View Full Version : Sivaji Ganesan School of Acting
RAGHAVENDRA
22nd May 2013, 09:21 AM
SIVAJI GANESAN SCHOOL OF ACTING
Sivaji Ganesan - the name itself vibrates your soul.
http://www.sangam.org/2008/11/images/SivajiGanesanautobiographyfrontcover.jpg
Sivaji Ganesan was born at a remote village in Tamil Nadu, India. He now has the credit of owning a Separate Method of Acting. We the fans of Sivaji Ganesan, want to exhibit his different styles of acting to the next generation film buff and more particularly to the students and scholars of cinema and acting.
Cinema has already various schools in the names of Constantin Stanislovsky, Mikhail Chekhov, Oscar Wilde, besides Shakespearean School, to name a few.
Sivaji Ganesan does not fit into any of these schools but you can find glimpses of them here and there. But what is important is, he has established a firm methodology for acting, which would apply to all kinds of acting, all schools and apply universally.
We are not going to prescribe any grammar here, but bring out the methodologies in his acting which form as a School in themselves.
OUR DEAR FRIEND GOPAL, who is a well versed scholar in International Cinema, has already initiated this analysis under the title “இந்தியாவின் எட்டாவது உலக அதிசயம்” and has contributed a series of around 30+ articles. The links for them are given below:
இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.
Part 1 - 20
பாகம் – 1 (http://www.mayyam.com/talk/showthread.php?9891-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-10&p=1029893&viewfull=1#post1029893)
பாகம் – 2 (http://www.mayyam.com/talk/showthread.php?9891-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-10&p=1029902&viewfull=1#post1029902)
பாகம் – 3 (http://www.mayyam.com/talk/showthread.php?9891-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-10&p=1030270&viewfull=1#post1030270)
பாகம் – 4 (http://www.mayyam.com/talk/showthread.php?9891-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-10&p=1030290&viewfull=1#post1030290)
பாகம் – 5 (http://www.mayyam.com/talk/showthread.php?9891-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-10&p=1030310&viewfull=1#post1030310)
பாகம் – 6 (http://www.mayyam.com/talk/showthread.php?9891-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-10&p=1030314&viewfull=1#post1030314)
பாகம் – 7 (http://www.mayyam.com/talk/showthread.php?9891-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-10&p=1030316&viewfull=1#post1030316)
பாகம் – 8 (http://www.mayyam.com/talk/showthread.php?9891-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-10&p=1030337&viewfull=1#post1030337)
பாகம் – 9 (http://www.mayyam.com/talk/showthread.php?9891-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-10&p=1031031&viewfull=1#post1031031)
பாகம் – 10 (http://www.mayyam.com/talk/showthread.php?9891-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-10&p=1031493&viewfull=1#post1031493)
பாகம் – 11 (http://www.mayyam.com/talk/showthread.php?9891-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-10&p=1031675&viewfull=1#post1031675)
பாகம் – 12 (http://www.mayyam.com/talk/showthread.php?9891-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-10&p=1034239&viewfull=1#post1034239)
பாகம் – 13 (http://www.mayyam.com/talk/showthread.php?9891-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-10&p=1034380&viewfull=1#post1034380)
பாகம் – 14 (http://www.mayyam.com/talk/showthread.php?9891-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-10&p=1034387&viewfull=1#post1034387)
பாகம் – 15 (http://www.mayyam.com/talk/showthread.php?9891-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-10&p=1034622&viewfull=1#post1034622)
பாகம் – 16 (http://www.mayyam.com/talk/showthread.php?9891-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-10&p=1034704&viewfull=1#post1034704)
பாகம் – 17 (http://www.mayyam.com/talk/showthread.php?9891-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-10&p=1036133&viewfull=1#post1036133)
பாகம் – 18 (http://www.mayyam.com/talk/showthread.php?9891-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-10&p=1039330&viewfull=1#post1039330)
பாகம் – 19 (http://www.mayyam.com/talk/showthread.php?9891-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-10&p=1039438&viewfull=1#post1039438)
பாகம் - 20 (http://www.mayyam.com/talk/showthread.php?9891-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-10&p=1039889&viewfull=1#post1039889)
This series will be supported by the annexure of examples, video clippings, images, documents as and when necessary.
AND in the coming days, the justification for this thread will be strongly emphasized and established.
THIS THREAD IS DEDICATED TO THE ANALYSES AND RESEARCH ON ACTING OF SIVAJI GANESAN AND IS LIKELY TO SERVE AS A REFERENCE MATERIAL. VIEWS/ COMMENTS PERTAINING ONLY TO THE TOPIC ARE ALLOWED . NO DEVIATIONS PLEASE.
Dear Gopal Sir
Please continue your article in this thread without any distortion or deviation. Hope our hubbers co-operate.
RAGHAVENDRA
22nd May 2013, 09:23 AM
இந்தியாவின் எட்டாவது உலக அதிசயம் – பாகம் 21-31க்கான இணைப்புகள்
பாகம் - 21 (http://www.mayyam.com/talk/showthread.php?9891-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-10&p=1039963&viewfull=1#post1039963)
பாகம் – 22 (http://www.mayyam.com/talk/showthread.php?9891-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-10&p=1040919&viewfull=1#post1040919)
பாகம் – 23 (http://www.mayyam.com/talk/showthread.php?9891-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-10&p=1041116&viewfull=1#post1041116)
பாகம் – 24 (http://www.mayyam.com/talk/showthread.php?9891-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-10&p=1041252&viewfull=1#post1041252)
பாகம் – 25 (http://www.mayyam.com/talk/showthread.php?9891-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-10&p=1041398&viewfull=1#post1041398)
பாகம் – 26 (http://www.mayyam.com/talk/showthread.php?9891-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-10&p=1041429&viewfull=1#post1041429)
பாகம் – 27 (http://www.mayyam.com/talk/showthread.php?9891-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-10&p=1042293&viewfull=1#post1042293)
பாகம் – 28 (http://www.mayyam.com/talk/showthread.php?9891-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-10&p=1042595&viewfull=1#post1042595)
பாகம் – 29 (http://www.mayyam.com/talk/showthread.php?9891-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-10&p=1042607&viewfull=1#post1042607)
பாகம் - 30 (http://www.mayyam.com/talk/showthread.php?9891-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-10&p=1043334&viewfull=1#post1043334)
பாகம் - 31 (http://www.mayyam.com/talk/showthread.php?9891-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-10&p=1044056&viewfull=1#post1044056)
RAGHAVENDRA
22nd May 2013, 12:36 PM
For the purpose of ready reference, the parts 1 to 30 are quoted here. Courtesy: Gopal Sir.
Part 1
இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-1
நடிகர்திலகம் Stanislavski ,Straberg ஸ்கூல் பாணியில் sense memory அடிப்படையில் கதை கருவின் objectiveபடி,கண்டு,கேட்டு,உயிர்த்து,உணர்ந்து,உணர்த ்தி,காத்து,அழித்து,தூண்டி,மறைந்து,மறைத்து ,அனைத்தையும் திரையில் Meisner பாணியில் instinctive improvisations செய்து,
Stella Adler பாணியில் largeness in action and voice கொண்டு,
Chekhov பாணியில் வாழ்கையை imitate செய்யாமல் interpret செய்து,
Oscar wilde பாணியில் தன் பாத்திரங்களின் முகமூடியில் உணர்வுகளை சுமந்து,
Spolin &Suzuki ஸ்கூல் படி தனக்கிருந்த பாய்ஸ்' கம்பெனி பயிற்சி அனுபவங்களின் மூலம் உடலின் அனைத்து அங்கங்களையும் தன்னிச்சை படி ஆட்டுவித்து ,
Focus reach முறையில் கதாபாத்திரங்களின் ஆத்மாவிற்குள் நுழையும் விந்தையில்,
உலகிலேயே ஒப்பாரும் மிக்காரும் இல்லா பெருந்தகையாய் ,திகழ்ந்த ஒரே உலக பெரு நடிகன்.இதனாலேயே உலகத்தில் ,எந்த நல்ல நடிகன், எந்த ஸ்கூல் படி நடித்தாலும் ,எல்லாமே அவருடைய நடிப்பின் ஒரு அங்கமாகவே நம் புலனுக்கு தெரிந்தார்கள்.(அத்தனை school யும் integrate செய்த சுயம்பு நடிகன் அந்த பிறவி மேதை).அதனாலேயே,அனைத்து இயக்குனர்களின் கனவு நாயகனாகி,நல்ல படம் தர விரும்பும் அனைவருக்கும் ஒரே நம்பிக்கை ஒளியாகி,அந்த படங்களை வேறு தளத்திற்கே உயர்த்தினார்.
இந்த அளவு எனக்கு விரிவான பார்வை வர உதவிய அஜீத் ஹரி இதை கேட்டதும் துள்ளி குதித்து குழந்தை போல் குதூகலித்தது,எனக்கு முதல் inspiration .அடுத்து, இந்த குறிப்பை முன்னெடுத்து செல்ல பணித்த தகப்பன் சாமி பிரபு ராம்.என்னை தொடர்ந்து தூண்டி கொண்டிருக்கும் முன்னாள் நண்பர் ganpat .
marlon brando (அண்ணா இவருடன் ஒப்பிட்டு நடிகர்திலகத்தை புகழ்ந்தார்)- அவர் என்னை போல் நடிப்பார் ,நான் அவரை போல் நடிக்க முடியாது என்று சொன்னதின் உள்ளர்த்தம் தேடி பயணித்ததன் விளைவே இந்த தொடர்.(நம்மை போல உபசாரத்திற்கு ஒருவரை புகழும் மரபு Hollywood இல் கிடையாது.
உலக பட பரிச்சயம் உள்ள சுஜாதா (எழுத்தாளர்) NT ஐ Marlon Brando ,Rex Harrison ,Alpacino ,Robert De Niro ,Paul Neuman வரிசையிலும் ,முதல்வர் ஜெயலலிதா இவரை Marlon Brando ,Richard Burton ,Laurence Olivier வரிசையிலும், உலக பட ரசிகரான சோ அவர்கள் சமீபத்திய பதிவு ஒன்றில், Laurence Olivier ,Charles Laughton ,Gilgit ,David Niven ,Danny Kaye ,Clark Gable ,Humphrey Bogart ,Norman Wisdom ,Charles Heston ஆகியோருடனும்,Randor Guy இவரை paul Muni ,Spencer Tracy போன்றோருடனும் ஒப்பிட்டு பேசியுள்ளனர் எனக்கும், Kurosawa நடிகரான takashi Shimura , Nesferatu பட நடிகர் Klauskinski, Lincoln பட oscar நாயகன் Daniel Day Louis போன்றவர்களின் நடிப்பிலும் அவர் பிம்பமே தெரிகிறது.
அவரின் ரசிகர்களின் பட்டியலில் சத்யஜித் ரே,பிரிதிவி ராஜ் கபூர்,ராஜ் கபூர்,திலிப் குமார்,தேவ் ஆனந்த்,சஞ்சீவ் குமார்,அமிதாப் பச்சன்,லதா மங்கேஷ்கர்,ராஜ்குமார்,விஷ்ணுவர்தன் A .N R ,NTR ,கமல்,ரஜினி,பாரதி ராஜா,மகேந்திரன்,ஷங்கர்,பாலு மகேந்திரா ,மது,சத்யன்,பிரேம் நசிர்,மமூட்டி,மோகன் லால்,கோபி,திலகன், இன்னும் எண்ணிலங்கா இந்த பட்டியல் ரசிகர்கள் மட்டுமல்ல. பலர் அவரை role model ஆக,குருவாக பாவிப்பவர்கள்.
இத்தனை பேரின் மதிப்பை யும் சுமந்து artists ' artist ஆக அமரத்துவம் பெற்ற அந்த நடிப்பு கடவுளை விஞ்ஞான தொழுகை நடத்தும் சிறு முயற்சியே இது.
---To be continued.
Part 2
இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-2
பொருளாதாரம் படித்தவர்களுக்கு புரியும். ஒரு உண்மையை நிரூபிக்க அனைத்து புற காரணிகளையும் constant என்ற நிலையில் வைத்து, அவற்றை பொருட்படுத்தாது, நாம் எடுத்து கொண்ட பொருளை மட்டும் ஆராயும் variable என்ற உயிர் பொருளாக்க வேண்டும்.
நான் உதாசீனம் செய்யும் புற காரணிகள்- star என்பவன் இந்தியாவில்(cine field) நிலைக்க செய்ய வேண்டிய நீர்மைகள்(Dilution )&compromises, நமது அழகுணர்ச்சி(அதுவும் தமிழக மக்களின் விபரீத அழகுணர்ச்சி),கூத்து மரபாகவே தொடர்ந்த நமது திரைப்பட கலையாக்கம்(பாடல்களுடன்), நமது talkie என்ற காரண பெயர் கொண்ட படங்கள், அவியல் ஆன அவற்றின் ஆக்க முறைகள்,உலகபார்வையில் tribalised ஆக தெரியும் நமது விரிந்த கலாச்சாரங்கள்,நமது மொழியின் seperation &peculiar nuiances (தமிழ் மொழியின் வினோதமான பேச்சு வழக்கு/எழுது முறை வேறுபாடுகள்மற்றும் அதன் நூற்று கணக்கான வட்டார வழக்கு,தூய தமிழ் பேச்சு ETC ), நமது பிரத்யேக வியாபார நிர்பந்தங்கள்(இதிலும் தமிழ் வினோதம்), ஒரே நேரத்தில் பல தர பட்ட படங்களில் shift முறையில் ஓயாது உழைத்த நடிகர்திலத்தின் பிரத்யேக சிரமங்கள் ,Focus இல்லாத நமது படங்களின் செக்கு மாட்டு கதை-காட்சியமைப்புகள், இவற்றை பற்றிய ,இவை சார்ந்தவற்றை முற்றாக ஒதுக்கி, நடிகர் திலகம் என்ற மேதை தான் அறியாமலேயே எப்படி அத்தனை பொருட்படுத்த தக்க உலக நடிப்பு பள்ளிகளின் அனைத்து பாணியையும் , தன்னிடையே கொண்டு விளங்கி தனக்கு பிறகு ஆயிரம் இடங்கள் காலியாகவே இருக்கும் படி செய்த விந்தையை எனக்கு தெரிந்த வரையில் சுலபமாக ,அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் புரியும் வண்ணம் விளக்க முயல்கிறேன்.
முதலில், ஏன் உலக பள்ளிகளோடு ஒப்பீடு என்ற கேள்விக்கு பதில் திரை படம் என்பதே மேல் நாட்டார் நமக்கு அறிமுக படுத்தி,அவர்களாலேயே வளர்த்தெடுக்க பட்ட கலை. இன்றும் கூட தர நிர்ணயம்,பரிசுகள் எல்லாமே அவர்கள் போட்ட பாதையில்தான் பயணிக்கின்றன(விமரிசனங்கள் உட்பட). முதலில் அவர்களின் முக்கிய நடிப்பு பள்ளிகள்(Different schools of Acting) என்ன, அதன் சாரங்கள் என்ன, அதில் பயின்ற முக்கியமானவர்கள் யார் யார் என்று சுருக்கமாக பார்த்து விட்டு தொடருவோம் .மேலை நாடுகளில் நடிப்பு துறைக்கு வர விரும்பும் அனைத்து நடிகர்களுமே, ஏதோ ஒரு நடிப்பு பயிற்சி பள்ளியில் படித்து தேர்ந்து, ஒரு school of acting இல் முறையாக சிறப்பு பயிற்சி பெறுவது நடைமுறை. அதனால் சில வெளிநாட்டு நடிகர்களை அந்தந்த பள்ளிகளில் உதாரணம் காட்டி உள்ளேன்.
இதில் நான் இன்னொன்றையும் குறிப்பிட்டு சொல்ல விழைகிறேன். நான் தேர்ந்தெடுத்த படங்களில் பிரதானமான நடிப்பு முறையை பிரித்தெடுத்தாலும்,அந்த மேதையை கூண்டுக்குள் அடைப்பது சிரமம் என்பதால்,பிற பள்ளிகளின் தாக்கமும் சிறிதளவு இருக்கும்.
அதே போல ஒரே படத்திலேயே மூன்று விதமான நடிப்பு பள்ளிகளின் கூறுகள் உண்டு. தெய்வ மகன் அப்பா (method Acting ),கண்ணன் (Chechov பாணி),விஜய்(Oscar Wilde பாணி).நான் தவற வாய்ப்புள்ளதால் அங்கங்கே திருத்துமாறு வேண்டுகிறேன்.
சக்கரத்தை திரும்ப திரும்ப கண்டு பிடித்தல் என்ற சொற்றொடர் (reinventing the wheel ) ஆங்கிலத்தில் உண்டு. NT இடம் நமக்கு மிக பரிச்சயமான, முயற்சி,பயிற்சி,கடின உழைப்பு,கூரிய பார்வையுடன் கவனிப்பு திறன்,உடல்-மனம் சார்ந்த ஆளுமை,அங்க ஒத்திசைவு,கற்பனை திறன், கிரகிப்பு,ஒருங்கிணைப்புடன் கூடிய சிந்தனை திறன், concentration,aptitude,improvisation இவை எல்லா பள்ளிகளுக்கும் பொருந்தும், அவருக்கு பிறவியிலேயே கை வந்த விஷயங்கள். இதற்குள்ளும், மிக நுழையாமல், ஒவ்வொரு பள்ளிகளின் கோட்பாடு, வித்யாசங்கள்,நிறை-குறைகள், சில படங்கள் (NT ) உதாரணங்கள், அவற்றில் நடிகர்த்திலத்தின் நிறை பங்குகள். இவ்வளவுதான் ஆய்வின் scope .
இந்த தொடர் முடிந்ததும்,நமது இலக்கியங்களில்(சிலப்பதிகாரம் போன்ற) நடிப்பு பற்றிய பார்வை,கோட்பாடு போன்றவற்றுடன் நடிகர் திலகத்தை முன் வைத்து இன்னொரு தொடர் வரையும் எண்ணமும் உள்ளது. பார்ப்போம்.
-----to be continued .
Part 3
இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-3
Stanilavski//Strasberg school.
முக்கியமாக எல்லோராலும் பேச படும் "Method Acting" என்ற புகழ் பெற்ற நடிப்பு பள்ளியாகும்.சுருங்க சொன்னால் "உன் பாத்திரமே நீயானால் எப்படி உணர்வாய் " என்ற முறையில் நடிப்பை செங்கல் செங்கலாய் வீடு கட்டுவது போல் அணுக வேண்டும்.ஆனால் அத்தைனையும் உன் சொந்த செங்கலாக இருக்க வேண்டும்.இரவல் கூடவே கூடாது.
ஒரு கதை கருவின் இயங்கு சக்தி என்னவென்று கண்டு அதனை "super Objective" என்று கொண்டு பிறகு அதனை உதிரி உதிரி ஆக Script வடிவத்தில் பிரித்து,அந்த பாத்திரத்தின் முக்கிய நோக்கமென்ன,அது எதனை நோக்கி பயணிக்கிறது அதற்கு தடைகளென்ன , உதவிகள் என்ன, அதை அணுக வேண்டிய முறையென்ன, அது செய்ய வேண்டிய காரியங்கள் என்ன, அதன் பின்னணி என்ன, நடப்பு நிலை என்ன, எதிர் காலம் என்ன, என்று கண்டு அதனை "Super Objective" உடன் வரி வரியாக இணைவு செய்து ஒருங்கிணைக்க வேண்டும்.பிறகு, "Sense Memory" என்ற தங்கள் சொந்த நினைவு சார் உணர்வுகளின் மூலம் அந்த பாத்திரத்தின் தன்மைகள்,உணர்ச்சி வெளிப்பாட்டை super -impose செய்ய வேண்டும். இதில் "Realistic Approach" என்பது இன்றியமையாதது.உணர்வுகளை போலி செய்தல்(Faking of Emotion) அறவே தவிர்க்க பட வேண்டும்.பிறகு அந்த கதாபாத்திரம் எப்படியெல்லாம் நடக்க,பேச,நினைக்க,பாவிக்க,என்று முன்முடிவு செய்து,அதனை அவற்றின் mannerism சார்ந்த விஷயங்களை நிர்ணயித்து, கொண்டு வெளியிட பழக வேண்டும்.இவையெல்லாம்,"Sub Objective" and "Super Objective"மற்றும் சக பாத்திரங்களுடன் ஒருங்கிணைக்க பட வேண்டும்.இதன் மூலம் அந்த பாத்திரம் வாழ வேண்டிய முறை முன்-நிர்ணயம் செய்ய பட்டு விடும்.
இந்த முறை நடிகர்களில் குறிப்பிட வேண்டிய முக்கியமான பிரபலங்கள்-Marlon Brando,Gregory Peck.
நிறைகள்-இந்த முறையில் ஒரு வலுவான சமகால கதையை ,உண்மைக்கு அருகில் வரும் வலுவான கதாபாத்திர வார்ப்புகளால் மெருகேற்றலாம். Oscar விருது வென்ற நிறைய நடிகர்கள் இந்த வகை பள்ளியை பின் பற்றயவர்களே.ஒரு சிறந்த இயக்கனரின் வலுவான படைப்பு இவர்களின் பங்களிப்பில் மெருகேறும்.(உறுத்தல் இன்றி துருத்தி தெரியாமல்)
முக்கியமாக Limited period ,biographical ,contemporary commoner பாத்திரங்களுக்கு ,இதை விட சிறந்த முறை கிடையாது.
குறைகள்- முன் முடிவு செய்ய பட்டு நடிப்பு execute செய்ய படும் இந்த வகை நடிப்பில் ,சோர்வும்,staleness உம் தெரிய வாய்ப்புள்ளது.Energy level குறைவாக தேவை படும்,evenly paced (poised ?) பாத்திரங்களுக்கே இவ்வகை நடிப்பு உதவும்.இந்த வகை நடிப்பில் நடிகர் கூடு விட்டு கூடு மாறும் அதிசயம் நிகழ வாய்ப்பே இல்லை.பல பாத்திரங்கள் ஏற்று நடித்தாலும், நடிகரின் உண்மையான உள்ளணர்வு,தேக்க உணர்ச்சிகள் சார்ந்தே இயங்குவதால், எந்த மாதிரி வித விதமான subject கொண்ட படங்களில் நடித்தாலும் ,அந்த பாத்திரங்களுக்கு அவரவர்கள் இயல்பு கொண்டே பொருத்தி கொள்ள முடியும்."Sense Memory"அடிப்படையில் பாத்திரத்தை அணுகும் போது வெவ் வேறு காலகட்டங்களுக்கு (ஆதி காலம்,இடைக்காலம்,வேறு பட்ட கலாசார சூழ்நிலைகள் )அந்த பாத்திரங்களின் period related behaviour &mind -set ஆகியவற்றில் ஒரு contemporary தன்மை வருவது தவிர்க்க முடியாதது. இவர்கள் தண்டவாளத்தில் பயணிக்கும் ரயில் வண்டி போன்றவர்களே.
நடிகர்திலகம் நடித்த இந்த வகை நடிப்பு மிகும் படங்கள்-அந்த நாள்,மக்களை பெற்ற மகராசி,தெய்வ பிறவி,பாக பிரிவினை,இரும்பு திரை,பாலும் பழமும்,கப்பலோட்டிய தமிழன்,பார்த்தால் பசி தீரும்,இருவர் உள்ளம்,மோட்டார் சுந்தரம் பிள்ளை,தில்லானா மோகனாம்பாள்,உயர்ந்த மனிதன்,ராஜபார்ட் ரங்கதுரை ,தீபம் ,துணை,முதல் மரியாதை,தேவர் மகன் போன்ற படங்களாகும்.
-----to be continued .
Part 4
இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-4
Meisner School.
இந்த முறைக்கு முன்னோடியானவர் Stanislavski ஆகவே இருந்தாலும்,இந்த முறையில் முன் தீர்மானத்துடன் "Sense Memory"அடிப்படையில் நடிப்பது தவிர்க்க பட்டது.அந்த பாத்திரங்கள் பகல் கனவு காணும் உணர்வுடன்,அந்த கண நேர உணர்வுகளின் துடிப்புடன் ,நடிப்பை வெளிபடுத்த வேண்டும்.வசனங்களை கூட எந்த ஒரு modulation இன்றி flat ஆகவே மனபாடம் செய்ய இந்த வகை பள்ளியை சேர்ந்த நடிகர்கள் பணிக்க படுவார்கள். அந்தந்த கண நேர சாத்தியங்களுடன்,சக பாத்திரங்களுடன் உணர்ச்சி மிகு வெளியீட்டில் உள்ள energy level,power , "method acting" முறையை விட சிறந்ததாக கருத படுகிறது.
இந்த வகை நடிப்பில் பயின்றவர்கள்-Dustin Hoffman,Steve Mcqueen,Alpacino,Tom Cruise,Diana Keaton,Sandra bullock போன்றவர்களாகும்.
நிறைகள்- Surprise yourself to surprise the audience என்ற வகையில் spontaneity கிடைக்கும். சில வலுவான தனி காட்சியமைப்புகள் இந்த வகை நடிப்பின் மூலம் ,நல்ல நடிகர்களால் ,மேலும் வலுப்படும் சாத்தியங்கள் அதிகம்.இந்த வகை நடிப்பில் சோர்வகன்ற புத்துணர்ச்சியுடன் energy level high ஆக இருக்கும்.
குறைகள்-பாத்திர வார்ப்பில் மிகை உணர்ச்சியால்,inconsistency வர வாய்ப்புண்டு.நிறைய re-takes தேவை படலாம்.நடிப்பவர்கள் அன்றைய மனநிலை காட்சிகளில் பிரதிபலித்து காட்சியின் tone கெடும் வாய்ப்பு அதிகம்.(when you cant get call sheet again from the actor/actors in indian situation )
நடிகர்திலகத்தின் இந்த வகை படங்கள்-முதல் தேதி,ரங்கோன் ராதா,அன்னையின் ஆணை,படிக்காத மேதை,பாவ மனிப்பு,பாச மலர்,படித்தால் மட்டும் போதுமா,பார் மகளே பார்,திருவருட்செல்வர்(அப்பர்),வியட்நாம் வீடு,கெளரவம்(ரஜினி காந்த்).
-----to be continued .
Part 5
இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-5
Stella Adler School
இந்த பள்ளி எல்லாவற்றிலும் largeness வேண்டியது.உடல் மொழியில், உடலில்,குரலில், பாணியில் எல்லாவற்றிலுமே.மிகையான energy level கொண்டு ,larger than life (சராசரி வாழ்வினும் மிக மேம்பட்ட அல்லது அந்நிய பட்ட)பாத்திரங்களில்,மிகை உணர்வுகள்,தோரணைகள்,பாவங்கள்,உடல் மொழி கொண்டு,போலி செய்த புலன் சார்ந்த உணர்வுகளையும் கலந்து(faking the emotion ),மேடைக்கு மட்டுமே உண்மையாகவும்,அந்த சூழ்நிலை புரிந்து,அபரிமித கற்பனை அடிப்படையில் நடிப்பதே இந்த பள்ளியாகும்.
Acting is doing -You have to be larger in all aspect -Strong body ,voice கொண்டு,actors should never feel small ,they should give bigger meaning to the text with sense of epic என்று போதிக்கும் பள்ளியாகும்.
இவர் stanislavski யின் சிஷ்யராக இருந்தும் ,நேர் எதிர் நிலைப்பாடு கொண்ட நடிப்பு கலையை பயிற்றுவித்தார்.
இந்த முறை நடிப்பு பள்ளி பிரபல மாணவர்கள் -Robert De Niro ,Antonio Banderas ,Warren Beaty முதலியோர்.
நிறைகள்- சரித்திர,புராண, அமானுஷ்ய,மாயா-ஜால,futuristic ,Science fiction போன்ற larger than life பாத்திரங்களுக்கும்,shakespere ,கம்பன் போன்ற காவிய பாத்திரங்களுக்கும் ,பொதுவாக நம்மிடையே மிக வேறு பட்ட கதா பாத்திரங்களுக்கும் இதை விட சிறப்பான பயிற்சி முறை கிடையாது.
குறைகள்-இந்த வகை நடிப்பு சம கால நடப்பு பாத்திரங்களுக்கு பொருந்தாது.realism சார்ந்த படங்களுக்கு அறவே பொருந்தாது.இந்த வகை நடிப்பில் பார்வையாளர்கள் அந்நிய படும் சாத்திய கூறுகள் அதிகம்.பார்வையாளனுக்கும், காவியங்களில்,கவிதைகளில் பயிற்சி இருந்தால்தான் சுவைக்க முடியும்.
நடிகர்திலகத்தின் படங்கள்-
மனோகரா,வீர பாண்டிய கட்டபொம்மன்,கர்ணன்,திருவிளையாடல்,சரஸ்வதி சபதம்.
---to be continued.
RAGHAVENDRA
22nd May 2013, 12:38 PM
Part 6
இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-6
Oscar Wilde School
An actor should have strange & Rare temperament to convert his own disposition on an imaginative level which was beyond the reach of hampering elements and demands of real life .
ஒரு நடிகனின் வேலையே கவிஞன் மனதை பார்வையாளர்களிடம் பழுதில்லாமல் கொண்டு சேர்ப்பதே. ஒரு நடிப்பையோ ,நடிகனையோ,புற காரணிகளை,நடைமுறை உதாரணங்களை கொண்டு அளவிடவோ ,அடக்கவோ கூடாது.அவர்கள் எந்த ஒரு வாழும் மனிதனிலும் வேறு பட்டு மாறு பட்டவர்கள்.சமூகத்துக்கு, மகிழ்ச்சி கொடுப்பதுடன் சமூகம் செல்ல வேண்டிய திசையை தீர்மானிப்பவர்கள்.அவர்கள் யாருக்கும் எதற்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை.அவர்களின் தேவைகளை,அழகியலை,வெளிப்பாட்டை அவர்களே தீர்மானித்து,கதாபாத்திரம் என்ற முகமூடி வாயிலாக தங்களை வெளி காட்டுவார்கள்.சமூகத்தின் பார்வையை(அழகியல்,இயற்கையை ரசிப்பது உட்பட)கலைதான் தீர்மானிக்கிறது.realism உம் கலையும் எந்த காலத்திலும் இணைய முடியாது.ஒரு கலைஞனின் உள்ளுணர்வு சார்ந்து அவன் பார்வையில் interpret பண்ண படுவதே அழகுணர்ச்சி மிகு கலையாகும்.
இந்த பள்ளியை சார்ந்த நடிகர்கள்-Laurence Olivier ,Spencer Tracy ,David garrick ,Richard Burbage ,Edmund Kean ,Olivier Martinez ஆகியோர்.
நிறைகள்-பலதர பட்ட கற்பனை மிகுந்த கதாபாத்திரங்களை உருவாக இந்த பள்ளி கை கொடுக்கும்.ஒரு நடிகனின் கற்பனையை பிரதானமாக முன்னிறுத்தி,பல வேறு பட்ட மாறு பட்ட சராசரி வாழ்க்கையில் சந்திக்கவே இயலாத மனிதர்களை தன கற்பனையால் நடிகன் முன்னிறுத்த இந்த பள்ளி ஊக்குவிக்கிறது.
குறைகள்-சமூகத்தை கீழ்நிலை படுத்தி,கலையை மேல் நிறுவுவதன் மூலம்,கலைக்கு ஒரு அந்நிய தன்மை அளிக்க இந்த பள்ளி வாய்ப்பளிக்கிறது.realism புறம் தள்ள படுவதால் சமகாலத்தில் ஒட்ட இயலாது.
நடிகர்திலகத்தின் படங்கள்- பலே பாண்டியா,ஆண்டவன் கட்டளை,நவராத்திரி,எங்க ஊர் ராஜா,காவல் தெய்வம்,தெய்வ மகன்(விஜய்),ராமன் எத்தனை ராமனடி,பாபு.
----To be continued.
Part 7
இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-7
Michael Chekhov School.
இந்த வகையான நடிப்பு பள்ளியில் கற்பனை கலந்து,உளவியல் பார்வை கொண்ட அணுகுமுறையுடன் நடிக்க வேண்டும்.இந்த வகை நடிப்பில், imitate செய்யாமல் interpret செய்து நடிக்க வேண்டும்.அந்த பாத்திரத்துக்குள்ளும்,கதை கருக்குள்ளும்,ஒளிந்துள்ள மறை பொருளும் (Hidden meanings )பார்வையாளர்களுக்கு ஒரு வடிவமாக்கி ,அழகு நேர்த்தியுடனும், creativity யுடனும் கொடுக்க பட வேண்டும்.கதா பாத்திரங்களின் உண்மை நிலையறிந்து,அதன் தேவைகளையும்,விருப்பங்களையும் சரியான உடல் மொழி கொண்ட gesture மூலம்,கை-கால்கள் மூலமும் வெளிபடுத்த பட வேண்டும்.இந்த வகை நடிப்பில் முக்கியமானது subtle /sudden changes in tempo ,body position மற்றும் சூழ்நிலை சார்ந்த உணர்வு நிலையில் சந்தோஷம்,துக்கம்,அமைதி,பரபரப்பு,பயம்,anxiety ,புதிர் நிலை,எதிர் நிலை,தீர்மானமற்ற நிலை,சூன்ய நிலை எல்லாவற்றையும் கலப்பு வெளியீடாக,monotony தவிர்த்த permutation combination கொண்டு உளவியல் பார்வையில் வெளியிட வேண்டும்.
இந்த வகை நடிப்பு பள்ளியில் பயின்ற பிரபலங்கள்-Anthony Quinn ,Anthony Hopkins ,Johnny depp ,Jack Nicholson போன்ற பலர்.
நிறைகள்-மிக complicate ஆன உளவியல் பார்வை கொண்ட படங்கள்,psychologically disturbed பாத்திரங்கள்,குழப்பமான மன நிலை கொண்ட பாத்திரங்கள் ஆகியவற்றுக்கு மிக பொருந்தும் பாணி. மிக புத்திசாலியான நடிகர்களின் நடிப்புக்கு ஒரு gloss &Depth கொடுத்து அவர்களை வேறு தளத்திற்கே உயர்த்தும் வலிமை கொண்ட பள்ளி.
குறைகள்-Hang -over அதிக நாட்கள் நீடித்து, நடிகர்களின் மனநிலையை சீர்குலைக்கும் சாத்தியகூறுகள் கொண்டது. சராசரி வேடங்களில் இந்த சாயல் வந்தால் சிறிது மிகை கலந்து அன்னியமாக (Out of Context )தோன்றும்.
நடிகர்திலகத்தின் இந்த பள்ளியை ஒத்த நடிப்பு கொண்ட படங்கள்-உத்தம புத்திரன்(விக்ரமன்),ஆலய மணி,புதிய பறவை,தெய்வ மகன்(கண்ணன்),எங்கிருந்தோ வந்தாள்,ஞான ஒளி ,ரோஜாவின் ராஜா.
---To be Continued.
Part 8
இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-8
Spolin ,Suzuki ,Anne Bogart method
இப்போது மீதம் இருக்கும் ஒரே பள்ளி(மூன்று பள்ளிகள் இணைந்த ஒரே பள்ளி)
இதில் spolin பள்ளி என்பது improvisation technique கற்று கொடுக்கும் முறை.
Suzuki என்பது உடலை முக்கியமாக கீழுடலை நன்கு பயன்படுத்த உடற்பயிற்சி,
மனபயிற்சி,ஒத்திசைவு என்று சொல்லப்படும் பயிற்சி முறைகள் நிறைந்தது.
Anne Bogart view point method என்பது கட்டமைப்பு, வெளி, வடிவம்,ஒத்திசைவு(choreography ),
அசைவுகள்(gesture )கால அளவு(duration &timing ),Tempo என்ற வேக அளவு இவை சார்ந்த பயிற்சி முறைகள்.
இவற்றை பற்றி பேசவே தேவையில்லை. நமது பாய்ஸ் கம்பெனி முதல் கூத்து பட்டறை வரை இந்த முறை பயிற்சிகள்தான் மேற்கொள்ள படுகின்றன.ஒன்பது வயதிலேயே பாய்ஸ் கம்பெனி நடிகராகி, பலருடன் முறையாக பயின்று பலதர பட்ட பாத்திரங்களில் சிறு வயதிலேயே நடித்து கரை கண்டு முதல் படத்திலேயே நூறாவது படத்தின் புலமையை காட்டியவருக்கு, நாம் இந்த வகை பள்ளியை பற்றி மேலும் பேசாமலிருப்பதே அவருக்கு காட்டும் மரியாதையாதலால்,இந்த இந்த வகை பற்றி இனிமேல் எந்த பேச்சும் எழாது.
முற்குறிப்பிட்ட Stanislavski ,Meisner ,Chekhov ,Stella Adler ,Oscar wild பள்ளிகளில் அவரது திறமை பற்றி ,அடுத்தடுத்த பதிவுகளில், நான் குறிப்பிட்ட படங்களில் இருந்து ஒரு சில காட்சிகளை எடுத்து அவர் அந்த பாத்திரத்தில் இந்த பள்ளிகளில் குறிப்பிட்டது போல் இயல்பான அவரது முறையிலேயே ஊதி தள்ளி விட்டதை விஸ்தாரமாக எழுத போகிறேன்.அது கொஞ்ச நாள்(மாதம்)தொடருமாதலால் முடியும் வரை காத்திராமல், ஆரோக்யமான விவாதங்களை முன்னிறுத்தி தொடரலாமே.
---To be continued.
Part 9
இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-9
எழுதுபவன் நானாக இருப்பதால், சிறிதே என் கருத்துக்களை வலுவாக re -instate பண்ணி விட்டு ,பள்ளிகளை சார்ந்த அவரது நடிப்பின் சிறப்பை பிறகு தொடருவேன். இந்த அதிக பிரசங்கி தனத்தை புலவர்கள் தற்குறிப்பேற்றணி என்று வசதியாக இலக்கணம் பாடி வைத்து விட்டு போயுள்ளனர். நண்பர்கள் வேறு எனக்கு வசதியாக வீட்டையே காலிசெய்து விட்டனர்.
நான் சினிமாவையும் ,இலக்கியத்தையும் சுவாசமாக கொண்டு வாழ்வதால்,பொதுவாக எந்த எழுத்தாளர்களையோ,நடிகர்களையோ,இயக்குனர்களையோ முழுவதும் நம்பாதவன். ஒருவர் தவறி இடரும் சந்தர்ப்பங்களுக்காக காத்திருக்கும் பசித்த புலி.அதுவும் என் demi -gods இடறி விழும் சந்தர்ப்பங்களுக்காக மிக ஆவலாய் காத்திருப்பேன்.
கீழ்கண்ட கேள்விகளுக்கு தேர்ந்த நடிகர்களுக்கே பதில் தெரியாது.
1)உனக்கு உன் வாழ்க்கை எதிர்காலம் தெரியாததால் உலக மேடையில் இயல்பாக நடிக்கிறாய்.(கம்பெனி மீட்டிங் தவிர நீ பேசபோகும் அடுத்த வரியும் உனக்கு தெரியாது.)ஆனால் உன்னை பிரதி செய்து நடிக்க வேண்டிய நடிகனுக்கோ, கடந்த காலம் ,நிகழ் காலம்,எதிர் காலம் முற்றும் சுவடி(script ) ரூபத்தில் கிடைக்க பெற்றவன்.சொன்னதை சொல்லும் கிளிப் பிள்ளை. பேசிய வரிகளை விட பேச வேண்டிய வரிகளை நினைப்பவன்.
அதனால், பார்வையாளர்களை ஏமாற்றுவதை விட்டு விட்டு, தன்னை தானே ஏமாற்றி கொள்ள முயலும் இடங்கள் உண்டு.(self -deception )அந்த மேதை Stanilavski அதனால்தான் எதிர்காலத்தை நினைக்க விடாமல் கடந்த கால sense -memory இல் நடிகர்களை சிறைப்படுத்தி இருந்தானோ?
2)அடுத்த பிரச்சினை compression mode முறையில் வாழ்க்கை விவரிக்க படும் போது,ரசிகர்களுக்கு impact ஏற்படுத்த வேண்டும். ஆனால் அந்த இயல்பு வாழ்க்கைக்குரிய முக்கியத்துவமே அளிக்க பட வேண்டும்.
3)அடுத்த பிரச்சினை நடை,உடை,பாவனை ஓகே.பிரத்யேக குண இயல்புகள்,குண திரிபுகள் ஓகே. mannerisms ஓகே. Action -reaction ஓகே. ஆனால் பிரத்யேக eccentricities ,idiosyncrasies ,கட்டுபடுத்தவே முடியாத illogical odd behaviours ?consistency in inconsistencies ?
ரொம்ப போகவில்லை.
இப்போது முதல் பிரச்சினை. மனைவி மக்களுக்கு தெரியாமல், இன்னொரு வீடு set -up செய்து,வாழ்ந்து வருபவன்.ஆனால் ஒரு இக்கட்டான சமயம், இன்னொரு வீட்டின் பையன் வந்து விடுகிறான். அப்பா என்றும் சொல்கிறான்.(வர போகும் இரண்டு சம்பந்திகள் கூடியுள்ள சபை).இப்போதுதான் ,method acting படி அந்த படத்தில் நடிக்கும் மேதை நடிகனுக்கு, மூன்று சந்தர்ப்பங்கள்.அதிர்ச்சியை சில நொடிகள் காட்டி ,அந்த பையனிடம் போவது(அ ) அந்த பையனை தனியே அமைதியாக கூட்டி சென்று ,ரசிகர்களுக்கு மட்டும் அதிர்ச்சி முகத்தை காட்டுவது(அ )குழப்ப அதிர்ச்சியுடனே முழு காட்சியிலும் தோன்றுவது.
முதல் option சராசரி நடிகன் செய்ய வேண்டிய கடமை.இரண்டாவது option திலிப் குமார் போன்றவர்களுக்கு.மூன்றாவது option இந்திய பட மரபு.
ஆனால் NT தேர்ந்தெடுத்தது, நாலாவது option . முழு காட்சியுமே, ஒன்றுமே நடக்கவில்லையே என்ற ஒரு தேர்வு.படம்-மோட்டார் சுந்தரம் பிள்ளை. அந்த method நடிப்பில் அவர் தேர்வுக்கு காரணங்கள்- அந்த பையனுக்கு அந்நிய தன்மையோ குற்ற உணர்வோ,அதிர்ச்சியோ வர கூடாது. இருபது வருடங்களாக நடத்தி வரும் வாழ்கையாதலால்,என்றோ எதிர் பார்த்தது இன்று நடக்கிறது என்ற ஒரு எதிர்பார்த்த உணர்வு.(இதே புதிதாக set -up செய்தவன் என்றால் மாறியிருக்கும்)ஆனால் பையனை அனுப்பிய பிறகு இந்த நேரத்திலா என்ற அலுப்பு கலந்த ஆயாசம் காட்டுவார்.
method actor தன்னையோ, ரசிகர்களையோ ஏமாற்ற கூடாது என்ற முதல் விதி .
அடுத்த idiosyncrasy சம்பந்த பட்டது. மனோதத்துவம் சம்பத்த பட்டது. cancer வியாதி வந்து,அவதியுறுபவன்,சின்ன சிரங்கு ஆறி விட்ட சந்தோஷத்தில் மிதப்பது போன்றது.
என்னுடைய விற்பனை அதிகாரி, தன வரம்பிற்குட்பட்ட ஒரு வியாபாரத்தை ,சரியாக verify பண்ணாமல் ,ஒரு டுபாக்கூர் கம்பெனிக்கு விற்க, அந்த கம்பெனி திவால் ஆகி கொண்டிருந்தது. 50 லட்சம் மீட்க பட முடியாது. அதிகாரிக்கு wrong side of 40s . வேலை போய் விடும்.பொறுப்புக்கள் நிறைய. எல்லா கடன் காரர்களும் வண்டி எடுத்து கொண்டு போய் ,கிடைத்ததை சுருட்டி கொண்டிருந்தனர் என்னுடைய அதிகாரியும் போய் ஒரு 50000 பெறுமான பொருளை எடுத்து வந்து பெருமிதத்தோடு சொன்னது, அதில் பாதி மற்றவரின் பொருட்கள். எனக்கு,சிரிப்பதா,அழுவதா என்றே புரியவில்லை.
ஒரு கோபத்தில் தன்னை மறக்கும், simpleton என்று சொல்லத்தக்கவன், மகளை அனாதையாக விட்டு கொலைக்காக சிறை சென்று, பரோலில் தன்னை வளர்த்த பாதிரியார் சாவுக்கு வந்துள்ளவன். தன்னை அழைத்து வந்த போலீஸ் நண்பனுடன் நேசம் பாராட்டும் நண்பன். சோகம் துக்கம்,ஏமாற்றம் சுமப்பவன்.தப்பி ஓட முயலும், tense ஆன கட்டம்.துப்பாக்கி காட்டி மிரட்ட முயலும் நண்பனுடன், சூழலை மறந்து ஒரு சிறு பிள்ளையின் குதூகலத்துடன் சொல்வது-நான்தான் குண்டை எடுத்தூட்டேனே?(ஆடிக்கொண்டே)ஞான ஒளி
chekhov இருந்தால் புளகாங்கிதம் அடைந்திருப்பான்.
----to be continued .
Part 10
இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-10
கலைகள் அதன் அழகுணர்ச்சி ,காவியசுவை,பூடகம் எல்லாம் இழந்து ,பக்கத்து வீட்டு காரனை பற்றி அவன் மொழியிலேயே நேரடியாக பேசு .பார்க்கிறோம் ,ரசிக்கிறோம்.(ஆனால் நிஜ வாழ்க்கையில் தங்கள் கூண்டுகளில் வாழ்ந்து கொண்டு பக்கத்து வீட்டு காரனை பார்த்திருக்கவே மாட்டார்கள்.) அல்லது வன்முறையை மிகை படுத்தி ப்ரம்மாண்டமாக்கு, வந்து சுவைக்கிறோம் (நிஜ வாழ்க்கையில் கரப்பான் பூச்சியை அடிக்கவும் நடுங்குவார்கள்.) என்று இரண்டே இரண்டாக சுருங்கி விட்ட சோக நிகழ் காலம். நடை முறை விஞ்ஞான கல்வியை மட்டும் இயந்திரமாய் போதிக்க பட்டு, கவி மனம் இழந்து, மொழியும் இழந்து சக்கைகளாய் வரும் பணம் காய்ச்சி வறட்டு மனங்களாய் நடை முறை இளைஞர் கூட்டம். தனக்கு தெரியாதது ,இல்லாதது என்று கொண்டு எதை பற்றி வேண்டுமானால் பேசும் அகந்தை மட்டுமே மிஞ்சிய கூட்டம்.
எல்லாவற்றையும் ரசிக்க எல்லோராலும் இயலாது.ஆனால் உன்னதம் என்று சொல்ல படும் உயரிய விஷயங்களை ரசிக்க, வாசகருக்கோ,பார்வையாளருக்கோ,ஒரு தயாரிப்பு தேவை படுகிறது. ஒரு மன பயிற்சி,மெனகேடல்,regression எனப்படும் மனதடையகற்றல்,unlearning எனப்படும் cleansing,acquired taste என சொல்ல படும் சுழல் முயல்வு இவை முதல் படி. இதற்கு கூட நாம் போதிப்பதில்லை. கம்பன்,மொசார்ட்,பிக்காசோ,சிவாஜி,மௌனி போன்ற உச்ச பட்ச கலை உன்னதங்களுக்கு செல்ல அதற்குரிய தயாரிப்பு படு அவசியம்.
இந்த காரணங்களினாலேயே non -acting ,mechanical repetition ,homogenisation என்று நடிப்பு சுருங்கி விட்டதால், நமக்கு method acting தவிர வேறு எந்த பள்ளி சார்ந்த உயர்வகை நடிப்பு கலைகளில் பரிச்சயம் இழந்து வருகிறோம்.நமக்கு broadway (U .S .A )மாதிரியோ, opera house மாதிரியோ வேறு வகை வெளியீட்டு முறைகளும் இல்லை. எத்தனை கலை வறுமை!!
நமது அரைகுறை விமர்சகர்களோ, ஒரு மண்ணும் அறியாமல் வாயால் மலம் கழிப்பது போல்,நமது பாமர ரசிகர்களுடன் சேர்ந்து, over acting போன்ற பதங்களை முட்டாள் தனமாய் பிரயோகம் செய்கின்றனர்.
1) நகரத்திலிருந்து குக்கிராமம் செல்லும் ஒருவன் ,அங்கு யாரோ செத்ததற்கு அடித்து கொண்டு அழும் ஒருவனை பார்த்தால் என்ன தோன்றும்? ஒரு வேறு கலாசாரம் கொண்ட ஒருவன் ,நமது தமிழ் நாட்டின் பேசும் முறை ,உடல் மொழி பார்த்தல் என்ன தோன்றும்?நமது அமைதியான நண்பன் ,ஏதோ ஒரு சந்தர்பத்தில் பொறுமையிழந்து தன்னை மறக்கும் போது நமது எண்ணங்கள் என்ன?எப்போதும் வள வள party ஒரு நாள் பொறுமையாய் ஒன்றும் பேசாமலிருக்கும் போது ... பொதுமை, consistency ,homogenious expressions வாழ்க்கையிலேயே இல்லாத போது ,கலையில் கற்பனை இல்லாத அமைதி வெளியீடே ஒப்பு கொள்ள படும் என்பது பேத்தலான வழுவல் இல்லையா? மதுமதி என்ற படத்தில் பேய் இருப்பதாக சொல்ல படும் மாளிகைக்குள் செல்லும் திலிப் குமார், திடீர் சப்தம் கேட்டு, வில்லன் பட போலீஸ் போல் டக்குனு திரும்புவது(படு மெதுவாக) ,என்ன வித அபத்தம்? இதற்கு பெயர் அமைதியான under -play நடிப்பா? இதை விட ஏமாற்று வேலை உண்டா?
2)whatever I dont know doesnt exist என்றெண் ணும் அகந்தை பிடித்த வறட்டு மனங்கள் ,வேறு வித கலை வடிவங்களில் பரிச்சயம் கொள்ளாமல் பழிப்பது, நமது பெரியோர்களிடன் இருந்து இளைஞர்களை தொற்றியிருக்கும் பெரு நோய். இது தமிழ் நாட்டில் அதிகம். நம் சரித்திர புருஷர்களை(சிவாஜி,பாரதி,புதுமை பித்தன்) நாம் ஒரு பெங்காலி போல் (தாகூர் ,சத்யஜித் ரே) நிறுவன படுத்தி கொண்டாட தவறி விட்டோம்.
3)நமது அப்பாக்களிடம், தாத்தாக்களிடமே நம்முடைய சாயல்களை காண முடியாத போது ,இருபது,முப்பது ,ஐநூறு தலைமுறைக்கு முந்திய மனிதர்களை ,அரசர்களை பற்றிய படங்களில் கூட contemporary சாயல்களில் துளி கூட கற்பனை வளமின்றி method acting என்ற போர்வையில் ,பக்கத்து வீட்டு சதாசிவம் போலவே நடை,தோரணை,பேச்சில், அரச உடையில் மட்டுமே நடித்த திலிப் குமாரை (mugal -e -azam ) புகழும் பிரகஸ்பதிகளை கொண்ட pseudo -intellectual கூட்டம் கொண்ட இந்த அற்ப மனிதர்களுடன் என்ன சொல்ல?
இந்த தொடரை நான் ஆரம்பித்ததே , பொத்தாம் பொதுவாக விமரிசப்பவனின் வாய்களுக்கு அரக்கு சீல் வைக்கத்தான்.
---To be continued.
RAGHAVENDRA
22nd May 2013, 01:07 PM
Part 11
இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-11
இந்தியாவிலேயே, எல்லோராலும் கொண்டாட படும் நடிகர்திலகத்திற்கு அடுத்த இடத்தில் இருக்கும் நடிகர் திலிப் குமார். method acting என்ற பெயரில் என்ன ரோல் கொடுத்தாலும் ஒரே மாதிரி நடித்தாலும், பிமல் ராய் போன்ற புத்திசாலி இயக்குனர்களின் தயவாலும், ஹிந்தி படங்களுக்கே உள்ள sophistication நிறைந்த அணுகுமுறை ,ஆரோக்யமான போட்டி முறை,அரசியல் கலக்காத சூழ்நிலை இவற்றால் பயனடைந்த சராசரி நல்ல நடிகர்.இவரை உதாரணமாய் எடுப்பது நடிகர்திலகத்துக்கு அடுத்த இடத்தில் இருக்கும் contemporary என்பதாலும், Film Fare award வாங்குவதில் guinness சாதனைக்கு சொந்தகாரர் என்பதால்தான்.. calibre என்பதை வைத்து பார்த்தால் , இவர் பெயரை எழுதுவதே நம் திரிக்கு இழிவாகும்.
மூன்று வெவ்வேறு காலகட்டங்களில் இவர் நம் நம் நடிகர்திலகம் நடித்த படங்களை, ஹிந்தியில் remake செய்த போது நடித்துள்ளார்.
1959-1960 களில் paigham என்று ஹிந்தியிலும்,இரும்புத்திரை என்று தமிழிலும் ஒரே சமயத்தில் உருவாக்க பட்ட படம். இரு மொழிகளிலும் வெற்றியடைந்த படம். சிவாஜியின் நடிப்பை தொட முடியாவிட்டாலும் ,சமகால சராசரி மனிதனை பிரதிபலித்த method acting முறையில் நடிக்க கூடிய சுலபமான பாத்திரம் என்பதால் திலிப் சமாளித்திருப்பார்.
அடுத்ததாக, 1963 இல் ஆலயமணி ,1968 இல் ஆத்மி என்ற பெயரில் பீம்சிங் என்ற நல்ல இயக்குனரின் பணியில் ஹிந்தியில் தயாரிக்க பட்டது.இந்த பாத்திரம் சற்றே கடினமானது.chekhov பள்ளி பாணியில் அணுக வேண்டிய உளவியல் பூர்வமானது. சிவாஜி ஏற்கெனெவே செய்து முன்மாதிரி காட்டி விட்டாலும்,method acting என்று ஜல்லியடித்த திலீபினால், கிட்டவே நெருங்க முடியவில்லை. தமிழில் NT மிக அருமையாக இடைவேளை வரை மிருக குணத்தை அடக்கி நல்லவனாக வாழும் விழைவை, தனக்கு தானே நிரூபித்து கொள்ள முயலும் ஒருவனின் முயற்சியை explicit demonstration பாணியில் கொடுத்திருப்பார்.(அதாவது நல்லவனாக நடிக்க விழையும் ஒருவன் முயற்சி-இயல்புக்கு மாறாய் இருக்கும் ஒருவனின் தொடர்ந்த போராட்டம்) . திலிப்போ ,தன் வழக்கமான பாணியில் நல்லவனாகவே subtility என்ற போர்வையில் ஆழமே இல்லாமல், பாத்திரத்திற்கு இயல்பாக இருக்க வேண்டிய பெரிய மனித தனம் இல்லாமல் சராசரியாக கையாண்டிருப்பார். இடை வேளைக்கு பிறகோ கேட்கவே வேண்டாம். மனோதத்துவ Chekhov முறையில் உடல் மொழி, change in body position /tempo என்றெல்லாம் கவலை படாமல், தன் வழக்கமான method acting பாணியில் ஆழமோ அழுத்தமோ, hidden meanings என்பதை convey பண்ணாமல் திலிப் சொதப்பி இருப்பார். ஒரு உதாரணம்,தன் இயலாமை ,மிருக குணத்தை மேலும் உசுப்பி விடுவதை கால்களை கையால் அழுத்தி தேய்த்து மாய்ந்து போவார் சிவாஜி. அதை திலிப் தொடவே இல்லை. நடிப்பில் ஆழம் pathetically missing for dilip . ஆத்மி ,நல்ல வித்யாசமான கதையமைப்பால் சுமார் வெற்றியை ஹிந்தியில் அடைந்தாலும், நடிப்பில் உச்சம் தொட்ட ஆலய மணியின் பிரம்மாண்ட வெற்றியை தொடவே முடியவில்லை.
அடுத்ததாக, நடிகர்திலகம் உச்ச பட்ச நடிப்பு என எல்லோராலும் கொண்டாட படும், ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்க பட்ட, 1969 இல் வெளியான தெய்வ மகன். தந்தை பாத்திரத்தை method acting பாணியிலும்,மூத்த மகன் பாத்திரத்தை Chekhov மனோதத்துவ பாணியிலும்,இளைய மகன் பாத்திரத்தை முழுக்க தன் கற்பனையால் மெருகேற்றி oscar wilde விவரித்த கலைஞனின் சுதந்திர அழகுணர்ச்சி பாணியிலும்,பண்ணி சாதனை புரிந்திருப்பார். படம் மிக பெரும் வெற்றி பெற்றதுடன் இன்று வரையில் பேச படுகிறது. இதை பார்த்த திலிப் ,ஹிந்தியில் எடுக்கும் போது ,இதை நடிக்க நம்மால் முடியாது என்று (அவரே கன்னட நடிகர் விஷ்ணுவர்தனுடன் விமான பயணத்தில் கொடுத்த ஒப்புதல் வாக்கு மூலம்) மூன்று பாத்திரங்களையும் சராசரி ,ஆழமில்லாத method acting பாணி கொண்டதாக அதே கதையமைப்பில்,Bairaag என்ற பெயரில் 1976 இல் குட்டிச்சுவராக்கி (முடவனுக்கு ஏன் கொம்புத்தேன் ஆசை?) தோல்வி அடைந்து,திரையுலகை விட்டே ஆறு வருடம் ஓடி விட்டார்.
இப்போது புரிந்ததா,அவருடைய அடுத்த இடத்தில் இருந்த இந்திய நடிகனின் லட்சணம்?
---TO be Continued .
Part 12
இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-12
மத்திய அரசு தனது தென்னிந்திய படங்களை பற்றிய மாற்றாந்தாய் பார்வையை மாற்றி கொண்டு, அன்றைய பாராமுக மாநில அரசையும் மீறி, உலக பட தர கோட்பாடுகளை தளர்த்தி,அத்தனை அறிவுஜீவிகளையும் நடிப்பு என்ற ஒரே அம்சத்தால் மட்டுமே அசர வைத்து, oscar போட்டிக்கு தேர்ந்தெடுக்க பட்ட முதல் தென்னிந்திய திரை படம் தெய்வ மகன்.(1969).
பலர் ரசித்த காட்சிகளில் என்றுமே முன்னணியில் நிற்கும் மூன்று சிவாஜி தோன்றும் காட்சியை ரசித்த கோடி கணக்கானோருக்கு,தாங்கள் ரசித்தது மூன்று வெவ்வேறு உலக நடிப்பு கல்லூரி பாணியில் அந்த உலத்திலேயே ஒப்பாரும் மிக்காரும் இல்லாத நடிகன் நடித்த ஒப்பில்லாத காட்சிதான் ,என்பது புரிந்திருக்குமா என்பது சந்தேகமே. இப்போது நாம் அலச போவது அந்த படத்தை பற்றி அல்ல.
நான் ஏற்கெனவே விளக்கிய மூன்று முக்கிய நடிப்பு பள்ளி/கோட்பாடுகளான method Acting school ,Chekhov school ,Oscar wilde concept என்ற மூன்றையும்தான் மூன்று பாத்திரங்களாக்கி அந்த மேதை மூன்று பாணிகளையும் மோத விட்டார். வேறு வேறு நடிகர்கள் அந்த மூன்று பாத்திரங்களில் மோதியிருந்தால், ஒவ்வொரு நடிகனுக்கும் உள்ள திறமையளவின் ஏற்ற தாழ்வால்,நமக்கு முடிவு தெரியாமலே போயிருக்கும். ஒரே நடிகர்,சம திறமை,சம அக்கறையுடன் மூன்று பாத்திரங்களையும் வார்த்ததால் ,போட்டிக்கு ஒரு மாதிரி தீர்ப்பு வந்தது. இரண்டு சம வலுவுள்ள சங்கர்(அப்பா), கண்ணன்(மூத்த மகன்) பத்திரங்களை method acting (அப்பா),Chekhov (மூத்த மகன்) முறைகளிலும், மிக casual ஆக உருவான light ஆன விஜய்(இளைய மகன்) பாத்திரத்தை oscar Wilde பாணியில் சுதந்திர கற்பனை திறத்துடன் கையாண்டிருந்தார்.
இங்கேதான் நமக்கு ஒரு பாடமே நடத்த பட்டுள்ளது. உலக திறமையாளனான ஒரு versatile நடிகன்,தன் கற்பனை வளத்தை பயன் படுத்தி,சராசரி வாழ்க்கையில் பார்க்கவே முடியாத ஒரு பாத்திரத்தை தன் அழகுணர்ச்சியில் வடித்தால்?
எந்த கொம்பனி டம் வேண்டுமானாலும் இன்று கூட கேளுங்கள். தெய்வமகனில் உன்னை கவர்ந்த பாத்திரம் எதுவென்று? நூற்றுக்கு நூறு பேரின் விடை விஜய்தான்.இப்போது அந்த பள்ளிகளுக்கு போட்டி வைத்தால், சமமான பாத்திர வார்ப்பாக இல்லாவிடினும்,
Method Acting , Chekhov என்ற வலுவான பள்ளிகளை புறம் தள்ளி,Oscar Wilde சுதந்திர கற்பனை கோட்பாட்டில் ஜெயித்த அந்த ஒப்பற்ற கலைஞன்,மற்ற எல்லோரையும் விட எங்கு வேறு பட்டு நின்றார் என்பது உங்களுக்கு புரிந்திருக்குமே?இருந்தாலும் விளக்கத்தான் போகிறேன்,இந்த படங்களின் பாத்திரங்களையே பாடமாக்கி.
----To be Continued.
Part 13
இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-13
எந்த பள்ளிகளையும் முறையாக கல்லாமல், அந்தந்த பாத்திரங்களுக்கு , இன்னின்ன முறையில்தான் வடிவமைக்க வேண்டும், இந்த பாணியில்தான் நடிக்க வேண்டும் என்று அந்த மேதைக்கு எப்படி தெரிந்தது? பிறவி மேதை என்ற பிறகு இந்த ஆராய்ச்சியே தேவையில்லை.
தெய்வமகன் சங்கர், கண்ணன் பாத்திரங்களை எடுத்து கொள்வோம்.இரண்டுமே, தன் முகத்தின் அழகு கெட்டு ,விகாரமாகி, அதனால் மற்றவர்களின் கேலிக்கும், சீண்டலுக்கும் பாத்திரமாகி , inferiority complex இனால் அவதி படும் பாத்திரங்களே. தந்தை-மகன் என்ற உறவு முறை வேறு. நடிகர்திலகம் நினைத்திருந்தால், இரண்டையுமே, ஒரே பாணியில் வடிவமைத்து சில நு ட்பங்களை மட்டுமே மாற்றியிருக்கலாம். ஆனால் பாத்திரங்களை அவர் பார்த்த முறையே வேறு.
சங்கர், சிறு வயதில் அவமானங்களை சுமந்து அவதி பட்டிருந்தாலும் ,அது அவன் வாழ்வில் ஒரு பகுதியே. Trauma என்ற சொல்லோடு கடந்து போகும். அவன் வாழ்வில், அப்பா,அம்மா, அன்பான மனைவி,பிள்ளை,நண்பர்கள் மற்றும் கஷ்ட பட்டு முன்னேறி அடைந்த தொழில் செல்வாக்கு எல்லாமே, ப்ரம்மாண்டமாகி அவன் குறையை சிறிதாக்குகிறது.தன் குறையை தினம் தினம் ஞாபக படுத்தி சித்திரவதை படுத்த வாய்ப்புள்ள ஒருவனை ,பிறவியிலேயே அழிக்க சொன்னது தனக்காக கூட இருக்கலாம்.
ஆனால் கண்ணனோ, அனாதை விடுதியில், அனுதினமும் குறையை மட்டுமே பார்க்கும் சக மனிதர்களுடன் கூட்டு புழுவாக வாழ்பவன்.மொழியறிவு, சிறிது இசை, சிறிது பாபாவின் அன்பு இவை தவிர வேறு வெளிச்சமே இல்லாத வாழ்க்கை. Herzog எடுத்த ஒரு ஜெர்மன் படத்தில், இருபது வயது வரை மோசமான நிலையில், captivity யில் இருந்த ஒரு மனிதனை, திடீரென்று ஒரு நகரத்தில் விட்டு விட்டு போய் விடுவார்கள்.(உண்மை கதை).கண்ணன் நிலை கிட்ட தட்ட அப்படித்தான்.டாக்டர் வீட்டிலும் இருட்டறை சிறை வாழ்வே. அப்போது கண்ணனின் வாழ்வே அவன் முகதழும்பு, அவமானம், சார்ந்தே சிறுது இசையுடன் பயணிக்கிறது. உள்ள போராட்டம் சங்கரை விட கண்ணனுக்கு ஏராளம்.
அதனால் சங்கருக்கு, inferiority காம்ப்ளெக்ஸ் கொண்ட ஒரு normal மனிதனை சித்தரிக்கும் method Acting .ஆனால் கண்ணனுக்கோ, முழுதும் ஆதி மனிதனின் impulsive basic instincts மட்டுமே தலை தூக்கும் பதுங்குதல்,பாய்தல்,அன்புக்கு உருகுதல் (இசை) என்ற அடிப்படை உணர்வு மட்டுமே கொண்ட,தந்தையின் தாக்கம் சிறிதளவே கொண்ட ,உளவியல் தாக்கம் நிறைந்த chekhov பாணி.
விஜய்க்கு, இப்படி எந்த சிக்கலும் இல்லாததால், சாதாரணமாக ஓயவெடுத்திருக்கலாம். ஆனால் மேதைகளுக்கு ஏது ஓய்வு? P _R சிலாகித்த அற்புத ராஜின் மேம்பட்ட பிரதியாக சிறிதே effeminacy கலந்த ஒரு spoilt lover boy .ஆக realism பாணியில் இன்றி, முழுக்க synthetic ஆக,ஒரு கலவையான கற்பனை கலந்த அழகுணர்ச்சியில் வடிவமைக்க பட்டு....
----To be continued.
Part 14
இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-14
இப்போது கண்ணனை மிக நுணுக்கமாக ஆராய்வோம். ஆஸ்கார் பரிசு பெற்ற Robert de Niro போன்ற நடிகர்கள்,தங்கள் நடிப்பில் இயற்கையின் ,மிருகங்களின் சாயலில் தங்கள் பாத்திரங்களை வடிவமைத்து வெற்றி கரமாக தங்களது பாத்திரங்களை கையாண்டுள்ளனர்.
"He based the movement of his character Travis Bickle in Taxi Driver (1976) on that of a crab. He thought the character was indirect and tended to shift from side to side."
நடிகர்திலகம் 1954 இலிருந்தே இதனை கையாண்டுள்ளார். நடைகளில், சிரிப்பில்,உறுமலில், mannerism என்று சொல்லப்படும் mood related gesture இல்.பின்னாட்களில் பாலா பிதாமகன் பாத்திரத்தில் இதனை புகுத்தி வெற்றி கண்டார்.தெய்வ மகன் கண்ணன் , body language சில சமயம், மானின் மருளல், அடிபட்ட வேங்கையின் சீற்றம்,எலியின் survival ஒடுக்கம் ,நாயின் உருகும் அன்பு என்று.
இதை உன்னிப்பாக கவனிக்க வேண்டுமென்றால் , திருடன் பட்டம் சுமந்து ,பெண்ணுடன் அவள் hand bag திருப்பி கொடுக்கும் காட்சி, ஜெயலலிதாவிடம் தன்னை மறைத்து ஒடுக்கும் காட்சி, மற்ற படி அவர் hyper ecstacy ,( அ ) extreme emotions like anger நிறைந்த காட்சிகள்,ஜெயலலிதா தன் காதலை வெளியிட்டதும் காட்டும் சுய வெறுப்பு காட்சிகளில் கவனித்து பாருங்கள்.(கர்ணனின் உறுமல் ,சாமுண்டியின் சீற்றம் obvious )
டாக்டர் தன்னை நிலை கண்ணாடியில் காட்டும் போது அலட்சியம் செய்யும் விகார முகம் , ஒரு பெண் தன்னை காதலிப்பதாய் கற்பனை செய்து (ஒதெல்லோ பற்றி சொன்னதும் டாக்டரின் கையை உடையும் அளவு இறுக்கும் வெறி கலந்த எதிர்பார்ப்பு),அது தன கற்பனையே என்றவுடன் சுய வெறுப்பின் உச்சமாய் கண்ணாடியில் தன் உருவத்தை தானே காறி உமிழ்ந்து, கண்ணாடியை உடைக்கும் மூர்க்க சுய வெறுப்பு.அந்த காட்சியில் அவர் காட்டும் subtle change in tempo and body position , தன் வீட்டுக்கு வந்து தாய்,தந்தை, தம்பியை கண்டு காட்டும் உருக்கம் கலந்த, euphoric ecstacy, டாக்டரிடம் அதை கொட்டி விட்டு, பசித்து சோர்ந்த நாய் குட்டி போல் மடி மேல் சோரும் கட்டம்.
கண்ணனை, விஜய் வெல்வதாவது என்று தோன்றுகிறதல்லவா?
----To be continued.
Part 15
இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-15
சங்கர் பாத்திரத்தை method acting பாணியில் அந்த மேதை முடிவு செய்ததற்கு, இரண்டு காரணங்கள். முதல் காரணம் , குறையை பெரிதாக நினைக்க வேண்டாத நிலையில் நிகழ்காலத்தில் இருப்பவன்.அவன் இறந்த காலத்தை நினைக்க வேண்டிய மூன்று இடங்கள் முதல் பிள்ளை பிறந்த போது, மூத்த பிள்ளை உயிரோடு இருப்பதை அறிந்ததும் அதிர்ச்சி கலந்த குற்றவுணர்ச்சி. டாக்டரை சந்திக்கும் போது. இந்த கட்டங்கள் எல்லாமே sense memory யில் அமைய வேண்டியவை. இரண்டாவது காரணம், method acting முறையில் மற்ற நடிகர்களின் performance தூக்கலாகும். கண்ணனும் விஜய்யும் ஓங்கி தெரிய ,சங்கரின் method acting முறையில் அமைந்த பாணி யாலும், இந்த முறையில் scene stealing என்பது முடியாதென்பதும் ஒரு காரணம்.(சமீபத்தில் Lincoln படத்தில் Daniel Day Lewis இதே முறையில் method Acting செய்திருக்கிறார்.now now now என்று சொல்லும் போது சங்கர் ,ராஜுவிடம் you you சொல்லும் அதே gesture )
முதல் காட்சியில்,புற முதுகு காட்டியே , குழந்தை பிறந்த மகிழ்ச்சிக்கு expansive hand ,gesture ,ராஜு சமாதான படுத்த வரும் போது elbowing gesture ...அடடா, எத்தனை மேதைமை!!! ராஜுவுடன், தான் சிறு வயது trauma வை விவரித்து, குழந்தையை கொன்று விட சொல்லி ,குற்ற உணர்ச்சியேயின்றி உலர்ந்த மனதோடு ஆணையிடுவது போல், சிறு வயதின் உணர்ச்சியின் பால் பட்டு maturity இன்றி பேசும் விதம், ஒரு method acting ஸ்கூலில் பாடமாக வைக்க வேண்டும்.sense memory அடிப்படையில் நடிக்க விரும்புவோருக்கு பாடம்.
விஜய் உடன் அவர் கண்டிப்பு காட்ட நினைத்து இளகி சிரிப்பது, மனைவியின் வற்புறுத்தல் பேரில் இணங்குவது போல் தன கனிவை,செல்லத்தை மறைப்பது, மனைவியிடன் காட்டும் romance கலந்த நன்றியுணர்வுடன் கூடிய அன்பு இவை பார்த்து அனுபவிக்க வேண்டியவை.
டாக்டருடன் பல வருடங்களுக்கு பிறகான சந்திப்பு காட்சி ஒரு கல்வெட்டு. தயக்கம் கலந்த anxiety உடன் நுழைவது ஓர கண்ணால் சிறி து தயக்கம்,சங்கடம், curiousity கலந்த eye follow up என்று ஆரம்பித்து, formal ஆக தொடங்கி,கேட்க விரும்புவதை கேட்டு, நட்பை re -assert செய்து விட்டு,முடிவில் சிதார் ஓசை கேட்டு அலையும் மனதுடன், restless ஆக ,மகனை பார்க்க விழைந்து ,அரை மனுதுடன் ,திரும்பி செல்லும் கட்டம்.சுந்தர்ராஜன்,சிவாஜி இருவருமே உணர்ந்து, அருமையாய் நிமிர்த் தியிருப்பார்கள் . இந்த காட்சி எதை உரைக்க வேண்டுமோ, அதை உரைத்து , எதை உயிர்ப்பிக்க வேண்டுமோ அதை உயிர்ப்பித்து, எதை அடைய வேண்டுமோ அதை அடைகிறது. perfect sub text for method acting .
கண்ணன் சந்திக்க வரும் காட்சியில், உணர்வுகளை காட்டும் அளவே காட்டி, மிகை குற்றவுணர்வு இன்றி, ஆனால் கண்ணன் அநாதையாக்க பட்டு வாழ்ந்ததன் வலிகளை மட்டுமே, ,ஒரு தந்தையாக empathise செய்வார். இந்த காட்சி ,இன்றளவும் பேச படுவதற்கு காரணமே,மற்றவர்களை தூக்கி காண்பிக்கும் அளவு perform செய்த சங்கரே.
காணாமல் போன விஜய் பற்றி வரும் டெலிபோன் காட்சியில் , பதற்றம் ,எச்சரிக்கை, பதைபதைப்பு,மகனுக்கு எதுவும் நேர கூடாது என்று அவர் விடும் இயலாமை கலந்த வெற்று மிரட்டல் என்று ,ஒரு சராசரி காட்சியில் கூட நடிப்பு கொடி பறக்கும்.
ஆயிற்று. இத்தனை மேம்பட்ட கண்ணன் பாத்திரத்தை,சங்கர் பத்திரத்தை, ஒரு மேதை தன் வாழ்நாளின் one of the best என்று சொல்லும் அளவு பண்ணி விட்ட பிறகு, to lighten the proceedings என்று filler பாத்திரமான விஜய் என்ன செய்து ,இவர்களை சமாளிக்க போகிறது?
---To be continued .
eehaiupehazij
22nd May 2013, 01:10 PM
When NT started his film career only his stage experience was with him and technically no facilities for him to see and admire foreign actors at that time. He was a suyambulingam of acting. When cultures differ the environment of our livelihood too differs with differing emotions or interactions. The way we show and share human relations and passions are radically different from those of the foreign countries. Since his thunderous entry into Tamil filmdom, he had totally changed the acting environment in such a way that he was always taken as the bench mark for comparison as "nee enna periya sivajiya!" For the present day actors he remains the beacon light. No actors of this century can escape from his acting shades and he is an original school of acting
RAGHAVENDRA
22nd May 2013, 01:10 PM
Part 16
இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-16
விஜய் என்னதான் செய்யவில்லை?ஒரு உலகத்திலேயே சிறந்த மகா கலைஞன், தன் சுதந்திர கற்பனைகளோடு, எந்த realism சார்ந்த விஷயங்களோடும் சமரசம் செய்து கொள்ளாமல், முழுதும் தன் திறமை மற்றும் creativity ஐ நம்பி மட்டும் ஒரு பாத்திரத்தை conceptualise செய்து execute செய்தால்? தங்கத்தை போன்று ஜொலித்தன நெல் மணிகள் என்று கவிஞன் எழுதும் சுதந்திரத்தால் தான் கலைகள் ஜீவிக்கின்றன. மொக்கை தனமாக, நெல் மணிகள் நெல் போல தானே இருக்க வேண்டும் என்போருக்கு, கலைகளை ரசிக்கும் பக்குவமோ,அறிவோ இல்லை என்று பொருள். சரோஜா தேவியின் புத்தகம் கூட realism தான். அதை படிப்பதும் சுலபம். ஆனால் ஒரு காளிதாசன் ,கம்பனை பயில பயிற்சி தேவை. அல்லது என் போல ஒரு பொழிப்புரையாளன் தேவை.அப்படித்தான் அந்த உலக கலைஞனின் பாத்திர வார்ப்புகளும்.
விஜய் முதல் shot இலேயே ஈர்த்து விடுகிறான். பிறகு ஈர்க்க பட்டவர்களை தன்னிடையே தக்க வைக்கிறான். scene stealing செய்கிறான்.Antics செய்கிறான்.. பக்கத்திலிருக்கும் ,காமெடியன் ஒருவனை அவன் விளையாட்டிலேயே ஜெயிக்கிறான்.(beating bull in its game ). வேறு படுத்தி கொள்கிறான், நடை ,உடை,பாவனைகளில்.முக்கியமாய் இது வரை காணாத புதுமை ஆக்குகிறான். அதே நேரத்தில் ஒரு பாத்திரமாகவும் establish செய்கிறான்.ஜனங்களை ஆசுவாச படுத்துகிறான்.(heavy emotion ridden proceeding இல் இருந்து) .இன்னும் நிறைய காட்சிகளில் வர மாட்டானா என்று ஏங்கவே வைத்து விடுகிறான்.
கூர்ந்து கவனித்தால் , விஜய் much more than a spoilt mother 's virgin boy and a rich brat . பணத்தின் சௌகரியங்கள் கிடைத்தும், ஒரு identity crisis and false start உள்ள vested interest கொண்ட நண்பர்களால் சூழ பட்டவன். அம்மா, அப்பாவின் அதீத அரவணைப்பில் இருந்தாலும், முழு அப்பாவியும் அல்ல.அதீத பாதுகாப்பே ,அவன் ஆபத்துகளை உணர முடியாமல் செய்து விடுகிறது.தன்னால் தன்னை காத்து கொள்ள முடியும் என்ற அசட்டு நம்பிக்கை வேறு.ஆனால் விஜய்யை புன்னகையோடு தொடர முடியும்.
நண்பன் என்று சூழ்ந்தவனின் அதீத gimmick ஐ எள்ளுகிறான். (அதான் நான் வரை வரைக்கும் கயிறு கூட மாட்டிக்காமே???), விஜய் உனக்குன்னு கேளு என்றதும், இல்லை,இல்லை உனக்குன்னு கேட்கிறேன், அப்பத்தான் குகுளுன்னு என் daddy கொடுக்கும் என்று சொல்லும் அழகு.(நாகேஷ் வேடிக்கை தான் பார்ப்பார் என்ன பண்ணி புகுரலாம் என்று. ம்ஹும் chance இல்லவே இல்லை). மழலையான ஆங்கிலம் கலந்த தமிழ் உச்சரிப்பிலிருந்து , சுருட்டி கொண்டு சோம்பேறி கோழி தூக்கம் போடுவதாகட்டும்,அம்மா வை ice வைப்பதாகட்டும் (first class Tamil Picture கூட்டிட்டு போறேன் )உன் மேலதான் daddy க்கு எவ்ளோ லவ்வு என்று லொள் விடுவது என்று. (பின்னாடி மௌன ராகம் கார்த்திக் character இதிலிருந்து inspire ஆனதே.சந்திரமௌலி போன்ற antics .அந்த character உம் ஈர்ப்பு கொண்ட synthetic கற்பனையே ).
தன் ரூமில் யாரோ இருப்பதை தெரிந்து, அப்பா அம்மா இல்லை என்று உறுதியானதும், thief என்று மிரட்டல் ,பயம் கலந்த மெல்லிய மிரட்டல், anxiety யுடன் தேய்ந்த குரலில் மூன்றாவது thief என்று விஜய் என்னை முழுவதும் ஆட்கொண்ட பிறகு, சங்கராவது,
கண்ணனாவது?
தன்னிடம் வீட்டிலிருக்கும் கண்ணனை பற்றி பேசும் நிம்மியிடம், அவள் மடியில் உறங்குவது போல் disinterest காட்டி பின் சகிப்பு தன்மை இருக்கிறது. யாரோ புல்புல்தாரா வாசிப்பான் அவன் ரூமுக்கு போறேன் என்று என் கிட்டேயே என்று cute ஆக காதலன் possessiveness குழந்தை தனமாக வெளியிடும் அழகு.(முந்திய வருடம் 80 வயது அப்பரான மனிதன், அடுத்த வருடம் retire ஆக போகும் ஒரு பிராமணன், 20 வயது lover boy ஆக எல்லோர் மனதையும் அள்ளும் அழகு ). அப்பா அமாவிடம் அவர் காதலியை அறிமுக படுத்தும் அழகே அழகு.(certainly not .அதனால்தான் மம்மியை கட்டிக்கிட்டீங்களா, இது செய்யனும்....போன்ற one liner ).
அது மட்டுமல்ல, விஜய்யின் entry தான் அந்த மூன்று சிவாஜி தோன்றும் காட்சிக்கே, epic cult status கொடுக்கிறது. தன் தம்பியே ,தன் பெற்றோர்களுக்கு போதும் என்று கண்ணனை convince செய்து விடுகிறது. அதற்கு முன்னாள் நடந்த அத்தனை உணர்ச்சி மிகு encounter செய்யாத அதிசயம். பார்வையாளர்களும் convince ஆகி விடுகிறோம்.(கண்ணன் cheque ஐ நிராகரிக்கும் நிர்தாட்சண்யம் , விஜய் அதை உரிமை நிறைந்த ஆவலுடன் எடுக்கும் அழகு-- இந்த காட்சியையே அர்த்த படுத்தி விடவில்லையா)
கடைசி காட்சியிலும், அவ்வளவு பெரிய வில்லன் கும்பலிடம், அசட்டு மிரட்டலுடன் போராட்டம். டே... head லியா அடிச்சே என்று மயங்கி சாய்வது.
எனக்கு தெரிந்து character identity establish செய்து சாதாரண one liners ஐ அதீத ரசிக்கும் காமெடி ஆக்கிய அதிசயம் இந்த படத்தில்தான் நிகழ்ந்தது. ஒரு சாதாரண வலுவில்லாத பாத்திர படைப்பு, உலகத்திலேயே அதிக வலுவுள்ள நடிகனின் கற்பனையால் மட்டும் அமர துவம் பெற்று, அவரே நடித்த வலுவுள்ள மற்ற பாத்திரங்களை இரண்டு, மூன்று என்று வரிசை படுத்தும் உலக அதிசயம் நிகழ்ந்த ஒரே காரணம்---தெய்வ மகன் விஜய்.
----To be continued .
Part 17
இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-17
1) What is the Chekhov Technique?
For Chekhov, actors are not here to imitate life but to interpret it, to bring out its hidden meaning to the audience. For this, they must be able to act with ease, bring form and beauty to their creative expressions, and see the big picture so they can convey it in their performance.
Sensitivity of the Body
The actor's body must be trained to be receptive so it can convey creative impulses to the audiences. Through psychological exercises, the actor's body can be developed from the inside. The actor must learn to radiate the inner life of its characters and to create an imaginary center within his body that will allow him to connect to the various energies of many different characters.
Rich Psychology
The actor must penetrate the psychology of its characters. He can train by observing others and figuring out why they act or feel a certain way. Unlike method actors, Michael Chekhov firmly believed that drawing from real feelings from one's life kills inspiration and should be avoided. Creative feelings on the stage come from the actor's ability for compassion.
Creative Imagination
Our creative imagination constantly draws pictures in our mind. We can learn to collaborate with these images by asking questions from them and sometimes ordering them to show us what we are looking for. For example, you can ask your character, "show me how you would approach this part of the scene" and keep asking questions until the answer you get stirs you up emotionally and helps you start to enter the inner life of the character. Once you have a very clear inner vision, you can start incorporating it by copying one aspect of your vision at a time.
Similarly, the actor can use his imagination to create an imaginary body for his character. This allows the actor to really feel like another person and to start exploring his character's reality, movement and speech from the inside.
Atmosphere, quality and sensations
The atmosphere - whether it is happy, sad, calm, hectic, nervous, etc. - has a tremendous impact on the way we act. An actor can create an atmosphere, imagine it "in the air" and submit to it. He can imagine at outer atmosphere for a scene and an inner atmosphere for his character, contrasting them. These atmospheres will permeate his body and psychology when he acts.
Similarly, he can choose to give a quality to his movements. For example, if he chooses to move calmly, the physical sensation that results from his movements will attract similar emotions without any effort at all. This could be called working "from the outside in", except in this acting technique, the actor doesn't fake anything, he just lets atmospheres and sensations inspire his performance.
The Psychological Gesture
Just like we can access our emotions through atmospheres and sensations, we can access the will to pursue objectives through a gesture that encompasses all the needs and wants of the character. The actors starts with his first guess of what the character's main desire may be and from there, develops a gesture with his hand and arm that encompasses this desire. He gradually expands this gesture to the entire body, changing it until he feels satisfied as an artist. The psychological gesture should be strong but not tense, simple but definite, and archetypal in nature.
நான் எந்த பள்ளியை தொட்டாலும், நடிகர் திலகத்துக்குதான் எவ்வளவு பொருந்துகிறது? எந்த படத்தை தொட்டாலும், எல்லா பள்ளிகளிலும் உள்ள salient features என்பது அவரறியாமல் அவர் ரத்தத்திலேயே ஊறிய திறன், எல்லா பாத்திரங்களிலும் அவர் மிக மிக நுண்மையான உளவியல் விஷயங்களை புகுத்தி ,அந்த பாத்திரத்தின், mood ,tone ,body language ,hand -eye coordination , subtle changes in tempo and body position என்று தன் உள் வாங்கிய கதாபாத்திரத்தின் தன்மையை , பார்வையாளர்களுக்கு உணர்வு பூர்வமாக மட்டுமின்றி, அறிவு பூர்வமாகவும் பதிய வைத்தார்.
அவர் உளவியல் பாணியில் அமைந்த உத்தம புத்திரன், புதிய பறவை போன்ற படங்களை விரிவாக அலசுவோம். தயவு செய்து நடிகர்திலகத்துக்காக ஒரு முறை மேற்கண்ட ஆங்கில original chekhov விளக்கங்களை படித்து விட்டு என்னை தொடர்ந்தால் ,உங்களுக்கும் எனக்கும் வேலை சுலபம்.
----To be continued .
Part 18
இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-18
எதிர்மறையான கதாபாத்திரங்கள், திரையுலகம் தோன்றிய போதே கூடவே தோன்றி விட்டது. எக்க சக்க வில்லன் பாத்திரங்கள். (ஒரு ஹீரோவிற்கே நான்கைந்து உண்டு). ஆனால் எவ்வளவு பாத்திரங்கள் மனதில் நிலைத்து வென்றுள்ளன? பிறக்கும் போதே (திரையுலகில்) கதாநாயகனாகவே பிறந்த ஒரு நாயகன், எதிர்மறை (கெட்டவன் ) கதாபாத்திரத்தை ஏற்று இன்றளவும் அதை ஒரு cult status என்று சொல்லும் அளவில் வைத்திருப்பது (நடிகர்திலகம், கமல்,ரஜினி உள்ளிட்டு இந்த பாத்திரத்தை சிலாகிக்காத திரையுலக பிரபலங்களே இல்லை), அந்த மேதையின் நடிப்பு திறன் என்று ஒரே வார்த்தையில் அடக்க, கங்கையை கமண்டலத்தில் அடைத்த அகத்தியனே உயிரோடு வந்தாலும் முடியாது. அந்த மகா பாத்திரத்தின் இமாலய வெற்றிக்கு ஒரே காரணம் அது உளவியல் பூர்வமாக படைப்பு பெற்று (நன்றி ஸ்ரீதர்), chekhov பாணியில் உளவியல் பூர்வமாக நடிகர்திலகத்தால் அணுக பட்டு, ஒவ்வொரு அணுவிலும் அதனை உள்வாங்கி அந்த மேதை புரிந்த விந்தையே அந்த விக்ரமன் என்னும் பாத்திரம்.(உத்தம புத்திரன்.)
முதலில் விக்ரமனை மிக மிக நுண்ணியமாக ஆராய்வோம். அவன் எப்படி பட்டவன்?சிறு வயதிலேயே தந்தையை இழந்து, பாதுகாப்பு என்ற போர்வையில் அன்னையின் நிழலில் இருந்தே அகற்ற பட்டவன்.சிறு வயதில் இருந்தே சுய சிந்தை மழுங்கடிக்க பட்டு,ராஜ வாழ்வு என்ற நிழலில் மது,மாது என்பதை அடிப்படை ஆக்கியே வளர்க்க பட்டவன்.அவனுக்கு ராஜ வாழ்வு என்ற ஒரே குறிக்கோள் மற்றவர் பற்றிய சிந்தனையின்றி அவனுடைய சுயநலம் சார்ந்த ego ஊட்டி, மாமா என்ற ஒரே நண்பன்,ஒரே வழிகாட்டி, ஒரே ஆசிரியர்,ஒரே சேவகன் என்ற முறையில் சுயநல கயவன் மாமாவின் தீ வழிதான்
ஒரே வழி. தான், தன் ஆசை, தன் வாழ்வு ,தன் அகந்தை என்ற ஒரே வட்டம். ஆனால் மன்னனுக்குரிய சில பண்புகள் (சவால் ஏற்கும் வீரம், போர் பயிற்சி) பெற்றவன். ஆனால் பிற மாண்புகள் எதுவுமே இல்லாத மூர்க்கன். தன்னை தானே ஆசை படும் narcist . மற்றோரை துன்புறுத்தி மகிழும் vicarious sadist .
இதை உள்வாங்கிய நடிகர்திலகத்தின் நடிப்பை நன்றாக விவரமாக chekhov பள்ளியின் துணை கொண்டு ஆராய்வோம்.
முதல் முழு தேவை not to imitate but to interpret . சும்மா பொத்தாம் பொதுவான வில்லன் தன்மையில் நடிக்காமல்,கதாபாத்திரத்தின் பின்னணி,தேவை, மனநிலை,வெளியீட்டு தன்மை, சமய சந்தர்ப்பந்திற்கு தகுந்த உள் -வெளி ,அக-புற வெளியீடுகள் என்று நுண்ணியமாக ஆராய்ந்து,தன் வய படுத்தி, தன் திறமையால் perfect execution என்று சொல்லத்தக்க சாதனையை நிகழ்த்தினார் அந்த ஒப்புயர்வில்லா ஒரே மேதை.
------to be continued .
Part 19
இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-19
இனி இந்த பாத்திரத்திற்கு ஏற்ற உடல் மொழியை நடிகர்திலகம் தேர்ந்தெடுத்திருக்கும் அதிசயத்தை பார்ப்போம். அதிக மனோதத்துவ கவனிப்பு,அவதானம் கொண்ட,கற்பனை வளம் மிகுந்த , அந்த பாத்திரத்தின் தேவை என்ன,ஆசை என்ன, முதல் நோக்கம் என்ன,அதற்கு தேவையான sensitivity ,atmosphere ,quality ,sensation எல்லாம் கொண்டு,strong but not tense , hand and arm movement radiated into the entire body movement with definite &Archetypal என்னும் அம்சங்களை விவரிக்க போகிறேன்.
நடை- விக்ரமன் ஒரு வளர்ச்சி பெற்ற அடம் பிடிக்கும் பிடிவாத குழந்தை(impulsive ).இன்றே,இப்போவே ரகம். அந்த நடையில் ஒரு ராஜாவின் திமிர் மட்டுமல்ல, உதைத்து உதைத்து நடப்பதில், ஒரு அடம்,எதிரில் வருவதை உதைத்து தள்ளும் பிடிவாதம்,நடையில் ஒரு definite அழுத்தம் வேறு கொடுப்பார்.மிக மிக வேகமான ஒரு குழந்தையின் energy level கொடுப்பார்.
கை அசைவுகள்- மிக மிக restless ஆன ஒரு jerky வேகம். நடையோடு ஒத்திசைவு கொண்டு தன் நோக்கம்,ஆசை இவைகளை வெளிப்படுத்திய வண்ணமே இருக்கும்.ஆசை ,காமம் இவற்றில் அடைய வேண்டியவற்றில் ஒரு பரபரப்பு, இரையை அடையும் ஒரு புலியின் பசி கொண்ட ஒரு வேகம், தனக்கு பிடிக்காதவற்றை உடனே நிறுத்த விரும்பும் braking sudden stop movement , கால்கள் மிதிக்க கைகள் முன்னுக்கு சுழன்று வரும் ஒரு impulsive அவசரம், எதுவுமே பொருட்டில்லை விடு என்ற விரல்களின் அலட்சிய உதாசீனம்,டென்ஷன் மிகுந்த தருணங்களில் இலக்கில்லாமல் சுழலும் வேகம் ,முடிவெடுக்க முடியாத போது தவிக்கும் உதவி தேடும் விழைவு என்று கை அசைவுகளில் இந்த பாத்திரத்திற்கே ஒரு புது பரிமாணம் கிடைக்க செய்வார்.
கண்கள்- விக்ரமனின் இலக்கில்லாமல் அலை பாயும் கண்கள், காம வேட்கை,அகந்தை, அலட்சியம்,யாருக்காவது கெடுதல் நினைக்கும் போது ஒரு sadism நிறைந்த spark ,ஆபத்து வரும் போது நிலையாத தவிப்பு, முடிவெடுக்க நேரும் தருணங்களில் ஒரு குழப்பம் ,கிடைத்தது நிறைவேறும் போது ஒரு குழந்தைத்தனமான சந்தோஷ மின்னல், கிடைக்காத போது temper tantrum பாய்ச்சும் கண்கள்.
உடல் மொழி- ஒரு stiff ஆன உடல் மொழி ,இவன் வளையவே விரும்பாத மூர்க்கன் என்பது போல். ஒரு வட்டமிடும் கழுகு போல,இரை கிடைத்தால் பாய தயார் என்பது போன்ற முன்னோக்கியே அலையும் வேகம்,நிதானமில்லா ஒரு அலைச்சல்,ஒரு குழந்தையின் வன்மம் நிறைந்த energy மிகுந்த திரும்பல், attention seeking but rest less உடல் மொழி.
குரல்- நடிகர்திலகத்தின் குரல் வளம், அது புரியும் மாயம் ,tonal difference , modulation ஊரறிந்த உலகறிந்த ஒன்று. ஆனால் இந்த படத்தில், ஸ்ரீதரின் மிக குறைந்த sharp வசனங்களை அவர் கையாண்டது ,அதற்கு பிறகு அவரே செய்யாதது. ஒரு mid -pitch tonal modulation கொண்டு, எள்ளல், அகந்தை, குழப்பம்,impulsive braking conclusion ,ஒரு குழந்தை தனமான குதூகலம்,energy என்று உடல் மொழியுடன் இணைந்த அற்புதமான ரசவாதம்.
இதை வைத்து, அவர் அந்த கதாபாத்திரத்தை வார்த்த அழகு ..........
---To be continued .
Part 20
இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-20
விக்ரமனுக்கு படத்தில் சமவயது நண்பனே கிடையாது. அவன் வாழ்க்கையில் அன்னை ,தந்தை என்ற figure heads மன அளவில் கூட கிடையாது. சொன்ன படி சகலமும் மாமாதான்.
அதனால் மாமாவுடன் விக்ரமனின் interractions மிக மிக கவனிப்பை பெற வேண்டிய ஒன்று.
தன் பெண் நண்பிகளுடன் உல்லாசமாக வலம் வரும் மகுடாபிஷேக காட்சியில் சுயவிரும்பி(narcist ) விக்ரமன் தன் அழகை பற்றி கேட்பது கூட மாமாவிடமே. பிறகு கிளி பிள்ளை போல், சுயமாக எதுவும் பேசாமல், மறந்து விட்டேன் என கூறி, stuck ஆகி மாமா சொன்னதை (மிக முக்கிய அறிவிப்பு), போகிற போக்கில் தண்ணி குடித்தேன் என்பது போல அறிவிக்கும் பாணியில், சுய அறிவை மழுங்கடித்து வளர்க்க பட்ட குழந்தை ,ஆசிரியர் கூறியதை மனனம் செய்து போகிற போக்கில் ஒப்பிக்கும் பாணி. எனக்கு மாமா தேவை என்றதும் ஆமோதிக்காத கூட்டத்தை அதட்டும் போதே, குழந்தைக்கு மாமா ஒன்றுதான் உலகம் என்று அழுத்தம் கிடைத்து விடும்.
தன் விருப்பத்தை மாமாவிடம் சொல்லும் போது , ஒரு நண்பனிடம் பேசும் அன்னியோன்யம் , தாயின் எதிரிலேயே ஒரு பெண்ணை(மந்திரியின் பெண்) கயமை நோக்கோடு கண்ணியமில்லாமல் பார்த்து, மாமா பெண் பிடித்து விட்டது என்று தாயிடம் சொன்னதும்,ஒரு அவசர விழைவு கலந்த ஆமோதிப்பு, கண்ணியமற்ற முறையில் மாமாவிடம் தோழன் ஸ்தானத்தில் ஒரு ஆபாச கமெண்ட் என்று யூகிக்கும் அளவில் ஒரு கிசுகிசுப்பு. முடிவெடுக்க திணறும் அத்தனை தருணங்களிலும் மாமாவிடம், சாவி நின்ற பொம்மை போல ஆலோசனை கேட்கும் எடுப்பார் கை பிள்ளை தனம்.(ஏதாவது சொல்லுங்கள் ரீதியில்).அதில் தனக்கு ஆபத்து வரும் ரீதியில் வந்தால் மட்டும் முழித்து கொண்டு யோசனயை நிராகரிக்கும் குழந்தை தனம் கொண்ட சுய நலம்.
ஆனால் denial என்றோ, கேட்டது கிடைக்காத போதோ இந்த குழந்தை மாமாவையோ நிர்தாட்ஷன்யத்துடன் குத்தி குதறி திட்டும் ஜோர்.(நீங்கள் மீண்டும் கோட்டை விடாமலிருக்க. நானென்ன முட்டாளா. ஆமாம்.) களித்து,சிரித்து, சகலமுமான மாமாவை பணயமாக வைத்து பார்த்திபன் சவால் விடும் பொது, அப்படியும் செய்து பார்க்கலாமா என்று sadism கலந்த குரூரத்துடன் , குழந்தைத்தனமான குறு குறு ப்புடன் கேட்கும் விதம்.
ஆனால் , பிடிபடும் நேரம் வரும் போது சுயநலத்துடன் (தண்ட- உன்னை என்ன செய்கிறேன் பார், பேத- மாமாதான் எல்லாம், தான- இந்த நாட்டை தருகிறேன், சாம- என்னை மன்னித்து விடு) குழந்தை கொஞ்ச நேரம் சுயநல அரசன் பாணியில் முயலும். ஆனால் மாமாவை போட்டு கொடுத்து தான் தப்பிக்கவும் தயங்காது.
மாமாவிடம் நிஜமான கரிசனமோ ,மரியாதையோ இன்றி, விளையாட்டு தோழனாக,விபரீத மந்திரியாக,சொன்னதை நிறைவேற்றும் சேவகனாக என்றுதான் உறவே.
இது மாதிரி ஒரு அற்புத மனோதத்துவ ரீதியான நடிப்பு வெளியீட்டை ,நானறிந்த எந்த உலக படத்திலும் கண்டதில்லை.
----To be continued .
RAGHAVENDRA
22nd May 2013, 01:53 PM
Part 21
இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-21
விக்ரமன் அன்னையுடன் interract பண்ணும் காட்சிகள் நான்கே நான்குதான் ஆனாலும் , திரையுலகு நிலைத்திருக்கும் வரை ,நிலைத்திருக்க கூடிய காட்சிகள்.
விக்ரமன் ஆட்சி முறை கண்டு கொதித்து போய் தாய் நல்லுரை (advise ) கூற வரும் காட்சியில், பாதி களியாட்டத்தில்,சீ, என்ன இது இடையூறு என்ற கோபத்துடன் ,பாதியில் மிட்டாய் பறிக்க பட்ட குழந்தையை போன்று காலை உதைத்து வேண்டா வெறுப்பாக ஊஞ்சலில் cool ஆக அமர்ந்து, ஒரு வார்த்தை பேசாமல் ,செவிடன் காதில் ஊதிய சங்கு என்பது போல்,indifference காட்டும் பாராமுகம். ஆனாலும் ,அன்னை சொல்லும் படி தவறு செய்கிறோமோ என்ற அவ்வப்போது குழந்தை குறிப்புடன் ஓர கண்ணால் ஒரு 20% குற்றவுணர்வுடன் பார்ப்பது என்று இந்த காட்சியில் ஒரு வார்த்தை கூட பேசாமல் விக்ரமன்-அன்னை உறவு நிலை பூரண பட்டு விடும். chekhov உயிரோடு இருந்திருந்தால் ,இந்த மேதையின் காலில் விழுந்து வணங்கி இருப்பான்.
இரண்டாவது காட்சி, அமுதாவை அரண் மனைக்கு அழைத்து வந்து அறிமுக படுத்தும் காட்சி.தாய் (அதுவும் மகாராணி) அருகில் இருக்கும் விஷயமே விக்ரமனுக்கு பொருட்டில்லை.(தாய் என்ற image அவன் psyche இலேயே கிடையாது). ஒரு கண்ணியமற்ற காம பார்வை ,இரையை விழுங்கும் வெறியோடு, சம்மதத்தை கூட இங்கிதமின்றி கண்ணடித்து வெளியீடு.
கடைசியில், சிறையில் பார்த்திபனுடன் தாயை பார்த்து விட்டு, துளி கூட ஈரமின்றி மாமாவின் கைது செய்யும் திட்டத்திற்கு மருந்திற்கு கூட மறுப்பு தெரிவிக்க மாட்டார்.ஆனால் தற்கொலை செய்ய முயலும் தாயை ,ஒரு நொடி தடுக்க பார்க்கும் கணம்,விக்ரமன் மனித தன்மை துளியே துளி எட்டி பார்த்தாலும், அடுத்த நொடி அசல் விக்ரமனாகி விடும்.பார்த்திபனை விடுதலை செய்ய மறுப்பதோடு, மரண தண்டனையை மாற்ற மன்றாடும் தாயின் குரலுக்கு செவி சாய்ப்பது போல் ,அதை விட கொடூர சித்திர வதையை தண்டனையாக்கி, இதை தடுத்தால் தாயென்றும் பார்க்க மாட்டேன் என்று சொல்லும் கொடூர தனம். mercurial swings என்று சொல்ல படும் உடல்,கை-கால் இயங்கு முறையில், அலையும் மனம்- கொடூரம்-சுயநலம்-சந்தேகம்-sadism -நிச்சயமற்ற தன்மை என்று தமிழில் வந்த காட்சிகளிலேயே நடிப்பாற்றலில் உச்சம் தொட்ட ஒன்று.
இனி , காம விழைவு கொள்ளும் அமுதாவிடம் தொடர்பு காட்சிகள்.....(மாமாவின் அரசியல் ரீதியான வற்புரூத்தலினால்தான் மணக்கவே ஒப்புதல்).
குதிரையில் தன்னை விக்ரமன் என்று எண்ணி mixed reaction இல் பார்க்கும் அமுதாவை ஏற இறங்க பார்த்து , மற்றோரை நிறுத்த சொல்லி ஆணையிடும் முறை. தாயின் முன் அமுதாவை பார்க்கும் பண்பற்ற முறை,மாமாவிடம் vulgar comments ஏற்கெனெவே பார்த்து விட்டோம்.
அமுதாவிடம் பார்த்திபனாக நடிக்கும் விக்ரமன்(நடிக்க முயலுவதாக காட்டியிருப்பார் மேதை), அலை பாயும் கண்களுடன், tone down பண்ணினாலும், இயல்பை முற்றும் துறக்காமல் react பண்ணுவார். இது எந்த ரெட்டை வேடம் போட்ட ஆள் மாறாட்டம் பண்ணும் நடிகனும் செய்யாத சாதனை. பின்னால் பார்த்திபனும் விக்ரமனாக நடிக்கும் போது ,சாந்த பார்வை ,மித நடையுடன் கொஞ்சமே மற்றோருக்கு சந்தேகம் எழாதிருக்க tonal difference (சற்றே குறைபாடுள்ள) மட்டும் காட்டுவார். இந்த மேதை 1958இல் சாதித்த போது ,இதை கவனித்து சொல்ல சரியான விமரிசகர்கள் கூட இங்கில்லை.
ஆனால் பார்த்திபன் பிடிபட்டதும், பரிந்து பேசும் அமுதாவை அடங்கு என்ற ரீதியில் முறைத்து ,மாமா இவளை மன்னித்து விடுவோம் என்றதும் ,அமுதா எதிர்த்து பேசும் போது ,காமம்-கோபம்-குரோதம் கொப்பளிக்க எனக்கு தேவை என்று சொல்லும் ஒரு நிமிட பார்வை...
ஆனாலும் ,இந்த வளர்ந்த குழந்தைக்கு தன்னிடம் அமுதா நிஜமாகவே மயங்கி விட்டாள் என்று அசட்டு தனமான self -confidence உடன் தொடரும் இடத்தில்,சாவியை சுண்டி பார்க்கும் மூன்று முறையும் ,reaction காட்டும் முறையில் படி படியாய் reflex தேய்வதை எவ்வளவு அழகாக காட்டுவார்?இந்த அழகில் சுழன்றாடும் அமுதாவிற்கு தள்ளாட்டத்துடன் சுழன்றாடி சாயும் காட்சி...
பார்த்திபனுடன் ,தன்னை போல ஒருவன் அரண்மனைக்குள் ஊடுருவி, அமுதாவை பார்க்க வருகிறான், தன்னை ஒரு முறை அவமான படுத்தி தப்பித்தவன் , என்ற முறையில் பிடி பட்டதும் ,சுற்றி வந்து கொடூர கோபத்துடன்,பிடிபட்டு விட்டாயே என்ற நக்கலுடன் curiosity யும் காட்டுவார்.(மேதை என்றால் சும்மாவா?). என்னை போலிருப்பது என்று குற்றம் சுமத்தி ,பார்த்திபன் பதில் சொன்னதும் ,மாமா இவன் மீது வேறு ஏதாவது குற்றம் சுமத்துங்கள் என்று அப்பாவித்தனமான இயலாமையுடன் desperation தொனிக்க கேட்பது..
சிறை காட்சியில், பார்த்திபன் சகோதரன் என்று தெரிந்ததும் ஒரு நிமிட தடுமாற்றம் ....புரியா உணர்வு...blank feelings ... என்று ஒரு கண நேர expression .....
இப்போது சொல்லுங்கள் ,நான் ஏன் இன்னும் விக்ரமனிடம் விரும்பியே ஆயுள் சிறை பட்டிருக்கிறேன் என்று?
------To be continued .(தற்போதைய உத்தம புத்திரன் பதிவுகள் 318-3175, 321-3204, 326- 3251, 326-3259)
Part 22
இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-22
தமிழ் நாட்டின் எந்த தமிழறிந்த குடிமகனை கேட்டாலும், அவர்கள் எவர் ரசிகர்களாக இருந்தாலும் ,மறக்க முடியாத படங்களில் ஒன்றாக குறிப்பிடும் படம் புதிய பறவை.புதுமையான கதையமைப்பு, அற்புதமான நடிப்பு, மறக்க முடியாத பாடல்கள்,கேமரா, இயக்கம்,richness ,sophistication in making & great production value கொண்ட ahead of times வகை படம்.என்னிடம் யார் கேட்டாலும் எனக்கு பிடித்ததாக நான் சொல்லும் மூவர் கோபால்,விஜய். (நான்,என் மகன் என்பது ஒரு புறம்)மற்றும் விக்ரமன்.
அந்த படத்தை ரசித்த நிறைய பேர் கோபால் பாத்திரத்தை முழுதும் புரிந்து கொண்டார்களா என்பது சந்தேகமே. chekhov school நடிப்பில் என்னை கவர்ந்த Anthony Hopkins(laurence olivier சிஷ்யன்) ,Jack Nicholson ,Oleg yankovskiy இவர்கள் எல்லோரையும் தாண்டி சென்றவர் நமது நடிகர்திலகம். அவர்கள் எல்லோரையும் காலத்தாலும் முந்தியவர். கோபால் பாத்திரம் முழுக்க முழுக்க மனோதத்துவ பின்னணி கொண்ட மிக சிக்கலான பாத்திரம்.
கோபால் ஒரு வெளிநாட்டில் வாழும், பணக்கார conservative &cozy என்ற சொல்ல படும் ஒரு அம்மா பிள்ளை. அம்மாவின் மீது obsessive fixation கொண்டவன்.அம்மாவை அகாலமாக இழந்து இலக்கின்றி அலையும் போது impulsive ஆக ஒரு தவறான பெண்ணை தன் அம்மாவின் இழப்பிற்கு ஈடு செய்வாள் என்ற நம்பிக்கையில் தேர்ந்தெடுத்து, குடும்பத்தின் அமைதியே குலையும் அளவு கொண்டு சென்று, தன்னை உயிருக்குயிராய் நேசிக்கும் தந்தையையும் இழந்தவன். ஆனாலும் ,தானாக ஓடி போகும் சீர்கெட்ட மனைவியையும் கெஞ்சி திரும்ப அழைக்கும் பூஞ்சை மனம் கொண்ட கோழை.(குடும்ப கெளரவம் என்ற பெயரில்).மனைவி தானடித்த ஓரடியில் இறந்து விட , சட்டத்தில் இருந்து தப்பிக்க rail track இல் உடலை போட்டு, தற் கொலை என்று நம்ப வைத்து, குற்ற உணர்ச்சியுடன், சிறிது விடுபட்ட உணர்வுடன் ஊர் திரும்புபவன்.
தொடரும் தனிமை நிறைந்த boredom என்று சொல்ல படும் வாழ்க்கையில், neurotic -emotional distress என்று சொல்ல படும் வகையில்(தூக்கம் இழந்து தவிப்பவன்),tremor என்ற hysterical conversion மனநோயால் அவதியுருபவன்.இந்த வாழ்க்கையின் தவிப்பில்,லதா என்ற தேவதையால் சிறிது ஆசுவாசம் அடைந்து அவளை மணக்க இருக்கும் தருணம், பழைய மனைவி என்று சொல்லி அவள் உருவத்தில் உள்ள ஒருத்தி வாழ்க்கையில் புயலென நுழைய தொடரும் grief &misfortune அவன் அமைதியை மேலும் குலைத்து, depression நோக்கி தள்ளி விடுகிறது.ஆனாலும் வந்தவளை விரட்டி, லதாவை அடையலாம் என்ற நம்பிக்கை, அது குலையும் தருணம் ஏற்படும் ஏமாற்றம் கலந்த அதிர்ச்சி என்று hope &despair என்று வாழ்வு மாறி மாறி ஊசலாட, spurt of violence ,hallucination தலை தூக்க, இனி தப்பிக்க வழியில்லை என்ற stalemate நிலையில், தன்னை மறந்து உண்மையை back to the wall resolution ஆக ஒப்பு கொண்டு, குற்றத்திற்காக பிடி படுகிறான்.
கொஞ்சம் மனோதத்துவ அடிப்படை கொண்ட பாத்திரமாதலால் medical jargon உபயோகிப்பதை தவிர வேறு வழியில்லை எனக்கு. இதை தயவு செய்து பரிச்சித்து கொண்டு என்னை(இரு கோபாலையும்)தொடர வேண்டுகிறேன்.
-----To be continued .
Part 23
இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-23
எதிர்காலத்தில் யாருமே வெளிச்சமில்லாமல் ,பிறரின் தொடர்ந்த தலையீடு(ஆத்மார்த்தமாக இன்றி அனாவசிய),குறுக்கீடு இல்லாமல்,வாழவே வழியில்லாத நிலை மீடியா மற்றும் பல வகை electronic gadgets இனால் உருவாக்க படுவதை,allegory என்ற முறையில் சொன்ன படம் trumam show என்ற jim carrey யின் படம்.இதில் truman தவிர ஏனையோர் அனைவரும் நடிப்பவர்கள். கிட்டத்தட்ட இது போன்ற நிலைதான் நம் நாயகன் கோபாலிற்கு. அவனை தவிர சுற்றியிருப்போர் அனைவரும் நடிப்பவர்கள். கோபால் வாழ்க்கை, அவன் காணும் பிரச்சினைகள் எல்லாமே மற்றவர்களால் கட்டமைக்க படுபவை. கோபால் படும் அவதி மட்டுமே நிஜம். படத்திலேயே வருவது போல் பரிதாபத்துக்குரிய வாழ்க்கை.
இதில் கோபால் ஒரு தனியன். fixations ,obsessions ,உடைய பணக்கார sophisticated person with ceremonial politeness . Impulsive , breaks down at the first opportunity when confronted with adversity .
இந்த மாதிரி ஒரு பாத்திரத்தை நடிகர்திலகம் மட்டுமே அதன் நிஜமான உள்வாங்கலோடு , தன் அபார திறமையால் உள்வாங்கியதை மிக மிக துல்லியமாக வெளிபடுத்துவார்.இந்த படத்தில் ஒரு இயக்குனரின் அபார பங்களிப்பு அவர் பாத்திரத்தை இமயத்துக்கே உயர்த்தி விடும்.
இந்த படத்திற்காக நடிகர்திலகம் தேர்ந்தெடுத்த உடல் மொழி, ஒரு introverted ceremonial politeness கொண்டது. புகை வண்டியை காணும் போது ஒரு tremor (வலிப்பு அல்ல)என்ற mild hysterical action . பொதுவாக ஒரு சோர்வு ததும்பும் meloncholic look . சந்தோஷத்தை அளவாகவே வெளியிடுவார். Anxiety வரும் போது தடுமாறி உடைந்து போவார். depression என்ற அளவிற்கு தள்ள படும் போது விரக்தி கலந்த frustration .(உலகமே மூழ்கி விட்டது போல் ).நம்பிக்கை குலைவு ஏற்படும் போது அழிக்க நினைக்கும் (bout of nihilism )தன்னை மறந்த வெறி, வேறு வழியில்லை என்ற நிலைக்கு தள்ள படும் போது ஒரு பிரமை கலந்த monologue (தான் மட்டும் உண்மை. சுற்றியிருப்பதெல்லாம் பொருட்டில்லை என்ற பாவம் ), குழந்தை போல் தன் கருத்தை மட்டும் அழுத்தி சொல்லும் தன்முனைவு,சின்ன சின்ன தற்காலிக நம்பிக்கைகளை மலை போல் நம்பி குதூகலிக்கும் ,நம்ப ஆசைபடும் விழைவு என்று flawless character sketch .
இனி அந்த பாத்திரத்துக்குள் ஆழமாக நுழைவோம். ஆனால் நான் கூறியவற்றை தயவு செய்து இன்னொரு முறை படித்து தெளிவு செய்து கொள்ளவும். நாம் பேச போவது சராசரி விஷயம் அல்ல.இந்த தயாரிப்பு நமக்கு அவசியம்.
-----To be continued .
Part 24
ந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-24
மற்ற தொழிலாளர்களுடன் சாதாரணமாக நடந்து கொள்ளும் கோபால், ராஜு தாத்தாவிடம் வாஞ்சையுடன் நடந்து கொள்ளும் முறையிலேயே , கோபாலின் fixation tendencies establish ஆக தொடங்கும். பிறகு தோட்டத்தை தனியாக பார்வையிடுவது, தனியாக picnic சூழ்நிலையில் படித்து கொண்டிருப்பது என்று தனிமை ,boredom சொல்ல பட்டு விடும். தூங்காமல் முழித்திருக்கும் இரவில் வரும் லதாவுடன், இதமான உரையாடலில் தன் ஏக்கம் கலந்த தனிமை, தூக்கமில்லா இரவுகளை குறிப்பிடும் அந்த husky ஆன குரல், ஏக்கமும் சோர்வும் சோர்வும் தோய்ந்த விழிகள், லதாவிடம் ஏதோ ஒன்றை எதிர்பார்த்து வெளியிட முடியாமல், குறியீடாக பாட்டு என்று ஒற்றை வார்த்தையில், தன் அமைதிக்கு லதாவால் துணை நிற்க முடியும் என்று உணர்த்தும் கண்ணியமான இதம்.அந்த உன்னை ஒன்று கேட்பேன் இரவு காட்சி தமிழ் பட உலகின் அழகுணர்ச்சிக்கு ஒரு மைல் கல் காட்சி.
பார்த்த ஞாபகம் பாடலில், எதோ ஒன்றை தொலைத்து பறி கொடுத்த ஏக்கத்துடன், நிலைத்த சூன்ய பார்வை, அவ்வப்போது பாட்டில் சூழலில் அடையும் பரவசம், இதையெல்லாம் மீறாமல் நம்மை இன்றளவும் கவரும் அந்த sophisticated புகை பிடிக்கும் ஸ்டைல்(நாக்கில் இருந்து சின்ன புகையிலை தூளை விரலால் துடைக்கும் லாவகம்,wine glass ஏந்தும் தோரணை. பாடகி சித்ராவிடம் உடனே காட்டும் impulsive ஈடுபாடு.கல்யாண காட்சி உடனே வரும் போதும் பழகிய உணர்வு தெரியும் அந்த ஒரே பாடல் காட்சியில் .
அந்த ரயில்வே கேட் காத்திருப்பு காட்சியில், tremor என்றவொரு, வலிப்பு -அதிர்ச்சி இடைப்பட்ட நிலையை அவ்வளவு தத்ரூபமாக எந்த நடிகனும் காட்டியதில்லை.
நிச்சய தார்த்தம் அன்று வந்து சேரும் தன் மனைவி போன்ற உருவம் கொண்ட, மனைவியாக சித்தப்பா என்றவொருவனுடன் வந்து நிற்கும் காட்சியில்... முதலில் அதிர்வு என்ற நிலையில் தொடங்கி denial mode க்குள் செல்வார். இருக்காது,இருக்க முடியாது என்று. பிறகு சிறிதே seriousness உணர்ந்து, தன் police நண்பன் துணையுடன் மிரட்ட தலை படுவார். ஆனால் நடக்காது என்றவுடன் புலம்பும் ,குழம்பும் நிலை.(என்ன,என்ன,என்னை கேட்டால் எனக்கு என்ன)death certificate தேடி எடுத்து(அப்படியே போட்டது போட்டபடி விரையும் ஆர்வம் கலந்த வேகம்), அதை ரங்கன் தூளாக்கியதும், போலீஸ் நண்பனுடன் சிறு அதிகார தொனியிலேயே கடைசி பலவீன முயற்சியை அதிகாரமாய் தொடுப்பதும், வழியில்லை என்று அடங்குவதும்-இந்த காட்சி ஒரு roller -coaster ride .
தொடரும் காட்சிகள், இந்திய பட உலகம் இது வர பார்க்க இயலா புதுமை கலந்த marvel ...நடிப்பின் உச்ச பட்ச சாத்தியங்கள்.
-----To be continued .
Part 25
இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-25
அதற்கு பிறகு வரும் பதினோரு காட்சிகள் அதற்கு முன்னும் பின்னும் இந்திய திரையுலகமே கண்டிராத miracle .நான் குறிப்பிட்ட படி emotional roller coaster ride . நடிகர்திலகம் போன்ற நடிகர் ஒருவரால் மட்டுமே முடித்து காட்ட முடிந்த அதிசயம். விறு விறுப்பு,பரபரப்பு, sentiments ,Technical excellence ,புதுமை எதற்கும் பஞ்சம் வைக்கா விட்டாலும் நடிப்பு என்ற விஸ்வரூப தரிசன ஜோதியில் மற்றதெல்லாம் கரைந்து போகும் ,அதியற்புத உன்னதம் தொடும் psychedelic ecstasy பார்வையாளர்களுக்கு.
லதாவையும், அவள் தந்தையையும் ரங்கனின் insult மீறி, வீட்டில் இருக்க வைக்க கெஞ்சி கூத்தாடும் காட்சியில், அவர்களுக்கு நம்பிக்கை விதைக்க பாடு படுகிறார் என்ற அளவில் மட்டுமே (தன் சந்தேக கணங்களை ,அவநம்பிக்கையை மறைத்து. அப்படி மறைப்பதை நொடிக்கு நொடி மாறும் முகபாவங்களில் நமக்குணர்த்தி )நடிப்பார்.அவர்களை convince பண்ண தன் anxiety மறைப்பாரே தவிர, மறையவில்லை என்பதை அந்த இறைஞ்சும் பாணியே உணர்த்தி விடும்.
விரலை சொடுக்கி யோசித்து எனக்கு தெரிஞ்சா உன்னிடம் ஏன் வருகிறேன் என்ற இயலாமை கலந்த ஆயாசம்.dining காட்சியில், சித்ரா அடிக்கும் பால் பேணி sixer இல், முதல் நம்பிக்கை தெறித்தோடும் போது , அடுத்து வேறு வழியின்றி அவர்களை பணம் கொடுத்து விரட்ட முயலும் காட்சி. எல்லா பணத்தையும் நான் எடுத்து கிட்டா நீங்க என்ன பண்ணுவீங்க என்பதற்கு பிச்சை எடுப்பேண்டா ,என்று லதாவுடன் தனக்கிருக்கும் அபார காதலை வெளியிடும் முறை, யாரோட சாவு எனக்கு சந்தோசம் தருதோ அவ இருக்கான்னு சொல்லி ஏண்டா சித்ரவதை செய்யறே என்று கெஞ்சி அதற்கும் இணங்காத போது சீ,போ என்று வீ சும் வெறுப்பில் breaking பாயிண்ட் desperation தெரிய ஆரம்பிக்கும்.
அந்த போலீஸ் ஸ்டேஷன் காட்சியில் அப்படியே எல்லாம் மூழ்கி விட்ட விரக்தியில், எல்லா கேள்விகளுக்கும் indifference ஆக ஆமாம் என்று பதிலில் (கண்ணை அழுத்தி தடவி)என்னவேண்டுமானாலும் நடக்கட்டும் என்ற விரக்தி தெரிய ஆரம்பிக்கும். அவனை போக சொல்லு என்ற அருவருப்பு தெரியும் வெறுப்பின் கொதிப்பில், மனசுக்குள் துப்பாக்கி எடுக்கும் கோபம் புலப்படும்.
அடுத்த கல்லை அவிழ்க்கும் காட்சியில் தனக்கு தெரிந்த லதாவின் காதலையே re -assure செய்து கொள்ளும் விதமாக, பொய் ஆச்சர்யம் காட்டி, தான் breakdown ஆக ஆரம்பித்து விட்டதை மறைத்து லதாவிற்கு நம்பிக்கை ஊட்ட முயலும் பொது, தானே நம்பாததை மற்றவருக்காக சொல்வதை இந்த மேதை உணர்த்தும் குறிப்பு, குரலும்,பாவங்களும், உடல் மொழியும் புரியும் ரசவாதம்.
-----To be continued .
RAGHAVENDRA
22nd May 2013, 01:58 PM
Part 26
இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-26
லதாவின் அவநம்பிக்கை நிறைந்த சோகத்தால் வெறி கொண்டு, ரங்கனையும் சித்ராவையும் சுட வரும் போது ,மற்றவர்கள் தடுத்தவுடன் விரக்தி, கோபம் கொண்டு, தன்னிச்சையாக பார்த்த ஞாபகம் இசைப்பார் பியானோவில்.இந்த காட்சியில் பாடல் முழுதும் meloncholic serenity with puzzled look உடன்,நிலைகுத்திய விழிகளுடன், முடிவில் சித்ரா அந்த பாடல் எப்படி தெரியும் என்பதற்கு பதில் கூறியவுடன் ஏமாற்றத்துடன் திரும்பும் லதாவை பார்த்து திரும்ப violent ஆகி சித்ரா கழுத்தை பிடித்து வெறி பிடித்து கத்தி கொண்டு தோட்டத்திற்கு செல்லும் இடம்......
அங்கு தோட்டத்தில் லதாவுடன் ,நம்பிக்கை இழந்து அவரை போக சொல்லி விட்டு, அப்படியாவது பழைய நாட்களை அசை போட்டு வாழ்ந்து விட நினைக்கும் கோபால்,பதட்டத்துடன் சிகரெட் பற்ற வைப்பதிலேயே depressed hope less state வெளிப்பட்டு விடும்.போலீஸ் நண்பன் வரும் போது detached silent agony யில் கொடுக்கும் indifferent உடல் மொழி மற்றும் கை அசைவுகள் ....(அவசியமில்லை). நண்பன் கைரேகை எடுக்க சொன்னதும் அவன் குற்றவாளிகள் தப்பி விடும் சாத்யகூற்றை சொன்னதும் போய்தான் தொலயுட்டுமே என்ற அங்கலாய்ப்பு.
சித்ராவை வலையில் சிக்க வைக்க கடுகடுவென்ற பாவனையில் இருந்து போலீஸ் நண்பன் voice over க்கு தக்க படி gradual ஆக forced pleasantness கொண்டு வருவது. ரங்கன் வருவதை பார்த்து லதாவிடம் மனமில்லாமல் கடுமையாய் பேசி அனுப்பி விட்டு ரங்கன் ரேகை இருக்கும் பால் கிண்ணத்தை உடைத்தவுடன், அதை பார்த்து கோபம் நிறைத்த help less ness கையை கொண்டே காட்டுவார்.
இந்த படத்தின் முக்கியமான மூன்று சிறப்புகள் - முதல் முதல் sur realistic முறையில் எடுக்க பட்ட எங்கே நிம்மதி பாடல். படம் முழுதும் voice over என்ற முறையில் நடிகர்திலகத்தின் உணர்ச்சி மிகு nerration உடன் perfect ஆக sink ஆகும் அவரின் நடிப்பு.ஆச்சர்ய பட வைக்கும்.கையை பயன் படுத்தி அவர் அதீத மனநிலையை வெளிபடுத்தும் இடங்கள். ஒன்றை ஏற்கெனெவே பார்த்தோம். எங்கே நிம்மதி பாட்டில் எனது கைகள் மீட்டும் போது வரிகளில் புறங் கைகளால் action காட்டி கண்களால் follow thru பண்ணும் போது கைகளே அந்நியமான உணர்வை கொடுப்பார். சித்ரா அவர் அடித்த அடியில் இறந்து விட்டதும் இந்த கைதானே அவளை அடித்தது என்று தண்டிப்பது போல் .....
climax காட்சி இந்திய படங்களில் வந்ததிலேயே சிறந்த காட்சிகளில் ஒன்று.
stylised நடிப்பில், மனோதத்துவ முறையில் உச்சம் தொடுவார். அப்படியே ஒவ்வொரு நொடியும் மனதில் தைக்கும். பிரமை பிடித்த மாதிரி உட்கார்ந்து சொல்லும் எதுவும் காதில் ஏறாத மனநிலையில் ராஜு வந்ததை கேள்வி பட்டதும் அவர் துன்பமெல்லாம் நீங்கி விட்டதான நினைப்பில் காட்டும் அதீத stress relieved happiness ... இந்த காட்சி முழுவதும் hope -despair ஊசலாட் டமே. ராஜூவை கட்டி தேம்பி விட்டு, ஆட்டி வைக்கிராண்டா என்ற ஆத்திரத்தை கொட்டி ரங்கனை சித்ராவை பரபரப்பாய் வெற்றி களிப்பு விடுதலை உணர்வில் அழைக்கும் தோரணை ,சித்ரா வந்ததும் பேயை பார்த்த மாதிரி பின் வாங்கும் அவசரம்.ராஜு அவளை தங்கை என்றும், ரங்கனை சித்தப்பா என்றும் ஒப்பு கொண்டவுடன்,தன்னையே நம்ப முடியாமல் மீண்டும் கெஞ்சி விட்டு, மச்சத்தையும் பார்த்தவுடன் விரக்தியில் வீழும் இடம்... நண்பன் கைரேகையுடன் வந்ததும்,ஒவ்வொருவரிடமும் களிப்புடன் ரேகை...ரேகை என்று பிரச்சினையே முடிவு பெற்றது போல் கொண்டாட்ட மனநிலை சென்று, ரேகையும் ஒரே மாதிரி என்று சொன்னதும்,நம்பலியா,நீயும் நம்பலியா என்று லதாவிடம் புலம்பி கொண்டே confess பண்ணும் காட்சி.... நான் அசைவே இல்லாமல் லயித்து ஒன்றிய அதிசயம்.
confess பண்ணி முடித்ததும், அந்த train உடலை சிதைத்ததை விவரித்து விட்டு அதிர்ச்சி கலந்த பய உணர்வுடன் அலறி, ஒண்ணு மட்டும் உறுதி என்று சொல்லி விட்டு மூக்கை கைகுட்டையால் சிந்தும் improvisation (humanising the celluloid image ).குழந்தை போல் தன் conclusion சொல்லி விட்டு, பந்தாவாக எழுந்து வந்து எல்லோரிடமும் இல்லை என்ற பதிலை கேட்டு பெற்று ,லதா தன்னை கைது செய்ய சொன்னதும்,நம்பவோ,ஜீரணிக்கவோ முடியாமல் உண்மை உணர்ந்து என்ன அழகான நடிப்பு என்று சித்ராவிடம் சொல்லி(அப்போது கூட லதா நடிக்கவில்லை என்ற நம்பிக்கை)
அதை வைச்சா என்னை வீழ்த்திட்டே, அத்தனையும் நடிப்பா என்று குழந்தையின் ஏமாற்றம் நிறைந்த தேம்பலுடன் கேட்டு, லதா தன்னை உண்மையாய் நேசிப்பதை அறிந்து கொள்ளும் நெகிழ்வு..(தாடையை தடவி)
இப்போது சொல்லுங்கள். இந்த மாதிரி ஒரு அதிசயம் உலகத்தில் உண்டா?கண்டதுண்டா?
----To be continued
Part 27
இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-27
இந்தியாவிலேயே Docu -drama என வகை படும் ,biographical படங்களுக்கு முன்னோடி கப்பலோட்டிய தமிழன். அகில இந்திய அளவில் கொண்டாட பட்டு ,உலக அளவில் தூக்கி பிடிக்க பட்டிருக்க வேண்டிய உன்னத சிறந்த படைப்பு. திலக், விபின் சந்திரா, அரவிந்தர், லாலா லஜபதி முதலியோர் வழியில் வந்து இந்திய சுதந்திரத்திற்காக பல தியாகங்கள் செய்த ஒப்பற்ற தமிழன் வ.உ .சிதம்பரம் பிள்ளை. காங்கிரஸ் ,மற்றும் காந்தியோடு முரண் பட்டவர் என்பதாலேயே ,single political agenda கொண்டிருந்த (அதாவது சுதந்திரமே காந்தி,நேரு, காங்கிரஸ் சாதனை. மற்றோர் ஒரு பங்களிப்பும் இல்லை ) அன்றைய அரசாங்கத்திற்கு இந்த படம் உவப்பில்லை.திராவிட கட்சிகளுக்கும், உண்மையான தலைவர்களிடம் ஈடு பாடில்லை. (அது பிள்ளை ஆகவே இருந்த போதும்).ஆனால் உன்னத தேச பக்தர்களான பந்துலுவும்,நடிகர்திலகமும் இந்த தமிழனை தமிழர்களுக்கு கொண்டு சேர்த்தனர்.
இந்த படம் நடிகர்திலகத்தின் histrionics என்று சொல்ல படும் உன்னத வேறுபட்ட நடிப்புக்கு அதிகம் scope இல்லாதது.உள்ளதை உள்ள படி உரைக்க வேண்டும். பார்த்து பழகிய contemporaries உயிரோடிருக்கும் போது ,இந்த தலைவனை ரத்தமும் சதையுமாக நம் முன் நிறுத்த வேண்டும்.கட்ட பொம்மன் போல அபார நடிப்பு திறமையால் கட்டபொம்மன் எப்படி இருந்திருக்க வேண்டும் என்று காட்டியது போல் செய்ய முடியாது. கப்பலோட்டிய தமிழன் எப்படி இருந்தார் என்று காட்ட வேண்டும்.
இந்த மேதை தேர்ந்தெடுத்த நடிப்பு பள்ளி முறை Stanislavsky ,Strasberg method Acting சார்ந்தது. method Acting is not just acting or Reacting but behaving the way character should have done .அந்த பாத்திரமாக வாழ வேண்டும் ,அந்த வாழ்க்கை முறையின் உணர்வுகள் போலி செய்ய படாமல் ,நடிப்பவனின் நினைவில் அடுக்ககளில் இருந்து கட்டமைக்க பட்டு, வ.உ.சி. வாழ்க்கையோடு,பாத்திரத்தோடு பொறுத்த பட்டு இணைவு பெற வேண்டும்.
நடிகர்திலகம் தேச பக்தி கொண்ட பாரம்பரியத்தில் இருந்து வந்தவர். அவரது தந்தை சுதந்திர போராட்டத்தில் ஈடு பட்டு குடும்பத்தை தவிக்க விட்ட தியாகி. சிறை சென்று பல அவதிகள் உற்றவர் .நினைவின் அடுக்குகளுக்கு பஞ்சமில்லாத வகையில் பின்னணி.
இவ்வளவு அற்புதமான advantage இருக்கும் போது ,உண்மைக்கு மிக மிக அருகில் வந்த அற்புதமான திரைக்கதையும் தயாரான போது ,ஒரு கலைஞனின் அறிவும்,மனமும் ,உணர்வும் அதில் தோயும் பொது ,அதில் தோய்பவன் உலகத்திலேயே மிக சிறந்த நடிகனாக இருக்கும் போது, அந்த magic நிகழத் தானே வேண்டும்?
நிகழ்ந்ததா?
வரும் பாகங்களில் அலசுவோம்.
----To be continued .
Part 28
இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-28
கப்பலோட்டிய தமிழனின் நோக்கம், தேசியம், விடுதலைக்காக செய்த உன்னத தியாகங்கள்.ஒரு தனி மனிதன் தன் சொந்த பந்தங்கள் சொத்து சுகங்கள் அத்தனையும் தேசத்துக்காக அர்ப்பணித்த உன்னதம், தேச விடுதலைக்காக பொருளாதார ,வியாபார உத்தியை கையிலெடுத்த துணிச்சல் மிகுந்த enterprenership ,ஒரு முதலாளியாகவே இருந்தும், தொழிலாளர் உரிமைக்காக போராடும் நேர்மை, ஆதிக்கத்தை கண்டு அஞ்சாமை,ஆனால் கடைசியில் நம்பியவர்களால் கை விடப்பட்டதும் அல்லாமல், கண்டு கொள்ளாமலும் விட பட்ட சோகம் இவற்றை முன்னிறுத்திய super -objective கொண்ட உண்மை theme .
இதில் வ.உ .சி இளமை காலங்கள் சொல்ல படவே இல்லை. ஆரம்பமே கல்யாணமாகி ,pleader பணியில் இருக்கும் நாட்களே. பொது வாழ்வின் ஆரம்ப நாட்களில் இருந்து தொடக்கம். பிறகு அவருடைய அந்நிய பொருள் பகிஷ்கரிப்பு, சுதேசி கப்பல் கம்பெனிக்கான முனைவு, தொழிற்சங்க, அரசியல் போராட்டங்கள் என்று விரியும். பிறகு சிறை வாழ்க்கை, வெளியில் வந்ததும் ஏமாற்றம் நிறைந்த பொது வாழ்வு மற்றும் தனி வாழ்வு. என்று மூன்று கட்டங்களில் விரியும்.
இதற்காக நடிகர் திலகம் செய்த home work அபாரமானது. முதலில் மொழி. தமிழில் slangs ,ஓட்டபிடாரம் பிள்ளைகளுக்கு உரிய வட்டார மொழி என்பது இருந்தாலும் அது தொட்டு கொள்ள ஊறுகாய் போல ஒரு சில குடும்ப காட்சிகளில் உபயோக படுத்த படுவதோடு சரி.மற்ற படி ஒரு வழக்கறிஞர், பொது வாழ்க்கைக்கு வந்த, இலக்கியம் ,ஆங்கிலம் அறிந்த மனிதர்களுக்கு உண்டாகும் பொது மொழி தேர்ந்தெடுப்பு மிக சரியானது.(நினைத்திருந்தால் மக்களை பெற்ற மகராசி கொங்கு தமிழ் போல பிள்ளை தமிழ் பேசியிருக்கலாம்.).
அடுத்து personality . ஒரு வசதியான வீட்டு படித்த மனிதர். முதலாளி ,leadership quality உள்ள abnormal enterprener and a practising lawyer .அதற்குரிய constructive arrogance ,மிடுக்கு, அதே நேரத்தில்
exhibitionist politeness , commitment to the cause ,எதிரில் இருப்பவரின் தரமறிந்து நடக்கும் பழகும் இங்கிதம்,public life outwardly courageous conviction என்பவை கொண்ட முதல் கட்ட பாத்திர குண வார்ப்பு.
இரண்டாவது கட்ட பாத்திர வார்ப்பு ,அவர் சிறையில் தனக்கு பழக்கமில்லா கடின உடலுழைப்பு, சிறிதே physical abuse , தனிமை சிறை வாசம் என்று உடலை சோர வைத்தாலும் மனதில் உறுதி தளரா நிலைமை.
மூன்றாவது கட்டமோ , குடும்பம் சிதைந்து, அவர் உருவாக்கிய கம்பனியை வெள்ளையனுக்கே விற்று விட்ட துரோகம்,மக்களின் பாரா முகம், ஒன்றன் பின் ஒன்றாக நண்பர்களின் துயரம் மற்றும் இழப்பு, ஒரு defeatist introverted சுருங்கல், உடலும் மனமும் சோர்ந்து இலக்கிய பணியில் ஒதுங்கி மீதி நாட்களை இறப்பு வரை கடத்துவது என்கிற phase
-----To be continued ..
Part 29
இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-29
படத்தின் துவக்கத்திலேயே எனக்கு ஒரு ஆச்சர்யம் காத்திருந்தது. எனக்கு பத்தாம் வகுப்பு படிக்கும் போது class teacher என் அம்மாதான்.டீச்சர் என்றுதான் வகுப்பிலும், பள்ளியிலும் கூப்பிட வேண்டும், அம்மா என்று கூப்பிட கூடாது என்று கண்டிப்பான உத்தரவு. கூப்பிட கூடாது என்ற deliberate consciousness என்னை அடிக்கடி தவற வைக்கும். முதல் காட்சியில் தந்தைக்கெதிராக ஒரு வழக்கில் ஆஜராகும் போது வாய் தவறி அப்பா என்று ஆரம்பித்து மன்னிக்கவும் எதிர் கட்சி வக்கீல் என்பார். சிறிதானாலும் என்னால் மறக்க முடியாது.
ஒவ்வொருவருடனும் interract பண்ணும் போது அதற்குரிய ஒரு தனி சிறப்பான விசேஷம். சிவாவுடன் ஒரு மதிப்புக்குரிய ஆசிரிய தோழன் ,பாரதியுடன் விளையாட்டு கலந்த புரவல உரிமை, மாடசாமியிடம் மகனை போன்ற ஆனால் வேலையாள் என்ற நிலையும் தலை காட்டும் தோரணை, கப்பல் கம்பனி இயக்குன நிர்வாகிகளுடன் வணிக நோக்கம் கலந்த நட்பு,தொழிலாளர்களிடம் பரிவான ஒரு வாஞ்சை(பரிமாறிய சோற்றை எடுத்து உண்டு தரம் பார்க்கும் ஒரு leadership கலந்த exhibitionist good gesture ), adverse situation போது வெளிப்படும் assertive firmness (கப்பல் தர மறுக்கும் ஷா விடம்),திலக்கிடம் பேசும் போது பணிவும் ,மரியாதையும் கலந்த ஆங்கில(எவ்வளவு நல்ல உச்சரிப்பு) விண்ணப்பம்,ஆஷ் மற்றும் விஞ்ச் இவர்களுடன் விட்டு கொடுக்காத அலட்சிய பேச்சு என்று வ.உ .சி போல behave செய்து பாத்திரமாக வாழ்ந்திருப்பார்.
சிறையில் தனக்கு பழக்கமில்லாத உடலுழைப்பில் ஈடு படுத்த படும் போது விருப்பமில்லா கஷ்டத்தை வெளியிடும் முறை, மனத்தை உறுதியாக வைத்திருக்க பிரயத்தனம் கலந்த மெனக்கெடல், டாக்டருடன் interract செய்யும் போது அலட்சியம் காட்டினாலும் இதற்கு மேல் என்ன என்ற வகையிலேயே, சிறையிலிருந்து விடுதலை என்றதும் நாட்டுக்கா விடுதலை என்று மேலுக்கு பேசினாலும், வெளியில் வந்ததும் அடையும் சுதந்திர உணர்வை ,அந்த காற்று பட்ட உணர்வை, பறவைகளை பார்த்து அடையும் பரவசத்தை காட்டியும் விடுவார்.
ஏமாற்றத்தை உணர்ந்தாலும் (ஒருவர் கூட அழைக்க வராததில்), மேலுக்கு சமாதானம். சிவாவை பார்த்து அடையும் அதிர்ச்சி கலந்த பரவசம்,தம்பி மனநிலை பிறழ்வில் தலையில் அடித்து அடையும் தாங்கொணா துயரம், மக்களின் உதாசீனத்தை அனுபவித்து கூட்டுக்குள் முடங்கும் சுருக்கம், இழப்பில் காட்டும் ஏமாற்றம் நிறைந்த தனிமை சோகம் என்ற அளவில் method acting முறையில் மூன்று phases என்று வரும் நிலைகளிலும் பாத்திரத்தை வார்த்ததில் மூன்று முக்கிய compliments .
முதல் ஒன்று சிவாஜியிடம் இருந்து சிவாஜிக்கு---- நான் நடித்ததிலேயே மிக சிறந்த பாத்திரம் என்று. இரண்டாவது வ.உ.சி மகன் ஆறுமுகத்திடம் இருந்து தந்தையை தத்ரூபமாக கண்டேன் என்றது. மூன்றாவது வ.உ .சி மற்றும் சுப்ரமணிய சிவாவை அனைத்து நிலைகளிலும் நேரில் கண்ட என் தாத்தா வின் பரவச compliment . "வேறு எவண்டா இப்படி பண்ண முடியும்? நடிக்கலைடா. அப்படியே வாழ்ந்துட்டான், நான் நேர்லயே பாத்திருக்கேண்டா அவர்களை எல்லாம். அதை வைச்சு சொல்றேன்". என்ற மனமார்ந்த பரவசம்.
இதற்கு மேலும் வார்த்தை ஏது சொல்ல?
-----To be continued .
Part 30
இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-30
ஸ்டெல்லா ஆட்லர் , stanilavsky மற்றும் ஸ்ட்ராஸ்பெர்க் என்ற தன் ஆசிரியர்களோடு கருத்து முரண் பட்டு வெளியேறும் போது நினைத்து கூட பார்த்திருக்க மாட்டார். 1927 இல் தமிழகத்தில் ஒரு உலக நடிப்பு மேதை பிறந்து தனக்கும் சிஷ்யனாக இருந்து, தன் குருக்களுக்கும் சிஷ்யனாக அபார திறமையால் இணைப்பு பாலம் போட போகிறார் என்று.
ஸ்டெல்லா வெளியேறும் போது , ஒரு நடிகனின் நினைவுகளில் இருந்துதான் (sense memory)உணர்ச்சியை காட்ட வேண்டுமென்றால் அந்த மாதிரி நடிப்பே தனக்கு வேண்டாம் என்று declare செய்தார். வேறு வேறு கலாசாரம், வேறு வேறு மதிப்பீடுகள்(values ),வேறு வேறு காலநிலைகள், கொண்ட பாத்திரங்களில் நடிக்கும் போது ஒரு நடிகரின் தனிப்பட்ட பிரத்யேக பண்பாடு ,அனுபவித்த உணர்வு நிலைகள்,அனுபவங்கள் என்பவற்றை கொண்டு மட்டும் மேடையேறுவது, அந்த நடிகரை மேடையிலேயே நிர்வாணமாக்கி விடுவது போன்றது என்றும் ஸ்டெல்லா கருதினார்.அதனால் ஆய்வு செய்து வேறு வேறு நிலைகளினாலான நடிப்புக்கு faking the emotions (போலி செய்த உணர்வுகள்) என்பது அவசியமானால் செய்யத்தான் வேண்டும் என்ற நிலைப்பாடு கொண்டார்.
உடற்பயிற்சி, குரல் பயிற்சி இவற்றுக்கு முக்கியத்துவம் தந்ததுடன்,ஒரு நடிகன் மேடையை ஆக்ரமிக்க வேண்டும் என்றும்,உடல் மொழியில் பண்பட்டு, குரலால் தெளிவாகவும்,பாவத்துடனும் ,தன்னை மீறிய ஆகிருதியுடன் (Size )மேடையை கௌரவிக்கும் வகையில் (Stage Presence ) இருக்க வேண்டும் என்றும் larger than life presentation அவசியம் என்றும் கருதினார்.
போரடிக்காமல்,ஒரு நடிகன் தன் திறமையால் தன் நடிப்பின் அத்தனை அம்சங்களையும்,விருப்பங்களையும் நிறைவேற்றி கொண்டு ஒரு காட்சிக்கு வேண்டிய அபார character interpretation /manupulation செய்து அந்த காட்சியையே ஆக்ரமிக்க வலியுறுத்தினார்.
அவரின் சில Quotes உங்கள் பார்வைக்கு ஆங்கிலத்திலேயே......
In your choices lies your talents.
Dont use your conscious past.Use your creative imagination to creat a past that belongs to your character.
I dont want you to be stuck with your life.Its too little.
You cant be boring.life is boring.weather is boring.Actors must not be boring.
Life beats down and crushes the soul and art reminds you that you have one.
-----To be Continued.
Part 31
இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-31
Artaud acting techniques.
Artaud's thinking placed heavy emphasis on invoking deep routed feelings through acting. He believed the theatre was about action and the element of surprise. His theatre of cruelty approach, of which he is better associated with, takes acting to the subconscious level. Using painful memories and strong feelings to invoke strong emotion. Antonin Artaud thought less of words and more of profound impact. Where as Brecht wanted the audience to go out and change society Artaud wanted them shaken to their soul and to look within and make Changes within themselves.
இந்த முறையில் சராசரியாக நாம் வாழ்க்கையில் காட்டும் முகபாவங்கள், வெளியீட்டு முறைகள் நிராகரிக்க பட்டு , நடிகர்கள் முகத்தை ரப்பர் போல இஷ்டத்துக்கு வளைத்து, கண் மூக்கு வாய் எல்லாவற்றையும் மிக கொடூரமாக உபயோக படுத்தி, வலிதரும் எண்ணங்களை,மிக மிக வலிமையுள்ள நினைவெழுச்சிகள்,மிகை உணர்ச்சிகளை ,நடிப்பை உள்மன போராட்ட நிலைக்கு எடுத்து சென்று , பார்ப்பவரின் ஆத்மாவை உலுக்கி எடுக்க வலியுறுத்தினார். இந்த முறை நடிப்புக்கு இந்தியாவில் ஒரு நடிகரும் தகுதி பெற முடியவே முடியாது ,நம் ஒரே உலக மேதையை தவிர.
நடிகர்திலகம் மட்டுமே மற்றவர்களால் இஷ்டப்படி இயக்கி கொள்ள முடியாத involuntary muscles என்பதையும் அவர் இயக்கி கொள்ளும் திறமை பெற்றிருந்ததால்(ஒரு டாக்டர் குறிப்பிட்டதாய் ஞாபகம்) அவரால் மற்றவர்களை விட அதிகமாக முகபாவங்களை காட்டி (அமெரிக்க நடிப்பு பள்ளி ஒன்றில் இது நிரூபிக்க பட்டது)இந்த வகை நடிப்பிலும் தேர்ந்து விளங்கினார்.
எதற்கு எங்கெங்கோ போவானேன்?புதிய பறவை climax காட்சி ஒன்று போதுமே! அதை chekhov பாணியில் ஆன stylised நடிப்பு என்றுதானே பார்த்தோம்?ஆனால் அதில் முழு காட்சியிலும் Astraud cruelty முறை பயன் படுத்த பட்டு அந்த காட்சி நம் ஆத்மாவில் ஊடுருவி நம் sub -conscious level உணர்விலும் ஊடுருவும் அதிசயத்தை நிகழ்த்தி Focus reach என்ற Acting Miracle நிகழ்ந்தது.
பிரமை பிடித்து உட்கார்ந்திருக்கும் நடிகர்திலகம் சித்ராவின் அண்ணன் pilot ராஜு வந்து விட்டதை படி படியாய் உள்வாங்கி அப்படியே பிரமை நீங்கி ,stress relieve ஆகி, ecstatic உணர்வை நம்பிக்கையின் உச்சத்திற்கே செல்வதை காட்டும் அந்த expression .
அதே மாதிரி confession முடித்து விட்டு train இல் சித்ரா உடல் சிதையும் காட்சியை மனக்கண்ணால் பார்த்து அலறும் போது கொடுக்கும் expression .
ராகவேந்தர் சார்,வாசு சார் காட்சியை தரவேற்றுங்கள். இதை என் எழுத்தால் வடிப்பது இயலாது.
------To be Continued .
RAGHAVENDRA
22nd May 2013, 05:07 PM
Method Acting - முன்பே வரையறுக்கப் பட்ட ஒரு வழிமுறையை எடுத்துக் கொண்டு அதனைப் பின்பற்றி தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்துவதே பெரும்பாலும் இந்த Method Acting எனப் படும் வழிமுறை நடிப்பாகும். சினிமா கண்டுபிடிக்கப் படுவதற்கு முன்பிருந்த நாடகக் கலையின் அடிப்படையில் ருஷ்ய கலை வல்லுநர் ஸ்தனிஸ்லாவ்ஸ்கி அவர்கள் நடிப்பிற்கென்று ஒரு இலக்கணத்தை உருவாக்கினார். அதற்குப் பின் வந்த நடிப்புக் கலை பெரும்பாலும் அவருடைய வழிமுறையைப் பின்பற்ற, அதனால் உருவானது ஸ்தானிஸ்லாவ்ஸ்கி வழிமுறை. அவருக்குப் பிறகு, சினிமா கண்டு பிடிக்கப் பட்டு அதற்கேற்றவாறு நடிப்புத் தன்மை இருக்க வேண்டும் என்று கருதிய சில அறிஞர்களால் வெவ்வேறு வகையான வழிமுறைகள் நடிப்புக் கலைக்கென உருவாக்கப் பட்டன. அல்லது அதனைப் பின்பற்றுவோரால் அவை வழிமுறைகளாக பாவிக்கப் பட்டன. அவற்றில் சில, மிக்காயில் செக்கோவ், ஆஸ்கர் ஒயில்டு போன்றவர்களின் வழிமுறைகள். இந்த வழிமுறைகள் அவரவர் பாணிக்கேற்றவாறு ஆங்கிலத்தில் ஸ்கூல் என்ற வகையில் சேர்க்கப் பட்டு இவையெல்லாம் பலவிதமான நடிப்புப் பள்ளிகள் என்கிற பிரிவில் அடையாளம் காணப் பட்டன.
இவையன்றி, பிரிட்டனின் புகழ் பெற்ற ஷேக்ஸ்பியரின் நாடகங்களுக்கென்று தனி நடிப்பிலக்கணம் உள்ளது. அது பெரும்பாலும் இலக்கியத்தை சார்ந்திருக்கும், அந்த கதாபாத்திரங்களுக்கென்று உருவாக்கப் பட்ட பாணியிலேயே அ்வை அமைந்திருக்கும். இவற்றை ஷேக்ஸ்பியர் வழிமுறை என நாம் கருதலாம்.
இந்தப் பள்ளிகள் அல்லது இந்த வழிமுறைகள், அவை தோற்றுவிக்கப் பட்ட நாடு, இனம், மொழி, கலாச்சாரம் போன்றவற்றின் அடிப்படையிலோ அல்லது அவற்றின் தாக்கத்துடனோ அமைந்திருக்க வாய்ப்புள்ளது. இவை பெரும்பாலும் மேற்கத்திய கலாச்சார அடிப்படையில் அமைந்திருக்கும். கீழ், மற்றும் தெற்காசிய நாடுகளின் நடிப்பிற்கு இவை ஒத்துப் போவது அபூர்வம். இந்திய, ஜப்பானிய கொரிய, சிங்கள, மற்றும் இதர தெற்காசிய மொழி, இன, கலாச்சார அடிப்படையிலான திரைப்படங்கள் இவற்றிலிருந்து விலகி இருக்கும்.
நடிப்பிற்கென்று பொதுவான இலக்கணம் என்பது வரையறுக்க முடியாது. நாடகத்திற்கென ஒரு வழிமுறை, திரைப்படங்களுக்கென்று ஒரு வழிமுறை என மிகப் பெரிய வித்தியாசம் உள்ளது போக, மற்ற பற்பல அம்சங்கள் - மேலே கூறியவை உள்பட- நடிப்பின் வகையினை வரையறுக்கும்.
இந்த அடிப்படையில் தான் நாம் நடிகர் திலகத்தின் நடிப்பை பார்க்க வேண்டும். இனி வரும் பதிவுகளில் இது விரிவாக இடம் பெறும்.
RAGHAVENDRA
23rd May 2013, 05:42 PM
இந்தியாவின் எட்டாவது உலக அதிசயம் - என்று கோபால் சார் தன்னுடைய ஆய்வின் தலைப்பை குறிப்பிட்டிருப்பதோடு நில்லாமல் அதனை நிலைநாட்டும் படியான கருத்துக்களையும் பதித்து வருகிறார். இன்னும் வர உள்ள கட்டுரைகள் நம்முடைய ஆவலைத் தூண்டும் வகையில் எதிர்பார்ப்பினை உருவாக்கியுள்ளன என்பதும் திண்ணம். அது வரையில்...
நம் நடிகர் திலகம் சாதனை பற்றிய மற்றோர் திரியில் அடியேனால் துவக்கப் பட்ட நடிகர் திலகமும் நடிப்புக் கோட்பாடுகளும் தொடரின் மீள்பதிவு
நடிகர் திலகமும் நடிப்புக் கோட்பாடும்
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/VCGCSS.jpg
His system of actinghas developed an international reach.
அவருடைய நடிப்பு முறை உலக அளவிலான வீச்சை ஏற்படுத்தி வளர்த்தது.
He treated theatre-making as a serious endeavour, requiring dedication, discipline and integrity.
அர்ப்பணிப்பு, ஒழுக்கம், ஒருங்கிணைப்பு ஆகியவை உண்மையாக தேவைப்பட்ட நாடக உருவாக்கத்தை அவர் ஒரு தவமாக்க் கருதி மேற்கொண்டார்.
Throughout his life, he subjected his own acting to a process of rigorous artistic self-analysis and reflection.
தன்னுடைய நடிப்பினை கலைத்தன்மைக்குட்பட்ட தீவிர சுயபரிசோதனைக்கும் அதன் வெளிப்பாட்டிற்கும் தன் வாழ்நாள் முழுமையாக உட்படுத்திக் கொண்டார்..
His development of a theorized praxis – in which practice is used as a mode of inquiry and theory as a catalyst for creative development – identifies him as the first great theatre practitioner.
ழக்கம் என்பதை கேள்வி வடிவமாகவும் கோட்பாடு என்பது ஆக்கபூர்வமான உருவாக்கத்திற்கான விளக்கமாகவும் அடிப்படையாக்க் கொண்டு அவர் உருவாக்கிய கோட்பாடு செயலாக்கம் – அவரை முதன்மையான சிறந்த நாடக தொழிலராக அறிய வைக்கிறது.
மேற்கண்ட வாசகங்கள் ஸ்டானிஸ்லாவ்ஸ்கி அவர்களைப் பற்றி விக்கிபீடியா இணைய தளத்தில் அறிமுகமாக உள்ளவை. ஒவ்வொரு வார்த்தையும் நடிகர் திலகத்திற்கு எந்த அளவிற்குப் பொருந்துகிறது.
இது நம்முடைய அலசலின் துவக்கம் தான். இனி வரும் காலங்களில் ஸ்டானிஸ்லாவ்ஸ்கி நடிப்புக் கோட்பாடு பற்றியும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுடைய நடிப்பிற்கும் உள்ள ஒற்றுமை அல்லது வேற்றுமை அல்லது இரண்டும் ... என்பதை நாம் தொடர்ந்து பார்க்கலாம்.
அன்புடன்
மேற்காணும் பதிவுக்கான இணைப்பு http://www.mayyam.com/talk/showthread.php?9939-Nadigar-Thilagam-The-Greatest-Actor-of-the-Universe-amp-The-One-amp-Only-BO-Emperor&p=927638&viewfull=1#post927638
இது துவக்கப் பதிவு மட்டுமே. இனி வரும் காலங்களில் முன்னர் உரைத்த முகவுரை மற்றும் கோபால் சாரின் ஆய்வுரை இவற்றையொட்டி பதிவுகள் இடம் பெறும்.
vasudevan31355
24th May 2013, 09:45 AM
டியர் ராகவேந்திரன் சார்,
நடிகர் திலகத்தின் நடிப்புப் பள்ளி பற்றி தனித்திரி தாங்கள் தொடங்கியிருப்பது சாலப் பொருத்தம். கோபால் சாரும் எந்த disturb ம் இல்லாமல் அட்டகாசமாய் எழுத முடியும். நாமும் இந்த சுப்ஜெக்ட்டை வேண்டிய அளவிற்கு அலசலாம். விவாதிக்கலாம். கோபாலுடைய ஆய்வுகளை ஒன்று சேர்த்து ஒழுங்குபடுத்தி இங்கு பதிவிட தங்களுக்கு குறைந்தது மூன்ற அல்லது நான்குமணி நேரம் பிடித்திருக்கும் என்று நினைக்கிறேன். இவ்வளவு சிரமங்களை மேற்கொண்டு தாங்கள் இந்தத் தொடர் அனைவரையும் சென்றடையவேண்டும் என்று பாடுபட்டிருப்பது புரிகிறது. இந்த அசுர உழைப்பிற்காக என் நன்றிகள்.
கோபால் சார்,
இனி நீங்கள் சிரமமின்றித் தொடரலாம். ஆரம்பித்த ஒரு சில தினங்களுக்குள் மிகப் பெரிய ஹிட் கிடைத்துள்ளது. 5 ஸ்டார்களும் கிடைத்துள்ளன. இது தங்கள் எழுத்திற்கும், ராகவேந்திரன் சார் உழைப்பிற்கும் கிடைத்த மாபெரும் வெற்றி! வாழ்த்துக்கள்!
KCSHEKAR
24th May 2013, 03:21 PM
டியர் ராகவேந்திரன் சார்,
Sivaji Ganesan School of Acting - அட்டகாசம், மிகவும் பொருத்தம்.. அடிக்கடி இல்லாமல் அவ்வப்போது திரிக்கு வருகைதரும் என்னைப் போன்றவர்கள் (திரு.கோபால் சாருடைய, தஙளுடைய மற்றும் நண்பர்களுடைய) இதுமாதிரியான ஆய்வுக் கட்டுரைகளை பொறுமையாகப் படித்து மகிழ உதவிகரமாக இருக்கும். நன்றி, நன்றி, நன்றி.
Gopal.s
25th May 2013, 02:44 PM
இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-32
நடிகர்திலகத்தின் சரித்திர ,புராண படங்கள் மற்றும் ஓரங்க நாடகங்கள் அனைத்தும் Shakespere பள்ளி ,Oscar Wilde மற்றும் Stella Adler வகை பட்டதாகும். இதில் shakespere பள்ளி பற்றி பார்த்து விட்டு, அவருடைய larger than life பாத்திரம் ஒன்றினுள் நுழைவோம்.
நியூயார்க் , ஹார்வேர்ட் ,பர்மிங்காம் ,முதலிய இடங்களில் முக்கியமாய் பேச பட்டு பயிற்று விக்க படும் இந்த வகை பள்ளிகளில் முக்கியமான நமக்கு பரிச்சயம் ஆனவர்கள்,Patrick Steward ,Ian Mckellen ,Ben kingsley ,Richard Barbadge ,John Hemings ,Thomas Pope ,George Bryan ,John Rice ஆகியோர் ஆவர்.Alexander Technique for Actors மற்றும் Elizebethan Theatre என்பது மிகவும் புகழ் பெற்றது. முக்கியமாய் அவர்கள் போதிப்பது மற்றும் எதிர் பார்ப்பது, மேற்குறிப்பிட்ட நடிகர்களின் பாணி கீழ்கண்டவாறு விரியும்.
monologue எனப்படும், ஒரு பாத்திரம் எதிர் பாத்திரங்களின்றி தன்னுடனே உரையாடி உணர்ச்சியை வசனங்களுடன் ,மிகை பாவனைகள், உடல் மொழி, வலுவான கை கால் அசைவுகளுடன் வெளிபடுத்தும் முறை.
Redirects Energy and cultivate Balance ,Poise ,Increased Physical ,Vocal and emotional freedom ..
ஒவ்வொரு மிக நீண்ட வசனங்களை சொல்லி முடித்த பின் தேவை படும் சுவாச கட்டுப்பாடு.(End of the line breath support )
பிறகு மூல கதை பிரதியை ஆராய்ந்து,பாத்திரத்தை கட்டமைத்து,மனகண்ணில் உணர்ந்து,பாத்திரங்களுக்குள் தொடர்பு மற்றும் உறவுநிலையை அறுதியிட்டு ,கதை சொல்லும் முறையை நிர்ணயித்தல்.
Agecraft skills மற்றும் stamina .
பாத்திரங்களை பார்ப்போர் மத்தியில் நிலை நிறுத்த ,வசனங்களை மனப்பாடம் செய்து, மிகை தோற்றம்,வலுவான சிறிதே மிகை படுத்த பட்ட கால்,கை,உடல் அசைவுகளுடன் மிகையான வெளியீட்டு முறையை பயன் படுத்தல்.
பல பாத்திரங்களில் மிக குறுகிய காலங்களில் நடிக்க Cue Scripting மற்றும் Cue Acting முறையில் சொல்ல சொல்ல உள்வாங்கி உடனே நடிக்கும் முறையும் பயிற்றுவிக்க படும்.
மிக பிரம்மாண்டமான கற்பனைகள் கொண்ட வலுவான உணர்ச்சி குவியல் நிறைந்த இந்த வகை பாத்திரம் மற்றும் கரு பொருளில் நடிக்கும் போது வெளியீட்டு முறைகளும் வலுவாக, மிகை நடிப்பு கொண்டு பார்ப்போரை ஆளுமை செய்து வசிய படுத்த வேண்டும்.
என்னடா நடிகர்திலகத்தை ,அவர் பெற்ற நாடக கம்பெனி பயிற்சிகளை சொல்லி , என்னென்னவோ வெளிநாட்டு பெயர்களுடன் சம்பத்த படுத்தி நம்மை எல்லாம் குழப்புகிறானே என்று உங்களுக்கு தோன்றினால் இது வரை சொன்ன எனக்கு பாதி வெற்றி கிடைத்தாயிற்று என்று அர்த்தம்.
-----To be continued .
Gopal.s
26th May 2013, 01:22 PM
இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-33
என்னதான் நடிகர்திலகம் Strasberg/Stanislavsky method Acting செய்தாலும்,Meisner பாணியில் நடித்தாலும் ,நிறைய நல்ல படங்கள் கொடுத்து பெரும் பாராட்டுதல்களை பெற்றாலும் , என் கருத்தில் நடிகர்திலகம் நடித்த Chekhov பாணி படங்கள்,Oscar Wilde /Stella Adler /Shakespere school படங்களே அவரை உலகத்திலேயே சிறந்த நடிகர் என்று நம்மை ஓங்கி சொல்ல வைக்கிறது. ஏனென்றால் பிற இந்திய நடிகர்கள் method Acting பாணியில் நடித்து அவருடைய நடிப்பில் ஒரு 60% தொட முடிந்துள்ளது. ஆனால் அவருடைய மற்ற பாணி நடிப்பில் 5% கூட தொட யாருக்கும் தகுதியில்லை என்று தைரியமாக கூற முடியும். அவரால் மட்டுமே முடியும் என்று சொல்ல கூடியவை. ஒரு சோகம் என்னவென்றால்,இந்த வேறு பட்ட பள்ளிகள் சார்ந்த நடிப்பை ரசிக்க ரசிகன் நன்கு தயார் படுத்த பட வேண்டும் ரசனையில். இந்த காலமே ,நடிப்பின் எல்லைகளை சுருக்கி ,ரசிகனின் ரசனை எல்லையை சுருக்கி ,அவர்களுக்கு பல விஷயங்களில் பரிச்சயம் இல்லாமல் செய்து ,நேரமும் இல்லாத நிலையில் மற்றவற்றை உதாசீன படுத்த வைக்கிறது.(what ever I dont know doesn't have right to exist ) என்ற மோசமான நடத்தைக்கு பெற்றோர்கள்,ஆசிரியர்கள்,நட்பு வட்டம் எல்லாமே காரணியாகி விடுகிறது. ஆனால் உன்னதமான ஒன்றை சரியான படி marketing செய்தால் விழுந்து விழுந்து ரசிப்பார்கள் என்பதற்கு கர்ணன் படத்தின் ஒப்பில்லா இமாலய வெற்றி ஒரு சான்று.
Larger than life என்பது சராசரி மனிதனை விட மேற் தரத்தில் உள்ள (பணம்,பதவி,நோக்கம்,புகழ்,தலைமை,போராட்ட குணம் ,இறை நிலை ) மக்களை பேசும் வலுவான நோக்கம் கொண்ட ,அதீத உணர்ச்சிகள்,போராட்ட நிலை உள்ளதாகவே அமையும். மேற்தர மனிதர்களின் பிரச்சினையும் அதற்குரிய பிரம்மாண்டம் கொண்டே அமைவது தவிர்க்க இயலாதது. இன்றைய காலத்தில் ஒரு NRI குழந்தை,ஒரு அரசாங்க மேற்பணியானர்,தலைவர்,அமைச்சர், புகழ் பெற்ற மருத்துவர் இவர்களை பார்த்தாலே இவர்களின் பொது நடத்தை விந்தையாகவே தெரியும். முற்காலங்களில் அரசர், பிரபுக்கள் ,மதகுருமார்கள் இவர்கள் சராசரி மனிதர்களிலிருந்து வேறு பட்ட உடை, தலை அலங்காரம் (கொம்பா முளைச்சிருக்கு.இல்லை கிரீடம் )நடை,பேச்சு தோரணை, பெரிய பொறுப்பு அதற்குரிய பெரும் பிரச்சினைகள் என்று வேறு பட்டே வாழ்ந்தவர்களை ,நிறைய இக்கால மேதாவிகள் சொல்வது போல் soft contemporary முறையில் நடிப்பது அபத்தத்திலும் அபத்தம்.
உதாரணத்திற்கு வீர பாண்டிய கட்டபொம்மன் படம் ஒரு Epic தன்மை கொண்ட folklore .மக்களுக்கு அதை பற்றி ஒரு பிரம்மாண்ட image இருக்கும். இங்கு சரித்திரம் புறம் தள்ள பட்டே ஆக வேண்டும். (சரித்திர கட்டமைப்பில் எவ்வளவு சதவிகிதம் உண்மை என்பதே கேள்வி குறி. எல்லோரை பற்றியும் தேவையான சரித்திர குறிப்புகளும் இல்லை.)இந்த நிலையில் Costume Drama என்ற வகை பட்ட பிரம்மாண்ட படத்திற்கு ஒரு உன்னத நடிகரின் கற்பனை சார்ந்த , உயிரிலும் உணர்விலும் அந்த நடிகன் கனவு கண்ட ஒரு பாத்திரத்தை ,கட்டபொம்மன் எப்படி இருந்திருக்க வேண்டும் என்ற எல்லோருடைய fantasy ஐயும் பூர்த்தி செய்வதாகத் தானே அமைய வேண்டும்? அப்படித்தான் அமைந்தது. அதை மொழிக்கு அவசியம் இன்றி உலகமே வியந்தது. எந்த காலத்திலும் எந்த கலைஞனும் அதில் ஒரு நுனியை கூட தீண்ட முடியாது
----To be Continued.
venkkiram
26th May 2013, 01:38 PM
உதாரணத்திற்கு வீர பாண்டிய கட்டபொம்மன் படம் ஒரு Epic தன்மை கொண்ட folklore .மக்களுக்கு அதை பற்றி ஒரு பிரம்மாண்ட image இருக்கும். இங்கு சரித்திரம் புறம் தள்ள பட்டே ஆக வேண்டும். (சரித்திர கட்டமைப்பில் எவ்வளவு சதவிகிதம் உண்மை என்பதே கேள்வி குறி. எல்லோரை பற்றியும் தேவையான சரித்திர குறிப்புகளும் இல்லை.)இந்த நிலையில் Costume Drama என்ற வகை பட்ட பிரம்மாண்ட படத்திற்கு ஒரு உன்னத நடிகரின் கற்பனை சார்ந்த , உயிரிலும் உணர்விலும் அந்த நடிகன் கனவு கண்ட ஒரு பாத்திரத்தை ,கட்டபொம்மன் எப்படி இருந்திருக்க வேண்டும் என்ற எல்லோருடைய fantasy ஐயும் பூர்த்தி செய்வதாகத் தானே அமைய வேண்டும்? அப்படித்தான் அமைந்தது. அதை மொழிக்கு அவசியம் இன்றி உலகமே வியந்தது. எந்த காலத்திலும் எந்த கலைஞனும் அதில் ஒரு நுனியை கூட தீண்ட முடியாது
----To be Continued.
:notworthy: Have completely got convinced with your content sir.
RAGHAVENDRA
26th May 2013, 01:46 PM
டியர் கோபால் சார்
Perfect analysis of the presentation of larger than life characters. சரித்திர, புராண புருஷர்களைப் பற்றி நாம் படித்துள்ள இலக்கியங்களாகட்டும், அவற்றிற்கென சித்தரிக்கப்பட்ட ஓவியங்களாகட்டும், அந்த கதா பாத்திரங்களை பிரம்மாண்டமாகத் தான் காட்டியுள்ளன. அது மட்டுமின்றி அந்தக் கால கட்டத்தில் இப்படித் தான் உரையாடல்கள் இருந்திருக்கக் கூடும் என்கிற அனுமானத்தில் தான் அந்த உரை நடையும் இருந்தது. Therefore the larger than life concept has been arrived at through various literary sources. அது மட்டுமின்றி தாங்கள் கூறியிருப்பது போல் அந்த பாத்திரங்களின் தன்மையும் கூட அந்த கால கட்டங்களை சித்தரிப்பதாகத் தான் உருவாக்கப் பட்டிருந்தன.
என்றாலும் கூட இவற்றை நடமாடும் ஓவியங்களாக ... அதாவது செல்லுலாய்டில் பாத்திரங்களாக ... சித்தரிக்க வேண்டுமென்றால் அதற்கு சராசரிக்கு மீறிய திறமை கொண்டவர்களால் மட்டுமே சாத்தியம். அப்படி முனைந்த பல கலைஞர்களுக்கு முன்னோடி நடிகர் திலகம். ஆனால் அவருக்கு யார் முன்னோடி ... சுயம்புவாக அந்த பாத்திரங்களுக்கு இறைவன் தனக்களித்த திறமையினாலும் அபூர்வ சிந்தனா சக்தியாலும் ஜீவனூட்டியவர் நடிகர் திலகம்.
இப்படிப் பட்ட பாத்திரங்களுக்கு முன்னுதாரணம் கட்டபொம்மன், என்றால் அதற்கு சற்றும் குறைவில்லாமல், அதே போல் மேலும் பாத்திரங்களைப் படைத்திருக்கிறார் நடிகர் திலகம்.
தொடருங்கள் .... ஆவலைக் கூட்டுகிறது தங்கள் கட்டுரை.
Gopal.s
31st May 2013, 05:24 AM
இடைவெளிக்கு மன்னிக்கவும். திரும்பவும் இன்று முதல் தொடர்வேன்.
Gopal.s
1st June 2013, 06:14 AM
இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-34
கட்டபொம்மன் ஒவ்வொரு தமிழனின் பூஜா பலன். உச்ச அதிர்ஷ்டம். மேற்கு மக்களுக்கு ஒரு ten commandments ,ஒரு lawrence of Arabia போல கீழை மக்களின் சுதந்திர போராட்ட சரிதம். நிகழ்வுகள் ஓரளவு சரித்திரத்தை ஒட்டியவை ஆனாலும் நம் மக்களின் ரசனையை ஒட்டி அழகு படுத்த பட்ட பிரம்மாண்ட சரித்திரம். கட்டபொம்மனின் சரித்திரம் ,அவன் சுதந்திர காற்றுக்காக ஏங்கி , சிறுமையும் மடமையும் கொண்ட அடிமை கூட்டத்தில் தனித்தியங்கி வீரம் காட்டிய முன்னோடி. இந்த ஒரு அம்சம் போதும் அவனை நடையில்,உடையில்,அந்தஸ்தில்,பேச்சில் மக்களின் எதிர்பார்ப்புகேற்ப தமிழ் புலவர்களின் சங்க கால கவிதை தொடர்ச்சியாக காட்சியமைப்பில், வசனத்தில்,உயரிய நடிப்பில், தமிழகத்துக்கே பிரம்மன் வடித்த தந்த உன்னத நடமாடும் சிற்பத்தால் உரிய உன்னதம் கொடுக்க பட்டு, சிற்றரசன் என்று கீழ் நிலை விமர்சகர்கள் இகழ்ந்தாலும் பெரிய நோக்கம் கொண்ட உயரிய மனிதன், மகாராஜாவாக ஆக்க பட்டான். நிலத்தின் அளவை பொருத்தல்ல ,மனத்தின் திண்மையின் அளவு.கொண்ட நோக்கத்தின் அளவு.
கட்டபொம்மனின் 1791 முதல் 1799 வரை ஆன கால கட்டமே இந்த படத்தின் காலகட்டம்.ஆற்காடு நவாப் வாங்கிய கடனுக்கு கும்பனியிடம் தனக்குட்பட்ட பாளய சிற்றரசர்களிடம் இருந்து வரி வசூல் உரிமையை கொடுப்பதில் இருந்து கட்டபொம்மன் அதை மறுத்து எதிர் வினை புரிந்தது, வெள்ளையர்கள் மற்றோரை தன் வசப்படுத்தி அடிமையாக்கி கட்டபொம்மனை தனிமை படுத்தி ,அவனுடன் போர் செய்து ,தப்பியோடிய அவனை பிடித்து தூக்கிலிடுவது படத்தின் காலகட்டம். கட்டபொம்மனின் வயதுதான் நடிகர்திலகத்தின் அன்றைய வயது. ஏறக்குறைய முப்பது. கட்டபொம்மனின் நிறம்தான் நடிகர்திலகத்தின் நிறம். அப்பப்பா இந்த படத்தில் அவர் இயல்பான நிறம் காட்ட பட்டதில்,ஒப்பனையாளர் பாதி சாதனை புரிந்து விட்டார்.
கட்டபொம்மனின் உயரம்? அவன் உயரம் அத்தனை சமகால பாளய சிற்றரசர்களின் உயரம்,ஆற்காடு நவாப் உயரம், அனைத்துக்கும் மேலல்லவா? அந்த உயரமும் கிடைத்து விட்டது ஒரு நடிக மேதை தன் நடிப்பால் மட்டுமே தன் உயரத்தை மேலும் ஓரடி கூட்டி கொண்ட அதிசயம் .அதை நாம் மட்டுமே வியக்கவில்லை ,உலகமும் நாசரும் (எகிப்து அதிபர்)கூடவியந்தனர். தானே தேடி வந்து நடிகர்திலகத்தை பார்த்த நாசர் ,இவரா(?) ,படத்தில் ஆறடிக்கு மேல் தெரிந்தாரே ,என்று மூக்கில் விரலை வைத்தார்.
இப்போது சொல்லுங்கள் கட்டபொம்மன் அதிர்ஷ்டம் செய்தவரா இல்லை ஒவ்வொரு தமிழனுமா என்று?actors should never feel small என்று சொன்ன Stella Adler கூட இப்படி ஒரு ஏகலைவனை அடைய கொடுத்த வைத்தவர்தானே?
----To be Continued .
vasudevan31355
2nd June 2013, 04:56 PM
ஒவ்வொரு தமிழனுமே அதிர்ஷ்டம் செய்தவன் தங்கள் உலக அதிசயத்தைப் படித்து மகிழ்வதற்கு.
vasudevan31355
2nd June 2013, 05:21 PM
சிலர் இவரது நடிப்பைத் தாழ்த்தி உரைக்கையில் அல்லது வீழ்ந்தார் அவ்வளவுதான் என்ற ஏளனக் கூச்சல்கள் வருகையில் சீரியஸ் ஆக மாட்டார். பொறுமை எல்லை கடக்குமளவிற்குப் போன பின் ஒருமுறை அவர் கர்ஜித்தது
"யாராவது கட்டபொம்மனை இந்த மாதிரி வடித்துக் காட்டுங்கள்
நான் எனது தொழிலை விட்டு விடுகிறேன்".
ஏன் இதைக் குறிக்கிறேன் என்றால் அவர் உயிர்ப் பாத்திரமான வ.உ.சி மாதிரி செய்து காட்டுங்கள் என்று அவர் உரைக்கவில்லை. கட்டபொம்மன் போல் செய்ய முடியுமா என்றுதான் கணை எழுப்பினார்.
இதிலிருந்து அந்த கட்டபொம்மனுக்குக்காக அவர் பட்ட பாடு தெரிகிறது. .
கட்டபொம்மனை இயல்புமீறி ஒரு ஆக்ஷன் கிங் ஆக அவர் ஒரு இடத்தில் கூட காட்டியதில்லை சந்தர்ப்பங்கள் நிறைய இருந்தும்கூட. இன்னும் சொல்லப் போனால் போர்க் காட்சிகள் கூட தத்ரூபத்தைதான் காட்டும்.
வீரத்தில் பழுதானவனில்லை... ஆனால் வீரம் மட்டும் காப்பாற்றாதே...மலையோடு எலி போதுவதைப் போலத்தான் மோத முடிந்தது. பீறிட்டுப் பாயும் பீரங்கி குண்டுகளின் தாக்குதல்களுக்கு வாட்களும் வேல்களும் ஈடுகொடுக்க முடியுமா!
இதை மிக அற்புதமாய் பிரதிபலிப்பார். படைகள் எதிரிகளிடம் சிக்கித் திணறும் போது உள்ளுக்குள் தோற்றுக் கொண்டிருக்கிறோம் என்பதை இந்த மேதை படிப்படியாக முக, உடல், குரல் உணர்வுகளுடன் பார்ப்பவரை தன் கவலைகளோடு ஒன்ற வைப்பார். அதுதானே நடிகனுக்குக் கிடைக்கும் வெற்றி! அதே சமயம் வீரம் கிஞ்சித்தும் குறையாது.. அது வீம்புக்காக அல்ல என்பதையும் அழகாகப் புரிய வைப்பார். அதே சமயம் தோல்வியின் அவமானம் அகத்தைக் கொத்தித் தின்னுவதை உன்னிப்பாக அவரை கவனித்தால் உணரமுடியும். இழிநிலைக்குத் தள்ளப்பட்டு விடுவோம் என்ற கவலை ரேகைகள் படர ஆரம்பிப்பதை தான் காட்டிக் கொடுக்கப்பட்டவுடன் காட்ட ஆரம்பித்து விடுவார்.
சிறுவயதில் கண்ட கூத்தின் ஒவ்வொரு நிகழ்வுகளும் இவரின் அணுக்களில் குடிகொண்டதால் வேறு இன்னும் வரலாற்றுச் சிறப்படைந்த வரலாற்றுப் பாத்திரம்.
vasudevan31355
2nd June 2013, 06:31 PM
ஒரு சோகம் என்னவென்றால்,இந்த வேறு பட்ட பள்ளிகள் சார்ந்த நடிப்பை ரசிக்க ரசிகன் நன்கு தயார் படுத்த பட வேண்டும் ரசனையில். இந்த காலமே ,நடிப்பின் எல்லைகளை சுருக்கி ,ரசிகனின் ரசனை எல்லையை சுருக்கி ,அவர்களுக்கு பல விஷயங்களில் பரிச்சயம் இல்லாமல் செய்து ,நேரமும் இல்லாத நிலையில் மற்றவற்றை உதாசீன படுத்த வைக்கிறது.(what ever I dont know doesn't have right to exist ) என்ற மோசமான நடத்தைக்கு பெற்றோர்கள்,ஆசிரியர்கள்,நட்பு வட்டம் எல்லாமே காரணியாகி விடுகிறது. ஆனால் உன்னதமான ஒன்றை சரியான படி marketing செய்தால் விழுந்து விழுந்து ரசிப்பார்கள் என்பதற்கு கர்ணன் படத்தின் ஒப்பில்லா இமாலய வெற்றி ஒரு சான்று.
முற்றிலும் உண்மை! நேரமின்மையைக் காரணம் காட்டி நேர்த்தியானவற்றை புறந்தள்ளிவிடுகிறது ஒரு கூட்டம். இதில் இளைஞர்களும் மாட்டிக் கொண்டு விழிப்பதுதான் பரிதாபம். ஒரு கோக், ஒரு பீசா, குர்குர்ரே சதம் தறிகெட்ட தமிழ்ப்படங்களின் அபத்தங்களை ஆர்ப்பரித்துப் பார்க்கும் அவலநிலை. ரசனையில் மேம்பட யாருக்கும் ஆசை இல்லை. அதெல்லாம் வேண்டாம் என்ற ஒரு குருட்டு நோக்கு. என்னதான் இருக்கிறது என்று ஆவல்பட்டான் என்றால் அதிசயங்களை அள்ளலாம். நாலு கார் துரத்தல்களும், அநியாய ஏய் சத்தங்களும், வெட்டி உயிர் போகும் தருவாயில் எழுந்து வந்து வெட்டுவதும் போதும் என்று முடங்கி விடுகிறான். நம் ஆளுக்கு மார்கெட்டிங் வேண்டாம். ஒரு நிமிடம் ஒரே ஒரு நிமிடம் இவரை ஆழ்ந்து கவனித்தானானால் மட்டும் போதும். மாற்றுக்குப் போகவே முடியாது.
என் நண்பனின் மகன் நல்ல ரசிகன். ஆனால் முன்னம் நான் தெரிவித்த பட்டியலில் இருந்தான். ஒருமுறை பஸ்ஸில் நீண்ட தூரம் பயணம் செய்ய நேரிடும் போது கண்டிப்பாக முதல் மரியாதையை வீடியோவில் பார்த்தே ஆக வேண்டிய நிலை. வேண்டாவெறுப்பாக பார்க்க ஆரம்பித்தவன் சற்று நேரத்தில் முற்றிலும் ஒன்றிப் போனான்.
வீடு வந்து வாயார குறிப்பாக நடிகர் திலகத்தைப் புகழ்ந்து இருக்கிறான். இந்த மாதிரி வேறு என்னென்ன படங்கள் இருக்கின்றன என்று விசாரிக்க ஆரம்பித்து விட்டான். ஆக வெற்றி யாருக்கு?
கோபால் சொல்வது போல எல்லோரும் குறிப்பாக இளைஞர்கள் தயார்ப்படுத்தப்பட வேண்டும். அதற்கு ரசனையில் மேம்பட்டவர்கள் உதவ முன் வரலாம். எப்பேர்ப்பட்டவரையும் எக்காலத்திற்கும் வசீகரிக்க நடிகர் திலகத்தால் முடியும். அதை நம்மைப் போன்றவர்கள்தான் அடுத்தவர்களுக்கு உணர வைக்க முடியும்.
அதற்கு இந்த கோபாலின் கட்டுரைத் தொடரை மிகச் சிறந்த உதாரணமாகக் கொள்ளலாம்.
IliFiSRurdy
3rd June 2013, 11:51 AM
இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-34
கட்டபொம்மன் ஒவ்வொரு தமிழனின் பூஜா பலன். உச்ச அதிர்ஷ்டம். மேற்கு மக்களுக்கு ஒரு ten commandments ,ஒரு lawrence of Arabia போல கீழை மக்களின் சுதந்திர போராட்ட சரிதம். நிகழ்வுகள்
இப்போது சொல்லுங்கள் கட்டபொம்மன் அதிர்ஷ்டம் செய்தவரா இல்லை ஒவ்வொரு தமிழனுமா என்று?actors should never feel small என்று சொன்ன Stella Adler கூட இப்படி ஒரு ஏகலைவனை அடைய கொடுத்த வைத்தவர்தானே?
----To be Continued .
அன்பின் கோபால்,
மிகவும் ரசித்தேன்.மிக்க நன்றி.
VPKB ஐப்பொறுத்தவரை இன்னொரு முக்கிய விஷயம்..அது தலைவர் நடிக்க வந்து ஐந்தே ஆண்டுகள் கடந்த நிலையில் வந்த படம்.இன்று சுமார் ஐம்பத்தைந்து ஆண்டுகள் வயதானது.அதை அந்த கண்ணோட்டத்தில் ரசிக்க பயிலவேண்டும்.
இதில் வெள்ளை காரர்கள் (கும்பினியார்கள்) எதிர்க்கப்படுவது ஒரு நிலை என்றால்,வ.உ.சி யாக அவர்களை எதிர்க்கும் போது முற்றிலும் வேறுபட்ட நடிப்பை காட்டியிருப்பார்.(அதை நீங்கள் முன்னமேயே அலசி விட்டீர்கள்).சுருக்கமாக சொன்னால் VPKB காட்டுவது பெரும்பாலும் கோபம் மற்றும் வீரம்.ஆனால் வ.உ.சி காட்டுவது சாதுர்யம் மற்றும் போர்தந்திரம்.முந்தையது "இது என் நாடு என் சட்டம்.இதில் தலையிட வியாபாரியான நீ யார்?" என வெடிப்பது..பின்னதோ அந்த வியாபாரிகளே நம் அரசர்கள் என ஆனபிறகு, அவர்கள் வைத்ததே சட்டம் என ஆனபிறகு,யதார்த்தத்தை உணர்ந்து, அந்த சட்டத்தின் துணை கொண்டே அவர்களை வெல்லப்பார்ப்பது.முன்னது யதார்த்தம் அறியா கோபம்.பின்னது யதார்த்தம் புரிந்த அறிவாற்றல்.
யார் கண்டார்கள்..நிஜ கட்டபொம்மனுக்கு ஆஸ்த்மா நோய் இருந்திருக்கலாம்.சற்று திக்கிபேசுபவனாக் கூட இருந்திருக்கலாம்.ஆனால் தலைவர் அதையெல்லாம் இல்லை என ஆக்கி ஒரு நல்ல சுத்தமான வீரனை நமக்கு அளித்து விட்டார்.
ஒரு நப்பாசை.."Gandhi" படத்தில்..Ben Kingsley க்கு ப்பதிலாக...ம்ம்ம்.அது எப்படி சாத்தியம்?நமக்குதான் நம்மவர்கள் வாழ்ந்தால் ஆகாதே!எதாவது சொல்லி படத்தையே நிறுத்தியிருப்பார்கள்..
KCSHEKAR
3rd June 2013, 12:34 PM
டியர் கோபால் சார்,
நான் நண்பர்களுடன் வீரபாண்டிய கட்டபொம்மன் பற்றி விவாதிக்கும்போது பேசிக்கொள்வதுண்டு. அதனை திரு.கண்பத் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
யார் கண்டார்கள்..நிஜ கட்டபொம்மனுக்கு ஆஸ்த்மா நோய் இருந்திருக்கலாம்.சற்று திக்கிபேசுபவனாக் கூட இருந்திருக்கலாம்.ஆனால் தலைவர் அதையெல்லாம் இல்லை என ஆக்கி ஒரு நல்ல சுத்தமான வீரனை நமக்கு அளித்து விட்டார்.
RAGHAVENDRA
4th June 2013, 06:54 AM
நண்பர்கள் வாசு, கண்பத் ஆகியோர் கோபாலின் வீரபாண்டிய கட்டபொம்மன் திரைக்காவியத்தில் நடிகர் திலகத்தின் நடிப்பினைப் பற்றிய கட்டுரைக்கு மிக அருமையான துணைப் பதிவுகளை அளித்து அசத்தியுள்ளீர்கள். பாராட்டுக்கள் சார்.
வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தைப் பொறுத்த வரையிலும் பல சவால்களை எதிர்கொண்டு தான் வளர்ந்து வெளியானது. கட்டபொம்மன் பாத்திரத்தை சிறுமைப் படுத்தி வேறு இரு வீரர்களை உயர்த்தி போட்டிக்கென்றே தயாரித்தது ஊரறிந்ததே. இது ஊரறிந்த ரகசியம். சிவகங்கை சீமை திரைப்படத்தைத் தான் சொல்கிறேன். இன்றும் கூட இவ்வாறு கூறுபவர்கள் உள்ளனர். நல்ல விளம்பரமும் அப்படத்திற்குக் கிடைத்தது. அதற்கேற்றார்போல் மெல்லிசை மன்னர்களின் இசையும் பேசப் பட்டது. எப்படியாவது கட்டபொம்மன் புகழையும் அதன் மூலம் நடிகர் திலகத்தின் புகழையும் பின்னுக்குத் தள்ளப் பார்த்தார்கள்.
இன்று கட்டபொம்மன் திரைப்படமே ஒரு வரலாறாகி விட்டது. வீரபாண்டிய கட்டபொம்மன் வாழ்க்கை ஒரு தியாகியின் வரலாறாக திகழ்வது ஒரு புறமிருக்க, தமிழ்த் திரையுலகில் வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படமும் ஒரு வரலாறாகி விட்டது.
உலக மகா கலைஞரான நடிகர் திலகம் இறுதி வரை எதிர்ப்பிலேயே வளர்ந்ததால் தான் இன்று அழியாப் புகழுடன் மக்கள் மனதில் வாழ்ந்து வருகிறார்.
Gopal.s
4th June 2013, 10:02 AM
இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-35
எனக்கு நமது சாஸ்திரிய சங்கீத கீர்த்தனைகளில் விமர்சனம் உண்டு. அது அவ்ளோ பெரிய விஷயமா ,ராகத்தை ஒட்டி வார்த்தை நிரப்பல்தானே என்று? ஆனால் தஞ்சாவூர் சங்கரன் என்பவர் மும்மூர்த்திகளின் கீர்த்தனை சிலதை எடுத்து விளக்கினார். ஒவ்வொரு எழுத்தும் வார்த்தையும் எப்படி முக்கியத்துவம் பெற்று ராகங்களின் அழகை மிளிர வைக்கிறது என்று.
அதை போல் தான் நடிகர்திலகத்தின் வசன உச்சரிப்புகளும். தமிழனுக்கு தமிழை எழுத கற்று கொடுத்தவர்கள் வள்ளுவர் முதல் பாரதி வரை ஏராளம். ஆனால் தமிழை அதன் அழகுடன், அர்த்தத்துடன் பேச தமிழனுக்கு கற்று கொடுத்த ஒரே மேதை நடிகர்திலகம் அல்லவா?அதுதானே பலரை கவர்ந்து தமிழை பாமரர் முதல் பண்டிதர் வரை பள்ளி மாணவரில் இருந்து பல் போன முதியவர் வரை தமிழ் மீது ஆர்வத்தை தூண்டி புலவர் எழுத்துக்கும் பாமரர் மனதுக்கும் தொடர்பு கண்ணியானது? எனக்கு முதல் பரிச்சயம் கட்டபொம்மனுடன் ஒலிச்சித்திரம் (soundtrack ) மூலமே ஏற்பட்டது.பிறகு வசன புத்தகத்தை வாங்கி வசனங்களை மனனம் செய்தேன். அவரை போல் பேச முயன்றேன்.
listen only to soundtrack and you will realise the timbre ,modulation ,tonal clarity ,subtle and quick flow of variation in octave levels that plucks every known &buried emotional suggestions from the dialogue with its rhythm and beauty(He lived in his voice) .அவருடைய ஆண்மையான குரலில் வசனத்தின் ஒவ்வொரூ எழுத்தும் சொல்லும் அவரின் பாவம், ஏற்ற இறக்கம், தெளிவு, கவிதையின் அழகு,முக பாவத்திற்கேற்ற கை கால் உடல் அசைவுகளுக்கேற்ப மெல்லிய துல்லிய குரல் மாற்றங்கள், நம்மில் அந்த பாத்திரத்தை அதன் உணர்வை மனகண்ணில் காட்டி விடும் வலிமை கொண்டது.
நான் இந்த குரலுக்கு அடிமையாகி ஐந்து வருடங்கள் கழித்தே படத்தை வெள்ளித்திரையில் கண்டேன்.ஆனால் சமீபத்தில் எனக்கொரு சந்தேகம். நாம் முதலில் வசனம்,பிறகு படத்தோடு வசனம் மகிழ்ந்து அதில் திளைக்கிறோம். ஆனால் உலக அங்கீகாரம் பெற்ற இந்த படத்தில், அந்நிய நாட்டை,மொழியை சார்ந்தவர்களை ,இந்த வசனங்களின் முழு பொருளும் அருமையும் தெரியாமலே அடிமை ஆக்கி ஆசிய ஆப்பிரிக்காவின் சிறந்த நடிகராக அங்கீகரிக்க வைத்ததே? எப்படி?
அந்த படத்தை ,முழுவதும், வசனத்தை mute பண்ணி பார்த்தேன்.(மனதில் வசனம் ஓடாமல் பிரயத்தனம் செய்து)
அந்த அதிசயத்தை அடுத்த பதிவில் சொல்கிறேன்.
-----To be continued .
vidyasakaran
4th June 2013, 10:17 AM
VPKB ஐப்பொறுத்தவரை இன்னொரு முக்கிய விஷயம்..அது தலைவர் நடிக்க வந்து ஐந்தே ஆண்டுகள் கடந்த நிலையில் வந்த படம்.இன்று சுமார் ஐம்பத்தைந்து ஆண்டுகள் வயதானது.
ஆ... இதை நான் உணர்ந்ததேயில்லை.
நடிகர் திலகம் உச்சத்திலிருந்த நாட்களின் பிரம்மாண்டத்தை அல்ல, அதன் ஒரு சதவீதத்தையாவது இப்போதுதான் தெரிந்து கொண்டிருக்கிறேன். அதேபோல்தான், அவரது நடிப்புத்திறன் பற்றியும்.
வாழ்க உங்கள் அனைவரது தொண்டு.
நன்றி.
RAGHAVENDRA
4th June 2013, 10:57 AM
தமிழனுக்கு தமிழை எழுத கற்று கொடுத்தவர்கள் வள்ளுவர் முதல் பாரதி வரை ஏராளம். ஆனால் தமிழை அதன் அழகுடன், அர்த்தத்துடன் பேச தமிழனுக்கு கற்று கொடுத்த ஒரே மேதை நடிகர்திலகம் அல்லவா?அதுதானே பலரை கவர்ந்து தமிழை பாமரர் முதல் பண்டிதர் வரை பள்ளி மாணவரில் இருந்து பல் போன முதியவர் வரை தமிழ் மீது ஆர்வத்தை தூண்டி புலவர் எழுத்துக்கும் பாமரர் மனதுக்கும் தொடர்பு கண்ணியானது?
உண்மை. இது தான் நிஜம். வெறும் வார்த்தையல்ல கோபாலின் கருத்துக்கள். உண்மையின் பிம்பம். அதற்குச் சான்று இதோ
இன்றைய கால கட்டத்தில், 2011ல் எல்.கே.ஜி. குழந்தை பள்ளி மாறுவேடப் போட்டியில் கட்டபொம்மன் வசனம் பேசுவதைக் கேளுங்கள். ஏற்ற இறக்கத்துடன் அந்தக் குழந்தை தன் மழலை மொழியில் தமிழைப் பேசும் போது, தமிழ்த் தாய் தன் தவப்புதல்வனை உச்சி முகந்து கொண்டாடி யிருப்பாள் அல்லவா. தன் தாய்த்தமிழை நடிகர் திலகம் வளர்த்த அளவிற்கு வேறு யாரை நினைத்துப் பார்க்க முடியும். லட்சோப லட்சங்களில் புத்தகங்கள் செய்ய முடியாத காரியத்தைத் தன் ஒரு படத்தில் தான் பேசிய வசனத்தின் மூலம் செய்து காட்டி இன்று தமிழை உச்சியில் கொண்டு போய் வைத்துள்ளவர் நடிகர் திலகம் தான் என்று கூறவும் வேண்டுமோ.
http://youtu.be/D2EfQsJwu5w
RAGHAVENDRA
4th June 2013, 11:03 AM
இதோ இன்னொரு குழந்தையின் வசன வெளிப்பாடு
http://youtu.be/JD6Eq6VEnoA
RAGHAVENDRA
4th June 2013, 11:05 AM
இதோ இன்னொரு குழந்தையின் வசன உச்சரிப்பு
http://youtu.be/6dTio1zTTRI
RAGHAVENDRA
4th June 2013, 11:06 AM
இதோ இன்னொரு குழந்தை தன் மழலை மொழியில் தன்னுடைய பாணியில் மிக அழகாக பேசுவதை
http://youtu.be/8gutxU0A1qU
RAGHAVENDRA
4th June 2013, 11:08 AM
இதோ இந்தப் பையன் ஜாக்கிரதை என்று மிரட்டுவதைப் பாருங்கள்
http://youtu.be/CsYXFNiu1Y0
RAGHAVENDRA
4th June 2013, 11:13 AM
இந்தக் குழந்தையின் body language பாருங்கள்
http://youtu.be/wnfF-RrGP1Y
RAGHAVENDRA
4th June 2013, 11:15 AM
இதோ சின்னஞ் சிறு குழந்தையின் ஆர்வமிகு நடிப்பு
http://youtu.be/_O4MfPyqTg0
Gopal.s
4th June 2013, 03:07 PM
இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-36
எனக்கு முதல் அதிசயமே அந்த நடையும், கைகளை,விரல்களை அவர் பயன் படுத்தும் விதமும். நான் ஏற்கெனவே கூறிய படி நிறைய hollywood மற்றும் உலக நடிகர்கள் ,அந்த பாத்திர குணங்களை establish செய்ய ,விலங்குகளின் நடை, குணங்கள் இவற்றிலிருந்து inspiration எடுத்து, சமயங்களில் imitate கூட செய்வார்கள். வால்மீகி ராமாயணத்தில் ,வால்மீகியும் ராமனின் நாலு வித நடைகளை குறிப்பிடுவார். சிங்க நடை தலைமை குணத்தை குறிப்பது. புலி நடை சீற்றத்தையும் கோபத்தையும் குறிப்பது.யானை நடை பெருமிதத்தை குறிப்பது.எருது நடை அகந்தை,அலட்சியம் இவற்றை குறிப்பது.
இந்த படத்தை நான் பார்த்த போது ,அதிசயித்த விஷயம் வால்மீகியை படிக்காமல் நடிகர்திலகம் இவற்றை உணர்ந்த விதம்.
அவையிலும், நகர்வலம் செல்லும் போதும், மந்திரி மற்றும் நண்பர்களுடன் இருக்கும் நடை ஒரு சிம்மத்தின் தலைமை குணத்தை குறிக்கும் நடை.ஜாக்சன் தன்னை அவமதித்து கோபப் படுத்தும் போது ஒரு புலியின் சீற்றம் நடையில் தெரியும்.ஜக்கம்மாவிடம் போருக்கு விடை பெரும் போது ஒரு யானையின் பெருமிதம் தொனிக்கும்.கடைசியில் பானர்மன் தூக்கு தண்டனை விதித்ததும் தூக்கு மேடையை நோக்கி நடக்கும் கால்களில் ஒரு எருதின் அலட்சியம் தெறிக்கும்.
ஒரு சராசரி நடிகனுக்கும், ஒரு மகா நடிகனுக்கும் உள்ள வேறுபாடு காலுக்கும், உடல் மொழிக்கும் ஏற்றவாறு கைகளை பயன் படுத்தும் முறை. ஜாக்சனுடன் ஆரம்ப பேச்சில் கைகளை சிறிது ஒடுக்கி கட்டுபடுத்துவார். எண்ணிக்கை தெரியாத குற்றம் என்னும் போது விரல்கள் எண்ணிக்கையோடு அசையும். போர் விடை பெரும் காட்சியில் வலது கை புறம் காட்டி இடது புற உரையில் கத்தியை சடாரென்று மணிக்கட்டை மட்டும் பயன் படுத்தி தள்ளும் தன்னம்பிக்கை நிறைந்த style .
Mute பண்ணி பார்க்கும் போதும், ஜாக்சன் உடன் தன்னை கட்டு படுத்தும் ஆரம்ப restlessness நிறைந்த restraint , பிறகு தன் நிலையை உணர்த்தும் force ,வன்முறைக்கு படிப்படியாய் தள்ள படுவது வசனங்களின் உதவி மஞ்சளரைத்து கொடுக்கவே அவசியமில்லாமல் அந்நியர்களுக்கு புரிந்திருக்கும். தானாபதி பிள்ளை ஒப்பந்தத்தை மீறி கொள்ளையிட்ட குற்றத்தின் போது நடுநிலையை எண்ணி, சிறிதே குன்றி போய் பேசும் போதும், ஆனால் வரம்பு மீறும் போது மந்திரிக்கு சார்பாய் நிலை எடுத்து வருவது வரட்டும் என்று முடிக்கும் போதும் ..... வசனம் தேவையே படவில்லை. முகக்குறிப்புகள் போதுமானதே அன்னியருக்கு.
போரில் தன்னை மீறி செல்லும் நிலைமையில் மகளுக்கு தைரியம் சொன்னாலும் நிலைமையை உணர்ந்து தளரும் நிலை, தானறியாமல் தன்னை மற்றோர் போர்களத்திலிருந்து அப்புறப் படுத்தி தப்பிக்க வைத்ததை எண்ணி மருகுவது இதற்கும் வசனம் தேவையே இல்லை.
ஆனால் இறுதி காட்சி பற்றி எனக்கே சந்தேகம். அரைகுறை விமர்சகர்கள் குறிப்பிடுவது போல் இது வசனம் சார்ந்த காட்சியா என்று. ஆனால் சங்கிலியால் கட்ட பட்டு முன்னும் ,பின்னும், பக்கவாட்டிலும் நகர்ந்து ,முகக்குறிப்பை பார்க்கும் போது ,எதையும் சந்திக்க தயார் என்ற prime text எல்லோருக்கும் விளங்கி இருக்கும்.ஆனால், காட்டிகொடுத்த கோழைகளை எள்ளும் முறை,தன இனத்தை பற்றி குறிக்கும் பெருமிதம்,இப்போதும் பணிய விரும்பவில்லை என்ற குறிப்பு, என் நிலையே சரி என்ற conviction ,யாராவது வந்து தன் பணியை தொடர்வான் என்ற நம்பிக்கை, சாவின் விளிம்பை தொடும் அலட்சியம் என்று காட்சியின் subtext களும் வசனமின்றியே அந்நியர்களுக்கு புரிந்திருக்கும்.
ஆனாலும் வசனம் புரியாமலே கூட ,அந்த காட்சியுடன் சிம்ம குரல் இயைந்து நடத்தும் வித்தையை சராசரி அந்நியனும் அதிசயித்து வியந்திருப்பான்.
வீர பாண்டிய கட்டபொம்மன் காட்சியிலும், நடிப்பிலும் ,பிரம்மாண்டத்தை காட்டும் படம்.
வசனங்கள் ஒரு கூடுதல் பலமே ,அது இல்லாமலே கூட இந்த படத்தின் வலு குறையவில்லை, என்று அரைகுறை விமர்சகர்கள் முகத்தில் படகாட்சிகளே தூ என்று கட்டபொம்மன் போலவே உமிழ்கிறது. இதை அவர் வேறு விதமாக நடித்திருக்கலாம் என்று சொல்லும் எட்டப்பர்களுக்கு அந்த பணியை நாமே செய்து விடலாம்.
---To be continued.
vasudevan31355
5th June 2013, 09:55 AM
இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-35
அதை போல் தான் நடிகர்திலகத்தின் வசன உச்சரிப்புகளும். தமிழனுக்கு தமிழை எழுத கற்று கொடுத்தவர்கள் வள்ளுவர் முதல் பாரதி வரை ஏராளம். ஆனால் தமிழை அதன் அழகுடன், அர்த்தத்துடன் பேச தமிழனுக்கு கற்று கொடுத்த ஒரே மேதை நடிகர்திலகம் அல்லவா?
உதாரணத்திற்கு நீங்கள் கொடுத்திருக்கும் இந்த வரியிலிருந்தே ஒரு வார்த்தையை எடுத்துக் கொள்வோம். அதாவது 'அல்லவா'. இந்த வார்த்தையை கட்டபொம்மனில் அவர் விதவித பாவங்களுடன், மிகச் சரியான ஏற்ற இறக்கங்களுடன், அம்சமான அழுத்தம் திருத்தங்களுடன், இம்மிகூட பிசகாமல் நடிப்பைக் குரலுடன் கலக்க வைத்து கலக்குமிடம்.
தானாதிபதிப் பிள்ளை ஸ்ரீவைகுந்தத்தில் வெள்ளையர்களின் நெல் கிடங்கில் பொம்மனுக்குத் தெரியாமலேயே கொள்ளை அடித்துவிட்டு, காவலாளியையும் தன்னிச்சையாக கொலைசெய்துவிட, வெள்ளையனிடமிருந்து வந்த தூதுவன் பதிலுக்கு தானாதிபதிப் பிள்ளையின் உயிரைப் பணயமாக கேட்டு கலெக்டர் லூசிங்டன் அனுப்பிய ஓலையை கட்டபொம்மனிடம் நீட்ட, அதற்கு பிள்ளையை வரவழைத்து முதலில் பிள்ளைக்கு சாதகமாகப் பேசுவது போல பேசி, பின் பொங்கி வரும் கோபத்தை மிகவும் கஷ்டப்பட்டு அடக்கி, பின் மந்திரியின் தவறை சுட்டி குத்திக் காட்டும் முறை அபாரமானது.
இந்தக் காட்சியில் நீங்கள் கூறிய வசன உச்சரிப்பு முறை மிகச் சரியாகப் பொருந்தும்.
அதாவது உடல் அசைவுகள், முக பாவங்களில் பின்னிப் பெடலேடுத்தாலும் இந்தக் காட்சியில் அந்த 'அல்லவா' உச்சரிப்பு அவற்றுடன் இணைந்து காட்சிக்கு ஒரு முழுமையை, அழுத்தத்தை, சிறப்பைக் கொடுத்து காட்சியை மேலும் மெருகுபடுத்துவதை நன்றாகவே நாம் உணரலாம். உணர்ச்சிகள் பொங்க, ஆத்திரம் கொப்பளிக்க, வார்த்தைகள் கனலைக் கக்க, கொள்ளைக்காரானைக் க(த)ண்டிக்கப் போய் தமது மந்திரியே கொலைகாரனாயும், கொள்ளைக்காரனாயும் பழி சுமந்து வந்து நிற்பதைத் தாங்க மாட்டாமல்,
"நீரே கொள்ளயடித்தீர் கொலை செய்தீர் அல்லவா!
இன்று எதிரி நம்மை ஏளனம் செய்யவும் வழி காட்டினீர் அல்லவா!
இத்தனைக்கும் உமக்குதவியது உமது மந்திரித்தனம்... பதவி என்ற மதுபோதை அல்லவா!"
என்று கர்ஜிக்கும் போது
வார்த்தை(யை)களை எந்த இடத்தில் எப்படி ஏற்ற இறக்கங்களுடன் பாவம் குன்றாமல் உச்சரிப்பது என்பதை குருவாய் வெளிப்படுத்தும் படிக்காத மாமேதையாய்த் திகழ்கிறார் நடிகர்களுக்கெல்லாம் திலகம்.
vasudevan31355
5th June 2013, 12:41 PM
முக்கியமானது
"என்ன ஆச்சரியக் குறி!"
ஆஸ்கருக்கு முழு தகுதி கொண்ட ஒரு வினாடி விந்தை
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/VTS_01_3VOB_000366795.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/VTS_01_3VOB_000366795.jpg.html)
Gopal.s
6th June 2013, 08:29 AM
இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-37
வீரபாண்டிய கட்டபொம்மனில் இன்னொரு அம்சத்தை நீங்கள் கவனித்தே ஆக வேண்டும். நான் குறிப்பிட்ட ten commandments ,Benhur ,Lawrence of Arabia போன்று multi -agenda கொண்ட வலுவான கதையம்சம்,உணர்ச்சி குவியல்கள்,பல்வேறு வலுவான பாத்திரங்கள் கொண்டதல்ல கட்டபொம்மன். 1791-1799 வரையான வெள்ளையர்களுடன் கருத்து வேறுபாடு,மோதல்,சக சிற்றரசர்களின் துரோகம் ,ஒன்றிரண்டு confrontation ,சமமற்ற போர் ,பிடிபட்ட பிறகு தூக்கு என்று ஒரே பாத்திரத்தை மட்டுமே நம்பிய ஒற்றை agenda கொண்ட படம். நான்கே முக்கிய காட்சிகள். ஜாக்சன் துரை யுடன் வாக்குவாதம்,தானாபதி பிள்ளை சம்பத்த பட்ட காட்சி,தப்பி சென்ற கால காட்சிகள், இறுதி தூக்கு மேடை காட்சி இவ்வளவுதான் முக்கியம். மற்றதெல்லாம் நிரவல். Hyper Rhetoric என்று ஒற்றை அம்ச படம்.
ஒரு Artist Portfolio Repertoire என்ற ஒரே விஷயத்துக்கு மட்டுமே இவ்வகை படங்கள் தகுதி கொண்டது.
மேற்கூறிய அம்சத்தை கட்டபொம்மனில் நீங்கள் கவனிக்க கூட முடியாமல் ஒரு cult படமாக,தமிழின் பிரம்மாண்ட படமாக உங்களை இன்று வரை அசை போட வைத்தது இரண்டே அம்சங்கள். நடிகர்திலகம், மற்றும் தயாரிப்பில் பிரம்மாண்டம்.
இப்படத்தின் வெற்றி ஏற்கெனவே தீர்மானிக்க பட்டது என்று பலர் சொல்ல கேட்டிருக்கிறேன். நடிகர்திலகம் இந்த பாத்திரத்தில் நடிக்க படம் தயாரிக்க படுகிறது என்றதுமே ,எல்லாமே முன்முடிவு செய்ய பட்ட ஒன்றாகி விட்டது.
என் மகனே கூட என்னிடம் இந்த படத்தை பார்த்து , நான் முதலில் கூறிய சந்தேகத்தை கேட்டான்.நான் படத்தின் காலகட்டத்தை சொல்லி, அவனிடம் சொன்னேன். ஒரு சாதாரண சின்ன வியாபார பிரச்சினைகளில் வார கணக்கில் mood out ஆகி, சம்பந்தமில்லாமல் எல்லோரையும் எரிந்து விழுந்து சத்தம் போட்டு ,குடும்பத்தையே gloomy சூழ்நிலைக்கு தள்ளிய நாட்கள் உண்டு. அவனிடன் அதை சொல்லி, பிரச்சினை மிக பெரிது. மான ,சுய கௌரவ,மண் சார்ந்த பிரச்சினை. மோதுவதோ வலுவான ,தன்னை மீறிய எதிரி. சூழ்ந்திருப்பவர்களோ எதிரியுடன் இணைந்து விட்டனர். வெற்றி வாய்ப்பு குறைவு என்றாலும் எதிர்த்து நின்றே ஆக வேண்டும். படத்தில் சித்தரிக்கும் காலகட்டமே எதிர்ப்பு,துரோகம்,அவமானம்,வாக்குவாதம்,போர் ,தோல்வி ,தூக்கு இவ்வளவுதான் என்னும்போது ,எங்கே relaxation ,ease முடியும், படத்தின் agenda hyper rhetoric என்றேன் .புரிந்து கொண்டு மிக மிக ரசித்தான்.
அடுத்ததாக ஒரு நண்பர் அரசவை சம்பத்த பட்ட காட்சிகளின் cliched formalities பற்றி கேட்ட போது,நான் அவர் கம்பெனி board meeting எடுத்து விளக்கினேன். tie ,suit ,proper assembling ,protocol ,formalities , fixed agenda ,jargonised technical presentation ,explanations ,பிறகு entertainment இதுதானே? அரசவை என்பது இதை விட formal ஆன இடமாயிற்றே? hierarchy என்பது இன்னும் வலுவாக இருந்த முற் காலமாயிற்றே? எப்படி present பண்ண வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?அந்த meeting இல் கூட chairmen ,MD ,VP ,senior managers behaviour ,role play வேறு படவில்லையா? ஒரு லாப நோக்கம் கொண்ட வர்த்தக நிறுவனமே இப்படி என்றால், அரசனை சுற்றி வாழ்வா சாவா பிரச்சினையை சந்திக்கும் அரசவை அதற்குரிய ceremonial procedures ,protocol ,formalities , cliched expressions &Language இருக்காதா என்றேன். நண்பர் தலையாட்டி சிந்தித்தார். புரிந்து கொண்டார் என்று புரிந்து கொண்டேன்.
நம் பிரச்சினை என்னவென்றால் ,அறியாத கேள்விகளுக்கும் ,முட்டாள் தனமான விமர்சனங்களுக்கும் நாம் ஒரு compromise பாணி சமாதானம் சொல்கிறோமே தவிர, நம் conviction சரியானது என்று அவர்களை convince செய்ய வேண்டும். முக்கியம் நமக்கு அந்த படம் சம்பத்த பட்ட முழு விவரமும் தெரிய வேண்டும் .
முதல் பத்தியில் பார்த்தது போல வலுவில்லாத கதையம்சம், ஒற்றை நோக்கம் கொண்ட ஒரு glorified folk -lore ---------- உலக நடிகன் கனவு கண்ட பாத்திரமாகி , அவன் அபார திறமையால் ,உலக புகழ் பெற்ற விந்தை, அவர் அந்த பாத்திரத்தை மெருகேற்றி காட்டிய விதம் பற்றி வரும் பதிவுகளில் பார்ப்போம்.
---To be Continued.
IliFiSRurdy
6th June 2013, 11:31 AM
முக்கியமானது
"என்ன ஆச்சரியக் குறி!"
ஆஸ்கருக்கு முழு தகுதி கொண்ட ஒரு வினாடி விந்தை
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/VTS_01_3VOB_000366795.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/VTS_01_3VOB_000366795.jpg.html)
ஆஹா!!!!
IliFiSRurdy
6th June 2013, 04:19 PM
நண்பர்களுக்கு ஒரு அன்பு வேண்டுகோள்
அவ்வப்பொழுது தலைவரை விமரிசித்து சில அறிவு ஜீவிகள் நம் திரிக்கு வருவது நாம் அறிந்ததே!
இனி அவ்வாறு நிகழ்ந்தால் அவர்களை நம் கோபால் எழுதும் காவியமான உலக அதிசயங்கள் முழுவதும் படிக்க சொல்லி சிபாரிசு செய்யலாம்.அவர்கள் இசையவில்லை என்றால்,நண்பர் வாசுதேவன் அளித்துள்ள இந்த புகைப்படத்தை பார்க்க சொல்லி கேட்கலாம்..இதிலும் அவர்கள் தங்கள் மனம் மாறவில்லை என்றால்..
.....
to hell with them..just ignore them and continue with our work.
RAGHAVENDRA
6th June 2013, 05:03 PM
டியர் கோபால் சார்,
கட்டபொம்மன் திரைப்படத்தைப் பற்றிய தங்கள் அலசல் அபாரம்.
தாங்கள் மிகுந்த இன்வால்வ்மெண்டில் எழுதியதில் ஒரு எழுத்துப் பிழையை கவனிக்காமல் விட்டு விட்டீர்கள். அது 1791-1799 அல்லவா,
jokes apart.
கட்டபொம்மன் திரைப்படத்தில் மிக முக்கியமான அம்சம் காஸ்ட்யூம் டிசைனிங், Set Properties மற்றும் Presentation. மிக அழகாக காலத்தை பிரதிபலிக்கும் உடை யமைப்பு இப்படத்திற்கு ஒரு கூட்டல் புள்ளி... சாரி ... PLUS POINT.
இயக்கம் மிக சிறப்பானது. வெள்ளையர்களின் ஆதிக்கம், எதிர்ப்பு இவை ஒரு புறம் இருக்க, சில வெள்ளைக் கார அதிகாரிகள், PROTOCOL அனுசரிப்பதில் கவனமாக இருந்தார்கள் என்பதை இப்படம் சித்தரிக்கிறது. அதே வெள்ளையர்களில் மற்றொரு வர்க்கம் எதிரியை இளக்காரமாகப் பார்ப்பதுவும் இப்படத்தில் காட்டப் பட்டுள்ளது. எதிரியைப் பற்றி தெரியாதிருந்தால் வெள்ளைக் காரர்களின் அணுகுமுறையில் ஒரு formal approach இருக்கும். ஆனால் காட்டிக் கொடுக்கப் பட்ட எதிரியாக இருந்தால் அவனைத் துச்சமென மதித்து நடத்துவதும் அவர்களுடைய குணமாக இப்படத்தில் காட்டப் பட்டிருக்கிறது. இதுவும் நடைமுறையில் இருந்துள்ளதாக பல கட்டுரைகளில் படித்த நினைவு. இதன் ஒரு பிரதிபலிப்பாகவே ஜாக்சன் துரையுடனான உரையாடலைக் கூறலாம். இருக்கை கூட தராமல் அவமதிக்கும் குணம் கொண்ட வெள்ளைக்காரனாக ஜாக்சன் காட்டப் பட்டிருப்பதும் ஒரு வகையான reflection of history.
தொடருங்கள்... மேலும் மேலும் படிக்க ஆவலாயுள்ளோம்.
Gopal.s
7th June 2013, 07:45 AM
வாசு - உனது பதிவு காட்சியை கண்முன் நிறுத்தி அசை போட வைக்கும் அற்புதம்.
சர் .ராகவேந்தர் ,சர் .கண்பட் -உங்கள் உந்துதல் என் மீது சுமையை அதிகரித்து கொண்டே உள்ளது.
Gopal.s
8th June 2013, 05:46 PM
இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-38
நடிப்பு மற்றும் complexity in character என்று பார்த்தால் ,மிக ஆராய்ந்தால் VPKB நிச்சயமாக அவருடைய Top 10 இல் வர முடியாது. ஆனால் நீங்கள் என்னிடமோ ,அல்லது யாரிடம் கேட்டாலும் இந்த படம் ஒரு பரவச அனுபவம், mesmerism முறையில் கட்டுண்டது போல ஒரு மயக்க ட்ரான்ஸ் நிலை. மற்ற படங்களை பற்றி வேறாக சொல்வோர் சிலர் இருக்க முடியும். ஆனால் VPKB பற்றி கேட்டால் ,அது எந்த தமிழனாக இருந்தாலும் சொல்லுவது ஒரே பதில். நான் சொன்ன மாதிரி single agenda நேர்கோட்டில், hyper ஒரு முகப்பட்ட உணர்ச்சி நிலை, ஒரே நோக்கம், ஒரே மையம் என்று போகும் இந்த படம் எப்படி இதனை சாதிக்க இயலும்?நான் பார்க்கும் போது என் முன்னோர்களுக்கு இருந்த folklore epic image கிடையாதே?அடுத்த தலைமுறையும் இந்த படத்தை சிலாகிக்கிறதே ,எப்படி சாத்தியமானது?எந்த மந்திரம் அதனை சாதித்தது?
நடிகர்திலகம் Focusreach முறையில் நம் ஆத்மாவுக்குள் நுழைந்து சாதித்த அதிசயம்.
தன் ஆத்மாவுக்குள் அந்த வீரனை நுழைத்து அவர் சாமியாடியுள்ளார் என்றே சொல்ல வேண்டும்.Hysteric delirium which mesmerises the audience with psychedelic trip .
இந்த படம் நடிகர்திலகத்தின் focusreach கொண்டே cult status அடைந்து ,எந்த கலைஞனை கேட்டாலும் இந்த பட காட்சியை நடித்ததே தன் முதல் audition என்று சொல்ல வைத்த அதிசயம்.இதை விரிவாக பார்ப்போம்.
1)Focusreach முறையின் முக்கியம் அதீத energy level . சக்தியின் உக்கிர வெளிப்பாடு.உடலின் சோர்வு,பசி,துன்பத்தை கருதாது நோக்கத்தை நோக்கி செல்லும் அதீத வெளியீடு.இப்படத்தில் ஒவ்வொரு காட்சியிலும், இதுதான் உச்ச சக்தி என்று நாம் கருதும் போது அடுத்தது அதனை மிஞ்சி உச்ச காட்சியில் இமயத்துக்கு மேலும் செல்லும்.
2)அதுவரை நிகழ்ந்த அனைத்தையும் விட மேல் தளத்தில் விரிந்து நாயகனை superhero ஆக உணர்த்தும் விந்தை. இதை செயல்களின் துணையின்றி உணர்ச்சி வெளிப்பாட்டு சக்தியிலேயே சாதித்து ,நமக்கு மேலே அவர் என்று உணர வைத்த விந்தை. நாசரே இவர் உயரம் பல அடிகள் மேலே என்று நினைக்க வைத்த சாதனை.அனைத்து தரப்பினரையும்,வயதினரையும் ,தன் கீழ் பட்டவர்களாக படம் பார்க்கும் போது உணர வைத்த சாதனை.
3)focus focus focus reach a peak ,move to other peaks என்ற முறையில் நடிப்பின் உணர்ச்சி வரைபடத்தில்(Emotional intensity mapping) சிகரம் தொட்டு தொட்டு மேற்செல்லும் முறை.
4)மெய் வருத்தம் பாராத,தன்னை வருத்திய ஒரு முக சிந்தனை வெளிப்பாடு.
(ரத்தமெல்லாம் கக்கி துடைத்து கொண்டு தொடர்வாராம்)
5)வித விதமான வேறு பட்ட முயற்சி,சிந்தனை அதன் வழி செயல் பாடுகள்.
6)சரி- தவறு என்ற ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டு ,தான் செய்வதே மிக சரி என்று அனைவரையும் உணர வைக்கும் சக்தி. எடுத்த நோக்கமும் உன்னதமானதாக இருந்ததால் double impact .
7) Adrenalin Rushes with High Stress levels . இந்த படம் எடுத்து கொண்ட காலகட்டமே stress level கட்டபொம்மனுக்கும் மேலாக இருந்தது. சிவாஜியின் Type A personality கொண்ட வெளியீட்டு முறை ,பார்க்கும் நமக்கும் வாளெடுத்து போர் புரிய வைக்கும் அளவு நரம்புகளை முறுக்கேற்றும்.வசனங்களும் அற்புதமாக இதற்கு இசையும்.
8)அவர் மட்டுமே அந்த கணத்தில் முக்கியமானவர் என்று அந்த இருட்டின் கணங்களில் கட்டி வைக்கும் ஈர்ப்பு.
எனக்கு தெரிந்த அளவில் இந்த focusreach அதிசயம் ,இந்த படத்தில் நடிப்பினால் அமைந்த அதிசயம் எந்த இந்திய படத்துக்கும் அதற்கு முன்போ பின்போ நடந்ததே இல்லை.
----To be continued.
parthasarathy
9th June 2013, 12:13 PM
இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-38
எனக்கு தெரிந்த அளவில் இந்த focusreach அதிசயம் ,இந்த படத்தில் நடிப்பினால் அமைந்த அதிசயம் எந்த இந்திய படத்துக்கும் அதற்கு முன்போ பின்போ நடந்ததே இல்லை.
----To be continued.
அன்புள்ள திரு. கோபால் அவர்களே,
தங்கள் பாகம்-38 அற்புதம்!
ஒரு விஷயத்தை பெரும்பாலோர் ஒத்துக் கொள்ள மாட்டார்கள். கட்டபொம்மன் அவருடைய முதல் பத்து சிறந்த நடிப்பைத் தாங்கி வந்த படங்களில் வராது என்பது! தங்களுக்கேயுரிய தைரியம் மற்றும் அதை எப்படி விளங்க வைக்க வேண்டும் என்பதில் உங்களுக்கிருக்கும் தன்னம்பிக்கை தான் அதன் காரணம்.
எனினும் ஒன்று. நான் எழுதிய அண்மைப் பதிவில் குறிப்பிட்ட படி, ஒரு நடிகன் அவனுடைய நடிப்பினால் மட்டுமே, ஒட்டு மொத்த அரங்கையும் - ஏன் ஒரு சமுதாயத்தையே, பல பல ஜெனரேஷன்களாகக் கட்டிப்போட்டுக் கொண்டிருக்கும் ஒரு படம் இது என்றால், அது மிகையாகாது.
யாரும் பார்த்திராத ஒரு பாத்திரத்தை, சுதந்திரப் போராட்டத்தில் கட்டபொம்மனை விடவும் பலர் பெரிய பங்கு பெற்றிருக்க, அந்த அளவிற்கு பங்களிக்காத ஆனால் உலக கவனம் பெறாத ஒரு சிறிய மண்டலம் மட்டுமே அறிந்திட்ட - அதுவும் நாடகம்/பாளையக்காரன் கூத்தின் மூலம் அறியப்பட்ட ஒரு பாத்திரத்தை, முழுவதும் உள் வாங்கி, இன்றளவும், கட்டபொம்மனைப் பெரிதாக பேச விட்டதில் - அதுவும் வெளி நாடுகளிலும் - நடிகர் திலகம் எந்த அளவிற்கு மெனக்கெட்டிருக்கிறார், உயிரை விட்டிருக்கிறார் என்பது புரியும்.
திரு. வாசுதேவன் அவர்கள் குறிப்பிட்டது போல, கட்டபொம்மனை விடவும் ஒரு பெரிய வீரன் இல்லை என்பதை பெரிய சண்டைக் காட்சிகள் இல்லாமல், நடிப்பினால் மட்டுமே செய்து காட்டிய அதிசயம் "வீர பாண்டிய கட்டபொம்மன்" தான். படம் நெடுகிலும் அவரிடம் தெறிக்கும் கொப்பளிக்கும் எனர்ஜி, உடல் மொழி, கவனம், ஒவ்வொரு மிகச் சிறிய அசைவு மற்றும் கணங்களிலும் அவரிடம் தெரிந்த நுணுக்கமான தலை முதல் கால் வரை தெரிந்த அற்புத உடல் மொழி - நீங்கள் குறிப்பிட்டது போல், வசனங்கள் இல்லாமலேயே, அந்தப் பாத்திரத்தை சிரஞ்சீவிப் பாத்திரமாக்கி விட்ட அதிசயம்.
அற்புதம். தொடருங்கள் - ஆனந்தம் தாருங்கள்.
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
Gopal.s
9th June 2013, 12:44 PM
அன்புள்ள திரு. கோபால் அவர்களே,
தங்கள் பாகம்-38
அற்புதம். தொடருங்கள் - ஆனந்தம் தாருங்கள்.
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
நம்பினால் நம்புங்கள். முதல் ஆளாக நீங்கள் வருவீர்கள் என்று எதிர்பார்த்தேன். புரிதலுக்கு மிக நன்றி.(H .R ,H .R தான். sharp ).
vasudevan31355
10th June 2013, 06:02 AM
இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-38
நடிப்பு மற்றும் complexity in character என்று பார்த்தால் ,மிக ஆராய்ந்தால் VPKB நிச்சயமாக அவருடைய Top 10 இல் வர முடியாது. ஆனால் நீங்கள் என்னிடமோ ,அல்லது யாரிடம் கேட்டாலும் இந்த படம் ஒரு பரவச அனுபவம், mesmerism முறையில் கட்டுண்டது போல ஒரு மயக்க ட்ரான்ஸ் நிலை. மற்ற படங்களை பற்றி வேறாக சொல்வோர் சிலர் இருக்க முடியும். ஆனால் VPKB பற்றி கேட்டால் ,அது எந்த தமிழனாக இருந்தாலும் சொல்லுவது ஒரே பதில். நான் சொன்ன மாதிரி single agenda நேர்கோட்டில், hyper ஒரு முகப்பட்ட உணர்ச்சி நிலை, ஒரே நோக்கம், ஒரே மையம் என்று போகும் இந்த படம் எப்படி இதனை சாதிக்க இயலும்?நான் பார்க்கும் போது என் முன்னோர்களுக்கு இருந்த folklore epic image கிடையாதே?அடுத்த தலைமுறையும் இந்த படத்தை சிலாகிக்கிறதே ,எப்படி சாத்தியமானது?எந்த மந்திரம் அதனை சாதித்தது?
உண்மை! டாப் 10 இல் வரமுடியாதுதான். ஏனென்றால் வாழ்வில் நமக்கு பிடித்த ஒரு சில அம்சங்கள் வழக்கமாகப் பிடித்திருக்கும் பல அம்சங்களையும் மீறி நம்மிடையே சிறகடிப்பதுண்டு. அதைப் போலத்தான் பொம்மனும். உதாரணத்திற்கு என்னுடைய டாப் 10-இல் முதலில் என்ன வரும் என்று எல்லோருக்கும் தெரிந்ததே. பிறகு 2,3,4 என்று பிடித்த படங்களை வரிசைப் படுத்துவேன். ஆனால் சவாலே சமாளியை அந்த பத்தில் நான் சேர்க்க மாட்டேன். ஆனால் பத்தையும் மீறிய ஒருவித ஸ்பெஷல் அது. ஒரு தனி இடம். அது போல கட்டபொம்மன் எல்லோருக்கும் தனியான ஒரு ரகம். பெயர் கேட்டாலே உணர்வுகள் கிளர்ந்தெழும் உச்சநிலை. ஜாக்கிசான் படங்களைப் பார்த்துவிட்டு வெளியே வரும் இளைஞர்கள் டூ வீலரை ஸ்டாண்டில் எடுக்கும் போதே சர்...புர்ர்.....என்று ஏக வேகத்துக்கு எடுத்திருப்பதை நான் பார்த்திருக்கிறேன். படம் விட்ட ஒரு 5 நிமிடம் ஜாக்கியின் சாகசங்களில் மூழ்கி அதிலிருந்து வெளியே வரமாட்டாமல் ஜாக்கி போல சாதனை செய்ய துடிப்பான். கொஞ்ச நாழிக்குத்தான். அதே போல பொம்மனைப் பார்த்து விட்டு வரும் ஒவ்வொருவரும் இறுக்கமாக உணர்ச்சிப் பிழம்பாகத்தான் வெளியே வருவர். வேறு சிந்தனையோட்டமே இருக்காது. நடிகர் திலகத்தை விட பொம்மன்தான் மனதிற்குள் சடுகுடு நடத்துவான். அவன் பட்ட கஷ்டங்களே பார்வையாளர்களை மிகவும் ஆக்கிரமித்திருக்கும். அவன் நடிகர் திலகத்தை மறந்திருப்பான். பொம்மனை நேரில் தூக்கு மாட்டியதைப் பார்த்து விட்டு வந்தவனாகத்தான் தெரிவான். நடிப்புக்கும், கதைக்களத்திற்கும், காட்சிகளுக்கும், வசனங்களுக்கும், படமாக்கின ஒவ்வொருவரின் வேர்வைகளுக்கும் இதை விட பெரிய வெற்றி ஏது?
vasudevan31355
10th June 2013, 06:26 AM
தன் ஆத்மாவுக்குள் அந்த வீரனை நுழைத்து அவர் சாமியாடியுள்ளார் என்றே சொல்ல வேண்டும்.Hysteric delirium which mesmerises the audience with psychedelic trip .
பேய்த்தனமான சாமியாட்டம்.
வெள்ளையனின் கொடுமைகள் ஒவ்வொருவர் நெஞ்சிலும் மறக்க இயலாத பட்சத்தில் நாம் சுதந்திரம் பெற்று கிட்டத்தட்ட 12 வருடங்களுக்கு ஓரளவிற்கு மறந்திருந்து நீறு பூத்த நெருப்பாய் இருந்த நிலையில் நடிகர் திலகம் என்ற கட்டபொம்மன் அதில் பெட்ரோலை ஊற்றினார் என்றும் சொல்லலாம். சுதந்திரம் அடைந்திருந்தாலும் மீண்டும் அந்த வெள்ளைய நாய்களின் மேல் வெறியை மூட்டிய கட்டபொம்மன். ஒரு சிறு கற்பனை. கட்டபொம்மன் படம் நாம் சுதந்திரம் அடைவதற்கு முன் தடைகள் இல்லாமல் வெளியாகி இருந்தால் நிலைமை என்னவாகியிருக்கும் என்று யோசியுங்கள். அதனால் ஏற்பட்டிருக்கும் விளைவுகளை நம்மால் கற்பனை செய்ய இயலுமா?! கட்ட்டபொம்மனாக வாழ்ந்த அந்த சிங்கத்திற்கும் கட்டபொம்மனுக்கு ஏற்பட்ட நிலை ஏற்ட்டிருந்தாலும் ஏற்பட்டிருக்கலாம் அல்லவா! (சற்று குரூரமான கற்பனைதான்)
vasudevan31355
10th June 2013, 06:42 AM
உளவுபூர்மாக, உணர்வு பூர்வமாக ஒவ்வொருவர் நெஞ்சிலும் சிம்மாசனமிட்டு நடிகர் திலகமாய் அமர்ந்து விட்டான் கட்ட பொம்மன். கட்ட பொம்மன் வேறு சிவாஜி I mean நடிகர் திலகம் வேறு என்ற பேச்சுக்கே இடமில்லை. தாங்கள் குறிப்பிட்டது போல மெஸ்மரிஸ நிகழ்வு. கட்டபொம்மனின் பேச்சு , செயல், நடை, உடை, பாவனை, வீரம், விவேகம், அறிவு, ஆத்திரம், ரௌத்திரம் என்ற பலவகைப்பட்ட உணர்வுகளுக்கு ஒவ்வொருவனும் நிரந்தர அடிமையாகிப் போனான். பாட நூல்களில் சப்ஜெக்ட் வந்தால் கட்டபொம்மனை பிள்ளைகளுக்குக் காட்ட படம் வரைந்தவன் யாரை மனதில் வைத்து வரைந்திருப்பான்? அவனுக்கு ஏற்பட்ட பாதிப்பு அது. சமீபத்தில் ராஜராஜ சோழனின் சிலையொன்றை வெகு நாட்களுக்குப் பின் தஞ்சாவூர் பெரிய கோவிலில் ஒரு பூட்டியிருந்த அறையிலிருந்து எடுக்க நேர்ந்ததாம். பார்த்தால் அப்படியே அச்சு அசலாக உலகத்திலேயே யாருமே மிஞ்ச முடியாத ஒரு தமிழ் நடிகரின் உருவத்தை அப்படியே ஒத்திருந்ததாம். ஏன் இப்படிப்பட்ட வரலாற்று நாயகர்கள் அந்த நடிகனுள் புகுந்து தன்னை பிரம்மாண்டமாக எல்லோருக்கும் வெளிப்படுத்தி பின் வெளியேறியிருக்கக் கூடாது?
vasudevan31355
10th June 2013, 06:57 AM
)Focusreach முறையின் முக்கியம் அதீத energy level . சக்தியின் உக்கிர வெளிப்பாடு.உடலின் சோர்வு,பசி,துன்பத்தை கருதாது நோக்கத்தை நோக்கி செல்லும் அதீத வெளியீடு.இப்படத்தில் ஒவ்வொரு காட்சியிலும், இதுதான் உச்ச சக்தி என்று நாம் கருதும் போது அடுத்தது அதனை மிஞ்சி உச்ச காட்சியில் இமயத்துக்கு மேலும் செல்லும்.
அற்புதமான என்னைக் கவர்ந்த வரிகள். அந்தப் படம் ஏற்படுத்தும் பல்வேறு பாதிப்புகளை, அதற்கான காரணங்களை இரண்டு இரண்டு வரிகளில் மிகத் தெளிவாகச் சொல்லி விட்டீர்கள்.
உச்சத்தை நோக்கி உச்சங்கள் பயணித்துக் கொண்டே இருக்கும். படம் தூக்கு போட்டதும் முடிவடைந்து விடும். பெல் கொடுத்து விடுவார்கள். ஆனால் பார்வையாளர்கள் மனதில் தானாகவே அற்புதமான,பலமான அஸ்திவாரம் ஏற்பட்டு விடும். எழுப்பப்பட்டு விடும். அது கட்டபொம்மனின் மண் கோட்டையல்ல. இரும்புக் கோட்டை. படம் முடிந்தாலும் பார்த்தவன் மனதில் முடிவற்ற நிலை. கட்டபொம்மன் மறைந்து நடிகர் திலகத்தை நினைவுக்குக் கொண்டு வரும்போது அடி, நுனி கண்டுபிடிக்க முடியாமல் திண்டாடுவான்.
அந்த நடைதான் டாப்...இல்லை இல்லை அந்த வாளை உறைக்குள் போடுவதுதான் டாப்...இல்லை இல்லை ஜாக்சனின் முன் நாற்காலியை இழுத்துப் போட்டு கால் மேல் காலிட்டு அமர்வதுதான் உச்சம்...இல்லை இல்லை தூக்கு மாட்டுமுன் கர்ஜிக்கும் அந்த காட்சிகள்தாம் அற்புதம்....என்று அவனுக்குள் ஒரு போர்க்களம் அமைத்து போரிடுவான். ஆனால் வெற்றியே கிடைக்காது. குழம்பிப் போவான். முடிவெடுக்க முடியாது. எந்த நாட்டாமையும் இந்தக் காட்சிதான் சிறந்தது என்று தீர்ப்பளிக்க முடியாது.
vasudevan31355
10th June 2013, 07:07 AM
focus focus focus reach a peak ,move to other peaks என்ற முறையில் நடிப்பின் உணர்ச்சி வரைபடத்தில்(Emotional intensity mapping) சிகரம் தொட்டு தொட்டு மேற்செல்லும் முறை.
http://imgusr.tradekey.com/p-B1716473-20080527075921/focus-reach-enterprise-wide-accounting-solution.jpg
அப்படி அமைந்து விட்டது அல்லது அமைக்கப் பட்டது. கட்டபொம்மன் வரலாற்று நிகழ்வுகளும் அவ்வாறே! கொஞ்சம் கொஞ்சமாக பிரச்சனைகள் உருவாக உருவாக நடிப்பு பூதமும் கொஞ்சம் கொஞ்சமாக விஸ்வரூபம் எடுக்க ஆரம்பிக்கும். பூதத்துக்கேற்ற தீனி கொஞ்சம் கொஞ்சமாக கிடைக்க ஆரம்பித்து விடும்..அதனால்? உணர்ச்சி வரைபடத்தின் அளவுகோல்கள் அதிகரித்துக் கொண்டேதான் போகும். இறங்க வாய்ப்பே இல்லை. போருக்குத் தயாரகும் முன் கடவுளைத் தொழும் அமைதி நிலையிலிருந்து விடுபட்டு கொஞ்சம் கொஞ்சமாக நடிப்பையும், குரலையும் உயர்த்த ஆரம்பித்து, நம்மையும் கொஞ்ச கொஞ்சமாக இருக்கை நுனிக்கு கொண்டு வரச் செய்வதைப் போல. லாபம் கட்டபொம்மன் புகழுக்கு.
RAGHAVENDRA
10th June 2013, 07:09 AM
இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-38
நடிப்பு மற்றும் complexity in character என்று பார்த்தால் ,மிக ஆராய்ந்தால் VPKB நிச்சயமாக அவருடைய Top 10 இல் வர முடியாது. ஆனால் நீங்கள் என்னிடமோ ,அல்லது யாரிடம் கேட்டாலும் இந்த படம் ஒரு பரவச அனுபவம், mesmerism முறையில் கட்டுண்டது போல ஒரு மயக்க ட்ரான்ஸ் நிலை. மற்ற படங்களை பற்றி வேறாக சொல்வோர் சிலர் இருக்க முடியும். ஆனால் VPKB பற்றி கேட்டால் ,அது எந்த தமிழனாக இருந்தாலும் சொல்லுவது ஒரே பதில். நான் சொன்ன மாதிரி single agenda நேர்கோட்டில், hyper ஒரு முகப்பட்ட உணர்ச்சி நிலை, ஒரே நோக்கம், ஒரே மையம் என்று போகும் இந்த படம் எப்படி இதனை சாதிக்க இயலும்?நான் பார்க்கும் போது என் முன்னோர்களுக்கு இருந்த folklore epic image கிடையாதே?அடுத்த தலைமுறையும் இந்த படத்தை சிலாகிக்கிறதே ,எப்படி சாத்தியமானது?எந்த மந்திரம் அதனை சாதித்தது?
There is no question or requirement of complexity in character as far as வீரபாண்டிய கட்டபொம்மன் is concerned. கதைக்குழுவினர் மிகுந்த ஆராய்ச்சிக்குப் பின் திரைக்கதையை உருவாக்கியுள்ளனர். திரைக்கதை உருவாக்கத்தின் காரணம் இதை எப்படி சொல்வது என்பதற்காக மட்டுமே. மற்றபடி அந்த வரலாற்று நாயகன் சந்தித்த சம்பவங்களை மாற்ற முடியாதல்லவா. கதையிலோ அல்லது திரைக்கதையிலோ வேண்டுமானால் டாப் 10ல் வராமல் போகலாம். ஆனால் 100க்கு 99பேர் வீரபாண்டிய கட்டபொம்மனை டாப் 10ல் நிச்சயம் தேர்வு செய்வார்கள். There may not be any flaws in characterisation. அப்படி இருந்திருந்தால் அது நிச்சயம் பளிச்செனத் தெரிந்திருக்கும்.
நடிகர்திலகம் Focusreach முறையில் நம் ஆத்மாவுக்குள் நுழைந்து சாதித்த அதிசயம்.
தன் ஆத்மாவுக்குள் அந்த வீரனை நுழைத்து அவர் சாமியாடியுள்ளார் என்றே சொல்ல வேண்டும்.Hysteric delirium which mesmerises the audience with psychedelic trip .
இந்த படம் நடிகர்திலகத்தின் focusreach கொண்டே cult status அடைந்து ,எந்த கலைஞனை கேட்டாலும் இந்த பட காட்சியை நடித்ததே தன் முதல் audition என்று சொல்ல வைத்த அதிசயம்.இதை விரிவாக பார்ப்போம்.
1)Focusreach முறையின் முக்கியம் அதீத energy level . சக்தியின் உக்கிர வெளிப்பாடு.உடலின் சோர்வு,பசி,துன்பத்தை கருதாது நோக்கத்தை நோக்கி செல்லும் அதீத வெளியீடு.இப்படத்தில் ஒவ்வொரு காட்சியிலும், இதுதான் உச்ச சக்தி என்று நாம் கருதும் போது அடுத்தது அதனை மிஞ்சி உச்ச காட்சியில் இமயத்துக்கு மேலும் செல்லும்.
2)அதுவரை நிகழ்ந்த அனைத்தையும் விட மேல் தளத்தில் விரிந்து நாயகனை superhero ஆக உணர்த்தும் விந்தை. இதை செயல்களின் துணையின்றி உணர்ச்சி வெளிப்பாட்டு சக்தியிலேயே சாதித்து ,நமக்கு மேலே அவர் என்று உணர வைத்த விந்தை. நாசரே இவர் உயரம் பல அடிகள் மேலே என்று நினைக்க வைத்த சாதனை.அனைத்து தரப்பினரையும்,வயதினரையும் ,தன் கீழ் பட்டவர்களாக படம் பார்க்கும் போது உணர வைத்த சாதனை.
Perfect analysis. Without any efforts for changing his body structure and undermining or creating any necessity for it, Nadigar Thilagam elevated the height of the character = both in physique as well as presentation - by his performance. This is possible only to the gifted ... viz. Sivaji Ganesan.
3)focus focus focus reach a peak ,move to other peaks என்ற முறையில் நடிப்பின் உணர்ச்சி வரைபடத்தில்(Emotional intensity mapping) சிகரம் தொட்டு தொட்டு மேற்செல்லும் முறை.
ஒரு சிகரத்திலிருந்து மற்றொரு சிகரத்திற்கு அப்படியே செல்லும் திறமை இவருக்கு மட்டுமே உண்டு. சிகரத்தில் ஏறி விட்டால் அங்கிருந்து மற்ற சிகரத்திற்கு அப்படியே செல்லும் வழி உண்டா என ஆராய்ந்து ... தேவைப்பட்டால் பறந்தும் .... அதனை செயல் படுத்தக் கூடிய வல்லமை நடிகர் திலகத்திற்கு மட்டுமே உண்டு. மேலே ஏறி விட்டால் பார்வை அங்கேயே சுற்றி சுற்றி வட்டமிட்டுக் கொண்டே இருக்கும்.
4)மெய் வருத்தம் பாராத,தன்னை வருத்திய ஒரு முக சிந்தனை வெளிப்பாடு.
(ரத்தமெல்லாம் கக்கி துடைத்து கொண்டு தொடர்வாராம்)
இது ஒரு முறையல்ல பல முறை நடைபெற்றுள்ளது. கட்டபொம்மன் திரைப்படத்திற்கு ஓரிரு முறை நடைபெற்றிருக்கலாம். ஆனால் நாடகம் நடத்திக் கொண்டிருந்து போது அநேகமாக ஒவ்வொரு முறையும்.
5)வித விதமான வேறு பட்ட முயற்சி,சிந்தனை அதன் வழி செயல் பாடுகள்.
ஆனால் அவை அந்தக் கதாபாத்திரத்தின் தன்மை, குணநலன்களை சற்றும் பாதிக்காது என்பது தான் சிறப்பு.
6)சரி- தவறு என்ற ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டு ,தான் செய்வதே மிக சரி என்று அனைவரையும் உணர வைக்கும் சக்தி. எடுத்த நோக்கமும் உன்னதமானதாக இருந்ததால் double impact .
சரி என்று தெரிந்தால் மட்டுமே செய்வார். எனவே பார்ப்பவர்களுக்கு அது சரி என்ற உணர்வு தானாகவே ஏற்பட்டு விடும்.
7) Adrenalin Rushes with High Stress levels . இந்த படம் எடுத்து கொண்ட காலகட்டமே stress level கட்டபொம்மனுக்கும் மேலாக இருந்தது. சிவாஜியின் Type A personality கொண்ட வெளியீட்டு முறை ,பார்க்கும் நமக்கும் வாளெடுத்து போர் புரிய வைக்கும் அளவு நரம்புகளை முறுக்கேற்றும்.வசனங்களும் அற்புதமாக இதற்கு இசையும்.
அதனை வெளிக் கொண்டு வந்தது அற்புதமான ஒலியமைப்பும் அல்லவா...
8)அவர் மட்டுமே அந்த கணத்தில் முக்கியமானவர் என்று அந்த இருட்டின் கணங்களில் கட்டி வைக்கும் ஈர்ப்பு.
அது தான் அவருடைய வெற்றி. இதனால் தான் ஆசிய ஆப்பிரிக்க விருது ஜூரிகள் உணர்ந்திருப்பார்கள்.
எனக்கு தெரிந்த அளவில் இந்த focusreach அதிசயம் ,இந்த படத்தில் நடிப்பினால் அமைந்த அதிசயம் எந்த இந்திய படத்துக்கும் அதற்கு முன்போ பின்போ நடந்ததே இல்லை.
Cent per cent true.
RAGHAVENDRA
10th June 2013, 07:11 AM
உளவுபூர்மாக, உணர்வு பூர்வமாக ஒவ்வொருவர் நெஞ்சிலும் சிம்மாசனமிட்டு நடிகர் திலகமாய் அமர்ந்து விட்டான் கட்ட பொம்மன். கட்ட பொம்மன் வேறு சிவாஜி I mean நடிகர் திலகம் வேறு என்ற பேச்சுக்கே இடமில்லை. தாங்கள் குறிப்பிட்டது போல மெஸ்மரிஸ நிகழ்வு. கட்டபொம்மனின் பேச்சு , செயல், நடை, உடை, பாவனை, வீரம், விவேகம், அறிவு, ஆத்திரம், ரௌத்திரம் என்ற பலவகைப்பட்ட உணர்வுகளுக்கு ஒவ்வொருவனும் நிரந்தர அடிமையாகிப் போனான். பாட நூல்களில் சப்ஜெக்ட் வந்தால் கட்டபொம்மனை பிள்ளைகளுக்குக் காட்ட படம் வரைந்தவன் யாரை மனதில் வைத்து வரைந்திருப்பான்? அவனுக்கு ஏற்பட்ட பாதிப்பு அது. சமீபத்தில் ராஜராஜ சோழனின் சிலையொன்றை வெகு நாட்களுக்குப் பின் தஞ்சாவூர் பெரிய கோவிலில் ஒரு பூட்டியிருந்த அறையிலிருந்து எடுக்க நேர்ந்ததாம். பார்த்தால் அப்படியே அச்சு அசலாக உலகத்திலேயே யாருமே மிஞ்ச முடியாத ஒரு தமிழ் நடிகரின் உருவத்தை அப்படியே ஒத்திருந்ததாம். ஏன் இப்படிப்பட்ட வரலாற்று நாயகர்கள் அந்த நடிகனுள் புகுந்து தன்னை பிரம்மாண்டமாக வெளிப்படுத்தி பின் வெளியேறியிருக்கக் கூடாது?
தாங்கள் கூற்று ... குரிப்பாக கடைசி வாக்கியம் ... பொன்னெழுத்தில் பொறிக்க வேண்டியது வாசு சார். வீரபாண்டிய கட்டபொம்மனைத் தொடர்ந்து எண்ணற்ற வரலாற்று நாயகர்கள் நடிகர் திலகம் தான் தங்களைப் பற்றி சொல்ல வேண்டும் என அவரிடம் வேண்டுகோள் விடுப்பதற்காக நிச்சயம் க்யூவில் நின்றிருப்பார்கள்.
vasudevan31355
10th June 2013, 07:15 AM
கோ,
எவ்வளவு homework பண்ணுவது? school இல் கூட இவ்வளவு பண்ணதில்லை. ஆனால் சுகமான homework. நீ பத்து வரிகளில் ரத்தினச் சுருக்கமாய் முடித்து விட்டு நைஸாக எங்களை ஆழம் பார்க்கிறாய். உன் நரித்தனம் தெரிகிறது.
மாதவா! என்னமோ போடா....
vasudevan31355
10th June 2013, 09:00 AM
stress உணர்வுகளில் மூழ்கிப் போனதாலேயே சந்தோஷமாய் இருக்கும் காட்சிகளில் கூட சோகம் இழையோடிக் கொண்டிருப்பதை உணரலாம். பேபி காஞ்சனா ஒரு ஆறுதல். அவள் நாட்டியத்தில் ரிலாக்ஸுக்காக அவர் மனம் லயித்ததோ இல்லையோ... நம் மனம் அவ்வளவு லயிக்காது. அடுத்து பொம்மனின் நிலை, கதி என்ன... என்ன முடிவெடுக்கப் போகிறான், என்ன செய்யப் போகிறான், அவ்வளவு பெரிய எதிர்முகாமை இவன் சமாளிக்க வேண்டுமே என்ற சிந்தனயோட்டமே நம்மில் ஓடிக்கொண்டிருக்கும். கதை தெரிந்திருந்தும் கூட பார்ப்பவர் மனம் பதைபதைப்பு அடைவதை மறுக்க முடியுமா? பொம்மன் சிறு சிறு சந்தோஷ விஷயங்களில் கவனத்தை திருப்ப முயற்சிக்கும் போதும் கூட அவனையும் மீறி அவன் சிந்தனை, அவன் மனம் எதிர்கால போராட்டங்களை அசை போட்டபடியே இருக்கும் என்பது புரிந்தவர்களுக்கு புரியும் அல்லவா! பார்க்கும் பார்வையாளனுக்கே பதைபதைப்பு, நீங்கள் சொன்ன stress உண்டாகும் போது பாதிக்கப்பட்டவனின் மன அழுத்தம் எப்படி இருக்கும்? அதை விடுங்கள். பாதிக்கப்பட்டவனின் மன அழுத்தத்தை நமக்காக வடித்துக் காட்டுபவரின் மன அழுத்தம் அதைவிட அதிகமாகவே இருந்திருக்கிறது என்பதுதான் எல்லாவற்றையும்விட ஹைலைட். உதாரணம் ரத்த வாந்திகள்.
அதைத்தான் சொல்கிறேன்.
மெய்யான வீரனின் மன அழுத்தத்தை பொ(மெ)ய்யாக வடித்து, அதில் மெய்யான வெற்றி கண்ட நடிக வேந்தனல்லவோ நம் நடிகர் திலகம்.
Gopal.s
10th June 2013, 02:09 PM
வாசு சார்,
அணு அணுவாக ஒவ்வொன்றையும் விரித்து என் உழைப்பை கௌரவ படுத்தியுள்ளீர்கள்.இரவு நேர பணியின் இடையில் நீங்கள் இதை செய்தது Hats Off .
ராகவேந்தர் சார்,
நீங்கள் ஆரம்பம் முதலே பத்தி பத்தியாக ஆராய்வது அனைவரையும் திரும்பவும் கவனத்தோடு படிக்க தூண்டும்.நன்றி.
Gopal.s
11th June 2013, 03:45 PM
இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-39
வீரபாண்டிய கட்டபொம்மனில் என்னை மிக மிக கவர்ந்தது அவர் வீரத்தை மட்டுமே காட்டாமல் எதிரி தன்னை மீறியவன் என்றுணர்ந்து விவேகம் காட்டுவார். மானத்தை துறக்காமல் சமாதான வாசல்களை திறந்தே வைப்பார். ஜாக்சன் துரை தன்னை அவமதித்து அலைக்கழித்த போதும் ,பொங்கி வரும் கோபம் அடக்கி முடிந்த அளவு பொறுமை காப்பார் .நட்பு நாடி வந்ததை குறிப்பார். பிறகு தானாபதி பிள்ளை தப்பி வந்து இன்னொரு சமாதான முயற்சி குறித்து பேச,பொங்கியெழும் ஆலோசனை குழுவை அணைத்து பேசி, சமாதானத்தை யோசிப்பதில் தவறில்லை என்று மெல்லிய தொனியில் வலிக்காமல் சொல்லுவார். தானாபதி பிள்ளை நெற்களஞ்சியத்தை கொள்ளையிட்டு பாண்டி தேவரையும் கொலை செய்து விட்டது சமாதான கதவுகளை நிரந்தரமாக மூடி விட்டதறிந்து கொதிப்பார். பிறகு வேறு வழியின்றி வருவது வரட்டும் என்று தன் மந்திரியை காத்து ,போருக்கு மனதளவில் தயாராவார். இதில் அவர் மேலுக்கு இலகுவாக இருப்பதாய் வரும் சில காட்சிகளில் கூட சிங்கார கண்ணே, மனைவி, வெள்ளையத்தேவன் கல்யாணம்,குழந்தையுடன் பேசுவது எல்லா சந்தர்ப்பங்களிலும் ,ஒரு கவலை கலந்த சிந்தனை ரேகை (stress )அவர் முக குறிப்பில் தோன்றிய படியே இருக்கும்.போருக்கு தயாராகும் காட்சியில் கூட ஒரு வீரனாக தயாரானால் கூட எதிரி தன்னை மீறிய சக்தி படைத்தவன் , வாய்ப்பு குறைவுதான் என்ற அவநம்பிக்கை கலப்பு நன்றாக அவர் குறிப்பில் தொனிக்கும்.
மிக சிறந்த காட்சிகள் எல்லோருக்கும் நன்கு தெரிந்த ஜாக்சன் சந்திப்பு, தானாபதி பிள்ளை தவறிழைக்கும் காட்சி,பிடி படும் காட்சி,இறுதி பானர்மென் விசாரணை தூக்கு காட்சி ஆகியவை .
ஜாக்சன் பேட்டிக்கு உள்ளே வரும் போதே எச்சரிக்கையுடன் அக்கம் பக்கம் பார்த்து நுழைவது, நாற்காலி இல்லாததால் சுற்று முற்றும் பார்த்து பேட்டியில்லை, அவமதிப்பே என்றுணர்ந்தாலும், நாற்காலி பறிப்பதுடன் தன் தாழா நிலையை குறிப்புணர்த்தி , பிறகு சற்றே ஆசுவாசம் கொள்வார் ,கை கால்களில் படபடப்பு கோபம் தெரிய ,சிறிதே தணிவார் .ஆனால் பேச்சு குற்றம் சாட்டும் தொனியில் ஆரம்பிக்க பொறுமை மீறி ,படபடப்புடன் எதிர்ப்பை அதிக படுத்தி கொண்டே போவார்.
என்னுடைய ஆதர்ஷ காட்சி ,தானாபதி பிள்ளை நெல்லை கொள்ளையிட்டதால் ,அவரை ஒப்படைக்க சொல்லி தூதன் ஓலையுடன் வரும் காட்சி. முகபாவம்,உடல் மொழி, அசைவுகள்,வசன முறை எல்லாவற்றிலும் உச்சம் தொடும் அதிசய காட்சி.குற்றச்சாட்டின் வலிமை அறிந்து ,அதன் தன்மையை மந்திரி உணர்கிறாரா என்று ஆழம் பார்ப்பதும், தன் பதவிக்குரிய விவேகமில்லாமல் பேசும் மந்திரியின் பேச்சினால் நிலை குலைந்து, தன் சுற்றி இருப்பவரிடம் தான்தான் அரசன் என்று குறிக்கும் ஒரு அர்த்த புஷ்டியான ஒரு எச்சரிக்கை குறிப்பை காட்டி ,மந்திரியிடம் நீறு பூத்த நெருப்பாக வஞ்ச புகழ்ச்சியில் ஆரம்பித்து ,படி படியாய் நிலைமையின் தீவிரத்தை குற்றச்சாட்டை உணர்த்தும் பாங்கு இந்த காட்சியை உயரத்தில் வைக்கும்.பிறகு குழுவின் நலன் கருதி மந்திரியை காத்து விட்டாலும் வருவதை தடுக்க இயலாது என்ற விரக்தி கலந்த இயலாமையுடன் தூதரின் மேல் தேவை இல்லாமல் பாய்வார்.
தன்னை பிடிக்க ஆள் அனுப்பிய புது கோட்டை மன்னருக்கு இவர் சொல்லும் ராஜாதி ராஜ கட்டியம் ஒவ்வொரு செருப்படி போல தொனிக்கும். தன்னை காண விரும்பவில்லை என்றதும் கேலி,ஏமாற்றம் கலந்த எள்ளலுடன் சொல்லும் வாழ்க ,தூக்கு தண்டனைக்கு ஈடானது.
கடைசி காட்சி "Back to the wall resolution " என்ற catharsis ,venting out anger ரக காட்சி.இதிலே நான் கண்ட சக்தி எந்த படத்திலும் ,எந்த நடிகனிடமும் கண்டதில்லை. இழக்க ஒன்றுமில்லை என்ற நிலையில் , நிலையற்ற அந்நியனிடம் பணிந்த தன் சகாக்களிடம் ஈனமாக வெடிக்கும் கோபம் ,அந்நியனிடம் மூர்க்கம் கலந்த வன்மையான இயலாமை கலந்த வருவது வரட்டும் என்ற கோபம் என்று இவர் வெடிக்கும் காட்சி ஒரு dynamite நம் நாற்காலிக்கு கீழேயே வெடித்த உணர்வில் நாம் பிரமையுடன் வெளியேறுவோம்.
இனி வரும் பாகத்தில் அவருடைய பலதரப்பட்ட larger than life பாத்திரங்களை கோடி காட்டி செல்வோம்.
----To be continued.
vasudevan31355
11th June 2013, 09:20 PM
தன் பதவிக்குரிய விவேகமில்லாமல் பேசும் மந்திரியின் பேச்சினால் நிலை குலைந்து, தன் சுற்றி இருப்பவரிடம் தான்தான் அரசன் என்று குறிக்கும் ஒரு அர்த்த புஷ்டியான ஒரு எச்சரிக்கை குறிப்பை காட்டி ,
அரசாணை பிறப்பித்துதான் தானாதிபதிப் பிள்ளை அப்படி செய்திருப்பார் என்ற நம்பிக்கை பொய்த்து விட்ட அதே வேளையில் தன்னிச்சையாக மந்திரி தானே குண்டர்களுடன் நெல் கிடங்கை கொள்ளையடிக்கச் சென்றதாக தன்னிடமே சொன்னவுடன் நான் ஒரு அரசன் இங்கிருக்கிறேன்.... நீ உன் இஷ்டத்திற்கு ஆட்டம் போட்டிருக்கிறாய்...... பாருய்யா... என்ற அர்த்தபுஷ்டியுடன் மந்திரியைப் பார்க்காமல் அல்லது பார்க்கப் பிடிக்காமல் பக்கத்தில் நிற்கும் ஜெமினியையும், பின்னால் நிற்கும் கருணாநிதியையும் ஒரு வினாடி நேர பார்வை பார்ப்பார் பாருங்கள்! எங்கேதான் கற்றாரோ இவ்வளவு வித்தைகளையும்.
IliFiSRurdy
12th June 2013, 08:17 PM
இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-39
----To be continued.
ஏதேது!!
VPKB top 10 இல் வராது என்று சொன்னவருக்கே அதன் பெருமையை விளக்க பத்து பாகங்கள் தேவைபடுகின்றனவே!!
ஸ்ரீராமனின் அழகை கம்பர் வருணிக்கும் கம்ப இராமாயண பாடலான,
தோள்கண்டார் தோளே கண்டார்
தொடுகழல் கமலம் அன்ன
தாள்கண்டார் தாளே கண்டார்
தடக்கை கண்டாரும் அஃதே
வாள்கொண்ட கண்ணார் யாரே
வடிவினை முடியக் கண்டார்
ஊழ்கொண்ட சமயத்து அன்னான்
உருவுகண் டாரை ஒத்தார்.
ஞாபகத்திற்கு வருகிறது..இவர்களை வர்ணிக்க ஆரம்பித்தால் முடிவேது!
Gopal ji YOU ROCK!!
RAGHAVENDRA
12th June 2013, 11:11 PM
“OUR AIM IS TO CREATE THE LIFE OF A HUMAN SPIRIT AND THEN TO EXPRESS IT IN A BEAUTIFUL ARTISTIC FORM”
– Stanislavski
reproduced from: http://spiritualpsychologyofacting.com/?page_id=2
"நமது குறிக்கோள் மனித உணர்வுகளுக்கும் மன ஓட்டத்திற்கும் உயிரூட்டுவதும், அதனை அழகான கலை நயத்தோடு வெளிப்படுத்துவதும்..-ஸ்தானிஸ்லாவ்ஸ்கி " -
இதனை Spiritual Psychology of Acting எனக் குறிப்பிடுகிறார்கள். இந்த உணர்வு ரீதியான உளவியலின் அடிப்படையில் ஒரு நடிகன் வெளிப்படுத்தும் காட்சிக்கு மிகச் சரியான உதாரணம் ஆண்டவன் கட்டளை திரைப்படத்தில் இடம் பெற்ற மன உளைச்சல் காட்சி. இதில் சாதாரணமாக நடிகர்கள் இலக்கணப் படி நடித்தார்களென்றால், அதில் Spiritual Psychology of Acting மட்டுமே வெளிப்படும்.
உலகத்தின் ஒப்புயர்வற்ற நடிகர் திலகம், இந்த Spiritual Psychology of Acting பற்றி எங்கு படித்திருப்பார். ஆனால் அவர் இதனை எவ்வாறு கையாண்டிருக்கிறார். இந்தக் காட்சியில் அவருடைய focus ... mental turmoil and dilemma between spirituality and worldly life. எனவே இந்தக் காட்சியில் அவர் இந்த Spiritual Psychology of Acting முறையை பயன் படுத்தி, Spiritual Psychology by Acting என்ற நிலையில் வெளிப் படுத்தி நம்மை அந்த மன உளைச்சலில் involve ஆக்குகிறார். இதன் விளைவாக நாமும் அவர் இந்த நிலையை எடுக்க மாட்டாரா, அந்த நிலையை எடுக்க மாட்டாரா என ஆவலுடன் காத்திருப்போம். இந்தக் காட்சியைப் பற்றி இன்னும் ஆழமாக விவரிக்க வேண்டும். எந்த அளவிற்கு இதனைப் பற்றி என்னால் எடுத்துச் சொல்ல முடியும் எனத் தெரியவில்லை. முடிந்த வரை முயன்றிருக்கிறேன். கோபால் சார் தம்முடைய கருத்தைப் பதியும் போது இக்காட்சியின் வேறு பரிணாமங்கள் நமக்கு தெரிய வரும். அதன் பின்னர் மீண்டும் இக்காட்சியைப் பற்றித் தொடரலாம் என உள்ளேன்.
Gopal.s
13th June 2013, 06:38 AM
ராகவேந்திரா சார்,
மனப்போராட்ட காட்சிகளில் வசனமில்லாத ஆண்டவன் கட்டளை, வசனத்தோடு சாந்தி இரண்டும் விரித்து வரைய எனக்கும் ஆசை. நீங்கள் எடுத்து செய்தால் இன்னும் ரசிப்பேன்
Gopal.s
14th June 2013, 05:33 PM
கணேஷ் சார்,
உங்கள் தோள் கண்டார் , ஒரு சரியான உதாரணம் நடிகர்திலகம் திறமைக்கு.
Gopal.s
16th June 2013, 07:49 PM
நண்பர்களே,
இந்த வார இறுதி ஓய்வு நாட்கள் சுறு சுறுப்பாய் நண்பர்களுடன் கழிந்ததால் அதிசயத்தை வரும் புதனுக்கு ஒத்தி வைக்கிறேன்.
RAGHAVENDRA
19th June 2013, 08:38 AM
உலக நடிகர்கள் ... ஓர் அறிமுகம்...
நடிகர் திலகத்தின் நடிப்புப் பள்ளியைப் பற்றி எழுதும் போது அவருடைய முற்கால, சம கால நடிகர்களைப் பற்றி நாம் அறிந்து கொள்வது அவசியம். கோபால் சார் விரிவாக நடிப்பைப் பற்றி எழுதும் போது இவர்களைப் பற்றியெல்லாம் குறிப்பு வரக் கூடும். அதற்கு இந்த அறிமுகம் உதவியாய் இருக்கும் என்கிற எண்ணத்தின் அடிப்படையிலேயே இந்த தொடர். அவ்வப்போது உலகின் பல்வேறு நாடுகளில் சிறந்த நடிகர்களாய் போற்றப் படுபவர்களைப் பற்றிய அறிமுகமாய் இது இருக்கும். I am sure this will serve as a supplement to Gopal's series.
தொடக்கமாக எனக்கு மிகவும் பிடித்த நடிகரைப் பற்றி எழுத ஆசைப் படுகிறேன்.
Yves Montand
இவரைப் பற்றிய விக்கிபீடியா பக்கத்திற்குச் செல்ல (http://en.wikipedia.org/wiki/Yves_Montand)
http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/8/8c/Yves_Montand_Cannes.jpg/220px-Yves_Montand_Cannes.jpg
பிறப்பு - 13.10.1921
மறைவு - 09.11.1991
1946ல் Les portes de la nuit படத்தில் நடிக்கத் தொடங்கினார். இவர் மறைந்த பிறகு 1992ல் IP5: L'île aux pachydermes என்ற படம் வெளிவந்தது.
இவருடைய மனைவியும் ஒரு நடிகையே. சைமன் சைனோரே ... உச்சரிப்பினை சரிபார்க்க வேண்டும்
http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcTO5AXzOBbR3Kx9-u_aU-EgcDyZIAtRFM5KkmsrX85BKnByevtG
யீவ்ஸ் மான்டண்ட் அவர்களின் புகழ் பெற்ற படங்களில் ஒன்று Z. மறக்க முடியாத படம். இப் படத்தில் இவருடைய நடையைப் பார்த்தீர்களானால் நம் கண்முன்னே நடிகர் திலகம் தான் தெரிவார். நடிப்பில் கஞ்சத் தனமே இருக்காது. உணர்ச்சி வசப் பட வேண்டிய காட்சிகளில் உணர்ச்சி கொப்பளிக்க நடிப்பார். அமைதியாக நடிக்க வேண்டிய காட்சிகளில் அமைதியாக நடிப்பார். இவரைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம்.
ஒரு அறிமுகத்திற்கு அவருடைய Z படத்திலிருந்து ஒரு காட்சி
http://youtu.be/0sYgmmYdozQ
Gopal.s
19th June 2013, 08:48 AM
Z என்னுடைய favourite படங்களில் ஒன்று. அரசியல் சம்பத்த பட்ட investigative thriller படங்களுக்கு முன்னோடி. ஒரு classy Film . ராகவேந்தர் சார் சொன்ன படி சில காட்சிகளில் நடிகர்திலகத்தின் நிழலை உணர முடியும். இடதுசாரி அரசியலை முன்னிறுத்திய இப்படம் 1969 இல் வந்ததாய் ஞாபகம்.
Gopal.s
19th June 2013, 01:48 PM
இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-40
வீரபாண்டிய கட்டபொம்மனை அலசியாயிற்று. ஏற்கெனெவே நான் பார்த்த படி larger than life பாத்திரங்களில் நடிக்க விசேஷ பயிற்சி, தேவையான உருவம், குரல், நடை பாவனை,உடைகள் பொருந்தும் உருவ அமைப்பு, கற்பனை , அதீத சக்தி இவையெல்லாம் தேவை என்றும் ,சராசரிகளால் அவை கனவு கூட காண முடியாத விஷயம் என்றும் பார்த்தோம்.
ஆனால் நான் அதிசயிக்கும் அம்சம் ,இந்த கஷ்டமான territory யில் அவர் அதிக எண்ணிக்கையில் நடித்த வித விதமான பாத்திரங்கள் , உலக அளவில் சாதனையாகவே கருத பட வேண்டும். Stella Adler ,Oscar wild ,Shakspere School இது தவிர நம் கூத்து-நாடக கலை மரபு, மற்ற மாநில வீரர்கள் என்று 20 இலிருந்து 80 வயது வரை கி.மு வில் socretes ,அலெக்சாண்டர்,ஜூலியஸ் சீசர் தொடங்கி கி.பி முதல் நூற்றாண்டிலிருந்து கி.பி பத்தொன்பதாம் நூற்றாண்டு சரித்திர நாயகர்கள், வீரர்கள்,புலவர்கள் அடியார்கள்,கற்பனை வீர பாத்திரங்கள் என்று வேறுபட்ட பாத்திரங்கள், கால அளவுக்கு அப்பாற்பட்ட கடவுள் பாத்திரங்கள், கர்ணன்,பரதன் போன்ற புராண பாத்திரங்கள் என அத்தனையிலும் நடிப்பில் காட்டிய மிக துல்லிய வேறுபாடு ராமனந்த் சாகர் போன்றவர்களை இவர் வீட்டு வாசலுக்கு அழைத்து வந்ததில் வியப்பென்ன?
உள்ளே போகு முன் பட்டியலிட்டால் இது மிக தெளிவாகும்.
மனோகரா, தூக்கு தூக்கி,காவேரி, தெனாலி ராமன் ,நானே ராஜா,வணங்காமுடி,தங்கமலை ரகசியம்,ராணி லலிதாங்கி ,அம்பிகாபதி,சம்பூர்ண ராமாயணம்,உத்தம புத்திரன்,சாரங்க தாரா,காத்தவராயன்,தங்க பதுமை,ராஜ பக்தி,மருத நாட்டு வீரன்,ஸ்ரீவள்ளி,சித்தூர் ராணி பத்மினி,கர்ணன்,மகாகவி காளிதாஸ்,கந்தன் கருணை ஹரிச்சந்திரா,ராஜ ராஜ சோழன்,தச்சோளி அம்பு,சந்திர குப்தா சாணக்யா, பக்த துக்காராம்,எமனுக்கு எமன்,ராஜரிஷி போன்ற முழு படங்களும் தோன்றும் பாத்திரங்களுடன் ஒரே படத்தில் பல்வேறு பாத்திரங்கள் திருவிளையாடல் (சிவன், புலவர், மீனவன், விறகு வெட்டி),சரஸ்வதி சபதம்(நாரதர்,புலவர்),திருவருட்செல்வர்(அரசன், சேக்கிழார்,சலவை தொழிலாளி,சுந்தரர்,அப்பர் ),திருமால் பெருமை (பெரியாழ்வார்,விஷ்ணு சித்தர்,தொண்டரடி பொடியாழ்வார், திருமங்கை ஆழ்வார்,விபர நாராயணர்) என்றும் ,பல படங்களில் இடை செருகலான நாடக காட்சிகளிலும் தோன்றியுள்ளார். இல்லற ஜோதி (சலீம்),நான் பெற்ற செல்வம்(சிவன்,நக்கீரன்),ராஜா ராணி(சேரன் செங்குட்டுவன்,சாக்ரடிஸ் ),அன்னையின் ஆணை(சாம்ராட் அசோகன்)ரத்த திலகம் (ஒதெல்லோ ),ராமன் எத்தனை ராமனடி(வீர சிவாஜி),எங்கிருந்தோ வந்தாள் (துஷ்யந்த்),சொர்க்கம்(ஜூலியஸ் சீசர் )ராஜபார்ட் ரங்கதுரை (ஹாம்லெட்),அன்பை தேடி (புத்தர்),ரோஜாவின் ராஜா(சாம்ராட் அசோகன்) என்று விரியும்.
நாம் இதில் சிலவற்றை எடுத்து சுருக்கமாக ஆய்ந்து விட்டு வேறு பாட்டை நிறுவி ,அடுத்த பள்ளிக்கு தாவுவோம்.
----To be continued.
RAGHAVENDRA
19th June 2013, 03:10 PM
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/Ramkumar1.jpg
Dear friends,
I am happy to share with you all, the appreciation by our beloved brother Shri Ramkumar Ganesan, who is a visitor of our hub. I brought to his information our new thread Sivaji Ganesan School of Acting and he has expressed his happiness of the same. I am giving below the text of his message to me:
I am very happy and proud about what you'll are doing.
Prof.Narayanaswamy and Ka.Bharat can be included/interviewed.
They remember many scenes.Also Mr.Nandakumar.{NTFan and TV actor}
Mr.Marudhumohan is doing a thesis on Shri.Sivaji at the Madras University.
Regards and Best of luck,
ramkumar
Thank you Sir, your words of appreciation will be a boost to us and I am happy the hard work of Gopal has reached the Annai Illam, the divine and sacred place for us.
Gopal.s
20th June 2013, 10:23 AM
இந்த தொடர் இன்னும் ஒன்றிரண்டு உதாரணங்களுடன் முதல் பகுதியை நிறைவு செய்யும்.
இந்த தொடரின் முக்கிய நோக்கம் பல்வேறு பட்ட நடிப்பு பள்ளிகளை (உலக) அவர் தொட்டு காட்டிய விந்தை உலகத்தின் எந்த நடிகனும் சாதிக்காதது என்று நிலைநிறுத்தவே.
அடுத்து பல்வேறு நடிகர்களில் நாம் பார்த்த நடிகர்திலகத்தின் நடிப்பின் சாயலை தனியாக ஆராய்வோம். அடுத்து தமிழ் இலக்கியங்களின் நடிப்பு குறிப்புகள்,கோட்பாடுகள் ,நாட்டிய சாத்திர விளக்கங்கள் அவை சார்ந்த நடிகர்திலகத்தின் நடிப்பு சாதனைகள். அதையும் அடுத்து
நமது கலை மரபும் அது சார்ந்த தொடர்ச்சியாக நடிகர்திலகத்தின் சாதனைகளும் என்று உதாரணங்களுடன் வெவ்வேறு தொடர்கள் பண்ணும் உத்தேசம் உண்டு.
Gopal.s
20th June 2013, 11:39 AM
எங்களுக்கு இவ்வளவு மதிப்பளித்த அன்னை இல்லத்துக்கும், திரு ராம்குமார் அவர்களுக்கும் மிக மிக நன்றி.
எல்லா புகழும் எங்கள் ராகவேந்தர் சாருக்கே
RAGHAVENDRA
20th June 2013, 04:17 PM
உலக நடிகர்கள் ஓர் அறிமுகம்
Sidney Poitier
http://www.theurbanemix.com/wp-content/uploads/2013/02/sp_Academy-award.jpg
சிட்னி பாய்டியர் ... உலகின் தலைசிறந்த நடிகர்களில் ஒருவராகக் கருதப் படும் இவர் நடிகர் திலகத்தின் உள்ளம் கவர்ந்த நடிகராவார். இவருடைய நடிப்பில் நாம் நம்மை மறந்து நெஞ்சு நெகிழும் வகையில் ஒன்றி விடுவோம். பிப்ரவரி 20, 1927ல் பிறந்தவர். இவரும் நடிகர் திலகத்தின் சமகாலத்தவர். இவருடைய To Sir With Love திரைப்படம் உலக திரைப்படங்களின் பாப்புலாரிட்டியில் முதல் 100 படங்களில் இடம் பிடித்து விடும். காரணம் இவருடைய நடிப்பு. நடிப்பில் போலித்தனமற்ற, உணர்வு பூர்வமான நடிப்பினை அளித்திருப்பார். அதுவும் கீழே தரப்படும் A Little Remembrance பாடலும் அதனைத் தொடர்ந்து வரும் காட்சியும் மொழி தெரியாதவர்களையும் உணர்ச்சி வசப் பட வைத்து விடும். இவரைப் பற்றி ஏற்கெனவே நம்முடைய திரியில் முந்தைய ஒரு பாகத்தில் நான் குறிப்பிட்டுள்ளேன். என்றாலும் இங்கே மீண்டும் இடம் பெறுகிறார். இவருடைய நடிப்பிலும் சில நடிப்புப் பள்ளிகளின் தாக்கம் தென்படும். பாத்திரத்தோடு ஒன்றி நடிக்கும் பாணியினை இப்படம் முழுவதுமே இவர் அளித்திருப்பார். அதற்குள்ளேயே தன்னை நுழைத்துக் கொண்டிருப்பார். இவருடைய நடிப்பிற்கு எண்ணற்ற படங்களை உதாரணமாகக் காட்டலாம். என்றாலும் ஓர் அறிமுகத்திற்காக இங்கே ஒரு காட்சி இடம் பெறுகிறது.
http://www.youtube.com/watch?v=ukONzCkxLkk&feature=share&list=PLC8863656BBD9B021
ஏராளமான விருதுகளை அள்ளிக் குவித்திருக்கும் சிட்னி பாய்டியரின் விருதுப் பட்டியலில் குறிப்பிடத் தக்கது கௌரவ ஆஸ்கர் விருது.
இவருடைய நடிப்பில் பல படங்களில் நாம் நடிகர் திலகத்தின் சாயலைக் காணலாம்.
Gopal.s
20th June 2013, 04:31 PM
He has directed few Films also(Fast Forward). A capable Actor.Our Ilaya Thalaimurai was inspired from the movie "To Sir With Love"
Marionapk
20th June 2013, 08:43 PM
Respected gopal sir, you are very great .On seeing your presentation on acting god greatness and achievement through your meaningful examples it is very much appreciable.Keepit up.
Gopal.s
21st June 2013, 06:38 AM
Dear Mr.Ramesh,
You are most welcome and Thanks for your whole hearted appreciation. Our Nadigarthilagam needs better accolades than what he received and this is possible only if we can expand our vision. This is the whole purpose of my exercise.
Gopal.s
21st June 2013, 05:01 PM
இந்த தொடர் இன்னும் ஒன்றிரண்டு உதாரணங்களுடன் முதல் பகுதியை நிறைவு செய்யும்.
இந்த தொடரின் முக்கிய நோக்கம் பல்வேறு பட்ட நடிப்பு பள்ளிகளை (உலக) அவர் தொட்டு காட்டிய விந்தை உலகத்தின் எந்த நடிகனும் சாதிக்காதது என்று நிலைநிறுத்தவே.
அடுத்து பல்வேறு நடிகர்களில் நாம் பார்த்த நடிகர்திலகத்தின் நடிப்பின் சாயலை தனியாக ஆராய்வோம். அடுத்து தமிழ் இலக்கியங்களின் நடிப்பு குறிப்புகள்,கோட்பாடுகள் ,நாட்டிய சாத்திர விளக்கங்கள் அவை சார்ந்த நடிகர்திலகத்தின் நடிப்பு சாதனைகள். அதையும் அடுத்து
நமது கலை மரபும் அது சார்ந்த தொடர்ச்சியாக நடிகர்திலகத்தின் சாதனைகளும் என்று உதாரணங்களுடன் வெவ்வேறு தொடர்கள் பண்ணும் உத்தேசம் உண்டு.
நான் சொன்ன topics உங்களை impress செய்கிறதா? வேறு ஏதேனும் ஆலோசனை உண்டா?
vasudevan31355
21st June 2013, 05:59 PM
நான் சொன்ன topics உங்களை impress செய்கிறதா? வேறு ஏதேனும் ஆலோசனை உண்டா?
நிச்சயமாக. ஆவலுடன் அடுத்த தொடருக்கு waiting.
RAGHAVENDRA
21st June 2013, 06:05 PM
அடுத்து பல்வேறு நடிகர்களில் நாம் பார்த்த நடிகர்திலகத்தின் நடிப்பின் சாயலை தனியாக ஆராய்வோம். அடுத்து தமிழ் இலக்கியங்களின் நடிப்பு குறிப்புகள்,கோட்பாடுகள் ,நாட்டிய சாத்திர விளக்கங்கள் அவை சார்ந்த நடிகர்திலகத்தின் நடிப்பு சாதனைகள். அதையும் அடுத்து
நமது கலை மரபும் அது சார்ந்த தொடர்ச்சியாக நடிகர்திலகத்தின் சாதனைகளும் என்று உதாரணங்களுடன் வெவ்வேறு தொடர்கள் பண்ணும் உத்தேசம் உண்டு.
My priority on the above topics will be:
1. நமது கலை மரபும் அது சார்ந்த தொடர்ச்சியாக நடிகர் திலகத்தின் சாதனைகளும் ... இதுவே முதலிடம் பெற வேண்டும். இதுவே நமது நடிகர் திலகத்தின் நடிப்பை சரியாக புரிந்து கொள்ள உதவும்.
2. பல்வேறு இலக்கியங்களில் நடிப்பு கோட்பாடுகள் ... இது எப்படி அறியப் படும் என்பதற்கான முன்னுரை தேவை.
3. பல்வேறு நடிகர்களில் நாம் பார்த்த நடிகர் திலகத்தின் சாயல்.
4. நாட்டிய சாத்திர விளக்கங்கள்... இதனைக் கடைசியில் வைத்துக் கொள்வோம்.. இது மிக மிக விரிவாக ஆராயப் பட வேண்டியது. பரதமுனியின் நாட்டிய சாஸ்திரம் மட்டுமல்லாது கதக், கதகளி, ஒடிஸி, குச்சிப்புடி என பல்வேறு இந்திய நடனங்களும் பாலே போன்ற தொன்மையான உலக நாட்டிய வகைகளும் என அனைத்தையுமே அவர் தன் முக பாவங்களிலும் உடல் மொழிகளிலும் நடிப்பிலும் காட்டியுள்ளார்.
Gopal.s
21st June 2013, 07:18 PM
My priority on the above topics will be:
1. நமது கலை மரபும் அது சார்ந்த தொடர்ச்சியாக நடிகர் திலகத்தின் சாதனைகளும் ... இதுவே முதலிடம் பெற வேண்டும். இதுவே நமது நடிகர் திலகத்தின் நடிப்பை சரியாக புரிந்து கொள்ள உதவும்.
2. பல்வேறு இலக்கியங்களில் நடிப்பு கோட்பாடுகள் ... இது எப்படி அறியப் படும் என்பதற்கான முன்னுரை தேவை.
3. பல்வேறு நடிகர்களில் நாம் பார்த்த நடிகர் திலகத்தின் சாயல்.
4. நாட்டிய சாத்திர விளக்கங்கள்... இதனைக் கடைசியில் வைத்துக் கொள்வோம்.. இது மிக மிக விரிவாக ஆராயப் பட வேண்டியது. பரதமுனியின் நாட்டிய சாஸ்திரம் மட்டுமல்லாது கதக், கதகளி, ஒடிஸி, குச்சிப்புடி என பல்வேறு இந்திய நடனங்களும் பாலே போன்ற தொன்மையான உலக நாட்டிய வகைகளும் என அனைத்தையுமே அவர் தன் முக பாவங்களிலும் உடல் மொழிகளிலும் நடிப்பிலும் காட்டியுள்ளார்.
ஐம்பதோடு இப்போதைய ஆய்வு கட்டுரையை முடித்து ராகவேந்தர் சார் ஆலோசனை படி நம் கலை மரபுக்கே முதலிடம்.
Gopal.s
24th June 2013, 08:51 AM
இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-41
larger than life நடிப்பு முறைகளில் அடுத்ததாக நான் எடுக்க விரும்புவது அவருடைய shakespere நாடக பாணி காட்சிகள். பொதுவாக அக்காலத்தையும் ,இக்காலத்தையும் இணைக்கும் கண்ணி என்பது ceremonial military parade ,marches ,drilling . எக்காலத்திலும் மாற்ற முடியாத நிலைத்தன்மை கொண்டதால் ,shakespere நாடக நடிகர்கள் பின்பற்றும் முறை பெரும்பாலும் இதனை சார்ந்ததே.period படங்கள் சார்ந்த larger than life பாத்திரங்களுக்கு ஏற்ற முறை. கண் முன் பார்த்து பின் பற்ற கூடிய பாரம்பரிய தொடர்ச்சி முறை.
shakespere நடிகர்களை நான் லண்டன், நியூயார்க் நகரங்களில் நாடகங்கள் பார்க்கும் வழக்கமுடையவன் என்பதால் கூர்ந்து கவனித்துள்ளேன்.
அவர்கள் நடிக்கும் முறை கீழ்கண்டவாறே அமையும். முறையான பயிற்சியால் ஒவ்வொரு நடிகரிடமும் முறைகள் பெரிதாக மாறாது. ஆனால் உருவ அமைப்பு, குரல், மற்றும் இயற்கை திறமையில் சிறிதே வேறுபாடு தெரியும்.
உடல் மொழி, கால், கைகள் இயங்கு முறை geometric symmetry கொண்ட change in pace &abruptness in transition என்ற முறையில் அமையும்.Traditional ceremonial military parade /drill /marching முறை சார்ந்தே வகுக்க பட்டிருக்கும்.
நடைகளின் முறை பெரும்பாலும் quick march ,slow march ,cut the pace ,double march easy march ,mark time ,step forward முறையில் அமையும். ஆனால் command synchrony இல்லாமல் randomness கொண்டு கலையாக்க பட்டிருக்கும்.
உடலியங்கு முறை attention ,parade rest ,stand at ease என்று நான்கின் பாற்பட்டு advance ,retire ,left ,right ,retreat முறையில் saluting ,turning motions கொஞ்சம் கப்பலின் இயங்கு முறை சார்ந்ததாக இருக்கும்.
முகபாவங்கள் மிக இறுக்கமான தன்மை கொண்டு சிறிதே இள க்கம், சிறிதே மிக இறுக்கம் என்ற மூன்று நிலைகளில் slow transition கொண்டதாய் register ஆகும்.
ஆனால் கண்கள் body motion follow thru மட்டும் இன்றி சிறிதே cautionary alertness கொண்ட inert emotionless vibrations கொண்டு உயிர்ப்புடன் இயங்கும்.
voice pitch ,tonal modulations என்று ஆராய்ந்தால் mid -flat pitch இல் reciting rhythmically என்ற பாணியில் identifier ,precautionary ,cautionary ,executive ,guided emotional overtone என்ற பெரும்பாலும் parade command முறைமை கொண்ட ஏற்ற இறக்கங்கள் கொண்டதே.
இதை வைத்து நம் நடிகர்திலகத்தின் ரத்தத்திலகம் பட ஒதெல்லோ, ராஜபார்ட் ரங்கதுரை பட ஹாம்லெட் இவற்றை ஆராய்வோம்.
----To be continued.
IliFiSRurdy
24th June 2013, 10:36 AM
இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-41
larger than life நடிப்பு முறைகளில் அடுத்ததாக நான் எடுக்க விரும்புவது அவருடைய shakespere நாடக பாணி காட்சிகள்.
இதை வைத்து நம் நடிகர்திலகத்தின் ரத்தத்திலகம் பட ஒதெல்லோ, ராஜபார்ட் ரங்கதுரை பட ஹாம்லெட் இவற்றை ஆராய்வோம்.
----To be continued.
Dear Gopal,
உங்கள் அளவு,நான் ஷேக்ஸ்பியர் (கால)நாடகங்களை பார்த்தவனில்லை.ஆனால் சிலவற்றை படித்தவன் எனும் முறையில் நான் அவரின் ரசிகன்.மேலும் "Shakespeare in Love" எனும் படம் என்னை மிகவும் ஆக்கிரமித்தது.அந்த அளவில் உங்களின் மேற்கண்ட விரிவுரை தேனாக இனிக்கிறது.முடிந்தவரை எளிமைப்படுத்தி ஷேக்ஸ்பியர் எனும் ஒரு மகா நாடக கலைஞனையும் அவர் காலத்திய பாணியையும் மிக அருமையாக அறிமுகப்படுத்தியுள்ளீர்கள்.நம் மகா கலைஞனோ ஒரு பிறவி மேதை.கருவிலே திருவுடையவன்.அன்னாரின் ஷேக்ஸ்பியர் தாக்கத்தை நீங்கள் விளக்கப்போகும் விதத்தை படித்து ரசிக்க நான் ஆவலுடன் காத்துள்ளேன்.
vasudevan31355
24th June 2013, 11:08 AM
இதை வைத்து நம் நடிகர்திலகத்தின் ரத்தத்திலகம் பட ஒதெல்லோ, ராஜபார்ட் ரங்கதுரை பட ஹாம்லெட் இவற்றை ஆராய்வோம்.
http://i1.ytimg.com/vi/lSAcVpljPE0/hqdefault.jpg
http://2.bp.blogspot.com/_qPk2Br_LLxU/TCAdecESo1I/AAAAAAAANa0/o5yRZSDrI8g/s1600/3.png
vasudevan31355
24th June 2013, 11:20 AM
Laurence Olivier, Maggie Smith,
(Othello 1965)
http://www.movie-roulette.com/photos_big/othello-1965-1-1.jpeg
மேலும் சில திரையுலக ஒதேல்லோக்கள்.
http://images.moviepostershop.com/othello-movie-poster-1955-1020353652.jpg
http://www.movieposter.com/posters/archive/main/61/MPW-30741
http://www.leninimports.com/welles_othello_french_dvd.jpg
http://3.bp.blogspot.com/_Ph0KlQU6eI8/TLB5Uq9W2KI/AAAAAAAAIWw/OAB6EGrvfeM/s1600/othello.jpg
vasudevan31355
25th June 2013, 12:55 PM
I am very happy and proud about what you'll are doing.
Prof.Narayanaswamy and Ka.Bharat can be included/interviewed.
They remember many scenes.Also Mr.Nandakumar.{NTFan and TV actor}
Mr.Marudhumohan is doing a thesis on Shri.Sivaji at the Madras University.
Regards and Best of luck,
ramkumar
நன்றி! நன்றி!
திரு.கோபால் அவர்களின் school of acting திரியை முழுவதுமாகப் படித்துப் பாராட்டி நமக்கு ஊக்கமும் ஆக்கமும் அளித்த திரு,ராம்குமார் அவர்களுக்கு நமது திரியின் சார்பாக என் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
Gopal.s
27th June 2013, 04:31 PM
கண்பட் சார்,
ரொம்ப நாள் கழிச்சு வந்த அருள் வாக்கு .நன்றி.
வாசு,
படங்களுக்கு நன்றி.
Gopal.s
28th June 2013, 10:04 AM
இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-42
அவர் shakespere நாடகம் (படத்துக்குள்ளே வரும் )நடித்த மூன்றுமே cult status கொண்ட காட்சிகள்.
ஒதெல்லோ என்ற ராணுவ தலைவன், வீரன் என்றாலும் ,தன் கோரமான உருவத்தில் தாழ்மையுணர்வு கொண்டதால் உணர்ச்சி வசப்படும் பொறாமை காரன். desdemona தகப்பன் விருப்பம் இல்லாமல் ,அவளை மணந்து இனிய அன்பான மண வாழ்வில் திளைத்தாலும், ஒரு சாதாரண கைக்குட்டையை வைத்து லகோ என்பவன் ,அவளையும் காசயோ என்பவனையும் வைத்து பின்னும் சதி வலையால் சந்தேக பேய் பிடித்தாட்ட ,மனமின்றி, தூங்கும் மனைவியை கொலை செய்ய வரும் காட்சி.(Othello Act 5 scene 2)
Julius ceaser நாடகத்தில் senetor சம்பந்த பட்ட கொலை காட்சி. சீசர் ,ரோமானிய சாம்ராஜ்யத்தின் சர்வாதிகாரியாகி ,அதுவரை குடியாட்சி என்ற பெயரில் நடந்த கோமாளிதனங்களுக்கு முடிவு கட்ட எண்ண , மார்கஸ் ,காசியஸ் சதிவலையில் வீழ்ந்து ப்ருட்டஸ் இணைந்து கொள்ள, மார்க் அண்டனி சதி செய்து ஒதுக்க பட , செனெட் அரங்கேற்றும் கொலைகாட்சி.(Act 3)
ஹாம்லெட் ,தன் தந்தையை கொன்று தாயை மணந்த சதிகாரன் சித்தப்பன் கிளாடியஸ் என்பவனை பழிதீர்க்க ,தந்தையின் ஆவியின் வற்புறுத்தலால் மன சாட்சியுடன் உரையாடும் (காதலி ஒபிலியாவிடம் காதலை முறி க்குமுன்பு), காட்சி. வாழ்வதா சாவதா என்ற மன சாட்சி போராட்டம் ,வாழ்வின் அவலங்கள்,சாவுக்கு பின் என்ன எனும் கேள்விகள் என்று மனதத்துவ சிக்கல்கள் நிறைந்த Nunnery Scene என்று connoiseurs குறிக்கும் Act 3 Scene 1.
மூன்றுமே சிக்கல் நிறைந்த அந்தந்த நாடகங்கள் சம்மந்த பட்ட Highlight காட்சிகள்.
இது தவிர அவர் நம் மன்னர்கள்,இதிகாச புராண நாயகர்கள் என்று நடித்த மூன்று பாத்திரங்களை சுருக்கமாய் எடுக்க போகிறேன் .
சத்ரபதி சிவாஜி மன்னன் (1627-1680) சரித்திரத்தில் வெற்றியின் குறியீடு, ஹிந்துத்துவத்தின் புனர்வாழ்வாக கருத படும் வீர மன்னன். உலக நடிகனுக்கு தனது பெயரை ஈந்தவன்.வெற்றிக்கு பிறகு முடிசூட்ட நாள் குறிக்க பட்டு (6 June 1674), பொறாமை கொண்டோர் பிறப்பின்(குலம்) பேரால் அதை தடுக்க முயல ,தான் அடைந்த வெற்றிகளை குறிப்பிட்டு (Phonda ,Purandhar ,Rajpuri ,Kalyan ) தன்னை விட தகுதி கொண்டவன் யார் என சிவாஜி ஆத்திரம்,ஆவேசம் கலந்து கொடுக்கும் பெருமித கொக்கரிப்பு சவால் காட்சி.
கர்ணன் படத்தில் இந்திரன் மாறுவேட விஜயம், கிருஷ்ணன் தூது, குந்தி தூது காட்சிகள் ,
அப்பர் சம்மந்த பட்ட மூன்று காட்சிகள்
இவற்றை வரும் பாகங்களில் சுருக்கமாக கவனிப்போம்.
----To be Continued.
IliFiSRurdy
1st July 2013, 01:33 PM
கண்பட் சார்,
ரொம்ப நாள் கழிச்சு வந்த அருள் வாக்கு .நன்றி.
வாசு,
படங்களுக்கு நன்றி.
என்ன செய்வது கோபால்? காலை எழுந்து குளித்து.பலகாரத்தை வயிறு புடைக்க தின்றுவிட்டு,ஆட்காட்டுவிரல் நுனியால் ஒரு பொட்டு வீபூதியை புருவங்களுக்கிடையே
இட்டுக்கொண்டு,"முருகா" என்று ஒரே முறை சொல்லி, நாமும் பக்தன் தான் என்ற நம்பிக்கையில் இங்கு கோவிலில் நுழைந்தால்,அடேஞ்ச்சாமி! இங்கு ஒரு பக்தர் குழு, நாள் முழுவதும் உபவாசமிருந்து,ஈர மஞ்சள் வேட்டி அணிந்து அங்கப்ரதட்சணம் செய்து கொண்டிருக்கிறது...
இதை பார்த்தே பயந்து இன்னொரு பக்கம் பார்த்தால் அங்கு இன்னொரு பக்தர் குழு, உடல் முழுக்க அலகு குத்திக்கொண்டு காவடி எடுத்து ஆடிக்கொண்டு வருகின்றது.
இந்த பக்தர்களுக்கு நடுவே நான் எந்த மூலை?
veg.பாணியில் சொல்வதென்றால்,"ஆசீர்வதிக்கப்பட்ட ஆண்கள் சங்கம்" என்ற குழாமில் "அங்கத்தினராக" சேர ஒருவர் bermuda அணிந்து பெருமையுடன் சென்றாராம்.
அந்த சங்கத்தின் வாயிலிலேயே அதன் காவலாளி நிறுத்தி விசாரிக்க,
இவரும் தன் நோக்கத்தை சொன்னார்.
"அங்கத்தினராகவா?அதற்கான தகுதி உங்களுக்குள்ளதா?" என அவன் வினவ,
இவரும் இறுமாப்புடன் தன் bermuda வை சிறிது உயர்த்திப் பிடிக்க,
சிரித்த அந்த காவலாளியோ,
"இதற்கு போய் அங்கத்தினர் பதவியா?"
என்று கூறி,தன் முழு கால்சராயை சிறிது உயர்த்தி விட்டு சொன்னானாம்,
"நான் இங்கு வெறும் காவலாளிதான்.!"
Gopal.s
6th July 2013, 08:41 PM
இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-43
ஒதெல்லோ பாத்திரத்தில் Paul Robeson நடிப்பும் (Stanislavsky கூட இந்த பாத்திரத்தை விரும்பி ஏற்பாராம்),ஹாம்லெட் பாத்திரத்தில் Laurence Olivier நடிப்பும்,சீசர் பாத்திரத்தில் Louis Calhern ,Rex Harrison நடிப்பும் விமரிசகர்கள் பார்வையில் மிக சிறந்ததாகும். ஆனால் நடிகர்திலகம் தனக்கு அந்நியமான இந்த மூன்று பாத்திரங்களையும் ஏற்று புரிதலுடன்,அந்தந்த பாணியில் தன் தனித்தன்மை விடாது நடித்த பாங்கு அலாதி. அவர் நடித்த காட்சிகள் அந்தந்த பாத்திரங்களுக்கு Highlight என்று சொல்ல தக்க உச்ச பட்ச சவால் கொண்ட காட்சிகள்.
முதல் வியப்பு உலகத்தின் அத்தனை விதமான பாத்திரங்களும் பொருந்தும் முக அமைப்பு.இரண்டாவது வியப்பு ஒதெல்லோ,ஹாம்லெட் பாத்திரங்களுக்கு மற்றவர் குரல் கொடுத்தாலும் அவர் உள்வாங்கி நடித்த சிறப்பு.
ஒதெல்லோ பாத்திரத்தில் மனமின்றி மனைவியை கொல்லும் நோக்கோடு தடுமாறி, அவள் அழகில் மயங்கி முத்தமிட்டு,தாழ்வு மனப்பான்மையும், பொறாமையும் மிக அவர் தன்னைத்தானே காதலும் இரக்க உணர்வும் தலை காட்டுவதை அடக்க முயலும் முக பாவங்களும் ,நடையிலேயே அத்தனை வசன சாரங்களை உள்வாங்கி புரியும் ஜாலங்களும் ,கைகளை தன் பாவத்தில் பங்கு கொள்ள இணங்க வைக்க முயல்வதும் , நான் ஏற்கெனெவே எழுதிய பின்னணியில் பொருத்தி பார்த்தால் புரியும்.Desdemona முழித்த பிறகு இறைஞ்சும் போது எங்கே இளகி மன்னித்து விடுவோமோ என்று அவர் காட்டும் கடுமை ,தடுமாற்றம் எல்லாமே அவரின் அபார பாத்திர உள்வாங்கலை காட்டும்.
சீசர் அரசவைக்குள் நுழையும் senate கூடத்தில் நுழையும் தன்னம்பிக்கை கலந்த கம்பீரம்,மற்றவர் உடல் மொழி ,நிற்கும் நிலை பார்த்து சந்தேகம் கொள்வதும், தம்பியை மன்னிக்க சொல்லி இறைஞ்சுவனிடம் காட்டும் நிர்த்தாட்சண்யம்,மற்றவர் அவனுக்கு சார்பாக பேசும் போது தன்னிலை பிறழா கண்டிப்பான உறுதி,கத்தியால் எதிர்பாராமல் குத்த படும் அதிர்ச்சி வியப்பு கலந்த தடுமாற்றம், brutus இருந்துமா இது நடந்தது என்ற வினாவுடன் வருபவரை Brutus குத்திய உடன் நீயுமா என்று சாயும் இறுதி முடிவு என்று அவருக்கு சீசர் பாத்திரம் பொருந்தும் அழகை பார்த்து ரசிக்கலாம்.சாகும் போது சீசர் வலிப்பு வியாதி உள்ளவன் என்பதை அழகாக கிரகித்து சீசரின் முடிவை காட்டுவார்.
ஹாம்லெட் பாத்திர காட்சி சிறிதே சிக்கலான monologue .(இதே மன போராட்ட காட்சி சாந்தி படத்தில் வேறு வடிவில்),வாழ்வதா சாவதா, சாவுக்கு பின் என்ன என்ற மன போராட்டம்.வாழ்க்கை பற்றிய கேள்விகள். Odipus Complex கொண்டு தன் அன்னையிடம் வெறுப்பு கலந்த நேசம் ,இரண்டாம் தந்தையை (சித்தப்பன்)பழிவாங்கும் உணர்வு, தந்தையின் ஆவியால் துன்புற்று, காதலியை துறக்க முயலும் சிக்கல். வெறித்த விழிகளோடு , கத்தியுடன் stylised முறையில் சிந்தனை கலந்த நடையில் அவர் திரும்பும் விதம் இந்த காட்சிக்கு புத்துயிர்ப்பு கொடுக்கும்.இதற்கு குரல் கொடுத்த பேராசிரியர் சுந்தரம் இந்த பாணியில் இந்த காட்சி நடிக்க பட்டதே இல்லையென்றும் ,வசனங்களை காட்சியுடன் இணைக்க மிகவும் பிரயத்தனம் எடுத்ததாகவும் வியந்து பாராட்டி உள்ளார்.
சத்ரபதி சிவாஜி காட்சி அவருடைய கனவு கதாபாத்திரம் ஆனதால் உச்சம் தொடும்.தன்னை தாழ்ந்தவன்,அரசியல் அறியாதவன் என்று மகுடம் சூட்ட மறுப்பவர்களை ,தன்னிலை விளக்கத்துடன் எள்ளும் முறை.Porna கோட்டை வெற்றியை பெருமிதத்துடன் குறிப்பிடுவதும்,புரந்தர் கோட்டை வெற்றி தன்னை மீறிய எதிரியை எச்சரிக்கை மீறி வெற்றி பெற்ற சாதனை விளக்கமும்,ராஜகிரி கோட்டை எதிரி கொக்கரிப்பை எதிர் கொண்டு கைப்பற்ற பட்ட வீர்யம், கல்யாண் கோட்டையில் பகைவரிடம் அகப்பட்டு துன்புற்றவரை காத்த கருணை வீரம் ,இறுதியில் nihilist instinct கொண்டு அடையும் ஆவேசம் ...
ஒவ்வொரு கோட்டைக்கும் நடை மாற்றம் மட்டுமன்றி, கை முக குறிப்புகளின் நுண்ணிய மாற்றங்கள்,வசன முறைகளில் ஏற்ற இறக்கம், தாள லய சுர மாற்றங்களும் ,reciting poetically என்ற முறையில் தமிழையும் அழகு படுத்தி நடிப்பிலும் ஒருங்கிணைவு படுத்தி ,அந்தந்த content க்கு ஏற்ப மாறு படுத்துவார்.
மேற்கண்ட காட்சிகளை படித்து ரசிப்பதை விட, கண்டு கேட்டு ரசித்தால் அதன் அருமை, versatality (பன்முகத்தன்மை) உங்களுக்கே புரியும்.
----To be Continued.
RAGHAVENDRA
6th July 2013, 11:08 PM
ஒத்தெல்லோ பாத்திரத்தினை இரு படங்களில் அவர் நடித்துள்ளார். அன்பு மற்றும் ரத்த திலகம். இரண்டுமே வெவ்வேறு பரிணாமங்களில் மிளிர்வது சிறப்பு. அன்பு படத்தில் தமிழ் உரையாடலுக்கேற்றவாறு தமிழ் ரசிகர்களுக்கும் புரிய வேண்டும், அதே சமயம் அந்தப் பாத்திரத்தை நம் கலாச்சாரத்திலிருந்து அந்நியப் படுத்திக் காட்ட வேண்டும், அந்நிய நடிப்பினை அது மக்களிடமிருந்து அந்நியப் படாத வகையில் அவர்களை அதில் இன்வால்வ் ஆக வைக்க வேண்டும் என்று தனக்குத் தானே சில நிபந்தனைகளை உருவாக்கிக் கொண்டு அதநை செயல் படுத்தி யிருப்பார். ஆனால் ரத்த திலகம் சற்றே மாறு பட்டது. அது கல்லூரி மாணவர்களின் ஆங்கில இலக்கியம் பற்றிய நாடகமாக இடம் பெறுவது. அதற்கேற்ற வாறு அதில் ஆங்கில உரையாடல் இடம் பெற்றிருக்கும். இந்த வேடத்தில் அவருடைய நடிப்பு சற்று வித்தியாசப் பட்டிருக்கும். மாணவர்களின் ஆர்வத்தையும் அதில் காட்ட வேண்டும், திடீரென வேடம் போட வேண்டிய சூழ்நிலையினை மனதில் நிறுத்தி லேசான பதற்றத்தையும் அதனை மற்றவர்கள் உணராத வண்ணம் கொண்டு வர வேண்டும் என மெனக் கெட்டிருப்பார். ஒவ்வொரு பாத்திரத்திற்கும் அதனுடைய சூழ்நிலை, தன்மை போன்ற அனைத்தையும் அறிந்து அதற்கேற்ற நடிப்பை தந்து விடுவார்.
குறிப்பாக ரத்த திலகம் படத்தில் இதுவே கடைசி என்று கூறியவாரு மீண்டும் மீண்டும் டெஸ்டிமோனாவை முத்தமிடுவதாக வரும் காட்சியில் அவருடைய முகத்தின் பிரதிபலிப்பில் அந்த கதாபாத்திரத்தின் எண்ண ஓட்டம் தத்ரூபமாகத் தெரியும்.
கோபால் சார் சொல்வது போல் நாம் வர்ணிப்பதை விட பார்த்தால் மேலும் அதிகமான நுணுக்கங்களை அந்த நடிப்பில் புரிந்து கொள்ள முடியும்.
ரத்த திலகம் திரைப்படத்திலிருந்து ஒத்தெல்லோவாக நடிகர் திலகம் ... பார்ப்போமா...
http://youtu.be/lSAcVpljPE0
Gopal.s
8th July 2013, 12:29 AM
இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-44
கதைகளில் மகாபாரதத்தை மீறிய Epic உலகளவில் இல்லாதது போல ,கர்ணனை மீறிய பாத்திர படைப்பு இது வரை உலகம் கண்டதில்லை. வீரபாண்டிய கட்டபொம்மனை குறிப்பிடும் போது ஒரே single agenda , ஒரே பகைவன், ஒரு சில ஆள்காட்டிகள் என்பதோடு பன்முக தன்மை இல்லாத பாத்திரம். ஆனால் கர்ணனோ மிக பெரிய பராக்கிரம சாலியும் அவன்தான். உலகத்தின் மிக துர்பக்கியசாலியும் அவன்தான். மிக மிக போற்ற பட்ட மனிதனும் அவன்தான். ஆனால் எதிரிகளாலேயே சூழ பட்டு வாழ்ந்த மனிதனும் அவன்தான். எல்லோரும் கவனம் செலுத்திய மனிதனும் அவன்தான். ஆனால் தாய் முதல் ,வாழும் குலம்,பெண் கொடுத்தவர் முதல் உதாசீனம் செய்து ஒதுக்கிய மனிதனும் அவன்தான்.
அவன் நல்லியல்புகளே அவனுக்கு பகையாவதுடன், பகைகளும் உறவாடியே கெடுக்கின்றன. கண்ண தாசனின் வரிகள். செஞ்சோற்று கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் விழும் பாத்திரம்.மனோதத்துவ பின்னல்களுடன், non -linear முறையில்,multi -dimensions உடன் படைக்க பட்ட இந்த காவிய நாயகன் பாத்திரத்தை இன்னொரு காவிய உலக நடிகன் ஏற்று நடிக்கும் பொது நமக்கு கிடைத்த அனுபவம் சுனாமி போன்ற Psychedelic Trip .இன்றும் நம் மனதை பிசைந்து கண்ணீர் விட வைத்தாலும், ஒரு ecstatic உணர்வை தரும் அருமையான நடிப்பின் உன்னத சாதனை.
இதில் நான் குறிப்பிட விரும்பும் மூன்று கட்டங்கள்- இந்திரா தேவன் வேடம் புனைந்து கவச குண்டலங்களை கவரும் காட்சி.. கிருஷ்ணன் தூது வரும் காட்சி. குந்தி தூது (சூது?)வரும் காட்சி.
முதலில் இந்திரன் கவச குண்டலங்களை கவரும் காட்சி. தன் ஒளி கடவுளை கும்பிட்டு முடிக்கும் தருணத்தில் யாரோ ஒரு அந்தணர் வந்திருப்பதாக தகவல் வர , கர்ணனுக்கு வந்திருப்பவன் யார் என்றும் ,அவன் நோக்கம் என்ன என்று கடவுளால் குறிப்புணர்த்த பட்டும் அந்தணர் வேடத்தில் வந்த இந்திரனை வரவேற்று வேண்டுவதை கொடுக்கும் காட்சி...
இந்திரனுடன் இயல்பாக இருக்கும் மரியாதை உணர்வை மீறி , பொய் வேடமிட்டு தன் ஈகை குணத்தையே எள்ளுவதாக கர்ணன் துடித்து போய் ,தனக்கு தெரிந்து விட்டதை குறிப்புணர்த்தி , செயலை சினந்து நகையாடி,வேண்டுவதை கொடுக்கும் இடத்தில் நடிகர்திலகத்தின் மனோதத்துவ ஆழம் நிறைந்த நடிப்பு இந்த காட்சியை இமயத்தில் உயர்த்தும்.இந்திரனின் பொய்யான வர்ணனைகளை கேட்டு உவகை கொண்டாலும், நோக்கத்தினால் ஒரு எள்ளல் சிரிப்புடன் அதை ஏற்பதும், கவச குண்டலங்களை யாசித்ததும் கர்ணன் எதிர்பார்த்த ஒரு எள்ளலுடன் கேட்டதும், இந்திரன் பயம் கொண்டவன் போல பாவிக்க, கர்ணன் தள்ளாடிய தேகம், தள்ளாடாத நோக்கம், பொய்யான நடிப்பு,அதன் பின் மெய்யான பிடிப்பு, என்னிடம் வர வேஷம் வேண்டுவதில்லை, ஆனால் எடுத்த காரியத்தின் தன்மை அப்படி...அப்படி பொய்யுடம்பு போர்த்தி வர தூண்டியுள்ளது உம்மை என்று குறிப்பிடும் கண்களின் சத்திய ஒளி கொண்ட தீட்ஷன்யத்துடன்,இந்த சதி செயலை இடித்து ,தன்னுடன் இந்த நாடகம் தன்னை அவமதிக்கும் செயலே என்று உணர்த்தி , இந்திரன் தன் அசல் உருவில் வந்து கேட்டிருந்தாலே கொடுத்திருப்பேனே என்று உரைத்து ,அதனை செயல் படுத்தும் அந்த காட்சி ... நடிப்பால் மட்டுமே ஒரு காட்சியின் சிறப்பு எத்தனை உயரம் தொட சாத்தியம் கொண்டது என்று தன்னுடைய கவச குண்டலமான நடிப்பை அந்த நடிப்பு கர்ணன் நமக்கு வழங்கி விடுவார்.
----To Be Continued.
Gopal.s
9th July 2013, 05:26 PM
இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-45
கண்ணன் தூது வரும் காட்சியில் கர்ணன் ஒரு மௌன சாட்சி போல ,அவன் பங்கு அதில் குறைவு.துரியோதனன் சமாதானத்திற்கு ஒவ்வாமல் முரண்டு பிடிப்பான் என்றும் ,அங்கிருக்கும் அனைவரும் மனதளவில் பாண்டவர் பக்கம் நியாயம் என்று நம்புபவர்கள் என்றும், திருதராஷ்டிரன் பாசம்-நியாயம் இரண்டுக்கும் நடுவில் ஊசலாடுபவன் என்றும் தெரிந்த கண்ணன் , தூதில் சாதிப்பது விதுரன்-துரியோதனன் ,கர்ணன்-பீஷ்மர் இவர்களுக்கிடையில் பிரித்தாளும் சூழ்ச்சி ஒன்றைத்தான். இதில் கர்ணனின் பங்கே ,தனித்து விட படும் (சகுனி துணை என்றாலும் )துரியோதனனுக்கு அரணாக aggressive unconditional support தருவதுதான் என்று உணர்ந்து , தனக்கு ஒவ்வுகிறதோ இல்லையோ ,அவனுக்கு சார்பாக பேச வேண்டிய கடமையை உணர்ந்து செய்ய வேண்டும்.இந்த காட்சியில் நடிகர்திலகம் இதை உள்வாங்கி நடிக்கும் மேதைமை ,உடல்மொழி,பேசும் பாணி எல்லாவற்றிலும் பிரதிபலிக்கும்.
கண்ணன் உள்ளே வரும் போது ,முள் மேல் உட்காருவது போல மற்றவர் துரியோதனன் கட்டளைக்கு பணியும் போது ,கர்ணன் இதை ஓரக்கண்களால் உணரும் அழகே தனி.(இதில் தனக்கும் ஒப்புமை இல்லை என்ற ஒரு உடல்மொழி),துரியோதனன் தடுமாறி விழ வைக்க படும் நிலையில் எழும் கர்ணனின் முகத்தில் சிறிதே ஆசுவாசம் தெரியும்.கண்ணனுடன் வலுவில் வாதாடினாலும்,மனமின்றியே அதை வலுகட்டாயமாக செய்ய படுவதை காட்ட சிறிதே உரத்த வலுவான உடல் மொழியில் ,பாண்டவர் மனைவியை சூதாடிய இழிவை குத்தி (கண்ணன் கோப படும் அளவு)அந்த பேச்சு முறையில் தானே தனக்கு உரத்து சொல்லி ,தன்னை தானே convince பண்ணி கொள்ள முயலும் strain தெரியும்.மற்றோர் மன ரீதியான துரியோதனன் எதிர்ப்பை கூர்மழுங்க செய்யும் முயற்சி என்பது தெரியும் வகையில் நடித்திருப்பார்.
ஆனாலும் அடக்க முடியாமல் பீறிடும் நிலைக்கு தள்ள படுவார் ,விதுரன் பிறப்பை சொல்லி அவமான படுத்த படும் போது .கிட்டத்தட்ட தன நிலைக்கு சமமான அவமானத்தை ,தன்னிலை மறந்து உணர்ச்சி வச பட செய்யும்.
மற்றோருக்கும் ,நடிகர்திலகத்துக்கும் உள்ள வேற்றுமையே அதுதானே?கதாபாத்திரத்தின் ஆன்மாவில் புகுந்து கூடு விட்டு கூடு மாறும் மந்திரம்?கர்ணனுக்கு பங்கில்லா காட்சியிலும்,இந்த அற்புதமான உளவியல் புரிந்த அபார நடிப்பினால்,கர்ணனே முன்னிலை படுவான்.
---To be Continued.
Gopal.s
10th July 2013, 09:36 AM
இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-46
குந்தி தேவியின் தூது காட்சி இந்திய சினிமா வரலாற்றிலேயே பொன்னெழுத்துக்களில் பொறிக்க பட வேண்டிய மிக சிறந்த ஒன்றாகும். வீரபாண்டிய கட்டபொம்மனின் laser sharp உணர்வு குவி மையம் என்ற நிலைக்கு முற்றிலும் மாறுபட்ட பல்வேறு உணர்வு நிலைகளின் கலவை கொண்ட விரிந்த தளத்தை ,பரப்பை உடைய உன்னத காட்சி. இது ஒரு emotional Roller coaster ride என்ற வகையில் ஏழு வகை மனநிலைகளின் கலப்பு போராட்டம் . Joy (சந்தோசம்),Hatred (வெறுப்பு),Sadness (துக்கம்),Reconciliation (தேற்றிகொள்வது),Surrender (சரணாகதி), Cynicism (எள்ளல் ),Assertion (இருப்புநிலை) . அற்புதமான வசனத்தை துணையாக கொண்ட துரித உணர்வு நிலைகளில்(concurrently running and at times in cocktail manner) மாற்றம் காட்டும் மாயாஜால நடிப்பு வித்தை.
சந்தோசம்- குந்தி தன் வீடு தேடி வந்ததை ஒரு பாக்கியமாக கருதும் போது ,அவர்தான் தன் அன்னை என்று அறியும் போது .தன் பிறப்பறியா களங்க நிலை மாறி தன் உயர்வை தானே உணரும் போது அடையும் உவகை.
வெறுப்பு- தன் அன்னையின் புறக்கணிப்பால் தான் பட்ட அவமானங்களை எண்ணும் போது
தாயை சபிக்கும் அளவு பெருகும் வெறுப்பு. தான் தன் முயற்ச்சியால் இவ்வளவு உயரங்களை அடைந்தும் பிறப்பின் அறியாமை, வளர்ப்பின் பின்னணியால் அடையும் அவமானம் சார்ந்த சுய வெறுப்பு நிலை.
துக்கம்-தன்னுடைய தாயை தேடி அலைந்த துயரம், பலர் வந்தும் சோதனையில் தோற்று ஓடியது, தன் தொடர் அவமானங்கள் சுமந்த பிறப்பறியா வேதனை,தன்னுடைய தாயின் பக்கம் செல்ல முடியாத இயலாமை,அவள் தன் தாயே என்று உலகத்திற்கு தான் உயிரோடிருக்கும் போது சொல்ல முடியாமல் சொல்லும் போங்கள் தாயே.
தேற்றி கொள்ளும் நிலை-குந்தி தன் தாய் என்று சொல்வது தன்னை அன்னையின் மீதுள்ள ஆத்திரத்தை தணிய வைப்பதற்காக என்று எண்ணும் போது , இன்றேனும் என்னை பெற்றேடுத்தாயே என்று மடியில் ஆயாசம் கொள்ளும் போது ,அர்ஜுனனோ,நானோ இருவரில் ஒருவர் என்று ஐந்து மகன்கள் என்று தாயிடம் உரைக்கும் போது ,துரியோதனன் நற்பண்புகளை சொல்லி தன் இருப்பை உணர்த்தி, தாயெனும் உண்மையை மறைக்க சொல்லும் போது ,தர்மம் வெற்றி பெற தெய்வம் போன்ற துணைவர் காட்டிய வழியில் அன்னையும் கைப்பாவையாய் மாற வேண்டிய நிலையை உணர்ந்து உணர்த்தும் நிலை.
சரணாகதி-நட்பின் உயர்வுக்கு தான் இறக்கும் வரை செய்ய வேண்டிய கடமைக்கு,தாயின் சுயநல வரங்களை மறுக்காமல் அளிக்கும் போது ,கேள்வி கேட்காமல் தாயின் நிலையை உணர்ந்து தாய்க்கு உரிய ஸ்தானம் அளிப்பது , தன்னையே அழித்து கொள்ளும் அளவு தன்னை மீறிய சுயம் கருதா பண்புக்கு என்று கேள்வி கேட்காத சரணாகதி நிலை.
எள்ளல்- தாயின் அணி மாற சொல்லும் வேண்டுகோளை நிராகரிப்பது.(இது சரியான பேச்சா தாயே), நாகாஸ்திரத்தை ஒரு முறைக்கு மேல் பிரயோகம் செய்வதில்லை என்ற சத்தியத்தை கேட்கும் போது ,அதன் மூலத்தை உணர்ந்த எள்ளல் .
இருப்புநிலை- தானிருக்க வேண்டிய இடம்,தாய்க்கு உரிய இடம், தான் சாகும் வரை நடக்க வேண்டியவை, செத்த பிறகு பிறப்பறியா இழிவை நீக்க வேண்டிய அவசியம்,தர்மம் வெற்றி பெற விழைவு, என்று அனைத்து இருப்பு நிலைகளின் நிதர்சனங்களும் உணர்த்த படும்.
இது அத்தனையும் மீறி மற்றோர் உணர்வு,இது வரை கர்ணனிடம் அந்த படத்தில் அதுவரை வெளிப்படாத ஆயாசம் நீங்கிய பெருமித உணர்வு .தன்னை பற்றி தானே அறிந்து விட்டதை உணர்ந்து ,இனி அடைய கடமையை தவிர எதுவுமில்லை என்ற உணர்வு நிலை.
இந்த உணர்வுகள் ஒரே குவி மையத்தில் இயங்காமல் ,ஒளி சிதறல்கள் போல தெறித்து நொடிக்கு நொடி முக பாவத்திலும்,உடல் மொழியிலும்,பேசும் மொழியிலும் நடிப்பின் வானவில் கலவை போல ஜாலம் காட்டி முடிவை அடையும்.
இந்த காட்சி போன்று இனி ஒன்று அமைய நடிகர்திலகம்,சக்தி கிருஷ்ணசாமி,பந்துலு இவர்கள் வியாசருடன் சேர்ந்து பிறந்து வந்தால் மட்டுமே சாத்தியம்.
---To be Continued.
RAGHAVENDRA
10th July 2013, 10:15 AM
டியர் கோபால் சார்
45 மற்றும் 46 ... சட்டம் போட்டு வைத்து பாதுகாக்கப் பட வேண்டிய analysis. Spectrum ஒரே நேரத்தில் பல்வேறு திசைகளில் பார பட்சமின்றி ஒரே அளவில் ஒளி வீச்சினை அளிப்பது போன்று ஒரே காட்சியில் ஒவ்வொரு உணர்விற்கும் அதற்கேற்ப வஞ்சனையின்றி தன்னுடைய நடிப்பு என்கிற கவச குண்டலத்தை நடிகர் திலகம் அளித்துள்ளதை அருமையாக விளக்கியுள்ளது பாராட்டத் தக்கது. Larger Than Life Character provided with Life and Energy..
ஒரே ஒரு திருத்தம் ... சூது[தூது] ... இது கண்ணனுக்கே பொருந்தும். குந்தி தேவியின் வருகையில் உள்நோக்கம் இல்லை. தன் மகனைப் பார்க்க வரும் ஒரு தாயின் பாசமே மேலோங்கி இருந்தது.. அதற்கு கோரிக்கை என்பது ஒரு காரணமாய் அமைந்தது என்பது ஒரு வகையில் மகிழ்ச்சியைத் தந்தது என்றாலும் அதனையும் மீறி தன் அருமை மகனை, தன் தலை மகனைப் பார்க்கப் போகிறோமே என்ற உணர்வை மிக அருமையாக தன் வசனங்கள் மூலம் வெளிப்படுத்தி இருந்தார் வசனகர்த்தா என்றால், அந்தக் காட்சியில் ஒரு உண்மையான தாயைக் கண்முன் நிறுத்தித் தன் வாழ்நாள் Performanceஐ அளித்து பெருமை கொண்டது எம்.வி.ராஜம்மாவின் திறமை. இந்தக் காட்சியில் சூது என்பது நிச்சயமாக இல்லை என்பதே என் கருத்து.
Gopal.s
10th July 2013, 10:26 AM
இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-47
திருவருட்செல்வர் அப்பர் பாத்திரம் ,அவர் முன்னரே ஆறு மனமே ஆறு என்று ஆண்டவன் கட்டளையில் ஒத்திகை பார்த்து விட்டு கடலையும் சாப்பிட்டு விட்ட ஒன்று. துறவமைதி கலந்த ஒடுக்கமும் ,செயல்பாடு நிறைந்த பழுத்த முதுமையும் ,அவர் தான் நேரில் கண்டு,பதிய வைத்த சந்திரசேகர சாமிகளை (காஞ்சி பெரியவர்)role model (முன்மாதிரி பிரதி)ஆக வைத்து நடித்த விதம்,நடிகர்திலகத்தின் நடிப்பின் வீச்சு,broad Spectrum ,இரு வேறு பட்ட துருவ நிலைகளை துரித தயாரிப்பில் அடையும் மேதைமை,அவரால் சாதிக்க முடியாதது எதுவும் இல்லை என்று உலகத்துக்கு ஓங்கி சொன்னது.இந்த பாத்திரம் ஒரு குறிஞ்சி மலர்.(பூக்கவே முடியாத ஒரு முறை மட்டுமே பூப்பது எதுவாவது இருந்தால் அதை பிரதியிட்டு கொள்ளுங்கள்)
அந்த 80 வயதுக்கு மேற்பட்ட முதியவரின் ஒப்பனைக்கு அன்றைய கால கட்டத்தில் அவர் பட்ட கஷ்டங்கள் சொல்லி மாளாத அளவு சித்திரவதையை ஒத்த கஷ்டம்.அந்த நடை ,அவர் எல்லோருக்கும் கற்று கொடுத்த அதிசய பாடம்.ஒரு கூன் வந்த ,புத்துயிர்ப்போடு இயங்கும் முதியவரின் balance தடுமாறும் துரித நடை,V வடிவில் பாதத்தையும்,U வடிவில் முட்டியையும் வைத்து அவர் நடக்கும் விதமே அந்த பாத்திரத்தின் பாதி வேலையை செய்து விடும்.(இதே படத்தில் மன்னனின் சிருங்காரம் கலந்த கம்பீர நடையழகும்,சுந்தரரின் சிறிதே பெண்மை கலந்த சுந்தர நடையழகும் கண்டு ரசிக்க, வேறுபாட்டை உணர ஒரு reference point )அதே போல கூன் உடம்பு காரன் தன்னை நிமிர்த்த எத்தனித்து செய்ய வேண்டிய சிரமமான முயற்சியை ,அந்த பாத்திரம் நிமிரும் தருணங்களில் நடிப்பால் உணர்த்தும் விந்தை.
பேச்சில் ஒரு பற்றற்ற அமைதி கலந்த உறுதி இருந்தாலும் ,வயதுக்கேற்ற ஒலி சிதறலும் கொண்டிருக்கும்.அப்பூதி அடிகளின் இல்லத்தில் ,அவர் ஒரு முட்டியை உயர்த்தி,கைகளை அதில் அமர்த்தி ,முகத்தை நம்மை நோக்கி குவிந்து விரியும் கைகளில் சார்த்தி அமைதி ,சாந்தம்,தவம் கலந்த ஒரு மோகன அரை சிரிப்புடன் காட்டும் gesture ,காஞ்சி பெரியவர் சந்திப்பில் நமக்கு கிடைத்த வரம்.நான் எத்தனை முறை பார்த்து ரசித்திருப்பேன் என்ற எண்ணிக்கை ,நானே அறியா புதிர். இது larger than life பாத்திரத்தை Meisner பள்ளியில் பாற்பட்ட பூரணத்துவம் கொண்ட நடிப்பின் சாதனையாகும்.
கடைசி காட்சியில் உடலை இழுத்து அவர் அனைத்து புலன்களும் மங்கி தளர்வு பெற்ற நிலையிலும் ,காளத்தி செல்ல எத்தனிக்கும் காட்சி நம்மை வேறு லகுக்கே கூட்டி சென்று தன்னிலை மறக்க செய்யும்.
இத்துடன் larger than life பாத்திரங்கள் நிறைவு பெற்று meisner பள்ளி பாணியில் அவர் நடித்த stylised பாத்திரம் ஒன்றை அக்கு வேறாக அலசி இந்த ஆய்வு தொகுப்பின் முதல் பகுதியை நிறைவு செய்ய போகிறேன்.
---To be Continued.
RAGHAVENDRA
10th July 2013, 10:50 AM
Mesiner Technique of Acting ... quoted from wikipedia
The Meisner technique is an acting technique developed by the American theatre practitioner Sanford Meisner.[1]
Meisner developed this technique after working with Lee Strasberg and Stella Adler at the Group Theatre and as head of the acting program at New York City's Neighborhood Playhouse and continued its refinement for fifty years.
Components
Meisner Training is an inter-dependent series of training exercises that build on one another. The more complex work supports a command of dramatic text. Students work on a series of progressively complex exercises to develop an ability to improvise, to access an emotional life, and finally to bring the spontaneity of improvisation and the richness of personal response to textual work. The technique develops the behavioral strand of Stanislavski's 'system' (specifically developing his concepts of communication and adaptation). The technique emphasizes "moment-to-moment" spontaneity through communication with other actors in order to generate behavior that is truthful within imagined, fictional circumstances.
Early training is heavily based on actions, in line with Meisner's emphasis on "doing." The questions "what are you playing?" and "what are you doing?" are asked frequently, in order to remind actors to commit themselves to playing what Stanislavski called a "task" or "objective," rather than focusing on the words of a play's dialogue. Silence, dialogue, and activity all require the actor to find a purpose for performing the action involved. By combining the two main tasks of focusing attention on a partner and committing to an action, the technique aims to force an actor into "the moment" (a common Meisner phrase), while simultaneously propelling the actor forward with concentrated purpose. The more an actor can take in about the partner and the surroundings while performing in character, the more Meisner believed they can "leave themselves alone" and "live truthfully." One of Meisner's famous quotations that illustrates the emphasis on "doing" was "An ounce of behavior is worth a pound of words."
The most fundamental exercise in Meisner training is the Repetition exercise.[2] Two actors face each other and repeat their observations about one another, back and forth. An example of such an exchange might be: "You're smiling." "I'm smiling." "You're smiling!" "Yes, I'm smiling." Actors observe and respond to the other's behavior and the subtext therein. If they can "pick up the impulse"—or work spontaneously from how their partner's behavior affects them—their own behavior will arise directly from the stimulus of the other.
Later, as the exercise evolves in complexity to include "given circumstances," "relationships," actions and obstacles, this skill remains critical. From start to finish—from repetition to rehearsing a lead role—the principles of "listen and respond" and "stay in the moment" are fundamental to the work.
As in all Stanislavskian-derived approaches, for a Meisner actor traditional line-memorization methods that include vocal inflections or gestures are avoided. These traditional approaches merely increase the chance the actor will miss a "real moment" in service of a rehearsed habit or line reading, the technique assumes. Meisner actors learn lines dry, "by rote," without inflection, so as not to memorize a line-reading. When the line is finally to be delivered, its quality and inflection is derived from the moment of articulation.
The improvisatory thrust of the technique does not give permission to an actor "to wing it" or to fail to prepare. Meisner training includes extensive work on crafting or preparing a role. As students mature in the work, they get to know themselves and can make use of this self-knowledge by choosing actions that are compelling to their particular "instrument." They "come to life" through informed, provocative choices. Actors prepare emotional responses by "personalizing" and "paraphrasing" material and by using their imagination and "daydreaming" around a play's events in highly specific ways that they've learnt are particularly evocative for them personally. Solid preparation supports the spontaneity, in line with Martha Graham's observation that "I work eight hours a day, every day, so that in the evenings I can improvise."
Despite some misconceptions, Meisner work also addresses characterization, though in an indirect way. Characteristics, such as "mousy," "vindictive," or "noble," result from actors' choices about what they do. Rather than attempting to play "mousy," a Meisner actor might seek to appease another character, in order to manifest the characteristic.
The above quoted text reproduced from wikipedia website: http://en.wikipedia.org/wiki/Meisner_technique
RAGHAVENDRA
10th July 2013, 10:57 AM
பாத்திரத்தின் தன்மையறிந்து, அதற்குப் பொருந்தும் வகையில் தனி பாணியினையும் உருவாக்கி, அதனுள் புகுந்து அதே சமயம் அதனை கட்டுக்குள் வைத்து வெளியிலிருந்து இயக்கும் தன்மையை பல படங்களில் நடிகர் திலகம் பயன் படுத்தியிருக்கிறார். அதாவது பாத்திரத்தினுள்ளும் இருப்பார் வெளியேயும் இருப்பார் ... like sailing in two boats simultaneously ... இது அவருக்கு மட்டுமே சாத்தியம். பாத்திரத்தை இயக்கும் போது உள்ளேயும் அதன் அளவுகோல் நிர்ணயம் செய்யும் போது வெளியேயும் இருந்து முழுமைப் படுத்தும் திறமை அவருக்கு இருந்தது. ஒரு பாத்திரத்தில் தளத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது அதனுள் கூடு விட்டு கூடு பாய்வது போல் உள்ளே புகுந்தாலும் வெளியே அதனுடைய பாதிப்பு எப்படி இருக்கும், எத்தகைய வரவேற்பைப் பெரும் என்பதையும் நடிக்கும் போதே அளவெடுக்கும் தன்மை, தன்னைச் சுற்றிப் பணியாற்றுபவர்களுக்கு தன் ஒத்துழைப்பு எவ்வாறு உள்ளது போன்ற தொழில் நுட்பங்களையும் கவனித்துக் கொண்டே பணியாற்றும் சிறந்த ஆற்றல் அவருக்கு இருந்தது.
இதையெல்லாம் சொல்லக் காரணம் அடுத்து கோபால் சாரின் ஆய்வுரையில் இடம் பெறக் கூடும் எந்தப் பாத்திரமானாலும் அதற்கு இது பொருந்தும் என்பதே யாகும்.
IliFiSRurdy
10th July 2013, 11:26 AM
இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-46
குந்தி தேவியின் தூது காட்சி இந்திய சினிமா வரலாற்றிலேயே பொன்னெழுத்துக்களில் பொறிக்க பட வேண்டிய மிக சிறந்த ஒன்றாகும்.
இந்த காட்சி போன்று இனி ஒன்று அமைய நடிகர்திலகம்,சக்தி கிருஷ்ணசாமி,பந்துலு இவர்கள் வியாசருடன் சேர்ந்து பிறந்து வந்தால் மட்டுமே சாத்தியம்.
---To be Continued.
என்ன சொல்வது கோபால்!!..
படிக்க முடியாமல் கண்ணீர் கண்களை திரையிடும் போது!!
"I am very proud of you my friend"
ஒரு அற்புத கலைஞனுக்கு இப்படி ஒரு அருமையான அஞ்சலி செலுத்தியதிற்கு.
விமரிசனங்களுக்கு உங்கள் நாற்பத்தாறு பாகங்களும் பாடங்கள்..மைல்கற்கள்.
தொடருங்கள்.
parthasarathy
10th July 2013, 03:13 PM
இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-46
குந்தி தேவியின் தூது காட்சி இந்திய சினிமா வரலாற்றிலேயே பொன்னெழுத்துக்களில் பொறிக்க பட வேண்டிய மிக சிறந்த ஒன்றாகும். இந்த காட்சி போன்று இனி ஒன்று அமைய நடிகர்திலகம்,சக்தி கிருஷ்ணசாமி,பந்துலு இவர்கள் வியாசருடன் சேர்ந்து பிறந்து வந்தால் மட்டுமே சாத்தியம்.
---To be Continued.
கர்ணன் - அற்புத நிமிடங்கள்
அன்புள்ள திரு. கோபால் அவர்களே,
ஏகப்பட்ட அலுவல்களுக்கிடையே, தினமும் ஒரு முறையாவது நடிகர் திலகத்தின் திரியைப் படிக்காமல் இருப்பதில்லை. பதிவுகளைத் தான் முன்போல் இட முடிவதில்லை.
தங்களின் நடிகர் திலகம் ஓர் உலக அதிசயம் ஆய்வுக்கட்டுரையின் பாகங்கள் 45 மற்றும் 46 அதியற்புதம் என்று சொன்னால் குறைவு என்று தான் அர்த்தம். அதிலும் குறிப்பாக 46.
கர்ணனில் பல மயிர் கூச்செறியும் காட்சிகள் உண்டு என்றாலும் குறிப்பாக நீங்கள் எழுதிய அந்த மூன்று காட்சிகள் தான் சிகரம்.
இந்திரனோடு பேசுவதில் அவர் காட்டும் நையாண்டி கலந்த நடிப்பு (இருப்பினும், வயோதிகர் வேடம் மறைந்து எதிரில் நிஜ இந்திரன் தோன்றிய மறு கணம், பணிவுக்கு மாறும் அவரது உடல் மொழி உலக நடிகர்களுக்கு ஒரு பாடம்!
கண்ணன் சபைக்கு வந்து நடக்கும் வாதம். கர்ணனுக்குத் தெரியும் அங்கு நடப்பவை எல்லாம் அநியாயம் - இருப்பினும், செஞ்சோற்றுக்கடனுக்காக, அநியாயத்துக்கு துணை போவார். அதற்கு அவர் காட்டும் ரௌத்திரம் செயற்கையாக இருக்கும் - அதாவது அவர் மனசாட்சிக்கு விரோதமாக அதை செய்கிறார் என்பதை - அந்த செயற்கைத்தனத்தை தத்ரூபமாகக் காட்டியிருப்பார்! செயற்கைத் தனத்தையும் இயற்கையாகக் காட்டிய உலக நடிகன் (இதை இன்னோர் முறை "ராஜா" கடைசிக் காட்சியில் - அம்மா பண்டரிபாயை மனோகர் சவுக்கால் அடிக்கும் காட்சியில் "செயற்கையாக" சிரித்துக் காட்டினார்!!)
இப்போது - அந்த அற்புத இருபது நிமிடங்கள் (கிட்டத்தட்ட):-
இந்தத் திரிக்குள் நுழைந்ததிலிருந்தே (கடந்த மூன்று வருடங்கள்) இதைப் பற்றி எழுத வேண்டும் என்று நினைத்து அவ்வப்போது சிறிது சிறிதாக எழுதி சேர்த்துக் கொண்டு வருகிறேன் - இன்னும் முடிந்த பாடில்லை.
நீங்கள் வடித்துக் காட்டிய விதம் - அந்தக் காட்சியை - அதில் நடிகர் திலகம் மற்றும் எம்.வி.ராஜம்மா நடிப்பைப் பார்த்தால் ஏற்படும் - பரவசமா, ஆச்சரியமா, அழுகையா - என்ன வென்று சொல்வது அத்தனை உணர்வுகளும் - உங்களது கட்டுரையைப் படித்த போதும் ஏற்பட்டது. மயிர் கூச்செரிந்து, விழிகள் நீர்த்திரையிட்டு மேல் படிக்க முடியாது போனது.
நானும், கூடிய விரைவில், அந்தக் காட்சியை என் பார்வையிலிருந்து - தங்கள் அளவுக்கு முடியா விட்டாலும் - எழுத முயற்சி செய்கிறேன்.
இந்தக் காட்சியில், நடிகர் திலகத்தின் தாய்த் தமிழ் உச்சரிப்புக்காகவே, ஒவ்வொரு தமிழனும் மறு பிறப்பென்று ஒன்று இருந்தால் தமிழனாக மீண்டும் பிறக்க வேண்டும். இந்தக் காட்சியில் அவர் பேசும் தமிழைப் பார்த்து கேட்டுக் கேட்டு இன்புற வேண்டும்.
Hats off to you Sir for a great analysis!
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
Murali Srinivas
11th July 2013, 12:19 AM
கோபால்,
உங்களிடம் சொல்லியிருகின்றேனா எனபது நினைவில்லை. ஆனால் நமது திரியில் ஒரு சில தடவை குறிப்பிட்டிருக்கிறேன். சென்ற ஆண்டு கர்ணன் திரையரங்குகளில் வெற்றி உலா வந்த போது பொது மக்களால பெரிதும் விரும்பப்பட்ட காட்சி குந்தி தேவி மகனிடம் தன்னை யார் என்பதை வெளிப்படுத்தி இரண்டு வரங்கள் வாங்கி கொண்டு போகும் காட்சிதான். பொது மக்கள் மட்டுமல்ல ரசிகர்களுக்கும் மிகவும் பிடித்த காட்சி இதுதான். Repeat audience பலரும் இந்த காட்சி முடிந்தவுடன் கிளம்பி விடுவார்கள்.
அந்த பொது மக்களானாலும் சரி நமது ரசிகர்களானாலும் சரி, அவர்கள் அந்த காட்சியை இப்படி வித விதமாக பிரித்து பார்த்தார்களா என்பது எனக்கு தெரியாது. ஆனால் அப்படி அனைவரையும் கவர்ந்த காட்சியை compartmentalise செய்து அக்கு வேறு ஆணி வேறாக் அலசி காட்டியதில் நீங்கள் எங்கோ போய் விட்டீர்கள். காட்சியின் துவக்கத்தில் கர்ணனின் மன நிலை, காட்சி முடியும் போது அவனின் மன நிலை என்ற இரண்டு extremeகளையும் நீங்கள் அனைவருக்கும் புரியும் விதம் எழுதிய விதம், you deserve a special praise.
கணேஷ் சார் சொன்னது போல் நடிகர் திலகம் என்ற உன்னத கலைஞனுக்கு நீங்கள் செலுத்திய ஒப்பற்ற அஞ்சலி.
உளமார்ந்த நன்றி!
அன்புடன்
KCSHEKAR
11th July 2013, 11:09 AM
கோபால்,
அப்படி அனைவரையும் கவர்ந்த காட்சியை compartmentalise செய்து அக்கு வேறு ஆணி வேறாக் அலசி காட்டியதில் நீங்கள் எங்கோ போய் விட்டீர்கள். காட்சியின் துவக்கத்தில் கர்ணனின் மன நிலை, காட்சி முடியும் போது அவனின் மன நிலை என்ற இரண்டு extremeகளையும் நீங்கள் அனைவருக்கும் புரியும் விதம் எழுதிய விதம், you deserve a special praise.
நடிகர் திலகம் என்ற உன்னத கலைஞனுக்கு நீங்கள் செலுத்திய ஒப்பற்ற அஞ்சலி.
உளமார்ந்த நன்றி!
அன்புடன்
டியர் கோபால் சார்,
தங்களுடைய கர்ணன் பதிவு குறித்து திரு.முரளி சார் குறிப்பிட்டது மற்றும்
தாங்கள் குறிப்பிட்டிருக்கும்
//இந்த காட்சி போன்று இனி ஒன்று அமைய நடிகர்திலகம்,சக்தி கிருஷ்ணசாமி,பந்துலு இவர்கள் வியாசருடன் சேர்ந்து பிறந்து வந்தால் மட்டுமே சாத்தியம்.//
வார்த்தைகள் சத்தியமான உண்மை.
திருவருட்செல்வரில் நாதர்முடி மேலிருக்கும் நல்லப்பாம்பே பாடல் காட்சியில் நல்லபாம்பின் அருகே கையைக் கொண்டு சென்று பாட, பாம்பு மிரண்டு பின் நோக்கிச் செல்லும். ஆனால் நம் அப்பர் முகத்திலோ கோபம் கலந்த வார்த்தைகளாக வந்து விழும்.
What a performance?
Gopal.s
12th July 2013, 06:06 AM
நான் பயணப் பட உள்ளதால் , இந்த தொடரின் இறுதி மூன்று அத்தியாயங்கள் ஆகஸ்ட் முதல் வாரத்தில் எழுத படும். அந்த அத்தியாயங்களுக்கு ஆகஸ்ட் மாதத்துடன் தொடர்பு இருக்கும்.
இந்த தொடருக்கு தொடர்ந்த ஊக்கம் தந்த p_r ,வெங்கி ராம் ,கண்பட்,சந்திரசேகர்,முரளி, சிவாஜி செந்தில், ராமஜயம் ,
akhilabi ,பம்மலார்,கல்நாயக்,சுப்பு,கார்த்திக்,சாரதி,வித்யாச ாகரன்,ரமேஷ் ஆகியோருக்கு நன்றிகள்.
தொடர்ந்து வந்த துணை பதிவுகளுக்கு ராகவேந்தர் சாருக்கு ,வாசுவிற்கு நன்றி.
மற்றும் பதிவுகள் போடாமலே தொடர்ந்த அனைவருக்கும் நன்றிகள் உரித்தாகுக..
rangan_08
13th July 2013, 06:54 PM
பாத்திரத்தின் தன்மையறிந்து, அதற்குப் பொருந்தும் வகையில் தனி பாணியினையும் உருவாக்கி, அதனுள் புகுந்து அதே சமயம் அதனை கட்டுக்குள் வைத்து வெளியிலிருந்து இயக்கும் தன்மையை பல படங்களில் நடிகர் திலகம் பயன் படுத்தியிருக்கிறார். அதாவது பாத்திரத்தினுள்ளும் இருப்பார் வெளியேயும் இருப்பார் ... like sailing in two boats simultaneously ... இது அவருக்கு மட்டுமே சாத்தியம். பாத்திரத்தை இயக்கும் போது உள்ளேயும் அதன் அளவுகோல் நிர்ணயம் செய்யும் போது வெளியேயும் இருந்து முழுமைப் படுத்தும் திறமை அவருக்கு இருந்தது. ஒரு பாத்திரத்தில் தளத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது அதனுள் கூடு விட்டு கூடு பாய்வது போல் உள்ளே புகுந்தாலும் வெளியே அதனுடைய பாதிப்பு எப்படி இருக்கும், எத்தகைய வரவேற்பைப் பெரும் என்பதையும் நடிக்கும் போதே அளவெடுக்கும் தன்மை, தன்னைச் சுற்றிப் பணியாற்றுபவர்களுக்கு தன் ஒத்துழைப்பு எவ்வாறு உள்ளது போன்ற தொழில் நுட்பங்களையும் கவனித்துக் கொண்டே பணியாற்றும் சிறந்த ஆற்றல் அவருக்கு இருந்தது.
இதையெல்லாம் சொல்லக் காரணம் அடுத்து கோபால் சாரின் ஆய்வுரையில் இடம் பெறக் கூடும் எந்தப் பாத்திரமானாலும் அதற்கு இது பொருந்தும் என்பதே யாகும்.
Raghavendra sir, after reading your post, the best example that immediately comes to my mind is none other than our Barrister !!! Oru soru padham !!
Gopal.s
20th July 2013, 10:12 AM
Pl.Continue the discussions on the previous 47 Chapters. Voice your opinions,feedback and highlight your experience on his Acting.
iufegolarev
20th July 2013, 05:04 PM
இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-47
திருவருட்செல்வர் அப்பர் பாத்திரம் ,அவர் முன்னரே ஆறு மனமே ஆறு என்று ஆண்டவன் கட்டளையில் ஒத்திகை பார்த்து விட்டு கடலையும் சாப்பிட்டு விட்ட ஒன்று. துறவமைதி கலந்த ஒடுக்கமும் ,செயல்பாடு நிறைந்த பழுத்த முதுமையும் ,அவர் தான் நேரில் கண்டு,பதிய வைத்த சந்திரசேகர சாமிகளை (காஞ்சி பெரியவர்)role model (முன்மாதிரி பிரதி)ஆக வைத்து நடித்த விதம்,நடிகர்திலகத்தின் நடிப்பின் வீச்சு,broad Spectrum ,இரு வேறு பட்ட துருவ நிலைகளை துரித தயாரிப்பில் அடையும் மேதைமை,அவரால் சாதிக்க முடியாதது எதுவும் இல்லை என்று உலகத்துக்கு ஓங்கி சொன்னது.இந்த பாத்திரம் ஒரு குறிஞ்சி மலர்.(பூக்கவே முடியாத ஒரு முறை மட்டுமே பூப்பது எதுவாவது இருந்தால் அதை பிரதியிட்டு கொள்ளுங்கள்)
அந்த 80 வயதுக்கு மேற்பட்ட முதியவரின் ஒப்பனைக்கு அன்றைய கால கட்டத்தில் அவர் பட்ட கஷ்டங்கள் சொல்லி மாளாத அளவு சித்திரவதையை ஒத்த கஷ்டம்.அந்த நடை ,அவர் எல்லோருக்கும் கற்று கொடுத்த அதிசய பாடம்.ஒரு கூன் வந்த ,புத்துயிர்ப்போடு இயங்கும் முதியவரின் balance தடுமாறும் துரித நடை,V வடிவில் பாதத்தையும்,U வடிவில் முட்டியையும் வைத்து அவர் நடக்கும் விதமே அந்த பாத்திரத்தின் பாதி வேலையை செய்து விடும்.(இதே படத்தில் மன்னனின் சிருங்காரம் கலந்த கம்பீர நடையழகும்,சுந்தரரின் சிறிதே பெண்மை கலந்த சுந்தர நடையழகும் கண்டு ரசிக்க, வேறுபாட்டை உணர ஒரு reference point )அதே போல கூன் உடம்பு காரன் தன்னை நிமிர்த்த எத்தனித்து செய்ய வேண்டிய சிரமமான முயற்சியை ,அந்த பாத்திரம் நிமிரும் தருணங்களில் நடிப்பால் உணர்த்தும் விந்தை.
பேச்சில் ஒரு பற்றற்ற அமைதி கலந்த உறுதி இருந்தாலும் ,வயதுக்கேற்ற ஒலி சிதறலும் கொண்டிருக்கும்.அப்பூதி அடிகளின் இல்லத்தில் ,அவர் ஒரு முட்டியை உயர்த்தி,கைகளை அதில் அமர்த்தி ,முகத்தை நம்மை நோக்கி குவிந்து விரியும் கைகளில் சார்த்தி அமைதி ,சாந்தம்,தவம் கலந்த ஒரு மோகன அரை சிரிப்புடன் காட்டும் gesture ,காஞ்சி பெரியவர் சந்திப்பில் நமக்கு கிடைத்த வரம்.நான் எத்தனை முறை பார்த்து ரசித்திருப்பேன் என்ற எண்ணிக்கை ,நானே அறியா புதிர். இது larger than life பாத்திர