PDA

View Full Version : தூக்கி எறியப்பட்ட செருப்பு நான்



Joannkfe
16th March 2013, 11:42 PM
நண்பா...
நீ பெற வேண்டிய அடிகளை
உனக்காகப் பெற்றுக்கொண்டேன் நான்..

உன்னை ஏதும்
காயப் படுத்திவிடக் கூடாதென்று
நான் கிழிந்து போன உண்மை
என்றேனும் நீ அறிவாயோ???

உனக்காக நான் சுமந்த
கிழிசல்களைக் காரணம் காட்டி
நான் கந்தல் ஆகினேன் என்று
என்னையும் தூக்கி எறிந்தாயே
பிய்ந்து போன செருப்பைப் போல...

உனது
புத்தம்புது செருப்பேனும்
உன்னைக் கடிக்காமல் இருப்பின்
அதுவே எனக்கு
என்றும் நிம்மதி நண்பா...

pavalamani pragasam
17th March 2013, 07:41 AM
நன்றி மறத்தல் நன்றன்று. சோகம்!

Joannkfe
23rd March 2013, 11:36 PM
மரணம் கூட வழியில்லை, நண்பன் என்னை மறந்தான் என்று அறியும்போது தோன்றும் வலியுடன் ஒப்பிட்டால்.. :(