திலகத்திடமிருந்து தப்பிக்க எண்ணி, சேற்றில் விழுந்துவிடும் பாரதியை கிண்டல் செய்து நடிகர் திலகம் பாடும் "கட்டழகு பாப்பா கண்ணுக்கு... கள்ளத்தனம் ஏனோ பெண்ணுக்கு" பாடல் ரசிக்க வைக்கும். பாடலின் துவக்கத்தில் வரும் சிரிப்பில், நடிகர்திலகம் வயிற்றை பிடித்துக்கொண்டு விழுந்து விழுந்து சிரிப்பது அவரது முத்திரை.

ராமண்ணாவுக்கு பாடல் காட்சிகளைப் படமாக்க சுவிட்சர்லாந்து தேவையில்லை. ஆஸ்திரேலியா தேவையில்லை, நயாகரா நீர்வீழ்ச்சி தேவையில்லை. பத்தடிக்கு பத்தடியில் ஒரு இடத்தைக்கொடுத்து விட்டால் போதும். அருமையாக படமாக்கி தந்துவிடுவார்.

குமரிப்பெண்ணில் ஒரு ரயில் பெட்டிக்குள் 'வருஷத்தைப்பாரு அறுபத்தியாறு'
நான் படத்தில் சின்னஞ்சிறு ஃபியட் காருக்குள் 'போதுமோ இந்த இடம்'
மூன்றெழுத்தில் சிறிய பெட்டிக்குள் ரவி-ஜெயாவை வைத்து 'பெட்டியிலே போட்டடைத்த பெட்டைக்கோழி'
போன்ற பாடல்களை அருமையாகத் தந்த இயக்குனர் ராமண்ணா 'தங்க சுரங்க'த்திலும் தன்னுடைய சேட்டையை விடவில்லை.

ஆம். நடிகர்திலகமும் பாரதியும் பாடும் டூயட் பாடலான
"சந்தனக் குடத்துக்குள்ளே பந்துகள் உருண்டு வந்து விளையாடுது"

பாடலை முழுதும் கிணற்றுக்குள்ளேயே எடுத்திருப்பார். கிணற்றுக்குள் படிக்கட்டில் நின்றுகொண்டும், கயிற்றில் தொங்கிக்கொண்டும் பாடும் அந்தப்பாடல் கண்களுக்கு விருந்து.

மயக்க ஊசி ஏற்றப்பட்டு நடிகர் திலகத்துக்கு மயக்க ஊசி போட ஏவி விடப்பட்ட்ட பாரதி, நடிகர் திலகத்தை மயக்க பாடும்..
"உன் நினைவே நதியானால்.. என் உடலே படகானால்
அந்த நதியினிலே... இந்த படகினிலே.. ஆடு... ஆட வா"
பாடலை எல்.ஆர்.ஈஸ்வரி பாடியிருப்பார். ஊட்டி கார்டனில் எடுக்கப்பட்ட பாடல் இது. அதிகம் பிரபலம் ஆகாத பாடலும் கூட.

இப்படத்தில் இரண்டு கதாநாயகிகள். பாரதி மற்றும் வெண்ணிற ஆடை நிர்மலா. முதலில் நிர்மலா நல்லவராகவும் பாரதி போலித்தங்கக் கும்பலைச் சேர்ந்தவராகவும் தோன்றும். ஆனால் இடையிலேயே பாரதிதான் நல்லவர் என்றும் நிர்மலா மோசடிக்கும்பலைச் சேர்ந்தவர் என்றும் தெரிய வரும். போலித்தங்க கும்பலின் தலைவன் 'மிஸ்டர் பை' ஆக (சி.பி.ஐ.ஆபீஸர் ராஜைன் தந்தையாக) ஓ.ஏ.கே. தேவரும், அவரது கையாள் வேலாயுதமாக ஆர்.எஸ்.மனோகரும் நடித்திருப்பார்கள். நகைச்சுவைக்கு நாகேஷ். இவர் அதிகம் பயன்படுத்தப்படவில்லை.

நடிகர்திலகம், பாரதி, நிர்மலா, ஓ.ஏ.கே.தேவர், மனோகர், மேஜர் சுந்தர்ராஜன், நாகேஷ், எஸ்.வரலட்சுமி, ஜாவர் சீதாராமன், முத்தையா (போலித்தங்க விஞ்ஞானி) ஆகியோர் நடித்திருந்தனர்.

நடிகர் நடிகையர் தேர்வில் ராமண்ணா கோட்டை விட்டு விட்டாரோ என்று எண்ணத்தூண்டும் அளவுக்கு வீக்னஸ். நடிகர் திலகத்துக்கு பொருத்தமில்லாத ஜோடிகளில் பாரதிக்கு நிச்சயம் இடம் உண்டு. கொஞ்சம் கூட ஒட்டவில்லை. அது மட்டுமல்லாது மெயின் வில்லனாக ஓ.ஏ.கே.தேவரும் ரசிகர்கள் மனத்தில் நிற்கவில்லை. ‘பாரதிக்கு பதிலாக ஜெயலலிதாவும், ஓ.ஏ.கே.தேவருக்கு பதிலாக நம்பியாரும் இடம் பெற்றிருந்தால் படத்தின் ரிஸல்ட்டே வேறு’ என்பது ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்ட விஷயம்.

'தங்கச்சுரங்கம்' என்றாலே நமக்கு தவறாமல் நினைவுக்கு வருவது, கிளைமாக்ஸில் சர்ச்சில் (மாதாகோயிலில்) நடிகர்திகத்தின் அற்புத நடிப்பு. சர்ச்சுக்குள் ஆயுதங்கள் எடுத்துப்போக பாதிரியார் தடை விதித்ததால், சர்ச்சுக்குள் ஒளிந்திருக்கும் தந்தையைப்பிடிக்க நிராயுதபாணியாக உள்ளே போகும் நடிகர்திலகத்தை, துப்பாக்கியோடு ஒளிந்திருக்கும் 'மிஸ்டர் பை' இரண்டு கைகளிலும் இரண்டு கால்களிலும் மாறி மாறி சுட, அப்படியே பெஞ்சிலும் தரையிலும் விழுந்து நடிகர் திலகம் துடிக்கும்போது நம் கண்ணில் ரத்தம் வராத குறை. அத்துடன் ஒரு சந்தேகமும் வரும். "காட்சி தத்ரூபமாக வரவேண்டும் என்ற பேராசையில் நிஜமான துப்பாக்கியால் சுட்டுட்டாங்களோ?"

"தங்கச்சுரங்கம்" பற்றிய என் இனிய நினைவுகளைப் படித்த அன்பு இதயங்களுக்கு நன்றி.

RAGHAVENDRA
20th December 2015, 12:28 PM
தங்க சுரங்கம் - கண்கவரும் கொள்ளை அழகில் மக்கள் தலைவரின் அட்டகாசமான தோற்றங்கள் - அணிவகுப்பு

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTFILMOGRAPHY/THANGA%20SURANGAM/TSCollage03_zps3y18cdek.jpg (http://s1146.photobucket.com/user/imagivity/media/NTFILMOGRAPHY/THANGA%20SURANGAM/TSCollage03_zps3y18cdek.jpg.html)

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTFILMOGRAPHY/THANGA%20SURANGAM/TSCollage15_zpseahehuid.jpg (http://s1146.photobucket.com/user/imagivity/media/NTFILMOGRAPHY/THANGA%20SURANGAM/TSCollage15_zpseahehuid.jpg.html)

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTFILMOGRAPHY/THANGA%20SURANGAM/TSCollage09_zpsapbvw3c3.jpg (http://s1146.photobucket.com/user/imagivity/media/NTFILMOGRAPHY/THANGA%20SURANGAM/TSCollage09_zpsapbvw3c3.jpg.html)

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTFILMOGRAPHY/THANGA%20SURANGAM/TSCollage14_zps8mitsf8u.jpg (http://s1146.photobucket.com/user/imagivity/media/NTFILMOGRAPHY/THANGA%20SURANGAM/TSCollage14_zps8mitsf8u.jpg.html)

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTFILMOGRAPHY/THANGA%20SURANGAM/TSCollage13_zpskctce17l.jpg (http://s1146.photobucket.com/user/imagivity/media/NTFILMOGRAPHY/THANGA%20SURANGAM/TSCollage13_zpskctce17l.jpg.html)

RAGHAVENDRA
20th December 2015, 12:29 PM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTFILMOGRAPHY/THANGA%20SURANGAM/TSCollage06_zpsoglfpojz.jpg (http://s1146.photobucket.com/user/imagivity/media/NTFILMOGRAPHY/THANGA%20SURANGAM/TSCollage06_zpsoglfpojz.jpg.html)

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTFILMOGRAPHY/THANGA%20SURANGAM/TSCollage08_zpsfx2puo60.jpg (http://s1146.photobucket.com/user/imagivity/media/NTFILMOGRAPHY/THANGA%20SURANGAM/TSCollage08_zpsfx2puo60.jpg.html)

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTFILMOGRAPHY/THANGA%20SURANGAM/TSCollage12_zps8dysprss.jpg (http://s1146.photobucket.com/user/imagivity/media/NTFILMOGRAPHY/THANGA%20SURANGAM/TSCollage12_zps8dysprss.jpg.html)

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTFILMOGRAPHY/THANGA%20SURANGAM/TSCollage11_zps1oiaidfm.jpg (http://s1146.photobucket.com/user/imagivity/media/NTFILMOGRAPHY/THANGA%20SURANGAM/TSCollage11_zps1oiaidfm.jpg.html)

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTFILMOGRAPHY/THANGA%20SURANGAM/TSCollage10_zpsibfxop4j.jpg (http://s1146.photobucket.com/user/imagivity/media/NTFILMOGRAPHY/THANGA%20SURANGAM/TSCollage10_zpsibfxop4j.jpg.html)

RAGHAVENDRA
20th December 2015, 12:30 PM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTFILMOGRAPHY/THANGA%20SURANGAM/TSCollage07_zpsbyagd9nk.jpg (http://s1146.photobucket.com/user/imagivity/media/NTFILMOGRAPHY/THANGA%20SURANGAM/TSCollage07_zpsbyagd9nk.jpg.html)

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTFILMOGRAPHY/THANGA%20SURANGAM/TSCollage05_zpsfb9llf0o.jpg (http://s1146.photobucket.com/user/imagivity/media/NTFILMOGRAPHY/THANGA%20SURANGAM/TSCollage05_zpsfb9llf0o.jpg.html)

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTFILMOGRAPHY/THANGA%20SURANGAM/TSCollage04_zpsmlhdyqyx.jpg (http://s1146.photobucket.com/user/imagivity/media/NTFILMOGRAPHY/THANGA%20SURANGAM/TSCollage04_zpsmlhdyqyx.jpg.html)

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTFILMOGRAPHY/THANGA%20SURANGAM/TSCollage02_zpspq8odztv.jpg (http://s1146.photobucket.com/user/imagivity/media/NTFILMOGRAPHY/THANGA%20SURANGAM/TSCollage02_zpspq8odztv.jpg.html)

RAGHAVENDRA
20th December 2015, 12:31 PM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTFILMOGRAPHY/THANGA%20SURANGAM/TSCollage01a_zpso1r2k2n5.jpg (http://s1146.photobucket.com/user/imagivity/media/NTFILMOGRAPHY/THANGA%20SURANGAM/TSCollage01a_zpso1r2k2n5.jpg.html)

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTFILMOGRAPHY/THANGA%20SURANGAM/TSCollage01_zpsafeqynvn.jpg (http://s1146.photobucket.com/user/imagivity/media/NTFILMOGRAPHY/THANGA%20SURANGAM/TSCollage01_zpsafeqynvn.jpg.html)

RAGHAVENDRA
21st December 2015, 06:30 AM
தங்க சுரங்கம் படத்தின் முகப்பிசை

https://www.mediafire.com/?3jajdxjf0xbt8iy

RAGHAVENDRA
23rd December 2015, 12:18 AM
Sivaji Ganesan Filmography

128. Kaval Deivam காவல் தெய்வம்

https://i.ytimg.com/vi/0k06J8NKUnk/hqdefault.jpg


தணிக்கை 28.04.1969
வெளியீடு 01.05.1969

தயாரிப்பு அம்பாள் புரொடக்ஷன்ஸ்

கதை - ஜெயகாந்தன்
கௌரவ நடிகர்கள் - நடிகர் திலகம் சிவாஜி கணேசன்

டி.எஸ்.பாலையா, எம்.என்.நம்பியார், ஆர்.முத்துராமன், வி.கே.ராமசாமி

மற்ற நடிக நடிகையர்

சௌகார் ஜானகி, லட்சுமி, ஜி.சகுந்தலா, ஸ்ரீரஞ்சனி, ல்லிதா, சிவகுமார், எஸ்.ஏ.அசோகன், எஸ்.வி.சுப்பையா, ஓ.ஏ.கே.தேவர், வி.கோபால கிருஷ்ணன், சக்தி சுகுமாரன் & நாகேஷ் மற்றும் பலர்

பிரகலாத நாடகம் - புரிசை நடேசத் தம்பிரான் குழுவினர்
கரக ஆட்டம் - கலைமணி குழுவினர்
நையாண்டி மேளம் - மதுரை அவனியாபுரம் P. சுந்தரராஜ் குழுவினர்
பாடல்கள் - மாயவ நாதன், தஞ்சை வாணன், நெல்லை அருள்மணி

பின்னணி - டி.எம்.சௌந்தர்ராஜன், பி.சுசீலா, தாராபுரம் சுந்தர்ராஜன்

வில்லுப்பாட்டு - குலதெய்வம் ராஜகோபால், கிருஷ்ணமூர்த்தி, கிருஷ்ணன், ஷண்முகசுந்தரி, ஆண்டாள்

இசை - தேவராஜன், உதவி - சேகர்

கலை - பி. நாகராஜன்

ஒளிப்பதிவு - விஜயன்
ஆபரேடிவ் கேமராமேன் - டி.வி.பாலு

ஒலிப்பதிவு - பாடல்கள் - ஜே.ஜே.மாணிக்கம் - ஏவி.எம். உதவி, கே.சம்பத், எம்.வெங்கட்ராமன்

வசன ஒலிப்பதிவு - டி.வி.நாதன், உதவி - கந்தசாமி, பாலசந்தர்

ஒளிப்பதிவு உதவியாளர்கள் - கோவிந்தராஜ், பாண்டியன்

உதவி டைரக்ஷன் - டி.வி.ராம், டி.கே.மோகன்

ரீ-ரிக்கார்டிங் - ஈ.ஐ.சீவா - சாஸ்த்தா கம்பைன்ஸ், உதவி - கே.ஜகபதி ராவ், வி.பார்த்தசாரதி

ஸ்டில்ஸ் - ஆர்.என்.நாகராஜ ராவ், ஏ.சங்கர் ராவ், ஆர்.என். நரசிங்கராவ்

விளம்பரம் - எலிகண்ட் பப்ளிசிடீஸ்
விளம்பர டிசைன்கள் - பக்தா

மேக்கப் - ஆர்.ரங்கசாமி, எம்.ராமசாமி, பத்மனாபன், கே.ராமன், தனகோடி, எம்.கோபாலன், ஏ.ஜானகிராமன்

நடன அமைப்பு - எஸ்.எம்.ராஜ்குமார்

சண்டைப்பயிற்சி - ஏ.எஸ்.துரை, சி.எம்.அரசு, என்.ஜி.பி.சாரதி

உடைகள் - பி.ராமகிருஷ்ணன், பி.பொன்னுசாமி, டி.சேது

பரத நாட்டியம் - சரளா-கனகா
பயிற்சி - சரசா
பின்னணி - ராதா ஜெயலட்சுமி
பாடல் - முத்துத் தாண்டவர்

செட்டிங்ஸ் - சுவர்ண ஆச்சாரி, ஷண்முக ஆச்சாரி, நாராயண ஆச்சாரி
பெயிண்டிங்ஸ் - சங்கரலிங்கம், பார்த்தசாரதி, கருப்பையா
புரோகிராம்ஸ் - கே.ஆறுமுகம், ஓ.அண்ணாமலை, ஜி.தேவாஜி ராவ்
எலெக்ட்ரீஷியன்ஸ் - ராமச்சந்திரய்யர், மாணிக்கம்

ஆபீஸ் நிர்வாகம் - கே.வி.ஆர்.ராமன், உதவியாளர்கள் - சக்தி சுகுமாரன், என்.ஜி.ராமதாஸ், எம்.பி.பால்ராஜ்

புரொடக்ஷன் மேனேஜர் - வி.ஜி.வேணு

செட் ப்ராபர்டீஸ் - நியோ பிலிமோ கிராப்ட்ஸ்

வெளிப்புறப் படப்பிடிப்பு - பிரசாத் புரொடக்ஷன்ஸ் பி.லிட்., சுஜாதா மூவீஸ்

ஸ்டூடியோ - கற்பகம், ஏவி.எம்., பிரசாத்

ப்ராஸ்ஸிங் - டி.ராமசாமி, சேதிராம் அண்ட் கோ. [லெஸ்ஸீஸ் - ஏவி.எம்.பிலிம் லேபரட்டரீஸ்]

டைரக்ஷன் - கே.விஜயன்

RAGHAVENDRA
23rd December 2015, 12:18 AM
காவல் தெய்வம் விளம்பர நிழற்படம் - ஆவணத்திலகம் பம்மலாரின் பொக்கிஷத்திலிருந்து..



'இன்று முதல்' விளம்பரம் : முரசொலி : 1.5.1969

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5734-1.jpg

RAGHAVENDRA
23rd December 2015, 12:19 AM
காவல் தெய்வம் - சிறப்புச் செய்திகள்

தன் மரியாதைக்குரிய திரு எஸ்.வி.சுப்பய்யா அவர்களுக்காக நடிகர் திலகம் பணம் ஏதும் பெற்றுக்கொள்ளாமல் நடித்துக் கொடுத்த படம்.


தமிழரசுக்கட்சியின் ஸ்தாபகரும் தமிழறிஞருமான சிலம்புச்செல்வர் ம.பொ.சிவஞானம் அவர்களின் மனம் கவர்ந்த திரைப்படம். இத்திரைப்படம் வெளியான சமயத்தில் சென்னை கோடம்பாக்கம் ராம் திரையரங்கில் இப்படத்திற்கான பேனரோடு இருந்த நடிகர் திலகத்தின் தோற்றத்தைப் பார்த்து மனம் லயித்து நடிகர் திலகத்தின் சிறப்பை சிலாகித்துப் பேசியது அந்நாட்களில் சினிமா பத்திரிகைகளில் இடம் பெற்ற சுவாரஸ்யமான செய்தியாக விளங்கியது.

https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/5a/GDevarajan.jpg/220px-GDevarajan.jpg
G. Devarajan

பிரபல மலையாள இசையமைப்பாளர் ஜி.தேவராஜன் அவர்கள் நடிகர் திலகத்தின் படங்களில் இசையமைப்பாளராகப் பணியாற்றிய ஒரே படம்.

சாமுண்டி பாத்திரத்தைப் பார்த்து நாகேஷ் பாத்திரம் சொல்வது போல் வரும் , சிம்மக்குரலய்யா உமக்கு என்பது பிரபலமாகி நடிகர் திலகம், கலைக்குரிசில் போன்ற பட்டங்களோடு சிம்மக்குரலோன் என்கிற பட்டப்பெயரும் மிகப் பிரபலமானது.

படத்தில் கௌரவ நடிகர் பட்டியலில் நடிகர் திலகத்தின் பெயர் இடம் பெற்றாலும் பாத்திரத்தின் முக்கியத்துவம், பெற்ற வரவேற்பு உள்ளிட்ட காரணங்களால் நடிகர் திலகத்தின் பிரதான வேடங்கள் படப்பட்டியலில் இடம் பெற்றது.

RAGHAVENDRA
23rd December 2015, 12:23 AM
காணொளிகள். நன்றி யூட்யூப் இணையதளம்.

காவல் தெய்வம் ... முழுத் திரைப்படம்
இது வரை இப்படத்தைப் பார்க்காதவர்களுக்காக..

https://www.youtube.com/watch?v=RBaH1LiikVY

வருவாமல் இருந்தால் நான் என்ன செய்குவேன்

https://www.youtube.com/watch?v=DIp7IawsuZ8

அய்யனாரு நெறஞ்ச வாழ்வு கொடுக்கணும்

https://www.youtube.com/watch?v=jkrf8jrbfvU

அய்யனென்போம் அப்பனென்போம் - வில்லுப்பாட்டு

https://www.youtube.com/watch?v=0zhfsmMDFp4

பொறப்பதும் போறதும் இயற்கை..

https://www.youtube.com/watch?v=0k06J8NKUnk

RAGHAVENDRA
23rd December 2015, 07:31 AM
கல்கி 18.05.1969 தேதியிட்ட இதழில் வெளியான காவல் தெய்வம் விளம்பரம் - நிழற்படம் நடிகர் திலகம் இணையதளத்திலிருந்து..


http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTFILMADS/kavaldeivampaperrKalki18051969adfw_zpskkxo1awy.jpg

Gopal.s
27th December 2015, 01:25 PM
அன்பளிப்பு.- 1969.

வரும் புத்தாண்டில் 45 வருட முடிவை எய்த போகும் அன்பளிப்பு ,வந்த நாட்களில் ஒரு தீவிர சமுதாய பிரச்சினையை பொழுது போக்குடன் கலந்து பேசிய படம்.

முதல் பாராட்டு ஏ.சி.திருலோக சந்தர். இவர் ஒரு நவீன ராஜா கால பொழுது போக்கு (வீர திருமகன்), குடும்ப செண்டிமெண்ட் (நானும் ஒரு பெண்)Romantic musical (அன்பே வா),thriller (அதே கண்கள்) ,Anti -hero பொழுதுபோக்கு (தங்கை) என்று வித விதமாக variety கொடுத்து தன்னை சிறை படுத்தி கொள்ளாத executive வகை இயக்குனர்.(திரைக் கதை நுட்பங்களும் அறிந்த படிப்பாளி)இவர் கிராமிய மணத்துடன்,கிராமிய பிரச்சினை என்று சுருக்காமல் மனித இனத்துக்கே அச்சுறுத்தலாக சவால் விட்டு கொண்டிருக்கும் இன்றைய பிரச்சினையை அன்றே சொன்னார்.ஓரளவு nativity கொண்ட நல்ல பொழுது போக்கு படம்.

பசுமை விவசாயம், விவசாய விளை நிலங்கள் பிளாட்டுகளாக,தொழிற்சாலைகளாக(சில நேரம் ஆபத்தான ரசாயன-அணு நிலையங்களாகவும்) மாறி கிராமங்களையும் ,உணவு உற்பத்தியையும் சிதைக்கும் அபாய விளைவுகளை ,முக்கிய கருவாக கொண்ட படம்.

ஒரு பூர்ஷ்வா செல்வ நிலை கொண்ட ஒருவனும், அவன் குடும்பம் சார்ந்து நிற்கும் விவசாய சுயம் கொண்ட ஏழை தொழிலாளி ஒருவனும் சகோதரர் போல மன இணைப்பு கொண்டாலும், அந்த கிராமத்தை தொழில்-சார் நகர முகமாக மாற்ற நினைக்கும் படித்த பணக்காரனுக்கும்,விவசாயம் சார்ந்த மண் பற்று கொண்ட அடிப்படை ஏழை மனிதனுக்கும் நிகழும் போராட்ட நிலையில் தொடரும் பிரச்சினைகள்.இடை-நிலை சுயநலமிகளால் தீ மூட்ட பட்டு ,தீயுடனே முடியும் இறுதி காட்சி.

நடிகர்திலகம் இந்த படத்தில் அற்புதமான உடல் கட்டு (கிருஷ்ணாவின் சொற்களில் தேக்கு மர தேகம் ),திராவிட மன்மத எழில் தோற்றம்,இளமை சுடர் விடும் துறு துறுப்பு கொண்டு அவ்வளவு ,இவ்வளவு என்று சொல்ல முடியாத அளவு handsome உச்சத்தில் இருப்பார்.(அதுவும் தம்பியாக நடிக்கும் ,வயது மிக குறைந்த அன்றைய வளரும் இன்னொரு நடிகரின் அருகில் பாதி வயதாக தெரிவார்)

பிரச்சாரமாக தெரியாமல் தன் தொழில்-சார் மண் நேசத்தை இயல்பாக உணர்த்தும் ,பாத்திரத்தை ஒட்டிய நடிப்பு.ஒரு raw என்ற நிலையில் ஜாலி நடன காட்சிகள், எல்லை மீறா காதல் குறும்புகள்,மிதமான நட்பு-பாச வெளியீடுகள்,விறு விறுப்பான சிலம்ப சண்டை,என்று இயல்பான நகைசுவையும் தெளிப்பார். ரவி சந்திரனை இரண்டாவது நாயகனாக்கியிருக்கலாமோ என்ற ஏக்கம் எனக்கு இன்றும் உண்டு.

விஸ்வநாதன் இசையமைப்பில் தேரு வந்தது , வள்ளி மலை மான்குட்டி பாடல்கள் என்னை இன்று வரை மயக்கும் பாடல்கள்.அது தவிர வேஷ பொருத்தம்,கோபாலன் எங்கே உண்டோ,எனக்கு தெரியும் என்ற நல்ல பாடல்கள்.

படத்திற்கு திருஷ்டி சரோஜா தேவி. சோர்வு தெரியும்,தளர்ச்சி கொண்ட வயதான தோற்றத்தில் சிவாஜிக்கு அம்மா போல தோற்றமளிப்பார்.படத்தில் காதல் காட்சிகள் குட்டிசுவரானது இவரால்தான்.ஒட்டாமல் போகும். அதை விட கொடுமை விஜய நிர்மலா.கதாயகியர் இருவரும் கொடூரம்.(ஆனால் இதற்கு பின் வந்த அஞ்சல் பெட்டியில் சரோஜாதேவி ப்ரெஷ் ஆக இளமையாக இருந்தார்)

எல்லோருடைய நல்ல பங்களிப்பு ,அளவான நல்ல திரைகதை-வசனங்கள், உறுத்தாத இயக்கம், பொழுதுபோக்கு, தீவிர பிரச்சினையின் நுணுக்கமான கையாளல்,நடிகர்களின் நிறைவான பங்களிப்பு இருந்தும் ,எதிர்பார்த்த வெற்றி கோட்டை இந்த படம் தொடாதது இது வரை புதிராகவே உள்ளது.

நடிகர்திலகம் , ஒரு இயக்குனர் தயாரிப்பாளருக்கு பணிவது அவசியம் என்றாலும்,இந்தளவிர்க்கா ?என்று கேட்டிருந்தார். எம்.ஆர்.சந்தானம்-ஏ.சி.திருலோக் சந்தர் எங்கே குறி தவறினர்?

Gopal.s
27th December 2015, 01:32 PM
நடிகர்திலகத்தின் சாதனை வருடங்கள் பல 1952 இல் தொடங்கி 2000 வரை அவர் வருடங்களே. அதில் மறக்க முடியாத வருடமாக நான் நினைக்கும் வருடம் 1969.


இந்த வருடம் அவர் படங்களின் variety சொல்லி மாளாதது.

அன்பளிப்பு,குருதட்சிணை - கிராமிய படங்கள்.

தங்க சுரங்கம்- jamebond படம்.

சிவந்த மண் - Action படம் .

காவல் தெய்வம்- ரியலிச படம்.

தெய்வமகன்- குடும்ப செண்டிமெண்ட் படம்.

திருடன்- ஆக்க்ஷன் -செண்டிமெண்ட் கலந்த Anti -hero படம்.

நிறைகுடம்- காமெடி கலந்த செண்டிமெண்ட் .

அஞ்சல் பெட்டி 520- முழு நீள காமெடி.


கிட்டத்தட்ட 9 கதாநாயகிகளுடன் நடித்தார்.

அன்பளிப்பு, அஞ்சல் பெட்டி 520 - சரோஜாதேவி.

தங்கசுரங்கம்- பாரதி, வெண்ணிற ஆடை நிர்மலா.

குருதட்சிணை - பத்மினி,ஜெயலலிதா.

தெய்வ மகன்- பண்டரி பாய்,ஜெயலலிதா.

திருடன்- கே.ஆர்.விஜயா.

நிறைகுடம்- வாணிஸ்ரீ.

சிவந்த மண் -காஞ்சனா.


7 இயக்குனர்களுடன் பணியாற்றினார்.

ஏ.சி.திருலோக சந்தர்- அன்பளிப்பு,தெய்வ மகன்,திருடன்.

ராமண்ணா- தங்க சுரங்கம்.

ஏ.பீ.நாகராஜன்- குருதட்சினை.

டி.என்.பாலு -அஞ்சல் பெட்டி 520 (அறிமுகம்)

முக்தா ஸ்ரீனிவாசன்- நிறை குடம் (முதல் படம் நடிகர்திலகத்துடன்)

கே. விஜயன் - காவல் தெய்வம்( முதல் படம் நடிகர்திலகத்துடன்)

ஸ்ரீதர் - சிவந்த மண் .


6 இசையமைப்பாளர்களுடன் பணியாற்றினார்.

அன்பளிப்பு,தெய்வ மகன்,திருடன்,சிவந்த மண் - எம்.எஸ்.விஸ்வநாதன்.

தங்க சுரங்கம்- டி.கே.ராமமூர்த்தி (ஒரே படம்)

குருதட்சினை- புகழேந்தி(ஒரே படம்)

காவல் தெய்வம்- தேவ ராஜன் (ஒரே படம்)

அஞ்சல் பெட்டி 520 - கோவர்தன் (ஒரே படம்)

நிறை குடம்- வீ.குமார் (ஒரே படம்)

Gopal.s
27th December 2015, 02:12 PM
சிக்கல் சண்முகசுந்தரம்.

தமிழகத்தின் நெற்களஞ்சியம் மட்டுமல்ல கலைகளஞ்சியமும் தஞ்சை மாவட்டம் என்றே சொல்லலாம். தமிழகத்திற்கே உரித்தான பரதமும் நாதமும் கருக்கொண்டதும் உருப்பெற்றதும் தஞ்சை மாவட்டத்தில்தான். நாத பிரம்மம் என்றழைக்கப்படுகின்ற மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜர் பெருமை பாடும் திருவையாறு முதல் பரத நாட்டியத்தின் இரு பெரும் முறைகளாக சொல்லப்படுகின்ற பந்தநல்லூர் மற்றும் வழுவூர் ஆகியவை அமைந்திருப்பதும் பிரிக்கப்படாத தஞ்சை மாவட்டத்தில்தான். அதனால்தான் என்னவோ நாயகி மோகனா திருவாரூரை சேர்ந்தவளாக சித்தரிக்கப்படுகிறாள். நாகப்பட்டினத்திற்கு அருகில் உள்ள சிக்கல் எனும் ஊரை சொந்தமாக கொண்டவர் சண்முகசுந்தரம்.

பொதுவாகவே திறமை வாய்ந்த கலைஞர்கள் சற்று முன் கோவம் கொண்டவர்களாகவும் தங்கள் திறமையின் மீது அசாத்திய நம்பிக்கை கொண்டவர்களாகவும் அதன் காரணமாகவே வித்யா கர்வம் [சாதாரண வார்த்தைகளில் சொன்னால் திமிர்] மிகுந்தவர்களாகவும் விளங்குவார்கள் என்பது பரவலான ஒரு நம்பிக்கை/கருத்து. அந்த கருத்துக்கு வலு சேர்பவர்கள்தான் சண்முகமும் மோகனாவும்.

அதிலும் சண்முகம் உண்மையிலே மனதளவில் சிக்கலார்தான். தன் தொழிலின் மேல் அபார பக்தி, தன் திறமை மேல் அசாத்திய நம்பிக்கை, தன் தன்மானத்திற்கு ஊறு நேரும்போது யாராக இருந்தாலும் அவர்களுடன் மோத தயங்காத குணம், தான் காதலிக்கும் பெண் மீது வைக்கும் அதீத அன்பு, அவள் தனக்கு மட்டுமே சொந்தமாக இருக்க வேண்டும் என்ற வெறி, பெரிய கலைஞனாக இருந்தாலும் ஒரு சாராசரி மனிதனுக்கு உள்ளது போன்ற பயம், சந்தேகம் இத்யாதிகள். மொத்தத்தில் ரத்தமும் சதையுமான ஒரு பச்சை மனிதன்.

முதன் முதலாக கோவிலில் கச்சேரி செய்துக் கொண்டிருக்கும் போது வண்டியில் வந்து இறங்கும் மோகனாவை பார்த்தவுடன் பாலையாவிடம் அதை சுட்டிக் காட்டும் கண் அசைவு, தொடர்ந்து வேட்டு சத்தம் கேட்டவுடன் வரும் கோவத்தில் கச்சேரியை நிறுத்திவிட்டு வெளியேறுவது, வெளியில் நிற்கும் தன் மனம் கவர்ந்த பெண்ணிடம் அதை வெளிக் காட்டிக் கொள்ளாமல் நாத பரத கலைகளைப் பற்றி வாதம் புரிவது என்று அந்த முதல் காட்சியிலே கேரக்டர்-ஐ establish பண்ணி விடுவார்கள். காதல் கோவம் கர்வம் எல்லாம் அப்படியே அந்த முகபாவங்களில் ஜொலிக்கும்.

முதலில் சொன்னது போல் சண்முகசுந்தரம் ஒரு அசாதாரணமான ஹீரோ இல்லை. சராசரி மனிதன். வெளியே வீம்புக்கு நாட்டியம் பார்க்க வரமாட்டேன் என்று சொல்லி விட்டாலும் தன் வாத்திய குழுவினரை போக கூடாது என விரட்டினாலும் மனதின் ஆசையை கட்டுப்படுத்த முடியாமல் கச்சேரிக்கு போய் மறைந்திருந்து பார்க்கும் ஒரு காதல் வயப்பட்ட மனிதனை எப்படி வெளிக் கொண்டு வருகிறார். அடுத்து தற்செயலாக ஒரே ரயிலில் சண்முகமும் மோகனாவும் பயணம் செய்யும் வாய்ப்பு. அத்தனை பேர் சூழ்ந்து இருந்தும் காதல் எப்படி பொங்கி பெருகிறது? பாலையா துணையுடன் விளக்கு அணைக்கப்பட்டு இருவருமே கண்களால் பேசிக் கொள்ளும் காட்சி. தமிழ் சினிமாவில் இதுவரை இடம் பெற்றுள்ள காதல் காட்சிகளுக்குள் தலையாய ஒன்று என்பதில் சந்தேகமில்லை.

தஞ்சாவூரில் இறங்குகிறார்கள். சிங்கபுரம் மைனர் வீட்டு நிகழ்ச்சிக்கு கூட்டிப் போக வந்திருக்கும் வைத்தி, படியில் நிற்கும் மோகனாவைப் பார்த்துவிட்டு யாரு மோகனாவா என்று கேட்டுவிட்டு அங்கே போக முற்படும்போது அவள் தனக்கு மட்டுமே சொந்தம் என்ற possessiveness மீண்டும் சண்முகத்திடம் தலை தூக்க எங்களை பார்க்க வந்தியா இல்லை அவங்களை பார்க்க வந்தியா என்று முறுக்கும் சண்முகம், அங்கே மீண்டும் அந்த கதாபாத்திரத்தின் குணாதிசயங்களை அழகுற காட்சி வைக்கிறார் நடிகர் திலகம்.

சிங்கபுரம் அரண்மனையில் சுய கெளரவம் மிக்க அந்த கலைஞ்னுக்கு ஏற்படும் அவமானம், கோவித்துக் கொண்டு வெளியேற உங்கள் கச்சேரியை கேட்கத்தான் வந்தோம் என்று திரண்டிருக்கும் பொது மக்கள் சொல்ல அந்த பெருமிதம் முகத்தில் ஒரு கனம் மின்னி மறைவதை என்னவென்று சொல்லுவது? வாசிப்பை கேட்டு வெளிநாட்டுக்காரர்கள் எல்லாம் வந்துவிட அவர்கள் இங்கிலீஷ் நோட்ஸ் வாசிக்க முடியுமா என்று கேட்க முதலில் அந்த ஆங்கிலம் புரியாமல் ஒரு கனம் குழப்பமாய் பார்க்க வைத்தி அது என்னவென்று விளக்க உடனே பாலையாவைப் பார்த்து கண் அசைவிலே ஓகே என்று சொல்லி அவர் வாசிக்கும் காட்சி அற்புதமான ஒன்று.

திருவாரூர் சென்று மோகனாவைப் பார்க்க வேண்டும் என்ற அந்த ஆசையை வெளியில் தெரியாமல் மறைக்க முற்பட்டு ஆனால் பாலையாவிற்கு புரிந்து விட அந்த தர்மசங்கடத்தை கோவப்படுவது போல் வெளியில் காண்பிப்பது, சிங்கபுரம் மைனரின் கோச் வண்டியை பார்த்ததும் வரும் அதிர்ச்சி, ஆத்திரம். இவற்றிக்கு காரணமில்லாமல் இல்லை. அந்தக் காலத்தில் [அதாவது கதை நடப்பது சுதந்திரத்திற்கு முன் உள்ள காலகட்டம். அது படத்தில் சொல்லப்படவில்லை என்றாலும் கூட தொடர் கதையாக வந்த போது அப்படித்தான் சொல்லப்பட்டது] பொதுவாக நாட்டிய பெண்மணிகளைப் பற்றிய சமூகத்தின் பார்வை, பொதுமக்களின் கருத்து எல்லாம் தவறான கண்ணோட்டத்திலேயே அமைந்திருந்தன. அந்த சூழலில் வளர்ந்த சண்முகத்திற்கும் சந்தேகம் வந்ததில் ஆச்சரியமில்லை.

படம் முழுவதும் வரக்கூடிய சண்முகத்திற்கும் ஜில் ஜில்லின் நாடகக் கொட்டகையில் இருக்கும் போது திரையில் தோன்றும் சண்முகத்திற்கும் வித்தியாசம் இருக்கும். அங்கே மட்டும்தான் அந்த கோபதாபம் இல்லாமல் சற்றே சிரிக்கும் சண்முகத்தைப் பார்க்கலாம்.

நாடகம் பார்க்க வரும் மோகனா சண்முகத்தை சீண்டும் காட்சியெல்லாம் யாரும் எடுத்து சொல்லாமலே அற்புதமான காட்சி என்று அனைவருக்கும் தெரியும். ஒரு மனிதனுக்கு அதுவும் இயல்பிலே முன்கோபியான ஒருவனின் தன்மானம் சீண்டப்பட்டால் அந்த கோபத்தின் வெளிப்பாடு எப்படி இருக்கும் என்பதை இதில் பார்த்து தெரிந்துக் கொள்ளலாம். ஒரு ஆணுக்கு மற்றொரு ஆணுடன் அப்படி ஒரு வாக்கு வாதம் ஏற்படுகிறது என்றால் அங்கே கைகலப்பு ஏற்பட்டு விடும் ஆனால் சீண்டியவள் ஒரு பெண் என்பதனால் அதுவும் பத்து பேருக்கு முன்னால் தன்னை கேலி பேசி விட்டாள் என்று வரும் போது அது எப்படி அந்த உடல் மொழியில் வெளிப்படுகிறது. அடிவயிற்றிலிருந்து வரும் கோவத்தோடு அவள் சவாலை ஏற்று தில்லானா வாசித்து உன் காலை உடைக்கிறேன் என்று சவால் விட்ட பிறகும் கூட அந்த ஆத்திரம் தணியாமல் மீண்டும் மீண்டும் திரும்பி வந்து கோவத்தில் உதடுகள் துடிக்க வார்த்தை வராமல் அந்த துண்டை உதறியவாறே போகும் அந்த காட்சியெல்லாம் அது போல செய்வதற்கு மீண்டும் நடிகர் திலகமே பிறந்து வந்தால்தான் உண்டு.

தில்லானா பட்டம் கொடுக்கும் காட்சியெல்லாம் பற்றி ஏற்கனவே பிரபு அருமையாக எழுதியிருக்கிறார் [சண்முகத்திற்கு மேடை புதியதல்ல ஆனால் மேடை பேச்சு புதிது]. ஆகவே அடுத்த கட்டம் என்றால் அவர் மருத்துவமனையில் நர்சின் பணிவிடையைப் பார்த்து தவறாக நினைத்து அதை தவிர்க்க நினைப்பதை சொல்ல வேண்டும். அடிப்படையில் பெண்களிடமிருந்து ஒதுங்கி இருக்கும் ஒரு கூச்ச சுபாவி. நர்ஸ் உரிமை எடுத்துக் கொண்டு தனக்கு பணவிடை செய்யும் போது தர்மசங்கடத்தில் தவிக்கும் அந்த உடல் மொழி ஒரு பரிமாணம் என்றால், ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல் சத்தம் போட்டு விட, அந்த நர்ஸ் ஒரு அர்ப்பணிப்பு உணர்வோடு செய்ததாக சொன்னவ்டன் அவசரப்பட்டு தவறாக பேசி விட்டோமே என்ற வேறொரு தர்மசங்கடத்தில் தவிக்கும் போது காட்டும் உடல் மொழி அவரின் இன்னொரு பரிமாணம்.

நலந்தானா பாடல் காட்சி எல்லாம் சொல்லவே தேவையில்லை. நான் பலரிடமும் சொல்வது எல்லா வரிகளையும் விட்டு விடுவோம் அந்த கண்பட்டதால் உந்தன் மேனியிலே புண்பட்டதோ அதை நானறியேன் என்ற வரிகளின் போது விழி சிவந்து கண்ணில் நீர் பெருக்கி ஒரு சின்ன தலையாட்டலில் உன் உள்ளத்தையும் அதில் என் மேல் உள்ள காதலையும் எனக்கு ஒன்று என்றால் நீ துடித்துப் போவதையும் நான் உணர்ந்திருக்கிறேன் என்ற புரிதலையும் அவர் வெளிப்படுத்தும் அந்த பாங்கு இருக்கிறதே அப்போது அவர் கன்னங்களில் மட்டுமா கண்ணீர் வழியும், காட்சியை காண்பவர் எல்லோர் கண்களிலும்மல்லவா கண்ணீர் வடியும்.

மதன்பூர் செல்லும் ஒப்பந்தத்தில் கையெழுத்து போடும் போது, படித்து பார்த்து விட்டு போடுங்கள் என்று ராஜன் சொல்ல அதிலே என்னடா இருக்கப் போகுது என்று சமாதானம் சொல்லி கையெழுத்து போட்டுவிட்டு பின்னர் தன்மானத்திற்கு ஊறு வரும் என்ற நிலையில் வாசிக்க மாட்டேன் என்று சொல்ல ஒப்பந்ததை காட்டி கேஸ் போடுவேன் என்று வைத்தி சொல்லும் போது அன்று கூட இருந்தவர்கள் சொன்னபோது கேட்காமல் போனோமே என்ற குற்ற உணர்வை கூட எவ்வளவு துல்லியமாக வெளிப்படுத்துகிறார்.

இறுதியாக மதன்பூர் மகராஜாவின் அறையிலிருந்து வெளியே வரும் மோகனாவை தாறுமாறாக பேச அதற்கு அறிவு கெட்டதனமாக பேசாதீர்கள் என்று மோகனா சொல்ல கண் மண் தெரியாத கோவத்தில் பளாரென்று அறையும் சண்முகம் செத்து போ என்று சொல்லிவிட்டு போகும் அந்த உடல் மொழி, மறக்கவே முடியாது.

கொஞ்சம் யோசித்துப் பார்தோமென்றால் தில்லானா அடிப்படையில் ஒரு காதல் கதைதான். காதலிக்கும் இருவர் அந்த காதல் வெற்றி பெற எதிர்கொள்ள வேண்டிய போராட்டங்கள்தான் கதை. ஆனால் கதையின் பின்புலம் இசையும் இசை சார்ந்த சூழலுமாக அமைக்கப்பட்டிருந்ததுதான் அந்தப் படத்தின் சிறப்பு.

தில்லானா என்று எடுத்துக் கொண்டால் ஒருவரை கூட விட்டு விடாமல் பாராட்ட வேண்டும். ஆனால் இங்கே பாட்டுடை தலைவன் நடிகர் திலகம் பற்றிய அலசல் மட்டுமே இப்போது என்னால் எழுத முடிந்திருக்கிறது. பின்னொரு நாளில் மற்றவர்களைப் பற்றியும் எழுதலாம்.

அன்புடன்

July 27th [1968] happens to be the release date of Thillana. Last year when Swami published photos and Ads of Thillana it initiated a round of discussions about the film and the exchanges between Rakesh and Plum were lively. When I commended it, Plum asked me to write about the film. I promised him that I will do it but I could not keep my word. One year has gone and so I thought "lemme try something". I have talked about only Shanmugasundaram. While there had been great write ups about the film by the likes of Prabhu and Rakesh, i am not sure how much justice I have done. Still dedicating this to Plum.

By Murali

Gopal.s
27th December 2015, 02:14 PM
ப்ரிய சிக்கலாரைப் பற்றி சிறப்பான இடுகை திரு.முரளி----PR
Quote Originally Posted by முரளி ஶ்ரீநிவாஸ்
அதிலும் சண்முகம் உண்மையிலே மனதளவில் சிக்கலார்தான். தன் தொழிலின் மேல் அபார பக்தி, தன் திறமை மேல் அசாத்திய நம்பிக்கை, தன் தன்மானத்திற்கு ஊறு நேரும்போது யாராக இருந்தாலும் அவர்களுடன் மோத தயங்காத குணம், தான் காதலிக்கும் பெண் மீது வைக்கும் அதீத அன்பு, அவள் தனக்கு மட்டுமே சொந்தமாக இருக்க வேண்டும் என்ற வெறி, பெரிய கலைஞனாக இருந்தாலும் ஒரு சாராசரி மனிதனுக்கு உள்ளது போன்ற பயம், சந்தேகம் இத்யாதிகள். மொத்தத்தில் ரத்தமும் சதையுமான ஒரு பச்சை மனிதன்.

சில நாட்களுக்கு முன்பு ஜெய்-யுடன் இதைப் பற்றி தான் விவாதித்துக்கொண்டிருந்தேன். எத்தனை shadesஐ அசாத்தியமாக காண்பித்திருப்பார். அசுர சாதனை. அடங்கிய தொனியில் இருக்கும் காட்சிகளிலும்.

"கோவந்தேன்..." என்று ஜில்லு சொன்னதும்
"குறை இல்லாத மனுஷன் ஏது ஜில்லு.." என்று சொல்வார். இது ஞானியின் வார்த்தையோ, விரக்தியில் சொல்வதோ இல்லை. ஒரு மாதிரி tired and dry குரலில் சொல்வார்.

Quote Originally Posted by முரளி ஶ்ரீநிவாஸ்
முதன் முதலாக கோவிலில் கச்சேரி செய்துக் கொண்டிருக்கும் போது வண்டியில் வந்து இறங்கும் மோகனாவை பார்த்தவுடன் பாலையாவிடம் அதை சுட்டிக் காட்டும் கண் அசைவு,
பிரமாதமான tag-team!
அதற்கு லயித்து வாசித்துக் கொண்டிருக்கும் பாலையா விழித்து, கவனித்து, சிரிப்பது.
தத்தம் கலைகளின் உச்சத்தில் இருக்கும் தருணத்தில் கூட இந்த இரு கலைஞர்கள் 'have some attention to spare' என்ற அளவுக்கு அந்த சித்தரிப்பிலேயே தெரிந்துவிடும்.

Quote Originally Posted by முரளி ஶ்ரீநிவாஸ்
ஆசையை கட்டுப்படுத்த முடியாமல் கச்சேரிக்கு போய் மறைந்திருந்து பார்க்கும் ஒரு காதல் வயப்பட்ட மனிதனை எப்படி வெளிக் கொண்டு வருகிறார்.
அதுவும் அந்த 'ஷண்முகா'வுக்கு 'அடி!' என்று அந்த துடுக்குத்தனத்துக்கு react செய்யும் விதம்

Quote Originally Posted by முரளி ஶ்ரீநிவாஸ்
அடுத்து தற்செயலாக ஒரே ரயிலில் சண்முகமும் மோகனாவும் பயணம் செய்யும் வாய்ப்பு.
தற்செயல் இல்லை. குழுவையே கடைசி ரயிலுக்காக காக்க வைப்பார். பாலையா காரணத்தை உடைக்கப்போக, வேறு வழியில்லாமல் அரைமனதுடன் கிளம்புவார். கனவானின் காதல் அல்லவா

Quote Originally Posted by முரளி ஶ்ரீநிவாஸ்
வைத்தி, படியில் நிற்கும் மோகனாவைப் பார்த்துவிட்டு யாரு மோகனாவா என்று கேட்டுவிட்டு அங்கே போக முற்படும்போது அவள் தனக்கு மட்டுமே சொந்தம் என்ற possessiveness மீண்டும் சண்முகத்திடம் தலை தூக்க எங்களை பார்க்க வந்தியா இல்லை அவங்களை பார்க்க வந்தியா என்று முறுக்கும் சண்முகம், அங்கே மீண்டும் அந்த கதாபாத்திரத்தின் குணாதிசயங்களை அழகுற காட்சி வைக்கிறார் நடிகர் திலகம்.
இப்படியும் சொல்லலாம். நான் இதை வேறு மாதிரி நினைத்தேன். அந்த தருணத்தில் அவன் மகாகலைஞன். தன்னை வரவேற்க வந்தவன், தனக்கு உரிய மரியாதையைச் செய்யவேண்டுமே ஒழிய, இன்னொரு கலைஞரை சந்தித்துப் பேசி, தன்னை incidentalஆக வரவேற்றதாக இருக்கக்கூடாது என்ற பிடிவாதம் தெரிந்தது.

Quote Originally Posted by முரளி ஶ்ரீநிவாஸ்
உங்கள் கச்சேரியை கேட்கத்தான் வந்தோம் என்று திரண்டிருக்கும் பொது மக்கள் சொல்ல அந்த பெருமிதம் முகத்தில் ஒரு கனம் மின்னி மறைவதை என்னவென்று சொல்லுவது?
முதலில் அந்த ஆங்கிலம் புரியாமல் ஒரு கனம் குழப்பமாய் பார்க்க வைத்தி அது என்னவென்று விளக்க உடனே பாலையாவைப் பார்த்து கண் அசைவிலே ஓகே என்று சொல்லி அவர் வாசிக்கும் காட்சி அற்புதமான ஒன்று.

வைத்தி மொழிபெயர்த்ததும் "இவ்வளவு தானா எப்படி ஊதித் தள்ளுகிறோம் பார்" என்று இருவரும் முகபாவங்கள் மூலமாகவே காட்டி விடுவார்கள்.

Gopal.s
27th December 2015, 02:18 PM
Quote Originally Posted by முரளி ஶ்ரீநிவாஸ்
ஒரு ஆணுக்கு மற்றொரு ஆணுடன் அப்படி ஒரு வாக்கு வாதம் ஏற்படுகிறது என்றால் அங்கே கைகலப்பு ஏற்பட்டு விடும் ஆனால் சீண்டியவள் ஒரு பெண் என்பதனால் அதுவும் பத்து பேருக்கு முன்னால் தன்னை கேலி பேசி விட்டாள் என்று வரும் போது அது எப்படி அந்த உடல் மொழியில் வெளிப்படுகிறது. அடிவயிற்றிலிருந்து வரும் கோவத்தோடு அவள் சவாலை ஏற்று தில்லானா வாசித்து உன் காலை உடைக்கிறேன் என்று சவால் விட்ட பிறகும் கூட அந்த ஆத்திரம் தணியாமல் மீண்டும் மீண்டும் திரும்பி வந்து கோவத்தில் உதடுகள் துடிக்க வார்த்தை வராமல் அந்த துண்டை உதறியவாறே போகும் அந்த காட்சியெல்லாம் அது போல செய்வதற்கு மீண்டும் நடிகர் திலகமே பிறந்து வந்தால்தான் உண்டு.

பிறந்து வரக்கூடும் என்ற நம்பிக்கையுமே மிகை. ஏனன்றால், அந்த காலகட்டத்தின் aesthetic, ஆண்-பெண் உறவுகள், மான-அவமான மதிப்பீடுகள் எல்லாவற்றையும் அத்தனை துல்லியமாக ரசிக்கக் கூடிய சூழலும் இன்று இல்லை என்றுதான் சொல்லவேண்டும். இது அங்கலாய்ப்பு அல்ல. காலப்போக்கில் இந்த வகை மாற்றங்கள் நடக்கத்தான் செய்யும்.

இன்று ஒரு சரித்திரப் படம் எடுத்தாலும், உடை,சூழல் போன்ற வெளிப்பூச்சு விஷயங்களை சிறப்பாக கொண்டு வர முடியுமே தவிர, அந்த காலகட்டத்தில் உறவுகள்- 'இன்னின்ன வார்த்தை இத்தகைய மனிதர் மீது இத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்' என்பதை எல்லாம் ஓரளவுக்கு மேல் கொண்டு வர முடியாது. நமது இன்றைய சட்டகத்தில் இருந்து தான் பார்க்க முடியும். அதற்கு மேல் அதை எல்லாம் உணர்ந்து, சிறப்பாக உள்வாங்கி வெளிக்கொண்டுவர இதைப் போன்ற அசாத்திய திறமை வேண்டும்.

கோவத்துடன் மோகனாவைப் பார்ப்பதும், பேச்சுகொடுக்கும் வைத்தியை "சும்மார்ரா டேய்" என்று சொல்லி வாயடைக்க வைக்கும்போதும் 'கனன்றுகொண்டிருக்கும் சீற்றம், எந்நேரமும் வெடித்து வெளிவரலாம்' என்று நமக்குத் தெரிந்துவிடும். கோவத்திலும் இத்தனை நிறங்களா!

தெய்வமகனின் : damn your hotel என்று சொல்லும்போது ஒரு disappointment கலந்த கோவம், தேவர் மகனில் பொறுப்பில்லாமல் எதிர்த்துப் பேசும் மகனிடம் 'தர்க்கம் பண்றீய?' என்ற சீற்றம், சில பக்கங்கள் முன் நாம் பார்த்த சத்ரபதி சிவாஜியின் கோவம்..இவையெல்லாம் பற்பல இடங்களில் பார்த்தவை. தில்லானாவில் ஒரே படத்தில்...ஏன் இந்த ஒரே காட்சியில்!!

அந்த காட்சித்தொடரே சிறப்பாக வந்திருக்கும். Mood மாறுவது, மனமாற்றம் நிக்ழவது, ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு பதட்டம். மைனருக்கு, வடிவு'க்கு...என்று ஏ.பி.என் masterclass.

"வேறு ஆரு காப்பாத்துனாஹ"..என்று ஜில்லு நடுங்கும் அழுகுரலுடன் கேட்கும்போது அந்த குழந்தைத்தனம் நம்மை கிட்டத்தட்டநெகிழச்செய்யும்.

சற்று முன்வரை இவர்கள் சண்டை மறந்து சேரக்கூடாதா என்று நினைத்துக்கொண்டிருந்த நாம், மோகனா வம்பிழுப்பதை, 'எத்தனை புத்திசாலி இந்தப் பெண்!' என்று ரசிக்கத் தொடங்கிவிடுகிறோம். APN makes the audience root for the exact opposite, within a matter of minutes!!

தில்லானா பட்டம் கொடுக்கும் காட்சி

இங்கொரு விஷயத்தை நாம் நினைவில் கொள்ள வேண்டும். நாடகக் கொட்டகைக்குப் பிறகு மோகனாவும்-சண்முகமும் இங்கு தான் சந்திக்கிறார்கள்.

சிங்கபுரம் மைனர் திருந்திய விஷயம் எல்லாம் நமக்குத் தான் தெரியும். சண்முகத்துக்கு தெரிந்ததாக படத்தில் சொல்லப்படவில்லை. நாவலில் எப்படி என்று தெரியவில்லை.

சண்முகம் காண்பதெல்லாம், குடும்பத்தோடு மைனர் போட்டியைப் பார்க்க திருவாரூருக்கு வந்திருக்கிறார் என்பது தான். வைத்தி ஏற்படுத்தும் இடையூறுகளை சபையிலிருந்து அகற்றுகிறார் என்பது தான். இதனாலேயே சண்முகம் போன்ற ஒரு சந்தேகப்பேர்வழிக்கு சந்தேகம் போய்விடுமா என்ன?

அந்த ஆட்டத்தின் முடிவில் அந்த சந்தேகம் எங்கே இருந்த இடம் தெரியாமல் காணாமல் போனது? முன்னைவிட ஆழமான ஒரு காதலை மட்டுமே அங்கே காண்கிறோம். இந்தக் கலைஞனுக்கு, மோகனாவின் கலையின் பரிமளிப்பு தன் சந்தேகத்தைத் தாண்டி செல்ல செய்துவிட்டது.

ஒரு absurd foil கொடுக்கவேண்டும் என்றால்: பாலசந்தரின் டூயட்டை நினைத்துப்பாருங்கள். 'அந்த இசையைத் தான் நான் காதலித்தேன்' என்று ஒரு வசனம் வரும். எத்தனை அபத்தமான ஒரு வசனம். என்ன கோமாளித்தனமான ஒரு தருணம். ஒரு அழகான conceptஐ சொதப்பியிருபார்கள்.

ஆனால் தி.மோ-வில் எத்தனை அழகாக காண்பித்திருப்பார்கள். கலைஞனின் கலையால் ஆகர்ஷிக்கப்படும்பொழுது, அந்த கலைஞனின் ஆளுமையை, personalityஐயும் சேர்த்தே உணர்ந்துவிட்டதாகத் தோன்றுவதையல்லவா அந்தக் கணம் காண்பிக்கிறது.

இந்தி இயக்குனர்/நடிகர் குரு தத்'தின் ப்யாஸா'வில் கதாநாயகன் ஒரு கவிஞன். அவன் கவிதைகளைப் படிக்கும் கதாநாயகி வஹீதா ரஹ்மான் அவனை நன்கு அறிந்தவள் போல பேசுவாள். அவன் 'என்னைப் பற்றி உனக்கு எப்படித் தெரியும்?' என்று கேட்க. "உன் (ஆழ்மன வெளிப்பாடான) கவிதைகளையே நான் படித்துவிட்டேனே. இதற்குமேல் உன்னைப் பற்றி தெரிந்துகொள்ள வேறென்ன இருக்கிறது என்கிறாய்" என்பாள்.

கிட்டத்தட்ட அதைத் தான் வார்த்தைகளின்று இக்காட்சியில் இசைமூலம் சாதித்திருப்பார்கள். நமது திரைப்பட வரலாற்றில் ஒரு அழகியல் மைல்கல் இப்படம்.

அந்த உரை ஒரு wonder! தயக்கம், வார்த்தைகளைத் தேடித் துழாவிப் பேசுவது என்று. Spot improvisation என்று சொல்லலாம். ஆனால், சிவாஜியைப் பொருத்தவரை பல takeகள் இருந்தாலும் அதை அப்படியே திரும்ப பேசியிருப்பார் என்பது நமக்குத் தெரியும். பிரமிக்கவேண்டியது தான்.


Quote Originally Posted by முரளி ஶ்ரீநிவாஸ்
நர்ஸ் உரிமை எடுத்துக் கொண்டு தனக்கு பணவிடை செய்யும் போது தர்மசங்கடத்தில் தவிக்கும் அந்த உடல் மொழி ஒரு பரிமாணம் என்றால், ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல் சத்தம் போட்டு விட, அந்த நர்ஸ் ஒரு அர்ப்பணிப்பு உணர்வோடு செய்ததாக சொன்னவ்டன் அவசரப்பட்டு தவறாக பேசி விட்டோமே என்ற வேறொரு தர்மசங்கடத்தில் தவிக்கும் போது காட்டும் உடல் மொழி அவரின் இன்னொரு பரிமாணம்.
பலவகை நடிப்பு உள்ள காட்சி அது..
அந்த காட்சியிலும் நகைச்சுவை இருக்கும் -தெர்மாமீட்டரை வாயில் வைத்துக்கொண்டு முழிப்பது
ஜன்னலை மூடியதும் நடுக்கம், பணிவிடைகளை தட்டும்போது "கொஞ்ச்சம்" அதிகமாக கவனம் எடுத்துக்கொள்வதாய் தோன்றுவதைச் சொல்லும்பொழுது அந்த emphasis, கடைசியில் "சரிதான்..உங்களுக்கு நாதஸ்வரம் தவிர ஒண்ணும் தெரியாது போலயிருக்கு" எனும்போது வரும் நெகிழ்வு. முதல் சிலமுறை எனக்கு அந்த நெகிழ்வு கொஞ்சம் மிகையாகத் தான் தெரிந்தது.

ஆனால் அந்த வரி சண்முகத்தை எப்படி எல்லம் குத்தியிருக்கும் என்பதை நாம் புரிந்துகொள்ளமுடியும் தானே. நாதஸ்வரத்தைத் தவிர அவனுக்கு என்ன தெரியும்? கலைஞனுக்கே உரித்தான தீவிர உணர்ச்சிகளோடு தான் அவன் உறவுகளை அணுகுகிறான். இம்முனைக்கும் அம்முனைக்குமாக தாவுகிறான். அவன் காதல் எத்தனை தீவிரமோ, அத்தனை தீவிரம் அவன் கசப்புக்கும், வெறுப்புக்கும், கோபத்துக்கும். எல்லாம் தன் சின்னத்தனமான முன்முடிவுகளால், என்பதை இந்தச் சின்னப்பெண் எத்தனை லாவகமாக அவனுக்கு உணர்த்திவிடுகிறாள்!

நலந்தானா பாடல் காட்சி எல்லாம் சொல்லவே தேவையில்லை.
என்று சொல்லிவிட்டு அழகாக சொல்லிவிட்டீர்கள்!

அந்த கண்ணீரிலும், இத்தனை கரிசனம் உள்ள தன் காதலியைப் பற்றிய பெருமிதமும் தெரியும்.

பல்வகை உணர்வுகள் சங்கமிக்கும் தருணங்களை (moments of confluence of emotions) தெளிவாக பார்வையாளர்களுக்கு உணர்த்துவது ஒரு நடிகனுக்கு உச்சகட்ட சவால். அனேகம் பேர் அத்தகைய தருணங்களை எழுதவே மாட்டார்கள். ஏனென்றால் அதை தெளிவாக சித்தரிப்பது கஷ்டம். ஆனால் அவையே திரைப்படக்கலையின் உச்ச தருணங்கள்.

ஒரு உணர்விலிருந்து இன்னொன்றுக்கும் அழகாக மாறுவதைச் சொல்லவில்லை. அதையும் பலமுறை செய்திருக்கிறார். பலரும் செய்திருக்கிறார்கள். That is also no mean task. ஆனால் நான் சொல்வது ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட உணர்வுகளை வெளிப்படுத்துவதை.

எழுத்தில் 'ஒரே நேரத்தில் நெகிழ்ச்சியும், பெருமிதமும்' என்று எழுதும் வாக்கியத்தில் கூட அவை அடுத்தடுத்து வரும் சொற்கள். Trivially true. நாம் படித்து, நம் புத்தியில் அவற்றைப் பிணைத்து ஒன்றாக்கிக் கொள்கிறோம். இசையில் simultaneity சாத்தியம் என்றாலும், இசைக்கும் அது ஏற்படுத்தும் உணர்வுக்கும் உள்ள உறவு விவரணை சட்டகங்களுக்கு அப்பார்ப்பட்டது (அதுவே அதன் சிறப்பு). மேலும் ஒருவருக்கொருவர் சற்றளவேனும் மாறக்கூடியது அந்த associations. ஆனால் நடிப்பில் தெளிவின்மை ஒரு தோல்வி. 'அவன் மனத்தெளிவில்லாமல் குழப்பமாக இருந்தான்' என்பதைக் கூட தெளிவாகக் காண்பிக்க வேண்டும். இப்படிப்பட்ட ஒரு கலையில் முற்றிலும் வித்தியாசமான இரண்டு உணர்வுகளை வெளிப்படுத்துவது என்பது எத்தனை அபாரமான ஒரு சாதனை என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும் - and by the way, all this while incidentally happening to play the naadhaswaram flawlessly



Quote Originally Posted by முரளிஶ்ரீநிவாஸ்
அதிலே என்னடா இருக்கப் போகுது என்று சமாதானம் சொல்லி கையெழுத்து போட்டுவிட்டு
சமாதானமே கிடையாது. ஒருதலைபட்ச முடிவுதான்.

Permit me a digression here..இந்த தம்பி சொல் கேட்காத hot-headed அண்ணன் என்கிற archetype கிட்டதட்ட அப்படியே கம்பனில் வருகிறது.

பல இடங்களில் இலக்குவன் தான் யோசித்து நல்ல முடிவு எடுப்பதாகக் காட்டுகிறார். ராமன், இலக்குவனை "பிள்ளாய் பெரியாய்" என்று விளிக்கிறான். (இளையவன் நீ, அதே சமயம் விவேகம் உள்ளவன் நீ!)

மாறாக, ராமன் உணர்ச்சிப்பிழம்பாகவே காண்பிக்கப்படுகிறான்.தன் அண்ணனைக் கொல்ல ஒருவன் (சுக்ரீவன்) நினைக்கிறான், என்பதையே இலக்குவனால் ஜீரணிக்க முடியவில்லை. அண்ணனை எதிர்த்து பொதுவில் பேசக்கூடாது என்று மௌனம் காக்கிறான். தனிமையில் ராமன் அவன் கருத்தைக் கேட்டதும், இலக்குவன் ராமன் அவசரப்பட்டு கொடுத்த வாக்கை 'பிழை' என்று சொல்கிறான். ராமனுக்கு தான் பிழை செய்துவிட்டோம் என்று தெரிகிறது (தீயரே எனினும், உன்னோடு உற்றவர் எனக்கும் உற்றார் - சுக்ரீவா..உனது உற்றார் யாராவது தீயவர்களாகவே இருந்தாலும் கூட அவர்கள் எனக்கும் உற்றார்...என்று தனது வாக்கில் கூறுகிறான்).

இலக்குவன் தன் பிழையை சுட்டிக்காட்டிவிட்டான் என்றதும் அவனைப் - தனக்காக தன் வாழ்வையே அழித்துக்கொண்டிருப்பவனைப்- பார்த்து, குத்தலாக ராமன் சொல்கிறான் 'நம் அண்ணன் தம்பிகளில், பரதன் தானே உயர்ந்தவன். எல்லோரும் ஒன்றா? அதுபோல எல்லா அண்ணன் தம்பிகளும் ஒரே மதிரியா, இந்த சுக்ரீவன் போன்றவர்களும் உண்டு' என்று சொல்லி தட்டி கழிக்கிறான்.

இவற்றுக்கு தி.மோ-வுக்கும் நேரடி தொடர்பு இருப்பதாகச் சொல்லவில்லை. ஆனால் இத்தனை அற்புதமான கலைஞன், உணர்வுவேகத்தில் சின்னத்தனமாக நடக்கும் தருணங்களை நினைக்கும்போது ராமனின் க்ரூரம் நினைவுக்கு வந்தது.

இவர்கள் எல்லாரையும் பாதிக்கும் ஒரு ஒப்பந்தத்தை படிக்காமல் கையெழுத்துப் போடுபவன் சண்முகம். அந்த அளவுக்கு தங்களை இவன்வசம் ஒப்படைத்தவர்களைப் பார்த்த அழகர் கோவிலில் என்ன வார்த்தை சொல்கிறான், 'உங்களுக்கு பணம் வேண்டும் என்றால் வேறெதாவது ஒரு நாதஸ்வர வித்வானுக்கு வாசித்துக்கொள்ளுங்கள்' என்று. How uncharitable!

அன்று கூட இருந்தவர்கள் சொன்னபோது கேட்காமல் போனோமே என்ற குற்ற உணர்வை கூட எவ்வளவு துல்லியமாக வெளிப்படுத்துகிறார்.
"நீ சொன்னே..நான் கேட்கலை" என்று வேகமாக சொல்லித் தாண்டி செல்ல முனைவதில் அந்த குற்ற-உணர்வைச் சிறப்பாக காண்பிப்பார்.


"பணம் என்ன மகாராஜா பணம்..." என்று நம்பியாரிடம் பேசும் காட்சி.....திருவாரூரை நியாபகப்படுத்தும். உணர்வுகள், வார்த்தைகளை விஞ்சும்.

A wondrous performance that is at once power-packed and highly layered and nuanced.

நினைவுபடுத்தியதற்கு நன்றி திரு.முரளி.

All BY PR

Gopal.s
27th December 2015, 02:23 PM
Very much!

நன்றி திரு. ராகவேந்திரன்.
வட்டமெல்லாம் பலரும் நேற்று ரசித்தனர் நானும் ரசித்தேன். அவ்வளவு தான். பள்ளிக்கூடத்திலிருந்தே ஒரு பழமான front bencher

பின்னால் சொல்லி சொல்லி ரசித்துக் கொண்டிருந்தார்கள் நுணுக்கங்களை முன்கூட்டியே anticipate செய்து பேசிக்கொண்டிருந்தனர் என்பதைப் பார்த்தேன். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் (இப்பொ 'ங்கொப்பராண வரும் பார்' , இப்பொ 'ஏய்' வரும் பார் - என்பவை எனக்கு கொஞ்சம் இடைஞ்சலாகத் தோன்றின...is it our Parthasarathy who I heard from the back-rows ), ஆனால் தாங்கள் ரசித்ததை உடன் வந்திருப்பவர்கள் தவரவிட்டுவிடக் கூடாது என்ற ஆவலின் வெளிப்பாடு தான் அது என்றும் புரிந்தது.

பெரியதிரையின் வசீகரமே தனி. மறைந்த பேராசிரியர் T.G.வைத்யநாதன் - ஹிந்துவில் பத்தி எழுத்தாளர் - எழுதிய சினிமா பற்றிய கட்டுரைத் தொகுப்பின் தலைப்பு 'images in the dark' - இருளில் பார்வையாளன் கரைந்து larger-than-life பிம்பங்களால் ஆகர்ஷிக்கப்படும் அனுபவத்தைப் பற்றி அதில் சொல்லி இருப்பார். அந்தக் கனியிருப்ப Home-video காய்கவர்ந்தற்று ...என்று முற்றிலும் காய்திட மனம் வரவில்லை - காயின் ஊட்டச்சத்து இல்லை என்றால் நாங்களெல்லாம் எங்கே!

VCR சகாப்தத்தில் தொலைக்காட்சியில் வந்த தில்லானைப் பதிந்து, பார்த்துப் பார்த்து தேய்த்தபின், வீட்டில் DVD Player வாங்கியதும் வாங்கிய முதல் படம் தில்லானா. சிரிக்கவைத்து, நெகிழவைத்து, ஆஹா-வித்து..முழுவதுமாக சுண்டியிழுக்கும் படம். சிவாஜி படங்களிலேயே அனேகமாக வசனங்களில் தாளகதி உட்பட எனக்கு அனேகமாக பரிச்சயமான படம் என்றால் இதுதான். அதை பெரிய திரையில் காண வேண்டும் என்ற என் நெடுநாள் ஆசை நேற்று நிறைவேறியது. மீண்டும் ஒரு நன்றி.

நீங்கள் நகைச்சுவையாக சொல்வதுபோல நானும் 'அலைகடலென' கூட்டத்தை எதிர்பார்த்து ஐந்து மணிவாக்கிலேயே வந்து ஸ்கூட்டரை வைத்துவிட்டு, TTK சாலையில் ஒரு சிறு வேலை இருந்ததால் நடந்து போய்விட்டு ஆறு மணி சுமாருக்கு வந்தேன். (நேராக ஆறு மணிக்கு வந்தால், வண்டி நிறுத்த இடம் கிடைத்திருக்காது என்று நினைத்திருந்தேன்!)

முரளிசாரை வாசலில் பார்த்தேன். ஃபில்ம்நியூஸ் ஆனந்தனின் கண்காட்சியை காட்டினார். பிறகு நன்றியுரையில் கூறியது போல இது மிகுந்த சிரத்தையுடன் தொகுக்கப்பட்ட exhibition என்று தெரிந்தது. சிவாஜி அத்தனை பிறமொழிப் படங்களில் பிரதான/முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார் என்றே எனக்குத் தெரியாது.

திரு.ராகவேந்திரன், 'தாயே உனக்காக' படம் ருஷ்யமொழி க்ளாஸிக்கான 'Ballad of the Soldieரைத் தழுவி எடுக்கப்படதை எனக்குக் கூறினார். In the context of the function/location என்ன ஒரு சரியான தேர்வு! என் கல்லூரி நாட்களில், இதே ருஷ்ய கலாசார மையத்தின் அரங்கத்தில் தான் அந்தப் படத்தைப் பார்த்தேன் (அந்த நாள்.. ஞாபகம்.. ).

ஸ்டானிஸ்லாவ்ஸ்கியின் sesquicentennary (ஒன்றரை நூற்றாண்டு) விழா என்று அவர் புத்தகங்கள் சிலவற்றை கண்ணாடிப்பெட்டிக்குள் வைத்திருந்தார்கள. கிறுஸ்துவ தேவாலயங்களில் சாலையோரச் சுவற்றில் கண்ணாடிப்பெட்டிக்குள் விவிலியத்தின் பக்கத்தைத் திறந்து வைத்திருப்பது போல. படிக்காமல் கடந்துபோக முடியாது. அதுபோல அந்தப் பக்கங்களைப் படித்துக்கொண்டிருந்தேன். I feel too cruel to mention this now for Gopal to read இனிமையான தற்செயல்.

திரு.ராகவேந்திரன் தயாரித்துக்கொண்ட உரையுடன் to-the-point நன்றாகப் பேசினார். ருஷ்யாவில் வகுக்கப்பட்ட நடிப்பு முறைகளையும் சுயம்புவாக வெளிப்படுத்தினார் சிவாஜி என்று அவர் சொன்னது - கடந்த சில பக்கங்களில் நாம் பேசிக்கொண்டிருப்பதின் ஒரு கூரை அந்த சபைக்குத் தக்கவாறு பேசியதாகத் தோன்றியது.

திரு.முரளி தன் வழக்கமான சரளத்துடன் 'தில்லானா'வை contextualize செய்தார். அந்த அரசியல் சூழல், அக்கால சினிமா அழகியல் எதிர்பார்ப்புகளை எவ்வாறு அப்படம் ஏற்றுக்கொண்டது போலவே 'படம்' காண்பித்து ஆனால் சிறப்பாக மீறியது என்று சொன்னார். குறிப்பாக: 'பாட்டு உண்டு - ஆனால் ஹீரோவுக்கு இல்லை. சண்டை உண்டு - கதையில் அந்த நிகழ்வுக்கும் ஹீரோவுக்கும் ஸ்நாநப்ராப்தியே கிடையாது என்றார்.

படத்தை இன்னும் ஆழ்ந்து ரசிக்க அது பலருக்கு உதவியிருக்கும் என்று நினைக்கிறேன்.

ஹீரோவுக்கு பாட்டு கிடையாதா என்ன, வாய்ப்பாட்டு கிடையாது. APN ரசனை எதிர்பார்ப்புகளுக்கு 'on his own terms' தீனி போட்டார். என்றுமே ரசிகன் மீது பழியைப் போட்டு pander செய்ய வேண்டும் என்ற கீழ்நோக்குப் பார்வை இல்லாமல், தான் நினைத்ததை சிரத்தையோடும், நயத்தோடும் செய்யும் கலைஞர்கள் தான் ரசிகர்களைக் கவர்கிறார்கள்.

நினைத்துப் பாருங்கள், அந்த சண்டை பற்றி ஒரே இடத்தில் தான் அவனிடம் வசனமாக சொல்லப்படுகிறது - அதற்கு அவன் எத்தனை ஈவிரக்கம் இன்றி பதில் சொல்கிறான் - அவன் ஹீரோ இல்லை - 'குறை இல்லாத மனுஷன் ஏது ஜில்லு' என்று தானே சொல்லும் மனிதன்.

அதே சமயம் ஹீரோ'வுக்கான punch-dialogueகள் இல்லாமல் இல்லை. கலையில் ஒப்பற்றவன் என்றவாறு வரும் எல்லா வசனங்களும் சண்முகத்தை மட்டும் குறிப்பவை அல்ல என்று குழந்தைக்குக் கூட தெரியும். Punch-வசனங்களில் தன்மையே அது தானே. அந்த வேடத்தை விட்டு விலகி நாயகனின் பிம்பத்தைக் கொண்டாடும் தருணங்கள் அவை. முப்பக்கம் மூடிய மேடையில், நாலாவது சுவராக இருப்பது கலைஞர்கள் வாழும் அந்தக் கதையின் உலகையும், இப்பக்கம் அமர்திருக்கும் ரசிகர்களின் உலகையும் பிரிக்கும் ஒருவித ஒப்பந்தம் மட்டுமே. அந்த ஒப்பந்தத்தை மீறும் தருணங்கள் அவை. அதை படத்தின் சமநிலை குறையாமல் செய்துகாட்டினர் (நாகலிங்கத்துக்கு தண்டனை என்று வைத்தி சொன்னதும் சண்முகம் பேசும் பதில் வசனம்)

படத்தைப் பற்றி இப்போது எழுதப் போவது இல்லை. திங்கட்கிழமை காலை அதுவுமாக தில்லானா பற்று பேச ஆரம்பித்தால், வேலை செய்தது மாதிரிதான்
இன்னும் கோபாலின் தொடரின் கடைசி பகுதிகள் வேறு படிக்க backlog இருக்கிறது. I will catch up later this week.

once again for the memorable show.

PS1: As I was telling Mr.Murali, there were a couple of cuts and jumps in the DVD and some resolution issues in long-shots. The DVD I have is clearer and complete- so let me know the next time whenever you plan to screen this. 300 படம் சுழற்சிமுறையில் மீண்டும் இதன் முறை 2038ல வரும்னு நினைக்கிறேன்

PS2: It was nice to meet Parthasarathy again and also great to meet in person the archivist non-pareil Pammalar. Too bad the movie ended too late to leave much time for a catch-up after that.

PR

Gopal.s
27th December 2015, 02:25 PM
By Ganpat

அப்பப்போ அடிக்கும் காலிங் பெல்,டெலிபோன் மணி,பார்க்கும் ஓவ்வொருவரின் விருப்பதிற்கேற்ப, இடைவேளை விடுதல்(கொஞ்சம் pause செய்.இப்போ வந்துடறேன்).
வராத விருந்தாளிகளின் திடீர் வருகை,அவர்கள் அடிக்கும் அதிகப்ப்ரசங்கித்தனமான comments,எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டாக வேண்டும்.

(ஆனா இப்போ தியேட்டரிலும் தொல்லை அதிகம்..சமீபத்தில் படம் ஆரம்பித்து இரண்டு நிமிடங்கள் கழித்து திருதிராஷ்டிரன் போல தட்டித்தடவி ,போய் D18,D19 அமர்ந்தால்,உடனே டெலிபோனின் உரத்த சிணுங்கல்.கூடவே "ஆமா தேவராஜ்தான் பேசுகிறேன் !” என்ற கட்டை குரல்..”என்னங்க! படத்தில் கமல் பேரு விசுவநாதன் இல்லையோ?” என்ற இல்லாளின் சந்தேகத்தை நிவர்த்திப்பதற்குள் அதே குரல் “நான் இப்போ தேவி தியேட்டரில் விஸ்வரூபம் பார்த்துக்கிட்டு இருக்கேன்.ஆங்..படம் ரொம்ப நல்லா இருக்கு..ம்ம்ம் அப்றம் பேசறேன்!” ன்னு ஒரு சுய வாக்குமூலம் கொடுத்து, காலை கட் செய்ய ஒரு பத்து பேர் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.(இடைவேளை போதுதான் பார்த்தேன்.அந்த நபருக்கு பொன்னம்பலம் போல உடல்வாகு.)

இப்படி சினிமா, கச்சேரி நடுவே, போன் attend செய்து disturb செய்யாதே என சொல்வது
,”சுவற்றில் எழுதாதீர்” எனும் அறிவிப்பிற்கு கீழே “சரி” என்று எழுதுவதைப்போல ஆகும் எனபதே பலருக்கு தெரிய மாட்டேன் என்கிறது.

சரி இனி படம்...

தமிழில் வந்த மிக சிறந்த ஆறு படங்களை பட்டியலிட்டால் தில்லானா மோகனாம்பாள்(தி.மோ) மற்ற ஐந்திற்கும் மேலே இருக்கும்.

பூரணம், உன்னதம் எனும் இரு சொற்களுக்கான எடுத்துக்காட்டு தி.மோ.

இந்தப்படத்தின் உன்னதம் திரு ஏபிஎன். பிள்ளையார் சுழி போடும்போதே ஆரம்பமாகிறது..

விகடன் அதிபர் திரு வாசனை,ஏபிஎன் சந்தித்து தி.மோ படம் எடுக்க தான் விரும்புவதை சொல்லி ஆசி பெற்று கூடவே அதற்கான காப்புரிமையையும் சுமார் ரூ.ஐயாயிரம் கொடுத்து அவரிடமிருந்து பெறுகிறார்.
என்னதான் சட்டப்படி விகடன் நிறுவனத்திடமிருந்து உரிமையை பெற்றாலும் அதை ஆக்கியோன் எனும் விதத்தில் திரு கொத்தமங்கலம் சுப்புவிற்கும் மரியாதை செய்ய விரும்பி, அடுத்த நாள் அவர் இல்லம் சென்று விவரம் சொல்லி சில ஆயிரங்களையும் சன்மானமாக கொடுக்கிறார்,அதை பின்னவர் மறுத்து "நேற்றே திரு வாசன் என்னிடம் இதைக்கூறி நீங்கள் கொடுத்த பணத்தையும் தந்து சென்றார்" என சொல்கிறார்.....இது உன்னதம் # 1

மேதை கோபுலு எப்படி படம் வரைந்தாரோ அதை நிஜமாக்குவதைப்போல,
ஒவ்வொரு பாத்திரமும் பத்தாண்டுகள் கழித்து படத்தில் நடமாடினார்கள்.இது உன்னதம் #2

தலைவரை விடுங்கள்.அவர் கடவுள் !

ஒரு பாலய்யா,ராஜன்,ck சரஸ்வதி,??
ஒரு தங்கவேலு,ராமதாஸ்,பாலாஜி??
ஒரு நாகேஷ்,மனோரமா?
அச்சு அசலாக அப்படியே பாத்திரங்கள் வந்து இறங்கவில்லையா?இது உன்னதம் # 3

பிரபுராம் சவடால் வைத்தி பற்றி சொன்னார்.
என்ன ஒரு fluency ,timing and wit?
என்னப்பா சிக்கல்! எல்லாரும் அவாவா வாத்தியத்தை எடுத்துண்டு கிளம்புங்கோ!
மகராஜா எழுந்துகொள்ளும்பொது திருப்பள்ளி எழுச்சி வாசிக்கணும்.!!

“நாங்க கோவிலில் மட்டும் தான் திருப்பள்ளி எழுச்சி வாசிப்போம்”.

“அதுக்காக ராஜா கோவிலில் போயா படுத்துக்க முடியும்?”

இந்த timing, மவனே உலகத்தில் எவனுக்குயா வரும்?

ck சரஸ்வதியிடம்..”இவ்வளவு பெரிய கழுத்து!! எவ்வளவு காலியா இருக்கு?
ஒரு அட்டிகை போட்டா எவ்வளவு நன்னா இருக்கும்” என tempt செய்வதில் உள்ள wit

"யாரிந்த பொண்ணு? அரையும் குறையுமா?"
"shut up! she is the maharani of madanpur!"
“நினைச்சேன்! நினைச்சேன்!! இப்படி மகாலக்ஷ்மி மாதிரி ஒரு பெண்ணை
பார்க்கும்போதே நினைச்சேன்!” என்று சொல்வதிலுள்ள fluency

இந்த யானையை அடக்குவாரே நம் யானைப்பாகன்!

ஒரு பதரை பார்ப்பது போலல்லவா இவரைப் பார்ப்பார்!

இந்த பதர் எனும் சொல் இடம் பொருள்,ஏவலுகேற்ப மாறும்.

பின்னால் மோகனாம்பாள் ஒரு இடத்தில் ஷண்முகம் நடத்தைக்கண்டு கொதித்து,
அவரையும் ஒரு பதரைப்போலத்தான் பார்ப்பாள்.ஆனால் அது
காதல் கலந்த தற்காலிக கோபமான பார்வை! காதல் பதர் உடனே மறைந்து விடும்.
ஆனால் வைத்தியோ ஒரு நிரந்தர பதர்.

சரி! தலைவரின் நாதஸ்வர வாசிப்பு..??
அதில் ஒரு முக்கால் பங்கை, நாட்டில் உள்ள அத்தனை வித்வான்களும் கண்டு மகிழலாம்.மீதியை..??
அவர்கள் பாடமாக வைத்துக்கொண்டு அதன்படி தாங்களும் நடை உடை பாவனைகளை மாற்றிக்கொள்ள வேண்டும்.

இறைவனுக்கு நன்றி..
திரு.ஏ.பி.என் னை படைத்ததிற்கு

திரு.ஏ.பி.என் நிற்கு நன்றி தி.மோ.வை படைத்ததிற்கு

ஹிந்தி பட அதிபர்களுக்கு நன்றி..
இதை ஒரு ஷேனாய் வித்வான் படமாக ஹிந்தியில் எடுக்காததிற்கு.

தற்கால தமிழ் பட அதிபர்களுக்கும் நன்றி,
தி.மோ வை ரீமேக் செய்யாமல் இருப்பதற்கு.

நண்பர்கள் முரளி, கோபால்,ராகவேந்தர்,பிரபுராம்,வாசுதேவன் ஆகியோருக்கு என் அன்பு மற்றும் நன்றி,
for inspiring me to write..

(

Gopal.s
27th December 2015, 02:28 PM
PR

Jokes apart, அந்தக் கதைக்களன்/காலம் நடனக்கலைஞர்களின் அன்றைய சமுதாய நிலை இன்னைக்கு நிறைய பேருக்கு முழுசா புரியாது இல்லை?

வடிவாம்பாள் ஒரு முன்னாள் கலைஞர்னு கேள்விப்படுறோம்.
"இப்படி போகுற இடத்துல எல்லாம் பகையை சம்பாதிச்சுக்கிறியேம்மா....நமக்கு நாலு பெரிய மனுஷாலோட தயவு தேவை"ன்னு உண்மையா நினைக்குறா. மோகனா நடனத்துல பெரிய ஆளா வரணும்னும் ஆசைப்படுறா.

அந்த கதைக்காலம் ஒரு cusp of eras (இருவேறு காலகட்டங்கள் சந்திக்கும் நேரம்).

பிரபுக்களின் - அதாவது தனவான்களின் - ஆதரவில் கலைஞர்கள் தழைக்கும் காலம் மறைந்து. கச்சேரிக்கு காசு, சபாக்கள் என்று கலைஞர்கள் மக்களிடம் (கிட்டத்தட்ட) நேரடியாக பணம் பெற்று சம்பாதிக்கும் காலம்.

இது மாபெறும் மாற்றம். சமூக சரி/தப்பு'கள் இங்கங்கென மாறு காலம் (an era of flux in the economic order and thus the attendant social values).

பலநூறு வருடங்களாக இயங்கும் விதம் மாறுகிறது

(will make one digressive post next to emphasize this point)



This post is admittedly a bit digressive. The purpose is to give the social context of the time-are of ThillAna.
Most of you are well aware of this, but I feel the youngsters who watch the movie now may receive it a tad too simply and thus under-appreciate the setting. Hence this post.

புறநாற்றில் ஒரு புலவர்

கை அது கடன் நிறை யாழே
மெய் அது புரவலர் இன்மையின் பசியே

புரவலர் இல்லை என்றால் பசி தான்.

ஒரு அரசனை ஒரு புலவர்: 'பாண் பசிப் பகைஞன்' என்கிறார் (பாணர்களின் பசிக்கு பகைவனாம்)

(முதல்) ஔவையார் ஒரு மன்னன் இறந்ததைப் பாடும்போது பாணர்களின் பாத்திரத்தில் துளை விழுந்துவிட்டது என்று பாடுகிறார்.

பலநூறு வருடங்களாக இப்படித் தான் கலைஞர்கள் வாழ்ந்தார்கள்.

நொபேல் பரிசுபெற்ற ப்ரித்தானிய தத்துவ எழுத்தாளர் பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் : "பிரபுக்களுக்கு கலை எவ்வளவு கடன்பட்டது என்பதை நாம் இன்றைய ஜனநாயகக் காலகட்டத்தில் மறக்க அனேக வாய்ப்புண்டு" என்றார் (in these days of democracy, one is apt to forget the debt art owes to aristocracy).

நாம் இன்றைய சமூக அமைப்பில் நின்று கொண்டு அன்றைய சமூக நிலைகளை நினைத்து, மேலோட்டமாக தீர்ப்பு வழங்கும் வேலையை எவ்வளவு எளிதாகச் செய்கிறோம்!

இந்த அமைப்பு எவ்வளவு தூரம் தொடர்கிறது. 20 ம் நூற்றாண்டு வரையிலும் கூட.

இந்தக் கால மாற்றத்தில் சிக்கிக்கொண்ட இன்னொருவர் பாரதியார்! எட்டயபுரம் ஜமீந்தாரை (மகாராஜா!) அண்டி இருந்தார். அவருக்கு புகழ்பாட்டுக்கள், சீட்டுக்கவிகள் எழுதிப் பிழைத்தார்.அவர் சுபாவத்துக்கு அது சரிவரவில்லை. விலகி அவரை (மறைமுகமாகத்) திட்டி எழுதினார். பிறகு மறுபடியும் வழியின்றி அவரிடமே போய் நிற்க வேண்டிய நிலைமை (தன் வாழ்நாளில் இருண்ட காலமாக இதைப் பற்றி எழுதுகிறார்).

மதுரை சேதுபதி பள்ளியில், சுதேச மித்திரன் பத்திரிகையில் என்று பிழைப்புக்கு ஏதாவது செய்யவேண்டிய நிலைமை. எதுவும் சரிவரவில்லை.

பாஞ்சாலி சபதம் சமர்ப்பணத்தில் கூட இப்படி எழுதுகிறார்.

தமிழ்மொழிக்கு அழியாத உயிரும் ஒளியும் இயலுமாறு இனிப் பிறந்து காவியங்கள் செய்யப்போகிற வரகவிகளுக்கும் அவர்களுக்குத் தக்கவாறு கைங்கரியங்கள் செய்யப்போகிற பிரபுக்களுக்குமா இந் நூலைப் பாதகாணிக்கையாகச் செலுத்துகிறேன்.


பிரபுக்களின் காலம் முடிந்துவிட்டது என்று பாரதியாராலேயே கூட முழுவதுமாகப் புரிந்துகொள்ள முடியவில்லை என்றால் பாருங்கள். அப்படிப்பட்ட ஒரு காலமாற்றம் நிகழ்கிறது.

('ச்சே மகாகவியை இந்த சமூகம் இப்படி பண்ணிடுச்சே' என்று மேலோட்டமாக அங்கலாய்த்து நகர்ந்துவிடுகிறோம். ஆனால் அந்தக்கால சமூக மாற்றங்களைப் பொதுவாக நாம் ஆராய்வதில்லை. சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தைச் (Madras Institute of Development Studies) சேர்ந்த பேராசிரியர் வெங்கடாசலபதி பாரதியாரின் காலம் பற்றி ஒரு நல்ல கட்டுரை எழுதியிருக்கிறார் - அதில் தான் இந்தக் கோணத்தைப் படித்தேன்.)

Now coming to ThillAnA

வடிவாம்பாள் நினைப்பதில் என்ன தவறு?

அவள் பார்த்து வளர்ந்த உலகம் அது. இன்று கச்சேரிக்கு சம்பளம் பேசி 'லேசில் கையெழுத்து'ப் போடாத கெட்டிக்காரி அவள். ஆனாலும் இந்தப் 'புது உலக'த்தின் நியாய/அநியாயங்கள் அவளுக்கு முழுவதுமாகப் புரியவில்லை.

ஜில்ஜில்-லையும் நினைத்துப் பாருங்கள். என்ன ஒரு அசாத்திய திறமைக்காரி, தன்னம்பிக்கை உள்ளவள். ஆனாலும் முறையான திருமணம் என்பது அவளுக்கு இல்லை. 'உங்க ஆளு சண்டியன்' என்று சண்முகம் குறிப்பிடும் அந்த நாகலிங்கம் 'திருந்தி வருவான்' என்று அவள் நம்புவதாகப் படம் முடிகிறது. நெஞ்சை அறுக்கிறது அல்லவா அவள் நிலை?

digression within digression

மோகனாவும், சண்முகமும் எவ்வளவு எளிதாகத் துவண்டு விடுகிறார்கள். தன் சுயநலத்துக்காக சண்முகம் எத்தனை அசட்டையாக கையெழுத்துப் போடுகிறான். ஜில்ஜில் வாழ்க்கையை விடவா இவர்களுக்கு இடர்களும், சவால்களும்? சொல்லியும் சொல்லாமலும் பல ஏமாற்றங்கள். அவற்றை எவ்வாறு சமாளிக்கிறாள். இத்தனைக்கும் அவள் கலை 'உயர்ந்தது அல்ல' என்ற கீழ்நோக்குப் பார்வை வேறு. சகலகலாவல்லி என்று சண்முகம் அவளை அறிமுகப்படுத்திகிறான், ஆனால் அவளை நாம்கூட இரண்டாம்பட்சமாகத் தானே நினைக்கிறொம்.அதை நாமும் கூட கேள்வி கேட்பதில்லை. சண்முகத்தின் கத்திகுத்துக்கு பதறுகிறோம். சகலகலாவில்லி'க்கு பல் உடைந்தால் சிரிக்கிறோம்.

கொட்டகையில் அவள் சண்முகத்தை ஆழ்ந்து ரசித்ததை விடவா யாரும் ரசித்துவிடப் போகிறார்கள் ('ஆமாம் ராசா'). அவளுக்கு வாசித்ததை விட படம்நெடுகிலும் சண்முகம் யாருக்காகவாவது அத்தனை ஆத்மார்த்தமாக வாசித்தானா?


Back to வடிவாம்பாள்

தன் மகளை, ஒரு முன்னனிக் கலைஞனுக்கு வாழ்க்கைப்படுவதை விட ஒரு தனவந்தனின் ஆசைநாயகி ஆக்க இந்த அம்மாள் விரும்பிகிறாரே - என்று மட்டும் மேலோட்டமாகப் பார்க்கக் கூடாது. கலைஞர்கள் யாரையாவது சார்ந்தே வாழவேண்டியவர்கள் என்பதே அவள் காலம் அவளுக்குப் போதித்த வாழ்க்கைமுறை.

தன் மகள் நல்ல நாட்டியக்காரியாக பெயர் பெற வேண்டும் என்பது எந்த அளவு உண்மையோ அதே அளவு உண்மை அவள் ஒரு பெரிய மனுஷனின் 'ஆதரவு' கிடைக்க வேண்டும் என்று அவள் நினைப்பது.

இதில் ஒன்று உயர்ந்த நோக்கம் என்றும், இன்னொன்று தாழ்வானது என்றும் நாம் நினைப்பது - இன்றைய மனநிலையில் இருந்தே. அந்தத் தாய்க்கு இரண்டும் ஒன்றே.

அந்தக் காலத்து நாட்டியக்காரி, தனக்கு சரிவர அப்படி ஒரு ஆதரவு கிடைக்கவில்லை, அது தன் குழந்தைக்கு நிகழ்ந்துவிடக் கூடாது என்று அவள் நினைக்கிறாள் என்றும் கொள்ளலாம்.

"என் கண்ணு! நீ ஒருத்தி கஷ்டப்படுற, உன்னால நாங்க எல்லாம் சுகப்படுறோம்" என்று ஒரு வசனம் வரும் (ஞாயிறு ஸ்க்ரீனிங்கில் இது கட்!) - அவளை மகாராஜாவின் 'தங்கையை' பார்க்க அனுப்பும் ஆயத்தக் காட்சி. அவள் நோக்கம் வேறு என்றாலும் அந்த வாஞ்சை பொய் அல்ல என்றே நினைக்கத் தோன்றும்.

தனக்குத் தெரிந்த நல்வழியில் குழந்தையைச் செலுத்தவும்,தனக்கு கைகூடாதவை அவளுக்குக் கிடைக்கவேண்டும் என்று அவள் விரும்புவது இயல்புதானே.


ஆனால் (தனியாக வாத்தியார் வைத்து இங்க்லீஷ் சொல்லிக்கொடுக்கப்பட்ட) மோகனா காலமாற்றத்தை உணர்ந்தவள். பழைய சட்டகத்தை முற்றிலும் நிராகரித்து முன்செல்ல முடியும் என்ற நம்பிக்கை உடையவள். அது தான் சண்டை.

சண்முகமும் வடிவாம்பாள் போல சிந்தனை உடையவன் தான். அவன் சந்தேகப்பேர்வழி, அவசரக்காரன், (மேரி சொல்வது போல) 'நாதஸ்வரம் தவிர ஒன்றும் தெரியாதவன்' என்பதெல்லாம் வாஸ்தவம். ஆனால் அந்தக் காலச் சூழலில் நாட்டியக் கலைஞர்களின் வாழ்க்கைத் தேர்வுகள் இவ்வாறு தான் இருக்கும் என்றே பொதுவான கருத்து. அதனால் தான் சிறு விஷயங்களைக் கூட அவன் சந்தேகிக்கிறான். அவனாலும் மோகனாவின் தீர்க்கமான மனநிலையை முழுவதுமாக புரிந்துகொள்ள முடியவில்லை.

பாவம் மோகனா - தன் காலத்தைத் தாண்ட முனைபவர்கள் அனைவரும் படும் சிரமங்களில் மிகக் காட்டமான - 'நேசர்களின் புரிதலின்மை'யை அனுபவிக்கிறாள்.

இவற்றைக் கருத்தில்கொண்டு பார்த்தால், இந்தக் கதையை இன்னும் நன்றாக ரசிக்கலாம் என்று தோன்றுகிறது.

ஜில்ஜில் பற்றியும், நாகப்பட்டினம் கொட்டகையை ஏபிஎன் காட்டிய விதத்தையும் இன்னும் விரிவாக எழுதலாம்...பிறகொருமுறை

Gopal.s
27th December 2015, 02:32 PM
Ganpat

கலைஞர்கள் புரவலர்கள் பற்றிய கருத்து பரிமாற்றங்கள்..

19ஆம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து தோன்றி வரும் தலைமுறைகள் பட்ட /படும் அவதி மனித இனத்தில் வேறு எப்பொழுதும் நடந்திருக்க வாய்ப்பில்லை.

முதலில் கலாசார மாற்றம்
.பிறகு ஆட்சி முறை மாற்றம்.
பிறகு விஞ்ஞான மாற்றம்.
பிறகு தொழில் நுட்ப மாற்றம்
தற்பொழுது பொருளாதார மாற்றம் ..
இதனூடே பின்னிப்பிணைந்துள்ள கலாசார மாற்றம்.
என ஒரு நூற்றிருபது ஆண்டுகளுக்குள் சுனாமி போன்ற மாற்றங்கள்..

பல தலைமுறைகளாக கலைஞர்களை ஆதரிப்பது எனும் பெயரில் நாட்டிலுள்ள செல்வந்தர்கள் அவரவர் வசதிக்கேற்ப பெண்களை சீரழித்து வந்தனர்.இது ஒரு வடிகட்டிய அயோக்கியத்தனம்.இதற்கு தேவதாசி எனும் ஒரு இனிப்பு தடவிய பெயர் வேறு!!இது தேவரடியார்கள் என மருவி மேலும் என்னென்னவோ ஆகி, இவ்வினத்தவர் ஆண்களுக்கு இசைந்தால் இசைசொல்லாகவும்,மறுத்தால் வசை சொல்லாகவும் ஆகிப்போனது.1920 களில் இதை எதிர்த்து,ஒழிக்க கோரி சென்னை சட்ட சபையில் ஒரு சரித்திர புகழ் பெற்ற விவாதம்.Dr.Muthulakshmi Reddy அம்மையார் கடுங்கோபத்துடன் விவாதம் செய்ய காங் தலைவர் திரு சத்யமூர்த்தி அவர்கள் தேவதாசி முறை சமுதாய சுமுகமான போக்கிற்கு அத்தியாவசியமானது அதை நீக்குவது பேராபத்து என்றும் பேச,எழுந்தார் அம்மையார்.."மதிப்பிற்குரிய சத்யமூர்த்தி அவர்கள் தங்கள் குடுமபத்திலிருந்து ஒரு பெண்ணை இந்த நல்ல முறைக்கு நாட்டின் நன்மை கருதி அனுப்பி வைக்க இசைந்தால் இந்த மசோதாவை நான் வாபஸ் பெறுகிறேன் என கர்ஜிக்க முன்னவர் முகத்தில் ஈயாடவில்லை.அந்த மசோதா நிறைவேற்றப்பட்டு தேவதாசி முறையும் ஒழிந்தது.

சரி இனி மோகனாவின் கதை.
அவள் ஒரு குணவதி.தன் இனத் தொழிலை வெறுப்பவள்.சண்முகத்திடம் ஒரு நல்ல மனிதன் மற்றும் கலைஞனைக்கண்டு அவனை நேசிக்கிறாள்.அவனும் அப்பாவி.மோகனாவின் நிலை அறிந்து அவளை நேசிக்கிறான்.
ஆனால் இயல்பு காரணமாக அவ்வப்பொழுது சந்தேகம் தலை தூக்குகிறது.அதன் அடிப்படையில் அமைந்தது தான் இந்த திரைக்கதை.இதில் வடிவு எனும் பாத்திரம் மோகனாவை சண்முகத்திடமிருந்து தூர எடுத்து செல்லவும்,ஜில் ஜில்
எனும் பாத்திரம் மோகனாவை சண்முகத்தின் அருகே கொண்டு வரவும் மட்டுமே கதை மாந்தர்களாக தோன்றுகின்றனர்.
வடிவு தன மகளின் அழகையே மூலதனமாக பார்க்கிறாள்.அவள் கலையைப்பற்றி அவ்வளவு அக்கறையில்லை.ஆனால் மகளின் மனதை மாற்ற அவள் நேசிக்கும் கலையையே ஒரு tool ஆக பயன் படுத்தி அவளை வெற்றிகொள்ள பார்க்கிறாள் முடிவில் தோல்வி அடைகிறாள்.அவளுக்கு தன survival மட்டுமே top priority.

இதற்கு மாறாக ஜில் ஜில்..மிக நல்லவள்.கலையை நேசிப்பவள்..மோகனாவின் திறமையை புரிந்து கொண்டவள்.ஆனால் இவள் தன்னையும் ஒரு நடனமாது என நினைத்துகொண்டிருப்பது ஒரு நகை முரண்.(இதே தவற்றை சங்கமம் என்ற படத்தில் மணிவண்ணனும் செய்வார்..விஜயகுமாரிடம் மானபங்கம் செய்யப்படுவார்)

எனவே வடிவு எனும் பாத்திரம் ஒன்றும் போற்றத்தக்க ஒன்றல்ல.சுயநலம் மிகுந்து தன மகளின் வாழ்வும் தன் வாழ்வு போல ஆவதில் தவறில்லை என நினைக்கும் தாய்.இந்தப்போக்கை,சண்முகம் எனும் ஒரு அற்புத கலைஞனை ,சுந்தர புருஷனை பார்ப்பதற்கு முன் வேண்டுமெனில் ஓரளவு நியாயப்படுத்தலாம்.ஆனால் தன மகள் அவனுடன் மனைவி எனும் பெருமையுடன் இணைவதை விட ,ஒரு செல்வந்தனுடன் தாசி எனும் பட்டத்துடன் இணைவதே தனக்கு நல்லது எனும் கருத்தில் செயல்பட்ட அவள் ஒரு வில்லியே!

Gopal.s
27th December 2015, 02:34 PM
PR

Quote Originally Posted by Ganpat View Post
இதற்கு மாறாக ஜில் ஜில்..மிக நல்லவள்.கலையை நேசிப்பவள்..மோகனாவின் திறமையை புரிந்து கொண்டவள்.ஆனால் இவள் தன்னையும் ஒரு நடனமாது என நினைத்துகொண்டிருப்பது ஒரு நகை முரண்.(இதே தவற்றை சங்கமம் என்ற படத்தில் மணிவண்ணனும் செய்வார்..விஜயகுமாரிடம் மானபங்கம் செய்யப்படுவார்)
ரமாமணியாரின் சுய-அபிப்ராயத்தில் தவறென்ன கண்டீர்?
கலையில் மேல்-கீழ், உயர்ந்தது/தாழ்ந்தது என்ற தீர்மானங்கள் எங்கிருந்து வருகின்றன?

கர்நாடக சங்கீதத்தோடும், பரநாட்டியத்தோடும் ஒன்றி ரசிக்க முடியாதவர்களுக்கு ஒரு உலகமே இருந்தது என்று ஏபிஎன் சிறப்பாக பதிவு செய்கிறார். குதிர குதிர பாய்ச்சலு...இங்கே கொட்டாயில கூச்சலு

அவளை ரசிக்க சனம் உண்டு: அவுஹ ஆடுனாத்தான் பாப்பாஹளா, நான் ஆடுனா கண்ணை மூடிக்குவாஹளா

படாடோபம் மிக்க உயர்குடிகள் அங்கு வருவதே இழிவாக நினைக்கிறார்கள். மாமனார் கடம்பவனம் மருமகன் 'ஏன் அங்கே வந்திருக்கிறான்' என்பதை அங்கு வரும்வரை முழுவதுமாக அறியவில்லை என்பதை நாம் நினைவில் வைத்துக்கொள்ளவேண்டியது. கோச்சுவண்டி அங்கு வந்து நிற்பதே, சிங்கபுரம் மைனர் கூத்தாடும் இடத்துக்கு வந்ததே அவருக்கு அசூயை ஏற்படுத்துகிறது!

"வருசாவருசம் இங்கன நான்தான் ஆடிக்கிட்டு கிடந்தேன்...இந்த வருசம் என்ன நினைச்சாரோ செட்டியாரு திருவாரூர்லேர்ந்து புதுசா ஒரு செட்டைக் கொண்டுவந்து இறக்கிட்டார்..ஏஏன்" என்று வெகுளியாக இழுத்துக் கேட்கிறாள்

"அந்த மோகனாங்கி என்னமாத்தான் ஆடுறாஹன்னு பார்த்துட்டு வாரேன்" என்று வீம்பாக சொல்லிச் செல்கிறாள்

I find it moving. நினைத்துப் பாருங்கள்: மோகனாவுக்கும் பலகண்ணாடி அலங்கார முதல் ஃப்ரேம்...ரமாமணி'க்கும் அலங்காரம் செய்துகொண்டு தயாராகும் முதல் ஃப்ரேம்! மேடையில் ஆட ஆயத்தமாக இருக்கும் அலங்காரங்களுடன் சென்றவள்- கசப்பின் சுவடே தெரியாமல் பூரணமாக ரசிக்கத் துவங்கிவிடுகிறாள்!

என்ன ஒரு உயர்ந்த ஜீவன்!

RAGHAVENDRA
3rd January 2016, 02:07 PM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTFILMSREVIEWS/KAVALDEIVAMVIKATANREVIEW01_zpsrizi4n2j.jpg
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTFILMSREVIEWS/KAVALDEIVAMVIKATANREVIEW02_zpsbyxuilyr.jpg
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTFILMSREVIEWS/KAVALDEIVAMVIKATANREVIEW03_zpsbynmr85b.jpg

RAGHAVENDRA
6th January 2016, 08:50 AM
Sivaji Ganesan Filmography series

129. Gurudhakshinai குருதட்சணை

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTFILMOGRAPHY/GDNAMECARD_zps1lhdpsvt.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTFILMOGRAPHY/GDNT01_zpsndlweblm.jpg

தணிக்கை 02.06.1969
வெளியீடு 14.06.1969

தயாரிப்பு - ஸ்ரீ கஜலக்ஷ்மி ஃபிலிம்ஸ், மதராஸ்

நடிக நடிகையர்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ஜெயல்லிதா, பத்மினி, டி.எஸ்.பாலையா, பாலாஜி, மேஜர் சுந்தர்ராஜன், எம்.என்.நம்பியார், கே.ஏ.தங்கவேலு, டி.ஆர்ராமச்சந்திரன், எஸ்.ராமாராவ், பி.டி.சம்பந்தம், எஸ்.வி.சஹஸ்ரநாம்ம், செந்தாதமரை, மனோரமா, ரமாபிரபா, ஜி.சகுந்தலா, டி.என்.சிவதாணு, எஸ்.ஆர்.தசரதன், குண்டு கருப்பையா, மாஸ்டர் பிரபாகர், மாஸ்டர் விஜயசங்கர் மற்றும் பலர்.

மேக்கப் - ரங்கசாமி, தனகோடி, கோபால், ராமு, மாணிக்கம், நாராயணசாமி, பெரியசாமி, திருநாவுக்கரசு, பத்மனாபன், தக்ஷிணாமூர்த்தி, சேதுபதி, கோவிந்தன், ரவி

ஆடை அலங்காரம் - பி.ராமகிருஷ்ணன், தம்பு, ஸ்ரீனிவாசன், சி.கே.ஹரி,

ஸ்டூடியோ நிர்வாகம் - டி.வி.வைத்தியநாதன்

புரோகிராம்ஸ் - ஏ.சுந்தர்ராஜன், எம்.எம்.சுந்தரம், எஸ்.பி.பாலு, இஸட்.எஸ்.ஜி. மைக்கேல்

ஃபுளோர் இன்சார்ஜ் - எம்.வெள்ளைச்சாமி, எம்.ஜக்கிரியா, கே.முத்தையா

அரங்க நிர்வாகம் - பி.எஸ்.காளிமுத்து, வி.வள்ளியப்பன்
அரங்க நிர்மாணம் - ஜி.மதுரை, என்.கிருஷ்ணன், கே.வீர்ராகவன்
அரங்க ஓவியம் - ஆர்.முத்து, வி. பரமசிவம்
அரங்க அலங்காரம் - பிலிமோகிராஃப்ட்ஸ்
மோல்டிங் - எம்.சிதம்பரம், பி.ஜெயராமன்
எலக்ட்ரிக் சூபர்வைஸர் - சி.என்.புருஷோத்தமன்
எலக்ட்ரிக் சீஃப் - டி.எம்.தக்ஷிணாமூர்த்தி
லைட் ஷிஃப்ட் - ஜி.பொன்னுச்சாமி, சி.கிருஷ்ணன், ஆர்.தேசிங்கு நாயுடு, டி.தர்மலிங்கம்
ஸ்டில்ஸ் - முருகப்பன்- எம்.ஆர்.பிரதர்ஸ்
டிசைன்ஸ் - பக்தா
டைட்டில் கார்ட்ஸ் - கே.எஸ்.ஆர்ட்ஸ்
விளம்பர நிர்வாகம் - மின்னல் - சாந்தி ப்ப்ளிசிடி சர்வீஸ்
விளம்பர அச்சகம் - ஆஸ்பி லித்தோ ஒர்க்ஸ்
புரொடக்ஷன் நிர்வாகம் - எஸ்.வி.ராஜகோபால், டிஎன்.ராஜகோபால்
நிர்வாகம் - கே.என்.வைத்திநாதன்
அவுட்டோர் யூனிட் - ஸ்ரீ விஜயலக்ஷ்மி போட்டோ சவுண்ட்ஸ், சென்னை - 18.
பிரிண்டட் அண்டு பிராஸஸ்டு அட் ஜெமினி கலர் லாபரட்டரி, சென்னை - 6.

ஸ்டூடியோ - ஸ்ரீ சாரதா ஸ்டூடியோஸ் - லெஸ்ஸீஸ் ஆஃப் மெஜஸ்டிக் ஸ்டூடியோஸ் - ஸோல் புரொப்ரைட்டர் ஸ்ரீ ஏ.எல்.ஸ்ரீனிவாசன்
நடன அமைப்பு - பி.எஸ்.கோபாலகிருஷ்ணன்
பின்னணி பாடியவர்கள் - டி.எம்.சௌந்தர்ராஜன், சீர்காழி கோவிந்தராஜன், பி.சுசீலா
மூலக்கதை - வீர. பழனியப்பன்
பாடல்கள் - கவிஞர் கண்ணதாசன்
சங்கீதம் மேற்பார்வை - திரை இசைத்திலகம் கே.வி.மகாதேவன்
சங்கீதம் - புகழேந்தி
ஒலிப்பதிவு - டி.சிவானந்தம்
பாடல்கள் - ரீரிக்கார்டிங் - ஒலிப்பதிவு மேதை டி.எஸ்.ரங்கசாமி
கலை - கங்கா
எடிட்டிங் - டி.ஆர். நடராஜன்
ஆபரேடிவ் காமிராமேன் - எஸ்.வி.பத்மனாபன், ஏ.பி.ராமானுஜம்
ஒளிப்பதிவு டைரக்டர் - கே.எஸ்.பிரசாத்
உதவி டைரக்ஷன் - எஸ்.ஆர்.தசரதன், எம்.கருப்பையா, தஞ்சை மதி
தயாரிப்பு - சி.பரமசிவம் - முருகு
அஸோஸியேட் டைரக்டர் - கே.கே.ஸம்பத்குமார்
திரைக்கதை வசனம் டைரக்ஷன்- - ஏ.பி.நாகராஜன்

RAGHAVENDRA
6th January 2016, 08:51 AM
குருதட்சணை விளம்பர நிழற்படம். நடிகர் திலகம் இணையதளத்திலிருந்து...

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTFILMADS/gurudatchinaiBommaiJuly1969adfw_zps9ycmt1er.jpg

RAGHAVENDRA
6th January 2016, 08:51 AM
குருதட்சணை சிறப்பு செய்திகள்

1. இப்படம் பெற வேண்டிய வெற்றியைப் பெறாததற்குக் காரணம், கதைக்காகக் கூட இன்னொருவர் காலில் நடிகர் திலகம் விழுவதை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதாக ஒரு எண்ணம் பரவியிருந்தது.
2. ஓராங்கிரகமடி கன்னி பாடலில் நடிகர் திலகத்தின் அற்புதமான கரகாட்டம் நம்மை பேருவகையில் ஆழ்த்தும்.
3. திரை இசைத்திலகம் கே.வி.எம். அவர்களின் உதவியாளர் புகழேந்தி தனியாக இசையமைத்த படங்களில் ஒன்று. என்றாலும் இப்படத்தில் கே.வி.எம். அவர்கள் மேற்பார்வையில் புகழேந்தி இசையமைத்தது குறிப்பிடத்தக்கது.
4. தன்னை விட பலசாலியான ஒருவரிடம் சண்டை போடும் காட்சியில் சிறிதும் செயற்கையின்றி தந்திரத்தால் மோதி வீழ்த்துவதாக வந்த காட்சியமைப்பு, நடிகர் திலகத்தின் நடிப்பு மட்டுமின்றி சண்டைக்காட்சிகளும் மிக இயல்பாக இருக்கும் என்பதை உணர்த்தியது. மறு வெளியீட்டின் போது இச்சண்டைக்காட்சிக்காகவும் கரகாட்டத்திற்காகவுமே ரசிகர்கள் பலமுறை பார்த்தனர்.
5. படத்தின் டைட்டில் காட்சியில் முக்கியமான நடிக நடிகையரின் புகைப்படம் இடம் பெற்றது.

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTFILMOGRAPHY/GDNT_zpsjeyo0btf.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTFILMOGRAPHY/GDTSB_zpsgjf0apte.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTFILMOGRAPHY/GDTRRSVSREDROSE_zpsbe2s2zh1.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTFILMOGRAPHY/GDSRRKATPDS_zpszbrsvvs7.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTFILMOGRAPHY/GDPADMINIJJ_zpsrtta2f53.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTFILMOGRAPHY/GDKBMNNMAJOR_zps2yjz41dv.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTFILMOGRAPHY/GDGSRPACHI_zpsdnopq4re.jpg

RAGHAVENDRA
6th January 2016, 08:53 AM
குருதட்சணை - காணொளிகள்

Athoram maramirukku

https://www.youtube.com/watch?v=lmFW2YB1KDw

paaru paaru nalla pparu

https://www.youtube.com/watch?v=MdVQS5kkq9w

oraam giragamadi kanni

https://www.youtube.com/watch?v=YofxxvjzSLM

Ondre ondru ulagam ondru

https://www.youtube.com/watch?v=DRo6BwvPKJc

ketti melam kotta vachu

https://www.youtube.com/watch?v=oZYWlUn2_cA

title song paaru paaru

https://www.youtube.com/watch?v=FFxF9TD_COo

RAGHAVENDRA
7th January 2016, 10:06 PM
Sivaji Ganesan Filmography Series

130. ANJALPETTI 520 அஞ்சல் பெட்டி 520

http://i.ytimg.com/vi/Wp_igSnZ2qM/maxresdefault.jpg

தணிக்கை - 13.06.1969
வெளியீடு - 27.06.1969

தயாரிப்பு - பாரத் மூவீஸ்
தயாரிப்பாளர் - வாசுதேவ மேன்ன்

நடிக நடிகையர்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன், அபிநய சரஸ்வதி சரோஜா தேவி, எம்.என்.நம்பியார், சுந்தர ராஜன், கே.ஏ.தங்கவேலு, தேங்காய் சீனிவாசன், நாகேஷ், கே.டி.சந்தானம், ஓ,ஏ,.கே.தேவர், எஸ்.வி.ராமதாஸ், வெண்ணிற ஆடை மூர்த்தி, எஸ்.பி.சுருளிராஜன், கே.ஆர்.ராம்சிங். டைப்பிஸ்ட் கோபு, மனோரமா, சீதாலட்சுமி, தேவமனோஹரி, விஜயசந்திரிகா மற்றும் பலர்.
அறிமுகம் எம்.சி.டி.முத்தையா

பாடல்கள் - கவிஞர் கண்ணதாசன், வாலி

இசையமைப்பு - ஆர். கோவர்த்தன்

பின்னணி பாடியவர்கள் - டி.எம்.சௌந்தர்ராஜன், பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி

ஒலிப்பதிவு டைரக்டர் - எம்.பி.வால்கே

ரிக்கார்டிங் - மூசா இப்ராஹீம்
ஸ்டூடியோ - வாசு ஸ்டூடியோஸ்
கதை, வசனம், டைரக்ஷன் - டி.என்.பாலு

RAGHAVENDRA
7th January 2016, 10:08 PM
அஞ்சல் பெட்டி 520 விளம்பர நிழற்படங்கள்..நடிகர் திலகம் இணையதளத்திலிருந்து..

கல்கி விளம்பரம்

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTFILMOGRAPHY/AP520KALKIADfw_zpsdnz35mvv.jpg

பேசும் படம் விளம்பரம்

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTFILMOGRAPHY/AP520PESUMPADAMADfw_zps236kp8jq.jpg

RAGHAVENDRA
7th January 2016, 10:10 PM
பாடல்களின் விவரம்

1. சந்தன சிலையே கோபமா - கண்ணதாசன் - டி.எம்.எஸ்., பி.சுசீலா
2. திருமகள் என் வீட்டைத் தேடி வந்தாள் - கண்ணதாசன் - பி.சுசீலா
3. ஆதி மனிதன் காதல் புரிந்தான் - கண்ணதாசன் - எல்.ஆர்.ஈஸ்வரி
4. பத்துப் பதினாறு முத்தம் முத்தம் - வாலி - டி.எம்.எஸ்., எல்.ஆர்.ஈஸ்வரி

RAGHAVENDRA
7th January 2016, 10:10 PM
அஞ்சல் பெட்டி 520 சிறப்பு செய்திகள்


டி.என்.பாலு இயக்கிய முதல் படம்.

நடிகர் திலகத்தின் படங்களில் டி.என்.பாலு இயக்குநராகப் பணியாற்றிய ஒரே படம்.

நடிகர் திலகத்தின் படங்களில் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி. அவர்களின் உதவியாளர் கோவர்த்தனம் அவர்கள் இசையமைப்பாளராகப் பணி புரிந்த ஒரே படம்.

முழுநீள பொழுது போக்குப் படம். தொடக்கம் முதல் இறுதி வரை விறுவிறுப்பாகப் போகக் கூடிய படம்.

முன்பே நடிகர் திலகம் திரிகளில் பல்வேறு பாகங்களில் குறிப்பிடப்பட்டது போல, தன்னை விமர்சித்த கலைஞர்களை, பெருந்தன்மையுடன் தன் படங்களில் நடிக்க வைத்த பேரன்பாளர், பண்பாளர் நடிகர் திலகம் என்பதற்கு சான்றாக தேங்காய் சீனிவாசனைத் தன் படத்தில் நடிக்க வைத்தது மட்டுமின்றி முக்கியமான கதாபாத்திரத்தையும் ஏற்க வைத்தார்.

RAGHAVENDRA
7th January 2016, 10:13 PM
அஞ்சல் பெட்டி 520 - காணொளிகள்

முழுத்திரைப்படம் காண

https://www.youtube.com/watch?v=-mP-mqu5MVg

பத்துப் பதினாறு

https://www.youtube.com/watch?v=8K5G9cPjf8c

ஆதி மனிதன்

https://www.youtube.com/watch?v=8zSnC0iu43A

திருமகள் என் வீட்டைத் தேடி வந்தாள்

https://www.youtube.com/watch?v=MeIaRGqCzks

சந்தன சிலையே கோபமா

https://www.youtube.com/watch?v=jGMZOJH8LPQ



அஞ்சல் பெட்டி 520 - சில நிழற்படங்கள் - பொம்மை 1969 இதழிலிருந்து...

https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/hphotos-xtf1/v/t1.0-9/12540762_1037279532989385_8280998364023548047_n.jp g?oh=d31c43636b5b2761b7de42cb2b7e5223&oe=57044081

https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/hphotos-xfp1/v/t1.0-9/12509506_1037279542989384_2760821209169140299_n.jp g?oh=def6a4cbee5f8890c7ff637d08e29cc3&oe=57066D68

https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/hphotos-xfa1/v/t1.0-9/12400753_1037279569656048_3381080133900850675_n.jp g?oh=4c63bbc1eff0c6aae27f674a9a4982b5&oe=57387C68

https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/hphotos-xlp1/v/t1.0-9/12523898_1037279562989382_8760300012532004813_n.jp g?oh=b2b965abfd9942864a0c1fa721208e20&oe=56FDC3E0

RAGHAVENDRA
11th January 2016, 09:30 AM
Sivaji Ganesan Filmography Series

131. Nirai Kudam நிறைகுடம்

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTFILMOGRAPHY/NIRAIKUDAMfw_zpssecox3gg.jpg


தணிக்கை - 04.08.1969
வெளியீடு - 08.08.1969

நடிக நடிகையர்

நடிகர் திலகம் பத்மஸ்ரீ சிவாஜி கணேசன், வி.கே.ராமசாமி, சுந்தர்ராஜன், முத்துராமன், சோ, தேங்காய் சீனிவாசன், வாணிஸ்ரீ, மனோரமா, குமாரி சச்சு, ஜி.சகுந்தலா, பானுமதி, கே.ஆர். தேவகி மற்றும் பலர்.

மூலக்கதை - மஹேந்திரன்

திரைக்கதை வசனம் - ' சோ'

இசை - வி. குமார்

பாடல்கள் - கவியரசு கண்ணதாசன்

பாடியவர்கள் டி.எம்.எஸ், பி.சுசீலா, கே.ஜமுனா ராணி, சூலமங்கலம் ராஜலக்ஷ்மி

ஆபரேடிவம் கேமராமேன் - கே.எஸ். மணி
ஒளிப்பதிவு - எம்.கர்ணன்

ஒலிப்பதிவு - எம்.வி. கருணாகரன்

படத்தொகுப்பு எல் பாலு

கலை - அ. ராமசாமி

ஸ்டில்ஸ் - பி. ரெங்கனாதன்

ஒப்பனை - ரங்கசாமி, பத்மனாபன், மாதவய்யா, பெரியசாமி, பாண்டியன், சின்னசாமி, சுந்தரம்

ஆடைகள் - ராமகிருஷ்ணன், குப்புராஜ்

விளம்பரம்- மின்னல்
டிசைன்ஸ் - எஸ்.ஏ. நாயர்

பாடல்கள் ரிகார்டிங் & ரீரிக்கார்டிங்- ஜே.ஜே.மாணிக்கம், உதவி - சம்பத்

ப்ராபர்டீஸ் - சினி கிராஃப்ட்ஸ்

நடனம் - சின்னி சம்பத்

அரங்க நிர்மாணம் - கே.பாலசுந்தரம்
ஓவியம் - ஏ. மாணிக்கம்
எலக்ட்ரீஷியன்ஸ் - எஸ்.மீனாக்ஷி சுந்தரம், டி.பி.குப்புசாமி, எஸ்.ராம மூர்த்தி

ப்ரோக்ராம் - ஒய்.வி.ராவ்,
ஃப்ளோர் இன் சார்ஜ் - எஸ். ஆறுமுகம்

ப்ராஸஸிங் - விஜயா லெபரட்ரீஸ் by எஸ். ரெங்கனாதன்

ஸ்டூடியோ - வெங்கடேஸ்வரா சினிடோன், சென்னை-10
RECORDED ON R C A SOUND EQUIPMENT

தயாரிப்பு உதவி - பி.ராமதாஸ், எம்.பாக்யம்
உதவி டைரக்ஷன் - சி.என். முத்து, எம்.எல்.கோவிந்

தயாரிப்பு நிர்வாகம் - எம். சேதுமாதவன்

தயாரிப்பு - வி.ராமசாமி, முக்தா ஃபிலிம்ஸ்

டைரக்ஷன் - வி. சீனிவாசன்

RAGHAVENDRA
11th January 2016, 09:30 AM
நிறைகுடம் - பாடல்களின் விவரங்கள்
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTFILMOGRAPHY/Niraikudam01FW_zpsfjr9pz96.jpg


பாடலாசிரியர் - கவியரசர் கண்ணதாசன்
இசை - மெல்லிசை மாமணி வி. குமார்

1. தேவா தேவா - டி.எம்.எஸ்., பி.சுசீலா, கே.ஜமுனாராணி, சூலமங்கலம் ராஜலக்ஷ்மி
2. கண்ணொரு பக்கம் - டி.எம்.எஸ்., பி.சுசீலா
3. அத்தான் நிறம் சிவப்பு - பி.சுசீலா
4. விளக்கே நீ கொண்ட ஒளி நானே - டி.எம்.எஸ்.

RAGHAVENDRA
11th January 2016, 09:31 AM
நிறைகுடம் - விளம்பர நிழற்படம்

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTFILMOGRAPHY/niraikudamrunning_zpstgmxbghu.jpg

RAGHAVENDRA
11th January 2016, 09:32 AM
நிறைகுடம் - விளம்பர நிழற்படம் - ஆவணத்திலகம் பம்மலாரின் பொக்கிஷத்திலிருந்து

முதல் வெளியீட்டு விளம்பரம் : பேசும் படம் : செப்டம்பர் 1969...

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4270a-1.jpg

RAGHAVENDRA
11th January 2016, 09:33 AM
நிறைகுடம் - நெடுந்தகட்டின் முகப்புகள்

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/DVD%20VCD%20covers/niraikudamvcdcovers.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/vcdvd%20wrappers/NIRAIKUDAMDVDC_zpsnm00zeho.jpg

RAGHAVENDRA
11th January 2016, 09:34 AM
நிறைகுடம் - காணொளிகள்

தேவா தேவா அழைக்கின்றேன் தேவா

https://www.youtube.com/watch?v=iI-QHaUzgSY


விளக்கே நீ கொண்ட ஒளி நானே


https://www.youtube.com/watch?v=yTq4QV6mHhA


கண்ணொரு பகம் நெஞ்சொரு பக்கம்

https://www.youtube.com/watch?v=KcZwnJnkLak

Gopal.s
11th January 2016, 12:34 PM
நிறைகுடத்தின் சிறப்புக்கள்.



1)சுபதினம் படத்தில் ,வாலி எழுதிய ,சீர்காழி பாடிய ,ஆண்டுக்கு ஆண்டு தேதிக்கு தேதி பாட்டில் நிறைகுடம் போலொரு திரைப்படம் வந்தால் ரசிகருக்கதுதான் சுபதினம் என்று ஒரு வைரவரி.



2)நிறைய முதல்கள். முக்தா .ஸ்ரீனிவாசன் சிவாஜியுடன் இயக்குனராக இணைந்த முதல். மகேந்திரன் சிவாஜிக்காக எழுதிய முதல் படம். சோ ,கதை வசனகர்த்தா வாக சிவாஜியுடன் பணி புரிந்த முதல் படம்.(ஒரே படம்).வீ.குமார் ,சிவாஜிக்கு இசையமைத்த முதல் படம்.(ஒரே படம்).வாணிஸ்ரீ ,முழு கதாநாயகியாக சிவாஜியுடன் இணைந்த முதல் படம்.



3)முக்தாவிற்கு மிக பெரிய வெற்றி படம். அவரின் தேன்மழை,நினைவில் நின்றவள் சூத்திர படியே கதை. கல கல முன்பாதி. பிரச்சினையால் ஒருவரோடு மற்றவர் கண்ணாமூச்சி ஆட ,அது வெளிபடாமல் ,காமெடியன் துணையுடன் ஹீரோ போராடும் பின்பாதி.



4)சிவாஜி-வாணிஸ்ரீ காதல் காட்சிகள் இளைஞர்,இளைஞி,பெண்கள்,பெரியோர் எல்லோர் மனைத்தையும் கொள்ளையிட்டது.இருவரின் chemistry பல ஜோடிகளுக்கு முன்னுதாரணம்.



5)இடைவெளி திருப்பு முனையும், இறுதி காட்சி திருப்பமும் லாஜிக் மீறிய சுவை.



6)என் நண்பர்களும் ,நானும் எத்தனை முறை ரசித்தோம் என்ற கணக்கே இல்லை. சிவாஜி ,நகைச்சுவையிலும் பின்னி பெடலெடுப்பார்.



7)சிவாஜியின் வெற்றிக்கு பெரிய வலுவான கதை பின்புலம் தேவையில்லை என்பதை ,கலாட்டா கல்யாணமும்,நிறைகுடமும் நிரூபித்தன.(அஞ்சல் பெட்டியின் .வெற்றியும் கூட)



8)ராஜாராணி போல cute படம்.

RAGHAVENDRA
11th January 2016, 03:45 PM
நடிகர் திலகம் - நிறைகுடம் - நினைவலைகள்

https://upload.wikimedia.org/wikipedia/commons/d/d4/M._G._Ramachandran_talking_to_Shivaji_Ganesan.jpg



தமிழகமெங்கும் 8.8.1969 அன்று வெளியிட நிச்சயிக்கப்பட்ட நேரத்தில், 01.05.1969 அன்று வெளியாகி, 08.08.1969 அன்று, எம்.ஜி.ஆர். அவர்களின் அடிமைப் பெண் திரைப்படம் நூறாவது நாளைக் கண்டது. இதனை அறிந்த நடிகர் திலகம், சென்னைை மிட்லண்ட் உட்பட அடிமைப் பெண் நூறாவது நாளைக் கொண்டாடும் வகையில் சில திரையரங்குகளில் மறுநாள் 09.08.1969 அன்று வெளியிட வேண்டும் என்று விரும்பிக் கேட்டுக் கொண்டதன் பேரில் தயாரிப்பாளரும் விநியோகஸ்தர்களும் சேர்ந்து ஒரு நாள் தள்ளி, அதாவது 09.08.1969 அன்று நிறைகுடம் படத்தை வெளியிட்டார்கள்.

இதனிடையே காவல் தெய்வம், அடிமைப் பெண் உட்பட 01.05.1969 அன்று வெளியான திரைப்படங்கள், 03.05.1969 அன்று அப்போதைய ஜனாதிபதி ஜாகிர் ஹூஸேன் அவர்களின் மறைவிற்காகவும், 18.05.1969 அன்று அப்போதைய தமிழக அமைச்சர் திரு ஏ.கோவிந்தசாமி அவர்கள் மறைவிற்காகவும் காட்சிகள் ரத்து செய்யப்பட்டு திரையரங்குகள் மூடப்பட்டன.

RAGHAVENDRA
11th January 2016, 04:11 PM
Vasu Sir's Post reproduced:



எங்கள் 'தெய்வ மகனே' வருக! வருக!

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/lunapic_13151074225787_1.jpg

அன்புடன்,

நெய்வேலி வாசுதேவன்.

Gopal.s
11th January 2016, 05:01 PM
தெய்வ மகன்.(1969).

மத்திய அரசு தனது தென்னிந்திய படங்களை பற்றிய மாற்றாந்தாய் பார்வையை மாற்றி கொண்டு, அன்றைய பாராமுக மாநில அரசையும் மீறி, உலக பட தர கோட்பாடுகளை தளர்த்தி,அத்தனை அறிவுஜீவிகளையும் நடிப்பு என்ற ஒரே அம்சத்தால் மட்டுமே அசர வைத்து, oscar போட்டிக்கு தேர்ந்தெடுக்க பட்ட முதல் தென்னிந்திய திரை படம் தெய்வ மகன்.(1969).

பலர் ரசித்த காட்சிகளில் என்றுமே முன்னணியில் நிற்கும் மூன்று சிவாஜி தோன்றும் காட்சியை ரசித்த கோடி கணக்கானோருக்கு,தாங்கள் ரசித்தது மூன்று வெவ்வேறு உலக நடிப்பு கல்லூரி பாணியில் அந்த உலத்திலேயே ஒப்பாரும் மிக்காரும் இல்லாத நடிகன் நடித்த ஒப்பில்லாத காட்சிதான் ,என்பது புரிந்திருக்குமா என்பது சந்தேகமே. இப்போது நாம் அலச போவது அந்த படத்தை பற்றி அல்ல.

நான் ஏற்கெனவே விளக்கிய மூன்று முக்கிய நடிப்பு பள்ளி/கோட்பாடுகளான method Acting school ,Chekhov school ,Oscar wilde concept என்ற மூன்றையும்தான் மூன்று பாத்திரங்களாக்கி அந்த மேதை மூன்று பாணிகளையும் மோத விட்டார். வேறு வேறு நடிகர்கள் அந்த மூன்று பாத்திரங்களில் மோதியிருந்தால், ஒவ்வொரு நடிகனுக்கும் உள்ள திறமையளவின் ஏற்ற தாழ்வால்,நமக்கு முடிவு தெரியாமலே போயிருக்கும். ஒரே நடிகர்,சம திறமை,சம அக்கறையுடன் மூன்று பாத்திரங்களையும் வார்த்ததால் ,போட்டிக்கு ஒரு மாதிரி தீர்ப்பு வந்தது. இரண்டு சம வலுவுள்ள சங்கர்(அப்பா), கண்ணன்(மூத்த மகன்) பத்திரங்களை method acting (அப்பா),Chekhov (மூத்த மகன்) முறைகளிலும், மிக casual ஆக உருவான light ஆன விஜய்(இளைய மகன்) பாத்திரத்தை oscar Wilde பாணியில் சுதந்திர கற்பனை திறத்துடன் கையாண்டிருந்தார்.

இங்கேதான் நமக்கு ஒரு பாடமே நடத்த பட்டுள்ளது. உலக திறமையாளனான ஒரு versatile நடிகன்,தன் கற்பனை வளத்தை பயன் படுத்தி,சராசரி வாழ்க்கையில் பார்க்கவே முடியாத ஒரு பாத்திரத்தை தன் அழகுணர்ச்சியில் வடித்தால்?

எந்த கொம்பனி டம் வேண்டுமானாலும் இன்று கூட கேளுங்கள். தெய்வமகனில் உன்னை கவர்ந்த பாத்திரம் எதுவென்று? நூற்றுக்கு நூறு பேரின் விடை விஜய்தான்.இப்போது அந்த பள்ளிகளுக்கு போட்டி வைத்தால், சமமான பாத்திர வார்ப்பாக இல்லாவிடினும்,
Method Acting , Chekhov என்ற வலுவான பள்ளிகளை புறம் தள்ளி,Oscar Wilde சுதந்திர கற்பனை கோட்பாட்டில் ஜெயித்த அந்த ஒப்பற்ற கலைஞன்,மற்ற எல்லோரையும் விட எங்கு வேறு பட்டு நின்றார் என்பது உங்களுக்கு புரிந்திருக்குமே?இருந்தாலும் விளக்கத்தான் போகிறேன்,இந்த படங்களின் பாத்திரங்களையே பாடமாக்கி.


எந்த பள்ளிகளையும் முறையாக கல்லாமல், அந்தந்த பாத்திரங்களுக்கு , இன்னின்ன முறையில்தான் வடிவமைக்க வேண்டும், இந்த பாணியில்தான் நடிக்க வேண்டும் என்று அந்த மேதைக்கு எப்படி தெரிந்தது? பிறவி மேதை என்ற பிறகு இந்த ஆராய்ச்சியே தேவையில்லை.

தெய்வமகன் சங்கர், கண்ணன் பாத்திரங்களை எடுத்து கொள்வோம்.இரண்டுமே, தன் முகத்தின் அழகு கெட்டு ,விகாரமாகி, அதனால் மற்றவர்களின் கேலிக்கும், சீண்டலுக்கும் பாத்திரமாகி , inferiority complex இனால் அவதி படும் பாத்திரங்களே. தந்தை-மகன் என்ற உறவு முறை வேறு. நடிகர்திலகம் நினைத்திருந்தால், இரண்டையுமே, ஒரே பாணியில் வடிவமைத்து சில நு ட்பங்களை மட்டுமே மாற்றியிருக்கலாம். ஆனால் பாத்திரங்களை அவர் பார்த்த முறையே வேறு.

சங்கர், சிறு வயதில் அவமானங்களை சுமந்து அவதி பட்டிருந்தாலும் ,அது அவன் வாழ்வில் ஒரு பகுதியே. Trauma என்ற சொல்லோடு கடந்து போகும். அவன் வாழ்வில், அப்பா,அம்மா, அன்பான மனைவி,பிள்ளை,நண்பர்கள் மற்றும் கஷ்ட பட்டு முன்னேறி அடைந்த தொழில் செல்வாக்கு எல்லாமே, ப்ரம்மாண்டமாகி அவன் குறையை சிறிதாக்குகிறது.தன் குறையை தினம் தினம் ஞாபக படுத்தி சித்திரவதை படுத்த வாய்ப்புள்ள ஒருவனை ,பிறவியிலேயே அழிக்க சொன்னது தனக்காக கூட இருக்கலாம்.

ஆனால் கண்ணனோ, அனாதை விடுதியில், அனுதினமும் குறையை மட்டுமே பார்க்கும் சக மனிதர்களுடன் கூட்டு புழுவாக வாழ்பவன்.மொழியறிவு, சிறிது இசை, சிறிது பாபாவின் அன்பு இவை தவிர வேறு வெளிச்சமே இல்லாத வாழ்க்கை. Herzog எடுத்த ஒரு ஜெர்மன் படத்தில், இருபது வயது வரை மோசமான நிலையில், captivity யில் இருந்த ஒரு மனிதனை, திடீரென்று ஒரு நகரத்தில் விட்டு விட்டு போய் விடுவார்கள்.(உண்மை கதை).கண்ணன் நிலை கிட்ட தட்ட அப்படித்தான்.டாக்டர் வீட்டிலும் இருட்டறை சிறை வாழ்வே. அப்போது கண்ணனின் வாழ்வே அவன் முகதழும்பு, அவமானம், சார்ந்தே சிறுது இசையுடன் பயணிக்கிறது. உள்ள போராட்டம் சங்கரை விட கண்ணனுக்கு ஏராளம்.

அதனால் சங்கருக்கு, inferiority காம்ப்ளெக்ஸ் கொண்ட ஒரு normal மனிதனை சித்தரிக்கும் method Acting .ஆனால் கண்ணனுக்கோ, முழுதும் ஆதி மனிதனின் impulsive basic instincts மட்டுமே தலை தூக்கும் பதுங்குதல்,பாய்தல்,அன்புக்கு உருகுதல் (இசை) என்ற அடிப்படை உணர்வு மட்டுமே கொண்ட,தந்தையின் தாக்கம் சிறிதளவே கொண்ட ,உளவியல் தாக்கம் நிறைந்த chekhov பாணி.

விஜய்க்கு, இப்படி எந்த சிக்கலும் இல்லாததால், சாதாரணமாக ஓயவெடுத்திருக்கலாம். ஆனால் மேதைகளுக்கு ஏது ஓய்வு? P _R சிலாகித்த அற்புத ராஜின் மேம்பட்ட பிரதியாக சிறிதே effeminacy கலந்த ஒரு spoilt lover boy .ஆக realism பாணியில் இன்றி, முழுக்க synthetic ஆக,ஒரு கலவையான கற்பனை கலந்த அழகுணர்ச்சியில் வடிவமைக்க பட்டு....



இப்போது கண்ணனை மிக நுணுக்கமாக ஆராய்வோம். ஆஸ்கார் பரிசு பெற்ற Robert de Niro போன்ற நடிகர்கள்,தங்கள் நடிப்பில் இயற்கையின் ,மிருகங்களின் சாயலில் தங்கள் பாத்திரங்களை வடிவமைத்து வெற்றி கரமாக தங்களது பாத்திரங்களை கையாண்டுள்ளனர்.
"He based the movement of his character Travis Bickle in Taxi Driver (1976) on that of a crab. He thought the character was indirect and tended to shift from side to side."

நடிகர்திலகம் 1954 இலிருந்தே இதனை கையாண்டுள்ளார். நடைகளில், சிரிப்பில்,உறுமலில், mannerism என்று சொல்லப்படும் mood related gesture இல்.பின்னாட்களில் பாலா பிதாமகன் பாத்திரத்தில் இதனை புகுத்தி வெற்றி கண்டார்.தெய்வ மகன் கண்ணன் , body language சில சமயம், மானின் மருளல், அடிபட்ட வேங்கையின் சீற்றம்,எலியின் survival ஒடுக்கம் ,நாயின் உருகும் அன்பு என்று.
இதை உன்னிப்பாக கவனிக்க வேண்டுமென்றால் , திருடன் பட்டம் சுமந்து ,பெண்ணுடன் அவள் hand bag திருப்பி கொடுக்கும் காட்சி, ஜெயலலிதாவிடம் தன்னை மறைத்து ஒடுக்கும் காட்சி, மற்ற படி அவர் hyper ecstacy ,( அ ) extreme emotions like anger நிறைந்த காட்சிகள்,ஜெயலலிதா தன் காதலை வெளியிட்டதும் காட்டும் சுய வெறுப்பு காட்சிகளில் கவனித்து பாருங்கள்.(கர்ணனின் உறுமல் ,சாமுண்டியின் சீற்றம் obvious )

டாக்டர் தன்னை நிலை கண்ணாடியில் காட்டும் போது அலட்சியம் செய்யும் விகார முகம் , ஒரு பெண் தன்னை காதலிப்பதாய் கற்பனை செய்து (ஒதெல்லோ பற்றி சொன்னதும் டாக்டரின் கையை உடையும் அளவு இறுக்கும் வெறி கலந்த எதிர்பார்ப்பு),அது தன கற்பனையே என்றவுடன் சுய வெறுப்பின் உச்சமாய் கண்ணாடியில் தன் உருவத்தை தானே காறி உமிழ்ந்து, கண்ணாடியை உடைக்கும் மூர்க்க சுய வெறுப்பு.அந்த காட்சியில் அவர் காட்டும் subtle change in tempo and body position , தன் வீட்டுக்கு வந்து தாய்,தந்தை, தம்பியை கண்டு காட்டும் உருக்கம் கலந்த, euphoric ecstacy, டாக்டரிடம் அதை கொட்டி விட்டு, பசித்து சோர்ந்த நாய் குட்டி போல் மடி மேல் சோரும் கட்டம்.

கண்ணனை, விஜய் வெல்வதாவது என்று தோன்றுகிறதல்லவா?


சங்கர் பாத்திரத்தை method acting பாணியில் அந்த மேதை முடிவு செய்ததற்கு, இரண்டு காரணங்கள். முதல் காரணம் , குறையை பெரிதாக நினைக்க வேண்டாத நிலையில் நிகழ்காலத்தில் இருப்பவன்.அவன் இறந்த காலத்தை நினைக்க வேண்டிய மூன்று இடங்கள் முதல் பிள்ளை பிறந்த போது, மூத்த பிள்ளை உயிரோடு இருப்பதை அறிந்ததும் அதிர்ச்சி கலந்த குற்றவுணர்ச்சி. டாக்டரை சந்திக்கும் போது. இந்த கட்டங்கள் எல்லாமே sense memory யில் அமைய வேண்டியவை. இரண்டாவது காரணம், method acting முறையில் மற்ற நடிகர்களின் performance தூக்கலாகும். கண்ணனும் விஜய்யும் ஓங்கி தெரிய ,சங்கரின் method acting முறையில் அமைந்த பாணி யாலும், இந்த முறையில் scene stealing என்பது முடியாதென்பதும் ஒரு காரணம்.(சமீபத்தில் Lincoln படத்தில் Daniel Day Lewis இதே முறையில் method Acting செய்திருக்கிறார்.now now now என்று சொல்லும் போது சங்கர் ,ராஜுவிடம் you you சொல்லும் அதே gesture )

முதல் காட்சியில்,புற முதுகு காட்டியே , குழந்தை பிறந்த மகிழ்ச்சிக்கு expansive hand ,gesture ,ராஜு சமாதான படுத்த வரும் போது elbowing gesture ...அடடா, எத்தனை மேதைமை!!! ராஜுவுடன், தான் சிறு வயது trauma வை விவரித்து, குழந்தையை கொன்று விட சொல்லி ,குற்ற உணர்ச்சியேயின்றி உலர்ந்த மனதோடு ஆணையிடுவது போல், சிறு வயதின் உணர்ச்சியின் பால் பட்டு maturity இன்றி பேசும் விதம், ஒரு method acting ஸ்கூலில் பாடமாக வைக்க வேண்டும்.sense memory அடிப்படையில் நடிக்க விரும்புவோருக்கு பாடம்.

விஜய் உடன் அவர் கண்டிப்பு காட்ட நினைத்து இளகி சிரிப்பது, மனைவியின் வற்புறுத்தல் பேரில் இணங்குவது போல் தன கனிவை,செல்லத்தை மறைப்பது, மனைவியிடன் காட்டும் romance கலந்த நன்றியுணர்வுடன் கூடிய அன்பு இவை பார்த்து அனுபவிக்க வேண்டியவை.

டாக்டருடன் பல வருடங்களுக்கு பிறகான சந்திப்பு காட்சி ஒரு கல்வெட்டு. தயக்கம் கலந்த anxiety உடன் நுழைவது ஓர கண்ணால் சிறி து தயக்கம்,சங்கடம், curiousity கலந்த eye follow up என்று ஆரம்பித்து, formal ஆக தொடங்கி,கேட்க விரும்புவதை கேட்டு, நட்பை re -assert செய்து விட்டு,முடிவில் சிதார் ஓசை கேட்டு அலையும் மனதுடன், restless ஆக ,மகனை பார்க்க விழைந்து ,அரை மனுதுடன் ,திரும்பி செல்லும் கட்டம்.சுந்தர்ராஜன்,சிவாஜி இருவருமே உணர்ந்து, அருமையாய் நிமிர்த் தியிருப்பார்கள் . இந்த காட்சி எதை உரைக்க வேண்டுமோ, அதை உரைத்து , எதை உயிர்ப்பிக்க வேண்டுமோ அதை உயிர்ப்பித்து, எதை அடைய வேண்டுமோ அதை அடைகிறது. perfect sub text for method acting .

கண்ணன் சந்திக்க வரும் காட்சியில், உணர்வுகளை காட்டும் அளவே காட்டி, மிகை குற்றவுணர்வு இன்றி, ஆனால் கண்ணன் அநாதையாக்க பட்டு வாழ்ந்ததன் வலிகளை மட்டுமே, ,ஒரு தந்தையாக empathise செய்வார். இந்த காட்சி ,இன்றளவும் பேச படுவதற்கு காரணமே,மற்றவர்களை தூக்கி காண்பிக்கும் அளவு perform செய்த சங்கரே.

காணாமல் போன விஜய் பற்றி வரும் டெலிபோன் காட்சியில் , பதற்றம் ,எச்சரிக்கை, பதைபதைப்பு,மகனுக்கு எதுவும் நேர கூடாது என்று அவர் விடும் இயலாமை கலந்த வெற்று மிரட்டல் என்று ,ஒரு சராசரி காட்சியில் கூட நடிப்பு கொடி பறக்கும்.

ஆயிற்று. இத்தனை மேம்பட்ட கண்ணன் பாத்திரத்தை,சங்கர் பத்திரத்தை, ஒரு மேதை தன் வாழ்நாளின் one of the best என்று சொல்லும் அளவு பண்ணி விட்ட பிறகு, to lighten the proceedings என்று filler பாத்திரமான விஜய் என்ன செய்து ,இவர்களை சமாளிக்க போகிறது?


விஜய் என்னதான் செய்யவில்லை?ஒரு உலகத்திலேயே சிறந்த மகா கலைஞன், தன் சுதந்திர கற்பனைகளோடு, எந்த realism சார்ந்த விஷயங்களோடும் சமரசம் செய்து கொள்ளாமல், முழுதும் தன் திறமை மற்றும் creativity ஐ நம்பி மட்டும் ஒரு பாத்திரத்தை conceptualise செய்து execute செய்தால்? தங்கத்தை போன்று ஜொலித்தன நெல் மணிகள் என்று கவிஞன் எழுதும் சுதந்திரத்தால் தான் கலைகள் ஜீவிக்கின்றன. மொக்கை தனமாக, நெல் மணிகள் நெல் போல தானே இருக்க வேண்டும் என்போருக்கு, கலைகளை ரசிக்கும் பக்குவமோ,அறிவோ இல்லை என்று பொருள். சரோஜா தேவியின் புத்தகம் கூட realism தான். அதை படிப்பதும் சுலபம். ஆனால் ஒரு காளிதாசன் ,கம்பனை பயில பயிற்சி தேவை. அல்லது என் போல ஒரு பொழிப்புரையாளன் தேவை.அப்படித்தான் அந்த உலக கலைஞனின் பாத்திர வார்ப்புகளும்.

விஜய் முதல் shot இலேயே ஈர்த்து விடுகிறான். பிறகு ஈர்க்க பட்டவர்களை தன்னிடையே தக்க வைக்கிறான். scene stealing செய்கிறான்.Antics செய்கிறான்.. பக்கத்திலிருக்கும் ,காமெடியன் ஒருவனை அவன் விளையாட்டிலேயே ஜெயிக்கிறான்.(beating bull in its game ). வேறு படுத்தி கொள்கிறான், நடை ,உடை,பாவனைகளில்.முக்கியமாய் இது வரை காணாத புதுமை ஆக்குகிறான். அதே நேரத்தில் ஒரு பாத்திரமாகவும் establish செய்கிறான்.ஜனங்களை ஆசுவாச படுத்துகிறான்.(heavy emotion ridden proceeding இல் இருந்து) .இன்னும் நிறைய காட்சிகளில் வர மாட்டானா என்று ஏங்கவே வைத்து விடுகிறான்.

கூர்ந்து கவனித்தால் , விஜய் much more than a spoilt mother 's virgin boy and a rich brat . பணத்தின் சௌகரியங்கள் கிடைத்தும், ஒரு identity crisis and false start உள்ள vested interest கொண்ட நண்பர்களால் சூழ பட்டவன். அம்மா, அப்பாவின் அதீத அரவணைப்பில் இருந்தாலும், முழு அப்பாவியும் அல்ல.அதீத பாதுகாப்பே ,அவன் ஆபத்துகளை உணர முடியாமல் செய்து விடுகிறது.தன்னால் தன்னை காத்து கொள்ள முடியும் என்ற அசட்டு நம்பிக்கை வேறு.ஆனால் விஜய்யை புன்னகையோடு தொடர முடியும்.

நண்பன் என்று சூழ்ந்தவனின் அதீத gimmick ஐ எள்ளுகிறான். (அதான் நான் வரை வரைக்கும் கயிறு கூட மாட்டிக்காமே???), விஜய் உனக்குன்னு கேளு என்றதும், இல்லை,இல்லை உனக்குன்னு கேட்கிறேன், அப்பத்தான் குகுளுன்னு என் daddy கொடுக்கும் என்று சொல்லும் அழகு.(நாகேஷ் வேடிக்கை தான் பார்ப்பார் என்ன பண்ணி புகுரலாம் என்று. ம்ஹும் chance இல்லவே இல்லை). மழலையான ஆங்கிலம் கலந்த தமிழ் உச்சரிப்பிலிருந்து , சுருட்டி கொண்டு சோம்பேறி கோழி தூக்கம் போடுவதாகட்டும்,அம்மா வை ice வைப்பதாகட்டும் (first class Tamil Picture கூட்டிட்டு போறேன் )உன் மேலதான் daddy க்கு எவ்ளோ லவ்வு என்று லொள் விடுவது என்று. (பின்னாடி மௌன ராகம் கார்த்திக் character இதிலிருந்து inspire ஆனதே.சந்திரமௌலி போன்ற antics .அந்த character உம் ஈர்ப்பு கொண்ட synthetic கற்பனையே ).

தன் ரூமில் யாரோ இருப்பதை தெரிந்து, அப்பா அம்மா இல்லை என்று உறுதியானதும், thief என்று மிரட்டல் ,பயம் கலந்த மெல்லிய மிரட்டல், anxiety யுடன் தேய்ந்த குரலில் மூன்றாவது thief என்று விஜய் என்னை முழுவதும் ஆட்கொண்ட பிறகு, சங்கராவது,
கண்ணனாவது?

தன்னிடம் வீட்டிலிருக்கும் கண்ணனை பற்றி பேசும் நிம்மியிடம், அவள் மடியில் உறங்குவது போல் disinterest காட்டி பின் சகிப்பு தன்மை இருக்கிறது. யாரோ புல்புல்தாரா வாசிப்பான் அவன் ரூமுக்கு போறேன் என்று என் கிட்டேயே என்று cute ஆக காதலன் possessiveness குழந்தை தனமாக வெளியிடும் அழகு.(முந்திய வருடம் 80 வயது அப்பரான மனிதன், அடுத்த வருடம் retire ஆக போகும் ஒரு பிராமணன், 20 வயது lover boy ஆக எல்லோர் மனதையும் அள்ளும் அழகு ). அப்பா அமாவிடம் அவர் காதலியை அறிமுக படுத்தும் அழகே அழகு.(certainly not .அதனால்தான் மம்மியை கட்டிக்கிட்டீங்களா, இது செய்யனும்....போன்ற one liner ).

அது மட்டுமல்ல, விஜய்யின் entry தான் அந்த மூன்று சிவாஜி தோன்றும் காட்சிக்கே, epic cult status கொடுக்கிறது. தன் தம்பியே ,தன் பெற்றோர்களுக்கு போதும் என்று கண்ணனை convince செய்து விடுகிறது. அதற்கு முன்னாள் நடந்த அத்தனை உணர்ச்சி மிகு encounter செய்யாத அதிசயம். பார்வையாளர்களும் convince ஆகி விடுகிறோம்.(கண்ணன் cheque ஐ நிராகரிக்கும் நிர்தாட்சண்யம் , விஜய் அதை உரிமை நிறைந்த ஆவலுடன் எடுக்கும் அழகு-- இந்த காட்சியையே அர்த்த படுத்தி விடவில்லையா)

கடைசி காட்சியிலும், அவ்வளவு பெரிய வில்லன் கும்பலிடம், அசட்டு மிரட்டலுடன் போராட்டம். டே... head லியா அடிச்சே என்று மயங்கி சாய்வது.

எனக்கு தெரிந்து character identity establish செய்து சாதாரண one liners ஐ அதீத ரசிக்கும் காமெடி ஆக்கிய அதிசயம் இந்த படத்தில்தான் நிகழ்ந்தது. ஒரு சாதாரண வலுவில்லாத பாத்திர படைப்பு, உலகத்திலேயே அதிக வலுவுள்ள நடிகனின் கற்பனையால் மட்டும் அமர துவம் பெற்று, அவரே நடித்த வலுவுள்ள மற்ற பாத்திரங்களை இரண்டு, மூன்று என்று வரிசை படுத்தும் உலக அதிசயம் நிகழ்ந்த ஒரே காரணம்---தெய்வ மகன் விஜய்.

RAGHAVENDRA
12th January 2016, 06:31 AM
Sivaji Ganesan Filmography Series

132. DeivaMagan தெய்வமகன்

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTFILMOGRAPHY/DEIVAMAGANCOLLAGE01fw_zpsfdelpn0a.jpg



தணிக்கை - 28.08.1969
வெளியீடு - 05.09.1969
தயாரிப்பு - சாந்தி ஃபிலிம்ஸ்

நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ஜெயல்லிதா, சுந்தர்ராஜன், எம்.என்.நம்பியார், நாகேஷ், வி.நாகையா, பண்டரிபாய், விஜயஸ்ரீ, எம்.பானுமதி, மாஸ்டர் ராஜ்குமார், செந்தாமரை, மற்றும் பலர்.

மூலக்கதை - டாக்டர் நிகர் குப்தா (உல்கா)

வசனம் ஆரூர்தாஸ்

பாடல்கள் - கவிஞர் கண்ணதாசன்

பின்னணி - டி.எம்.சௌந்தர்ராஜன், பி.சுசீலா

ஒலிப்பதிவு - பாடல்கள் & ரீரிக்கார்டிங் - ஜே.ஜே.மாணிக்கம் - ஏவி.எம். ஒலிப்பதிவு வசனம் - வி.எஸ்.எம். கோபால்ராம் -ஏவி.எம், மூசா இப்ராகிம் - வாசு

கலை -- ஏ. பாலு

செட்டிங்ஸ் - வி.நாகன் ஆசாரி - ஏவி.எம், எம். சுப்பையா ஆசாரி - வாசு
பின்னணி ஓவியம் - என். மோகன் ராஜ், என்.குப்புசாமி - ஏவி.எம். வி.ராமலிங்கம் - வாசு
செட் பிராபர்டீஸ் - சினி கிராஃப்ட்ஸ்

மேக்கப் - ஆர் .ரங்கசாமி, எம். கோபால், எம். ராமசாமி, கே. நாராயணசாமி. உதவி - கே.ஆர். பல்குணன்.
சிகை அலங்காரம் - ரவி

உடைகள் - பி.ராமகிருஷ்ணன், ஜி.சீனிவாசன்

நடனம் - ஏ.கே.சோப்ரா.

சண்டைப்பயிற்சி - டி.வெங்கடேசன்

விளம்பரம் - எலிகண்ட்
டிசைன்கள் - பக்தா
டைட்டில் - ஜி.கே. ஜெயராமன்

வெளிப்புறப்படப்படிப்பு - ஏ.பி.ஆர். யூனிட்

ஸ்டூடியோ - ஏவி.எம். வாசு

புரொடக்ஷன் நிர்வாகம் - ஓ.என்.நாராயணசாமி
துணை நடிகர் ஏஜெண்ட் - எஸ்.ஏ. தங்கம்

ஸ்டில்ஸ் - சாரதி, உதவி - லட்சுமிகாந்த்

ஆபரேடிவ் கேமராமேன் - கே.எஸ்.பாஸ்கர் ராவ்.

ப்ராஸ்ஸிங் - விஜயா லாபரட்டரி by எஸ். ரங்கநாதன்

எடிட்டிங் - பி.கந்தசாமி

உதவி டைரக்ஷன் - நாஞ்சில் எஸ்.ராஜேந்திரன், ப.புகழேந்தி, டி.எஸ்.பாலன்

ஒளிப்பதிவு டைரக்டர் - தம்பு

இசை - மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்

தயாரிப்பு - பெரியண்ணா

Screenplay & Direction - A.C.TIRULOKCHANDER
திரைக்கதை - டைரக்ஷன் - A.C. திருலோகசந்தர், M.A.

RAGHAVENDRA
12th January 2016, 06:36 AM
தெய்வமகன் - நிழற்படங்கள்.. ஆவணத்திலகம் பம்மலாரின் பொக்கிஷத்திலிருந்து...



பொக்கிஷப் புதையல்

அரிய நிழற்படம்

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/Kannan1-1.jpg


அரிய நிழற்படம்

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/Sankar1-1.jpg

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/Vijay1-1.jpg

பொக்கிஷப் புதையல்

முதல் வெளியீட்டு விளம்பரம் : தினமணி : 5.9.1969

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC3803-1.jpg

100வது நாள் விளம்பரம் : தினத்தந்தி : 13.12.1969

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC3802-1.jpg

இக்காவியத்தின் மற்றொரு விளம்பரம் : பொம்மை : செப்டம்பர் 1969

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4491a-1.jpg

வரலாற்று ஆவணம் : பொம்மை : செப்டம்பர் 1969

தனித்தனிப் பக்கங்களாக...

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4497a-1.jpg

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4494a-1.jpg

RAGHAVENDRA
12th January 2016, 06:39 AM
காணொளிகள் / பாடல் காட்சிகள்

தெய்வமே தெய்வமே

https://www.youtube.com/watch?v=kzqpT0JK6-g

நடிகர் திலகம் ஏற்று நடித்த மூன்று கதாபாத்திரங்களும் சந்திக்கும் வரலாற்றுச் சிறப்பு மிக்க காட்சி...

https://www.youtube.com/watch?v=Sy76CYBBZWk

காதலிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்

https://www.youtube.com/watch?v=AD1Ouc1r0zA

காதல் மலர்க் கூட்டம் ஒன்று

https://www.youtube.com/watch?v=H_hwsxnPjK0

கேட்டதும் கொடுப்பவனே

https://www.youtube.com/watch?v=vTHQM9IpCS8

அன்புள்ள நண்பரே

https://www.youtube.com/watch?v=pGTCW1HmBzU

கூட்டத்திலே யார் தான் கொடுத்து வைத்தவரோ

https://www.youtube.com/watch?v=R-ZJQqCjTdM


டைட்டிலில் இடம் பெறவில்லையென்றாலும் சீர்காழி கோவிந்தராஜன் குரலில் அசரீரியாக ஒலிக்கும் கண்கள் பேசுதம்மா பாடல் படத்தில் நம்மை சிலிர்க்க வைக்கும். நாம் முன்னரே கூறியது போல இப்பாடல் கடைசி நேரத்தில் சேர்க்கப்பட்டது. என்றாலும் படத்தின் முத்தாய்ப்பான காட்சியாக அமைந்தது, கோவிலில் கண்ணன் தன் தாயாரைப் பார்க்கும் அந்தக் காட்சியே. இணையத்தில் அந்தக் காட்சி தனியாக தரவேற்றப் படவில்லை. என்றாலும் இது குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியதாகிறது.

RAGHAVENDRA
12th January 2016, 06:40 AM
மாத்ருபூமி இதழின் இணையப் பக்கத்தில் தெய்வமகன் திரைக்காவியத்தைப் பற்றிய குறிப்பு..

http://mathrubhuminews.in/ee/ReadMore/2570/daiva-magan/E

RAGHAVENDRA
12th January 2016, 06:41 AM
நடிகர் திலகத்தின் ஒப்பனையாளர் திரு ரங்கசாமி அவர்களின் புதல்வர், திரு ஜெயந்த் அவர்கள், தன் தந்தையுடன் தெய்வமகன் படத்தில் பணியாற்றியுள்ளார். இதைப் பற்றிய அவருடைய பேட்டி...

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் இணைய தளத்திலிருந்து...

http://www.newindianexpress.com/entertainment/interviews/article447021.ece?service=print

RAGHAVENDRA
12th January 2016, 06:43 AM
தெய்வ மகன் - சில சமயங்களில் சிலர் சில பாடல்களை மேலெழுந்த வாரியாக விமர்சனம் செய்து ஒதுக்கிவிடுவதுண்டு. அப்படி ஒரு பாடல் தான் தெய்வ மகன் படத்தில் இடம் பெற்ற கூட்டத்திலே யார் தான் பாடல். ஈஸ்வரியின் ஸ்டைலில் சுசீலா அவர்கள் அமர்க்களப்படுத்தி யிருப்பார்கள். மிக வேகமாக, குத்துப் பாட்டு நடையில் அமைந்த அந்தப் பாடலை அவர் பாடுவது ஒரு மேல் தட்டு மக்களின் இரவு விடுதியில். இதை நிலை நாட்டும் விதமாக இந்தப் பாடலுக்கு முன்பாக ஓரிரு நிமிடங்களுக்கு மேல் நாட்டு நடனத்திற்கான இசையையொட்டி ஒரு இசையை மெல்லிசை மன்னர் வழங்கி யிருப்பார். அந்த பின்னணி இசை இதோ நமக்காக..

https://www.mediafire.com/?fthl4ql4r17e1m8

RAGHAVENDRA
12th January 2016, 06:44 AM
தெய்வமகன் படத்தின் டைட்டில் இசை

https://www.mediafire.com/?bfdkuk4uo11t7o7

RAGHAVENDRA
12th January 2016, 06:45 AM
Composing BGM for the intro of a main character of a film is a challenging task and many music directors face stiff challenge. Our advice.. Just observe MSV... It's a grammar that he set.
It needs an extraordinary composer like MSV to compose a bgm for the intro of such a character as the hero of Deiva Magan.
கதாநாயகன் பாத்திரத்திற்கு அறிமுக இசை உருவாக்குவது என்பது சவாலான விஷயம். பல இசையமைப்பாளர்களுக்கு இது கடினமான சவாலாக விளங்குகிறது. அவர்களுக்கு நம் ஆலோசனை... மெல்லிசை மன்னர் என்கிற இலக்கணப் புத்தகம் தங்களுக்கு இருக்கிறது. அதை வாசித்தாலே போதும்.
இதோ தெய்வமகன் திரைப்பட நாயகனை அறிமுகம் செய்யும் காட்சி. குறிப்பாக பணக்காரத் தந்தையை அறிமுகப் படுத்தும் போது இசை கம்பீரமாகவும் இருக்க வேண்டும் அதே சமயத்தில் அதில் ஒரு Majesticityயும் இருக்க வேண்டும். அந்த சூழ்நிலையில் அவருடைய மனைவி பிரசவ தருவாயில் இருக்கிறார். அந்த பரபரப்பும் அந்த இசையில் வரவேண்டும். அதே சமயத்தில் அன்பும் பண்பும் நிறைந்த அவருடைய மனைவி பாத்திரத்தையும் அந்த இசையிலேயே வெளிப்படுத்தி விட வேண்டும். இத்தனையும் ஒரு சேர அமைத்திருக்கும் மெல்லிசை மன்னரின் பாணியை என்னென்பது.
அலுவலகத்திலிருந்து வீடு செல்கிறார், வீட்டில் வேலையாள் மனைவி பிரசவ வலியால் ஆஸ்பத்திரிக்கு அனுமதிக்கப்பட்டிருப்பதாக சொல்கிறான். உள்ளுக்குள் சந்தோஷம் பொங்க மனைவியின் படத்தை வருடி விட்டுச் செல்கிறார்.
அது வரை அவருடைய குணாதிசயத்தை பிரதிபலித்த பின்னணி இசை, அவர் ஆஸ்பத்திரியில் நுழைந்தவுடன் அப்படியே மாறி விடுகிறது. இங்கே சிதார் மட்டுமே ஆளுமை கொள்கிறது.
எப்பேர்ப்பட்ட சிதார் இசை... மனதை மயக்குகிறதே...
இன்னும் நூறு ஜென்மம் எடுத்தாலும் நடிகர் திலகத்தையும் மெல்லிசை மன்னரையும் மிஞ்ச யாராலும் முடியாது.

https://www.mediafire.com/?lvk61syb60kq4mo

RAGHAVENDRA
12th January 2016, 06:58 AM
தெய்வ மகன் - சிறப்பு செய்திகள்...

படமே சிறப்பு... இந்தப் படத்தின் சிறப்பு செய்திகளுக்கு இந்த மய்யம் இணையதளத்தின் நடிகர் திலகம் பகுதியில் தனித்திரியே ஒதுக்க வேண்டும்..

என்றாலும் ஒரு சில துளிகள் இங்கே..

சிறந்த அயல்நாட்டுத் திரைப்படத்திற்கான ஆஸ்கார் விருதிற்கு அனுப்பப்பட்ட முதல் இந்தியப் படம்.
1969ம் ஆண்டின் சிறந்த படத்திற்கான தமிழக அரசின் விருதுக்குத் தேர்வு.
போனால் போகிறது என்று 1969ல் சிறந்த நடிகராக தமிழக அரசின் விருது.
1969ன் சிறந்த குணசித்ர நடிகராக தெய்வமகன் படத்திற்காக மேஜர் சுந்தரராஜன் அவர்களுக்கு தமிழக அரசின் விருது
உல்கா என்ற வங்க நாடகத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட இரண்டாவது தமிழ்ப்படம். முதல் தமிழ்ப்படம் தாயின் கருணை.
பைராக் என்ற பெயரில் திலீப்குமார் கதாநாயகனாக நடிக்க ஹிந்தியில் தயாரிக்கப்பட்டது.
கோடீஸ்வரடு என்ற பெயரில் தெலுங்கில் மொழி மாற்றம் செய்யப்பட்டது.

நடிகர் திலகம் ஏற்று நடித்த மூன்று கதாபாத்திரங்களும் சந்திக்கும் காட்சி உலக அளவில் வரலாறு படைத்து உலக சினிமா வரலாற்றில் இதுவரையும் இனிமேலும் யாரும் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அற்புத நடிப்பை வெளிப்படுத்தி, நடிகர் திலகத்தின் புகழ்க்கிரீடத்தில் மகுடமாக விளங்குவது.

புகழ்பெற்ற இயக்குநர் ஒருவரின் மேனரிஸத்தை இதில் விஜய் பாத்திரத்தில் நடிகர் திலகம் கொண்டு வந்தது அவருடைய கூர்ந்து நோக்கும் திறமையை மட்டுமின்றி அதை எங்கே எப்படி கொண்டு வரவேண்டும் என்பதில் அவருக்கிருந்த ஆளுமையையும் சித்தரித்தது.

கிட்டத்தட்ட தமிழ்நாட்டிலுள்ள அத்தனை கல்லூரிகளிலும் ஏராளமான மாணவியரை சிவாஜி ரசிகையராக மாற்றிய படம்.

டைட்டிலில் இடம் பெறவில்லையென்றாலும் சீர்காழி கோவிந்தராஜன் குரலில் அசரீரியாக ஒலிக்கும் பாடல் படத்தில் நம்மை சிலிர்க்க வைக்கும். நாம் முன்னரே கூறியது போல படத்தின் முத்தாய்ப்பான காட்சியாக அமைந்தது, கோவிலில் கண்ணன் தன் தாயாரைப் பார்க்கும் அந்தக் காட்சியே. இணையத்தில் அந்தக் காட்சி தனியாக தரவேற்றப் படவில்லை. என்றாலும் இது குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியதாகிறது.

RAGHAVENDRA
12th January 2016, 09:11 AM
தெய்வமகன் - முரளி சாரின் பார்வையில்...

மீள்பதிவு ...

http://www.mayyam.com/talk/showthread.php?6549-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-4&p=290004&viewfull=1#post290004



தெய்வ மகன் - என் மனதிற்கும் சிந்தைக்கும் மிக நெருக்கமான படம். மீண்டும் பார்த்த போது தோன்றிய சில எண்ணங்களை பதிகிறேன்.

சங்கர் - பணக்கார தந்தை. இயற்கையாகவே அமைந்த விகாரமான முக அமைப்பினால் தனக்கு நேர்ந்த அவமானங்கள்,புறக்கணிப்புகள் தன் மகனுக்கும் ஏற்படக்கூடாது என்ற எண்ணத்தில் உணர்ச்சிவசப்பட்டு எடுக்கும் ஒரு முடிவினால் கடைசிவரை மன துன்பம் அனுபவிக்கும் ஒரு மனிதன்.

முதல் காட்சி. முகம் தெரியவில்லை என்றாலும் கூட அந்த துடிப்பு, சந்தோஷம், துள்ளல் எல்லாம் தெரியும் அந்த நடையிலேயே. டாக்டரிடம் பேசும் போது உள்ள மகிழ்ச்சி கலந்த எதிர்பார்ப்பு, அது ஏமாற்றமாக மாறும்போது தளர்ந்து போகும் அந்த நடை. இரண்டு நடைக்கும் எவ்வளவு வித்யாசம்? குழந்தையை கொல்ல மாட்டேன் என்று மறுக்கும் டாக்டரிடம் தன் தரப்பு நியாயத்தை சொல்வது.[ என்னை உண்மையிலே நேசிக்கறவங்க என் உயிர் நண்பனான நீயும் என் மனைவியும்தான். மத்தவங்க எல்லாம் என் பணத்துக்காக என்னை மதிக்கிறாங்க.]

நண்பன் தான் கொடுத்த பணத்தை தூக்கி எறிந்து விட்டு நட்பு முறிந்து விட்டது என சொன்னவுடன் மௌனமாக வெளியேறுவது, இப்படி முதல் காட்சியில் இளமையாக இருக்கும் போது இரு வேறுபட்ட உணர்வுகளை வெளிப்படுத்தும் இந்த பாத்திரம் 25 வருடங்களுக்கு பின் ஒரு கம்பீரமான ஆளுமையை வெளிப்படுத்தும்போது நடிகர் திலகம் அதை அழகாக கையாள்வர்.

தனக்கு முன்னால் வளைந்து நெளிந்து நின்று பணம் கேட்கும் மகனிடம் (Just a Lakh and Fifty thousand) கடுமை காட்ட முடியாமல் வரும் சிரிப்பை அடக்கி கொண்டு அவர் காட்டும் expressions ஓஹோ! இதில் இன்னொன்றும் சுட்டி காண்பிக்கப்பட வேண்டியது. நடிப்புதானே என்று சும்மா கிறுக்காமல் செக்-ஐ எழுதுவார். எழுத்தி முடிக்கும் போது மகன் நாற்காலிக்கு பின் பக்கமாக சுற்றி வர அவனை சைடு-ல் திரும்பி பார்த்து விட்டு செக்-ஐ கிராஸ் செய்வார். மகன் பக்கவாட்டில் வருவதும் அவர் திரும்பி பார்ப்பதும் ஒரே டைம்-ல் நடைபெறும். பார்ப்பவர்களுக்கு இரண்டும் வேறு வேறு ஆட்கள் என்றே தோன்றும். மிக சரியாக அந்த timing-ஐ அவரால் மட்டுமே செய்ய முடியும்.

அந்த நீளமான படிக்கட்டில் அந்த தாளக்கட்டு மாறாமல் அவர் இறங்கி வரும் அழகு. மனைவி கோவிலில் பார்த்தது தன் மூத்த மகனாக இருக்குமோ என்று சந்தேகப்பட்டு டாக்டர் வீட்டிற்கு வருவார். டாக்டர், நண்பனாக பழகாமல் விலகி நின்று பேச, வாய் தவறி ஒருமையில் அழைத்து விட்டு உடனே "Sorry, Dr. ராஜு" என்று style-aga கூறுவது. இறுக்கம் தளர்ந்து விடை பெறும்போது மாடியிலிருந்து ஒலிக்கும் சிதார் இசையை கேட்டு விட்டு அவர் காட்டும் அந்த தவிப்பு, எதையோ சொல்ல வந்து சொல்ல முடியாமல் தவிப்பது, அதை புரிந்து கொண்டு டாக்டர் " உன் மகனை பார்க்கணுமா?" என்று கேட்க முகமெல்லாம் பூரிப்பாக "ஆமாம்" என்று சொல்லிவிட்டு அதை கேட்க தனக்கு எந்த அருகதையும் இல்லை என்பதை உணர்ந்தவராக பேசாமல் வெளியேறுவது. திலக முத்திரைகள்.

இளைய மகனை காதலிக்கும் பெண்ணிடம் கடுமையாக பேசுவது போல பாவனை செய்வது, இளைய மகனின் கல்யாணத்தன்று தன் மனைவிக்கு ஒரு விலை மதிப்பில்லாத பரிசு கொடுக்க போவதாக சொல்வது, இதெல்லாம் அவருக்கு child's play.சுருக்கமாக ஒரு கம்பீர performance.

கண்ணன் மற்றும் விஜய் பற்றி -விரைவில்



http://www.mayyam.com/talk/showthread.php?6549-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-4&p=290877&viewfull=1#post290877



தெய்வ மகன் - கண்ணன்

கண்ணன் - பரிதாபத்திற்கு உரிய அதே சமயம் நம் மனதில் ஒரு பிடிப்பு அந்த பாத்திரத்தின் மேல் ஏற்படுத்தக்கூடிய திரைக்கதை அமைப்பு. சிறுவனாக இருக்கும் போதும் ஆரம்பிக்கும் அந்த கோபமும் ஆவேசமும் கடைசி வரை குறையாது வெளிப்படும். தான் அனாதை இல்லை என்று தெரிந்ததும் பாபா (நாகையா) கொடுத்த டைரி-ஐ புரட்டி பார்க்கும் ஆவேசம், மருத்துவமனையில் டாக்டர்-ஐ மிரட்டும் கோபம், தன் தாய் தந்தையரை தெரிந்து கொள்ள எந்த காரியத்தையும் செய்ய தயாராக இருப்பது இவை அந்த கதாபாத்திரத்தை வலுவாக நிலை நிறுத்தும் களங்கள். அவற்றை நடிகர் திலகம் தன் பாணியில் மெருகேற்றியிருப்பார்.

படத்தின் தலைப்பிற்கேற்ப கதாநாயகன் கண்ணன்தான். முதல் இரண்டு காட்சிகளில் சாதாரணமாக வரும் அவர், அனாதை இல்லத்திலிருந்து வெளியேறி கடைத்தெருவில் திருடனிடம் சண்டை இடும் காட்சியிலிருந்து அந்த Body Language அப்படியே மாறும். டாக்டர் வீட்டிற்கு வரும் அவரை பார்த்ததும் அவர் யார் என்று தெரிந்து கொள்ளும் டாக்டர், அவரை தவிர்க்க முயற்சிக்க,கொஞ்சம் கொஞ்சமாக பொறுமை இழந்து ஒரு கட்டத்தில் டாக்டரின் கழுத்தை நெரிப்பார். [என் தாய் தந்தையார் யார்னு தெரிஞ்சுக்க நான் எதையும் செய்ய தயங்க மாட்டேன்]. அதற்கு முன் தான் அந்த காலை உதைத்து, முடிகற்றை முன்னால் வந்து விழ,ஆட்காட்டி விரலை சுட்டி " டாக்டர்" என்று கத்துவது.[ தியேட்டர் அலறும் என்பதை சொல்லவே வேண்டாம்].

பிறகு டாக்டர் வீட்டில் அடைக்கலம். அங்கே மாடியில் எப்போதும் சிதாரும் இசையுமாக இருப்பவர் ஒரு நாள் இரவு சொல்லாமல் கொள்ளாமல் தன் தாய் தந்தையரை பார்க்க வீட்டிற்கு போகிறார்.

முதலில் தாய். படுத்திருக்கும் தாயின் கால்களுக்கு பூக்களை அர்ச்சனை செய்து விட்டு கண்ணீர் துளியை காணிக்கையாய் சிந்தும்போது, தாயன்புக்கு ஏங்கும் ஒரு இளைஞனை கண் முன்னே நிறுத்துவார்.

அடுத்து தம்பி அறை. அதில் நுழைபவர் அங்கே மாட்டியிருக்கும் இளம் பெண்ணின் கவர்ச்சி படத்தை பார்த்து விட்டு ஒரு வெட்கம் கலந்த ஒரு நமட்டு சிரிப்பு சிரிப்பார் (இருட்டாக தெரியும் முகத்தில் அந்த இரண்டு கண்கள் மட்டும் வெளிச்சம் உமிழும்). அடுத்து தம்பியின் சுவரில் மாட்டியிருக்கும் புகைப்படத்தின் அழகை ரசிப்பார்,( மாசு மருவில்லாத கன்னத்தை தன் விரல்களால் தடவும் அழகு).

அடுத்து டேபிளின் மேல் இருக்கும் போட்டோ-வை எடுத்து யாரும் எதிர்பார்க்காத வகையில் தான் அணிந்திருக்கும் முழுக்கை சட்டையின் வலது மணிக்கட்டு பாகத்தை வைத்து துடைக்கும் ஸ்டைல் இருக்கிறதே, சூப்பர். தீடீரென்று தம்பி வந்து விட தன்னை பார்த்து திருடன் என்று சத்தம் போட அவனை அணைத்துக்கொண்டு சிரிக்கும் அந்த சிரிப்பு, சத்தம் கேட்டு அனைவரும் வந்து விட தாய்,தந்தை மற்றும் தம்பியை ஒரு சேர பார்க்கும் அந்த நேரம், அந்த முகத்தில்தான் எத்தனை சந்தோஷம்.

அதை டாக்டரிடம் போய் பாட்டாக வெளிப்படுத்தும் விதம். பாடலின் நடுவே வேக வேகமாக படி ஏறிவிட்டு அதே வேகத்தில் இறங்குவார். ஆரவாரம் அலை மோதும் (இதையே 10 வருடம் கழித்து திரிசூலத்திலும் செய்திருப்பார்). ஒவ்வொருவரை பற்றியும் பாடலில் சொல்லும்போது அந்த முகத்தில் வந்து போகும் உணர்ச்சிகள். கை அசைப்புகள். "விதி எனு நதி ஒரு பக்கமாகவே ஓடுகிறது" எனும்போது அந்த இடது கை மட்டுமே சைகை காட்டும். "தர்மமே தந்தை தாயை காக்க வேண்டும் தெய்வமே" என்ற வரியின்போது காமிரா லோ ஆங்கிளிலிருந்து அவரை பார்க்க இரண்டு கைகளையுமே தலைக்கு மேல் தூக்கி உள்ளங்கைகள் தரையை பார்க்க ஒரு போஸ் கொடுப்பார். கேட்க வேண்டுமா கைதட்டலுக்கு.

அடுத்து தாயை கோவிலில் வைத்து பார்க்கும் காட்சி. தூணுக்கு பின்னால் மறைந்து நின்று பார்க்கும் அந்த கண்கள் அதில் தெரியும் அந்த உணர்ச்சிகள் [ " என் வயிறெல்லாம் என்னவோ செய்யுதே" என்று பண்டரிபாய் சொல்லும் வசனம் படம் பார்க்கும் எல்லோருக்குமே பொருந்தும்).

இதற்கு நடுவில் டாக்டரின் பெண் தன் இசையால் ஈர்க்கப்பட்டு மாடிக்கு வந்து பேச அதுவரை வாழ்க்கையில் அனுபவித்திராத ஒரு உணர்வு - ஒரு பெண்ணின் சிநேகம். அது மனதுக்குள் திறக்கும் ஜன்னல். தன் முகத்தை எங்கே பார்த்துவிடுவாளோ என்று மறைத்து கொண்டு, அவள் சென்றவுடன் ஓடி சென்று அவள் நின்ற அந்த பால்கனி கைப்பிடியை பிடித்து முழங்காலிட்டு அவள் சென்ற திசையையே பார்த்து சிரிப்பாரே, கிளாஸ்.

தந்தை கொடுத்த பிளாங் செக்கை டாக்டர் கொண்டு கொடுக்கும் காட்சியிலும் அந்த பாத்திரத்தின் சிறப்பு தன்மை வெளிப்படும். எனக்கு தெரியாம வெளியே போறே என்று சொல்லும் டாக்டரிடம் " இந்த கிளியை யாரும் பிடிக்கவும் முடியாது! புரிஞ்சிக்கவும் முடியாது" என்பார். அதற்கு டாக்டர் " பிடிக்க முடியாது-னு சொல்லு ஒத்துகிறேன். ஆனால் புரிஞ்சுக்க முடியாது-னு சொல்லாதே! உங்கப்பா உன்னை புரிஞ்சிக்கிட்டார்" என்கிறபோது " என்ன சொல்றீங்க டாக்டர்"-னு கேட்டு விட்டு உடனே அதற்கான பதிலையும் சொல்வார்." கோவிலிலே எங்கம்மாவை பார்த்தேன். எதையுமே கணக்கு போட்டு பார்க்கிற எங்கப்பவோட வியாபார புத்தி இதையும் முடிச்சு போட்டு கண்டு பிடிச்சிருக்கும்" என்பார்.

டாக்டர் " என்ன கண்ணா இன்னிக்கு நல்ல டிரஸ் போட்டிருக்கே"
கண்ணன் " உடல் தான் வெள்ளையா இல்லை. உடையாவது வெள்ளையாக இருக்கட்டுமே-னு தான்" .

அழகா இல்லாத ஆண்களை பெண்கள் விரும்புவார்களா என்று கேட்கும் கண்ணனிடம் டாக்டர் ஷேக்ஸ்பியர் எழுதிய ஒதேல்லோ நாடகத்தை பற்றி சொல்ல, அவர் கையை பற்றி கொண்டிருக்கும் கண்ணன் இரும்பு பிடியாய் இறுக்க, வலி தாங்காமல் கையை உருவிக்கொண்டு " ஆமாம், இதெல்லாம் நீ ஏன் கேட்கிறே?" என்று வினவ, கண்ணன் " மண்ணை தோண்டி தங்கம் இருக்கா வைரம் இருக்கா-னு தேடற மாதிரி இதயங்களை தோண்டி அன்பு இருக்கா பாசம் இருக்கா-னு பார்க்க தோணுது டாக்டர்" என்று சொல்லிவிட்டு சிரிக்கும் அந்த சிரிப்பு!

தந்தையை போலவே வேறு ஒரு குணாதிசியமும் காட்டுவார். தன்னை சந்திக்க வரும் சங்கரிடம் "பையன்-னு தெரிஞ்சுமா சுட்டிங்க" ? என டாக்டர் கேட்க இல்லை என்பதை ஒரு முக சுளிவிலே காட்டுவார் தந்தை. அதே முகபாவத்தை தந்தையை பார்க்க வரும் கண்ணனும் வெளிப்படுத்துவார். முதல் குழந்தை ஆண் குழந்தைனா பெத்தவங்க ரொம்ப அன்பு செலுத்துவாங்களாமே என்று மகன் கேட்க, உண்மைதான் என்று தந்தை சொல்ல முன்பு தந்தை காண்பித்த அதே முகபாவத்தை காண்பித்து "இல்லை பொய்" என்பார்.

ஒவ்வொரு காட்சியையும் சொல்லிக்கொண்டே போகலாம். அந்த ஸ்டைல், அந்த முக பாவம் எத்தனை தடவை பார்த்தாலும் அலுக்காது. சுருக்கமாக சொன்னால் ஒரு அசாதாரண நடிப்பு, நடிகர் திலகத்தால் மட்டுமே முடியும்.

அடுத்து விஜய்



http://www.mayyam.com/talk/showthread.php?6549-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-4&p=291219&viewfull=1#post291219



விஜய் என்ற விஜயன் - தெய்வ மகன்

இரண்டாவது மகன். அவனது தாயை பொருத்த வரை ஒரே மகன். மிக மிக செல்லமாக வளர்க்கப்பட்ட மகன். பொதுவாகவே செல்லம் கொடுத்து வளர்க்கப்படும் பணக்கார வீட்டு பையன் போல் இல்லாமல்(ராஜேஷ் இங்கே குறிப்பிட்டது போல்) பயந்த சுபாவம் கொண்ட அம்மா செல்லமாக வளர்ந்த ஒரு மேல்தட்டு பிள்ளை.

கதையை பொறுத்தவரை சங்கர் மற்றும் கண்ணன் பாத்திரங்கள் முக தழும்புடன் காட்சியளிக்க, அதற்கு நேர்மாறாக பால் வடியும் முகத்தோடு அழகாக தோன்றுபவர். இந்த பாத்திரத்தை நடிகர் திலகம் வேறு மாதிரி வித்யாசப்படுத்தியிருப்பார். அதாவது ஒரு பெண்மை கலந்த நளினத்தை இந்த பாத்திரத்தில் நாம் பார்க்கலாம். இதன் Body Language வேறுப்பட்டதாக அமைந்திருக்கும். நகத்தை கடிப்பது, நடையில் ஒரு பெண்மை [தன் ஒரிஜினல் ராஜ நடையில் ஒரு சின்ன மாற்றம் செய்திருப்பார். சாரதா இங்கே சொன்னது போல இடுப்பை வளைத்து ஒரு நடை], ஆங்கிலம் கலந்த பேச்சு தமிழ் என்று விரியும்.

இந்த பாத்திரத்தை பொறுத்தவரை லுக் மட்டுமல்ல, படத்திற்கு தேவையான காதல் மற்றும் இளமை காட்சிகளுக்கும் இவர்தான் பொறுப்பு. கதையின் அடிநாதம் பெற்றோர் - மகன் பாசப்பிணைப்பு. அந்த மெயின் ரூட்டில் வராமல் ஆனால் அந்த கதையோடு பின்னி பிணைந்தவாறே பார்ப்பவர்கள் மனதில் எளிதாக இடம் பிடித்து விடுவார். இவரை வைத்துதான் பட கிளைமாக்ஸ் நடக்கும்.

நான் ஏற்கனவே இந்த திரியில் பலமுறை சொன்னது போல், இந்த படம் வெளி வந்த காலக்கட்டத்தில் (1969) நடிகர் திலகத்தின் படங்களும் ஒரு Entertainment Based-ஆக மாறி கொண்டிருந்த காலம். ஆகவே ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் நிறைவு செய்ய வேண்டும். அதற்கும் இந்த பாத்திரம் பயன்பட்டது.

அவர் அறிமுகமாகும் அந்த தூண்டில் காட்சியிலிருந்து அமர்க்களம் ஆரம்பமாகிவிடும். முதலில் கவனிக்க வைப்பது அந்த பேச்சு. நுனி நாக்கு ஆங்கிலம் என்று சொல்ல முடியாது. ஆனால் பெரும்பாலான வார்த்தைகளுக்கு கூட ஆங்கிலத்தையே பயன்படுத்துவார். அவர் எந்த அளவிற்கு கேரக்டர் study செய்வார் என்பதற்கு இந்த ரோல் ஒரு உதாரணம். குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் ஒரு சில காட்சிகளை சொல்லலாம். சாதரணமாக வீட்டில் ஒரு திருடனை பார்த்தவுடன் கூட " Thief!Thief" என்றுதான் சொல்லுவார். நம்பியாரிடம் "ஏன்டா, என்னை threaten பண்ணறே? " என்பது, "Thirsty-யாக இருக்கு. ஐஸ் வாட்டர் கொடுங்கடா" என்பது. அம்மாவிடம் (அப்பா இருப்பது தெரியாமல்) "டாடி ஒரு ஜப்பான் பொம்மை. கீ கொடுத்தால் ஆடும்" என்பது, முதலில் JJ-விடம் நடிக்கும் போது ஒவ்வொரு பொய்யிலும் மாட்டிகொள்வது.

தந்தையிடம் நேருக்கு நேர் நின்று பேச அச்சப்படும் கேரக்டர். வளைந்து நெளிந்து அம்மாவின் பின்னால் ஒளிந்து பேசுவது ரசனையான காட்சி. பிஸினஸ் பண்ண பணம் வேண்டும் என்று கேட்பதில் கூட ஒரு ஸ்டைல் (Just a Lakh and Fifty thousand). ஹோட்டல் என்பதைக்கூட ஹோடேல் என்னும் ஆங்கில பாணி உச்சரிப்பு. ஹோட்டலில் நடந்த திருட்டை சரி செய்வதற்காக அப்பாவிடம் பணம் கேட்க வரும் காட்சி. அதில் உணர்வுகளை எப்படி நிமிட நேரத்தில் மாற்றி காட்டுவார். பணம் கேட்கும்போது தயக்கம், தந்தை கோபப்படும்போது பின் வாங்கும் பயம், பிளாங் செக்கை பார்த்தவுடன் உடன் சந்தோஷம், அதற்கு நன்றியாக ஒரு Flying Kiss என்று கலக்கியிருப்பார். தன் ஹோட்டலில் டப்பாங்குத்து ஆடும் JJ-வை அவர் பார்க்கும் பார்வை, பளார் என்று அறைந்துவிட்டு அறைக்கு கூடிக்கொண்டு போய் சத்தம் போடும்போது ஒரு காதலின் possessiveness வெளிப்படும். அந்த காட்சியில் மட்டுமல்ல JJ பார்க்-இல் கண்ணன் பற்றி பேசும் போது வரும் கோபத்திலும் அது தெரியும், ("எனக்கு முன்னாடியே யாரோ ஒருத்தன் புல் புல் தாரா நல்லா வாசிப்பான்னு சொல்லிட்ருக்கே").

மற்ற இரண்டு கதாபாத்திரங்களும் உணர்வு பூர்வமாக நம்மை கலங்க வைப்பார்கள் என்றால் விஜய் நம்மை மயங்க வைப்பார்.



http://www.mayyam.com/talk/showthread.php?1223-Nadigar-Thilagam-Sivaji-Ganesan&p=126734&viewfull=1#post126734



There was a sentence in this thread which said Manian(IP) could not believe that Sivaji, the single person is playing all the roles. I too have felt not once or twice but 100 times when I see Deiva Magan, especially the scene when all the three come in the same scene.( I avoided the word meet because the third Sivaji doesn't know about his elder brother and his presence in that room.I think Saradhaa started that famous dialogue but stopped.

The prelude to this scene is appa Sivaji sensing that his elder son is alive goes to meet Major and hands him a blank cheque for his son. initially Major refuses, but Sivaji says that only his son has got the right to reject it.

The next scene Appa Sivaji is sitting in his room. The son comes in.On seeing him Appa gets up slowely.He is seeing the son for the first time.See the father's face, Thigaippu, Santhosam, kutra unarvu all just flash thro' his face.
Then the son asks" Ennai theriyutha? Kannan.Neenga koopidu naan theringikka vendiya perai,naan solli neenga puringikka vendiya nilamai".
Father in an emotion choked voice says "Kanna"
Son " Ethukka intha cheque-i koduthinga"
Father " ellam un ethirkalathirkathan"
Son" Ethir kalam? appa naan ungalai onnu ketkalama?
Father again emotinally " Keluppa"
Son in a pleading voice asks " Oru kudumbathilae Ambilai Pillai Poranthaa athuvum Thalachan Pillaiya Porantha romba Santhosa paduvangalame, Unmaiya"

Father " Amam, Unmaithanppa".
Son's face will immediately turn hard and he will raise his voice" Illa,Poi." Father will have a startled look in his face.
Son's voice now will have anger and sadness " Neengalum ennai mathiri thane porantheenga. Neenga azakai illai inu ungappa ungalai thookiya pottar? Illayae, ennna ungappa oru ezhai,avarukku idhyam irundathu ana engappa periyaa panakkarar avarukku idayam irukka vendiya idathilae irumbu petti than irundathu. Evvaluvu avamanam(sobs) evvalu peru ennai kanda udanae nayyai thruatharthupole ennai adichu viratinangaa. Ithukku padilae ennai neenga konnirukalame"
Unable to bear any more, the father bursts out " athaidhanda naan cheyya sonnen ana andha muttal Raju(Major) athai cheyyama vittutan." Having said that he realises his mistake and says "Kanna intha ulagathilae naan patta kashtam nee padakoodathuinu than ithai ellam chenjan"

At this time the door opens and the elder son goes and stands behind an almirah. The Father regains his composure and sits in his chair.The younger lovely looking second son (NT,41 at that time will look like a 30 year old in this role) will do a cat walk like nadai and start " Daddy"

Father gouravathodu " mmm--"
Vijay(Younger Sivaji's name) in a hushy tone " Panam Venum"
Father loudly " Enna"
Son will have a shirk and the voice will still go down " Koncham Panam venum".
At this moment father will burst out " Panam! Panam! nee ennai pakka varathe panathukkathana"Here Sivaji will convey the agony of a father who expects love from his son but which is not forthcoming
Vijay " No dad, en hotel-ilae"
Father will not allow him to complete and shout " Hotel!Hotel!Damn your hotel. Ellathaiyum izuthu moodu"

Vijay character in an apologetic tone " yes,yes.ellathaiyum close panna than --" he will stop mid sentence as his eyes will focus on the blank cheque lying on the table. His face will turn happy and
" Naan varuvenenu cheque ready-ya vachiruntheegala daddy " and will take the cheque. Father avan eduthira poranae endra bayathil "yei athai edukathae" endru soluvar. Athey samayam avar thirumbi kannan -ai parpaar. Kannnan Sivaji thalaiyai mattum atti eduthu kollatum enbathu pola seyvar. Ithai ondrum gavanikkatha vijay Sivaji avar kariyathilayae kannaga cheque-i ethukondu "thanks dad" endru solli vittu oru flying kiss koduppar.
Appa Sivajiyo oru dharma ankadamana muga bavathudan iruppar
Kannan Sivaji santhosathil almirah-vai kuthuvar.Moondru perumae ore framil ithai seivargal.

Intha scene, they would have taken as a mask shot. Athavathu the film would be divided into 3 parts, they would have picturised Vijay Sivaji blowing a FK(at that time the other 2 portions would have been covered with the black pad), then Kannan Sivaji reacting with the kuthu (now the 1st and 3rd portion would be covered) and then the appa Sivaji's reaction would have been picturised
See our NT had to perform all the three times showing 3 different emotions and at three different times. Not only acting talent but you require a clear idea about the camera work and speed and more than that timing. It has to synchronise. If kannan character does his part earlier than Vijay character, the scene is gone. See how exceptionally well he has done that. Now coming back to the scene ,Kannan will come out and say in all happiness" Paarthingala Appa yaarukku poyi cheranamo, avanukku cherthirichu. Enppa unga asthikkum asaikkum irukkarae ore magan thambi, avanai enppa satham podareenga" Udanae Appa Sivaji oru athangathoda
" ore payyan,ore payyan inu romba chellam koduthu valathithuta avangamma" stopping suddenly realising his mistake solvar" ungamma. Avan cherkai sariillainu kelvipattan
Serakoodathavangalodu sernthu avan pathai maari poyiduvanonu bayama irrukku " Immediately Kannan Sivaji will say " Thambikku entha abathum varamae naan pathukiran.en uyire koduthavathu thambiyai kappathuven"

After assuring his father Kannan Sivaji thanake urithanae style-il idathu kalai lesaga valaithu idathu kaiyai mattum uyarthi " varen" endru sollivittu povar.

God.I have seen this film 10 times in theatre, 100 times this scene in TV,but while watching all those times I have always felt that all the three are different persons.Appa mela kopam and sankatam varum.Kannan mel parivu and anbu,Vijayay romba rasithu santhosam thonum.

What an acting! To borrow the great poet's words,
Here was an actor ! When comes another?

[/b]

Gopal.s
12th January 2016, 10:50 AM
இதை விட அழகாக,தொழில் தேர்ச்சியுடன்,தெய்வ மகன் பற்றி யாருமே எழுத முடியாது. ஜாக்கி சேகருக்கு நன்றி உரித்தாகுக.





http://www.jackiesekar.com/2012/10/deiva-magan-1969.html

Gopal.s
12th January 2016, 11:29 AM
Monday, October 1, 2012Deiva Magan-1969/உலகசினிமா/இந்தியா/தெய்வமகன்/சிவாஜி எனும் மகா கலைஞன்.







நிறைய விமர்சனங்கள் எழுதி இருக்கின்றேன்..
ஆனால் இந்த விமர்சனத்தை எழுத எனக்கு தகுதி இருக்கின்றதா என்று தெரியவில்லை. இந்த படத்தில் பணியாற்றிய ஜாம்பவான்கள் எல்லோரும் மன்னிப்பார்களாக....


அது போன்ற ஒரு காட்சியை நான் ரசித்து பார்த்ததே இல்லை... அப்படி ஒரு காட்சி அதுவும் தமிழ்சினிமா....


கருப்பு வெள்ளை திரைப்படம் அது....


பொதுவாய் கருப்பு வெள்ளை திரைப்படங்களை நான் அதிகம் பார்க்க விரும்புவதில்லை... ஆனால் சில படங்கள் எப்போது போட்டாலும் சில படங்களை வச்ச கண் வாங்காமல் படம் பார்த்தது உண்டு.


அந்த வகையில் இந்த படமும்... குறிப்பாக இந்த காட்சியையும் சொல்லலாம்.... நம்ம கிட்டயும் சரக்கு இருக்குன்னு நான் நம்பிய படம்.....


அந்த படத்தில் வரும் அந்த சீனும் காம்போசிஷனும்.. சான்சே இல்லாத ரகம்.. அந்த காலத்திலேயே இப்படி அசத்தி இருக்கானுங்களே என்று பொறாமை கொண்டு பார்க்கும் காட்சி அது...


சிவாஜி நடிப்புக்கு நிறைய படங்களை உதாரணம் சொல்லுவார்கள்.. முக்கியமாக வயலுக்கு வந்தாயா-? நாற்று நட்டாயா? என்பதை பெரியதாய் சொல்லுவார்கள்...ஆனால் என்னை பொறுத்தவரை இந்த படத்தையும் இந்த படத்தில் குறிப்பாக இந்த காட்சியையும் சொல்லுவேன்...




இந்த காட்சியில் சிவாஜி மட்டும் அல்ல மேஜர் சந்தர்ராஜனும் சேர்ந்தே கலக்கி இருப்பார்.. இரண்டு பேரும் போட்டி போட்டு நடித்து இருப்பார்கள்...




காட்சி இதுதான் தான் அவலட்சனமாக இருந்து சொந்து போகும் பெரும் பணம் படைத்த்த பணக்கார சிவாஜி அவலட்சனமாக பிறந்த தன் பிஞ்சு மகனை இரக்கமில்லாமல் தன் டாக்டர் நண்பரிடம் கொல்ல சொல்கின்றார்... டாக்டர் நண்பரும் கொன்று விட்டேன் என்று சொல்லி விட்டு அந்த அவலட்சனமான பையனை வளர்கின்றார்... இதனால் அவர்கள் இருவரும் பேசிக்கொள்வதில்லை....


வளர்ந்த பையன் தன் தாய் தந்தை யார் என்று தெரிந்து கொண்டு .... தாயை பார்க்க செல்கின்றான்.. யாரோ ஒருவன் தன்னை பார்க்கும் போது தனக்கு ஏன் அவன் மீது அளப்பறியா பாசம் ஏற்ப்படுகின்றது என்று தன் கணவனிடம் கதறுகின்றாள்.. ஒருவேளை தன் டாக்டர் நண்பன் கொல்லாமல் தன் பிள்ளையை வளர்ந்து இருந்தால்? என்று பணக்கார சிவாஜியின் குறுக்கு புத்தி வெகு வேகமாய் கணக்கு போடுகின்றது..


.ஆனால் 25 வருடமாக டாக்டர் நண்பர் மேஜர் சுந்தர்ராஜனுக்கும் பணக்கார சிவாஜிக்கும் இடையில் பேச்சு வார்த்தை சுத்தமாக இல்லை... ஆனால் அந்த குழந்தை பற்றி முழுதும் தெரிய வேண்டும் என்றால் டாக்டரிடம் பேசி ஆக வேண்டும்... 25 வருடம் கழித்து தன் டாக்டர் நண்பனை பார்க்க வரும் அந்த காட்சி இருக்கின்றதே....



நான் அடிச்சி சொல்லுவேன்....


இனிமே அப்படி ஒரு காட்சியை எடுக்கவும் முடியாது.. அப்படி ஒரு ஷாட் கம்பொசிஷனை வைக்கவும் முடியாது.. அது போல உணர்பூர்வமா நடிக்கவும் முடியாது...அப்படி ஒரு மீயூசிக்க போடவும் முடியாது......அதுவும் அந்த காலத்துலேயே..... என்ன நடிப்பு? என்ன நடிப்பு....? என்ன நடிப்பு? என்ன நடிப்பு....? என்ன நடிப்பு? என்ன நடிப்பு....? என்ன நடிப்பு? என்ன நடிப்பு....? என்ன நடிப்பு? என்ன நடிப்பு....? என்ன நடிப்பு? என்ன நடிப்பு....? என்ன நடிப்பு? என்ன நடிப்பு....? என்ன நடிப்பு? என்ன நடிப்பு....? என்ன நடிப்பு? என்ன நடிப்பு....? என்ன நடிப்பு? என்ன நடிப்பு....? என்ன நடிப்பு? என்ன நடிப்பு....? என்ன நடிப்பு? என்ன நடிப்பு....? என்ன நடிப்பு? என்ன நடிப்பு....? என்ன நடிப்பு? என்ன நடிப்பு....? என்ன நடிப்பு? என்ன நடிப்பு....? என்ன நடிப்பு? என்ன நடிப்பு....? என்ன நடிப்பு? என்ன நடிப்பு....? என்ன நடிப்பு? என்ன நடிப்பு....? என்ன நடிப்பு? என்ன நடிப்பு....? என்ன நடிப்பு? என்ன நடிப்பு....? என்ன நடிப்பு? என்ன நடிப்பு....? என்ன நடிப்பு? என்ன நடிப்பு....? என்ன நடிப்பு? என்ன நடிப்பு....? என்ன நடிப்பு? என்ன நடிப்பு....? என்ன நடிப்பு? என்ன நடிப்பு....?




முத ஷாட்... டிரலியில கேமரா மெல்ல நகர.....வீட்டோட பர்ஸ்ட் புலோர்ல நின்னுகிட்டு மேஜர் பைப் பத்தவைப்பார்... கதவு தட்டற சத்தம் கேக்கும்.. உடனே மேஜர் கமின்ன்னு சொல்லுவார்....




இப்ப டாப் ஆங்கிள்ள கேமரா இருக்கும்....கதவு திறக்கும் சிவாஜி அந்த வீட்டுக்கு 25 வரஷம் கழிச்சி வரார்...(கடுகடு கோபத்தோட உள்ளே வருவார்.... காரணம் அவர்தான் புள்ளைய அப்பவே கொல்ல சொன்னாரு இல்லை.... இப்ப ஒரு புது பிரச்சனை அதுக்கு காரணம் தன் சொல் பேச்சு கேட்காத டாக்டர்...)




உள்ளே வந்து கிழ இறங்கி இரண்டு ஸ்டெப் எடுத்து வைப்பார்.. அப்ப அவர் மொகத்துக்கு லைட் இருக்காது டக்குன்னு ஒரு ஸ்டெப் பின்னாடி நகர்ந்து முகத்துக்கு லைட்டை அழகாக வாங்கி கிட்டு மேல பார்ப்பார்... (இது எல்லா ஒளிப்பதிவாளர்களுக்கும் , டெக்னிஷியன்களுக்கும் நன்றாக தெரியும்.)




மிட் ஷாட்டுல இவர் மேல பார்ப்பார்... மேஜர் கீழ பார்ப்பார்... இரண்டு பேருக்கும் இன்டர்கட் ஷாட்டுல சிவாஜி திருட்டு பையன் போல மேல மேஜரை பார்த்துகிட்டு இருப்பார்.. அதுல கோபம் வெறுப்பு இயலாமை எல்லாம் இருக்கும்.... மேஜர் இறங்கி வரார் என்பதை கண்ணில் காட்டுவார்.. விழிகள் டிராவல் ஆகும் அதாவது அவர் மாடி படி விட்டு இறங்கி வருகின்றார் என்பதை கண்களில் குளோசப்பில் உணர்த்துவார்..




இறங்கி வந்ததும்.... உட்கார சொல்லி விட்டு எதிர் இருக்கையில் மேஜர் அமருவார்... இரண்டு பேரும் எதுவும் பேசிக்கொள்ளமாட்டார்கள்.. இரண்டு பேரிடமும் டென்ஷன் ஓடிக்கொண்டு இருக்கும்.. பதட்டத்துக்கு மேஜர் பைப்பை நன்றாக புகைப்பார்..


.
சிவாஜிதான் முதலில் ஆரம்பிப்பார்...


டாக்டர் என்னை உங்களுக்கு தெரியுதா? நான்தான் சங்கர்.... உங்க ஓல்டு பிரண்டு என்று சொன்னதும்.. எதுவும் பேசாமல் மேஜர் தலையசைத்து அதை ஆமோதிப்பார்.. (இரண்டு பேருக்கும் தனி தனி மிட் ஷாட்டுல கேமரா இருக்கும்.....)




நாம சந்திச்சி ரொம்ப நான் ஆச்சி இல்லை என்று சிவாஜி சொல்லும் போது ரொம்ப வருஷம் ஆச்சி என்று மேஜர் சொல்லுவரர்..( அப்ப ஒய்டுல டூ ஷாட்டுல கேமரா இருக்கும்- சட்டுன்னுஉடனே மேஜர் பாயிண்ட் ஆப் யூ ல டூ ஷாட்ல டைட் பிரேம்ல ஒய்டுல இரண்டு பேரும் இருப்பாங்க...)




எஸ் யூ ஆர் கரெக்ட்...25 வருஷம் கழிச்சி வந்து இருக்கேன்..




ஆமாம்.. அப்போ பிறந்த குழந்தையை பார்க்க வந்திங்க...




(சட்டென சிவாஜி ஆர்வமாக) இப்ப அந்த குழந்தையை பத்தி தெரிஞ்சிக்க வந்த இருக்கேன்.....
ஏன் டாக்டர் அதை என்ன செஞ்சிங்க ..(அந்த அவலட்சனமான பிள்ளையை சிவாஜி..... குழந்தை என்று கூட அழக்க மாட்டார்.. அதை என்ன செஞ்சிங்க என்று விளிப்பார்...)




நீங்க என்ன செய்ய சொன்னிங்க..? என்று மேஜர் கேட்க....?( சிவாஜி அதுக்கு குற்றஉணர்ச்சியில் எதுவும் பேசாமல் ஒரு ரியாக்ஷனை மட்டும் கொடுப்பார் அதன் பிறகு....)


கொன்னுடசொன்னேன்....


அதை நான் செய்துட்டேன்...


பொய்..... (என்று சிவாஜிகோபமாக சொல்லுவார்)அந்த குழந்தை சாகவும் இல்லை.. உங்க வீட்டுலயும் வளர்க்கலை.. அதை எங்கேயோ கொண்டு போய் விட்டுடிங்க என்று சொல்ல..


அதுக்கு மேஜர்,


இல்லை அந்த குழந்தை செத்து 25 வருஷம் ஆயிடுச்சி என்பார்...


கோபமாக சிவாஜி எழுந்து...


இல்லை.. அவனுக்கு 25 வயசு ஆகுது... அவனை பத்திய முழு விபரமும் கண்டிப்பாக தெரிஞ்சாகனும்.. come on tell me the truth come on என்று சிவாஜி கத்த... அதுக்கு மேஜர் எழுந்து அவரும் கோபத்துடன் don’t be dare shout at me என்று மேஜர் கர்ஜிப்பார்... பெத்த புள்ளை கொல்ல சொன்ன உனக்கு என் எதிரில் நின்று பேச உனக்கு என்ன தைரியம் என்று ஆங்கிலத்தில் பொரிவார்...






பைத்தியக்கரத்தனமான உன் பேச்சுக்களை எல்லாம் கேட்டு சகிச்சிகிட்டு இருந்த பழைய நண்பன் ராஜு இல்ல.. உங்க முன் நிக்கறது...just doctor raju to you…. என்று சொல்லுவார்... இந்த இடத்துல தன் இயலாமையால எதையும் பேச முடியாம சிவாஜி கொடுக்கும் ரியாக்ஷன் இருக்கே... சான்சே இல்லை..


அதாவது உன் கிட்ட புள்ளை கொல்ல சொன்னா.. அதை விட்டு விட்டு அவனை அனாதை போல வளர்ந்து திருடனா ஆக்கி இருக்கே என்ற அடிப்படை கோபம்.. பாசக்கோபம்.. இவ்வளவு பணம் இருந்தும் தன் வித்து பிச்சைக்காரன் போல திருடுதே என்ற ஆதங்கம்.. அது எல்லாம் அந்த உடல் மொழியில் கண்களில் காண்பிப்பார்.. அதுக்கு மேஜரும் சளைக்காம ரியாக்ஷன் கொடுத்து இருப்பார்..




டாக்டர் நீங்க ரொம்ப நல்லவர்.. ஆனா பொய் நிறைய சொல்லறிங்க.. உண்மை என்னன்னு எனக்கு தெரியும்.. நான் சொன்ன படி அவனை அன்னைக்கே கொன்னு இருந்தா.. இன்னைக்கு அவன் பிச்சைக்காரனா, திருடனா நடுத்தெருவுல அலஞ்சிகிட்டு இருக்க மாட்டான்...
நோ... அப்படி இருக்கவே முடியாது... இதை நான் நம்பமாட்டேன்.. என்று மேஜர் சொல்லுவார்.




நான் சொல்லறேன்... என் வீட்டுக்குள்ளேய திருட வந்தான்.. துப்பாக்கியால சுட்டேன் டாக்டர் சுட்டேன்...




மகன் தெரிஞ்சுமா மனசு வந்து சுட்டிங்க...?




ப்ச்சு... முதல்ல திருடன்னுதான் நினைச்சேன்... அப்புறம்தான் அவன் என் பிள்ளையா இருப்பானோன்னு யோசிச்சேன்... என்று சிவாஜி சொல்ல.
.
உடனே புள்ளை பாசம் உண்டாகி என் கிட்ட ஓடி வந்துட்டிங்க இல்லை என்று மேஜர் சரியான நக்கல் விடுவார்..


அதுக்கு சிவாஜி.. என்னை கேலி செய்ய உரிமை உண்டு ராஜு.. ஐ மீன் டாக்டர் ராஜூ என்று சிவாஜி அவர் பங்குக்கு சொல்லுவார்.




மிஸ்டர் ஷங்கர்... கொஞ்சம் சிந்திச்சி பாருங்க... ஒன்பது மாதங்களா தாயின் வயிற்றில் சிறையில் இருந்து... பத்தாவது மாசம் வெளிய வந்த உடனே கொலை செய்ய சொன்ன அந்த ஈவு இரக்கம் இல்லாத தகப்பன் எப்படி இருப்பான்? என்று பார்க்கும் ஆசையிலோ அல்லது வெறியிலேயோ உங்க பிள்ளை திருடனா வராம... திருடன் மாதிரி வந்து இருக்கலாம் இல்லையா? அதாவது நான் சொல்லறபடி சாகமா.. நீங்க சொல்லறபடி ஒருவேளை உயிரோடு இருந்து இருந்தா? என்று மேஜர் சொல்ல....




சிவாஜி.. மேஜர் கிட்ட வந்து.. அழகான கற்பனை என்று சொல்லி விட்டு ஒருமைக்கு தாவி...ராஜூ நீ டாக்டருக்கு படிக்காம வக்கிலுக்கு படிச்சி இருந்தா நல்ல பேர் கிடைச்சி இருக்கும்டா என்று சொல்ல.,.. அதுவரை விரைப்பாய் இருந்த மேஜர் தன் நண்பன் தன்னை டா போட்டு பேசியதும் மகிழ்ச்சியில் இருவரும் மார்பில் செல்லமாக குத்திக்கொண்டு கட்டிப்பிடித்து கொள்ளும் காட்சி ஒன்று போதும்... சான்சே இல்லை.




அயம் சாரி.. சங்கர்.. என்று மேஜர் சொல்ல....




ராஜூ...




சொல்லு சங்கர்.... என்று சொல்லியதில் இருந்து தன் மகனுக்காக பிளான்க் செக் கிழித்து கொடுக்கும் வரை நடக்கும் காட்சிகிள் உணர்ச்சி குவியல்கள்...




கிளம்பும் நேரத்தில்... சித்தார் இசை கேட்க... கொல்ல சொன்ன பிள்ளையை இப்போதாவது எப்படி இருக்கின்றார் என்று நேரில் பார்க்க மனது துடிக்க.... ராஜூ , ராஜூ, ராஜூ, என்று பேசாமல் வீட்டை சுற்றி நடக்கும் அந்த காட்சியில் தகப்பன் பாசத்தை கண் முன்னால் நிறுத்தி இருப்பார் நடிகர் திலகம்.....




உன் மகனை பார்க்கனுமா என்று மேஜர் கேட்கும் போது என்னால் எப்படி அவனை பார்க்கமுடியும்..? அதுக்கான அருகதை எனக்கு இருக்கா? என்பது போல் ரியாக்ஷன் காட்டிவிட்டு அந்த இடத்தை விட்டு கிளம்புவார்...




இந்த இடத்தில் அவர் வெளியே போகாமல் கேமரா பிரேம் அவுட் ஆகிவிட்டோம் என்று நினைத்து சிவாஜி அவுட் பிரேமில் நிற்பார்.. ஆனால் அவர் ஷேடோ சுவற்றில் தெரியும்.. அதை அப்படியே கட் பண்ணி இருக்கலாம்...பட் மேஜர் அந்த பிளாக் செக்கை கையில் வைத்து ஒரு ரியாக்ஷன் கொடுப்பார்.... அதனால் அந்த ஷாட்டை ஷார்ப்பாக கட் பண்ணி இருக்கமாட்டார்கள்..


கீழே முழு தெய்வமகன் படமும் இருக்கின்றது.. நான் மேலே விவரித்த அந்த காட்சி...1.41.47 நிமிடத்தில் ஆரம்பித்து 1.48.39 நிமிடத்தில் முடியும்.... அதில் முடியும் நேரத்தில் சிவாஜி வீட்டை வெளியே போகாத ஷேடோவையும் பார்க்கலாம்....






அதுக்கு பிறகு பிள்ளை சிவாஜி பிளான்க் செக்கை எடுத்து போய் தன் தகப்பனை சந்திக்கும் அந்த காட்சியும் இதுவரை எந்த படத்திலும் பார்க்காத உணர்ச்சி குவியல் அது...அது கிழே உங்களுக்காக பார்த்து ரசியுங்கள்........




ஆஸ்காருக்கு சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்பட வரிசைக்கு அனுப்பி வைக்கப்பட்ட திரைப்படம் இது..
இயக்குனர் ஏசி திருலோக சந்தர்..வசனம் ஆருர்தாஸ், இசை விஸ்வநாதன் கேமரா தம்பு என்று தன் பங்குக்கு அத்தனை பேரும் மிரட்டி இருக்கின்றார்கள்...




மற்றபடி இந்த ஒரு சீன் போதும் இந்த படத்துக்கு... மற்றது எல்லாம் பெரிய விஷயம் இல்லை...
சிவாஜி என்ற அந்த மகா கலைஞனுக்கு இன்று பிறந்தநாள்...இது வைர விழா ஆண்டு... 1952 இல் பாரசக்தி திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்து 300க்கு மேற்ப்பட்ட படங்களில் நடித்து கலையை உயிர் மூச்சாக கொண்ட அந்த கலைஞனுக்கு இந்த பதிவும் அவருடைய மலர் பாதங்களுக்கு காணிக்கை... என் அம்மா ஒரு சிவாஜி வெறியை...


படக்குழுவினர் விபரம்.


Directed by A. C. Tirulokchandar
Written by Harur Daas
Starring
Sivaji Ganesan
Jayalalitha
Music by M. S. Viswanathan
Cinematography Thambu
Release date(s)
September 5, 1969
Country India
Language Tamil

RAGHAVENDRA
13th January 2016, 07:48 AM
https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/hphotos-xpa1/v/t1.0-9/1003600_1034377633279575_6129002381361768504_n.jpg ?oh=10e805a85b20e00e2c5ebd64197138e6&oe=57454795

இந்த பூஜை சமயத்தில் படத்தின் பெயர் உயிரோவியம் என வைத்திருந்தார்கள். பின்னர் அது மாற்றப்பட்டு தெய்வமகன் ஆனது.

Russellxor
13th January 2016, 07:18 PM
senthilvel*

தெய்வமகன்

அந்த அறையில் பெரிய மேஜை ஒன்று உள்ளது.அறை பார்ப்பதற்கு உயர்ந்த வடிவமைப்பில் அமைக்கப்பட்டுள்ளது போல்பார்ப்பதற்கு இருந்தாலும் எளிமையாகவே இருக்கிறது.மேஜையின் அருகில் இருக்கும் நாற்காலியில் அந்த மனிதர் அமர்ந்திருக்கிறார்.அவர் ஏதோ ஒரு புத்தகத்தை புரட்டிப்பார்த்துக்கொண்டு இருக்கிறார்.தலையை மெல்ல அசைத்து பக்கத்தை புரட்டுவதில் அவரின்அந்த செய்கையை நாம் பாக்கும்போது நம்மையும் அறியாமல் ஏதோ ஒரு ஈர்ப்பு சக்தியால்ர்ஈர்க்கப்படுவதை நம்மால் உணர முடிகிறது.அப்போது கதவின் கைப்பிடி திருப்பப்பட்டு,கதவை உள்ளே தள்ளிக்கொண்டுஒரு வர் உள்ளே நுழைகிறார்.மெதுவாக நடந்து வருகிறார்.நெஞ்சை நிமிர்த்தியும் ஒரு விதமாக உடம்பை அசைத்து அசைத்தும்நளினமா க நடந்து வரும் அந்த நடையைபார்க்கும் எவருக்கும் அந்த நடை பிடிக்கும். இப்போது மேஜையில் அமர்ந்திருக்கும் மனிதர் வரும் நபரை பாக்கிறார்.இப்போது இரண்டு பேரின் முகமும் நன்றாக தெரிகிறது.இருவரின்முகத்திலுமஒரு பக்கம் மட்டும் தீயினால் கருகியதைப் போன்ற தோற்றம் உள்ளது.இருவரும் பெருமளவு ஜாடையில் ஒத்துப் போகின்றனர்.முதலில்பார்த்த அந்த மனிதரை நன்றாக கவனிக்கமுடிகிறது கறுத்த கேசத்துடன் நரையும் கலந்த சிகை.சற்றே வித்தியாசமாய் புருவங்கள். அது அவரின் கம்பீரத்தை உயர்த்திக்காட்டும்படி உள்ளது.நன்றாக அமைந்த நாசி.கண்கள வசீகரம்.நேர்த்தியான உடை.அச்ச உணர்வைத் தரும் தோற்றம்.உள்ளே வந்த நபருக்குஅருமையான உடற்கட்டு.அவர் நடந்து வருவதில் ஒரு மென்மை தெரிந்தாலும்
நெஞ்சுரத்தில் பலம் மிக்கவர் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.இப்போது இருவரும் நேருக்கு நேர் பார்க்கின்றனர்.முதல் நபர் சற்று வயதுடையவர் என்பதால் அவரை பெரியவர் என்று வைத்துக்கொள்வோம்.அறைக்குள் வந்தவரை சின்னவர் என்று வைத்துக்கொள்வோம்.
இருவரும் ஒரே மாதிரி தோற்றம் கொண்டிருந்தாலும் இருவரின் பார்வைகளிலும்வித்தியாசத்தை நன்றாக உணர முடிகிறது.சின்னவரின் பார்வை ஏக்கத்தையும் ஏளனத்தையும் கலந்த து போல் உள்ளது.பெரியவரின் பார்வைஎப்படி உள்ளது என்றால் நல்ல குடியில் பிறந்த ஒருவர்தவறு செய்த பின்னால் அதை எண்ணி வருத்தப்படுபவதைப் போன்றும் அதனுடன் தர்மசங்கடமான நிலைமையில் வெளிப்படும் உணர்வுகளையும் கலந்த பார்வையை வெளிப்படுத்துகிறார்.இருவரின் பார்வைகளும் சந்தித்துக் கொள்ளும் போது அவர்களின் முக பாவனைகள்உலகில் இதுவரை பார்த்திராத ஒன்றாக இருக்கிறது.இருவருக்குள்ளும் ஏதோ தயக்கம் இருக்கிறதுஎன்பதை அவர்களின்முகங்கள் காட்டுகின்றன.தயக்கத்தை சற்று ஒதுக்கிவிட்டு*
சின்னவர் பேசுகிறார்:
"தேவையில்லையென்று நினைத்த தந்தையும்அவரை தேடி அலைந்த தந்தையும் ஒருவருக்கொருவர் சந்தித்துக்கொள்ளும் அற்புதமான காட்சி"

அப்படியானால் பெரியவர் தந்தை.சின்னவர் மகன்.இருவரும் சந்திக்கும் முதல் கட்டம்.அதனால்தான் இப்படிப்பட்ட உணர்வுகளை காட்டினரோ!
என்ன ஒரு செம்மையான வெளிப்பாடு.ஊடகமாக இருந்தாலும் நிஜத்தையும் மிஞ்சுகிறதே!.
இப்படி சின்னவர் கேட்டதும் பெரியவரின் மு க மாறுதல பிரமாதம்.பேச்சு வராமல் என்ன சொல்வது என்று தயங்கும்போது,
நாக்கு மேலண்ணத்தில் ஒட்டுவதும்,எச்சில் தொண்டையில் இறங்குவதும் போன்ற நடிப்பா? இல்லை நிஜமா?
அடுத்தது...
சின்னவர்:
ஏன் பேச மாட்டேன் என்கிறீர்கள்?எதைப் பேசுவது என்று உங்களுக்கு தயக்கம்?என்ன பேசுவதுஎன்று எனக்கு கலக்கம்?

மென்மையாக உச்சரிக்கப்பட்டாலும்*
என்னே ஒரு கணீரெண்ற குரல்.

சின்னவர்:என்னை யாரென்று உங்களுக்கு தெரியுமா?
பெரியவர்;(தெரியும் என்பது போல் ஆமோதிப்பு )
சின்னவர்:என் பேர் கண்ணன்.நீங்க கூப்பிட்டு நான் தெரிஞ்சுக்க வேண்டிய பெயரை நான் சொல்லி நீங்க தெரிஞ்சுக்க வேண்டிய நிலைமை.
பெரியவர்தவற்றை உணர்ந்தது போலவும்
பிராயச்சித்தம் கேட்பது போலவும் பாவனையை வெளிப்படுத்துகிறார்)
சின்னவர்; ((சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு)நான் உங்களை அப்பா என்று கூப்பிடட்டுமா?ஒரே ஒரு தடவை...

அதைக்கேட்கும்போது அந்தக் குரலில் உள்ள ஏக்கமும்,கெஞ்சலும் கல்மனதைக்கூட கரைத்து விடுமே.அடிவயிற்றில்ஏதோ ஒரு உணர்வு தாக்குவதை உணர்கிறேன்.பெரியவரின் விழிகள் விழிகள் விரிகின்றன.பின் சுருங்குகின்றன.என்ன ஒரு ஆச்சரியம்!விரியும்போது வராத கண்ணீர் கண் சுருக்கலில் அணை கட்டித் தேங்கி நிற்கின்றதே.உடலே சிலிர்த்து விட்டதே.
பெரியவர்::கண்ணா...(கட்டியணைக்க ஓடி வருகிறார்.பாசத்தை காட்டும் வேகம்
நெஞ்சுக்குழி அடைப்பது போல் இருக்கும்.)

அணை உடைந்து விட்டது.

கட்டிப்பிடித்தலில் பாசம் காட்டுகின்றது.இரண்டின் தழுவல்களும்
போட்டி போடுகின்றன.
சின்னவர் என்ன நினைத்தாரோ தீடீரென்று விலகுகிறார்.விலகியபின் காரணத்தை முகம் பிதிபலிக்கின்றது.இத்தனை நாள் இல்லாத உறவு இப்போது எங்கே வந்தது?தான்அதற்கு உரிமை காட்டுவது சரியா?காட்சிகள் உணர்வுகளால் தான் இங்கே விளக்கப்படுகின்றன.எழுது கோலால் வர்ணிக்க இயாலாது.

தான் வந்த காரணத்தை கூறுகிறார்சின்னவர்.பெரியவர் காசோலை கொடுத்ததை திருப்பிக் கொடுக்கவந்தாய் சொல்லப்படுகிறது.காசோலையை இரு விரல்களால்சுண்டும் அந்த ஸ்டைலில்
பணத்தை மதிக்காத குணம்வார்த்தைகளின்றி வெளிப்படுத்தப்படுகின்றது.எந்த நடிப்பும்
பக்கம் வர அச்சமே கொல்லும் அதிரடி ஸ்டைல் அது.

பெரியவர்:கண்ணா! அது உனக்காக.உன் எதிர்காலத்திற்காக.



சின்னவர்:கடந்தகாலம் எதிர்காலம் என்று எனக்கு எதுவும்கிடையாது.
இதை வாங்குவதற்குத்தான் எனக்கு என்ன உரிமை இருக்கு?கொடுப்பதற்குத்தான் உங்களுக்கு என்ன அருகதை இருக்கு?

துப்பாக்கியிலிருந்து வெளிப்படும் தோட்டாவின் வேகம் தோற்கும் என்பது போல் வெளிப்படும் வசன வீச்சு.
வீரியமான வார்த்தைகள்.
உச்சரிப்பு அதிர வைக்கிறது.

பெரியவர்:கொடுப்பதற்கு எனக்கு உரிமை இல்லாவிட்டாலும்,வாங்கிக் கொள்வதற்கு உனக்கு உரிமை இருக்கிறது.நீ என் பிள்ளை. நான் உன் அப்பா.
சின்னவர்:நீங்க என் அப்பாவா?
நான் உங்க பிள்ளையா?இதுவரைக்கும் நாம் அப்படியா உறவு கொண்டாடினோம்.
தொடையில் அடிக்கிறார்.அப்படி அடிப்பதிலேயே கோபம் தெரிந்து விடுகிறது.பீரோவில் இருக்கும் கண்ணாடியில் தன் முகம் பார்க்கிறார். இந்த விகாரம் தானா இவ்வளவுக்கும் காரணம்?என்று யோசிப்பது புரிகிறது.திரும்பி வருகிறார்.

.சின்னவர்:உங்கிட்ட சில கேள்விகள் கேட்கலாமா?
பெரியவர் சரி என்று தலையசைக்கிறார்.
சின்னவர்:வீட்டுக்கு முதல் குழந்தை பிறந்தால் அந்தக் குழந்தை மீது அளாவு கடந்த பாசம் பெத்தவங்க வெச்சுருப்பாங்கன்னு சொல்வாங்களே. அது உண்மையா?
பெரியவர்:ஆமா.
சுரத்தில்லாமல் வரும் பதில்.
சின்னவர்:இல்லை. பொய்.நான் பிறக்கும்போதும் நீங்கள் பணக்காரராகத்தானே இருந்தீர்கள்?
பெரியவர்:ம்ம்ம்.
சின்னவர்:நான் விகாரமாக பிறந்தேன் என்ற ஒரு காரணத்திற்காக தானே வேண்டாத பொருளை குப்பைத்தொட்டியில் தூக்கி எறியற மாதிரி என்னைஎரிஞ்சீங்க.நீங்க பொறந்த போது உங்க அப்பாவும் இதைப்போலத்தானே செய்தாரா?
பெரியவர்:இல்லை
சின்னவர்:ஏன்?
பெரியவர்:அவர் அனாதை.இந்த வேதனையை புரிஞ்சுக்க முடியாதவர்.
சின்னவர்:இல்லை. உங்கப்பா ஏழை.அதனாலதான் அவருக்கு இதயம் இரக்கம் பாசம் எல்லாம் இருந்துச்சு.எங்கப்பா பணக்காரர்.அவர்கிட்ட இரும்பு பீரோமட்டும் தான் இருக்கு.அதுக்குள்ள்பணத்தையும்,
கௌரவத்தையும் மட்டும்தான் பூட்டி வைச்சாரு.அதனாலதான் சொந்தப்பிள்ளையையே வேண்டாம்னு சொல்லிட்டாரு.

நெத்திஅடி.இதுக்கு மேலும் தாங்க முடியுமா?செய்த பாவம் வினையாகி கேள்வி கேட்கின்றது.என்ன பேசினாலும்" தவறாகவே படும்.பூட்டி வைச்சாரு எனும்போது அவர் செய்யும் சைகை என்ன ஆக்ரோஷமான வெளிப்பாடு.

பெரியவர்:கண்ணா...
(நெஞ்சே வெடித்து விடும் போல் இருக்கும்)

சின்னவர்:அப்பா.
என் விகாரத்துக்கு காரணமே நீங்கள்தான் என்பதை மறந்துட்டு என்னை வெறுத்து ஒதுக்கிட்டு அனாதை மாதிரி தவிக்க விட்டுட்டீங்களே!இதைவிட நான் பொறந்த அன்னிக்கே என்னை கொன்னுருக்கலாம் இல்ல.


பெரியவர்:அய்யோ!அதத்தாண்டாஅன்னிக்கு செய்யச்சொன்னேன்.அதத்தான் செய்யச் சொன்னேன்.அந்த முட்டாள் அதைச் செய்யல.நீ உயிரோட இருந்து இப்படி வந்து கேள்வி கேட்பேன்னு நினைச்சு நீ பிறந்தப்பவே உன்னை கொன்னுடச் சொன்னேன்.

பெரியரின் வாயிலிருந்துசடாரென்று: வெளிப்படுகின்றதுஇந்தப் பதில்.அவரின் இந்த வேகம் எப்படா இப்படி ஒரு கேள்வி வரும் என்று எதிர்பார்த்திருந்தது போல்
இருக்கிறது.

இடி போன்ற வார்த்தைகள்.ஆனாலும் அதைக்கெட்டு கலங்காத மனம்.இதைவிட அவமானங்களைசந்தித்திருந்தால் மட்டுமேஅதை தாங்குவதுசாத்தியம்.சின்னவரின் மனம் அது போல் இருந்திருக்க வேண்டும்.இல்லையென்றால் அந்த
பதிலை கேட்டபின்னும் அப்படியொரு அலட்சிய முகபாவத்தைகாட்ட முடியுமா?

பெ.ரியவர்:
நீ உயிரோட இருக்கிற விஷயம் சமீபத்தில் தான் எனக்கு தெரிஞ்சுது.இல்லேன்னா...
சின்னவர் :இல்லேன்னா,நீங்களேஒரு வழியா என்னைக் கொல்லுறதுக்கு முயற்சி செஞ்சிருப்பீங்க .இல்ல.
பெரியவர்:கண்ணா! நான் இப்போ குற்றவாளிக்கூண்டுல.கடந்தகாலம் சாட்சிக்கூண்டுல.நீ நீதிபதி ஸ்தானத்தில.என் குற்றங்களுக்கெல்லாம் நான் விளக்கம் சொல்கிறேன்.நீ என்ன தண்டனை வேணும்னாலும் கொடு.

சின்னவர்:மெல்லவும் முடியாம விழுங்கவும் முடியாம எவ்வளவு ஈஸியா சொல்லிடீங்க.ஏம்ப்பா இந்த விஷயமெல்லாம் அம்மாவுக்கு தெரியாதில்ல.

பெரியவர்இல்லை யென்பது போல் தலையசைப்பு)தெரியனும்னு நீ விரும்பறியா?
சின்னவர்:வேண்டாம்.அழகான எங்க அம்மாவுக்கு இப்படி ஒரு அவலட்சணமான மகன் இருப்பதே தெரிய வேண்டாம்.

பெரும் யுத்தத்தை பார்த்தால் கூட இந்தளவு சிலிர்ப்பை தர முடியாது.இந்த நடிப்பின்ஆழம் யாராலும் சொல்ல முடியாது.
படைத்தலுக்கு பிரம்மன்
காத்தலுக்கு விஷ்ணு
அழித்தலுக்கு சிவன்
என்றால்
நடிப்புக்கு இவரே.

*********************திரை**********************
எந்த நாட்டுக்கும் எந்த மொழிகளுக்கும்
எந்த மக்களுக்கும் இந்தப்படம் பெரும்
பிரமிப்பையே தரும்.உலக சினிமா உலக சினிமா என்கிறார்களே அந்த உலக சினிமாக்கள் எல்லாம் இந்த படத்திற்கு முன் எந்த மூலை?

YouTube Video:




அந்த அறையில் பெரிய மேஜை ஒன்று உள்ளது.அறை பார்ப்பதற்கு உயர்ந்த வடிவமைப்பில் அமைக்கப்பட்டுள்ளது போல்பார்ப்பதற்கு இருந்தாலும் எளிமையாகவே இருக்கிறது.மேஜையின் அருகில் இருக்கும் நாற்காலியில் அந்த மனிதர் அமர்ந்திருக்கிறார்.அவர் ஏதோ ஒரு புத்தகத்தை புரட்டிப்பார்த்துக்கொண்டு இருக்கிறார்.தலையை மெல்ல அசைத்து பக்கத்தை புரட்டுவதில் அவரின்அந்த செய்கையை நாம் பாக்கும்போது நம்மையும் அறியாமல் ஏதோ ஒரு ஈர்ப்பு சக்தியால்ர்ஈர்க்கப்படுவதை நம்மால் உணர முடிகிறது.அப்போது கதவின் கைப்பிடி திருப்பப்பட்டு,கதவை உள்ளே தள்ளிக்கொண்டுஒரு வர் உள்ளே நுழைகிறார்.மெதுவாக நடந்து வருகிறார்.நெஞ்சை நிமிர்த்தியும் ஒரு விதமாக உடம்பை அசைத்து அசைத்தும்நளினமா க நடந்து வரும் அந்த நடையைபார்க்கும் எவருக்கும் அந்த நடை பிடிக்கும். இப்போது மேஜையில் அமர்ந்திருக்கும் மனிதர் வரும் நபரை பாக்கிறார்.இப்போது இரண்டு பேரின் முகமும் நன்றாக தெரிகிறது.இருவரின்முகத்திலுமஒரு பக்கம் மட்டும் தீயினால் கருகியதைப் போன்ற தோற்றம் உள்ளது.இருவரும் பெருமளவு ஜாடையில் ஒத்துப் போகின்றனர்.முதலில்பார்த்த அந்த மனிதரை நன்றாக கவனிக்கமுடிகிறது கறுத்த கேசத்துடன் நரையும் கலந்த சிகை.சற்றே வித்தியாசமாய் புருவங்கள். அது அவரின் கம்பீரத்தை உயர்த்திக்காட்டும்படி உள்ளது.நன்றாக அமைந்த நாசி.கண்கள வசீகரம்.நேர்த்தியான உடை.அச்ச உணர்வைத் தரும் தோற்றம்.உள்ளே வந்த நபருக்குஅருமையான உடற்கட்டு.அவர் நடந்து வருவதில் ஒரு மென்மை தெரிந்தாலும்
நெஞ்சுரத்தில் பலம் மிக்கவர் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.இப்போது இருவரும் நேருக்கு நேர் பார்க்கின்றனர்.முதல் நபர் சற்று வயதுடையவர் என்பதால் அவரை பெரியவர் என்று வைத்துக்கொள்வோம்.அறைக்குள் வந்தவரை சின்னவர் என்று வைத்துக்கொள்வோம்.
இருவரும் ஒரே மாதிரி தோற்றம் கொண்டிருந்தாலும் இருவரின் பார்வைகளிலும்வித்தியாசத்தை நன்றாக உணர முடிகிறது.சின்னவரின் பார்வை ஏக்கத்தையும் ஏளனத்தையும் கலந்த து போல் உள்ளது.பெரியவரின் பார்வைஎப்படி உள்ளது என்றால் நல்ல குடியில் பிறந்த ஒருவர்தவறு செய்த பின்னால் அதை எண்ணி வருத்தப்படுபவதைப் போன்றும் அதனுடன் தர்மசங்கடமான நிலைமையில் வெளிப்படும் உணர்வுகளையும் கலந்த பார்வையை வெளிப்படுத்துகிறார்.இருவரின் பார்வைகளும் சந்தித்துக் கொள்ளும் போது அவர்களின் முக பாவனைகள்உலகில் இதுவரை பார்த்திராத ஒன்றாக இருக்கிறது.இருவருக்குள்ளும் ஏதோ தயக்கம் இருக்கிறதுஎன்பதை அவர்களின்முகங்கள் காட்டுகின்றன.தயக்கத்தை சற்று ஒதுக்கிவிட்டு*
சின்னவர் பேசுகிறார்:
"தேவையில்லையென்று நினைத்த தந்தையும்அவரை தேடி அலைந்த தந்தையும் ஒருவருக்கொருவர் சந்தித்துக்கொள்ளும் அற்புதமான காட்சி"

அப்படியானால் பெரியவர் தந்தை.சின்னவர் மகன்.இருவரும் சந்திக்கும் முதல் கட்டம்.அதனால்தான் இப்படிப்பட்ட உணர்வுகளை காட்டினரோ!
என்ன ஒரு செம்மையான வெளிப்பாடு.ஊடகமாக இருந்தாலும் நிஜத்தையும் மிஞ்சுகிறதே!.
இப்படி சின்னவர் கேட்டதும் பெரியவரின் மு க மாறுதல பிரமாதம்.பேச்சு வராமல் என்ன சொல்வது என்று தயங்கும்போது,
நாக்கு மேலண்ணத்தில் ஒட்டுவதும்,எச்சில் தொண்டையில் இறங்குவதும் போன்ற நடிப்பா? இல்லை நிஜமா?
அடுத்தது...
சின்னவர்:
ஏன் பேச மாட்டேன் என்கிறீர்கள்?எதைப் பேசுவது என்று உங்களுக்கு தயக்கம்?என்ன பேசுவதுஎன்று எனக்கு கலக்கம்?

மென்மையாக உச்சரிக்கப்பட்டாலும்*
என்னே ஒரு கணீரெண்ற குரல்.

சின்னவர்:என்னை யாரென்று உங்களுக்கு தெரியுமா?
பெரியவர்;(தெரியும் என்பது போல் ஆமோதிப்பு )
சின்னவர்:என் பேர் கண்ணன்.நீங்க கூப்பிட்டு நான் தெரிஞ்சுக்க வேண்டிய பெயரை நான் சொல்லி நீங்க தெரிஞ்சுக்க வேண்டிய நிலைமை.
பெரியவர்தவற்றை உணர்ந்தது போலவும்
பிராயச்சித்தம் கேட்பது போலவும் பாவனையை வெளிப்படுத்துகிறார்)
சின்னவர்; ((சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு)நான் உங்களை அப்பா என்று கூப்பிடட்டுமா?ஒரே ஒரு தடவை...

அதைக்கேட்கும்போது அந்தக் குரலில் உள்ள ஏக்கமும்,கெஞ்சலும் கல்மனதைக்கூட கரைத்து விடுமே.அடிவயிற்றில்ஏதோ ஒரு உணர்வு தாக்குவதை உணர்கிறேன்.பெரியவரின் விழிகள் விழிகள் விரிகின்றன.பின் சுருங்குகின்றன.என்ன ஒரு ஆச்சரியம்!விரியும்போது வராத கண்ணீர் கண் சுருக்கலில் அணை கட்டித் தேங்கி நிற்கின்றதே.உடலே சிலிர்த்து விட்டதே.
பெரியவர்::கண்ணா...(கட்டியணைக்க ஓடி வருகிறார்.பாசத்தை காட்டும் வேகம்
நெஞ்சுக்குழி அடைப்பது போல் இருக்கும்.)

அணை உடைந்து விட்டது.

கட்டிப்பிடித்தலில் பாசம் காட்டுகின்றது.இரண்டின் தழுவல்களும்
போட்டி போடுகின்றன.
சின்னவர் என்ன நினைத்தாரோ தீடீரென்று விலகுகிறார்.விலகியபின் காரணத்தை முகம் பிதிபலிக்கின்றது.இத்தனை நாள் இல்லாத உறவு இப்போது எங்கே வந்தது?தான்அதற்கு உரிமை காட்டுவது சரியா?காட்சிகள் உணர்வுகளால் தான் இங்கே விளக்கப்படுகின்றன.எழுது கோலால் வர்ணிக்க இயாலாது.

தான் வந்த காரணத்தை கூறுகிறார்சின்னவர்.பெரியவர் காசோலை கொடுத்ததை திருப்பிக் கொடுக்கவந்தாய் சொல்லப்படுகிறது.காசோலையை இரு விரல்களால்சுண்டும் அந்த ஸ்டைலில்
பணத்தை மதிக்காத குணம்வார்த்தைகளின்றி வெளிப்படுத்தப்படுகின்றது.எந்த நடிப்பும்
பக்கம் வர அச்சமே கொல்லும் அதிரடி ஸ்டைல் அது.

பெரியவர்:கண்ணா! அது உனக்காக.உன் எதிர்காலத்திற்காக.



சின்னவர்:கடந்தகாலம் எதிர்காலம் என்று எனக்கு எதுவும்கிடையாது.
இதை வாங்குவதற்குத்தான் எனக்கு என்ன உரிமை இருக்கு?கொடுப்பதற்குத்தான் உங்களுக்கு என்ன அருகதை இருக்கு?

துப்பாக்கியிலிருந்து வெளிப்படும் தோட்டாவின் வேகம் தோற்கும் என்பது போல் வெளிப்படும் வசன வீச்சு.
வீரியமான வார்த்தைகள்.
உச்சரிப்பு அதிர வைக்கிறது.

பெரியவர்:கொடுப்பதற்கு எனக்கு உரிமை இல்லாவிட்டாலும்,வாங்கிக் கொள்வதற்கு உனக்கு உரிமை இருக்கிறது.நீ என் பிள்ளை. நான் உன் அப்பா.
சின்னவர்:நீங்க என் அப்பாவா?
நான் உங்க பிள்ளையா?இதுவரைக்கும் நாம் அப்படியா உறவு கொண்டாடினோம்.
தொடையில் அடிக்கிறார்.அப்படி அடிப்பதிலேயே கோபம் தெரிந்து விடுகிறது.பீரோவில் இருக்கும் கண்ணாடியில் தன் முகம் பார்க்கிறார். இந்த விகாரம் தானா இவ்வளவுக்கும் காரணம்?என்று யோசிப்பது புரிகிறது.திரும்பி வருகிறார்.

.சின்னவர்:உங்கிட்ட சில கேள்விகள் கேட்கலாமா?
பெரியவர் சரி என்று தலையசைக்கிறார்.
சின்னவர்:வீட்டுக்கு முதல் குழந்தை பிறந்தால் அந்தக் குழந்தை மீது அளாவு கடந்த பாசம் பெத்தவங்க வெச்சுருப்பாங்கன்னு சொல்வாங்களே. அது உண்மையா?
பெரியவர்:ஆமா.
சுரத்தில்லாமல் வரும் பதில்.
சின்னவர்:இல்லை. பொய்.நான் பிறக்கும்போதும் நீங்கள் பணக்காரராகத்தானே இருந்தீர்கள்?
பெரியவர்:ம்ம்ம்.
சின்னவர்:நான் விகாரமாக பிறந்தேன் என்ற ஒரு காரணத்திற்காக தானே வேண்டாத பொருளை குப்பைத்தொட்டியில் தூக்கி எறியற மாதிரி என்னைஎரிஞ்சீங்க.நீங்க பொறந்த போது உங்க அப்பாவும் இதைப்போலத்தானே செய்தாரா?
பெரியவர்:இல்லை
சின்னவர்:ஏன்?
பெரியவர்:அவர் அனாதை.இந்த வேதனையை புரிஞ்சுக்க முடியாதவர்.
சின்னவர்:இல்லை. உங்கப்பா ஏழை.அதனாலதான் அவருக்கு இதயம் இரக்கம் பாசம் எல்லாம் இருந்துச்சு.எங்கப்பா பணக்காரர்.அவர்கிட்ட இரும்பு பீரோமட்டும் தான் இருக்கு.அதுக்குள்ள்பணத்தையும்,
கௌரவத்தையும் மட்டும்தான் பூட்டி வைச்சாரு.அதனாலதான் சொந்தப்பிள்ளையையே வேண்டாம்னு சொல்லிட்டாரு.

நெத்திஅடி.இதுக்கு மேலும் தாங்க முடியுமா?செய்த பாவம் வினையாகி கேள்வி கேட்கின்றது.என்ன பேசினாலும்" தவறாகவே படும்.பூட்டி வைச்சாரு எனும்போது அவர் செய்யும் சைகை என்ன ஆக்ரோஷமான வெளிப்பாடு.

பெரியவர்:கண்ணா...
(நெஞ்சே வெடித்து விடும் போல் இருக்கும்)

சின்னவர்:அப்பா.
என் விகாரத்துக்கு காரணமே நீங்கள்தான் என்பதை மறந்துட்டு என்னை வெறுத்து ஒதுக்கிட்டு அனாதை மாதிரி தவிக்க விட்டுட்டீங்களே!இதைவிட நான் பொறந்த அன்னிக்கே என்னை கொன்னுருக்கலாம் இல்ல.


பெரியவர்:அய்யோ!அதத்தாண்டாஅன்னிக்கு செய்யச்சொன்னேன்.அதத்தான் செய்யச் சொன்னேன்.அந்த முட்டாள் அதைச் செய்யல.நீ உயிரோட இருந்து இப்படி வந்து கேள்வி கேட்பேன்னு நினைச்சு நீ பிறந்தப்பவே உன்னை கொன்னுடச் சொன்னேன்.

பெரியரின் வாயிலிருந்துசடாரென்று: வெளிப்படுகின்றதுஇந்தப் பதில்.அவரின் இந்த வேகம் எப்படா இப்படி ஒரு கேள்வி வரும் என்று எதிர்பார்த்திருந்தது போல்
இருக்கிறது.

இடி போன்ற வார்த்தைகள்.ஆனாலும் அதைக்கெட்டு கலங்காத மனம்.இதைவிட அவமானங்களைசந்தித்திருந்தால் மட்டுமேஅதை தாங்குவதுசாத்தியம்.சின்னவரின் மனம் அது போல் இருந்திருக்க வேண்டும்.இல்லையென்றால் அந்த
பதிலை கேட்டபின்னும் அப்படியொரு அலட்சிய முகபாவத்தைகாட்ட முடியுமா?

பெ.ரியவர்:
நீ உயிரோட இருக்கிற விஷயம் சமீபத்தில் தான் எனக்கு தெரிஞ்சுது.இல்லேன்னா...
சின்னவர் :இல்லேன்னா,நீங்களேஒரு வழியா என்னைக் கொல்லுறதுக்கு முயற்சி செஞ்சிருப்பீங்க .இல்ல.
பெரியவர்:கண்ணா! நான் இப்போ குற்றவாளிக்கூண்டுல.கடந்தகாலம் சாட்சிக்கூண்டுல.நீ நீதிபதி ஸ்தானத்தில.என் குற்றங்களுக்கெல்லாம் நான் விளக்கம் சொல்கிறேன்.நீ என்ன தண்டனை வேணும்னாலும் கொடு.

சின்னவர்:மெல்லவும் முடியாம விழுங்கவும் முடியாம எவ்வளவு ஈஸியா சொல்லிடீங்க.ஏம்ப்பா இந்த விஷயமெல்லாம் அம்மாவுக்கு தெரியாதில்ல.

பெரியவர்இல்லை யென்பது போல் தலையசைப்பு)தெரியனும்னு நீ விரும்பறியா?
சின்னவர்:வேண்டாம்.அழகான எங்க அம்மாவுக்கு இப்படி ஒரு அவலட்சணமான மகன் இருப்பதே தெரிய வேண்டாம்.

பெரும் யுத்தத்தை பார்த்தால் கூட இந்தளவு சிலிர்ப்பை தர முடியாது.இந்த நடிப்பின்ஆழம் யாராலும் சொல்ல முடியாது.
படைத்தலுக்கு பிரம்மன்
காத்தலுக்கு விஷ்ணு
அழித்தலுக்கு சிவன்
என்றால்
நடிப்புக்கு இவரே.

*********************திரை**********************
எந்த நாட்டுக்கும் எந்த மொழிகளுக்கும்
எந்த மக்களுக்கும் இந்தப்படம் பெரும்
பிரமிப்பையே தரும்.உலக சினிமா உலக சினிமா என்கிறார்களே அந்த உலக சினிமாக்கள் எல்லாம் இந்த படத்திற்கு முன் எந்த மூலை?

YouTube Video:

RAGHAVENDRA
20th January 2016, 07:26 PM
Sivaji Ganesan Filmography Series

133.Thirudan திருடன்

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTFILMOGRAPHY/Thirudan04fw_zps5gb8tiyr.jpg


தணிக்கை - 09.10.1969
வெளியீடு - 10.10.1969
தயாரிப்பு - சுஜாதா சினி ஆர்ட்ஸ்

நடிக நடிகையர்-
நடிகர் திலகம் சிவாஜி கணேசன், கே.பாலாஜி கே.ஆர்.விஜயா, நாகேஷ், விஜயலலிதா, சுந்தர்ராஜன், எஸ்.ஏ.கண்ணன், சி.கே.சரஸ்வதி, எஸ்.வி.ராமதாஸ், சுந்தரிபாய், ஆனந்த மோகன், புஷ்பமாலா, டைப்பிஸ்ட் கோபு, ராமகிருஷ்ணன், பேபி ராணி, மற்றும் பலர்.

இசை - மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்
பின்னணி பாடியவர்கள் - டி.எம்.சௌந்தர்ராஜன், பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி
பாடல்கள் - கவிஞர் கண்ணதாசன்
மூலக்கதை - ஜகபதி பிக்சர்ஸ்
வசனம் - ஏ.எல்.நாராயணன்
வசனம் ஒலிப்பதிவு - கே.ஆர்.ராமசாமி-பிரசாத், ட்டி.டி.கிருஷ்ணமூர்த்தி - சாரதா
பிராசசிங் - விஜயா லாபரட்டரி எஸ்.ரங்கநாதன்
ஒப்பனை - திருநாவுக்கரசு, ரங்கசாமி, ராமசாமி, வெங்கடேஸ்வர ராவ்
ஆடை அலங்காரம் - நஹீம், ராமகிருஷ்ணன்
விளம்பர டிசைன்கள் - எஸ்.ஏ.நாயர்
விளம்பரம் - ஏரீஸ் அட்வர்டைசிங் பீரோ
பொதுநல தொடர்பு - பிலிம் நியூஸ் ஆனந்தன்
ஒளிப்பதிவு டைரக்ஷன் - மஸ்தான் - விஸ்வநாத் ராய்
கலை - ஆர்.பி.எஸ். மணி
எடிட்டிங் - பி.கந்தசாமி
ஸ்டில்ஸ் - சாரதி
உதவி டைரக்ஷன் - ராஜேந்திரன், புகழேந்தி, ட்டி.எஸ்.பாலன்
செட் ப்ராபர்டீஸ் - சினி கிராஃப்ட்ஸ்
அவுட்டோர் யூனிட் - பிரசாத் புரொடக்ஷன்ஸ்
சண்டைப்பயிற்சி - திருவாரூர் தாஸ்
நடனப் பயிற்சி - சோப்ரா

ஸ்டூடியோ - பிரசாத், சாரதா
ப்ரொடக்ஷன் நிர்வாகம் - ஆர்.கிருஷ்ணமூர்த்தி
டைரக்ஷன் - ஏ.சி. திருலோக்சந்தர்

RAGHAVENDRA
20th January 2016, 07:28 PM
திருடன் திரைக்காவியம் நடைபெறும் போது பொம்மை மாத இதழில் வெளி வந்த விளம்பரத்தின் நிழற்படம்
From www.nadigarthilagam.com
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Old%20Ads/thirudanad01fw.jpg

RAGHAVENDRA
20th January 2016, 07:31 PM
திருடன் திரைப்பட விளம்பர நிழற்படம் - ஆவணத்திலகம் பம்மலாரின் பொக்கிஷத்திலிருந்து..


முதல் வெளியீட்டு விளம்பரம் : தினமணி : 12.10.1969

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC4912-1.jpg

குறிப்பு:
1. தென்னகமெங்கும் 10.10.1969 வெள்ளியன்று வெளியான இக்காவியம், சென்னையில் மட்டும் ஒரு வாரம் கழித்து 17.10.1969 வெள்ளியன்று வெளியானது.

2. தமிழ்நாட்டில் பல திரையரங்குகளில் 50 நாட்கள் வெற்றிகரமாக ஓடிய "திருடன்", அயல்நாடான இலங்கையின் கொழும்பு நகரின் 'சென்ட்ரல்' திரையரங்கில் 100 நாட்கள் ஓடி பெரும் வெற்றி கண்டது. இந்த விளம்பரங்கள் கிடைத்ததும் இங்கே பதிவாகும்.

RAGHAVENDRA
20th January 2016, 07:34 PM
திருடன் திரைப்படம்

பாடல்களின் விவரங்கள்

1. பழநியப்பன் பழநியம்மாவா - டி.எம்.சௌந்தர்ராஜன்
2. கோட்டை மதில் மேலே - டி.எம்.சௌந்தர்ராஜன், எல்.ஆர்.ஈஸ்வரி
3. என் ஆசை என்னோடு - பி.சுசீலா
4. நினைத்தபடி கிடைத்ததடி - எல்.ஆர்.ஈஸ்வரி

காணொளிகள்

நடிகர் திலகத்தின் அட்டகாசமான சண்டைக்காட்சி...
உபயம் நெய்வேலி வாசு சார்

https://www.youtube.com/watch?v=IL464qpBbRA

கோட்டை மதில் மேலே

https://www.youtube.com/watch?v=-LZhTajOfrg

பழனியப்பன் பழனியம்மாவா

https://www.youtube.com/watch?v=m9wlwwfNZgw

நினைத்தபடி கிடைத்ததடி


https://www.youtube.com/watch?time_continue=4&v=LPK9D4lYHaU

RAGHAVENDRA
20th January 2016, 07:36 PM
திருடன் திரைப்படத்தின் அமர்க்களமான நிழற்படங்கள் - உபயம் நெய்வேலி வாசு சார்

http://padamhosting.com/out.php/i68373_vlcsnap395763.png

http://padamhosting.com/out.php/i68372_vlcsnap419874.png

மேலும் நிழற்படங்களுக்கு

http://www.mayyam.com/talk/showthread.php?8593-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-9&p=749535&viewfull=1#post749535

RAGHAVENDRA
20th January 2016, 07:40 PM
திருடன் திரைப்படத்தைப் பற்றி முரளி சாரின் அற்புதமான பதிவுகள் ...
http://www.mayyam.com/talk/showthread.php?7207-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-5&p=469669&viewfull=1#post469669
24th January 2010, 01:05 AM



திருடன் -Part I

தயாரிப்பு: சுஜாதா சினி ஆர்ட்ஸ்

இயக்கம்: A.C. திருலோகச்சந்தர்

வெளியான நாள்: 10.10.1969

கதை ஆரம்பிப்பதே சிறையிலிருந்துதான். தண்டனை கைதி ராஜு சிறையிலிருந்து விடுதலையாகிறான். அவனை கைது செய்து சிறையில் அடைத்த இன்ஸ்பெக்டர் ரகுவும் அங்கே இருக்கிறார். அவர் கண்ணோட்டத்தில் எந்த குற்றவாளியும் திருந்துவதற்கு வாய்ப்பு இல்லை. மீண்டும் மீண்டும் குற்றங்களை செய்வார்கள் என்பதை ஆணித்தரமாக நம்புகிறார். அவரது கருத்தை மறுக்கும் ஜெயிலரோடும் ராஜுவோடும் வாதத்தில் ஈடுபடுகிறார். அவரோடு சவால் விட்டு வாழ்ந்து காட்டுவதாக சொல்லி விட்டு ராஜு செல்கிறான். வெளியே அவனை வரவேற்க முன்பு அவன் சேர்ந்து இருந்த கொள்ளை கூட்டம் காத்திருக்கிறது.

அவர்களோடு செல்ல மறுக்கும் ராஜுவை வற்புறுத்தி அழைத்து செல்கிறார்கள். அந்த கூட்ட தலைவன் ஜெகன்னாத், ராஜுவை மீண்டும் தங்கள் பணிகளுக்கு அழைக்க ராஜு மறுத்து விட்டு வெளியேறுகிறான். நீ மீண்டும் இங்கு வருவாய் என சவால் விடும் ஜெகன்னாத்திடம் வரவே மாட்டேன் என சொல்லி விட்டு ராஜு வெளியேறுகிறான்.

இந்நிலையில் ஒரு நாள் ஒரு பெட்ரோல் பங்கில் நின்று போன ஒரு காரை ரிப்பேர் செய்து கொடுக்கும் ராஜுவை அந்த முதலாளிக்கு பிடித்துப்போக அவனக்கு டிரைவிங் தெரியும் என்று தெரிந்து தனது லாரியின் டிரைவராக வேலை கொடுக்கிறார். லாரியில் லோட் ஏற்றி வரும்போது உள்ளே ஒரு பையன் ஒளிந்துக் கொண்டிருப்பதை கண்டுப் பிடிக்கிறார்கள். சிறிது நேரத்தில் அது பையன் அல்ல, ஆண் வேடம் அணிந்த பெண் என தெரிகிறது. அந்த பெண்ணை காணவில்லை என பத்திரிக்கையில் விளம்பரத்தை பார்க்கும் ராஜு அவளை அவள் வீட்டிற்கு கூட்டி செல்ல அங்கே தன் பழைய கூட்டத்தின் ஆள்தான் இந்த பெண்ணின் மாமன் என தெரிந்துக் கொள்ளும் ராஜு அவளை ஒப்படைக்காமல் தன்னுடனே அழைத்து வருகிறான். அந்த பெண் ராதா அவனை திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவிக்க, ராஜு மறுக்கிறான். தான் யார் என்பதும் தன்னுடைய கடந்த காலம் பற்றி தெரிந்தால் தன்னை வெறுத்து விடுவாய் எனவும் சொல்கிறான். அவள் வற்புறுத்தவே தன் கதையை சொல்ல துவங்குகிறான்.

சின்ன வயது ராஜு. தந்தை இல்லாத அவனை வளர்க்க தாய் பெரிதும் துன்பப்படுகிறாள். ஒரு நாள் அவளின் உடல் நிலை மோசமாகி தெருவில் விழுந்து கிடக்க போவோர் வருவோரிடமெல்லாம் உதவி கேட்கும் ராஜு. ஆனால் யாரும் அவனை சட்டை செய்யவில்லை. தாய் இறந்து போகிறாள்.

பசியால் வாடும் ராஜுவிற்கு சாப்பிட ஒன்றும் கிடைக்கவில்லை. அவன் எல்லா இடங்களிலும் விரட்டப்படுகிறான். அந்த நேரம் ஒரு கோரமான உருவத்தை உடைய ஒருவன் ராஜுவை நெருங்க ராஜு பயந்து ஓடுகிறான். ஆனால் அந்த குரூபியோ ராஜுவிற்கு சாப்பாடு வாங்கி தருகிறான். அதற்கு பிரதியுபகாரமாக இரவுகளில் வீடுகளில் புகுந்து தாழிட்டிருக்கும் கதவுகளை திறந்து கொடுத்து குரூபிக்கு கொள்ளையடிக்க உதவி செய்யும் ராஜு இதையே தொழிலாக செய்ய தொடங்குகிறான். வளர்ந்து வாலிபனாகும் போது ஜெகன்னாத்தின் கூட்டத்தில் ராஜுவிற்கு நம்பர் 1 ஸ்தானம். ஜெகநாத் சொல்லும் எந்த வேலையும் "டன்" என்று முடிக்கும் ராஜுவிடம் ஒரு சமயம் ஒரு குழந்தையை கடத்தும் வேலையை ஜெகநாத் ஒப்படைக்க ராஜு தயங்குகிறான். தன் தாயும் தன் சிறு வயது அனுபவமும் அதற்கு காரணம். ஆனால் ஜெகநாத் வற்புறுத்தி அவனை அனுப்பி வைக்கிறான்.

குழந்தையை கடத்தும் போது தாய் பார்த்து விட்டு சத்தம் போட ராஜு குழந்தையை மீண்டும் தாயிடம் கொண்டு சேர்க்கும் போது அந்த தாய் இறந்து போகிறாள். அதற்குள் வேலைக்காரர்கள் போன் செய்ய போலீஸ் வந்து விடுகிறது. ராஜு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறான். அந்த தண்டனை காலம் முடிந்து சிறையில் இருந்து வரும் இடத்தில்தான் கதை ஆரம்பித்திருந்தது. இதை கேட்டவுடன் ராதாவிற்கு ராஜுவை கல்யாணம் செய்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் வலுப்பெறுகிறது. அவளின் அன்பு தொல்லைக்கு ராஜுவும் இறுதியில் அடி பணிகிறான். திருமணம் நடக்கிறது. ஒரு பெண் குழந்தையும் பிறக்கிறது.

இப்போது ராஜு சொந்தமாக ஒரு லாரி ஓட்ட வேண்டும் என நினைக்கிறான். தனக்கு தெரிந்த ஒரு முதலாளியிடம் கடன் வாங்கி லாரி வாங்குகிறான். இன்ஸ்பெக்டர் ரகு அவனை இப்போதும் சந்தேக கண்ணோட்டத்திலேயே பின் தொடர்கிறார். இதற்கிடையில் ராஜு இல்லாமல் ஜெகநாத்திற்கு எந்த வேலையும் சரியாக நடப்பதில்லை. எப்படியாவது மீண்டும் ராஜுவை தன் வழிக்குகொண்டு வர முயற்சிக்கிறான். ஒரு பார்ட்டியில் குடும்பத்துடன் ராஜு கலந்து கொள்ள அங்கே ஒரு ஹான்ட் bag-ஐ தன் ஆட்கள் மூலமாக திருடி விட்டு பழியை ராஜு மேல் போட முயற்சிக்கிறான். ராஜு வீட்டிற்கு செல்லும் இன்ஸ்பெக்டர் அவனை லேசாக விசாரிக்க ராஜு கோபப்படுகிறான். ராஜுவை காண வீட்டிற்கே நேரில் வரும் ஜெகனாத்தை ராஜு திருப்பி அனுப்பி விடுகிறான். எப்படியாவது ராஜுவை தன் இடத்திற்கு வரவழைக்க ஜெகநாத் திட்டமிடுகிறான்.

ராஜு கடன் வாங்கியிருக்கும் முதலாளியிடம் செல்லும் ஜெகநாத் அவரை மிரட்டி ராஜுவிடம் கடனை திருப்பி கேட்க சொல்கிறான். ராஜுவின் வீட்டிற்கு செல்லும் முதலாளி கடனை திருப்பிக் கேட்க அங்கே ஏற்படும் வாக்குவாதத்தில் ராஜுவின் பழைய வாழ்க்கையைப் பற்றி முதலாளி குத்திக் காட்ட கோபமுறும் ராஜு அவர் கழுத்தைப் பிடிக்க அந்நேரம் அங்கு வரும் இன்ஸ்பெக்டர் ராஜுவை தடுக்கிறார். கடனை திருப்பிக் கட்டுவதற்கு சிறிது கால அவகாசம் வாங்கிக் கொடுக்கிறார்.

இதை மறைந்திருந்துப் பார்க்கும் ஜெகநாத் தன் ஆளை விட்டு லாரியில் மாட்டியிருக்கும் ராஜுவின் கோட்டை எடுத்து வரச் செய்கிறான். அந்த கோட்டை தன் அடியாளுக்கு அணிவித்து முதலாளி வீட்டிற்கு செல்ல சொல்கிறான். அந்த அடியாளால் முதலாளி கொல்லப்படுகிறார். காப்பாற்ற செல்லும் வேலைக்காரன் கையில் கோட் மட்டுமே சிக்குகிறது.

இந்த சம்பவம் நடக்கும் போது வெளியூர் சென்றிருக்கும் ராஜுவை சந்தேகத்தின் பேரில் போலீஸ் அழைத்து விசாரிக்கிறது. கொலையாளியை நேரில் கண்ட வேலைக்காரனை வைத்து அடையாள அணிவகுப்பு நடத்தும் போலீஸ் இன்ஸ்பெக்டர் அதில் ராஜுவையும் நிறுத்துகிறார். ஆனால் வேலைக்காரன் கொலையாளி ராஜு அல்ல என்று சொல்லிவிட ராஜு விடுவிக்கப்படுகிறான். தங்கள் நினைத்தது நடக்காததால் கோபமுறும் ஜெகநாத், ராஜுவின் லாரியை தீ வைத்துக் கொளுத்தி விடுகிறான். என்ன செய்வது என்று தெரியாமல் திகைக்கும் ராஜு மீண்டும் டிரைவர் வேலைக்கு செல்கிறான்.

ஆனால் வெளியே வாழ்க்கை அவ்வளவு எளிதாக இல்லை. வேலை கிடைப்பது குதிரை கொம்பாக இருக்கிறது. கிடைக்கும் ஒரு சில வேலைகளும் ராஜுவின் பழைய கதை தெரிந்ததும் போய் விடுகிறது. மனம் வெறுத்துப்போகும் ராஜு நல்லவனாக இருந்து எந்த உபயோகமும் இல்லை ஆகவே மீண்டும் தன் பழைய தொழிலுக்கே செல்லப் போவதாக உணர்ச்சிவசப்பட உடல் நலிவுறுகிறான். வருமானத்திற்காக ராஜு மனைவி ராதா ஹோட்டலில் வேலைக்கு செல்கிறாள். அவள் இல்லாத நேரம் வீட்டிற்கு வரும் ஜெகநாத் அவன் மனைவியை ஹோட்டலில் ஆட விட்டு ராஜு உட்கார்ந்து சாப்பிடுவதாக கிண்டல் செய்ய இந்த விஷயம் இப்போதுதான் தெரிய வரும் ராஜு கோபத்தின் உச்சிக்கு சென்று விடுகிறான். ராதாவை ஹோட்டலிருந்து இழுத்து வந்து வீட்டில் விட்டு விட்டு, நேரே இன்ஸ்பெக்டரிடம் செல்லும் ராஜு, தான் மீண்டும் தன் பழைய தொழிலுக்கே செல்லப் போவதாகவும் அதற்கு காரணம் இன்ஸ்பெக்டரும் தன் பழைய கூட்டாளிகளும்தான் என குற்றம் சாட்டுகிறான். இன்ஸ்பெக்டர் கடமைக்காக தன் சொந்த மகனை பறிக்கொடுத்த தன்னுடைய பழைய கதையைக் கூறி தான் ஏன் இப்படி ஆட்களை வெறுக்கும்படி ஆனேன் என்பதை சொல்கிறார். பழைய கூட்டாளிகளை பிடிப்பதற்கு ராஜு உதவ வேண்டும் என சொல்கிறார்.

அவர் சொல்படியே மீண்டும் ஜெகநாத்தின் கூட்டத்தில் சேரும் ராஜுவிடம் ஒரு வங்கி கொள்ளையை நடத்தும்படி ஜெகநாத் சொல்ல அதை இன்ஸ்பெக்டரிடம் ராஜு போனில் சொல்வதை கேட்டு விடும் ஜெகநாத் மறுநாள் திட்டத்தையே மாற்றி விடுகிறான். ரயிலில் வரும் ராணுவ அதிகாரியிடம் உள்ள ரகசிய ஆவணத்தை திருட வேண்டும் என்கிறான். ஆவணத்தை திருடி விட்டு அவர்களிடம் தப்பித்து செல்லும் ராஜுவை ஜெகநாத் கும்பல் ஒரு பக்கம் துரத்த, தன்னை ஏமாற்றிவிட்டான் என்று இன்ஸ்பெக்டரும் போலிஸும் துரத்துகின்றனர்.

இந்நிலையில் ராஜுவின் குழந்தையை ஜெகநாத் கடத்தி வைத்துக் கொண்டு ராஜுவின் கையில் இருக்கும் ஆவணத்தை கொண்டு வரச் சொல்கிறான் குழந்தையை காப்பாற்ற ஆவணத்தோடு செல்லும் ராஜுவை எதிர்பார்த்து ஜெகநாத் மற்றும் அடியாட்கள் ஒரு புறம் போலீஸ் மறுபுறம் நிற்க கிளைமாக்ஸ்.

அனைத்தும் நலமாக முடிய வணக்கம்.



http://www.mayyam.com/talk/showthread.php?7207-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-5&p=469683&viewfull=1#post469683

24th January 2010, 01:19 AM



திருடன் - Part II

தங்கை படத்தின் போது முதன் முறையாக action படம் செய்ய ஆரம்பித்த நடிகர் திலகம், இந்த படத்திற்கு வரும்போது action கலந்த குடும்ப கதைகளை செய்வதில் தேர்ந்திருந்தார் என்றே சொல்ல வேண்டும். நாம் இங்கே பலமுறை சுட்டிக் காட்டியது போல அந்தக் காலகட்டத்தில் மாஸ் ரசிகர்கள் என்பவர்கள் நடிகர் திலகத்திற்கு மிக மிக அதிகமாக வளர்ந்திருந்த நேரம். எனவே அவர்களையும், தன் படங்களுக்கு எப்போதும் ஆதரவு கொடுக்கக் கூடிய மிடில் கிளாஸ்,அப்பர் கிளாஸ் மற்றும் தாய்க்குலத்தையும் ஒரே நேரத்தில் கவரக்கூடிய இது போன்ற கதைகளை படமாக்கினார்.

என் தம்பி அளவிற்கு ஸ்டைல் சாம்ராஜ்யம் இல்லையென்றாலும் கூட இந்த படத்திலும் அது போதுமான அளவிற்கு இருந்தது. முதல் காட்சி அறிமுகமே பிரமாதமாக இருக்கும். நடந்து வரும் அவரின் கால்களை மட்டுமே சிறிது நேரம் காண்பித்து பிறகு முகத்தை காட்டுவார்கள். அதிலும் கீழே நடந்து வரும் மேஜர் அண்ணாந்து பார்ப்பது போல் காட்சிக் கோணம் அமைக்கப்பட்டிருக்க, நடிகர் திலகத்தின் முகம் தோன்றும் அந்த காட்சி மிகப் பெரிய ஹிட் [இந்த படத்திற்கு முன் வந்த தெய்வ மகனிலும் அவரது அறிமுகம் இது போலவே அமைந்திருக்கும். ஆக தொடர்ச்சியாக வந்த இரண்டு படங்களிலும் இப்படி அசத்தலான அறிமுகக் காட்சி இருந்ததால் அடுத்த படமான (ரசிகர்கள் வெகு ஆவலுடன் எதிர்பார்த்திருந்த) சிவந்த மண் படத்திலும் இப்படி ஒரு அறிமுக காட்சிக்காக காத்திருந்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்].

இந்த படமும் சிவாஜி வெகு காஷுவலாக செய்த படங்களில் இடம் பெறும். படத்தின் பெரும்பான்மையான காட்சிகளில் அவரது இயல்பு தன்மையை காணலாம். விடுதலையாகும் போது மேஜரிடம் பேசுவதாகட்டும், மீண்டும் தன் கூட்டத்தில் சேரச் சொல்லி மிரட்டும் ஜெகநாத்திடம் முடியாது என்று அமைதியாக ஆனால் அழுத்தமாக சொல்வதாகட்டும், ஆண் வேடம் போட்டு வரும் விஜயாவை இளமை துள்ளலோடு கிண்டல் அடிப்பதாகட்டும், தன் பழைய கதையை விவரிக்கும்போது காட்டும் முகபாவம் ஆகட்டும், ஜெகநாத்திடம் வேலை செய்த போது நடத்திய சாகச நிகழ்வுகள் ஆகட்டும் அதிலும் குறிப்பாக சினிமா இயக்குனர் போல் வந்து கொள்ளையடிப்பதிலாகட்டும் இவை அனைத்துமே இயல்பு + ஸ்டைல் வகையில் ரசிக்கக் கூடியவை. படத்தில் சிறுவனாக இருந்து வாலிபனாக மாறும் காட்சி- White பான்ட், ஜிப்பா போன்ற டைட் ஷர்டில் ரிவால்வர் வைத்து சுட்டுக்கொண்டே வரும் காட்சியும் குறிப்பிட வேண்டிய ஒன்று. குழந்தையை கடத்தி அதன் தாயின் மரணத்திற்கு காரணமாகி விட்டோமே என்ற குற்ற உணர்வில் தவிப்பை வெளிப்படுத்தும் போது உணர்ச்சிகரமான சிவாஜியை ரசிக்கலாம்.

இந்த காலக்கட்டத்தில்தான் உணர்ச்சி பொங்க வசனம் பேசும் முறையை பின்பற்ற ஆரம்பித்தார் என்று சொல்லலாம். கே.ஆர்.விஜயாவிடம் நல்லவனாக வாழ இந்த சமூகம் அனுமதிக்கவில்லை எனவே மீண்டும் பழைய தொழிலுக்கு போகிறேன் என்று சொல்லும் காட்சியும் சரி, அதே போன்ற உணர்வை மேஜரிடம் வெளிப்படுத்தும் காட்சியிலும் சரி இந்த மானரிஸம் வெளிப்படும். ஒரு சாதாரண குடும்பத்தலைவன் மனைவியையும் குழந்தையையும் எப்படி நடத்துவான், எப்படி அவர்கள் மேல் அன்பு செலுத்துவான் என்பது இயல்பாக வெளிப்படுத்தியிருப்பார். சண்டை காட்சிகளில் நல்ல முன்னேற்றம் தெரியும்.

படத்தில் டூயட் பாடல் கிடையாது. ஒரு கமர்ஷியல் படத்திலும் கூட இது போன்ற சில முயற்சிகளை நாற்பது வருடம் முன்பே செய்திருக்கிறார்கள்.

கே.ஆர். விஜயா நாயகி. ஆனால் செய்வதற்கு பெரிதாக ஒன்றுமில்லை. விஜயா உடல் பெருக்க தொடங்கிய நேரம். அந்த கோலத்தில் ஒரு ஹோட்டல் டான்ஸ் ஆடி நிறைய கஷ்டப்படுவார்/படுத்துவார். ஜெகநாத் என்ற வில்லன் - பாலாஜிக்கு ஏற்ற வேஷம். அவரது பாணியிலே செய்திருப்பார். இன்ஸ்பெக்டராக மேஜர். அந்தக் காலக்கட்டத்தின் படங்களுக்கே உரித்தான [அதாவது இன்ஸ்பெக்டர் என்றால் கொஞ்சம் ஓவர் முறுக்கு போன்றவை] நடிப்பை வழங்கியிருப்பார். கிளீனர் பையனாக நடிகர் திலகத்தின் கூடவே முக்கால்வாசி படம் வருவார் நாகேஷ். ஜோடி அம்முக்குட்டி புஷ்பமாலா. ஆனால் சொல்லிக் கொள்ளும்படியான காமெடி படத்தில் மிஸ்ஸிங். குழந்தை மகாலட்சுமியாக பேபி ராணி. பாலாஜியின் கூட்டத்து பெண்ணாக விஜயலலிதா. இரண்டு பாடல்களுக்கு மட்டுமே பயன்படுவார். பாடல் இல்லாமல் பின்னணி இசை மட்டும் ஒலிக்கும் ஹோட்டல் டான்ஸ் காட்சியில் ஏ.சகுந்தலா தோன்றுவார்.

தங்கை, என் தம்பி படங்களை போன்று பாசத்தை அடிப்படையாக கொள்ளாமல் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக வழி தவறி சென்ற ஒருவன் திருந்தி வாழ முற்படும் போது அவனுக்கு ஏற்படும் சோதனைகளே கதையின் களனாக அமைந்திருந்த படத்தை ஏ.சி.டி. இயக்கியிருந்தார். இந்த படத்தில் ஒரு முக்கியமான அம்சம் சென்னையின் முக்கிய தெருக்களில் அதுவும் நடிகர் திலகத்தை வைத்து படப்பிடிப்பு நடத்தியதை குறிப்பிட வேண்டும். அதுவும் மவுண்ட் ரோடில் ஸ்பென்சர் அருகே சினிமா ஷூட்டிங் நடத்துவது போல கொள்ளையடிக்கும் காட்சி, நன்றாக எடுத்திருப்பார்கள். அது போல் சென்னை சிறைச்சாலை, அண்ணா நகர் டவர் போன்ற இடங்களிலும் ஷூட்டிங் நடத்தியிருப்பார்கள்.

கவியரசர்-மெல்லிசை மன்னர் கூட்டணி இந்த படத்திலும்
தொடர்ந்தது. ஆனால் முந்தைய இரண்டு படங்களைப் போல் பாடல்கள் அவ்வளவு பிரபலமானது என்று சொல்ல முடியாது.

1.பழனியப்பன் பழனியம்மாவா- டி.எம்.எஸ்.

ஆண் வேடம் போட்ட பெண் என்று தெரிந்தவுடன் சிவாஜி விஜயாவை கிண்டல் செய்து பாடும் பாடல். இந்த பாடல் காட்சியை பார்த்தால் நடிகர் திலகம் ரொம்ப எனர்ஜிடிக்காக செய்திருப்பார், இது பிரபலமான பாடல்.

2.கோட்டை மதில் மேலே ஒரு வெள்ளைப் பூனை- டி.எம்.எஸ். - எல்.ஆர். ஈஸ்வரி.

சூப்பர் ஹிட் பாடல். படத்தில் நடிகர் திலகம் ஸ்டைலில் கலக்கியிருப்பார். ஹோட்டல் விருந்துக்கு வரும் சமஸ்தானத்து ராணியின் கழுத்திலிருக்கும் விலையுயர்ந்த நெக்லசை திருடும் காட்சி. நடிகர் திலகத்துடன் கூட விஜயலலிதா. பாடல் வேகம் பெற ஆட்டமும் வேகம் பெறும். ஒவ்வொருவருடன் ஆடி விட்டு இறுதியில் ராணியுடன் சேர்ந்து ஆடிக் கொண்டே நெக்லசை மாற்றி போலியை வைப்பதை த்ரில்லிங்காக எடுத்திருப்பார்கள். [பாடலின் இசை பின்னணி, பயன்படுத்தப்பட்ட கருவிகள் பற்றி சாரதா சொல்வார்].

3.என் ஆசை என்னோடு- சுசீலா.

படத்தில் விஜயாவிற்கு இந்த ஒரு பாடல்தான். ஹோட்டலில் ஆடும் பாடல். சுசீலா அருமையாக பாடியிருப்பார். நல்ல மெட்டு. இருந்தும் பெரிய அளவில் பிரபலமாகவில்லை.

4.நினைத்தபடி நடந்ததடி வராதவன் வந்து விட்டான் - எல்.ஆர்.ஈஸ்வரி.

பாலாஜியின் கூட்டத்தில் மீண்டும் வந்து சேரும் சிவாஜியை வரவேற்று விஜயலலிதாவும் கூட்டத்தினரும் ஆடும் பாடல். நடிகர் திலகம் தன் Trade மார்க் நடை நடந்தே கைதட்டலை வாங்கி விடுவார்.


http://www.mayyam.com/talk/showthread.php?7207-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-5&p=469687&viewfull=1#post469687

24th January 2010, 01:26 AM




திருடன் - Part III

தங்கை என் தம்பி படங்களுக்கு பிறகு நடிகர் திலகத்தை வைத்து மூன்றாவது படம் தயாரித்தார் பாலாஜி. அதுதான் திருடன். மீண்டும் தெலுங்கு படத்தின் உரிமையை வாங்கியிருந்தார் பாலாஜி. என் தம்பியை போலவே இதுவும் ஜெகபதி ஆர்ட் பிக்சர்ஸ் தெலுங்கில் தயாரித்த படம்.

பாலாஜியின் படங்களுக்கு அன்று பைனான்சியராக இருந்தவர் சுதர்சன் சிட்ஸ் வேலாயுதன் நாயர், அதாவது கே.ஆர்.விஜயாவின் கணவர். இந்த படத்தின் வேலைகள் முடிந்து படம் பார்த்த வேலாயுதன் நாயருக்கு கோபம். காரணம் புன்னகை அரசியின் பெயர் தனியாக டைட்டிலில் வராமல் எல்லோருடனும் சேர்ந்து வந்து விட்டது. இது தயாரிப்பு நிர்வாகியின் கவனக்குறைவால் ஏற்பட்ட தவறு. ஆனால் வேலாயுதன் நாயர் சமாதானமாகவில்லை. இந்த படத்திற்கு பிறகு பாலாஜியின் படங்களுக்கு பைனான்ஸ் செய்வதை நிறுத்திக் கொண்டார். இந்த படத்திற்கு பிறகு வெகு காலம் பாலாஜியின் படங்களில் கே.ஆர்.விஜயாவும் இடம் பெறாமல் இருந்து பதினான்கு வருடங்களுக்கு பின் நீதிபதி படத்தில்தான் மீண்டும் நடித்தார்.

இந்த படத்தின் பாக்ஸ் ஆபிஸ் பற்றி பேசுவதற்கு முன் பாலாஜி பற்றி ஓரிரு வார்த்தைகள். பாலாஜி என்ற நடிகர் எப்படியோ, பாலாஜி என்ற தயாரிப்பாளர் மிகவும் பிடிவாதக்காரர். தான் நினைத்ததை செய்துக் காட்ட வேண்டும் என்று இருந்தவர். பட ரிலீஸ் தேதியை பொறுத்தவரை அந்த பிடிவாதத்தில் உறுதியாக இருந்தவர். சிவாஜி படங்களே சிவாஜி படத்திற்கு போட்டியாக வந்தது பற்றி பலமுறை பேசியிருக்கிறோம். அந்த விஷயத்தில் பாலாஜியும் குற்றவாளியாக இருந்திருக்கிறார்.

நடிகர் திலகத்தை வைத்து அவரது முதல் தயாரிப்பு தங்கை. அந்த படம் நடிகர் திலகத்தின் அதற்கு முன் வெளி வந்த பேசும் தெய்வம் வெளியாகி ஐந்து வாரங்களில் வெளியானது. சென்னை கெயிட்டியில் 14.04.1967 அன்று வெளியான பேசும் தெய்வம் 34 நாட்களில் நடைபெற்ற 100 காட்சிகளும் ஹவுஸ்புல் [100 Continous House full Showsவிளம்பரம் 17.05.67 அன்று சென்னை தினத்தந்தியில் வெளியானது]. ஆனால் அதற்கு அடுத்த நாட்களிலே [19.05.1967] தங்கை வெளியானது. இதனால் பேசும் தெய்வம் 100 நாட்கள் ஓடுவது பாதிக்கப்பட்டது.

வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த ராமன் எத்தனை ராமனடி படம் பாலாஜியின் எங்கிருந்தோ வந்தாள் படத்திற்காக மாற்றப்பட்டது.

ரோஜாவின் ராஜா வெளியாகி 30 நாட்கள், அவன் ஒரு சரித்திரம் வெளியாகி 11 நாட்களே ஆன நிலையில் தன் தீபத்தை 26.01.1977 அன்று வெளியிட்டார் பாலாஜி. விளைவு ரோஜாவின் ராஜா, அவன் ஒரு சரித்திரம் படங்களின் ஓட்டம் பாதிப்பு.

வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த அண்ணன் ஒரு கோயில் பாலாஜியின் தியாகத்திற்காக தூக்கப்பட்டது.

கவரிமான் வெளிவந்து 4 வாரங்கள் கூட ஆகாத நிலையில் தன் நல்லதொரு குடும்பத்தை வெளியிட்டார்.

வசந்தத்தில் ஓர் நாள் படத்திற்கு இரண்டே வாரங்கள் மட்டுமே இடைவெளி விட்டு தீர்ப்பு படத்தை ரிலீஸ் செய்தார்.

சாதனை படத்திற்கு 15 நாட்கள் இடைவெளியில் மருமகள் வெளியானது.

இவ்வளவு ஏன், நடிகர் திலகத்தை வைத்து பாலாஜி எடுத்த கடைசிப் படமான குடும்பம் ஒரு கோயில் கூட அதற்கு முந்தைய சிவாஜி படமான ராஜா மரியாதை 11 வெளியான நாட்களில் வெளியானது.

இவ்வளவு பெரிய லிஸ்ட் எதற்கென்றால் திருடன் படத்திற்கும் இதுதான் நடந்தது. 1969-ம் வருடத்தை பொறுத்தவரை மாதம் ஒரு சிவாஜி படம் வந்துக் கொண்டிருந்தது. ஆகஸ்ட் மாதம் வெளியான நிறைகுடம் நான்கு வாரங்களே ஆன நிலையில் தெய்வ மகன் 05.09.1969 வெளியானது. தெய்வ மகன் வெளியான 35 நாட்களில் பாலாஜி திருடன் திரைப்படம் அக்டோபர் 10 அன்று வெளியாகும் என்று அறிவிக்கிறார்.

ரசிகர்களும் மற்றவர்களும் அவரிடம் வேண்டாம் என்கிறார்கள். காரணம் ஏற்கனவே இரண்டு படங்கள் ஓடிக் கொண்டிருகின்றன. நவம்பர் 9 அன்று ரசிகர்கள் பேராவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் சிவந்த மண் வெளியாகப் போகிறது. எனவே இதற்கு நடுவில் திருடன் படத்தை ரிலீஸ் செய்ய வேண்டாம் என்ற சொல்கிறார்கள். மேலும் சென்னையில் திருடன் ஒப்பந்தம் செய்யப்பட்ட அரங்குகள் [பிளாசா,ராக்ஸி,பாரத், ராம்] 10 ந் தேதி ப்ரீயாக இல்லை. 17ந் தேதிதான் ரிலீஸ் பண்ண முடியும் என்ற சூழ்நிலை. இந்த நேரத்தில் செய்யாமல் சிவந்த மண் படத்திற்கு பின் ரிலீஸ் செய்யலாம் என்கிறார்கள். ஆனால் பாலாஜி யார் சொன்னதையும் கேட்கவில்லை. அவரது விருப்படியே சென்னை நீங்கலாக அக்டோபர் 10- ந் தேதியும், சென்னையில் 17-ந் தேதியிலும் படம் ரிலீஸ் ஆனது.

சென்னையில் வெளியான நான்கு தியேட்டர்களிலும் தமிழகத்தின் முக்கிய ஊர்களிலெல்லாம் 50 நாட்களை கடந்து வெற்றிகரமாக 8 வாரங்கள் ஓடியது. ஆனால் தெய்வ மகன், சிவந்த மண் என்ற இரண்டு மலைகளுக்கு நடுவே சிக்கிகொண்ட திருடனால் அதற்கு மேல் ஒரு வெற்றியை பெற முடியவில்லை.

ஆனால் இது போன்ற சிக்கல்களெல்லாம் எதுவும் இல்லாத இலங்கையில், வணிக ரீதியாக பெரிய வெற்றிப் பெற்ற திருடன் தலைநகர் கொழும்பில் சென்ட்ரல் திரையரங்கில் 100 நாட்களை கடந்து ஓடியது. 100 நாட்களில் பெற்ற வசூல் Rs 3,22,374/- .

இது அந்த நேரம் வெளியான பல பெரிய படங்களின் வசூலை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. சற்று நிதானித்து பாலாஜி செயல்பட்டிருந்தால் தமிழகத்திலும் திருடன் அந்த 100 நாட்கள் என்ற இலக்கை எட்டிப் பிடித்திருக்கும் என்பது திண்ணம். முதல் வெளியீட்டில் லாபம் பார்த்த விநியோகஸ்தர்கள் மறு வெளியீடுகளிலும் லாபத்தை அள்ளிக் குவித்தார்கள்.

மீண்டும் தன்னால் எந்த வகைப் படமும் செய்ய முடியும் என்று நடிகர் திலகம் நிரூபித்த படம்.

Subramaniam Ramajayam
20th January 2016, 08:35 PM
Tlrudan ome of my favorie nt movies.
Villiwakkam nathamuni thet are rekease succerssful seven weeks run a record for that theatre.\

Gopal.s
21st January 2016, 11:59 AM
சிவந்த மண்- 1969 -சில நினைவுகள்.(9th Nov )

ஆயிரம் படங்கள் வரலாம்,போகலாம், ஆனால் ,சில படங்கள் குறிஞ்சி மலர் போல மனதில் தங்கி, நினைக்கும் தோறும் இனிக்கும்.

தமிழ் திரை பட உலக சரித்திரத்திலேயே இவ்வளவு hype உடன் வெளியான இரண்டே படங்கள் சந்திரலேகா, சிவந்த மண் .இரண்டும் பெரும் பொருட்செலவில் தயாரிக்க பட்ட பிரம்மாண்டங்கள். முதல் முறை வெளிநாட்டில் தமிழ் படம். ஹேமமாலினி நடிப்பதாக இருந்த படம்.(கஸ்டடி battle கோர்ட் கேஸ் இருந்ததால் ஹேமா மாலினி நடிக்க முடியவில்லை. பெரிதும் வருந்தி தமிழில் ஒரே படம்தான் நடிப்பேன்.அது சிவாஜி கணேசனுடன்தான் என்று பேட்டி கொடுத்தார்). 1967 என்று நினைவு. சிவாஜி,ஸ்ரீதர் கலந்து கொண்ட கூட்டத்தில் ,ஸ்ரீதர் இந்த படத்தை அறிவித்து ,தமிழிலேயே முத்த காட்சி இடம் பெற போகும் முதல் படமாக இருக்கும் என்றார். பின்னால் பேசிய சிவாஜி, அதெல்லாம் சரிதான்,என் மனைவி இருக்கும் போதா இதை சொல்வது என்று ஜோக் அடித்தார். தமிழ் நாடே திரு விழா கோலம் பூண்டு இந்த படத்தை வரவேற்றது. சிவாஜி வேறு ஆனந்த விகடனில் "அந்நிய மண்ணில் சிவந்த மண்" என்ற தொடர் எழுதி இருந்தார்.

சிவந்த மண் போல் பிரம்மாண்டம் கொண்ட படம் ,இந்திய திரையுலகம் இது வரை கண்டதில்லை. வெளி நாடுகள்(அதுவும் ஐரோப்பிய) படபிடிப்பு, கப்பல்,ஹெலிகாப்ட்டர், காட்டாறு,சுழல் மேடை என்று ஏக தட புடல். படமும் மிக மிக பிரம்மாண்ட வெற்றி படமாய் பத்து திரையரங்குகளில் நூறு நாள் கண்டது. பெரும்பான்மையான திரையரங்குகளில் ஐம்பது நாட்களும், repeat ரன்களில் பிரமாதமாய் ஓடி(பைலட் தியேட்டரில் 80 களில் 75 நாட்கள்)

எனக்கு தெரிந்த எந்த சிவாஜி படத்திலும்,heroine அறிமுகம் ஆகும் முதல் காட்சி இவ்வளவு அமர்க்களமாய் வரவேற்பு பெற்றதில்லை.(காஞ்சனா போன் பேசும் காட்சி). சிவந்த மண்ணின் சிறப்பே அதுவரை வந்த action படங்களில் இருந்து மாறு பட்டு ,கதாநாயகன் திட்டமிடுவார். வில்லன் ரியாக்ட் செய்வார். திட்டங்கள் படு சுவாரஸ்யமாய் ,படம் விறு விறுப்பாய் செல்ல உதவும். மூன்று மணி நேர இன்ப பயணம்.helocopter fight , கப்பல் வெடிகுண்டு காட்சி,தொடரும் சேஸிங், பட்டத்து ராணி, ரயில் பால வெடிகுண்டு காட்சி, அமர்க்களமாய் மாறி மாறி ஊசலாடும் உச்ச காட்சி என்று தமிழில் வெளி வந்த மிக மிக சிறந்த action ,adventure படமாய் இன்றளவும் பேச படுகிறது.

எம்.எஸ்.விஸ்வநாதனின் பங்களிப்பு இந்த படத்தின் பிரம்மாண்டத்தை தூக்கி நிறுத்தியது.(கார்த்திக் சார் சொன்னது போல் அவரின் மிக சிறந்த படம்)ஒரு ராஜா ராணியிடம், முத்தமிடும் நேரமெப்போ, ஒரு நாளிலே உறவானதே,பட்டத்து ராணி, பாவை யுவராணி கண்ணோவியம்,சொல்லவோ சுகமான என்று ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு வகை பாணி,ஒவ்வொரு நாட்டு இசை கோர்ப்பு, பின்னணி இசை(முக்கியமாய் கப்பலில் ராதிகா டான்ஸ்,மாறும் காட்சிகளுகேற்ப மாறும் இசை,) ஹாட்ஸ் ஆப் எம்.எஸ்.வீ சார். உங்களுக்கு கடன் பட்டுள்ளோம்.

சிவாஜி இந்த படத்தில் மிதமான make -up ,natural hair style , rugged ,manly , subtle உடையலங்காரங்களில் படு படு படு இளமையாய், handsome ஆக இருப்பார்.காஞ்சனா பொருத்தமான ஜோடி. என் தூக்கத்தை பல இரவுகள் கெடுத்த romance சீன் ஒரு நாளிலே உறவானதே. ஒரு ஷாட்டில் கட்டி அணைத்து, சிவாஜி சொக்கி போவார்.எந்த வேடத்திலும் ,எப்படிபொருந்துகிறார் சிவாஜி?? அராபிய உடையிலும் !!! action ,ரொமான்சில் கூட சிவாஜியிடம் யாரும் நெருங்க முடிந்ததில்லை.

ஹெலிகாப்ட்டர் காட்சி ,கப்பல் காட்சி, ஜெயில் சண்டை காட்சிகள் மிக மிக சிறப்பாக வந்திருக்கும். தேங்காயுடன் விமான சண்டை,செஞ்சி கிருஷ்ணனுடன் ஆற்றில் சண்டை, உச்ச கட்ட பலூன் சண்டைகள் சொதப்பல். (ஷ்யாம் சுந்தர் down down ) .வெளி நாட்டு காட்சிகள் சிறப்பாக படமாக்க பட்டிருக்கும்.(ஓடம் பொன்னோடம் படமாக்கம் படு மோசம் . பனி சறுக்கு காட்சியில் இசை உச்ச வேகம் பிடிக்கையில் skate செய்து கொண்டிருப்பவர் நின்று விடுவார்!!)

ஸ்ரீதரின் திரைக்கதையமைப்பு புத்திசாலிதனமாய்,விறு விறுப்புடன் இருக்கும். இயக்கம் கேட்கவே வேண்டாம். சிவாஜி-ஸ்ரீதர் இணைவில் மிக சிறந்த படைப்பு இதுதான்.அடிமை பெண்ணிற்கு போட்டியாக வந்திருக்க வேண்டியது ,தீபாவளிக்கு தள்ளி போனது. அதனால் என்ன,நமக்குதான் தீபாவளி ராசியாயிற்றே.!!! இந்த பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து சிவாஜி பிலிம்ஸ் ஒரு படத்தை கீழை நாடுகளில் (ஜப்பான் உள்ளிட்ட) படமாக்க திட்டமிட்டு ,திட்டம் கசிந்து விட்டதால்,மாற்று முகாம் அள்ளிதரித்த அவசர கோலத்தில் முந்தி கொண்டது.(மணியன் என்ற ........)

RAGHAVENDRA
23rd January 2016, 08:03 AM
திரைப்படப்பட்டியல் திரியில் அடுத்து..

நிரந்தர சாதனைச் சக்கரவர்த்தியின்

https://i.ytimg.com/vi/dDhBCJR8Gh8/hqdefault.jpg

சிவந்த மண்

Gopal.s
17th March 2016, 09:02 PM
சிவந்த மண் படத்தின் பல தங்க புதையல்களின் நடுவே தொலைந்து விட்ட பிளாட்டின புதையலை பற்றி இந்த பதிவு.பிளாட்டினத்தின் மதிப்பு மக்களுக்கு புரியாததாலோ என்னவோ.

ஒரு நாளிலே உறவானதே
கனவாயிரம் நினைவானதே
வா வெண்ணிலா இசையோடு வா
மழை மேகமே அழகோடு வா
மகராணியே மடி மீது வா

நாளை வரும் "நாளை" என நானும் எதிர்பார்த்தேன்.
காலம் இது காலம் என காதல் மொழி கேட்டேன்
போதை தரும் பார்வை எனை மோதும் அலை மோதும்
போதும் என கூறும் வரை பூவே விளையாடு
வரும் நாளெல்லாம் இது போதுமே

மஞ்சம் இது மஞ்சம் என மார்பில் விழி மூடு
கொஞ்சும் இதழ் சிந்தும் என் நெஞ்சில் ஒரு கோடு .
தஞ்சம் இது தஞ்சம் என தழுவும் சுவையோடு.
மிஞ்சும் சுகம் யாவும் பெற வேண்டும் துணையோடு
வரும் நாளெல்லாம்.இது போதுமே

ஒரு நிர்ப்பந்தமாய் நடந்த காதல் ஜோடியின் நாலு பக்கம் வேடர் சூழ்ந்த நிலையில் (நண்பர் செஞ்சியும்)மானிரெண்டின் காதல்.(மகாராணியின் முதலிரவு கட்டாந்தரையில்).இரவு ஊருறங்கிய பின் குளிக்கும் மனைவியிடம் தாபத்தை கண்ணியமாய் வெளியிடும் புரட்சியாளன்.

காஞ்சனாவின் தாபம் நிறைந்த விழிகளும்,நடிகர்திலகத்தின் காதல் வயப்பட்ட மோவாய் முத்தங்களும்.போதும் என கூறும் வரை அணைத்து,வினாடி கண் சொக்குவாரே !!!!!வரும் நாளெல்லாம் என்று வீணை மாதிரி மடி கிடத்துவாறே (50 ஆவது நாள் போஸ்டர் என நினைவு),மிஞ்சும் சுகம் யாவும் வரிகளில் காஞ்சனாவின் கண்களை பாருங்கள் .வரும் நாளெல்லாம் என மடியில் இரு கால்களை வெவ்வேறு நிலை மடித்து மயக்குவாறே....

புரட்சியாளனின் இயல்பான முடியழகும் ,ஆண்மை நிறைந்த கட்டம் போட்ட சட்டையும்,make -up மிதமாக திராவிட மன்மதனின் இளமை பொங்கும் handsome என படும் ஆணழகும்(அந்த மூக்கு ...அடடா) ,காஞ்சனாவின் நாணம்,தாபம் நிறை பெண்மையும், ஆபாசமில்லாத உறுத்தாத ஈர உடையும் உங்களை வேறு உலகத்துக்கே அனுப்பும்.

நடிகர்திலகத்தின் முதல் ஐந்து காதல்களுக்குள் வரும். நல்ல வேளை ...அசல் திட்ட படி பாலமுரளி இதை பாடவில்லை. டி.எம்.எஸ் -சுசிலாவின் மயக்கும் குரலும் (ரெண்டு பெரும் சௌகரியமான pitch இல் ),எம்.எஸ்.வியின் சாதனை பாடல்களில் ஒன்று.

பார்த்து பார்த்து பார்த்து பார்த்து ,கேட்டு,கேட்டு,கேட்டு,கேட்டு மகிழவும்.

https://www.youtube.com/watch?v=ZNQSCPPTFzc

RAGHAVENDRA
9th November 2016, 07:10 AM
Sivaji Ganesan Filmography Series

134. Sivantha Mann சிவந்த மண்

http://anonymouse.org/cgi-bin/anon-www.cgi/http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vlcsnap-27508.png?t=1320729318

http://anonymouse.org/cgi-bin/anon-www.cgi/http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_2VOB_000789192.jpg


தணிக்கை - 01.11.1969
வெளியீடு - 09.11.1969

தயாரிப்பு சித்ராலயா
நடிக நடிகையர்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன், எஸ்.வி.ரங்காராவ், எம்.என்.நம்பியார், முத்துராமன், நாகேஷ், ஜாவர் சீதாராமன், தேங்காய் சீனிவாசன், காஞ்சனா, சாந்தகுமாரி, சச்சு, டி.வி.குமுதினி, ராதிகா, தாதா மிராஸி, விஜயன், மாலி, மூர்த்தி, ஹரிகிருஷ்ணன், ஹென்றி டேனியல், செந்தாமரை, ஜெமினி பாலு, சதன் மற்றும் பலர்.

பாடல்கள் - கண்ணதாசன் உதவி பஞ்சு அருணாசலம்

பாடியவர்கள் டி.எம்.சௌந்தர்ராஜன், சீர்காழி கோவிந்தராஜன், தாராபுரம் சுந்தர்ராஜன், வீரமணி, பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி

பாடல்கள் ஒலிப்பதிவு - டி.எஸ்.ரங்கசாமி, ஜே.ஜே.மாணிக்கம்

ரீரிக்கார்டிங் - ஜே.ஜே.மாணிக்கம்.
நடன அமைப்பு - தங்கப்பன்
கலை - சாந்தி தாஸ்
உடை - பி.ராமகிருஷ்ணன்
அவுட்டோர் யூனிட் - மூவி சர்வீஸ்ஸ், சென்னை 17
ஸ்டூடியோஸ் - வாஹினி, பிரசாத், வீனஸ் கம்பைன்ஸ், ஏவி.எம்
வசனம் ஒலிப்பதிவு - ஜி.வி.ரமணன், டி.ராமசந்திர ராவ், ஹெச். சாந்தாராம்
செட் பிராபர்டீஸ் - சினி கிராஃப்ட்ஸ்
செட் அலங்காரம் - சம்பந்தம்...பிள்ளை
விளம்பரம் - எலிகண்ட்,
விளம்பர நிர்வாகம் - கோவிந்தன் குட்டி,
விளம்பர டிசைன்ஸ் - ஈஸ்வர், பரணி குமார்
Sky Baloon Specially Manufactured by Aero Advertisers, Bombay & Madras
ஒப்பனை - ரங்கசாமி, கிருஷ்ணன், ராமு...மணி
சண்டை பயிற்சி - ஷியாம் சுந்தர்
லாபரட்டரி - ஜெமினி கலர் லாபரடரி
ஆபீஸ் நிர்வாகம் - வி.நாகபூஷணம்
புரொடக்ஷன் நிர்வாகம் - கே.ஆர். ஷண்முகம்
ஸ்டில்ஸ் - திருச்சி கே. அருணாசலம்
ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் - W.R. சுப்ப ராவ்
உதவி டைரக்ஷன் - என்.சி.சக்கரவர்த்தி, ஆர். ஸ்ரீதர்பாபு, எம்.பாஸ்கர்
துணை வசனம் - கோபு
ஒளிப்பதிவு டைரக்டர் - என்.பாலகிருஷ்ணன்
எடிட்டிங் - என்.எம். சங்கர்
அஸோஸியேட் டைரக்டர் - சி.வி.ராஜேந்திரன்
இசை - மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், உதவி - கோவர்த்தனம், ஜோஸஃப் கிருஷ்ணா

கதை வசனம் டைரக்ஷன் - ஸ்ரீதர்

RAGHAVENDRA
9th November 2016, 07:14 AM
ஆவணத்திலகம் பம்மலாரின் தொகுப்பிலிருந்து..



http://anonymouse.org/cgi-bin/anon-www.cgi/http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/SM1-1.jpg

வரலாற்று ஆவணம் : "சிவந்த மண்" படப்பிடிப்பு கட்டுரை : மூன்று பக்கங்கள்

பொம்மை : பிப்ரவரி 1969

முதல் பக்கம்

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/SMA1-2.jpg

இரண்டாவது பக்கம்

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/SMA2-1.jpg

மூன்றாவது பக்கம்

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/SMA3-1.jpg

பொக்கிஷப் புதையல்

அரிய நிழற்படம் : பொம்மை : ஏப்ரல் 1969

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5041-1.jpg

பொக்கிஷப் புதையல்

"சிவந்த மண்" திரைக்காவியத்தின் தயாரிப்பாளர்-இயக்குனர் ஸ்ரீதர்
'பொம்மை' மாத இதழுக்கு அளித்த பொன்னான பேட்டி

வரலாற்று ஆவணம் : பொம்மை : நவம்பர் 1969

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5042-1.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5043-1.jpg

RAGHAVENDRA
9th November 2016, 07:16 AM
விளம்பர நிழற்படங்கள்

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5091-1.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC3804-1.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5093-1.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5094-1.jpg

courtesy: Aavana Thilagam Pammalar

RAGHAVENDRA
9th November 2016, 09:52 PM
Sivaji Ganesan - Definition of Style 33

சிவந்த மண் - சுற்றுலா காட்சி


நடிகர் திலகத்தின் நடிப்பின் இலக்கணத்தைப் பற்றிய இத்தொடரில் பல்வேறு பாத்திரங்களில் எப்படி கையாண்டு நடித்திருக்கிறார் என்பது விளக்கப்பட்டுள்ளது.
இந்த 33வது தொடரில், அவர் நடிப்பிற்கு தன்னை எவ்வாறு தயார் படுத்திக் கொள்கிறார், அவருடைய நடிப்பிற்கு உத்வேகம் - ஆங்கிலத்தில் Inspiration -எப்படி கிடைக்கிறது என்பதைப் பார்க்கலாம்.

வியட்நாம் வீடு பிரஸ்டிஜ் பத்மநாபன் டி.வி.எஸ். அதிபரும், கௌரவம் பாரிஸ்டர் பாத்திரத்திற்கு அந்நாளைய பிரபல வழக்கறிஞர் கோவிந்த் ஸ்வாமிநாதன் அவர்களும், திருவருட்செல்வர் அப்பர் பாத்திரத்திற்கு காஞ்சி மகா பெரியவரும் உருவகமளித்ததாக கேள்விப்பட்டதுண்டு. ஆனால் யாரும் அதிகம் அறிந்திராத மக்களும் நடிகர் திலகத்திற்கு உத்வேகமளித்துள்ளனர் என்பதும் அதிகம் மக்கள் அறிந்திராத செய்தி.

தமிழர்களின் வீர விளையாட்டு எனப்படும் ஜல்லிக்கட்டு, அதே போல் ஸ்பெயினில் காலம்காலமாக BULL FIGHT என்ற பெயரில் அந்நாட்டு சுற்றுலாவின் முக்கிய அம்சமாக பல தலைமுறைகளாக நடைபெற்று வருகிறது. சற்றே கொடூரமான விளையாட்டாக இருக்கும் இதில் பங்கேற்கும் காளைகளை அடக்க வீர்ர்கள் கூர்மையான கத்தியைப் போன்ற ஆயுத்த்தினால் குத்தி அதை அடக்குவார்கள்.

சிவந்த மண் படத்தில் நாயகி தான் நாயகனோடு பல நாடுகளுக்கு சுற்றுலா போவதாக கனவு காணுகிறாள். இந்த கனவுக் காட்சியின் மூலம் வெவ்வேறு நாடுகள் படத்தில் இடம் பெறுகின்றன. நாயகனும் நாயகியும் ரோம், மாட்ரிட், பாரீஸ் என ஐரோப்பிய முக்கிய நகரங்களுக்கு சுற்றுலா போகிறார்கள். ஸ்பெயினில் இந்த காளை அடக்கும் விளையாட்டையும் பார்க்கிறார்கள். இதைத் தொடர்ந்து மற்ற இடங்களுக்கும் போகிறார்கள் என்பதாக படத்தில் காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

சிவந்த மண் ஒரே சமயத்தில் தர்த்தி என்ற பெயரில் ஹிந்தியிலும் தயாரிக்கப்பட்டதால், அதில் நடித்த ராஜேந்திர குமார் மற்றும் வகீதா ரஹ்மான் இருவரும் தமிழில் நடிகர் திலகம், காஞ்சனா இருவரும் என ஒப்பந்தம் செய்யப்பட்டு அடுத்தடுத்து இரு மொழிக் காட்சிகளும் எடுக்கப்பட்டன. அதில் மேற்கூறிய கனவுக் காட்சியும் ஒன்று.

அந்த கனவுக் காட்சியில் மேற்கூறிய ஸ்பெயின் காளை அடக்கும் காட்சியும் இதே போல் ஒரே சமயத்தில் ஹிந்தி மற்றும் தமிழ் இரண்டும் படமாக்கப்பட்டது.

இந்தக் காட்சியில் பார்வையாளர் காலரியில் நடிகர் திலகம் காஞ்சனா இருவரும் அமர்ந்திருப்பதை காமிரா அடிக்கடி காண்பிக்கும். அவர்களுக்க்குக் கீழேயே ராஜேந்திர குமார் மற்றும் வஹீதா ரஹ்மான் இருவரும் அமர்ந்திருப்பார்கள்.

https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/v/t1.0-9/14925650_1252426098141393_4935547817041565068_n.jp g?oh=bb6cf791c40093741f0e993318b6ecd4&oe=58973593

இந்தக் காட்சியில் காளையை அடக்கும் வீர்ர்கள் - Matadors என அழைக்கப்படுபவர்கள் - அந்தக் கூர்மையான கொம்பினால் குத்தும் போது அவர்களின் உடல் மொழி மிகவும் வித்தியாசமாக இருக்கும். குறிப்பாக அந்தக் காளையை அடக்கி முடித்தவுடன் அவர்கள் தரும் போஸ் கம்பீரமாக இருக்கும் உடலை சற்றே வளைத்து தலையை நிமிர்த்தி அவர்கள் பார்க்கும் பார்வையில் வெற்றிக் களிப்புத் தென்படும்.

பொதுவாக இது போன்ற காட்சியில் மற்ற நடிகர்கள் சாதாரணமாக பார்வையாளனாக நடித்து விட்டு அடுத்த காட்சிக்குப் போய் விடுவார்கள். ஆனால் நடிகர் திலகத்தின் நடிப்புப் பசியில் இந்த போஸ் மிகப் பெரிய தீனியாய் அமைந்து விட்டது.

அந்த போர்வீரனின் வெற்றித் தோற்றம் அவரை வெகுவாக்க் கவர்ந்திருந்தது.

https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/v/t1.0-9/15027569_1252426698141333_5504575371201277263_n.jp g?oh=2c859c522a488037e464097e841bc4d4&oe=58886838

அது மட்டுமின்றி இந்தக் காட்சியில் மெல்லிசை மன்னரின் பின்னணி இசை மிகச் சிறப்பாய் இருக்கும். ஐரோப்பிய நாடுகளில் மிகப் பெரிய சாகசங்கள் நடைபெறும் போது அந்நாட்டு இசை கூடவே எப்படி வாசிக்கப்படும் என்பதை கவனித்திருப்பவரைப் போல இங்கிருந்தே அவ்வளவு அருமையான இசையை பின்னணியில் அமைத்திருப்பார். தனக்கே உரிய தனித்தன்மையில் சற்றும் ஒற்றுமை தென்படாத வகையில் தன் கற்பனையால் அபாரமான இசைக்கோர்வையை அமைத்து அதற்குத் தேவையான ஐரோப்பிய இசைக்கருவிகளின் ஒலியைக் கொண்டு வந்திருப்பார். இந்தக் காட்சியில் ஒலிக்கும் பின்னணி இசையை நடிகர் திலகமும் கூட இருந்து கேட்டிருப்பார் போலத் தெரிகிறது.

இந்தப் பின்னணி இசையில் ட்ராம்போன் ட்ரம்பெட் இசைக்கருவிகள் மிகச்சிறப்பா இசைக்கப்பட்டிருக்கும். அந்த மெட்டை மிகவும் நடிகர் திலகம் ரசித்திருக்கிறாரோ என்னவோ, அதை அப்படியே சொர்க்கம் படத்தில் பொன்மகள் வந்தாள் பாட்டில் சரணத்தில் மெல்லிசை மன்னர் பயன்படுத்தியிருப்பார். வெல்வெட்டின் சிரிப்பை ரசிப்பேன் என்ற பல்லவியின் மெட்டு அப்படியே சிவந்த மண் காளை மாட்டை அடக்கும் காட்சியில் பின்னணியில் ஒலிக்கும்.

விளையாட்டின் போது மற்றவர் பார்வை விளையாட்டில் லயித்திருக்க, நடிகர் திலகமோ அந்த வீர்ர்களின் உடல் மொழியை மிகவும் உன்னிப்பாக உள்வாங்கியிருக்கிறார்.

அதற்கேற்ப அந்த இசையும் அவரை ஈர்த்திருக்க, பொன்மகள் வந்தாள் பாடல் காட்சியில் அந்த பின்னணி இசை பல்லவியின் மெட்டாக அமைந்த வுடன் தலைவர் அந்த ஸ்பெயின் மட்டார் வீரனின் உடல் மொழியை அங்கே மிக அற்புதமாக வெளிப்படுத்தியிருப்பார்.

https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/v/t1.0-9/14937402_1252427408141262_1751415883255038241_n.jp g?oh=183087b6ad85e40d6a75a3e33cc78288&oe=58C50406

https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/v/l/t1.0-9/14963166_1252427644807905_7532760569365241120_n.jp g?oh=7c5db33c1d8e8c64008f7e6347e9add0&oe=588F0A68


பொன் மகள் வந்தாள் பாடலில் பெரும்பாலும் அவர் இந்த ஸ்பெயின் விளையாட்டு வீர்ரின் உடல் மொழியைப் பயன் படுத்தியதற்குக் காரணமும் உள்ளது. ஒரு சாதனையை நிகழ்த்திய பெருமிதமாக அந்த வீர்ர்கள் தங்கள் உடல் மொழியை வெளிப்படுத்துவது போல், இந்தப் பாடல் காட்சியில் தான் செல்வந்தனானதை ஒரு சாதனையாக மனதில் வரித்துக் கொண்டு நாயகனை உருவகப்படுத்தி அதே உடல் மொழியைக் கொண்டு வந்திருக்கிறார் நடிகர் திலகம்.

தன் கண்ணில் படும் எந்த அம்சமானாலும் அதை உள் வாங்கி அதை எங்கே எப்போது எப்படி பிரயோகிப்பது என்கிற உத்தியை நன்கு தெரிந்து வைத்திருப்பதோடு மட்டுமின்றி, அதைத் தன் ரசிகர்கள் எப்படி ரசிப்பார்கள் என்பதையும் கிரகிக்கும் சக்தியும் அவருக்கு உண்டு.

சும்மாவா சொன்னார்கள் அவரை நடிகர் திலகம் என்று.

சும்மாவா சொல்கிறோம் நாங்களெல்லாம் சிவாஜி வெறியர்களென்று..

RAGHAVENDRA
13th November 2016, 03:17 PM
Next ...

https://i.ytimg.com/vi/Axa3no5yGe4/maxresdefault.jpg

saradhaa_sn
13th November 2016, 04:23 PM
"எங்க மாமா"

நடிகர் திலகத்தின் சிறந்த பொழுதுபோக்குப் படங்களில் 'எங்க மாமா' வுக்கு எப்போதுமே ஒரு இடம் உண்டு. அழகான கதை, நடிகர் திலகத்தின் அழகிய தோற்றம் மற்றும் அருமையான நடிப்பு, துறு துறுவென மழலைப்பட்டாளங்கள், அழகான கதாநாயகிகளாக ஜெயலலிதா மற்றும் நிர்மலா ('வெண்ணிற ஆடை' நமக்குத் தந்த இரு பரிசுகள்), வில்லனாக பாலாஜி (ரொம்ப பேர் இதை அவருடைய சொந்தப்படம் என்றே நினைத்திருக்கிறார்கள்), நகைச்சுவையில் கலக்கும் சோ, தேங்காய் மற்றும் ஏ.கருணாநிதி, என்றென்றைக்கும் நம் மனதில் நீங்கா இடம் பெற்றிருக்கும் அருமையான பாடல்கள் என பல சிறப்பு அம்சங்களுடன் கூடிய ஒரு அழகான படம்தான் 'எங்க மாமா'.

'ஜேயார் மூவீஸ்' என்ற நிறுவனம் இதற்கு முன் 'வேறொரு' கறுப்பு வெள்ளைப் படத்தை தயாரித்த பிறகு, நடிகர் திலகத்தை வைத்து வண்ணத்தில் தயாரித்த படம் இது. (இதன் பிறகு இதே நிறுவனம் நடிகர் திலகத்தை வைத்து 'ஞான ஒளி', 'மன்னவன் வந்தானடி' ஆகிய படங்களைத் தயாரித்தனர். அவையிரண்டும் நூறு நாட்களைத் தாண்டி ஒடின).

'எங்க மாமா' திரைப்படம் இந்தியில் வெளியான 'பிரம்ம்ச்சாரி' என்ற படத்தின் கதையைத் தழுவி எடுக்கப்பட்டது. (ஒரு சில காட்சிகள் மாற்றப்பட்டிருந்தன. இந்திப்படத்தில் இருந்த பாம்பு கடிக்கும் காட்சி தமிழில் இல்லை). இந்தியில் ஷம்மி கபூர், ராஜஷ்ரீ, மும்தாஜ், பிரான் ஆகியோர் நடித்திருந்தனர்.

திருமணம் ஆகாத 'கோடீஸ்வரன்' (பெயர்தான் கோடீஸ்வரன், மற்றபடி அன்றாடம் காய்ச்சிதான்) பத்திரிகைகளுக்கு புகைப்படம் எடுக்கும் ஒரு புகைப்படக் கலைஞன். அத்துடன் ஒரு நட்சத்திர ஓட்டலில் பகுதி நேரப் பாடகன். குழந்தைகள் மேல் அன்பு கொண்ட அவர் ஒரு வாடகை வீட்டில் தங்கி தன்னுடன் பல அனாதைக்குழந்தைகளை வைத்து அவர்களுக்கு உண்வு, உடை, கல்வியறிவு என அனைத்தையும் வழங்கி ஒரு தந்தையாக இருந்து அன்புடன் வளர்த்து வருகிறார். தன் வீட்டின் முன்பு ஒரு தொட்டில் கட்டி வைத்திருக்க அதில் அனாதைக்குழந்தைகளை மற்றவர்கள் போட்டு விட்டுப் போவதும் அதை இவர் எடுத்து வளர்ப்பதும் இப்படியாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இவர் வழக்கமாக புகைப்படம் எடுத்துக் கொடுக்கும் பத்திரிகை ஆசிரியர், இனிமேல் குழந்தைகள் படம் கொண்டு வந்தால் பணம் தமாட்டேன், மாறாக அழகான இளம்பெண்களின் கவர்ச்சியான படங்கள் வேண்டும் என்று கண்டிஷன் போட, வேறு வழியில்லாத இவர் கடற்கரையில் குளிக்கும் இளம் பெண்களை படம் எடுக்கும்போது, ஒரு பெண் (ஜெயலலிதா) தற்கொலை செய்து கொள்ள ஆயத்தமாக நிற்பதைக் கண்டு பதறி ஓடிப்போய் அவளைக் காப்பாற்றுகிறார். வீட்டிற்கு அழைத்து வந்து அவளுடைய கதையை கேட்க, அவ, தன்னுடைய பெயர் சீதா என்றும் தன்னுடைய தாய் தந்தையர் இறந்து விட்டனர் என்றும் கிராமத்திலிருந்து வந்த தன்னை, தனக்கென ஏற்கெனவே திருமணம் செய்ய முடிவு செய்து வைத்திருந்த தன் அத்தை மகன் முரளி கிருஷ்ணன் (பாலாஜி) ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டதால் மனமுடைந்து போய் தற்கொலை செய்ய முடிவெடுத்ததாக கூறுகிறாள்.கோடீஸ்வரனும் (சிவாஜி) குழந்தைகளும் சீதா மேல் இரக்கப்பட்டு அவளை அவள் அத்தை மகன் முரளியுடன் சேர்த்துவைக்க முடிவெடுக்கின்றனர். அதே சமயம், குழந்தைகளை வளர்க்க தன்னுடைய வருமானம் போதாமல் கஷ்டப்படும் கோடீஸ்வரன், முரளியுடன் சீதாவை சேர்த்து வைத்து விட்டால் அவருக்கு இருபதாயிரம் ரூபாய் (அப்போ அது பெரிய தொகை) முரளியிடம் இருந்து பெற்றுத்தர வேண்டும் என்று, சீதாவும் அதற்கு சம்மதிக்கிறாள்.

முதலில் முரளியின் நடவடிக்கைகளை அறிய விரும்பும் கோடீஸ்வரன், தான் பாட்டுப்பாடும் ஓட்டலிலேயே பிறந்த நாள் கொண்டாட வரும் முரளியிடம் அந்த ஓட்டலின் பாடகனாக அறிமுகமாகிறார். முரளியின் வேண்டுகோளுக்கு இணங்க, முரளியின் காதலி 'லீலா' (வெண்ணிற ஆடை நிர்மலா)வுடன் ஒரு பாடலும் பாடி ஆடுகிறார். கோடீஸ்வரனுக்கு ஒன்று தெளிவாகிறது. முரளி ஒரு ஷோக்குப் பேர்வழி. அவனைச் சுற்றி எப்போதும் இளம் பெண்களின் கூட்டம் சுற்றிக்கொண்டு இருக்கிறது. இந்நிலையில் பட்டிக்காட்டு சீதாவை அவன் ஏற்றுக்கொள்வது என்பது நடக்காத காரியம். முரளி (பாலாஜி)யின் கவனத்தை சீதா (ஜெயலலிதா)வின் பக்கம் திருப்ப வேண்டுமென்றால், அவளை மற்ற பெண்களைக்காட்டிலும் நவநாகரீக மங்கையாக மாற்றியே தீர வேண்டியது அவசியம் என்று உணர்கிறார். வீட்டுக்குத் திரும்பியதும் சீதா விடமும், குழந்தைகளிடமும் இது பற்றி விவாதிக்கிறான். வேறு வழியின்றி சீதா நாகரீக மங்கையாக மாற சம்மதிக்கிறாள்.

படிப்படியாக கோடீஸ்வரன் அவளை நாகரீக மங்கையாக மாற்றி, கிட்டத்தட்ட முரளிக்கே அவளை அடையாளம் தெரியாத அளவுக்கு கொண்டு வந்து, தான் பாட்டுப்பாடும் ஓட்டலிலேயே அவளை அழைத்து வந்து, வழக்கமாக முரளி அமரும் மேஜைக்கருகிலேயே அவளை அமர்த்தி விடுகின்றார். பெண் பித்தனான முரளி அங்கே வரும்போது, தன்னை அசர வைக்கக்கூடிய அப்ஸரஸ் ஆக ஒரு இளம்பெண் அமர்ந்திருப்பதை அறிந்து, மெல்ல மெல்ல அவளிடம் பேச்சுக்கொடுக்கிறான். தான் பெரிய பணக்கார வீட்டுப்பெண் என்றும், தன்னை மணக்க பல கோடீஸ்வரர்கள் காத்திருப்பதாகவும் சொல்ல, முரளி மயங்கிப்போய் எப்படியும் அவளை அடைய தீர்மானிக்கிறான். தன் வீட்டுக்கு அழைத்துச் சென்று அவளுக்கு வைர மோதிரம் பரிசளிக்க அவள் அதை அலட்சியப்படுத்துகிறாள். தொடர்ந்து பேசும்போது உண்மையில் தான் சீதா என்ற உண்மையை வெளியிட அசந்து போன முரளி அப்போதும் அவளை வெறுக்கவில்லை. அவளை மணந்தே தீருவது என்று முடிவெடுக்க சீதா அதை மறுத்து வீட்டுக்கு திரும்புகிறாள்.

முரளியின் மீது அவள் கொண்ட வெறுப்பு கோடீஸ்வரன் (சிவாஜி) மீது காதலாக மாறுகிறது. கொஞ்சம் கொஞ்சமாக கோடீஸ்வரன் மனமும் அவள் பக்கம் திரும்ப ஒரு கட்டத்தில் காதலர்களாகிறார்கள். கோடீஸ்வரனிடம் இருந்து எப்படியும் சீதாவை பிரித்து தான் அடைய வேண்டும் என்று முடிவெடுக்கும் முரளி, பலநாள் வாடகை தராமல் கோடீஸ்வரனும் குழந்தைகளும் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளரும் தன்னுடைய நண்பருமான செந்தாமரையை அணுகி, கோடீக்கு நெருக்கடி தருமாறு கூற, செந்தாமரையும் சம்மதித்து அமீனாவுடன் வீட்டை காலி செய்ய வருகிறார். அப்போது அங்கு வரும் முரளி தான் ஏதோ பரோபகாரி போல, ஜப்தி செய்ய வந்தவர்களை கடிந்து கொள்கிறார். அந்நேரம் வெளியில் 'சோ'வென மழை பெய்து கொண்டிருக்க, பாத்திரம் பண்டங்கள், குழந்தைகளின் பாடப்புத்தகங்கள் அனைத்தும் மழை நீரில் வீசியெறியப்படுகின்றன. இதுதான் பேரம் பேச சரியான சமயம் என்பதை உணர்ந்த முரளி, இந்த நெருக்கடியில் இருந்து கோடீயையும் குழந்தைகளையும் காப்பாற்ற வேண்டுமானால், சீதாவை தனக்கு விட்டுத்தர வேண்டும் என்று நிர்ப்பந்திக்க, கோடீஸ்வரன் செய்வதறியாது திகைக்கிறார். குழந்தைகளோ தங்களுக்காக அக்காவை இழந்து விடாதீர்கள், நாங்கள் எப்படியாவது பிழைத்துக் கொள்கிறோம் என்று கூற, அதே சமயம் முரளி கோடீயின் தியாக உள்ளத்தை கேலி செய்து 'நீ குழந்தைகள் மேல் கொண்ட அன்பெல்லாம் வெறும் வேஷம். நீ ஒரு சுயநலக்காரன்' என்று கூறி கேலி செய்ய, ஆடிப்போன கோடீஸ்வரன், குழந்தைகளின் நலனுக்காக தன் காதலை தியாகம் செய்ய முடிவெடுக்கிறார்.

முரளியின் தூண்டுதலால் கோடீஸ்வரன் வீட்டிற்கு வரும், சீதாவின் 'திடீர்' சித்தி (சி.கே சரஸ்வதி)யும் அவரது எடுபிடி ஓ.ஏ.கே.தேவரும், சீதாவை கோடீ-யிடம் இருந்து பிரித்து முரளிக்கு சொந்தமான ஒரு இடத்தில் கொண்டு விடுகிறார்கள். அமீனா தன் வீட்டை காலி செய்ய வந்தபோது தனக்கு உதவிய முரளியிடம் அவன் வாக்களித்தபடி சீதாவை மணமுடித்து வைக்க வேண்டுமே என்று எண்ணும் கோடீ, அவள் தானாக வெறுக்க வைக்க ஒரு செட்டப் செய்கிறார். அதன்படி, தனியே பேசுவதற்காக ஓட்டலுக்கு சீதாவை கோடீ அழைத்து வர, அங்கே வரும் பெண்ணொருத்தி அவரிடம் தனியே பேச விரும்புவதாக கூறி அழைத்துச் செல்ல, அந்த உரையாடலை சீதா கேட்க வேண்டும் என்பதற்காக தன்னுடைய பர்ஸை கீழே தவற விடுவது போல விட, எதேச்சையாக அவர்களின் உரையாடலை சீதா கேட்க நேரிடுகிறது. அந்தப்பெண்ணுக்கும் கோடீ-க்கும் ஏற்கெனவே தொடர்பு இருப்பது போலவும், அதன் காரணமாக அவர்களுக்கு ஒரு குழந்தை இருப்பது போலவும் அவர்கள் பேசிக்கொள்ள, சீதா (ஜெயலலிதா) மனம் உடைந்து போகிறார். ஏற்கெனவே செய்துகொண்ட செட்டப்பின்படி முரளி (பாலாஜி) அங்கே வர, அவரிடம் சீதா சென்று தன் மனக்குறையைச் சொல்லி அழ, அவன் கோடீ-க்கும் அந்தப்பெண் ணுக்கும் ஏற்கெனெவே தொடர்பு இருப்பதும், அவர்களுக்கு ஒரு குழந்தை இருப்பதும் தனக்கும் தெரியும் என்று கூற அதை நம்பி அவனுடன் செல்கிறாள். அவளை முன்னே போக விட்டு, முரளி பின்னே திரும்பி கோடீ-க்கு சைகையால் நன்றி தெரிவித்து விட்டுப்போகிறான்.

ஏற்கெனவே தன்னுடைய குழந்தையை வயிற்றில் சுமந்திருக்கும் தன் காதலி லீலாவை ஏமாற்றி அவள் தனக்கு ஆதாரமாக வைத்திருந்த தான் எழுதிய கடிதங்களை திருடி தன் பர்ஸில் வைத்து முரளி எடுத்துபோக, குடிகாரனாக வரும் தேங்காய் அந்த பர்ஸை பிக்பாக்கெட் அடித்துப்போய் அவைகளை நண்பன் சோவிடமும் அவன் மனைவி ரமாபிரபாவிடமும் படித்துக் காட்டுகிறான். இந்நிலையில் திருமணம் ஆகாமலேயே குழந்தை பெற்றுக் கொள்ளும் லீலா, அதை கோடீஸ்வரனின் அனாதை இல்லத்தில் போட வரும் போது அவரிடம் மாட்டிக்கொள்கிறாள். அவளைப்பார்த்த கோடீ-க்கு அதிர்ச்சி. 'இவள் முரளியின் பிறந்த நாளில் தன்னுடன் நடனம் ஆடிய பெண்ணல்லவா' என்று எண்ணி விசாரிக்க, அக்குழந்தைக்கு தந்தை முரளிதான் என்று அவள் சொல்லி அதற்கு ஆதாரமான கடிதங்களை முரளி எடுத்துக்கொண்டு போய் விட்டான் என்றும் சொல்கிறாள். அப்போது அந்த இடத்தில் இருக்கும் சோ 'கடிதங்கள் எங்கும் போய் விடவில்லை தன் நண்பனிடம் தான் இருக்கிறது' என்று சொல்ல, அவரும் கோடீயும் தேங்காயிடம் போய் நாலு போடு போட்டு கடிதங்களை வாங்கி, லீலாவை அழைத்துக்கொண்டு நியாயம் கேட்டு முரளியின் வீட்டுக்கு செல்கிறான். இதனிடையில் ஜெயலலிதாவை மீட்டு அழைத்து வரலாம் என்று செல்லும் குழந்தைகள் முரளியின் கஸ்டடியில் மாட்டிக்கொள்கிறர்கள். லீலாவை ஏற்றுக்கொள்ளும்படி வற்புறுத்தினால், தன் கட்டுப்பாட்டில் இருக்கும் குழந்தைகளைக் கொன்று விடுவதாக முரளி மிரட்ட, இருவருக்கும் பெரிய சண்டை நடக்க சண்டையின் முடிவில் முரளி கடிதங்களை பிடுங்கிக்கொண்டு, குழந்தைகள் அடைக்கப்பட்டிருக்கும் வேனில் தப்பியோட, கோடீஸ்வரன் ஜீப்பில் விரட்ட, ஒரு ரயில்வே லெவெல் கிராஸிங்கில் தண்டவாளத்தின் குறுக்கே வேனை நிறுத்தி விட்டு முரளி ஒளிந்திருந்து, குழந்தைகள் சாகப்போவதை வேடிக்கை பார்க்க, அதே நேரம் ஜீப்பில் வரும் கோடீ, தண்டவாளத்தின் குறுக்கே வேன் நிற்பதையும், ரயில் வேகமாக வந்து கொண்டிருப்பதையும் அதிர்ச்சியோடு பார்த்து, ரயில் வருவதற்குள் ஜீப்பினால் வேகமாக வேனை முட்டித்தள்ளுவதோடு, சடாரென ஜீப்பையும் ரிவர்ஸில் எடுக்க குழந்தைகள் காப்பாற்றப்படுகின்றனர். அப்போது தன்னிடம் இருக்கும் கடிதங்களை முரளி கொளுத்தப்போக, மீண்டும் கோடீ அவனுடன் சண்டையிட்டு அவைகளை கைப்பற்றுகிறான். அப்போது காரில் லீலாவுடன் வந்து இறங்கும் முரளியின் அம்மா, கடிதங்களைப் படித்து உண்மையறிந்து முரளியை அறைந்து, லீலாவை ஏற்றுக்கொள்ள நிர்ப்பந்திக்க, வேறு வழியில்லாமல் முரளி சம்மதித்து லீலாவுடன் சேருகிறான். மீண்டும் கோடீ-யும் சீதாவும் ஒன்று சேர, குழந்தைகள் குதூகலிக்க*...... முடிவு 'சுபம்'.

(கதைச்சுருக்கமே இவ்வளவு நீண்டு விட்டது. என்ன செய்வது?. எதையும் விட முடியாதே. இத்தனைக்கும், ஒரு செல்வந்தர் கோடீயின் அனாதை இல்லத்தில் இருந்து சேகரை தத்தெடுத்துப் போகும் காட்சிகளையெல்லாம் 'கட்' பண்ணிட்டேன்)

பாடல்களை கண்ணதாசனும், வாலியும் எழுதியிருக்க...
இசை...????, வேறு யார். "மெல்லிசை மாமன்னர்தான்". பாடல்கள் அத்தனையும் தேன் சொட்டியது. இன்றைக்கும் தெவிட்டாத தேன் விருந்தாக மக்கள் கேட்டு ரசிக்கிறார்கள்.

முதல் பாடல், தன்னுடைய அனாதை இல்லக்குழந்தைகளை காரில் அள்ளிப் போட்டுக்கொண்டு (அந்தக் காரை பார்த்தாலே சிரிப்பு வரும். 'காதலிக்க நேரமில்லை'யில் ரவிச்சந்திரன் வைத்திருப்பாரே அது போன்ற ஒரு கார்) நடிகர் திலகம் சென்னையைச் சுற்றி வரும் பாடல்.

நான் தன்னந்தனிக்காட்டு ராஜா
என் தோட்டத்தில் எத்தனை ரோஜா
நான் தீராத விளையாட்டுப்பிள்ளை
என் தொட்டிலில் எத்தனை முல்லை... முல்லை... முல்லை

சின்ன அரும்புகள் செய்யும் குறும்புகள்
சொல்லசொல்ல இந்த உள்ளம் இனித்திடும்
அள்ளிஎடுக்கையில் துள்ளிக் குதித்திடும்
முத்தம் கொடுக்கையில் மூக்கை கடித்திடும்
எங்க குடும்பம் ரொம்ப பெரிசு
பிள்லை குட்டிகளோ பத்து தினுசு
இவை அத்தனையும் அன்பு பரிசு
நல்ல முத்துப்போல் வெள்ளை மனசு

பேசும் மொழிகளில் பேதம் நமக்கில்லை
வாழும் உயிர்களில் ஜாதி இனமில்லை
அல்லா முதற்கொண்டு ஏசு புத்தன் வரை
எல்லோர் மதங்களும் எங்கள் வழித்துணை
பல இடத்தில் பிறந்த நதிகள்
ஒரு கடலில் வந்து சேரும்
பலநிறத்தில் பூத்த மலர்கள்
ஒரு மாலை போல் உருமாறும்

இந்தப்பாடல் காட்சி சென்னை மெரீனா கடற்கரை, பழைய உயிரியல் பூங்கா வில் இருந்த குட்டி ரயில், தீவுத்திடல் பொருட்காட்சியின் குடை ராட்டினம், ஜயண்ட் வீல் போன்றவற்றில் படமாக்கப் பட்டிருக்கும். நடிகர் திலகம் வழக்கத்துக்கு மாறாக தொப்பியணிந்து நடித்திருப்பார். முன்னிசையும் (prelude), இடையிசையும் (interludes) நம் மனத்தை மயக்கும்.

அடுத்தது தன்னுடைய குழந்தைகள் இல்லத்தில் நடிகர் திலகம் பாடும் 'செல்லக்கிளிகளாம் பள்ளியிலே' என்ற பாடல். 'ல...ல...ல... ல... ல...ல..லா' என்ற ஆலாபனையுடன் டி.எம்.எஸ். பாடத்துவங்கும்போதே நம் மனதை அள்ளிக் கொண்டு போகும்.

செல்லக்கிளிகளாம் பள்ளியிலே
செவ்வந்திப்பூக்களாம் தொட்டிலிலே
என் பொன் மணிகள்... ஏன் தூங்கவில்லை

கன்றின் குரலும் கன்னித்தமிழும்
சொல்லும் வார்த்தை அம்மா.. அம்மா
கருணைதேடி அலையும் உயிர்கள்
உருகும் வார்த்தை அம்மா.. அம்மா
எந்த மனதில் பாசம் உண்டோ
அந்த மனமே அம்மா... அம்மா
இன்பக்கனவை அள்ளித்தரவே
இறைவன் என்னைத் தந்தானம்மா
என் பொன்மணிகள் ஏன் தூங்கவில்லை

தந்தை ஒருவன் அந்த இறைவன்
அவனும் அன்னை இல்லாதவன்
தன்னைத்தேடி ஏங்கும் உயிர்கள்
கண்ணில் உறக்கம் கொள்வானவன்
பூவும் பொன்னும் பொருந்தி வாழும்
மழலை கேட்டேன் தந்தானவன்
நாளை உலகில் நீயும் நானும்
வாழும் வழிகள் செய்வானவன்
என் பொன் மணிகள் ஏன் தூங்கவில்லை.

எத்தனை முறை கேட்டாலும் கிறங்க வைக்கும் பாடல்களில் இதுவும் ஒன்று.

இந்தப்பாடல் படத்தில் இரண்டு முறை வரும். மகிழ்ச்சியான சூழ்நிலையில் முதலில் பாடிய இதே பாடலை, சேகரை பணக்காரர் ஒருவருக்கு தத்துக் கொடுத்த பின்னர் சோகமே உருவாக இருக்கும் குழந்தைகளை சமாதானப் படுத்த மீண்டும் ஒருமுறை சோகமாக பாடுவார். இரண்டுமே மனதைத்தொடும்.

பாலாஜியின் பிறந்தநாள் விழாவில், வெண்ணிற ஆடை நிர்மலாவுடன் நடிகர் திலகம் பாடும்
"சொர்க்கம் பக்கத்தில்...
நேற்று நினைத்தது கைகளில் மலர்ந்தது பெண்ணின் வண்ணத்தில்
பெண்ணின் வண்ணத்தில்...
நாளை வருவது இன்றே தெரிந்தது மின்னும் கண்ணங்களில்
சிந்தும் முத்தங்களில்"

மஞ்சள் நிற சேலையில் நிர்மலாவும், டார்க் மெரூன் கலர் ஃபுல் சூட்டில் நடிகர் திலகமும் ஆடும் இந்த காட்சி நம் இதயங்களை கொள்ளை கொள்ளும். நான் திரும்ப திரும்ப சொல்வது ஒன்றுதான். இக்காட்சிகள் மிக அருமையாக அமைய காரணம் அப்போதிருந்த அவருடைய ஒல்லியான அழகு உடம்பு. அதற்கேற்றாற்போல அமைந்த அழகான நடன அசைவுகள். இன்றைக்குப் பார்த்தாலும் அந்தப்பாடல் நம் மனதை அள்ளும். இப்பாடல் டி.எம்.எஸ்ஸும் ஈஸ்வரியும் பாடியிருப்பார்கள். (இப்பாடலுக்காக நடிகர்திலகம் 'அக்கார்டியனை' தோளில் மாட்டிக்கொண்டு வாசிப்பது போல உடலை பெண்ட் பண்ணி நிற்பதுதன் அன்றைய 'தினத் தந்தி' பத்திரிகையில் முழுப்பக்க விளம்பரம்).

ஓட்டலில் ஜெயலலிதா ஆடும் 'பாவை பாவைதான்... ஆசை ஆசைதான்' என்ற பாடலில் அதிகப்படியான இசையை அள்ளிக்கொட்டியிருப்பார் மெல்லிசை மன்னர். வயலின், கிடார், பாங்கோஸ் யாவும் ஒன்றையொன்று போட்டி போட்டுக்கொண்டு விளையாடும்.

நடிகர் திலகத்துக்கும் ஜெயலலிதாவுக்கும் டூயட் பாடல் வேண்டுமே என்ற சித்தாந்தத்தில் உருவான "என்னங்க... சொல்லுங்க... இப்பவோ எப்பவோ" என்ற பாடல்

கடைசி பாடல்... நம மனதை அள்ளிக்கொண்டு போகும். புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு ஓட்டலுக்கு ஜெயலலிதாவுடன் வரும் பாலாஜி, நடிகர் திலகத்தை ஒரு பாடல் பாடும்படி வற்புறுத்த, இவர் தன்னுடைய சோகத்தை யெல்லாம் கலந்து பாடும் இந்த பாடல் இன்றைய இளைஞர்களுக்கும் கூட ஃபேவரைட்.

'பியானோ' வாசித்துக்கொண்டே பாடுவது போன்ற பாடல் இது. டி.எம்.எஸ். அண்ணா பற்றி சொல்லணுமா. பிண்ணியெடுத்திருப்பார். எத்தனை ஆழமான வரிகள்.

எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன்
நான் வாழ யார் பாடுவார்
என் பாடல் நான் பாட பலர் ஆடுவார்
இனி என்னோடு யார் ஆடுவார்

பூப்போன்ற என் உள்ளம் யார் கணடது
பொல்லாத மனமென்று பேர் வந்தது
வழியில்லாத ஊமை எது சொன்னாலும் பாவம்
என் நெஞ்சும் என்னோடு பகையானது

கண்ணீரை நான் எங்கு கடன் வாங்குவேன்
அது கடனாக வந்தாலும் தடை போடுவேன்
நியாயங்கள் தெளிவாக நாளாகலாம்
நான் யாரென்று அப்போது நீ காணலாம்

உன் பார்வை என் நெஞ்சில் விழுகின்றது
உன் எண்ணம் எதுவென்று தெரிகின்றது
நான் இப்போது ஊமை மொழியில்லாத பிள்ளை
என்றேனும் ஓர் நாளில் நான் பேசலாம்

உன் பாதை நீ கண்டு நீ வாழலாம்
இனி என் பாதை நன் கண்டு நான் போகலாம்
எங்கே நீ சென்றாலும் சுகமாகலாம்
நான் எப்போதும் நீ வாழ இசை பாடலாம்

எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன்
நான் வாழ யார் பாடுவார்
என் பாடல் நான் பாட பலர் ஆடுவார்
இனி என்னோடு யார் ஆடுவார்

பாடலின்போது நடிகர் திலகம் மற்றும் ஜெயலலிதா கண்களில் மட்டுமா கண்ணீர்?. இல்லை நம் கண்களிலும்தான். பாடல் வரிகளின் பொருளை கொஞ்சம் கொஞ்சமாக உள்வாங்கிக்கொள்ளும் ஜெயலலிதாவின் முகபாவமும் அருமையாக இருக்கும்.

பியானோ வாசிப்பது போல நடிக்க நடிகர் திலகத்துக்கு சொல்ல வேண்டுமா?. ஏற்கெனவே பாசமலரில் 'பாட்டொன்று கேட்டேன்', புதிய பறவையில் 'உன்னை ஒன்று கேட்பேன்', 'பார்த்த ஞாபகம் இல்லையோ' (இரண்டாவது முறை), எங்க மாமாவுக்குப்பின்னர் வந்த கௌரவத்தில் 'மெழுகு வர்த்தி எரிகின்றது' போன்ற பாடல்களுக்கு அருமையாக பியானோ வாசிப்பது போல அபிநயம் செய்திருப்பார்.

("நடிகர் திலகத்தைப் பொறுத்தவரை எந்த வேஷமானாலும், அது நாதஸ்வர வித்வானோ அல்லது பிச்சைக்காரனோ, எதையும் முழுமையாக புரிந்து, முழுமையாக பயிற்சி எடுத்து, முழுமையாக செய்து முடிப்பவர். அவர் செய்து முடித்தபின், அது சம்மந்தமான கலைஞர்கள் அவரைப் பாராட்டும்படி இருக்குமே தவிர, குறை சொல்லும்படி இருக்காது" - பரத நாட்டியக் கலைஞர் டாக்டர் பத்மா சுப்ரமண்யம்).

நடிகர் திலகம், ஜெயலலிதா, வெண்ணிற ஆடை நிர்மலா, பாலாஜி, சோ, தேங்காய் சீனிவாசன், ஏ.கருணாநிதி, ரமாபிரபா, கி.கே.சரஸ்வதி, ஓ.ஏ.கே.தேவர், செந்தாமரை, டைப்பிஸ்டு கோபு இப்படி பெரியவர்கள் மட்டுமல்லாமல், அப்போதிருந்த குழந்தை நட்சத்திரங்கள் அத்தனை பேரும் (பேபி ராணி நீங்கலாக) பிரபாகர், சேகர், ராமு, ஜெயகௌசல்யா, ரோஜாரமணி, ஜிண்டா, சுமதி இன்னும் பெயர் தெரியாத குழந்தை நட்சத்திரங்களும் நடித்திருந்தனர். நடிகர் திலகத்தின் படங்களிலேயே முழுக்க முழுக்க குழந்தைகளோடு நடித்த படம் இது.

அப்போது நடிகர்திலகத்தின் பல படங்களை வரிசையாக இயக்கி வந்த இயக்குநர் ஏ.சி.திருலோகசந்தர் இப்படத்தையும் இயக்கியிருந்தார். வசனம் குகநாதன் எழுதியிருந்தார். மாருதிராவ் ஒளிப்பதிவு செய்திருந்தார் (கிளைமாக்ஸில் ரயில் தண்டவாளத்தின் குறுக்கே நிற்கும் வேனை ஜீப் இடித்துத்தள்ளிவிட்டு சட்டென்று ஜீப் ரிவர்ஸில் வர, உடனே ரயில் கடந்து செல்லும் காட்சி தியேட்டரில் பலத்த கைதட்டல் பெற்றது. ஒளிப்பதிவும் எடிட்டிங்கும் அருமை).

நான் துவக்கத்தில் சொன்னபடி, நடிகர் திலகத்தின் சிறந்த பொழுதுபோக்குப் படங்களில் 'எங்க மாமா'வுக்கு எப்போதும் ஒரு சிறப்பிடம் உண்டு.

"எங்க மாமா" பற்றிய என்னுடைய கருத்துக்களைப் படித்த அத்தனை அன்பு இதயங்களுக்கும் இதயங்களுக்கு நன்றி.

RAGHAVENDRA
17th November 2016, 06:38 AM
Entering into New Era ... 1970...NT flying high and high into fame...

RAGHAVENDRA
17th November 2016, 06:39 AM
Sivaji Ganesan Filmography Series

135. Enga Mama எங்க மாமா

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTFILMOGRAPHY/em02fw_zpsfyzlgler.jpg


தணிக்கை - 12.01.1970
வெளியீடு - 14.01.1970

தயாரிப்பு - ஜேயார் மூவீஸ்

நடிக நடிகையர் -
நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ஜெயலலிதா, பாலாஜி, சோ, கருணாநிதி, ஓ.ஏ.கே.தேவர், தேங்காய் சீனிவாசன், டைப்பிஸ்ட் கோப், செந்தாமரை, கௌரவ நடிகர்கள் வி.கே.ராமசாமி, எஸ்.ராமராவ், வெண்ணிற ஆடை நிர்மலா, ரமா பிரபா, எஸ்.எல்.லெட்சுமி, சி.கே.சரஸ்வதி, மற்றும் பலர்

குழந்தை நட்சத்திரங்கள்
கௌசல்யா, பிரபாகர், ரோஜா ரமணி, சேகர், லட்சுமி, விஸ்வேஸ்வர ராவ், ரஜனிஸ்ரீ, சுரேந்திர குமார், ஜிண்டா, ராமு, சுமதி, ரமேஷ்

வசனம் - குகநாதன்

பாடல்கள் - கவிஞர் கண்ணதாசன், வாலி

பின்னணி - டி.எம்.சௌந்தர்ராஜன், பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி

ஒளிப்பதிவு டைரக்டர் - எஸ். மாருதி ராவ்

ஒலிப்பதிவு - பாடல்கள் & ரீரிக்கார்டிங் - ஜே.ஜே.மாணிக்கம், உதவி கே.சம்பத், எம்.வெங்கட்ராமன், வசனம் - வி.எஸ்.எம். கோபால் ராம், உதவி - எம்.ஏ.சிவராஜ், எம்.என்.ராஜேஸ்வர ராவ்

Recorded on RCA Sound System

கலை - ஏ.கே.சேகர், உதவி - என். மோகன் ராஜ்-குப்புசாமி

நடன அமைப்பு - ஏ.கே. சோப்ரா, தங்கப்பன், உதவி - ராமு, சரோஜா, தாரா

ப்ராஸ்ஸிங் - ஜெமினி கலர் லேபரட்டரி, சென்னை - 6

எடிட்டிங் - ஆர்.ஜி.கோப், உதவி - கே.எம்.சுப்பையா, என். தாமோதரன், எஸ்.சௌந்தர்ராஜன்

மேக்கப் - ரங்கசாமி, டி.எம்.ராமச்சந்திரன், கோபால், திருநாவுக்கரசு, சின்னச்சாமி, உதவி - எல்.முத்தப்பா, டி.என்.ராமச்சந்திரன், சுந்தரம்

உடைகள் - ராமகிருஷ்ணன், கமால் பாட்சா, சீனிவாசன், நஹீம், உதவி - மணி, டி.எம்.சாமிநாதன்
செட்டிங்ஸ் - வி.நாகன் ஆசாரி,
செட் அலங்கார உதவி - பி.எல்.சண்முகம்
ஸ்டில்ஸ் - ஆர்.என்.நாகராஜ ராவ்,
சண்டைப் பயிற்சி - வெங்கடேஷ்
பொதுஜன தொடர்பு - சி.கிருஷ்ணமூர்த்தி
தயாரிப்பு நிர்வாகம் - எஸ்.பாஸ்கர்
அலுவலக நிர்வாகம் - சி.லக்ஷ்மண சாமி, எஸ்.ட்டி.பிச்சையா பிள்ளை
ஸ்டூடியோ - ஏவி.எம் ஸ்டூடியோஸ், சென்னை-26
உதவி டைரக்டர்கள் - எஸ்பி.முத்துராமன், நாஞ்சில் எஸ்.ராஜேந்திரன், ப.புகழேந்தி, டி.எஸ்.பாலன்

இசை - மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், உதவி - ஆர். கோவர்த்தனம், ஜோஸஃப் கிருஷ்ணா

தயாரிப்பு - பி.கே.வி.சங்கரன்-ஆறுமுகம்

இயக்குநர் - ஏ.சி.திருலோகசந்தர்

RAGHAVENDRA
17th November 2016, 06:40 AM
Reservation ad:

http://www.nadigarthilagam.com/papercuttings2/engamamareserve.jpg

running ad:

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/paper%20cuttings/ENGAMAMANOWRUNNING_zpspqjz39zj.jpg

ad image from: www.nadigarthilagam.com

Russellsmd
17th November 2016, 03:31 PM
"எங்க மாமா"-

குழந்தைகள் படம். குழந்தைகளின் படம்.

பெரியோர்களும் விரும்பும் குழந்தைகள் படம்.

பெரிய பெரிய விஷயங்களை மழலைகள் பேசிய குழந்தைகள் படம்.


எல்லாவற்றுக்கும் மேலாக...

எப்போதும் உள்ளத்தை வெள்ளை வெளேரென்று
வைத்திருந்த,

வெள்ளை உள்ளத்தில் நல்லெண்ணங்களே
நிரப்பியிருந்த,

எல்லோருக்கும் பிரியமானவராயிருந்த,

கலையன்றி வேறொன்றுமறியாத,

நடிகர் திலகமெனும் குழந்தை, குழந்தைகளோடு
குழந்தையாய் "விளையாடிய" படம்.

Sent from my P01Y using Tapatalk

RAGHAVENDRA
26th August 2017, 06:28 AM
Sivaji Ganesan Filmography Series136. Vilaiyattu Pillai விளையாட்டுப் பிள்ளை http://i60.tinypic.com/6pnq4o.jpgதணிக்கை - 01.02.1970வெளியீடு - 20.02.1970குறிப்பு .. மதுரையில் மட்டும் முன்னதாகவே வெளியிடப்பட்டதாக ஒரு தகவல். அதற்கான ஆதாரம் கிடைத்தவுடன் இங்கு பகிர்ந்து கொள்ளப்படும்.தயாரிப்பு - ஜெமினிநடிக நடிகையர் -நடிகர் திலகம் சிவாஜி கணேசன், பத்மினி, காஞ்சனா, மனோரமா, ருக்மணி, எஸ்.என்.லக்ஷ்மி, ஜி.சகுந்தலா, சீதாலக்ஷ்மி, பேபி ரோஜா ரமணி, கலாசிகாமணி டி.எஸ்.பாலையா, சோ, சிவகுமார், டி.ஆர்.ராமச்சந்திரன், வி.எஸ்.ராகவன், எஸ்.வி.ராமதாஸ், பூர்ணம் விஸ்வநாதன், மாஸ்டர் பிரபாகரன், மற்றும் பலர்.கலை - கங்காஒப்பனை - ரங்கசாமி, தனகோடி, கிருஷ்ணன்ஆடை அலங்காரம் - பி.ராமகிருஷ்ணன், தம்புநடனம் - பி.எஸ்.கோபால கிருஷ்ணன்ஸ்டண்ட் பயிற்சி - சுவாமிநாதன்ஒளிப்பதிவு டைரக்டர் - கே.எஸ்.பிரசாத்ஒலிப்பதிவு - டி.எஸ். ரங்கசாமி ஒலிப்பதிவு மேற்பார்வை - எஸ்.சி. காந்தி ஒலிப்பதிவாளர் - என்.ரகுநாதன், எஸ்.விமலன்படத்தொகுப்பு - எம். உமாநாத்ததுணை தொகுப்பாளர் - எஸ்.ஜெயராமன்பாடல்கள் - தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள், கவிஞர் கண்ணதாசன்இசை - திரை இசைத் திலகம் - கே.வி.மகாதேவன்பிராஸஸிங் - ஜெமினி கலர் லாபரட்டரிஉதவி டைரக்ஷன் - எஸ்.ஆர். தசரதன், எம்.கருப்பையா, தஞ்சை மதிஅஸோஸியேட் டைரக்டர் - கே.கே.ஸம்பத் குமார்கதை - கொத்தமங்கலம் சுப்புதிரைக்கதை - எஸ்.எஸ்.வாசன்வசனம் டைரக்ஷன் - ஏ.பி.நாகராஜன் 

RAGHAVENDRA
26th August 2017, 08:26 AM
https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/v/t1.0-9/21032329_473916536304082_58795915625645222_n.jpg?o h=b62467a8536e471db73292a44589b24c&oe=5A15381E

RAGHAVENDRA
28th August 2017, 04:45 PM
https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/v/t1.0-9/21034653_473839389645130_3627058662438863698_n.jpg ?oh=e1cbd8c633b09fa0dd042b48be411d76&oe=5A16AC92

RAGHAVENDRA
6th November 2017, 08:10 PM
Sivaji Ganesan Filmography Series

139. Ethiroli எதிரொலி

தணிக்கை 15.06.1970

வெளியீடு 27.06.1970

தயாரிப்பு - நவரத்னா ஃபிலிம்ஸ்நடிக நடிகையர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன், டி.எஸ்.பாலையா - கௌரவ நடிகர், நாகேஷ், சுந்தர்ராஜன், சிவகுமார், வி.எஸ்.ராகவன், ஓ.ஏ.கே.தேவர், கே.ஆர்.விஜயா, லட்சுமி, விஜயலலிதா, ஜோதிலட்சுமி, ஜி.சகுந்தலா, பேபி ரோஜாரமணி,
மூலக்கதை - கே.வி.ஆர். ஆச்சார்யா
இசை - திரை இசைத்திலகம் கே.வி.மஹாதேவன், உதவி - புகழேந்தி
பாடல்கள் - வாலி
பின்னணி - டி.எம்.சௌந்தர்ராஜன், ஏ.எல்.ராகவன், எல்.ஆர்.ஈஸ்வரிபாடல்கள்
ஒலிப்பதிவு - டி.எஸ்.ரங்கசாமி
ரீரிக்கார்டிங் - பி.வி.கோடீஸ்வர்ராவ்ஒளிப்பதிவு டைரக்டர் - என்.பாலகிருஷ்ணன்படத்தொகுப்பு - என்.ஆர்.கிட்டு
கலை - பி.பி.ராய் சௌத்ரிஉதவியாளர்கள் ஒளிப்பதிவு - டி. ஃபிலிப்ஸ்படத்தொகுப்பு - ஆர்.பி.திலக், எல்.கேசவன், எம்.கே.சுரேஷ்அரங்கப்பொருட்கள் - சினி கிராஃப்ட்ஸ்வெளிப்புறப்படப்பிடிப்பு - பிரசாத் புரொடக்ஷன்ஸ் லிட்.
ஒப்பனை - ஆர்.ரங்கசாமி, சி.ஏ. ராஜு, எம்.ராமசாமி, ஏ.பெரியசாமி, ஆர்.எம்.மாணிக்கம், பி.ஆர்.சிங், ஏ.எஸ்.ராஜூ
உடைகள் - ஆர்.ரங்கநாதன்நடன அமைப்பு - பி.எஸ்.கோபாலகிருஷ்ணன், கே.எஸ்.ரெட்டி
ஸ்டில்ஸ் - ஆர்.என்.நாகராஜ ராவ், ஏ.சங்கர் ராவ், ஆர்.என்.நரசிங்க ராவ்விளம்பரம் - எலிகண்ட்விளம்பர டிசைன்ஸ் - பரணி
அலுவலக நிர்வாகம்- என்.பி.ராமசாமி, பி.டி.ரகுபதி
தயாரிப்பு நிர்வாகம் - ஜி.ஜெயராமன்ஸ்டூடியோ - ஜெமினி, ஏவி.எம்.
ப்ராஸஸிங் - ஜெமினி கலர் லேபரட்டரி\
துணை வசனம் - என்.பாஸ்கரன்உதவி டைரக்ஷன் - ஏ.எம்.சாமிநாதந், நாமக்கல் ரா.பாலு, மா. அன்பழகன்தயாரிப்பு - நவரத்னா ஃபிலிம்ஸ்
Power of Attorney - G.N. வேலுமணி
திரைக்கதை வசனம் டைரக்ஷன் - கே.பாலசந்தர்

RAGHAVENDRA
6th November 2017, 08:21 PM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/23231292_503463293349406_8412755838303502937_n.jpg ?oh=6accd6ef0d9abbe61968b92342f376d7&oe=5AA040E0

https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/23231545_503463296682739_8779668504173698845_n.jpg ?oh=6d0b8b8de3e79f27d59acef369882b86&oe=5AA0CDF0

https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/23172576_503463300016072_4038389222777561987_n.jpg ?oh=921177754481156701f52ef7058d5abc&oe=5AA42034

RAGHAVENDRA
16th November 2017, 09:36 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/23518974_508191879543214_3583610442417748822_n.jpg ?oh=cda7429a6849e196c0a729de606b0068&oe=5AA7A8E3

Sivaji Ganesan Filmography Series

140. ராமன் எத்தனை ராமனடி Raman Ethanai Ramanadi


தணிக்கை 12.08.1970
வெளியீடு 15.08.1970

நடிக நடிகையர் - நடிகர் திலகம் சிவாஜி கணேசன், கே.ஆர்.விஜயா, முத்துராமன், எஸ்.வி.ராமதாஸ், ஷஃபிகான், சுதீர் புதுமுகம், மாஸ்டர் பிரபாகரன், எஸ்.என்.லட்சுமி, எம்.பானுமதி, மலேசிய ராணி, சரஸ்வதி, பேபி ராணி, கௌரவ நடிகர்கள் - எம்.என்.நம்பியார், நாகையா, நாட்டியப்பேரொளி பத்மினி, சதன், ஐ.எஸ்.ஆர்., ஜம்பு, பக்கோடா காதர், ரமேஷ், காத்தாடி ராம்மூர்த்தி, வீர ராகவன், மதி ஒளி சண்முகம், மற்றும் பலர்

கதை வசனம் - பாலமுருகன்

பாடல்கள் - கவிஞர் கண்ணதாசன்

பின்னணி பாடியோர் - டி.எம்.சௌந்தர் ராஜன், பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி, மாதுரி, சாய்பாபா

ஒலிப்பதிவு - பாடல்கள் - ரீரிக்கார்டிங் - ஜே.ஜே.மாணிக்கம்

ஒலிப்பதிவு வசனம் - எம்.டி.ராஜாராம்

ஒப்பனை - ஆர்.ரங்கசாமி, வெங்கடேஸ்வர ராவ், கே.ராமன், எஸ்.வி.மாணிக்கம், பத்மனாபன், தங்கப்பன்

உடையலங்காரம் - பி.ராமகிருஷ்ணன்

நடன அமைப்பு - சலீம்

செட்டிங்ஸ் - நாகன் ஆச்சாரி, கருப்பண்ண ஆச்சாரி, மூக்கையா ஆச்சாரி
பெயிண்டிங் - என்.மோகன் ராஜ், என்.குப்புசாமி
செட் பிராபர்டீஸ் - சினி கிராஃப்ட்ஸ்

விளம்பரம் - எலிகண்ட்
டிசைன்ஸ் - ஈஸ்வர்
பொது ஜனத் தொடர்பு - தஞ்சை குஞ்சிதபாதம்

ஸ்டில்ஸ் - சிம்மையா ஆனந்த்

அவுட்டோர் யூனிட் - ஏ.பி.ஆர். யூனிட், மூவி சர்வீஸஸ்

தயாரிப்பு நிர்வாகம் - கே.தங்கமுத்து

ஸ்டூடியோ - ஏவி.எம்.ஸ்டூடியோஸ், சென்னை 26

ப்ராஸஸிங் - டி.ராமசாமி, ஏவி.எம்.ஃபிலிம் லேபரட்டரி, சென்னை 26

படத்தொகுப்பு - ஆர்.தேவராஜன்

கலை - கங்கா

ஒளிப்பதிவு - ஏ.சோமசுந்தரம்

ஒளிப்பதிவு டைரக்டர் - பி.என்.சுந்தரம்

இசை - மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன்

உதவி டைரக்ஷன்- யூ.மோஹன், எஸ்.வேணுகோபாலன், ஆர்.பார்த்தசாரதி

அஸோஸியேட் டைரக்ஷன் - எஸ்.தேவராஜன்

தயாரிப்பு டைரக்ஷன்- பி.மாதவன்

RAGHAVENDRA
16th November 2017, 09:39 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/23622501_508193632876372_3930195336110802347_n.jpg ?oh=f580ba240f78417203374308bc305690&oe=5A8DF045

https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/23561542_508193626209706_2041348666263662017_n.jpg ?oh=2c8850ab5748a7683f85ed32ad4887c4&oe=5AA9D240

https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/23658808_508193629543039_2539507243291609473_n.jpg ?oh=29250ffead80ff42184c7deec8a40df4&oe=5A93F7E8

https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/23519033_508193679543034_584685662776308050_n.jpg? oh=226a06f4b20a2eb1791bdfa989733eb1&oe=5A9C6C63

https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/23561726_508193802876355_8579071521899166740_n.jpg ?oh=a7d3486800409791e8f0a7f4ae0c0c1c&oe=5AAD7109

https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/23561864_508193779543024_5200763150666479271_n.jpg ?oh=8191c6e2d5ccdbc718870bc824c4bd20&oe=5A64042C

RAGHAVENDRA
30th November 2017, 06:28 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/24232959_515915398770862_2021984344098525209_n.jpg ?oh=0d493763e10379eab81527a6e3721e23&oe=5ACFDBB2

Sivaji Ganesan Filmography Series

141. Sorgam சொர்க்கம்


தணிக்கை - 07.10.1970
வெளியீடு - 29.10.1970
நடிக நடிகையர் -
நடிகர் திலகம் சிவாஜி கணேசன், கே.ஆர்.விஜயா,ஆர்.எஸ்.மனோகர், முத்துராமன், பாலாஜி, எம்.ஆர்.ஆர்.வாசு, என்னத்தை கன்னையா, மாஸ்டர் ராமு & நாகேஷ், ராஜஸ்ரீ, சச்சு, கனக துர்க்கா, பானுமதி, விஜயசந்திரிகா, விஜயலலிதா, ஷப்னம், மற்றும் பலர்
மூலக்கதை - நன்னு
திரைக்கதை வசனம் - சக்தி டி.கே. கிருஷ்ணசாமி
பாடல்கள் - கவிஞர் கண்ணதாசன், ஆலங்குடி சோமு - பொன்மகள் வந்தாள்
பின்னணிக்குரல் - டி.எம்.சௌந்தர்ராஜன், பி.சுசீலா, ஏ.எல்.ராகவன், எல்.ஆர்.ஈஸ்வரி, ஜானகி, எஸ்.வி.பொன்னுசாமி, ஜிக்கி
கலை - செல்வராஜ், உதவி தமிழ்மணி
ஒப்பனை - ரங்கசாமி, ராமசாமி, வெங்கடேஸ்வர ராவ், மோஹன் ராவ், டி.டி.சுந்தரம், பத்மநாபன், திருநாவுக்கரசு, என்.வி.ராஜேந்திரன், ராமசாமி, தநகோடி
உடை அமைப்பு - சி.கே.கண்ணன், உதவி டி.நடராஜன், சம்பந்தம்
உடை அமைப்பு - பி.ராமகிருஷ்ணன், உதவி - பி.எஸ். நடராஜன்
புகைப்படம் - நாகராஜராவ், நரஸிங்க ராவ் & சங்கர் ராவ்
அரங்கப் பொருள்கள் - சினி கிராஃப்ட்ஸ்
நடன அமைப்பு - ஹீராலால், சலீம், சுந்தரம், மலேஷியா மகாலிங்கம், கைலாசம்
சண்டைப் பயிற்சி - திருவாரூர் எம். தாஸ்
பாடல்கள் - ரீரிக்கார்டிங் - ஒலிப்பதிவு மேதை டி.எஸ்.ரங்கசாமி - சாரதா, ஜே.ஜே. மாணிக்கம் - ஏவி.எம். உதவி - ஜோ அலோஸியஸ், ஆர். அனந்தராமன் - சாரதா, சம்பத் - ஏவி.எம்
ஒளிப்பதிவு உதவி - வி.கஜேந்திர மணி
ஸ்டூடியோ - ஏவி.எம்., வாசு, கற்பகம்
கலர் பிராஸஸிங் - ஜெமினி லேபரட்டரி
விளம்பர நிர்வாகம் - ஏ.வி.பதி
விளம்பர டிசைன்ஸ் - பக்தா, கலாநிகேதன்
விளம்பரம் - மார்ஸ் அட்வர்டைஸிங் பீரோ, மெர்குரி பப்ளிஸிடி ஏஜென்ஸீஸ்
புரொடக்ஷன் நிர்வாகம் - என்.எஸ். ராஜேந்திரன்
புரொடக்ஷன் மானேஜர்கள் - ஏ.மஹாலிங்கம், திருச்சேரை கே. கிருஷ்ணமூர்த்தி
புரொடக்ஷன் உதவி - கே.எஸ். பொன்னுராஜ்
அலுவலகம் - எஸ்.ஷண்முக சுந்தரம், என். பாலசுப்ரமணியம்
மற்றும் கிருஷ்ணன், சுப்ரமணியம், ஆரோக்ய்சாமி, சந்திரன், துரை
தயாரிப்பு நிர்வாகம் - கே.ஜி. விஜயரங்கம் - மாப்ளே
உதவி இயக்குநர்கள் - பி.எம். மணிவண்ணன், வி.என்.திருவேங்கடம், யூ. ராஜேந்திரன்
அஸோஸியேட் டைரக்டர் - கனக ஷண்முகம்
படத்தொகுப்பு - டி.ஆர். சீனிவாசலு, உதவி - என்.பி.சுரேஷ், சிலோன் மணி & எஸ். மணி
ஒளிப்பதிவு - அமிர்தம்
இசை - மெல்லிசை மன்ன்ன் எம்.எஸ்.விஸ்வநாதன், உதவி - கோவர்த்தனம், ஜோஸப் கிருஷ்ணா
தயாரிப்பு - டி.ஆர். சக்கரவர்த்தி
டைரக்ஷன் - ராமண்ணா

RAGHAVENDRA
30th November 2017, 06:30 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/24131183_515915762104159_3965685265911045096_n.jpg ?oh=b1a1037f2f1ddba647fef10581a0f8b8&oe=5A8DD1DF

https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/24068356_515915765437492_9200516535972253449_n.jpg ?oh=4484ba60f0c3f01de8a29c3f48ab5736&oe=5AA126D8

https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/24174439_515915772104158_3958197750832071204_n.jpg ?oh=f090ba2d64de3b8e621ba2592d48615f&oe=5ACDD155

https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/24312585_515915792104156_9191682330192795455_n.jpg ?oh=d770ab81e6719b65db890a3499b53d9d&oe=5ACB2F0A

https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/24058884_515915812104154_3328084415346984481_n.jpg ?oh=4743f7bd64afb6e6ee8947c7b6c82f4a&oe=5ACDA389

RAGHAVENDRA
29th December 2017, 11:47 PM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/26046974_529357730759962_6264761800975687397_n.jpg ?oh=d7fa69df4243a1cbdea0ca482caa4afb&oe=5AB51ADA

Sivaji Ganesan Filmography Series


142. Engirundho Vandhaal எங்கிருந்தோ வந்தாள்



தணிக்கை - 08.10.1970
வெளியீடு - 29.10.1970

தயாரிப்பு - சுஜாதா சினி ஆர்ட்ஸ்

நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ஜெயலலிதா, பாலாஜி, நாகேஷ், தேவிகா, சுந்தர ராஜன், ராஜா, நாகையா, ஹரிகிருஷ்ணன், டைப்பிஸ்ட் கோபு, குமார், நம்பி, ரமாபிரபா, சச்சு, ஆரன்முள பொன்னம்மா, எம்.பானுமதி, எஸ்.டி.சுப்புலட்சுமி, ஜெயகுமாரி, பேபி சுமதி, ராஜேசுவரி, மனோன்மணி, மற்றும் சிறப்புத்தோற்றத்தில் முத்துராமன், தேங்காய் சீனிவாசன், குலதெய்வம் ராஜகோபால்

மூலக்கதை - குல்ஷன் நந்தா

வசனம் - ஏ.எல்.நாராயணன்

பாடல்கள் கவிஞர் கண்ணதாசன்

பின்னணி பாடியவர்கள் - டி.எம்.சௌந்தர்ராஜன், சீர்காழி கோவிந்தராஜன், சாயிபாபா, பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி, எஸ்.ஜானகி, பி.லீலா

வசனம் ஒலிப்பதிவு - கே.ஆர்.ராமசாமி - பிரசாத், T.D.கிருஷ்ணமூர்த்தி - சாரதா

பிராசசிங் - ஜெமினி கலர் லேப்

ரிகார்டிங் & ரீரிக்கார்டிங் - ஒலிப்பதிவு மேதை T.S. ரங்கசுவாமி

ஸ்டூடியோ - பிரசாத், சாரதா

புரொடக்ஷன் நிர்வாகம் - ஆர். கிருஷ்ணமூர்த்தி

ஒப்பனை - திருநாவுக்கரசு, ரங்கசுவாமி, கோபால், ராமசுவாமி, பத்மநாபன், சுப்பாராவ், சுந்தரம்

ஆடை அலங்காரம்- நஹீம், ராமகிருஷ்ணன், சீனிவாசன்

ஸ்டில்ஸ் - சாரதி
விளம்பர டிசைன்கள் - S.A.நாயர்,
விளம்பரம் - ஏரீஸ் அட்வர்டைஸிங் பீரோ
பொதுநல தொடர்பு - ஃபிலிம் நியூஸ் அனந்தன்

உதவியாளர்கள் டைரக்ஷன் - நாஞ்சில் ராஜேந்திரன், ப.புகழேந்தி, T.S.பாலன்

செட் பிராபர்டீஸ் - சினி கிராஃப்ட்ஸ்

அவுட்டோர் யூனிட் - பிரசாத் புரொடக்ஷன்ஸ்
ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் - பிரசாத் புரொடக்ஷனஸ், Bombay

நடனப் பயிற்சி - தங்கப்பன், சின்னி-சம்பத்
சண்டைப்பயிற்சி - வெங்கடேஷ்

கலை - R.B.S. மணி

படத்தொகுப்பு - B. கந்தசாமி

ஒளிப்பதிவு - மஸ்தான், M. விஸ்வநாத் ராய்

இசை - மெல்லிசை மன்னர் M.S. விசுவநாதன், உதவி - கோவர்த்தன்

டைரக்ஷன் - A.C. திருலோகசந்தர்

RAGHAVENDRA
29th December 2017, 11:50 PM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/26168524_529358967426505_6906966403384035129_n.jpg ?oh=a82fb620e867ecfd7b28639770295c52&oe=5AF76C51

https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/26055557_529358980759837_5285957410856390662_n.jpg ?oh=ef033f38b2c27dd78fd9ae45954366c1&oe=5AC501CD

https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/26055748_529358977426504_4055377972243073738_n.jpg ?oh=da52250a4c82f3aba1591e8b1907df08&oe=5AB4A4ED

Ad images courtesy: Pammalar

RAGHAVENDRA
20th January 2018, 12:33 PM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/26734339_538900506472351_2285147467596914642_n.jpg ?oh=3fcb5cfe685b8b76fb2be241b83a1d85&oe=5AEF8E9B

Sivaji Ganesan Filmography Series

143. Pathukappu பாதுகாப்பு



தணிக்கை
வெளியீடு - 27.11.1970

தயாரிப்பு - சன்பீம்ஸ்

நடிக நடிகையர் - நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ஜெய ல்லிதா, டி.எஸ்.பாலய்யா, சுந்தர ராஜன், நம்பியார், சந்திரபாபு, நாகேஷ், கருணாநிதி, செந்தாமரை, தினேஷ் - அறிமுகம், கௌரவ நடிக நடிகையர் - சௌகார் ஜானகி, எஸ்.வி.சுப்பய்யா, தேங்காய் சீனிவாசன்

கதை - எஸ்.எல்.புரம் சதானந்தம்

வசனம் - பாசுமணி

பாடல்கள் - கவியரசு கண்ணதாசன்

பின்னணி - டி.எம்.சௌந்தர்ராஜன், சீர்காழி கோவிந்தராஜன், சந்திரபாபு, பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி

கலை - தோட்டா

செட் பிராபர்டீஸ் - நியோ ஃபிலிமோ கிராஃப்ட்ஸ்

அவுட்டோர் யூனிட் - பிரசாத் புரொடக்ஷன்ஸ்

மேக்கப் - ஏ.வி. ராமச்சந்திரன், ரங்கசாமி, கோபால், பெரியசாமி, ராமசாமி, நாராயண சாமி, மாணிக்கம்.

உடைகள் - பி.ராமகிருஷ்ணன், ஏ.ராமசாமி, சீனிவாசன், உதவி - கே.ராஜன், பாபு, பாலு

சிகை அலங்காரம் - ரவி

நடன அமைப்பு - பசுமர்த்தி கிருஷ்ணமூர்த்தி, சின்னி-சம்பத்

ஸ்டண்ட்- கே.சேதுமாதவன்

ஸ்டில்ஸ் - சி.பத்மனாபன்,
விளம்பரம் - எலிகண்ட்
விளம்பர டிசைன்ஸ் - ஈஸ்வர்

பாடல்கள் ஒலிப்பதிவு - ஜே.ஜே.மாணிக்கம், டி.எஸ்.ரங்கசாமி
ரீரிக்கார்டிங் - ஜே.ஜே.மாணிக்கம்
Recorded on RCA Sound System

ஆபரேடிவ் காமிராமேன் - டி.எஸ். பாண்டியன்

ப்ராஸ்ஸிங் - ஜெமினி கலர் லேபரட்டரி

ஸ்டூடியோ - ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிடோன், சென்னை - 10

ஸ்டூடியோ புரோகிராம்ஸ் - ஒய்.வி.ராவ்
ஃப்ளோர் இன்சார்ஜ் - எஸ். ஆறுமுகம்
ஜூனியர் ஆர்டிஸ்ட் ஏஜெண்ட் - குமரேசன்
எடிட்டிங் - ஏ.பால் துரைசிங்கம், உதவி - பி.லெனின்
உதவி டைரக்ஷன் - எஸ்.சீனிவாசன், எஸ்.கே.அன்வர் ஜான், பி.ஆனந்த்

தயாரிப்பு நிர்வாகம் - டி.ராமானுஜம், உதவி - எஸ்.சந்திரசேகர், துரை, ரத்தினம், பொன்னுராஜ், கமலஹாசன், லாரன்ஸ், மணி

தயாரிப்பு மேற்பார்வை - பி.இருதயநாத்

ஒளிப்பதிவு டைரக்டர் - ஜி.விட்டல் ராவ்

2வது யூனிட் இயக்குநர்கள் - திருமலை மகாலிங்கம் - எஸ்.ராமனாதன்

இசை - மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், உதவி -ஆர். கோவர்த்தனம், ஜோசஃப் கிருஷ்ணா

திரைக்கதை டைரக்ஷன் - ஏ.பீம்சிங்


https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/26734017_538901366472265_6109503703793556299_n.jpg ?oh=8baf9f173dce6704e5a1c4f4a015389d&oe=5ADB111D

RAGHAVENDRA
20th February 2018, 07:40 PM
https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/v/t1.0-9/27972579_554106928285042_1660812569749471356_n.jpg ?oh=3bf416211d5f877383447f7fc9beb3c0&oe=5B2309D8

https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/v/t1.0-9/27867304_554107008285034_1608186757599051550_n.jpg ?oh=e4108a607ab848f832696a45a5c8fabd&oe=5B14BFFA


Sivaji Ganesan Filmography Series
144. Iru Dhuruvam இரு துருவம்


தணிக்கை 31.12.1970
வெளியீடு – 14.01.1971

தயாரிப்பு – ஜோஸ் ஃபிலிம்ஸ் அளிக்கும் P.S.V. பிக்சர்ஸ்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன், நாட்டியப் பேரொளி பத்மினி, முத்துராமன், நாகேஷ், சுந்தரராஜன், V. நாகையா, A. வீரப்பன், S.V. ராமதாஸ், V.S. ராகவன், P.S. வீரப்பா, ராஜஸ்ரீ, பண்டரிபாய், P.N. சரஸ்வதி, சீதாலட்சுமி, கௌசல்யா, சோபனா, பேபி குமுதா,

கதை திலீப் குமார்

வசனம் – M.K. ராமு

பாடல்கள் – கவிஞர் கண்ணதாசன்

பின்னணி T.M. சௌந்தர் ராஜன், சீர்காழி கோவிந்தராஜன், P. சுசீலா, L.R. ஈஸ்வரி

ஒலிப்பதிவு –
பாடல்கள் – J.J. மாணிக்கம் (AVM), A.R. சுவாமிநாதன் (விஜயா கார்டன்)
வசனம் – சாந்தாராம், M.K. பாலு, R.S. ராஜூ (AVM)
ரீரிக்கார்டிங் – J.J. மாணிக்கம், உதவி – K. சம்பத்

கலை – கங்கா

மேக்கப் – ரங்கசாமி, N.V. ராஜேந்திரன், தனகோடி, பத்மநாபன், பெரியாமி, நாராயணசாமி, ராமசாமி, அப்பு

உடைகள் – P. ராமகிருஷ்ணன், R.S. மணி, M. ராஜூ, தம்மு

செட்டிங்ஸ் – V. நாகன் ஆச்சாரி, K. மூக்கையா ஆச்சாரி, A. கருப்பையா ஆச்சாரி
பெயிண்டிங்ஸ் – N. மோஹன் ராஜ், N. குப்புசாமி

ஸ்டில்ஸ் – C. பத்மநாபன்
விளம்பர டிசைன்ஸ் – பக்தா
விளம்பரம் – மார்ஸ் (மின்னல்)

சண்டைப் பயிற்சி – K. சேதுமாதவன்

நடனப் பயிற்சி – P.S. கோபாலகிருஷ்ணன், சின்னி-சம்பத்

வெளிப்புறப் படப்பிடிப்பு யூனிட் – பிரசாத் புரொடக்ஷன்ஸ் (P) லிட்
அரங்கப் பொருட்கள் – சினி கிராஃப்ட்ஸ்

ஸ்டூடியோ – ஏவிஎம் ஸ்டூடியோஸ், சென்னை-26

ப்ராஸஸிங் – ஜெமினி கலர் லேபரட்டரி, சென்னை-6

எடிட்டிங் – a. பால் துரைசிங்கம்

புரொடக்ஷன் எக்ஸிகியூடிவ் – S. கிருஷ்ணமூர்த்தி

புரொடக்ஷன் நிர்வாகம் – C. கிருஷ்ணன்

உதவி டைரக்ஷன் – வேம்பத்தூர் கிருஷ்ணன், A.S. சின்னையா, K. மனோகர், C.N. பழனிவேல்

ஒளிப்பதிவு – A. வெங்கட்
ஆபரேடிவ் காமிராமேன் – K.S. பிரகாஷ்
ஒளிப்பதிவு டைரக்டர் – A. வின்சென்ட்

இசை – மெல்லிசை மன்னர் M.S. விஸ்வநாதன்

தயாரிப்பாளர் – P.S. வீரப்பா

டைரக்ஷன் – S. ராமனாதன்

RAGHAVENDRA
3rd October 2018, 07:49 PM
Sivaji Ganesan Filmography Series

145. Thangaikkaga தங்கைக்காக

https://i.ytimg.com/vi/YE8sk2suGkQ/maxresdefault.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTFILMADS/FB_IMG_1444565363447_zpsyrpqbdon.jpg

தணிக்கை – 12.01.1971
வெளியீடு – 06.02.1971

தயாரிப்பு – ஜூபிடர் ஆர்ட் மூவீஸ்

நடிக நடிகையர் – நடிகர் திலகம் சிவாஜி கணேசன், லட்சுமி, P. நிர்மலா, டி.எஸ்.பாலையா, நாகேஷ், நம்பியார், முத்துராமன், ராமதாஸ், கௌரவ நடிகர்கள் – V. நாகையா, T.K. பகவதி, சச்சு, சுந்தரிபாய், காந்திமதி, யசோதா, சரளா, பேபி சுமதி, எஸ்.ஏ.கண்ணன், வசந்தகுமார், பார்த்திபன்,. ஜீவகன், டைப்பிஸ்ட் கோபு, குண்டு கருப்பையா, மாஸ்டர் பிரபாகர் மற்றும் பலர்

திரைக்கதை – அழகரசன்,

வசனம் – குகநாதன்

பாடல்கள் – கவிஞர் கண்ணதாசன்

பின்னணி – T.M. சௌந்தர்ராஜன், A.L. ராகவன், P. சுசீலா, L.R. ஈஸ்வரி

ஒலிப்பதிவு – J.J. மாணிக்கம் (பாடல்கள்),
M.D. ராஜாராம் (வசனம்).
கலை – கங்கா

நடனம் – சோப்ரா
சண்டைப்பயிற்சி – திருவாரூர் தாஸ்

எடிட்டிங் – R. விட்டல்

பிராஸஸிங் & பிரிண்டிங் – A.V.M. பிலிம் லேபரட்டரி R. பரமேஸ்வரன்

ஒப்பனை – R. ரங்கசாமி, ராமசாமி, R. மாணிக்கம், A. மாணிக்கம், R. பத்மநாபன், சுந்தரம்

செட்டிங்ஸ் – V. நாகன் ஆச்சாரி
பெயிண்டிங் – N. மோகன் ராஜ், N. குப்புசாமி

உடை அலங்காரம் – R. ரெங்கநாதன்
சிகை அலங்காரம் – பார்த்தசாரதி, பாஸ்கர் ராவ்
விளம்பர ஓவியம் – சீனி சோமு
விளம்பரம் – எலிகண்ட்
ஸ்டில்ஸ் – K. வினாயகம்
விளம்பர நிர்வாகம் – சி.பி.எ. வேலன்

செட் ப்ராபர்டீஸ் – சினி கிராப்ட்ஸ்
அவுட்டோர் யூனிட் – பிரசாத் புரொடக்ஷன்ஸ் (பி) லிமிடெட்
ஸ்டூடியோ – A.V.M.
புரொடக்ஷன் நிர்வாகம் – K. சிவசங்கரன்
டைரக்ஷன் உதவி – A.P. ஜெகதீஷ், S.V. கணபதி, C.PA. வேலன்
ஒளிப்பதிவு டைரக்டர் – P. பாஸ்கர் ராவ்
ஆபரேடிவ் காமராமேன் – D. பாலகிருஷ்ணன்
இசை – மெல்லிசை மன்னன் எம்.எஸ்.விஸ்வநாதன்

தயாரிப்பு – திருமதி புளோரிடா பெர்னாண்டோ

டைரக்ஷன் – D. யோகானந்த்

RAGHAVENDRA
7th January 2019, 10:40 AM
Sivaji Ganesan Filmography Series

146. Arunodhayam அருணோதயம்

https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/49549267_760258621003204_4496061822327062528_n.jpg ?_nc_cat=110&_nc_ht=scontent.fmaa3-1.fna&oh=55614eb8c797006c2471f9715ab54fe0&oe=5CCA2F96

https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/49745743_760258724336527_4160421041656561664_n.jpg ?_nc_cat=106&_nc_ht=scontent.fmaa3-1.fna&oh=51ba97edff0ff3ff4fe1b7405ba43807&oe=5C8E904A



தணிக்கை 23.02.1971
வெளியீடு 05.03.1971
தயாரிப்பு – முக்தா ஃபிலிம்ஸ்
நீளம் 4614.30 மீட்டர்
சான்றிதழ் எண் 65771

நடிக நடிகையர்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன், அபிநய சரஸ்வதி B. சரோஜாதேவி, முத்துராமன், சோ, வி.எஸ்.ராகவன், மூர்த்தி, வி.கோபாலகிருஷ்ணன், நீலு, தேங்காய் சீனிவாசன், கண்ணன், குலதெய்வம் ராஜகோபால், B.N.R., செந்தாமரை, எஸ்.ராமராவ், லக்ஷ்மி, மனோரமா, அஞ்சலி தேவி, கனக துர்க்கா, ஜெயகுமாரி, K.R. தேவகி,

கதை வசனம் – மதுரை திருமாறன்

பாடல்கள் – கவிஞர் கண்ணதாசன்,

பின்னணி – டி.எம்.சௌந்தர்ராஜன், எஸ்.பி.பாலசுப்ரமண்யன், பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி, மனோரமா

இசையமைப்பு – திரை இசைத்திலகம் கே.வி. மகாதேவன்

ஒளிப்பதிவு டைரக்ஷன் – என்.எஸ். வர்மா, ஆபரேடிவ் காமிராமேன் – P.B. மாசிலாமணி

ஒலிப்பதிவு – எம்.வி.கருணாகரன்

பாடல்கள் ரிகார்டிங் & ரீரிகார்டிங் – ஒலிப்பதிவு மேதை டி.எஸ்.ரங்கசாமி

படத்தொகுப்பு – E.V. ஷண்முகம்

கலை – அ. ராமசாமி

ஸ்டில்ஸ் – B. ரெங்கனாதன்

ஒப்பனை – ரங்கசாமி, பத்மனாபன், சின்னசாமி, பாண்டியன், சஹாதேவ ராவ், மாணிக்கம், போதராஜூ

ஆடை – ராமகிருஷ்ணன், ரெஹ்மான், குப்புராஜ், நாகராஜன்

நடனம் – தங்கப்பன், சின்னி-சம்பத், ஜெயராமன்

சண்டைப்பயிற்சி – ஏ.எஸ்.சுவாமிநாதன்

ப்ராஸஸிங் – விஜயா லெபோரடரி By P.M. விஜயராகவலு
விளம்பரம் – மார்ஸ் (மின்னல்)
டிசைன் – S.A. நாயர், ரஹ்மான்
பொது ஜனத்தொடர்பு – ஆனந்தன்

ப்ராபர்டீஸ் – சினி கிராப்ட்ஸ்

புரொடக்ஷன் நிர்வாகம் – P. ராமதாஸ், M. பாக்யம், B. நவாப்ஜான்

ஸ்டூடியோ – ஸ்ரீ வெங்கடோஸ்வரா சினிடோன், சாரதா ஸ்டூடியோ

தயாரிப்பு நிர்வாகம் – M. சேதுமாதவன்

உதவி டைரக்ஷன் – C.N. முத்து, M.L. கோவிந்

தயாரிப்பு – V. ராமசாமி

டைரக்ஷன் – V. சீனிவாசன்

RAGHAVENDRA
3rd March 2019, 01:14 PM
Sivaji Ganesan Filmography Series

147. Kulama Gunama குலமா குணமா

https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/52932963_2196152107102116_8216837861102583808_n.jp g?_nc_cat=105&_nc_ht=scontent.fmaa3-1.fna&oh=be6ffb54fd55dffec49cd294387c60aa&oe=5D148533

RAGHAVENDRA
25th April 2019, 04:09 PM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/58379905_823192451376487_8701836395779457024_n.jpg ?_nc_cat=110&_nc_ht=scontent.fmaa3-1.fna&oh=087326a586f430fea306244dc99c502a&oe=5D3034FF