PDA

View Full Version : தல புராணம்

geno
6th February 2013, 04:50 PM
இந்தக் கவிதையை இதற்கு முன்பே ஒருமுறை இங்கே இட்டிருக்கிறேன். எங்கே எனத் தெரியக் கிடைக்கவில்லை..எனவே...

தல புராணம்
=============

சாக்கடையோர மூத்திரச் சுவரில்
'கர்ப்பக்கிரகம்' அமைந்த பிள்ளையார்
மூக்கு நீளம் முழுதும் நாற்றமேறி...
அவஸ்தையாய் 'நெளிந்தருளி'க் கொண்டிருக்கிறார்

மேலே கூரையில்லா விநாயகருக்கு
தினசரி பால்பழ தேனாபிஷேகம்
இல்லாவிட்டாலும்...
காக்கை எச்சம் கட்டாயம் உண்டு

'மெயின் ரோட்டோரக்' கணேசருக்கு
கம்பிக் கதவில்லை உண்டியலுக்குப் பூட்டுண்டு
பிள்ளையார் ஆண்டியாய்
உண்டியார் பத்திரமாய்

அர்த்தராத்திரியில் 'மன்மத' தேவர்களோடு
காட்சி அரங்கேற்றும் 'பத்து ரூபாய்' இரவுராணிகளின்
இலவச தரிசனம் கண்டுகளிக்கும்
அரசமரத்தடி 'பிரும்மச்சாரி'ப் பிள்ளையார்

கொழுக்கட்டையே பார்த்திராத
'பீ சந்து' முனைப் பிள்ளையாருக்கு
தினசரி இரவில் 'சாராய சதுர்த்தி'
கொண்டாடும் குடிமக்கள்

பரீட்சை மார்க்குகளின் விகிதாசாரப்படி
வேண்டுதலில் கூட்டியோ குறைத்தோ
தேங்காய் உடைக்கப்படும்
பள்ளி(க்கூட)வாசல் பிள்ளையார்

விடலைக்குமரிகள் குளிப்பதை
பார்க்க முடியாதபடி ஆலமர விழுதுகள்
மறைத்திருக்கும்... குளக்கரைக் கணபதி...
உடைமாற்றும்போது சாட்சியாக

கரையுடைத்து வெள்ளம்பெருகி
'அவல் பொரி எலி' யோடு
அடித்துச் செல்லப்பட்ட
ஆற்றங்கரை ஓரப் பிள்ளையார்

தொலைபேசி இணைப்புக்காக வெட்டப்பட்ட
'தூங்கு மூஞ்சி' மரக்கிளை விழுந்து
மூக்குடைந்து போன விநாயகர்
'வலம்புரியா?'...'இடம்புரியா?'

'பொன்னரைஞானும் பூந்துகிலாடையும்'
களவாடப்பட்டு...
காட்சி தரும் - பிளாட்பாரக்
'கோவண' கணேசர்

அழுகல் தேங்காயும் கூழான பழமும்
வாடிப்போன சாமந்தியுமே
விதிக்கப்பட்ட...
'சேரி'ப் பிள்ளையார்

புதுவருஷ உற்சவத் திருவிழாவின்
'வரவு செலவு' கணக்குக்கான அடிதடியில்
இழுத்துப் பூட்டப்பட்டு..
கோயிலில் சிறையிருக்கும்
'காலனி'ப் பிள்ளையார்

பக்தகோடிகளால் கட்டியிழுத்துவரப்பட்டு
பூரண அலங்காரத்தோடும் ஆத்திக கோஷங்களோடும்
'அடி உதை மிதி குத்து வெட்டு' பெற்று
'ஜல சமாதி' - செய்யப்படும்
கடற்கரை விநாயகர்

இப்படியாகத்தானே பல புண்ணியத் தலங்களில்
எழுந்து அருளியிருந்தாலும்...
அழும் குழந்தையை சிரிக்க வைக்கும்
யானை முகத் தொந்திக் 'காலண்டர் பிள்ளையார்'
எனக்குப் பிடித்தது.

P_R
6th February 2013, 05:33 PM
Nice one.
புதுக்கவிதைக்கும் எனக்கும் சொல்ப தூரம். சிலபல single quoteடோட significance பிடிபடலை.
பழைய பதிவுகள்ல கவிதைகள் நிறைய உண்டோ?

ஆதிக்க கோஷம் - என்றும் பாடம்.

SoftSword
6th February 2013, 09:37 PM
ஆத்திக கோஷம் = ஆதிக்க கோஷம் ??

venkkiram
6th February 2013, 09:51 PM
"அழும் குழந்தையை சிரிக்க வைக்கும்
யானை முகத் தொந்திக் 'காலண்டர் பிள்ளையார்'
எனக்குப் பிடித்தது. "

Nostalgia. I am missing that for many years. By the way, was this penned by Geno? Very good!

geno
7th February 2013, 08:46 AM
ellOrukkum nanRi - will reply to all again later!

geno
8th February 2013, 12:06 AM
Nice one.
புதுக்கவிதைக்கும் எனக்கும் சொல்ப தூரம். சிலபல single quoteடோட significance பிடிபடலை.
பழைய பதிவுகள்ல கவிதைகள் நிறைய உண்டோ?

ஆதிக்க கோஷம் - என்றும் பாடம்.

None of the single quotes "refer" to any other poetry or a particular/specific issue, so that it can made to sound ironic! except the obvious ones like :

'வலம்புரியா?'...'இடம்புரியா?' and 'பொன்னரைஞானும் பூந்துகிலாடையும்'.

பழைய பதிவுகளில் அவ்வளவா கவிதைகள் இல்லை; ஆனால் சில கவிதை "முயற்சிகள்" உண்டு!

வைரமுத்துவால் கவரப்பட்ட ஒரு தலைமுறையில் பிறந்த ஜந்துக்கள் - எப்படியாவது கவி எழுதுவது/முயற்சி செய்வது என்பது ஒரு கடமை மாதிரி முன்பு இருந்தது! சுஜாதா 1991-1994 இடைப்பட்ட காலத்தில் குமுதம் இதழ் ஆசிரியராக இருந்த போது புதிய விசைக் கவிதைகள் நிறைய அறிமுகம் செய்தார் (குமுதம் ஸ்பெஷல்-இல் நடுப்பக்க தாராள அழகிகளையும் அறிமுகம் செய்து மகிழ வைத்தார்!)....
.......அம்மாதிரி கவிதைகளில் - ந.மகுடேசுவரன், பசுவய்யா, தருமு சிவராமு, ப்ரமிள், கல்யாண்ஜி, ஞானக்கூத்தன், கலாப்ரியா, மனுஷ்யபுத்திரன் - என்று நிறைய படிக்கக் கிடைத்தது..இன்னும் அதில் சிலதை - பக்கங்கள் கிழித்து சேகரித்து என் வீட்டு மொட்டை மாடி பரணில் வைத்திருக்கிறேன் (ஆனால் தேடினால் அப்பம் நான் வாங்கியிருந்த ஒரு மேட்டர் புக்குதான் கெடைச்சது!)......

இதேபோல, கமல் பேட்டிகளை வெட்டி ஸ்டேப்ளர் போட்டு வைத்திருக்கிறேன்..அவருடைய "தேடித் தீர்ப்போம் வா" புத்தகம் கூட இருக்குது..ஒருமுறை அதை ஜோவுக்காக எடுத்து ஸ்கேன் பண்ணலாம்னு தேடினேன் - அது கெடைக்கலை! பழைய காதலி அனுப்பியிருந்த ஒரு க்ரீட்டிங் கார்டு! நேரில் கிடைக்காதது அதில் "ஒற்றி"...

கவிதை எழுதுவது, படிப்பது எல்லாம்போய் - முன்னாடி படிச்சதை நினைப்பதே ஒரு சுகானுபவமாகி விட்டது; "மேசை நடராசர்" என் நினைவில் இருந்து தேடி எடுத்ததுதான்! கூகுளாண்டவர் முழு கவிதையையும் கொடுத்து விட்டார்!

எப்போதாவது எனக்கு மீண்டும் கிடைக்கப் போகும் கவிதைகளை சேகரித்து வைத்திருக்கும் என் மொட்டை மாடிப் பரணுக்கு நன்றி..எப்போது கிடைத்தாலும் அந்த செல்லரித்த தாள்களில் என் பால்ய கால சந்தோஷமும் இருக்கப் போகிறது.

geno
8th February 2013, 12:17 AM
"அழும் குழந்தையை சிரிக்க வைக்கும்
யானை முகத் தொந்திக் 'காலண்டர் பிள்ளையார்'
எனக்குப் பிடித்தது. "

Nostalgia. I am missing that for many years. By the way, was this penned by Geno? Very good!

நன்றி! சுஜாதா மேற்கோள் காட்டியது போல 'எல்லாரிடமும் ஒரு நல்ல கதை/கவி/படைப்பு இருக்கும்' - எனக்கு இது ஒன்றுதான் உருப்படியாகத் தேறும் போல!

geno
8th February 2013, 12:32 AM
ஆத்திக கோஷம் = ஆதிக்க கோஷம் ??

P_R means the Morbid mobocracy of the Vinayaga chathurthi celebrations on the Beach, to be the bugle of the Hegemonists rather than the soothing Flute of the Spiritualists
(if i understood the context in which P_R makes it correctly)

P_R
8th February 2013, 09:25 AM
None of the single quotes "refer" to any other poetry or a particular/specific issue, so that it can made to sound ironic! except the obvious ones like :

'வலம்புரியா?'...'இடம்புரியா?' and 'பொன்னரைஞானும் பூந்துகிலாடையும்'.
அதுனால தான் கேட்டேன். சிலபல இடங்கள்ல ஐரனி தெரிஞ்சுது.

பழைய பதிவுகளில் அவ்வளவா கவிதைகள் இல்லை; ஆனால் சில கவிதை "முயற்சிகள்" உண்டு!
வலையெனும் பெருங்கடலில் தேடி Elizabeth Barret Browning translation படிச்சிக்கிட்டு இருக்கேன் :lol2: வரிசையா வரேன்.

- ந.மகுடேசுவரன், பசுவய்யா, தருமு சிவராமு, ப்ரமிள், கல்யாண்ஜி, ஞானக்கூத்தன், கலாப்ரியா, மனுஷ்யபுத்திரன் - என்று நிறைய படிக்கக் கிடைத்தது..இன்னும் அதில் சிலதை - பக்கங்கள் கிழித்து சேகரித்து என் வீட்டு மொட்டை மாடி பரணில் வைத்திருக்கிறேன்
தருமு சிவராமு, ப்ரமிள் ஒரே ஆள் தானே? ஒரு வேளை அந்த இரண்டு பெயர்கள்ல வந்த கவிதை style வெவ்வேற மாதிரியா?

(ஆனால் தேடினால் அப்பம் நான் வாங்கியிருந்த ஒரு மேட்டர் புக்குதான் கெடைச்சது!)...... Haha. மகுடேஸ்வரனோட 'சிற்றின்பம்' ன்ற கவிதை ஞாபகத்துக்கு வருது. சரியா வரிகள் ஞாபகம் இல்லை. தேடிக் கிடைச்சதும் சுட்டி தரேன்.

இதேபோல, கமல் பேட்டிகளை வெட்டி ஸ்டேப்ளர் போட்டு வைத்திருக்கிறேன்..அவருடைய "தேடித் தீர்ப்போம் வா" புத்தகம் கூட இருக்குது..ஒருமுறை அதை ஜோவுக்காக எடுத்து ஸ்கேன் பண்ணலாம்னு தேடினேன் - அது கெடைக்கலை!
I think maiam guys would be pretty interested if you do manage to find them.

"மேசை நடராசர்" என் நினைவில் இருந்து தேடி எடுத்ததுதான்! கூகுளாண்டவர் முழு கவிதையையும் கொடுத்து விட்டார்!
ஞானக்கூத்தன் - ஓரளவுக்கு கல்யாண்ஜி - தவிர ரொம்ப பிடிச்சவங்கன்னு யாரையும் சொல்ல முடியாது.
ஞானக்கூத்தனுக்கு ஒரு திரி ஆரம்பிச்சு நகரவே இல்லை : http://www.mayyam.com/talk/showthread.php?7693-GnAnakoothan

அவர் கவிதைகளைப் பத்தி நீட்டி முழக்கி எழுதணும்னு - பரிமேலழகனும்னு :lol2: - நினைப்பேன். கவிதையைப் பத்தி எழுதி ரொம்ப தட்டையாக்கிடுவோம்னு ஒரு தயக்கம். புறநானூறு பத்தி ஒரு podcast பண்ணி ரொம்ப flat ஆயிடுச்சு. அதுனால ஞானக்கூத்தன் பிழைச்சிக்கிட்டே வரார். ஒருநாள் சிக்க வச்சிருவேன்.

பழைய காதலி அனுப்பியிருந்த ஒரு க்ரீட்டிங் கார்டு! நேரில் கிடைக்காதது அதில் "ஒற்றி"...
எப்போது கிடைத்தாலும் அந்த செல்லரித்த தாள்களில் என் பால்ய கால சந்தோஷமும் இருக்கப் போகிறது.

Paruthiveeran sidekick kid: நீ இந்த மாதிரி பேசி நான் பார்த்ததேயில்லப்பா! :-)

P_R
8th February 2013, 09:34 AM
P_R means the Morbid mobocracy of the Vinayaga chathurthi celebrations on the Beach, to be the bugle of the Hegemonists rather than the soothing Flute of the Spiritualists
(if i understood the context in which P_R makes it correctly)
Haha not exactly.
I was making a comment on how your (and Periyar's) grouse against ஆத்திகம் is because of ஆதிக்க forces. 'இதை வைத்து பலன் அனுபவிப்பவன்..' is what motivates the famous three lines that preceed it. Which is why the 'purely logical philosophical' counterarguments - quoting long atheistic traditions (Nagarjunaலேர்ந்து பொதுவா ஆரம்பிப்பாங்க) misses the point.

அதச் சொன்னேன்.

மத்தபடி ஆத்திக-ஆதிக்க was just silly wordplay by me a la சமவெளி-சமதர்மம்.

SoftSword
8th February 2013, 05:34 PM
enakku andha yaanai mattum yaen bolda irukkunu sollunga...

geno
10th February 2013, 12:11 AM
வலையெனும் பெருங்கடலில் தேடி Elizabeth Barret Browning translation படிச்சிக்கிட்டு இருக்கேன் :lol2: வரிசையா வரேன்.

அதையெல்லாம் படிச்சுட்டு சிரிச்சிட்டு இருக்கீங்களா?! எனக்கே மறந்து போச்சு.. அது ஒரு காலம். :lol2:

தருமு சிவராமு, ப்ரமிள் ஒரே ஆள் தானே? ஒரு வேளை அந்த இரண்டு பெயர்கள்ல வந்த கவிதை style வெவ்வேற மாதிரியா?

ஆமாம் - இரண்டும் ஒருவரே (பசுவைய்யா = சுந்தர ராமசாமி போல) அவர் நிசத்தில் பல புனை பெயர்களில் எழுதியிருக்கிறார். ஆரம்பத்தில் தருமு சிவராமு.. இரண்டு பெயர்களில் வெளிவந்த கவிதைகளையும் படித்த நினைவு..

உண்மையில் - திராவிட இயக்க சித்தாந்தங்களுக்கு வெளியில் இயங்கிய படைப்புகளைப் படிக்க வேண்டும் என்கிற சுய விருப்பத்தின் பேரில் படித்தவை - பெரும்பாலானவை; அப்போது கணையாழியை தீவிரமாக வாசிப்பேன் - சில படைப்புகளின் இயங்குதளம் புரியாமலே கூட. :)

"வர்ணம்" பற்றி பேசுவதைத் தவிர்த்து - அன்றந்த காலகட்டத்து சமூக நிகழ்வுகளின் மீதான ஆழப்பார்வையையும் தவிர்த்து - தத்துவ விசாரமும், தமிழ் அடையாள அரசியல் மறுப்பை/ கேலியை - உள்ளீடாகக் கொண்டே பெரும்பாலான "க.ந.சு" "சி.சு.செ" குழாம் கவிதைகள் - பரிமளித்துக் கொண்டிருந்தன என்அதே என் பார்வையாக இருந்தது; ஆனால் (திராவிட இயக்கம் தவிர்த்த/ வாணியம்பாடி குழு தவிர்த்த) வானம்பாடிக்குழு , மற்றும் சிசுசெ,கநசு குழுக்கள் - வேறு பல வீச்சுகளை அறிமுகம் செய்து கொண்டிருந்தன.

Haha. மகுடேஸ்வரனோட 'சிற்றின்பம்' ன்ற கவிதை ஞாபகத்துக்கு வருது. சரியா வரிகள் ஞாபகம் இல்லை. தேடிக் கிடைச்சதும் சுட்டி தரேன்.
Any pagadi involved in it - for what i had uttered earlier?!

I think maiam guys would be pretty interested if you do manage to find them.
Will certainly do if i lay my hands on them again!

ஞானக்கூத்தன் - ஓரளவுக்கு கல்யாண்ஜி - தவிர ரொம்ப பிடிச்சவங்கன்னு யாரையும் சொல்ல முடியாது.
ஞானக்கூத்தனுக்கு ஒரு திரி ஆரம்பிச்சு நகரவே இல்லை : http://www.mayyam.com/talk/showthread.php?7693-GnAnakoothan

அவர் கவிதைகளைப் பத்தி நீட்டி முழக்கி எழுதணும்னு - பரிமேலழகனும்னு :lol2: - நினைப்பேன். கவிதையைப் பத்தி எழுதி ரொம்ப தட்டையாக்கிடுவோம்னு ஒரு தயக்கம். புறநானூறு பத்தி ஒரு podcast பண்ணி ரொம்ப flat ஆயிடுச்சு. அதுனால ஞானக்கூத்தன் பிழைச்சிக்கிட்டே வரார். ஒருநாள் சிக்க வச்சிருவேன்.

கண்டிப்பாக அங்கே வருகிறேன்; சோம்பேறித்தனமும், அதிகமாக எழுதுவதில் எனக்கே இருக்கும் சலிப்பும்(! :lol2: ) - சில நேரங்களில் படிப்பதில் இருக்கும் விருப்பம், எழுதுவதில், எதிர்வினையாற்றுவதில் இல்லை - அதற்கு ஒரு காரணமும் இல்லை - யாரையும் போர் அடிக்க விருப்பம் இல்லாததும் ஒரு காரணம்.

] Paruthiveeran sidekick kid: நீ இந்த மாதிரி பேசி நான் பார்த்ததேயில்லப்பா! :-)

கவிதைப் பக்கங்களில் நான் இப்படித்தான் பேசியிருக்கிறேன்! (இப்போ இந்தப் பக்கம் வருவதே இல்லை!) ...தவிர எழுதுவததை விட, அசை போடுவதிலும், அமைதியாயிருப்பதிலும் உள்ள 'லயம்' அதிகமாகப் பிடிக்க ஆரம்பித்திருக்கிறது!

geno
10th February 2013, 12:55 AM
enakku andha yaanai mattum yaen bolda irukkunu sollunga...

"பிள்ளை"யார் மறந்து "யானை"யார் தோன்றுவது தான் - அது பிடித்துப் போகக் காரணம்!

தாம்பரம்-வேளச்சேரி சாலை விலக்கில் - மாடம்பாக்கம்-னு ஒரு ஊர் இருக்கு; அங்கேயும், திருவேற்காட்டிலேயும் இருக்கும் சிவன் கோயில்கள் 10ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் (960 ce வாக்கில்) கட்டப்பட்டவை. அவ்விரு கோவிலின் கருவறை - யானை வடிவில் இருக்கும்; உள்ளே இருக்கும் "லிங்கமும்" லிங்கமன்று! "நடுகல்" / "முலைக்கல்" எனப்படும் தமிழ் மரபின் மறத்திணை தலைவர்க்கு எழுப்பப்படும் நினைவுச் சின்னங்களை - பிற்பாடு 'வர்ணப்பசுக்கள்' லிங்கங்களாக மாற்றியது புரியும்!

யானை வடிவிலான கருவறை - வீரத்தலைவனுக்கான சின்னம் - இது மறைக்கப்பட்டு அதன் மேல் சமயச் சாயம் பூசப்பட்டு விட்டது; அதே போல், திராவிட இந்தியக் கண்டத்தின் பழங்கால பண்பாட்டு/வெற்றிச் சின்னமான யானை - 'வர்ணக் கூட்டத்தாரால்' உள்வாங்கப்பட்டு - பிள்ளையாராகிய வர்ண சமயச் சின்னமாக உருமாறுகிறது. இது வரலாற்று அகழ் பார்வை.

இந்தப் பார்வையைத் தொட்டுச் சொல்லுகிறது(உட்கிடையாக) என் கவிதையின் இறுதியில் வரும் "யானை".

venkkiram
10th February 2013, 06:11 AM

:notworthy:

P_R
10th February 2013, 10:57 AM
அதையெல்லாம் படிச்சுட்டு சிரிச்சிட்டு இருக்கீங்களா?! எனக்கே மறந்து போச்சு.. அது ஒரு காலம். :lol2:
அதைப்படிச்சு சிரிக்கலை

அப்போது கணையாழியை தீவிரமாக வாசிப்பேன் - சில படைப்புகளின் இயங்குதளம் புரியாமலே கூட. :) ஆஹா ஊஹூ'ன்னு சொல்றாங்களே'ன்னு தேடிப் படிச்சேன். நிறைய atrociously bad கவிதைகள் heydeys of கணையாழிலையே இருக்கு. ஒருவேளை இயங்குதளம் புரியலையா'ன்னு தெரியலை.

Any pagadi involved in it - for what i had uttered earlier?!
ஹாஹா..இல்லைங்க. உயர்படைப்பா ஒண்ணு தேடுறப்போ, மேட்டர் புக் கிடைச்ச 'தாழ்வு'க்கு சொன்னேன் :-)

சில நேரங்களில் படிப்பதில் இருக்கும் விருப்பம், எழுதுவதில், எதிர்வினையாற்றுவதில் இல்லை - அதற்கு ஒரு காரணமும் இல்லை - யாரையும் போர் அடிக்க விருப்பம் இல்லாததும் ஒரு காரணம்.
ஒரு பட்டப்பழைய திரியில இரா.முருகன் கவிதை பத்தி எழுதியிருந்தீங்க. அதுபோல எழுதினா படிக்க முயற்சி பண்றவங்களுக்கு அறிமுகமா இருக்கும். I don't think it will bore people. I know most of us landed here 'after' the heydeys of the Hub when literature was discussed extensively. And perhaps now there are other fora for it. But still I think that if discussions are sparked off, there may be participants who will surprise and for many it may be a new-opening/introduction.

கவிதைப் பக்கங்களில் நான் இப்படித்தான் பேசியிருக்கிறேன்! (இப்போ இந்தப் பக்கம் வருவதே இல்லை!) ...தவிர எழுதுவததை விட, அசை போடுவதிலும், அமைதியாயிருப்பதிலும் உள்ள 'லயம்' அதிகமாகப் பிடிக்க ஆரம்பித்திருக்கிறது![/QUOTE]

geno
13th February 2013, 02:31 AM
Would be glad to participate in kavithai discussions , only caveat is i might take some time to post/respond!

There are great hubbers here and great discussions too. ulagam yAR illAvittAlum iyangum! "nAmazhivOM ulagazhiyAthu!" :)

kaveri kannan
3rd March 2013, 09:42 PM
அன்பு ஜினோ

கவிதையின் முரண்தொகுப்பும் , utilitarian value சிலாகிக்கும் சாத்வீக முடிவும் அழகாய் கைகோர்க்கின்றன.

நீங்களும் P-R--ம் அளவளாவும் கருத்தாடல்கள் மழைக்கால மசால்வடை (கவிதை)க்குப் பின்னான சூடான தேநீர்!
சுவைத்தேன்!!!

Srimangai
25th March 2013, 07:08 AM
ஜீனோ, நலமாக இருக்கிறீர்களா?! பழைய நினைவுகளுக்காக மேய்ந்தபோது தல புராணம் என்னை மீண்டும் இழுத்துவிட்டது. 2004-ல் இதனை பதிவுசெய்தீர்கள். அன்புடன் க.சுதாகர் ( ஸ்ரீமங்கை)

Srimangai
25th March 2013, 07:12 AM
ஜீனோ, என்ன ஒரு அழகான உரையாடல்கள் அப்போதெல்லாம்! இரா.முருகனின் கவிதையை நீங்கள் அலச இட்டதும், அதில் திருத்தக்கனாரும், நீங்களும் நண்பர்களும் அலசியதும்... உலகம் என்பது எத்தனை பேர் திரியும்.... இப்போதும் நெஞ்சு நிறைய உள்ளது நண்பரே! மீண்டும் நீங்கள் வருவீர்களென்றால் நானும் களமிறங்குகிறேன். திருத்தக்கனாரையும் இழுத்துவருகிறேன்!

tiruttakkan
30th March 2013, 08:00 AM
ஜீனோ, ஸ்ரீமங்கை!

ஞாபகம் வருதே!

நமக்குப் பிடித்த ஒன்றின் சுவை எப்படியிருக்குமென்று ஓர்
அறியாதவர் கேட்டால், நாக்கை நீட்டி, மடக்கி, படம் வரைந்து,
பாகங்கள் குறித்து, பாடி, ஆடி, பொம்மலாட்டம் செய்தெல்லாம்
விளக்கமுடியாது. ஆனால், கூடி உண்டு கொண்டாடியவர்கள்
நிலை வேறு. மஞ்சள் என்று நான் சொல்வதை நீங்களும் மஞ்சள்
என்றால் ஒரு வித உணர்வு! எனக்குள் தெரியும் அதே மஞ்சளை
நீங்கள் உணர்ந்தீர்களா என அறிய வழியில்லை! நீலமென்று வெட்டிப்
பேசிவிட்டாலோ வேறு மகிழ்வு!

வெகு நாட்களுக்குப் பின் தமிழ் எழுதுகிறேன்...மரத்துப் போன காலில்
மீண்டும் உணர்வு திரும்பும் நேரம் ஒரு பாடு படுத்துமே அது போன்ற
ஓர் இன்னலும் இன்பமும் கலந்த குறுகுறுப்பு!

அன்புடன்

திருத்தக்கன்.

pavalamani pragasam
30th March 2013, 03:06 PM
திருத்தக்கன் பாணியே பாணி! அசைக்க முடியாத சாமர்த்தியம் அப்படியே இருக்கிறது! தமிழ் மறக்காது, தைரியமாய் களமிறங்குங்கள், திருத்தக்கன்!

Srimangai
30th March 2013, 09:54 PM
Pp மேடம், நான் வந்தது உங்களுக்குத் தெரியலை பாருங்க! திருத்தக்கனாருக்கு இருக்கிற மவுசே வேற... :)

pavalamani pragasam
31st March 2013, 09:04 AM
Pp மேடம், நான் வந்தது உங்களுக்குத் தெரியலை பாருங்க! திருத்தக்கனாருக்கு இருக்கிற மவுசே வேற... :)

அச்சச்சோ! கோச்சுக்காதீங்க! உங்கள் வரவும், திருத்தக்கனை அழைத்து வருகிறேன் என்று சொன்னதும் தேனாய் இனித்தது; செய்தியை உள்வாங்கிவிட்டு பதில் போடாதது தவறுதான்! ஷமிக்கணும்! அப்புறம் ..மார்க் போடுற வாத்தியாரைப் பார்த்தால் கற்றுக்கொள்ள ஆர்வமுள்ள மாணவிக்கு உற்சாகம் வந்தது வியப்பில்லையே?

geno
10th November 2013, 10:16 PM
ஜீனோ, நலமாக இருக்கிறீர்களா?! பழைய நினைவுகளுக்காக மேய்ந்தபோது தல புராணம் என்னை மீண்டும் இழுத்துவிட்டது. 2004-ல் இதனை பதிவுசெய்தீர்கள். அன்புடன் க.சுதாகர் ( ஸ்ரீமங்கை)

நலம் நலமறிய ஆவல்!

geno
10th November 2013, 10:19 PM
அன்பு ஜினோ

கவிதையின் முரண்தொகுப்பும் , utilitarian value சிலாகிக்கும் சாத்வீக முடிவும் அழகாய் கைகோர்க்கின்றன.

நீங்களும் P-R--ம் அளவளாவும் கருத்தாடல்கள் மழைக்கால மசால்வடை (கவிதை)க்குப் பின்னான சூடான தேநீர்!
சுவைத்தேன்!!!

வணக்கம் காவேரி அவர்களே! நன்றிகள் பல!
எனக்குப் பின்னால் பதிலிட்டிருக்கும் சிறீமங்கை(யார்)உம், திருத்தக்கனாரும் ஆரம்பித்தால் பூவாடைக் காற்றின் கூதலும், குளிருக்குச் சூடான கங்கும் இருக்குமிடம் போல சிறக்கும்! :)

geno
10th November 2013, 10:22 PM
ஜீனோ, என்ன ஒரு அழகான உரையாடல்கள் அப்போதெல்லாம்! இரா.முருகனின் கவிதையை நீங்கள் அலச இட்டதும், அதில் திருத்தக்கனாரும், நீங்களும் நண்பர்களும் அலசியதும்... உலகம் என்பது எத்தனை பேர் திரியும்.... இப்போதும் நெஞ்சு நிறைய உள்ளது நண்பரே! மீண்டும் நீங்கள் வருவீர்களென்றால் நானும் களமிறங்குகிறேன். திருத்தக்கனாரையும் இழுத்துவருகிறேன்!

நினைத்தாலே இனிக்கும்! :)

அடிக்கடி வர முடியாத வாழ்க்கைச் சூழல்! :( அதனாலென்ன?

நீங்களும், திருத்தக்கனாரும் இங்கு தொடர்ந்து எழுதி பழைய அருவிப் பிரவாகத்தைத் தொடருங்கள்...
அவ்வப்போது "கனி கொடுத்து மந்தியோடு கொஞ்சும் வானரம் போல்" வந்து போகிறேன்! :)

geno
10th November 2013, 10:26 PM
ஜீனோ, ஸ்ரீமங்கை!

ஞாபகம் வருதே!

நமக்குப் பிடித்த ஒன்றின் சுவை எப்படியிருக்குமென்று ஓர்
அறியாதவர் கேட்டால், நாக்கை நீட்டி, மடக்கி, படம் வரைந்து,
பாகங்கள் குறித்து, பாடி, ஆடி, பொம்மலாட்டம் செய்தெல்லாம்
விளக்கமுடியாது. ஆனால், கூடி உண்டு கொண்டாடியவர்கள்
நிலை வேறு. மஞ்சள் என்று நான் சொல்வதை நீங்களும் மஞ்சள்
என்றால் ஒரு வித உணர்வு! எனக்குள் தெரியும் அதே மஞ்சளை
நீங்கள் உணர்ந்தீர்களா என அறிய வழியில்லை! நீலமென்று வெட்டிப்
பேசிவிட்டாலோ வேறு மகிழ்வு!

வெகு நாட்களுக்குப் பின் தமிழ் எழுதுகிறேன்...மரத்துப் போன காலில்
மீண்டும் உணர்வு திரும்பும் நேரம் ஒரு பாடு படுத்துமே அது போன்ற
ஓர் இன்னலும் இன்பமும் கலந்த குறுகுறுப்பு!

அன்புடன்

திருத்தக்கன்.

அடடா! இரசனைக்கும், உணர்வலைகள் சேரும் நண்பர் குழாமுக்குமான பொருத்தத்தை உங்களுக்கே உரிய நடையில் சொல்லிவிட்டீர்கள்! நான் வராவிட்டால் என்ன...

தனியே கிடக்கும் குவளைப்பூவுக்காக மட்டுமா தென்றல் வீசும்? சோலையைத் தாலாட்டும் தென்றல் தேடி "கா" விரிந்து கிடக்கிறது (கிடையாய்க் கிடக்கிறது!) வீசுங்கள் தென்றலே! :)