PDA

View Full Version : Nadigar Thilagam Sivaji Ganesan Part 11



Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 [14] 15 16

KCSHEKAR
18th October 2013, 01:26 PM
டியர் வாச்தேவன் சார்,

இயக்குனர்கள் பற்றிய தங்களின் பார்வை தொடரட்டும்.

இனிமேல் தாங்கள் பதிவு செய்ய இருக்கும் இயக்குனர்களுடன் நம் நடிகர்திலகம்.
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/NadigarthilagamwithDirectors/LVPrasad_zps95ff2bf4.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/NadigarthilagamwithDirectors/LVPrasad_zps95ff2bf4.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/NadigarthilagamwithDirectors/Bandhulu_zps505d8bc1.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/NadigarthilagamwithDirectors/Bandhulu_zps505d8bc1.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/NadigarthilagamwithDirectors/Beemsingh_zps2519f044.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/NadigarthilagamwithDirectors/Beemsingh_zps2519f044.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/NadigarthilagamwithDirectors/APNagarajan_zps368a4d47.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/NadigarthilagamwithDirectors/APNagarajan_zps368a4d47.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/NadigarthilagamwithDirectors/CVRajendran_zps3c14f0fb.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/NadigarthilagamwithDirectors/CVRajendran_zps3c14f0fb.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/NadigarthilagamwithDirectors/MannavanVandhanadi_zps48a4417f.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/NadigarthilagamwithDirectors/MannavanVandhanadi_zps48a4417f.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/NadigarthilagamwithDirectors/Sridhar_zps9824506e.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/NadigarthilagamwithDirectors/Sridhar_zps9824506e.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/NadigarthilagamwithDirectors/Bharathiraja_zps1e4383f9.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/NadigarthilagamwithDirectors/Bharathiraja_zps1e4383f9.jpg.html)

KCSHEKAR
18th October 2013, 01:35 PM
:-D:smokesmile:
கொடுங்கள்.. பெறுவீர்கள்!....
வாழ்கையில் NT நடந்துகொண்ட முறை :
நடிப்பை மட்டும் கொடுக்கவில்லை , அன்பையும் , சந்தோஷத்தையும் அதுவே பல திரிகள் கடந்து வெற்றியுடன் சென்று கொண்டிருக்கின்றது - அவரிடம் இருந்து கற்று கொள்ளவேண்டியவை இன்னும் எவ்ளவோ !!!--------------------------------------------


டியர் ரவி சார்,

நடிகர்திலகத்தைப் பற்றிய தங்களுடைய பார்வை - பதிவு அருமை.

vasudevan31355
18th October 2013, 02:03 PM
Excellent photos chandrasekaran sir. Lot of thanks.

vasudevan31355
18th October 2013, 02:12 PM
இயக்குனர் டி.ஆர். ராமண்ணா இயக்கிய 'கூண்டுக்கிளி'

http://sangam.org/wp-content/uploads/2013/09/Koondu-KiLLi-1954-Sivaji-Ganesan-and-MGR.jpg

Harrietlgy
18th October 2013, 07:24 PM
நேற்று தங்கை படத்தை என் மனைவியுடன் youtube இல் பார்த்தேன் முடிவை பார்க்க முடியவில்லை , அந்த பகுதியை பார்க்க முடியாததால் நானும் என் மனைவியும் வருத்தப்பட்டோம், ஆகவே திரு. வாசு சார்/ திரு. ராகவேந்திர சார் பதிவிட்டால் மிகவும் சந்தோஷபடுவோம். நன்றியுடன் எதிர்ப்பார்கிறேன்

anasiuvawoeh
18th October 2013, 07:46 PM
Dear Vasudevan Sir,excellent stills of Parasakthi and write up on Directors.

anasiuvawoeh
18th October 2013, 07:51 PM
Dear Ravi Sir,your story and themes about NT remind me about,a guest speech in a function for NT birthday.He told that there was time when people talked about marriage proposals.if the bride or bridegroom were NT fans,the people had faith and they immediately agreed for marriage.We learned,learn,will learn all the humanitarian factors from him and his movies.

anasiuvawoeh
18th October 2013, 07:55 PM
I have been scolding my wife ,whenever she was late for getting ready,whenever we went out.But after reading the article in KUMUDHAM ,paesum padam,NT saying,"en ponjaathikku wait panninaa adutha wedding day vandhurum",I have decided not to scold my wife and accept the reality and commonness among women,respecting KAMALA ANNI.

anasiuvawoeh
18th October 2013, 07:58 PM
Dear KC sir,the article reminding NT and Krishnan (panju)sir,was really emotional,and again showed how great our NT was not only as an actor,but also a human

JamesFague
18th October 2013, 10:23 PM
Mr Vasu Sir,
Do continue about NT's directors and thanks for the attakasamana stills of NT in Parasakthi.

Mr K C Sir,

Wonderful Photos of NT with various directors.

RAGHAVENDRA
18th October 2013, 11:15 PM
வாசு சார்
பராசக்தி அளித்த உவகை ஆறும் முன் அடுத்ததை அள்ளித் தந்து திக்குமுக்காட வைத்து விட்டீர்கள். இயக்குநர் வரிசை ... ஆஹா... தொடருங்கள்... காத்திருக்கிறோம்....
ஒவ்வொருவரைப் பற்றியும் அட்டகாசமான அலசல் ...

சந்திரசேகர் சார்
இயக்குநர் படங்களைத் தந்து வாசு சாரின் பதிவிற்கு நல்ல சப்போர்டிவான பதிவை அளித்துள்ளீர்கள்.
பாராட்டுக்கள்

RAGHAVENDRA
18th October 2013, 11:17 PM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTSnaps2/KMRadhai01_zps30602071.jpg

ஆஹா... இந்த சீன் வாங்கப் போகும் கைதட்டலை நினைச்சா புல்லரிக்குதப்பா...

அதுவும் தேவிகா தன் காதலை வெளிப்படுத்தும் போது இவருடைய ரீயாக்ஷன் .... Fabulous ....

வாசு முரளி சார் அதை சொல்லீடாதீங்க...

PM பண்ணிக் கேப்பாங்க... அப்பவும் சொல்லிடாதீங்க...

uvausan
19th October 2013, 12:13 AM
ராகவேந்திரா சார் - உங்களுக்கு மிகவும் நன்றி - நெல்லை கண்ணனின் பேச்சை பதிவு செய்ததற்கு - இந்த ஒரு பேச்சு போரும் - ஆஸ்கார் , நேஷனல் அவார்ட் நட் க்கு தேவையே இல்லை - எவ்வளுவு உணர்சிகரமான பேச்சு ! - எவள்ளவு உண்மை கலந்த பேச்சு ! இது மாதரி அழகாக செந்தமிழில் எவருமே பேசினதில்லை என்ற உணர்வு ஏற்படுகின்றது. எப்படிப்பட்ட மனிதனை இந்த தமிழகம் , ஏன் இந்த இந்தியா மதிக்க தவறிவிட்டது என்று என்னும் போது மனம் வேதனை படுகின்றது - யார் யாரையோ புகழ்கின்றோம் இறந்தபின்னும் , இருக்கும்போதும் - ஆனால் மதிக்க படவேண்டியவர் , புகழபடவேண்டியவர் NT ஒருவரே - இதுதான் நெல்லை கண்ணனினின் பேச்சின் சாரம் - மிகவும் ரசிக்கவேண்டிய இணைப்பு - பலமுறை கேக்கவேண்டிய பதிவு -

:smokesmile::(

vasudevan31355
19th October 2013, 07:37 AM
நன்றி வாசு சார், ரவி சார், ராகவேந்திரன் சார், பொன் ரவிச்சந்திரன் சார்.

vasudevan31355
19th October 2013, 07:37 AM
ராகவேந்திரன் சார்,

'குலமகள் ராதை' தலைவரின் ஸ்டில்லை போட்டு தூக்கத்தைக் கெடுத்து விட்டீர்கள். பிபிசி தலைவர் ஸ்டில் அற்புதம். நெல்லைக் கண்ணன் அவர்களின் தீந்தமிழ் சுவைப் பேச்சை உலகமறியச் செய்ததற்கு நன்றி!

vasudevan31355
19th October 2013, 07:41 AM
பரணி சார்

தங்கை படத்தின் விட்டுப் போன பாகத்தை தங்களுக்காக விரைவில் தர முயற்சிக்கிறேன். தங்களால் நானும் இன்று தங்கையைக் கண்டு களிக்கப் போகிறேன்.

vasudevan31355
19th October 2013, 08:05 AM
டியர் சந்திரசேகரன் சார்,

தாங்கள் பதிவிட்ட இயக்குனர்களுடன் நடிகர் திலகம் புகைப்பட வரிசையை திரும்பத் திரும்ப கண் கொட்டாமல் பார்க்கிறேன் பார்க்கிறேன் பார்த்துக் கொண்டே இருக்கிறேன். கண்களை அந்தப் பக்கம் இந்தப் பக்கம் திருப்ப முடியவில்லை.

RAGHAVENDRA
19th October 2013, 08:30 AM
நடிகர் திலகம் 85வது பிறந்த நாள் விழாவில் பிரபு கணேசன் அவர்களின் நன்றியுரை

http://www.youtube.com/watch?v=dH6QUwi3sEM&feature=youtu.be

vasudevan31355
19th October 2013, 09:57 AM
இயக்குனர்கள் வரிசை.

சி.வி.ராஜேந்திரன்.

http://www.nadigarthilagam.com/image10/CVRspeaks.jpghttp://padamhosting.com/out.php/i97509_NEW7.jpg

செல்ல டார்லிங். இந்த டார்லிங் டார்ஜிலிங் எவ்வளவு அழகோ அதைவிட அழகாக நடிகர் திலகத்தைக் காட்டுவதையே பிழைப்பாகக் கொண்டது. இந்த மனிதரைப் பிடிக்காத ரசிகர்களே இருக்க முடியாது. அழகின் மேல் பிரியம் கொண்ட அழகான இயக்குனர். ஸ்ரீதரின் பட்டறையிலிருந்து வெளி வந்து விழுந்த பட்டை தீட்டப்பட்ட வைரம்.

இவருடைய முதல் 'அனுபவமே புதுமை'. கனவில் இவர் முத்துராமனுக்கும் ராஜஸ்ரீக்கும் நடத்திய கல்யாண ஊர்வலத்தைப் பார்த்து வியந்த நடிகர் திலகம் இவரை சந்தித்து இவருக்கு 'கலாட்டா கல்யாணம்' நடத்த அனுமதி தந்தார். கலாட்டா கல்யாணத்திலேயே கலியுக மன்மதனை களிப்பு மேலிடக் காட்டியவர். கிழங்களை நீக்கி குமரிகளை மட்டுமே ஜோடியாகக் காட்டிய புதுமை இயக்குனர். வந்த இடம் நல்ல இடம் என்று நிரூபித்த 'ராஜா'. 'நீதி' என்றும் இவர் பக்கம். உலக அழகையெல்லாம் ஒன்று சேர்த்து குழைத்து ராஜா என்ற புது உலக ஆணழகனை பிரம்மாவுக்குப் போட்டியாக உருவாக்கிய திரை பிரம்மா.. நடிகர் திலகத்தின் உடம்பின் ஒவ்வொரு அணுவையும் அழகு படுத்திப் பார்த்து, பார்த்து பார்த்து ரசித்து செதுக்கி, 'வீட்டுக்கு வீடு' ரசிகர்களை பைத்தியமாக்கிய சிறந்த சிற்பி.

அழகு மட்டுமல்ல...திலகத்தை இளமைத் துள்ளாட்டம் போட வைத்து நம்மைத் தள்ளாட்டாம் போட வைத்த இளவல். 'சுமதி உன் சுந்தரி' என்று நடிக தெய்வத்திற்கு 'பொன்னூஞ்சல்' கொடுத்த வள்ளல். நடிகர் திலகத்திற்கு புதுமையான சண்டைக் காட்சிகளைக் கொடுத்து பொய் முகங்களைக் கிழித்து, சம கால நடிகர்களை தூங்க விடாமல் பண்ணிய புண்ணியமும் இவருக்கு உண்டு. 'நில்,கவனி',நடிகர் திலகத்தைக் 'காதலி' என்று அனைவரையும் காதலிக்க வைத்த சூத்திரதாரி. 'வாணி ராணி' யை வாகை சூட வைத்த 'சிவகாமியின் செல்வன்'. 'மனிதரில் மாணிக்க'த்தின் மகத்தான சீடன்.

காலம் மாறினாலும் நடிகர் திலகத்தின் மேல் உள்ள காதல் மாறாமல் அம்பிகாவுடன் ஆணழகனுக்கு டூயட் தந்து வெற்றிக்கொடி நாட்டியவர். 'உனக்காக நான்' என்று திலகத்திற்காகவே வாழ்க்கையில் பிறந்த, அன்புச் 'சங்கிலி'யால் அவருடன் நம்மை இணைத்த 'தியாகி'. 'என் மகன்' என்ற அப்பாவை ராஜாவாக்கி மகனை 'ராஜா நீ வாழ்க' என்று வாழ்த்தியவர்.

கமலையும் ரதியையும் 'உல்லாசப் பறவை'களாய் பறக்கவிட்டவர் ரஜனியை வைத்து 'கர்ஜனை'யும் புரிந்தார். இவர் நமக்குக் கிடைத்த பம்பர் 'லாட்டரி டிக்கெட்'.

இவருடைய படங்களில் ஒரு காட்சியிலேனும் தலை காட்டுவது இவருக்கு வழக்கம். சென்டிமெண்ட். வெற்றிப் படங்களைக் குவித்ததில் குருவை மிஞ்சியவர். நடிகர் திலகத்தின் மீது நிஜமான பாசம் கொண்டவர்.

இந்தி ரீமேக்கை அதைவிட சிறப்பாக எடுப்பதில் வல்லவர். நிறைய நட்சத்திரப் பட்டாளத்தை மேய்ப்பார். எல்லோருக்கும் சமமான வாய்ப்பு தருவார். நடிகர் திலகத்தின் கிருதா முடி கூட இவர் படத்தில் அழகோ அழகு. அழகைப் பொறுத்தவரையில் நோ காம்ப்ரமைஸ்.

முதியவர், நடுத்தர வயதினர் என்று அதிகம் ரசிகர்களைக் கொண்டிருந்த நடிகர் திலகத்திற்கு இளமைப் பட்டாளத்தை அப்படியே அள்ளிக் கொண்டு வந்து போட்டு ரசிகர்கள் ஆக்கிய பெருமை கொண்டவர். கல்லூரி மாணவர்களை நடிகர் திலகத்தின் மேல் காதல் கொள்ள வைத்தவர்.

படங்களை இயக்கும் நேர்த்தி அற்புதம். வெற்றி சங்கு ஊதியே தீருவார். காட்சிகள் இளமைத் திமிருடன் செல்லும். ஆக்ஷன் பேக்கேஜ் அற்புதம்.

குருவை மிஞ்சும் காமிராக் கோணங்கள் வைப்பதில் வல்லவர். காட்சிகள் பச்சென்று பசை போல் மனதில் ஓட்டும். 'சந்திப்பை' வெள்ளிவிழா சந்திக்கச் செய்தவர். என்றும் அன்னை இல்லத்தின் அன்புப் பிள்ளை. இன்றும் மாறா இளமை. அதே பற்று.

அதுதான் எங்கள் டார்லிங் சி.வி ஆர்.

KCSHEKAR
19th October 2013, 10:20 AM
இயக்குனர்கள் வரிசை.
சி.வி.ராஜேந்திரன்.

டியர் வாசுதேவன் சார்,
சி.வி.ஆர் குறித்து திரைப்படங்களையே திரைமாலையாக, சிறப்பாக புகழ் மாலை சூட்டியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.

கிழங்களை நீக்கி குமரிகளை மட்டுமே ஜோடியாகக் காட்டிய புதுமை இயக்குனர். இவர் நமக்குக் கிடைத்த பம்பர் 'லாட்டரி டிக்கெட்'.
அதுதான் எங்கள் டார்லிங் சி.வி ஆர்.
அருமையான, பொருத்தமான வர்ணனை.

Gopal.s
19th October 2013, 11:56 AM
vasu,
Single handedly doing wonders in this thread. Parasakthi Stills,Mynavathi nayagi varisai, directors' series all are exemplary. You are turning versatile blogger. All very Enjoyable posts Keep it up.(Special Thanks for Ilaya Thalaimurai and Group Songs)

Gopal.s
19th October 2013, 12:03 PM
Ravi,
Wonderful write-up.Pl.Continue.

Ragavendar Sir,
Special Thanks for Ilaya Thalaimurai and vanisree week.

Krishnaji,
Interesting.

KCS
Outstanding Photo Album. Your contribution with your Krishnan write-up is very good. You are a good writer too.

uvausan
19th October 2013, 02:04 PM
வாசு சார் - உங்கள் நடை NT யின் நடை போல மிகவும் ரசிக்க தக்க வகையில் உள்ளது - நன்றாக உள்ளது என்பது வெறும் ஒப்புக்கு சொல்வதுபோல் இருக்கும் - அதை விட சொல்லவேண்டுமென்றால் , ஒரு மிக பெரிய பிரமாண்டத்தின் அடையாளமாக உள்ளது உங்கள் வர்ணனை - கோபால் சார் சொல்வது மிகவும் பொருத்தமானது.

:smokesmile::)

uvausan
19th October 2013, 02:14 PM
KC sir - உங்கள் Association with NT மிகவும் பொறாமை படக்கூடிய விஷயம் - அதையும் மிகவும் தன்னடக்குதுடன் வெளிபடுத்துவதில் உங்களுக்கு நிகர் நீங்கள் தான் !

:smokesmile::)

uvausan
19th October 2013, 02:35 PM
NT பத்தி சிலர் மட்டம் தட்டும் போது , நமது ரத்தம் கொதிப்பது உண்மை - கீழ்கண்ட உபமானம் "அப்படிப்பட்ட சமயத்தில் நாம் ஏன் இப்படி பார்க்ககூடாது ? " என்பதை பற்றியது :

The Law of the Garbage Truck


One day I hopped in a taxi and we took off for the airport. We were driving in the right lane when suddenly a car jumped out of a parking space right in front of us. My taxi driver slammed on his brakes, skidded, and missed the other car by just inches! The driver of the other car whipped his head around and started yelling at us. My taxi driver just smiled and waved at the guy. And I mean he was really friendly.


So I asked, 'Why did you just do that? This guy almost ruined your car and sent us to the hospital!'


This is when my taxi driver taught me what I now call 'The Law of the Garbage Truck.'


He explained that many people are like garbage trucks. They run around full of garbage, full of frustration, full of anger, and full of disappointment. As their garbage piles up, they need a place to dump it and sometimes they'll dump it on you. Don't take it personally. Just smile, wave, wish them well, and move on. Don't take their garbage and spread it to other people at work, at home, or on the streets.


The bottom line is that successful people do not let garbage trucks take over their day. Life's too short to wake up in the morning with regrets, so..... 'Love the people who treat you right. Forgive the ones who don't.'


Life is ten percent what you make it and ninety percent how you take it!

I know it is easy to preach !!! :smokesmile::)

uvausan
19th October 2013, 02:53 PM
Dear Pon Ravichandran Sir - like his versatile acting styles , he can easily be correlated to many stories and themes - you take any character in Hindu mythological stories or from other religions or for that matter our history - things can be related to his styles, mannerism , modesty , ability of maintaining gratitude , unconditional love and charitable mind - Like nellai kannan said , people love and regards after 12 years of his departing to abode still remain intact and will remain green forever. Our concern is not NT had not performed but his performance was not recognized as it deserved. Bharathi was not given due recognition during his living but even today bharathi stands tall in so many hearts - we cannot find a substitute for Bharathi - we were under British rules for donkey number of years - we got our independence in mid night - we are still not awaken from our old school of thoughts for refining our mindsets - as long as this immaturity continues , we undervalue always all those who add meaning to existence

gkrishna
19th October 2013, 04:18 PM
dear vasu sir

you have posted one still and queried about the name of the movie (with kalaiselvi and jaya )

kindly inform the name of the movie.

Regards

Gk

vasudevan31355
19th October 2013, 04:41 PM
கிருஷ்ணா சார்

அந்தப் படம் 'தேவன் கோயில் மணியோசை'. பாதியில் நின்று போன படம். 'பேசும் படம்' இதழில் இப்படத்தின் ஸ்டில்கள் நிறைய வந்தன. தலைவர் மிக அழகாக இருப்பார்.

Harrietlgy
19th October 2013, 07:02 PM
நன்றி மிக மிக நன்றி வாசு சார். எதிர்பார்ப்புடன் உள்ளேன் .

Harrietlgy
19th October 2013, 07:06 PM
நெல்லை கண்ணன் பேச்சு முழுவதும் மிகவும் அருமை நன்றி ராகவேந்திரா சார்.

Russellfcv
19th October 2013, 07:29 PM
சிவாஜிகணேசனின் கடைசி நிமிடங்கள்: உடன் இருந்த தாணு உருக்கமான தகவல்கள்
பதிவு செய்த நாள் : சனிக்கிழமை, அக்டோபர் 12, 11:22 pm ist

சிவாஜிகணேசன் உயிர் பிரியும் வேளையில், அருகில் இருந்தவர் கலைப்புலி தாணு.

சிவாஜிகணேசன் நடித்த 'மன்னவரு சின்னவரு' படத்தை கலைப்புலி தாணு தயாரித்தார். அந்த காலக்கட்டத்தில், அவர்கள் நெருக்கமாகப் பழகினார்கள்.

சிவாஜியுடனான தனது அனுபவங்கள் பற்றி தாணு தொடர்ந்து கூறியதாவது:-

'நடிப்பு என்று செட்டுக்கு வந்துவிட்டால், முழுக்க அதன் மீதே கவனமாக இருப்பார் என்று சிவாஜி சாரை சொல்வார்கள். 'மன்னவரு சின்னவரு' படத்தில் நடித்த நேரத்தில், எனக்காக ஒரு சிக்கன நடவடிக்கையையும் அவர் மேற்கொண்டார்.

பெங்களூரில் உள்ள ஒரு லாட்ஜில் அன்று படப்பிடிப்பு. செட்டுக்கு வந்த சிவாஜி சார் பேச்சுவாக்கில் அங்கிருந்தவர்களிடம், 'எவ்வளவு வாடகை?' என்று கேட்டிருக்கிறார். அவர்கள் ஒருநாள் படப்பிடிப்புக்கு 25 ஆயிரம் ரூபாய் வாடகை என்று சொல்லியிருக்கிறார்கள்.

உடனே சிவாஜி சார், 'இந்த இடத்தோட ஓணர் எங்கே? என்று கேட்டதோடு அப்படியே 'புலி எங்கே?' என்று என்னையும் தேடியிருக்கிறார். நான் அங்கில்லை என்று தெரிந்ததும், லாட்ஜின் மானேஜரிடம் 'இந்த சின்ன இடத்துக்கு ஒரு நாள் வாடகை 25 ஆயிரம் என்பது ரொம்ப ரொம்ப அதிகம்.

10 ஆயிரம்தான் கொடுக்கலாம். உங்க முதலாளி கிட்ட நான் சொன்னேன் என்று சொல்லு. அவர் வாடகையை குறைக்கலேன்னா நான் நடிக்கிறதா இல்லே' என்று கூறியிருக்கிறார்.

உடனடியாக லாட்ஜின் உரிமையாளருக்கு தகவல் சொல்லப்பட்டு, அவரும், சிவாஜி சாரே கூறுகிறார் என்பதால், 10 ஆயிரம் வாடகைக்கு கொடுப்பதாகச் சொல்லியிருக்கிறார்.

இந்த தகவல் எனக்கு தெரியவந்தபோது, 'என் மீது கொண்ட அக்கறையில்தான் சிவாஜி சார் இப்படி செய்திருக்கிறார்' என்பதை உணர்ந்து கொண்டேன். என் மீது அவருக்கு எப்பேர்ப்பட்ட அன்பு இருந்திருந்தால் இப்படி முயற்சி மேற்கொண்டிருப்பார்!

'மன்னவரு சின்னவரு' படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போதுதான், அவருக்கு சளித்தொந்தரவு இருந்தது எனக்குத் தெரியும். தினமும் `ஆக்சிஜன் டபிளேசர்' மூலம் தொண்டை சளியை அப்புறப்படுத்திக் கொண்டிருந்தார்கள். அப்படிச் செய்யாவிட்டால் நுரையீரலில் கிருமிகள் சேர்ந்துவிடும் என்பதையும் தெரிந்து கொண்டேன்.

'எனக்காக இப்படி கஷ்டப்படுகிறீர்களே?' என்று கேட்டபோது, 'யார் யாருக்கோ பண்றேன். என்னைநேசிக்கிற உனக்காக இந்த சின்ன கஷ்டத்தைத் தாங்கமாட்டேனா புலி' என்று திருப்பிக் கேட்டார்.

பழகிவிட்டால் ஆத்மார்த்தமான அன்பைத் தருவதில் சிவாஜி சாருக்கு இணை அவர்தான். நாமாக அவரை சந்திக்காவிட்டாலும் அவராக நம்மை தொடர்பு கொண்டு நட்பு பாராட்டுவார்.

இப்படித்தான் ஒருநாள் நான் காரில் நந்தனம் தேவர் சிலை அருகில் சென்று கொண்டிருந்தேன். அப்போது சிவாஜி சாரின் உதவியாளரும் டிரைவருமான முருகன் 'சிவாஜி சார் உங்களை சந்திக்க விரும்புகிறார். உடனடியாக போனில் தொடர்பு கொண்டு பேசுங்கள்' என்றார்.

உடனடியாக நான் போனில் சிவாஜி சாரை தொடர்பு கொண்டேன். என் குரலைக் கேட்டவர், 'புலி, எங்கிருக்கே?' என்று கேட்டார். 'நந்தனம் பக்கம் காரில் வந்து கொண்டிருக்கிறேன்' என்றேன்.

'நேரா இங்கே வர்றே! என் கூட சாப்பிடறே! எவ்வளவு நேரத்தில் வருவே?' என்று கேட்டார்.

'5 நிமிஷத்தில் வந்துடறேன்' என்றேன்.

இதைத்தொடர்ந்து என் கார் நேராக போக் ரோட்டில் உள்ள சிவாஜி சார் வீட்டுக்கு போனது.

நான் போகும்போது சிவாஜி டைனிங் டேபிளில் உட்கார்ந்து இருந்தார். அவருடன் சிங்கப்பூர் டி.டி. துரை என்பவரும் இருந்தார். (அவரை சிவாஜி சாரே எனக்கு அறிமுகப்படுத்தினார்).

மூவருமாய் மதிய உணவருந்துகிறோம். சாப்பிட்டு முடித்ததும் டி.டி.துரை கிளம்புகிறார். அவர் போனதும் அதுவரை இயல்பாய் காணப்பட்ட சிவாஜி சாரின் முகத்தில் திடீரென உற்சாகம் தொலைந்து போனது. அப்போது அவரது மகள் வயிற்றுப் பேத்தியின் கணவர் (சுதாகரன்) ஜெயிலில் இருந்தார். அதுபற்றி பேசிய சிவாஜி சார், 'புலி! இந்த சூழல்ல என்னை கடவுள் ஏன்தான் இன்னும் வெச்சிருக்கார்ன்னே தோணுது.

குழந்தைகள் முகத்தைப் பார்க்க முடியலை. நிம்மதி இல்லாம இருக்காங்க. நான் எதைச்சொல்லி அவங்களை சமாதானப்படுத்துவேன்? இவங்களுக்குக்கூட எதுவுமே செய்யமுடியாம வாழறதைவிட போய்ச்சேரலாம். அண்ணன் எம்.ஜி.ஆர். கொடுத்து வெச்சவரு. நல்ல பேரு, புகழ் செல்வாக்கோட போய் சேர்ந்தாரு. நான்தான் அந்த பஸ்ஸை `மிஸ்' பண்ணிட்டேன்' என்றார். சொல்லும்போதே குரலில் அத்தனை விரக்தி.

நான் அவரை என்வரையில் சமாதானப்படுத்தினேன். 'உங்க நல்ல மனசுக்கு எல்லாமே நல்லவிதமாக நடக்கும் சார்' என்று சொன்னேன்.

'என்னமோ புலி! இதையெல்லாம் உங்கிட்ட சொல்லணும்னு தோணிச்சு. ஏதோ கடவுள் கண்ணைத் தொறந்தா சரி' என்றவர், 'நான் வரட்டுமா?' என்று ஓய்வெடுக்க மாடிக்கு புறப்பட்டார்.

அப்போதுகூட என் மனதில் சின்னதாய் ஒரு திருப்தி. நடிப்புக்கே திலகமானவர், கலைப்பொக்கிஷமாக விளங்குபவர், தன் மனதில் இருந்த பாரத்தை இறக்கி வைக்க ஒரு சுமைதாங்கியாக என்னைக் கருதினாரே! அந்த மனநிறைவுடன் அங்கிருந்து கிளம்பினேன்.

இது நடந்து 15 நாள் கழித்து எனக்கு டைமண்ட் பாபுவிடம் இருந்து போன். 'சிவாஜி சார் சீரியசான நிலையில் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்' என்று கூறியவர், என்னை வந்து பார்த்துவிட்டுப் போகும்படியும் சொன்னார்.

அதிர்ந்து போன நான், அப்போதே காரில் அப்பல்லோ பறந்தேன். சிவாஜி சார் 'ஐசியூ' வில் (தீவிர கண்காணிப்பு பிரிவு) அனுமதிக்கப்பட்டிருக்கிறார். ராம்குமார் அங்கிருந்த சிவாஜி குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் கூறுகிறேன். அப்போது ராம்குமார் என்னிடம் உடைந்த குரலில் 'அப்பாவின் இறுதி மூச்சு அடங்கிக் கொண்டிருக்கிறது. இன்னும் கொஞ்ச நேரம்தான் இருப்பார்' என்று சொல்ல, நான் மனம் கேட்காமல் பதற்றமாய் சிவாஜி சார் இருந்த `ஐசிï'வுக்குள் போக ராம்குமாரை அழைக்கிறேன். 'எனக்கு சக்தி இல்லை சார்!' என்று அவர் கூற, பிடிவாதமாக அழைத்துக் கொண்டு போகிறேன்.

தனது ஒப்பற்ற நடிப்பால் சரித்திரம் படைத்தவர். உலகமே திரும்பிப் பார்க்க வைத்த மாபெரும் கலைச்சக்கரவர்த்தியின் இறுதி மூச்சு கொஞ்சம் கொஞ்சமாக அடங்கிக் கொண்டிருப்பதை பார்க்கிறேன். தன் தந்தையின் அந்த கடைசிக் கட்டத்தை காண மனம் தாங்காததால், அழுதுகொண்டே ராம்குமார் அறையில் இருந்து வெளியேறினார்.

நான் மட்டும் நிற்கிறேன். சில நொடிகளில் நடிப்பின் இமயத்தின் இறுதிமூச்சு, கொஞ்சம் கொஞ்சமாக அடங்கி முடிகிறது. இதைப் பார்த்த ஒரே துர்பாக்யசாலி நான்தான். சிவாஜி சாரை அன்னை ராஜாமணி அம்மையார் ஈன்றெடுத்த அந்த வினாடியில் தன் குழந்தையின் மூச்சுக்காற்றை எப்படியெல்லாம் சுவாசித்து மகிழ்ந்திருப்பார். அந்த குழந்தை கலைத்தாயின் தவப்புதல்வனாகி 70 வயது கடந்த நிலையில் இன்று இறுதி மூச்சை நிறுத்திக் கொள்வதை பார்க்கும் நிலைக்கு ஆளான நான் துர்பாக்கியசாலிதானே.

துயரம் நெஞ்சையடைக்க, கண்கள் ஆறாகப் பொங்க அவர் பாதம் தொட்டு வணங்கி அறையை விட்டு வெளியே வந்தேன். ஒரு சகாப்தம் அமரத்துவம் ஆனதை பார்க்க நேர்ந்த அந்த சோகத்திலும், சிவாஜி சார் என் மீது வைத்திருந்த அன்புதான் இந்த நேரத்தில் என்னை இங்கே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது என்பதையும் எனக்குள்ளாக உணர்ந்தேன்.

சிவாஜி சார் காலமாகி 41-வது நாளில் அவருக்கு மத்திய அரசு சிறப்புத் தபால் தலை வெளியிட்டது. பிரமோத்மகாஜன் தலைமையில் பிரபல இந்தி நடிகர் சத்ருகன்சின்கா இந்த தபால் தலையை வெளியிட்டார்.

சென்னை மியூசிக் அகாடமியில் நடந்த இந்த விழாவில், கட்சி பாகுபாடின்றி அனைத்துக் கட்சியைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டது இன்னொரு சிறப்பு. இது சிவாஜி என்ற மாபெரும் கலைஞருக்கு கிடைத்த சிறப்பு. இந்த விழாவில் சிவாஜி சாரின் நடிப்பு வரலாற்றை வைகோ விவரித்த அழகு, ஒட்டுமொத்த பார்வையாளர்களின் கரகோஷத்தைப் பெற்றது.'

இவ்வாறு தாணு கூறினார்.

anasiuvawoeh
19th October 2013, 07:53 PM
Dear Ravi Sir,thanks for your reply.Thats why whenever I talked to my friends who dont understand the value of NT because of their immaturity,I say with pride that I am LUCKY to be a NT fan.With Regards.

anasiuvawoeh
19th October 2013, 07:55 PM
Dear Saraswathi Madam,I think your article will bring tears in everyone who love NT and the way Thaanu has narrated its heart-breaking.

Harrietlgy
19th October 2013, 08:00 PM
தலைவரின் இறுதி நிமிடங்களை தாணு அவர்கள் எழுதியதை பதிவிட்டு கண்ணில் நீர் வரவழைத்து விட்டீர்கள் ,

uvausan
19th October 2013, 08:25 PM
பதிவுக்கு நன்றி மேடம் - கண்களை குளமாக்கிவிட்டது இந்த பதிவு - எவள்ளவோ படங்களில் மரணத்தை தழுவிருக்கிறார் கதைக்காக , நடிப்புக்காக - ஆனால் ஏன் உண்மை மரணம் ஒரு நடிப்பாக இல்லாமல் போய்விட்டது ????
:(:(:(:(:(:(:(:(:(:(::

Russellfcv
19th October 2013, 08:33 PM
தாணு தயாரிப்பில் சிவாஜி கணேசன் நடித்த 'மன்னவரு சின்னவரு' படப்பிடிப்பின்போது நடந்த நிகழ்ச்சிகள்
பதிவு செய்த நாள் : வெள்ளிக்கிழமை, அக்டோபர் 11, 10:55 PM IST


தயாரிப்பாளர் தாணு கேட்டுக்கொண்டதற்கிணங்க, உடல் நலக்குறைவாக இருந்த நேரத்திலும் அவரது 'மன்னவரு சின்னவரு' படத்தில் சிவாஜிகணேசன் நடித்தார்.

சிவாஜி நடித்த படத்தை தயாரித்த அனுபவம் குறித்து தாணு கூறியதாவது:-

'நடிகர் திலகம் சிவாஜி சார் நடிக்கும் படத்தை தயாரிக்க வேண்டும் என்ற ஆசை யாருக்குத்தான் இருக்காது? ஆனால் எனக்கு இந்த வாய்ப்பு தற்செயலாக அமைந்தது.

ஒருநாள் நான் வீட்டில் இருந்த நேரத்தில் நடிகர் அர்ஜூன் அவரது நண்பர் கோவை மணியுடன் வீட்டுக்கு வந்திருந்தார். பரஸ்பர பேச்சுவார்த்தைக்குப் பிறகு வீட்டை சுற்றிப் பார்த்தவர், வாஸ்து அமைப்பு சரியாக இருக்கிறது என்றும் பாராட்டினார்.

நான் முதன் முதலில் தயாரித்த 'யார்' படத்தின் நாயகன் அர்ஜூன். எனவே படம் பற்றி பேச வந்திருப்பார் என்று நான் எண்ணிய நேரத்தில் அர்ஜூனே ஆரம்பித்தார். 'தாணு சார்! உங்கள் தயாரிப்பில் 'யார்' படத்தில் நான் நடித்து 13 வருஷம் ஆகிறது. அந்தப் படத்துக்கு டிரைவ்இன் உட்லண்ட்ஸ் ஓட்டல் எதிரில் 100 அடிக்கு 'கட்அவுட்' வைத்திருந்தீர்கள். அதுவரை, 'ஒருவாரம் ஓடும் பட ஹீரோ' என்ற நிலையில் இருந்த நான், உங்களின் 'யார்' படம் வந்த பிறகுதான் 'நூறு நாள் பட ஹீரோ' ஆனேன். இப்போது உங்கள் தயாரிப்பில் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க விரும்புகிறேன்' என்றார்.

'சரி. நடியுங்கள். கதை தயார் செய்வோம்' என்றேன்.

உடனே அர்ஜூன், 'சார்! நான் தெலுங்கில் நடித்த `சுபவார்த்தா' என்ற படம் நன்றாக ஓடியது. படத்தில் சவுந்தர்யா என் ஜோடியாக நடித்திருந்தார். இந்தப் படத்தின் தமிழ் ரீமேக், டப்பிங் உரிமையை நான் வாங்கியிருக்கிறேன். இதையே தமிழில் படமாக்கலாம்' என்றார்.

எல்லாம் தயாராகத்தான் வந்திருக்கிறார். அர்ஜூனைப் பொறுத்த வரையில் 'யார்' படத்தை நான் எடுத்த அந்த காலகட்டத்தில் என்னிடம் ரொம்பவே பிரியம் காட்டுவார். மரியாதையும் அதிகம். படப்பிடிப்பு தளத்தில் நான் சாப்பிட்டேனா என்பதை தெரிந்து கொண்ட பிறகே அவர் சாப்பிடுவார். படப்பிடிப்பு இல்லாத நாட்களில் வீடு தேடி வந்து விடுவார். படத்தின் அடுத்தடுத்த காட்சிகள் எடுப்பது பற்றி ஆர்வமாக கேட்டுத் தெரிந்து கொள்வார்.

இப்படி என் மீது அர்ஜூன் காட்டி வந்த அன்பு, இப்போதும் எனக்குள் பசுமையாக இருந்ததால், நானும் அந்த தெலுங்குக் கதையையே தமிழில் தயாரிக்க முடிவு செய்தேன். இப்படித்தான் தமிழில் 'மன்னவரு சின்னவரு' உருவானது.

படத்தில், சிவாஜி சார் நடித்த கேரக்டரில் முதலில் அவர் நடிப்பதாக இல்லை. `விசுவைக் கேட்டுப் பார்க்கலாம். அவர் கிடைக்கவில்லை என்றால் விஜயகுமாரை முயற்சிக்கலாம்' என்கிற எண்ணத்தில் இருந்தேன்.

திடீரென்றுதான் 'இந்த கேரக்டரில் சிவாஜி சார் நடித்தால் எப்படி இருக்கும்?' என்று ஓர் எண்ணம் பளிச்சிட்டது. நான் இதுபற்றி சிவாஜி சாரின் மக்கள் தொடர்பாளராக இருந்த `டைமண்ட்' பாபுவிடம் பேசியபோது, அவர் சிவாஜியின் மூத்த மகன் ராம்குமாரிடம் தகவல் சொல்ல, ராம்குமார் என்னை சந்திக்க விரும்பினார்.

நானும் ராம்குமாரை சந்தித்தேன். அவரிடம், 'சிவாஜி சாரை வைத்து இதுவரை நான் படம் தயாரிக்கவில்லையே தவிர, அவர் நடித்து வெளிவந்த `எதிரொலி', `பிராப்தம்', `ராஜபக்தி', `படிக்காத மேதை', `குங்குமம்', `படித்தால் மட்டும் போதுமா', `மரகதம்', `கல்யாணியின் கணவன்' போன்ற படங்களை விநியோகம் செய்திருக்கிறேன்' என்றேன்.

சிவாஜி சாரிடம் நான் வைத்திருந்த மரியாதை, ராம்குமாரை கவர்ந்தது. 'சரி! அப்பாவை பார்த்துப் பேசுங்கள். கொஞ்சம் உடல் நலக்குறைவாக இருப்பதால் படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தோம். ஆனால் நீங்கள் இவ்வளவு விரும்பி கேட்டு வந்த பிறகு, நீங்கள் அப்பாவிடமே பேசிவிடுங்கள்' என்றார்.

நான் சிவாஜி சாரை போக் ரோட்டில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தேன். என்னைக் கண்டதும், 'வா, புலி!' என்றார், சிம்மக்குரலில். எனது தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் 'கலைப்புலி' என்பதால் என்னை எங்கே பார்த்தாலும் 'புலி' என்றுதான் அழைப்பார்! அந்த அன்பான வரவேற்பில் நான் நெகிழ்ந்த நேரத்தில், வைகோ எப்படி இருக்கிறார் என்று கேட்டார்.

'நல்லா இருக்கார்' என்றேன்.

தொடர்ந்து அன்றைய சினிமா, அரசியல் பற்றி பேச்சு நீண்டது. கலைஞர் பற்றி இளம் வயதில் கலைஞருக்கும் அவருக்குமான நட்பு பற்றியெல்லாம் பேசினார். 'என் வரையில் அரசியல் சரியான விதத்தில் அமையவில்லை. எதிர்பாராமல் பல துரோகங்களை சந்தித்து சமாளிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. சரி விடு! உன் படத்திலே நான் நடிக்கணும்னு சொன்னியாமே! கதையை சொல்லு பார்ப்போம்' என்றார்.

நான் கதையை சொன்னேன். 'நான் பண்றேன். ராம்குமாரை பார்த்துட்டுப்போ' என்றார்.

சிவாஜி சார் என் படத்தில் நடிக்க சம்மதித்து விட்ட சந்தோஷத்தில், அதுவரை ஹீரோவாக நடித்தபோது அவர் வாங்கியிருந்த சம்பளத்தைவிட இரண்டு மடங்கு சம்பளம் கொடுத்தேன். அப்படிக் கொடுத்ததில் எனக்கொரு மனநிறைவு.

கலையுலகில் அவர் ஒரு சகாப்தம். அதுமட்டுமின்றி நேரம் தவறாமைக்கும் எடுத்துக்காட்டாக இருந்தார். படப்பிடிப்பு நாளில் ஒரு மணி நேரத்துக்கு முன்பே மேக்கப் போட்டு ரெடியாக இருப்பார். அவரோடு பழகிய நாட்கள் என் வாழ்வின் வசந்த காலம்.

என் இல்லத்தில் இருந்து வரும் உணவை அவர் உண்பதும், அவர் வீட்டில் இருந்து வருகிற உணவை எனக்குத் தந்து உண்ண வைப்பதுமாய் அந்த அன்புப் பரிமாற்ற நாட்கள் இப்போது நினைத்தாலும் பொற்காலம்.

படப்பிடிப்புக்காக பெங்களூரில் இருந்து மைசூருக்கு காரில் என்னுடன் வருவார். அப்போதும் பழைய விஷயங்களை நினைவுகூர்ந்து பேசிக்கொண்டு வருவார்.

சிவாஜி சாருக்கு அப்போது உடல்நிலை பாதித்து இருக்கிறது என்பது எனக்குத் தெரியாது. படத்தில் அவர் ஆவியாக வந்து எதிரிகளை பழிவாங்குகிற காட்சியை இரவில்தான் எடுத்தோம்.

இந்தக் காட்சியில் ஆவி வரும்போது, திகில் ஏற்படுத்துவதற்காக அறை முழுக்க புகையைப் பரவவிட்டோம். சிவாஜி சாருக்கு `புகை அலர்ஜி' என்பது எனக்குத் தெரியாது. தெரிந்திருந்தால் அவருக்கு ஒத்துக்கொள்கிற மாதிரி காட்சி வைத்திருப்போம். ஆனால் தனக்கான எந்த பாதிப்பையும் வெளிக்காட்டாமல் அந்தக் காட்சிகளில் எல்லாம் சிவாஜி சார் நடித்து முடித்தார். தொழில் என்று வந்துவிட்டால் அதில் எந்த அளவுக்கு ஈடுபாடு காட்டவேண்டும் என்பதற்கு அவர்தான் உதாரணம்.

சாப்பிட்டு முடித்ததும் அவருக்கு கொடுக்க வேண்டிய மருந்து மாத்திரைகளை அவரது டிரைவரும், உதவியாளருமான முருகன் கொடுப்பார். ஒரு மாபெரும் நடிப்புக் கலைஞரின் உடல்நல விஷயத்தில் தாயன்புக்கு ஈடாக அக்கறை காட்டிய முருகனின் அக்கறை என்னைக் கவர்ந்தது. அதனால்தான் சிவாஜி சாரின் காலத்துக்குப் பிறகு முருகனை என் ஆபீசில் பணியில் சேர்த்துக்கொண்டேன்.

படத்தில் சிவாஜி சார் நடிக்கிறார் என்பது உறுதியானதுமே படம் பெரிய விலைக்குப் போகும் என்று அர்ஜூன் கணக்குப் போட்டிருக்கிறார். அதனால் தனது நண்பர் கோவை மணியை என்னை பார்க்க அனுப்பினார். கோவை மணி வந்ததும் வராததுமாக விஷயத்தை தொடங்கிவிட்டார். 'சார்! படத்தில் சிவாஜி சாரும் நடிக்கிறதால `ஸ்டார் வேல்ï' படமாயிட்டுது. வியாபாரமும் பெரிய அளவில் இருக்கும்னு அர்ஜூன் எதிர்பார்க்கிறார். அதனால் அவருக்கு ஏற்கனவே நீங்க பேசின சம்பளத்தைவிட 25 லட்சம் கூடுதலா எதிர்பார்க்கிறார்' என்றார். ------> THE ACTOR WHO DID NOT HAVE MARKET TOO HAS DEMANDED 25 LAKHS MORE BECAUSE OF THE STAR VALUE INCREASE DUE TO NADIGAR THILAGAM's INCLUSION !!!! THIS RECORD IS ONE SAMPLE OF THE STAR VALUE NADIGAR THILAGAM ENJOYED EVEN AT THE AGE OF 70!!.

SAGA NADIGAN 10 LAKHS NADIGAR THILAGATHAALA ADHIGAMA SAMBALAM VAANGINAAN PAARU....IDHU DHAANYAA UNMAYAANA SAADHANAI !!!

அவர் இப்படிச் சொன்னது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. 'பேசின சம்பளத்தை வாங்குவதுதானே சரி' என்று சொல்லிப் பார்த்தேன். வந்தவரோ அர்ஜூனிடம் போனில் பேசி கடைசியில் 10 லட்சமாவது கூடுதலாக தந்தால்தான் ஆயிற்று' என்றார். இதனால் அர்ஜூன் கேட்ட கூடுதல் பணம் 10 லட்சத்தை வருத்தத்துடன் கொடுத்து அனுப்பினேன்.

படம் வளர்ந்தது. 30 நாட்கள் இடைவிடாமல் சிவாஜி சாரும் நடித்துக் கொடுத்தார். சிவாஜி சாரை எனது தரப்பில் மேலும் கவுரவப்படுத்த விரும்பி டைட்டில் பாட்டில் அவரைப் புகழ்ந்து 'மன்னவரு சின்னவரு! மனசுக்கேத்த நல்லவரு! மனசார வாழ்த்தி பாடுங்கடி! என் மன்னவரை மனசார வாழ்த்தி பாடுங்கடி' என்று எழுதினேன். இந்தப் பாட்டுக்கு நானே இசையும் அமைத்தேன்.

இதற்குள் இந்தப்பாட்டு பற்றிய தகவல் சிவாஜி சாரின் காதுக்குப் போயிற்று. அவர் ஆச்சரியத்துடன், 'புலியா (தாணு) எழுதிச்சு? புலியா மிïசிக் பண்ணிச்சு?' என்று மாறி மாறி கேட்டு ஆச்சரியப்பட்டிருக்கிறார். 'அது வெறொண்ணுமில்லே! புலிக்கு என் மேலே அவ்வளவு பிரியம்' என்று சொல்லி என் மீதான மன நிறைவை வெளிப்படுத்தியிருக்கிறார்.

என் குடும்பத்தின் மீது அவர் காட்டிய அன்பு, அளவு கடந்தது. எனது மனைவி கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு இருந்த நேரம் அது. இந்த தகவல் சிவாஜி சாருக்கு தெரியவர, என் இல்லம் வந்து, மனைவியை பார்க்க விரும்பினார். நான் அவரிடம், 'என் மனைவிக்கு தனது உடல் நலிவு என்பது மட்டுமே தெரியும். கேன்சர் பாதிப்பால்தான் உடல் நலிவு என்பதை சொல்லாமல் வைத்திருக்கிறோம். அதனால் நீங்கள் வரும்போதும் சொல்லவேண்டாம்' என்று கேட்டுக்கொண்டேன்.

சிவாஜி சார், மனைவி கமலா அம்மாளுடன் வந்தார். சிவாஜி சாரின் பாடல்கள் எனது மனைவிக்கு உயிர். முடியாமல் படுக்கையிலேயே வேதனையுடன் நாட்களை நகர்த்திய அந்த நேரத்திலும் சிவாஜி சாரின் பாடல்கள்தான் அவங்களுக்கு ஆறுதல். சிவாஜி சாரின் 'கொடி அசைந்ததும் காற்று வந்ததோ' பாட்டை திரும்பத் திரும்ப டிவியில் போட்டு ரசிப்பாங்க.

இப்படி சிவாஜி சாரின் ரசிகைக்கு அவரே திடீரென்று வீட்டுக்கு வந்தால் எப்படி இருக்கும்? நோயுற்ற பிறகு ரொம்ப நாளைக்குப் பிறகு அவங்க முகத்தில் அப்படியொரு பிரகாசத்தைப் பார்த்தேன். முடியாத நிலையிலும் எழுந்து உபசரிக்கத் தொடங்கிட்டாங்க.

சிவாஜி சாரும் 'இந்தப் பக்கமா கமலாவும் நானும் கபாலீசுவரர் கோவிலுக்கு வந்தோமா... அப்படியே உங்க வீட்டுக்கும் வந்துட்டோம்' என்றார்.

கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு சிவாஜி சார் புறப்பட்டபோது என் மனைவி பூஜையறைக்குப் போய் வெள்ளித் தூக்கில் ஜாக்கெட் துண்டு, மஞ்சள் குங்குமம் எடுத்து வைத்து கமலா அம்மாளிடம் கொடுத்து காலில் விழுந்து வணங்கினாங்க. அதுவரை மனதை திடமாய் வைத்திருந்த கமலா அம்மாள், என் மனைவியின் இந்த அன்பில் கலங்கிப் போனார். இப்போது சிவாஜி சாரின் கண்களிலும் நீர்த்திவலைகள். அதை மறைத்தபடி அந்த தம்பதிகள் அன்புடன் பிரியாவிடை பெற்றுப்போனார்கள். நான் பார்த்து வியந்த அன்புத் தம்பதிகள் என்றால் அது சிவாஜி -கமலா அம்மாதான்.'

vasudevan31355
19th October 2013, 08:41 PM
Dear Saraswathi Madam

http://1000awesomethings.files.wordpress.com/2009/01/man-crying.jpg

Russellfcv
19th October 2013, 08:54 PM
Dear Friends,

நடக்காத விஷயங்களை, கற்பனையில் உருவான பொய் கதைகளை என்னமோ உண்மையாக நடந்தாமாதிரி இட்டு கட்டி எழுதுபவர்கள் இந்த உலகில் இன்னமும் உள்ளதை நாம் கண் கூடாக காண்கிறோம்.

அப்படி இருக்க திரை உலகில் நல்ல நிலையில் இருக்கும் திரு கலைபுலி தாணு அவர்கள் அவர் வாயால் உரைத்து பதிவு செய்யப்பட்ட பத்திரிகையில் வந்த எழுத்து வடிவமாகும் மேற்கூறிய இரண்டு தகவல்களும்.

நடிகர் திலகத்தை பற்றி நாம் ஒன்றும் என்றும் இல்லாத பொய்யான கற்பனை கதைகளை ஒரு சிலரை போல அவிழ்த்து விடவேண்டியது இல்லை !

இது போல நடுநிலை பத்திரிகைகளில் வந்த ப்ரசூரிக்கபட்ட செய்திகளை போட்டாலே போதும் !

vasudevan31355
20th October 2013, 08:34 AM
தினமலர் வாரமலர். அக்டோபர் 20,2013,

http://img.dinamalar.com/data/uploads/E_1382084763.jpeg

நான் சுவாசிக்கு சிவாஜி! - ஒய்.ஜி. மகேந்திரா (4)

பத்மா சேஷாத்ரி பள்ளி விழாவில் தான், முதன் முறையாக, சிவாஜியை பார்த்தேன். "இவர் தான் நடிகர் சிவாஜியா... வெள்ளை வேஷ்டி, சட்டையில் கம்பீரமாக இருக் கிறாரே...' என்ற எண்ணம் தான், எனக்கு, அப்போது தோன்றியது. சிறுவன் என்பதால், எனக்கு, கத்திச் சண்டை நிறைந்த "அட்வெஞ்சர்' படமும், லாரல் ஹார்டி காமெடி படங்களும் பிடிக்கும். என் தந்தை நடத்தி வந்த, "யுனைடெட் அமெச்சூர் ஆர்ட்டிஸ்ட்ஸ்' குழுவினர், சிவாஜி படங்களைப் பற்றி, காரசாரமாக விமர்சிப்பர். வியந்து கவனிப்பேன்.

நுங்கம்பாக்கத்தில், பாலா டூரிஸ்ட் கம்பெனி பின்புறம் உள்ள, சந்திரலேகா முத்துசாமி தெருவில் தான் எங்கள் வீடு இருந்தது. கூரை வேய்ந்திருந்த மொட்டை மாடியில் தான், பத்மா சேஷாத்ரி பள்ளி ஆரம்பமானது. காலை 9:00 மணி முதல், மாலை 3:00 மணி வரை, வகுப்பும், பின், யு.ஏ.ஏ., நாடக குழுவின், நாடக ஒத்திகை மற்றும் நுங்கம்பாக்கம் லேடீஸ் கிளப் கூட்டங்கள் என, எல்லாமே, அங்கு தான் நடக்கும்.

அங்கே, நுங்கம்பாக்கம் லேடீஸ் கிளப் அங்கத்தினர்களுக்காக, 16 எம்.எம்.மில்., படிக்காத மேதை படம் திரையிட்டனர். 16 எம்.எம்., ரீல்கள் என்பதால், ஒவ்வொரு ரீல் முடிந்த பின், கழற்றி, மறு ரீல் போட்டு, பல இன்டர்வெல்களுடன் படம் ஓடும்.

அதுதான், நான், முதன்முதலில் பார்த்த சிவாஜி படம். அப்போது, எனக்கு பத்து வயது இருக்கும். அந்த படம், என்னை முழுமையாக உலுக்கிவிட்டது. முரட்டுத் தனம், வெகுளித்தனம், யதார்த்தம் இவற்றின் கலவையாக அமைந்திருந்த ரங்கன் கதாபாத்திரம், என் மனதில், ஆழமாக பதிந்து விட்டது.

என் தந்தை ஒய்.ஜி.பி.,யிடம், "ரங்கனாக வந்த அதே ஆள் தானா, இந்த சிவாஜி...' என்று கேட்டேன். அதற்கு அவர், "அதுதான்டா நடிப்பு; அவர்தான்டா சிவாஜி...' என்றார். இப்படம், தியேட்டரில், மறுபடியும் ரிலீசான போதும், வீட்டிலும் பல முறை, அந்த படத்தை பார்த்திருக்கிறேன்.

ஒரு நேர்மையான, விசுவாசமான வேலைக்காரரின் பிரதிபலிப்பே ரங்கன். அதில் ஒரு காட்சி, என்னை, வியக்க வைத்தது. ஈ.வி.சரோஜாவை, பெண் பார்க்க வருவர். மற்றவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது, சிவாஜி நேராக சென்று, மாப்பிள்ளையின் புஜங்களைத் தொட்டுப் பார்த்து, "ஸ்ட்ராங்கான ஆள் தான்' என்று, செய்கையிலும், தன் கண்களாலும் உறுதிபடுத்துவார். அந்த வீட்டில், ரங்கன் எடுத்துக் கொள்ளும் உரிமையை, இந்த ஒரு ஆக்ஷனில் வெளிப்படுத்துவார்.

ரங்கன் வாழ்க்கையில் முன்னேற வேண்டும், வேலைக்காரனாகவே கடைசி வரை இருக்க கூடாது என்று, ரங்காராவ் தீர்மானித்து, "தனிக்குடித்தனம் செல்லுங்கள்...' என்று சொல்லுவார். அந்தக்காட்சியில், ரங்காராவ் - சிவாஜி இருவரின் முகபாவம், குரலை, ஏற்றி - இறக்கி பேசுவதில் காட்டும் வித்தியாசம்... எல்லா நடிகர்களுக்கும், அது, ஒரு பெரிய பாடம்.

படிக்காத மேதை படத்தை, எத்தனை முறை வேண்டுமானாலும், "ரீ-மேக்' செய்யலாம்; சிவாஜி செய்த ரங்கனை, "ரீ-மேக்' செய்ய முடியாது. சிவாஜியே, மறுபடியும் பிறந்து வந்து தான் செய்ய முடியும்.

சிவாஜி, ரங்காராவிற்கு மட்டுமல்ல, இயக்குனர் பீம்சிங்கிற்கும் இது நிகரற்ற படம். உள்ளத்தை நெகிழச் செய்யும், கருத்துள்ள வசனங்கள் எழுதிய, கே.எஸ்.கோபால கிருஷ்ணனுக்கும், அப்படம், ஒரு மைல் கல்.

கீழ்வானம் சிவக்கும் படத்தின் படப்பிடிப்பு, பெங்களூரில் நடந்து கொண்டிருந்தது. முக்தா சீனிவாசன் என்னிடம், "டேய்... என்னிடம், அண்ணனுடைய டேட்ஸ் இருக்கு. உன்னுடைய, "பரீட்சைக்கு நேரமாச்சு' நாடகத்தை, அவரை வைத்து செய்தால், நன்றாக இருக்கும்...' என்றார்.

மேட்டரை சிவாஜியிடம் சொன்ன போது, என்னைப் பார்த்து, அவருக்கே உரித்தான நக்கலோடு, "ஆஹா... சார் கதை சொல்லப் போகிறாரா... கதை சொல்வதிலே, சார் பெரிய ஆள் ஆச்சே... சரி, நாளை காலை, 7:00 மணிக்கு, ஷூட்டிங் ஸ்பாட்டில், என்கிட்ட கதை சொல்லு...' என்றார்.

மறு நாள் காலை, 7:00 மணிக்கு, நான் செல்லும் போதே, 9:00 மணி ஷூட்டிங்கிற்கு, "மேக் - அப்' போட்டு, தயாராக இருந்தார். கலைவாணியை வேண்டி, என் வாக்குத் திறமையை திரட்டி, கிட்டத்தட்ட ஒரு மணி நேரம், என் நாடக கதையை கூறினேன். கதை கேட்டு முடித்ததும், என்னிடம், "நாளைக்கு இதே நேரத்திற்கு வா. அப்போது சொல்றேன்...' என்று சொல்லி, படப்பிடிப்பு வேலையை, கவனிக்க சென்று விட்டார்.

அடுத்த நாள், காலை 7:00 மணி. அதே லொகேஷன். சிவாஜி என்னைப் பார்த்து, "டேய்... நேற்று, நீ சொன்ன கதையிலே, என்னுடைய கேரக்டர், நரசிம்மாச்சாரியை பற்றி, நான் புரிந்து கொண்டதை சொல்றேன். சரியா இருக்கா பாரு...' என்று கூறி, கிட்டத்தட்ட ஒரு மணி நேரம், அவர், எனக்கு கதாபாத்திரத்தை விளக்கினார். எனக்கே பிரமிப்பாக இருந்தது. நாங்கள், நாடகத்தில் காண்பித்த நரசிம்மாச்சாரியை விட, ஒரு படி மேலேயே போய் விட்டார்.

நடிப்பின் மீது, எவ்வளவு பற்றுதல் இருந்தால், ஒரே நாளில், தன் கேரக்டரை புரிந்து கொண்டிருப்பார். அது மட்டுமில்லாமல், "சரியாக இருக்கா சொல்லு' என்று, என்னிடம் கேட்கிறாரே என்று, நெகிழ்ச்சியாக இருந்தது. சிவாஜி, கதையை, "ஓ.கே'., செய்த பின்பும், சிறு தயக்கத்துடன், நான் அங்கேயே நின்று கொண்டிருந்தேன். அதைப் புரிந்து கொண்ட அவர், லேசான புன்முறுவலுடன், "கவலைப்படாதடா பரதேசி. நீ தான் வரதுக்குட்டி...' என்று சொன்னாரே பார்க்கணும். என் மனதிற்குள், மங்கள வாத்தியங்கள் முழங்கின. எங்களுடைய, யு.ஏ.ஏ.,வின், நான்கு நாடகங்கள், சிவாஜியை வைத்து, திரைப்படங்களாக தயாரிக்கப் பட்டிருக்கின்றன. அவை, அறிவாளி, பார் மகளே பார், கவுரவம், பரீட்சைக்கு நேரமாச்சு. நான்கிலும், என் தந்தை ஒய்.ஜி.பி., நாடகத்தில் செய்த பாத்திரங்களை. சிவாஜி, மேலும் மெருகூட்டி, திரைப்படத்தில் நடித்திருந்தார்.

ஒரு முறை, காஞ்சி மகா பெரியவர், சென்னை தாம்பரத்திற்கு, விஜயம் செய்த போது, திருவருட்செல்வர் திரைப்பட போஸ்டர்களை பார்த்து, "என் போட்டோ போட்டு, சினிமாக்காரங்க ஏன் போஸ்டர் அடிச்சிருக்காங்க?' என்று கேட்டார். "திருவருட்செல்வர் என்ற படத்தில், சிவாஜி கணேசன், அப்பர் சுவாமி வேஷத்தில் நடிச்சிருக்காரு. அந்த போஸ்டர் தான் இது...' என்று, அவருக்கு விளக்கம் தரப்பட்டது. மகாபெரியவரை, மனதில் வைத்து தான், அப்பர் கதாபாத்திரத்தில், நடித்திருந்தார் சிவாஜி. "கண்மேலே கை வைத்து பார்ப்பது, முகத்தோற்றம் எல்லாம், தன்னை மாதிரியே செய்திருப்பதாக சொல்லி, சிவாஜியை, மடத்தில் வந்து, தன்னை பார்க்கும்படி' முக்தா ஸ்ரீனிவாசன் மூலமாக, சொல்லி அனுப்பியிருந்தார் மகாபெரியவர். முக்தாவும், சிவாஜியும் மடத்திற்கு சென்று, மகா பெரியவரை தரிசனம் செய்தனர். கொஞ்ச நேரம், அப்படியே சிவாஜியை பார்த்து விட்டு, ஆசிர்வாதம் செய்தார். "ஒரு வினாடியாவது, மகாபெரியவர் தரிசனம் கிடைக்காதா' என்று, எண்ணற்ற பக்தர்கள் ஏங்கும்போது, மகாபெரியவரே, சிவாஜியை அழைத்து, ஆசிர்வாதம் செய்துள்ளார் என்றால், அந்த பாக்கியம் எத்தனை பேருக்கு கிடைக்கும்?

சிவாஜி, கோவில்களுக்கு, யானைகளை தானமாக கொடுப்பதை, மகாபெரியவர், பாராட்டி, "யானையை தானம் செய்றது, மிகச்சிறந்த தானம்...' என்று, சொன்னார். வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில், வெள்ளையம்மா என்ற குட்டி யானையை, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள, புன்னை மாரியம்மன் கோவிலுக்கு, தானமாக கொடுத்திருந்தார் சிவாஜி. சில ஆண்டுகளுக்குப் பின், அந்த யானை, தஞ்சை பெரிய கோவிலுக்கு கொடுக்கப்பட்டது. சமீபத்தில், வெள்ளையம்மா யானை (வயது 63) மரணமடைந்த செய்தியை, பத்திரிகைகளில் படித்திருப்பீர்கள்.

தகுதியுள்ள புது இயக்குனர்களுக்கு வாய்ப்பு அளிப்பதிலும், தான் இதுவரை பணிபுரியாத இயக்குனர்களோடு, இணைந்து படங்கள் செய்வதிலும், சிவாஜிக்கு, எப்போதுமே ஆர்வமுண்டு; விரும்புவார். முக்கிய பாத்திரங்களில் அவர் நடித்த, 288 படங்களில், 90 இயக்குனர்களுடன், அவர் இணைந்து பணியாற்றியிருக்கிறார் என்பது, வியப்பான செய்தி.

— தொடரும்.

எஸ். ரஜத்

JamesFague
20th October 2013, 09:29 AM
Mr Vasu Sir,

Suda Suda Morning article from you about our NT in Dina Malar.

Richardsof
20th October 2013, 09:57 AM
1972

http://i1273.photobucket.com/albums/y412/esvee6/Scan20003_zpsa8c08c25.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/Scan20003_zpsa8c08c25.jpg.html)

RAGHAVENDRA
20th October 2013, 01:00 PM
வினோத் சார்
மிகவும் அபூர்வமான பொக்கிஷமாக நாட்டியாஞ்சலி காபாலகிருஷ்ணன் பாராட்டு நிகழ்ச்சியில் நடிகர் திலகம் பங்கேற்ற நிழற்படத்தைப் பகிர்ந்து கொண்டமைக்கு மிகவும் நன்றி.

vasudevan31355
20th October 2013, 08:56 PM
இயக்குனர் வரிசை.

பி.மாதவன் பி.ஏ.

என்னுடைய நெ.1 இயக்குனர். காரணம் நான் சொல்லித்தான் உங்களுக்குத் தெரிய வேண்டுமா? 'ஞான ஒளி' யை நம்முள் பாய்ச்சிய, மா தவம் செய்து நாம் பெற்ற மாதவன் ஆயிற்றே!

அன்னை இல்லத்து நாயகனை வைத்து முதன் முதலில் 'அன்னை இல்லம்' இயக்கி வெற்றிக் கனியைப் பறிக்க ஆரம்பித்தவர். 'மடி மீது தலை வைத்து படுத்து விடியும் வரை' தூங்க ஆசைப்பட்ட ஜோடிப் புறாக்களைக் காட்டி கார்த்திக் சார் போன்றோரை தூங்க விடாமல் பண்ணிய பெருமைக்குச் சொந்தக்காரர். 'நீலவானம்' படைத்து தேவிகாவை நீண்ட நாட்களுக்கு மறக்க முடியாத பாத்திரப் படைப்பைக் கொடுத்தவர். ஓஹோஹோ....ஓடும் எண்ணங்களே!

வெரைட்டி வேந்தன். பல்வேறு வேடங்களை நடிக மன்னனுக்குத் தந்து அவரை பட்டை உரித்து வேலை வாங்கியவர். நடிகர் திலகத்தை சக்கையாய் சாறாகப் பிழிந்தது மூன்று பேர். ஒன்று பீம்சிங் அய்யா. இரண்டாவது ஏ.சி.டி. மூன்றாவது இந்த மாமனிதர்.

சொந்த பட கம்பனி அருண் பிரசாத் மூவீஸ். தயாரிப்பு அவரே! பாலமுருகன், மாதவன், பி.என்.சுந்தரம் கூட்டணி என்றால் களேபரம்தான்.

'யாரை நம்பியும் நான் பொறந்தவன் இல்லே.. நடிகர் திலகத்தை மட்டுமே நம்பிப் பிறந்தவன்' என்று 'எங்க ஊர் ராஜா' (அருண் பிரசாத் மூவீஸ்) ஸ்ரீ விஜய ரகுநாத சேதுபதியை இளமையில் இருந்து முதுமை வரை அங்கம் அங்கமாக துடிக்க வைத்த சாதனையாளர்.

அன்னை இல்லத்தை மட்டுமல்ல 'வியட்நாம் வீட்டை'யும் விவரமாகக் கட்டிய மேஸ்திரி.

இரண்டு வீட்டுக்கும் சொந்தக்காரரை மிகவும் கவர்ந்த மனிதர். 'நீ என்னை நம்பிப் பிறந்ததால் நான் உன்னை நம்பி பொறுப்பை ஒப்படைக்கிறேன்' என்று நடிகர் திலகம் இவரிடம் தன் சொந்தப் படங்களின் இயக்கத்தை இன்முகத்துடன் அளித்தார். வியட்நாம் வீட்டில் ரிட்டையர்மென்ட் காட்சியை வைத்து ரிட்டையர்ட் ஆகாமல் நம் நெஞ்சில் உட்கார்ந்தவர். 'எங்க ஊர் ராஜா' வில் அப்பா, மகன் என்று தலைவரை மாறுபட்ட கோணங்களில் காட்டியவர் உலகத் திரையுலகிற்கே பிரஸ்டிஜ் தந்த பத்மநாபனை பசுமரத்தாணி போல எல்லோருடைய உள்மனதிலும் பதிய வைத்தார். 'பாலக்காட்டு பக்கத்திலே ஒரு அப்பாவி ராஜா' வை காட்டிய பாலக்காட்டில்லா மாதவன்.

அப்படியே இப்படி வந்தீர்களென்றால் டமாலென்று தடாலடியாக 'ராமன் எத்தனை ராமனடி' (அருண் பிரசாத் மூவீஸ்) என்று பல ராமன்களைக் காட்டி அசத்திவிடுவார். சி.வி.ஆருக்கு போட்டி போல நடிகர் திலகம் விஜயகுமாரை அழகான மச்சம் வைத்த மன்மதனாகக் காட்டி கொள்ளை அழகால் மனசைக் கொள்ளை கொள்ள வைப்பார்.

ஒரே படத்தில் ஒரே கேரக்டரே பல்வேறு குணாதிசியங்கள் கொண்ட பாத்திரமாக நடிகர் திலகம் பரிமளிப்பதை இவர் இயக்கத்தில் நாம் காணலாம். இது இவருடைய ஸ்பெஷாலிட்டி.

பாருங்கள்...

பிரஸ்டீஜாரை அப்பாவி இளைஞனாக, கண்டிப்பான ஆபீஸ் பொது மேலாளராக, பொறுப்பான குடும்பத் தலைவராக, வேலை ஒய்வு பெற்றபின் வேறு பரிமாணம் கொண்டவராக பல்வேறு உணர்ச்சி வசப்பட்ட நிலைகளில் காண்பிக்க இவரை விட்டால் ஆளில்லையோ?!

ரா.எ.ராமனடியை எடுத்துக் கொள்ளுங்கள். முறுக்கு மாலை ராமன், நொறுக்குத்தீனி ராமன், ஆயா மேல் அன்பு கொண்ட ராமன், காக்கா வலிப்பு ராமன், காதலிக்கும் ராமன், சவால் விடும் ராமன், சம்பாதிக்கும் ராமன், நடிகனாகும் ராமன், அழகனாகும் ராமன், பழி வாங்க வரும் ராமன், காதலில் தோற்று ஏமாறும் ராமன், காதலியை இன்னொருவன் மனைவியாய் பார்த்து பரிதவித்து பரிதாபப்படும் ராமன், (வீர 'சத்ரபதி' சிவாஜி ராமன் வேறு), காதலியின் குழந்தையை தன் மகளாய் வளர்க்கும் ராமன், மகளுக்காக கொலைகாரனாகும் ராமன், ஜெயிலுக்குப் போகும் ராமன் என்று எத்தனை வார்ப்புகள் ஒரே பாத்திரத்தில்! ஆச்சரியமாக இல்லை!

வெறி! வெறி! வெறி! ஒரே படத்தில் நடிகர் திலகத்தின் அத்தனை திறமையையும் காட்டி விட வேண்டும் என்ற கொலை வெறி! அதன் விளைவு?...

கொள்ளை கொள்ளையாய் வெற்றிகள். வெள்ளி விழாக்கள். அருண் பிரசாத்தை சாதாரணமாக எடை போட்டு விடாதீர்கள். சிக்கனத்தில் மன்னன். முதலீடு ரொம்ப கம்மி. பிரம்மாண்ட செட்டுக்கள் இருக்காது. கலர்ப்படமும் அவ்வளவாக இருக்காது. கஞ்சப் பேர்வழி. குறைந்த செலவில் நிறைந்த வெண்மை! அதுதான் பெரிய முதலீடு ஒன்று இருக்கிறதே!

நடிகர் திலகம் என்ற முதலீடு.

அந்த முதலையை மட்டுமே மூலதனமாக வைத்து மூச்சு முட்ட சம்பாதித்த புத்திசாலி இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர். திகட்டாத 'தேனும் பாலும்' என்றும் தந்தவர்.

ஏற்கனவே கொன்னுக்கிட்டுருந்த மனுஷன் 1972 இல் அடிமுடி தெரியாத விஸ்வரூபம் எடுத்தாரே பார்க்கலாம். அடுத்தடுத்து. என்னுடைய 'ஞான ஒளி'. உடனேயே 'பட்டிக்காடா பட்டணமா?'(அருண் பிரசாத் மூவீஸ்)

அதே போலதான். ஒளியில் ஒருத்தருக்கே எத்தனை விதமான பாத்திர சுமைகள்! முன் பாதியில் ஆண்டனியின் பலதரப்பட்ட பரிணாமங்கள், பின் பாதியில் அருணின் அலப்பரைகள். எல்லோர் மனதிலும் 'ஞான ஒளி' ஆழமாய்ப் ஊடுருவியது. ஒருவன் மனதில் மட்டும் ஆலவிருட்சமாய் வேரூன்றியது. அவனிக்கு அவன் ஆண்டனி. (வாசு)தேவனுக்கோ அவன் தேவன். என்னைப் பாருங்கள். ஓநாயையும் குள்ள நரியையும் ஒருங்கே கையாண்டு ஞானத்தால் ஒளியை வெற்றித் திக்குகளில் பரப்பிய என் டைரக்டரை பாருங்கள். ஜேயார் மூவீசை ஜே ஜேவென்று ஜெயமாக்கி ஜோராக்கிய என் இயக்குனரைப் பாருங்கள்.

பட்டிக்காடா பட்டணமா? கருப்பு வெள்ளைப் படங்களில் முறியடிக்கப்படாத, முறியடிக்க முடியாத வசூல் சாதனை. பட்டிக்காட்டில் மட்டுமல்ல. பட்டணத்திலும்தான். சோழவந்தான் மூக்கையன் கொடி சேர,சோழ, பாண்டிய நாட்டிலும் மட்டுமல்ல... எட்டுத் திக்கிலும் பறந்தது. இதிலும் பாருங்கள் முன் பாதியில் கிராமத்து மூக்கையன். பின் பாதியில் நவநாகரீக ஹிப்பி முகேஷ். என்ன ஒரு கையாடல்! என்ன ஒரு இயக்க ஆளுமை!

இந்தக் காலத்தில் சொல்வதென்றால் சொல்லி அடித்த கில்லி. சொல்லாமலும் பல கில்லிகளை அடித்த மாதவன்.

ஒரு ரங்கதுரை ராஜபார்ட்டுக்கு அளித்த மறக்க முடியா வேடங்கள். அனைவரயும் இதயம் கனக்கச் செய்து அனுப்பிய உன்னத இயக்கம். இதிலும் ஒரு மனிதனுக்கு எத்தனை வேடங்கள் தந்து சவால் விட்டார் இயக்குனர்? சளைத்தானா மன்னவன்? நடிப்பால் நம் மனதைத் துளைத்தானே! 'அம்மம்மா! தம்பி என்று நம்பி' இயக்குனர் பொறுப்பை மாதவன் வசம் ஒப்படைத்தாரோ' ராஜபார்ட் ரங்கதுரை'!

விட்டாரா! காவல் துறை அதிகாரிகளின் காவல் தெய்வமாக எஸ்.பி.சௌத்ரியை படைத்து 'தங்கப் பதக்கம்' வாங்கிக் கொடுத்தாரே! ஒரு நடிகர் திலகம், மற்றும் ஒரு விரைப்பு காக்கி உடுப்பு, ஒரு வீடு செட், ஸ்ரீகாந்த், விஜயா, பிரமிளா,வி.கே.ஆர், சோ (அவ்வளவுதான் வேறு எதுவுமே கிடையாது) இதை மட்டும் வைத்து 'தங்கப்பதக்கம்' இயக்கிக் கொடுத்து உலகம் கண்ட வசூல்களை எல்லாம் தூக்கி சாப்பிட்டு விட்டு ஏப்பம் விடச் செய்தாரே!

'வசூல் சக்கரவர்த்தி' நடிகர் திலகம் என்றால் 'வசூல் இயக்குனர்' மாதவனல்லவோ!

பொதுவாகவே இவர் படங்கள் ஜனரஞ்சகமாகவே இருக்கும். கொஞ்சம் கூட போரடிக்காது. ஆனால் நடிகர் திலகத்தின் மீது பெரும்பான்மையான பாரத்தை ஏற்றி வைத்து விடுவார். இவர் படத்தில் ஆதி அந்தம் எல்லாமே நடிகர் திலகம்தான். மாதவன் படம் என்று சொல்வதை விட நடிகர் திலகத்தின் படம் என்று சொல்ல வைப்பார். அதில்தான் அவருக்கும் பெருமை. மினிமம் கியாரண்டி எல்லாம் இல்லை. மேக்ஸிமம் கியாரண்டிதான். அதுவும் வசூல் பிரளயம்தான். கலெக்ஷன் சுனாமிதான்.

நான் இயக்குனர்களின் நடிகன் என்பவர் நடிகர் திலகம். ஆனால் மாதவன் நடிகர் திலகத்தின் இயக்குனர்.

மறுபடி ஒரு மாறுபட்ட இயக்கம். ஆத்திகத்துக்கும், நாத்திகத்துக்கும் நடக்கும் போரட்ட களம். ஜாலியான இயக்கம். வியக்க வைக்கும் கிளைமாக்ஸ். மனிதனை தெய்வமாக்கி நம் தெய்வத்தை நடிகனாக்கி 'மனிதனும் தெய்வமாகலாம்' என்று சொன்ன இயக்குனர்.

'இப்படிக்கூட ஒரு நடிப்பை நடிக்க முடியுமா! என்று வியப்பு மேலிட, நடிப்பு மன்னவனிடம் மறுபடி நாம் நாம் மயங்கி எங்கள் 'மன்னவன் வந்தானடி' என்று சந்தோஷக் கூக்குரலிட படு ஜாலியாக இயக்கி, துட்டுகளை கட்டு கட்டாய் மறுபடியும் ஜேயார் மூவிஸை அள்ளச் செய்த 'மன்னவன் வந்தானடி'. (இதில் கூட பாருங்கள்... முன் பாதியில் கோமாளி மன்னவன்... பின் பாதியில் கோடீஸ்வர சந்திர மோகன்)

'பாட்டும் பரதமும்' (அருண் பிரசாத் மூவீஸ்) கொடுத்து பரமனின் கால் நரம்புகளையும் நடிக்க வைத்து இயக்கிய சாதனை, இதிலும் முன் பாதியில் பிசினஸ்மேன் மற்றும் பரதக் கலைஞன். பின் பாதியில் பரதத் தந்தை, கிடார் சுமந்த மகன்)

தலையில் ரிப்பன் கட்டுடன் படம் முழுக்க மலைகளின் வழியே குதிரை சவாரி செய்து வில்லனைப் பழி வாங்க துடித்த செங்கோடன் கண்ட 'சித்ரா பௌர்ணமி',

தம்மாத்துண்டு மீசை வைத்து தமாஷாக கலகலக்க வைத்த 'ஹிட்லர் உமாநாத்' என்று

அத்தனை உள்ளங்களையும் அள்ளிய எங்கள் மாதவன்.

ஆமாம். இயக்கத்திலும், வெற்றியிலும், வெள்ளி விழாக்கள் தந்ததிலும், எளிமையிலும், அடக்கத்திலும் ஈடு இணையில்லா மாதவன்.

நடிகர் திலத்தின் மனம் கவர்ந்த

மாபெரும் இயக்குனர் மேதை

பி.மாதவன் பி.ஏ.

(மாதவன் அருண் பிரசாத் மூவிஸில் தயாரித்த 'பொண்ணுக்குத் தங்க மனசு' ஒரு வெள்ளி விழாப் படம். நடிகர் விஜயகுமாரை அறிமுகப்படுத்தியவர். (விஜயகுமாருக்கு பி.டி.ரட்சகன் குரல்) சங்கர் சலீம் சைமன், என் கேள்விக்கென்ன பதில்? என்று ரஜனி படங்களையும் இவர் இயக்கியதுண்டு. இயக்கிய சில முக்கிய படங்கள் தெய்வத் தாய், குழந்தைக்காக, மாணிக்கத் தொட்டில், கண்ணே பாப்பா மற்றும் சில சில ஹிந்தி படங்கள்)

chinnakkannan
20th October 2013, 09:11 PM
வந்து விட்டேன் :)

**

ஒரேயடியாகக் கூட்டம் கதறிய வண்ணம் முண்டியடித்துச் செல்ல “கொஞ்சம் தள்ளாமப் பார்த்துப்
போங்கம்மா. போங்கய்யா” என்று சொல்லி ஒழுங்கு படுத்தி தானும் தொப்பியை எடுத்துக் கண்களைத்
துடைத்துக்கொண்டார்.. அவர் ஒரு போலீஸ்காரர்..
*
நடிகர் திலகத்தின் இறுதி ஊர்வலத்தின் போது தான் கண்டதை இவ்வண்ணம் எழுதியவர் ரா.கி. ரங்கராஜன்..
ஆனந்த விகடனில்..
*
வெளியில் எதற்கோ போய்விட்டு வந்த அவன் “விஷயம் தெரியுமாங்க..சிவாஜி போய்ட்டாராம்” என மனைவியின் சொல் கேட்டு
தளர்ந்து சோஃபாவில் அமர்ந்து விட்டான்..”இந்த இறைவனுக்கு ஏன் கருணையே இல்லை.. ஏன் இவ்ளோ சீக்கிரம் எடுத்துக்கணும்
ஒரு நல்ல நடிகரை,ஜீவனை ஆத்மாவை எனச் சற்றே புலம்பினான் அந்தச் சாதாரண ரசிகனான அவன்....
*
“அவன்” அடியேன் தான்..:sad:
*
சரஸ்வதி லஷ்மியின் பதிவுகள் படித்ததும் இவை நினைவுக்கு வந்தன.ம்ம்
*

chinnakkannan
20th October 2013, 09:22 PM
மாதவன், சிவிஆர் என்றுஅழகாகக் கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள் வாசு சார்..
*
ராகவேந்த்ரா சார் பாலும் பழமும் ஸ்டில்ஸ் பார்த்தேன்..அதை இப்பக் காணோமே..ம்ம் அதை ப் பற்றியும் எழுதுவேன்..
*
ஜி சகுந்தலா //ஆண்பிள்ளைத் தனமான முகம்// இது கரெக்ட்.. அவர் எப்படி இவ்வளவு படம் நடித்தார் என்பதே ஒரு அதிசயம்..கார்த்திக் சார்..
ஆனா அதற்காக குடிமகனே பாட்டே இருக்கக் கூடாதென்றெல்லாம் சொல்லப் படாது..வேண்டுமானால் வேறு ஒரு நடிகையைப் போட்டிருக்கலாம் எனச் சொல்லியிருக்கலாம்..கண்ணதாசனாக்கும்..
*
கோபால் சார்..உங்கள் ஆணையை உடனே செய்யாததற்கு மன்னியுங்கள்.. இதோ விரைவில் வருகிறேன்..
*
எனக்கு என்னமோ சங்கராசார்யாரை நேரில் கண்டு பின்பு தான் அதே வண்ணம் நடிகர் திலகம் நடை நடந்தார், நடித்திருந்தார் என நினைத்திருந்தேன். அவ்வண்ணமே படித்திருந்ததாகவும் நினைவு. ஒய்ஜி எம் கட்டுரையில் தெளிவாகியது..
*

Russelldwp
20th October 2013, 09:23 PM
[QUOTE=Saraswathi Lakshmi;1082997]சிவாஜிகணேசனின் கடைசி நிமிடங்கள்: உடன் இருந்த தாணு உருக்கமான தகவல்கள்
பதிவு செய்த நாள் : சனிக்கிழமை, அக்டோபர் 12, 11:22 pm ist

Dear Saraswathi Lakshmi madam

Really touching information and undigested also. Thanks for your valuable information

C.Ramachandran

JamesFague
20th October 2013, 09:45 PM
Mr Vasu Sir,

Your analysis of our favourite director Mr Madhavan simply superb.

Wellcome Mr Chinna Kannan Sir, after a short gap.

Today in The Hindu there is an article on Kaveri I request Mr Raghavendra Sir to post the
same for the benefit of millions of NT's fans.

Russelldwp
20th October 2013, 09:55 PM
Dear Vasudevan sir

Fantastic Presentation about P.MADHAVAN'S contribution to NADIGHAR THILAGAM'S GREAT MOVIES. SUPERB SIR

C.Ramachandran.

RAGHAVENDRA
21st October 2013, 08:36 AM
வாசு சார்
மாதவன் பற்றிய தங்கள் பதிவினைப் படிக்க நாங்கள் மாதவம் செய்திருக்க வேண்டும் ... அந்த அளவிற்கு அருமையாக அலசியுள்ளீர்கள்...பாராட்டுக்கள்...

RAGHAVENDRA
21st October 2013, 08:36 AM
சி.க. சார்... வருக மீண்டும்...

RAGHAVENDRA
21st October 2013, 08:37 AM
http://www.sangam.org/taraki/articles/2005/images/2002071900990601.jpg

Nadigar Thilagam’s films in TV Channels 21.10.2013 – 27.10.2013


Tenali Raman – K TV - 21.10.13 – 1 pm
Panam – J Movies – 24.10.13 – 6 am
Marumagal (?) – J Movies - 25.10.13 – 9 am
Vidivelli – J Movies – 22.10.13 – 1 pm
Engiruntho Vandhal – Mega 24 – 22.10.2013 – 6 pm
En Magan – Murasu TV – 23.10.2013 – 7.30 pm
Ethiroli – Murasu TV – 27.10.2013 – 7.30 pm
Galatta Kalyanam – Sun Life – 25.10.2013 – 7 pm
Iru Malargal – Sun Life – 26.10.2013 – 7 pm
Marutha Naattu Veeran – Vasanth TV – 26.10.2013 – 2 pm
Muthal Thedhi – Vasanth TV – 27.10.2013 – 2 pm

Gopal.s
21st October 2013, 11:27 AM
சிவாஜியின் காதல்கள்-3

ராஜா ராணி-1956.

இதுவரை நான் பேசியதெல்லாம் intellectual காதல்கள்.இதெல்லாம் காதலில் சேர்த்தியா என்றே உலகம் பேசி கொண்டிருக்கிறது. இப்போது நான் பேச போவது அக்மார்க் உள்ள பூர்வமான காதல்.

அதுவரை தமிழ்திரையே காணாத அதிசயம்.

நிஜமாகவே chemistry கொண்ட அழகான இளைஞன் இளைஞி இணைவு.

நடிப்பு,வயது,அனுசரணை (compatability ) அத்தனையிலும் நூற்றுக்கு நூறு வாங்கி அன்றைய இளைஞர்களின் இதய துடிப்பை எகிற செய்த ஜோடி.

Feelgood என்ற genre ரொமாண்டிக் காமெடி.

அலுப்பு தட்டாத திரைக்கதை ,வசனம்,நல்ல இயக்குனர்.

டீசிங் ,situational காமெடி ,ஜாலியான ஓட்டம் அனைத்தும் கொண்ட அற்புத படம்.

எப்போதாவது கிளைமாக்ஸ் முடிந்த பிறகு ஒரு full டூயட் பாடலை ஒரு ஜோடி பாடி ரசிகர்கள் கலையாமல் ஆடாமல் அசையாமல் உட்கார்ந்த அதிசயம் கண்டதுண்டா?ராஜா ராணியில் சிவாஜி-பத்மினி என்ற அமர காதலர்கள் நிகழ்த்தி காட்டினர்.

60லும்,70 களிலும் இயக்குனர்கள் திணறிய (கே.எஸ்.ஜி,ஸ்ரீதர்,பாலச்சந்தர்) விதவா மறுமணத்தை அலட்சியமாய் அலட்டாமல் சாதித்து காட்டியது இந்த 50 களின் படம்.

சேரன் செங்குட்டுவன்,சாக்ரடிஸ் போன்ற அபூர்வ performance ,இந்த படத்தின் மிக அற்புத காதலை விழுங்கி ஏப்பம் விட்டு நிலைத்து நிற்பது சோகமே.

ராணி என்கிற குருட்டு தகப்பனின் ஏழை பெண் ,சந்தர்ப்ப வசத்தால் ராஜா என்கிற வசதியுள்ள இளைஞனால் பணக்கார பெண்ணாக புரிந்து கொள்ள பட்டு ,அவனிடமே வேலைக்கு சேர்ந்து ,காதல் கனிந்து,உண்மையும் தெரியும் போது,ராணி இளம் வயது விதவை என்ற பேருண்மை திடீரென்று காதலை பெயர்க்க ,பிறகு பரபரப்பான இறுதி காட்சியில் காதலர்கள் சேரும் கதை.

என்னவென்று இந்த படத்தை வர்ணிக்க?இதை பார்க்காதவர்களை சிவாஜி ரசிகன் என்ற லிஸ்ட் டில் நான் சேர்க்கவே மாட்டேன்.(ராகவேந்தர் மட்டும்தான் நிபந்தனை விதிக்க வேண்டுமா?நானும்தான்)இளைமையுடன் கூடிய குறும்பு மின்னி தெறிக்கும் அழகோ அழகு சிவாஜி-பத்மினி.(முத்துலிங்கம் போல நானும் சிறிதே வருந்தினேன் இந்த படம் காணும் போது)

மயக்க மருந்து உட்கொண்டு ராணி தள்ளாடி ராஜாவின் காரில் உட்கார்ந்து கண்ணசர தொடங்கும் இளமை குதூகல திருவிழா. ராஜா வீட்டிற்கு அழைத்து சென்று(தூக்கம் வருதுப்பா என்னும் பத்மினியின் நடிப்பு,பின்னாட்களின் பஞ்ச தந்திரம் தேவயானியை தூக்கி சாப்பிடும்) ,ஏனோதானோ போஸில் போட்டு விட்டு,பத்திரிகையில் வந்த விளம்பர படி பணக்கார பெண்ணாய் (லீலா) இருப்பாளோ என்ற சந்தேகத்தில் ,அவளின் தூங்கும் விதத்தை நேர் செய்து,போர்வையும் போர்த்தும் விதம். மறுநாள் காலை ராணி ஒட்டு கேட்டு லீலாவாகவே தொடர ,அவளை வீட்டில் விட வரும் ராஜாவிடம் இங்கேயல்ல, என்ற டபாய்த்து ,சுலபமாய் நுழைந்து வெளியேறும் வீடாக பார்ப்பது. நுழைந்து பிறகு அமைதியாக வெளியேறி ,பரோபகாரம்-தங்கம்(என்.எஸ்.கே,டி.ஏ.மதுரம்) தம்பதிகள் வீட்டில் குழப்பம் விளைவிக்கும் சமயங்கள். ராஜா, ராணியிடம் சேலை கொடுக்க,துரத்தும் நாய்க்கு பயந்து மாடியேறி ஓடி அமர்க்களம் செய்ய , தங்கத்தையும்,ராஜாவையும் ,பரோபகாரம் சந்தேகிக்க, ராணியையும்,பரோபகாரத்தையும் தங்கம் சந்தேகிக்க ஜாலி நாட்.

வேலைக்கு அமரும் ராணியிடம் சீசீ இதெல்லாம் அவங்களுக்கு ஒரு பொருட்டா ,அவங்க பொழுது போக்கா வேலை செய்யறாங்க ,சம்பளமெல்லாம் வாங்க மாட்டாங்க என்று ராணி வயிற்றில் புளி கரைக்கும் காட்சி தூள். ராணி பிறகு தான் ஒரு 200 ஐ தொலைத்ததாய் சொல்லி சமாளித்து இருநூறை பெறுவார்.

பாபு என்ற அமச்சூர் நாடக நண்பனிடம் முரண் பட்டு ,தானே நாடகம் அரங்கேற்றும் போது,பாபு பணம் கொடுத்து தூண்டி விடும் கலாட்டாவால் துவங்கும் காதல் அத்தியாயம் நம்மை சொக்க வைக்கும்.

எனக்கு மிக பிடித்த காதல் காட்சிகளில் ஒன்று.கல்லடிக்கு தப்பி ஓடும் லீலாவை துரத்தி கொண்டு, ஓடி,இருவரும் ஒரு வாய்க்காலை கடக்க முயலும் போது நனைந்து விட,நடுக்கத்துடன் ,தன வயிற்றுக்குள் நாடகத்திற்காக சுருட்டும் சேலையை லீலாவிற்கு கொடுத்து திருமணம் என்று சொல்லி தீர்மானம் என்று சமாளித்து லவ் மீட்டர் கையை கொடுத்து மாட்டி கொண்டதாய் டபாய்த்து,மீனை கண்ணுக்கு ஒப்பிட்டு வழிந்து,அய்யய்யோ,அநியாயத்துக்கு ஜாலி இந்த காட்சி.

பாபுவுடன் நேரும் கைகலப்பை விலக்க,வீட்டினுள்ளிருந்து பையன் வேஷத்தில் வரும் ராணியை ,போட்டோ பார்த்து அடையாளம் கண்டு ,கட்டு போடும் போது டபாய்ப்பது படு ஸ்வீட்.

டீசிங் சாங் (எஸ்.சி.கிருஷ்ணன்)லீலா லாலி, பூனை கண்ணை மூடி கொண்டால் செம கலாய்ப்பு.

improvisation என்றால் தெரிந்த கொள்ள விரும்பும் ஆட்கள், சிவாஜி-பத்மினி காதல் காட்சியில் சிவாஜி ஒரு மர மட்டையை பறித்து, frisky ஆக காலால் உதைத்து,மட்டையை கையால் உரித்து கொண்டு ,துரு துறுவென்று பண்ணும் இந்த அதகள காதல் காட்சி!! என்னவென்று வர்ணிக்க?

காதலில் ஒருமித்த பின் transister பரிசு காட்சி என்று மகா சுவாரஸ்யம்.

ஒரு இதமான ஜாலி ரைட் இந்த இதமான நகைச்சுவை கலந்த அர்த்தமுள்ள காதல் படம்.

KCSHEKAR
21st October 2013, 11:49 AM
இயக்குனர் வரிசை.
பி.மாதவன் பி.ஏ.
'வசூல் சக்கரவர்த்தி' நடிகர் திலகம் என்றால் 'வசூல் இயக்குனர்' மாதவனல்லவோ!
நான் இயக்குனர்களின் நடிகன் என்பவர் நடிகர் திலகம். ஆனால் மாதவன் நடிகர் திலகத்தின் இயக்குனர்.


டியர் வாசுதேவன் சார்,

நன்றாகச் சொன்னீர்கள். தங்களின் இயக்குனர்கள் வரிசை தொடர் விருவிருப்பாகச் செல்கிறது. பாராட்டுக்கள்.

rsubras
21st October 2013, 11:49 AM
Sad part (from my view) is, there wasnt much buzz about this movie (at least i havent heard much of this movie), when i saw this movie in Raj TV some time back, what glued me to the channel was the scenes in the movie that were ditto copied in a 90's Ramanarayanan movie (thangamani rangamani) ...so intha padatha vachu than antha
padathai paarkara maadhiri aayiduchu :)

........ btw, negative shades konda SSR character pathi sollaliyae........

KCSHEKAR
21st October 2013, 11:55 AM
சிவாஜியின் காதல்கள்-3
ராஜா ராணி-1956.
Feelgood என்ற genre ரொமாண்டிக் காமெடி.
அலுப்பு தட்டாத திரைக்கதை ,வசனம்,நல்ல இயக்குனர்.
டீசிங் ,situational காமெடி ,ஜாலியான ஓட்டம் அனைத்தும் கொண்ட அற்புத படம்.
டியர் கோபால் சார்,
தங்களுடைய விருவிருப்பான விமர்சனங்கள் உண்மையிலேயே அந்தக் கால ஆனந்த விகடன் விமர்சனத்தைவிட சிறப்பாக உள்ளது.

இதை பார்க்காதவர்களை சிவாஜி ரசிகன் என்ற லிஸ்ட் டில் நான் சேர்க்கவே மாட்டேன்.(ராகவேந்தர் மட்டும்தான் நிபந்தனை விதிக்க வேண்டுமா?நானும்தான்)
நல்லவேளை, நான் பார்த்துவிட்டேன். கொஞ்சம் மறந்திருந்த காட்சிகளையும், வியட்நாமிலிருந்து கோபால் என்பவர் அழகாக நினைவுபடுத்திவிட்டார்.

chinnakkannan
21st October 2013, 01:07 PM
//சேரன் செங்குட்டுவன்,சாக்ரடிஸ் போன்ற அபூர்வ performance // கோபால் சார்..இந்தப் படத்தில் சேரன் செங்குட்டுவன் மட்டும் தான் இல்லையோ.. அதுவும் ஒரே ஷாட்டில் வசனம் பேசி நடித்திருப்பார் எனக் கேள்விப் ப்ட்டிருக்கிறேன்.. ரொம்ப வெகு காலத்துக்கு முன்னால் பார்த்த படம்.. ஜோடியும் அழகாக இருக்கும்.. தாங்க்ஸ் குரு.. :)

anasiuvawoeh
21st October 2013, 02:38 PM
Dear Vasudevan Sir,very nice write-up on Director Maadhavan.It was really a flashback

anasiuvawoeh
21st October 2013, 02:45 PM
Dear Gopal Sir, RAJA RANI coverage fine.Though i have been seen the movie long before as a small boy,I haven't seen the same after becoming an adult.Your article tempts me to see again and enjoy which I have missed due to age.I think lot more movies had to be seen,which will give new dimensions because of my maturity both physically and mentally.THANKS/REGARDS

Gopal.s
21st October 2013, 02:46 PM
Vasu,
Your write up on Madhavan is good.Out of 15 movies that he directed for Sivaji , 7were 100 Days out of which 2 were Silver. Another 5 ,though not 100 days were great hits. Only 2 were averege. Impressive Track Record indeed.

vasudevan31355
21st October 2013, 04:38 PM
http://www.thehindu.com/multimedia/dynamic/01623/20cp_Kaveri_jpg_1623824e.jpg

இன்றைய ஹிந்து நாளிதழில் ராண்டார் கை எழுதிய தலைவரின் 'காவேரி' படம் பற்றிய கட்டுரை.

http://www.thehindu.com/features/cinema/cinema-columns/kaveri-1959/article5251239.ece

vasudevan31355
21st October 2013, 04:49 PM
'விடிவெள்ளி' விளம்பரம்

http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/144771d9-e466-4a2f-9f13-4f117559da45_zps6fc715de.jpg (http://s812.photobucket.com/user/adithya961999/media/sivaji%201/144771d9-e466-4a2f-9f13-4f117559da45_zps6fc715de.jpg.html)

vasudevan31355
21st October 2013, 05:00 PM
அபூர்வ நிழற்படம்

http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/devarmagan_zps0a7eb361.jpg (http://s812.photobucket.com/user/adithya961999/media/sivaji%201/devarmagan_zps0a7eb361.jpg.html)

vasudevan31355
21st October 2013, 05:04 PM
ராஜாவும், ராணியும்

http://i1.ytimg.com/vi/zz48wuiYr1M/maxresdefault.jpg

vasudevan31355
21st October 2013, 05:05 PM
Raja Rani

http://i.ytimg.com/vi/-jv8VzpbRQE/0.jpghttp://i1.ytimg.com/vi/xF-GV5H41_M/hqdefault.jpg
http://i1.ytimg.com/vi/vAE6xvRMn34/hqdefault.jpghttp://i1.ytimg.com/vi/sEipFRf3-8s/hqdefault.jpg

mr_karthik
21st October 2013, 05:50 PM
டியர் வாசுதேவன் சார்,

நீங்கள் புதிதாகத் துவங்கி அதகளம் செய்துவரும் 'நடிகர்திலகத்தை இயக்கிவர்கள்' (அதாவது நடிகர்திலகத்தால் இயங்கியவர்கள்) தொடர் படு சூப்பர். எப்படி இப்படியெல்லாம் யோசனைகளை வருகின்றன என்பது ஆச்சரியமாகவே இருக்கிறது. எடுத்த எடுப்பிலேயே ஜெட்வேகம். முதல் பதிவிலேயே ஏ.சி.டி. ராமண்ணா, கே.எஸ்.ஜி. என மூன்று இயக்குநர்களைப் பற்றி மிக அருமையாக அலசிவிட்டீர்கள். (ஏ.சி.டி. பற்றிய பதிவில் தாங்கள் அளித்திருக்கும் நிழற்படத்தில் அவர் எம்.ஜி.ஆரை வைத்து இயக்கிய ஒரே படமான அன்பே வா படத்தின் ஷீல்டுடன் அமர்ந்திருக்கிறார். அவரது எத்தனையோ நிழற்படங்கள் இருக்க, இந்த படத்தை நீங்கள் பதிவிட்டதும், அதிலும்கூட அன்பே வா ஷீல்டை கட் பண்ணாமல் அப்படியே படித்திருப்பதும் தங்கள் பெருந்தன்மையைக் காட்டுகிறது).

மூவரையும் பற்றிய பதிவைப்படித்து முடிப்பதற்குள் தடாலடியாக டார்லிங் சி.வி.ராஜேந்திரன் பற்றிய அற்புதப்பதிவு. அவர் நம் நடிகர்திலகத்தை மிக மிக அழகாகக் காட்டினார் என்பது மிகவும் உண்மையென்றாலும் அந்த நேரத்தில் நடிகர்திலகத்தின் உடல்வாகு அவரை அழகாக காண்பித்தே தீரவேண்டும் என்று எல்லா இயக்குனர்களையும் நிர்ப்பந்தத்துக்குள் தள்ளியது. டார்லிங்கை மட்டும் புகழ்ந்தால் மற்ற இயக்குனர்கள் சண்டைக்கு வருவார்கள். முக்தாசீனிவாசன் (நிறைகுடம்) பிரகாஷ்ராவ் (வசந்த மளிகை) ஏ.சி.டி, (தெய்வமகன் விஜயன், எங்க மாமா கோடீஸ்வரன்), மாதவன் (ரா.எ.ராமனடி நடிகர் விஜயகுமார்), ஸ்ரீதர் (வைரநெஞ்சம் ) ராஜேந்திரபிரசாத் (உத்தமன்) என்று பலர் சண்டைக்கு வரக்கூடும். அதுமட்டுமல்ல நடிகர்திலகத்தை அழகாகக் காட்டிய நம்ம டார்லிங்கே என்மகன், உனக்காக நான் படங்களில் காலை வாரிவிட்டாரே. மேக்கப்பும் விக்கும் சரியில்லை. சி.வி.ஆர். இயக்கிய படங்களைக் கொண்டே அவரைப்பற்றிய புகழுரைகளை அமைத்திருப்பது மிக அருமை.

பி. மாதவனைப்பற்றிய பதிவும் மிக நன்றாக உள்ளது. சொந்தப்படமாக இருந்தாலும் அடுத்தவர் படமாக இருந்தாலும் காசை இறுக்கிப் பிடிப்பதில் மகா '...............' பேர்வழி என்பது கோலிவுட்டில் மிகப்பிரசித்தம். நீங்கள் சொன்னதுபோல நடிகர்திலகம் என்ற பெரிய முதலீடு போதும் என்று நினைத்து செயல்பட்டவர். கோபால் அவர்கள் சொன்னதுபோல இவரது பெரும்பாலான படங்கள் பெரும் வெற்றி பெற்றவை. சித்ரா பௌர்ணமியைப் பற்றி சொல்வதென்றால் பல மைனஸ்கள். முதலில் சரியில்லாத கதை மற்றும் திரைக்கதை, எமர்ஜென்சி சமயமாதலால் சண்டைக்காட்சிகள் சென்சாரில் ரொம்ப அடிபட்டன. அத்துடன் பாட்டும் பரதமும் வெளியான நேரத்தில் (மாதவன் தயாரித்த படங்களிலேயே கொஞ்சம் அதிகம் செலவழித்த படம்) படத்தின் ரிப்போர்ட் சரியில்லாததால் நடிகர்திலகத்தின் அப்போதைய அரசியல் முடிவைப்பற்றி கொஞ்சம் காட்டமாக மாதவன் பேட்டியளிக்க, அதனால் நடிகர்திலகத்தின் சகோதரர் சண்முகத்துக்கும் இவருக்கும் கொஞ்சம் வாங்கல் ஏற்பட்டதால், மேற்கொண்டு இப்படத்தில் மாதவன் இயக்காமல் அவரது உதவியாளர்களான தேவராஜ் மோகன் இயக்கி படத்தை முடித்தனர். நடிகர்திலகம் - மாதவன் இணைந்து மிக மோசமாகப்போன படம் சித்ரா பௌர்ணமி மட்டுமே.

'நடிகர்திலகத்தின் திரை நாயகியர் தொடர்',
'சூப்பர் சண்டைக்காட்சிகள் தொடர்'
'ஆடைகளுக்கென்றே பிறந்த ஆணழகன் தொடர்'
'நடிகர்திலகத்தின் இயக்குனர்கள் தொடர்'
இப்படி தொடராகவே (தொய்வடையாமல்) தொடர்ந்து கொண்டு இருக்கும் தங்களுக்கு நல்வாழ்த்துக்கள்.

தங்கள் பதிவுகளை மறவாமல் பாதுகாத்து வைத்துக்கொள்ளுங்கள். ஏனென்றால் அத்தனையும் முத்துக்கள், வைரங்கள். (முரளி சாரின் 'பாடல்கள் பலவிதம்' தொடருக்கு ஏற்பட்ட நிலையை நினைத்து எனக்கு எப்போதும் அச்சம் உண்டு...)

mr_karthik
21st October 2013, 05:56 PM
டியர் கோபால் சார்,

ஐம்பதுகளில் எனக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்றான 'ராஜாராணி' படத்தின் காதல் பற்றிய அலசல் அருமை. அப்போது வந்த படங்களில் இன்றைக்குப் பார்த்தாலும் செம டெம்போவோடு செல்லும் படங்களில் ராஜாராணியும் ஒன்று. அதை எடுத்துக்கொண்டு அன்றைய சிறந்த ஜோடியான நடிகர்திலகம் பத்மினி (1961 வரை மட்டுமே, அதன்பின் இவரைவிட பொருத்தமான ஜோடி வந்துவிட்டார்) காதல் காட்சிகளை அருமையாக விவரித்துள்ளீர்கள். இவர்களைவைத்து என்.எஸ்.கே. மதுரம் மீதும், மதுரம் என்.எஸ்.கே மீதும் சந்தேகப்படுவது வெகு ஜோர். மேடைப்பேச்சு சீட்டைத் தொலைத்துவிட்டு மேடையில் வந்து என்.எஸ்.கே. முழித்துக்கொண்டே வாய்க்கு வந்தபடி உளறுவது செம காமெடி.

காதல் காட்சிகளில் மேலும் கலக்குங்கள். (வாணிஸ்ரீ படங்கள் துவங்கியதும் சென்சார் போர்ட் தேவைப்படுமோ)...

vasudevan31355
21st October 2013, 06:00 PM
சேரன் செங்குட்டுவனாக மற்றும் சாக்ரடீஸாக நடிகர் திலகம் முழங்குவதை ஆடியோவாக கேட்டு மகிழுங்கள்.

http://gaana.com/song/raja-rani-t/cheran-senguttuvan-dialouge-82206

kalnayak
21st October 2013, 06:15 PM
வாசுதேவன் சார்,
உங்கள் அதகளம் அட்டகாசமாய் இருக்கிறது. நான் தொடர்களை பார்த்திருக்கிறேன். பல தொடர்களை துவங்கி , எந்த தொடரையும் நடுவில் தொங்க விடாமல் தொடர்ந்து கொண்டே புதிது புதிதாய் சிந்தித்து புது தொடரை தொடங்குவதையே தொடர்ந்து கொண்டு இருக்கும் உங்களை என்னவென்று சொல்லிப் பாராட்டுவது என்று எனக்கு தெரியவில்லை. (இங்கேயே தொடரத் தெரியாமல் முழிக்கிறேன்!!!)

சமீபத்திய தொடரான இயக்குனர்கள் தொடர் மிக நன்றாகவே வந்துகொண்டிருக்கிறது. இயக்குனர் p மாதவன் பற்றிய பதிவு (அவர் இயக்கிய ஞான ஒளி-யின் மேல் உங்களுக்கு இருக்கும் காதல் ஒரு காரணம்) மிக சிறப்பாக இருக்கிறது. கார்த்திக் சார் சொன்னது போல உங்கள் அனைத்துப் பதிவுகளையும் பத்திரப் படுத்தி வைத்திருங்கள் - பின்னாளில் நடிகர் திலகத்தின் தொலைகாட்சி நாடகத்திற்கு ஏற்பட்ட நிலை, இந்த பதிவுகளுக்கும் ஏற்படாமல் இருக்கவேண்டும்.

kalnayak
21st October 2013, 06:25 PM
கோபால் சார்,

ராஜா ராணி காதல் பதிவு நன்றாக இருக்கிறது. எனக்கு சொல்லவே வெட்கமாக இருக்கிறது. நான் இன்னும் இந்த படத்தை பார்த்தது இல்லை. நான் திருவிளையாடல் தருமி போல ஒத்துக் கொள்கிறேன் - நீங்கள் தானையா புலவர். மன்னிக்கவும் நீங்கள் தானையா ரசிகர். இதற்கு மேல் நான் எதுவும் சொல்லப் போவதில்லை.

uvausan
21st October 2013, 08:16 PM
கோபால் சார்,

ராஜா ராணி காதல் பதிவு நன்றாக இருக்கிறது. எனக்கு சொல்லவே வெட்கமாக இருக்கிறது. நான் இன்னும் இந்த படத்தை பார்த்தது இல்லை. நான் திருவிளையாடல் தருமி போல ஒத்துக் கொள்கிறேன் - நீங்கள் தானையா புலவர். மன்னிக்கவும் நீங்கள் தானையா ரசிகர். இதற்கு மேல் நான் எதுவும் சொல்லப் போவதில்லை.

Kalnayak Sir
இந்த பதிவு உங்களுக்கும் மற்றும் கோபால் சார் இன் பழியிலுருந்து இந்த படத்தை இன்னும் பார்க்காதவர்கள் உடனே தப்பிபதர்க்காகவும்.
http://youtu.be/zz48wuiYr1M

:):smokesmile:

uvausan
21st October 2013, 08:28 PM
வாசு சார் - உங்கள் மாதவன் பதிப்பு :

புதியது புதியது உங்கள் வர்ணனை
இனியது இனியது உங்கள் வரிகள்
அருமை இந்த பதிவு
வாழ்வில் இப்படி எழுதவிரும்பவது என் கனவு
:):smokesmile:

Harrietlgy
21st October 2013, 11:33 PM
நன்றி g94127302 உடனே ராஜா ராணி பார்த்து விட்டேன் , கோபால் சார் பழியில் இருந்து தப்பி விட்டேன் என்று சந்தோஷம்.

Gopal.s
22nd October 2013, 06:41 AM
டியர் கோபால் சார்,

காதல் காட்சிகளில் மேலும் கலக்குங்கள். (வாணிஸ்ரீ படங்கள் துவங்கியதும் சென்சார் போர்ட் தேவைப்படுமோ)...
அவ்வளவு நேரம் இல்லை.பிரமிளா ( தேவிகா) வந்ததுமே தேவை படலாம்.

mr_karthik
22nd October 2013, 10:52 AM
நடிகர்திலகத்தின் படங்களில் ஐட்டம் நடிகையர் ( 6 )

‘ஐஸ்கிரீம்’ ஸ்னேகலதா (என் மகன்)

ஒவ்வொரு படத்துக்கும் ஒரு பாலிவுட் ஐட்டம் நடிகையை தன் படங்களுக்கு இறக்குமதி செய்வது என்ற வழக்கத்தை தயாரிப்பாளர் பாலாஜி தனது ராஜா படத்தில் துவக்கினார். அப்படத்தில் நடித்திருந்த பத்மாகன்னாதான் நமது தொடரின் பிள்ளையார் சுழி. தொடர்ந்து என்மகன் படத்தில் ஸ்னேகலதாவையும், உனக்காக நான் படத்தில் லீனாதாஸையும் இறக்குமதி செய்து தமிழக ரசிகர்களை ஆசுவாசப்படுத்தினார். (இடையில் நீதி படத்தில் ஒரு ஆணுக்கு பெண்வேடம் போட்டு ஐட்டம் பிகர் என்று பாலாஜி ஏமாற்றியதை மறப்போம்)

இப்போது போல மும்பையில் கல்லூரி பட்டம் பெற்றதும் சென்னைக்கு விமான / ரயில் டிக்கட் எடுக்கும் நடிகையர் கூட்டம் அப்போது கிடையாது. எப்போதாவது ஒருமுறை ஹெலனைக்கொண்டு வந்து காட்டுவார்கள். அவ்வளவுதான். இந்நிலையில் ‘என் மகன்’ படத்துக்காக 'பே-இமான்' படத்தின் கதையை வாங்கிய கையோடு ஸ்னேகலதாவையும் புக் பண்ணிக்கொண்டு வந்துவிட்டார். ராஜாவில் ரந்தாவா நடித்ததுபோல இப்படத்தில் ஷெட்டி நடிப்பதாக இருந்தது. என்ன காரணமோ கைகூடவில்லை. அதிரடிப்புயல் வரவில்லை. ‘கவர்ச்சித்தென்றல்’ மட்டுமே மும்பையில் இருந்து கரைகடந்து தமிழகத்தில் வீசிப்போனது.

எந்தப்பூட்டையும் திறக்கும் சாமர்த்தியமான பூட்டு ரிப்பேர் தொழிலாளி ராஜாவுக்கு (நடிகர்திலகம்) தொழிலதிபர் ஜெகன்நாத் (மேஜர்) மகள் ராதா(மஞ்சுளா)வுடன் காதல். ராஜாவை திருமணம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தால் மகள் தன்னை வெறுத்து விடுவாளோ என்ற எண்ணத்தில் மகளைப் பெண்பார்க்க ராஜாவை வரச்சொல்வதுபோல வரச்சொல்லிவிட்டு, மறுபக்கம் ராஜாவை வரவிடாமல் செய்ய தன் கையாட்கள் மூலம் ராஜாவை ஒரு கொலைப்பழியில் சிக்க வைக்கிறார் ஜெகன்நாத். அப்படி கொலை செய்யப்படுவள்தான் ஸ்னேகலதா.

அவசரமாக பாம்பே போகவேண்டும் என்றும் அதற்கான டாக்குமென்ட்டுகள் பீரோவுக்குள் இருப்பதாகவும் கெஞ்சும் மனோகரின் பேச்சை நம்பி பீரோவை சிரமப்பட்டு ராஜா திறக்க போராடிக்கொண்டிருக்கும் சமயம் மனோகர் உள்ளே செல்ல, மறுகதவைத் திறந்து கொண்டு, (தன்னையும் முடிந்தவரை திறந்து வைத்துக் கொண்டு) ஐந்தரை அடி ஐஸ்கிரீமாக வெளிவந்து ராஜாவை பின்பக்கமாக வந்து கட்டிக்கொள்ளும் அழகுச்சிலையாக ஸ்னேகலதா. உள்ளாடையைவிட சற்றே சற்று கூடுதலான உடையணிந்து வர, கால்களிரண்டும் கிட்டத்தட்ட 'வெட்டவெளியாக'.

ஆனால் பெண்பார்க்கப்போகும் அவசரத்திலும், அதற்குள் பீரோவைத் திறக்க வேண்டுமென்ற அவசரத்திலும் இருக்கும் ராஜாவுக்கு ஏற்கெனவே திறந்திருக்கும் எதையும் பார்த்து ரசிக்கும் ஆர்வமில்லை. நமக்குத்தான் எந்த அவசரமும் இல்லையே. அதனால் ஒரு இடம் விடாமல் கண்களை மேய விட நினைத்தால் அதற்குள் உள்ளிருந்து மனோகரின் அழைக்கும் குரல். (மனோகர் ராஜாவுக்கு மட்டும் வில்லன் அல்ல நமக்கும்தான்). அழைப்பைக்கேட்டு ஐஸ்கிரீம் உள்ளே நகர்கிறது.

உள்ளேயிருந்து ஹாலுக்கு வரும் மனோகர் "திறக்க முடியலைன்னா உடைச்சிடுங்க" என்று அனுமதி கொடுக்க, ராஜா பீரோவை உடைத்து கதவைத்திறக்க, உள்ளேயிருந்து பிணமாக சரிந்து விழுகிறாள் ஐஸ்கிரீம் ஸ்னேகலதா. முதுகில் சொருகியிருக்கும் கத்தியை ராஜா எடுக்க (வழக்கம்போல) வில்லன் கூட்டம் ராஜா, கையில் கத்தி, கீழே ரத்த வெள்ளத்தில் பெண்ணின் பிணம் அனைத்தையும் ஒருசேர கச்சிதமாக photo எடுக்கிறது.

ஒருபக்கம் நம்ம ஆள் இக்கட்டில் மாட்டிக்கிட்டாரே என்ற வருத்தம். இன்னொரு பக்கம் சரியாகக்கூட பார்க்காத ஸ்னேகலதாவை இப்படி திடீர்னு கொன்னுட்டாங்களே (இந்த பாலாஜி சரியான கொலைகாரப் பாவியாக இருப்பார் போலிருக்கே. ஒவ்வொரு பம்பாய் ஐட்டமாக அழைத்து வந்து கொன்று தள்ளுகிறாரே) என்ற ஆத்திரம். 'என்ன இது, இத்துனூண்டு சீனுக்காகவா இந்த ஐட்டத்தை பம்பாயிலிருந்து கொண்டு வந்தார்?' என்று குழப்பம். (பே-இமான் பார்க்கலை இல்லையா, அதான்). “ராதாவை விட்டு ஏன் விலகிப்போகிறீர்கள் அண்ணா?” என்று கேட்கும் தங்கை ரோஜாரமணியிடம் சொல்லும் பிளாஷ்பேக்கில் வருகிறது இத்தனையும்.

ஆச்சு, படம் ஓடிக்கொண்டிருக்கிறது. ஐட்டத்தை மறந்து (ஹி.. ஹி.. மறக்கவில்லை, மனதில் ஓரமாக ஒதுக்கிவைத்துவிட்டு) படத்தில் லயிக்கிறோம். நமது தலைவர் இரட்டை வேடங்களில் பிளந்து கட்டிக்கொண்டிருக்கிறார். தங்கையின் திருமணத்துக்காக பேங்கர் ஜெகன்நாத் வீட்டிலேயே திருடி, மாட்டிக்கொண்டு சிறைக்குப்போக.....

பிரேம் நகர் (இந்தி வசந்த மாளிகை) படத்துக்காக போடப்பட்ட பிரம்மாண்ட செட். அதில் பேங்கர் ஜெகன்நாத் (மேஜர்), ஜெகதீஷ் (பாலாஜி) இவர்கள் முன் ஒருபெண்ணை மனோகர் முக்காடிட்டு அழைத்துவர, "உன்னை அடையாளம் காட்டக்கூடியவன் இப்போ ஜெயில்ல இருக்கான்,ஸோ, இந்த முக்காடு இனிமே உனக்குத் தேவையில்லை" என்று சொன்னவாறு மேஜர் முக்காட்டை அகற்ற, "அட, ஐஸ்கிரீம் ஸ்னேகா, குழந்தை இருக்கிறாளா?. அவசரப்பட்டு பாலாஜிக்கு கொலைகாரர் பட்டமெல்லாம் கொடுத்திட்டோமே' என்றிருந்தது. (அதாவது நிஜமாக கொலை நடக்காமல் தான் கொலை செய்துவிட்டதுபோல ராஜாவை நம்ப வைத்து அந்த போட்டோவைக்காட்டியே தங்கள் கூட்டத்தில் சேர்த்துக்கொண்ட கொள்ளைக்கூட்டம்).

மெல்லிசை மன்னர் அதிரடியாக இசைமுழங்க, ஈஸ்வரியின் துள்ளும் குரலில் "சொல்லாதே சொல்லாதே ஊரார்க்கு சொல்லாதே நான் என்ன தந்தேன் என்று" பாடலுக்கு ஸ்னேகலதா ஆட, தேவிபேரடைஸ் தியேட்டர் குளிரில்கூட நம் உடம்பு சூடாகும் அனுபவம் ஆகா. இதே உணர்வு ஒளிப்பதிவாளர் மஸ்தானுக்கும் இருந்திருக்க வேண்டும். அதனால்தான் கேமராவில் புகுந்து விளையாடி இருப்பார். குறிப்பாக லோ ஆங்கிளில் எடுத்திருக்கும் அந்த ஷாட். இப்போ சாதாரணமாக தெரியலாம். அப்போ அதெல்லாம் புதுமை. இரண்டு வித்தியாச உடைகளில் ஸ்னேகலதாவின் ஆட்டம்னா செம்மையான ஆட்டம். இதற்கிடையே அவள் ஆட்டத்தின்போது ஜெகதீஷுடன் நெருக்கமாகவும், ஜெகன்னாத்தின் முதுகில் உப்புமூட்டை ஏறியபடியும் இருக்கும் காட்சிகளை போட்டோ எடுத்து இருவரையும் பிற்பாடு மோத விடுகிறார் மனோகர்.

ராஜா ஜெயிலில் இருக்கிறான் என்ற தைரியத்தில் வெளியே நடமாடும் ஸ்னேகலதாவை, தங்கையின் திருமணத்துக்காக கண்டிஷன் பெயிலில் வளர்ப்புத்தந்தை சப்-இன்ஸ்பெக்டர் ராமையாவுடன் (இன்னொரு நடிகர்திலகம்) வந்துகொண்டிருக்கும் ராஜா பார்த்துவிட, அவள் காரில் ஏறித்தப்பிக்கிறாள். இருந்தாலும் காரை அடையாளம் கண்டு இடத்தைக்கண்டுபிடித்து, மாறுவேடத்தில் 'சோன்பப்படி' பாட்டெல்லாம் பாடி, அவளால் ஏற்பாடு செய்யப்பட அடியாட்களுடன் சண்டையிட்டு அவளைப்பிடிக்க...... அதோடு கதையில் ஸ்னேகலதாவின் பார்ட் முடிகிறது.

"சொல்லாதே சொல்லாதே ஊரார்க்கு சொல்லாதே நான் என்ன தந்தேன் என்று" என்று சொன்னாலும், பாம்பே ஐஸ்கிரீம் ஸ்னேகலதா வரும் காட்சிகளில் அவரால் அடையும் பரவசத்தை சொல்லாமல் இருக்க முடியுமா?. அதனால்தான் ஊரார்க்கு மட்டுமல்ல உலகத்தாருக்கே சொல்லி விட்டேன்.....

uvausan
22nd October 2013, 11:01 AM
பல விஷயங்கள் , நம் முன்னோர்கள் சொன்னதை இன்றும் உண்மையாக இருப்பதை பார்க்கிறோம் - இன்று சயின்ஸ் என்பது எவளவோ வருடங்களுக்கு முன்பே நமது முன்னோர்கள் அறிவித்த உண்மைகள் - காலபோக்கில் நாமும் அதை பெரிதும் பொருட்படுத்துவதில்லை . இந்த உதாரணத்தை கொஞ்சம் பார்ப்போமா ??

In Hanuman Chalisa , It is said :

"Yug sahastra yojan per bhanu !
Leeyo taahi madhu phal janu !!"

1 Yug = 12000 years
1 Sahastra = 1000
1 Yojan = 8 miles

Yug * Sahastra * Yojan = par Bhanu

12000 * 1000 * 8miles

1 mile = 96000000 miles = 960000000 * 1.6kms = 153,60,00,000 kms to Sun

NASA has said that , it is the exact distance between Earth and Sun (bhanu) , which proves Hanuman ji did jump to planet sun , thinking it as a sweet fruit ( Madhu phal--)

It is really interesting how accurate and meaningful our ancient scriptures are -- unfortunately barely it is recognized , interpreted accurately or realized by any in today's time ----

Same thing happened in NT's case also - it is amazing to see his talents , achievements , glory when the same getting unfolded by many stalwarts including many hubbers in this thread - but when he was alive though all facts of his glory of acting talents were known , they were misinterpreted , not realized by many
and due recognitions were not conferred by Indian Govt. Like NASA , the truth would be revealed one day that a great actor was born in Tamil nadu - that was the day the nation would feel ashamed of itself for not recognizing accurately about NT and his talents - that day is not very far from reach !!
:):smokesmile:

chinnakkannan
22nd October 2013, 11:25 AM
//ஆனால் பெண்பார்க்கப்போகும் அவசரத்திலும், அதற்குள் பீரோவைத் திறக்க வேண்டுமென்ற அவசரத்திலும் இருக்கும் ராஜாவுக்கு ஏற்கெனவே திறந்திருக்கும் எதையும் பார்த்து ரசிக்கும் ஆர்வமில்லை. // ஹிஹி..:) ரொம்ப காலததுக்கு முன்னால் பார்த்த படம்..ஸ்னேகலதா ஃபோட்டோ போடுமேன்... நன்று கார்த்திக் சார்..

ஆனா அந்தப் படத்தில மஞ்சுளா தான் கிட்டத் தட்ட அந்த் ரேஞ்ச்ல இருப்பாரில்லை.. ரெண்டு பாட்டுல :)

Gopal.s
22nd October 2013, 12:54 PM
சிநேகலதா மட்டுமல்ல சி.ஐ.டி பாதி பாதியை தவிர அவரின் ஹெலன் தொடங்கி சிலுக்கு முடிய அனைத்து ஐட்டமும் ஜோர்தான்.என்னுடைய தேர்வு
1)ஆலம்
2)ஹெலன்
3)விஜயஸ்ரீ
4)ஜெய் குமாரி
5)பத்மா கன்னா
6)சினேக லதா
7)வெண்ணிற ஆடை நிர்மலா
8)ராஜஸ்ரீ
9)vpkb காஞ்சனா
10)விஜய லலிதா
அது சரி, மேற்கொண்டு இரண்டு எழுதியாயிற்று.(பெண் வேடமிட்ட ஆணையும் சேர்த்து)ஆலத்தை பற்றி மட்டும் எழுதாமல் வெறுப்பேற்றி கொண்டிருந்தால் நியாயமா?

Russellfcv
22nd October 2013, 01:46 PM
Dear Vasudevan Sir, CK Sir, Bharani Sir, Raghavendran Sir, Gopal Sir and other Sirs,

Thanks for your response and i feel very sorry that am unable to pass on my comment here immediately on the wonderful postings of Vasudevan sir, Raghavendran Sir, Gopal Sir etc.,

The issues is these days am on travel for quite a bit. I post few things from my tab and mobile in my free time. Post my Grandmother's demise 15 - 20 days back am not able to spend time in the night to post many things or write a comment.

Vasudevan sir,
Your posts are tremendous and one can easily asses the time and effort required for the same. All your posts carry extraordinary values. Equal to sculptures of those days. Superb sir ! Our God's wishes and blessings will always be with you !

Raghavendran Sir,
Your posts too are highly informative especially Nadigar Thilagam's Filmography. When any new person sees that, am sure, he / she will conclude that Nadigar Thilagam was SECOND to NONE interms of the Film's success or the release time collections. One Small suggestion. Please HIGHLIGHT and MENTION --> SEE THE THREAD ....Filmography..to see the Release, 100 Days, Silver Jubilee Advertisements of NAdigar Thilagam Films..." Because, our people ( General public) need bit of spoon feeding. that's why.
Once they see these and when they do not see the authentic ads of others, they will realise who is the real emperor of Cinema till date.

Gopal Sir,
What to say about your write up ? You may be henceforth called as "Mayyaththin Sandilyan ". This will be the ideal title for you...! All your writeup do carry the equal weightage of Class & Mass !!

All the hubbers are making it very interesting....My special enquiries to Mr,Karthik. .....Though, he comes out with something inbetween...it may be called as "Oru Vaasagam endraalum Thiruvaasagam " type. !

My special thanks to "The Gentleman of Thread" Esvee Sir for posting Nadigar Thilagam's article every now and then. !

Take Care

vasudevan31355
22nd October 2013, 02:56 PM
இயக்குனர் மாதவன் பற்றிய பதிவை ரசித்த சின்னக் கண்ணன் சார், வாசுதேவன் சார், சி.ராமச்சந்திரன் சார், ராகவேந்திரன் சார், சந்திர சேகரன் சார், பொன் ரவிச்சந்திரன் சார், கோபால் சார், கார்த்திக் சார், கல்நாயக் சார், ரவி சார், சரஸ்வதி லக்ஷ்மி மேடம் அனைவருக்கும் என் ஆழ்ந்த நன்றி!

vasudevan31355
22nd October 2013, 02:58 PM
கோபால் சார்,

'ராஜா ராணி' காதலை மட்டுமல்லாமல் படத்திற்கான குறு விமர்சனத்தையும் சுவையாகத் தந்தற்கு நன்றி! (என்னை மிக மிக கவர்ந்த படம். பின்னால் வருகிறேன்.)

vasudevan31355
22nd October 2013, 03:00 PM
'அருணோதயா தீபாவளி' நடிகர் திலகத்தின் அரிய பேப்பர் கட்டிங்கிற்கு ரொம்ப ரொம்ப நன்றி!

anasiuvawoeh
22nd October 2013, 03:02 PM
Dear Ravi sir,your article,NASA,old-scriptures,NT was fine.Our people don't realize the value of the thing they have.The day is not far ,when people accept NT as the DOYEN of film-world globally.

vasudevan31355
22nd October 2013, 03:36 PM
டியர் கார்த்திக் சார்,

தங்கள் அன்பிற்கு நன்றி! ஐட்டம் நடிகையர் வரிசையில் தாங்கள் அளித்துள்ள சிநேகலதா பற்றிய பதிவு சிம்ப்ளி சூப்பர். ரசித்துப் படித்தேன்.

http://ttsnapshot.com/out.php/i13242_vlcsnap-2012-06-26-18h58m36s136.png

இன்னொன்று தெரியுமா! பாலாஜியின் இறக்குமதிகளிலேயே என்னை மிகவும் கவர்ந்தவர் சிநேகலதா. கொள்ளை அழகு. கவர்ச்சி கூட ஆபாசமாய் தெரியாது. நானும் கோபால் சாரும் பல தடவை இந்த அழகுப் புயலைப் பற்றி செல்லில் பேசுவோம். கிட்டத்தட்ட பிரபல இந்தி நடிகை ஆஷா பரேக் சாயலில் இருப்பார் சிநேகலதா.

கவர்ச்சிப் பாவையாக மட்டுமல்லாமல் இறுதியில் பாலாஜியின் குகையில் கயிற்றால் கட்டிப் போடப் பட்டிருக்கும் நடிகர் திலகத்திடம் "என்னால் பிடிபட்ட நீங்க என்னாலேயே விடுதலையாகப் போறீங்க"...என்று கயிற்றை அறுத்து விடுவிப்பது அவருடைய இரக்க மனத்தைக் காட்டும் காட்சி. அதுவரை அவர் மேலிருந்த சின்ன வெறுப்பும் (வெறுப்பா! அது ஏது என்கிறீர்களா?) நம்மிடையே அப்போது அடிபட்டுப் போய் விடும்.

மாடர்ன் டிரெஸ்களில் கலக்கிய இந்த நவநாகரீக மங்கையை தங்கள் பதிவின் மூலம் நிரந்தரமாக மறக்க முடியாமல் செய்து விட்டீர்கள்.

அருமை.(வாலிபம் திரும்பி வந்து விட்டதோ!)...

இதோ உங்கள் ஸாரி நம் சினேகலதா. (சி.க.சார் ரொம்ப சந்தோஷப்படுவார்.)

http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/VTS_04_1VOB_001537235_zpsc174a031.jpg (http://s812.photobucket.com/user/adithya961999/media/sivaji%201/VTS_04_1VOB_001537235_zpsc174a031.jpg.html)

http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/VTS_04_1VOB_002120685_zps26c9f1cf.jpg (http://s812.photobucket.com/user/adithya961999/media/sivaji%201/VTS_04_1VOB_002120685_zps26c9f1cf.jpg.html)

http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/VTS_04_2VOB_000754668_zps916ba8ce.jpg (http://s812.photobucket.com/user/adithya961999/media/sivaji%201/VTS_04_2VOB_000754668_zps916ba8ce.jpg.html)

http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/VTS_04_1VOB_001538069_zps921dccf0.jpg (http://s812.photobucket.com/user/adithya961999/media/sivaji%201/VTS_04_1VOB_001538069_zps921dccf0.jpg.html)

இனி சிநேகலதாவின் 'சிக்'கென்ற ஆடையில் 'சில்' என்ற "சொல்லாதே... சொல்லாதே"....பாடல் சூப்பர் கிளியர் பிரமிட் கம்பனி டிவிடி வீடியோவில்.


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=ky6u1YWAbfs

vasudevan31355
22nd October 2013, 03:46 PM
டியர் ரவி (g94127302) சார்,

தங்கள் உயரிய பாராட்டிற்கு மிக்க நன்றி!

தங்களின் அசாதராணமான ஆங்கிலப் பதிவுகள் தூள் கிளப்புகின்றன. அருமையான விஷயங்களை கொண்டு வந்து அலசி இறுதியில் அதை தலைவருடன் அழகாக கோர்த்து, இணைத்து முடிச்சுப் போடும் தங்கள் பாணி முற்றிலும் புதிது. அதிலும் நாசா பதிவு அற்புதம். (ஹனுமான்ஜியின் பழத் தாவல் அட்டகாசம்). அழகான உவமை. வித்தியாசமான சிந்தனை. தங்கள் பதிவுகளில் நுண்ணிய அறிவு புலப்படுகிறது. தங்கள் மனித நேயமும் விளங்குகிறது. வித்தியாசமான தங்கள் சிந்தனைக் களத்திற்கு என் மனமகிழ்ந்த வாழ்த்துக்கள். பாராட்டுக்கள். தங்கள் அடுத்த பதிவை ஆவலுடன் எதிர் நோக்கும்

அன்பன்
வாசுதேவன்.

Gopal.s
22nd October 2013, 04:19 PM
சிவாஜியின் காதல்கள்-4

புதையல்-1957

சின்ன சின்ன இழை பின்னி விண்ணோடும் முகிலோடும் விளையாடிய தங்க மோகன தாமரை பரிமளா ----உனக்காக எல்லாம் உனக்காக.

முதல் காட்சி -தபால் கொண்டு வருபவர், தபால் படிக்காமலே கிழிக்க படுவதை கண்டு ஆச்சர்யமுற்று கேட்க,நீங்களே படித்து பாருங்கள் என்று தபால் காரரை அந்த பருவ மங்கை வேண்ட,தபால் காரர் ,இப்படி கசமுசான்னு கிழிச்சிட்டியே ,ஒட்டுமா என்று ஓட்ட வைத்து(சத்தமாவா,மனசுக்குள்ளா,உங்க இஷ்டம்) ,அவர் படிக்கும் அழகிலே ,மயங்கி மனதை பறி கொடுத்து கிழிக்க பட்ட கடிதத்தையும் போற்றி வைக்கும் பரிமளா-துரை காதல் முதல் காட்சியிலேயே களை கட்டி விடும்.(படிக்கும் நடிகர் யாரென்று சொல்லவும் வேண்டுமோ)

குதிரை வண்டியில் வரும் துரையை தோழிகள் கேலி செய்ய ,நிபந்தனையற்ற ஆதரவை துரைக்கு நல்கி,கடையாணி கழற்றிய வண்டியை துரத்தி சென்று ,அம்மா அப்பாவை பற்றி பரிமளா விசாரிக்க,(இருக்காங்களா,அவங்க இதுக்கு சம்மதிப்பாங்களா ,துரையின் கிண்டல்),தன் கதையை சொல்ல இரவு தனியாக கடற்கரை பக்க மண்டபத்துக்கு வர சொல்ல, அட...பரிமளாவும் சரிதான் சொல்லி விடுகிறாள்.என்ன கதை...

ஒரு காதல் காட்சி படு சுவாரஸ்யமாகவும் ,கதைக்கே திருப்பு முனையாகவும் அமையும் அதிசயம் இந்த மண்டப சந்திப்பு காட்சி....

இரவிலே தாமரையாய்,பகலில் நிலவாய் ,குறுந்தொகை படிக்கும் காதலர்கள்...முகத்தையும்,இதழையும் வருடும் துரையின் கரங்கள்,நாணத்தோடு ரசிக்கும் பரிமளா,கோடி கதைகள் பேசி ,பார்ப்போர் காதல் உணர்வையும் தூண்டி துடித்தெழ செய்யும்.தன்னுடைய கதையை சொல்லி இதுதான் தங்கம் புதைத்த இடம் (தங்கை தங்கம்)என்று காட்ட,தங்க புதையலை தேடி அலையும் வெள்ளியம்பலம் கோஷ்டி காதில் பட,துரத்த பட்டு மதகடியில் காதலர்கள் ஒளியும் காட்சி...அந்த கால சொல்லி அடித்த கில்லி.....

விண்ணோடும் முகிலோடும் காட்சி-சுருங்க சொன்னால் தமிழில் வந்த முதல் முதல் அசல் காதல் காட்சி. இன்ப லாகிரியில் உன்மத்தம் கொண்ட காதல் பித்தோடு காதலர்கள் களி நடம் ஆடும் ,நடிப்பின் சாதனை.Silhoutte என்று சொல்ல படும் நிழல் படத்தில் தொடங்கி,துரத்தி விளையாடி,கை கோர்த்து கடலில் ஒருவர் மேல் ஒருவர் விழுந்து களித்து, ஜடையை இழுத்து,விளையாடி,குட்டி கரணம் அடித்து இன்ப பித்து உணர்த்தி,விளையாட்டாய் மடியில் கை போட செல்லமாய் தட்டி விடும் அழகி. காதலி கையை பிடித்து முட்டி போட்டே நடை பழகும் கடற்கரையோர காதல்....பார்த்து களியுங்கள் அய்யாமார்களே....

இந்த காதல் இப்படியென்றால், துர்பார்க்கிய ,வயதானவனுக்கு சூழ்ச்சியினால் வாழ்க்கை பட்டு ,பாதாள அறையில் அடை படும் துரையின் மேல் ஒருதலை காதல் கொள்ளும் மேனகா...சகதியில் விழுந்து விட்ட சந்தனத்தை உதாசீனம் செய்வதா,என்னும் மேனகாவிடம்,பின்னே அதை மேலே எடுத்து பூசி கொள்வதா என்னும் துரையிடம்,இல்லையில்லை குப்பையில் கோமேதகம் இருந்தால் என்னும் உதாரணத்திற்கு,நமக்கு சொந்தமில்லாதது என்று பதிலுக்கு, தனியுடமை என்கிறீர்களா என்னும் மேனகாவிடம்,இந்த மாதிரி விஷயங்களில் பொதுவுடைமை கூடாதம்மா என்னும் குறும்பு...
வந்திருப்பது மாறுவேட பரிமளா என்று அறியாமல் ,குடு குடுப்பை காரனிடமே துரையை வசிய படுத்த வேண்ட ...(குடுகுடுப்பை காரர் பாவம் துரையின் பிடியில்,தட்டலில் திணறினாலும்,இரவு உருண்டு புரண்டு அருகில் படுப்பார்.அது என்னாடா படியில் மேல் நோக்கி உருண்டு என்ற துரை கிண்டல்),தப்பி போக மேனகாவை ஏமாற்ற ,சத்தியமா உன்னை பிரிய மாட்டேன் என்று மாறுவேட பரிமளா கையால் அடித்த சத்தியம் செய்து,ஓடும் போது என் கதி என்று கேட்கும் மேனகாவிடம் நீ வேறா என்று அடிதடி சண்டை வேறு...(துரை ரசிக்க வேறு செய்வார்)புதையல் சுவடியை காதலர்களை பலி கொடுக்க மாற்றியெழுதும் மேனகாவே இறுதியில் பலியாகும் சோகம்....

பரிமளாவை ஒரு தலையாய் காதலிக்கும் துக்கா ராம் (சந்திர பாபுவின் மிக சிறந்த பாத்திரம்)...நூற்று கணக்காய் தினம் கடிதம் எழுதி குவிப்பதும்,(முதல் காட்சி கடித உபயம் இவரே),பரிமளா சீயக்காய் தூள் ஆர்டர் வரும் போது அதகளம் செய்வதும்,பரிமளா இவரை வெள்ளியம்பலத்திடம் மாட்டி வைக்க,புதையலை தேடி அலைய கட்டாய படுத்த படுவதும் (தின அட்டவணை வேறு குளித்தல்,சாப்பிடுதல்,தூங்குதல்,உலா போதல் என்று!!!),கடைசியில் பரிமளா தன்னை காதலிக்கவில்லையென்றாலும் தான் மாட்டுவதை விரும்பவில்லை என்று அவள் நல்லுள்ளத்தை புரிந்து தானே போலீசிடம் செய்யாத குற்றத்திற்கு சரணடையும் தியாகி காதலர்...

புதையல்...விறுவிறுப்பான தங்க காதல் புதையல்.

vasudevan31355
22nd October 2013, 04:35 PM
கார்த்திக் சார்,

என் மகனின் மூலமான 'பே-இமான்' பற்றி மறக்காமல் குறிப்பிட்டிருந்ததற்கு நன்றி! பொதுவாக இத்தகைய மூலங்களை யாரும் அதிகமாகக் கண்டு கொள்வதில்லை. ஆனால் இதில் எனக்கு மிக மிக ஆர்வமும், விருப்பமும் உண்டு. தங்கள் ஞாபக சக்திக்கு என் ஸ்பெஷல் பாராட்டுக்கள்.

'பே-இமான்' படத்தில் தந்தை போலீஸ் ராமையாப் பிள்ளை வேடத்தில் வில்லன் நடிகர் பிரான் அவர்களும், மகன் திருடன் ராஜா வேடத்தில் மனோஜ் குமாரும் நடித்திருந்தனர். தமிழில் இரண்டு பாத்திரங்களையும் நடிகர் திலகமே ஏற்றார். கதாநாயகி ராக்கி. இந்தி, தமிழ் இரண்டிலும் சிநேகலதாதான். பிரேம்சோப்ரா பிரதான வில்லன். (பாலாஜி வேடம்)

இதோ 'பே-இமான்' (1972) இந்திப் படத்திலிருந்து சில நிழற்படங்கள்.

பிரான்

http://103.imagebam.com/download/i_RfEO3MzJozeSJbjnFphQ/24120/241193953/vlcsnap-2013-03-04-21h57m27s3.png

மனோஜ் குமார்

http://107.imagebam.com/download/JAqy7irnh7aX2KxFF_n0CA/24120/241193949/vlcsnap-2013-03-04-21h57m18s168.png

ராக்கி

http://106.imagebam.com/download/GQ_L85nPWBCF_wGSbFZchw/24120/241193963/vlcsnap-2013-03-04-21h57m50s227.png

சிநேகலதாவும் பிரேம்சோப்ராவும்

http://108.imagebam.com/download/x1hBRlKYv3In8MJtEDidGQ/24120/241193977/vlcsnap-2013-03-04-21h59m38s28.png

சிநேகலதாவும் பிரேம்சோப்ராவும். (சிநேகலதா இரண்டு வருடங்களுக்கு முன்னர் இன்னும் சின்னப் பெண்ணாகத் தெரிவதைப் பாருங்கள்)

http://www.bollywoodvinyl.com/ekmps/shops/bollywoodvinyl/images/be-imaan-%5B2%5D-5478-p.jpeg

இந்தியில் 'சொல்லாதே... சொல்லாதே'...(Dekho Ji Raat Ko Gulam Ho Gaya)


https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=3UtEtcw7NI8

chinnakkannan
22nd October 2013, 05:29 PM
//இன்ப லாகிரியில் உன்மத்தம் கொண்ட காதல் பித்தோடு காதலர்கள் களி நடம் ஆடும் ,நடிப்பின் சாதனை.Silhoutte என்று சொல்ல படும் நிழல் படத்தில் தொடங்கி,துரத்தி விளையாடி,கை கோர்த்து கடலில் ஒருவர் மேல் ஒருவர் விழுந்து களித்து, ஜடையை இழுத்து,விளையாடி,குட்டி கரணம் அடித்து இன்ப பித்து உணர்த்தி,விளையாட்டாய் மடியில் கை போட செல்லமாய் தட்டி விடும் அழகி. காதலி கையை பிடித்து முட்டி போட்டே நடை பழகும் கடற்கரையோர காதல்.// ஹலோவ்..ஜி.எஸ் (கோபால் சார்) இது என்ன படக் காட்சியா மனதில் பதிந்திருந்த அனுபவக் காட்சியா..ம்ம் கலக்குங்க..

அது சரீ ஈ.. நான் புதையல் முழுக்கப் பார்த்ததில்லை (அதுக்காக மெம்பர்ஷிப் கான்ஸல் செஞ்சுடாதீங்க) பரிமளா பத்மினி தானே.. யாரந்த மேனகா

என்.வி.எஸ்(நெய்வேலி வாசுதேவன் சார்), மிக்க நன்றிங்க..நன்னாத்தான் இருக்கா கொயந்தை..இப்போ தள்ளாத வ்யதாயிருப்பாங்க..ஆமா இவங்க தான் ப்ரசண்ட் சினேகாவோட பாட்டியா :)

mr_karthik
22nd October 2013, 07:09 PM
வாசுதேவன் சார், கோபால் சார், சின்னக்கண்ணன் சார் தங்கள் பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி.

டியர் வாசுதேவன் சார்,

ஒவ்வொருமுறையும் நான் ஐட்டம் நடிகையர் பற்றி பதிவிடும்போது எழுத்துக்களால் மட்டுமே அமைந்த என் பதிவுகளை மேலும் அழகு படுத்தும் விதமாக மேற்கொண்ட தகவல்களையும், நிழற்படங்களையும், வீடியோ பதிவுகளையும் தந்து முழுமையாக்குவது தாங்கள்தான். இம்முறையும் அதே போல ஸ்டில்களையும், வீடியோவையும், மேலதிக விவரங்களையும் தந்து ஸ்னேகலதா பதிவை சுவையூட்டி இருப்பதுடன், என்மகன் படத்தின் இந்தி பதிப்பான பே-இமான் படத்தின் பதிவுகளையும் தந்து அசத்தி விட்டீர்கள். மனமார்ந்த நன்றி.

வழக்கமாக இதுபோன்ற வில்லன் கூட்டத்து அழகிகள் இறுதியில் மனம் மாறி கதாநாயகனுக்கு உதவி செய்வதோடு அந்த வில்லனின் துப்பாக்கி குண்டுக்கே இறையாவதாக நமது கதாசிரியர்கள், இயக்குனர்கள் கதையமைப்பார்கள். (பட்டணத்தில் பூதம், மீண்டும் வாழ்வேன் படங்களில் 'சாக்லேட்', வைரநெஞ்சம் படத்தில் 'ஒன்பது', ராஜாவில் 'குழந்தை' உள்பட பல அழகிகளுக்கு இந்த முடிவுதான். ஆனால் ஐஸ்கிரீமுக்கு இப்படத்தில் அப்படியில்லை என்பது ஆறுதல்).

தங்கள் சிறந்த சப்போர்ட்டுக்கு மீண்டும் மீண்டும் நன்றி....

Gopal.s
22nd October 2013, 07:37 PM
வாசு சார்,

கார்த்திக் சாரோடு சேர்த்து நானும் உங்களுக்கு நன்றி சொல்ல கடமை பட்டவன். உங்கள் முனைவு இல்லையென்றால் பல பதிவுகளுக்கு visual சப்போர்ட் கிடைத்திருக்காது. தங்கள் உழைப்பினால் பலர் பதிவுகள் மேலும் மெருகேறி விளங்கின என்றால் மிகை அல்ல. உங்கள் சிநேகத்திற்கு நன்றி.

vasudevan31355
22nd October 2013, 07:42 PM
புதையலைத் தோண்டி காதல் முத்துக்கள் எடுத்துத் தந்த கோபால் துரைக்கு பாராட்டுக்கள்.

vasudevan31355
22nd October 2013, 07:47 PM
விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலாவின் வெளிச்சத்தில் காதல் உணர்வுகளை புதுமையாகப் பிரதிபலித்த பரிமளா துரை.


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=_IeGUw7uSfs

vasudevan31355
22nd October 2013, 07:54 PM
முதல் காட்சி -தபால் கொண்டு வருபவர், தபால் படிக்காமலே கிழிக்க படுவதை கண்டு ஆச்சர்யமுற்று கேட்க,நீங்களே படித்து பாருங்கள் என்று தபால் காரரை அந்த பருவ மங்கை வேண்ட,தபால் காரர் ,இப்படி கசமுசான்னு கிழிச்சிட்டியே ,ஒட்டுமா என்று ஓட்ட வைத்து(சத்தமாவா,மனசுக்குள்ளா,உங்க இஷ்டம்) ,அவர் படிக்கும் அழகிலே ,மயங்கி மனதை பறி கொடுத்து கிழிக்க பட்ட கடிதத்தையும் போற்றி வைக்கும் பரிமளா-துரை காதல் முதல் காட்சியிலேயே களை கட்டி விடும்.(படிக்கும் நடிகர் யாரென்று சொல்லவும் வேண்டுமோ)



http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/VTS_01_1VOB_000544680_zpseee320b6.jpg (http://s812.photobucket.com/user/adithya961999/media/VTS_01_1VOB_000544680_zpseee320b6.jpg.html)

chinnakkannan
22nd October 2013, 09:36 PM
நடிகர் திலகத்தின் நடை
*
5..பல்லால் எடுத்துவிட்ட பாம்பு…!
*
“குட்மார்னிங் பாய்ஸ் அண்ட் கேர்ள்ஸ்”
“குட் மார்னிங்க் மிஸ்.”
“குட்மார்னிங்க் ஞெஞ்ஞமிஞ்ஞ…”

“யாரது..குட்மார்னிங்கோட என்னமோ சொன்னது.. நவீன் நீயா..என்ன சொன்ன..”

“ஆமா மிஸ்.. இந்த ப்ளூ ஸாரில நீங்க ரொம்ப பியூட்டி ஃபுல் மிஸ்..”

“சரி சரி..ஐஸ் வைக்காத..டெஸ்ட்ல மார்க்லாம் கூட்டிப் போடமாட்டேன்..ஓகே..க்ளாஸ்..இன்னிக்கு ஒங்களுக்கு ஒரு கதை சொல்லப் போறேன்..யூ நோ.. நேம்ஸ் நா என்ன..நீ சொல்லு ப்ரீத்தி..”

“டீச்சர்.. நேம்ஸ்னா பேர்கள்.. மை நேம் இஸ் ப்ரீத்தி.. யுவர் நேம் இஸ் அர்ச் அர்ச் அர்ச்சனா மிஸ்..சரியா டீச்சர்….இவன் என்னமோ சொல்றான்..”

“டேய் என்னடா சொன்ன..

“நான் சொல்றேன் டீச்சர்.. உங்களை பூனைக் கண்ணு மிஸ்னு சொல்றான்..”

“நான் அப்படிச் சொல்லவே இல்லை யே..இவ பொய் சொல்றா”

“சரி சரி.. அழாத.. பெயர் என்பது எல்லாருக்கும் அவங்களோட அப்பா அம்மாவால வைக்கப் படுவது..ஆனாக்க ஒரு ஆள் தன்னோடா நல்ல செயல்களால பேரெடுத்தா தான் குட்.. அவன் நல்ல ஆள்ங்கறோம்..இப்படித் தான் ஒரு நாள் ஒரு மகான் ஒரு ஊருக்குப் போனாராம்.. மகான்னா என்ன தெரியுமா..”

“டீச்சர் நானு”

“சொல்லு விஷால்.. “

“அதான் நானு சொன்னேனே.. எங்கப்பா என்னை என்னரும மவனேன்னு கொஞ்சுவார்..”

“ஹைய்யோ.. அது மகன் டா.. மகான்னா வேற.. அதாவது காட் ஐ நினைச்சு ஜபிச்சு காட் டோட அருள் பெற்றவங்க.. அந்த மகான் என்ன பண்றார்னா.. அந்த ஊருக்குள்ள போனா ஊரு முழுக்க அவர் பேரு..”

“அவர் பேரென்ன மிஸ்..”

“சொல்றேன்.. பாத்தா ஹோட்டல், மளிகைக் கடை அதாவது சூப்பர் மார்க்கெட், ஜவுளிக்கடை அப்படி இப்படின்னு எல்லாத்துலயும் அவர் பேர் தான்.. பாத்தாரு..யாரோட வியாபாரங்கள் இதுன்னு விசாரிச்சார்.
.”
“ஐ நோ டீச்சர்..ஏதாவது பொலிட்டீஷியனா இருக்கும்”

“சும்மா இரு படவா..கேட்டா அதெல்லாம் ஒரு அப்பூதி அடிகள்ங்கறவருக்குச் சொந்தம்ங்கறாரு..இவரும் அந்த அப்பூதி அடிகள் வீட்ட விசாரிச்சு போறாரு.. அவங்க வீட்டுத் திண்ணைல உட்கார்றார்.. என்னடா கையைத் தூக்கற..”

“திண்ணைன்னா என்ன டீச்சர்..

“காலம்.. திண்ணைன்னா அந்தக் காலத்துல வீட்டுக்கு வெளில மேடை மாதிரி வாசலுக்குப் பக்கத்துல போட்டிருப்பாங்க.. நீ அபார்ட்மெண்ட்டா உனக்குத் தெரிய வாய்ப்பில்லை.. சரியா.. அங்க மிஸஸ் அப்பூதி சின்ன குண்டுக் கொழுக்கட்டையாட்டமா வந்து விசாரிக்கறா..கூடவே அப்பூதி அடிகளும்.. “சார் நீங்க மகா பெரியவா போல இருக்கேளே.. நீங்க யாரு..”
அதுக்கு அந்த மகான் ஒரு தெய்வீகச் சிரிப்புச் சிரிக்கறார்..” நான் யார்ங்கறது இருக்கட்டும்..ஒன்னோட வீட்டில இது என்ன பேருன்னு கேக்கறார்.. இதுவா.. சார்.. இது திரு நாவுக்கரசர் இல்லம் அப்படிங்கறார் அப்பூதி..என்னடா தூங்கற..”

“இல்ல டீச்சர் கண்ணுல தூசி.. ப்ராமிஸா..”

“அப்புறம் கேள்வி கேட்டா ஆன்ஸர் சொல்லலைன்னா பிச்சுடுவேன்.. அப்பூதி சொல்றார்.. சார்..அது என்னோட மானசீக குரு நாதர்..மிக உயர்ந்தவர்.. நிறைய நல்ல காரியம் பண்றவர்..காட் மாதிரி அதனால அவர் பேர் வெச்சேன்ங்கறார்.. இந்தப் பெரியவர் சிரிக்கறார்.. அவன் என்னடாப்பா பண்ணிட்டான்..அவனப் போய் ஓஹோங்கறியே.. அப்பூதிக்கும் அவர் வொய்ஃபுக்கும் கோபம் வருது..இன்னா சார்..என்னோட குருவப் பத்தி அவன் இவன்னு பேசுறங்கறார்..கொஞ்சம் இரு..”

“டீச்சர் நான் வேணும்னா ப்ரின்சிபல் ரூம் வாசல்ல கோல்ட் வாட்டர் எடுத்துக்கிட்டு வரட்டா..

“இதுவே போதும்.. அந்தப் பெரியவர் நான் தான் அந்த நாவுக்கரசர்னு சொல்லிச் சிரிக்க கொஸ்டின்க்கு ஆன்ஸர் தெரியலைன்னா நீங்கள்ளாம் முழிப்பீங்களே அதே மாதிரி மிஸ்டர் அண்ட் மிஸஸ் அப்பூதி முழிக்கறாங்க.. தென் அவர் கால்ல டபக்குன்னு விழுந்துடறாங்க..அப்ப இந்த நவீன் மாதிரி ஒல்லியா ஒரு பையன் வீட்டுக்கு உள்ள இருந்து வர்றான்.. இவன் தான் என்னோட சன்..உங்க பேர் நாவுக்கரசர்னு வெச்சுருக்கேன்ங்கறார்.. ஓ குட். அப்படின்னு அந்தப் பெரியவர் சிரிக்கறார்.. அப்பூதி “சார்..எங்க வீட்டில நீங்க லஞ்ச் சாப்பிடணும் கொஞ்சம் ஹாஃப் அன் அவர் கொடுத்தீங்கன்னா என் வீட்டுக்காரி தூள் கிளப்பிடுவான்னு சொல்றார்..என்னடா கையைத் தூக்கறே..

ஹாஃப் ஹவர்ல ஹோட்டல்லதான் கிடைக்கும் மிஸ்..வீட்டில முடியாது.. டூ அவர்ஸ் ஆகும் டொமொட்டோ ரசம், பொடொட்டோ கறி பண்ண..”

“ஏன் அப்பா ஹெல்ப் பண்ண மாட்டாரா..”

“சமைக்கறதே அவர் தானே மிஸ்.. அம்மா ஒக்காந்து சூப்பர் சிங்க்ர் பாத்துக்கிட்டிருக்கும்.. நான் பக்கத்துல ஒக்காந்து ஹோம் வொர்க் பண்ணுவேன்..ப்ராமிஸா மிஸ்..”

“சமத்து தான் போ..அப்புறம் என்ன ஆச்சுன்னா நாவுக்கரசர்..சரின்னு சொன்னவுடனே மிஸஸ் அப்பூதி சமைக்கறாங்க..பையன்கிட்ட போய் வீட்டுக்குப் பின்னால போய் பனானா லீவ் பறிச்சுட்டு வாடாங்கறாங்க..அவன் பறிக்கறச்சே பாத்தா அவன் காலுக்குக் கீழ ஒரு பாம்பு..”

“அச்சசோ.. அந்த பாம்ப மிதிச்சுட்டானா டீச்சர்..பாம்பு செத்துப் போச்சா..பாவம் பாம்பு..”

“அடச்சே..அந்தப் பாம்பு கடிச்சு பையன் மயக்கமா வாழையிலையோட போய் அம்மாகிட்ட கொடுத்துட்டு பொசுக்குன்னு போய்டறான்..

“போய்டறான்னா..”

காட் கிட்ட போய்டறான்..அதான் நீயே சொன்னேல்ல செத்துப் போய்டறான்..இவங்க ஒரே அழுகை..ஹஸ்பெண்ட் அப்பூதிகிட்டயும் சொல்ல அவரும் அழுகை..சரி சரி..குரு வந்துருக்கார்..குருன்னா டீச்சர். குருவுக்கு சாப்பாடு போட்டுடுவோம்னு சொல்லிகிட்டு இருக்கறச்சே நாவுக்கரசர் அப்படியே குளிச்சு முடிச்சுட்டு வயசான தளர் நடையில் வர்றார்.. அழகா இருக்கும்..சாப்பிடலாமான்னு அப்பூதி கேக்க சரிங்கறார்.. ஒன்னோட பையனையும் கூப்பிடுங்கறார்.. பையன் தான் காட் கிட்ட போய்ட்டானே.. ரெண்டு பேரும் அழறாங்க.. விஷயத்தைக் கேள்விப் பட்டதும் வெக்ஸ் ஆகி ஒரு பாட்டுப் பாடறார் பாரு.. பாம்பே வந்து வெஷம் எடுத்துடுது..

“நிஜம்மாவா ..ஹவ் இஸ் இட் பாஸிபிள்..”

“கேள்வி கேக்கறதப் பாரேன்..எல்லாம் சிவன் அருளால..
*
எல்லையிலா சக்தியினை ஏற்றமுடன் கொண்டதென
கிள்ளை மொழியினைத் கீறித்தான் பார்த்தனையோ
நல்ல பெயரெல்லாம் நாகமே நீஎடுக்க
பிள்ளை பிழைக்கவைப் பாய்..

அப்படின்னு சொல்றாரா..
*
அதுக்குப் பாம்பு என்ன பண்ணித்து//

கசப்பாய் உடலெங்கும் காட்டருவி போல
விஷத்தால் கருநீல வண்ணமென மாறிவிட
கல்லே உருகக் கதறிய பாடலினால்
பல்லால் எடுத்துவிட்ட பாம்பு..
*
புரியுதா..”
*
“ஆமா ஏன் டீச்சர் திடீர்னு வேற லாங்க்வேஜ்ல பேசறாங்க..ஹிந்தி தானே ரேணு..”

“இல்லடா..அது ஃப்ரெஞ்ச்னு நினைக்கறேன்..இல்லையா டீச்சர்..”

அடி கொடுப்பேன்.. நான் பாடினது தமிழ்ப் பாட்டு தான்..ஸோ அப்புறம் என்ன.. மிஸ்டர் ,மிஸஸ், மாஸ்டர் அப்பூதி ஹாப்பியாகி நாவுக்கரசர் கால்ல விழுந்தாங்க.. அவரும் பை சொல்லிட்டுக் கிளம்பிட்டார்..”

அவ்ள தானா..

“இல்லப்பா..இன்னும் ஒரு கதை சொல்லலாம்..அத நாளைக்குச் சொல்றேன்..ஒரே ஒரு விஷயம் மட்டும் சொல்லிடறேன்.. நாவுக்கரசர் தாத்தா.. அவர் பேரன் மாதிரி இன்னொரு மகான் ஞான சம்பந்தர் நவீன் வயசு இருக்கும்.. ஆனா அவன் மாதிரி சோம்பேறி கிடையாது.. நிறைய ஞானஸ்தர் இறைவனருள் பெற்றவர்..அவரோட இவரும் சேர்ந்து அருட்பார்வையோட அந்தச் சிறுவனுக்கு இணையா நடப்பார் பாரு..வாவ்.. ரொம்ப அழகா இருக்கும்”

“யாரு சிவாஜி தானே டீச்சர்..திருவருட்செல்வர் தானே படம்”

“எப்படிடா தெரியும்..

எங்க குட் ஓல்ட் தாத்தா எப்பவும் பழைய படம் தான் பாப்பார்..அப்ப பார்த்திருக்கேன்..”

“டேய் சிவாஜின்னே படம் இருக்குல்லடா..”

“அது வேறடா..இந்த சிவாஜி நடிகர் திலகம்..”

”அதுக்கில்லடா..எங்கப்பா அந்தப் படத்தோட ஹீரோயினோட ஃபேனாக்கும்!”

“ச் ச்.. என்ன பேச்சு.. ஸோ க்ளாஸ்..இந்தக் கதை மூலமா என்ன தெரிஞ்சுக்கிட்டீங்க..”

நான் சொல்லட்டுமா மிஸ்..”

“சொல்லு ரேணு..”

“யாராவது கெஸ்ட் வந்தாங்கன்னா வீட்டில இருக்கற எவர்ஸில்வர் ப்ளேட்ல்யே தான் சாப்பாடு போடணும்.. சரியா டீச்சர்..”

“உன்னை உதைக்கணும்..டிங் டிங்.. சரி சரி பெல் அடிச்சுடுச்சு..ஸீயூ இன் நெக்ஸ்ட் க்ளாஸ்”
“தாங்க் யூ மிஸ்..”

“ஏண்டா இப்படி க் கத்தறீங்க..ஓகே..பை..:)

***
வாசக தோஷ ஷந்தவ்யஹ :)

uvausan
22nd October 2013, 09:50 PM
Pudayal - watch online
<iframe width="560" height="315" src="http://www.indopia.com/embed/Vaecdzyzzzymzztn/" frameborder="0" allowfullscreen></iframe>
:):smokesmile:

chinnakkannan
22nd October 2013, 09:54 PM
நானும் இதை வழி மொழிகிறேன்... :) எனக்கு சினேக லதாவைப் பார்க்கக் கொடுத்து வைத்திருக்காது வாசு சார் நீங்கள் இல்லை எனில்..!

வாசு சார்,

கார்த்திக் சாரோடு சேர்த்து நானும் உங்களுக்கு நன்றி சொல்ல கடமை பட்டவன். உங்கள் முனைவு இல்லையென்றால் பல பதிவுகளுக்கு visual சப்போர்ட் கிடைத்திருக்காது. தங்கள் உழைப்பினால் பலர் பதிவுகள் மேலும் மெருகேறி விளங்கின என்றால் மிகை அல்ல. உங்கள் சிநேகத்திற்கு நன்றி.

RAGHAVENDRA
22nd October 2013, 10:16 PM
சின்னக் கண்ணன் சார்
தங்களுடைய நடையில் நடிகர் திலகத்தின் நடையைப் படித்துக் கொண்டே நடை போட்டேன் பாருங்கள்... விழாத குறை ...
இனிமேல் செல் போனில் இன்டர்நெட் பார்க்கக் கூடாது என்பது ஒரு படிப்பினை... இத்தனைக்கும் வீட்டுக்குள்ளேயே....

RAGHAVENDRA
22nd October 2013, 10:17 PM
ரவி சார்
ஹனுமான் சாலீச... நடிகர் திலகம் .... என்ன அருமையான ஆய்வு... சூப்பர் சார்...

RAGHAVENDRA
22nd October 2013, 10:20 PM
கோபால் ..

தங்கம் புதைக்கப் பட்ட இடம் இது தான் ...

ஆமாம்... இந்த மய்யம் திரியில் தான் அந்தத் தங்கம் உள்ளது...

இப்போது எங்கெங்கோ தோண்டுகிறார்களே.... வேஸ்ட்...

கோபால் என்கிற தங்கப் புதையல் நடிகர் திலகம் உருவம் பொதித்த நாணயங்களாக தேடி எடுத்துத் தரும் புதையலை எடுத்துச் செல்லுங்கள்...

இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகிறார் ஞானத் தங்கமே..
அவர் ஏதும் அறியாரடி ஞானத் தங்கமே...

RAGHAVENDRA
22nd October 2013, 10:22 PM
வாசு சார்
இயக்குநர் வரிசையில் தங்களுடைய சிறந்த பதிவுகளுக்காக...
பிரபல ஹாலிவுட் இயக்குநர் ரிச்சர்ட் ஆட்டன்பரோ வை நினைவு படுத்தும்...

சூப்பர் ஸ்டைல் கிங்கின் அட்டகாசத் தோற்றம்..

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTSnaps2/Viduthalaifw01_zps423fcdf9.jpg

chinnakkannan
23rd October 2013, 12:26 AM
//that day is not very far from reach // நல்ல கட்டுரை ரவி ஜி..இன்னும் எழுதுங்கள்..


ஆர்.எஸ்.. பார்த்து.. நடக்கும் போது அடிபடவில்லையே... :) நன்றி..ஆனால் எனக்கு உங்களோட முன் அவதார் தான்பிடிச்சுருந்தது..ஜி.எஸ் ஸோட வாக்வாதம் பண்ணிட்டு அடுத்து என்ன பதில் சொல்லலாம்னு யோசிக்கறா மாதிரி :) கண்ணா எஸ்கேப்

rajeshkrv
23rd October 2013, 01:11 AM
நானும் இதை வழி மொழிகிறேன்... :) எனக்கு சினேக லதாவைப் பார்க்கக் கொடுத்து வைத்திருக்காது வாசு சார் நீங்கள் இல்லை எனில்..!

அட ராமசந்திரா .. சி.க நீங்களும் சேந்துனுட்டேளா.. பேஷ்

கார்த்திக் சார் இதுவரைக்கும் நிறைய எழுதாம தலைவரோட ஐட்டம் கேர்ள்ஸ் பற்றி மட்டும் பக்கம் பக்கமா எழுதறார் நீங்களும் அதை பார்த்து ஹும் ஹும். சரியில்லை...:lol:

jokes apart, MR Karthik very nice writeup so far .. Kudos :clap:

Gopal.s
23rd October 2013, 06:25 AM
// நன்றி..ஆனால் எனக்கு உங்களோட முன் அவதார் தான்பிடிச்சுருந்தது..ஜி.எஸ் ஸோட வாக்வாதம் பண்ணிட்டு அடுத்து என்ன பதில் சொல்லலாம்னு யோசிக்கறா மாதிரி :) கண்ணா எஸ்கேப்
ஆஹா, சங்கராபரணம் கிளைமாக்ஸ் மாதிரி,நாரதர் பட்டத்தை கை மாற்றி விட்டு விட்டேன். அப்பாடா.....

RAGHAVENDRA
23rd October 2013, 06:36 AM
ஆஹா, சங்கராபரணம் கிளைமாக்ஸ் மாதிரி,நாரதர் பட்டத்தை கை மாற்றி விட்டு விட்டேன். அப்பாடா.....

Confession.... இது வரைக்கும் நாரதர் இருந்த இடம் exposed....

வாசு சார்.... take over ... ஐயா ... விடு ஜூட்....

Gopal.s
23rd October 2013, 06:36 AM
பன்மொழி புலவர் வாசுதேவனார் பாணியில் (வீடியோ இல்லாமல்)ஒன்றை முயன்று பாப்போம்.
புதையல் படம் கீழ்கண்ட மொழிகளில் டப்(அ)மொழிமாற்றம் கண்டது.
மலையாளம்- என்ட இஷ்ட குஞ்சுமோன் துரையோட ராவுகள்.
கன்னடம்- ஹுதேயலு
தெலுங்கு-ரக்த அடாவல்லு மேடாலு ரஹச்யம்
ஹிந்தி-ராத் பரிவார் ஔலட் வாரிஸ்.

vasudevan31355
23rd October 2013, 06:57 AM
அடப்பாவி! நினக்கு ஹிர்தயம் லேது? நினக்கு மாத்திரம் வேண்டி யான் படமிட்டது கண்டோ! எந்தா! வல்லிய ஒரு மனுஷனாயி! பாவம் கொடூரன்!

Gopal.s
23rd October 2013, 07:20 AM
நீங்களும் அதை பார்த்து ஹும் ஹும். சரியில்லை...:lol:


அட அபிஷ்டு அம்பி,
சி.க இதிலே சேராமல் எதிலேயாக்கும் சேருவார்?

mr_karthik
23rd October 2013, 10:28 AM
கார்த்திக் சார் இதுவரைக்கும் நிறைய எழுதாம தலைவரோட ஐட்டம் கேர்ள்ஸ் பற்றி மட்டும் பக்கம் பக்கமா எழுதறார்
ஸாரி, ராஜேஷ் சார்,

மறுக்கிறேன்.

என்னுடைய 2100+ பதிவுகளில் வெறும் 6 பதிவுகள் மட்டுமே ஐட்டம் நடிகையர் பற்றியது. அதுவும்கூட ராஜா படத்தின் பதிவுகள் திரியில் இடம்பெற்றபோது, அதில் நடித்திருந்த பத்மகன்னா பற்றி (அப்படத்தில் அவரது ரோல் மிகவும் பிடிக்கும் என்பதால்) தனிப்பதிவு இடப்போய் சில நண்பர்களின் உந்துதலால் இத்தொடரைத் துவங்கினேன். இத்தனைக்கும் இது அவ்வளவு சுவாரஸ்யமான தொடர் அல்ல.

என்னுடைய மற்ற பதிவுகளை நீங்கள் படித்ததில்லைஎன நினைக்கிறேன். நான் பதித்தவற்றுள் எனக்கே மிகவும் பிடித்தவை / பிடிப்பவை நடிகர்திலகத்தின் படங்கள் வெளியான நாளில் எனது தியேட்டர் அனுபவப் பதிவுகளே. மிக விரைவில் அவற்றை மீண்டும் தொடர்வேன்.


jokes apart, MR Karthik very nice writeup so far .. Kudos :clap:
நன்றியுடன்
mister_k....

chinnakkannan
23rd October 2013, 11:06 AM
//என்னுடைய 2100+ பதிவுகளில் வெறும் 6 பதிவுகள் மட்டுமே ஐட்டம் நடிகையர் பற்றியது. // பாருங்க எல்லாத்துக்குமே ஒரு கவர்ச்சி தேவைப் படுது கே.எஸ் (கார்த்திக் சார்) :) //இத்தனைக்கும் இது அவ்வளவு சுவாரஸ்யமான தொடர் அல்ல. // உங்களுக்கு வேண்டுமானால் இருக்கலாம் :)

vasudevan31355
23rd October 2013, 11:21 AM
நடிகர் திலகத்தின் ஸ்டைல் சண்டைக் காட்சிகள் (வீடியோ தொடர்) 12

Don't Miss It

படம்: விளையாட்டுப் பிள்ளை

http://i1.ytimg.com/vi/L6nBNSlN6ck/movieposter.jpg?v=506bc738

வெளிவந்த ஆண்டு: 20.02.1970

தயாரிப்பு: ஜெமினி நிறுவனம்

சண்டைப்பயிற்சி : சுவாமிநாதன்

http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/AVSEQ02DAT_000050416_zps4a15cc73.jpg (http://s812.photobucket.com/user/adithya961999/media/AVSEQ02DAT_000050416_zps4a15cc73.jpg.html)

நடிகர் திலகம் மோதும் வில்ல விலங்குகள் : யானை, காளை

இயக்கம்: A.P. நாகராஜன்

இதயத்தைப் படபடக்க வைக்கும், வீறு கொண்ட வேங்கையென நடிகர் திலகம் யானை, காளையுடன் மோதும் சண்டைக்காட்சிகள்.

இதுவரை நடிகர் திலகம் பல வில்லன்களுடன் மோதிய தொடர்களைக் கண்டு களித்தீர்கள். இப்போது மாறுதலுக்கு வித்தியாசமாக 'விளையாட்டுப் பிள்ளை' படத்தில் யானை, மற்றும் காளையுடன் ஆக்ரோஷமாக மோதும் சண்டைக்காட்சியைக் காணப் போகிறீர்கள். சற்று அபூர்வப் படமான இப்படத்தின் இந்த சண்டைக்காட்சியை பலரும் மறந்திருக்கலாம். இப்போது ஞாபகப்படுத்திக் கொண்டு கண்டு மகிழலாம்.

இப்படம் முழுக்க பல விளையாட்டுப் போட்டிகளில் கலந்து வெற்றி வாகை சூடும் அற்புதமான வேடம் தலைவருக்கு. கபடி, சிலம்பம், ரேக்ளா வண்டி பந்தயம் என்று தூள் கிளப்புபவருக்கு மிக சிரமமான, உயிரைப் பணயம் வைத்து யானை, மற்றும் காளையுடன் துணிச்சலாக மோதும் வீரமான வேடம்.

முதலில் யானையுடன் மோதும் காட்சி

http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/AVSEQ01DAT_000508136_zps6d0edbee.jpg (http://s812.photobucket.com/user/adithya961999/media/sivaji%201/AVSEQ01DAT_000508136_zps6d0edbee.jpg.html)

மகன் சிவக்குமார் படிக்கும் காலேஜில் புதுக் கட்டிட திறப்பு விழாவிற்கு கலந்து கொள்ள சென்று இருக்கிறார் கிராமத்து வீரன் முத்தையா. அங்கு சிறப்பு விருந்தினராக மாகாராஜா (எஸ்.வி.ராமதாஸ்) மற்றும் அவரது தங்கை இளைய ராணி (காஞ்சனா) வருகை தருகின்றனர். மகாராஜாவுக்கு மாலை போட்டு வரவேற்க யானை ஒன்று மகாராஜாவை நோக்கி செல்ல, விழாவின் அதிர்வேட்டுச் சத்தத்தில் யானை மிரண்டு யானைக்கு மதம் பிடித்து அங்கிருக்கும் பொருள்களை துவம்சம் செய்கிறது. கீழே தடுமாறி விழும் மகாராஜாவை மிதிக்கவும் வருகிறது. இதை கவனித்துக் கொண்டிருக்கும் முத்தையா வீரத்துடன் யானையுடன் போராடி மகாராஜாவின் உயிரைக் காப்பாற்றுகிறார்

கிராமத்து வீரன் முத்தையாவாக அளவெடுத்து தைத்தாற் போன்று அத்தனை பொருத்தம் இந்த வேடம் நடிகர் திலகத்திற்கு. சும்மா புகுந்து விளையாடுவார். வேட்டியை வரிந்து கட்டிக் கொண்டு தடாலெனப் பாய்ந்து மகாராஜாவைக் காப்பாற்றி பின் யானையுடன் மோதுவார். யானையின் தந்தங்களைப் பிடித்து வலது பக்கமும், இடது பக்கமும் ஓடுவது படு துணிச்சல். அதே போல் யானை இவரை தூக்கிக் கிடாசும் போது அங்கு போடப் பட்டிருக்கும் நாற்காலிகளின் மேல் அப்படியே ஓடி விழுவது திக்...திக்....ஒவ்வொரு தரமும் யானை தூக்கி இவரைப் போடும் போது விழுகையில் இவர் கண்களில் தெரியும் மிரட்சியைப் பாருங்கள். யானை கீழே விழுந்து கிடக்கும் தன்னருகே வந்தவுடன் புயல் போல அந்த இடத்தை விட்டு தாவி உருள்வது டாப். மறுபடி நாற்காலிகள் மீது தூக்கி வீசப்பட்டவுடன் ஒரு நாற்காலியைத் தூக்கி வீசியபடி விருட்டென எழுந்திருப்பார். பின் யானையின் துதிக்கையை பிடித்தபடி சுற்றும்போது பந்தல் காலில் மோதிக் கொள்வார். பின் யானை மீதேறி அதன் தலைப் பகுத்தியைக் கைகளால் குத்தியபடியே யானையை அடக்கி படுக்க வைப்பார்.

நிஜமாகவே மெய் சிலிர்க்கும் காட்சி. அசாத்திய துணிச்சலுடன் மிக தத்ரூபமாக நடிகர் திலகம் உயிரைப் பணயம் வைத்து செய்திருப்பார்.

அடுத்து காளையுடன் மோதும் காட்சி

http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/AVSEQ01DAT_003455680_zps4d4e28f5.jpg (http://s812.photobucket.com/user/adithya961999/media/sivaji%201/AVSEQ01DAT_003455680_zps4d4e28f5.jpg.html)

மிருகங்களை வைத்து ஷோ நடத்துபவர்கள் வைக்கும் காளை அடக்கும் போட்டியில் முத்தையன் இளையராணியுடன் கலந்து கொள்கிறார். அடங்காத முரட்டுக் காளையையும் அடக்கிக் காட்டுவதாக ஷோ நடத்துபவர்களிடம் சவால் விட்டு காளையுடன் மோதத் தயாராகிறார். முத்தையனைக் கொல்ல காளையின் கொம்பிலே வில்லனால் விஷம் தடவப் படுகிறது. இதைக் கேள்விப்பட்ட முத்தையன் மனைவியும், மகன் மாணிக்கமும் பதறி அடித்து ஓடி வருகிறார்கள். தந்தையை ஆபத்திலிருந்து காப்பாற்ற மகன் முதலில் காளையுடன் மோதித் தோற்கிறான். பின் முத்தையன் களத்தில் இறங்கி அந்த முரட்டுக் காளையை அடக்கி வெற்றி கொள்கிறான்.

மகன் சிவக்குமார் காளையுடன் மோதி அடிபட்டுக் கிடக்கையில் பதறி ஓடி வந்து நடிகர் திலகம் திமிர்ப் பிடித்த காளையுடன் மோதுவார். (சிவக்குமார் மோதுவதற்கு முன்னால் காளையுடன் மோத தயார் நிலையில் இவர் ரெடியாகும் அழகே அழகு!) மாட்டின் இரு கொம்புகளையும் பிடித்து சுற்றி ஓடி வருவது, மாடு முட்டியவுடன் தூரப் போய் விழுந்து அதே வேகத்தில் எழுந்திருப்பது என்று இதிலும் நிறைய வீர சாகசங்கள் புரிவார் நடிகர் திலகம்.

ஒருமுறை காளை இவரை முட்டி மோதியவுடன் சுற்றியிருக்கும் தகரத் தடுப்புகளின் மீது போய் விழுந்து அப்படியே சுவற்றில் அடித்த பந்து போலத் திரும்புவார். உண்மையாலுமே நெஞ்சை உறைய வைக்கும் காட்சி இது.

உச்சக்கட்ட காட்சி ஒன்று. டூப்பே இல்லாமல் மாட்டின் கொம்புகளைப் பிடித்துத் தொங்கியவாறு யாரும் எதிர்பாராவகையில் சட்டென ஜம்ப் செய்து தன் இரு கால்களாலும் மாட்டின் முகப் பகுதியை இறுக்கிப் பிடித்தபடி செய்யும் ரத்தத்தை உறைய வைக்கும் ஆக்ஷன். (மேலே உள்ள ஸ்டில்லைப் பாருங்கள்). அப்பப்பா! என்ன ஒரு துணிச்சல்! வேகம்! பார்ப்பவர்களின் சப்த நாடியும் ஒடுங்கிப் போகும். நீங்களே பாருங்கள். நம் விளையாட்டுப் பிள்ளையின் வீர தீரச் செயல்களை.

நன்றி!

முதன்முறையாக இணையத்தில் தரவேற்றி உங்களுக்காக


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=uE25fCTYP7g

அன்புடன்
நெய்வேலி வாசுதேவன்

Gopal.s
23rd October 2013, 11:52 AM
கார்த்திக் சார் ,
தங்கள் அத்தனை பதிவுகளும் சுவாரஸ்யம்தான். என்னை இந்த மையத்திற்கு இழுத்து ஈர்த்தவை.

Gopal.s
23rd October 2013, 11:59 AM
வாசு,
நம்புவியோ மாட்டியோ, இன்றோ நாளையோ உன்னுடன் பேசும் போது,விளையாட்டு பிள்ளை,லட்சுமி கல்யாணம் சண்டைகளை குறிப்பிட நினைத்தேன். டெலிபதி. அமர்க்களம்.

chinnakkannan
23rd October 2013, 12:18 PM
ஹ்ம்ம்ம்.. கனியிருப்பக் காய் கவர்ந்தற்றுங்கறது தான் நினைவுக்கு வருது..ஹீம் என்.விக்கு எப்படிப் புரியும்..அதெல்லாம் சொல்லாமல் தெரிய வேண்டுமே :)

mr_karthik
23rd October 2013, 12:38 PM
டியர் கோபால் சார்,

நீங்கள் தோண்டிஎடுத்த "புதையல்" காதல் அருமை. அதை நீங்கள் வர்ணிக்கும் அழகில் கூடுதல் இனிமை பெறுகிறது. அந்தப்படத்தின் வெளிப்புற காட்சிகள் தஞ்சை மாவட்டம் மல்லிபட்டினம், மனோரா, சேதுபாவா சத்திரம் பகுதிகளில் எடுக்கப்பட்டவை. புதையல் புதைக்கப்பட்டதாகச் சொல்லப்படும் சால்வநாயக்கன் பாலம் இப்போதும் இருக்கிறதாம். ஆனால் படத்தில் இடம்பெறும் பாலம் ஸ்டுடியோ செட்.

உன்னோடு இருந்தவன் யார் என்று பாலையா அதட்ட 'துரை' (சிவாஜி) என்று சொல்ல வாய்திறந்து 'து' மட்டும் சொல்லி சட்டென்று 'துக்காராம்' (சந்திரபாபு) என்று பத்மினி சமாளிக்கும் சீன்தான், பின்னாளில் வந்த 'சு... சுந்தரி' க்கு இன்ஸ்பிரேஷனோ.

தெருக்கூத்து சீனை மட்டும் வெட்டியெறிந்தால் புதையல் அருமையான விறுவிறுப்பான படம். என்றைக்கும் விண்ணோடும் முகிலோடும் நிலைத்து நிற்கும் படம்.....

mr_karthik
23rd October 2013, 01:11 PM
டியர் வாசுதேவன் சார்,

அதிகம் பேர் பார்த்திராத, மறுவெளியீடுகளைக் காணாத, தொலைக்காட்சிகளில் அதிகம் ஒளிபரப்பப் படாத 'விளையாட்டுப்பிள்ளை' திரைப்படத்தின் இரண்டு அற்புதமான சண்டைக்காட்சிகளை அளித்தமைக்கு மிக்க நன்றியும் வாழ்த்துக்களும். உண்மையில் இவை சண்டைக்காட்சிகள் அல்ல, வீர சாகசக்காட்சிகள். பார்க்கப் பார்க்க எவ்வளவு உணர்ச்சி மேலிடுகிறது. புல்லரிக்க வைக்கும் சாகசங்கள். பல இடங்களில் தலைவர் ரொம்ப, ரொம்பவே ரிஸ்க் எடுத்து செய்திருக்கிறார்.

'விளையாட்டுப்பிள்ளை' திரைப்படம் 1970-ல் எங்க மாமா படத்துக்கும், வியட்நாம் வீடு படத்துக்கும் இடையில் வந்தது. தமிழகத்தில் பரவலாக 12 வாரங்கள் ஓடிய இப்படம் மதுரையில் 100 நாட்களுக்கு மேல் ஓடியதாக தகவல் உண்டு. முரளி சார் மற்றும் பம்மலார் சார் கன்பர்ம் பண்ணுவார்கள் என்று நினைக்கிறேன்.

விகடனில் வெளியான 'ராவ்பகதூர் சிங்காரம்' தொடர்கதை 50-களில் படமாக வந்திருக்க வேண்டிய ஒன்று. 70-ல் ட்ரெண்ட் மாறிவிட்டது. தில்லானாவின் பெருவெற்றியைப் பார்த்து வாசன், நடிகர்திலகம், ஏ.பி.என். கூட்டணி விளையாட்டுப்பிள்ளை எடுக்க முடிவெடுத்தது. ஓகோ என்று பேசப்படாவிட்டாலும், விளையாட்டுப்பிள்ளை வெற்றிப்படமே.

அரிய வீடியோ பதிவுக்கு மிக்க நன்றி.......

chinnakkannan
23rd October 2013, 01:23 PM
மதுரையில் நிறைய நாட்கள் ஓடிய படம் விளையாட்டுப்பிள்ளை எனப் படித்த நினைவு..ராவ் பகதூர் சிங்காரம்படித்திருக்கிறேன்..சேவற்கொடியோன் - ஆ.வி ஆசிரியர்.. சமீபத்தில் போன வருடம் டிவிடி வாங்கிப்பார்த்த போது ரொம்ப இம்ப்ரஸ் செய்யவில்லை - மொத்தப்படம் எனப்பார்க்கும் போது..ஏதோ ஒன்று மிஸ்ஸிங்..காஞ்சனாவின் குளியல் சொல்லாமல் தெரியவேண்டுமே பாடல் எல்லாம் பாக்ஸ் ஆஃபீஸிற்காகச் சேர்க்கப்பட்டதுபோல செயற்கை..ஈவன் ராஜாராணி ஜோடி இங்கும் ஜோடியாய் இருந்தாலும் ஏ.ஒ.மி.

chinnakkannan
23rd October 2013, 01:24 PM
அந்த சமயம் வந்த வேறொரு படத்தில் வளையல் காட்சி வந்ததால் இந்தப் படத்தில் கதையில் உள்ள வளையல்காரர் காட்சியை மாற்றியிருந்தனர் எனப் படித்த நினைவு..

mr_karthik
23rd October 2013, 01:33 PM
டியர் சின்னக்கண்ணன் சார்,

தங்கள் நவீன திருவருட்செல்வர் படித்தபோது, கல்யாணராமன் படத்தில் தேங்காய், மனோரமா நடத்தும் மனோகரா நாடகம் நினைவுக்கு வந்தது.

“ஏன் அப்பா ஹெல்ப் பண்ண மாட்டாரா..”

“சமைக்கறதே அவர் தானே மிஸ்.. அம்மா ஒக்காந்து சூப்பர் சிங்க்ர் பாத்துக்கிட்டிருக்கும்.. நான் பக்கத்துல ஒக்காந்து ஹோம் வொர்க் பண்ணுவேன்..ப்ராமிஸா மிஸ்..”
சரி, உங்க வீட்டு, எங்க வீட்டு நடப்புகளை எல்லாம் ஏன் இப்படி பப்ளிக் ஆக்குறீங்க..?.....

chinnakkannan
23rd October 2013, 02:03 PM
கே.எஸ்(கார்த்திக் சார்) நன்றி :) தேங்காய் மனோரமா நினைவிலில்லை..ம்ம் அது நாட்டு நடப்பு தானே :)

KCSHEKAR
23rd October 2013, 02:40 PM
டியர் கார்த்திக் சார்,

தங்களுடைய ஐட்டம் நடிகையர் தொடர் - சினேகலதா பற்றிய பதிவு அருமை. பதிவுகளில் தங்களுக்குப் பிடித்தது தியேட்டர்களில் முதல் நாள் அனுபவம் என்று குறிப்பிட்டிருந்தீர்கள். எங்களுக்கும்தான். ஆனாலும், ஒரு முழுநீளத் திரைப்படத்தில், கதை, காதல், நகைச்சுவை என்று பல காட்சிகள் இருந்தாலும், ஐட்டம் பாடல் காட்சிக்கு ஒரு கிக் இருக்கும்தானே? அதுபோல தங்களுடைய ஐட்டம் நடிகையர் தொடரிலும் ஒரு கிக் இருக்கத்தான் செய்கிறது. தொடருங்கள் உங்களுக்குப் பிடிக்காவிட்டாலும்.. நன்றி.

KCSHEKAR
23rd October 2013, 02:42 PM
டியர் சின்னக்கண்ணன் சார்,

தங்களுடைய வித்தியாசமான நடையில் திருவருட்செல்வர் பதிவு சிறப்பு. நன்றி. பாராட்டுக்கள்.

sankara1970
23rd October 2013, 02:43 PM
இது என்ன சண்டை காட்சிகள் சீசனா
நானும் நேற்று இரவு, நம்ம தலைவர் எங்கள் தங்க ராஜா வில், ராமதாசை புரட்டி எடுக்கும் காட்சியை
வலை தளத்தில் பார்த்து பின் திருப்தியுடன் தூங்க போனேன்.
கொஞ்சம் gymnastics காட்சிகள் இடம் பெற்றிருக்கும். இந்த படம் பார்க்க ஆவல் தூண்டுகிறது
என் மனைவி கலையில் இனிமே காலையில்
எழுப்ப மாட்டேன் என்று சொன்னது வேறு கதை

KCSHEKAR
23rd October 2013, 02:46 PM
டியர் வாசுதேவன் சார்,

கார்த்திக் சார் அளித்த ஐட்டம் நடிகையர் தொடரில், சினேகலதா பற்றிய தங்களுடைய பதிவும், புகைப்படங்கள் மற்றும் பாடல் இணைப்புகள் அருமை.

நடிகர்திலகத்தின் சண்டைக் காட்சிகள் வரிசையில், விளையாட்டுப் பிள்ளை பற்றிய தங்களது பதிவு சூப்பர். கார்த்திக் சார் குறிப்பிட்டமாதிரி இவை சண்டைக் காட்சிகள் அல்ல, வீர சாகசக் காட்சிகள். அவற்றையும், வீடியோ இணைப்பையும் அளித்த தங்களுக்குப் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

KCSHEKAR
23rd October 2013, 02:55 PM
சிவாஜியின் காதல்கள்-4
புதையல்-1957
புதையல்...விறுவிறுப்பான தங்க காதல் புதையல்.
டியர் கோபால் சார்,
புதையல் பற்றிய தங்களது பதிவு சிறப்பு. உண்மையிலேயே ஒரு காதல் புதையலைத் தோண்டி அதிலிருந்து எங்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக அளித்துக்கொண்டிருக்கிறீர்கள். நன்றி.

விண்ணோடும் முகிலோடும் காட்சி-சுருங்க சொன்னால் தமிழில் வந்த முதல் முதல் அசல் காதல் காட்சி. இன்ப லாகிரியில் உன்மத்தம் கொண்ட காதல் பித்தோடு காதலர்கள் களி நடம் ஆடும் ,நடிப்பின் சாதனை.Silhoutte என்று சொல்ல படும் நிழல் படத்தில் தொடங்கி,துரத்தி விளையாடி,கை கோர்த்து கடலில் ஒருவர் மேல் ஒருவர் விழுந்து களித்து, ஜடையை இழுத்து,விளையாடி,குட்டி கரணம் அடித்து இன்ப பித்து உணர்த்தி,விளையாட்டாய் மடியில் கை போட செல்லமாய் தட்டி விடும் அழகி. காதலி கையை பிடித்து முட்டி போட்டே நடை பழகும் கடற்கரையோர காதல்....பார்த்து களியுங்கள் அய்யாமார்களே.....

சிறப்பான வர்ணனை... எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று, விண்ணோடும் முகிலோடும்.

RAGHAVENDRA
23rd October 2013, 04:36 PM
வாசு சார்

1.10.1952 அன்று நடிப்பைப் பிறக்க வைத்து,
கல்வியானாலும் சரி, செல்வமானாலும் சரி, வீரமானாலும் சரி ...
நிரந்தரமாக இவற்றை ஆள்கின்றவரின் அவற்றை மற்றவர்க்கும் தருகின்றவரின்
விளையாட்டுப் பிள்ளை தீரச் செயல் வீடியோவைத் தந்து
சிறப்பாக விளக்கி
மேலும் மேலும் உயர்ந்து கொண்டே போகிறீர்கள்...
நாங்கள் கீழே இருந்து உங்களை தலை நிமிர்ந்து
அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறோம்...

rajeshkrv
23rd October 2013, 08:04 PM
ஸாரி, ராஜேஷ் சார்,

மறுக்கிறேன்.

என்னுடைய 2100+ பதிவுகளில் வெறும் 6 பதிவுகள் மட்டுமே ஐட்டம் நடிகையர் பற்றியது. அதுவும்கூட ராஜா படத்தின் பதிவுகள் திரியில் இடம்பெற்றபோது, அதில் நடித்திருந்த பத்மகன்னா பற்றி (அப்படத்தில் அவரது ரோல் மிகவும் பிடிக்கும் என்பதால்) தனிப்பதிவு இடப்போய் சில நண்பர்களின் உந்துதலால் இத்தொடரைத் துவங்கினேன். இத்தனைக்கும் இது அவ்வளவு சுவாரஸ்யமான தொடர் அல்ல.

என்னுடைய மற்ற பதிவுகளை நீங்கள் படித்ததில்லைஎன நினைக்கிறேன். நான் பதித்தவற்றுள் எனக்கே மிகவும் பிடித்தவை / பிடிப்பவை நடிகர்திலகத்தின் படங்கள் வெளியான நாளில் எனது தியேட்டர் அனுபவப் பதிவுகளே. மிக விரைவில் அவற்றை மீண்டும் தொடர்வேன்.


நன்றியுடன்
mister_k....

இத பாருடா .,. கார்த்திக் சார், எனக்கு தான் தெரியுமே .. சும்மா வம்பிழுத்தா இப்படி வந்து புள்ளி விவரம் கொடுத்து சின்ன புள்ளையாட்டம் விளக்கம் சொல்றேளே ...
நடிகர் திலகம் திரியில் நீங்களும் பெரும் பங்காளர் என்பது உலகம் அறிந்த சேதியாயிற்றே சொல்லவும் வேண்டுமா ...

uvausan
23rd October 2013, 08:28 PM
When all are rocking this thread , I 'm sorry for being little "disconnect" to the subjects being handled by Vasu Sir , Gopal Sir , Karthik Sir , Chinnakannan Sir and Ragavendra Sir.

I can say with confidence and conviction that NT can be interrelated to many things right from NASA to small things - he will excel in all such comparisons. Few thoughts crossed my mind yesterday which I penned down and Correlated to NT - amazing ! they are perfectly matching !!

NT is indeed a gold mine - Government is curbing the import - Gap in Current Account deficit is widening but gold does not lose its value still - this is what NT . There is a old saying - you cannot remain young - but you can remain immature indefinitely . People who undervalue his importance are those who chose to remain immature indefinitely -


உழைப்பு வறுமையை மட்டும் விரட்ட வில்லை; தீமையையும் விரட்டுகிறது.

------NT யின் உழைப்பு பலரின் வறுமையை விரட்டியது - நல்ல ரசிகர்களை அரவணித்துகொண்டது

ஒரு தகப்பனார் பத்துக் குழந்தைகளைக் காப்பாற்றலாம்.
ஆனால் பத்துக் குழந்தைகள் ஒரு தகப்பனாரைக் காப்பாற்றும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது.

------உண்மை - NT யினால் காப்பற்ற பட்டவர்கள் எண்ணிக்கையில் அடங்காது - பல குழந்தைகள் நிறைந்த தமிழகம் / இந்திய அரசாங்கம் அவரை காப்பாற்றவில்லை

தெரிந்து மிதித்தாலும் தெரியாமல் மிதித்தாலும் மிதிபட்ட எறும்பிற்கு இரண்டுமே ஒன்றுதான்.

------இந்த தமிழகமும் , நாடும் ஒரு எறும்புதான் - அவமானம் NT க்கு இல்லை

குத்து விளக்கு எவ்வளவு பிரகாசமாக எரிந்தாலும் அதன் அடியில் சற்று இருள் இருக்கத்தான் செய்யும்.

-------100 ஆண்டு திரையுலக சாதனை ஒரு இருள் சூழ்ந்த விளக்காகதான் எரிந்தது NT யை பற்றி யாரும் பெருமையாக பேசாததால்

பணத்திற்காக ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டாம்.
உழைத்தால் பணம் நிறைய சம்பாதிக்கலாம்.

----NT யை போல் வாழ்ந்து சம்பாதியுங்கள் - தகுதியே இல்லாதவர்களை புகழ்ந்து வாழாதீர்கள்

சுயநலம் என்பது சிறு உலகம்.அதில் ஒரே ஒரு மனிதன்தான் வாழ்கிறான் .
வெற்றியின் ரகசியம் - எடுத்த காரியத்தில் நிலையாக இருத்தல்

----NT யின் வெற்றியின் ரகசியம் எடுத்த காரியத்தில் நிலையாக இருத்தல்

பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது.
பணம் இல்லா விட்டால் யாருக்கும் உன்னைத் தெரியாது.

----பணம் இருக்கும் போதும் , அவர் நிலைமை தடுமாறவில்லை
பணம் குறைந்தபோதும் , அவரை தெரியாதவர்கள் யாரும் இல்லை

நண்பனைப் பற்றி நல்லது பேசு.
விரோதியைப் பற்றி ஒன்றும் பேசாதே!

---NT கடைபிடித்த கொள்கைகளுக்குள் இதுவே தலையான ஒன்று

அதிர்ஷ்டத்திற்காகக் காத்திருப்பதும் சாவுக்காக் காத்திருப்பதும் ஒன்றே!

------உழைப்பு ஒன்றே முலதனம் - சாவும் இறந்துவிட்டது அவர் முன்னால்

மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது தடைகளற்ற வாழ்க்கை அல்ல, தடைகளை வெற்றி கொண்டு வாழும் வாழ்க்கை

---இதைத்தான் NT யின் குடும்பம் இன்று demonstrating

ஒரு கதவு மூடப்படும் போது மற்றொரு கதவு திறக்கிறது. ஆனால், நாம் மூடப்பட்ட கதவையே பார்த்துக் கொண்டு திறக்கப்படும் கதவை தவறவிடுகிறோம்.

-----மூடப்பட்ட கதவும் திறந்தது பெருமாளின் நம்பிக்கையில் - திறந்த கதவு பின் மூடப்படவே இல்லை - இந்த திரியின் மூலம் கதவுகள் என்றுமே திறந்த படியே இருக்கும் .

Ravi
:):smokesmile:

chinnakkannan
23rd October 2013, 08:53 PM
ஹாய் ரவி.. நன்னாவே எழுதியிருக்கேள்..கடைசி சிரிப்பைத் தவிர மத்ததெல்லாம் சீரியஸ்.. நைஸ்..(ஆமாம் கண்ணா..நீயும் சீரியஸா எழுதப் பாரேண்டா..- ஓ.கே மனசாட்சி..அடுத்த போஸ்ட் சீரியஸ் தான்..!)

chinnakkannan
23rd October 2013, 08:54 PM
ராஜேஷ் கண்ணா.. நீங்களும் குட்டியா எழுதுங்களேன்..ந.தி படங்கள பத்தி..


இத பாருடா .,. கார்த்திக் சார், எனக்கு தான் தெரியுமே .. சும்மா வம்பிழுத்தா இப்படி வந்து புள்ளி விவரம் கொடுத்து சின்ன புள்ளையாட்டம் விளக்கம் சொல்றேளே ...
நடிகர் திலகம் திரியில் நீங்களும் பெரும் பங்காளர் என்பது உலகம் அறிந்த சேதியாயிற்றே சொல்லவும் வேண்டுமா ...

Russelldwp
23rd October 2013, 09:08 PM
உழைப்பு வறுமையை மட்டும் விரட்ட வில்லை; தீமையையும் விரட்டுகிறது.

------NT யின் உழைப்பு பலரின் வறுமையை விரட்டியது - நல்ல ரசிகர்களை அரவணித்துகொண்டது

ஒரு தகப்பனார் பத்துக் குழந்தைகளைக் காப்பாற்றலாம்.
ஆனால் பத்துக் குழந்தைகள் ஒரு தகப்பனாரைக் காப்பாற்றும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது.

------உண்மை - NT யினால் காப்பற்ற பட்டவர்கள் எண்ணிக்கையில் அடங்காது - பல குழந்தைகள் நிறைந்த தமிழகம் / இந்திய அரசாங்கம் அவரை காப்பாற்றவில்லை

Dear Ravi Sir

Wonderful Tremendous Comparison. This is True feeling of All over world Sivaji Fans. Superb

C.Ramachandran.

Russelldwp
23rd October 2013, 09:20 PM
Dear Vasudevan Sir

Thanks for your video presentation of THALAIVAR'S PUTHAIYAL SONG and Vilayattupillai fight. Excellent

Ramachandran.C

JamesFague
23rd October 2013, 09:23 PM
Mr Vasu Sir,

Superb Fight scenes from VP.Thanks for uploading the same.

Mr Raghavendra Sir,

Your new avatar is simply superb.

Mr Karthik Sir,

Awaiting your theatre experience of NT's Films.

JamesFague
23rd October 2013, 09:48 PM
Mr Gopal Sir,

Your Love series is fantastic.

uvausan
23rd October 2013, 10:09 PM
Dear Vasu Sir - NT fight scenes superb but more than that the way you have narrated - that added further value . In any other heroes movies , both the shots would be taken separately and combined after long drawn editing - in some movies , to please the fans , animals would appear after fights to confess their defeats . But the scenes are so natural and NT had risked his life too much - Ganesh became equal to Ganesh:pink:and at the end overpowered the Ganesh :pink: Great Sir !!:):smokesmile:

There could be a few who are yet to watch this enjoyable movie from Thilana Mohanambal combo - for them this gift - watch it online
http://youtu.be/L6nBNSlN6ck

Murali Srinivas
24th October 2013, 12:51 AM
வாசு சார்,

வேலை பளு காரணமாக சில பல நாட்கள் பதிவிட முடியவில்லை. ஆனால் உங்கள் பதிவுகள் அனைத்தையும் படித்துக் கொண்டுதான் இருக்கிறேன். நடிகர் திலகத்தின் படங்களை இயக்கிய இயக்குனர்கள் பற்றிய ஒரு குறுந்தொடர் பிரமாதம். எனக்கு அதில் நீங்கள் மாதவனுக்கு கொடுத்திருந்த முக்கியத்துவம் பிடித்திருந்தது. காரணம் நாம் அனைவருமே CVR பற்றி பெருமையாக சொல்வோம். ACT பற்றி சிலாக்கிது பேசுவோம். ஆனால் மாதவன் பற்றி பேசுபவர்கள் குறைவு. ஞான ஒளி காரணமாக இருந்தால் கூட அவரின் படங்கள் மற்றும் அவை புரிந்த சாதனைகள் பற்றி நீங்கள் மிக சரியாக குறிப்பிட்டிருந்தீர்கள். தங்கபதக்கம் பற்றி சொல்லும்போது நான் எதிர்பார்த்திருந்த விஷயங்களை எழுதியிருந்தது மகிழ்ச்சியாக இருந்தது.

நாயகியர் தொடரில் மைனாவதி பற்றி எழுதியது நன்றாக இருந்தது. எனக்கு பண்டரிபாய் மற்றும் மைனாவதி பற்றி எந்த செய்தி படித்தாலும் நகைச்சுவையான ஒரு விஷயம் நினைவுக்கு வரும். பெருந்தலைவரின் தொண்டனாக ஸ்தாபன காங்கிரஸில் பணியாற்றி பின் ஜனதாவில் இணைந்து அரசியல் பணி செய்து பின்னாட்களில் தனி இயக்கம் கண்ட பெரியவர் நெல்லை ஜெபமணி அவர்கள் ஒருமுறை பொதுகூட்டத்தில் பேசும்போது பண்டரிபாய், மைனாவதி ஆகியோரையும் கர்நாடக காவிரி அணைப்பிடிப்பில் 1960-களின் இறுதியில் கட்டப்பட்ட ஹேமாவதி அணையையும் இணைத்து நகைச்சுவையாக ஒன்றை சொன்னார். அதை இன்றைக்கும் நினைத்து ரசிப்பேன்.

மைனாவதி பற்றி சொல்லும் போது அபிநய சரஸ்வதி நினைவிற்கு வருகிறார். காரணம் ஞாயிறன்று பார்த்த குலமகள் ராதை. உங்கள் நாயகியர் தொடரில் கன்னடத்து பைங்கிளி பற்றி எழுதும்போது அவர் எப்படி நடிகர் திலகம் படங்களில் பரிமளித்தார் என்பதைப் பற்றி விளக்கமாக எழுதியிருந்தீர்கள். நடிகர் திலகத்துடன் அவர் நடித்த அனைத்துப் படங்களிலுமே அவர் திறமை பிரகாசித்தது என்பதில் உங்கள் கருத்தோடு ஒத்துப் போகிறேன். அதுவும் தவிர அவர் நடிகர் திலகத்துடன் இணைந்தபோது திரையில் நாம் கண்ட compatibility நம்மை ரொம்பவே ரசிக்க வைக்கும். பாகப்பிரிவினை, விடிவெள்ளி பாலும் பழமும், பார்த்தால் பசி தீரும், வளர் பிறை, ஆலயமணி, இருவர் உள்ளம், குலமகள் ராதை, கல்யாணியின் கணவன், புதிய பறவை என்று எப்படிபட்ட படங்கள் மற்றும் கதாபாத்திரங்கள்? அதையும் நினைவு கூறும் வாய்ப்பு கிடைத்தது.

பொதுவாகவே நடிகர் திலகத்தின் ரசிகர்களின் ரசனை ஒரே அலைவரிசையில்தான் இருக்கும் என்பது தெரிந்த விஷயம் என்றாலும் கூட இன்றைக்கு நீங்கள் விளையாட்டுப் பிள்ளை படத்தின் இரண்டு வீர சாகச காட்சிகளை தரவேற்றி எழுதியிருப்பதை படித்த போது நமது திரியின் 6-ம் பாகத்தில் மூன்று வருடங்களுக்கு முன் நான் எழுதியதுதான் நினைவு வந்தது. கோபால் சொன்னது போல் நமது அலைவரிசை எப்போதும் ஒரு போலதான். நான் எழுதியவற்றில் இருந்து ஒரு சில வரிகள் மீண்டும்

இந்தப் படத்தை பொறுத்தவரை நடிகர் திலகத்திற்கு ஒரு வித்தியாசமான ரோல் என்றே சொல்லலாம். அதாவது பல வகைப்பட்ட வீர விளையாட்டுகள் இதில் இடம் பெற்றன. சிலம்பாட்டம், ரேக்ளா, காளை அடக்குதல், மத யானையை அடக்குவது என்று வெரைட்டி வீர பிரதாபங்கள். இந்தப் படத்தை ஒரு சவாலாகவே அவர் எடுத்துக் கொண்டிருக்க வேண்டும். இவரால் இதையெல்லாம் செய்ய முடியாது என்று ஒரு தரப்பினர் பல காலமாக கிண்டல் செய்திருந்ததும் இந்த பாத்திரத்தை ஏற்க ஒரு காரணமாக இருந்திருக்கலாம். சவாலை திறம்படவே சமாளித்திருக்கிறார். முதலில் ஆடும் கபடியாகட்டும், சிலம்பு சுற்றும் போது ஒரு கால் ஊன்றி ஒரு கால் முட்டி போட்டு கழுத்தை மட்டும் பின் பக்கம் திருப்பி வலது கையை மட்டும் பயன்படுத்தி சிலம்பை பின்னால் கொண்டு வந்து தடுப்பதோடு மட்டுமல்லாமல் தாக்கவும் செய்யும் அந்த ஸ்டெப், டூப் போடாமல் அதி வேகத்தில் ரேக்ளா வண்டி ஒட்டி வரும் அந்த க்ளோசப் காட்சிகள், கல்லூரி விழாவில் யானையின் தந்தைகளை பிடித்து அடக்குவதோடு இல்லாமல் இதிலும் டூப் இல்லாமல் அந்த தந்தங்களை பிடித்தே யானையின் முதுகின் மேல் ஏறுவது, அதே காட்சியின் தொடக்கத்தில் யானையின் சீற்றம் கண்டதும் தாவி எழுந்து வேட்டியை மடித்துக் கட்டுவது, இறுதிக் காட்சியில் மாட்டை அடக்கும் காட்சிகள் என்று காட்சிக்கு காட்சிக்கு பிரமாதப்படுத்தியிருகிறார். ஆக்க்ஷனே இப்படியென்றால் ஆக்டிங் பற்றி சொல்லவும் வேண்டுமோ?

படத்தின் பாக்ஸ் ஆபிஸ் பற்றி கேட்ட கார்த்திக் அவர்களுக்காக அதே பதிவிலிருந்து

இந்த படத்தின் பாக்ஸ் ஆபிஸ் நிகழ்வுகளை பார்த்தோம் என்றால் சென்னைக்கு தெற்கே இந்த படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. திருச்சியிலும், மதுரை - நியூசினிமாவிலும் 84 நாட்கள் ஓடிய படம் ஷிப்டிங்கில் [மதுரை வெள்ளைக்கண்ணு/மிட்லண்ட் தியேட்டர் என்று நினைவு] 100 நாட்களை கடந்தது. படம் வீர விளையாட்டுகளை கொண்டிருந்ததாலும், மேற் சொன்ன சமூக அமைப்புகள் தென் தமிழகத்தில் அப்போதும் நிலைப் பெற்றிருந்ததும் இதன் வெற்றிக்கு காரணமாக அமைந்தது. ஓடின நாட்களை மட்டும் வைத்து இதை சொல்லவில்லை. இந்த படம் வெளியான போது சிவந்த மண் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்தது. எங்க மாமா வெளியாகி 3 வாரங்களே ஆயிருந்தது. அது மட்டுமா? விளையாட்டுப் பிள்ளை வெளியான 60 நாட்களிலே வியட்நாம் வீடு ரிலீசானது. முன்னால் வெளி வந்த படங்கள் பொழுதுபோக்கு அம்சங்களோடு மக்களை கவர்ந்தது என்றால் பின்னால் வந்தது கதையம்சத்திலும் நடிப்பிலும் மக்களை ஈர்த்தது. அப்படியிருந்தும் விளையாட்டுப் பிள்ளை 100 நாட்களை கடந்தது என்று சொல்லும் போது அதன் வெற்றியின் வீச்சை புரிந்துக் கொள்ளலாம். மதுரை ராமநாதபுரம் நெல்லை குமரி மாவட்டங்களில் B, C சென்டர்களிலும் நன்றாக வசூல் செய்தது.

சுருக்கமாக சொன்னால் இவையெல்லாம்தானே என்னால் முடியாது என்று சொன்னீர்கள். இதோ பார்த்துக் கொள்ளுங்கள் என்று நடிகர் திலகம் சில பேருக்கு பதில் சொன்ன படம்.

முழு விமர்சனத்தையும் படிக்க

http://www.mayyam.com/talk/showthread.php?8234-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-6/page118


அன்புடன்

சின்ன கண்ணன், ஒரு சின்ன nit picking. ராவ் பகதூர் சிங்காரம் தொடரை எழுதியதும் கொத்தமங்கலம் சுப்புதான்.

கோபால், உங்கள் தொடருக்கு அடுத்து வருகிறேன்.

கார்த்திக்,

நீங்கள் எழுதும் தொடரில் நீங்கள் குறிப்பிடும் நடிகைகளை விட அந்த படங்கள் பற்றிய குறிப்புகளைத்தான் ரசிக்கிறேன். அதிலும் என் மகன் படத்தை அண்மையில் பார்த்தேன். ஆகவே சிநேகலதா பதிவில் என் மகன் படத்தை மீண்டும் அசை பட முடிந்தது.

rajeshkrv
24th October 2013, 12:54 AM
ராஜேஷ் கண்ணா.. நீங்களும் குட்டியா எழுதுங்களேன்..ந.தி படங்கள பத்தி..

கண்டிப்பா .. ஏற்கனவே நிறைய எழுதினேன் .. ஆனாலும் என்ன விட நல்லா எழுதற ஆட்கள் நிறைய அதான் அதை ரசிப்பதை முழுமையாக்கி கொண்டேன்

chinnakkannan
24th October 2013, 01:09 AM
//சின்ன கண்ணன், ஒரு சின்ன nit picking. ராவ் பகதூர் சிங்காரம் தொடரை எழுதியதும் கொத்தமங்கலம் சுப்புதான். // மன்னிக்க முரளி ஸ்ரீ நிவாஸ் சார்..என் கண்ணில் பாவை அன்றோ வை நினைத்து சற்றே கன்ஃப்யூஸ் ஆகி விட்டேன்..மனமார்ந்த மன்னிப்பு..

chinnakkannan
24th October 2013, 01:12 AM
இந்தக் கதையெல்லாம் வேண்டாம்...ஒரு கத்துக்குட்டி எனக்கே இவ்ளோஎன்கரேஜ் பன்றதுக்கு இவ்ளோபேர் (அஃப்கோர்ஸ் நாற்பதைக் கடந்த இளைஞர்கள் தான்:)(கண்ணா கண்டிப்பா உதை வாங்கப் போறே நீ) ) இருக்காங்கன்னா உம்மை விட்டுடுவாங்களா..எழுதும் எழுதிப் பாரும்..


கண்டிப்பா .. ஏற்கனவே நிறைய எழுதினேன் .. ஆனாலும் என்ன விட நல்லா எழுதற ஆட்கள் நிறைய அதான் அதை ரசிப்பதை முழுமையாக்கி கொண்டேன்

rajeshkrv
24th October 2013, 01:48 AM
Originally Posted by Raajjaa View Post
ஒரு ஹப்பர் 1975க்கு அப்புறம் சிவாஜியின் நடிப்பு சரியில்லை என்று சொன்னால் அதை மறுத்து அவருக்கு விளக்கம் கொடுங்கள்.இல்லை என்றால் பேசாமல் இருங்கள். சம்பந்தமே இல்லாமல் எதற்கு கமலை இதில் இழுக்குகிறீர்கள். கமலுக்கு கிடைத்த புகழில் பாதி கூட சிவாஜிக்கு கிடைக்கவில்லை. அதை யாரும் மறந்து விடாதீர்கள்.

சிவாஜி அவரிகளின் நடிப்பு என்ன என்று தெரியாதவர்கள் தான் இப்படி பிதற்றுவார்கள். கமல் இதுவரை நடித்ததோ செய்ததோ எல்லாமே சிவாஜி அவர்கள் செய்ததில் 10% அளவு தான்.. அவர் ஆயுள் உள்ளவரை நடித்தாலும் சிவாஜி செய்ததில் 30-40% வேண்டுமானால் செய்ய முடியுமே தவிற சிவாஜியின் நடிப்பும் அவர் நடிப்பிற்கு வகுத்த பாதையும் யாருமே தொட முடியாத ஒன்று. நானும் தான் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகன் அதே சமயம் நடிகர் திலகத்தின் தீவிர ரசிகனும் கூட ஏன் இருக்க கூடாதா.. அதற்காக இங்கே வந்து கமலுக்கு இவரைவிட புகழ் கிடைத்தது என்றெல்லாம் பிதற்ற வேண்டியதில்லை. கமல் அந்த புகழெல்லாம் கிடைக்க செய்ததெல்லாம் நடிகர் திலகம் செய்ததுமில்லை செய்ய வேண்டிய அவசியமுமில்லை

uvausan
24th October 2013, 08:19 AM
சார் - உலர்பவர்க்கெல்லாம் பதில் சொல்லிகொண்டுஇருக்க வேண்டாமே சார் - பேத்துபவர்கள் எல்லாம் chosen to remain immature - so let us ignore and go forward - these comments if we consider seriously may turn to be roadblocks and reduce the speed of our thread .

:-D

uvausan
24th October 2013, 08:22 AM
Dear Murali Sir - Can I get tuition from you for writing in good tamil ?

Great response with a lucid explanation and conviction . Great sir for being around .

Ravi
:smokesmile::)

Russellrco
24th October 2013, 09:44 AM
சிவாஜி அவரிகளின் நடிப்பு என்ன என்று தெரியாதவர்கள் தான் இப்படி பிதற்றுவார்கள். கமல் இதுவரை நடித்ததோ செய்ததோ எல்லாமே சிவாஜி அவர்கள் செய்ததில் 10% அளவு தான்.. அவர் ஆயுள் உள்ளவரை நடித்தாலும் சிவாஜி செய்ததில் 30-40% வேண்டுமானால் செய்ய முடியுமே தவிற சிவாஜியின் நடிப்பும் அவர் நடிப்பிற்கு வகுத்த பாதையும் யாருமே தொட முடியாத ஒன்று. நானும் தான் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகன் அதே சமயம் நடிகர் திலகத்தின் தீவிர ரசிகனும் கூட ஏன் இருக்க கூடாதா.. அதற்காக இங்கே வந்து கமலுக்கு இவரைவிட புகழ் கிடைத்தது என்றெல்லாம் பிதற்ற வேண்டியதில்லை. கமல் அந்த புகழெல்லாம் கிடைக்க செய்ததெல்லாம் நடிகர் திலகம் செய்ததுமில்லை செய்ய வேண்டிய அவசியமுமில்லை

ராஜேஷ் சார்,
மற்றொரு பதிவருக்கு பதில் சொல்கிறேன் என்று இந்தியாவின் சிறந்த கலைஞன் கமல் ஹாசன் பற்றி நீங்கள் கூறி இருப்பது வருத்தம் அளிக்கிறது. இதற்கு விரிவாக, புள்ளி விவரத்துடன் என்னால் பதில் சொல்ல முடியும். ஆனால் அது நமது உன்னத கலைஞர்களைப் பற்றி நாமே சேறு இறைப்பது போலாகும். ஒவ்வொரு கால கட்டத்திலும் பெரும் கலைஞர்கள் தோன்றிக் கொண்டேதான் இருப்பார்கள்.

கமல் நடிப்பு மட்டுமின்றி நடனம், திரைக்கதை, வசனம், பாடல்கள், இயக்கம், தயாரிப்பு என்று பன்முகத் திறமையுடன் அவருடைய கிராப் இப்பொழுதும் மேல் நோக்கி தான் இருக்கிறது. அவர் பெற்ற விருதுகளை நீண்ட பட்டியலிடலாம்.

oyivukac
24th October 2013, 10:15 AM
சிவாஜி அவரிகளின் நடிப்பு என்ன என்று தெரியாதவர்கள் தான் இப்படி பிதற்றுவார்கள். கமல் இதுவரை நடித்ததோ செய்ததோ எல்லாமே சிவாஜி அவர்கள் செய்ததில் 10% அளவு தான்.. அவர் ஆயுள் உள்ளவரை நடித்தாலும் சிவாஜி செய்ததில் 30-40% வேண்டுமானால் செய்ய முடியுமே தவிற சிவாஜியின் நடிப்பும் அவர் நடிப்பிற்கு வகுத்த பாதையும் யாருமே தொட முடியாத ஒன்று. நானும் தான் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகன் அதே சமயம் நடிகர் திலகத்தின் தீவிர ரசிகனும் கூட ஏன் இருக்க கூடாதா.. அதற்காக இங்கே வந்து கமலுக்கு இவரைவிட புகழ் கிடைத்தது என்றெல்லாம் பிதற்ற வேண்டியதில்லை. கமல் அந்த புகழெல்லாம் கிடைக்க செய்ததெல்லாம் நடிகர் திலகம் செய்ததுமில்லை செய்ய வேண்டிய அவசியமுமில்லை

Mr Rajesh
You have every right to glorify Nadigar thilagam and mention any defending reply for that hubber.
But your comments about Kamal Haasan are condemnable..:notthatway:

vasudevan31355
24th October 2013, 10:25 AM
என்னை மிகவும் கவர்ந்த காதல் பாட்டு.

படம்: 'அன்பே ஆருயிரே

பாடல்: 'ராஜ வீதி பவனி என்பது'

http://i1.ytimg.com/vi/tVSsxMA8YOg/hqdefault.jpg

அப்படியே நம்மை அள்ளிக் கொண்டு போய் சொர்க்கத்தில் போட்டு விடும் பாடல். அருமையான டியூன். பாடகர் திலகமும், இன்னிசைக் குயிலும் இனிமையாய்க் கலக்கும் பாடல். செம ஜாலி மூட் பாடல்.

தலைவரும் அழகுப் பதுமை மஞ்சுளாவும் பங்கு பெறும் கனவுப் பாடல்.

இளமை பூத்துக் குலுங்குவதற்கு கேக்கணுமா! பல சீனியர் நடிகைகளுடன் காதல் காட்சிகளில் நடிகர் திலகம் சோபித்தாலும் 'தானே' போல இடையில் புகுந்து, இளமை கொலு பொம்மையாக நடிகர் திலகத்துடன் ஜோடி சேர்ந்து, புத்தம் புது இளமை விருந்து படைத்தார் மறைந்த மறக்க முடியாத மஞ்சுளா.

உற்சாகத் துள்ளல் இசையுடன் ஆரம்பிக்கும் இப்பாடலின் ஆரம்பத்தில் கப்பலின் மாலுமிகள் போல ஒயிட் அண்ட் ஒயிட் உடை அணிந்து, அதற்கேற்ற கச்சிதமான தொப்பியுமணிந்து, இருவரும் சற்றே ஸ்லோ-மோஷனில் உயர எம்பிக் குதித்து, ரம்மியமான இயற்கை சூழலின் பின்னணியில் வண்ண காகித ரிப்பன்கள் சுற்றிலும் பறக்க, பாடலை ஆரம்பிக்கும் போதே நம் மனமும் அவர்களோடு சேர்ந்து பறக்க ஆரம்பித்து விடும். உற்சாக கரைபுரளல்களில் நீந்த நாம் ரெடியாகி விடலாம்.

தலைவர் கையில் பழத்தை வைத்தபடி சுவைத்துக் கொண்டே மஞ்சுளாவுடன் கை கோர்த்தபடி தத்தி தத்தி நடந்து வரும் அழகு! பழத்தை கடித்தவுடன் குரல் மாறி கிளி போல கீச்சுக் குரல் 'ராஜ வீதி பவனி' என்று ஒலிக்க, சற்றே அதிரும் தலைவர் மஞ்சுளாவுக்கும் பழத்தை ஒரு கடி கடிக்கக் கொடுக்க, மஞ்சுளாவுக்கும் கிளி போல் குரல் மாற, பின் தொண்டையை கனைத்து சரி செய்து கணீரென்ற நம் பாடகர்களின் குரல் மீண்டும் மதுரமாய் ஒலிப்பது அழகான சுவையான கற்பனை. அழகான மலர் வளையத்துக்கு (சுற்றி நின்ற பூ மரங்கள் காவலானது) உள்ளே மஞ்சுளா தேவதை போல அவ்வளவு அழகு!

http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/BB00BBE0B9C0BB50BC00BA40BBF0BAA0BB50BA90BBF0B8E0BA 90BCD0BAA0BA40BC10-Rajaveethibhavanienbathump4_000053720_zps7728583a. jpg (http://s812.photobucket.com/user/adithya961999/media/sivaji%201/BB00BBE0B9C0BB50BC00BA40BBF0BAA0BB50BA90BBF0B8E0BA 90BCD0BAA0BA40BC10-Rajaveethibhavanienbathump4_000053720_zps7728583a. jpg.html)

பல்லவி முடிந்ததும் அடுத்த சரணத்திற்கு முன் வரும் அந்த இடையிசை... அடடா! எப்படி சொல்வது! டேப் இசை என்று சொல்வார்களே! அந்த இசைக்கு சிறிதும் தாளம் தப்பாமல் நடிகர் திலகமும் மஞ்சுளாவும் கைகளை முன்னால் மடக்கியும், விரித்தும் கால்களால் ஸ்டெப் வைத்தபடியே டேப் டான்ஸ் ஆடி வரும் அட்டகாசமான மூவ்மெண்ட்ஸ்.( பொங்கல் பானையில் பொங்கி வரும் நுரை போல அவ்வளவு பூரிப்பு இருவரிடத்திலும்) காதலர்களின் கரை புரண்டு ஓடும் உற்சாகம். நிஜக் காதல்களே தோற்றுப் போகக்கூடும். டான்ஸ் மாஸ்டருக்கு வேலை வைக்காமல் இவர்களே ஆடி விட்டார்களோ என்பது போல அவ்வளவு என்ஜாய் பண்ணி ஆடுவார்கள். (நடிகர் திலகம் செம உற்சாக மூடில் இருந்திருப்பார் போல)

'கோஹினூரில் காணாத வைரம்' (அழகான ஸ்டெப்ஸ்) முடிந்ததும் வரும் 'டுடுடு டுட்டு டுடுடு டுட்டு' ஜாலி வரிக்கு நடிகர் திலகம் வாயசைப்பதை கண்டிப்பாக கவனமாகப் பாருங்கள். 'டுட்டு' முடிக்கும் போது 'ஆவ்' என்று அவ்வளவு அழகாக உதடுகள் வேலை செய்யும்.

அடுத்தது காட்சி மாறும் அழகான கற்பனை.

தன் தந்தை (மேஜர்) தனது (நடிகர் திலகத்திற்கு) இன்ப மண வாழ்க்கைக்குக் குறுக்கே நிற்பதாக படத்தின் கதை. அதை இந்தப் பாடலில் கற்பனை வளத்தோடு உணர்த்துவார்கள். (சபாஷ் ஏ.சி.டி) மேஜர் ஒற்றைக் கண்ணுடன் கொள்ளைக்காரன் போல வந்து வாளை(லை) நீட்ட, அழகான அரபு சலீம் போல தலைவர் மரங்களின் அடியில் அமர்ந்தபடியே சுற்றிலும் அருவிகள் ஆர்ப்பரிக்க பாடல் இசைக்க, சிருங்கார அனார்கலியாய் திராட்சை ரச ஜார் ஒன்றை கையில் ஏந்தியபடி மஞ்சுளா மெல்ல இடை அசைந்து நடந்து வந்து தலைவர் பக்கம் அமர, ('உத்தமன்' "படகு படகு" பாடலில் வரும் அனார் சலீம் ஞாபகம் வருமே!) பின் இருவரும் காவாலி ஸ்டைலில் கைகளைக் கொட்டியபடியே எந்த நேரம் இதழ்கள் நான்கும் ஒட்டிக் கொள்ளுமோ என்று அனைவரும் அஞ்சுமளவிற்கு நெருங்க, (சென்சார் போர்டு அதிகாரிகள் நிமிர்ந்து அமர்ந்து விளக்கெண்ணையையும், கத்தரியையும் கைகளில் எடுக்க) மேஜர் இப்போது சிகப்பு வண்ண ஜமீந்தார் உடையில் கைகளில் வாளெடுத்து மிரட்ட ஏக களேபரம்தான்.

அடுத்த சரணத்திற்கான காட்சி.

பாடலின் தன்மை முற்றிலுமாக மாறிப் போக, குதிரை குளம்புகளின் ஓசை எதிரொலிக்க, புழுதியைக் கிளப்பியவாறு கர்ணனின் கௌபாய் ஸ்டைலில் நடிகர் திலகம் குதிரையில் மலைகளின் இடுக்குகளின் வழியே ('எந்தப் பக்கம் சென்றாலும் மென் மேலும் மேன்மேலும் என் வேகம் புயல் போன்றது குட் லக் மை குட்லக் மை குட்லக்') கம்பீரமாக் அமர்ந்தபடி பாடி வர, அழகான தோலுடையில் வண்ண மான் ஒன்று ஓடும் அருவி நீரை குனிந்தபடி பருக, சிறு கற்பாறைகளின் நடுவே சின்னப் பையன் போல நடிகர் திலகம் துள்ளிக் குதித்து ஓடி வந்து இருவரும் ஒருவரையொருவர் விளையாட்டாக அடித்துக் கொள்ள, கோபாலுக்குப் பிடித்த இடங்களிலெல்லாம் நடிகர் திலகம் விளையாட, (சுசீலாம்மாவின் அழகான ஹம்மிங் பின்னணியில்) கடைசியில் அடி இறுகப் பிடியாக மாறி தண்ணீரில் விழுந்து ஒருவரையொருவர் ஆலிங்கனம் செய்து கொள்ள நாமெல்லோரும் டோட்டல் அவுட்.

ஆனால் மேஜர் மட்டும் பொறுக்க மாட்டாமல் ஆதிவாசி டிரெஸ்சில் புயலென ஈட்டியை நீட்டியபடி காதலர்களை பிரிக்க பற்களை நற நறவெனக் கடித்தவாறு வருவார். (யப்பா! மேஜரா அது! சூப்பர் சுந்தரராஜா! தலையில் ஆதிவாசிகளின் கிரீடம் வேறு!)

என்ன ஒரு இளமை ததும்பும் கற்பனை வளம் மிக்க பாடல்! ஆடலுக்கேற்ற பாடல். பாடலுக்கேற்ற கூடல். கூடலுக்கேற்ற ஊடல். மிக மிக வித்தியாசமான தலைவரின் உற்சாகமான டூயட். அழகான இளமை பொங்கும் தலைவர், எம்.எஸ்.வியின் மாறுபட்ட இசை. மஞ்சுளாவின் மறக்கவொண்ணா இளமை! பாடகர்களின் பங்களிப்பு. (கௌபாயாகவும் நடிகர் திலகத்தைக் காட்டியாயிற்று)

என்னுடைய டாப் 10-இல் இடம் பெற்ற பாடல் மற்றும் காட்சி. அதனால்தான் ஸ்பெஷல் பதிவாக இட்டுள்ளேன்.

பார்த்து பரமானந்தம் பெறுவீராக.


https://www.youtube.com/watch?v=tVSsxMA8YOg&feature=player_detailpage

mr_karthik
24th October 2013, 10:26 AM
நடிகர்திலகத்தின் படங்களில் ஐட்டம் நடிகையர் ( 7 )

பிரமாத ஐட்டம் நாயகி "பிரமீளா"

மீண்டும் பலருக்கு ஆச்சரியம், ஒரு கதாநாயகி நடிகையை ஐட்டம் லிஸ்ட்டில் சேர்ப்பதா என்று (இங்கே நமது நண்பர் வெ.ஆ.நிர்மலாவைக்கூட ஐட்டம் பட்டியலில் போட்டு வைத்திருக்கிறார்). பிரமீளா பல படங்களில் கதாநாயகியாக நடித்திருந்தாலும் அதில் பெரும்பாலானவை 'ஒரு மாதிரி' கதாநாயகிதான். அதுமாதிரி ரோலுக்கு பொருத்தமாகவும் இருப்பார். இத்தனைக்கும் கவர்ச்சி உடைகளும் அணிய மாட்டார். (நல்லவேளை). சேலைதான். அதிலேயே பார்ப்போரைக் கொல்லுவார். அப்படி ஒரு ஐட்டம் நம்பர் இவர். ஒரு கட்டத்துக்குப்பின் 'அந்த மாதிரி ரோலா, அல்லது '.................விடுதி' நடத்தும் ரோலா கூப்பிடு பிரமியை' என்று அழைக்கும் அளவுக்கு கோலிவுட்டில் பிரபலமானார். காரணம் அவர் திரையில் 'அரங்கேற்றம்' ஆனதே அந்த மாதிரி ரோலில்தான். அவர் நடிகர்திலகத்துடன் சில படங்களில் நடித்திருக்கிறார்.

“தங்கப்பதக்கம்”

இப்படத்தில் நடிகர்திலகத்தின் மருமகள். மகன் தானாக தேடிக்கொண்ட மனைவி. இருந்தாலும் எஸ்.பி.வீட்டு மரியாதை கெடாமல் நல்ல மருமகளாக நடித்து ரசிகர்கள், தாய்மார்கள் மத்தியில் பெயரெடுத்தார். பத்மநாபனின் மருமகள் போல தூபம் போட்டு கணவனைக்கெடுக்காமல், தப்பு செய்யும் கணவனை கண்டிக்கும் மனைவியாக நல்ல ரோலில் வந்தார். மாமனார் மாமியார் மேல் மரியாதையுள்ள நல்ல மருமகள். 'சோதனை மேல் சோதனை' பாடலில் இவர் குரலும் நுழைந்து கொண்டு எங்கும் ஒலித்துக்கொண்டிருக்கிறது.

“மனிதரில் மாணிக்கம்”

நடிகர்திலகம் ஜோடியில்லாமல் கலக்கிய பல படங்களில் இதுவும் ஒன்று. இதில் பிரமீளா, ஏ.வி.எம்.ராஜனின் ஜோடி. நடிகர்திலகத்துக்கு அடுத்தபடியாக நன்றாக நடித்திருப்பவர் 'பிரமி'தான். கையில் கத்தியுடன் நடிகர்திலகத்தை மிரட்டி 'ஐ வில் ஸிங்க் பார் யூ' பாடவைப்பவர்.

“கவரிமான்”

அப்பாடா, வந்துவிட்டார் தனது ட்ரேட்மார்க் ரோலுக்கு. வழக்கமாக இப்படம் வந்த காலகட்டத்தில் நடிகர்திலகத்தின் ஜோடியாக விஜயா, லட்சுமி, சுஜாதா, ஸ்ரீபிரியா இவர்களைத்தான் போடுவார்கள். அப்படியிருக்க இப்படத்தில் மட்டும் ஏன் பிரமி என்று நினைத்து, படத்தைப் பார்க்கும்போதல்லவா தெரிகிறது ஏன் இவரைத் தேர்ந்தெடுத்தார்கள் என்று. ரொம்ப ஆச்சாரமான கௌரவமான குடும்பத்தின் மருமகளாக, ஐ.ஏ.எஸ்.அதிகாரியின் (நடிகர்திலகத்தின்) மனைவியாக வாழ்ந்தாலும் நாகரீக மோகம் கொண்டு தனிக்குடித்தனம் வந்து, கூடா நட்பினால் மதுவுக்கு அடிமையாகி, கணவனுடன் வாழ்ந்து மகிழ்ந்த அந்த புனிதமான படுக்கையிலேயே இன்னொருவனுடன் சோரம் போய்.......... இப்போது சொல்லுங்கள் இந்த ரோலுக்கு பிரமீளாவை விட்டால் வேறு யார். அதான் இயக்குனர் எஸ்.பி.எம். சரியான ஆளைப் பிடித்திருக்கிறார்.

எதை எதிர்பார்த்து தன்னிடம் இந்த ரோலை ஒப்படைத்தார்களோ அதை கச்சிதமாக நிறைவேற்றி இருந்தார் பிரமீளா. கவரிமான் வெளியான முதல்நாள் பிரமீளா மிட்லண்ட் தியேட்டருக்கு வந்ததை ஏற்கெனவே ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்தேன். அதில் 'பிரமி' வந்த பகுதி மட்டும் அடைப்புக்குறிக்குள்

(மிட்லண்ட் தியேட்டர் வாயிலில் ரோட்டை அடைத்து மக்கள் கூட்டம் நின்றதால் சற்றுதள்ளி சத்யமூர்த்தி பவன் அருகே அம்பாஸிடர் காரைவிட்டு இறங்கி, அங்கிருந்து நடந்து வந்த பிரமீளா எல்லோருக்கும் கும்பிடு போட்டவண்ணம் வந்தார். கிளிப்பச்சை நிறப்பட்டுப்புடவை அணிந்து அழகாக இருந்தார். கூட்டம் நெருக்கித்தள்ள, நமது ரசிகர்கள் அவரைச்சூழ்ந்து பாதுகாப்பாக அழைத்து வந்தனர். இயக்குனருடன் இரண்டொரு வார்த்தைகள் பேசிய அவர், கூட்டத்திலிருந்து தப்பிக்க அருகிலிருந்த டிக்கட் கவுண்ட்டர் அறைக்குள் சென்று அமர்ந்து கொண்டார்).

“ரத்தபாசம்”

இப்படத்தில் பிரமீளாவின் ரோல் என்ன?. நடிகர்திலகத்தினுடைய தங்கையுடைய கணவனுடைய முன்னாள் மனைவி. குழம்புகிறதா?. அதாவது ஜெய்கணேஷின் முதல் மனைவி, மற்றும் ஒரு குழந்தையின் தாய். இதிலும் நாகரீக மோகம் கொண்டு கணவனையும் குழந்தையையும் பிரிந்து, வில்லன் நம்பியாருடன் சேர்ந்து பழிவாங்க துடிக்கும் கேரக்டர். என்னதான் மோசமானவளாக இருந்தாலும், தன்னுடைய ரத்தமும் சதையுமாக தான் பெற்ற குழந்தையை சம்மந்தமே இல்லாத இன்னொருத்தி (ஜெய்கணேஷின் இரண்டாவது மனைவி ஜெயசித்ரா) கையில் வைத்து கொஞ்சிக்கொண்டிருப்பதைப் பார்த்து பெற்ற வயிறு பற்றி எரிகிறது. எப்படிப்பட்ட வாழ்க்கையை பறிகொடுத்து விட்டு நிற்கிறோம் என்று பதறுகிறாள். பட்...., டூ லேட். இறுதியில் கிளைமாக்ஸ் போராட்டத்தில் மலையிலிருந்து உருண்டு விழுந்து பலியாகிறாள்..

இப்படத்தில் பிரமிக்கு மேக்கப், ஹேர்ஸ்டைல் எல்லாம் நன்றாக இருக்கும். அதோடு படத்தின் மற்ற நாயகியரோடு ஒப்பிடும்போது பிரமியை இன்னும் கொஞ்சம் அதிக நேரம் வரவிடுங்க என்று கேட்கத்தோன்றும். பின்னே ஸ்ரீபிரியா, ஜெயசித்ரா, மனோரமா இவர்களையெல்லாம் எவ்வளவு நேரம் பார்க்க முடியும்?. கொஞ்சம் அதிக நேரம் பிரமியைக்காட்ட வேண்டுமென்று நான் எதிர்பார்த்த காரணம், ரத்தபாசம் ரிலீசாக சிறிது நாட்களுக்குமுன்பு நான் அவரைப் பார்த்திருந்த நிலைமை அப்படி. அதென்ன?.

(யாரும் ஆட்சேபம் தெரிவித்தால் இந்த இறுதிப்பகுதி நீக்கப்படும்).

சென்னை அசோகா ஹோட்டல் உள்ளே இருந்த 'குட்வில் ஸ்டோர்' உரிமையாளர் மகன் என் நண்பன். ஒருமுறை அவனை சந்தித்து கடையின் வெளியே இருவரும் நின்று பேசிக்கொண்டிருந்தபோது, ஒரு சாம்பல் நிற அம்பாசிடர் ஹோட்டலுக்குள் நுழைந்தது. ரோடாக இருந்தால் வேகமாகப் போயிருக்கும். ஹோட்டல் உள்ளே என்பதால் ஸ்லோமோஷனில் வந்தது. காரை அடையாளம் கண்டுகொண்ட என் நண்பன் "இது சிவலிங்கம் செட்டியார் கார். உள்ளே யார் இருக்காங்கன்னு பார்" என்றான். மெதுவாக வந்த கார் எங்கள் அருகே வந்தபோது குறுக்கே நின்ற காரை எடுப்பதற்காக சற்று நின்றது. பின்சீட்டில் பார்த்தால் பிரமீளா. அதிலும் அவர் இருந்த கோலம் பார்த்ததும் அதிர்ச்சி, 'கண்ணில் ஏதோ மின்னல் அடிச்சிருச்சு'. ஜஸ்ட் கொஞ்சநேரம்தான். கார் அகன்று விட்டது. சரி, காரிலிருந்து இறங்கி எப்படிப்போகப்போகிறார் என்று பார்க்க கியூரியாஸிட்டி. வைத்தகண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருக்க ஹோட்டலின் கடைசியிலிருந்த மாடிப்படியருகே ரொம்ப ஒட்டினாற்போல கார் நின்றதும், பெட்ஷீட் போன்ற பெரிய டவலை சுற்றிய நிலையில் விருட்டென்று காரிலிருந்து இறங்கி உள்ளே சென்றுவிட்டார்.

நண்பனிடம் "என்னப்பா இது?" என்றேன் ஆச்சரியத்துடன். அவனோ ரொம்ப கூலாக "உனக்குத்தான் இதெல்லாம் புதுசு" என்றான்.

கடைசியாக இவர் நடித்த புதுப்படம் பார்த்தேனென்றால் அது மலையாள 'ஜட்ஜ்மெண்ட்' படத்தின் தமிழ் டப்பிங். தமிழில் அதிகமாக முத்துராமன், ஏ.வி.எம்.ராஜன் இவர்களோடேயே ஜோடி சேர்ந்திருக்கிறார். ஜெய், ரவியுடன் ஜோடி சேர்ந்தவை மிகக்குறைவு. படங்களில் நடித்துக்கொண்டிருக்கும்போதே 'பிரமி பெல்ட்ஸ்' என்ற பெயரில் கார்களுக்கான பேன்பெல்ட் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வந்தார். திருமணமாகி ஒரே வருடத்தில் விவாகரத்து செய்துகொண்டவர் பிரமீளா. உச்சத்தில் இருந்தபோது பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு புரட்சி செய்தவர். சிலமுறை '............வழக்குகளில்' கைதானவர். இப்போது எங்கேயிருக்கிறார், என்ன செய்கிறார் என்ற விவரங்கள் தெரியவில்லை. பழைய நட்சத்திரங்கள் கலந்துகொள்ளும் எந்த விழாவிலும் இவரைகாண முடியவில்லை. பழைய நட்சத்திரங்களை தேடிக்கொண்டு வந்து ஜெயா டி.வி. நடத்தும் 'திரும்பிப்பார்க்கிறேன்' நிகழ்ச்சியிலும் இவர் வந்துபோனாரா என்பது தெரியவில்லை.

நடிகர்திலகத்துடன் ஜோடியாக நடித்திருப்பதால், நண்பர் வாசுதேவன் அவர்கள் எழுதிவரும் 'நடிகர்திலகத்தின் திரை நாயகியர்' தொடரிலும் இவர் பற்றிய பதிவு இடம்பெறக்கூடும்.

chinnakkannan
24th October 2013, 10:39 AM
அன்பே ஆருயிரே - எனக்குப் பிடித்த படங்களில் ஒன்று- நைஸ் வாசு சார்..

கார்த்திக் சார்..ரத்தபாசம் பார்த்ததில்லை..மற்ற மூன்றும் பார்த்திருக்கிறேன்..பிரமி- ஐட்டம் நடிகையர் லிஸ்டில் அதுவும் ந.தியுடன் சேர்க்க வேண்டுமா என சற்றே யோசனை..மற்றபடி நீங்கள் சொன்ன (கடைசிப் பாரா கெட்டவை :) ) பற்றி முன்னமே சற்று அறிந்திருக்கிறேன் வேறு விதமாக..(ஜெனரல் நாலெட்ஜூக்காக).. சில சமயங்களில் பரிதாபமாய்த் தான் இருக்கிறது சிற்சில நடிகைகளின் வாழ்க்கைகள்..:sad:

chinnakkannan
24th October 2013, 10:40 AM
அ.ஆவில் ஆரம்பக் காட்சிகளில் ந.தி.. மஞ்சுளாவுடனான கெமிஸ்ட்ரி,ஜாக்ரஃபி எல்லாம் நன்றாகவே ஒர்க் ஆகியிருக்கும் :) ஆமா ஏன் திடீர்னு அன்பே ஆருயிரே

vasudevan31355
24th October 2013, 10:44 AM
ஆமா ஏன் திடீர்னு அன்பே ஆருயிரே

கதையை மாற்றத்தான்.:)

abkhlabhi
24th October 2013, 11:20 AM
Sorry for the interruption to all,

வியட்நாம் விடில் , ஒரு காட்சியில் நடிகர் திலகம் நாகேஷிடம் பணம் கொடுக்க, பணத்தை , நாகேஷ் தன் pantin பின்புறம் இருக்கும் பாக்கெட்டில் வைக்க போகும் பொது , நடிகர் திலகம் நாகேஷை பார்த்து, அது (பணம்) லக்ஷ்மி டா , அதை பின் பக்கத்தில் வைக்காதே என்று கடிந்து கொள்வார் . இந்த காட்சியும் , வசனமும், படதிற்க்கு சம்மந்தம் இல்லாமல் இருக்கலாம் . நிஜ வாழ்கையில் 90 இறுதில் ஆரம்பித்து இன்று வரை கடைபிடித்து வருகிறேன்.

இன்று (24th) காலை ETV தெலுகு சுபமஸ்து கிரஹபலம் நிகழ்ச்சியில் வாஸ்துவில் purse , பணம் எங்கு வைத்து கொள்வது பற்றி கூறினார். வாஸ்து சாஸ்திரம் பிரகாரம் , பணத்தை, purseசை pantin பின் பக்கம் வைக்ககூடாது என்றும், பணம் goddess லக்ஷ்மிக்கு சமம். பணத்தை சட்டையின் பாக்கெட்டில் / pant இன் முன் பாக்கெட்டில் வைக்க வேண்டும் என்று கூறினார் . இந்த நிகச்சியை பார்த்த உடன் , நினைவுக்கு வந்தது, வியட்நாம் வீடு பட காட்சி.

அவர் ஒரு திர்கதரிசி. வாழ்கையில் நடந்ததை, நடக்கின்ற, நடக்க போவதை, தன் படங்கள் முலம், தான் பேசிய வசனங்கள் முலம் தெரிவித்து இருகிறார்.

அவரிடம் இருந்து நாம் கற்று கொள்ளவேண்டியது நிறையவே இருக்கிறது . முக்கியமான ஒன்று , "செய்யும் தொழிலே தெய்வம்" என்பதை . இன்று வரை முடியவில்லை .

uvausan
24th October 2013, 01:49 PM
முரளி /வாசு சார் - இந்த பதிவு "விளையாட்டு பிள்ளை " யை பற்றியது :

இந்த படத்தில் சில குறைகளை தவிர்த்து இருந்தால் இன்னும் நன்றாக படம் ஓடியிருக்கும் என்பது என் தாழ்மையான கருத்து :

1. காஞ்சனாவின் ரோல் மிகவும் குழப்பமான ஒன்று - NTயை லவ் பண்ணுகிறவர் போல தோன்றும் - கடைசியில் நான் NT யை ஒரு well wisher ஆகத்தான் எண்ணுகிறேன் என்று "U " turn அடித்துவிடுவார் - Well wisher ஆக இருந்தால் ஸ்விம்மிங் குளியல் எதற்கு ?

2. இதே மாதிரி 'அவன் ஒரு சரித்திரம்' படத்திலும் ஒரு குழப்பம் இருக்கும்

இவள்ளவு தடை இருப்பினும் , நன்றாகவே ஓடிய படம் என்பதை அறியும் போது மகிழ்ச்சியாக உள்ளது

Ravi

:-D:smokesmile:

uvausan
24th October 2013, 02:22 PM
" In 1995 I had $7 bucks in my Pocket and I knew two things :

I'm broke as Hell
And one day I wont'be .

You can achieve anything ! "

- Dwayne "The Rock" Johnson

How true it is - "you can achieve anything " - NT proved his talents in the fighting scenes in V.Pillai brought out nicely my Murali Sir and Vasu Sir

:smokesmile::)

uvausan
24th October 2013, 02:25 PM
Karthik Sir - Your write up on Premila is too good citing different movies with NT . last para brings out difference between a screen saver and a reality . Great sir !!

:smokesmile::)

Gopal.s
24th October 2013, 03:09 PM
நடிகர்திலகத்தின் படங்களில் ஐட்டம் நடிகையர் ( 7 )

பிரமாத ஐட்டம் நாயகி "பிரமீளா"

(யாரும் ஆட்சேபம் தெரிவித்தால் இந்த இறுதிப்பகுதி நீக்கப்படும்).


என்னது? ஆட்சேபமா?இந்த பாட்டில் குற்றம் கண்டுபிடிப்பவன் எவன்? மிக மிக சுவாரஸ்யமான பகுதியே இதுதான். என்ன ஒன்று. துண்டு இல்லையென்றால் இன்னும் சுவாரஸ்யமாக பகுதி இருந்திருக்கும்.

Gopal.s
24th October 2013, 03:13 PM
என்னை மிகவும் கவர்ந்த காதல் பாட்டு.

படம்: 'அன்பே ஆருயிரே


எனக்கு பிடித்த படம் அன்பே ஆருயிரே. என்ன ஒன்று.வாணி நடித்திருந்தால், ஓசை வராமல் பாட்டு பிரமாதமான ரசாயனம் தந்திருக்கும். கௌபாய் அணைப்பு ராஜவீதி பாட்டில்....
ஜாலி படம். நினைவு படுத்தியதற்கு நன்றி வாசு.

Russellfcv
24th October 2013, 03:28 PM
Enjoy Friends....

https://www.youtube.com/watch?v=fAl20VnpgU4

Russellfcv
24th October 2013, 03:29 PM
What a song !!

https://www.youtube.com/watch?v=jL3qDEBkFhM

Russellfcv
24th October 2013, 03:32 PM
Father of Kuththu Paadalgal

https://www.youtube.com/watch?v=yOoguw_wQ7Y

Russellfcv
24th October 2013, 03:35 PM
Father of GAANA PAADALGAL !

https://www.youtube.com/watch?v=H8VkUxkMu8c

The pirated version of the above can be seen below :

https://www.youtube.com/watch?v=0PTumzXwFrM

Russellfcv
24th October 2013, 03:39 PM
TELUGU REMAKE OF OUR NADIGAR THILAGAM CLASSIC BLOCKBUSTER GOWRAVAM - BARRISTER SANKARA NARAYANA NOW A SUPER DUPER HIT IN ANDHRAPRADESH

https://www.youtube.com/watch?v=h_BOvNly3so

Russellfcv
24th October 2013, 03:46 PM
LET US SEE SOME OF THE REMADE FILMS OF NADIGAR THILAGAM AND HOW OTHERS PERFORMED FOR THE SAME...!

AALAYAMANI - SATTI SUTTADHADA...KAI VITTADHADA...!

https://www.youtube.com/watch?v=DkIfGXXDP3g

THE SAME WAS REMADE IN HINDI AS AADMI - ENACTED BY Sri.DILIP KUMAR ! THE SONG SATTI SUTTADHADA IN HINDI WAS AAJ PURANI RAAHON SE KOI MUJHE . DILIP KUMAR SIR's PERFORMANCE FOR HINDI SATTISUTTADHADA SONG.. !!

https://www.youtube.com/watch?v=Rdl7qIzxnNc

Russellfcv
24th October 2013, 03:54 PM
2. IRENDU MANAM VENDUM IRAIVANIDAM KAETAEN FROM THE FILM VASANTHA MAALAIGAI .....

https://www.youtube.com/watch?v=GqAtpVEu5q4

THE FILM WAS REMADE IN HINDI NAMED PREM NAGAR .....THE SONG IS YEH LAL RANG KAB MUJHE CHODEGA...ENACTED BY Sri. RAJESH KANNA...

https://www.youtube.com/watch?v=eFa-FuCkVU4

Russellfcv
24th October 2013, 04:00 PM
NEXT FILM IS ENGIRUNDHO VANDHAAL AND THE SONG IS...NAAN UNNAI AZHAIKKA VILLAI..EN UYIRAI AZHAIKIRAEN....

https://www.youtube.com/watch?v=XNOjcAZJoSM

THE FILM WAS REMADE FROM HINDI FILM KHILONA ENACTED BY SANJEEV KUMAR ...THE SONG IS KHILONA JAAN KAR THUM HO....

https://www.youtube.com/watch?v=QD-VgB37U68

Russellfcv
24th October 2013, 04:07 PM
ORU JAMINDHAAR PARTYNAA !

FROM THE FILM VASANTHA MAALIGAI - ORU KINNATHTHAI YAENDHUGIRAEN.......
https://www.youtube.com/watch?v=pNBuZwH7zHA

THE SAME WAS ENACTED BY Sri. NAGESWARA RAO IN THE TELUGU FILM PREM NAGAR. THE SONG IS NENU PUTTANU...!
https://www.youtube.com/watch?v=ZPKq60obYE4

Gopal.s
24th October 2013, 04:22 PM
நடிகர்திலகத்தோடு நேரடி ஒப்பிடலில், மற்ற நடிகர்களின் நடிப்பு மோசமாக பல்லிளிப்பதை பார்க்க முடிகிறது. நன்றி சுப்பு லட்சுமி.

Russellfcv
24th October 2013, 04:22 PM
NEXT FILM IS NADIGAR THILAGAM's BLOCKBUSTER THIRISOOLAM 200th FILM - SONG : MALAR KODUTHAEN....a remake of Kannada film Shankar GURU enacted by Sri. Raj Kumar

https://www.youtube.com/watch?v=cAfACzsmDEY

the same was enacted by Sri.Rajkumar in Kannada Film SHANKAR GURU.....SONG : CHELUVEYA NOTA CHENNA

https://www.youtube.com/watch?v=ahrse8PphQw

uvausan
24th October 2013, 05:02 PM
நாட்டு மக்களுக்கு ஓர் நற் செய்தி - பல சீனியர் hubbers' சந்தேகத்தை தீர்க்கும்படியான கேள்விகளுக்கு பதில் தருபவர்களுக்கு 1000 பொன் காசுகள் ( without custom duty) கொடுக்கப்படும் - இது இந்த திரியின் உத்தரவு

NT 360 alias Subbhu alias -------

1. இப்பொழுது எங்கு இருக்கிறார் ?
2. என்ன செய்து கொண்டு இருக்கிறார்?
3. எந்த திசைய நோக்கி சென்று கொண்டிருக்கிறார் ?

என் சந்தேகத்தையே தீர்க்க முடியவில்லை - senior hubbers' சந்தேகத்தை எப்படி தீர்க்க போகிறேன் - 1000 பொன் காசு - ஒன்னா, இரண்டா - 1000 மாச்சே - எனக்கு இல்லை - எனக்கு இல்லை - யாரோ அடித்துண்டு போக போகிறான் - சொக்கா !!

:):smokesmile:

mr_karthik
24th October 2013, 05:05 PM
டியர் வாசுதேவன் சார்,

'என்னை கவர்ந்த பாடல்கள்' வரிசையில் அன்பே ஆருயிரே படத்தில் இடம்பெற்ற 'ராஜவீதி பவனி என்பது' பாடல் பதிவு வெகு சிறப்பு. நீங்கள் முதன் முதலில் இப்பாடலை பதித்ததுமே படித்து விட்டேன். அதில் உமர்கயாம் பகுதியை காணோமே என நினைத்தேன். ஆனால் உடனே அந்தப்பகுதியையும் கூடுதலாக சில நிழற்படங்களையும் இணைத்து முழுமையாக்கி விட்டீர்கள்.

கூடவே மஞ்சுவும் இருக்கிறார், தங்கள் குதூகலத்துக்கு கேட்கணுமா?. வாணி இருந்தால் அவருக்கு குதூகலம். அண்ணி இருந்தால் எனக்கு குதூகலம். எல்லாம் ஒரு நேச்சர்தானே. முரசு தொலைக்காட்சியின் தயவால் தற்போது இந்தப்பாடல்கள் எல்லாம் வெளிச்சத்துக்கு வரத்துவங்கியுள்ளன.

ஒரு அருமையான பொழுதுபோக்கு பாடலைத் தந்து உற்சாகத்தில் தள்ளியமைக்கு மிக்க நன்றி.

Russellfcv
24th October 2013, 05:15 PM
விரைவில் மகாலக்ஷ்மியில் தினசரி 3 காட்சிகளாக திரையிடப்பட்ட இருக்கிறது !

திரை உலக சக்ரவர்த்தியின் "அண்ணன் ஒரு கோவில் "


http://www.youtube.com/watch?v=S_Xh-OAbeos

திரை உலக சக்ரவர்த்தியின் "அவன் தான் மனிதன்"
http://www.youtube.com/watch?v=OD9Noko8b8I

chinnakkannan
24th October 2013, 06:18 PM
நடிகர் திலகத்தின் நடை
*
6. மனைவி அமைவதெல்லாம்

ஹாய் பாட்டீ”
*
”ஹாய் நிகிதா வாஸ்ஸப்..”
*
ஃபைன் பாட்டி.. என்ன வாஸ்ஸப் ல பேசறதுங்கற பந்தாவா
*
அதெல்லாம் ஒண்ணும் இல்லை..உனக்கு காலேஜ் எப்படிப் போகுது..போனதடவை அனுப்பியிருந்த ஃபோட்டோல கொஞ்சம் இளச்ச மாதிரியிருந்த்து..ஆனா பார்த்துக்கோ..சில இட்த்துல புஷ்டியா இருக்க நீ
*
போ பாட்டி ஒனக்கு எப்பவும்கேலி தான்..அப்றம் மஸ்கட் எப்படி இருக்கு
*
ஏதோ இருக்கு போடி
*
ஏன் குரல்ல சுரத்தே காணோம்..
*
ம் அடுத்த மாசம் ஒங்க தாத்தா திவசம் வருதோன்னோ அத நினச்சுண்டேன்..ம்ம் பாவி மனுஷர் இப்படி என்ன விட்டுப் போவாரா..எவ்ளோல்லாம் பண்ணிப் போட்டிருக்கேன் தெரியுமா..எவ்ளோ நல்ல பெண்டாட்டியா இருந்தேன் தெரியுமா..என்னை விட்டுப் போய்டுச்சே மனுஷன்..
*
‘சரி விடுங்க பாட்டி..மேலே போறச்சே அவர்கிட்ட சண்டை போடுங்க..ச்ச் சும்மா ஜோக்குக்குச் சொன்னேன்..மஸ்கட் எப்படி இருக்கு..சித்தப்பா என்ன பண்றார்..
*
யாரு..சிக சித்தப்பாவா..அவனுக்கு என்னடிம்மா..நல்லாத் தான் இருக்கான்..என்ன வயசுக்குத் தக்கன இருக்க மாட்டேங்கறான்..
*
என்ன செய்யறார் சித்தப்பா
*
அவன் வயசுப் பசங்க செய்யறா மாதிரி நயன்ஸ், நஸ்ரியான்னு பார்த்துண்டு இருக்கலாமோன்னோ..இப்ப என்னடான்னா புதுசா சிவாஜி த்ரெட்ல சேர்ந்துட்டானாம்..குதி குதின்னு குதிச்சுண்டுருக்கான்
*
:) ஏன் அதனால என்ன தப்பு..
*
தப்புல்லாம் ஒண்ணும் இல்ல சும்மாச் சொன்னேன்..
*
சரி பாட்டி..ஒங்கள ஒண்ணு கேப்பேன் மறக்காம மறைக்காம சொல்லணும்..ஒங்களோட க.க யாரு
*
என்னோட கனவுக்கன்னியாம்மா..எனக்கெதுக்குடி. ம்ம்.அதெல்லாம் இந்தக் காலத்தில தான்..பொண்ணுங்களுக்கே க. க இருக்கறது..கலிகாலம்!
*
ஐயோ பாட்டீ..நான் கனவுக் கண்ணன் நு கேட்டேன்..சொல்லுங்க..
*
போடி..அதெல்லாம் நேர்ல சொல்றேன்..ரெகார்ட்லாம் பண்ணிவச்சுக்கப் படாது சில விஷயங்களை..அப்புறம் பூஜையெல்லாம் செய்யறியா..காத்தால எத்தனை மணிக்கு எழுந்திருக்கற
*
எல்லாம்செய்றேன்பாட்டி..போரடிக்காதீங்க..படம்லா ம் பார்த்தியா
*
ம்ம் நல்லதச் சொன்னா இந்தக் காலத்துக் குழந்தைகளுக்குப் பிடிக்க மாட்டேங்குது..
பூஜை கோயில்னு இருந்தாத் தாண்டியம்மா நல்ல புருஷன் கிடைப்பான்..அதே மாதிரி ஆண்களுக்கும்..அவங்களுக்கும் பக்தி இருக்கணும்..இல்லைன்னா ஒரு பட்த்துல ஒரு ஆள் பொண்டாட்டிக்கிட்ட கஷ்டப் பட்டா மாதிரி படணும்..
*
என்ன படம் சொல்லேன்..
*
சிவாஜி படம் தான்.. மொதல்ல யார் அந்த ஆளுன்னு சொல்றேன்..ஒரு விஞ்ஞானி.. நடுத்தரவயசு ஆசாமி..அவருக்கு ஒரு பொண்டாட்டி..ரொம்ப க்ரீடி வுமன் யு நோ..
*
சரி
*
யா.. அந்த பிஎச்டி டாக்டருக்கு கடன்..அவருக்கு ஒரு தம்பி.. அண்ணி பண்ற கொடுமைல ஓடிப் போய்டறார்..
*
அப்புறம்..
*
திடீர்னு இந்த டாக்டருக்கு ஒருத்தர் வந்து தகவல் சொல்றார்..ஓடிப் போன அந்தப் பாண்டியன் தம்பி ஒரு பணக்கார்ரோட த்த்துப் பிள்ளையாய்ட்டானாம்.. செத்தும் போய்ட்டானாம்..தன்னோட சொத்துல ஒரு பார்ட் அண்ணாக்கு எழுதியும் வச்சுட்டாராம்..கேள்விப் பட்ட அண்ணா அழறார்..மன்னிக்கு ஒரு யோசனை தோணுது..
*
ம்ம் என்ன படம்னு எனக்கு ஒருமாதிரி குன்சா தெரியுது..ஏன் க்ளைமாக்ஸீக்குப் போய்ட்ட. பாட்டி
-
காரணத்தோட் தான்..ஏற்கெனவே நிறைய பேர் இந்தப் பட்த்தப் பத்திச் சொல்லியிருப்பாளோன்னோ.. மன்னி சொல்றா.. ஏன்னா நீங்களே ஒங்க தம்பி சாயல்ல இருக்கீங்க.. நீங்க ஏன் தம்பியா நடிக்க்க் கூடாதுன்னு..
*
அந்த டாக்டர் கன்ஃப்யூஸ் ஆகுவார்..அவர் செத்துட்டார்னு டிராமா பண்ணி அவருக்கே டை போட்டு பாண்டியனா அனுப்புவா.. அந்த டாக்டரோட மூக்குக் கண்ணாடி,ஸ்லைட்டா கூன் விழுந்த முதுகு, ஹஸ்கி வாய்ஸ் இவை எல்லாத்தையும் விட டிஃபரன்ஸ் காட்டறதுக்காக நடக்கற நடை இருக்கே ரொம்ப நல்லா இருக்கும் பாட்டி..பலே பாண்டியா தானே.
*
கரெக்டா கண்டுபிடிச்சுட்டியே.. ரொம்ப ஹிலாரியஸான படம்.. நினைச்சு நினைச்சு சிரிக்கலாம்.. நிஜப் பாண்டிய சிவாஜியே வர அண்ணி டாக்டர் தான்னு நினச்சு அதட்டுவதும், பரிமளா பாண்டியன் கிட்டப் பாயறச்சே என்னடி..
*
ஸ்டாப் பாட்டி பரிமளாவா அது தேவிகான்னா
*
தேவிகாவே தான்..அவங்களோட ரியல் பேரு பரிமளா..ம்ம் ஒங்க தாத்தாவோட பார்த்தப்ப அவரு விழுந்து விழுந்து சிரிச்சு என்னைக் கட்டியும் புடிச்சுட்டார்..அதுவும் கூட்டமான தியேட்டர்ல..
*
அப்புறம்
*
அப்புறம் என்னடி..எனக்கு வெக்கமாப் போச்சு..ஏன் இப்படில்லாம் கேக்கற..ஒனக்கு மாப்பிள்ளை பாக்கச் சொல்லட்டா..
*
ஓ.பாட்டீ.. நான் பட்த்தச் சொன்னேன்..
*
நல்ல படம் அந்த மூணாவதான அண்ணா சிவாஜியோட நடை வித்யாசமா இருக்கும்..எனக்குப் பிடிச்சது..ம்ம்..ஆமா அந்த எதிர் பில்டிங் தர்ட்ஃப்ளோர் பையன் இன்னும் உன்னை டாவடிச்சுக்கிட்டிருக்கானா..இன்னும் சுத்திண்டா இருக்க..ஜாதகம் வாங்க்கிக்கலாமா..சொல்லு..
*
பாட்டி ஐ..காட் எ கால்..ஸீ யூ லேட்டர்..பை :)
*

mr_karthik
24th October 2013, 07:13 PM
டியர் சின்னக்கண்ணன் சார்,

தங்களின் ஆதர்ச எழுத்தாளர் சாண்டில்யனோ?. எதனால் கேட்கிறேன் என்றால், மெயின் சப்ஜெக்டுக்கு வருவதற்கே பாதிபதிவை எடுத்துக் கொள்கிறீர்கள். தவிர பாட்டி, பேத்தி குசல விசாரிப்புகளுக்கு இடையே சொல்ல வந்த விஷயம் (நடிகர்திலகத்தின் நடை) கொஞ்சமே கொஞ்சம் தான் இருக்கிறது.....

uvausan
24th October 2013, 07:27 PM
SL madam -

very good positing of NT's songs in comparison with others -நெல்லை கண்ணன் சொன்னது எவ்வளவு உண்மை !!- பரிசுகள் வாங்கபடுகின்றன , வழங்கபடுபவைகளாக இருப்பதில்லை - கெளரவம் - யாராலும் imitate பண்ணமுடியாது - என்கிறோந்தோ வந்தாள் - ஒரு பைத்தியத்தையும் நடிக்க வைத்தவர் NT - சான்ஸ் ஏ இல்லை - திரிசூலம் - அலுப்பு தட்டாத நடிப்பு ; ஆலயமணி - திலிப் குமார் என்ன பண்ணுகிறார் என்றே புரியவில்லை ; வசந்த மாளிகை - பாவம் நாகேஸ்வர ராவ் !

இனி compare பண்ணி songs யை பதிவு செய்யாதீர்கள் தயுவுசெய்து - மாற்று மொழி நடிகர்களை ஏன் நாம் கோபிக்க வேண்டும் , திட்ட வேண்டும் ??

Ravi
:smokesmile::)

uvausan
24th October 2013, 07:36 PM
:shoot:சின்ன கண்ணன் சார் - பதிவு அருமை - சாவியின் "வாஷிங்க்டன்னில் திருமணம் " படிப்பது போல் உள்ளது - கதைக்கு வருவதற்குள் , பல commercial & bio breaks யை எடுக்க வேண்டி உள்ளது - உங்கள் நடையின் வேகம் - NT நடை போல நன்றாக உள்ளது - அருமை சார் !!

:happydance:

chinnakkannan
24th October 2013, 07:38 PM
Sorry Karthik sir.. I will correct it next time.. konjam swarasyaththuykkaakath thaan ezuthinEn..if it hurts really sorry..Detail aa inga nadntha discussionum padichthillai.. so repeated aa varak koodatheynnu thaan..sorry again


டியர் சின்னக்கண்ணன் சார்,

தங்களின் ஆதர்ச எழுத்தாளர் சாண்டில்யனோ?. எதனால் கேட்கிறேன் என்றால், மெயின் சப்ஜெக்டுக்கு வருவதற்கே பாதிபதிவை எடுத்துக் கொள்கிறீர்கள். தவிர பாட்டி, பேத்தி குசல விசாரிப்புகளுக்கு இடையே சொல்ல வந்த விஷயம் (நடிகர்திலகத்தின் நடை) கொஞ்சமே கொஞ்சம் தான் இருக்கிறது.....

mr_karthik
24th October 2013, 07:44 PM
சில வாரங்களுக்கு முன் சென்னை மகாலட்சுமி திரையரங்கில் திரையிடப்பட்ட இரண்டு படங்களின் வசூல் விபரம் பற்றி ஓட்டேரியை சேர்ந்த நண்பரொவர் (தியேட்டர் நிர்வாகிக்கு வேண்டியவர்) மெயிலில் தெரிவித்திருக்கிறார். அதன்படி....

'நான் வாழவைப்பேன்' (தினசரி 3 கட்சிகள் வீதம்) மொத்தம் 21 காட்சிகளின் வசூல் ரூ. 90,460/-

'நீதிக்கு தலைவணங்கு' (தினசரி 4 காட்சிகள் வீதம்) மொத்தம் 28 காட்சிகளின் வசூல் ரூ. 84,740/-

chinnakkannan
24th October 2013, 07:47 PM
அதுவும் லஞ்ச் டைத்தில கிடுகிடுன்னு தோணி பத்து நிமிஷத்துல எழுதிட்டேன்...மறுபடி எடிட் பண்ணலை..இனிமே கொஞ்சம் ஊற வச்சு எடிட் பண்ணி எழுதறேன் :) வாசக தோஷ் சந்தவ்யஹ :)

mr_karthik
24th October 2013, 08:05 PM
Sorry Karthik sir.. I will correct it next time.. konjam swarasyaththuykkaakath thaan ezuthinEn..if it hurts really sorry..Detail aa inga nadntha discussionum padichthillai.. so repeated aa varak koodatheynnu thaan..sorry again
சின்னக்கண்ணன் சார்,

Hurt...??????. தங்கள் பதிவில் என்னை hurt பண்ண என்ன இருக்கிறது?. பதிவு விளக்கமாக இருக்கே, உங்களுக்கு சாண்டில்யன் பிடிக்குமோ என்று கேட்டேன்.

என்னை விமர்சித்து எழுதும் பதிவுகளே என்னை hurt பண்ணியதில்லை. அப்படியிருக்க உங்கள் பொதுப்பதிவு என்னை எப்படி hurt பண்ணும்?.

Take it easy sir.

uvausan
24th October 2013, 08:16 PM
"A young widower, who loved his five year old son very much, was away on business when bandits came who burned down the whole village and took his son away. When the man returned, he saw the ruins and panicked. The took the burnt corpse of an infant to be his son and cried uncontrollably. He organised a cremation ceremony, collected the ashes and put them in a beautiful little bag which he always kept with him.

Soon afterwards, his real son escaped from the bandits and found his way home. He arrived at his father's new cottage at midnight and knocked at the door. The father, still grieving asked: "Who is it?" The child answered, it is me papa, open the door!" But in his agitated state of mind, convinced his son was dead, the father thought that some young boy was making fun of him. He shouted: "Go away" and continued to cry. After some time, the child left.

Father and son never saw each other again."

After this story, the Buddha said: "Sometime, somewhere, you take something to be the truth. If you cling to it so much, even when the truth comes in person and knocks on your door, you will not open it."

This is what happening about NT in some pockets -- The truth of his great achievements , acting skills , massive vasool are understated and people cling to this untruth so much , when it unfolds , they are unable to digest that they were so far buried in the untruth but their egos do not permit to confess their immaturity ----

Ravi

:):smokesmile:

chinnakkannan
24th October 2013, 08:23 PM
//Take it easy sir. //அப்படி எல்லாம் விட முடியாது..அடுத்த தடவை எழுதறச்சே நீங்க எல்லாரும் என் கூட நடக்கப் போறீங்க..:)

ரவி.. நன்றி.. உங்கள் பதிவும் நன்று..//After this story, the Buddha said: "Sometime, somewhere, you take something to be the truth. If you cling to it so much, even when the truth comes in person and knocks on your door, you will not open it."//
//understated and people cling to this untruth so much ,// உண்மை...

RAGHAVENDRA
24th October 2013, 08:27 PM
http://www.thehindu.com/template/1-0-1/gfx/logo.jpg

Row over Sivaji Ganesan statue

The statue of late cine actor, Sivaji Ganesan, at the junction of Kamarajar Salai and Radhakrishnan Salai, is in the news again.

A petitioner had gone to the Madras High Court opposing the erection of the statue at that junction. He said the structure obstructed the vision of motorists who wished to turn into Radhakrishnan Salai from Kamarajar Salai.

On Wednesday, the First Bench, comprising acting Chief Justice R.K. Agrawal and Justice M. Sathyanarayanan, directed the jurisdictional assistant commissioner of police (Traffic) to file an affidavit in this regard. It posted the matter for further hearing on November 13.

The eight-feet-tall bronze statue was unveiled on July 21, 2006.

The petition was filed by P.N. Srinivasan in 2006 seeking to restrain the authorities from permitting the erection of the statue at the Kamarajar Salai-Radhakrishnan Salai intersection, opposite Gandhi Statue, and consequently direct the authorities to provide an alternative place for the statue.

When the matter came up seven years ago, the court declined to restrain the State government from unveiling the statue. Adjourning the matter, the court however said it was giving time to enable the government to approach the Supreme Court for appropriate orders, directions or clarifications with regard to an undertaking given by the government in 2002 that no permanent or temporary traffic hindrance would be created on any road.

Now, when the matter came up before the First Bench, advocate-general A.L. Somayaji said, on account of installation of the statue, there was no obstruction to the free flow of traffic.

The petitioner’s counsel R. Gandhi said there could not be a statue on the road. The statue hindered the vision of motorists who wanted to take a right turn from Kamarajar Salai to go on Radhakrishnan Salai. Following this, the Bench issued the direction to the assistant commissioner of police, traffic.



மேற்கண்ட ஹிந்து பத்திரிகைச் செய்திக்கான இணையப் பக்கத்திற்கான இணைப்பு - http://www.thehindu.com/news/cities/chennai/row-over-sivaji-ganesan-statue/article5265765.ece

உலகத் தமிழரின் உள்ளத்திலெல்லாம் இறைவனைப் போல் உயர்ந்து நிற்கும் நடிகர் திலகத்திற்கு தமிழ் நாட்டின் தலைநகராம் சென்னை மாநகரில் சிலையாக நிற்கக் கூட உரிமை இல்லையாம். போக்குவரத்திற்கு இடைஞ்சலாம். பார்வையை மறைக்கிறாராம். பார்வைக்கே அர்த்தம் தந்தவருக்கு பார்வை மறைக்கிறார் என்கிற பழி பாவம். தரையிலிருந்து கிட்டத் தட்ட 20 அடி உயரம் உள்ள நடிகர் திலகத்தின் திருவுருவச் சிலை போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதாகக் கூறுகிறார்கள். தமிழகத்தின் பெருமையாய் விளங்குபவருக்கு சென்னையில் இருப்பதோ ஒரே ஒரு சிலை. அதுவும் இவர்கள் கண்களுக்கு உறுத்துகிறது.

2006ம் ஆண்டிலிருந்து இன்று வரை நடிகர் திலகத்தின் சிலையால் போக்குவரத்து ஒரு நாளும் பாதித்ததில்லை. இருந்த போதும் மற்றவர்க்குத் தொல்லை தராத நடிகர் திலகம் இறந்த பிறகா தருவார். சிவாஜி ரசிகர்கள் மட்டுமின்றி, ஒவ்வொரு நாளும் உலகம் முழுதுமிருந்தும் இந்தியாவின் பிற ஊர்களிலிருந்தும் சென்னை வரும் சுற்றுலா பயணிகள் என்று அன்றாடம் பலர் வந்து மரியாதை செலுத்தி விட்டுப் போகின்றனர். இருந்த போதிலும் ஒரு நாள் கூட போக்குவரத்து பாதிக்கப் பட்டதாக செய்திகள் இல்லை. நடிகர் திலகத்தின் பிறந்த நாளானாலும் சரி, நினைவு நாளானாலும் சரி, ரசிகர்கள் அமைதியாக அவரவர் வந்து மரியாதை செலுத்தி விட்டுப் போகின்றனர். இன்று வரை இதற்காக ஒரு முறை கூட போக்குவரத்து நிறுத்தப் பட்டதில்லை. பாதிக்கப் பட்டதில்லை.

நண்பர்களே, இன்றே சென்னை மாநகர போக்குவரத்துத் துறைக்கு நம்முடைய மனத்தாங்கலைத் தெரிவியுங்கள். நடிகர் திலகத்தின் திருவருவச்சிலையை இட மாற்றம் செய்யாமல் அதே இடத்தில் தொடர அதிகாரிகளிடம் வேண்டுகோளை வையுங்கள்.

kalnayak
24th October 2013, 08:58 PM
நாட்டு மக்களுக்கு ஓர் நற் செய்தி - பல சீனியர் hubbers' சந்தேகத்தை தீர்க்கும்படியான கேள்விகளுக்கு பதில் தருபவர்களுக்கு 1000 பொன் காசுகள் ( without custom duty) கொடுக்கப்படும் - இது இந்த திரியின் உத்தரவு

NT 360 alias Subbhu alias -------

1. இப்பொழுது எங்கு இருக்கிறார் ?
2. என்ன செய்து கொண்டு இருக்கிறார்?
3. எந்த திசைய நோக்கி சென்று கொண்டிருக்கிறார் ?

என் சந்தேகத்தையே தீர்க்க முடியவில்லை - senior hubbers' சந்தேகத்தை எப்படி தீர்க்க போகிறேன் - 1000 பொன் காசு - ஒன்னா, இரண்டா - 1000 மாச்சே - எனக்கு இல்லை - எனக்கு இல்லை - யாரோ அடித்துண்டு போக போகிறான் - சொக்கா !!

:):smokesmile:

His post is near yours. What to say? He used to say I write using different IDs.

vasudevan31355
25th October 2013, 07:17 AM
அன்பு வினோத் சார்,

தங்களுக்கு இனிய நல் பிறந்தநாள் (24-10-2013) வாழ்த்துக்கள். தாங்கள் எல்லா நலனும் பெற்று வாழ உளமார வாழ்த்துகிறேன். (sorry for the delay)

http://4.bp.blogspot.com/-RxuaTVWGcFI/TxEjLBhHXAI/AAAAAAAAFdE/zu8zH7_IOB4/s400/animated+birthday+greetings+%252811%2529.jpg

vasudevan31355
25th October 2013, 07:40 AM
சின்னக் கண்ணன் சார்,

நடையா! இது நடையா! ஒரு நாடகமன்றோ நடக்குது.! சிரித்தேன். ரசித்தேன். (ஆமாம் ...பத்தே நிமிடத்தில் இவ்வளவு பெரிய பதிவை டைப் செஞ்சுடுவேளா! ஆச்சர்யமாய் இருக்கே)

RAGHAVENDRA
25th October 2013, 08:01 AM
நண்பர்களே
நேற்று ஒரே நாளில் 45 பதிவுகள் .... எதற்கு பதில் சொல்வது என்று யோசிப்பதற்குக் கூட நேரமில்லை. நேற்று நாள் முழுதும் கணினி பக்கம் செல்ல முடியவில்லை. சின்னக் கண்ணன் சாரின் நடையைப் பாராட்டுவதா... அடுத்து திரைக்கு வர இருக்கும் படங்களைப் பற்றிய அறிவிப்பைப் பாராட்டுவதா, மிகச் சிறப்பான ஒப்பீடுகளுடன் கலக்கிக் கொண்டிருக்கும் ரவியின் எழுத்துச் சிறப்பைப் பாராட்டுவதா, இப்படி ஒவ்வொருவரும் அருமையான பங்களிப்பைத் தருவது மிகவும் மகிழ்ச்சியூட்டுகிறது.

vasudevan31355
25th October 2013, 09:01 AM
டியர் முரளி சார்,

தங்களுடைய பாராட்டிற்கு நன்றி! தாங்கள் காட்டிய வழியில் இப்போதுதான் நடை போடக் கற்றுக் கொண்டு வருகிறோம். நான் தங்களுடைய விளையாட்டுப் பிள்ளை பற்றிய பதிவை நேற்றுதான் படித்து முடித்தேன். அற்புதமான பதிவு. நம்மிடம் உள்ள அலைவரிசை தாங்கள் குறிப்பிட்டது போல எப்போதும் ஒன்றுதான் என்று தங்கள் விளையாட்டுப் பிள்ளை பதிவைக் கண்டதும் மீண்டும் நிரூபணமாகிறது. இந்தப் படத்தின் வெற்றியைப் பற்றி எனக்கு இதுவரை அவ்வளவாகத் தெரியாது. தங்கள் பதிவின் மூலமாக விளையாட்டுப் பிள்ளை நல்ல வெற்றியைக் கண்டிருக்கிறார் என்பதை தெரிந்து கொண்டவுடன் உள்ளம் மகிழ்ச்சியால் துள்ளிக் குதித்தது. தில்லானா என்ற சமுத்திரத்தின் வெற்றியில் இந்த நதி கண்டு கொள்ளப் படாமல் போய் விட்டது. அது மாத்திரமல்ல. மாபெரும் வெற்றியடைந்திருக்க வேண்டிய படம் திரைகதையில் சில ஓட்டைகள், தேவையில்லாத சில காட்சிகள் என்று சொதப்பப்பட்டதாலும், தில்லானாவோடு கம்பேர் செய்யப்பட்டதாலும் வெற்றியை மட்டுமே பெற முடிந்தது.

பாத்திரப் படைப்பு கடுமையானது என்று நடிகர் திலகம் சொன்னது முற்றிலும் உண்மை. உடல் ரீதியாக நடிகர் திலகம் மாபெரும் உழைப்பைக் கொட்டிக் கொடுத்ததால் அப்படி சொல்லியிருக்கக் கூடும் என்று நினைக்கிறேன்.

இயக்குனர் மாதவன் பற்றிய பதிவுக்கு தங்களுடைய சப்போர்ட் நிஜமாகவே எனக்கு பெரிய டானிக். மிக்க நன்றி!

தங்களுக்காக இயக்குனர் மாதவன் பற்றிய ஆவணம் ஒன்றை விரைவில் தருகிறேன்.

நன்றி!

vasudevan31355
25th October 2013, 09:06 AM
'விளையாட்டுபிள்ளை' (சண்டைக் காட்சிகள் தொடர்) பதிவைப் பாராட்டிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி!

vasudevan31355
25th October 2013, 09:07 AM
சரஸ்வதி லக்ஷ்மி மேடம்,

மற்ற மொழி நடிகர்களுடன் நடிகர் திலகத்தைப் பற்றிய ஒப்பீடு அருமை!
பாராட்டுக்கள்.

vasudevan31355
25th October 2013, 09:08 AM
ரவி சார்,

மீண்டும் சொல்கிறேன். தங்களுடைய intelligent பதிவுகள் தங்கள் மேல் எனக்கு சற்று பொறாமை கூட உண்டு பண்ணுகின்றன. ஒவ்வொரு பதிவிலும் எவ்வளவு அறிவார்ந்த விஷயங்கள்! உங்களிடம் தெரிந்து கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. ஜமாயுங்கள்.

vasudevan31355
25th October 2013, 10:36 AM
டியர் கார்த்திக் சார்,

தங்களுடைய மனமுவந்த பாராட்டுதல்களுக்கு நன்றி! தலைவர், மஞ்சுளாவின் ராஜவீதிக்கு சிகப்புக் கம்பளம் போட்டு வரவேற்றதற்கும் நன்றி!

ஐட்டம் நடிகையர் வரிசையில் எதிர்பாரா விதமாக பிரமீளா பற்றி பதிவிட்டு விட்டீர்கள். அப்பாப்பா! பிரமிளாவைப் பற்றி பிட்டு பிட்டு வைத்து விட்டீர்களே! தாங்கள் கூறியது போல கவர்ச்சி, ஆபாசம் எதுவும் செய்யாமலேயே வெறும் உடல் மொழியை வைத்து பல பேருடைய தூக்கத்தை கெடுத்தவர்தான். பிரமிளா கார் பெல்ட் தயாரிக்கும் கம்பெனி வைத்தது கூட தெரிந்து வைத்துள்ளீர்களே!

திறமை வாய்ந்த நடிகை! ஆனால் விழுந்த முத்திரையோ வேறு மாதிரி. 'ராதா' என்றொரு படத்தில் முத்துராமனின் ஜோடியாக அற்புதமாக நடித்திருந்தார் பிரமீளா. இவர் நடித்த தேவரின் 'கோமாதா என் குலமாதா' சூப்பர் ஹிட் மூவி. சிவக்குமாருடன் 'தாய்ப்பாசம்' என்ற நல்ல ஒரு படத்தில் நடித்தார். சொந்தம், வாழையடி வாழை, அன்புச் சகோதரர்கள், வீட்டு மாப்பிள்ளை போன்றவை இவர் நடித்த குறிப்பிடத்தக்க படங்கள்.

காலத்தின் கோலம் இவர் காலை பத்து மணிக் காட்சி மலையாள நடிகை ஆனார். "ராத்திரிக்கு ராத்திரி என் நினைப்பு வர வேணும்"....எனப் பாடிய இவருக்கிருந்த ரசிகர் கூட்டமே தனி. மலையாள மண் இவரை மிக நன்றாகப் பயன்படுத்தி பணம் பார்த்தது. அவ்வளவு அழகு இல்லை...முகமெல்லாம் பரு... ரொம்ப கவர்ச்சியான உடல் வாகும் இல்லை.... இருந்தும் எந்தப் பெண்ணிலும் இல்லாத ஒன்று ஏதோ...அது...ஏதோ இவரிடம் இருந்திருக்க வேண்டும். ஆனால் கண்களில் ஏக்கத்தை போதையுடன் காண்பிக்க டி.ஆர்.ராஜகுமாரிக்கு அடுத்து இவர்தான்.

தாங்கள் இவரை நேரில் பார்த்த நிகழ்வை படித்ததும் இவர் மேல் பரிதாபமே மிஞ்சியது.

கார்த்திக் சார்! இந்த தொடர் சுவாரஸ்யமில்லாத தொடர் என்று நீங்கள் சொல்லக் கூடாது. அப்படி சொல்லும் வாய்ப்பே உங்களுக்கும் இல்லை... எங்களுக்கும் இல்லை. நிஜமாகவே வித்தியாசமான வெளிவராத பல தகவல்கள் கொண்ட தொடர். கரும்பு தின்னக் கசக்குமா?

சரி! இனி இவருடைய விஷுவல்.

'மனிதரில் மாணிக்க'த்துடன் பிரமீளா.

http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/4ae63986-92ed-41e8-8c0d-279482be43a7_zpsa67fa069.jpg (http://s812.photobucket.com/user/adithya961999/media/sivaji%201/4ae63986-92ed-41e8-8c0d-279482be43a7_zpsa67fa069.jpg.html)

'தங்கப் பதக்கம்' படத்தில் சௌத்ரியுடன்

http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/DVD-RIPThangapadhakamMoserbaer1974Xvid700Mbavi_0090916 65_zps545425d4.jpg (http://s812.photobucket.com/user/adithya961999/media/sivaji%201/DVD-RIPThangapadhakamMoserbaer1974Xvid700Mbavi_0090916 65_zps545425d4.jpg.html)

'கவரிமானு'டன் பிரமீளா.

http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/Kavari-Maan-wwwDragonz-PRScommp4_001231064_zps6488260d.jpg (http://s812.photobucket.com/user/adithya961999/media/sivaji%201/Kavari-Maan-wwwDragonz-PRScommp4_001231064_zps6488260d.jpg.html)

'ரத்த பாசம்' படத்தில் நம்பியாருடன்.

http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/29357bc2-b8a3-40dc-8fe5-358e53d06d96_zpsa56c9f5c.jpg (http://s812.photobucket.com/user/adithya961999/media/sivaji%201/29357bc2-b8a3-40dc-8fe5-358e53d06d96_zpsa56c9f5c.jpg.html)

இனி பிரமீளா நடிகர் திலகத்துடன் நடித்த படங்களின் பாடல்களை காணொளி வடிவில் காணுவோம்.

"I will sing for you I will dance for you" வீடியோ பாடல்.


https://www.youtube.com/watch?v=6jdQ0-BQruI&feature=player_detailpage

'சோதனை மேல் சோதனை'


https://www.youtube.com/watch?v=7YS4To2v03I&feature=player_detailpage

'பூப் போலே உன் புன்னகையில்'


https://www.youtube.com/watch?v=OS-yqyytVtY&feature=player_detailpage

uvausan
25th October 2013, 11:51 AM
Dear Vinod Sir - many more happy returns ( belated) - I personally derive lots of inspiration from your dedication to the assignment being handled. Every one knows what is PPP project is - it is Public Private Partnership - I always say in many forums - only 3Ps are not adequate for success of a PPP project - it requires another 3Ps - Passion , Perseverance and Patience ( Patience because - back ended return on investment and not upfront) - these 3Ps , highly visible in NT and MT 's threads and glad to say that you are one of the founding fathers of MT thread . Great and long live Sir !!

Ravi

:smile2::smile2:

vasudevan31355
25th October 2013, 12:00 PM
கார்த்திக் சார்,

நம் பாலாஜிக்கு தான் தயாரித்த 'அண்ணாவின் ஆசை'முதல் படத்திலேயே இந்தி நடிக, நடிகைகளை தமிழுக்கு வரவழைக்கும் மோகம் ஏற்பட்டு விட்டது.

மதுமதி என்ற நடன இந்தி நடிகையை ஒரு பாடலுக்கு ஆட வைத்து பாலாஜி அண்ணாவின் ஆசை நிறைவேறியது.

அது மட்டுமல்ல... பிரபல இந்தி நடிகர் அசோக்குமாரையும் ஒரு காட்சியில் நடிக்க வைத்திருந்தார் பாலாஜி.

பாலாஜி நடிகர் திலகத்தை வைத்து தயாரித்த படங்களில் நடித்த ஐட்டம் நடிகையர் பற்றி நமது திரியில் கிட்டத்தட்ட அலசியாயிற்று.

'உனக்காக நான்' படத்தில் பம்பாய் லீனா தாஸ் என்ற நடன நடிகை "நீ என்னை சந்தித்ததுண்டோ!?" பாடலுக்கு காபரே ஆடுவார்.

'நல்லதொரு குடும்பம்' படத்தில் 'சச்சாச்சா' பாடலுக்கு பிந்து (இந்தி நடன நடிகை) நடிகர் திலகத்துடன் ஆடுவார்.

ரஜினி நடித்த 'பில்லா' வில் கிழ ஹெலனை மீண்டும் பிடித்துக் கொண்டு வந்தார் பாலாஜி.

இலங்கை இந்திய கூட்டுத் தயாரிப்பான சுரேஷ் மஹாராஜாவின் 'தீ' படத்தில் நடிக்க இந்தியிலிருந்து பிரபல அருணா இராணியையும், இலங்கையிலிருந்து ஷோபனா என்ற நடிகையையும் தருவித்தார் பாலாஜி.

தீர்ப்பு, நீதிபதியில் சில்க்கோடு ஏனோ விட்டு விட்டார் பாலாஜி. 'குடும்பம் ஒரு கோவிலி'ல் ஜெயமாலினியை ஒப்பந்தம் செய்து விட்டார்.

'பந்தம்' படத்தில் ஐட்டம் நடிகையை இறக்குமதி செய்யாமல் கதாநாயகியையே (குமாரி காஜல் கிரண்) நடிகர் திலகத்தின் மகளாக நடிக்க பம்பாயிலிருந்து வரவழைத்தார் பாலாஜி.

இன்னும் நிறைய இருக்கின்றன. யோசித்து சொல்லுவோம்.

vasudevan31355
25th October 2013, 12:08 PM
'அந்த நாள்' படத்தில் தலைவரின் அற்புதமான போஸ் இது. என்ன ஒரு அற்புதமான புகைப்படம்! தலைவரின் இடது பாதி முகம் இருட்டாகவும், வலது பாதி முகம் வெளிச்சத்துடனும் மிகவும் கலை நயத்துடன் எடுக்கப்பட்டுள்ள இந்தப் புகைப்படத்தின் பின்னணியில் அருமையாக உழைத்துள்ள எஸ். மாருதிராவ் அவர்களின் அசாத்தியத் திறமையை வர்ணிக்க வார்த்தைகள் ஏது?.

http://thedrunkenmonk.files.wordpress.com/2013/07/artificial-sivaji.png

uvausan
25th October 2013, 12:10 PM
:cry:
Dear Ragavendra Sir - your message and hindu's clipping on NT's Statue to be removed really shaken up every one of us - If it is a hindrance to traffic it amounts to saying a light is hindrance to darkness , Sun is a hindrance to planet , parents are hindrance to children and so on and so forth - where are we going really ? is it the way to humiliate a great personality who walked , talked and breathed Tamil ?

There seems to be a big vested interest working 24 * 7 to see how they could belittle NT ! In mount road there are many statues of great visionaries - are they not affecting traffic vision ?? Why people in TN always choose to remain immature instead of growing with appreciative culture ??

In some places Statue are in disputes to have connect with people ---- In TN an opened Statue with great ceremony is being sought to be removed ---- what an irony is this ??

In nellai kannan's words - this TN has spoiled and destroyed many without understanding their values - it is a shame and all of us need to protest in a way such a humiliation does not happen . It is high time we collect voice of all and demonstrate the power of NT and importance of the Statue in the same place - I always believe that There is no "I" in a TEAM - let us all work as a TEAM sir

Ravi

:(

KCSHEKAR
25th October 2013, 12:13 PM
உலகத் தமிழரின் உள்ளத்திலெல்லாம் இறைவனைப் போல் உயர்ந்து நிற்கும் நடிகர் திலகத்திற்கு தமிழ் நாட்டின் தலைநகராம் சென்னை மாநகரில் சிலையாக நிற்கக் கூட உரிமை இல்லையாம். போக்குவரத்திற்கு இடைஞ்சலாம். பார்வையை மறைக்கிறாராம். பார்வைக்கே அர்த்தம் தந்தவருக்கு பார்வை மறைக்கிறார் என்கிற பழி பாவம். தரையிலிருந்து கிட்டத் தட்ட 20 அடி உயரம் உள்ள நடிகர் திலகத்தின் திருவுருவச் சிலை போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதாகக் கூறுகிறார்கள். தமிழகத்தின் பெருமையாய் விளங்குபவருக்கு சென்னையில் இருப்பதோ ஒரே ஒரு சிலை. அதுவும் இவர்கள் கண்களுக்கு உறுத்துகிறது.
2006ம் ஆண்டிலிருந்து இன்று வரை நடிகர் திலகத்தின் சிலையால் போக்குவரத்து ஒரு நாளும் பாதித்ததில்லை. இருந்த போதும் மற்றவர்க்குத் தொல்லை தராத நடிகர் திலகம் இறந்த பிறகா தருவார். சிவாஜி ரசிகர்கள் மட்டுமின்றி, ஒவ்வொரு நாளும் உலகம் முழுதுமிருந்தும் இந்தியாவின் பிற ஊர்களிலிருந்தும் சென்னை வரும் சுற்றுலா பயணிகள் என்று அன்றாடம் பலர் வந்து மரியாதை செலுத்தி விட்டுப் போகின்றனர். இருந்த போதிலும் ஒரு நாள் கூட போக்குவரத்து பாதிக்கப் பட்டதாக செய்திகள் இல்லை. நடிகர் திலகத்தின் பிறந்த நாளானாலும் சரி, நினைவு நாளானாலும் சரி, ரசிகர்கள் அமைதியாக அவரவர் வந்து மரியாதை செலுத்தி விட்டுப் போகின்றனர். இன்று வரை இதற்காக ஒரு முறை கூட போக்குவரத்து நிறுத்தப் பட்டதில்லை. பாதிக்கப் பட்டதில்லை.

டியர் ராகவேந்திரன் சார்,

நாடு ரோட்டில் நான்காயிரம் சிலைகள் - ஆனால்
நடிகர்திலகம் சிலை மட்டும்தான் இவர்களுக்கு இடைஞ்சல்

நடிகர்திலகத்தின் சிலை குறித்த கவலையில் நானும் பங்கு கொள்கிறேன். எதிர்ப்பு என்பது நமக்கு புதிதல்லவே. பராசக்தி தொடங்கி தன்னுடைய இறுதிக் காலம்வரை நடிகர்திலகம் எப்போதுமே எதிர்ப்பில் வளர்ந்தவர்தான்.

நடிகர்திலகத்தின் சிலை பற்றிய வழக்கைப் பொறுத்தவரை, 2006 ஆம் ஆண்டு சிலை அமைக்கப்பட்டபோது ஒருசிலரின் தூண்டுதலின்பேரில் சிலை வைக்கத் தடைகோரி தொடர்ந்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் தடை விதிக்க மறுத்துவிட்டது. அது இடைக்கால் உத்தரவாகக் கருதப்பட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. மாநில அரசு இதுதொடர்பாக தெளிவான நடைமுறைகளை உச்சநீதிமன்றத்திடமிருந்து பெற்றுக்கொள்ளலாம் என்று தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது. ஆனாலும், இதில் மாநில அரசின் முடிவே முக்கியமானது.

இதற்கிடையில் வழக்கு தொடர்ந்த சீனிவாசன் என்பவர் மரணமடைந்துவிட்டாலும், இது பொதுநல வழக்கு என்பதால் வழக்கு தொடர்ந்தவர் இல்லாதநிலையிலும் அவருக்கு ஆஜரான வழக்கறிஞர் மூலமாக மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது. இதில் சென்னை மாநகர போக்குவரத்து காவல் துறை (அதாவது தமிழக அரசு) என்ன பதில் அளிக்கிறது என்பதைப் பொறுத்தே இறுதித் தீர்ப்பு அமையும் என்று தெரிகிறது.

இந்த வழக்கில் 2006-ல் வழக்கின் ஆரம்பத்திலேயே INTERVENE PETITIONER ஆக நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை சார்பில் மூத்த வழக்கறிஞர் திரு. பிரபாகரன் ரசிகர்களின் எண்ண உணர்வைக் கூறி சிறப்பாக வாதாடினார். அதன் அடிப்படையில் நேற்று அவருடன் கலந்து ஆலோசித்தேன். வழக்கு மீண்டும் வரும் நவம்பர் 13 ஆம் நாள், புதன்கிழமை அன்று விசாரணைக்கு வரும்போது மீண்டும் நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை சார்பில் ஆஜராகி, ரசிகர்களின் சார்பில் கண்டிப்பாக வாதங்களை எடுத்துரைப்பதாகக் கூறியிருக்கிறார்.

நடிகர்திலகம் போராட்டங்கள் பலவற்றைச் சந்தித்தாலும், இறுதியில் வெற்றியே பெற்றிருக்கிறார். அதுபோல இவ்விவகாரத்திலும் வெற்றி காண்போம் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

2006 ல் வழங்கப்பட்ட தீர்ப்பு 10 பக்கங்களுக்கு மேல் இருப்பதால் ஒன்றிரண்டு பக்கங்களை மட்டும் தகவலுக்காக அளித்துள்ளேன்.
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/SivajiStatueJudgement/StatueJudgementPeravaiArugument_zpsce4990e0.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/SivajiStatueJudgement/StatueJudgementPeravaiArugument_zpsce4990e0.jpg.ht ml)

http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/SivajiStatueJudgement/StatueJudgementPg9010_zpsde8b1d00.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/SivajiStatueJudgement/StatueJudgementPg9010_zpsde8b1d00.jpg.html)

Richardsof
25th October 2013, 12:21 PM
dear vinod sir - many more happy returns ( belated) - i personally derive lots of inspiration from your dedication to the assignment being handled. Every one knows what is ppp project is - it is public private partnership - i always say in many forums - only 3ps are not adequate for success of a ppp project - it requires another 3ps - passion , perseverance and patience ( patience because - back ended return on investment and not upfront) - these 3ps , highly visible in nt and mt 's threads and glad to say that you are one of the founding fathers of mt thread . Great and long live sir !!

Ravi

:smile2::smile2:

thanks ravi sir

vinod.s

KCSHEKAR
25th October 2013, 12:45 PM
Dear Vinod Sir,

Belated Birthday wishes to you.

vasudevan31355
25th October 2013, 01:15 PM
இந்த சிலை கூடவா பாவம் செய்தது?

http://www.chennai-in-focus.com/sites/default/files/imagecache/slider-show/photos/sivaji-ganeshan-tamil-actor-1.jpg

Richardsof
25th October 2013, 01:21 PM
நன்றி திருசந்திரசேகரன் சார் .

நடிகர் திலகத்தின் சிலையை அகற்ற முயற்சிக்கும் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்து கொள்கின்றோம் .

HARISH2619
25th October 2013, 01:27 PM
எம் ஜி ஆருக்கு ஒரு ஆர் எம் வீ போல எம் ஜி ஆர் திரிக்கு ஒரு எஸ் வீ.இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் எஸ் வீ சார்.

anasiuvawoeh
25th October 2013, 03:10 PM
We all value human-life.Let them apply same yardstick everywhere.People who value him just as an actor,will not rise from their thinking even if you have thousands of statues.It is very easy to say a noble-prize winner for poetry as just a poet.The value has to come from within.Let us respect judiciary.Few say statues of elected people are justified,then what about elected people going to jail on corruption charges?So,statue can be there for wrong doers,but not for people who had been the DOYEN in their field.

mr_karthik
25th October 2013, 06:15 PM
அதென்ன அவர்களுக்கு வேண்டாத சிலைகள் எல்லாம் மட்டும் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கின்றன?. முன்பு கண்ணகி சிலை இடையூறாக இருக்கிறதென்று அகற்றினார்கள். மீண்டும் கருணாநிதி அதே இடத்தில் கண்ணகி சிலை வைத்தபின் இடையூறாக இல்லை.

இப்போது நடிகர்திலகத்தின் சிலை (போக்குவரத்துக்கு சம்மந்தமில்லாத ஒரு ஓரத்தில் இருந்தபோதும்) போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கிறது என்று அகற்ற முனைகிறார்கள்.

ஆனால் மௌண்ட்ரோட்டில் நட்டநடு சாலையில் நிஜமாகவே, உண்மையாகவே, மெய்யாகவே போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் சிலைகள் எல்லாம் இவனுங்க கண்ணுக்கு படவே இல்லையா?. யாராவது இதுங்க மேலே லாரியை விட்டு ஏத்துங்கப்பா.

திருச்சியில் மூடி வைத்திருக்கும் சிலையை திறக்க வழியைக் காணோம். இருக்கிற சிலையை எடுக்கிறானுங்களாம்......

J.Radhakrishnan
25th October 2013, 06:52 PM
திருச்சியில் மூடி வைத்திருக்கும் சிலையை திறக்க வழியைக் காணோம். இருக்கிற சிலையை எடுக்கிறானுங்களாம்......[/QUOTE]

well said

mr_karthik
25th October 2013, 07:58 PM
டியர் வாசுதேவன் சார்,

தங்கள் பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி. வழக்கம்போலவே 'பிரமீளா' பதிவிலும் மேலதிக விவரங்களையும், நடிகர்திலகத்துடன் அவர் இணைந்திருக்கும் ஸ்டில்களையும், பாடல்களுக்கான வீடியோக்களின் இணைப்புகளையும் இணைத்து பதிவை முழுமையாக்கி விட்டீர்கள்.

தொடர்ந்த ஒத்துழைப்புக்கு மிக்க நன்றி.....

Subramaniam Ramajayam
25th October 2013, 09:37 PM
thanks ravi sir

vinod.s

vinod sir,
belated birthday greetings to you May god bless you with good health and wealth, blessings. Now i am on a visit to LOS ANGELES; USA to my children's place,

Murali Srinivas
25th October 2013, 11:32 PM
மிக இனிய பிறந்தநாள் [belated] வாழ்த்துக்கள் வினோத் சார்.

இது போன்ற பல சிறந்த பிறந்த நாட்கள் உங்களுக்கு அமையட்டும்!

அன்புடன்

Murali Srinivas
25th October 2013, 11:33 PM
ரவி சார்,

உங்கள் பாராட்டுகளுக்கு நன்றி. வாசு சொன்னது போல் நீங்கள் எழுதும்போது பல அபூர்வமான செய்திகளை இங்கே பங்களிக்கிறீர்கள். அதன் சுவையே அலாதி. உண்மை கதவை தட்டியும் அதை காண மறுக்கும் மனிதர்களைப் பற்றிய புத்தர் கதை நடிகர் திலகத்திற்கு வெகு பொருத்தம். மிக மிக ரசித்தேன்.

பொன்.ரவிச்சந்திரன் சார்,

உங்கள் பாராட்டுகளுக்கு நன்றி. தாமதமாக் சொன்னதற்கு sorry

அன்புடன்

uvausan
25th October 2013, 11:37 PM
ஒருவர் தன் மனைவியோடு எதற்கெடுத்தாலும் அடிக்கடி சண்டைக்கு நிற்பார். “ஒரு நாள் அலுவலகம் சென்று நீ வேலை செய்து பார்; சம்பாதிப்பது எவ்வளவு கடினம் என்பது உனக்கு புரியும்.. ஒரு நாள் ஆபிஸ் போய் வா பார்ப்போம்..” என்றெல்லாம் அடிக்கடி மனைவியை சவாலுக்கு அழைப்பார். அந்தப் பெண்ணும் பல காலம் இதைக் கேட்டுக் கேட்டு சலித்துப் போனாள்.

ஒரு நாள் பொறுமை இழந்தவளாய் “எப்பப் பார்த்தாலும் இப்படியே சொல்றீங்க! ஒரு நாள் நீங்க வீட்டில் இருந்து இந்தப் பசங்களையெல்லாம் பார்த்துக்கோங்க... காலையில குளிப்பாட்டி சாப்பிட வைத்து வீட்டுப் பாடங்கள் சொல்லிக் கொடுத்து சீருடைகள் அணிவித்து பள்ளிக்கு அனுப்பிப் பாருங்கள்... அதோடு வீட்டில் சமைப்பது துவைப்பது என எவ்வளவு வேலைகள் இருக்கு...ஒரு நாள் இதையெல்லாம் நீங்களும் தான்
செஞ்சி பாருங்களேன்...” என பொங்கி எழுந்து எதிர் சவாலை எடுத்து விட்டாள்.

அவளது கணவனும், “சரி அப்படியே செய்வோம்... இன்று நீ என் அலுவலகத்துக்கு போ...(அவன்தான் முதலாளி) நான் வீட்டில் இருந்து பசங்களைப் பார்த்துக் கொள்கிறேன்” என்று போட்டிக்கு தயாரானான்.

அவன் மனைவியோ “ஏங்க இதெல்லாம் வேண்டாங்க உங்களால முடியாது...” என்று சொல்லிப் பார்த்தாள்.

ஆனாலும் விடாப்பிடியாய் அவளது கணவன் நிற்க, “சரி, நான் என்ன செய்ய முடியும்?” என்றவாறே வீட்டையும், பிள்ளைகளையும் கணவனிடம் ஒப்படைத்துவிட்டு அவள் அலுவலகத்திற்கு புறப்பட்டுப் போனாள்.

அங்கே வருகைப் பதிவேட்டை சரிபார்த்து கால தாமதமாய் அலுவலகம் வருபவர்களிடம் கண்டித்து அறிவுறுத்தினாள். கணக்கு வழக்குகளைப் பார்த்தாள். இடையிடையே இந்நேரம் வீட்டில் அந்தப் பாவி மனுஷன் என்ன செய்யறாரோ... என்ற கவலை வேறு வந்து வந்து போனது.

ஒரு வழியாய் மாலை ஐந்து மணி ஆனதும் வீட்டிற்கு புறப்படலாம் என்ற வேளையில் அலுவலகத்தில் பணி புரிபவரின், மகளின் திருமண வரவேற்பு குறித்து உதவியாளர் வந்து சொல்ல உடனே அதற்கொரு பரிசுப் பொருளை வாங்கிக்கொண்டு அந்த கல்யாண மண்டபத்திற்குச் சென்றாள். மணமக்களிடம் அன்பளிப்பைக் கொடுத்துவிட்டு தன் கணவர் வராததற்கு பொய்யான காரணம் ஒன்றை சொல்லிவிட்டு மணமக்களின் கட்டாயத்தின் பேரில் சாப்பிடச் சென்றாள்.

பந்தியில் உட்கார்ந்தவளுக்கு சிந்தனையெல்லாம் வீட்டைப் பற்றியே. இலையில் வைத்த ஜாங்கிரியை மூத்தவனுக்கு பிடிக்கும் என்று தனது கைப்பைக்குள் எடுத்து வைத்து பத்திரப்படுத்தினாள். வடை அவருக்கு பிடிக்குமே என்று அதையும் எடுத்து தான் சாப்பிடுவது போல் நடித்துக் கொண்டே தன் கைப்பைக்குள் வைத்துக் கொண்டாள்.

அவள் சாப்பிட்டதை விட, பிள்ளைகளுக்கும், கணவனுக்கும் என அவள் பைக்குள் பதுக்கியதே அதிகம். ஒரு வழியாய் வேக வேகமாய் வீட்டை நோக்கி வந்திறங்கியவள் ஆட்டோவை விட்டு இறங்கி வீட்டிற்குள் அவசரத்தோடே நுழைந்தாள். வாசலில் அவளது கணவன் கையில் ஒரு பிரம்போடு முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிப்பது போல் கோபத்தின் உச்சத்திற்கே ஏறிய வண்ணம் இங்கும் அங்குமாக நடந்து கொண்டிருந்தான்.


இவளைப் பார்த்ததும் “பிள்ளையா பெத்து வச்சிருக்கே... அத்தனையும் குரங்குங்க... எதுவும் சொல்றதைக் கேட்க மாட்டேங்குது... படின்னா படிக்க மாட்டேங்கிறாங்க... சாப்பிடுன்னா சாப்பிட மாட்டேங்கிறாங்க... அத்தனை பேரையும் அடிச்சு அந்த ரூம்ல படுக்க வச்சிருக்கேன். பாசம் காட்டுறேன்னு பிள்ளைகள நல்லா கெடுத்து வச்சிருக்கே...” என்று மனைவி மீது கோபம் கொப்பளித்துப் பாய...அவளோ “அய்யய்யோ பிள்ளைங்களை அடிச்சீங்களா...” என்றவாறே உள்ளே ஓடி தாழிட்டிருந்த கதவை திறந்து பார்த்தாள். உள்ளே ஒரே அழுகையும், பொருமலுமாய் பிள்ளைகள்.

விளக்கைப் போட்டவள் அதிர்ந்தவாறே “ஏங்க இவனையும் அடிச்சிப் படுக்க வச்சீங்க..? இவன் எதிர்வீட்டுப் பையனாச்சே...?” என்று அவள் அலற... “அது தானா, அவன் எழுந்து எழுந்து வெளியே ஓடுனான்?” என அவளது கணவனும் அதிர்ச்சியுற, கதை முடிந்தது.


இந்த கதையின் சாரம் தான் NT சிலை யை அகற்ற முயற்சிப்பது

உண்மையான சிலைகளை , டிராபிக்கு தொந்தரவு செய்யும் சிலைகளை அகற்ற தைய்ரியம் இல்லாமல் , NT சிலையை குறிபார்ப்பது - வந்தாரை ஒரு காலத்தில் வாழ வைத்த தமிழகம் , தன்னை வாழவைத்தவரை தொடர்ந்து அவமானம் செய்து வருகின்றது - நெஞ்சு பொறுக்கவில்லை சார் - திரும்ப திரும்ப தருமி மாதிரி புலம்ப வைத்துவிட்டது இந்த செய்தி !!!



:confused:

shankarbharath
26th October 2013, 12:13 AM
It is indeed a long time since I posted on Mayyam - and the first thread I visited was the NT section. I understand that from my last post, NT threads have gone on to No.9, then No.10 and now a new one....Karnan padam re-relase pannum podhu vandha vasool, industry jambavaangalai salute adikka vaithadhu....andha madhiri one has to salute the activity and buzz that NT commands even on a forum like this.

I wanted to share a few things with my comrades here - about NT of course. His sheer brilliance is clearly evident in one movie which came in the late 1960s - "Uyarndha Manidhan".

Now as many of you would know, VC Ganesan was a prominent and impactful stage actor before he made his indelible mark on the big screen. In those days, the technology and infrastructure available for plays was very less. Clear acoustics were not available till the 1960s-70s. Stage sets and art direction were pretty much straight forward, until RS Manohar set benchmarks. Similarly, dialogue delivery was considered the clear area of one Mr S S Rajendran, who was respected and is still remembered for his clear diction and dialogues.

But then, no one had owned the most important aspect called acting / facial expressions. This is where NT made it his space. As many of you would know, the early stage dramas had very difficult arrangements - so one had to talk loudly so that the last row audience could hear them. Also, facial expressions had to be exaggerated, so that an expression like Roudram or Sogam could be seen about 15 rows back. That is also the reason why facial makeup was also over the top.

It is in this context that NT had such commanding presence on screen. His voice would just boom across the screen and his face would twitch to show the expression. But many people in my generation felt that NT was actually over-acting or rather, he was exaggerating. This was a clear hangover from the stage days (at least that is what I thought).

And then I saw Uyarndha Manidhan.

This movie nailed it for me. Today, one sees facial expressions of Mohanlal and says "What subtlety". But you need not go beyond UM to see the meaning of subtle. Brilliantly restrained in his portrayal, NT was an absolute marvel, portraying a superbly written character (upper class man, who could not go against his father, sacrifices his love, and lives in guilt, yet mechanically carries on with his married life).

The sheer facial expressions and tone, were all markedly different from what he had portrayed so far. Gone were the booming voices - out came the low volume, refined tones, to depict his expressions. Gone were the thrombing eyebrows and booming face cheeks - out came the "look up and down in one glance" expression. Even his hand holding a pipe - was subtle. There is one superb scene, right at the beginning, where his man servant retires after many years of service. While his man servant is emotional, Sivaji is emotional too - but the way NT shows emotional restraint of the character - phenomenal.

I think UM is one of the all-time great acting performances by any actor. Though we know he received a raw deal by not winning awards, the truth is, it is such a treasure.

Richardsof
26th October 2013, 06:08 AM
பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்த இனிய நண்பர்கள் திரு ஹரிஷ் , திரு சுப்ரமணியம் ராமஜெயம்
திரு முரளி அவர்களுக்கு எனது இதயங்கனிந்த நன்றி .

RAGHAVENDRA
26th October 2013, 08:25 AM
Dear Shankar Bharath
We are happy to see you here after a brief break. Almost after one and a half year, your coming back here is delightful. Please share your memories.

Your lines quoted below, serve testimony to what extent you regard NT. And at your age, may be 32 now, we are happy that NT stands above period.



I know I am digressing a bit in terms of what I wanted to say here - but without being a fan of any actor, I still say his films are enough to show who a true actor is. And my memories of Sivaji will always be how amazed I was at my father, uncles, family doctor, etc who were all such great fans of him.


Please visit often and share your thoughts on Nadigar Thilagam

mr_karthik
26th October 2013, 02:35 PM
டியர் ரவி சார்,

தங்கள் வித்தியாசமான பதிவுகள் மனதைத்தொடுகின்றன. இதுவரை வந்திராத வித்தியாசமான பதிவுகள். சிந்தனைகள்.

தொடர்ந்து அளியுங்கள்....
பாராட்டுக்கள்..........

mr_karthik
26th October 2013, 02:37 PM
Dear Shankar Bharath sir,

We need your conitineous participation in this thread, with your valuable posts.

mr_karthik
26th October 2013, 02:41 PM
டியர் சந்திரசேகர் சார்,

நடிகர்திலகத்தின் சிலை வழக்கு தொடர்பான தங்கள் தலைமையில் இயங்கும் பேரவையின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளன குறிப்பாக தங்கள் வழக்கறிஞரின் நடவடிக்கை பாராட்டுக்குரியது.

பாராட்டுக்கள்....

mr_karthik
26th October 2013, 02:45 PM
நடிகர்திலகத்தின் திரைப்படங்களில் ஐட்டம் நடிகையர் ( 8 )

சகலகலா'வில்லி' "சத்யபிரியா"

பல திரைப்படங்களிலும் அதைவிட பல தொலைக்காட்சித்தொடர்களிலும் நடித்து இன்றும் ரசிகர்களோடு உறவில் இருப்பவர் சத்யபிரியா. திரைப்படங்களில் எந்த அளவுக்கு வில்லித்தனம் செய்து ரசிகர்களை, குறிப்பாக தாய்மார்களை கொதிக்க வைத்தாரோ, அதற்கு பாவமன்னிப்பு தேடுவது போல சீரியல்களில் பாசமுள்ள அம்மாவாக வந்து பிழியப் பிழிய அழுது கொண்டிருக்கிறார். திரைப்படங்களில் நடிக்க வந்த சில நாட்களிலேயே நடிகர்திலகத்துடன் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றவர். அப்படி நடிகர்திலகத்துடன் நடித்தவற்றுள் இரண்டு படங்கள் மட்டுமே நினைவில் உள்ளது. இரண்டைத் தவிர வேறு படங்களில் அவருடன் நடித்தாரா என்பது தெரியவில்லை.

"தீபம்" ஏந்தி வந்த ஆஷா

தேக்க நிலையைப் போக்க வந்த 'தீபம்' படத்தில் நடிகர்திலகத்தின் முற்பகுதி ரோல் ஒரு பிளேபாய் என்பது தெரியும். படத்தின் முதல்காட்சியாக வரும் (சில பக்கங்களுக்கு முன் நண்பர் வாசுதேவன் பதித்த) 'ராஜா யுவராஜா' என்ற ஒரே பாடலில், பல அழகிகளோடு லூட்டி அடிப்பதிலேயே அவரது ரோல் தெளிவாகக் காட்டப்பட்டு விடும். அப்படத்தில் முற்பாதியில் அவரது நிரந்தர தொடுப்பாக வருபவர்தான் ஆஷா (சத்யபிரியா). இப்போதுள்ள சத்யபிரியாவை 37 வருடங்கள் பின்னோக்கி ரீவைண்ட் செய்து பார்த்தால் கிடைப்பவர் அழகான, ஒல்லியான, கவர்ச்சியான, எந்த மாடர்ன் ட்ரெஸ்ஸும் பொருந்தக்கூடிய, மந்தகாச புன்னகை வீசும் சத்யபிரியா.

ராஜாவின் (நடிகர்திலகம்) ஆசாபாசங்களுக்கு வடிகாலாக இருந்துகொண்டு அதன் பலனாக ராஜாவிடமிருந்து மிகவும் வசதியான வாழ்க்கை கிடைக்கப்பெற்று, தப்பான வாழ்க்கையில் பெருத்த நிம்மதி காணும் ஆஷா, தன் துணைவனின் கவனம் பியூன் ராமையாவின் மகள் ராதா (சுஜாதா) வின் பக்கம் திரும்பும்போது திடுக்கிடுகிறாள். வசதியான வாழ்க்கை கைமீறிப் போய்விடுமோ என்ற அச்சத்தில் ராஜா மீது அல்ல, அவரை திசைமாற வைத்த ராதாவுக்கு வில்லியாகிறாள். ராஜாவின் கவனம் தன்னைவிட்டு முற்றிலுமாக விலகிப்போக, அவர் வரவே நின்று போகிறது. தன்னைத்தேடி வந்த 'வரவு' குறைய அதனால் தனக்கு வந்துகொண்டிருந்த 'வரவும்' நின்று விடுமோ என்று அச்சமும் அதிர்ச்சியும் அடைந்து, அதன் பலனாக அவளது முழுக்கோபமும், (ராஜா திருந்தக் காரணமாயிருந்த) ராதா மீது திரும்புகிறது. அவள் எப்படி வாழ்ந்து விடுகிறாள் என்று பார்க்கிறேன் என்று மனதுக்குள் கொதிக்கிறாள். கெட்டவர்கள் கெட்டவர்களாகவே இருந்தால்தானே கெட்டவர்களுக்கு நல்லது.

ராதாவை கண்ணனுக்கு (விஜயகுமார்) மணமுடித்த பிறகாவது, ராஜா பழைய நினைப்பில் தன்னைத்தேடி வருவான் என்று எதிர்பார்த்த ஆஷாவின் ஆசை நிறைவேறவில்லை. திருந்தியவன் திருந்தியவனாகவே இருந்து தங்கையின் திருமணம் போன்றவற்றில் தன் கவனத்தைத் திருப்ப ஆஷா இன்னும் கொதிப்பாகி, இத்தனைக்கும் காரணமான ராதாவைப் பழிவாங்க ஒரேவழி அவள் காதலித்து மணந்த கண்ணனை தன் வலையில் வீழ்த்தி அவளை சித்திரவதைக்கு உள்ளாக்குவது. அதற்கு கிடைத்த கருவி மேனேஜர் ராமதாஸ். ஆபீஸில் தன் இடத்தைப்பறித்த கண்ணனை பழிவாங்க அவனுக்கும் ஒரு வாய்ப்பு. இம்மாதிரி சமயங்களில் கைகொடுக்கும் மிகப்பெரிய ஆயுதம், கட்டியமனைவி மீது சந்தேகத்தை விதைப்பது. அதை செம்மையாக செய்து கண்ணனை ஆஷாவின் மடியில் விழ வைக்கின்றனர். இது பின்னர் ராஜாவுக்கு தெரியவர கோபத்தின் எல்லைக்குப்போகும் ராஜா அவளைக் கடுமையாக எச்சரிப்பதோடு ஆஷாவின் ரோல் முடிகிறது. ("இனிமே, கண்ணன் இந்தப்பக்கம் வந்தான்னு தெரிஞ்சது, உன்னை பீஸ் பீஸா கட் பண்ணிடுவேன்" - இது ஆஷாவுக்கு. "ஆபீஸில் மட்டுமல்ல, இந்த ஊர்ல உன்னை எங்கு பார்த்தாலும் உன் தலையை எடுத்திடுவேன்" - இது மேனேஜருக்கு).

'பாலாஜி சாருடைய தீபம் படத்துல உங்களை வில்லி ரோலுக்கு புக் பண்ணலாம்னு வந்திருக்கேன்' என்று சுஜாதாசினிஆர்ட்ஸ் நிர்வாகி கிருஷ்ணமூர்த்தி (பின்னாளில் 'பில்லா' கிருஷ்ணமூர்த்தி) மொட்டையாக சொன்னபோது, "நான் இப்போ கதாநாயகி ரோலில் நடிச்சிக்கிட்டிருக்கேன். வில்லி ரோல் வேண்டாமே" என்று சத்யபிரியா மறுக்க, "சிவாஜி சார் கூட காம்பினேஷன் ரோலில் நடிக்க மறுக்கிறீர்களே" என்று கி.மூ.சொன்னதும் "என்னது, சிவாஜி சார் கூடவா?. இதை ஏன்சார் மொதல்லேயே சொல்லலை?. வில்லி ரோல்னு இல்லை, அவர்கூட எந்த ரோலிலும், சின்ன ரோலில் கூட நடிக்க நான்தயார்" என்று மகிழ்ச்சியுடன் சத்யபிரியா ஏற்று நடித்த ரோல் இது. அவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது.

'பைலட் பிரேம்நாத்தின்' பாந்தமான மருமகள்

1977 ஜனவரியில் தீபம் படத்துக்குப்பின் 1978 தீபாவளியன்று வெளியான பைலட் பிரேம்நாத் படத்திலும் சத்யபிரியா நடித்திருந்தார். நடிகர்திலகத்தின் இரண்டாவது மகன் ஜெய்கணேஷின் ஜோடி. பிரேம்னாத்தின் கோ-பைலட் 'சீக்கியர்' தேங்காய் சீனிவாசனின் மகள். இப்படத்திலும் ஓவர் கவர்ச்சியுடன் நடித்திருந்தார். ஜெய்கணேஷுடன் இவரது டூயட் பாடலான 'அழகி ஒருத்தி இளநி விக்கிறா கொழும்பு வீதியிலே' பாடலின்போது நீச்சல் உடைக்காட்சிஎல்லாம் உண்டு.

இவ்விரண்டு படங்கள் தவிர நடிகர்திலகத்துடன் வேறு படங்களில் நடித்தாரா என்பது நினைவில்லை. எனக்கு நினைவில்லாவிட்டால் என்ன, நமது திரியில்தான் அசகாய சூரர்கள் உண்டே விட்டுவிடுவார்களா?.

ரஜினியுடன் 'பணக்காரன்', பிரபுவுடன் 'பெரிய குடும்பம்' உள்பட ஏராளமான திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தேவயானியின் அம்மாவாக இவர் நடித்த 'கோலங்கள்' ஒரு வெற்றி சீரியல். தற்போது ரம்யா கிருஷ்ணனின் அம்மாவாக ஒரு சீரியலில் நடித்து வருகிறார். திருமணமாகி, கணவரும் இறந்தபின் தற்போது சீரியல்களில் நடித்துக்கொண்டு அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் சத்யபிரியா.
பல்லாண்டு வாழ்க.....

anasiuvawoeh
26th October 2013, 02:48 PM
Dear Murali Srinivas sir,I acknowledge your thanks.

Dear Ravi Sir,excellent Buddha story and the punch lines.
One thing about your VANDHAARAI vaazhavaikkum lines.
Once it was VANDHAARAI VAAZHAVAIKKUM TAMIZHAGAM,
now it has become "VANDHAARAI MATTUM VAAZHA VAIKKUM TAMIZHAGAM"

mr_karthik
26th October 2013, 02:58 PM
தீபம் பட ஒப்பந்தத்தின்போது சத்யப்ரியாவுக்கும் பில்லா கிருஷ்ணமூர்த்திக்கும் இடையே நடந்த உரையாடல், ஜெயா டி.வி.யின் 'திரும்பிப்பார்க்கிறேன்' நிகழ்ச்சியில் சத்யப்ரியாவே சொன்னது...

Harrietlgy
26th October 2013, 03:15 PM
சிவாஜி சிலையை அகற்றுவதா? கையெழுத்து வேட்டை நடத்துகிறது இயக்குனர்கள் சங்கம்

சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் நடிகர் திலகம் சிவாஜிக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாகவும் அதனை அகற்ற வேண்டும் என்றம் ஒருவர் பொதுநல வழக்கு ஒன்றை சென்னை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு நீதிமன்றம் போக்குவரத்து காவல்துறை கமிஷனருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இந்த நிலையில் சிவாஜி சிலையை அகற்றக்கூடாது என்று இயக்குனர்கள் சங்கம் கையெழுத்து வேட்டை நடத்தி வருகிறது.

இதுகுறித்து இயக்குனர்கள் சங்கத் தலைவர் விக்ரமன், ‘ரம்மி’ படத்தின் டிரைய்லர் வெளியீட்டு விழாவில் கூறியதாவது: நாம் வணங்கும் இறைவன் உருவத்தையும், தேச தலைவர்களின் வாழ்க்கையையும் கலைவடிவில் நமக்கு காட்டியவர் நடிகர் திலகம் சிவாஜி. அவர் சிலைய அகற்ற ஒரு நாளும் அனுமதிக்க மாட்டோம். இதற்காக இயக்குனர்கள் சங்கம் ஒரு கையெழுத்து வேட்டையை துவங்கி உள்ளது. அதில் திரையுலகைச் சேர்ந்த ஒவ்வொரும் கையெழுத்திட வேண்டும். ஒவ்வொரு சங்கத்தினரும் தங்கள் உறுப்பினர்களிடம் கையெழுத்துப் பெற்று இயக்குனர்கள் சங்கத்தில் ஒப்படைக்க வேண்டும். அதனை போக்குவரத்து கமிஷனரிடம் வழங்க இருக்கிறோம். என்றார்.


News from Today's Dinamalar

chinnakkannan
26th October 2013, 03:29 PM
//அப்படி நடிகர்திலகத்துடன் நடித்தவற்றுள் இரண்டு படங்கள் மட்டுமே நினைவில் உள்ளது. இரண்டைத் தவிர வேறு படங்களில் அவருடன் நடித்தாரா என்பது தெரியவில்லை. // எனக்கும் நினைவிலில்லை.. ஆனால்படம் வந்த போது - தீபம்- பத்தோடு ஒன்று என்று தான் தோன்றியது..சில வருடங்களுக்கு முன் தீபம் மறுபடி பார்த்த போது அரை டிராயர் டாப்ஸ் என நினைக்கிறேன்.. தமாஷாக இருந்தது..சத்யப் ப்ரியா உங்கள் பதிவைப் படித்தால் சந்தோஷப் படக் கூடும்..;) சூர்ய வம்சத்தில் தேவயானி அம்மாவாக உப்மா சாப்பிடுவார் என்று நினைவு..

KCSHEKAR
26th October 2013, 04:03 PM
Malaimalar - 26-10-2013

http://www.maalaimalar.com/2013/10/26133947/no-disturb-to-transport-sivaji.html

mr_karthik
26th October 2013, 04:14 PM
சென்னை, அக். 26–

சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் காந்தி சிலை அருகே நிறுவனப்பட்டுள்ள நடிகர் சிவாஜி கணேசன் சிலை போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது என்றும் எனவே அந்த சிலையை அப்புறப்படுத்த வேண்டும் என்றும் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

இந்த வழக்கில் போக்குவரத்து போலீசார் விளக்கம் அளிக்க கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

இந்த நிலையில் நடிகர் சங்க தலைவர் சரத்குமார், பொதுச்செயலாளர் ராதாரவி ஆகியோர் போலீஸ் கமிஷனருக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:–

மறைந்த நடிகர் திலகம் சிவாஜிகணேசன் பல பெருமைகளுக்கு உரியவர். தமிழ்நாட்டில் மட்டும் அல்லாமல் இந்திய அளவிலும், உலக அளவிலும் போற்றப்படும் ஒரு அற்புதமான கலைஞர்.

அத்தகைய கலை பொக்கிஷம் ஆன நடிகர் திலகம் சிவாஜிகணேசன் சிலையை ராணி மேரி கல்லூரி எதிரில் நிறுவப்பட்டுள்ளதால் போக்குவரத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று அரசு தலைமை வழக்கறிஞர் சம்பந்தப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தில் எடுத்துரைத்துள்ளார். காவல் துறை சார்பிலும் விளக்கம் அளிக்க நீதியரசர் உத்தரவு அளித்துள்ளார்.

சிலை நிறுவப்பட்டு பல வருடங்களாகியும் போக்குவத்துக்கு எந்த இடையூறு ஏற்படவில்லை என்பதுதான் உண்மையான நிலை என்று தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக தங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த உண்மை நிலையினை தாங்கள் நீதிமன்றத்திற்கு அளிக்கும் விளக்கத்தில் தெரிவிக்க வேண்டும் என்று நடிகர் சங்கத்தின் அனைத்து உறுப்பினர்கள் சார்பாகவும், ஒட்டு மொத்த தமிழ் திரையுலகம் சார்பாகவும் கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சிவாஜி ரசிகர் மன்ற தலைவர் கே.வி.பி. பூமிநாதன், சிவாஜி சமூக நல பேரவை தலைவர் சந்திரசேகரன் ஆகியோரும் சிலை அதே இடத்தில் நீடிக்க வேண்டும் என்று வற்புறுத்தி அறிக்கை வெளியிட்டு உள்ளனர்.

(Thank you Chandrasekhar sir for the link and your actions)

KCSHEKAR
26th October 2013, 04:24 PM
Dear Karthik Sir,

Thanks for your appreciation regarding Nadigarthilagam Statue issue.

Harrietlgy
26th October 2013, 07:07 PM
சிவாஜிகணேசன் சிலை விவகாரம் தொடர்பாக தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் அதன் தலைவர் சரத்குமார், பொதுச்செயலாளர் ராதாரவி ஆகிய இருவரும் ஒரு அறிக்கை விடுத்துள்ளனர். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:

மறைந்த நடிகர் திலகம் சிவாஜிகணேசன், பல பெருமைகளுக்கு உரியவர். தமிழ்நாட்டில் மட்டும் அல்லாமல், இந்திய அளவிலும், உலக அளவிலும் போற்றப்படும் ஒரு அற்புதமான கலைஞர். அத்தகைய கலை பொக்கிஷமான அவருடைய சிலை, ராணி மேரி கல்லூரிக்கு எதிரில் நிறுவப்பட்டுள்ளதால், போக்குவரத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று அரசு தலைமை வழக்கறிஞர் சம்பந்தப்பட்ட வழக்கில், நீதிமன்றத்தில் எடுத்துரைத்துள்ளார்.

காவல்துறை சார்பிலும் விளக்கம் அளிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். சிலை நிறுவப்பட்டு பல வருடங்கள் ஆகியும் போக்குவரத்துக்கு எந்த இடையூறும் ஏற்படவில்லை என்பதுதான் உண்மையான நிலை என்று தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் தங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம். இந்த உண்மை நிலையை தாங்கள் நீதிமன்றத்துக்கு அளிக்கும் விளக்கத்தில் தெரிவிக்க வேண்டும் என்று ஒட்டுமொத்த தமிழ் திரையுலகம் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



News from Dailythanthi

uvausan
26th October 2013, 07:43 PM
Karthik sir

" கெட்டவர்கள் கெட்டவர்களாகவே இருந்தால்தானே கெட்டவர்களுக்கு நல்லது. "


அருமை - எப்படி சார் உங்களுக்கு வார்த்தைகள் இப்படி தலை வணங்கி கொண்டுகின்றது !!! பொறமையாக இருக்கின்றது ......

:):smokesmile:

uvausan
26th October 2013, 07:51 PM
Kindly read " கொண்டுகின்றது " as " கொட்டுகின்றது " - சாரி கார்த்திக் சார் - தமிழில் மிகவும் கம்மி மார்க்குகளே கிடைத்தன !! ( school days )
Ravi
:):smokesmile:

JamesFague
26th October 2013, 10:43 PM
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=s0brrvQD8OU

Favourite song


http://www.youtube.com/watch?feature=player_embedded&v=s0brrvQD8OU

JamesFague
26th October 2013, 10:54 PM
Stylish Song


http://www.youtube.com/watch?feature=player_embedded&v=R8mgrtqbfNw

JamesFague
26th October 2013, 11:00 PM
Emotional Song of NT


http://www.youtube.com/watch?feature=player_embedded&v=XjZP2reKBlU

JamesFague
26th October 2013, 11:06 PM
Super Song from Pattakathi Bairavan


http://www.youtube.com/watch?feature=player_embedded&v=g_-lZNLOa5Q

JamesFague
26th October 2013, 11:11 PM
Super Duet Song from Sangili


http://www.youtube.com/watch?feature=player_embedded&v=AY_IGElDPGM

JamesFague
26th October 2013, 11:15 PM
This Duet Song From En Magan to Mr Neyveli Vasu Sir


http://www.youtube.com/watch?feature=player_embedded&v=dKh8Q-yDlZU

JamesFague
26th October 2013, 11:18 PM
For Mr Gopal


http://www.youtube.com/watch?feature=player_embedded&v=OLyGq9BGZF0

Subramaniam Ramajayam
27th October 2013, 12:45 AM
SHOCKING NEWS move for shifting of NT statue at marina we should not allow this.
peravai and kc sir actions highly appreciated, PONGI EZHUVOM RASIGARGALE,
PORUTHATHU PODUM, LET US TEACH A LESSON,

vasudevan31355
27th October 2013, 08:49 AM
சந்திரசேகரன் சார்,

தாங்கள் நடிகர் திலகம் சிலை தொடர்ந்து அதே இடத்தில் இருப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருவதற்கு நன்றி! தங்கள் முயற்சி வெற்றி பெற நாங்கள் அனைவரும் உறுதுணையாய் இருப்போம்.

Gopal.s
27th October 2013, 09:56 AM
நம்மை காக்கும் சிலையை நாம் என்ன காப்பது? அந்த கடவுளே துரோகிகளுக்கு பாடம் கொடுத்து, தன் நிலையில் உயர்ந்து நிற்கும்.

வாழ்க ஒரே தமிழ் கடவுள் புகழ்.

rangan_08
27th October 2013, 02:17 PM
Hope we all know that YGM is writing about NT in Dina Malar. In this week's issue has has shared an interesting incident.

Since YGM has acted in films like Moondram Pirai, Un kannil neer vazhinthal etc., directed by Balu Mahendra they maintained a good relationship. Once they were having a chat and Balu revealed his desire to direct NT in one of his films as he is a big fan of the veteran. YGM conveyed this to NT and a meeting was scheduled.

Accordingly, Balu visited NT's house and after having lunch, Balu narrated a story to NT. It was about the ordeals of a father who is in search of his daughter, who has been forced into prostitution. NT was so moved by the story and he immediately gave his nod to go ahead and also suggest that YGM should play an important character in the film. It was decided that Sri Devi should play the character of NT's daughter. Balu said to NT that he wanted the actor to be himself in the film sans any make-up.

Every body was so excited about the project and firmly believed that it is going to be a milestone in Tamil cinema history. But unfortunately due to reasons unknown, the project was shelved. How sad !!

I was always yearning to see NT as Don Corleone in our Tamil version...but it never happened. Now after reading the above piece of information I felt that we have missed another masterpiece by the great actor and that too with an ace director like Balu Mahendra.

Russellfcv
27th October 2013, 03:02 PM
Will ever someone try to remake and perform like this?

Brilliant performance from the Son of Goddess Saraswathi, Nadigar Thilagam Sivaji Ganesan ! Karnan in conversation with Kunthi Devi.

http://www.youtube.com/watch?v=pslsqW3vslk

Russellfcv
27th October 2013, 03:17 PM
இததானே எதிர்பாக்கறா...

எப்போடா கீழ விழுவானு எதிர்பாக்கறா !

நடக்காதுடி ! He is prepared to face anybody's challenge..!

ஹி இஸ் திலகம் ....நடிகர் திலகம் !

http://www.youtube.com/watch?v=8PljHuFQ6vk

Russellfcv
27th October 2013, 03:34 PM
The First Tamizh Film that was nominated for OSCARS in the year 1969 !

Nadigar Thilagam's Cult Classic "Deiva Magan"

http://www.youtube.com/watch?v=Sy76CYBBZWk

Russellfcv
27th October 2013, 03:40 PM
The first Indian Film, Indian Film Music Director, Indian Film Actor to win an International Award in Asia - Africa Film Festival in the year 1960 was as follows:

Best Foreign Film - Veera Pandiya Kattabomman
Asia-Afro Best Actor Award - Nadigar Thilagam Sivaji Ganesan
Best Music Director - G.Ramanathan

http://www.youtube.com/watch?v=LZhpfHiumGw

Russellfcv
27th October 2013, 03:49 PM
A doyen among actors

Sivaji Ganesan, 1928-2001.

D.B.S. JEYARAJ

SIVAJI GANESAN, 72, one of the brightest stars on the Tamil film firmament for nearly five decades, passed away at a Chennai hospital on July 21. With more than 300 film roles to his credit, he inspired a whole generation of artists, virtually creating a new school of acting.

His acting career, which began at the age of eight, could be divided into three phases - 1936 to 1952, when he acted only on stage; 1952 to 1974, when he acted for the big screen and also gave stage performances; and 1974 to 1999, when he acted only in films. (His last film was Pooparikka Varigirom.)

Villupuram Chinniah Ganesan, or V.C. Ganesan, was born on October 1, 1928, in Villupuram, which was then in Tamil Nadu's South Arcot district, to Chinnaiapillai, a railway employee and freedom fighter, and Rajamani, in whose name he was to launch later a successful film company, Rajamani Pictures.

Smitten by a street drama about Kattabomman, the feudal Polagar of Panchalan-kurichi who defied the British, young Ganesan became enamoured of acting and abandoned school when he was in Class Two. Forsaking home, he joined the Madurai-based Bala Gana Sabha drama troupe first, and later the troupe run by Ethaartham Ponnusamipillai. From child roles he graduated to female roles and then on to the "raja part", the role of the hero, as it was known then. The first landmark in his career was his portrayal of the Maratha warrior Sivaji in the drama ''Sivaji Kanda Samrajyam'' written by Dravida Munnetra Kazha-gam leader C.N. Annadurai, who went on to become the Tamil Nadu Chief Minister. E.V. Ramaswamy, the patriarch of the Dravidian movement, acclaimed his stellar performance and referred to Ganesan as 'Sivaji' Ganesan. This was in 1946. The sobriquet stuck.

The big break in Sivaji's career came in 1952, when he acted as the hero in Parasakthi, a film directed by Krishnan-Panju. The dialogue, written by DMK leader and former Chief Minister M. Karunanidhi in fiery and flowery prose with a surfeit of alliterations, the hallmark of Karunanidhi's style, came powerfully alive in a stunning performance by Sivaji, unparalleled in Tamil cinema. The monologue uttered as an address to Tamil Nadu in the earlier scenes and the courthouse speech in the closing stages of the film were classic instances of delightful oratory. A star had arrived in Tamil cinema.

The Karunanidhi-Sivaji combination made an explosive impact. The writer's rich prose, brimming with vitality, was given emotive and impressive expression by the actor. Every film in which they collaborated was a success. Notable among them were Thirumbi Paar, Manohara, Kuravanji and Iruvar Ullam.

Sivaji had an extraordinary flair for dialogue delivery. He pioneered an exquisite style, diction, tone and tenor. (Later other scriptwriters, such as Solaimalai, Sakthi Krishnaswamy, Aroor Das, and 'Vietnam Veedu' Sundaram, were to provide dialogue that tapped his diction, which rendered the Tamil language euphonious.)

A generation of actors and aspirants modelled themselves on his style. Despite this mass attempt to imitate and emulate him there was no replicating or duplicating the veteran. This stylish, dramatic presentation was essentially considered to be a feature suitable for the stage rather than the screen. A device used frequently in his earlier films to give an outlet to his histrionic talents was the inclusion of short historical dramas - on the Chera King Senkuttuvan, Akbar's son Salim or Jahangir, Socrates, Emperor Asoka among others - within the main plot, often dealing with a social theme.

His acting ability received maximum exposure in the bantering arguments Veerapandiya Kattabomman has with his British adversaries in the eponymous film. Sivaji received the best actor award for this role at the Afro-Asian film festival held in Cairo in 1960.

Sivaji's talents were by no means restricted to his oratorical prowess and powerful dialogue delivery. He could emote all the nine moods (navarasas) realistically. This skill found scope in all his films and came out into full play in his 100th film Navarathri in 1964, in which he played nine different characters signifying wonder, fear, compassion, anger, gentleness, revulsion, romantic passion, courage and happiness.

His other commendable multi-role performances were in Uthama Puthiran in a dual role, and Deiva Magan and Bale Pandiya in which he did three roles each.

Sivaji Ganesan played a wide range of characters, from god and king to commoner. Whether it was the mercurial Chola emperor Raja Raja Cholan, Lord Siva, Lord Muruga, Saivite saint Appar, Vaishnavite saint Periyaalvar or Tamil poet Ambigapathy, Sivaji was always at his scintillating best. He was equally splendid in contemporary roles and stereotypes making every performance a memorable one.

Superb among them are his roles as Bharatha in Sampoorna Ramayanam, the patriotic lawyer Chidambaram Pillai in Kappalottiya Thamizhan, the nagaswaram player Sikkal Shanmugasundaram in Thillana Mohanambal, Prestige Padma-nadha Aiyer in Vietnam Veedu, Barrister Rajanikanth in Gauravam and Police Superintendent Chaudhury in Thangapadhakkam.

Despite achieving stupendous success on the screen, Sivaji remained faithful to his first love, the stage, and acted in plays for decades. Scenes from some of his films remain etched in memory: the 'Yaaradi Nee Mohini' song sequence in Uttama Puthiran, where Sivaji's mannerisms would remind present day movie-goers of Rajnikanth's style; the physically challenged Ponniah in Bhagapirivinai, the inimitable gait as the fisherman in Thiruvilayadal and the clash with Tamil scholar Nakkeeran in the same film; his duel over artistic superiority with Padmini in Thillana Mohanambal; particularly during the 'Nalanthaana?' song sequence; and the Othello drama sequence in English with Savithri as Desdemona in Iratha Thilakam.

Sivaji had an astounding capacity to synchronise lip and body movements to playback renditions making it appear as if he was actually rendering these songs. Singers Chidambaram Jeyaraman, Tiruchi Loganathan, Seerkazhi Govindarajan and A.M. Raja in the earlier days and T.M. Soundararajan later gave voice to his songs, making the singing and speaking voices blend as an indivisible entity.

Several directors, among them Krishnan-Panju, T.R. Sundaram, L.V. Prasad, B.R. Panthulu, T. Prakash Rao, A. Bhim Singh, K. Shankar, A.P. Nagarajan, A.C. Tirulokchandar, Sridhar, P. Madh-avan, K.S. Gopalakrishnan and K. Vijayan, directed Sivaji in vastly different roles, bringing out his versatility.

It was Sivaji's tragedy that as the years progressed, opportunities for him to display his acting talent became scarce. But he did act in cameo roles, often stealing the scenes, as in Thevar Magan, which won him the National Awards Jury's Special Jury award in 1993. (Sivaji, incidentally, declined the award.)

Ironically, the man hailed as a great thespian never won a national award for best actor. He was conferred the Dadasaheb Phalke lifetime achievement award for meritorious service to Indian cinema in 1997.

THE film journal Pesum Padam gave him the honorific 'Nadigar Thilagam' (doyen of actors). Sivaji was honoured with the titles Padma Shri and Padma Bhushan and the Tamil Nadu government conferred on him the Kalaimamani award. The French government honoured him with Chevalier in the Order of Arts and Literature.

Essentially a creature of the stage when he entered films, Sivaji Ganesan brought that baggage with him and superimposed it effectively on the film medium. Yet his brilliant acting made this so-called violation of screen norms the accepted norm of film acting. Generations of Tamils learnt to appreciate the beauty and power of the Tamil language because Sivaji Ganesan breathed new life into it.

Sivaji was no stranger to Sri Lanka. His movies ran to packed houses in the island. Several of his films were adapted and remade in Sinhala. Substantial portions of Pilot Premnath and Mohanapunnagai were shot in Sri Lankan locales with Sri Lankan artists Malini Fonseka and Geetha Kumarasinghe in the lead female roles.

Russellfcv
27th October 2013, 03:58 PM
ANOTHER MILESTONE OF NADIGAR THILAGAM - THIS TIME A USED BOOK OF HIM IS SELLING FOR MORE DOLLARS THAN THE NEW BOOK. WATCH YOURSELF !

http://www.amazon.com/Roopa-Swaminathan/e/B001ICKT4Q/ref=ntt_athr_dp_pel_pop_1

Russellfcv
27th October 2013, 04:30 PM
A song specifically for useless guys !!
http://www.youtube.com/watch?v=juXYcHRt934

vasudevan31355
27th October 2013, 05:57 PM
Malai malar 26-10-2013

http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/15b3ffc8-1e47-4e65-97d7-af5793dc712e_zps1710fd8f.jpg (http://s812.photobucket.com/user/adithya961999/media/sivaji%201/15b3ffc8-1e47-4e65-97d7-af5793dc712e_zps1710fd8f.jpg.html)

http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/fgyhujik_zpsfd3db1b6.jpg (http://s812.photobucket.com/user/adithya961999/media/sivaji%201/fgyhujik_zpsfd3db1b6.jpg.html)

vasudevan31355
27th October 2013, 06:37 PM
இன்றைய தினமலர் வாரமலர்.

http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/Varamalar-27-10-2013-Moviezzworld_zps7d1033b0.jpg (http://s812.photobucket.com/user/adithya961999/media/sivaji%201/Varamalar-27-10-2013-Moviezzworld_zps7d1033b0.jpg.html)

http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/2_zps5c08648c.jpg (http://s812.photobucket.com/user/adithya961999/media/sivaji%201/2_zps5c08648c.jpg.html)

Murali Srinivas
28th October 2013, 12:51 AM
இரு மலர்கள் -இடைவேளைக்கு பிறகு - ஒரு மீள் பார்வை - Part I

ஐந்து ஆறு நாட்களுக்கு முன் தொலைக்காட்சிகளில் இந்த வார நடிகர் திலகத்தின் படங்களின் பட்டியலை பதிவிட்டிருந்தார் ராகவேந்தர் சார். அதில் சன் லைஃப் டிவியில் இரு மலர்கள் என்று பார்த்தவுடன் பயங்கர சந்தோசம். 26-ந் தேதி சனியன்று இரு மலர்கள் என்று இருந்தது. இதற்கு முன்பு Z தமிழ் டிவியிடம் இந்த ஒளிப்பரப்பு உரிமை இருந்தது. அவர்கள் காலை 10 மணி அல்லது பகல் 2 மணிக்கு ஒளிப்பரப்பிக் கொண்டிருந்தார்கள். ஆகவே பார்க்கவே முடியவில்லை. இப்போது சன் லைஃப் தொலைகாட்சியில் வருகிறது என்றவுடன் அதுவும் மாலை 7 மணிக்கு எனும்போது பார்க்கலாமே என்ற ஆசை.வீட்டில் டிவிடி இருக்கிறது. இருந்தாலும் ஆசை.

25-ந் தேதி வெள்ளி மாலை சுமார் 7.10 மணிக்கு முரசு தொலைக்காட்சியை வைத்தபோது வெள்ளி மணி ஓசையிலே பாடல் காட்சி. ரசித்துப் பார்த்த்து விட்டு அடுத்த பாட்டு என்னவென்று பார்த்தால் மகராஜா ஒரு மகராணி பாடல். உடனே புரிந்து விட்டது ஒரு படப் பாடல்கள் வரிசையில் இரு மலர்கள் பாடல்களை போடுகிறார்கள் என்று. வெளியே போகும் வேலையை தள்ளி வைத்து விட்டு பாடல்களை பார்க்க தொடங்கினேன். சன் லைஃபில் மறு நாள் இந்தப் படம் என்பதால் போட்டிக்கு போடுகிறார்கள் என யூகித்துக் கொண்டேன். அன்னமிட்ட கைகளுக்கு, கடவுள் தந்த இரு மலர்கள் மற்றும் மன்னிக்க வேண்டுகிறேன் சோக வடிவம் ஆகியவையும் பார்த்து விட்டு தெய்வ செயல் திரைப்படம் ஆரம்பித்தவுடன் வெளியே கிளம்பி சென்றேன். மாதவி பொன் மயிலாளும் மன்னிக்க வேண்டுகிறேனும் நான் பார்க்க ஆரம்பிக்கும் முன்னரே முடிந்து விட்டிருந்தன.

மீண்டும் வீட்டிற்கு வரும்போது 9 மணி. அப்போது சன் லைஃப் தொலைக்காட்சியை போட்டவுடன் ஷாக். காரணம் இரு மலர்கள் அதில் ஓடிக் கொண்டிருக்கிறது. ராகவேந்தர் சார் போட்ட பட்டியலில் தேதி மாறிவிட்டது என்பது தெரிந்தது. ஏன் முரசு தொலைக்காட்சி ஒரு படப் பாடல்களாக இந்தப் படத்தை ஒளிப்பரப்பியது என்பதும் புரிந்தது.

அப்போது முதல் அதாவது மகராஜா ஒரு மகராணி பாடல் காட்சியிலிருந்து முடிவு வரை ஒரு மணி நேரமும் படம் பார்த்தேன். ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் படம் புதிதாகவே இருக்கிறது. எந்த வித சலிப்பும் இல்லாமல் தெளிந்த நீரோடை போல் படம் ஓடுகிறது.

இத்தனைக்கும் நடிகர் திலகம் மட்டுமே dominate செய்யும் திரைக்கதை இல்லை. பத்மினி மற்றும் விஜயா இருவருக்கும் சம வாய்ப்பு. அதை மூவருமே குறைவில்லாமல் செய்திருக்கின்றனர் என்பதுதான் சிறப்பே.

பத்மினியை பொறுத்தவரை அவரது பாத்திரம் மற்ற இருவரையும் விட சற்றே சிக்கலானது. தவறு எதுவும் செய்யாமலேயே குற்றம் சாட்டபப்டும் ஒரு விசித்திர சூழல். முன்னாள் காதலனுக்கு தன்னை ஏமாற்றி விட்டாள் என்ற கோபம். அவன் பெண் குழந்தைக்கோ சரியான விவரம் புரியாத போதினும் தன் தந்தைக்கும் தாய்க்கும் நடுவில் வருகிறாள் என்ற கோபம், வேலை செய்யும் பள்ளியின் நிர்வாக குழு உறுப்பினருக்கோ அவள் தன்னை விரும்பவில்லை என்ற கோபம். இதற்கு நடுவில் தன்னை நம்பினாலும் உதவி செய்ய முடியாத நிலையில் இருக்கும் பள்ளி முதல்வர் [அவளின் முன்னாள் ஆசிரியரும் கூட] இதற்கு மேலும் ஒரு தர்மசங்கடமாக தன்னை மூத்த சகோதரியாக எண்ணி அந்தரங்க விஷயங்களையெல்லாம் கூட சொல்லும் முன்னாள் காதலனின் இந்நாள் மனைவி. இப்படிபட்ட சூழலில் வாழும் உமா என்ற அந்த பெண்ணை சரியாக சித்தரிப்பதில் நாட்டிய பேரொளி வெற்றியே பெற்றிருக்கிறார். இரண்டு காட்சிகளை குறிப்பிடலாம். தன் கணவன் தன்னிடம் எத்துனை பிரியம் வைத்திருக்கிறான் தன்னிடம் எப்படியெல்லாம் நடந்துக் கொள்வான் என்பதை காதலனின் மனைவி சொல்லும்போது தான் அடைய வேண்டியதை அனுபவித்திருக்க வேண்டியவற்றை எல்லாம் இழந்து விட்டோமே அவற்றையெல்லாம் இந்த பெண் வாயிலாக கேட்க வேண்டியிருக்கிறதே என்ற அந்த வேதனையை நன்றாக வெளிப்படுத்தியிருப்பார். மற்றொரு காட்சி என்னதான் மனம் கட்டுப்பாடாக இருந்தாலும் பழைய காதலனை மீண்டும் சந்தித்தவுடன் மனதில் ஏற்படும் சலனத்தை காட்டும் காட்சி. தெருவில் நடந்து செல்லும்போது பின்னாலிருந்து கார் வந்து நிற்க [அதற்கு முன்பும் இரண்டு முறை காதலனை காரில் வைத்தே சந்தித்திருப்பார்] கண்கள் ஆவலோடு காரினுள்ளில் பார்க்க காதலனின் மனைவியை பார்த்ததும் சட்டென்று ஏற்படும் ஏமாற்றம்! அதை அவர் கேட்கும் கேள்வியிலேயே வெளிப்படுத்துவார் [ஓ, நீங்களா?].

நாட்டியப் பேரொளி இப்படியென்றால் புன்னகை அரசி வேறு விதமாக ஸ்கோர் செய்வார். இரு மலர்கள் விமர்சனத்தை இதே திரியில் முன்பே நான் எழுதியபோதும் சொல்லியிருக்கிறேன். இந்தப் படத்தில் விஜயா ஒரு surprise package! ஒரு வேளை பிற்காலங்களில் அளவுக்கு அதிகமாகவே என்னங்க என்னங்க என்று அலறும் விஜயாவைப் பார்த்தோம் என்பதால் கூட இந்த இயல்பான விஜயாவை ரசிக்க முடிகிறது. கணவனே உலகம் என்று வாழும் அந்த சாந்தி என்ற மனைவியை கச்சிதமாக் கண் முன்னே கொண்டு நிறுத்தியிருக்கிறார். கணவனாகவே இருந்தாலும் ஒரு சில நெருக்கமான தருணங்களில் ஏற்படும் அந்த வெட்கம் அதிலும் அது போன்ற ஒரு சூழல் குழந்தை தங்களுக்கு முன்னால் நிற்கும் நிலையில் ஏற்படும்போது தோன்றும் ஒரு தர்மசங்கடம் கலந்த நாணம் இவற்றையெல்லாம் மகராஜா ஒரு மகராணி பாடலில் நன்றாகவே வெளிப்படுத்தியிருப்பார்.

தன கணவனின் முன்னாள் காதலிதான் தன் குழந்தையின் டீச்சர் என்ற உண்மை தெரியாமலே அவரிடம் நெருங்கி பழகுவதும் தனக்கும் தன கணவனுக்கும் இடையில் உள்ள நெருக்கத்தை வெளிப்படுத்துவதுமான அந்த innocent மனோநிலையை அழகாய் செய்திருப்பார்.கல்யாணம் ஆன புதுசிலேதான் ஆண்கள் கணவன் மாதிரி நடந்துப்பாங்க கல்யாணம் ஆன கொஞ்ச நாளிலியே அவங்களும் நமக்கு ஒரு குழந்தை மாதிரி ஆயிடுவாங்க என்று தங்கள் அன்னியோனியத்தை சொல்லும் போதும் சரி, எங்க கல்யாண போட்டோவை பாருங்க நாந்தான் ரொம்ப சந்தோஷமாக இருப்பேன், ஆனா அவர் முகத்திலே அந்தளவிற்கு சந்தோசம் இருக்காது என வெகுளியாக உண்மையை போட்டு உடைக்கும் போதும் நன்றாகவே impress செய்வார்.

இவர்கள் இருவருமே இப்படியென்றால் நடிகர் திலகத்திற்கு கேட்கவா வேண்டும்? மகராஜா பாடலில் அவர் இளமை துள்ளலுடன் அசத்தியிருப்பார். பல்லவி முடிந்தவுடன் மகளுடன் சேர்ந்து ட்விஸ்ட் ஆடும் அழகு, வேடிக்கை பார்க்கும் மனைவியை ஆட அழைக்கும் குறும்பு, முதல் சரணத்தில் மலர்களெல்லாம் இவளுக்கென்றே மாளிகை அமைத்தம்மா என்ற வரிகளின் போது ஒரு பக்கம் தோளை சற்றே பின்னால் சாய்த்து ஒரு கையை மட்டும் வயிற்றிலிருந்து முகம் வரை படிப்படியாக உயர்த்தி மாளிகை அமைத்தம்மா என்று காட்டும் ஸ்டைல் போஸ், மனைவியை அணைத்துக் கொண்டு ஆடும் ஸ்டெப்ஸ், ஒரு தம்பி பாப்பா வேண்டும் என்று மகள் பாடியவுடன் உடனே மனைவியை பார்க்கும் அந்த romantic look, பொண்ணு என்ன சொல்றா பாரு அதை செயல்படுத்திடலாமா என்ற வார்த்தைகளை முகத்திலேயே காட்டும் அந்த பாவம், பெண் கேட்டதற்கு "ராஜாவிற்கும் இது போல் ஆசை நாள்தோறும் இருக்குதம்மா" என்று பதில் சொல்லும் குறும்பு, பின்னியிருப்பார். அதே போல் ஆபிஸ்லிருந்து வீட்டிற்கு வந்தவுடன் மனைவியை இழுத்துக் கொள்ளும் அந்த இளமை துள்ளல். பாத்திரத்தின் பெயரான சுந்தர் என்பதற்கேற்ப ஆளும் "சுந்தர்" ஆகவே இருப்பார்.ஆனால் இந்த துள்ளல எல்லாம் பத்மினியை பார்க்கும் வரைதான்.

(தொடரும்)

அன்புடன்

Murali Srinivas
28th October 2013, 01:00 AM
இரு மலர்கள் -இடைவேளைக்கு பிறகு - ஒரு மீள் பார்வை - Part II

முதலில் காரில் இருந்தவாறே rear view mirror-ல் பத்மினியை பார்த்தவுடன் ஏற்படும் அந்த சந்தோசம், உடனே அதுவே கோபமாக மாறுவதை சில வினாடிகளுக்குள் காட்டுவதற்கு நடிகர் திலகத்தை விட்டால் யார் இருக்கிறார்கள்! வீட்டில் வந்து மகளுக்கு tuition எடுக்கும் முன்னாள் காதலி, தன வாழ்க்கை போன திசையைப் பற்றி பாட அதற்கு ஆதரவாக தன் மனைவியும் பாட ஒன்றுமே சொல்லாமல் மனைவி சொல்லுவதையெல்லாம் ஊம் மட்டும் போட்டு கேட்பது, பிறகு கூண்டுக்குள்ளே இருக்கிற புலி பார்க்க அழகாத்தான் இருக்கும், பக்கத்திலே போய் பார்த்தால்தான் உண்மை குணம் தெரியும் என்று crude ஆக கமன்ட் அடிப்பதில் ஆரம்பிக்கும்

அடுத்த காட்சிதான் highlight-களில் ஒன்றான காட்சி. மகளையும் கூட்டிக் கொண்டு அவளது டீச்சரும் தன் முன்னாள் காதலியுமான உமாவை சந்திக்க போகும் காட்சி. தன்னை சற்றும் எதிர்பார்க்காத முன்னாள் காதலியை வார்த்தைகளிலே குத்திக் கிழிக்க வேண்டும் என்ற வெறியோடு ஆத்திரத்தின் உச்சியில் நிற்கும் மனதோடு செல்லும் அவர் முதலில் ஆரம்பிக்கும் போது சாதாரணமாக ஆரம்பிப்பார். வீட்டிற்கு வந்தவங்களை வரவேற்கனும் என்கிற மரியாதை கூட உங்க டீச்சருக்கு தெரியலை என்பார்.பின்பு பத்மினியின் பக்கத்தில் போய் நேத்து என் பொண்ணுக்கு ஒரு பாட்டு சொல்லிக் கொடுத்தீங்களே அது ரொம்ப பிரமாதம் என்ற குத்தல். இந்த பெண்களுக்கு கல்யாணம் பண்ணிக்க போறவன் பணக்காரனாக இருக்கணும், கார் பங்களா அந்தஸ்து இதெல்லாம் இருக்கணும் அதோடு கொஞ்சம் இளிச்சவாயனாவும் இருக்கணும் இல்லே என்ற sarcasm, தொடர்ந்து "பாவம் அந்த பொண்ணுக்கு தான் காதலிச்ச ஏழை வாலிபன் பிற்காலத்திலே பெரிய பணக்காரனாக போறான்கிறது தெரியாது. என்ன செய்யறது நாம நினைக்கிறதெல்லாம்தான் நடக்கிறதில்லையே" என்று அடுக்கடுக்காய் குற்றம் சுமத்தி பிறகு குரலை உயர்த்தி " ஆமா உன்னை கல்யாணம் செஞ்சுக்கிறதா இருந்த அந்த பணக்கார வாலிபன் என்ன ஆனான். உன்னை மாதிரியே வேற பணக்கார பொண்ணை தேடி போயிட்டானா ஏன் இப்படி பட்ட மரம் மாதிரி நிக்கறே" என்று சிரிக்க ஆரம்பித்து அது முடியாமல் உடைந்து அழுவாரே அந்த 5 நிமிடத்தில் ஒரு நடிப்பு சாம்ராஜ்ஜியத்தை நம் கண் முன்னே நடத்தி காட்டுவார்.முத்தாய்ப்பாக தன் பெண், தான் பேசியதையெல்லாம் கேட்டு விட்டாள் என்று தெரிந்தவுடன் ஒன்றுமே பேசாமல் மெளனமாக படியேறி கிழே கிடக்கும் சிகரெட் லைட்டரை எடுத்துக் கொண்டு பெண்ணை கையை பிடித்துக் கூட்டிக் கொண்டும் போகும்போது காட்டும் அந்த உடல் மொழி. நடிகர் திலகத்தின் உணர்சிகரமான படங்களை பார்க்கும்போதெல்லாம் இது போன்ற காட்சிகள் வராதா என்று என்னை ஏங்க வைத்ததில் இந்தக் காட்சிக்கு பெரிதும் பங்குண்டு.

அன்றிரவு வீட்டில் சரியாக சாப்பிடமால் அடம் பிடிக்கும் பெண்ணிடம் அப்பாக்கு முத்தம் கொடுத்து விட்டு போ என்று மனைவி சொல்ல தயங்கி நிற்கும் மகளைப் பார்த்து "போ" என்று ஒற்றை சொல்லை சொல்லும் விதம், மனைவிக்கும் முன்னாள் காதலிக்கும் நடுவில் மனசு கிடந்து அல்லாடும் அந்த தவிப்பை காட்சிக்கு காட்சி பார்க்க முடியும். முன்னாட்களில் இருவரும் சந்தித்த மலை உச்சியில் மீண்டும் பழைய காதலியை சந்தித்து தன் மனதவிப்பை கொட்டும் அந்த காட்சி. அப்போதும் கூட ஆத்திரம் அடங்காமல் "உன்னை பிரிஞ்சப்பறம் உயிரோடு இருந்ததுக்கு காரணமே என்னிக்காவது உன்னை சந்திசேன்னா என் கையாலேயே உன் கழுத்தை நெரிச்சு கொல்லனும்னு இருந்தேன்" என்று பொங்குவது, திடீரென்று அங்கே வரும் அசோகன் இவர்கள் பேசிக் கொண்டிருப்பதை வேறுவிதமாக சித்தரிக்க மனதில் இருக்கும் கோபத்தையெல்லாம் அசோகனின் முகத்தில் அறையும் அந்த அறையில் காண்பிப்பது என நவரசம் காட்டுவார்.

மனம் நிலைக் கொள்ளாமல் அலை பாய வீட்டுக்குள் வரும் அவர் மனைவியையே உற்று பார்க்க என்ன அத்தான் புதுசா பாக்கிற மாதிரி பாக்கறீங்க என்று கேட்க ஏன் நான் உன்னை நான் பார்க்க கூடாதா என்று கேட்பவரிடம் இன்னிக்கு என்ன நாள் தெரியுமா என்று மனைவி கேட்க சற்று யோசித்து இன்னிக்கு நமக்கு கல்யாணமாகி 7 வருஷம் ஆகுதில்லே என்று சொல்லும்போதே முக்கியமான நாளை மறந்து விட்டோமே என்ற குற்ற உணர்ச்சியை முகத்திலும் குரலிலும் கொண்டு வருவார். இங்கே வா என்று மனைவியை அழைத்து வந்து உட்கார் உட்கார் என்று படுக்கையை தட்டிக் காட்டும் அந்த சைகை, நீ என் மேலே அன்பு வைச்சிருக்கிற அளவுக்கு நான் உன் மேலே அன்பு வைக்கலே என்னை மன்னிச்சிடு என்று மனைவியின் கைகளை கண்ணில் ஒற்றிக் கொண்டு உன்கிட்டே நிறைய சொல்லனும்னு நினைக்கிறேன் ஆனா" என்று தன் நெஞ்சை தொட்டுக் காட்டியவாறே "என்னால சொல்ல முடியல" என்று மனைவியின் தோளில் முகம் புதைத்து விம்மும் போது அந்த நடிப்பை என்னவென்று சொல்லுவது?

இறுதியாக படுக்கையறையில் மனைவிதான் நிற்கிறாள் என்று நினைத்து உண்மைகளையெல்லாம் கொட்டிவிட்டு தற்செயலாக கண்ணாடியில் தெரியும் காதலியின் முகம் பார்த்தவுடன் திகைத்து ஏதோ பேச தொடங்கி காதலியால் தடுக்கப்பட்டு அவள் அந்த அறையை விட்டு வேகமாக விலகி சென்றதும் மேஜையில் இருக்கும் காப்பி டம்பளரையும் தன் பழைய காதலி 7 வருடங்களுக்கு முன்பு எழுதிய கடிதத்தையும் பார்த்துவிட்டு என்ன நடக்கிறது என்பதையே உடனே புரிந்துக் கொள்ள முடியாமல் மெதுவாக அந்த சூழலின் உண்மை அவரில் இறங்கும் அந்த நொடியை அவர் முகம் காட்டும் விதம் டாப் கிளாஸ்.

ACT இயக்கத்தில் வந்த மிக சிறந்த படங்களில் இரு மலர்களுக்கு முதல் மூன்று இடங்களில் ஒரு இடம் நிச்சயம். வெகு இயல்பான திரைக்கதை செயற்கைத்தனம் கலக்காத வசனங்கள் [ஆரூர்தாஸ்]. மனைவி மற்றும் காதலி இவர்களின் point of view-வில் இருந்து எழுதப்பட்ட வசனங்கள். எனக்காக தன் வாழ்க்கையை விட்டுக் கொடுத்த பொண்ணு திரும்ப வந்தா அவகிட்ட என் கணவரை திருப்பி ஒப்படைசுடனும்னு நினைச்சிக்கிட்டிருந்தேன் என்று விஜயா சொல்ல இடைமறிக்கும் பத்மினி ஆனா அது அவ்வளவு சுலபம் இல்லைன்னு இப்போ தோணுதிலே என்று மடக்கும் இடம் வசனத்தின் இயல்புக்கு ஒரு சின்ன உதாரணம்.

இயக்கத்திலும் ACT நன்றாகவே செய்திருப்பார். தாத்தாவுக்கு குட் நைட் சொல்லிட்டு போய் படு என்று சொல்லப்பட, குழந்தை ரோஜாரமணி நாகையாவின் மாலை போடப்பட்ட புகைப்படத்திற்கு குட் நைட் சொல்லுவதை வைத்தே நாகையா பாத்திரம் இறந்து விட்டார் என்பதை வெளிப்படுத்துவது, கிளைமாக்ஸ் காட்சிக்கு முன்னால் வரக்கூடிய lead காட்சியில் படுக்கையறைக்கு அழைத்து வரும் விஜயாவிடம் வேண்டாமே ஹாலிலேயே இருக்கலாமே என்று மறுக்கும் பத்மினி. இதன் பின்னணியில் இருக்கும் லாஜிக் [படுக்கையறை என்பதனால்தான் நாயகன் தன் மனைவி என்று நினைத்து பேசுவான்], காட்சியின் முடிவில் காபி டம்பளரும் கடிதமும் மேஜையில் இருப்பதை காட்டுவதன் மூலம் மனைவி அனைத்து உண்மைகளையும் தெரிந்துக் கொண்டு விட்டாள் என்பதை நாயகனுக்கும் பார்வையாளர்களுக்கும் உணர்த்துவது என்று ACT யின் சிறப்பான இயக்கத்திற்கு நிறைய காட்சிகள்.

அன்று பார்த்த நான்கு பாடல் காட்சிகளை பற்றியும் சொல்ல வேண்டும். வெள்ளி மணி ஓசையிலே [இது முரசில் வந்தது]. படம் முழுக்க மெல்லிசை மன்னர், வாலி மற்றும் இசையரசி ஆகியோர் கிளப்பியிருப்பார்கள். இந்தப் பாடலில் முதல் சரணத்தில் வரும வரிகள்

பிறந்து வந்தேன் நூறு முறை

மன்னவன் கை சேரும்வரை

தவம் இருந்தேன் கோடி முறை

தேவன் முகம் காணும் வரை

அதிலும் அந்த மூன்றாவது வரியான தவம் இருந்தேன் கோடி முறை என்பதை இசையரசி பாடும்போது ஆஹா!

மகராஜா பற்றி சொல்லி விட்டேன்.

அடுத்து கடவுள் தந்த இரு மலர்கள் பாடல். இதில் வாலி, எம்எஸ்வி, சுசீலாம்மா மற்றும் ஈஸ்வரி ஆகியோர் கூட்டணி ஒரு கலக்கு கலக்கியிருப்பார்கள்.முதல் சரணத்தில்

ஆற்றில் வந்து சேர்ந்ததம்மா

அலைகள் கொண்டு போனதம்மா

என்ற வரிகளில் இசையரசி கொடி நாட்டுவர் என்றால் அடுத்த சரணத்தில்

தலையில் இறைவன் சூடிக் கொண்டான்

தானே அதனை சேர்த்துக் கொண்டான்

குழலில் சூடிய ஒரு மலரும்

கோவில் சேர்ந்த ஒரு மலரும்

என்ற வரிகளைப் பாடி ஈஸ்வரி கோல் அடிப்பார்.

இறுதியாக அன்னமிட்ட கைகளுக்கு. இந்த பாடலைப் பற்றி பல வருடங்களுக்கு முன்பு சாரதா அற்புதமாக எழுதியிருந்தார். அது இப்போது வாசிக்க கிடைக்கிறதா என்று தெரியவில்லை.

இதிலும் இசையரசியின் சாம்ராஜ்ஜியம்தான். உணர்சிகரமான பாடல். கண்ணீரும் விம்மலும் நிறைந்த பாடல். அனாயசமாக பாடியிருப்பார் சுசீலாம்மா.

கைவிளக்கை ஏற்றி வைத்தேன் கோவிலுக்காக

என் தெய்வத்தின் மேல் எனக்கு இருக்கும் காதலுக்காக

என்று கணவனின் மேல் இருக்கும் காதலை சொல்லுபவர் தான் அந்த இடத்தை விட்டு நீங்கியவுடன் வேறொரு பெண் வரப் போகிறாள் என்ற நிலையை குரல் விம்ம

ஒரு தாய் வருவாள் மகளே உன் காவலுக்காக என்று சரணத்தை நிறைவு செய்யும்போது மனதை என்னவோ செய்யும்.

அதே போன்று இரண்டாவது சரணத்தில் .

தாய்க் குலத்தின் மேன்மையெல்லாம் நீ சொல்ல வேண்டும்

என் தலை மகளே உன் பெருமை ஊர் சொல்ல வேண்டும்

என்று மகளுக்காக பாடும் ஒரு தாயின் குரலைத்தான் இசையரசியின் குரலில் கேட்க முடியும்.

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.படத்தின் முதல் பகுதியை அன்று பார்த்திருந்தால் இன்னும் இரண்டு பார்ட் எழுதியிருப்பேன் என நினைக்கிறேன். மனதிற்கு மிகவும் நெருக்கமான படம். பலருக்கும் அதே போன்றே உணர்வை கொடுததனால்தான் அந்த தீபாவளிக்கு வந்த அனைத்து mass மசாலா entertainers போட்டியையும் சமாளித்து 100 நாட்கள் ஓடி வெற்றி கண்டது.

ஆயிற்று, இன்னும் நான்கு நாட்கள் போனால் நவம்பர் 1 வந்து விடும், நாற்பது ஆறு ஆண்டுகள் கடந்து விடும். இருப்பினும் இப்போதும் இந்தப் படம் இவ்வளவு உயிர்துடிப்பாக இருக்கிறது என்றால் அதுதான் அந்த படத்தின் சிறப்பு.

ACT அவர்களிடம் முன்பு பேசிக் கொண்டிருந்தபோது அவரிடம் ஒரு கேள்வி கேட்டேன். சார் ஒரு மூன்று படங்கள் மிகுந்த போட்டிக்கிடையே அதாவது மற்றொரு நடிகர் திலகத்தின் படத்தோடயே போட்டி போட்டு ரிலீஸ் செய்தீர்கள்.இதற்கும் போட்டி போட்ட படங்கள் உங்கள் படங்களை விட அதிக எதிர்பார்ப்பையும் வெற்றி பெறுவதற்கான மூலக்கூறுகளை அதிகமாக கொண்ட படங்கள்.அப்படியிருந்தும் எப்படி சார் தைரியமாக ரிலீஸ் செய்தீர்கள் என்று கேட்டபோது ACT சிரித்துக் கொண்டே " என் சரக்கு முறுக்கு" என்றார்.

அன்புடன்

PS 1 : நடிகர் திலகத்தின் மற்றொரு படத்துடன் போட்டி போட்ட ACT யின் படங்கள்

இரு மலர்கள் - போட்டி படம் ஊட்டி வரை உறவு - Nov 1,1967

எங்கிருந்தோ வந்தாள் - சொர்க்கம் - Oct 29,1970.

பாரத விலாஸ் -24.03.1973, ராஜ ராஜ சோழன் - 31.03.1973.

PS 2: என் சிபாரிசினால் படம் பார்த்த என் அலுவலக colleague படம் பார்த்துவிட்டு என்னிடம் கேட்ட கேள்வி " சார், இந்தப் படத்தோட உல்டாதான் சில்லென்று ஒரு காதல் போலிருக்கு" என்றார்.

Gopal.s
28th October 2013, 07:25 AM
முரளி ,

தோய்ந்து எழுதுவது என்பார்களே, அது இதுதான்.

இரு மலர்கள் படத்தை பொறுத்த வரை இன்னொரு நெஞ்சில் ஓர் ஆலயம்.

அவரவர்களின் கோணத்தில் உணர்ச்சி தெறிப்பு , வெடிப்பு இவை அற்புதமாக பதிவான படம். என்னதான் பத்மினி,கே.ஆர்.விஜயா மாஞ்சு மாஞ்சு நேர் நடிப்பை கொடுத்து ஸ்கோர் செய்ய பார்த்தாலும்,நடிகர்திலகத்தின் உளவியல் பார்வை கொண்ட situation சார்ந்த உணர்ச்சி cocktail மற்றவற்றை அலை மாதிரி அடித்து சென்று விடும்.

கண்ணதாசன்-எம்.எஸ்.வீ stale ஆக போன நேரத்தில் வாலி-எம்.எஸ்.வீ இணைவு புத்துணர்வு தந்தது.(நன்றி ஏ.சி.டி)
எனக்கு பிடித்தவை மன்னிக்க, அன்னமிட்ட.

முன்னரைத்த காதலை முடிவுரையாய் தர சொல்லும் பாடலில் செல்லமாய் நடிகர்திலகம் உந்தன் ஆசையை தூண்டுகிறேன் என்று மார்பில் விரல் வைக்க ,நாணும் நாட்டிய பேரொளியின் response ???அடடா????

சுசிலாவின் குரலில் சொன்னது நீதானா, அன்னமிட்ட கைகளுக்கு, ஒரு நாளிரவு பகல் போல் நிலவு பாடல்கள் என் மனதை கீறி கண்ணீர் துளிக்க வைத்து விடும். இந்த முறை எம்.எஸ்.வீ சார் வீட்டு பேரன் வரவேற்பில், சுசீலாவிடம் ஆசி பெற்றது எனக்கு கிடைத்த மோட்ஷம்.

Gopal.s
28th October 2013, 07:36 AM
நேற்றுதான் ஒரு re -make படத்தின் பாடல்களை கேட்டு கொண்டிருந்தேன். அந்த கால நினைவலைகள் திரும்பியது.

எஸ்.டீ.பர்மன்,ஆர்.டீ.பர்மன்,சங்கர்-ஜெய்கிஷன்,லட்சுமி-பியாரி போன்றவர்களின் இசையமைப்பில் வந்த படங்கள் மொழி மாற்றம் அடையும் போது, எம்.எஸ்.வீ அவர்களின் சொதப்பலால்தான் அந்த படங்கள் எதிர்பார்த்த வெற்றி இலக்கை எட்ட முடியவில்லை.

பாவ மன்னிப்பு,பாசமலர்,நெஞ்சில் ஓர் ஆலயம்,ஆலயமணி என்று எம்.எஸ்.வீ - டி.கே.ஆர் இணைவில் வந்து இசை புரட்சி நடத்தி வெளி மாநில இசையமைப்பாளர்களை திணற வைத்த காலம் எங்கே? துரோகம் செய்து ,ஒரு அற்புதமான தமிழ் இணையை கழட்டி விட்டு ,இளைய ராஜா வரும் வரை எழுபதுகளில் தமிழ் பட இசையையே தரம் இறக்கி வைத்திருந்த கெட்ட காலம் எங்கே?

வினை விதைத்தவன் மட்டும் வினை அறுக்கவில்லை. தமிழர்கள் நாமும் 71-76 ,தலையெழுத்தே என்று இந்தி இசை கேட்டு கொண்டிருந்தோம்.

RAGHAVENDRA
28th October 2013, 07:45 AM
Nadigar Thilagam films in TV Channels 28.10.2013 – 02.11.2013


J MOVIES

THIRUPPAM – 28.10.2013 – 5 PM
BANDHAM – 29.10.2013 – 5 PM
RAJA MARIYADHAI – 30.10.2013 – 5 PM
MANNAVARU CHINNAVARU – 31.10.2013 – 5 PM
JALLIKKATTU – 01.11.2013 – 5 PM
DHAVANI KANAVUGAL – 02.11.2013 – 5 PM


MEGA 24

RAJA BHAKTHI – 30.10.2013 – 2.30 PM
UTHAMA PUTHIRAN – 31.10.2013 – 2.30 PM
THIYAGAM – 30.10.2013 – 6 PM
NEETHIYIN NIZHAL – 31.10.2013 – 6 PM


VASANTH TV

VASHKKAI – 31.10.2013 – 2 PM


AS MURALI SIR EXPRIENCED, THE PROGRAMMES GIVEN ABOVE ARE SUBJECT TO LAST MINUTE CHANGE. INFO COMPILED FROM WEBSITE.

Gopal.s
28th October 2013, 07:56 AM
நேற்றைய கவர்ச்சி கன்னிகள் அம்மா,அத்தை ரோல் களில் வர கூடாது என்று அவசர சட்டம் பிறப்பிக்க பட வேண்டும். நான் ரத்த கையெழுத்திட தயார்.

சத்தியமா சத்திய ப்ரியா பதிவு டாப் டக்கருதான்.

Gopal.s
28th October 2013, 07:58 AM
வாசு,
உன்னுடைய சண்டை,கதாநாயகியர்,இயக்குனர் ,ஆடை தொடர்கள் இந்த திரியில் நெய்யாக எரிய வைத்து ஒளி கொடுக்கிறது. நன்றி.

Gopal.s
28th October 2013, 08:01 AM
சரஸ்வதி லட்சுமி ,ரவி சார் lower down batsman ஆக வந்து செஞ்சுரி partnership அடைந்து விட்டார்கள். தொடருங்கள்.ரசிக்க கூடிய பதிவுகள்.