PDA

View Full Version : Nadigar Thilagam Sivaji Ganesan Part 11



Pages : 1 [2] 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16

RAGHAVENDRA
6th June 2013, 09:31 PM
Awards for 1967

Best Music Director for the year 1967

K.V. MAHADEVAN = for Kandhan Karunai

http://iffi.nic.in/Dff2011/15th_nff/15th_nff_1967_img_3.jpg

http://iffi.nic.in/Dff2011/15th_nff/15th_nff_1967_img_30.jpg

RAGHAVENDRA
6th June 2013, 09:36 PM
REGIONAL AWARDS - FEATURE FILM FOR THE YEAR 1968

http://iffi.nic.in/Dff2011/16th_nff/16th_nff_1970_img_0.jpg

THILLANA MOHANAMBAL

http://iffi.nic.in/Dff2011/16th_nff/16th_nff_1970_img_2.jpg

http://iffi.nic.in/Dff2011/16th_nff/16th_nff_1970_img_32.jpg

RAGHAVENDRA
6th June 2013, 09:37 PM
IMAGES IN ALL THE ABOVE AWARD POSTINGS REPRODUCED FROM AND COURTESY - WEBSITE : http://dff.nic.in/NFA_archive.asp

vasudevan31355
6th June 2013, 10:44 PM
https://encrypted-tbn1.gstatic.com/images?q=tbn:ANd9GcQGpwyM1g6IhY-KkmuJm_N3b3LMR3eDXyBE7Ek6fObgSMeSWga1YQ

டியர் ராகவேந்திரன் சார்,

என்னவென்று சொல்ல. காலம் முழுதும் போற்றிப் பாதுகாக்க வேண்டிய ஆவணங்களை அள்ளி வழங்கியிருக்கிறீர்கள். மங்கையர் திலகம் ஸ்டேட் அவார்ட், வீரபாண்டியக் கட்டபொம்மன் (certificate of merit) ஜனாதிபதி வெள்ளிப் பதக்கம், பாகப்பிரிவினை (ஜனாதிபதி வெள்ளிப் பதக்கம்)தெய்வப் பிறவி, பாவமன்னிப்பு, கப்பலோட்டிய தமிழன், பாசமலர் (certificate of merit), கர்ணன் (certificate of merit) திருவிளையாடல் (certificate of merit) திரை இசைத் திலகத்திற்கு கந்தன் கருணையால் கிடைத்த மரியாதை, தில்லானா மோகனாம்பாள் பெற்ற அங்கீகாரம் என அனைத்தையும் ஒரே பந்தியில் பரிமாறி தெவிட்டாத விருந்தளித்து விட்டீர்கள்.

இந்த ஒரு பதிவுக்காகவே தங்களை வாழ்நாள் முழுக்க பாராட்டலாம்.

கிடைத்தற்கரிய பதிவுகளைத் தேடி இங்கு கொணர்ந்ததற்காக என் அழுத்தமான நன்றிகள்.

Murali Srinivas
6th June 2013, 10:51 PM
வாசு சார்,

நடிகர் திலகத்தின் ராசி பற்றி நீங்கள் பதிவிறக்கம் செய்த கட்டுரையை எழுதியது யார் தெரியுமா? சாட்சாத் நமது பம்மல் சுவாமிநாதன்தான். சுவாமி நடத்தி வந்த வசந்த மாளிகை பருவ இதழில் அவர் எழுதிய கட்டுரையை இதயக்கனி விஜயன் முருகவிலஸ் நாகராஜன் பெயரில் வெளியிட்டது பத்திரிக்கை தர்மத்திற்கே விரோதமானது. இந்த சினிமா ஸ்பெஷல் இதழ் வெளிவந்ததும் இதை அவரிடமே சுட்டிக் காட்டிய போதும் ஒரு வருத்தம் கூட தெரிவிக்கவில்லை இந்த விஜயன்.என்ன செய்வது ராஜபாளயத்திலிருந்து எங்கள் சிவாஜி நடத்திக் கொண்டிருந்த விஜயனிடம் அப்போது இருந்த மனசாட்சியை இப்போது எதிர்பார்ப்பது நமது தவறுதான்.

ராகவேந்தர் சார்,

தேசிய விருதுகளின் பட்டியலும் அதில் நமது படங்கள் சிறப்பான இடம் பிடித்த விவரங்களையும் எடுத்தியம்பும் அதிகாரபூர்வ ஆவணங்களை இங்கே அளித்தமைக்கு நன்றி.

அன்புடன்

Murali Srinivas
6th June 2013, 11:58 PM
வாசு சார்,

மக்களைப் பெற்ற மகராசி ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில் அழகு.நடிகர் திலகத்தின் அந்த ஸ்டைல் போஸ் அபாரம்.

ராகவேந்தர் சார்,

தங்கப்பதுமையின் ஸ்டில் மிக நன்றாக வந்திருக்கிறது. உண்மையிலே அந்த முகத்தில் முகம் பார்க்கலாம். Filmography திரியில் படத்தின் பதிவுகள் வரும்போது இன்னமும் சிறப்பாக இருக்கும் என நினைக்கிறேன்.

அன்புடன்

vasudevan31355
7th June 2013, 07:24 AM
டியர் முரளி சார்,

நன்றி! தங்கள் மூலமாகத்தான் 'சிவாஜி ராசி' கட்டுரை காப்பி அடிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. நிஜமாகவே வருத்தமாய் இருந்தது. எல்லா வகையிலும் நம் பம்மலார் அவர்களின் பங்கு போற்றுதலுக்குரியது. அவரை மனதார வாழ்த்துவோம்.

Gopal.s
7th June 2013, 07:31 AM
என்ன திடீரென்று விக்கிலீக் உதவியால் அரசாங்கத்தின் ரகசிய ஆவணங்கள் வெளியாகிறதா என்று நடுங்கியே போனேன். வேந்தருக்கு கிடைக்காத ரகசிய ஆவணங்களா?

முரளி என்ற கௌரவ பதிவருக்கு மிக்க நன்றி.(கலைஞர் சட்ட சபை attendance போடுவது போல)

வாசு, உன் வீட்டையும்,பம்மலார் வீட்டையும் raid செய்யும் உத்தேசம். இவ்வளவு செல்வங்களையா பூட்டி வைத்துள்ளீர்கள்?

Gopal.s
7th June 2013, 07:33 AM
டியர் முரளி சார்,

நன்றி! தங்கள் மூலமாகத்தான் 'சிவாஜி ராசி' கட்டுரை காப்பி அடிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. நிஜமாகவே வருத்தமாய் இருந்தது. எல்லா வகையிலும் நம் பம்மலார் அவர்களின் பங்கு போற்றுதலுக்குரியது. அவரை மனதார வாழ்த்துவோம்.
தூரத்திலிருக்கும் நண்பரைத்தான் புரிந்து கொள்ளும் பக்குவம் இல்லை. உடனிருக்கும் நண்பரையுமா?

vasudevan31355
7th June 2013, 07:56 AM
இன்றைய அரிய நிழற்படம்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/ka.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/ka.jpg.html)

vasudevan31355
7th June 2013, 07:59 AM
தூரத்திலிருக்கும் நண்பரைத்தான் புரிந்து கொள்ளும் பக்குவம் இல்லை. உடனிருக்கும் நண்பரையுமா?

யார் சொன்னது? 'கோல்ட் ஸ்டார்' சதீஷ் அவர்களை நான் நன்கு புரிந்து கொண்டுள்ளேனே!

vasudevan31355
7th June 2013, 08:00 AM
ஒரு சிறு புதிர். தலைவர் அட்டகாசமாக சிரித்த முகத்துடன் காட்சியளிக்கும் இந்த நிழற்படம்
எந்தப் படத்திலிருந்து எடுக்கப்பட்டது? சுலபமாக இருப்பது போலத் தோன்றும். ஆனால்...

(கண்டு பிடிப்பவர்களுக்கு ஆயிரம் பொற்காசுகள் இனாம்!)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/videoplayback.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/videoplayback.jpg.html)

vasudevan31355
7th June 2013, 08:02 AM
கோ,

மோ.சு.பி.அப்படின்னு சொன்னே அடி விழும். ஜாக்கிரதை!

vasudevan31355
7th June 2013, 08:09 AM
மிக்க நன்றி கண்பத் சார். ஆச்சரியக் குறியை நீங்கள் மிக மிக ரசித்திருக்கிறீர்கள் என்பதைப் பற்றி எனக்கு துளி கூட ஆச்சரியமில்லை. அவர் மகா நடிகர் என்றால் நீங்கள் மகா ரஸிகர். நீங்கள் சொன்ன அதே உணர்வுகளை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

RAGHAVENDRA
7th June 2013, 08:32 AM
வாசு சார்,
காலையிலிருந்து ஒரே தலைவலி... காரணம் ... தாங்கள் போட்டிருக்கும் போட்டோ எந்த படம் என்று இருக்கும் கொஞ்சூண்டு மூளையைக் குழப்பிக் கொண்டிருக்கிறேன். குழம்பிக் கொண்டிருக்கிறேன் .....

RAGHAVENDRA
7th June 2013, 08:34 AM
வாசு சார் மற்றும் முரளி சார்,
தங்கள் பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி.

கோபால்,
அது ஒன்றும் ரகசிய ஆவணமும் இல்லை, ராணுவ ரகசியமும் இல்லை. அரசாங்க இணைய தளத்தில் தரப் பட்டுள்ளது. அது மட்டுமின்றி அதனைப் பதிவிறக்கம் செய்யவும் இணைப்பு வழங்கப் பட்டுள்ளது. நம் மக்களுக்கு ஒரு தகவல் ஆவணமாக இருக்குமே என்ற எண்ணத்தில் தான் இங்கே பகிர்ந்து கொள்ளப் பட்டுள்ளது. அதனுடைய இணைப்பையும் அங்கங்கே கொடுத்துள்ளேன்.

இன்னும் சில வர உள்ளன.

RAGHAVENDRA
7th June 2013, 08:39 AM
Twentieth National Awards for Excellence in Motion Picture Arts and Sciences, 1972

http://iffi.nic.in/Dff2011/20th_nff/20th_nff_1972_img_0.jpg

REGIONAL FEATURE FILMS:

Title: Pattikkada Pattanama (Tamil)
Producer: P. Madhavan
Director: P. Madhavan
Award: Cash Prize of Rs.5,000 and a Medal

http://iffi.nic.in/Dff2011/20th_nff/20th_nff_1972_img_2.jpg

http://iffi.nic.in/Dff2011/20th_nff/20th_nff_1972_img_23.jpg

vasudevan31355
7th June 2013, 08:44 AM
வாசு சார்,
கொஞ்சூண்டு மூளை

சார்! ஒத்துக் கொள்ளவே மாட்டேன். என்ன கோ!

Gopal.s
7th June 2013, 08:56 AM
சார்! ஒத்துக் கொள்ளவே மாட்டேன். என்ன கோ!
ஆஹா , பகையாளிகளாய்-பங்காளிகளாய் கோர்ட்டில் சந்தித்து கொண்டிருந்த போதும், தற்போது நண்பனாய் ,வழிகாட்டியாய் தொடரும் போதும் என்னை மிக மிக யோசிக்க வைத்த இன்னும் வைத்து கொண்டிருக்கும் "பயங்கர"மூளை யாயிற்றே? நானெப்படி ஒப்பு கொள்ள முடியும்?

vasudevan31355
7th June 2013, 09:02 AM
ஆஹா , பகையாளிகளாய்-பங்காளிகளாய் கோர்ட்டில் சந்தித்து கொண்டிருந்த போதும், தற்போது நண்பனாய் ,வழிகாட்டியாய் தொடரும் போதும் என்னை மிக மிக யோசிக்க வைத்த இன்னும் வைத்து கொண்டிருக்கும் "பயங்கர"மூளை யாயிற்றே? நானெப்படி ஒப்பு கொள்ள முடியும்?

இப்பதான் என்னோட ஒத்து வந்திருக்கே. சரி! தப்பிக்காதே! என்ன படம்னு கண்டு பிடிச்சியா?

RAGHAVENDRA
7th June 2013, 09:03 AM
1992 -

http://iffi.nic.in/Dff2011/40th_nff/40th_nff_1993_img_0.jpg

SPECIAL JURY AWARD - RAJAT KAMAL, CASH PRIZE AND A CITATION FOR SIVAJI GANESAN

http://iffi.nic.in/Dff2011/40th_nff/40th_nff_1993_img_87.jpg

http://iffi.nic.in/Dff2011/40th_nff/40th_nff_1993_img_88.jpg

Award for Best Feature Film in Tamil - THEVAR MAGAN

http://iffi.nic.in/Dff2011/40th_nff/40th_nff_1993_img_71.jpg

http://iffi.nic.in/Dff2011/40th_nff/40th_nff_1993_img_72.jpg

Award for the Best Female Playback Singer - S. Janaki for Thevar Magan

http://iffi.nic.in/Dff2011/40th_nff/40th_nff_1993_img_49.jpg

http://iffi.nic.in/Dff2011/40th_nff/40th_nff_1993_img_50.jpg

RAGHAVENDRA
7th June 2013, 09:10 AM
And here comes the highest award for contribution to Indian Cinema given by the Government of India

Dada Saheb Phalke Award 1997

http://iffi.nic.in/Dff2011/44th_nff/44th_nff_1997_img_0.jpg

http://iffi.nic.in/Dff2011/44th_nff/44th_nff_1997_img_10.jpg

http://iffi.nic.in/Dff2011/44th_nff/44th_nff_1997_img_11.jpg

http://iffi.nic.in/Dff2011/44th_nff/44th_nff_1997_img_12.jpg

Gopal.s
7th June 2013, 09:21 AM
இப்பதான் என்னோட ஒத்து வந்திருக்கே. சரி! தப்பிக்காதே! என்ன படம்னு கண்டு பிடிச்சியா?
அந்த hairstyle ,நீலவானம் அல்லது அன்னை இல்லம்.

goldstar
7th June 2013, 10:38 AM
யார் சொன்னது? 'கோல்ட் ஸ்டார்' சதீஷ் அவர்களை நான் நன்கு புரிந்து கொண்டுள்ளேனே!

Thank you Vasu sir.

goldstar
7th June 2013, 10:48 AM
ஒரு சிறு புதிர். தலைவர் அட்டகாசமாக சிரித்த முகத்துடன் காட்சியளிக்கும் இந்த நிழற்படம்
எந்தப் படத்திலிருந்து எடுக்கப்பட்டது? சுலபமாக இருப்பது போலத் தோன்றும். ஆனால்...

(கண்டு பிடிப்பவர்களுக்கு ஆயிரம் பொற்காசுகள் இனாம்!)



My guess is "Anbu Karangal".....

Subramaniam Ramajayam
7th June 2013, 10:50 AM
அந்த hairstyle ,நீலவானம் அல்லது அன்னை இல்லம்.

It should be ETHIROLI

goldstar
7th June 2013, 11:01 AM
It should be ETHIROLI

No, it cannot be "Ethiroli". In "Ethiroli" NT was very much slim.

Gopal.s
7th June 2013, 11:13 AM
கல்யாணியின் கணவன் ?

RAGHAVENDRA
7th June 2013, 11:18 AM
பச்சை விளக்கு...?

vasudevan31355
7th June 2013, 11:43 AM
ம்ஹூம்..ம்ஹூம்..ம்ஹூம்..ம்ஹூம்..

vasudevan31355
7th June 2013, 11:45 AM
ராகவேந்திரன் சார்,

ஒரு சின்ன க்ளூ. நம்மிடம் இந்தப் படம் இல்லை.

Gopal.s
7th June 2013, 11:49 AM
ஞாயிறும் திங்களும்.

vasudevan31355
7th June 2013, 11:57 AM
adap paavi!

Gopal.s
7th June 2013, 12:02 PM
பரிசு எதுவும் வேணாம். ரவி திரிக்கு வா.

vasudevan31355
7th June 2013, 12:08 PM
பிரபுராம் சார்,

தங்களின் அற்புத எழுத்துக்களில் உருவான (19th June 2009) 'காத்தவராயன்' பட ஆய்வை ரசிகவேந்தர் Filmography திரியில் மறுபதிவாக அளித்திருந்தார். நிஜமாகவே சுருக்கமாக சுவை குன்றாமல் அற்புதமாக வடிவமைக்கப்பட்ட ஆய்வு. என் நெஞ்சம் கவர்ந்த படத்தின் நெஞ்சைக் கொள்ளை கொண்ட ஆய்வு. மிக மிக ரசித்துப் படித்தேன். என் மனமுவந்த பாராட்டுக்கள்.

Gopal.s
7th June 2013, 12:11 PM
பிரபுராம் சார்,

தங்களின் அற்புத எழுத்துக்களில் உருவான (19th June 2009) 'காத்தவராயன்' பட ஆய்வை ரசிகவேந்தர் Filmography திரியில் மறுபதிவாக அளித்திருந்தார். நிஜமாகவே சுருக்கமாக சுவை குன்றாமல் அற்புதமாக வடிவமைக்கப்பட்ட ஆய்வு. என் நெஞ்சம் கவர்ந்த படத்தின் நெஞ்சைக் கொள்ளை கொண்ட ஆய்வு. மிக மிக ரசித்துப் படித்தேன். என் மனமுவந்த பாராட்டுக்கள்.
நான் திரும்பி பார்த்து மறு பரிசீலனை செய்தே ஆக வேண்டும். ரெண்டு பெரிய இடத்து recommendation . ஆனாலும் என்னோடு ஒட்டி பிறந்தது சோடை போகுமா?நான் பிறந்த தினம் ,வருடத்தில் வெளியான படத்திற்கு ,என் மனைவி பிறந்த தினத்தில் (வருடமல்ல!!!) P_ R விமரிசனம் ??? ஆச்சரியம்.காத்து விற்கும் எனக்கும் ஏதொ தெய்வீக தொடர்பு.

parthasarathy
7th June 2013, 12:22 PM
அன்புள்ள திரு. கோபால் அவர்களே,

ஆயிரம் பதிவுகள் கடந்த உங்களுக்கு ஆயிரமாயிரம் வாழ்த்துக்கள். தாங்கள் மேலும் ஆயிரக் கணக்கில் பதிவுகள் இட்டு எல்லோரையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்திட வேண்டுகிறேன்!

தங்கள் "வீரபாண்டிய கட்டபொம்மன்" பதிவு மிகவும் நுணுக்கமாக உள்ளது.

எண்பதுகளின் இறுதியில், இப்படம் சென்னையில் பெரிய அளவில் மறு வெளியீடு கண்டு "ஸ்டார்" தியேட்டரில் ஐம்பது நாட்களைக் கடந்து பின் சென்னை முழுவதும் (நாட்கள் நினைவில் இல்லை) ஓடிக் கொண்டே இருந்தது. அப்போது தான் கட்டபொம்மனை முதலில் பார்த்தேன் - அதுவும் என் பெற்றோர்கள், மனைவி, குழந்தை மற்றும் அத்தை மகன் ஆகியோருடன் - கமலா தியேட்டரில். அங்கு மட்டும் கிட்டத்தட்ட மூன்று அல்லது நான்கு வாரங்கள் வரை ஓடியது.

எனக்குத் தெரிந்து, இந்த ஒரு படத்திற்கு படம் நெடுகிலும் அரங்கத்தில் கிடைத்த வரவேற்பும், கரவொலியும் "தெய்வ மகன்" தவிர வேறு எந்தப் படத்திற்கும் தற்போது மறு வெளியீடு கண்ட "கர்ணன்" வரை கிட்டியதில்லை. தெய்வ மகன் கூட அத்தனை தரப்பட்ட பொது மக்கள் வரவேற்பைப் பெற்றதா என்று சொல்ல முடியாது. ஆனால், "கட்டபொம்மன்" அனுபவம் வேறு மாதிரியானது. படம் நெடுகிலும், பல சிறிய காட்சிகளுக்குக் கூட ஒட்டு மொத்த அரங்கும் அதிர்ந்தது என்பது தான் உண்மை - ஒரு கட்டத்தில், ஒரு தாய் (எஸ்.என். பார்வதி?) அவரது மகனை போரில் இழந்து அவரைப் பார்க்க வரும் போது நடிகர் திலகம் காட்டும் ரியாக்ஷன், "இன்பம் பொங்கும் வெண்ணிலா" பாடலின் முடிவில், ஜெமினி/பத்மினிக்கு மேல் தொங்கும் மலைப்பாம்பை சுட்டிக் காட்டி அவர்களைத் தப்புவிக்க வைத்து சொல்லும் ஒரு வித ஏளனம் கலந்த வசனம் மற்றும் நடிப்பு, இப்படி பல இடங்களின் அரங்கம் ஆர்ப்பரித்தது.

படம் துவங்கி, முடியும் வரை, ஒரு நடிகன் அவனது நடிப்பினால் மட்டுமே ஒட்டு மொத்த அரங்கத்தையும் ஒரு வித அதீத ஜுரம் மற்றும் ரத்தக் கொதிப்பு நிலையில் வைத்திருந்ததை அன்று தான் முதலில் கண்டேன்.

படம் முடிந்து வெளியில் வரும் போது படம் பார்த்த ஒவ்வொருவரும் அந்த ஜுரத்தோடேயே வெளியில் வந்தனர். அந்த நேரத்தில், யாராவது ஒருவர் ஒரு வெள்ளைக் காரரை வெளியில் பார்த்திருந்தால், அவரை அங்கேயே கொன்றிருப்பர். அந்த அளவிற்கு தாக்கத்தை மக்கள் மனதில் ஏற்படுத்திய ஒரு நடிப்பை இவ்வுலகம் கண்டிருக்குமா?

அன்புடன்,

இரா. பார்த்தசாரதி

Gopal.s
7th June 2013, 12:30 PM
சாரதி சார்,
ரொம்ப நாள் நீங்கள் வராமல் சோர்ந்து கிடந்தோம் புத்தெழுச்சி தந்தீர்கள். நன்றி. தொடருங்கள்.

parthasarathy
7th June 2013, 12:30 PM
அன்புள்ள திரு. ராகவேந்திரன் அவர்களே,

பல அறிய ஆவணங்களைப் பதிந்து மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்துகிறீர்கள்.

தொடர்ந்து களிப்புற வையுங்கள்.

அன்புடன்,

இரா. பார்த்தசாரதி



அன்புள்ள திரு. வாசுதேவன் அவர்களே,

அந்த ஸ்டில் கிட்டத்தட்ட மோட்டார் சுந்தரம் பிள்ளை போல் இருந்தாலும், எனக்கு ஒரு சிறிய சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது - ஏனென்றால், அதில், நெற்றியில் முடி சுருண்டு விழும் (பிளாஷ் பேக்கில்). வேறெந்தப் படத்திலும் பார்த்திராதது. ஞாயிறும் திங்களும் என்று எழுதலாம் என்றிருந்தேன் - நீங்கள் ஒரு க்ளூ கொடுப்பதற்கு முன்னேயே. கட்டபோம்மனுக்காக ஒரு பதிவைப் பதிந்து விட்டுப் பார்த்தால், கோபால் முந்திக் கொண்டு விட்டார்.

அருதமான அறிய ஸ்டில்லைப் பதிவு செய்ததற்கு நன்றி.

அன்புடன்,

இரா. பார்த்தசாரதி



அன்புள்ள திரு. பிரபுராம் அவர்களே,

காத்தவராயன் - வழக்கம் போல நுணுக்கமான ஆய்வு. (குறிப்பாக, திருவிளையாடல் பாடல் காட்சியில் கொன்னக் கோல் பாடத் துவங்கும் நடிகர் திலகம் அவரது முறை வருவதற்கு சற்று முன் தொண்டையை செருமி ஆயத்தமாவது ...).

ரசிக்கத்தக்க பதிவு.

அன்புடன்,

இரா. பார்த்தசாரதி

Gopal.s
7th June 2013, 12:31 PM
சாரதி சார்,
ரொம்ப நாள் நீங்கள் வராமல் சோர்ந்து கிடந்தோம் புத்தெழுச்சி தந்தீர்கள். நன்றி. தொடருங்கள்.

vasudevan31355
7th June 2013, 12:38 PM
ஒரு கட்டத்தில், ஒரு தாய் (எஸ்.என். பார்வதி?) அவரது மகனை போரில் இழந்து அவரைப் பார்க்க வரும் போது நடிகர் திலகம் காட்டும் ரியாக்ஷன்,

அந்த நடிகை P.S.சீதாலட்சுமி என்று நினைவு. ராகவேந்திரன் சார்! ஹெல்ப் ப்ளீஸ்.

http://www.kalyanamalaimagazine.com/images/PS_Seethalakshmi.jpg

vasudevan31355
7th June 2013, 12:40 PM
கோபால் முந்திக் கொண்டு விட்டார்.


இல்லை சார்! அதுவும் இல்லை.

Gopal.s
7th June 2013, 12:47 PM
இல்லை சார்! அதுவும் இல்லை.
வளர்பிறை?செந்தாமரை?

RAGHAVENDRA
7th June 2013, 12:50 PM
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/videoplayback.jpg

பெற்ற மனம்

vasudevan31355
7th June 2013, 12:57 PM
சரி! இனிமேல் சோதிக்க விரும்பவில்லை. அது வேறு மொழிப் படம்.

mr_karthik
7th June 2013, 02:00 PM
அன்புள்ள ராகவேந்தர் சார்,

நடிகர்திலகத்தின் தேசிய விருது பெற்ற திரைப்படங்கள் பற்றிய பதிவு வெகு சூப்பர். இதுவரை நம்மால் தயாரிக்கப்பட்ட பட்டியல் வடிவில் மட்டுமே பார்த்து வந்தவற்றை அரசின் ஒரிஜினல் ஆவணங்களாக தந்து அசத்தி விட்டீர்கள். யாராலும் மறுக்க முடியாத, மறைக்க முடியாத ஆவணங்கள் இவையனைத்தும்.

திரியின் பிதாமகரே, உங்கள் உழைப்பைப் போற்றுகிறோம்.

JamesFague
7th June 2013, 02:21 PM
It is true Mr Parthasarathy Sir,

VPKB released at Star theatre along with Norjehan in Saidapet. No relrease movies ran for more than
3 weeks in that theatre. It is a goldmine for every distrubutor whenever they release VPKB.

JamesFague
7th June 2013, 02:22 PM
Fully agreed with Mr Karthik.

vasudevan31355
7th June 2013, 02:54 PM
அன்புள்ள ராகவேந்தர் சார்,


திரியின் பிதாமகரே, உங்கள் உழைப்பைப் போற்றுகிறோம்.

100% karthik sir.

Gopal.s
7th June 2013, 03:37 PM
சரி! இனிமேல் சோதிக்க விரும்பவில்லை. அது வேறு மொழிப் படம்.
இது சரியான போங்காட்டம்.
ஒரு ஜோக் ஞாபகம் வந்து தொலைக்கிறது.
சார், உங்களை எங்கியோ பாத்திருக்கிறேனே? மதுரையிலா?
இல்லை சார். நான் மதுரையே பார்த்தில்லை.
அப்படியா?நானும்தான் மதுரை போனதில்லை.பாத்துக்கிட்டது வேறே யாரோ ரெண்டு பேரா இருக்கும்.

abkhlabhi
7th June 2013, 03:42 PM
பெற்ற மனம்


www.biscoot.com சைட்டுக்கு போனால் கண்டு பிடிக்கலாம்

vasudevan31355
7th June 2013, 04:11 PM
www.biscoot.com சைட்டுக்கு போனால் கண்டு பிடிக்கலாம்

பாலா சார்

வாங்க! வாங்க! ம்...சீக்கிரம்

vasudevan31355
7th June 2013, 04:13 PM
ஒரு ஜோக் ஞாபகம் வந்து தொலைக்கிறது.


உன் வாயிலே நல்ல வார்த்தையே வராதா?

Gopal.s
7th June 2013, 04:24 PM
உன் வாயிலே நல்ல வார்த்தையே வராதா?
இருக்கறதுக்குள்ளே ,நல்லதா stock இருந்தது இது ஒண்ணுதான். பின்னே காலையிலிருந்து அலைக்கழித்து விட்டு அவர் தெலுங்கு நடிகர் என்று establish பண்ண பார்த்தால் .........(அவ்வளவு மாநில பற்று) போங்கப்பா........
நல்ல வேளை ..."பறவைகள் "என் கோபத்திலிருந்து உன்னை காத்து விட்டது.

abkhlabhi
7th June 2013, 06:18 PM
Unfinished NT movie

vasudevan31355
7th June 2013, 06:23 PM
'ஸ்கூல் மாஸ்டர்' மலையாளப் படத்தில்தான் அந்த போஸ். (எந்தா..மனசிலாயோ) இதோ இன்னொரு அமர்க்களம்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/s-1.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/s-1.jpg.html)

mr_karthik
7th June 2013, 06:34 PM
வாசு சார்,

தெரியாத படத்தின் ஸ்டில்லைப் போட்டு கிட்டத்தட்ட இருபத்தைந்து பதிவுகள் ஏத்தி விட்டுட்டீங்க. அவர்களும் நடிகர்திலகம் நடித்த கால்வாசி படத்தின் பெயர்களை சொல்லி முடிச்சுட்டாங்க. கடைசியில் வேறு மொழிப் படமென்றால் கோபால் சார் வெறுத்துதானே போவார்.

நான் எந்தப்படத்தையும் யோசிக்காமல் மத்தவங்க கண்டுபிடிச்சு சொல்லட்டும்னு இருக்கேன்.

RAGHAVENDRA
7th June 2013, 07:00 PM
ஸ்கூல் மாஸ்டர் படத்தைப் போட்டு ஸ்டில் மாஸ்டர் நம்மையெல்லாம் ஒரு வழி பண்ணிட்டார் போல... வாசு சார் ... இது போல இன்னும் எங்களையெல்லாம் படுத்துங்க... நல்லாத்தான் இருக்கு... இந்த விளையாட்டு....

vasudevan31355
7th June 2013, 07:13 PM
வாசு சார்,

தெரியாத படத்தின் ஸ்டில்லைப் போட்டு கிட்டத்தட்ட இருபத்தைந்து பதிவுகள் ஏத்தி விட்டுட்டீங்க. அவர்களும் நடிகர்திலகம் நடித்த கால்வாசி படத்தின் பெயர்களை சொல்லி முடிச்சுட்டாங்க. கடைசியில் வேறு மொழிப் படமென்றால் கோபால் சார் வெறுத்துதானே போவார்.

நான் எந்தப்படத்தையும் யோசிக்காமல் மத்தவங்க கண்டுபிடிச்சு சொல்லட்டும்னு இருக்கேன்.

கார்த்திக் சார்...அய்...அய்...அய்...அய்...அய்...அய்....:smoke smirk:

Murali Srinivas
7th June 2013, 11:45 PM
Unfinished NT movie

பாலா சார்,

ஸ்வர்ண சாமரம் [தமிழில் தங்க சாமரம்] unfinished movie என்பதை விட dropped movie என்பதே சரி. மோகன்லால் நடித்த சித்ரம் வந்தனம் போன்ற படங்களை தயாரித்த வி.பி.கே மேனன் தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் நடிகர் திலகத்தையும் மோகன்லாலையும் இணைத்து இந்த ஸ்வர்ண சாமரம் படத்தை ஆரம்பித்தார் ராஜீவ்நாத் என்ற திறமையான இயக்குனர் படத்தின் டைரக்டர். நடிகர் திலகம் தந்தையாகவும் மோகன்லால் மகனாகவும் நடிக்கும் கதை.

தந்தை மீதி உயிரை வைத்திருக்கும் மகன், மகன் மீது பாசத்தை பொழியும் தந்தை. ஒருகட்டத்தில் தந்தை நோய்வாய்ப்பட எத்தனயோ மருத்துவ சிகிச்சைகள் அளித்தும் குணமாகாத சூழலில் தந்தையின் வேதனை தாளாமல் மகன் கருணை கொலையை தேர்ந்தெடுக்கும் சூழல் என வார்க்கப்பட்டிருந்தது கதை.மகன் தந்தைக்கு செய்யும் பணிவிடையை கருத்தில் கொண்டு சூட்டப்பட்ட தலைப்புதான் ஸ்வர்ண சாமரம்.சிறிது நாட்கள் திருவனந்தபுரத்தில் படபிடிப்பும் நடைப்பெற்றது இது நடப்பது 1995 காலகட்டத்தில்.

ஆனால் அன்றைய நாட்களில்தான் இயல்பான ஆற்றொழுக்கு போன்ற தங்கள் பாணியை விட்டுவிட்டு larger than life என்று சொல்வார்களே அது போன்ற ஒரு இமேஜ் வளையத்திற்குள் மலையாளசினிமாவும் மோகன்லால் போன்றவர்களும் மெதுவாக இழுக்கப்பட்டுக் கொண்டிருந்த நேரம். சுற்றி இருந்த சில "நல விரும்பிகள்" இந்த மாதிரி படங்கள் எல்லாம் இந்த காலகட்டத்தில் எடுபடாது என்று தூபம் போடவே இந்த படம் நிறுத்தப்பட்டது.

இதனால் அதிகமாக பாதிக்கப்பட்டது தயாரிப்பாளர் மேனன்தான். அவருக்கு உதவி செய்வதற்காக சித்ரம், வந்தனம் படங்களின் இயக்குனரும், லாலின் நெருங்கிய நண்பருமான பிரியதர்ஷனை அணுக அவர் கொடுத்த கதைதான் ஒரு யாத்ரா மொழி. இந்த மாதிரி படத்திற்கு ராஜீவ்நாத் சரிப்பட்டு வரமாட்டார் என்பதால் பிரதாப் போத்தன் இயக்குனராக பொறுப்பு ஏற்றார்.

ஸ்வர்ண சாமரம் படத்திற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்த நடிகர் திலகம் அது நின்று போனாலும் தன் "மாப்பிளையின்" வேண்டுகோளை ஏற்று இந்த படத்திற்கும் முழு ஒத்துழைப்பு கொடுத்தார். 1996 ஜனவரியில் படபிடிப்பு நடைப்பெற்றது.

நடிகர் திலகத்தின் உடல்நிலையை கருத்தில் கொண்டும், அன்றைய நாளில் காலா பானி படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த பொள்ளாச்சி, வேட்டைக்காரன் புதூர் போன்ற சுற்று வட்டாரங்களிலேயே யாத்ரா மொழி படப்பிடிப்பும் நடைபெற்றது. படம் 1996-லேயே முடிந்து விட்ட போதிலும் தயாரிப்பாளரின் ஒரு சில பிரச்சனைகள் காரணமாக ஒரு யாத்ரா மொழி திரைப்படம் 1997 ஜூலை மாதம் வெளியானது.

நடிகர் திலகத்திற்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட நாள் 1997 ஜூலை 3. அதற்கு அடுத்த நாள் ஜூலை 4 அன்று once more வெளியானது. அது வெளியாகி அடுத்த ஒரு 15-20 நாட்களில் ஒரு யாத்ரா மொழி வெளியானது.

ஸ்வர்ண சாமரம் பற்றியும் ஒரு யாத்ரா மொழி பற்றியும் ஏற்கனவே எழுதியிருக்கிறேன் என்ற போதிலும் மீண்டும் அதை அசை போட வாய்ப்பளித்த பாலாவிற்கு நன்றி.

அன்புடன்

ஒரு விஷயம் தெரியுமா? ஒரு யாத்ரா மொழி படத்தில் நடிகர் திலகம் நடிக்கும் contractor என்ற கேரக்டர் வேலைக்கு கொண்டு வரும் ஆட்களை வேலை செய்ய விடாமல் தடுக்கும் union leader வேடத்தில் வந்து தகராறு செய்து நடிகர் திலகத்திடம் கன்னத்தில் அறை வாங்கி கொண்டு போகும் மனிதன்தான் தயாரிப்பாளர் வி.பி.கே.மேனன்.

Gopal.s
8th June 2013, 05:02 AM
வாசு சார்,

தெரியாத படத்தின் ஸ்டில்லைப் போட்டு கிட்டத்தட்ட இருபத்தைந்து பதிவுகள் ஏத்தி விட்டுட்டீங்க. அவர்களும் நடிகர்திலகம் நடித்த கால்வாசி படத்தின் பெயர்களை சொல்லி முடிச்சுட்டாங்க. கடைசியில் வேறு மொழிப் படமென்றால் கோபால் சார் வெறுத்துதானே போவார்.

நான் எந்தப்படத்தையும் யோசிக்காமல் மத்தவங்க கண்டுபிடிச்சு சொல்லட்டும்னு இருக்கேன்.
உண்மை கார்த்திக் சார். இன்னொரு ஜோக் ஞாபகம் வந்து தொ .... sorry ,மகிழ்விக்கிறது.

என் நண்பர் ஒருவர் படு சோகமாக இருந்தார்.(race எல்லாம் active ஆக இருந்த தங்க சுரங்கம் காலம்.) என்ன என்று கேட்ட போது நேற்று கனவில் கடவுள் மாதிரி ஒரு உருவம் வந்து 4 8 2 5 என்று நம்பர் காட்டியது. நான் இன்னைக்கு அதை வைத்து jack pot ஆடினேன் சென்னை கிண்டி ரேஸில் . ஊத்திக்கிச்சு. நான் உடனே உனக்குத்தான் பழக்கமாச்சே. அதுக்கா இவ்வளவு சோகமா இருக்கே என்ற போது இன்னைக்கு டெல்லி ரேஸில் அதே combination க்கு ஜாக்பாட் அடிச்சிருக்குப்பா. நம்பர் காட்டின ஆள் எந்த ஊர் race என்று சொல்லி தொலைக்க(இது நானில்லை ,நண்பர்) கூடாதா?என்று சோகமாக முடித்தார்.

Gopal.s
8th June 2013, 05:06 AM
முரளி,
உன் பதிவுகள் எங்களிடம் நீ நேரில் பேசும் உணர்வை ஏற்படுத்துகிறது. இது நடிகர்திலகம் ரசிகர்கள் சந்திக்கும் போது ஏற்படும் passion ,fondness and warmth ,உன்னுடைய எழுத்துக்களை படிக்கும் போதெல்லாம் உணர்கிறேன்.

IliFiSRurdy
8th June 2013, 05:56 AM
முரளி,
உன் பதிவுகள் எங்களிடம் நீ நேரில் பேசும் உணர்வை ஏற்படுத்துகிறது. இது நடிகர்திலகம் ரசிகர்கள் சந்திக்கும் போது ஏற்படும் passion ,fondness and warmth ,உன்னுடைய எழுத்துக்களை படிக்கும் போதெல்லாம் உணர்கிறேன்.

I second this opinion..

Murali saar has mastered the knack of adding life to facts and figures while presenting them.

IliFiSRurdy
8th June 2013, 06:08 AM
[QUOTE=Gopal,S.;1050729]உண்மை கார்த்திக் சார். இன்னொரு ஜோக் ஞாபகம் வந்து தொ .... sorry ,மகிழ்விக்கிறது.

Goplaji,

Pl play in your own terrain.இம்மாதிரியான உங்கள் துணுக்குகள் பாய் (bhai)வீட்டு திருமண விருந்தில் மோர்குழம்பு பரிமாறியது போல் உள்ளது :-D

Gopal.s
8th June 2013, 06:15 AM
[QUOTE=Gopal,S.;1050729]உண்மை கார்த்திக் சார். இன்னொரு ஜோக் ஞாபகம் வந்து தொ .... sorry ,மகிழ்விக்கிறது.

Goplaji,

Pl play in your own terrain.இம்மாதிரியான உங்கள் துணுக்குகள் பாய் (bhai)வீட்டு திருமண விருந்தில் மோர்குழம்பு பரிமாறியது போல் உள்ளது :-D
நீ வருவாய் என நான் காத்திருந்தேன்.(அதற்கு மேல் விளக்க போவதில்லை)

Gopal.s
8th June 2013, 06:29 AM
தங்கை.

நடிகர்திலகத்தின் திருப்புமுனை படம். அவரை C centre superstar ஆக்கிய படம்.
புதிய பறவை போல Duets கிடையாது. எல்லாமே solo பாடல்கள்தான்.
ஆனால் பாடல்களுக்கான leads பிரமாதமாக இருக்கும்.(Hats off டு திரிலோக் team )
கேட்டவரெல்லாம்- பாட சொல்லி எல்லோரையும் கேட்ட பிறகு ,ஒன்றிலிருந்து பத்து idea சொல்லி அவர் NT பேரிலே வந்து.....
இனியது- காரில் ரேடியோ திருப்ப அது உப்பு ,புளி ,மிளகாய் விலைகளை பட்டியலிட ,சூழ்நிலை இறுக்கத்தை மறந்து சிரிப்பை கட்டுபடுத்தி ,மேஜர் உடன் உரையாடல் தொடர்வார் பாருங்கள் ,ஏன் இவரை தினமும் துதிக்கிறோம் என்று புரியும்.கட்டாயமாக காரிலிருந்து இறக்கி விட பட்டதும் இந்த பாடல்....
சுகம் சுகம்- கே.ஆர்.வீ , NT இடம் அவர் நிலையை கேட்க,வாக்குவாதம் முற்றி அவர் அறைந்து விட்டு நடக்க ஆரம்பிக்க இந்த பாடல்.(சிவாஜி-கே.ஆர்.வீ pair நன்றாக இருக்கும்)
நினைத்தேன் உன்னை- வில்லன்களின் பிளான். காஞ்சனாவின் சிவாஜி காதலினால் அவரை தப்பிக்க வைக்க என்று இறுக்கமான சூழல். சிவாஜி படு rugged handsome ஆக தெரிவார்.

RAGHAVENDRA
8th June 2013, 06:49 AM
நடிகர் திலகத்தின் பாடல்களெல்லாம் சோக மயமானவை என்பது போன்ற ஒரு தோற்றத்தை தொலைக்காட்சி சேனல்கள் உண்டாக்கி விட்டது போன்ற ஒரு பிரமை ஏனோ வந்து தொலைக்கிறது. வாழ்க்கையில் நம்பிக்கையூட்டும் பாடல்களெல்லாம் ஏதோ ஒருவர் படத்தில் மட்டுமே இருப்பது போன்ற மாயையும் உடைத்து எறிய வேண்டியதொன்று. வாழ்க்கையின் அர்த்தங்கள், எப்படி வாழ வேண்டும் என்பது போன்ற தத்துவங்களை இன்றைய சூழலுக்கேற்பவும் பொருந்தும் வகையில் அமைந்துள்ளவை நடிகர் திலகத்தின் படப் பாடல்களே.

அப்படிப்பட்ட ஒரு பாடலை நண்பர் கோபால் சார் காலையில் நினைவூட்டி இந்நாளைத் துவக்கி வைத்துள்ளார். இதோ அவருக்காகவும் நம் அனைவருக்காகவும், தங்கை திரைப்படத்திலிருந்து இனியது இனியது உலகம்.

http://youtu.be/XbRUcqDobU8

தினமும் காலையில் எழுந்தவுடன் நடிகர் திலகத்தின் படத்தைக் கும்பிட்டு விட்டு படப்பிடிப்பிற்குச் சென்றால் அவருடைய ஆசியால் நடிப்பு கொஞ்சமாவது வரும்.

ஸ்டைல் என்றால் என்ன என்பதை இந்தப் பாடல் விளக்கும்.

JamesFague
8th June 2013, 03:14 PM
Not only in Thangai there are many other songs which will motivate
every one. For Ex Kelvi Piranthathadu, Aru Maname Aru,
Vazha Ninaithal and many more songs.

IliFiSRurdy
8th June 2013, 04:59 PM
தங்கை திரைப்படத்திலிருந்து இனியது இனியது உலகம்.
ஸ்டைல் என்றால் என்ன என்பதை இந்தப் பாடல் விளக்கும்.

சற்றே கூர்ந்து கவனித்தால் தலைவர் வட இந்திய ஹீரோக்களின் இலகுவான பாணி நடன அசைவுகளை பயன் படுத்தியிருப்பது தெரியும்.நட்ட நடு வழியில் தன்னை இறக்கி விட்டு சென்றாலும் அதை "நான் விளையாட்டாகத்தான் எடுத்துக்கொண்டேன்" எனும் தன எண்ணத்தை பிரதிபலிக்க இதை ஒரு ஊரதியாக உபயோகித்திருப்பார்.

mr_karthik
8th June 2013, 05:09 PM
அன்புள்ள முரளி சார்,

வாசு அவர்கள் பதித்த ஸ்டில்லுக்கான தங்கள் நீண்ட விளக்கம் மிக அருமை மட்டுமல்ல, இதுவரை கேள்விப்படாத அரிய தகவல். மிக விளக்கமாக பதித்துள்ளீர்கள். பம்மலார் அவர்கள் ஆவணப்புதையல் என்றால் நீங்கள் வரலாற்று புதையல். கிருஷ்ண ராஜசாகர் மதகுகள் எப்போது திறக்கப்படும் என்று காத்திருக்கும் மத்திய தமிழக விவசாயிகள் போல தங்கள் வரலாற்றுத் தகவல் கதவுகள் எப்போது திறக்கப்படும் என்று தவம் கிடப்பவர்களில் நானும் ஒருவன்.

தங்களின் மிகப்பெரிய பலம் மற்றும் சிறப்பு என்னவென்றால், எந்த ஒரு விஷயத்தைப் பற்றியும் பதிவிடும்போது, அதைப்பற்றி நமது ரசிகர்கள், நண்பர்கள் முன்னர் பதிவிட்டிருப்பதையும் மறவாமல் நினைவு கூர்வது. இது மற்றவர்கள், முன்னர் பதித்தவைகளுக்கு நீங்கள் தரும் மிகப்பெரிய கௌரவம். இந்த நல்ல வழக்கம் நமது பம்மலார் சார், வாசு சார், கோபால் சார் போன்றவர்களிடமும் உள்ளது மகிழ்சியளிக்கிறது.

தங்களின் 'எங்கே நிம்மதி' பாடல் ஆய்வு 2008 ல் பதித்திருந்த போது ஒரு நீண்ட பதிலை பின்னூட்டமாக பதித்திருந்தேன். சதி வெள்ளத்தில் அதுவும் அடித்துச் செல்லப்பட்டு விட்டது.

தங்களின் விரிவான அனைத்து பதிவுகளுக்கும் மிக்க நன்றி.

iufegolarev
8th June 2013, 06:45 PM
அலுவல் நிமித்தம் வெளியூர் சென்றிருந்ததால் மற்றும் சில உள்நாட்டு பிரச்சனைகளால் சிறிது காலம் மையத்தில் குடிகொள்ள முடியவில்லை...பிரச்சனைகளும் அலுவல் பளுக்களும் குறைந்த நிலையில் இனி தொடர்ந்து பங்களிப்பு செய்ய இயலும் என்று நினைகிறேன்..!

அனைவருக்கும் எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்

Gopal.s
8th June 2013, 06:53 PM
வாருங்கள் சௌரி சார். புரட்சி புயல்தான் இனி.

iufegolarev
8th June 2013, 06:55 PM
விரைவில் திரையரங்குகளில் திருவிழா காண தயாராகுங்கள் !

"திரையுலக சித்தர்" "நடிகர் திலகத்தின் "நீதி"

http://www.youtube.com/watch?v=3lPK4AoDPnQ

iufegolarev
8th June 2013, 07:01 PM
வாருங்கள் சௌரி சார். புரட்சி புயல்தான் இனி.

"புரட்சி" என்ற வார்த்தை கம்யூனிஸ்ட் தலைவர் ஸ்டாலின் அவர்களை ஆதிகாலத்திலிருந்து குறிப்பதாகும்.
அதை பொருத்திகொள்ளும் தகுதி எனக்கு இல்லை சார் ! இன்று தோனான் துருத்தி எல்லாம் "புரட்சி" என்று அடைமொழி, பெயருடன் சேர்த்துகொள்கின்றனர்...அவர்களில் ஒருவராக நான் இருக்க விரும்பவில்லை...!

என்றும் நடிகர் திலகத்தின் பலகோடி பிள்ளைகளில் ஒருவனாக இருப்பதே எனது அவா ! :-)

vasudevan31355
8th June 2013, 09:14 PM
இனிய பாடலான இனியது இனியது உலகம்... என்ன சொல்வது! அனைவரையும் தலைவர் முழு ஆக்கிரமிப்பு செய்த முழுமுதற் பாடல். காரிலிருந்து இறக்கி விடப்பட்டவுடன் படு ஜாலியாக மவுத் ஆர்கனை வாயில் வைத்தபடி சடேலென வலது காலை சைடில் வைத்து எடுக்கும் அந்த ஆர்ப்பரிப்பான ஸ்டெப். அப்படியே இடது காலும்.

ஏ.எல்.ராகவனின் "ஹஹஹ ஹூ" அப்படியே அள்ளும். தொடர்ந்து வரும் டரடா ... டரடா...தொடர்ச்சி 'டாடோ" என்று முடியும் போது வாய் குவித்த அந்த வாயசைப்பையோ கேட்கவே வேண்டாம்.

"பருவம் போகும் வழியோடு" துவங்கும் போது தலைவர் சரியான 12 மணி வெயிலில் நடித்திருப்பார். தலைவரின் நிழல் மிகச் சிறியதாக விழும். அன்று மாலை வரை அந்தப் பாடலை ஷூட் செய்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். ஸ்கூல் பிள்ளைகளுடன் பாடிக்கொண்டு வருகையில், பின் இரண்டாவது சரணம் முடிந்து திரும்ப பாடல் முடிவில் பல்லவி ஆரம்பிக்கும் போது தலைவரின் நிழல் நீளமாக விழுவதைப் பார்க்கலாம். அனேகமாக மாலை 4 அல்லது 5 மணி இருக்கலாம். அன்று முழுக்க அந்தப் பாட்டை எடுத்திருப்பார்களோ! அதனால்தான் அவ்வளவு ஆழமாக நம் நெஞ்சில் பதிந்ததோ! உற்சாகமான தன்னம்பிக்கை தரும் பாடல் தலைவரின் அசத்தல் ஸ்டைல் முத்திரைகளோடு.

iufegolarev
8th June 2013, 09:40 PM
இனிய பாடலான இனியது இனியது உலகம்... என்ன சொல்வது! அனைவரையும் தலைவர் முழு ஆக்கிரமிப்பு செய்த முழுமுதற் பாடல். காரிலிருந்து இறக்கி விடப்பட்டவுடன் படு ஜாலியாக மவுத் ஆர்கனை வாயில் வைத்தபடி சடேலென வலது காலை சைடில் வைத்து எடுக்கும் அந்த ஆர்ப்பரிப்பான ஸ்டெப். அப்படியே இடது காலும்.

ஏ.எல்.ராகவனின் "ஹஹஹ ஹூ" அப்படியே அள்ளும். தொடர்ந்து வரும் டரடா ... டரடா...தொடர்ச்சி 'டாடோ" என்று முடியும் போது வாய் குவித்த அந்த வாயசைப்பையோ கேட்கவே வேண்டாம்.

"பருவம் போகும் வழியோடு" துவங்கும் போது தலைவர் சரியான 12 மணி வெயிலில் நடித்திருப்பார். தலைவரின் நிழல் மிகச் சிறியதாக விழும். அன்று மாலை வரை அந்தப் பாடலை ஷூட் செய்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். ஸ்கூல் பிள்ளைகளுடன் பாடிக்கொண்டு வருகையில், பின் இரண்டாவது சரணம் முடிந்து திரும்ப பாடல் முடிவில் பல்லவி ஆரம்பிக்கும் போது தலைவரின் நிழல் நீளமாக விழுவதைப் பார்க்கலாம். அனேகமாக மாலை 4 அல்லது 5 மணி இருக்கலாம். அன்று முழுக்க அந்தப் பாட்டை எடுத்திருப்பார்களோ! அதனால்தான் அவ்வளவு ஆழமாக நம் நெஞ்சில் பதிந்ததோ! உற்சாகமான தன்னம்பிக்கை தரும் பாடல் தலைவரின் அசத்தல் ஸ்டைல் முத்திரைகளோடு.

Sir,

Pls call me ..urgent

iufegolarev
8th June 2013, 09:43 PM
நீங்கள் அத்தனை பேரும் உத்தமர் தானா சொல்லுங்கள்......

முரசு தொலைகாட்சியில் இப்பொழுது நடைபெறுகிறது நடிகர் திலகத்தின் என் மகன் !!

http://http://www.youtube.com/watch?v=-oD7J1WRwVU

Gopal.s
9th June 2013, 06:17 AM
நடிகர் திலகத்தின் பாடல்களெல்லாம் சோக மயமானவை என்பது போன்ற ஒரு தோற்றத்தை தொலைக்காட்சி சேனல்கள் உண்டாக்கி விட்டது போன்ற ஒரு பிரமை ஏனோ வந்து தொலைக்கிறது. வாழ்க்கையில் நம்பிக்கையூட்டும் பாடல்களெல்லாம் ஏதோ ஒருவர் படத்தில் மட்டுமே இருப்பது போன்ற மாயையும் உடைத்து எறிய வேண்டியதொன்று. வாழ்க்கையின் அர்த்தங்கள், எப்படி வாழ வேண்டும் என்பது போன்ற தத்துவங்களை இன்றைய சூழலுக்கேற்பவும் பொருந்தும் வகையில் அமைந்துள்ளவை நடிகர் திலகத்தின் படப் பாடல்களே.
தினமும் காலையில் எழுந்தவுடன் நடிகர் திலகத்தின் படத்தைக் கும்பிட்டு விட்டு படப்பிடிப்பிற்குச் சென்றால் அவருடைய ஆசியால் நடிப்பு கொஞ்சமாவது வரும்.
ஸ்டைல் என்றால் என்ன என்பதை இந்தப் பாடல் விளக்கும்.
ராகவேந்தர் சார் ,
முதல் படத்திலிருந்தே தமிழர்களின் ஒரே ஒப்பற்ற முன்னோடி ,கதை போக்கிற்கு இசைவாக பல positive energy உள்ள பாடல்களை பாத்திரங்களின் தன்மையை ஒட்டி ,பிரசார வாடை இல்லாமல் கொடுத்துள்ளார். சும்மா சில உதாரணங்கள்.....(samples )

தேச ஞானம் கல்வி , கா கா கா ,நாணயம் மனுஷனுக்கு அவசியம்,மணப்பாறை மாடு கட்டி,நான் பெற்ற செல்வம், இந்த திண்ணை பேச்சு வீரரிடம், வீடு நோக்கி ஓடி வந்த நம்மையே, உள்ளதை சொல்வேன், எல்லோரும் கொண்டாடுவோம்,வந்த நாள் முதல்,எங்களுக்கும் காலம் வரும், சமாதானமே தேவை, ஓஹோஹோ மனிதர்களே ,ஆண்டவன் படைச்சான், கவலைகள் கிடக்கட்டும், பூஜ்யத்துக்குள்ளே ஒரு ராஜ்யத்தை ,வாழ நினைத்தால் வாழலாம்,யாரை எங்கே வைப்பது என்றே,புத்தன் வந்த திசையிலே போர்,கையிருக்குது காலிருக்குது முத்தையா, உலகம் இதிலே அடங்குது ,அறிவுக்கு விருந்தாகும் ,ஆடுற மாட்டை ஆடி கறக்கணும்,ஒளி மயமான எதிர்காலம்,கேள்வி பிறந்தது அன்று, போட்டது முளைச்சுதடி கண்ணம்மா,ஆறு மனமே ஆறு,ஆறோடும் மண்ணில் எங்கும் நீரோடும்,ஒண்ணாயிருக்க கத்துக்கணும் ,வாழ்ந்து பார்க்க வேண்டும்,பார்த்தா பசுமரம், கல்லாய் வந்தவன் கடவுளம்மா, கல்வியா செல்வமா,தெய்வம் இருப்பது எங்கே,நெஞ்சிருக்கும் எங்களுக்கு நாளை என்ற நாளிருக்கு,இனியது இனியது உலகம்,நான் பிறந்த நாட்டுக்கெந்த நாடு, ஒரு நாள் நினைத்த காரியம், நான் தன்னம் தனிக்காட்டு ராஜா,ஏரு பெரிசா இந்த ஊரு பெரிசா,ஆனைக்கொரு காலம் வந்தா,இதோ எந்தன் தெய்வம்,அம்பிகையே ஈஸ்வரியே,சுதந்திர பூமியில் பலவகை,நீங்கள் அத்தனை பேரும்,நான் நாட்டை திருத்த போறேன்,நல்லவர் குரலுக்கு,நாளை என்ன நாளை,உலகம் வெறும் இருட்டு,தங்கங்களே நாளை தலைவர்களே,இரண்டு கைகள் நன்கானால்,என்னை யாருன்னு நெனச்சே.

போதுமா, இன்னும் வேணுமா, நம் தலைவர் சொல்லாததா, செய்யாததா?

vasudevan31355
9th June 2013, 07:07 AM
நம் தலைவர் சொல்லாததா, செய்யாததா?

இதே வார்த்தையை ஒருமுறை தலைவரிடம் நேரில் சொன்னேன். எந்த பதிலும் இல்லை. ஒரே ஒரு செல்ல முறைப்பு. அவ்வளவே!

Gopal.s
9th June 2013, 07:15 AM
இதே வார்த்தையை ஒருமுறை தலைவரிடம் நேரில் சொன்னேன். எந்த பதிலும் இல்லை. ஒரே ஒரு செல்ல முறைப்பு. அவ்வளவே!
என்ன செய்வது? கடவுள் சில பிறவிகளை மிக மிக நல்லவர்களாக படைத்து அனுப்பி விட்டான்.சிலருக்கு தன்னை புகழ்வதை நொடி தோறும் கேட்க ஆசை. மற்றோரை திட்டுவதை கேட்க அதை விட ஆசை. நம் தலைவருக்கோ அவரை நேரில் புகழ்வதும் பிடிக்காது.மற்றவரை திட்டவும் விட மாட்டார்.

RAGHAVENDRA
9th June 2013, 07:23 AM
தன்னைத்தானே புகழ்ந்து கொள்வது அதை விட பெரிய ஆசை அல்லவா.. அதை விட்டு விட்டீர்களே...

Gopal.s
9th June 2013, 08:16 AM
பாகம்-38 . உங்கள் கூரிய கருத்துக்களை வேண்டுகிறது. வீ ரபாண்டிய கட்டபொம்மன் ,எப்படி உலக ரசிகர்களையே அடிமை படுத்தும் அளவு "mass psyche" என்பதை influence பண்ணியது என்பதை உளவியல் கலந்த நிர்வாக இயலின் focusreach பார்வையில் விளக்க முயற்சிக்கும் பதிவு அது.

Gopal.s
9th June 2013, 08:20 AM
மாடரேட்டர் கவனத்திற்கு,
என் பெயரில் ,ஒரு extra initial மட்டும் கொண்டு ஒரு பதிவர் register பண்ணியதாக தெரிகிறது. இது குழப்பத்தை விளைவிக்க வாய்ப்புள்ளதால் ,அனுமதிக்க வேண்டாம் என்று வேண்டி கொள்கிறேன்.

vasudevan31355
9th June 2013, 08:25 AM
.சிலருக்கு தன்னை புகழ்வதை நொடி தோறும் கேட்க ஆசை. மற்றோரை திட்டுவதை கேட்க அதை விட ஆசை.

யாருக்கு?...மேமை தாங்கிய நம் சமூகத்திற்கா?:)

RAGHAVENDRA
9th June 2013, 08:29 AM
இன்று பிற்பகல் 3 மணிக்கு கலைஞர் டி.வி.யில் பாவ மன்னிப்பு.
காணவும் பெறவும் தவறாதீர்கள்

RAGHAVENDRA
9th June 2013, 08:46 AM
தொலைக்காட்சிகளில் நடிகர் திலகத்தின் படங்கள் இந்த வாரம் - 10.06.2013 - 15.06.2013

channel movie date time
j movies uthama puthiran 12.06.2013 6 am
j movies viduthalai 12.06.2013 9 am
j movies vaa kanna vaa 10.06.2013 1 pm
j movies grahapravesam 12.06.2013 1 pm
j movies en thambi 13.06.2013 1 pm
j movies santhippu 15.06.2013 1 pm

kalaignar tv selvam 14.06.2013 1.30 pm

mega 24 sumangali 14.06.2013 8.30 am
mega 24 manidharil manikkam 13.06.2013 2.30 pm
mega 24 sathiya sundaram 15.06.2013 2.30 pm

mega tv deepam 13.06.2013 12.00 noon

murasu tv parthal pasi theerum 15.06.2013 7.30 pm

zee tamil avan than manithan 13.06.2013 2 pm

vasudevan31355
9th June 2013, 08:46 AM
நம் உள்ளை கொள்ளை கொண்ட 'திருடன்' நடக்கும் ஸ்டைலே ஸ்டைல்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/20130606-130000.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/20130606-130000.jpg.html)

iufegolarev
9th June 2013, 10:55 AM
மாடரேட்டர் கவனத்திற்கு,
என் பெயரில் ,ஒரு extra initial மட்டும் கொண்டு ஒரு பதிவர் register பண்ணியதாக தெரிகிறது. இது குழப்பத்தை விளைவிக்க வாய்ப்புள்ளதால் ,அனுமதிக்க வேண்டாம் என்று வேண்டி கொள்கிறேன்.

http://www.youtube.com/watch?v=-GbcXzLct8U

Gopal.s
9th June 2013, 11:09 AM
சௌரி ,
உன் theme songs என்னை மிக மிக ரசிக்க வைக்கும் பதிவு. blacksheep பார்த்து விழுந்து விழுந்து சிரித்தேன். உன் மீட்டர் உடைப்பு எழுத்து ,sense of humour ,நிலை தவரும் கோபம், ரசிக்க கூடியவை.
உனக்கு உருகவும் தெரியும் போலுள்ளதே? வீட்டுக்கு கூப்பிட்டு கையால் பரிமாறி விட்டால் மெழுகாக உருக்கி விடலாம் போலுள்ளதே? Achille's heels வெளிப்படுத்தி விட்டாயே?
அது தாழ்புனற்சியல்ல, காழ்ப்புணர்ச்சி .திருத்தி கொள்.

vasudevan31355
9th June 2013, 11:37 AM
ம்...நானும்தான் வீட்டுக்குக் கூப்பிட்டு பரிமாறினேன். ஒரு பிரயோஜனமும் இல்லையே! ஏன் இந்த காழ்ப்புணர்ச்சி ?:)

iufegolarev
9th June 2013, 11:40 AM
சௌரி ,
வீட்டுக்கு கூப்பிட்டு கையால் பரிமாறி விட்டால் மெழுகாக உருக்கி விடலாம் போலுள்ளதே? Achille's heels வெளிப்படுத்தி விட்டாயே?
அது தாழ்புனற்சியல்ல, காழ்ப்புணர்ச்சி .திருத்தி கொள்.

Sir,

ஒரு பிரியாணி பொட்டலத்திற்கு விலைபோகும் சராசரி பிள்ளைகளா நடிகர் திலகத்தின் பிள்ளைகள் ?

அதே சமயத்தில் உண்மையான அன்பிற்கு கட்டுபடுபவர்கள் அல்லவா?

பகைவர்களை நானும் வெல்வேன் அறிவினாலே.....ஆனால் நண்பரிடம் தோற்றுவிட்டேன் பாசத்தாலே ! நண்பரிடம் தோற்றுவிட்டேன் பாசத்தாலே !

Gopal.s
9th June 2013, 11:45 AM
ம்...நானும்தான் வீட்டுக்குக் கூப்பிட்டு பரிமாறினேன். ஒரு பிரயோஜனமும் இல்லையே! ஏன் இந்த காழ்ப்புணர்ச்சி ?:)
என்ன menu(Birthday special ???) , பரிமாறும் அன்பு , விருந்தினர் வருகிறார் என்றதும் மனைவியை ஊருக்கு pack பண்ணி விட்டு நீயும் கிளம்பு என்றால்.... காழ்புணற்சியா.....கொலை வெறியே வர சான்ஸ் ....:-D

iufegolarev
9th June 2013, 11:47 AM
Many more happy returns of the day vasudevan sir....!!!

Gopal.s
9th June 2013, 11:49 AM
பாசத்திலே தோத்தே சரி..... நீ சாப்பிட்டதுக்கு என்னையுமில்லே ஆசை தீர விமரிசிக்க விடாமல் பண்ணிப்புட்டே? நண்பனிடம் தோற்றது நான்தான்.

மூணு towel முழுக்க கண்ணீராக பிழிய வைத்து விட்டாய்.

vasudevan31355
9th June 2013, 11:56 AM
என்ன menu(Birthday special ???) , பரிமாறும் அன்பு , விருந்தினர் வருகிறார் என்றதும் மனைவியை ஊருக்கு pack பண்ணி விட்டு நீயும் கிளம்பு என்றால்.... காழ்புணற்சியா.....கொலை வெறியே வர சான்ஸ் ....:-D

மனைவியை ஊருக்கு அனுப்பினால்தானே பேச்சுலர்ஸ் நாம் ஜாலியாக இருக்க முடியும்? இது எல்லா நாடுகளுக்கும் பொருந்துமே! இது கூடவா தெரியாது?

vasudevan31355
9th June 2013, 12:01 PM
சௌரி சார்,

எனக்கு ஒரே ஒரு பிறந்த நாள்தான். (21-11-1961) அந்தக் குழப்பவாதி குழப்புவதைக் கண்டு உணர்ச்சிவயப் படாதீர்கள் அவருக்கு இதே வேலை! :)

Gopal.s
9th June 2013, 12:01 PM
மனைவியை ஊருக்கு அனுப்பினால்தானே பேச்சுலர்ஸ் நாம் ஜாலியாக இருக்க முடியும்? இது எல்லா நாடுகளுக்கும் பொருந்துமே! இது கூடவா தெரியாது?
ஆமாம் ,பெரிசா ஏதோ arrange பண்ணின மாதிரி...(நெய்வேலியில் arrange பண்ணியிருந்தாலும் விவேக் -கோவை சரளா எபிசொடேதான் ....என்ன நெய்வேலியில் current cut சான்ஸ் இல்லை)
சுற்றி pubs வேறு ...வெறுப்பேற்றாதே!!!!எதோ என் nostalgia ..மெயின் பஜார், library ,என் school என்று பார்த்து சமாதானமடைந்தேன்.
பேசாமே பெங்களுரு போயிருந்தா கவர்ச்சி வில்லன் பெரிசா " arrange " பண்ணி அசத்தியிருப்பார்.

vasudevan31355
9th June 2013, 12:05 PM
நண்பனிடம் தோற்றது நான்தான்.

நீ தோத்தாலும் ஜெயிச்சாலும் ரெண்டுமே நேக்குதாம்ப்பா பெருமை!:smile2:

parthasarathy
9th June 2013, 12:15 PM
அன்புள்ள திரு. கோபால் அவர்களே,

தங்கள் பாகம்-38 அற்புதம்!

ஒரு விஷயத்தை பெரும்பாலோர் ஒத்துக் கொள்ள மாட்டார்கள். கட்டபொம்மன் அவருடைய முதல் பத்து சிறந்த நடிப்பைத் தாங்கி வந்த படங்களில் வராது என்பது! தங்களுக்கேயுரிய தைரியம் மற்றும் அதை எப்படி விளங்க வைக்க வேண்டும் என்பதில் உங்களுக்கிருக்கும் தன்னம்பிக்கை தான் அதன் காரணம்.

எனினும் ஒன்று. நான் எழுதிய அண்மைப் பதிவில் குறிப்பிட்ட படி, ஒரு நடிகன் அவனுடைய நடிப்பினால் மட்டுமே, ஒட்டு மொத்த அரங்கையும் - ஏன் ஒரு சமுதாயத்தையே, பல பல ஜெனரேஷன்களாகக் கட்டிப்போட்டுக் கொண்டிருக்கும் ஒரு படம் இது என்றால், அது மிகையாகாது.

யாரும் பார்த்திராத ஒரு பாத்திரத்தை, சுதந்திரப் போராட்டத்தில் கட்டபொம்மனை விடவும் பலர் பெரிய பங்கு பெற்றிருக்க, அந்த அளவிற்கு பங்களிக்காத ஆனால் உலக கவனம் பெறாத ஒரு சிறிய மண்டலம் மட்டுமே அறிந்திட்ட - அதுவும் நாடகம்/பாளையக்காரன் கூத்தின் மூலம் அறியப்பட்ட ஒரு பாத்திரத்தை, முழுவதும் உள் வாங்கி, இன்றளவும், கட்டபொம்மனைப் பெரிதாக பேச விட்டதில் - அதுவும் வெளி நாடுகளிலும் - நடிகர் திலகம் எந்த அளவிற்கு மெனக்கெட்டிருக்கிறார், உயிரை விட்டிருக்கிறார் என்பது புரியும்.

திரு. வாசுதேவன் அவர்கள் குறிப்பிட்டது போல, கட்டபொம்மனை விடவும் ஒரு பெரிய வீரன் இல்லை என்பதை பெரிய சண்டைக் காட்சிகள் இல்லாமல், நடிப்பினால் மட்டுமே செய்து காட்டிய அதிசயம் "வீர பாண்டிய கட்டபொம்மன்" தான். படம் நெடுகிலும் அவரிடம் தெறிக்கும் கொப்பளிக்கும் எனர்ஜி, உடல் மொழி, கவனம், ஒவ்வொரு மிகச் சிறிய அசைவு மற்றும் கணங்களிலும் அவரிடம் தெரிந்த நுணுக்கமான தலை முதல் கால் வரை தெரிந்த அற்புத உடல் மொழி - நீங்கள் குறிப்பிட்டது போல், வசனங்கள் இல்லாமலேயே, அந்தப் பாத்திரத்தை சிரஞ்சீவிப் பாத்திரமாக்கி விட்ட அதிசயம்.

அற்புதம். தொடருங்கள் - ஆனந்தம் தாருங்கள்.

அன்புடன்,

இரா. பார்த்தசாரதி

Richardsof
9th June 2013, 03:13 PM
ஆமாம் ,பெரிசா ஏதோ arrange பண்ணின மாதிரி...(நெய்வேலியில் arrange பண்ணியிருந்தாலும் விவேக் -கோவை சரளா எபிசொடேதான் ....என்ன நெய்வேலியில் current cut சான்ஸ் இல்லை)
சுற்றி pubs வேறு ...வெறுப்பேற்றாதே!!!!எதோ என் nostalgia ..மெயின் பஜார், library ,என் school என்று பார்த்து சமாதானமடைந்தேன்.
பேசாமே பெங்களுரு போயிருந்தா கவர்ச்சி வில்லன் பெரிசா " arrange " பண்ணி அசத்தியிருப்பார்.
அன்புக்கு நான் அடிமை
தமிழ் பண்புக்கு நான் அடிமை*
நல்ல கொள்கைக்கு நான் அடிமை*
தொண்டர் கூட்டத்தில் நான் அடிமை*

எல்லோர்க்கும் வழிகாட்ட நான் இருக்கிறேன்
வந்தாரை வரவேற்க காத்திருக்கிறேன்

Gopal.s
9th June 2013, 07:37 PM
கலைஞர் டிவி க்கு மனமார்ந்த பாராட்டுகளும் நன்றிகளும். இருவர் உள்ளம்,பராசக்தி,இதய கமலம், பாவ மன்னிப்பு. வாரா வாரா prime time கொண்டாட்டம்.
இளைய தலைமுறை கொஞ்சம் பொறுமையாக தொடர்ந்தால் நடிகர்திலகம் யார் என்று புரிந்திருக்கும்.

RAGHAVENDRA
9th June 2013, 09:05 PM
கோவை ராயல் தியேட்டரில் ராஜா ... சூப்பர் ஹிட்.... கொண்டாட்டங்களுடன் இன்றைய மாலைக் காட்சி நடைபெற்றுள்ளது.

சில நிழற்படங்கள். நன்றி முகநூல் நண்பர் சிவராஜ்

http://sphotos-h.ak.fbcdn.net/hphotos-ak-frc1/1001646_195534443936163_1465149505_n.jpg

http://sphotos-b.ak.fbcdn.net/hphotos-ak-ash4/1000903_195535517269389_616527585_n.jpg

yoyisohuni
9th June 2013, 09:06 PM
பாவமன்னிப்பு சிவாஜியின் புன்னகை கூட நடித்திருக்கிறது. பார்வையிலேயே கூட பாட்டு பாட முடியும் என்கிறார்.
நன்றி கலைஞர் தொலைக்காட்சி மீண்டும் ரசித்தோம்.

http://www.youtube.com/watch?v=xqofnfgytws

RAGHAVENDRA
9th June 2013, 09:14 PM
Kovai Raja ... gala ... images ... contd...

http://sphotos-c.ak.fbcdn.net/hphotos-ak-ash4/296053_195543813935226_2036587119_n.jpg

http://sphotos-h.ak.fbcdn.net/hphotos-ak-prn2/969703_195542257268715_119249599_n.jpg

http://sphotos-g.ak.fbcdn.net/hphotos-ak-ash3/935922_195538173935790_103460412_n.jpg

http://sphotos-a.ak.fbcdn.net/hphotos-ak-prn1/994174_195536573935950_1554034795_n.jpg

iufegolarev
9th June 2013, 10:12 PM
மாசுக்கு மாஸ் கிளாசுக்கு கிளாஸ் "ராஜா"

கோவை பொறுத்தவரை...அதாவது கொங்கு மண்டலத்தை பொறுத்தவரை நடிகர் திலகத்தின் திரைப்படங்களின் வசூல் (ஒரு சில நேரங்கள் தவிர )அன்றும் இன்றும் என்றும் மிகவும் கனத்த மகசூல் என்று கூறினால் அது மிகையாகாது....

வாரா வாரம் திரையில் வரவேண்டும் என்றில்லை நம் நடிகர் திலகத்தின் திரைப்படங்கள். எப்போது வந்தாலும் அது ஒரு வசூல் பிரளயத்தை ஏற்படுத்தும் என்பதற்கு உதாரணம் ராயல் திரை அரங்கில் ராஜாவின் பவனி.

நம் நண்பர்கள் ராஜா திரைப்படத்தின் ஒரு வார வசூல் அதுவும் ராயல் திரை அரங்கில் எவ்வளவு என்று நிச்சயம் இங்கு பகிர்ந்து கொள்ளவேண்டும் முடிந்தால் அதே திரை அரங்கில் முந்தைய பட( எந்த நடிகரின் பழைய, புதிய படமாக இருந்தாலும் சரி), அந்த திரைப்படத்தின் வசூல் சாதனை எவ்வளவு என்பதையும் இங்கு கூறுவார்களேயானால் மிகவும் நன்றாக இருக்கும்.

நடிகர் திலகத்தின் பாக்ஸ் ஆபீஸ் பவர் என்ன என்று இளைய சந்ததியினரும் உண்மையை அறிய வசதியாக இருக்கும் !

http://www.youtube.com/watch?v=sHWZbgTR1n8

vasudevan31355
9th June 2013, 10:35 PM
ஆஹா! யார் வந்தாலும் போனாலும் என்றைக்கும் எங்களுக்கு நீதான் ராஜா.

கோவை ரசிகப் பெருமக்களே! கலக்கி விட்டீர்கள். வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.

ராஜான்னா ராஜாதான்.

என் மன்னவன் புகழ் திக்கெட்டும் ஒலித்துக் கொண்டே இருக்கும்.

சந்தோஷக் கடலில் மூழ்கடித்த ராகவேந்திரன் சாருக்கும், முகநூல் நண்பர் சிவராஜ் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி!

iufegolarev
9th June 2013, 10:43 PM
விரைவில் திரைக்கு வரவிருக்கும் இளைய திலகத்தின் ஆல் இன் ஆல் அழகுராஜா !!

2425

Gopal.s
10th June 2013, 07:11 AM
மகேந்திரராஜ் சார்,

உங்கள் பாவ மன்னிப்பு பற்றிய comment படித்தேன்.இந்த படம் பல பாத்திரங்களை சுற்றி வரும் multi -starrer . அவரவர்க்கு உரிய பங்கு அளிக்க பட்டு உருவாக்க பட்ட படம்.M .R .ராதா நடிப்பு எப்போதுமே ரசிக்க கூடிய gimmick&Antics driven .நகைச்சுவை கலந்த வில்லன் என்பதால் எப்போதுமே ரசிக்கலாம். அதை வைத்து நீங்கள் நடிகர்திலகத்தை பற்றி அடித்த comment ஒன்று நீங்கள் பிறவி குருடு,செவிடு அல்லது imbecile ஆக இருந்தால்தான் சாத்தியம்.(நீங்கள் இன்னொரு திரியில் இந்த மாதிரி comments அடித்து விடுங்களேன் பார்க்கலாம். அங்கு ஜால்ரா போட்டு விட்டு இங்கு விஷம தனம் செய்ய வேண்டாம்.)

ஷோலே படத்தில் அம்ஜத்கான் ரசிக்க பட்ட அளவு அமிதாப்,தர்மேந்திரா , சஞ்சீவ் ரசிக்க படவில்லை. பீ.எஸ்.வீரப்பா, சத்யராஜ்,ரகுவரன் போன்றோர் ,நிறைய படங்களில் ஹீரோக்களை மீறி ரசிக்க பட்டது உங்களுக்கு நினைவிருக்கலாம்.

இவ்வளவு இருந்தும் இந்த படத்தில் score செய்தவர்கள் நடிகர்திலகமும், விஸ்வநாதன் ராமமூர்த்தி யும், சுசிலாவும்தான்.

படம் துவக்கத்திலிருந்தே method acting முறையில் அந்த மேதை, ரஹீம் பாத்திரத்தை கையாளும் முறை . உங்களை விட பல மடங்கு உயர்ந்த சுப்புடு, நடிகர்திலகம் அவர்களின் நடிப்புக்காக, பதின்மூன்று முறை தொடர்ந்து பார்த்தேன் என்ற விமர்சனம் எழுதினர்..பாத்திரத்திற்கு தகுந்து தானே நடிக்க முடியும்? M .R .ராதாவிடமிருந்து scene steal பண்ண வேண்டுமென்றா நடிக்க முடியும்?உயர்ந்த எண்ணங்கள்,நோக்கம் கொண்ட இறை முறையில் வாழும் ரஹீம் எப்படி நடந்து கொள்ள , பேச வேண்டுமோ ,அப்படி நடித்து எல்லோர் உள்ளங்களிலும் நிறைந்தார்.

உங்கள் மாதிரி ஆட்கள் ஆதி நாட்களில் இருந்தே கடை பிடிக்கும் சாதாரண technic .சிவாஜி நடிக்கும் படங்களில் ,இன்னொரு நடிகர் பெயரை குறிப்பிட்டு அவர் பிரமாதம் என சொல்லும் கோழைத்தனமான proxy war . நாங்களெல்லாம் எங்களுக்கு விருப்பமில்லாத இடத்திற்கு வந்து குழப்பம் பண்ணும் ஆட்களல்ல.எங்களுக்கு பேச நிறைய இருக்கிறது. நடிகர்திலகமும் தன் படங்களில் இன்னொரு நடிகர் பங்கு பெற்று கதைக்கு தக்க நடித்து பேர் பெறுவதை தடுத்தவரும் இல்லை.இது எங்கள் வீடு. உங்கள் வருகையை நாங்கள் விரும்பவில்லை. விரும்பாத இடத்தில்,படித்த பண்புள்ளவர்கள் வலிய நுழைய மாட்டார்கள்.

Gopal.s
10th June 2013, 07:42 AM
நான் மிக மிக ரசித்த இடங்கள்.

தேவிகா சம்பத்த பட்ட அனைத்து காதல் காட்சிகள். ரஹீமாக சிவாஜி உள்ளூர ஆசையிருந்தாலும் , சந்தர்ப்ப-சூழ்நிலை கருதி restraint ஆக வெளியிடும் முறை.

பாடாமல் பாடி விடும் பாலிருக்கும் பாட்டில் எவ்வளுவு அழகு இந்த திராவிட மன்மதன்.!!!!

எல்லோரும் கொண்டாடுவோம், வந்த நாள் முதல், சிலர் சிரிப்பார் பாடல் காட்சிகள்.

சிவாஜியும்- beemsingh உம் சிலர் சிரிப்பார் பாட்டில் உச்சம் தொட்டனர். நமக்கு இடப்புறத்தில் பழுதாகாத முக பகுதியுடன் சிரிக்கும் சிவாஜி. வலப்புறத்தில் பழுதான முக பகுதியுடன் அழும் சிவாஜி. நடுவில் சிரித்து கொண்டே அழும் சிவாஜி.

அன்னையுடன் அவர் அன்னை என்று தெரிந்து வீட்டில் சந்திக்கும் காட்சி ,பின்னால் வர போகும் தெய்வ மகனுக்கு அடிக்கல் நாட்டி விடுகிறது.

Acid வீச்சு பட்டு அவர் புழுவென துடிப்பது.

அட்டகாசமாக antics செய்யும் M .R .ராதாவை மிக மிக பொறுமை, பொறுமை, சிறிது நிதானம் தவறி, பதில் கடுமை என்ற வெவ்வேறு நிலைகளில் அவர் deal செய்யும் காட்சிகள்.

Gopal.s
10th June 2013, 08:11 AM
பம்மலார் சார்,

தங்க சுரங்கத்திலிருந்து தங்கத் தாதுவை எடுத்து, தங்கம் பிரித்து பொற் கொல்லர் இடம் கொடுத்து செய்ய சொல்லியிருந்தாலும், இந் நேரம் பதக்கம் தயாராய் இருக்க வேண்டுமே?

joe
10th June 2013, 08:37 AM
முரளி சார்,
யாத்ரா மொழி பற்றிய உங்கள் குறிப்புகள் சுவாரஸ்யம் . இந்த படத்தில் நடித்த மலையாள சினிமாவின் சரித்திர கலைஞன் திலகன் ஒரு தீவிர நடிகர் திலகத்தின் ரசிகர் என்பது பலருக்கும் தெரிந்தது தான் . மலையாள சினிமாவில் தன்மானத்தின் அடையாளமாக , சூப்பர் ஸ்டார்களையே தண்ணி காட்டிய , தனக்கு Best supporting actor விருது கிடைத்த போது "supporting actor என்ற ஒன்றே கிடையாது . நான் நடிக்கும் கதாபாத்திரத்துக்கு நான் நாயகனே தவிர யாருக்கும் சப்போர்ட் செய்வதற்காக நான் நடிக்கவில்லை என சொல்லி அந்த விருதை மறுத்த தெளிவும் துணிவும் உள்ள கலைஞன் திலகன் மனதார பணிந்து வணங்குது தான் குருவாக நினைக்கும் நடிகர் திலகத்தை தான் .யாத்ரா மொழியில் கூட தான் நடிகர் திலகத்தை பணிந்து வணங்குவது போல காட்சியமைப்பை வைக்கச் சொன்னதே திலகன் தானாம் ..இது குறித்து மேலும் உங்களுக்கு தெரிந்திருக்கும் .

vasudevan31355
10th June 2013, 09:22 AM
கோ,

எதற்கு வீணே கத்திக் கொண்டிருகிறீர்கள்? தூங்குபவர்களை எழுப்பி.......கதைதான். பாவமன்னிப்பு பெறக்கூட ஒரு அருகதை வேண்டும்.

ScottAlise
10th June 2013, 09:29 AM
நேற்று மாலை காட்சிக்கு என் அம்மா உடன் நம்ம நடிகர் திலகத்தை ரசிக்க சென்றேன் அட நம்ம ராயல் தியேட்டர்க்கு தான் ராஜா படம் பார்க்க .இந்த படம் எங்க அம்மாவுக்கு மிகவும் பிடித்த நடிகர் திலகம் படங்களில் ஒன்று . என் அம்மா சொல்லி தான் நான் இந்த படம் DVD வாங்கி பார்த்தேன் . இதே அம்மா என்னிடம் அவன் தான் மனிதன் படம் பற்றி சொல்லி நான் அதை பார்த்து எங்க அம்மாவை திட்டியது தனி கதை என் என்றல் என்னால் இவ்வளவு சோகம் நிறைந்த நடிகர் திலகத்தை டைஜஸ்ட் செய்ய முடியவில்லை .
சரி விஷயத்துக்கு வருவோம் இந்த படத்தின் போஸ்டர் வியாழக்கிழமை பார்த்த பொழுதே நான் குஷி அடைந்தேன் . இதை அம்மாவிடம் சொன்ன பொழுது அவர்கள் மிகிந்த மகிழ்ச்சி அடைந்தார்கள் . இந்த தியேட்டர் ஒரு சாதாரணமான தியேட்டர் ஆனால் மிகவும் பாரம்பரியம் உள்ள தியேட்டர் . இங்கே தான் நான் முதல் முதலில் நாடோடி மன்னன் பார்த்தேன் . அதாவுது 2008ல் .
அதுக்கு அப்புறம் சில MGR படங்களை அங்கே பார்த்தேன் . இப்போ இருக்கும் multiplex தியேட்டர் போலே இல்லை .

இவ்வளவு சொல்லியும் எங்க அம்மா மிகவும் பிடித்தார்கள் நான் அவங்களை அழைத்து செல்ல வில்லை என்றல் என்னக்கு பிரச்சனை ஆகி விடும் என்பதால் வேறு வழி இன்றி அழைத்து சென்றேன் . மேலும் 6.45 பம் காட்சிக்கு நாங்கள் 5.00 PM சென்றோம் . அந்த தியேட்டர் கொஞ்கம் உள்ளே இருக்கு . கொஞ்ச தூரம் நடக்க வேண்டும் . ஆனால் தியேட்டர் யை நெருங்கும் பொழுதே ஒரு festival atmosphere தொற்றிகொண்டது , எனக்கு பிரமிப்பு என் என்றல் இது MGR தியேட்டர் போல வார வாரம் இங்கே கண்டிப்பாக MGR படம் ரிலீஸ் ஆகி விடும் தார தப்பட்டை முழம்கும் , மாலை , மகிழ்ச்சிக்கு அளவே இல்லை . அதே மாதிரி அங்கே சென்ற உடன் அப்பிடி ஒரு கொண்டாட்டம் அற்பட்டம் மாலை , கட்அவுட்க்கு மலை , கற்பூரம் என்று ஒரே சந்தோசம் அப்பிடி இப்பிடி என்று டிக்கெட் வாங்கி விட்டேன் . நேராக சென்றோம் அங்கே ஒரு பெரிய யானை சிலை இருக்கும் அதை பார்க்கும் ஒரு சந்தோசம் நம்ம சிவாஜி சாரை பார்ப்பது போலே காலையில் தான் காத்தவராயன் வேற பார்த்தேன் அதில் நம்ம ஆளு யானைல தான் அறிமுகம் .
எங்கள் இருக்கையில் சென்று அமர்தோம் . என்னக்கு பிடித்த நடிகர்களின் படங்களை பார்க்கும் பொழுது ஒரு நிமிடம் திரும்பி பார்பேன் , புல் ஆக இருக்கா என்று (முக்கல் வாசி தேவை இருக்காது
என்னா நான் போற ரஜினி , அஜித், கமல் படங்கள் முதல் நாள் போய்டுவேன் இவங்க படங்களை தவற வேற படங்களுக்கு செல்லவது இல்லை .) வசந்த மளிகை படம் பார்க்க சென்ற பொழுது கொஞ்ச நேரம் நோட்டம் விட்டேன் எப்போ புல் ஆகும் என்று , ஒரு அளவுக்கு அரங்கு நிறைந்த உடன் தான் நிம்மதி .

அந்த அவசியம் ராஜாவுக்கு வர வில்லை , கண்ணனுக்கு எட்டிய வரை காலி இருக்கை இல்லை அதுவும் பெண்கள் ,தாய்மார்கள் அதிக அளவில் வந்தார்கள் . இங்கே நம்ம ரசிகர்களை பற்றி சொல்ல வேண்டும் வெளியே எவ்வளவு அலப்பறை செய்த பொழுதும் உள்ளே படம் பார்க்கும் பொழுது கொஞ்சம் அமைதி காத்தார்கள் .

படம் ஆரம்பித்தது , சுஜாதா சினி ஆர்ட்ஸ் emblem தோன்றியது உடன் ஒரே கிளாப்ஸ் தான் அதுகே அப்படி என்றல் சிவாஜி பெயர் போடும் பொது எப்படி இருந்து இருக்கும் என்று நீங்களே யூகித்து கொள்ளுங்கள் .

கொஞ்ச நேரம் அமைதி ஆக இருந்த அரங்கம் , ஜெயில் காட்சியில் நெருப்பு தெரிந்த உடன் கற்பூரம் காட்டுவதும் , கூச்சல் இடுவதும் , விசில் அடிப்பதும் ஒரே அமர்க்களம் தான் , இதே response ஜெயலலிதா அறிமுகம் ஆகும் காட்சியிலும் காண முடிந்தது அந்த ஹோட்டல் சீன்ல் சிவாஜி ராஜா வென்று வித விதமாக சொல்லும் பொது

திரும்பவும் ஒரு அமைதி , நீ வர வேண்டும் என்று எதிர்பாத்தேன் பாடல்க்கு நல்ல response . தியேட்டர் இரண்டாக கிழிந்தது என்ன வென்று பார்த்தல் அந்த மல்யுத்த வீரன் உடன் நம்மவர் சண்டை போடும் காட்சி . கொஞ்சம் ரிலாக்ஸ் ஆக சென்ற படம் மீண்டும் கண்ணன் உடன் சண்டை இடும் இடத்தில கூடம் அற்பரிதது , இப்படி சென்ற படம் கோவில் கொள்ளை சம்பவங்கள் காட்சிகள் பொது கொஞ்சம் restless ஆனது பட் சிவாஜி அவங்களை காப்பதும் காட்சி மீண்டும் எங்களை படத்துக்குள் இழுத்தது .

அதுக்கு அப்புறம் ரங்கா ராவ் காட்சிகள் மீண்டும் ஒரு ஸ்பீட் breaker சிவாஜிக்கு உண்மை தெரிந்து அவர் அந்த போட்டோவை ஒரு கையால் அடிக்கும் காட்சியில் மீண்டும் ஒரு applause . அந்த விறுவிறுப்பு அடுத்த காட்சிகளையும் தெரிந்தது குறிப்பக பாலாஜி உடன் சண்டைய்டும் காட்சி. அப்படி இப்பிடி என்று கிளைமாக்ஸ் வந்தது , மீண்டும் ஒரே ஆர்பாட்டம் , சிவாஜி அழுது, சிரிக்கும் காட்சிக்கு தான்

படம் முடிந்த உடன் அனைவரின் முகத்திலும் ஒரு மகிழ்ச்சி .பிரிண்ட் கூட ஓகே. என் அம்மா முகத்தில் ஒரே குஷி படம் முடிந்து வர வர மீண்டும் பேசி கொண்டே வந்தோம் என்னமோ இப்போ தான் முதல் முறையாக பார்த்த படம் போலே ஆனால் போர் அடிக்க வில்லை
இனி சிவாஜி படங்களும் வரும் என்று எதிர்பார்க்கலாம்
என்னக்கு ஒரு சந்தேகம் இது தேவ் ஆனந்த் படம் இதே மாதிரி இருக்கும் jewel thief படத்தை என் இதே கூட்டணி ரீமேக் செய்ய வில்லை.

iufegolarev
10th June 2013, 09:36 AM
இன்றைய காலகட்டங்களில் ஒரு பழயபடத்திற்க்கு தமிழ்நாடு முழுவதும் விநியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர் முதலாளிகள் சந்தோஷத்துடன் தங்கள் நவீனமயமாக்கப்பட்ட திரைஅரங்கில் திரைப்படத்தை திரையிட இசைகிரார்கள் என்றால் அது நம் நடிகர் திலகத்தின் திரைப்படம் தான் என்பதை உலகறியும்.

ஒவொரு வாரமும் நம் திரையுலக சித்தர் நடிகர் திலகத்தின் திரைப்படங்கள் திரையிடவேண்டும் என்ற அவசியம் இல்லை.

எப்போது திரையிட்டாலும் இடும் விநியோகஸ்தரை பொருத்து குறைந்தது 65 - 75 திரை அரங்கில் அதுவும் புத்தம் புதிய தலைமுறை நடிகர்கள் நடித்த பல படங்கள் வெளியீட்டு மத்தியில் திரையிட்டு மற்றவர்கள் பார்த்து பொறாமைப்பட்டு, வயிறெரிந்து நடிகர் திலகத்தின் படத்தை தாழ்புனர்சியில் ஆயிரம் நொட்டை சொல்லும் அளவுக்கு பெருவெற்றி பெறுவது சமீபகாலங்களில் நாம் பார்கின்ற ஒன்று.

ஆயிரம் நொட்டைகலில் நாம் கேள்விப்படும் சில நொட்டைகள்
1) பெயரளவில் பார்வையாளர்கள்
2) மிகை நடிப்பு (நடிப்பை பற்றி பேச ஒரு தகுதியும் இல்லாத கும்பலின் ஓலம் )
3) Just for Record Purpose
4) அழுவாச்சி படம்
5) வேறு ஒன்றும் சொல்லத் தெரியாதவர்கள் சொல்வது "கட்சி ஆரம்பிச்சு ஒரு இடம் கூட ஜெயிக்கமுடியல! மற்றும் இத்தியாதி...இத்தியாதி ...!

ஒரு நவீன திரை அரங்கின் ஒரு நாள் செலவு அதுவும் மின்சாரம் மட்டும் மும்மடங்கு உயர்த்தப்பட்ட நிலையில் என்ன என்பதை கணக்கு பார்பவர்கள் இந்த முட்டாள்தனமான வாதங்களை முன்வைப்பார்கள என்றால் சந்தேகமே ..அப்படி இருக்க எந்த நவீன திரை அரங்கும் அவர்களுக்கு லாபம் இல்லாமல் எந்த திரைப்படத்தையும் திரையிடமாட்டார்கள் என்பதை ஏன் இவர்கள் புரியாத மாதிரி நடிக்கிறார்கள் என்று தெரியவில்லை. இவர்கள் நடிகர் திலகத்தை விட சிறந்த நடிகர்கள் என்று ஒத்துகொள்ளத்தான் வேண்டும் !

இன்றைய நிலையில் நடிகர் திலகத்தின் படங்கள் 65 - 75 திரை அரங்கில் ஒரே நேரத்தில் திரையிடுவது என்பது அந்த திரைப்படம் தொடர்ந்து 72 வாரங்கள் ஒவொரு திரை அரங்கில் திரையிடுவதற்கு சமமாகும் என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.

ஆகையால் நடிகர் திலகத்தின் படங்கள் தொடர்ந்து வார வாரம் திரை அரங்குகளில் வலம் வர வேண்டிய அவசியம் இல்லவே இல்லை.
அதுமட்டும் அல்ல, நடிகர் திலகத்தின் படங்களை விநியோகம் செய்த பல விநியோகஸ்தர்கள் இன்று நல்ல நிலைமையில் உள்ளனர். அவர்களில் பலரும் தங்களுடைய வியாபாரங்களை Diversify செய்தும் உள்ளனர். ஆகையால் அவர்களுக்கு திரைப்படங்களை திரையிடும் வியாபாரம் மட்டுமே உள்ளது அதன் மூலம் வருமானம் வந்தால் தான் வண்டி ஓடும் என்ற நிலை இல்லை. நடிகர் திலகத்தின் படங்களை திரையிட்டு வரும் வரவை ஒரு rotation செய்யும் நிலையும் இல்லை.

இந்த ஊர் எங்க கோட்டை...அந்த ஊர் எங்க கோட்டை என்று திரும்ப திரும்ப என்னமோ நமக்கே சந்தேகம் உள்ளது போல சொல்லவேண்டிய நிலையில் நாம் இல்லை !

பார்க்கலாம் ...கர்ணன் என்ற ஒரு திரைப்படத்தின் மறுவெளியீடு சாதனையை எந்த திரைப்படத்தின் மறுவெளியீடு முறியடிக்கிறது என்று.

கத்திரிக்காய் முத்தினால் கடைத்தெருவுக்கு வந்ததுதானே ஆகவேண்டும் !

Gopal.s
10th June 2013, 09:38 AM
ராகுல்ராம் ,

உன் மகிழ்ச்சியை குறித்து எனக்கும் மகிழ்ச்சி. உன் அன்னையாருக்கு எனது மரியாதை கலந்த வணக்கங்கள்.

இங்கே எழுதும் போது ,அனாவசியமாக மற்ற பெயர்களை குறிப்பிட வேண்டாம். அனாவசிய சர்ச்சைகளுக்கு வழி வகுக்கும். comparison என்பது அவசியமற்றது.

உன் வழக்க படி விமரிசனத்தை தொடரு. ரசிக்க நாங்கள் தயார்.

சிவாஜி, குறிஞ்சி பூ போலவே ராஜா போன்ற படங்களை கொடுத்தார். ஆனால் அதிலும் அவர் தொட்ட சிகரங்களை மற்றவர்கள் தொட இயலவில்லை.

ScottAlise
10th June 2013, 10:27 AM
Gopal sir,

My intention was not for creating problems sir infact I love such garlands, allaparai even for Makkal thilagam movies as I watched them earlier,
With due respect I have changed certain words too, thank you for correcting the mistakes

KCSHEKAR
10th June 2013, 10:32 AM
டியர் திரு. ராகுல்ராம் / ராகவேந்திரன் சார்,

"ராஜா" - கோவை ராயல் திரையரங்க நிகழ்வுகள் பதிவிற்கு நன்றி.

Gopal.s
10th June 2013, 10:51 AM
Gopal sir,

My intention was not for creating problems sir infact I love such garlands, allaparai even for Makkal thilagam movies as I watched them earlier,
With due respect I have changed certain words too, thank you for correcting the mistakes
My advise is simple. Write only about our Nadigarthilagam. Do not even mention any other names.

vasudevan31355
10th June 2013, 12:44 PM
இன்றைய அரிய புகைப்படம்

(திலகத்துடன் இருப்பவரை தெரிகிறதா?)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/nagi.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/nagi.jpg.html)

Gopal.s
10th June 2013, 12:54 PM
ஸ்ரீதர் ?

RAGHAVENDRA
10th June 2013, 12:57 PM
ஏமண்டி கோபால் காரு,
வாடு தெலிசி லேதா?

vasudevan31355
10th June 2013, 12:57 PM
இவர்தான் மண்ணை சிவப்பாக்கிய நகக்கடி இயக்குனர்.

http://2.bp.blogspot.com/-zwvFOC4yxTg/UVA_erxvDFI/AAAAAAAAJQU/-QW5kmAM6vE/s1600/sridhar.jpg

vasudevan31355
10th June 2013, 12:57 PM
ராகவேந்தர் சார்! ப்ளீஸ். சொல்லாதீர்கள்.

vasudevan31355
10th June 2013, 12:59 PM
குதிரை ரேஸ் மும்பையில் அல்ல. இங்கேயேதான்.

joe
10th June 2013, 01:00 PM
looks like Naagi Reddy

vasudevan31355
10th June 2013, 01:03 PM
http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcQiNGNE6MV409EQvcIM77ahYxfIhgarE Anf2AL1mPcODcjCXzrz

Jo

ScottAlise
10th June 2013, 02:35 PM
our Nagi Reddy sir owner of Vijaya Vauhuni studios, vijaya Hospital, A very great noble man

goldstar
10th June 2013, 02:59 PM
இந்த ஊர் எங்க கோட்டை...அந்த ஊர் எங்க கோட்டை என்று திரும்ப திரும்ப என்னமோ நமக்கே சந்தேகம் உள்ளது போல சொல்லவேண்டிய நிலையில் நாம் இல்லை !

பார்க்கலாம் ...கர்ணன் என்ற ஒரு திரைப்படத்தின் மறுவெளியீடு சாதனையை எந்த திரைப்படத்தின் மறுவெளியீடு முறியடிக்கிறது என்று.

கத்திரிக்காய் முத்தினால் கடைத்தெருவுக்கு வந்ததுதானே ஆகவேண்டும் !

Well said NT360. One can claim as "Vasool Chakaravarthy" when an actor gives silver jubilee hits in all the big cities. Only NT has given silver jubilee all the big cities in Tamil Nadu including Salem. If some one cannot give a silver jubilee hit city like Salem and then claim themself as "Vasool Chakravarthy" then we need to just ignore it.

Like you said, no one can beat Karnan records for centuries to come.

Cheers,
Sathish

JamesFague
10th June 2013, 05:25 PM
Mr Ragulram,

Your theatre experince of Raja is nice. Keep informed about the
release of NT at Kovai.

Mr Gold Star.

Fully agreed that Karnan records cannot be broken for ever.
It is possible by one & Only NT. Even lot of movies are rereleased
but they are nowhere near to Karnan.

JamesFague
10th June 2013, 05:26 PM
Mr Neyveli (Naughty) Sir.

Thanks for the photo of NT with Nagi reddy.

Murali Srinivas
11th June 2013, 12:18 AM
ஜோ,

நன்றி. நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை.படத்திற்காக முதலில் எழுதப்பட்ட திரைக்கதையில் திலகன் தோன்றிய அந்தக் காட்சி இடம் பெறவில்லை. திலகன் வி.பி.கே.மேனன் மற்றும் இயக்குனர் பிரதாப் போத்தனிடம் நான் இந்த படத்தில் நடிப்பேன்.எனக்கு ஒரு காட்சியாவது வைக்க வேண்டும் என்று உரிமையுடன் கேட்டு வாங்கி நடித்தார். அவருக்காகவே நடிகர் திலகம் நடித்த contractor-ஐ மிரட்டி ஊரை விட்டு போக சொல்லும் அந்த காட்சியை உருவாக்கி ஆனால் நடிகர் திலகத்தை பார்த்தவுடன் அவர் சிறு வயதில் தனக்கு உதவிய அந்த நிகழ்ச்சியை நினைவு கூர்ந்து நடிகர் திலகத்தின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு பழைய உதவிக்கு நன்றி சொல்லும் காட்சியாக அது உருப்பெற்றது. இதன் மூலம் தன வாழ்நாள் லட்சியத்தை நிறைவேற்றிக் கொண்டதாக திலகன் பலமுறை பேட்டிகளில் சொல்லியிருக்கிறார்.அவர் மட்டுமல்ல, அந்த படத்தில் பங்கு கொண்ட நெடுமுடி வேணு, சோமன், ஜகதீஷ், மணியம்பிள்ளை ராஜு போன்றவர்களும் நடிகர் திலகத்துடன் இணைந்து நடித்த அந்த வாய்ப்பை தங்களின் வாழ்நாளில் கிடைதற்கரிய பேறாக கருதினார்கள்.

மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான திக்குரிசி,சத்யன், நசீர், மது, சோமன், மோகன்லால்,வேணு, திலகன் என்று அனைவரோடும் இனைந்து நடித்த நடிகர் திலகத்தை மிஸ் செய்தவர் மம்மூட்டி மட்டுமே. இந்த இணையும் இரண்டு முறை ஒன்று சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு வந்தும் தவறி போனது. ஒரு முறை கோவை செழியன் தயாரிப்பில் ஜோஷி இயக்கத்தில் தந்தையாகவும் மகனாகவும் நடிக்க இருந்தார்கள். மற்றொரு முறை சுஹாசினி இயக்கத்தில் நடிகர் திலகமும் மம்மூட்டியும் இணையும் படம் ஒன்று [தமிழன் என்று பெயர் சூடியதாக் நினைவு]. இரண்டுமே நடிகர் திலகத்தின் உடல் நிலையால் அறிவிப்போடு நின்று போனது. இதை தவிர மலையாள சினிமாவின் magnum opus என்று சொல்லகூடிய மகாபாரதத்தை அடிப்படையாக கொண்ட ஒரு இதிகாச காவியத்தை மலையாள இலக்கிய சிற்பி எம்.டி அவர்களும் [M.T.வாசுதேவன் நாயர்] இயக்குனர் ஹரிஹரன் அவர்களும் உருவாக்கும் முயற்சியின் ஆரம்ப கட்ட ஆலோசனைகள் நடைபெற்றன. [இந்த கதாசிரியர் -இயக்குனர் கூட்டணிதான் மலையாள சினிமாவின் மறக்க முடியாத காவியங்களான ஒரு வடக்கன் வீர காத மற்றும் பழசி ராஜா போன்ற படங்களை தந்தவர்கள்]. இந்த இதிகாச படத்தில் நடிகர் திலகம் பீஷ்மாச்சாரியாராக வேடம் புனைய இருப்பதாகவும், அதே படத்தில் மம்மூட்டி மோகன்லால் போன்றவர்களும் நடிக்க இருப்பதாகவும் பத்திரிக்கைகளில் செய்தி வந்தது. ஆனால் மலையாள சினிமாவால் தாங்க முடியாத பட்ஜெட் என்பதால் அந்த project தொடர முடியாமல் பொய் விட்டது.

நடிகர் திலகமும் மம்மூட்டியும் இணைய முடியாமல் போனதில் தனிப்பட்ட முறையில் எனக்கு மிகப் பெரிய வருத்தம்.

அன்புடன்

Murali Srinivas
11th June 2013, 12:21 AM
ராகுல்,

கோவை ராயல் திரையரங்கில் ராஜா வசூல் சக்ரவர்த்தியாக கோலோச்சுவதை எளிய நடையில் தந்த உங்களுக்கு நன்றி.

ராகவேந்தர் சாரும் தன பங்கிற்கு Facebook-ல் நமது நண்பர் மற்றும் ஹப்பர் செந்தில்வேல் [சிவஜிசெந்தில்] தரவேற்றிய புகைப்படங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டு மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தி விட்டார்.

Facebook-ல் நண்பர் செந்தில் வேறு ஒரு நோட்டீஸ்-ஐயும் upload செய்திருக்கிறார். கோவை மாநகரிலேயே அதிகமான 100 நாட்கள் ஓடிய படங்களை கொடுத்தவர் நடிகர் திலகம் என்பதை லிஸ்ட் போட்டு [படங்கள், தியேட்டர், தேதி, ஓடிய நாட்கள் என] ஆதாரத்துடன் சொல்லும் நோட்டீஸ். நேற்று ராயல் திரையரங்கில் ரசிகர்களால் விநியோகம் செய்யப்பட்டிருக்கிறது.

கோவை மட்டுமல்ல தமிழகத்தின் அனைத்து ஊர்களிலும் அதிக 100 நாட்கள் ஓடிய படங்கள் நமது படங்கள்தானே!

அன்புடன்

Gopal.s
11th June 2013, 07:11 AM
முரளி அண்ணாச்சி,
மம்முட்டி யின் மிக பெரிய ரசிகனான எனக்கும் இந்த சிவாஜி-மம்முட்டி இணைவில் படங்கள் வராதது வருத்தமே. மம்முட்டியும்,கோபியும் (சிதம்பரம் )கூட நடிகர்திலகத்தின் ரசிகர்கள்.

vasudevan31355
11th June 2013, 11:05 AM
இன்றைய அரிய நிழற்படம்.

'வீரபாண்டியக் கட்டபொம்மன்' தெலுங்கு மொழியில் 'வீரபாண்டியக் கட்டபிராமணா' (1959)என்று மொழி மாற்றம் செய்யப்பட்டது. அதன் அரிய நிழற்படத்தைதான் காண்கிறீர்கள்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/1959-veerapandya-kattabrahmana-1.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/1959-veerapandya-kattabrahmana-1.jpg.html)

pdf download from sakhyiaa.com

Gopal.s
11th June 2013, 11:09 AM
கட்ட பொம்மு வா, கட்ட பொம்முலு வா , கட்ட பொம்முடு வா? எது சரி?(மாறு வேடத்தில் உலா வரும் கொல்டிகள் இந்த அரவத்திற்கு விளக்குவார்களா?)கட்ட பொம்மன் எப்போ பிராமணன் ஆனான்?ஜக்கய்யா குரலா? ஜக்கம்மாவிற்கு சரியான ஜோடி.

eehaiupehazij
11th June 2013, 11:44 AM
ராகுல்,

கோவை ராயல் திரையரங்கில் ராஜா வசூல் சக்ரவர்த்தியாக கோலோச்சுவதை எளிய நடையில் தந்த உங்களுக்கு நன்றி.

ராகவேந்தர் சாரும் தன பங்கிற்கு Facebook-ல் நமது நண்பர் மற்றும் ஹப்பர் செந்தில்வேல் [சிவஜிசெந்தில்] தரவேற்றிய புகைப்படங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டு மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தி விட்டார்.

Facebook-ல் நண்பர் செந்தில் வேறு ஒரு நோட்டீஸ்-ஐயும் upload செய்திருக்கிறார். கோவை மாநகரிலேயே அதிகமான 100 நாட்கள் ஓடிய படங்களை கொடுத்தவர் நடிகர் திலகம் என்பதை லிஸ்ட் போட்டு [படங்கள், தியேட்டர், தேதி, ஓடிய நாட்கள் என] ஆதாரத்துடன் சொல்லும் நோட்டீஸ். நேற்று ராயல் திரையரங்கில் ரசிகர்களால் விநியோகம் செய்யப்பட்டிருக்கிறது.

கோவை மட்டுமல்ல தமிழகத்தின் அனைத்து ஊர்களிலும் அதிக 100 நாட்கள் ஓடிய படங்கள் நமது படங்கள்தானே!

அன்புடன்
Dear Murali Sir. The credit goes to some other Senthil sir and not me since I did not upload any such items.

vasudevan31355
11th June 2013, 01:02 PM
நடிகர் திலகத்தின் நாயகிகள்.(ஒரு விஷுவல் தொடர்)

(தொடர்-13)

நடிகர் திலகத்தின் நாயகிகள் (13) 'S.வரலக்ஷ்மி'

'ஜக்கம்மா'வின் 'ஜம்'மென்ற தோற்றம்

http://bharatjanani.com/wp-content/uploads/2012/09/S_VARALAKSHMI91.jpg

நம் ஜக்கம்மா S.வரலக்ஷ்மி 1927-இல் பிறந்தவர். வெரைட்டி வரலக்ஷ்மி என்றே இவர் அழைக்கலாம். அவ்வளவு பாத்திரங்களையும் அனாயாசமாய் செய்யக்கூடிய திறமைசாலி. குடும்பப் பாங்கான முக லட்சணம் கொண்ட நடிகை. அதுமட்டுமல்ல மிகத் திறமையான இனிய குரல் வளம் கொண்ட நடிகையும் கூட. வேம்ப், வில்லி, கதாநாயகி, அம்மா என்று பலகாலம் தமிழ் மற்றும் தெலுங்குத் திரையுலகை ஆக்கிரமித்தவர். 1938 இல் தெலுங்கிலும் மற்றும் தமிழிலும் வெளிவந்த 'பாலயோகினி' யில் இளவயது நட்சத்திரமாக அறிமுகமானார். (அடேயப்பா! தலைவர் பீல்டில் நுழைவதற்கு 14 வருடங்களுக்கு முன்பே!) பழம்பெரும் இயக்குனர் K.சுப்பிரமணியம் இயக்கத்தில் வெளிவந்த 'சேவாசதானம்' படத்தில் திருமதி எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்களின் தோழியாக நடித்தார். பின் 1940இல் டி ஆர்.மகாலிங்கத்துடன் இணைந்து பரசுராமன் (1940) நடித்தார்.

http://bharatjanani.com/wp-content/uploads/2012/09/S.-Varalakshmi.jpg

பின் ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி, போஜன், நவஜீவனம், மச்சரேகை, மோகனசுந்தரம் என்று வரிசையாகப் படங்கள்.

http://raretfm.mayyam.com/pow07/images/svaralakshmi.jpg

பி.யூ.சின்னப்பா, நாகையா, NTR, நாகேஸ்வரராவ், ரங்காராவ், எம்ஜியார், டி .ஆர்.மகாலிங்கம் ரஞ்சன், ஜெமினி என்று அத்துணை நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்தார்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/VTS_01_2VOB_000446955.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/VTS_01_2VOB_000446955.jpg.html)

ஆனால் நடிகர் திலகத்துடன் இவர் ஜோடி சேர்ந்த 'வீரபாண்டியக் கட்டபொம்மன்' இவருக்கு அழியாப் புகழைப் பெற்றுத் தந்து விட்டது. தலைவரின் ஆண்மையான ஆஜானுபாகுவான, கம்பீரத் தோற்றத்திற்கு வரலக்ஷமி அவர்களின் உருவ அமைப்பு தோதாக,கனகச்சித்தமாகப் பொருந்தி கட்டபொம்மனுக்கேற்ற ஜக்கம்மாவாக ஜோடி சேர்ந்து வரலாற்றில் அழியாப் புகழ் பெற்றுவிட்டது.

'ஜக்கம்மா' என்ற தனது தனித்துவமான கம்பீரக் குரலாலே நடிகர் திலகம் இவரை அழைப்பதைக் கேட்கும்போதெல்லாம் வரலக்ஷ்மிதானே ஞாபகத்திற்கு வருவார்! தன்னுடன் நடிக்கும் ஹீரோயின்களை எல்லாம் கூட நமது கவனத்துக்கு கொண்டு வருவதில் நடிகர் திலகத்திற்கு ஈடுஇணை எது?

கட்டபொம்மனில் அதிக ஸ்கோர் இவருக்கு இல்லையென்றால் கூட போருக்கு விடை கொடுத்து அனுப்பும் அந்த அற்புதக் காட்சியில் அருமையாக செய்திருப்பார்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/VTS_01_3VOB_001985712.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/VTS_01_3VOB_001985712.jpg.html)

"ஆம்! என் கணவர் எத்தனை சிரம் கொணர்ந்தார் என்று எண்ணி எண்ணி எண்ண மாளாது அது ஒரு கோடி இருக்கும் போ...
கொண்டு போய்க் கொல்லைக் காட்டிலே கொட்டு... அங்கு எருக்கு முளைத்து அதை எருவாக்கி செந்நெல் விளைத்து நாட்டை செழிப்பாக்கு என்று நான் சொல்லி சிறக்கவேண்டும்"

என்று இவர் உணர்வுபூர்வமாக தலைவரிடம் பேசும் அந்த குறிப்பிட்ட வசனத்தை மறந்துவிட முடியுமா!"

"வெற்றிவடிவேலனே" முடிந்ததும் அமைதியாய் மனம் வருடும் "மனம் கனிந்தருள் வேல்முருகா!" என்ற தேன் சொட்டும் குரலின் இனிமையைத் தான் மறக்க முடியுமா?

அருமையான குரல்வளம். 'டக்குன்னு டக்குன்னு அடிக்கடி துடிக்கும்', 'சிங்காரக் கண்ணே உன் தேனூறும் சொல்லாலே' என்று இனிமை பரப்பும் பாடல்கள் இவர் குரல் வளத்தில்.

நடிகர் திலகத்துடன் டூயட் பாடாத அபூர்வ கதாநாயகி. ஒரு படம் ஜோடி என்றாலும் உலகப் புகழ் பெற்ற காவியத்தில் தலைவரின் ஜோடி என்ற மகா பெருமையைத் தட்டி சென்றவர். பம்பர் பரிசு அடித்த அதிர்ஷ்டசாலி இந்த அக்கையார்.

இவர் நடிப்பில் ஜொலித்த பிற முக்கியமான படங்கள்.

தங்கச் சுரங்கம்
ராஜ ராஜ சோழன்
தாய்
பணமா பாசமா
உயிரா மானமா
பூவா தலையா
ஆதிபராசக்தி
குணா

கட்டபொம்மனில் நடிகர் திலகம், எஸ்.வரலக்ஷ்மி இரு ஒப்பற்ற கலைஞர்கள் நடிப்பில் நம்மைக் கட்டிப் போட்ட காட்சி


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=DLnkIKiFIIc

"சிங்காரக் கண்ணே உன் தேனூறும் சொல்லாலே"


http://www.youtube.com/watch?v=jD80sEl6JXw&feature=player_detailpage

"டக்கு டக்குன்னு அடிக்கடி"


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=P2u9tYrUVNQ

வயதான பின்

http://4.bp.blogspot.com/-HxLNCaZih0E/UCycxO4jZMI/AAAAAAAAGjA/PFRxzc4_fYs/s320/download+(1).jpg

1.10.2007 அன்று நடிகர் திலகத்தின் 79 ஆவது பிறந்தநாளையொட்டி நடைபெற்ற விழவில் நடிகை எஸ்.வரலக்ஷ்மி அவர்களுக்கு டாக்டர் சிவாஜி கணேசன் மெமோரியல் அவர்ட் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. அந்த நிழற்படம் இங்கே.

http://www.thehinduimages.com/hindu/ImageLoader?IMAGE=p0dd4de7.jpg&IMAGE_TYPE=WATERMARK

நமது அன்பு முரளி சார் 2.10.2007 அன்று நடிகர் திலகம் பாகம் 8 இல் பதிவிட்ட நடிகர் திலகத்தின் 79 ஆவது பிறந்தநாள் விழாவினைப் பற்றிய பதிவிலிருந்து ஒரு பகுதி.

நன்றி முரளி சார்.


Cho started in his usual style. “ Ram Sivaji-yai patri pesa thaguthi illai endrar. Sivaji nadippai vimarsikka thaguthi paartha indha ulagathile orutharalum mudiyathu. Ini oruthan pirandhudhan varanum. Naan-ellam thaguthi paartha vimarsanam panren. Appadi paartha naan endha vishyathai patriyum comment adikka mudiyathu.” He said that deserving yesteryear artists are being honoured. About Varalakshmi ”avanga paadi nadikka koodiyavanga. Indha kaalathile heroine pesuvathe periya saadhanai”.

Gopal.s
11th June 2013, 01:25 PM
ஜக்கம்மா வேறில்லை திக்கம்மா (ஓடி போக)

vasudevan31355
11th June 2013, 01:58 PM
ஜக்கம்மா வேறில்லை திக்கம்மா (ஓடி போக)

எனக்குப் புரியும்...எல்லோருக்கும் புரியுமா? :)

vasudevan31355
11th June 2013, 02:03 PM
ஜக்கம்மா வேறில்லை திக்கம்மா (ஓடி போக)

இனிமே உன் பதிவுக்கு என்னுடைய feedback ம் ஒரே ஒரு லைன் தான். :)

vasudevan31355
11th June 2013, 02:06 PM
(மாறு வேடத்தில் உலா வரும் கொல்டிகள் இந்த அரவத்திற்கு விளக்குவார்களா?)

ஜாதி, இனக் கலவரத்தை உண்டு பண்ணாதே. வன்மையாக ஆட்சேபிக்கிறேன். no smiley

Gopal.s
11th June 2013, 02:19 PM
இனிமே உன் பதிவுக்கு என்னுடைய feedback ம் ஒரே ஒரு லைன் தான். :)
இதை பாரு. நான் நிறைய எழுதாமல் பாக்கி விடுவேன். அதனால் உனக்கு scope .நீயும் ,முரளியும் மற்றவர் எழுத எங்கே இடம் விடுகிறீர்கள்? எல்லாவற்றையும் இண்டு இடுக்கு விடாமல் கவர் பண்ணி விட்டு, கிண்டலாய் பண்ணுகிறாய்? நான்தான் உன் நாயகியர் தொடர் ,சண்டை தொடர் (நீ சண்டை போட்ட போதே) விடாமல் தொடர்கிறேனே?

Gopal.s
11th June 2013, 02:20 PM
ஜாதி, இனக் கலவரத்தை உண்டு பண்ணாதே. வன்மையாக ஆட்சேபிக்கிறேன். no smiley.
'வீரபாண்டியக் கட்டபொம்மன்' தெலுங்கு மொழியில் 'வீரபாண்டியக் கட்டபிராமணா' (1959)என்று மொழி மாற்றம் செய்யப்பட்டது.
அடப்பாவி, பிராமணன் அப்படி இப்படின்னு எழுதி, இதை ஆரம்பிச்சவன் நீதானே?

vasudevan31355
11th June 2013, 02:27 PM
அடப்பாவி, பிராமணன் அப்படி இப்படின்னு எழுதி, இதை ஆரம்பிச்சவன் நீதானே?

அதே அடப்பாவி! பொல்லாத சொப்பனம் நீயும் கண்டாயோ! :)

vasudevan31355
11th June 2013, 02:30 PM
இப்படியே போனால் 25 பதிவை நாம் ரெண்டு பேரும் இழுத்துட்டோம் என்று கார்த்திக் சார் பிராது கொடுப்பார். விட்டுவிடுவோம். :)

vasudevan31355
11th June 2013, 02:37 PM
ராகுல்,

காமெராவில் நிறைய 'கிளிக்' செய்து எடுத்து போட்டிருக்கிலாமில்ல. anyhow 'ராஜா'வின் ராஜாங்கத்தைப் பற்றி இன்ட்ரெஸ்ட் ஆக எழுதியிருந்தீர்கள். படிப்படியாக முன்னேறுகிறீர்கள். கீப் இட் அப்.

iufegolarev
11th June 2013, 02:56 PM
பிராணனை அவ்வப்போது எடுக்கும் பிராண நாதர்களே ! வாசுதேவ கோபாலா .....உங்களுடைய லொள்ளும் சொல்லும் எங்கள் விலா எலும்பை வலுவிழக்க செய்கின்றனவே ! அதிலும் 25 இடுகைகள் இப்படியே ஓட்டிவிடலாம் என்ற சூசகமான தகவலை தங்களை போல எந்த பிராண நாதர்களால் முடியும்...வாசுதேவா.....கோபால...திரியின் செல்வங்களே ....திரியின் முத்துக்களே ....திரியின் விலைமதிப்பில்லா வைடூர்யங்களே ! மெய் சிலிர்கிறதடா உங்களுடைய இந்த திறமையை யோசித்தால் !

vasudevan31355
11th June 2013, 02:59 PM
நன்றி சித்தூர் வாசுதேவன் சார். யாரையோ பார்க்கனும்னு ஆசைப்பட்டீங்களே! நேற்று எனக்கு போன் பண்ணும் போது கூட சொன்னீங்களே! பாவம் சார் நீங்க. என்னைப் பார்த்துமா உங்களுக்கு அந்த ஆசை?. சரி! விதி வலியது :)

vasudevan31355
11th June 2013, 03:00 PM
வாங்க சவுரி சார்.

கோ,
ரெண்டு மூணாச்சு :)

vasudevan31355
11th June 2013, 03:04 PM
பிராணனை அவ்வப்போது எடுக்கும் பிராண நாதர்களே ! வாசுதேவ கோபாலா .....உங்களுடைய லொள்ளும் சொல்லும் எங்கள் விலா எலும்பை வலுவிழக்க செய்கின்றனவே ! அதிலும் 25 இடுகைகள் இப்படியே ஓட்டிவிடலாம் என்ற சூசகமான தகவலை தங்களை போல எந்த பிராண நாதர்களால் முடியும்...வாசுதேவா.....கோபால...திரியின் செல்வங்களே ....திரியின் முத்துக்களே ....திரியின் விலைமதிப்பில்லா வைடூர்யங்களே ! மெய் சிலிர்கிறதடா உங்களுடைய இந்த திறமையை யோசித்தால் !


அட்ரா சக்கை! அட்ரா சக்கை!

காலையிலிருந்து நாயகியர் தொடர். அதனால்தான் ரிலாக்ஸுக்கு கொஞ்சம். ஹி... ஹி...ஹி. தூய தமிழ் வேறயா..

iufegolarev
11th June 2013, 03:04 PM
சட்டென புரிந்துகொண்டீர்களே என் செல்வங்களே !

vasudevan31355
11th June 2013, 03:13 PM
ஒரு புதுத் தொடர்

அதுவும் விஷுவல் தொடர் ஆரம்பிக்கலாம்னு ஒரு ஐடியா. தம்பி ராகுல்ராம் கேட்டிருக்கார். இல்லையென்று மறுக்க முடியுமா? தலைவரின் உடையலங்காரங்களைப் பற்றி. தலைவர் உடைகளில் காட்டிய கவனம், அதை உடுத்துவதில் காட்டும் கவனம், எந்த உடையாய் இருந்தாலும் அவருக்கு அற்புதமாய் பொருந்தும் அழகு. இவற்றை வருங்கால சந்ததியினர் அறியட்டும் என்ற பேராசையில் ஒரு தொடர். விஷுவலாக. அனைவர் கருத்தையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

iufegolarev
11th June 2013, 03:35 PM
எப்போ எய்த்ரீங்கோ ?

vasudevan31355
11th June 2013, 03:42 PM
எய்தில...ஸ்டில் மட்டுந்தான்.

ScottAlise
11th June 2013, 03:43 PM
Thanks for your comments KC Sekar sir, S vasudevan sir & Murali sir

ScottAlise
11th June 2013, 03:52 PM
Thanks for your comments KC Sekar sir, S vasudevan sir & Murali sir

Gopal.s
11th June 2013, 04:06 PM
வாங்க சவுரி சார்.

கோ,
ரெண்டு மூணாச்சு :)
வாசு,
தீவிர வாதிகளிடம் நிஜ சண்டை போட்டு அலுத்து , நம் செல்ல சண்டை ஒரு relaxation அல்லவா? தீவிரவாதிகள் SIM , address அடிக்கடி மாற்றுவார்களாமே? எந்த டிகிரி யில் திரும்பினாலும் எச்சரிக்கை தேவையே.

Gopal.s
11th June 2013, 04:15 PM
ஒரு புதுத் தொடர்

அதுவும் விஷுவல் தொடர் ஆரம்பிக்கலாம்னு ஒரு ஐடியா. தம்பி ராகுல்ராம் கேட்டிருக்கார். இல்லையென்று மறுக்க முடியுமா? தலைவரின் உடையலங்காரங்களைப் பற்றி. தலைவர் உடைகளில் காட்டிய கவனம், அதை உடுத்துவதில் காட்டும் கவனம், எந்த உடையாய் இருந்தாலும் அவருக்கு அற்புதமாய் பொருந்தும் அழகு. இவற்றை வருங்கால சந்ததியினர் அறியட்டும் என்ற பேராசையில் ஒரு தொடர். விஷுவலாக. அனைவர் கருத்தையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
ஏற்கெனெவே ரெண்டு மூணு தொடர்கள். நாயகியர் இன்னும் ரொம்ப இருக்கு. சண்டை முடித்து விட்டாயா? ஊரை பற்றி stock தீர்ந்திருக்கும். (ஊரில் மொத்தம் இருக்கும் ஆட்களுக்கு ஒவ்வொரு பக்கம் எழுதினாலும்).சண்டை முடித்து விட்டு ,உடை தொடர் தொடங்கு.ஆவலுடன் காத்திருக்கிறோம்.

iufegolarev
11th June 2013, 04:15 PM
வாசு,
தீவிர வாதிகளிடம் நிஜ சண்டை போட்டு அலுத்து , நம் செல்ல சண்டை ஒரு relaxation அல்லவா? தீவிரவாதிகள் SIM , address அடிக்கடி மாற்றுவார்களாமே? எந்த டிகிரி யில் திரும்பினாலும் எச்சரிக்கை தேவையே.

பாட்டெழுதி பேர் வாங்கும் புலவர்கள் இருக்கிறார்கள்...! குற்றம் கண்டுபிடித்தே பேர் வாங்கும் புலவர்களும் இருக்கிறார்கள்..! சிரிக்காதீர்...இதில்..நீங்கள் எந்த வகுப்பை சேர்ந்தவர் என்று உங்களுக்கே தெரியும்...!

https://www.youtube.com/watch?v=P1mj0ZSNcGc

iufegolarev
11th June 2013, 04:21 PM
http://www.youtube.com/watch?v=c3DFEitWaHI

Gopal.s
11th June 2013, 04:29 PM
பாட்டெழுதி பேர் வாங்கும் புலவர்கள் இருக்கிறார்கள்...! குற்றம் கண்டுபிடித்தே பேர் வாங்கும் புலவர்களும் இருக்கிறார்கள்..! சிரிக்காதீர்...இதில்..நீங்கள் எந்த வகுப்பை சேர்ந்தவர் என்று உங்களுக்கே தெரியும்...!


இந்த அபாண்ட குற்றச்சாட்டை மறுக்கிறேன். பாட்டுக்கு பாட்டு வந்து பார். பாட்டெழுதித்தான் பேர் வாங்குகிறேன்.

mr_karthik
11th June 2013, 04:35 PM
அன்புள்ள முரளி சார் மற்றும் கோபால் சார்,

மெகா ஸ்டார் மம்மூட்டி அவர்கள் நடிகர்திலகத்துடன் சேர்ந்து நடிக்கவில்லையே தவிர நடிகர்திலகத்துக்கு புகழ்மாலை சூட்ட அவர் என்றைக்கும் தயங்கியதில்லை. அவர் ஒருமுறை பேட்டியில் சொன்னது....

"நான் நடிக்க வந்தபோது நடிகர்திலகம் சிவாஜி சாரின் நடிப்பில் மயங்கி அவருடைய நடிப்பில் பத்தில் ஒருபங்கு நடித்தாலே போதும் என்று விரும்பினேன். தொடர்ந்து நடித்து வந்தபோது எனக்கு மூன்று முறை சிறந்த நடிகர் என்று தேசிய விருது கொடுத்தார்கள். மூன்று தேசிய விருதுகளையும் கையில் வைத்துக்கொண்டு இப்போது சொல்கிறேன். நான் இன்னும் சிவாஜி சாரின் நடிப்பில் பத்தில் ஒருபங்கைத் தொடவில்லை".

என்ன ஒரு அற்புதமான கமெண்ட்.

mr_karthik
11th June 2013, 05:36 PM
பிராணனை அவ்வப்போது எடுக்கும் பிராண நாதர்களே ! வாசுதேவ கோபாலா .....உங்களுடைய லொள்ளும் சொல்லும் எங்கள் விலா எலும்பை வலுவிழக்க செய்கின்றனவே ! அதிலும் 25 இடுகைகள் இப்படியே ஓட்டிவிடலாம் என்ற சூசகமான தகவலை தங்களை போல எந்த பிராண நாதர்களால் முடியும்...வாசுதேவா.....கோபால...திரியின் செல்வங்களே ....திரியின் முத்துக்களே ....திரியின் விலைமதிப்பில்லா வைடூர்யங்களே ! மெய் சிலிர்கிறதடா உங்களுடைய இந்த திறமையை யோசித்தால் !

"இதை 'மனோகரா' கண்ணாம்பா ஸ்டைலில் படிக்கவும்" என்று ஒரு வரி சேர்த்திருக்கலாம்.

Gopal.s
11th June 2013, 07:28 PM
எல்லோர்க்கும் வழிகாட்ட நான் இருக்கிறேன்
வந்தாரை வரவேற்க காத்திருக்கிறேன்
ஆமா நீங்க எது வரைக்கும் படிச்சிருக்கீங்க?

vasudevan31355
11th June 2013, 07:31 PM
இரு மலையாள சூப்பர் ஸ்டார்களுடன் திரையுலக பீஷ்மர்.

https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-prn1/524477_324207604316208_2104574145_n.jpg

vasudevan31355
11th June 2013, 07:39 PM
மோகன்லாலுடன்

https://sphotos-a.xx.fbcdn.net/hphotos-prn1/p480x480/579710_310860165710266_857452697_n.jpg

Gopal.s
11th June 2013, 07:54 PM
ஆஹா, அன்டாகாகுசம், அபுகா ஹுசும் ,படம் வேண்டும் சீசே என்றால் ஒரு பூதம் நம்மிடையே தயார். பேய்,பூதம், பிசாசு எப்படி வேண்டுமானாலும் வசதி படி வைத்து கொள்ளலாம். எனக்கு ஒரு ஆட்சேபனையும் இல்லை.

vasudevan31355
11th June 2013, 08:12 PM
மலையாள நடிகர்களுடன் நம் மன்னவர்

மலையாள நடிகர் சத்யனுடன்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/AVSEQ03DAT_004209640.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/AVSEQ03DAT_004209640.jpg.html)

திக்குரிச்சி சுகுமாரன் நாயர் அவர்களுடன்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/schoolmastermalayalamsuperprintFLV_007912480.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/schoolmastermalayalamsuperprintFLV_007912480.jpg.h tml)

பிரேம் நசீருடன்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/schoolmastermalayalamsuperprintFLV_001898400.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/schoolmastermalayalamsuperprintFLV_001898400.jpg.h tml)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/AVSEQ01DAT_000361680.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/AVSEQ01DAT_000361680.jpg.html)

மலையாள 'மது'வுடன்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/VTS_01_3VOB_000801377.jpg

vasudevan31355
11th June 2013, 08:39 PM
super song from 'yathramozhi'


http://www.youtube.com/watch?v=hbxVV7A1mjw&feature=player_detailpage

iufegolarev
11th June 2013, 09:10 PM
Vasudevan sir,

Friday and Saturday @ NLC

vasudevan31355
11th June 2013, 09:23 PM
Vasudevan sir,

Friday and Saturday @ NLC

Welcome sir.

RAGHAVENDRA
11th June 2013, 09:41 PM
N - Needhi
L - Lakshmi Kalyanam
C - Chiranjeevi

.....?

RAGHAVENDRA
11th June 2013, 09:43 PM
காலையில் ஒரு வேலை நிமித்தமாக வெளியில் சென்று விட்டு மாலையில் வந்து பார்ப்பதற்குள்...

42 பதிவுகள் ....

சூப்பர் ... கலக்குங்கள் நண்பர்களே....

RAGHAVENDRA
11th June 2013, 09:44 PM
வாசு சார்,

தங்களின் புதிய காட்சித் தொடரை ஆவலுடன் எதிர்நோக்குகின்றோம்... விரைவில் ஆரம்பியுங்கள்....

இதற்கு உந்து சக்தியான திரு ராகுல் ராம் அவர்களுக்கு மிக்க நன்றி.

vasudevan31355
11th June 2013, 09:46 PM
N - Nadigar thilagam

L - Leader of Act

C - Clever personality

RAGHAVENDRA
11th June 2013, 09:47 PM
ராகுல் ராம்
ராஜா திரையரங்க அனுபவம் தங்களுக்கு புதிய உலகத்தின் கதவுகளைத் திறந்து விட்டிருக்கும். தங்கள் தலைமுறையில் நடிகர் திலகத்தின் படங்களுக்கு முன்பிருந்ததை விட அதிக அளவில் ரசிகர்களிடம் உத்வேகம் நிறைந்திருப்பதை நாங்கள் எண்ணி வியப்பதோடு மட்டுமின்றி தங்களுக்குக் கிடைத்துள்ள இந்த பேறை எண்ணி பெருமையும் பேருவகையும் கொள்கிறோம்.
இது போல் தொடர்ந்து பல அனுபவங்களைத் தாங்கள் பெற வேண்டும். அவற்றை தாங்கள் இங்கு எழுத வேண்டும். நாங்கள் படித்து மனம் நிறைவடைய வேண்டும்.
நன்றி.

RAGHAVENDRA
11th June 2013, 09:50 PM
வாசு சார்
கேரள மக்கள் என்றுமே கலையை நன்கு மதிக்கத் தெரிந்தவர்கள். அவர்களிடம் நடிகர் திலகத்திற்கு மிகப் பெரிய வரவேற்பு இருப்பதில் வியப்பில்லை என்றாலும் அது அவருடைய புதல்வர் இளைய திலகம் பிரபு அவர்களுக்கும் தொடர்ந்து கிடைப்பது தான் மிகப் பெரிய விஷயம். பிரபு அவர்களின் நடிப்பு கேரளத் திரையுலகில் நல்ல வரவேற்பினைப் பெற்றுள்ளதும் பாராட்டுக்குரியது.
திக்குரிச்சி சுகுமாரன் நாயர் நடிகர் திலகத்துடன் தவப் புதல்வன் திரைப்படத்தில் உலகின் முதலிசை பாடல் காட்சியில் நடித்திருப்பார்.
ஒ்வ்வொரு கலைஞருடனும் நடிகர் திலகத்தின் நிழற்படம் மிக அருமை. தங்கள் உழைப்பு பிரமிப்பூட்டுகிறது. பாராட்டுக்குரியது.

iufegolarev
11th June 2013, 09:56 PM
நம்முடைய திரி நண்பர்களுக்கு,

நமது மையம் திரியின் மூலம் இளைய தலைமுறையினரிடம் நடிகர் திலகத்தை பற்றிய எவராலும் பேசபடாத அல்லது அவரது பல திறமைகள் பகிரங்கமாக தாழ்புணர்ச்சி காரணம் மறைக்கப்பட்ட விஷயங்களை எடுத்து கூற என்ன வழி என்று நமது நண்பரும், "சித்தரின்" தீவிர அபிமானியுமான திரு.ஆனந்தும், நானும் யோசித்து அதை ஒரு ஒலி-ஒளி வடிவமாக கொண்டு சென்றால் என்ன என்ற எண்ணத்தின் பயனாக விளைந்ததுதான் இந்த 29 நிமிட கருத்து பரிமாற்றம் "நடிகர் திலகம் - நடிப்பிற்கும் மேல் !!

எங்கே இதை எடுக்கலாம் என்று எண்ணும்போது நமது நினைவுக்கு வந்தது அண்ணாசாலையில் உள்ள செம்மொழி பூங்கா. எந்த வித முநேர்பாடும் இல்லாமல், என் கையில் இருந்த Sony Ericson Hazel Mobile Phone வழியாக ஹெட்-செட் மாட்டிகொண்டு மாறி மாறி படம் பிடித்தோம்.

இதில் பாடல்கள் வரும் இடத்தில் மற்றும் சில காட்சிகளில் பாடலுக்கு பதிலாக ஒரு மேலைநாட்டு இசை பயன்படுத்திஇருக்கிறோம் காரணம், இதை பார்க்கும்போது பாடல்களில் கவனம் சிதறக்கூடாது என்பதற்குதான்.

எதனால் நடிகர் திலகம், நடிகர் திலகமாக அழைக்கப்பட்டார் என்ற கேள்வி முதலில். வெறும் நடிப்பு மட்டுமா..அல்லது மற்ற எல்லா அம்சமும் ஒருங்கே பெற்ற திறமை காரணமா ? இந்த கேள்விக்கு விடை காணும் முயற்சியின் முதல் பாகம் தான் "நடிகர் திலகம் - நடிப்பிற்கும் மேல் !!

திரி நண்பர்கள் அனைவரும் இது எப்படி இருக்கிறது என்ற உங்களுடைய மேலான கருத்தினை, மற்றும் இந்த முயற்சியின் நிறை குறைகள் இருப்பின் அதனையும் சுட்டிக்காட்டினால் இன்னும் நன்றாக இதுபோல விஷயங்களை மேம்படுத்தமுடியும் என்று நம்புகிறோம். !

இந்த ஒளி-ஒலி ஒரு சிலருக்கு முதலில் இருந்து வருவதற்கு YouTube Play cursor சிறிது பின்னோக்கி இழுத்தால் முதலிலிருந்து ஒளிபரப்பாகும்.


http://www.youtube.com/watch?v=ydHGXXpVGdE

iufegolarev
11th June 2013, 10:01 PM
ஆமா நீங்க எது வரைக்கும் படிச்சிருக்கீங்க?

இந்த கேள்விக்கு பதில் நான் அவர்பாணியில் கூறுவதென்றால் - " சத்தியம் தான் நான் படித்த புத்தகம் அம்மா ..சமத்துவம் தான் நான் அறிந்த பாடமும் அம்மா ! "

iufegolarev
11th June 2013, 11:05 PM
LIST OF OUR NADIGAR THILAGAM 100 DAYS FILMS @ KONGU MANDALAM - KOVAI - THE HERO WHO GAVE THE MAXIMUM NUMBER OF 100 DAYS FILMS IN KOVAI IN WHICHEVER PERIOD THE GENUINE STATISTICS MAY BE TAKEN - courtesy - Senthil Facebook

2426

Murali Srinivas
12th June 2013, 12:27 AM
வாசு சார்,

நடிகர் திலகம் மலையாள நடிகர்களுடன் இணைந்து நடித்த விவரங்களை பற்றி நான் எழுதியதை படித்தவுடன் அவர்களோடு நடிகர் திலகம் இணைந்திருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு அதிலும் குறிப்பாக [ஏற்கனவே பார்த்த புகைப்படம் என்றாலும் கூட] கலையுலக பீஷ்மர் தன மாணாக்கர்களோடு காட்சியளிக்கும் அந்த அரிய புகைப் படத்திற்கு நன்றி. உங்களுக்காக ஞான ஒளி பற்றிய ஒரு சிறு வரலாற்றுக் குறிப்பு.

தேவனே என்னைப் பாருங்கள் பாடலைப் பற்றி பேசினோம். அந்த பாடல் எப்போது படமாக்கப்பட்டது தெரியுமா?

1972-ம் ஆண்டு ஜனவரி மாதம் 19-ந் தேதி புதன்கிழமை வசந்த மாளிகை படத்திற்கு பூஜை போடப்பட்டு அன்றே படப்பிடிப்பும் துவங்கியது. முன்பொரு முறை குறிப்பிட்டது போல முதல் நாள் வாணிஸ்ரீயின் திருமண நாள் அன்று நடிகர் திலகம் முதலில் வாசல் வழியாக வருவதும் பின்னர் பின்புற வாசல் வழியாக வந்து ஆசி கூறி செல்வதுமான காட்சிதான் முதன் முதலாக படமாக்கப்பட்டது. அன்று முதல் தொடர்ந்து ஒரு வார காலத்திற்கு முதல் ஷெட்யூல் நடைபெற்றது.

அடுத்த புதன்கிழமை ஜனவரி 26. நம் யாராலும் மறக்க முடியாத ராஜா ரிலீஸ் ஆன நாள். விமானப் படை அதிகாரிகளின் குடும்ப நல நிதிக்காக [ராகவேந்தர் சார், கரெக்ட்தானே?] சென்னை தேவி பாரடைஸ் அரங்கில் காலையில் நடைபெற்ற சிறப்பு காட்சியில் நடிகர் திலகமும் ஏனைய கலைஞர்களும் கலந்து கொண்டனர். தொடர்ந்து இரண்டு நாள் மீண்டும் மாளிகை ஷூட்டிங். 28-ந் தேதி வெள்ளி இரவு நடிகர் திலகம் கொடைக்கானல் புறப்பட்டார்.

29-ந் தேதி சனிக்கிழமை முதல் பிப்ரவரி 1 வரை நான்கு நாட்கள் கொடைக்கானலில் ஞான ஒளி படப்பிடிப்பு. தேவனே என்னைப் பாருங்கள் பாடலும் மற்றும் சில வெளிப்புற காட்சிகளும் அப்போதுதான் படமாக்கப்பட்டன.

பிப்ரவரி 2 அன்று காலையில் மீண்டும் சென்னை திரும்பிய நடிகர் திலகம் அன்று கலந்துக் கொண்ட நிகழ்ச்சி என்ன தெரியுமா? அன்றுதான் சாரதா ஸ்டுடியோவில் ராஜ ராஜ சோழன் பூஜை நடைப்பெற்றது. அங்கே சென்று அந்த தொடக்கவிழா பூஜையில் கலந்து கொண்டுவிட்டு முதல்நாள் சம்பிரதாயமான படப்பிடிப்பிலும் நடித்தார்.

ஒரே பதிவில்

கார்த்திக்கிற்கு பிடித்த வரலாற்று சுவடுகள்!

கோபாலை குஷிப்படுத்த வசந்த மாளிகை!

ராகவேந்தர் சாரின் மனம் கவர்ந்த ராஜா!

வாசுவின் உள்ளதோடு கலந்து விட்ட ஞான ஒளி!

சுப்புவிற்கு ராஜ ராஜ சோழன்!

அன்புடன்

வாசு சார்,

ஆடை அலங்கார அணிவகுப்பை சீரும் சிறப்புமாக துவக்குங்கள்!

Murali Srinivas
12th June 2013, 12:40 AM
கார்த்திக்,

உங்கள் பாராட்டுகளுக்கு மிக்க நன்றி. நடிகர் திலகத்தின் திரைப்பட வரலாற்றையும் அதனுடன் பின்னிப் பிணைந்த அரசியல் நிகழ்வுகளையும் எழுதுவதில் எனக்கு எத்துனை இன்பமோ அத்துணை இன்பம் உங்களுக்கு அதைப் படிப்பதில் என்பது எனக்கு தெரியும். நீங்கள் சில காலம் திரிக்கு வராமல் இருந்த காலக்கட்டத்தில் நான் ஒரு வரலாற்று குறிப்பு எழுதினேன். அதாவது எங்கள் மதுரையில் 1978 மார்ச் 4-ந் தேதி தியாகம் வெளியான நாள் முதல் அந்தப் படம் 175-வது நாளை நிறைவு செய்த ஆகஸ்ட் 25-ந் தேதி வரை வெளியான் திரைபபடங்கள், சில முக்கியமான அரசியல் நிகழ்வுகள் ஆகியவற்றைப் பற்றிய ஒரு பதிவு அது. நீங்கள் அதை படித்தீர்களா என்று தெரியவில்லை. ஆனால் அந்த பதிவை இட்ட போதும் அதை பற்றிய பின்னூட்டங்கள் பலரும் பதிந்த போதும் நீங்கள் எழுதவில்லை என்ற குறை மனதில் இருந்தது நிஜம். ஆனாலும் எப்போதும் இது போன்ற பதிவுகளுக்கு மேலதிக தகவல்களுடன் கூடிய உங்கள் பதில் பதிவு எப்போதும் படிக்க சுவை.

அன்புடன்

ScottAlise
12th June 2013, 06:39 AM
Thanks for encouraging words Ragavendran sir and Neyveli Vasu sir

ScottAlise
12th June 2013, 06:42 AM
Neyveli Vasu sir,

You have asked why I did not upload photos, my camera was not good secondly when I went there I was completely awestruck by celebrations there superb, gala time but decent at same time, Iam sure from now on more NT movies would be screened in Kovai following the success of Raja , will surely upload photos from nwxt time

Thank you very much for considering my request starting a series on NT dressing style & accessories

Gopal.s
12th June 2013, 06:47 AM
இந்த கேள்விக்கு பதில் நான் அவர்பாணியில் கூறுவதென்றால் - " சத்தியம் தான் நான் படித்த புத்தகம் அம்மா ..சமத்துவம் தான் நான் அறிந்த பாடமும் அம்மா ! "
அந்த course எந்த காலேஜ் என்று கூறினால் நானும் சேருவேனே. ஆமாம் ,இதெல்லாம் படித்தால் மட்டும் போதுமா?

ScottAlise
12th June 2013, 06:49 AM
Dear hubbers,
Are Chiranjeevi, En desam En makkal, Anjal Petti 520(other than Raj video vision) available in DVD's in market kindly help

vasudevan31355
12th June 2013, 07:13 AM
Thank u Raghul.

That is not 'En desam En makkal'. 'En tamizh en makkal'.

vasudevan31355
12th June 2013, 07:25 AM
இன்றைய சூப்பர் நிழற்படம் (விஜய்)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/IMG-6.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/IMG-6.jpg.html)

Gopal.s
12th June 2013, 07:29 AM
ஆஹா, என் மகனின் பெயர் கொண்ட(பெயருக்கு காரணமான?) ,அவனை போலவே நான் நேசிக்கும் ஒருவன்.

Gopal.s
12th June 2013, 10:11 AM
கார்த்திக்,

நீங்கள் அதை படித்தீர்களா என்று தெரியவில்லை. ஆனால் அந்த பதிவை இட்ட போதும் அதை பற்றிய பின்னூட்டங்கள் பலரும் பதிந்த போதும் நீங்கள் எழுதவில்லை என்ற குறை மனதில் இருந்தது நிஜம். ஆனாலும் எப்போதும் இது போன்ற பதிவுகளுக்கு மேலதிக தகவல்களுடன் கூடிய உங்கள் பதில் பதிவு எப்போதும் படிக்க சுவை.

அன்புடன்
கார்த்திக் சார்,
நானும் recommend பண்ணுகிறேன். நிஜமாகவே மிக நல்ல சுவாரஸ்யமான பதிவு அது.திரி-10 .பக்கம்-126. பதிவு எண்கள் 1256,1257. அவர் பாணியில் சொன்னால் "அற்புதம்" என்ற ஒற்றை சொல்லை தவிர வேறு எதுவும் சொல்ல முடியாது.(முரளி சார் ,நீங்கள் பம்மலார் என்ற புனை பெயரில் எழுதியிருந்தால் கார்த்திக் சார் ஓடோடி வந்திருப்பார்.)

Gopal.s
12th June 2013, 10:34 AM
வாசு சார்,

ஒரே பதிவில்

கார்த்திக்கிற்கு பிடித்த வரலாற்று சுவடுகள்!

கோபாலை குஷிப்படுத்த வசந்த மாளிகை!

ராகவேந்தர் சாரின் மனம் கவர்ந்த ராஜா!

வாசுவின் உள்ளதோடு கலந்து விட்ட ஞான ஒளி!

சுப்புவிற்கு ராஜ ராஜ சோழன்!

அன்புடன்


என்ன விளையாட்டா? ராஜா,ஞான ஒளி எல்லாம் என் படங்களும் கூட.
ராஜ ராஜ சோழன் சௌரிக்கு இனாமாகவே விட்டு கொடுத்து விடுகிறேன்.

mr_karthik
12th June 2013, 02:04 PM
கார்த்திக் சார்,
நானும் recommend பண்ணுகிறேன். நிஜமாகவே மிக நல்ல சுவாரஸ்யமான பதிவு அது.திரி-10 .பக்கம்-126. பதிவு எண்கள் 1256,1257. அவர் பாணியில் சொன்னால் "அற்புதம்" என்ற ஒற்றை சொல்லை தவிர வேறு எதுவும் சொல்ல முடியாது.(முரளி சார் ,நீங்கள் பம்மலார் என்ற புனை பெயரில் எழுதியிருந்தால் கார்த்திக் சார் ஓடோடி வந்திருப்பார்.)

அன்புள்ள கோபால் சார்,

முரளி அவர்களின் பதிவை நிச்சயம் நான் பார்த்திருக்கவில்லை. இல்லையெனில் அப்போதே என் பதிலை நிச்சயம் எழுதியிருப்பேன். தற்போது அதனை தேடிக்கொண்டு இருந்தபோது தங்கள் பதிவு (பாகம் எண், பக்க எண், பதிவு எண் இவற்றோடு) சமய சஞ்சீவியாய் வந்து வழிகாட்டியது.மிகவும் நன்றி.

ஆனாலும் அந்த அடைப்புக்குறிக்குள் அந்த வாசகம் தேவையில்லை என்று நினைக்கிறேன். என்னைப்பொருத்தவரையில் பம்மலார் வேறு, முரளி வேறு, வாசு வேறு, கோபால் வேறு என்று நினைத்ததில்லை. வரலாற்றுப் பதிவுகள் இடும்போது முரளி, அவரே ஆவணப்பதிவுகள் இடும்போது பம்மலார், அவரே ஸ்டில்ஸ் மற்றும் பாடல் காட்சிகள் பதிவேற்றும்போது வாசுதேவன், அவரே பழைய நினைவுகளை பகிர்ந்துகொள்ளும்போது கார்த்திக் என்று நினைப்பவன் நான்.

அன்புள்ள முரளி சார்,

கோபால் உதவியால் தங்கள் பதிவைப்பிடித்து விட்டேன். மிகப்பெரிய பதிவு குறைந்தது மூன்று நான்கு முறை படித்து என் பதிலை பதிவிடுகிறேன். என்னை நினைவு வைத்து நினைவூட்டியமைக்கு மிக்க நன்றி.

Gopal.s
12th June 2013, 02:15 PM
அப்போது கோபால் வேறு என்று நினைக்கிறீங்க?

(நானாட்சி செய்து வரும் நான் மாடகூடலிலே.....)

Gopal.s
12th June 2013, 03:05 PM
இது என்ன வம்பா போச்சு. சும்மா ஒரு உதாரணத்துக்கு நாலைந்து பெயர்களை சொன்னால் அதிலும் பங்கு கேட்கிறீர்களே. எனக்குள் நீங்கள் அனைவரும் அடக்கம் என்பதால்தான் என் பெயரையும் சேர்த்துக்கொண்டேன். போதுமா?.
மெனக்கெட்டு தேடி பிடிச்சு பதிவு போட்டவன் பேரையே மறக்கும் அளவா பாசம் கண்ணை மறைக்கும்?
உங்களுக்குள் அனைவரும் அடக்கமா? திருவிளையாடல் range லே போயிட்டீங்க!!!!!!!!!!!!!!!!!!!!!

RAGHAVENDRA
12th June 2013, 03:16 PM
அடுத்த புதன்கிழமை ஜனவரி 26. நம் யாராலும் மறக்க முடியாத ராஜா ரிலீஸ் ஆன நாள். விமானப் படை அதிகாரிகளின் குடும்ப நல நிதிக்காக [ராகவேந்தர் சார், கரெக்ட்தானே?] சென்னை தேவி பாரடைஸ் அரங்கில் காலையில் நடைபெற்ற சிறப்பு காட்சியில் நடிகர் திலகமும் ஏனைய கலைஞர்களும் கலந்து கொண்டனர். தொடர்ந்து இரண்டு நாள் மீண்டும் மாளிகை ஷூட்டிங். 28-ந் தேதி வெள்ளி இரவு நடிகர் திலகம் கொடைக்கானல் புறப்பட்டார்.


ராஜாவைப் பொறுத்த மட்டில் முதல் நாள் சிறப்புக் காலைக் காட்சி எனக்கு ஞாபகம் இருந்த வரையில் ரசிகர் மன்றக் காட்சியாக நடைபெற்றது. அதை ஒட்டி வந்த ஞாயிற்றுக்கிழமை காலையில் இரு தியேட்டர்களில் ராஜா சிறப்புக் காலைக் காட்சி நடைபெற்றதாக நினைவு. ஓம் விக்நேஸ்வரா சபா சார்பாக ஆனந்த் தியேட்டரிலும் விமானப் படை வீரர்களுக்கான சிறப்புக் காட்சி தேவி பேரடைஸிலும் நடைபெற்றது என நினைக்கிறேன்.

Gopal.s
12th June 2013, 03:23 PM
ஹைய்யா, ராஜா முதல் காட்சி முதல் நாள் குடந்தையில் பார்த்தேன். பட்டிக்காடா பட்டணமா முதல் நாள் evening show 85 பைசா மதுரை சென்ட்ரலில் பார்த்தேன். வசந்த மாளிகை கொஞ்சம் delay .நான்காம் நாள் குடந்தை ஜுபிட்டர்.

mr_karthik
12th June 2013, 04:41 PM
நமது அண்ணனும் எங்கள் அண்ணியும் இணைந்து கலக்கிய / கலக்கிக்கொண்டிருக்கும் / இன்னும் கலக்கப்போகும் இணையில்லா காவியம் "ஆண்டவன் கட்டளை" இன்று பொன்விழா ஆண்டு துவக்கம் (12.06.1964 - 12.06.2013).

காலத்தால் அழியாத தத்துவ விருட்சம் "ஆறு மனமே ஆறு"

பார்க்கப் பார்க்க திகட்டாத "அமைதியான நதியினிலே ஓடம்"

எக்காலத்து கவர்ச்சி நடிகையும் தோற்றுப் போகும் "அலையே வா அருகே வா".

சிரித்து சிரித்து வயிறு புண்ணாகும் "சிரிப்பு வருது சிரிப்பு வருது"

உடன் நடிப்பவர்களுக்கும் டூயட் பாட வைத்து அழகு பார்க்கும் பெருந்தன்மைப் பெட்டகத்தின் படத்தில் "கண்ணிரண்டும் மின்ன மின்ன"

என்ன இல்லை இக்காவியத்தில். எல்லாம் உண்டு இந்த ஓவியத்தில்.

ரசிகப்பெருமக்கள் பதிவுகளைத் தந்து மகிழலாமே. (இப்படம் பிலிமோகிராபியில் இடம்பெறும்போது பதிவுகள் அங்கு மாற்றப்பட்டு பாதுகாக்கப்படும்).

mr_karthik
12th June 2013, 05:11 PM
ஹைய்யா, ராஜா முதல் காட்சி முதல் நாள் குடந்தையில் பார்த்தேன். பட்டிக்காடா பட்டணமா முதல் நாள் evening show 85 பைசா மதுரை சென்ட்ரலில் பார்த்தேன். வசந்த மாளிகை கொஞ்சம் delay .நான்காம் நாள் குடந்தை ஜுபிட்டர்.

பெரும்பாலும் முதல்நாள் மாலைக்கட்சி ரிசர்வ் செய்து பார்ப்பது வழக்கம். ரிசர்வ் செய்யாமல் முதல்நாள் முதல்காட்சி பார்த்த படங்கள்.

சென்னை பிளாசாவில் 'ஞானஒளி'... போலீஸ் தடியடி தூள் பரத்திக்கொண்டிருக்க, கியூவில் நின்ற எங்கள் தலைக்கு மேல் இன்னொரு கியூ போய்க் கொண்டிருந்தது. எப்படியோ டிக்கட் கிடைத்து படம் பார்த்துவிட்டோம்.

சென்னை ஓடியனில் 'தர்மம் எங்கே'.... 2,60 டிக்கட் பிளாக்கில் 20 ரூபாய் கொடுத்து வாங்கிப் பார்த்தது. என் சக்திக்கு அப்போது அது அதிகத்தொகை. தலைவர் படமாச்சே, எவ்வளவானால் என்ன.

vasudevan31355
12th June 2013, 06:59 PM
'ஞானஒளி' தேவாலயம்.



வாசு சார்,

29-ந் தேதி சனிக்கிழமை முதல் பிப்ரவரி 1 வரை நான்கு நாட்கள் கொடைக்கானலில் ஞான ஒளி படப்பிடிப்பு. தேவனே என்னைப் பாருங்கள் பாடலும் மற்றும் சில வெளிப்புற காட்சிகளும் அப்போதுதான் படமாக்கப்பட்டன.



நன்றி முரளி சார்!

'ஞானஒளி' பற்றிய மேலதிக விவரங்களை அள்ள அள்ளக் குறையாமல் கொடுத்துக் கொண்டே இருக்கிறீர்கள். ஆனாலும் பசி அடங்கவில்லை.

முரளி சார்!

நான் ஒன்றை முக்கியமாகக் குறிப்பிட்டே தீர வேண்டும். 1995 மார்ச் 12 ம் தேதி எனது திருமணம் நெய்வேலியில் நடைபெற்றது. எனது தங்கையின் கணவர் அப்போது கொடைக்கானலில் BSNL ல் Junior Engineer ஆக பணி புரிந்து வந்தார். அதனால் புதுமணத் தம்பதிகளான எங்களை அவர் திருமணம் முடிந்த கையோடு கொடைக்கானலுக்கு அழைத்துச் சென்று விட்டார். அங்கு அவருக்கு நிறைய நண்பர்கள். எனவே தங்குவதற்கோ, உணவுக்கோ, வாகனங்களுக்கோ பஞ்சமில்லை.

மூன்று நாட்கள் கொடைக்கானலில் தங்கினோம். கொடைக்கானல் சென்ற அன்று இரவாகி விட்டதால் அன்று நன்றாக ரெஸ்ட் எடுத்தோம்.

அடுத்தநாள் என் தங்கையின் கணவர் அன்று எங்கு செல்லலாம் என்று என்னிடம் கேட்டார். "பில்லர் ராக் போகலாமா?" என்று கேட்டார். அதற்கு நான் "பில்லர் ராக், சில்வர் ஃபால்ஸ் எல்லாம் அப்புறம்தான். நான் இன்று கொடைக்கானல் சர்ச்சைப் பார்க்கணும்" என்றேன். அவர் ஆச்சர்யத்துடன் "ஏன் சர்ச்சுக்குப் போகணும் என்கிறாய்?" என்று வியந்த தொனியில் கேட்டார். நான் "சொல்கிறேன்... ஜீப்பை சர்ச்க்கு விடுங்கள்" என்றேன். என் மனைவிக்கும், ஒன்றும் புரியவில்லை. சர்ச்சுக்கு ஒரு அரை கிலோமீட்டர் தூரத்திலேயே ஜீப்பை நிறுத்திவிட்டு மேடான அந்த சாலையில் அருமையான வாடைக்காற்று சிலுசிலுவென வீச, அமைதியாக இயற்கை சூழல்களை என் மனைவியும் மைத்துனரும் ரசித்தபடி வந்தனர். ஆனால் என் மனம் எதிலும் லயிக்கவில்லை. மனம் முழுக்க 'ஞான ஒளி'யின் அருமை அருண் தேவனே என் மனம் முழுக்க வியாபித்திருந்தார். இதோ இதோ இன்னும் கொஞ்சம் தூரம்தான். சர்ச் மிக அருகில் வந்துவிட்டது. என் மனதிலும் படபடப்பு தொற்றிக்கொண்டது. என் தெய்வத்தின் பாதம் பட்ட இடங்களை நான் தொழும் தருணம் வந்துவிட்டது அல்லவா!. என் மனதை என்றும் ஆக்கிரமிக்கும் 'ஞானஒளி' காவியத்தின் அற்புத பாடல் படமாக்கப்பட்ட, என் தெய்வம் pray செய்த தெய்வத்தின் சன்னதி. அந்த புனிதத் தலத்தில் இப்போது நான். இனம் புரியா இன்பமா அல்லது சோகமா, இல்லை இல்லை ஏதோ ஒன்று என் மனதை பிசைந்து கொண்டிருந்தது. "ஏன் ஏதும் பேசாமல் வருகிறீர்கள்?" என்றார்கள் என் மனைவி. "வா! சொல்கிறேன்" என்றேன் மெதுவாக. சர்ச்சின் வாயிலை அடைந்தோம். பின் காலணிகளைக் கழற்றிவிட்டு சிறிது நேரம் அமைதியாய் அமர்ந்து சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டே இருந்தேன். என் மைத்துனர் "என்ன ஆயிற்று உனக்கு? என்று செல்லமாக கோபித்தார். அழகான தேவாலயம். தூய வெள்ளை மாளிகை போல புனிதமான தேவாலயம். கண்கொள்ளா அழகு. எவருடைய மனதும் அங்கிருக்கும் போது அந்த ஆலயம் போலவே தூய்மையாகிவிடும் அவர் எம்மதத்தினராய் இருந்தாலும்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/VTS_02_2VOB_002322221.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/VTS_02_2VOB_002322221.jpg.html)

'தேவனே என்னைப் பாருங்கள்' பாடலின் முதல் சரணம் முடிந்து பல்லவி மீண்டும் ஆரம்பிக்கும் போது நெடிதுயர்ந்த யூக்லிப்டக்ஸ் மற்றும் விண்ணை மறைக்கும் காட்டு மரங்களின் இடையே தவழும் கருமை மற்றும் வெண்மேகங்கள் அப்படியே காமெராவுக்குள் சுழன்றடிக்க, கைகளை வீசாமல் உடம்போடு ஒட்டியபடியே வைத்து, தேவாலயத்தின் நுழைவுப்பக்கம் செல்லும் மேடான சாலையின் குறுக்கே நிமிர்ந்தவாரே நடந்து, பின் கைகளைக் கோர்த்தபடியே தலைவர் இந்த இடத்தில் தானே கர்த்தரைத் தொழுவார் என்று அந்த சரிவுப்பகுதிக்கு மீண்டும் இறங்கி ஓடி வந்தேன். படத்தில் பார்ப்பதற்கும், நேரில் உணர்வதற்கும் நிரம்ப வித்தியாசம் இருந்தது. சீக்கிரம் பிடிபடவில்லை. சிறிது நேரம் தலைவரை மனதில் தியானித்து விட்டு பின் தேவாலயப் படிக்கட்டுகளில் சென்று அமர்ந்து கொண்டேன்.

பின் தேவாலயப் படிக்கட்டுகளை விட்டு நான் அரைமணி நேரத்திற்கு எழுந்திருக்கவே இல்லை. மனம் வரவில்லை. இந்தப் படிக்கட்டுகளில்தானே "கேள் தருகிறேன் என்றதே நீரன்றோ!" என்றபடி என் இதயதெய்வம் ஓடிவருவார் என்று அந்தப் படிக்கட்டுகளை ஒவ்வொன்றாகத் தொட்டு கண்களில் ஒற்றிக் கொண்டேன்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/VTS_02_2VOB_002351311.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/VTS_02_2VOB_002351311.jpg.html)

"என் கர்த்தரே கிடைக்குமா நிம்மதி" என்று தேவாலய முன்வாயில்களைப் பிடித்தவாறே நடிகர் திலகம் பண்ணும் அற்புத மூவ்மென்ட்டுகளை நினைத்துக் கொண்டே அந்த வாயில்களை நானும் அவ்வாறே பிடித்துப் பார்த்தேன். அதில் ஒரு தாங்கொணாத் திருப்தியும்,சந்தோஷமும் கிடைத்ததை உணர்ந்தேன். சர்ச்சில் அன்று வேறு யாரும் இல்லை. என் மனைவியும், மைத்துனரும் மாதாவின் ஒளிவீசும் உருவச் சிலையின் முன் அமர்ந்து பிரார்த்தனை செய்து கொண்டிருக்க, இங்கே நான் நடிகர் திலகம் நடந்த இடங்களை சுற்றி சுற்றி பார்த்தபடி அவர் பெயரை ஜெபித்துக் கொண்டிருந்தேன். மனம் வேறு எதிலும் செல்ல மறுத்து அடம் பிடித்தது. முழுக்க முழுக்க அருண் அவர்களின் ஆக்கிரமிப்பே நிறைந்திருந்தது. செவிகளில் "தேவனே என்னைப் பாருங்கள்" ஒலித்துக் கொண்டே இருந்தது. கண்கள் நடிகர் திலகம் உலாவிய இடங்களிலேயே அலைந்து கொண்டிருந்தது.

திருமணமான புதிதாகையால் அப்போது மனைவிக்கு இதுபற்றி அவ்வளவாகத் தெரியாது. ஆனால் மைத்துனருக்கு நன்றாகத் தெரியும் தலைவர் பித்து பிடித்தவன் என்று. சினிமாக்களைப் பற்றியும் நன்கறிந்தவர். அவர் அழகாகக் கண்டு பிடித்து விட்டார்.

"ஓ! 'ஞானஒளி' மனசில் ஓடிக் கொண்டிருக்கிறதா?!... அதற்காகத்தான் முதலில் சர்ச்சுக்கு கூப்பிட்டுக் கொண்டு போகச் சொன்னாயா?...இப்போதுதான் புரிகிறது" என்று சிரித்தபடியே கேட்டார். (அந்த மைத்துனர்தான் மதுரை "கர்ணன்" நிகழ்வுகளை போட்டோ எடுத்து அனுப்பியது) பின் சர்ச்சின் படிக்கட்டுகளில் அமர்ந்து மனதில் ஓடிக் கொண்டிருந்ததை இருவரிடமும் கொட்டித் தீர்த்தேன். பின் எனக்குத் தெரிந்தவரையில் ஒவ்வொரு இடமாக சுட்டிக் காண்பித்து இங்குதான் தலைவர் இப்படி நிற்பார்... இங்கேதான் அழகாக நடந்து வருவார்... இங்கேதான் நின்று பிரார்த்தனை செய்வார் என்று அதீத ஆவலுடன் அனைத்தையும் ஒன்று விடாமல் கூறி முடித்தேன்.

'இப்படியா ஒரு ஆள் இருப்பார்' என்ற வியப்பான ஆச்சரியக்குறி முகத்தில் படர மனைவி என்னைப் பார்த்தார். எனக்கு 'போகப் போகத் தெரியும்' சர்வர் சுந்தரம் பாடல்தான் நினைவுக்கு வந்தது. பின் ஒருமணி நேரத்திற்கு மேலாகவும் சர்ச்சில் இருந்துவிட்டு, 'ஞானஒளி' எண்ண அலைகளில் மூழ்கிவிட்டு, அதிலிருந்து விடுபடமுடியாமல் 'தேவனே என்னைப் பாருங்களை' முணுமுணுத்தபடியே அடுத்த இடத்திற்குச் செல்ல மனமில்லாமல் மனைவியுடனும், மைத்துனருடனும் சற்று எரிச்சலுடனேயே நடையைக் கட்டினேன்.

இப்போது சேனல்களில் 'தேவனே என்னைப் பாருங்கள்'" பாட்டைப் போட்டாலே என்னை விட என் மனைவி அதிக டென்ஷனாகி விடுவார்கள். "என்னங்க என்னங்க...உங்க பாட்டு... ஓடி வாங்க... ஓடி வாங்க" என்று அவர்கள் குரல் கொடுத்தவுடன் எந்த வேலை எப்படி இருந்தாலும் சரி அப்படியே போட்டுவிட்டு, பாடல் காட்சியை முழுமையாகப் பார்த்து அனுபவித்துவிட்டுதான் அந்த இடத்தை விட்டு நகர்வோம். அது இன்றுவரை தொடர்கிறது. இனியும் தொடரும்.

(எங்க வீட்டு அம்மாவுக்கு 'தேவனே' வை விடவும் "அந்த நாள் ஞாபகம்" ரொம்ப ரொம்ப பிடிக்கும் என்பது வேறு விஷயம்)

இப்போது சொல்லுங்கள் முரளி சார்! "ஞான ஒளி' என்றாலே என் நாடி நரம்பெல்லாம் ஏன் முறுக்கேறாது என்று?

அற்புதமான நினைவலைகளை எழுத்து வடிவில் கொண்டு வரச் செய்ததற்கு மிக்க நன்றிகள் முரளி சார்!

அன்புடன்
நெய்வேலி வாசுதேவன்

Gopal.s
12th June 2013, 07:13 PM
'ஞானஒளி' தேவாலயம்.




[SIZE=2][COLOR="brown"][B]நன்றி முரளி சார்!

'ஞானஒளி' பற்றிய மேலதிக விவரங்களை அள்ள அள்ளக் குறையாமல் கொடுத்துக் கொண்டே இருக்கிறீர்கள். ஆனாலும் பசி அடங்கவில்லை.


"ஞான ஒளி "வாசுதேவன் என்று இனி இவர் அழைக்க படுவார். "தில்லானா " மோகனாம்பாள் போல. என்னுடைய 7,8 வகுப்புகளின் class teacher R .B என்றழைக்கப்பட்ட பால சுப்ரமணியன்.(நெய்வேலி N .L .C block -12)ஒரு தீவிர NT ரசிகர். என்னுடன் இந்த படத்தை ஐந்து முறை பார்த்து விட்டு ஐந்தாவது முறையும் எத்தனை style நடை என்று கணக்கெடுத்து ,அங்கேயும் ஒரு கிளாஸ் நடத்தி விடுவார் தேவனே பாட்டில்.
"ஞான ஒளி " வாசுதேவன் வாழ்க.

Gopal.s
12th June 2013, 07:35 PM
ஆண்டவன் கட்டளை-

ஒரு மறக்க முடியாத படம் ,ஆலயமணி போலவே . Form &Content அவ்வளவு வித்யாசம்.

சிவாஜி-தேவிகா இணைவில் சாந்தி, நீலவானம் மற்றும் இந்த படம் முன்னிலையில். தேவிகா கிக்கின்னா கிக்கு ,அத்தனை கிக்கு ஏத்துவார். அழகே வா பாட்டில் கற்றை முடி ஈரத்துடன் நெற்றியில் புரள இவரின் காம விழைவு அழைப்பில் ,professor நொறுங்கி போவதில் ஆச்சர்யம் என்ன? அந்த மன போராட்ட காட்சி சிவாஜி-சங்கர்-விசு,ராமு கூட்டாக நடத்தும் மந்திர ஜாலம். தமிழுக்கு ரொம்ப புதுசு. இடை வேளை (ஆறுமனமே வரை)வரை படம் இமயத்துக்கு உயரும். பிறகு........ தரைக்கும் கீழே அதல பாதாளம்.

இந்த படத்தின் பிளஸ் கள் - சிவாஜி,தேவிகா, சங்கர், விஸ்வநாதன் -ராமமூர்த்தி, கொட்டாரக்கரா மற்றும் ஜாவர் (Form &Content ),ஆறுமனமே வரை உச்சம் தொடும் விறுவிறு.

minus கள் -தேவைஇல்லா தூயதமிழ் வசனங்கள், சந்திர பாபு, ஆறு மனமே பாட்டுக்கு பின் பாதாளத்துக்கு சரியும் consistency அற்ற ஏனோ தானோ திரைகதை.

கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தி செதுக்கியிருந்தால் ஆலய மணி பெற்ற வெற்றியை பெற்றிருக்க கூடிய சாத்தியகூறுகள் கொண்டது.

எனக்கு ஒரு மகா வருத்தம்- எனது ஆதர்ஷ எழுத்தாளர் ரா.கி.ரங்கராஜன் எழுதிய masterpiece படகு வீடு ,சிவாஜி நடிப்பில் உருவாவதாக இருந்து ,ஆரம்ப வேலைக்கு பின் ஆண்டவன் கட்டளை சாயலில் இருப்பதாக சொல்லி கை விட பட்டதே.

mr_karthik
12th June 2013, 07:56 PM
அன்புள்ள வாசுதேவன் சார்,

தங்களின் கொடைக்கானல் தேனிலவு அனுபவம் சிலிர்க்க வைக்கிறது. திருமணம் முடிந்து தேனிலவு சென்ற இடத்திலும் தலைவரின் நினைவு மற்றும் அவர் நடித்த இடங்களில் நீங்களும் நடந்தபோது கொண்ட பரவசம் அனைத்தும் அருமையான அனுபவங்கள். உங்களின் விவரிப்பு எங்களையும் அங்கு நடை போட வைத்தது.. ஞானஒளி தங்களின் உயிரோடு ஒன்றிவிட்டதில் வியப்பில்லை. (என் மனைவியின் அபிமானப்பாடல் 'தெய்வமே தெய்வமே நன்றி சொல்வேன் தெய்வமே'. கிட்டத்தட்ட மூணும் ஒரே 'கேட்டகரியாக இல்லை?.)

IliFiSRurdy
12th June 2013, 08:05 PM
'ஞானஒளி' தேவாலயம்.
நெய்வேலி வாசுதேவன்[/COLOR][/SIZE][/B]

"ஞான ஒளி" வாசு சார்!

இப்படி ஒரு பக்தியா!!

மெய் சிலிர்க்கிறது..உங்கள் நிகழ்விற்கு ஒரு பதினான்கு ஆண்டுகளுக்கு முன்னர்,தலைவரின் இன்னொரு ரசிகரும்,தன் தேன் நிலவிற்கு அதே கோடைக்கானலிற்கு போயிருந்தார்.ஆனால் அவர் முதலில் சென்றதோ,"வெள்ளிக்கிண்ணம்தான்"பாடல் படமெடுக்கப்பட்ட இடம்.
ம்ம்ம்ம்... பக்தியிலும் சுத்தமான, ஆசாரமான, பக்தி உங்களுடையது!

Gopal.s
12th June 2013, 08:14 PM
"ஞான ஒளி" வாசு சார்!

இப்படி ஒரு பக்தியா!!

மெய் சிலிர்க்கிறது..உங்கள் நிகழ்விற்கு ஒரு பதினான்கு ஆண்டுகளுக்கு முன்னர்,தலைவரின் இன்னொரு ரசிகரும்,தன் தேன் நிலவிற்கு அதே கோடைக்கானலிற்கு போயிருந்தார்.ஆனால் அவர் முதலில் சென்றதோ,"வெள்ளிக்கிண்ணம்தான்"பாடல் படமெடுக்கப்பட்ட இடம்.
ம்ம்ம்ம்... பக்தியிலும் சுத்தமான, ஆசாரமான, பக்தி உங்களுடையது!
ம்ம்ம்....நக்கலு.... எங்கள் ஆள் வெள்ளிக் கிண்ணத்தை முடித்து விட்டே சர்ச்சுக்கு போனார்....இதையெல்லாமா சொல்லி கொண்டிருக்க முடியும்???

iufegolarev
12th June 2013, 08:22 PM
நம்முடைய திரி நண்பர்களுக்கு,

நமது மையம் திரியின் மூலம் இளைய தலைமுறையினரிடம் நடிகர் திலகத்தை பற்றிய எவராலும் பேசபடாத அல்லது அவரது பல திறமைகள் பகிரங்கமாக தாழ்புணர்ச்சி காரணம் மறைக்கப்பட்ட விஷயங்களை எடுத்து கூற என்ன வழி என்று நமது நண்பரும், "சித்தரின்" தீவிர அபிமானியுமான திரு.ஆனந்தும், நானும் யோசித்து அதை ஒரு ஒலி-ஒளி வடிவமாக கொண்டு சென்றால் என்ன என்ற எண்ணத்தின் பயனாக விளைந்ததுதான் இந்த 29 நிமிட கருத்து பரிமாற்றம் "நடிகர் திலகம் - நடிப்பிற்கும் மேல் !!

எங்கே இதை எடுக்கலாம் என்று எண்ணும்போது நமது நினைவுக்கு வந்தது அண்ணாசாலையில் உள்ள செம்மொழி பூங்கா. எந்த வித முநேர்பாடும் இல்லாமல், என் கையில் இருந்த Sony Ericson Hazel Mobile Phone வழியாக ஹெட்-செட் மாட்டிகொண்டு மாறி மாறி படம் பிடித்தோம்.

இதில் பாடல்கள் வரும் இடத்தில் மற்றும் சில காட்சிகளில் பாடலுக்கு பதிலாக ஒரு மேலைநாட்டு இசை பயன்படுத்திஇருக்கிறோம் காரணம், இதை பார்க்கும்போது பாடல்களில் கவனம் சிதறக்கூடாது என்பதற்குதான்.

எதனால் நடிகர் திலகம், நடிகர் திலகமாக அழைக்கப்பட்டார் என்ற கேள்வி முதலில். வெறும் நடிப்பு மட்டுமா..அல்லது மற்ற எல்லா அம்சமும் ஒருங்கே பெற்ற திறமை காரணமா ? இந்த கேள்விக்கு விடை காணும் முயற்சியின் முதல் பாகம் தான் "நடிகர் திலகம் - நடிப்பிற்கும் மேல் !!

திரி நண்பர்கள் அனைவரும் இது எப்படி இருக்கிறது என்ற உங்களுடைய மேலான கருத்தினை, மற்றும் இந்த முயற்சியின் நிறை குறைகள் இருப்பின் அதனையும் சுட்டிக்காட்டினால் இன்னும் நன்றாக இதுபோல விஷயங்களை மேம்படுத்தமுடியும் என்று நம்புகிறோம். !

இந்த ஒளி-ஒலி ஒரு சிலருக்கு முதலில் இருந்து வருவதற்கு YouTube Play cursor சிறிது பின்னோக்கி இழுத்தால் முதலிலிருந்து ஒளிபரப்பாகும்.


http://www.youtube.com/watch?v=ydHGXXpVGdE

பாகம் - 2 : அனைவராலும் காப்பியடிக்கப்பட்ட நடிகர் திலகத்தின் ஸ்டைல் மற்றும் உடை அலங்கார நளினம்..!

"நடிகர் திலகம் - நடிப்பிற்கும் மேல் !! திரி நண்பர்கள் அனைவரும் இது எப்படி இருக்கிறது என்ற உங்களுடைய மேலான கருத்தினை, மற்றும் இந்த முயற்சியின் நிறை குறைகள் இருப்பின் அதனையும் சுட்டிக்காட்டினால் இன்னும் நன்றாக இதுபோல விஷயங்களை மேம்படுத்தமுடியும் என்று நம்புகிறோம். !

http://www.youtube.com/watch?v=i1GVPnyk9Ew&feature=em-upload_owner

ScottAlise
12th June 2013, 09:42 PM
நமது அண்ணனும் எங்கள் அண்ணியும் இணைந்து கலக்கிய / கலக்கிக்கொண்டிருக்கும் / இன்னும் கலக்கப்போகும் இணையில்லா காவியம் "ஆண்டவன் கட்டளை" இன்று பொன்விழா ஆண்டு துவக்கம் (12.06.1964 - 12.06.2013).

காலத்தால் அழியாத தத்துவ விருட்சம் "ஆறு மனமே ஆறு"

பார்க்கப் பார்க்க திகட்டாத "அமைதியான நதியினிலே ஓடம்"

எக்காலத்து கவர்ச்சி நடிகையும் தோற்றுப் போகும் "அலையே வா அருகே வா".

சிரித்து சிரித்து வயிறு புண்ணாகும் "சிரிப்பு வருது சிரிப்பு வருது"

உடன் நடிப்பவர்களுக்கும் டூயட் பாட வைத்து அழகு பார்க்கும் பெருந்தன்மைப் பெட்டகத்தின் படத்தில் "கண்ணிரண்டும் மின்ன மின்ன"

என்ன இல்லை இக்காவியத்தில். எல்லாம் உண்டு இந்த ஓவியத்தில்.

ரசிகப்பெருமக்கள் பதிவுகளைத் தந்து மகிழலாமே. (இப்படம் பிலிமோகிராபியில் இடம்பெறும்போது பதிவுகள் அங்கு மாற்றப்பட்டு பாதுகாக்கப்படும்).

Sure sir, will share my view about this movie

ScottAlise
12th June 2013, 09:45 PM
Vasu sir,

Your experience in visiting the church in which NT shot for Gana Oli was so real, raw that it was like a linear narration. nice article

RAGHAVENDRA
12th June 2013, 10:45 PM
வாசு சாருக்கு ஞான ஒளி எப்படியோ, அதைப் போல, சுமதி என் சுந்தரி திரைப்படத்திற்குப் பிறகு என்னுள் மிகவும் ஆழமாக ஊடுருவி அமர்ந்த படம் ஆண்டவன் கட்டளை. கதையமைப்பு எவ்வாறிருந்தாலும் நடிகர் திலகத்தைப் பொறுத்த வரையில் ஒவ்வொரு காட்சியும் ஒவ்வொரு இலக்கியம். நூறாண்டு காலத் தமிழ்த் திரையுலகத்தின் வரலாற்றில் பாடல்களைப் பற்றி எழுதும் போது முதல் 10 லிருந்து 20 இடங்களைப் பட்டியலிட்டால் அதில் இடம் பெறக் கூடிய பாடல் அமைதியான நதியினிலே மற்றும் ஆறு மனமே ஆறு இரண்டுமே ஆகும். நான் முரளி சாரிடம் பேசும் போதெல்லாம் குறிப்பிடத் தவறாத காட்சி, அந்த மன ஊசலாட்டக் காட்சி. சிற்றின்பம் மற்றும் பேரின்பம் என்ற இரண்டு மன நிலைகளிலே மனித மனம் தள்ளாடுவதை, இதற்கு முன்னும் பின்னும் யாராலும் சித்தரித்திருக்க முடியாது என்று ஆணித்தரமாய்க் கூற முடியும். ஒரு லட்சம் தடவை பார்த்தால் கூட மேலும் மேலும் புதிய பரிணாமத்தில் அவருடைய நடிப்பை ஆய்வு செய்யத் தூண்டும் காட்சி. அந்த இடத்தில் மெல்லிசை மன்னர்களின் இசையைக் குறிப்பிடாமல் இருக்க முடியாது. விட்டத்தைப் பார்த்தவாறே அமர்ந்து முகமெல்லாம் வியர்த்துக் கொட்ட தன் உள்ளத்துக்குள் எழும் போராட்டத்தை விஷுவலாகக் கொண்டு வந்த இந்தக் காட்சியில்

உலகத்தில் வேறு எந்த நடிகராலும் எந்த மொழியிலும் எந்தக் காலத்திலும் எந்தப் பிறவியிலும் செய்ய முடியாது

என்று அறுதியாக, உறுதியாகக் கூற முடியும்.

vasudevan31355
13th June 2013, 06:41 AM
'ஆண்டவன் கட்டளை'. கார்த்திக் சாருக்காகவே ஸ்பெஷல் நிழற்படங்கள்.

http://img7.imageshack.us/img7/120/vlcsnap2012011319h55m41.pnghttp://img560.imageshack.us/img560/7610/vlcsnap2012011319h56m03.pnghttp://img694.imageshack.us/img694/8016/vlcsnap2012011319h56m05.png
http://img845.imageshack.us/img845/4559/vlcsnap2012011319h56m14.pnghttp://img84.imageshack.us/img84/1267/vlcsnap2012011319h56m18.pnghttp://img4.imageshack.us/img4/5116/vlcsnap2012011319h55m37.png
http://img534.imageshack.us/img534/6159/vlcsnap2012011319h55m24.pnghttp://img577.imageshack.us/img577/117/vlcsnap2012011319h55m28.pnghttp://img818.imageshack.us/img818/5668/vlcsnap2012011319h55m56.png

Gopal.s
13th June 2013, 06:41 AM
ராகவேந்தர் சார்,
இன்னும் மேலே போங்க. இந்த காட்சி பற்றி இன்னும் விரிவாக நீங்கள் சொல்லி ரசிக்க ஆசையாக இருக்கிறது. எனக்கு மிக மிக பிடித்த காட்சிகளில் ஒன்று.

vasudevan31355
13th June 2013, 06:47 AM
'ஆண்டவன் கட்டளை'

http://img212.imageshack.us/img212/4360/snapshot20070908120455en0.jpghttp://img488.imageshack.us/img488/6622/snapshot20070907165512ix3.jpg
http://img466.imageshack.us/img466/8237/snapshot20070907164803sh1.jpghttp://img359.imageshack.us/img359/5339/snapshot20070907165305vb6.jpg
http://img359.imageshack.us/img359/4663/snapshot20070907162345xq7.jpghttp://img359.imageshack.us/img359/3481/snapshot20070908120643iq2.jpg
http://img359.imageshack.us/img359/4065/snapshot20070908120636np1.jpghttp://img359.imageshack.us/img359/9471/snapshot20070908120405no0.jpg

Gopal.s
13th June 2013, 07:02 AM
கண் மட்டும் இருந்தால் போதும். இந்த stills பார்த்தே ஒருவன் கதையை சொல்லி விடலாம்.
அப்பப்பா ..... தெய்வ பிறவிதான்.(ஆண்டவன் கட்டளையால் மோசமான தமிழகத்தில் பிறந்து விட்டாரே இந்த உலக மேதை!!!!)

vasudevan31355
13th June 2013, 09:41 AM
ஸ்டில் சொல்லும் கதை.

இப்படி இருந்த மாமேதை புரொபஸர் கிருஷ்ணன்

http://ttsnapshot.com/out.php/i17477_vlcsnap-2012-07-27-11h21m39s111.png

இந்த சுந்தரவதன தேவதையின் அழகில் மயங்கி

http://i4.ytimg.com/vi/3lIpebdRTw0/hqdefault.jpg

மனம் தடுமாற ஆரம்பித்து

http://i1.ytimg.com/vi/PYCv3vDPzrk/hqdefault.jpg

காதலாகி கசிந்து, தன் நிலை மறந்து பின் காமமுற்று

http://ttsnapshot.com/out.php/i14895_vlcsnap-2012-07-09-09h34m57s72.png

பின் அவள்மீது தான் உயிரை வைத்து

http://i1.ytimg.com/vi/lviVOSU-h8U/hqdefault.jpg

பின் காதலியை இழக்க நேர்ந்து பொலிவிழக்க ஆரம்பித்து

http://img.youtube.com/vi/G97Q6mVk4yc/0.jpg

மனம் வெறுத்து பின் அமைதி தேடி

http://img359.imageshack.us/img359/5339/snapshot20070907165305vb6.jpg

காதலியும் இந்த நிலைமைக்கு ஆளாகி

http://img488.imageshack.us/img488/6622/snapshot20070907165512ix3.jpg

மீண்டும் காதலியைக் கண்டு பேதலித்து

http://i3.ytimg.com/vi/Jngi00QQ6N0/hqdefault.jpg


பின் இருவரும் ஒன்று சேர்ந்த கதை.

http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcRbqSEqdVlWTimfCuz1IhBu0PVKj2jqz 4a1aHIHNzs_OKpQmWzSfg

அன்புடன்
நெய்வேலி வாசுதேவன்

Gopal.s
13th June 2013, 10:07 AM
perfect .மனபோராட்ட still ஒன்று சேர்த்திருக்கலாம். ஏன் switch off செய்துள்ளாய்?

vasudevan31355
13th June 2013, 10:10 AM
தேவிகா ஸ்பெஷல்

http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcQXdik2nejNqSWVP-WOsiGZamH_eKfNCvjmHgHn6Wr1co8zxR8igg

http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcT-QJ47Ac5im1hDrhhC6HA8ADf6RFwtaq6yifPDimCwsQzTliEtBQ

http://i3.ytimg.com/vi/zjAOJ9xOP-w/hqdefault.jpg?feature=og

http://i.ytimg.com/vi/ZA-GXZ5UYAE/0.jpg

http://ttsnapshot.com/out.php/i17479_vlcsnap-2012-07-27-11h59m34s252.png

vasudevan31355
13th June 2013, 10:12 AM
perfect .மனபோராட்ட still ஒன்று சேர்த்திருக்கலாம். ஏன் switch off செய்துள்ளாய்?

மனப் போராட்டம் வீடியோவாக விளக்கங்களுடன் வரும். அதனால்தான். o.k. switch 'onn'

kiamqewaf
13th June 2013, 01:21 PM
நமது அண்ணனும் எங்கள் அண்ணியும் இணைந்து கலக்கிய / கலக்கிக்கொண்டிருக்கும் / இன்னும் கலக்கப்போகும் இணையில்லா காவியம் "ஆண்டவன் கட்டளை" இன்று பொன்விழா ஆண்டு துவக்கம் (12.06.1964 - 12.06.2013).

காலத்தால் அழியாத தத்துவ விருட்சம் "ஆறு மனமே ஆறு"

பார்க்கப் பார்க்க திகட்டாத "அமைதியான நதியினிலே ஓடம்"

எக்காலத்து கவர்ச்சி நடிகையும் தோற்றுப் போகும் "அலையே வா அருகே வா".

சிரித்து சிரித்து வயிறு புண்ணாகும் "சிரிப்பு வருது சிரிப்பு வருது"

உடன் நடிப்பவர்களுக்கும் டூயட் பாட வைத்து அழகு பார்க்கும் பெருந்தன்மைப் பெட்டகத்தின் படத்தில் "கண்ணிரண்டும் மின்ன மின்ன"

என்ன இல்லை இக்காவியத்தில். எல்லாம் உண்டு இந்த ஓவியத்தில்.

ரசிகப்பெருமக்கள் பதிவுகளைத் தந்து மகிழலாமே. (இப்படம் பிலிமோகிராபியில் இடம்பெறும்போது பதிவுகள் அங்கு மாற்றப்பட்டு பாதுகாக்கப்படும்).

Please Devika is not a professional Kavarchi Nadihai , She is a goodlooking Character Actress too

kiamqewaf
13th June 2013, 01:30 PM
நமது அண்ணனும் எங்கள் அண்ணியும் இணைந்து கலக்கிய / கலக்கிக்கொண்டிருக்கும் / இன்னும் கலக்கப்போகும் இணையில்லா காவியம் "ஆண்டவன் கட்டளை" இன்று பொன்விழா ஆண்டு துவக்கம் (12.06.1964 - 12.06.2013).

காலத்தால் அழியாத தத்துவ விருட்சம் "ஆறு மனமே ஆறு"

பார்க்கப் பார்க்க திகட்டாத "அமைதியான நதியினிலே ஓடம்"

எக்காலத்து கவர்ச்சி நடிகையும் தோற்றுப் போகும் "அலையே வா அருகே வா".

சிரித்து சிரித்து வயிறு புண்ணாகும் "சிரிப்பு வருது சிரிப்பு வருது"

உடன் நடிப்பவர்களுக்கும் டூயட் பாட வைத்து அழகு பார்க்கும் பெருந்தன்மைப் பெட்டகத்தின் படத்தில் "கண்ணிரண்டும் மின்ன மின்ன"

என்ன இல்லை இக்காவியத்தில். எல்லாம் உண்டு இந்த ஓவியத்தில்.

ரசிகப்பெருமக்கள் பதிவுகளைத் தந்து மகிழலாமே. (இப்படம் பிலிமோகிராபியில் இடம்பெறும்போது பதிவுகள் அங்கு மாற்றப்பட்டு பாதுகாக்கப்படும்).

This is one of the best movie Sivaji and Devika acted together. But Devika is not a professional Kavarchi Nadigai. She is indeed a good looking character actress
too.

Gopal.s
13th June 2013, 01:35 PM
This is one of the best movie Sivaji and Devika acted together. But Devika is not a professional Kavarchi Nadigai. She is indeed a good looking character actress
too.
Mr .குமார்,
இந்த படத்தில் அவர் கவர்ச்சியாக தோற்றமளிப்பதை குறிப்பிட்டோம். தேவிகா நல்ல தோற்றம் கொண்ட நல்ல நடிகை என்று எங்களுக்கு தெரியாதா?

mr_karthik
13th June 2013, 01:59 PM
அன்புள்ள வாசுதேவன் சார், ராகவேந்தர் சார், கோபால் சார்,

'ஆண்டவன் கட்டளை' பொன்விழா ஆண்டு துவக்கத்தையோட்டி தங்கள் ஒவ்வொருவரின் பதிவுகளும் அருமை. ராகவேந்தர் அவர்கள் விவரித்த மனப்போராட்ட காட்சி விளக்கம் அந்தக்காட்சியை அப்படியே கண்முன் கொண்டுவந்தது.

வாசுதேவன் சார்,

ஆண்டவன் கட்டளை ஸ்டில் பதிவுகளுக்கு ஸ்பெஷல் நன்றிகள். அதிலும் குறிப்பாக 'அண்ணி ஸ்பெஷல்' என்று தனிப்பதிவு இட்டது என்னைப்போன்ற எண்ணற்ற ரசிகர்களை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது. 'அன்புக் கட்டளை' யினை ஏற்று 'ஆண்டவன் கட்டளை' புகைப்பட வரிசையை பதிவிட்டதோடு அதை எனக்கு டெடிகேட் செய்த தங்கள் உழைப்புக்கு பல்லாயிரம் நன்றிகள். 467-வது பதிவின் இரண்டாவது படம் அன்றைய காலகட்டத்தில் பல ஆண்களின் தூக்கத்தைக் கெடுத்த படம். நான் விரும்பும் (நடிகர்திலகம் அல்லாத) மிகச்சிறந்த பத்து தமிழ்ப்பட ஸ்டில்களில் ஒன்று.

Gopal.s
13th June 2013, 02:10 PM
தங்கள் வரிசை தப்பானது .தங்கள் வேண்டுகோளை ஏற்ற முதல் பதிவு அடியேனுடையது .

vasudevan31355
13th June 2013, 02:16 PM
தங்கள் வரிசை தப்பானது .தங்கள் வேண்டுகோளை ஏற்ற முதல் பதிவு அடியேனுடையது .

ஒரு தடவ கடைசியில்தான் இருந்துட்டுப் போயேன். சும்மா சும்மா நொய்ங்... நொய்ங்ன்னு :cool2:

vasudevan31355
13th June 2013, 02:17 PM
Go,

n.c.nammaruvai paarthirunthaal enna aaagiyirukkum? :razz:

vasudevan31355
13th June 2013, 02:34 PM
தேவாலயப் பதிவை முதலில் ரசித்த கோபால்...கோபால்...கோபால்...கோபால்! (போதுமா!?) அப்புறம் கார்த்திக் சார், அருமை நண்பர் கண்பத் சார், ரசிகவேந்தர் சார் (போனிலும்), தம்பி ராகுல்ராம் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி!

vasudevan31355
13th June 2013, 02:37 PM
கார்த்திக் சார்,

'ஆண்டவன் கட்டளை' பதிவுகளுக்கான தங்கள் உயர்ந்த பாராட்டிற்கு நன்றி! தங்கள் சந்தோஷமே எங்கள் சந்தோஷம். அண்ணியார் தங்களை ஏன் இந்த அளவிற்கு கவர்ந்தார் என்று இன்னும் நன்றாகப் புரிகிறது. அதுவும் சோகத்தில் ஓடம் ஒட்டுவது போன்ற அந்த கைகளின் பாவனை. அற்புதம்.

Gopal.s
13th June 2013, 03:10 PM
தேவாலயப் பதிவை முதலில் ரசித்த கோபால்...கோபால்...கோபால்...கோபால்! (போதுமா!?) அப்புறம் கார்த்திக் சார், அருமை நண்பர் கண்பத் சார், ரசிகவேந்தர் சார் (போனிலும்), தம்பி ராகுல்ராம் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி!
இந்த மைக் செட் , பந்தல் எல்லாம் தந்து ஒத்துழைத்த அருமை நண்பர்களுக்கு நன்றி .

ScottAlise
13th June 2013, 04:10 PM
ஆண்டவன் கட்டளை

இந்த படம் பார்க்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆவல் . என்னமோ எதோ எப்போது DVD கடைக்கு sendralum இந்த படம் வாங்க மட்டும் மாட்டேன் . ஒரு நாள் காலை ஜெயா டிவியில் இந்த படம் ஒளிபரபினர்கள் ஒரு 10 நிமிடம் பார்த்தேன் எங்க அப்பாவும் தான் , இந்த படத்தின் கதை என்ன என்று கேட்டேன் அவர் அதை சரியாக சொல்லவில்லை காரணம் மறதி , அவர் professor என்பதை மட்டும் சொன்னார் .
என் வண்டி அன்று ஆபீசில் இருந்து வரும் பொழுது வேற எங்க போகும் நேர DVD கடைக்கு தான் எப்படியோ அந்த படத்தை வாங்கி விட்டேன் . வாங்கி கொண்டு வந்து வீட்டில் எங்கோ வைத்துவிட்டேன். கிட்ட தட்ட 3 வாரம் கழித்து நேற்று கிடைத்தது . நமது திரியை browse செய்யும் பொது தான் தெரிய வந்தது இந்த படத்துக்கு இது பொன்விழா ஆண்டு என்று
இந்த படத்தை பார்க்காமல் ஒத்திவைத்து கொண்டே இருந்தேன் பொன்விழா ஆண்டு என்று தெரிந்ததும் இந்த படத்தை பார்த்தேன் .
பார்க்கும் போதே என்னை நானே நொந்து கொண்டேன் . இந்த மாதிரி ஒரு படத்தை இத்தனை நாள் பார்க்காமல் விட்டுவிட்டோம் என்பதை நினைத்து . ஒரு விஷயம் சொன்னால் என்னை எல்லோரும் அடிக்க வருவீர்கள் , அது என்னக்கு தேவிகாவின் முகம் மட்டும் நினைவில் இருக்காது , பலே பாண்டிய படத்தில் கூட அப்படி தான் .
பொதுவாக PSV pictures , சிவாஜி மற்றும் சங்கர் கூட்டணி படங்களில் ஒரு விதமான மனோதத்துவம் குணம் அடிபடையில் கதை அமைந்திருக்கும் இந்த படமும் அப்படி தான் . இதே கூட்டணி 1962ல் ஆலயமணி என்ற ஒரு மிக பெரிய வெற்றி படத்தில் ஒன்று சேர்ந்தது . கூட விஸ்வநாதன் ராமமூர்த்தி , கண்ணதாசன், ஜாவர் சீதாராமன் போன்ற stalwarts சேர்ந்தால் என்ன ரிசல்ட் கிடைக்கும் ரசிகர்களுக்கு ஒரு விருந்து தான் அது தான் இந்த படம் .
சச்சின் முதல் பால் லே சிக்ஸ் அடித்தல் எப்படி இருக்குமோ அப்படி பட்ட உணர்வு தான் இந்த படம் டைட்டில் போடும் போதே என்னை தொற்றிகொண்டது .
இந்த படத்தின் antagonist ஒரு professor மிகவும் படித்திவார், அவரை கண்டால் ஊரில் அனைவரும் மரியாதையை கலந்த பயம் கொஞ்சம் கூட வேஸ்ட் பண்ணாமல் இந்த கேரக்டர் யை டைட்டில் போடும் போதே நமக்கு பதிய வைத்துவிடுகிறார்கள் . அதுவும் அந்த கேட் சத்தம் போடும் போது நம்மவர் அதுக்கு ஒரு விளக்கம் சொல்லுவதும் , தொடர்ந்து 7 நிமிடம் நடக்கும் போது ஒரு மிக பெரிய கம்பீரம் நம்மளையும் தொற்றிகொல்கிறது நம்ம சிவாஜி ரசிகர்கள் என்று .

எனக்கு தெரிந்து எந்த ஒரு நடிகரும் இவ்வளவு கம்பீரமாக இப்படி ஜல் ஜல் என்று நடந்ததாக நினைவு இல்லை . அதுவும் அவர் அந்த கோட் யை புல்லா கவர் செய்து கையில் கொடையுடன் நடந்து செல்லும் விதம் அழகே அழகு . அதே மாதிரி நான் பார்த்த படங்களில் அதிக நேரம் காலேஜ் க்கு உள்ளே அதாவது classroom காட்சிகள் அதிகம் உள்ள படம் இதுவாக தான் இருக்கும் .
Prof .கிருஷ்ணன்க்கு மாணவர்கள் மத்தியில் இருக்கும் செல்வாக்கு அதே கல்லூரியில் டிரில் மாஸ்டர் ஆக இருக்கும் அசோகன்க்கு வெறுப்பை வரவைக்கிறது.
கல்லூரியில் சிட்டி பாபு செய்யும் குறும்பை பற்றி விசாரிக்க ladies ஹோச்டேல் க்கு செல்லும் prof கிருஷ்ணன் அங்கே இருக்கும் (ராதா) தேவிகா வை கண்டதும் சட்ட்று தடுமர்கிறார் . அந்த மல்லிகை பூ அவர் பாக்கெட்டில் இருந்து எடுத்து மூஞ்சியை அஷ்ட கோணலாக வைத்து அதை எரியும் காட்சி , அதை தொடர்ந்து அவர் வெளியே செல்லும் பொழுது அந்த பூ காய்ந்து போய் இருப்பதாய் பார்த்து அவர் சொல்லலும் வார்த்தைகள் ஒரு கவிதை

அதே prof .கிருஷ்ணன் தன் மாணவன் (AVM Rajan ) யை கண்டித்து விட்டு ராதாவை சந்திக்கும் பொழுது கொடையை ராதா விடம் கொடுத்து விட்டு ஒரு விதமான நடையில் (கையை பின்னாடி கட்டி கொண்டு ) நடக்கும் பொழுது , நடையில் இத்தனை வகை இருக்கிறதா என்பதை போலே நம்ம எல்லோருக்கும் ஆச்சரியத்தை அளிக்கிறார் . தொடர்ந்து அவர் காதல் வசப்படும் காட்சியல் அவரின் மனசை ஒரு கண்ணாடி மூலம் வேறு வேறு முகங்களை பிரதிபலிக்கிறார் கூட நம்ம தேவிகாவும் நம்மளை எங்கோ கொண்டு செல்கிறார் அற்புதமான direction .
அதை தோன்றது வரும் அலையே வா அருகே வா பாடலும் அதில் இந்த ஜோடியின் நடிப்பும் , நம்ம சிவாஜி உணர்ச்சிக்கு அடிமை படுவதும் அதில் இருந்து மீள முடியாமல் தவிப்பதும் சிறந்த நடிப்பு.
இவ்வளவு நாள் வெறும் சாமி படங்கள் , தத்துவ வாக்கியங்கள் உள்ள இல்லத்தில் இப்பொழுது கொஞ்சம் மாடர்ன் வாசம் வீசுகிறது . அடுத்தது உடை , நம்மவர் இப்போ அந்த tranformation யை உடை மூலம் நம்மளுக்கு உணர்த்துகிறார் இப்போ அவர் court , suit மற்றும் bow அணிந்து சும்மா கலக்கிறார் எந்த காதல் தேவை இல்லை என்று சொன்னாரோ அவரே இப்போ அதன் மகத்துவத்தை பற்றி பக்கம் பக்கமாக பேசுகிறார் .
ஆனால் இந்த காதல் பிடிக்காத அசோகன் (ராதாவின் முறை மாமன் ) இந்த விஷியத்தை பற்றி மாணவர்கள் யிடம் சொல்ல அது பெரும் பிரச்சனை ஆகி விடுகிறது , கிருஷ்ணன் இந்த காதலை ஒற்று கொண்ட உடன் அவர் மரியாதையை குறைகிறது .
ராதா வின் தாயாரோ ஒரு பண பேய் , ராதாவை திருமணம் செய்து கொள்ள கிருஷ்ணன் கடன் வாங்குகிறார் ஆனாலும் மீண்டும் அசோகனின் சதியில் சிவாஜியால் தேவிகாவை மணக்க முடியாமல் போகிறது . இந்த ஜோடி படகில் போகும் பொழுது ஒரு விபத்தில் சிக்கி ராதா இறந்து விடுகிறார் , கொலை குற்றவாளியாக கிருஷ்ணன் தக்க ஆதரம் இல்லாததால் விடுதலை செய்ய படுகிறார் . இதற்கு இடையில் அவர் தாயர் இறந்து விடுகிறார் , கிருஷ்ணனின் முறை பெண் இப்போ கஷ்ட படும் நிலையில், கிருஷ்ணனோ ஒரு சாமியார் போலே ஊர் ஊராக சுத்துகிறார் ஆறு மனமே ஆறு என்று (என்ன அற்புதமான ஒரு பாடல் , வரிகள் , நடிப்பு )
புஷ்பலதாவை (முறை பெண்ணை) கண்டு பிடிக்கும் கிருஷ்ணன் அவர் உடன் வேற ஊர்க்கு செல்கிறார் சந்திரபாபு உடன் , இந்த இடத்தில அவர் உடை மற்றும் முக அமைப்பில் ஒரு மாறுதல் , ஏழமையை குறிக்கும் விதமாக நடிகர் திலகத்துக்கு மற்றுமே உரித்தான ஒரு dedication .

விதி சிவாஜியை , பாலாஜியின் கம்பெனியில் வேலைக்கு அமர்த்துகிறது . அங்கே ராதாவை பார்த்து ஆச்சரியம் அடைகிறார்
ஆனால் ராதா விபத்தில் தன் நினைவை இழந்து விடுகிறார் . சில நாட்களில் பாலாஜியின் பையன் யிடம் அமைதியான நதியினிலே ஓடம் என்ற பாடலை படும் பொழுது ராதாவுக்கு நினைவு வருகிறது . இங்கே ஏவிஎம் ராஜன் மிக உயர்ந்த நிலைக்கு வருகிறார் அவர் பாலாஜியிடம் தன் குரு கிருஷ்ணன் தான் மூர்த்தி என்பதை சொல்லி விடுகிறார் முடிவில் ஏவிஎம் ராஜன் புஷ்பலதாவை திருமணம் செய்து கொள்ள , ராதா கிருஷ்ணனை கரம் பிடிக்க நம அனைவரும் ஒரு நல்ல படத்தை பார்த்த மகிழ்ச்சி உடன் வீட்டுக்கு செல்வோம்

சந்திரபாபு வின் நடிப்பும் அபாரம் குறிப்பாக சிரித்து சிரித்து வயிறு புண்ணாகும் "சிரிப்பு வருது சிரிப்பு வருது பாடலில் அவர் செய்யும் சஹாசங்கள் சூப்பர் .
அவர் சொல்லும் ஒரு வசனம் உங்களுக்கு தெரியாதது அவருக்கு தெரியும் , அவருக்கு தெரிந்தது உங்களுக்கு தெரியாது . வசனம் ஷார்ப் இது மற்றும் இல்லை படம் முழுவதும் வசனம் சூப்பர் உபயம் ஜாவர் சீதாராமன்

என்ன இல்லை இக்காவியத்தில் ஆனாலும் இந்த படம் ஏன் 100 நாட்களை தொடவில்லை என்பது மிக பெரிய கேள்வி குறி தொடர்ந்து மூன்று 100 நாட்கள் படங்கள் கொடுத்த பாதிப்பு மட்டுமே எனக்கு தெரிந்த ஒரே காரணம் அவர் படங்களே இந்த படத்தின் மிக பெரிய வெற்றியை தடுத்து இருக்கும் என்றே தோன்றுகிறது

RAGHAVENDRA
13th June 2013, 06:17 PM
எளிமைத் திலகத்தின் ஏற்றமிகு தோற்றம்

http://sphotos-d.ak.fbcdn.net/hphotos-ak-ash3/598345_601406913210250_1828425352_n.jpg

நன்றி - நமது அருமை நண்பர் எம்.எல்.கான் . முகநூல் மூலமாக

RAGHAVENDRA
13th June 2013, 06:20 PM
இதுவும் மிக அபூர்வமான போட்டோ ....

http://sphotos-e.ak.fbcdn.net/hphotos-ak-prn1/557496_570700992947509_1465872808_n.jpg

நன்றி - நமது அருமை நண்பர் எம்.எல்.கான் - முகநூல் மூலமாக

கல்தூண் படத்தின் நூறாவது நாள் விழா என நினைக்கிறேன்.

RAGHAVENDRA
13th June 2013, 06:22 PM
நல்லி சின்னசாமி செட்டி அதிபருடன் நடிகர் திலகம், மற்றும் அன்னை கமலா அம்மையார்

http://sphotos-b.ak.fbcdn.net/hphotos-ak-prn1/154193_581555968528678_1817903260_n.jpg

நன்றி - நமது அருமை நண்பர் எம்.எல்.கான் - முகநூல் மூலமாக

vasudevan31355
13th June 2013, 06:29 PM
http://onyxinvesting.com/wp/wp-content/uploads/2012/05/SignWow.jpg


Amazing photos. Thanks Raghavendran sir.

RAGHAVENDRA
13th June 2013, 06:32 PM
சிவாஜி ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் திலகம்

http://sphotos-h.ak.fbcdn.net/hphotos-ak-frc1/321436_581556658528609_415147648_n.jpg

நன்றி - நமது அருமை நண்பர் எம்.எல்.கான் - முகநூல் மூலமாக

vasudevan31355
13th June 2013, 06:45 PM
அற்புதமான மன்னவரின் படங்களை அளித்து தூக்கத்தைக் கெடுத்து விட்டீர்களே ராகவேந்திரன் சார்.

vasudevan31355
13th June 2013, 06:50 PM
கான் அவர்களை நினைத்தால் பொறாமையாய் இருக்கிறது. ம்... கொடுத்து வைத்தவர்.

Gopal.s
13th June 2013, 06:54 PM
Ragavendar Sir,
Superb Photos . Rare and enjoyable.

ScottAlise
13th June 2013, 07:35 PM
Dear RAGHAVENDRAN sir,

Photos are rocking

RAGHAVENDRA
13th June 2013, 10:44 PM
மிக்க நன்றி, வாசு, கோபால், ராகுல்.

தொடர்ந்து..

http://sphotos-d.ak.fbcdn.net/hphotos-ak-prn1/1010576_159267437588887_2064655575_n.jpg

RAGHAVENDRA
13th June 2013, 10:45 PM
http://sphotos-g.ak.fbcdn.net/hphotos-ak-frc3/972275_159266690922295_2124676285_n.jpg

நடிகர் திலகத்திற்கும் பெருந்தலைவருக்கும் நடுவில் இருப்பவர் என்.எம்.மணிவர்மா. பெருந்தலைவருக்குப் பின்னால் இருப்பவர் என்.எஸ்.வி.சித்தன்

நன்றி முகநூல் நண்பர் சிவாஜி.

இந்த வசீகரமான உடையில் நடிகர் திலகம் மேடையில் தமிழில் முழங்குவதைக் காணவும் கேட்கவும் எத்துணை பேறு நாம் பெற்றிருக்க வேண்டும்.

RAGHAVENDRA
13th June 2013, 10:46 PM
http://sphotos-h.ak.fbcdn.net/hphotos-ak-prn1/996178_159265594255738_1054474867_n.jpg

Nadigar Thilagam with Lata Mangeshkar

RAGHAVENDRA
13th June 2013, 10:47 PM
Another rare photo of course NT is not there. Kannadasan and Kamaraj.

http://sphotos-b.ak.fbcdn.net/hphotos-ak-frc3/296127_158975010951463_542961171_n.jpg

Murali Srinivas
14th June 2013, 12:05 AM
வாசு சார்,

சில நேரங்களில் நாம் எத்தனை முயற்சித்தாலும் வார்த்தைகள் நமக்கு கை கொடுக்காத சூழல் நிலவும். அப்படிப்பட்ட ஒரு சூழல், உணர்வு, உங்கள் 1995 மார்ச் மாதம் கொடைக்கானல் அனுபவத்தைப் பற்றி படித்ததும் தோன்றியது. அபிமான நடிகன், ரசிகன் என்பதை தாண்டி, அபிமான் நடிகன் நடித்த படங்களில் மிகப் பிடித்த படம் என்பதை தாண்டி ஞான ஒளி உங்கள் உள்ளத்தை ஊடுருவி இருக்கிறது என்பது தெளிவாக தெரிகிறது.

இந்தப் படம் திரையரங்கில் வந்தால் மிக்க மகிழ்ச்சி. இல்லையேல் உங்களுக்காக நமது NT FAnS அமைப்பின் சார்பாக நிச்சயம் திரையிட்டு விடுவோம். வந்து விடுங்கள்.

அன்புடன்

Gopal.s
14th June 2013, 08:15 AM
நான் ஒரு ஜோசியர் பார்த்தேன். அவர் நம் எல்லோர் ஜாதகங்களையும் NT ஜாதகத்தோடு ஒப்பிட்டு ஞான ஒளி திரையீடலுக்கு நாள் குறித்து கொடுத்துள்ளார் 20/7/2013 மிக மிக சிறந்த முஹுர்த்த நாளாகும்.(18.30 to 21.30)

RAGHAVENDRA
14th June 2013, 08:17 AM
இந்த நாளைக் குறித்துக் கொடுக்கச் சொல்லி ஜோசியரிடம் குறித்துச் சொன்னது யாரோ?

vasudevan31355
14th June 2013, 08:25 AM
இன்றைய ஸ்பெஷல் புகைப்படம் (பார்த்தசாரதி சாருக்காக)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/3-25.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/3-25.jpg.html)

Gopal.s
14th June 2013, 08:25 AM
இந்த நாளைக் குறித்துக் கொடுக்கச் சொல்லி ஜோசியரிடம் குறித்துச் சொன்னது யாரோ?
எனக்கு சகஸ்ரநாமம் என்றொரு நண்பர் உண்டு. அவரிடம் சொல்லி செல்வம் பட ஜோசியர் மூலம் நாள் கிடைத்தது.(நடிகர்திலகத்தை ஒன்றா இரண்டா என்று தவிக்க வைத்த அதே நம்பிக்கைக்குரிய ஜோசியர் தான்)

vasudevan31355
14th June 2013, 08:26 AM
நான் ஒரு ஜோசியர் பார்த்தேன். அவர் நம் எல்லோர் ஜாதகங்களையும் NT ஜாதகத்தோடு ஒப்பிட்டு ஞான ஒளி திரையீடலுக்கு நாள் குறித்து கொடுத்துள்ளார் 20/7/2013 மிக மிக சிறந்த முஹுர்த்த நாளாகும்.(18.30 to 21.30)

peraasai.

vasudevan31355
14th June 2013, 08:32 AM
'ஞானஒளி' திரையிடப் பட்டால் அனைத்து ஹப்பர்களும் நிச்சயம் கலந்து கொள்ள வேண்டும். இது அன்புக் கட்டளை. அனைவருக்கும் தேநீர் விருந்து என் செலவாக்கும். என் உயிரே அந்தப் படத்தில்தானே இருக்கிறது. சித்தூரார் அவசியம் வருவார். ஒளியைப் பார்க்க வருகிறாரோ இல்லையோ வேறு ஒருத்தரைப் பார்க்க வேண்டுமாம். நான் கூட்டி வருகிறேன்.

Gopal.s
14th June 2013, 08:37 AM
என்னது தேநீரா? படம் முடிந்தவுடன் 21.30 க்கு அனைவரும் கொலை பசியுடன் அலைந்து கொண்டிருப்போம். dinner சால சிறந்ததாகும். (கடலூர் பண்ணையாருக்கு இதெல்லாம் ஜுஜுபி)

RAGHAVENDRA
14th June 2013, 08:44 AM
பரவாயில்லை, தேநீரை வாசு சார் தருவார், டின்னரை கோபால் சார் பார்த்துக் கொள்வார். நமக்கு வேட்டை தான்

vasudevan31355
14th June 2013, 08:58 AM
என்னது தேநீரா? படம் முடிந்தவுடன் 21.30 க்கு அனைவரும் கொலை பசியுடன் அலைந்து கொண்டிருப்போம். dinner சால சிறந்ததாகும். (கடலூர் பண்ணையாருக்கு இதெல்லாம் ஜுஜுபி)

பேருதான் பெத்த பேரு. தாகத்துக்கு நீலு லேது. பண்ணையாராம் பண்ணையார். அது இருக்கட்டும் போன தடவை கொண்டு வந்த மாதிரி கொண்டு வா. மறந்துறாதே.