PDA

View Full Version : Nadigar Thilagam Sivaji Ganesan Part 11



Pages : 1 2 3 4 5 6 [7] 8 9 10 11 12 13 14 15 16

RAGHAVENDRA
24th August 2013, 07:40 AM
இதே போல் நமது வாசு சார் பதிவின் மீள் பதிவு



அன்னை ராஜாமணி அம்மையார் அவர்களது 39வது ஆண்டு நினைவு தினம்.

தவப்புதல்வனைப் பெற்று கலை உலகுக்குத் தந்த அன்புத் தெய்வம், லட்சக் கணக்கான நடிகர் திலகத்தின் ரசிகப் பிள்ளைகளின் பேரன்புத் தாய், தன் கணவர் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றதும் நிராதரவாக ஏழ்மையில் உழன்று, சொல்லொணாத் துயரங்களுக்கு மத்தியில் தன் அன்புப் பிள்ளைகளை ஆளாக்கிய அற்புத அன்னை, தெய்வ மகனை ஈன்றெடுத்து, நமக்களித்து, இந்த உலகையே உவகையுறச் செய்த ஈடு இணையில்லா மாணிக்கம், "அன்னை இல்ல"த்தின் இல்லற ஜோதி "அன்னை ராஜாமணி அம்மையார்" அவர்களின் 39வது ஆண்டு நினைவு தினம். அம்மையார் அவர்களுக்கு நமது ஆத்மார்த்தமான இதய அஞ்சலி.

அம்மையார் அவர்களின் நினைவாக "கிரஹப் பிரவேசம்" திரைக்காவியத்தில் இருந்து ஒரு சிறு ஒலி-ஒளிக் காட்சியின் மூலமாக நம் இதய அஞ்சலி.

இந்தத் திரைக்காவியத்தில் நம் நடிகர் திலகம் அவர்கள் தன் அன்புத் தாயார் அவர்களின் திருவுருவப் படத்தின் முன் நின்று அவர்களிடம் பேசுவதாக வரும் ஒரு உணர்ச்சிமயமான அற்புதக் காட்சி. தன் தாயார் அவர்களின் மேல் உள்ள பாசத்தையும், வாஞ்சையையும் நடிகர் திலகம் வெளிப்படுத்துவதைக் காணும்போது கல்நெஞ்சமும் கரைந்துருகுமே....

http://youtu.be/L3daiJD3sOs

yoyisohuni
24th August 2013, 12:57 PM
அப்பராக அப்பர் மக்களை அதி உன்னத அமைதியால் அசத்தியவன்
தப்பராக தோன்றி லோயர் தளத்தையும் துதி பாட துள்ளுகிறான்

அசத்தல் கவிதை கவிஞர் கோபால் அவர்களே.
"இதெல்லாம் அப்பர் வாக்கு லோயர் வாக்கல்ல" நம் இதயம் கவர் நடிகையர் திலகத்தின் வசனம் (நவராத்திரி) போல இதெல்லாம் அப்பரோ அப்பர் கவிதை. சுவைத்துண்டோம். மெத்த மகிழ்ச்சி.

நண்பர்களே பல பொக்கிஷ படங்களை பகிர்வதற்கு மிக்க நன்றி. எல்லாரும் நம்முள் சிறு சிறு வாக்குவாதத்தினின்று அகன்று நடிகர் திலகத்தின் நினைவால் இணைவோம்.

RAGHAVENDRA
24th August 2013, 04:30 PM
covai Shanmuga theatrail puthiya cinema shooting ondru. athil KARNAN padam oduvadhu pol settings..
https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-prn2/q71/s720x720/1146522_223601661129441_1488819858_n.jpg

https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-prn1/q71/s720x720/557403_223602564462684_1183409774_n.jpg



quoted from FB friend Senthilvel Sivaraj.

Link for the page: https://www.facebook.com/photo.php?fbid=223602564462684&set=pcb.223602594462681&type=1&permPage=1

Thank you Sivaraj

Harrietlgy
24th August 2013, 07:31 PM
என்னை போன்ற புதியவர்களுக்கு ராகவேந்திரா சார் தரும் ஆவணங்கள் அருமை.

Murali Srinivas
24th August 2013, 11:50 PM
கோபா[ல்],

வசந்த மாளிகை வெண்பா! அது தேன் இன்பா!

முப்பாலில் மூன்றாம் பால் அதிகம் சுவைக்கும் நண்பா

சீர் தளை யாப்பு அனைத்தும் உன் கை வசம் என

காட்டினாய் கவிதை கொண்டு! அதற்கு பரிசாக

கரவொலி எழுப்பினோம் இரு கரம் கொண்டு!

அன்புடன்

Gopal.s
25th August 2013, 08:01 AM
ஆஹா ,கவிதை கவிதை.
கவர்ச்சி வில்லனையும் பார்ட்-டைம் கவிஞனாக்கி விட்ட விதை ....
இதெல்லாம் பெருமையா?கடமை.
வேலனைத்தான்(மலேசிய) நினைக்கிறேன். பிறந்த நாளில்லையா?
உங்களையும் உயர்த்த எண்ணும்
அன்பு நண்பன்.

RAGHAVENDRA
25th August 2013, 08:03 AM
Vidivelli write up in The Hindu, today's (25.08.2013) edition



http://www.thehindu.com/template/1-0-1/gfx/logo.jpg

CINEMA PLUS » COLUMNS

CHENNAI, August 24, 2013

BLAST FROM THE PAST

Vidivelli (1960)

RANDOR GUY

http://www.thehindu.com/multimedia/dynamic/01561/25cp_Vedi_velli_jp_1561617f.jpg

Sivaji Ganesan, B. Saroja Devi, S.V. Ranga Rao, M.N. Rajam, K. Balajee, T.R. Ramachandran, Shanthakumari, Padmini Priyadarshini, M.R. Santhanam

A familiar theme in Tamil cinema is about a brother’s undying love for his sister and the extent to which he will go to make her life happy as a married woman. Such films are known as ‘sister sentiment’ movies. One such film was Vidivelli, written and directed by iconic filmmaker Sridhar who made many movies in Tamil, Telugu, Kannada and Hindi, including several hits.

The film was an in-house production of the Sivaji Ganesan family under the banner PrabhuRam Pictures (no prizes for guessing who they are!). Sivaji Ganesan played the role of the loving brother who will stoop to even theft for his sister.

Chandru (Sivaji Ganesan) has a sister (Rajam) who is married to a handsome Ravi (Balaji). But her in-laws insist on a diamond necklace, without which she cannot join her husband. So, Chandru steals a diamond necklace with a locket and then his sister joins her husband. He and his mother (Shanthakumari) move to Madras where he finds a job in a company owned by a wealthy man (Ranga Rao). He falls in love with his daughter (Saroja Devi). One day, the necklace falls down and the locket opens, revealing a photograph of a young man. The husband and the others at home want to know who the person is. She says she has never seen him. But suspecting the worst, she is sent back to her parental home.

Meanwhile, Chandru saves his boss from a huge loss and, the boss, in appreciation, gives him a handsome sum. Chandru buys another necklace with that money and the sister goes back to her husband. However, his boss dismisses him later to keep him off his daughter. The brother goes to the police station and surrenders himself for the theft. There’s surprise when he comes to know that the necklace belongs to his sweetheart, and the person in the locket is her brother who died in the war. However, the father denies he ever had a son. How the puzzle is solved forms the rest of the film.

Sivaji Ganesan gives an excellent performance, ably supported by Ranga Rao, Rajam and Saroja Devi. A.M. Raja, the popular singer, composed the music with lyrics by Kannadasan, Marudhakasi and Ku.Ma. Balasubramaniam for songs sung by Raja, P. Susheela, Jikki, P.B. Sreenivos and Trichy Loganathan. Some of the songs, including ‘Koduthu Paar’ became popular.

Cinematography was by Aloysius Vincent, who was assisted by P.N. Sundaram. In spite of the star-studded cast, fine acting, excellent cinematography, taut direction and pleasing music, the film did not do well at the box-office.

Remembered For The brilliant performances, the narration, direction, and impressive camerawork.



Link for the page: http://www.thehindu.com/features/cinema/cinema-columns/vidivelli-1960/article5055579.ece?homepage=true

RAGHAVENDRA
25th August 2013, 11:26 AM
Nadigar Thilagam's films in TV Channels this week 26.08.2013 - 31.08.2013


Baktha Thukaram 28.08.2013 1.30 pm Polimer TV
Ennai Pol Oruvan 31.08.2013 10 am Raj Digital plus
General Chakkaravarhi 31.08.2013 1 pm J Movies
Jallikkattu 31.08.2013 1.30 pm Kalaignar TV
Kandhan Karunai 27.08.2013 2 pm Vasanth TV
Koteeswaran 29.08.2013 11 am Mega 24
Marutha Nattu Veeran 26.08.2013 11 am Mega 24
Panam 30.08.2013 2 pm Vasanth TV
Raja Mariyathai 27.08.2013 1 pm J Movies
Sumangali 29.08.2013 1 pm J Movies
Thiyagam 31.08.2013 7.30 pm Murasu TV
Thunai 26.08.2013 7.30 pm Murasu TV
Thunai 28.08.2013 10 am Raj Digital Plus
Vidivelli 29.08.2013 10 am Jaya TV
Vietnam Veedu 31.08.2013 10 am Jaya TV

orodizli
25th August 2013, 01:49 PM
aanaithu nt- threadin neyarhalukkum vanakkam, namaskaram. kadantha 18-8-13 andru namathu rasiharhal pattalathudan shanti theatreil pasamalar kandu kaliththa naal vaarthaihalal solla mudiyathu! avvalavu santhosham , ini neraya nadigarthilagathin thiraipadangal varum endra seithiyai kettapoluthu uvahai adainthom. thahaval sarithana ena koorungal anbarhalae...

orodizli
25th August 2013, 01:54 PM
my favourite nt films; 1)veerapandiya kattabomman 2)padikkathamethai 3)aalayamani 4)ramanethanairamanadi 4)gnanaoli 5)gowravam- ippadangalin arumai, perumai, saathanaihalai koorungal thozarhalae!!!

Gopal.s
25th August 2013, 08:39 PM
தர்மம் எங்கே -1972

சிவந்த மண் நவீன மயமாக்கப்பட்ட ஒரு ராஜா கதை. அதன் மிக மிக பிரம்மாண்ட வெற்றி (பத்து திரையரங்குகளில் நூறு தாண்டியது) வீரத்திருமகன் திருலோகச்சந்தரை(ஒரு ஆங்கில பட பாதிப்புடன்) தூண்டியிருக்கலாம். சிவந்த மண்ணின் வெற்றியின் ரகசியம் defined character establishment &Identity ,சுவாரஸ்யமான திரைக்கதை(கதாநாயகன் திட்டமிட்டு வில்லனை ஒழிக்க பார்க்கும் ),திருப்பங்கள், பிரம்மாண்டம், மிக மிக சிறந்த இசையமைப்பு,சிவாஜி-காஞ்சனா இளமை,சிறந்த நடிப்பு, மிதமான வசனங்கள் இன்னும் பல பல அடுக்கலாம்.

தர்மம் எங்கே படத்தில் அக்கிரமம் புரியும் ராஜபிரதிநிதியை எதிர்க்கும் சாமான்யன் ராஜசேகர் (தன் தங்கையை மணமுடிக்க போகும் பூபதி கொலை பழியில் இருந்து தப்பிக்க)ஆபத்தில் இருந்து தப்பி ,நாடோடி ரூபா,பூபதி துணையுடன் ராஜப்ரதிநிதியை துரத்தி விட்டு ஆட்சியை பிடிக்கிறான். பதவியை எதிர்பார்க்கும் பூபதி பதவி கிடைக்காத ஆத்திரத்தில் உள்ளபோது பழைய ஆட்சியாளரின் நண்பர்கள் தூண்டுதலால் ராஜசேகரை எதிர்க்க, இது தப்பித்த ராஜபிரதிநிதியின் சதி என்று கண்டு கடைசி காட்சியில் சுபமாக முடியும் சுலப கதை.

சுதந்திர பூமியில் பல வகை என்று NT ராஜசெகரனாய் பூ விற்பதில் தொடங்கி நம் காதில் வாடிய பூக்களை சரம் சரமாய் சுற்றுவார்கள்.காமா சோமா பாத்திரங்கள் ,சுவாரஸ்யம் இல்லா ஏனோ தானோ திரைக்கதை, யாருக்கு என்ன ஆனால் என்ன என்று நாம் கதைக்குள்ளே நுழையவே தோன்றாமல் நெளிய ஆரம்பிப்போம். ஒரு நகைச்சுவை காட்சி வந்து நம்மை நிமிர வைக்கும்.அது ராஜசேகரன் வடக்கு பகுதியை வீரசிம்ம வல்லவராயருக்கும்,தெற்கு பகுதியை திருவுடையானுக்கும்,கிழக்கு பகுதியை அறிவுடை நம்பிக்கும்,மேற்கு பகுதியை நல்ல தம்பிக்கும் கொடுத்து பூபதிக்கு பெப்பே காட்டும் காட்சி.பதவி பெறுவோர் தோளோடு தோள் நின்றவர்கள் என்று வசனத்தில் சொல்ல பட்டாலும் ,அதுவரை படத்தில் காட்ட பட்டிருக்கவே மாட்டார்கள்.முத்துராமனை விட அதிக வெறி பார்வையாளர்களுக்கு வரும்.

நடிகர்திலகத்திற்கு விக் பொருந்தாவிட்டாலும் அந்த முக அமைப்பு மிக அருமையாய் இளமையாய் இருக்கும்.மேற்சட்டை மட்டும் பிரபுக்கள் கால மோஸ்தரில் இருக்கும்.கால்சட்டை நார்மல்.

இந்த படத்தில் சில மின்மினிகள் இல்லாமல் இல்லை.(திருலோக சந்தர் ஆயிற்றே?)நடிகர்திலகம்-கலைச்செல்வி(உதவி புரியும் நாடோடி பெண் ) chemistry அவ்வளவு அருமையாக வந்திருக்கும். பதவி கொடுக்கும் காட்சியில் அங்கு அமர்ந்திருக்கும் ரூபா ,ராஜசேகரனை அதே பாவனைகளை மிமிக் செய்து கலாய்த்து ,கவனம் தவற செய்வது, ஒவ்வொரு முறை காதலை சொல்ல வரும் போதும் யாராவது இடைஞ்சல் செய்வது, டீசிங் செய்து காதலை வெளியிடும் போது ஒருவரையொருவர் பலமாகவே அடித்து கொண்டாடுவது ,பள்ளியறைக்குள் பாடல் காட்சி இவையெல்லாமே படு பிரமாதமாய் வந்திருக்கும்.நடிகர்திலகம் ஒரு கலீபா பாணியில் ஆட்சி புரிந்து (பழைய சட்டையை தானே தைப்பது)வரும் போது தன் மைத்துனன் பூபதி மேல் குற்றம் சாட்டும் மார்த்தாண்டன் என்பவன் மேல் ஆத்திரப்பட்டு ஒரு கணம் பழைய ஆட்சியாளன் போலவே நடக்க முற்படும் இடம் அருமையான ஒன்று.

என் தம்பிக்கு பிறகு கத்தி சண்டையில் நன்கு perform பண்ணினாலும், highlight சண்டை காட்சி நம் வாசு சார் போட்ட முதலில் பிடி பட்டு தப்பி ஓடும் காட்சி மிக அருமையாய் நடிகர்திலகம் ரிஸ்க் எடுத்து செய்திருப்பார்.

மெல்லிசை மன்னர் பாடல்களில் சுதந்தர பூமியில் ,வீரமென்னும் பாவை,பள்ளியறைக்குள் மூன்றும் சுமாரை விட மேல் ரகம். Re -Recording வழக்கம் போல. தர்மம் எங்கே, நான்கு காலங்களும் (காலத்தை வென்ற counter ?) படுத்தல்.

1972 முழுவதும் நாம் அதிகம் எதிர்பார்ப்பு வைக்காமல் மெகா ஹிட் ஆனவை வசந்த மாளிகை,பட்டிக்காடா பட்டணமா என்ற வைரங்கள்.எதிர்பார்த்த படி எதிர்பார்த்த வெற்றி கோட்டை தொட்ட படங்கள் ராஜா,ஞான ஒளி, தவப்புதல்வன்,நீதி ஆகியவை.நிறைய எதிர்பார்ப்பு வைத்து ,பிரம்மாண்ட opening பெற்றும் சுமார் வெற்றியடைந்தது தர்மம் எங்கே?

இவ்வளவு பிரம்மாண்ட தயாரிப்பு (பெரியண்ணாவின் முதல் கலர் படம்) ,நட்சத்திர குவியல்,சிறந்த வசனகர்த்தா,நல்ல டீம் அமைந்தும் திருலோகச்சந்தரின் பொறுப்பற்ற சுவாரஸ்யமற்ற திரைக்கதையால் கோட்டை விட்ட படம்.

Richardsof
26th August 2013, 06:06 AM
இன்று பிறந்த நாள் காணும் இனிய நண்பர் திரு சந்திரசேகர் அவர்கள்
பல்லாண்டு வாழ்க என்று நட்புடன் வாழ்த்தும் http://i43.tinypic.com/ruwcgk.jpg
வினோத்

SPECIAL REMEMBRANCE DAY TO ALL 26.8.1972- THAVAPPUDHALVAN -41ST ANNIVERSARY.

Gopal.s
26th August 2013, 07:15 AM
Kcs சார் உங்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் .நீங்கள் பிறந்தது நடிகர்திலகம் மற்றும் அவர் பக்தர்களுக்காக என்று ஒவ்வொரு செயலிலும் எழுத்தாணியால் ஆழ பதிக்கிறீர்கள். வாழ்க பல்லாண்டு.

வேலன் சார், உங்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் .திரியின் வெற்றி உங்களுடைய வெற்றி.

கவிதையை படித்து வாழ்த்திய ஜோ சார், முரளி,ராகுல்,காட்டு பூச்சி,kcs , எஸ்வி ஆகியோரின் உந்துதலுக்கு நன்றி.

ராகவேந்தர் சார், நம் அனைவரின் தெய்வ தாயின் தினத்தன்று தாங்கள் மீள்பதிவிட்ட பம்மலாரின் பொக்கிஷ பதிவுகளுக்கு விசேஷ நன்றி. உங்களின் அயரா உழைப்பும்,ஈடுபாடும் உங்களை விட வயது அனுபவம் முதிர்ச்சி அனைத்திலும் சிறியவர்களான எங்களுக்கு உத்வேக வழிகாட்டி.வாழ்த்த வயதில்லை ,வணங்குகிறேன்.

எஸ்வி சார், எங்கள் தவ புதல்வனை எங்களுக்கே நினைவூட்டிய உங்கள் நடிகர்திலகத்தின் மீதான ஈடுபாடு தாங்கள் பிறந்த தங்கள் உத்தம குடியின் ஈடில்லா பரம்பரை சொத்து. சொத்தை காப்பீர்கள் என்று நம்புகிறோம்.

RAGHAVENDRA
26th August 2013, 07:18 AM
Many many happy returns of the Day Chandrasekar. May God bless you will all cheer, heath and wealth

Gopal.s
26th August 2013, 07:18 AM
Hearty welcome to our Suharaam. I will give you the appropriate links to read our reviews and analysis on your Favourite movies. Enjoy and Pl. Give your regular feedbacks and your impressions .

RAGHAVENDRA
26th August 2013, 07:30 AM
http://i1.ytimg.com/vi/giyTMqWABEc/hqdefault.jpg?feature=og

நடிகர் திலகத்தின் சிறந்த திரைக்காவியங்களில் ஒன்றான அவள் யார் திரைப்படத்தின் பாடல்கள் மூலம் தமிழ்த் திரையுலகில் அடையாளம் காணப் பட்ட திரு ரகுநாத் பாணிக்ரஹி அவர்கள் காலமானார். கண் காணும் மின்னல் தானோ, நான் தேடும் போது பாடல்கள் இன்றளவும் அவர் பெயரைச் சொல்லிக் கொண்டிருக்கும். காலஞ்சென்ற அவருடைய மனைவி சஞ்சுக்தா பாணிக்கிரஹி அவர்கள் மிகச் சிறந்த ஒடிஸி நடனக் கலைஞர்.

திரு பாணிக்கிரஹி அவருடைய ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுவோம்.

RAGHAVENDRA
26th August 2013, 07:31 AM
சுஹராம் தங்களுக்கு நல்வரவு. தொடர்ந்து நடிகர் திலகத்தின் புகழ் பாடும் ரசிகர் சேனையில் மற்றொரு வீரராக தாங்கள் வருகை புரிவது மிக்க மகிழ்ச்சியளிக்கிறது.

Gopal.s
26th August 2013, 07:50 AM
அவள் யார் படத்தில் ராஜேஸ்வரராவ் இசையில் கண்காணும் மற்றும் நான் தேடும் என்ற இரண்டு பாடல்கள் பாடிய பாடகர் என்று ஞாபகம். அவர் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்.

Gopal.s
26th August 2013, 07:51 AM
Special Thanks to Subbu for removing the posts. I am sorry Subbu if I affended you any way which is not my intention as you know.

iufegolarev
26th August 2013, 10:17 AM
Randor Guy என்ற பணம் கொடுத்தால் மட்டுமே தனது விமர்சனத்தில் ஒதவாகரை படங்களை அதில் நடித்த நடிகர்களை மட்டும் உயர்த்தி எப்போதும் விமர்சனம் என்ற பெயரில் புளுகும் ,

நம் நடிகர் திலகம் திரைப்படங்களையும், நடிகர் திலகத்தையும் எப்போதும் ஏதாவது நொட்டையும், தவறான தகவல்களையும், தன்னுடைய காழ்புணர்ச்சி கொண்ட புளுகு மூடையும் அவிழ்த்துவிடும் "Blast from the Past" என்ற தலைப்பில் தி ஹிந்து பத்திரிகையில் விமர்சனம் எழுதும் காழ்புணர்ச்சி கொண்ட Randor Guy மடையனின் மற்றும் ஒரு பொய் பித்தலாட்ட விமர்சனம் இந்த "விடிவெள்ளி"

விடிவெள்ளி திரைப்படம் மிக சிறந்த ஒரு வெற்றி பெற்ற குடும்ப காவியமாகும். சென்னையில் சித்ரா மற்றும் கிரௌன், மதுரையில் சிந்தாமணி திரையரங்குகளில் நூறு நாட்களுக்கு மேல் ஓடிய நல்லதொரு வெற்றிகாவியம். ( ஆதாரம் இங்கு பதிவிசெயப்பட்டுளது: உபயம் திரு. பம்மலர் அவர்கள்)

உண்மை இப்படி இருக்க இந்த மடையன் RandorGuy BOX ஆபீசில் விடிவெள்ளி சோபிக்கவில்லை என்று தனது வழக்கமான நடிகர் திலகத்தின் திரைப்படத்தை பற்றிய ஒரு அண்டப்புளுகை அவிழ்த்து விட்டிருப்பது மிகவும் துரத்ரிஷ்டவசமானது.

இனியும் இதுபோல இந்த மடையன் புளுகை அவிழ்த்துவிடாமல் இருக்க நண்பர்கள் எவரேனும் அவனுடைய தொலைபேசி எண்ணை எனக்கு இங்கு பதிவிடுவாரேயானால், அவனிடம் இதுபற்றி நேரிடையாக தக்க ஆதாரங்களுடன் விளக்கவும், இனி இதுபோன்ற கதைகளையும், புளுகுமூட்டைகளையும் அவிழ்த்து விடுவது நிருத்திகொள்ளும்படியும் எச்சரிக்கை விடுக்க முடியும்.

நடிகர் திலகத்தின் மேல் உண்மையான மதிப்பும் மரியாதையும் இருக்குமேயானால் நண்பர்கள் இதற்க்கு கடும் கண்டனத்தை தெரியபடுத்த வேண்டும் என்றும் கேட்டுகொள்கிறேன்.

2519

iufegolarev
26th August 2013, 10:23 AM
Special Thanks to Subbu for removing the posts. I am sorry Subbu if I affended you any way which is not my intention as you know.

Dear Sir,

Thanks is not required. I wrote it with Genuine Intention but it misrepresented the content. This is Kaliyuga. So obviously, there is no value for Genuinity.

Gopal.s
26th August 2013, 10:35 AM
Subbu,
How to protest? Give Mail ID or Hand Cell No of Randor Guy Ranga Durai to do the same.

mr_karthik
26th August 2013, 11:30 AM
நண்பர் சுப்பு அவர்கள் சொன்னதை முழுக்க ஒப்புக்கொள்கிறேன். இந்த ராண்டார் கய் என்பவரைப்பற்றி பலமுறை நான் இங்கே எச்சரித்திருக்கிறேன். நடிகர்திலகத்தின் படங்களை மட்டம் தடடுவதையே வேலையாகக் கொண்டு அலைபவர். (எவனெவனோ முட்டி மோதிப் பார்த்து மூக்குடைபட்டுப் போய்விட்டான்கள். இந்த ராண்டார் எம்மாத்திரம்).

இருப்பினும் நமது ரசிகர்கள் ஆர்வக்கோளாறு காரணமாக, நடிகர்திலகத்தின் படங்களை பற்றி அவர் என்ன எழுதிக் கிழித்திருக்கிறார் என்பதைக்கூட சரியாகப் படிக்காமல் படத்தின் பெயரை மட்டும் பார்த்து விட்டு அதை அப்படியே இங்கே மறுபதிவு செய்வதை நிறுத்த வேண்டும். அத்துடன் அப்படிப்பட்ட குப்பைகளுக்கு 'லிங்க்' தருதையும் நிறுத்த வேண்டும்.

ஒருமுறை பொதிகை தொலைக்காட்சியில் இந்த ராண்டாரின் பேட்டியைப் பார்த்திருக்கிறேன். நடிகர்திலகத்தை கொண்டு பிழைப்பை நடத்திவிட்டு அவர் பெயரையே உச்சரிக்க மறுக்கும் ஏ.வி.எம்.சரவணன், எம்.எஸ்.விஸ்வநாதன், வாலி இவர்களைப் போலவே இந்த ஆள் வாயிலிருந்தும் அந்த மூன்றெழுத்து பெயரே வந்ததே தவிர, நடிகர்திலகம் உள்பட வேறு யாரைப்பற்றியும் பேசவில்லை. அப்போதே தெரிந்தது இவர் எப்படிப்பட்ட ஆள் என்பது.

எனவே இவரை எல்லாம் ஒரு விமர்சகராக அல்ல, மனிதனாகக் கூட மதித்து அவருடைய கிறுக்கல்களை இங்கே மீள்பதிவு செய்யவேண்டாம் என நண்பர்களை கேட்டுக்கொள்கிறேன்....

mr_karthik
26th August 2013, 12:18 PM
அன்புள்ள ராகுல்ராம் சார்,

புரிய வேண்டியவர்களுக்குப் புரிந்திருக்கும் என்று நம்புகிறேன். மக்கள் இப்படி ஒரேநேரத்தில் பல தியேட்டர்களில் மெகா ரிலீஸாகப் பார்த்து மகிழ விரும்புவது பிரம்மாண்டப் படங்களையே தவிர குடும்பப்படங்களை அல்ல. இதை கர்ணன் நமக்குத் தெளிவாக உணர்த்திவிட்டது.
அந்தப் பிரமாண்டங்களிலும் அடிக்கடி மக்கள் கண்களில் பட்டிராத பிரம்மாண்டம்தான் வேண்டும் என்று மக்கள் சொன்னதை திருவிளையாடலும் வெளிப்படுத்தி விட்டது. (வெளியீட்டில் குளறுபடி முக்கிய காரணம் என்பதை மறுப்பதற்கில்லை).
ரசிகர்களின் எதிர்பார்ப்புக்களோடு மக்களின் எதிர்பார்ப்புக்களும் சேர்ந்தால் மட்டுமே மீண்டும் ஒரு கர்ணன் வெற்றியை ஈட்ட முடியும் என்பதை வசந்தமாளிகையும் காட்டிவிட்டது.

அந்தவகையில் மக்களிடம் சர்வே எடுத்த தங்கள் பட்டியலில் குறிப்பிடத்தக்கது, நடிகர்திலகத்தின் முதல் பிரம்மாண்ட வண்ணப்படமான 'வீரபாண்டிய கட்டபொம்மன்' என்பதில் சந்தேகமேயில்லை.

'பாசமலர்' பேர்வாங்கிய படம் என்பதால் தப்பிப்பிழைத்து விட்டது என்று நினைக்கிறேன். இதைநம்பி மீண்டும் பார்மகளே பார், படித்தால் மட்டும் போதுமா, இருவர் உள்ளம் என்று இறங்கினால் நிச்சயம் ஏமாந்து போவார்கள். இப்போது கூட முதல்வாரத்திலேயே 'புல் ஆகாவிட்டாலும் நல்ல கூட்டம் இருந்தது' போன்ற கமெண்ட்கள்தான் வந்துள்ளன. அதிலும் ஞாயிறு வரை அது ரசிகர்கள் தினம். திங்கள் முதல்தான் குடும்ப வாரம் துவங்கும். அதன்பிறகு தாக்குப்பிடித்து நிற்பதுதான் உண்மையான வெற்றி. 'பாசமலர்' அதைச்சாதிக்க வேண்டும் என்பதே நம் அனைவரின் விருப்பம். (ஆனால் சென்னையில் அத்தனை அரங்குகளில் வெளியான படம் இரண்டாவது வாரத்தில், சாந்தியில் மட்டும், அதுவும் இரண்டு காட்சிகள் என்ற விளம்பரம், இன்னொரு கர்ணன் கனவைத் தகர்த்து விட்டது).

ஆனால் அதுதான் சாக்கு என்று 'நவராத்திரி'யை டிஜிட்டல் செய்கிறேன் என்று கிளம்பிவிடக்கூடாது. அவையெல்லாம் நல்லதாக நாலு பிரிண்ட்கள் (35 எம்.எம்.மில்) வைத்துக்கொண்டு ஒவ்வொரு தியேட்டராக மாற்றி, மாற்றிப்போட்டு, நல்லவசூல் பார்த்து, 'இணைந்த இத்தனையாவது வாரம்' என்று போஸ்ட்டர் ஒட்டவேண்டிய படமே தவிர ஒரே நேரத்தில் 60 தியேட்டர்களில் டிஜிட்டல், சினிமாஸ்கோப்பில் வெளியிட வேண்டிய படமல்ல.

வீரபாண்டிய கட்டபொம்மனை டிஜிட்டல், சினிமாஸ்கோப், ரீஸ்டோரேஷன் செய்து வெளியிட விரும்புவோர் முதலில் வாங்கவேண்டியது நெகடிவ் உரிமையோ அல்லது வினியோக உரிமையோ அல்ல. புத்தபுதிய கூரான கத்திரி, ஒரு தீப்பெட்டி இவைதான். கத்திரி, மூன்றரை மணிநேர படத்தை இரண்டேகால் மணிநேர படமாக குறைக்க. தீப்பெட்டி, வெட்டியவற்றை தீவைத்துக்கொளுத்த. (இருந்தால் திரும்பவும் சேர்த்துவிடுவார்கள்).. அதற்காக பந்துலுவையும் நாம் குற்றம் சொல்லபோவதில்லை. மூன்றரை மணிநேரத்துக்கு ஐந்து நிமிடம் குறைவாக ஓடினாலும் அதுபடமல்ல என்று முடிவு செய்யும் ரசிகர்களைக் கொண்டிருந்த காலத்தில் அவர் இந்தப்படத்தை எடுத்தார். ஆனால் இப்போதுள்ள இளைஞர்கள் எந்தப்படத்தையும் இரண்டேகால் மணிநேரத்துக்குமேல் பார்க்கதயாராயில்லை.

பத்மினிக்கு 'இன்பம் பொங்கும் வெண்ணிலா' ஒன்று போதும், 'அஞ்சாத சிங்கம் என் காளை'யை தூக்க வேண்டும். படத்தின் நீளத்தைக்கூட்ட கருணாநிதி, முத்துலட்சுமி, குலதெய்வம் ராஜகோபாலுக்கெல்லாம் டூயட், அதுவும் வெள்ளையனை விரட்ட வீரப்போர் புரிந்தவன் வரலாற்றுப் படத்தில். கருமம்டா சாமி. 'ஆத்துக்குள்ளே ஊத்து வெட்டி' பாடலை கண்மண் தெரியாமல் வெட்டி வீச வேண்டும். வெள்ளையத்தேவன் காளை மாட்டை அடக்கியதும் பத்மினி விடும் லுக் போதும். அப்புறம் பத்மினி மாறுவேடத்தில் வைத்தியராக வரும் பூரா காட்சியையும் வெட்டி உடனே கொளுத்த வேண்டும். வரலட்சுமி, பத்மினி, ராகினி புதிர் போட்டுப்பாடும் 'டக்கு டக்கு' பாடலை கொஞ்சமும் யோசிக்காமல் டக் டக் கென்று வெட்டியெறிய வேண்டும்.

பிரிட்டிஷ்காரர்கள், கட்டபொம்மன், வெள்ளையத்தேவன், ஊமைத்துரை, தானாபதிப்பிள்ளை, எட்டப்பன், ஜாக்சன், பானர்மேன், டேவிட்சன் இடம்பெறும் காட்சிகளனைத்தும் அப்படியே இடம்பெற வேண்டும். தர்பார் காட்சிகள், போர்க்களக்காட்சிகள் கொஞ்சமும் குறையாமல் இடம்பெற்றிருக்க வேண்டும். அப்புறம் பாருங்கள் படத்தின் தரத்தையும் விறுவிறுப்பையும்.

கட்டபொம்மனை மேலும் மேலும் வலியுறுத்தக் காரணம், இன்றைய தலைமுறையினர் அதிகம்பேர் பார்த்திராதது, அடிக்கடி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படாதது, கூடவே பிரம்மாண்டம் மற்றும் கண்ணைக் கவரும் வண்ணப்படம். எனவே பிரம்மாண்ட மறு வெளியீட்டுக்கு இப்போதைக்கு நம் கண்ணில் தெரிவது 'வீரபாண்டிய கட்டபொம்மன்' மட்டுமே.

'அதெல்லாம் முடியாது, நான் 'பார் மகளே பார்' படத்தை டிஜிட்டல், சினிமாஸ்கோப் செய்து 80 அரங்குகளில் ஒருசேர திரையிடுவேன்' என்று கிளம்பினால் தடுப்பதற்கு நாம் யார்?....

Gopal.s
26th August 2013, 12:51 PM
கார்த்திக் சார்,

randor Guy பற்றி நீங்கள் சொன்னதை அப்படியே ஏற்கிறேன். இவன் ஒரு அற்ப பயல். நம் போன்றவர்களெல்லாம் பிழைப்பு தேடி போய் விட்டதால் இவன் போன்ற ....... விமர்சகன் போர்வையில் பொய் சொல்லி இழி வாழ்க்கை வாழ்கின்றனர்.

Restoration and ரிலீஸ் பற்றி நீங்கள் சொன்னதை இரண்டு விதமாக பார்க்கலாம்.

1)இருவர் உள்ளம், பா series போன்ற படங்களெல்லாம் ஒரிஜினல் நெகடிவ் பெற பட்டு டிஜிட்டல் restoration செய்ய பட்டு கலைஞர் டிவி செய்தது போல செய்தால் டிவி சேனல்கள் தங்கள் TRP rating எகிற செய்ய முடியும்.(இருவர் உள்ளம் magic ). நீங்கள் சொல்வது லிமிடெட் ரிலீஸ் செய்து காசு பார்க்கலாம். ஒரு நூறு படங்களாவது இப்படி செய்ய பட வேண்டும்.

2)வீரபாண்டிய கட்டபொம்மன் ,புதிய பறவை,திருவிளையாடல்,தில்லானா மோகனாம்பாள் ,சிவந்த மண்,வசந்த மாளிகை ,கெளரவம் போன்றவை சரியான உரிமம் பெற பட்டு ஒழுங்கான restoration ,டிஜிட்டல், ஒரிஜினல் soundtrack கொண்டு செய்ய பட்டு கர்ணன் போல ரிலீஸ் செய்ய பட்டு (நல்ல விளம்பர உத்தியுடன்) வெளியிட பட்டால் கர்ணன் அளவு வெற்றி வாய்ப்பு உண்டு.(திருவிளையாடல் திடீர் தோன்றல் திட்ட மிட படாமல்,வசந்த மாளிகை பிரிண்ட் தரம் படு மோசம்.)

3)உத்தம புத்திரன், தெய்வ மகன் இரண்டும் வண்ணம் பெற்று புது தரம் கொண்டால் எல்லா
சாதனைகளையும் முறியடிக்கும் என்பது சர்வ நிச்சயம்.

mr_karthik
26th August 2013, 12:58 PM
அன்புள்ள கோபால் சார்,

நான் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த "தர்மம் எங்கே" படத்தின் அலசல் கட்டுரை மிகவும் அருமை. இப்படம் நமது திரியில் சாரதா அவர்களுக்கு, முரளி சீனிவாஸ் சார் அவர்களுக்கு, மற்றும் எனக்கு மிகவும் பிடித்த படம். (அவர்கள் இருவரும் இப்படம் பற்றி எழுதிய பதிவுகளைத் தேடிப்பார்த்து விரைவில் பதிக்கிறேன்).

தொய்வடைந்த திரைக்கதையால் பெரும் வெற்றி பெறமுடியாமல் போன படம் என்பது உண்மை. பழைய உடைகளை சுவரில் மாட்டி வைத்திருப்பது சர்வர் சுந்தரத்தை நினைவூட்டியது. விறுவிறுப்பான ஆரம்பம், இடைவேளைக்குப்பின் சற்று இழுத்தாலும் கிளைமாக்சில் மீண்டும் நம்பியார் வந்ததும் சூடு பிடிக்கும். சுதந்திர பூமியில், வீரமென்னும் பாவைதன்னை, பள்ளியறைக்குள் வந்த புள்ளி மயிலே மூன்று பாடல்களே போதுமானது. மற்ற இரண்டும் போர்.

சிறப்பான ஆய்வுக்கட்டுரைக்குப் பாராட்டுக்கள், நன்றிகள்...

joe
26th August 2013, 01:09 PM
அன்புள்ள ராகுல்ராம் சார், ?....

என் மனதில் உள்ளதை திருடி யாரோ எழுதிவிட்டது போலிருந்தது படித்த போது . 100 % வழிமொழிகிறேன்.

HARISH2619
26th August 2013, 01:20 PM
Dear chandrashekar sir,
many more happy returns of the day.may god and nt bless you

kalnayak
26th August 2013, 01:51 PM
Chandrasekhar Sir,

Wish you many more happy returns of the day!!!

rangan_08
26th August 2013, 05:45 PM
Nadigar Thilagam's films in TV Channels this week 26.08.2013 - 31.08.2013


Baktha Thukaram 28.08.2013 1.30 pm Polimer TV
Ennai Pol Oruvan 31.08.2013 10 am Raj Digital plus
General Chakkaravarhi 31.08.2013 1 pm J Movies
Jallikkattu 31.08.2013 1.30 pm Kalaignar TV
Kandhan Karunai 27.08.2013 2 pm Vasanth TV
Koteeswaran 29.08.2013 11 am Mega 24
Marutha Nattu Veeran 26.08.2013 11 am Mega 24
Panam 30.08.2013 2 pm Vasanth TV
Raja Mariyathai 27.08.2013 1 pm J Movies
Sumangali 29.08.2013 1 pm J Movies
Thiyagam 31.08.2013 7.30 pm Murasu TV
Thunai 26.08.2013 7.30 pm Murasu TV
Thunai 28.08.2013 10 am Raj Digital Plus
Vidivelli 29.08.2013 10 am Jaya TV
Vietnam Veedu 31.08.2013 10 am Jaya TV


Yesterday late evening saw about last 30 minutes of " Anbalippu " in Tamil Murasu. A serious problem which India is facing today, i.e. developing industries & real estate at the cost of agriculture, is the core of this film. Though the issue was not seriously discussed, the film clearly delivered the message in its own way. NT as usual was perfect as a villager.

rangan_08
26th August 2013, 06:11 PM
ஒரு MARLON பிராண்டோ, DUSTIN HOUGHMAN, HARISON FORD, EUL BRYNER , CHARLES HESTON மற்றும் யாரை எடுத்துகொண்டாலும் அவர்கள் ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரங்களில் மட்டுமே சொபிப்பவராவர் ! உலக திரையுலகில் நடிகர் திலகத்தால் மட்டுமே எல்லா வேடமும் திறம்பட புனைய முடியும் என்றால் அது மிகையாகாது.

.

VERSATILITY....thy name is Nadigar Thilagam Sivaji Ganesan.

Ulloorla eduthukitta, even good actors like Raghuvaran & Prakash Raj (most of the time, Prakash's dialogue delivery reminds me of Poornam Viswanathan ...enna, PV konjam slow, PR konjam fast!!), perform almost in the same manner. "Getting into the skin of the character" mbaingale....i think they fail to achieve it.

Director K. Balachander nicely captured the VOICE of NT fans by intelligently writing a dialogue in "Ethiroli".

It goes like this ...I'm just paraphrasing....(Nagesh is the actor)......" enna sollu, avan avandhanya. Vakkeelna vakkela maaridran, judge na judge'a maaridraan.....".

RAGHAVENDRA
26th August 2013, 06:18 PM
தர்மம் எங்கே ... சில நினைவுகள் ... [ மீள் பதிவுகள் ]

சாரதா அவர்களின் வலைப்பூவிலிருந்து




எண்ணங்கள் எழுத்துக்கள்

Thursday, January 20, 2011

தர்மம் எங்கே
(சில எண்ணங்கள், சில நினைவலைகள்)

http://2.bp.blogspot.com/_0EOhWaq0qv4/TTgyaHFZ9pI/AAAAAAAAABU/8Lx9IKEs1C4/s1600/157)Dharmam+Enge-bw.jpg

இப்படத்துக்கு நடிகர் திலகத்தின் ரசிகர்கள் மத்தியில் '1972ன் திருஷ்டிப்பொட்டு' என்ற் செல்லப்பெயர் உண்டு. காரணம், 1971 இறுதியில் வெளியான 'பாபு' வில் தொடங்கி 1973ல் முதல் படமான 'பாரதவிலாஸ்' வரையில் நடிகர்திலகத்தின் வெற்றிநடை தொடர்ந்தது (அவற்றில் பாபு, ஞானஒளி பட்டிக்காடா பட்டணமா, தவப்புதல்வன் நான்கும் கருப்பு வெள்ளைப்படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது). அவற்றில், 72 மத்தியில் வந்த 'தர்மம் எங்கே' மட்டுமே வெற்றிவாய்ப்பை இழந்தது. அதற்கு முதற்காரணம் (சிவந்தமண், ராஜராஜ சோழன் போல) இப்படத்துக்கு ஏற்பட்டிருந்த அளவுக்கு மீறிய, அபரிமிதமான எதிர்பார்ப்பு, இரண்டாவது காரணம் ஓட்டை விழுந்த திரைக்கதை இவைகளே.

கதாநாயகன் படம் முழுவதும் வில்லனுடன் போராடி, இறுதியில் அவனிடமிருந்து ஆட்சியை மீட்பதாக இருந்தால் முடிவு வேறு விதமாக இருந்திருக்கும். ஆனால் முரளி அவர்கள் சொன்னது போல, இடைவேளையின்போதே பிரதான வில்லன் நம்பியாரிடமிருந்து ஆட்சியைக்கைப்பற்றி விட, அதோடு வில்லன் நம்பியார் தலைமறைவாகிவிட, அதன்பின்னர் ஆட்சி அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்வதில் 'மாப்பிள்ளை - மைத்துனன்' சண்டையில் படம் நகர்கிறது. இவ்வளவு பிரமாண்டமான படத்தை இழுத்துச்செல்ல முத்துராமன் எல்லாம் ஒரு வில்லனா?. நல்ல வேளையாக கிளைமாக்ஸில் மீண்டும் நம்பியார் தோன்ற, கொஞ்சம் விறுவிறுப்பு கூடுகிறது.

தர்மம் எங்கே பற்றி விரிவாக விளக்கமாக எழுத வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் ஆசை. எனக்கு மிகவும் பிடித்த படம். அந்த முயற்சி மட்டும் தள்ளிக்கொண்டே போகிறது. காரணம், காட்சிகள் கோர்வையாக வரவேண்டும். படம் பார்த்து வெகுநாட்கள் ஆகி விட்டதால், காட்சிகளை வரிசையாக நினைவுக்கு கொண்டு வருவதில் சற்று சிரமம். ஆனால் படத்தின் முக்கியமான, விசேஷமான காட்சிகளைப்பற்றி எழுதலாம் என்று எண்ணம். இப்படத்தின் வீடியோ கேஸட், அல்லது CD அல்லது DVD எங்குமே கிடைக்கவில்லை. தியேட்டர்களிலும் வெகுநாட்களாக திரையிடப்படவில்லை.

இப்படம் பற்றி முன்னொருமுறை என் தந்தையுடன் பேசும்போது அவர் சொன்ன தகவல்கள். (தர்மம் எங்கே வெளியான காலத்தில் தனக்கேற்பட்ட உணர்வுகளை அவரே சொல்கிறார். அவர்து வார்த்தைகளில்.. இதோ)

"நான் கல்லூரிப்படிப்பை முடித்து வேலையில் சேர்ந்த சமயத்தில் வெளியான படம் இது. நாங்கள் (சிவாஜி ரசிகர்கள்) யாருமே பட்டிக்காடா பட்டணமாவோ அல்லது வசந்த மாளிகையோ இந்த அளவு வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கவில்லை. எல்லோரும் எதிர்பார்த்தது 'தர்மம் எங்கே' படத்தைத்தான். ஆனால் இதற்கு முன் வெளியான பட்டிக்காடா பட்டணமா பெற்ற பெரிய வெற்றியைப்பார்த்து, தர்மம் எங்கே படம் அதையெல்லாம் முறியடிக்கும் சாதனைப்படமாக இருக்கப்போகிறது என்று எதிர்நோக்கினோம். அப்போதைய 'மதிஒளி' பத்திரிகையிலும் தொடர்ந்து அந்தப்படத்தின் செய்திகளும், ஸ்டில்களும் வெளியாகி எங்கள் உற்சாகத்துக்கு தீனி போட்டன.

நடிகர்திலகத்தின் ரசிகர்கள் எல்லாம் மாலையில் அண்ணாசாலை 'சாந்தி' திரையரங்கின் கார் பார்க்கிங் வளாகத்தில் கூடி அப்போதைக்கு ஓடிக்கொண்டிருக்கும் அவருடைய படங்களைப் பற்றி விவாதிப்போம். இந்த நடைமுறை எங்களுக்குப் பிறகும் பல ஆண்டுகளாக தொடர்ந்தது. அப்போது சாந்தியில் 'பட்டிக்காடா பட்டணமா', பக்கத்தில் தேவி பாரடைஸில் 'ராஜா', அதையடுத்த பிளாசாவில் 'ஞான ஒளி' என்று அனைத்தும் அரங்கு நிறைந்து ஓடிக்கொண்டிருக்க, 'தர்மம் எங்கே' படம் பற்றித்தான் எங்களுக்குள் ஒரே பேச்சு. இதனிடையே 'ஓடியன்' திரையரங்கில் (தற்போது 'மெலோடி') தர்மம் எங்கே ஸ்டில்கள் வைக்கப்பட்டு விட்டன என்று அறிந்ததும், நாங்கள் கூடும் ஜாகை ஓடியனுக்கு மாறியது. தினமும் மாலையில் கூடி, அந்தப்படத்தைப் பற்றித்தான் பேச்சு. ரிசர்வேஷன் தொடங்கியபோதே படம் வெளியாகும் நாள் போல கூட்டம். மளமளவென டிக்கட்டுகள் பல நாட்களுக்கு விற்று தீர்ந்தன. அப்போதெல்லாம் முதல் வகுப்புக்கு மட்டுமே ரிசர்வ் செய்யப்படும். மற்ற கிளாஸ் டிக்கட்டுகளை காட்சி நேரத்திலேயே கியூவில் நின்று பெற்றுக்கொள்ள வேண்டும்.

சனிக்கிழமையன்று படமும் வெளியானது. (நடிகர்திலகத்தின் படங்கள் வெள்ளிக்கிழமைகளில் ரிலீஸ் ஆகாது, சனிக்கிழமைகளில்தான் ரிலீஸ் ஆகும்). முதல்நாள் முதல் மேட்னிக்காட்சிக்கு போயிருந்தோம்.ரிலீஸ் தினத்தன்று சீக்கிரமே அரங்குக்கு போனோம். (எங்கள் அலுவலகம் சனிக்கிழமை களில் அரைநாள் மட்டுமே). 'ஓடியன்' அரங்கின் இரண்டு பக்கமும் இரண்டு பெரிய கட்-அவுட்டுகள் வைக்கப் பட்டிருந்தன. அது போக கொடிகள், தோரணங்கள், பல்வேறு மன்றங்களின் பேனர்கள். (அப்போதெல்லாம் இதுபோன்ற திருவிழாக்கள் "அந்த இரண்டு ஜாம்பவான்களின்" படங்களுக்கு மட்டும் தான்). மேட்னி ஷோ துவங்கியது. படம் துவங்கியதிலிருந்து ஆரவாரம், கைதட்டல், விசில் பறந்தன. குறிப்பாக முதல் ஒரு மணிநேரம் படம் டெர்ரிஃபிக். நடிகர்திலகத்தின் படங்களிலேயே மிகவும் வித்தியாசமான படமாக இருந்தது. அதற்கேற்றாற்போல சூப்பர் வில்லன் நம்பியார், மற்றும் சூப்பர் ஜோடி ஜெயலலிதா. இடைவேளையின்போதே எல்லோர் மனதிலும் ஒரு எண்ணம்... படம் பெரிய வெற்றிதான் என்று. ரசிகர்கள் மத்தியில் உற்சாக கொண்டாட்டம். இடைவேளையின்போது, 'கேட்'டுக்கு வெளியே நின்ற ரசிகர்கள் படம் எப்படி என்று சைகையால் கேட்க, உள்ளே நின்ற ரசிகர்கள் அனைவரும் கட்டை விரலை உயர்த்திக்காட்ட... தியேட்டருக்கு வெளியே அப்போதே பட்டாசுகள் வெடிக்கப்பட்டன.

ஆனால் இடைவேளைக்குப்பின்னர், படத்தின் போக்கு அப்படியே மாறிப்போனது. நடிகர்திலகத்தின் கதாபாத்திரத்தை கிட்டத்தட்ட ஒரு வில்லன் ரேஞ்சுக்கு மாற்றிவிட்டது திரைக்கதை. ஒரு நல்ல் மக்கள் தலைவனாக காட்டாமல், ஒரு அகம்பாவம் பிடித்தவராக காண்பிக்கப்போக ரசிகர்களின் உற்சாகம் குன்றிப்போனது. பொது மக்களும் இப்படி ஒரு கதையின் போக்கை எதிர்பார்க்கவில்லை. போதாக்குறைக்கு, வில்லன் நம்பியாரையும் தலை மறைவாக்கி விட்டனர். படம் தொய்ந்து போனது. படம் முடிந்து வெளியே வந்தபோது ரசிகர்களின் உற்சாகம் காணாமல் போனது. இதனிடையில் படம் நன்றாக இல்லை என்ற கருத்து மக்கள் மத்தியில் பரவ, பத்திரிகை விமர்சனங்களும் காலை வாரிவிட.... சரியாக 48 நாட்களில் 'ஓடியன்' அரங்கில் படம் தூக்கப்பட்டு, ஒரு ஆங்கிலப்படம் திரையிடப்பட்டது".

.........என் தந்தை 'தர்மம் எங்கே' நினைவுகளில் ஆழ்ந்து போனார்.
இனி எனது விளக்கம் தொடர்கிறது
‘தர்மம் எங்கே’ முழுக்ககதையும் வரிசையாக நினைவுக்கு கொண்டுவர முடியாமல் போனாலும், சில முக்கியமான காட்சிகள் நினைவில் வந்துபோகிறது. அதில் சில....

படத்தின் முன்பாதியில், நள்ளிரவில் சர்வாதிகாரி நம்பியாரின் ஆட்களால் துரத்தப்பட்டு ஓடி வரும் சிவாஜி, பூட்டியிருக்கும் ஒவ்வொரு வீட்டு கதவாக தட்டி, அடைக்கலம் கேட்டுக் கதற, யாருமே கதவைத் திறக்க மறுக்க, தாகத்தால் ஒருவீட்டின் வாசலில் இருக்கும் மண்பானையை எடுத்து வாயில் கவிழ்ப்பார். அதில் சொட்டு நீரும் இல்லாமல் காலியாக இருக்க, சோர்வுடன் தன் வீட்டுக் கதவு கூட பூட்டியிருப்பது கண்டு, கதவைப்போட்டு அடிப்பார், உள்ளே கதவைத் திறக்கவிடாமல் அவருடைய அம்மாவையும், தங்கையையும் (குமாரி பத்மினி) வீட்டிலுள்ளோர் கையைக் கட்டி வாயைப்பொத்தி அமுக்கிப் பிடித்திருப்பார்கள். அதற்குள் துரத்தி வரும் வீரர்கள் நெருங்கி விட, வேறு வழியின்றி காட்டுக்குள் ஓடிப்போவார். இந்த இடத்தில் திரைக்கதையும், சிவாஜியின் நடிப்பும் நம்மை பதை பதைக்க வைக்கும். (நைட் எஃபெக்டில் சூப்பரான வண்ண ஒளிப்பதிவு கண்களை கொள்ளைகொள்ளும்).

சர்வாதிகாரி நம்பியார், தன்னை எதிர்ப்பவர்களின் பெயர்களைக் கேட்டு ஒரு ஏட்டில் குறித்து வைத்து, அவர்களைப் பழிவாங்குவார். சிவாஜி பதவிக்கு வந்ததும், தன்னை எதிர்க்கும் ஒருவனின் பெயர்கேட்டு முதன்முதலாக ஏட்டில் குறிக்கப்போகும் சமயம், பின்னணியில் இடியோசை போல நம்பியாரின் சிரிப்பொலி கேட்டு திகைத்து பின்வாங்குவது, திருலோகசந்தரின் டைரக்ஷனைக் காட்டும் நல்ல இடம்.

படத்தின் கிளைமாக்ஸ், செஞ்சிக்கோட்டையில் படமாக்கியிருப்பார்கள். நம்பியாரும் அவரது ஆட்களும் சுற்றி நின்று துப்பாக்கியால் சுட (நம்பியார் இடைவேளைக்குப்பின்னால் மீண்டும் தோன்றுவது இந்த இடத்தில்தான்) சிவாஜி தன் தங்கையை இழுத்துக்கொண்டு ஒவ்வொரு தூணாக மறைந்து மறைந்து முன்னேறுவதும், இறுதிக்காட்சியில் பாம்புகள் இருக்கும் கொட்டடிக்குள் விழுந்து விடும் நம்பியார் அந்த பாம்புகள் கடித்து இறப்பதும் நல்ல கட்டங்கள். (அவ்வளவு பெரிய, பெரிய பாம்புகள், தன் உடம்பின் மீது ஏறி ஊரும்போது நம்பியார் மரக்கட்டை மாதிரி கிடக்கிறாரே. எவ்வளவு தைரியம் வேண்டும்?. நடிக்க என்று வந்துவிட்டால் எதையெல்லாம் தாங்கிக்கொள்ள வேண்டியிருக்கிறது?)

நம்பியாரிடமிருந்து அதிகாரத்தை நடிகர்திலகம் கைப்பற்றுவதோடு நிறுத்தி 'இடைவேளை' கார்டு போடுவார்கள். இடைவேளை முடிந்து, முதல் பாடல் 'நான்கு காலமும் உனதாக' என்ற பாடல்தான். தலைமைப் பொறுப்பில் அமர்ந்த நாயகனைப் பாராட்டி, ஜெயலலிதாவும் குழுவினரும் பாடி ஆட, அதை சிம்மாசனத்தில் அமர்ந்து நாயகன் ரசிப்பதாக படமாக்கப் பட்டிருக்கும். அதில் நான்கு வித பருவங்களைப்பற்றி ஜெயலலிதா பாடும்போது, அதற்கேற்ப பின்னணி காட்சிகளும் மாறும். ஆனால் பாடல் சுமார் ரகம்தான்.

'சுதந்திர பூமியில்', 'பள்ளியறைக்குள் வந்த', 'வீரம் என்னும் பாவைதன்னை' பாடல்கள் மனதைக் கவர்ந்த அளவுக்கு இது கவரவில்லை. இவை மூன்றும் மூன்று முத்துக்கள். ஆனால் கண்ணில் காணக்கிடைக்கவில்லை. 'SHIVAJI HITS' என்ற பெயரில் VCD / DVD தயாரிப்பவர்கள் கூட இதுபோன்ற பாடல்களைக் கண்டுகொள்வதில்லை.

'பள்ளியறைக்குள் வந்த புள்ளி மயிலே' பாடல் இரவு நேர சூழ்நிலையில் ('நைட் எஃபெக்ட்'), படகில் நடிகர் திலகமும் கலைச்செல்வியும் பயணிக்கும்போது, சுற்றிலும் வாண வேடிக்கைகள் கண்ணைக்கவரும் (அதற்கு ஏற்றாற்போல அற்புதமான ஒளிப்பதிவும், கலரும்).

அதுபோல 'சுதந்திர பூமியில் பலவகை ஜனங்களும்' பாடல் அவுட்டோரில் அழகான லொக்கேஷன்களில், மலர்நிறைந்த கூடையை நடிகர்திலகம் முதுகில் சுமந்துகொண்டு, புன்னகை மாறாத முகத்துடன் பாடிவரும் அழகு. (இப்பாடல் முழுக்க அவர் முகத்தில் ஒரு கம்பீரமான புன்னகை தவழும்).

இரு அருமையான பாடல்களோடு, இன்னொரு நெஞ்சையள்ளும் பாடல்...

'வீரம் என்னும் பாவைதன்னை கட்டிக்கொள்ளுங்கள்
வெற்றி என்னும் மாலைதன்னை சூடிக்கொள்ளுங்கள்
நாலுபக்கம் கூட்டமுண்டு பார்த்துக்கொள்ளுங்கள்
நாளை என்னும் வார்த்தையுண்டு நம்பிக்கொள்ளுங்கள்'

நடிகர்திலகம் மாறு வேடத்தில் வந்து, சிறையிலிருந்து தன் கூட்டத்தினரை மீட்டுச்செல்லும் காட்சி இது. (கிடாருக்குள் துப்பாக்கியை ஒளித்து வைத்திருந்து சுடும் உத்தியெல்லாம் அப்போதே பயன்படுத்தப்பட்டு விட்டது).

'தர்மம் எங்கே' படம் 1972 தொடர் வெற்றிக்கோட்டைத் தொட முடியாமல் போனாலும், தரத்தில் எந்தப்படத்துக்கும் குறைந்தது அல்ல. பட வெளியீட்டின்போது நடந்த பிரமாண்ட 'ஒப்பனிங்' திருவிழாவைப்'பொறுத்தவரை, அந்த ஆண்டின் இரண்டு வெள்ளிவிழாப்படங்களைவிட இது முன்னணியில் இருந்தது என்றால் அது மிகையில்லை. அந்த அளவுக்கு படத்தின் ஸ்டில்கள் மக்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தன. அதில் முன்னிலை வகித்தது 'மதி ஒளி' மாதமிருமுறை இதழ்.

1971 துவக்கத்தில் நடிகர்திலகத்துக்கு இருந்த சற்று தொய்வு நிலையைப் பயன்படுத்திக்கொண்டு, ஆளாளுக்கு நடிகர்திலகத்துக்கு சவால் விடத்துவங்கினர். (Imagine, that was Public Election time too, where NT was canvassing for Congress (O), headed by Perundhalaivar Kamaraj) தொய்வு நிலைக்குக் காரனம் அவரது படங்களின் புற்றீசல் போன்ற படையெடுப்பு. 'பாதுகாப்பு' படத்தில் துவங்கி 'பிராப்தம்' வரையில் நான்கு மாதங்களில் ஏழு படங்கள்.

'சவாலே சமாளி'யின் வெற்றி, கேலி பேசியவர்களை ஓரளவு வாயடைக்க வைத்தது எனினும் 'பாபு'வில் துவங்கி தொடர்ந்து நான்கும் வெற்றி மேல் வெற்றி பெறத்துவங்க.......

'தர்மம் எங்கே' படத்தில் கையில் வாளுடன் நிற்கும் நடிகர்திலகத்தின் படத்கைப்போட்டு, அதன் கீழே... "நாக்குத்தடுப்பேறி சவால் விட்ட தறுக்கர்கள் எங்கே?" என்ற வாசகத்தையும்...

நம்பியாருக்கு எதிராக வாளுடன் நிற்கும் நடிகர்திலகத்தின் படத்தைபோட்டு.... "சவால் விட்டவனெல்லாம் சவக்குழிக்குப் போய்விட்டான்.. நீ எம்மாத்திரம்?" என்ற வாசகத்தையும் 'மதி ஒளி' வெளியிட்டு ரசிகர்களைக் குஷிப்படுத்தி, பெரிய எதிர்பார்ப்பைத்தூண்டி விட்டது.



மேற்கண்ட பதிவு இடம் பெற்ற வலைப்பூவிற்கான இணைப்பு - http://ennangalezuththukkal.blogspot.in/2011/01/blog-post_20.html

RAGHAVENDRA
26th August 2013, 06:19 PM
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Old%20Ads/de01.jpg

RAGHAVENDRA
26th August 2013, 06:26 PM
Some images from the film Dharmam Enge

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/dharmamengey2.jpg

From pammalar's treasures




பொக்கிஷப் புதையல்

பட விளம்பரம் : தினத்தந்தி : 19.3.1972

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC3906a.jpg

[ஏப்ரல் 1972 வெளியீடாக விளம்பரம் அளிக்கப்பட்டுள்ள "தர்மம் எங்கே", பின்னர் சற்றேறக்குறைய மூன்றரை மாதங்கள் கழித்து, 15.7.1972 அன்று வெளியானது.]

ஒரிஜினல் பாட்டுப் புத்தக முகப்பு

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC3895.jpg

ஒரிஜினல் பாட்டுப் புத்தகத்தினுடைய பின் அட்டை

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC3896a.jpg

சினிமா குண்டூசி : ஜூன் 1972 : அட்டைப்பட விளம்பரம்
[உதவி : நல்லிதயம் திரு.ஜி.மாணிக்கவாசகம்]

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC3892a.jpg

பொக்கிஷப் புதையல் : சினிமா குண்டூசி : ஜூன் 1972
[உதவி : நல்லிதயம் திரு.ஜி.மாணிக்கவாசகம்]

இக்காவியம் குறித்து நடிகர் திலகம்

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC3897a.jpg

கலைச்செல்வியின் கூற்று

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC3899a.jpg

டைரக்டர் திருலோக் அவர்களின் கருத்தோவியம்

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC3900a.jpg

அரிய நிழற்படம்

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC3904a.jpg

RAGHAVENDRA
26th August 2013, 06:40 PM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/nt%20snaps/dharmamengey01_zps91ac11de.jpg

Gopal.s
26th August 2013, 06:57 PM
தூள் பரத்தி விட்டீர்கள் ராகவேந்தர் சார்.நன்றி.
அடுத்து நம் தவ புதல்வனை கொஞ்சுவோம்.

Gopal.s
26th August 2013, 07:05 PM
Well said Subbu and Rangan.

iufegolarev
26th August 2013, 10:04 PM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/nt%20snaps/dharmamengey01_zps91ac11de.jpg

மறக்க முடியுமா இந்த அனல் பறக்கும் சண்டைகாட்சியை.


https://www.youtube.com/watch?v=9-HE9HfJ1Eo

நான்கு காலங்களும் உனதாக !

https://www.youtube.com/watch?v=pQ-JhAGEn9g

iufegolarev
26th August 2013, 10:29 PM
https://www.youtube.com/watch?v=UqnNOMbt-nM

சில பாடல்களை கேட்கும்பொழுது உடனே குதூகலம் வரும்...சில பாடல்களை நாம் கேட்கும்போது உடனே நிறுத்தி..இதை இரவில் கட்டாயமாக உறங்கும் முன் கேட்கவேண்டும் என்று தோன்றும். அப்படி தோன்றவைக்கும் ஒரு பாடல் மேலே கூறியுள்ள பாடல்...இரவின் மடியில் இதை கண் மூடி கேட்டால்...அடேயப்பா...காட்சிகள் நம் கண் முன் கொண்டு நிறுத்தும் பாடல்...!

Murali Srinivas
27th August 2013, 12:14 AM
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் சந்திரசேகர் சார்!

இது போல் மேலும் பல சிறந்த பிறந்த நாட்கள் உங்களுக்கு அமையட்டும்!

அன்புடன் .

Subramaniam Ramajayam
27th August 2013, 04:48 AM
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் சந்திரசேகர் சார்!

இது போல் மேலும் பல சிறந்த பிறந்த நாட்கள் உங்களுக்கு அமையட்டும்!

அன்புடன் .

Many many HAPPY RETURNS of the day KC sir. Your untiring efforts for NT MANIMANDAPAM and other social works are a great job you are doing. all the best May god bless you good health and wealth.

Gopal.s
27th August 2013, 06:47 AM
மாந்தோரண பாட்டில், மாப்பிள்ளை பெண்ணுக்கு என்ற வரிகளில் கண்கள்,பாவங்களுடன் நடிகர்திலகம் புரியும் ஜாலம்!!!!?????

Gopal.s
27th August 2013, 07:41 AM
Quote Originally Posted by kaliaperumal vinayagam
உண்மை ரவி சார். திரையில் திருமுகமும் மறைவில் மறுமுகமாய் விளங்கிய நடிகர்கள் மத்தியில், நிழல் மற்றும் நிஜத்தில் ஒருவராய் விளங்கியவர் ஒரு தாய் மக்களின் நாயகன் மக்கள் திலகம்தான். தான் சார்ந்திருக்கும் சமூகத்தைப் பற்றி துளிகூட அக்கறை இல்லாமல், பணம் தருகிறார்கள் எப்படியும் நடிக்கலாம் என்று நடித்தவர்களிடையே, தான் நடிக்கின்ற நடிப்பு சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும், தீய பழக்க வழக்கங்களைக் களைய ஒரு பாடமாக இருக்கவேண்டும் என்று நினைத்ததோடு மட்டுமல்லாது அதை நடத்தியும் காட்டிய, நினைத்ததை முடித்தவர். திரையில் கூட மது அருந்தி நடிக்க அஞ்சிய மது அருந்தா மாமேதை. அதைத்தான் தன் திரைப்பட பாடலில் "நாம பாடுற பாட்டும் ஆடுற கூத்தும் படிப்பினைத் தந்தாகணும், நாட்டுக்கு படிப்பினைத் தந்தாகணும்" என்றார்
இந்த சமூக அக்கறைதான் இன்னும் இவர் பெயரை உலகில் மங்காமல் வைத்திருக்கிறது. இப்படி ஒரு சமூக அக்கறை இல்லாதவர்கள் இருந்தும் என்ன? இல்லாவிட்டால் என்ன?
Unquote





இதெல்லாம் அந்தகாலுத்துல எந்த பேப்பரும் போட்டோ புடிச்சு பக்கம் பக்கமா எழுதலை...ஆனா அஞ்சு பைசா குடுத்தாகூட அஞ்சு லட்சம் ரூபாய்க்கு விளம்பரபடுதினானுங்க சில கட்சிகாரனுங்க என்று கூறினார்.

எவ்வளவு உண்மை ! தமிழ்நாட்டில் மக்களை எளிதில் ஏமாற்றவும், விலைக்கு வாங்கவும் முடியும் என்பதை ஒரு ஆந்திர மாநிலத்தவர் கூட உணர்துள்ளார் !

நடிகர் திலகம் ஒரு நடிகர் அடிப்படையில். அவர் திரையில் நல்லவனாகவும், வல்லவனாகவும், திருடனாகவும், கொலைகாரனாகவும், கொள்ளைகாரனாகவும், குடிகாரனாகவும், பென்பித்தராகவும் இப்படி பல கதாபாத்திரத்தை கண் முன் கொண்டுவந்து நிறுத்தினார்.

அவர் மட்டுமே யோக்யன் மீதிஎல்லம் அயோக்யன் என்ற ரீதியில் இந்தியாவில் உள்ள ஒரு சில நடிகர்களை போல தன்னை முன்னிலை படுத்திகொண்டதே இல்லை. காரணம் அவர் ஒரு நடிகர் மட்டுமே..! எந்த ஒரு மறைமுக நோக்கமும் கொண்டவரல்ல நடிகர் திலகம் !

நடிகன் என்பவன் எந்தகதபாதிரமாக இருந்தாலும் அதை ஏற்று நடிக்கவேண்டும். அப்படி செய்பவன் மட்டுமே நடிகன்.

எல்லா திரைப்படத்திலும் நல்லவன் வேடம் மட்டுமே புனைவது ஒரு காமெடியன் கூட செய்வான். அது பெரிய விஷயம் அல்ல. தமிழ் திரையுலகை பொறுத்த வரை நடிகர் திலகம் ஒரு அக்ஷய பாத்திரம்.



வெளியுலகில் நல்ல வேடம் புனையும் பலரும் நம் சமுதாயத்தை இன்று சின்னா பின்ன படுத்தியுள்ளது தமிழக வரலாறு அறிந்தாலும், எதுவுமே அறியாதது போல நடிக்கும் மாண்பு , அப்படி ஒன்றும் நடக்கவே இல்லையே என்பதுபோல ஒரு மாயையை உருவாக்குவதும் அந்த மாயையை உண்மையாக்க முயற்சிப்பதும்
திரும்ப திரும்ப ஒரே பல்லவி ,நீதி கருத்து,நல்லவன் வேடம்(??) என்று. எதுவுமே உரிய பலன் கொடுத்து போய் சேர்ந்த மக்களை இம்மியளவேனும் உயர்த்த பயன் பட்டதா?அல்லது சொன்னவர்கள் மட்டுமே வாழ்க்கையை உயர்த்தி கொண்டார்களா? படிப்பில் நாட்டம் செலுத்தாமல் மதுக்கடை சென்றவர்கள் யார்? வன்முறையை மட்டுமே நம்பி வாழ்ந்தவர்கள் யார்? வாழ்க்கையில் மூளை சலவை செய்ய பட்டு மற்றதை காண மறுத்து வாழ்க்கையை வீணாக்கி கொண்டவர்கள் யார்?
நடிகரின் வேலையே கொடுத்த பாத்திரத்தை சிறப்பாக நடிப்பதுதானே?

Gopal.s
27th August 2013, 08:06 AM
எஸ்வி சார்,
நாங்கள் எங்கள் வழியில் சென்று யாரையும் புண்படுத்தாமல் நாகரிகமாக எங்கள் ஆய்வுகளை ,கருத்துக்களை வெளியிட்டு கொண்டிருக்கிறோம். உங்கள் திரியில் எங்களை அனாவசியமாக வம்புக்கிழுத்து தூண்டுவது தொடர் நிகழ்ச்சியாகி கொண்டுள்ளது. திரும்ப திரும்ப கூறுகிறேன். நாம் நமது கருத்துக்களை கூறலாமே தவிர ஒருவர் மற்றவரை தாக்கினால் ,நாம் விரும்பும் நாயகர்களை நாமே அவமதிப்பதற்கு சமம்.
உதாரணம் மேலே குறிப்பிட்ட பதிவு,அதற்கு எங்கள் சுப்பு சாரின் பதில் பதிவு.

அதுசரி கலியபெருமாள் சார்,
உங்கள் வாக்கியங்களே ஒன்றுக்கொன்று முரண் படுகின்றன. திரையில் திருமுகம்,மறைவில் மறுமுகம் என்பது தொடக்கம். அடுத்த வரி பணம் கொடுத்தால் எப்படி வேண்டுமானாலும் நடிக்க தயாராய்....
பணம் கொடுத்தால் எப்படி வேண்டுமானாலும் நடித்தவர்கள் எப்படி திரைக்கு திரு முகம் காட்டியவர்கள் ஆவார்கள்?
எங்கேயோ இடிக்குது?குத்துதே? அபூர்வ சகோதரர்கள் படத்தில் வருவது போல இந்த துப்பாக்கி முன்பக்கமாகவும் சுட்டு பின் பக்கமாகவும் சுட்ட மந்திர துப்பாக்கி ஆகி விட்டதே?தயவு செய்து விளக்குவீர்களா?

RAGHAVENDRA
27th August 2013, 08:41 AM
நண்பர்களே,
பதிலுக்கு பதில் என்று நாம் போய்க்கொண்டிருந்தால் அதற்கு முடிவே கிடையாது. போற்றுவார் போற்றட்டும் புழுதி வாரி தூற்றுவார் தூற்றட்டும் என்று நம் பணியைத் தொடர்வோம். காலம் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ளும். உண்மை என்றுமே அடைந்து கிடக்காது.

http://youtu.be/jGAeoj0z1sc

ScottAlise
27th August 2013, 09:26 AM
தில்லான மோகனாம்பாள்

1968 ல் வந்து , இன்றும் கலக்கும் படம் . நானும் என் நண்பர்களும் (ஒரு 6 நண்பர்கள் ) ஒரு முடிவு செய்து உள்ளோம் . பிரதி வாரம் விடுமுறை நாள் ல் ஒரு NT படத்தை பார்க்க வேண்டும் என்று . ஒரே கண்டிஷன் படத்தின் பிரதி பிரமாதமாக இருக்க வேண்டும் என்றது தான் . அந்த பொறுப்பு என்னக்கு , என் என்றல் இதில் அதித ஆர்வம் உள்ளவன் நான் , மேலும் 6 வருடமாக த்வத் வாங்கி கொண்டு இருக்கிறேன்

என் நண்பன் வீட்டில் Home தியேட்டர் இருக்கிறது , பெரிய ஸ்க்ரீன் , சினிமா தியேட்டர் போலே , so இடம் அவன் வீடு அந்த வகையில் முதல் முதல் ல் இந்த படத்தை பார்க்கலாம் என்று முடிவு செய்தோம் .

ஏற்கனவே இந்த படத்தை பல முறை பார்த்தால் மீண்டும் ஒரு முறை பார்க்கும் பொது ஒரு சில விஷயங்கள் புதிதாக தெரிந்தது , அதை அடிப்படியாக கொண்டு எழுத போகிறேன் , இதில் உள்ள அம்சங்கள் உங்களுக்கு தெரிந்து இருக்கலாம் இருந்தாலும் , ஒரு சின்ன ரசிகன் , ஆவலுடன் எழுவதாக எண்ணி கொண்டு உங்கள் நல்லாசிகளை வழங்க கேட்டு கொள்கிறேன்

எது பிரமாண்டம் ,நம் நாட்டின் கலைகளை , ஸ்டெல்லார் cast கொண்டு திறம்பட இயக்கி ,நடித்து , திறம்பட இசை அமைத்து ரசிகர்களுக்கு விருந்து படைத்த படம் தான் இந்த காவியம்
முன்னால் முதல்வர் திரு MGR அவர்கள் ரஷ்ய delegates க்கு இந்த படத்தை திரையிட்டு நம் நாட்டின் பெருமையை நிலை நாட்ட ஒரு பொக்கிஷம் இந்த படம்

இனி

இந்த படத்தின் பெயர் போடும் போதே பிரமாண்டம் நம்மளை தொற்றி கொள்கிறது , BGM ஸ்கோர் மற்றும் திரை எங்கும் ஜெனகளும் , நாம் ஒரு திருவிழாவை காண போவது தெரிகிறது

முதல் காட்சியில் (மோகனா) அலங்காரம் செய்து கொண்டு தன்னை தானே ரசித்து கொண்டு இருக்கிறார் , அது ஒரு 5 -6 உருவங்களை நம்மளுக்கு காட்டுகிறது (ஒளிபதிவு : KS பிரசாத் , படத்தொகுப்பு : ராஜன் , TR நடராஜன் )

அதை தொடர்ந்து இரண்டு நாதஸ்வரம் வாசிப்பது கேட்கிறது , அது தான் சிக்கல் சண்முகசுந்தரம் மற்றும் தங்கரத்தினம் (சிவாஜி & AVM ராஜன் )
கோவில் ல் வெடி சத்தம் NT க்கு இடயுறு செய்ய அவர் கச்சேரி யை பாதியில் நிறுத்தி செல்கிறார் , அவர் இந்த சத்தம் குறித்து தன் தம்பி இடம் பேசும் பொது , அவர் குரலில் ஒரு தளர்ச்சி , காரணம் அவர் நாதஸ்வரம் வாசித்தல் , குரல் வலம் கொஞ்சம் தொய்வு , அதை அழகாக காட்டி இருப்பார்
அவர் செல்லும் பொது , மோகனா வை பார்த்த உடன் மனசை பரி கொடுக்கிறார் , இருந்தாலும் இரண்டு திறமைசாலிகளுக்கு இடையில் வரும் ஈகோ , அவர்களை சுற்றி ஒரு மாய சுவரை எழுபிகிறது
சத்திரத்தில் சிவாஜி யை காண வரும் ஜில் ஜில் ரமாமணி யை சிவாஜி அன்புடன் விசாரிப்பதும் , அதே சமயம் அவர் தோல் மேல் கை போடும் பொது அதை நாசுக்காக தவிர்ப்பதும் , ஆன் பெண் நட்புக்கு ஒரு இலக்கணம் . பாலையா ஜில் ஜில் யை நுகர்வது ஒரு நல்ல தமாஷ் , மனோரமா பேச்சு ஆற்றல் மூலம் கவர்கிறார் . அவர் நாகலிங்கதிடம் நான் ஒரு பக்கம் ஆடுகிறேன் , மோகனா ஒரு பக்கம் ஆட்டும் என்று சொல்லும் பொது அவர் வெகுளி குணம் வெளி படுகிறது
AVM ராஜன் சொல்லி , பாலையா நடனத்தை காண permission கேட்பது , அதை மென்னு முழுங்குவது , பிறகு தப்பித்து செல்வது , கோவில் ல் சிவாஜி யை பார்த்து ஒளிவது பாலையா
பலே ஐயா
மறைந்து இருந்து பாடல் , நடனம் self explanatory . (சொல்ல தேவை இல்லை )
ரயில் ல் பத்மினி வரவை எதிர் பார்ப்பதும் , அவர் வந்ததும் பாலையா விடம் இடம் மாற சொல்வதும் , விளக்கு அணிந்த உடன் , மனசு மனசும் பேசுவதும் , காதல் ஓவியம்
அதில் பாலையா CK சரஸ்வதி உடன் வம்பு இழுப்பது நல்ல தமாஷ்

ரயில் நின்ற உடன் BGM ஒரு வித கீச்சு குரலில் ஒலிக்கும் , அது இந்த ஜோடி பிறிவதனால் தானோ
அங்கே நாகேஷ் சிவாஜி யை வரவேற்க வருகிறார் , ஆணால் மாளிகை யில் வாசிக்க சூழ்நிலை சரி இல்லாதனால் அவர்கள் வெளியே வந்து வாசிப்பதும் , வெளி நாட்டவர்கள் ஆடுவதும் , காவியம்
அந்த காட்சியில் நாகேஷ் செய்யும் சேஷ்டை க்கு ஒரு சபாஷ் ,உடம்பை வில்லாக வளைந்து ஓடி வருவதும் , பின் ஆடுவதும் , நாகேஷ் டாப்
பாலாஜி யின் சூழ்ச்சியால் சிவாஜி பத்மினி யை வெறுக்க நேர்கிறது (நாகேஷ் யின் கூட்டு , அவர் புத்தி சாதுர்யம் , கூடவே வடிவாம்பா வின் பேராசை )
நாகபட்டினத்தில் மனோரமா வின் கம்பெனி ல் மனோரமா உடன் அவர் தவில் வாசிப்பதும் , மனோரமா நாதஸ்வரம் வாசித்து ஆடி கொண்டே உகர்வதும் , சிவாஜி அடிக்கும் கமெண்ட்ஸ் , சிரிப்பு க்கு உத்தரவாதம்

சிவாஜி யை மலாயா வுக்கு போக விடாமல் இருக்க பத்மினி அவரை போட்டிக்கு அழைக்க , சிவாஜி ஒத்து கொள்கிறார் (male ஈகோ வின் அற்புத காட்சி அமைப்பு )
பாலாஜி மனம் திருந்தி பத்மினி யை தன் தங்கையாக ஏற்று கொள்கிறார் .
வைத்தி (நாகேஷ் ) நாகலிங்கதுடன் சேர்ந்து நடனத்தை நடக்க விடாமல் தடுக்க முயற்சிக்கிறார் )
நடன முடிவில் , பத்மினி க்கு தில்லான மோகனம்பாள் என்று ஒரு பெயர் கிடைகிறது

சிவாஜி கத்தியினால் குத்த பட்ட உடன் துடித்து உழுவதும் , கண் முழித்து கை வரவில்லை என்று ஏங்குவதும் ஒரு கலைஞன் யின் ஏக்கம்
ஆஸ்பத்திரியில் பெண் nurse தன்னை கவனிப்பதை தவறாக நினைத்து விலகுவது , அந்த nurse தன் தந்தை சிவாஜி யின் ரசிகர் அதனால் தான் இப்படி கவனிக்கிறேன் என்று சொன்ன உடன் அவர் முகத்தில் காடும் பாவம் . அந்த nurse சிவாஜி யை கிணத்து தவளை என்று சொன்னதை ஒத்து கொள்வது போல் அமைகிறது
நலம்தானா- சாக வரம்
நாகேஷ் அதை காண வரும் பொது , முதல் வரிசை யில் அமர்வதும் , அந்த சீட் யில் உக்கார வேண்டியவர் வந்ததும் , சமல்லிப்பதும் , சவடால் வைத்தி

நாகேஷ் இப்போ நம்பியார் உடன் சேர்ந்து மோகனா வை ராஜாவுக்கு (நம்பியார்) ஆசை நாயகி ஆக்க முயல்கிறார் , அந்த முயற்சி சிவாஜி &பத்மினி யை சேர்க்கிறது . முடிவில் சுபம்
இந்த படத்தின் கதை ஆனத விகடன் ல் வந்த போதே இந்த படத்தின் நாயகன் சிவாஜி தான் என்று மக்கள் எண்ணினார்கள் , சிவாஜி யை மக்கள் மனசில் வைத்து இருந்தார்கள் , இந்த படத்துக்கும் தேசிய விருது அவர்க்கு கிடைக்க வில்லை , ஸ்டேட் award கூட இல்லை (பத்மினி , மனோரமா வுக்கு கிடைத்தது )
இந்த படத்தில் தாங்களே நாதஸ்வரம் வாசிப்பதை போல் மக்கள் நினைகிரர்களே என்று கேட்டதற்க்கு
நம்மவர் அளிக்கும் பதில்
வெறும் நடிப்பு தான் , நான் வாசிக்க வில்லை , முக பாவங்களில் அப்படி செய்தேன் அந்த பாராட்டு , மதுரை சேதுராமன் , பொண்ணு சாமி
க்கு தான் சேர வேடும்
இசை (மாமா மகாதேவன் , பாடல் : கண்ணதாசன் )
எது செட் எது ஒரிஜினல் என்று தெரியாத வண்ணம் அரங்கம் அமைத்தது கங்கா

ஒரு படத்தில் பங்கு பெற்ற அனைவரும் சாக வரம் பெற்ற படம் என்று இந்த படத்தை சொல்லலாம்

Gopal.s
27th August 2013, 09:54 AM
ராகுல்,
ஒரு சிறிய ஆலோசனை. நான் கூட மற்றவர்கள் மிக சிறந்த முறையில் ஆய்வு செய்து விட்ட படங்களை மறு ஆய்வு செய்வதை தவிர்ப்பேன். உதாரணம்- தேவர் மகன்(p _r ),தில்லானா மோகனாம்பாள்(பலர் ,சமீபத்தில் p _r ,முரளி) .நான் உன்னிடம் எதிர்பார்ப்பது இதுவரை யாரும் தொடாத படம்.

mr_karthik
27th August 2013, 10:30 AM
சரியாகச் சொன்னீர்கள் சுப்பு சார்,

குடிக்காதவர் போல நடிப்பது மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்குவதற்கு. மற்றபடி உண்மையில் சமூக அக்கறை இருந்திருக்குமானால் தன ஆட்சியில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தி மக்களை குடிப்பழக்கத்திலிருந்து மீட்டிருக்க வேண்டும். செய்யலையே.

எழுதக்கூடாது, கண்டுகொள்ளக்கூடாது என்றுதான் நினைத்தேன். ஆனால் மக்கள் திலகத்தின் புகழையும், பெருமையையும் பாடுவதோடு நிறுத்திக்கொள்ளாமல் 'மற்ற நடிகர்கள்', 'மற்ற நடிகர்கள்' என்ற வசவு அதிகமாக இருக்கிறது. (Not ALL there, but one Hubber).

சமூக அக்கறை என்பது குடிக்கும் வேடத்தில் நடிக்காமல் இருப்பதில் மட்டும்தானா?. உடன் நடிக்கும் கதாநாயகியரை ஆபாசமாகக் காட்டுவதில் இல்லையா?. அவர் இடம்பெறும் எத்தனை டூயட்களில் நாயகியர் ஆபாசமாக உடையணிந்து நடித்துள்ளனர். குறிப்பாக "அழகிய தமிழ்மகள்" பாடலாகட்டும், "நீ என்னென்ன சொன்னாலும் கவிதை" பாடலாகட்டும், "இன்னொரு வானம் இன்னொரு நிலவு" பாடலாகட்டும், "அங்கே வருவது யாரோ" பாடலாகட்டும் கதாநாயகியரான மஞ்சுளா, லதா ஆகியோரின் உடைகள் படு ஆபாசம். இதுபோல ராமன் தேடிய சீதையிலும் ஒரு பாடலில் ஜெயலலிதா ரொம்ப ஆபாச உடையில் ஆடியிருப்பார். (இதுபோல பல பாடல்கள், சாம்பிளுக்கு மட்டும் இவை. இவற்றை மட்டுமே இல்லைஎன்று மறுக்கட்டுமே). இது ஒன்றும் இல்லாத குற்றச்சாட்டு அல்ல. அனைத்துப்பாடல்களும் இணையத்திலும் கிடைக்கின்றன. தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பாகின்றன. பார்த்து கன்பர்ம் பண்ணிக்கொள்ளலாம். அவர்தான் தன படங்களின் அனைத்து விஷயங்களிலும் கவனம் செலுத்துபவராயிற்றே. அவர் சொன்னால் வீரப்பன் கேட்க மாட்டாரா?. அசோகன் கேட்க மாட்டாரா? அல்லது நீலகண்டன் கேட்க மாட்டாரா?. "மற்ற" நடிகர்கள் போல நடித்தோமா, ""பணம் வாங்கினோமா"" என்று போகிறவர் அல்லவே. அனைத்திலும் நுழைந்து பட்டை தீட்டுபவராயிற்றே. கதாநாயகியரை ஆபாசமாகக் காட்டுவது சமூக அக்கரையில் சேர்த்தியில்லையா?. மற்ற நடிகர்கள் படங்களில் இடம்பெறவில்லையா என்று கேட்கக்கூடாது. உங்கள் கூற்றுப்படி அவர்கள் “சமூக அக்கறை இல்லாதவர்கள்”. இவர் அப்படியல்லவே. மூச்சுக்கு மூச்சு 'தாய்க்குலம்' , 'தாய்க்குலம்' என்று உச்சரிப்பவர் படத்திலா இப்படி ஆபாசம்?...

KCSHEKAR
27th August 2013, 10:33 AM
அலுவல் நிமித்தமாக நான்கு நாட்கள் வெளியூரில் இருந்ததால். திரியைப் பார்க்கமுடியவில்லை.

எனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை திரியில் தெரிவித்த நண்பர்கள் திரு.கோபால் சார், ராகவேந்திரன் சார், முரளி சீனிவாஸ் சார், சுப்பிரமணியம் ராமஜெயம் சார், வினோத் சார், ஹரிஷ் சார், கல்நாயக் சார் மற்றும் தொலைபேசியில் வாழ்த்துக்களைத் தெரிவித்த பம்மலார் சார் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நன்றி.

என்றும் நடிகர்திலகத்தின் புகழ் பரப்பும் பணியில் என்னை ஈடுபடுத்திக்கொள்ள் தங்கள் அனைவரின் வாழ்த்தும், ஆதரவும் உறுதுணையாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன்.

KCSHEKAR
27th August 2013, 10:43 AM
இத்திரியில் 2011 ஆம் ஆண்டு பதிவிட்டதை இங்கு மறுபதிவிட்டிருக்கிறேன். (அதன்பிறகு இணைந்துள்ள நண்பர்களுக்காக)


பிறந்த நாள் வாழ்த்துக்களை திரியிலும், தொலைபேசியிலும், முகநூல் மூலமாகவும் அளித்த நண்பர்களுக்கும் மற்றும் உங்களைப் போன்ற பல்லாயிரக்கான ரசிக இதயங்களின் நட்பை எனக்களித்த விண்ணிலிருந்து எனை வாழ்த்தும் கலை தெய்வம் நடிகர்திலகத்தின் புகழ் பரப்ப இவ்வுலகில் என்னைப் படைத்த இறைவனுக்கும் இந்த நேரத்தில் நன்றியை காணிக்கையாக்குகிறேன்.

இந்த நேரத்தில் என்னுடைய சில உணர்வுகளை இத்திரியில் பகிர்ந்துகொள்ள நினைக்கிறேன்.

சிறு வயது முதலே நடிகர்திலகத்தின் தீவிர ரசிகராக இருந்த எனக்கு, வேலையில் சேர சென்னை வந்தபோது நடிகர்திலகத்தை நேரில் சந்திப்பேன் என்றுகூட நினைத்தது கிடையாது. ஆனால் கடவுள் சித்தம் - அவரிடமே வேலைக்கு சேரும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. அவருடைய கட்சி அலுவலகப் பொறுப்பாளாராக பணியாற்றும்போதும், அவர் அரசியலைவிட்டு விலகிய பிறகு சிறிது காலம் சிவாஜி பிலிம்ஸ் அலுவலகத்தில் பணியாற்றியபோதும், அந்த மகானுடன் பழகியது என் வாழ்நாளில் மறக்கமுடியாத ஒன்றாகும்.

பொக்கிஷப் பதிவுகளை அள்ளி வழங்கும் ரசிக மாமணிகள் உள்ள இத்திரியில் - என்னுடைய வாழ்நாள் பொக்கிஷமாகக் கருதிப் பாதுகாத்து வரும் மூன்றை இணைப்பாக இங்கு அளித்துள்ளேன்.

1 ) 1985 ஆம் ஆண்டு அகில இந்திய சிவாஜி ரசிகர் மன்றத்தின் உறுப்பினர் அட்டையை திரு. தளபதி சண்முகம் அவர்களிடம் இருந்து பெற்றது.
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/KCSPokkisham/SivajiManramMember1983-84_zps9fb8176e.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/KCSPokkisham/SivajiManramMember1983-84_zps9fb8176e.jpg.html)

2 ) நடிகர்திலகத்தின் விசிட்டிங் கார்டு (அவருக்கு விசிடிங் கார்டு தேவையா என்ற கேட்பது எனக்குத் தெரிகிறது) சந்தனத்திலானது. வெளிநாடு செல்லும்போது மட்டும் உபயோகப்படுத்துவது.
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/KCSPokkisham/VistingCardofNT_zps10a4ac62.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/KCSPokkisham/VistingCardofNT_zps10a4ac62.jpg.html)

3 ) 25 - 08 - 1988 அன்று அலுவலகத்திற்கு வந்த நடிகர்திலகத்திடம் நாளை எனக்கு பிறந்த நாள் என்று சொன்னபோது, தன்னுடைய புகைப்படத்தில் கையெழுத்திட்டு, வாழ்த்து தெரிவித்து, எனக்கு அளித்த புகைப்படம் இது.
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/KCSPokkisham/NTPhotoAutograph1988_zpscd1ae38c.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/KCSPokkisham/NTPhotoAutograph1988_zpscd1ae38c.jpg.html)

நட்பு கலந்த நன்றியுடன்,

Subramaniam Ramajayam
27th August 2013, 12:46 PM
kartik sir.you are absolutely right SOME HUBBERS NOT ALL in the other thread always dragging NADIGARTHILAGAM for no reasons, he was always doing his job according to the directions given by direcor and others NOT OF HIS OWN UNLIKE OTHER ACTORS, BECAUSE HE HAD FAITH AND CONFIDENCE ON HIS PERFORMANCES ALWAYS, WHICH HE HAS VERY WELL SUCCEEDED. Atleast hereafter will they stop their dialahes.

IliFiSRurdy
27th August 2013, 01:19 PM
இத்திரியில் 2011 ஆம் ஆண்டு பதிவிட்டதை இங்கு மறுபதிவிட்டிருக்கிறேன். (அதன்பிறகு இணைந்துள்ள சில நண்பர்களுக்காக)



நடிகர்திலகத்தின் விசிட்டிங் கார்டு (அவருக்கு விசிடிங் கார்டு தேவையா என்ற கேட்பது எனக்குத் தெரிகிறது) சந்தனத்திலானது. வெளிநாடு செல்லும்போது மட்டும் உபயோகப்படுத்துவது.
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/KCSPokkisham/VistingCardofNT_zps10a4ac62.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/KCSPokkisham/VistingCardofNT_zps10a4ac62.jpg.html)


நட்பு கலந்த நன்றியுடன்,

சேகர் சார்,

அவர் மணப்பார் என்பது இவ்வுலகமே அறியும்.ஆனால்
அவரின் visiting card உம் மணக்கும் என நீங்கள் சொல்லித்தான் அறிந்தேன்.
ம்ம்ம்.... வேறு என்ன சொல்வது.!!!
உங்களை நினைத்தால்
மகிழ்ச்சியாகவும் இருக்கிறது;பொறாமையாகவும் இருக்கிறது..:-D:
கோடானு கோடி நன்றிகள்..

Gopal.s
27th August 2013, 01:28 PM
இப்போதுதான் ஒருவரை ஒருவர் மதிப்பதை பற்றி பேச்சு வந்தது. புதிதாக ஒருவர் பாசமலரை பற்றி துவங்கி விட்டார். என்னுடைய ஒரே பதில். எங்கள் படங்களை நாங்கள் கவனிக்கிறோம். உங்கள் வேலையை நீங்கள் பாருங்கள். அந்த காலத்தில் வயிற்றெரிச்சல் பிடித்து அலைந்தது போதாதென்று இந்த காலத்திலுமா?

joe
27th August 2013, 03:06 PM
http://www.youtube.com/watch?v=9kKq-lGqBw0

Gopal.s
27th August 2013, 03:27 PM
நடிகர்திலகத்தின் நட்சத்திர அந்தஸ்தை மூன்று பத்தாண்டுகளில் எவருமே நெருங்க கூட முடிந்ததில்லை என்பதை நாம் ஆதாரத்தோடு காட்டிய பிறகும் பொய்கள் ,புனைசுருட்டுகள் நிற்கவில்லை. அமைதியோடு வாழ, சிலருக்கு விருப்பமில்லை போலும். நம் படங்கள் ஓடுவதில் நம்மை விட அவர்களுக்குத்தான் அக்கறை அக்காலத்திலும் இக்காலத்திலும். 1952-1960 ,1961-1970,1971-1980 மூன்று பத்தாண்டுகளிலும் சிவாஜியின் success Rate அருகில் கூட யாரும் நெருங்க முடிந்ததில்லை. எந்த ஒரு திரையுலக பிரபலத்திடம் கேட்டாலும் சொல்வார் No 1 என்றால் படவுலகில் சிவாஜி மட்டுமே என்று. ஆடிக்கொரு முறை அமாவாசைக்கொரு முறை 1958,1965,1971 ,1973 என்று ஓரிரு படங்கள் மற்றோருக்கு வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால் தொடர்ச்சியான வெற்றி நாயகன் நடிகர்திலகம் மட்டுமே. 1950 களில் ஜெமினி நடிகர் திலகத்திற்கு அடுத்து நம்பர் 2 இடத்தில் இருந்தார். 1960 களில் நிறைய நடிகர்கள் நுழைந்து அரசியலும் நுழைந்த காலத்திலும் நடிகர்திலகம் No 1 ஆகவே தொடர்ந்தது பெரிய அதிசயம். அதிலும் அவர் இளைத்து இளமை மீண்டதும் ,அவர் எல்லா Genre படங்களிலும் நடித்து ABC மூன்றிலும் முடிசூடா மன்னனாகவே விளங்கினார். அவரின் புகழுக்கு அரசியல் துணையோ, பிரச்சாரங்களோ,பத்திரிகை பலமோ ,என்றுமே தேவை பட்டதில்லை. அந்த கால ராணி,தினத்தந்தி போன்ற பத்திரிகை பாமர மக்களிடையே அந்த தமிழனுக்கு எதிராகவே தவறான செய்திகளை போட்டும் நடிகர்திலகத்தின் புகழை அசைக்க கூட முடிந்ததில்லை.
எழுத்தாளர் சுஜாதா ஆனந்த விகடனில் எழுதியது போல "அவர் மறைவின் போது மட்டுமே அழுதவர் கண்ணீரில் உண்மை இருந்தது."

goldstar
27th August 2013, 06:36 PM
Good day guys,

After long time, good to see our friends again.

Belated Happy birth day to Chandrasekar sir.

Congrats and thank you Rahulram sir... for wonderful writing about TM.Even though so many reviews yours one is brisk and fresh like our NT movies.

Gopal sir, சாதனை என்றாலே நமது நடிகர் திலகம் தான் என்று அனைவருக்கும் தெரியும். நமது வேலை நமது நடிகர் திலகம் புகழ் பாடுவது மட்டுமே. துங்குபவர் போல் நடிப்பகர்களை எழுப்புவது கஷ்டம்

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/DE1_zpsef81cf00.png

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/DE2_zps6f4b3616.png

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/DE3_zps285d0672.png

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/DE5_zps02bb8709.png

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/DE6_zps1e4ec0d5.png

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/DE9_zpsa5add462.png

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/DE10_zpse59d010a.png

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/DE_zpsd6c75db8.png

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/DE7_zpsa276f898.png

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/DE8_zps7cac43c7.png

mr_karthik
27th August 2013, 07:45 PM
Dear Friends,

I already informed you that, I will search the posts of Saradha mam and Murali Srinivas sir about the wonderful movie “Dharmam Enge”. Fortunately our Raghavendar sir already re-produced the post of Saradha mam from her blog.

So, I re-produce the post of our Murali Srinivas sir about ‘Dharmam Enge’. Now over to Murali sir…..

தர்மம் எங்கே படம் சம்பந்தப்பட்ட தகவல்களை வழக்கம் போல சுவையாக வழங்கி இருக்கிறார் சாரதா. சாரதாவின் போஸ்டை படிக்கும் போது, எனக்கு மீண்டும் அந்த நினைவுகள். அந்த கால கட்டத்தில் NT பல படங்கள் நடித்து கொண்டிருந்தார், 1972-இல் முதலில் ராஜா வெற்றிகரமாக 100 நாட்களை கடந்தது. பிறகு வெளியான ஞான ஒளி-யும் வெற்றி. மூன்றாவதாக வெளி வந்த பட்டிக்காடா பட்டணமா (May 6th,1972) மகத்தான வெற்றி பெற, NT ரசிகர்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்த நேரம். சாரதா குறிப்பிட்டது போல தர்மம் எங்கே-விற்கு மிக பெரிய எதிர்பார்ப்பு எல்லோர் மனதிலும். சொந்த படம் வேறு. நான் பழைய போஸ்ட்-இல் சொன்னது போல ஒரு ஆங்கில படத்தை தழுவி எடுக்கப்பட்ட படம் தர்மம் எங்கே. Plan-படி ஜூலை 1 அன்று வெளியிடப்படுவதாக இருந்தது. PP படத்திற்கு 56 நாட்கள் Gap. த.எ. படத்திற்கு 56 நாட்கள் Gap விட்டு தவப்புதல்வன் ஆகஸ்ட் 26 ரிலீஸ் அதன் பிறகு 70 நாட்கள் Gap, நவம்பர் 4 அன்று தீபாவளி. அன்று வசந்த மாளிகை ரிலீஸ்.இப்படி இருந்த திட்டம் PP- யின் அசாதாரண வெற்றியினால் மாறியது. த.எ. இரண்டு வாரங்கள் தள்ளி போடப்பட்டு ஜூலை 15 அன்று வெளியானது. படம் எதிர்பார்த்த வெற்றியை பெற தவறியதால், முக்தா ஸ்ரீநிவாசன் தனது தவபுதல்வனை சொன்ன மாதிரியே ஆக் 26 அன்று வெளியிட்டார்.(படம் வெளி வருவதற்கு இரண்டு நாட்கள் முன்னர் தான் NT-யின் தாயார் ராஜாமணி அம்மையார் காலமானார்.ஆனாலும் படம் வெளியிடப்பட்டது). இந்த நேரத்தில் ராஜாவின் மகத்தான வெற்றியை தொடர்ந்து பாலாஜி நீதி- யை விரைவாக எடுப்பதை பார்த்த ராமாநாயுடு, தனது வசந்த மாளிகையை செப் 29 அன்று வெளியிட்டார். நீதி டிசம்பர் 7 அன்று வெளியானது. 1972 தீபாவளிதான் NT படம் வெளி வராத தீபாவளி. அதற்கு பிறகு 1987 தீபாவளிதான் மிஸ் ஆனது.

Coming to தர்மம் எங்கே., இந்த படம் ரிலீஸ் ஆன நேரத்தில், நடிகர் திலகத்தின் ரசிகர்களின் மத்தியில் இருந்த உணர்ச்சி வார்த்தைகளால் விவரிக்க முடியாதது. படம் ரிப்போர்ட் சுமார் என்று வந்த போதும்,தியேட்டரில் மிக பெரிய கூட்டம். The atmosphere was electric. You could actually touch it. இரண்டாவது நாள் மாலை காட்சி,அது போல ஒரு மக்கள் வெள்ளத்தை நான் பார்த்ததில்லை. அப்போது ஆளும் கட்சியாக இருந்த தி.மு.க. பிளவுபடாத நேரம். இந்த படத்தின் கதைப்படி அன்று இருந்த அரசியல் சூழ்நிலைக்கேற்ப பொடி வைத்த வசனங்கள்,அதுவும் ரசிகர்களை உசுப்பேற்றி விட்டது. அரங்கிற்கு உள்ளேயும் வெளியேயும் நடிகர் திலகம் வாழ்க என்று விண்ணதிர குரல்கள். நாங்கள் உள்ளே நுழையும்போது படம் ஆரம்பித்துவிட்டது. முதல் காட்சியே நடிகர்திலகம் அறிமுகமாகும் பாடல் காட்சி(சுதந்திர பூமியில் பல வகை மனிதரும்). தொடர்ந்து NT-யின் தங்கையாக வரும் குமாரி பத்மினியை ஒரு அடியாளிடமிருந்து காப்பாற்ற முத்துராமன்,அவனை கொலை செய்துவிட, ஊர் மத்தியில் எல்லோரையும் சோதனை செய்யும் வீரர்கள், அந்த நேரம் முத்துராமனின் உடையில் படிந்திருக்கும் ரத்தக்கறையை NT கவனித்து,அதை யாருக்கும் தெரியாமல் முத்துராமனிடம் சுட்டிக்காட்ட, முத்துராமன் மெதுவாக அந்த இடத்தை விட்டு விலக, ஆரம்பமே அமர்களமாக இருக்கும். அந்த விறுவிறுப்பு மட்டும் இடைவேளைக்கு பிறகு இருந்திருந்தால்,படம் மிக பெரிய வெற்றி பெற்றிருக்கும். இப்படி இருந்தும் முதல் 10 நாட்கள் மதுரையில் படம் எல்லா காட்சிகளும் House Full.

இந்த படத்தில் இடைவேளைக்கு முன்னால் நம்பியாரின் கோட்டைக்கு ரகசியமாக 5 பேர் சென்று புரட்சியை நடத்த முடிவு எடுக்கப்படும். பெண் என்பதால் JJ வேண்டாம் என்று NT சொல்லுவார். பிறகு வண்ண காசுக்களை எல்லோரும் எடுக்க செய்து அதில் சிவப்பு(?) வண்ணம் யார் யாருக்கு கிடைக்கிறதோ அவர்கள் செல்வதாக முடிவாகும். JJ-விற்கு அது கிடைக்க, மீண்டும் எதிர்ப்பு வரும். அப்போது JJ பேசும் ஒரு வசனம்"நான் முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தவள். என்னை யாரும் நிராகரிக்க முடியாது".

ஆங்கில மூலப்படத்தில் கதாநாயகன் இறுதியில் பீரங்கி குண்டுக்களுக்கு இரையாகி இறந்துவிடுவதாக இருக்கும். தமிழிலும் அப்படிதான் முதலில் அமைக்கப்பட்டிருந்தது. அதனால் தான் தலைப்பு கூட கேள்விக்குறியாக வைக்கப்பட்டது. (இடைவேளைக்கு முன்னால் "தர்மம் எங்கே? நியாயம் எங்கே? நினைத்தால் முடிக்கும் நெஞ்சம் எங்கே?" என்ற சீர்காழி பாடலும் இடம் பெற்றது).ஆனால் அந்த காலத்தில் நடிகர்திலகத்தின் தொடர் வெற்றிகள் சோக முடிவை சந்தோஷ முடிவாக மாற்றியது. சோக முடிவிற்காக வைக்கப்பட்ட தலைப்பை கடைசி காட்சியில் முத்துராமனை விட்டு ஒரு வசனம் பேச வைத்து "தர்மம் எங்கே என்று கேட்டவர்களுக்கு,அது இங்கே இருக்குன்னு நீ நிரூபிச்சிடே" என்று Justify பண்ணுவார்கள்.மதுரையில் 49 நாட்கள் ஓடின இந்த படம் AVM ராஜன் நடித்த பதிலுக்கு பதில் வெளியான போது(செப் 2,1972) மாற்றப்பட்டது..

orodizli
27th August 2013, 11:18 PM
thiru ragavendra and mr.gopal avarhalukku pudhiavaahia ennai receive seithatharkku nandri. mattrum ungal ellorudaya pathivuhalum armai. athodu neriyana correct -aana thahavalkalai perithum ethirnoakkum anban...

IliFiSRurdy
28th August 2013, 07:07 AM
நண்பர்களே,
இன்றைய தினமலர் செய்தித்தாள் வலைத்தளத்தில் வந்துள்ள ஒரு உருக்கமான கடிதம்..உங்கள பார்வைக்கு..(நன்றி:தினமலர்)
================================================== ================================================== =======================

சினிமா நூற்றாண்டு விழா கமிட்டிக்கு சிவாஜி ரசிகனின் கண்ணீர் கடிதம் - ஸ்பெஷல் ஸ்டோரி!
22

Sivaji fans request to 100th Indian Cinema Celebration Committee : Special Story
அன்புள்ள சினிமா நூற்றாண்டு விழா அமைப்பாளர்களுக்கு அடியேன் சிவாஜி ரசிகனின் அன்பு வணக்கம்...

நம்ம பாரத தேசத்துக்குள்ள சினிமா வந்து 100 வருஷம் ஆகிப்போச்சுங்களாம். நம்ம தமிழ்நாட்டுக்குள்ள சினிமா வந்து 75 வருஷம் ஆகிப்போச்சுங்களாம். அந்த விபரமெல்லாம் எனக்கு தெரியாதுங்க. நான் வணங்குற தெய்வம், என் அன்பு அண்ணன் சிவாஜி பத்திதான் எனக்கு தெரியுமுங்க. விழுப்புரம் கணேசனா இருந்தவரு சிவாஜி கணேசனா மாறின கதைதான் தெரியுமுங்க. பராசக்திலேருந்து பூப்பறிக்க வருகிறோம் வரைக்கும் 300க்கும் கூடுதலா அவர் நடிச்ச படங்கதான் தெரியுமுங்க. சிவபெருமான், சிவத் தொண்டர், வீரபாகு, கிருஷ்ணன், இப்படியாப்பட்ட கடவுள்கள நாங்க அவர் உருவத்துலதாங்க பார்த்திருக்கோம். கப்பலோட்டிய தமிழன், பாரதி, வீரபாண்டிய கட்டபொம்மன், ராஜராஜசோழன் இவுங்களையும் அவர் உருவத்துலதாங்க பார்த்திருக்கோம். இன்னிக்கு நாலு வேடத்துல நடிக்கிறோம் அஞ்சு வேடத்துல நடிக்கிறோம்னு பீத்திக்கிறாங்களே அன்னிக்கே 9 வேஷத்துல நடிச்ச மனுஷன் அவரு. சஸ்பென்ஸ் திரில்லர் படம் எடுக்குறோம்னு பெருமையா சொல்றாங்களே. புதிய பறவையை விடவாய்யா ஒரு சக்சஸ் த்ரில்லர் வேணும்.

அவரு பண்றதெல்லாம் ஓவர் ஆக்டிங்குன்னு அவருக்கு பிடிக்காதவங்க சிலபேரு சொல்லுவாங்க. அந்த காலத்துல அதுதான்யா நடிப்பு. அவரும் தேவர் மகன், முதல் மரியாதையில நீங்க சொல்ற யதார்த்த நடிப்ப காட்டலியா. சிலபேரு அவரு ரொம்ப சிக்கனவாதி, யாருக்கும் எதுவும் செய்றதில்லேன்னு நாக்குல பல்லுபடாம சொல்லுவாங்க. மற்றவங்க மாதிரி உதவி பண்ணிக்கிட்டு அதை பப்ளிசிட்டி பண்ணிக்க தெரியாது அவருக்கு. வீரபாண்டிய கட்டபொம்மன் சிலை இருக்கே பாஞ்சாலங்குறிச்சியில அதுக்கு இடமும் வாங்கி கொடுத்து சிலைய அமைச்சும் கொடுத்தது யாரு.. இன்னும் நிறைய இருக்கு.

மக்களுக்காக கட்சி ஆரம்பிச்சு சொத்துல பாதிய இழந்தது யாருக்காவது தெரியுமாய்யா?, பொய் சொல்லத் தெரியாம, துரோகம் பண்ணத் தெரியாம வேளைக்கு ஒண்ண பேசத்தெரியாம அரசியலுக்கு நாம லாயக்கில்லேண்ணு ஒதுங்கினவருய்யா அவரு. காமராசர் ஒருத்தரை மட்டும்தான் கடைசி வரைக்கும் தலைவரா நினைச்சு வாழ்ந்தவரு. இன்னிக்கு புதுசா நடிக்க வர்றவங்க ரெண்டு படத்துலயே நாலு பங்களா கட்டிக்கிறாங்களே. ஆனா என் தலைவனுக்கு இப்பவும் அன்னை இல்லமும், ராயபுரம் சிவாஜி பிலிம்சும், சூரக்கோட்டை பண்ணையும்தான்ய்யா சொந்தம்.

இதையல்லாம் நான் ஏன் உங்களுக்கு எழுதுறேன்னா. சினிமாவோட 100வது பிறந்த வருஷத்தை கொண்டாடப்போறீங்க. ரொம்ப சந்தோஷம். அம்பது வருஷம் சினிமா நடிப்புன்னு வாழ்ந்தானே என் தலைவன் அவனுக்கு என்னய்யா செய்யப்போறீங்க. இதுவரைக்கும் என்ன செஞ்சிருக்கீங்க. அவரு செத்த அன்னிக்கு சினிமா உலகமே கூடி அழுததோட சரி, அதுக்குபிறகு அவரை மறந்துட்டு அவுங்கவுங்க வேலைய பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க. இந்த நடிகர் சங்கம் என்னிக்காவது அந்த மனுஷனோட பிறந்த நாளை நினைவு நாளை கொண்டாடி இருக்கா. ஆளுயரத்துக்கு அவரோட படத்தை மாட்டி வச்சிருக்காங்களே அதுக்காவது ஒரு மாலைய வாங்கிப் போட்டிருப்பாங்களா. ஆனா மேடையில பேசுறப்போ மட்டும் சிவாஜியை பார்த்துதான் நான் சினிமாவுக்கு வந்தேன்னு நாக்கூசாம சொல்லுவாங்க.

அடையார் சத்யா ஸ்டூடியோவுக்கு எதிர்ல 2005ம் வருஷம் 22ந் தேதி சிவாஜி மணிமண்டபம் கட்டப்போறோம்னு பூமி பூஜை போட்டப்ப அம்புட்டு சந்தோஷப்பட்டோம். இன்னிக்கு 8 வருஷம் தாண்டிப்போச்சு யாராவது அதை எட்டிப்பார்த்திருக்கீங்களாய்யா. அரசாங்கம் ஒதுக்கின 12 கிரவுண்டு இடமும் சும்மா கிடக்குது. அரசு ஒதுக்கின இடத்தை பயன்படுத்தலேன்னா குறிப்பிட்ட வருஷத்துக்கு பிறகு அரசாங்கம் அதை எடுத்துக்கும் அந்த வருஷத்தையும் நெருங்குது தெரியுமாய்யா? எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் ரெண்டு நடிகராவது ஆட்சிக்கு வேண்டியவங்களா இருக்கீங்க. யாராவது இதை அரசாங்கத்தோட கவனத்துக்கு கொண்டு போயிருக்கீங்களா?

சிவாஜி மணிமண்டபத்துல தியேட்டர் வரப்போவுது, நாடக கொட்டகை வரப்போவுது, நடிப்பு கல்லூரி வரப்போவுது, சிவாஜி மியூசியம் அமைச்சு அதுல அவரோட போட்டோ அவர் அணிந்த உடைகள் எல்லாத்தையும் வைக்கபோறோம்னு கதை கதையா சொன்னீங்க; எல்லாம் எங்கேய்யா போச்சு. சினிமால காட்டுற மாதிரியே சிவாஜி ரசிகனுக்கும் சீன் காட்டிட்டீங்கல்ல. அன்னிக்கு ஒரு கோடி ரூபாய்ல கட்டப்போறதா திட்டம் சொன்னீங்க. இன்னிக்கு ஒரு கோடி ரூபாய்ல காம்பவுண்டு சுவர்கூட கட்ட முடியாதுங்களே.

சரி அதுபோகட்டும் விடுங்க, அம்மா மணிமண்டபத்துக்கு இடம் கொடுத்தாங்க. அதை கட்டினா பேரு அம்மாவுக்கு போயிடும்னு, அய்யா அதை அப்படியே போட்டுட்டு நாற்பதாண்டுகால நண்பனுக்கு சிலை வைக்கறேன்னு பீச் ரோட்டுல சிலை வச்சாரு. அதுக்கு இன்னய வரைக்கும் தினமும் மாலைபோடுறது சிவாஜி குடும்பந்தான்யா. அட அதுக்குகூடவா நடிகர் சங்கத்தால முடியாம போச்சு. அரசாங்கம் சார்புல பிறந்த நாள் நினைவு நாளுக்கு அமைச்சருங்க மாலை போட்டு மரியாதை செய்வாங்க. அந்த லிஸ்ட்டுலகூட என் தலைவன் இல்லய்யா. அட நீங்களாவது அவரது பிறந்த நாள், நினைவு நாளுக்கு அவரது சிலைக்கு மாலை போட்டிருக்கீங்களா. கர்நாடகாவுல போயி பாருங்க ராஜ்குமாரோட பிறந்த நாளை தீபாவளி மாதிரி கொண்டாடுறாங்க. தெலுங்கு பக்கம் போயி பாருங்க என்.டி.ஆரை தெய்வமா கொண்டாடுறாங்க. நீங்க அந்த அளவுக்கு செய்யவேணாம்யா. அந்த மனுஷனை நினைச்சாவது பார்க்கலாமுல்ல.

இன்னும் நிறைய வவுத்தெரிச்சல் இருக்குது. யாருகிட்டபோயி சொல்றதுன்னுதான் தெரியல. ஏதோ நீங்க விழா கொண்டாடப்போறதால உங்ககிட்ட சொன்னா எதுனாச்சும் செய்வீங்கல்ல அதான் சொன்னேன். குறைஞ்ச பட்சம் அவரோட மணிமண்டபத்துக்காவது ஒரு வழி சொல்லாம நீங்க சினிமா 100 விழா கொண்டாடினீங்கன்னா சாமி இல்லாம தேர்திருவிழா கொண்டாடின மாதிரிதான் இருக்கும். தப்பா எதுனாச்சும் சொல்லியிருந்தா மன்னிச்சிருங்க சாமிங்களா.

அன்புள்ள

சிவாஜி ரசிகன்

Gopal.s
28th August 2013, 07:53 AM
thiru ragavendra and mr.gopal avarhalukku pudhiavaahia ennai receive seithatharkku nandri. mattrum ungal ellorudaya pathivuhalum armai. athodu neriyana correct -aana thahavalkalai perithum ethirnoakkum anban...
சுகாராம்,
நீங்கள் பதிவுகளை மாற்றி மாற்றி போடுவதால் ,குழம்பி விட்டீர்களா? இங்கு சுத்தமான சுகாதாரமான, நெறியான, நேர்மையான, ஆதாரத்துடன் கூடிய உண்மை செய்திகளை மட்டுமே எதிர்பார்க்கலாம். நடிகர்திலகம் தன வாழ்வில் காந்திய,காமராஜ் வழியில் நெறிமுறைகளை கடைபிடித்தது போல, படித்த ,பண்புள்ளவர் கூடும் இடமாக இந்த திரி புகழ் அடைந்துள்ளது.நீங்களும் நேர்மையான பதிவுகளை இங்கு இடலாம். உங்களுக்கு பிடித்த நடிகர்திலகத்தின் படங்களுக்கு ஏற்கெனெவே விமர்சனங்களும் ,ஆய்வுகளும் நடந்தேறி விட்டன. கூடிய விரைவில் லிங்க் தருகிறேன்.

Gopal.s
28th August 2013, 07:56 AM
Ganpat,
All Tamils should feel ashamed and guilty about the way we treated greats like mahakavi Barathi and Nadigarthilagam Sivaji.

Gopal.s
28th August 2013, 08:25 AM
கார்த்திக் சார்,
என்னை வைச்சு காமெடி பண்ணியிருக்கீங்க. சாரதா மேடமும் ,முரளி சாரும் எழுதி கொடி நாட்டிய படத்துக்கு என்னையும் எழுத சொல்லி. தில்லானா மோகனாம்பாள் நாட்டியமாடிய பின் ஜில் ஜில் ரமாமணி நான் எதற்கு?மீள் பதிவுகளுக்கு நன்றி உங்களுக்கும் ,ராகவேந்தருக்கும்.

joe
28th August 2013, 08:42 AM
அனைவருக்கும் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள்

http://www.youtube.com/watch?v=iRJa6IydKRM

mr_karthik
28th August 2013, 10:21 AM
அன்புள்ள கோபால் சார்,

ஒவ்வொரு படத்தைப்பற்றியும் ஒவ்வொருவருக்கும் ஒரு பார்வை இருக்கும். அந்த வகையில்தான் 'தர்மம் எங்கே' படம் பற்றிய தங்கள் அலசலை தங்கள் கோணத்தில் பதிவிட வேண்டினேன். அதுவும் குறிப்பாக '1972-ம் ஆண்டின் படங்களைப்பற்றி எழுதப்போகிறேன்' என்று நீங்கள் அறிவித்ததால், அது வழக்கம்போல ஞானஒளி, பட்டிக்காடா பட்டணமா, வசந்த மாளிகை என்பதோடு நின்று விடக்கூடாது. எனக்குப்பிடித்த, நமக்குப்பிடித்த, நடிகர்திலகத்தின் ரசிகர்களுக்குப் பிடித்த "தர்மம் எங்கே" விடுபட்டு விடக்கூடாது என்ற ஆதங்கத்திலேயே தங்களை உசுப்பி விட்டேன். நீங்களும் அருமையாக எழுதி விட்டீர்கள். சாரதா அவர்களும், முரளி சார் அவர்களும் குறிப்பிடாத பல விஷயங்கள் தங்கள் பதிவில் இடம்பெற்றுள்ளன.

தில்லானாவையும், வசந்த மாளிகையையும் போற்றி எழுத இன்னும் ஆயிரமாயிரம் பேர் வருவார்கள். "தர்மம் எங்கே" யைக் கண்டுகொள்ள நம்மை விட்டால் வேறு யார்?.

'தங்க நட்சத்திரம்' சதீஷ் அவர்களே,

தாங்கள் பதித்துள்ள தர்மம் எங்கே நிழற்படங்கள் மிக மிக அருமையாக உள்ளன. நன்றிகள்...

Gopal.s
28th August 2013, 11:14 AM
தவப்புதல்வன்- 1972

முக்தா ஸ்ரீனிவாசன் ,சிவாஜியுடன் "அந்த நாள்" முதல் பணி புரிபவர். சில சிறு வெற்றி படங்கள் எடுத்த பிறகு நடிகர்திலகத்துடன் இணைந்து நிறைகுடம்,அருணோதயம் முதலிய வெற்றிகள் கண்டு தவப்புதல்வனை மூன்றாவது தொடர் வெற்றி படமாக வெளியிட்டார்.அவர் எல்லா படங்களுக்கும் அவர் இயக்குனர். அவர் அண்ணன் ராமசாமி பெயரில் தயாரிக்க படும்.

முதலில் சில வருடங்கள் உதவி இயக்குனாராக பணி புரிந்து ,முழு இயக்குனராக முதலாளி என்ற சூப்பர் ஹிட் படத்துடன் 57 இல் படத்துறையில் நுழைந்தவர்.ஆரம்பத்தில் எஸ்.எஸ்.ஆர் மற்றும் ஜெமினி உடன் பணிபுரிந்தாலும் பின்னாட்களில் இவர்களை உபயோகித்ததில்லை. 69 முதல் சிவாஜியுடன் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனராக இணைந்தார்.

அவர் படங்களுக்கென்று தனி சூத்திரம் உண்டு.

1) கதாநாயகன் அல்லது நாயகி ஏதாவது உடற்குறை அல்லது மன பிறழ்வு கொண்டிருப்பார்கள்.
2)இவர்கள் குறைகளால் ஏதாவது மோசமான விளைவு நேரும்.
3)அந்த விளைவுக்கோ செயலுக்கோ அவர்கள் பொறுப்பாக மாட்டார்கள்.
4)பழிதுடைத்து, அல்லது குறை தீரும் வரை அவர்களை வில்லனோ வில்லியோ ஆட்டி படைப்பார்கள்.
5)கதாநாயகன் அதை மற்றவரிடமிருந்து மறைத்து உண்மை வெளிக்கொண்டு வர முயல்வார்.
6)நகைச்சுவை நடிகர்களுக்கென தனி track ஓடும்.
7)ஒரு கட்டத்தில் நகைச்சுவை நடிகர்கள் ,கதாநாயகனின் பிரச்சினையில் இணைந்து தீர்க்க பார்க்கும் போது, பிரச்சினையில் வேடிக்கையான திருப்பங்கள் சேர்ந்து படத்தை நகர்த்தும்.
8)பெரும்பாலும் முடிவு சுபமாகவே இருக்கும்.
9)நகைச்சுவை முக்கியத்துவம் பெற்றாலும் ,மனதை வருடும் காட்சிகளும் இருக்கும்.
10)நாகேஷ்,சோ,மனோரமா தவறாமல்.

---இசையமைப்பாளர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி,டி.கே.ராமமூர்த்தி,குமார் ,கே.வீ.மகாதேவன் என்று மாறி மாறி விஸ்வநாதனிடம் நிலை கொண்டது.

---வித்யா movies என்ற போர்வையில் ரவி,ஜெய்,முத்துராமன் என்றும் தொடர்ந்து படங்கள் எடுத்தார்.

---நடிகர்திலகத்தை வைத்து 9 படங்கள் இயக்கி தயாரித்தார்.

---பலவேறு பட்ட கதாசிரியர்களுடன் பணி புரிந்துள்ளார். குறிப்பிட தக்கவர்கள்-கே.பாலசந்தர்,மதுரை திருமாறன்,மகேந்திரன்,சோ,தூயவன், கலைஞானம்,ஏ.எஸ்.பிரகாசம்,விசு ஆகியோர்.

---மிக குறைந்த செலவில் படமெடுத்து பெரும் லாபம் கண்டவர்.

---பாலாஜி,திருலோகச்சந்தர்,மாதவன் வரிசையில்,நடிகர்திலகத்தின் loyalist ஆக இருந்து மிக பெரும் பலன் கண்டு ,லாபத்துடன் மன அமைதி கொண்டு மதிப்புடன் வாழ்ந்தவர்.

---மெகா ஹிட் படங்கள் தவப்புதல்வன்,அந்தமான் காதலி,கீழ் வானம் சிவக்கும். ஹிட் படங்கள் நிறைகுடம்,அருணோதயம்,இமயம்,பரீட்சைக்கு நேரமாச்சு. சுமார் வரிசையில் அன்பை தேடி,இரு மேதைகள்.

---பழுத்த காங்கிரஸ் தேசியவாதி.

---To be continued.

KCSHEKAR
28th August 2013, 12:40 PM
டியர் கண்பத் சார்,

தங்களின் பாராட்டிற்கு நன்றி. தினமலரில் வெளிவந்துள்ள கடிதம், ஒவ்வொரு சிவாஜி ரசிகனின் உள்ளத்திலும் கொதித்துகொண்டிருக்கும் ஆதங்கத்தை வெளிப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது.

எழுதிய அன்பு ரசிகருக்கும், வெளியிட்ட தினமலர் நாளிதழுக்கும், பதிவிட்ட தங்களுக்கும் நன்றி.

KCSHEKAR
28th August 2013, 12:41 PM
டியர் கோல்டு ஸ்டார் சதீஷ் சார்,

தங்களின் அன்பான வாழ்த்திற்கு நன்றி.

தர்மம் எங்கே புகைப்படப்பதிவுகள் அருமை.

KCSHEKAR
28th August 2013, 12:44 PM
தில்லானாவையும், வசந்த மாளிகையையும் போற்றி எழுத இன்னும் ஆயிரமாயிரம் பேர் வருவார்கள். "தர்மம் எங்கே" யைக் கண்டுகொள்ள நம்மை விட்டால் வேறு யார்?.

டியர் கார்த்திக் சார்,

முரளி சாரின் "தர்மம் எங்கே" மீள்பதிவிற்கு நன்றி.

KCSHEKAR
28th August 2013, 12:45 PM
டியர் கோபால் சார்,

"தவப்புதல்வன்" முன்னுரைத் துவக்கம் அருமை.

rangan_08
28th August 2013, 04:47 PM
சமூக அக்கறை என்பது குடிக்கும் வேடத்தில் நடிக்காமல் இருப்பதில் மட்டும்தானா?. உடன் நடிக்கும் கதாநாயகியரை ஆபாசமாகக் காட்டுவதில் இல்லையா?. அவர் இடம்பெறும் எத்தனை டூயட்களில் நாயகியர் ஆபாசமாக உடையணிந்து நடித்துள்ளனர். குறிப்பாக "அழகிய தமிழ்மகள்" பாடலாகட்டும், "நீ என்னென்ன சொன்னாலும் கவிதை" பாடலாகட்டும், "இன்னொரு வானம் இன்னொரு நிலவு" பாடலாகட்டும், "அங்கே வருவது யாரோ" பாடலாகட்டும் கதாநாயகியரான மஞ்சுளா, லதா ஆகியோரின் உடைகள் படு ஆபாசம். இதுபோல ராமன் தேடிய சீதையிலும் ஒரு பாடலில் ஜெயலலிதா ரொம்ப ஆபாச உடையில் ஆடியிருப்பார். (இதுபோல பல பாடல்கள், சாம்பிளுக்கு மட்டும் இவை. இவற்றை மட்டுமே இல்லைஎன்று மறுக்கட்டுமே). இது ஒன்றும் இல்லாத குற்றச்சாட்டு அல்ல. அனைத்துப்பாடல்களும் இணையத்திலும் கிடைக்கின்றன. தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பாகின்றன. பார்த்து கன்பர்ம் பண்ணிக்கொள்ளலாம். .

Nothing to offend...i just wanted to register my view.

In his films, Mr. MGR, considers only his mother & thangachi as " thaaikulam". If you watch "Kadaloram vangiya kaatru" , Manjula, precariously wears a small piece of cloth which is actually meant to be a saree and that little piece of cloth also flies in air as soon as the song begins....but the gentleman's hat however remains intact on his head.

rangan_08
28th August 2013, 04:57 PM
அனைவருக்கும் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள்

http://www.youtube.com/watch?v=iRJa6IydKRM

Thank you.

On behalf of Barrister's protege, Kannan - Krishna Jayanthi wishes to every one. http://www.mayyam.com/talk/images/icons/icon7.png

Scottkaz
28th August 2013, 07:34 PM
[QUOTE=Gopal,S.;1068497]நடிகர்திலகத்தின் நட்சத்திர அந்தஸ்தை மூன்று பத்தாண்டுகளில் எவருமே நெருங்க கூட முடிந்ததில்லை என்பதை நாம் ஆதாரத்தோடு காட்டிய பிறகும் பொய்கள் ,புனைசுருட்டுகள் நிற்கவில்லை. அமைதியோடு வாழ, சிலருக்கு விருப்பமில்லை போலும். நம் படங்கள் ஓடுவதில் நம்மை விட அவர்களுக்குத்தான் அக்கறை அக்காலத்திலும் இக்காலத்திலும். 1952-1960 ,1961-1970,1971-1980 மூன்று பத்தாண்டுகளிலும் சிவாஜியின் success Rate அருகில் கூட யாரும் நெருங்க முடிந்ததில்லை. எந்த ஒரு திரையுலக பிரபலத்திடம் கேட்டாலும் சொல்வார் No 1 என்றால் படவுலகில் சிவாஜி மட்டுமே என்று. ஆடிக்கொரு முறை அமாவாசைக்கொரு முறை 1958,1965,1971 ,1973 என்று ஓரிரு படங்கள் மற்றோருக்கு வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால் தொடர்ச்சியான வெற்றி நாயகன் நடிகர்திலகம் மட்டுமே. 1950 களில் ஜெமினி நடிகர் திலகத்திற்கு அடுத்து நம்பர் 2 இடத்தில் இருந்தார். 1960 களில் நிறைய நடிகர்கள் நுழைந்து அரசியலும் நுழைந்த காலத்திலும் நடிகர்திலகம் No 1 ஆகவே தொடர்ந்தது பெரிய அதிசயம். அதிலும் அவர் இளைத்து இளமை மீண்டதும் ,அவர் எல்லா Genre படங்களிலும் நடித்து ABC மூன்றிலும் முடிசூடா மன்னனாகவே விளங்கினார். அவரின் புகழுக்கு அரசியல் துணையோ, பிரச்சாரங்களோ,பத்திரிகை பலமோ ,என்றுமே தேவை பட்டதில்லை. அந்த கால ராணி,தினத்தந்தி போன்ற பத்திரிகை பாமர மக்களிடையே அந்த தமிழனுக்கு எதிராகவே தவறான செய்திகளை போட்டும் நடிகர்திலகத்தின் புகழை அசைக்க கூட முடிந்ததில்லை.
எழுத்தாளர் சுஜாதா ஆனந்த விகடனில் எழுதியது போல "அவர் மறைவின் போது மட்டுமே அழுதவர் கண்ணீரில் உண்மை இருந்தது."[/QUOTE

முதன்முறையாக இந்ததிரியில் வேதனையுடன்
http://i41.tinypic.com/jru07n.jpg

பரவா இல்லையே

அமாவாசைக்கொரு முறை 1958,1965,1971 ,1973 என்று ஓரிரு
படங்கள் மற்றோருக்கு வெற்றி பெற்றவரா தொடர்ந்து மூன்று முறை முதல்வர் ஆனார்


இன்றுவறை திரையரங்கு உரிமையாளருக்கு வசூல் சக்ரவர்த்தி ஆனார்
அவர் எப்படிப்பட்ட மகான்

]என்றும் எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர் [/SIZE]

Gopal.s
28th August 2013, 08:42 PM
பச்சை குத்திகொள்ளும் பகுத்தறிவு பாசறைகள் எங்கள் திரியில் வருவது எங்களுக்கு வேதனை மட்டுமல்ல........

நான் கூறிய ஒவ்வொன்றுக்கும் ஆணித்தரமான புள்ளி விவரங்கள் உள்ளன. மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சிட வேண்டாம் நண்பரே...

Gopal.s
28th August 2013, 08:55 PM
வினோத் சார்,
நாங்கள் ஏற்கெனெவே நிறைய முறை கூறியும் நிறுத்தாமல் அத்து மீறி தாக்குதல்கள் தொடர்கின்றன. இவற்றுக்கு மூலம் உங்களுக்கும் தெரியும் புரியும். இது நம் திரிகளின் நோக்கத்தையே திசை திருப்புகின்றன. இன்று அமைதி காணலாம் என்று முடித்தால்....
இதற்கு மேலும் அமைதிக்கு நாங்கள் எப்படித்தான் வழி காண்பது?

Scottkaz
28th August 2013, 08:56 PM
பச்சை குத்திகொள்ளும் பகுத்தறிவு பாசறைகள் எங்கள் திரியில் வருவது எங்களுக்கு வேதனை மட்டுமல்ல........

நான் கூறிய ஒவ்வொன்றுக்கும் ஆணித்தரமான புள்ளி விவரங்கள் உள்ளன. மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சிட வேண்டாம் நண்பரே...

உங்களைவிட பலமடங்கு புள்ளிவிவரங்ககள் எங்களிடமும் உள்ளது நண்பரே எங்களுக்கும் தெரியும் வெகு விரைவில் காண்பிர்கள் நண்பரே

என்றும் எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்

rsubras
29th August 2013, 01:15 AM
Sivaji is the undisputed king of film world and he continues / will continue to rule everyone's heart years after he left this world by virtue of his acting skills

MGR was the undisputed king in the modern TN politics (after 1974) and he continues to stamp his influence years after he left this world...... ithai ippadi mattum vachukkalamae....

venkkiram
29th August 2013, 02:07 AM
Sivaji is the undisputed king of film world and he continues / will continue to rule everyone's heart years after he left this world by virtue of his acting skills

MGR was the undisputed king in the modern TN politics (after 1974) and he continues to stamp his influence years after he left this world...... ithai ippadi mattum vachukkalamae.... காமராஜர் செய்யாத சாதனைகளா? தலையிருக்க வாலை ஆட்ட முயல்வதேன்?

Avadi to America
29th August 2013, 02:29 AM
காமராஜர் செய்யாத சாதனைகளா? தலையிருக்க வாலை ஆட்ட முயல்வதேன்?

Venki athuku thaan avar modern day politicsnu soldraru... he considers the era stars from 1974....

venkkiram
29th August 2013, 03:35 AM
@Kamaraj's initiatives are modern. Year of implementation does not matter!

Russellrco
29th August 2013, 04:35 AM
Nothing to offend...i just wanted to register my view.

In his films, Mr. MGR, considers only his mother & thangachi as " thaaikulam". If you watch "Kadaloram vangiya kaatru" , Manjula, precariously wears a small piece of cloth which is actually meant to be a saree and that little piece of cloth also flies in air as soon as the song begins....but the gentleman's hat however remains intact on his head.

Nadigar Thilagam Song from Annan Oru Kovil


http://www.youtube.com/watch?v=kspD7EfZB9U

venkkiram
29th August 2013, 06:26 AM
Nadigar Thilagam Song from Annan Oru Kovil


http://www.youtube.com/watch?v=kspD7EfZB9U

முதல் பதிவே பலமா இருக்கே! ஒண்ணு மட்டும் தெரியுது. சிவாஜி - எம்.ஜி.ஆர் இருவரிடமிருந்தும் கற்றுக்கொண்டிருக்கிறார் கமல். ரஜினி அப்படி அல்ல. முத்தம் கொடுப்பது கூட ரொம்ப அமெச்சூராக இருக்கும் சூப்பர் ஸ்டார் படத்தில்.

Gopal.s
29th August 2013, 06:57 AM
PMC சார்,
திரிக்கு வருகை தரும் புதுமுகம் என்ற முறையில் உங்களை மனமார வரவேற்கிறேன். உங்களுக்கு மிக மிக நன்றி. நான் எடுத்து விவரித்து எழுத நினைத்த பாடலை தாங்கள் முதல் பதிவாக இட்டிருப்பது அண்ணன் ஒரு கோவில் படத்தில் சிவாஜி -சுஜாதா நடித்து கே.விஜயன் இயக்கி ஜி.ஆர்.நாதன் ஒளிப்பதிவில் 1977 இல் வெளியானது. பாடல்-கண்ணதாசன் .இசை -விஸ்வநாதன்.
வக்கிரம் கலக்காத மனதுக்கு கலையுணர்ச்சி கலந்த இன்ப எழுச்சியை ஊட்டும் கலை Erotism (ஈரோஸ் என்ற கடவுளின் பெயரில்) என்று அழைக்க படும் .கஜுரஹோ சிற்பங்களை போல.
அன்று எல்லா பத்திரிகைகளிலும் இந்த காட்சி மிக மிக விரும்ப பட்டு சிலாகிக்க பட்டது.அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்து ,படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு உறுதுணையாகவே அமைந்தது. பூகம்ப வேளையில் வான்கோழி கலவி என்ற வைர முத்து வைர வரிகளுக்கு மகுடம் இந்த அற்புதமான பாடலும்,நடிப்பும்,காட்சியமைப்பும்.
இதை பற்றி பின்னர் விரிவாக விளக்குவேன்.(எத்தனை அழகு போல)

Gopal.s
29th August 2013, 07:32 AM
சிவாஜியின் முக்கிய Erotic வகை பாடல் காட்சிகளில் நான் ரசித்தவை. (வெளியான வருட வரிசையில் )

விண்ணோடும் முகிலோடும்-புதையல்
காணா இன்பம் கனிந்ததேனோ-சபாஷ் மீனா
மடி மீது தலை வைத்து - அன்னை இல்லம்
அழகே வா அருகே வா- ஆண்டவன் கட்டளை
ஆஹா மெல்ல நட மெல்ல நட- புதிய பறவை
நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய்- சாந்தி
ஒன்றா இரண்டா எடுத்து சொல்ல- செல்வம்
மன்னிக்க வேண்டுகிறேன் -இரு மலர்கள்
வெள்ளி கிண்ணந்தான் -உயர்ந்த மனிதன்
சந்தன குடத்துக்குள்ளே- தங்க சுரங்கம்
பத்து பதினாறு முத்தம் முத்தம்-அஞ்சல் பெட்டி520
ஒரு நாளிலே உறவானதே - சிவந்த மண்
அம்மா கண்ணு சும்மா சொல்லு-ஞான ஒளி
பள்ளியறைக்குள் வந்த- தர்மம் எங்கே
குடி மகனே- வசந்த மாளிகை
மயக்கமென்ன - வசந்த மாளிகை
வருவான் மோகன ரூபன்-பொன்னூஞ்சல்
எத்தனை அழகு- சிவகாமியின் செல்வன்
ஓசை வராமல் நாம் உறவு கொள்வோமே-அன்பே ஆருயிரே
தாஜா பண்ணினாத்தான்- டாக்டர் சிவா
அலங்காரம் கலையாத -ரோஜாவின் ராஜா
நாலு பக்கம் வேடருண்டு- அண்ணன் ஒரு கோவில்
மௌனம் கலைகிறது- என்னை போல் ஒருவன்
சிந்து நதிக்கரை ஓரம்- நல்லொதொரு குடும்பம்

NOV
29th August 2013, 07:32 AM
WARNING

Due to several reports of provocation and abusive posts, this thread is now under strict observation.
We suggest that Hubbers go back and edit their offending posts.
Anyone found to be contravening Hub rules will be banned without further warning.
Also, a cursory check revealed that some people are posting using more than one ID. As usual a 24-hour leeway is given to those people to PM any of the moderators immediately or ALL their id's INCLUDING the original one, will be banned.

Please do not discuss this warning, in this thread.

NOV

IliFiSRurdy
29th August 2013, 08:17 AM
Sivaji is the undisputed king of film world and he continues / will continue to rule everyone's heart years after he left this world by virtue of his acting skills

MGR was the undisputed king in the modern TN politics (after 1974) and he continues to stamp his influence years after he left this world...... ithai ippadi mattum vachukkalamae....

ஒரே வித்தியாசம்..

இரண்டாம் வேற்றுமை உறுபு ஆல் அமரும் இடம்தான்!

முன்னவரால் தமிழ் திரையுலகம் புகழ் பெற்றது.
பின்னவர் தமிழ் திரையுலகால் புகழ் பெற்றார்.

RAGHAVENDRA
29th August 2013, 08:43 AM
திரியின் புதிய உறுப்பினர்களை வரவேற்கலாம் என்றால் கண் முன்னால் எச்சரிக்கை மிகப் பெரியதாக நின்று கொண்டு பார்வையை மறைக்கின்றனவே...

இனிமேல் நல்வரவு கூறக் கூட பல முறை யோசிக்க வேண்டும் போல் தோன்றுகிறது...

Gopal.s
29th August 2013, 09:31 AM
கண்பட் சார்,
தங்களின் பதிவுகள் "ஆல்" போல் தழைத்து வளர வாழ்த்துக்கள்.

IliFiSRurdy
29th August 2013, 10:13 AM
கண்பட் சார்,
தங்களின் பதிவுகள் "ஆல்" போல் தழைத்து வளர வாழ்த்துக்கள்.

Thank you Gopalji,for "ஆல்" your Blessings and good wishes!
உங்கள் ஆல் பாராட்டப்படுவது,எனக்கு பெருமை அளிக்கிறது.
அவர் பால் கொண்ட பக்தியை,
ஏதோ,என் ஆல் முடிந்த வரை,
உங்கள் அனைவரிடமும் பகிர்ந்து கொள்வதில்,
எனக்கு ஏற்படும் சந்தோஷம்,
வேறு எதன் ஆல் வரும்?

iufegolarev
29th August 2013, 12:59 PM
Thanks to the moderator

iufegolarev
29th August 2013, 01:00 PM
shabaaaa.........pattukoattai muthiahhh.......

mr_karthik
29th August 2013, 01:42 PM
அன்புள்ள கோபால் சார்,

தவப்புதல்வன் படத்தின் முன்னோட்டமாக, இயக்குனர் முக்தா சீனிவாசன் பற்றிய குறிப்புகள்,அவருடைய படங்களின் அடிப்படை பார்முலா பற்றிய விவரம் அனைத்தும் மிகவும் அருமை. நீங்கள் குறிப்பிட்டுள்ள இசையமைப்பாளர்கள் அல்லாது, வி.குமார் அவர்களும் (பொம்மலாட்டம், நிறைகுடம் உட்பட) முக்தாவின் பல படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்.

தவப்புதல்வன் பற்றிய அலசல் நிச்சயம் களைகட்டப்போகிறது என்பதற்கு முன்னோட்டமே சாட்சி....

RAGHAVENDRA
29th August 2013, 01:49 PM
தவப் புதல்வன் ... ஆவணத் திலகம் பம்மலாரின் பொக்கிஷத்திலிருந்து..



சாதனைச் செப்பேடுகள்

முதல் வெளியீட்டு விளம்பரம் : சிவாஜி ரசிகன் : 1.9.1972

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4432a-1.jpg

100வது நாள் விளம்பரம் : தினத்தந்தி(மதுரை) : 4.12.1972

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4425a-1.jpg

அரிய நிழற்படம் : மதி ஒளி : 1.4.1972

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4427a-1.jpg

அரிய ஆவணம் : சிவாஜி ரசிகன் : 1.9.1972

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4433a-1.jpg

பொக்கிஷப் புதையல்

அட்டைப்படம் : சினிமா குண்டூசி : ஆகஸ்ட் 1972

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4430a-1.jpg

அரிய ஆவணம் : பேசும் படம் : ஆகஸ்ட் 1972

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4435a-1.jpg

RAGHAVENDRA
29th August 2013, 01:57 PM
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Old%20Ads/thavathuklakad.jpg

RAGHAVENDRA
29th August 2013, 02:00 PM
ஆவணத் திலகம் பம்மலாரின் பொக்கிஷங்களிலிருந்து... தொடர்ச்சி...



அரிய நிழற்படம் : கிறிஸ்துமஸ் தாத்தா [Santa Claus]
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4429a-1.jpg

அரிய ஆவணம் : பேசும் படம்

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4436a-1.jpg

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4437a-1.jpg

காவிய விமர்சனங்கள்

மின்னல் கொடி: 10.9.1972

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4428a-1.jpg

ஆனந்த விகடன் : 1972

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4434a-1.jpg

RAGHAVENDRA
29th August 2013, 02:07 PM
நமது அன்புச் சகோதரர் நெய்வேலி வாசு சாரின் பொக்கிஷத்திலிருந்து..



தவப் புதல்வனின் சாந்திதிரையரங்கின் நிழற்படங்கள் .

தவப்புதல்வன் திரைப் படத்தில் K.R.விஜயா அவர்கள் சாந்தி திரை அரங்கில் நடிகர் திலகத்தின் 'பாபு' திரைப் படத்தை காண வருவதாக ஒரு காட்சி. அப்போது நம் சாந்தி திரை அரங்கின் அற்புத வடிவம். தியட்டேரின் மேல் முகப்பில் நம் நாட்டு தேசியக் கோடி பட்டொளி வீசிப் பறப்பதைப் பாருங்கள்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_04_1_VOB_002062074.jpg

பாபு படத்தில் நடிகர் திலகமும், விஜயஸ்ரீ அவர்களும் தோன்றும் பேனர் மற்றும் படம் பார்க்க வந்த ரசிகர் கூட்டத்தைப் பாருங்கள்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_04_1_VOB_002066044.jpg

சாந்தி தியேட்டரின் உள்ளே நம் அன்பு தெய்வத்தின் 'பாபு' பட ஸ்டில்களை காணுங்கள். வயதான கெட்-அப்பில் நடிகர் திலகம் இருக்கும் ஸ்டில்லும், கைவண்டியை அழகாக பிடித்திருக்கும் ஸ்டில்லும் அப்படியே அள்ளுகின்றன.
( ஸ்டில் போர்டை கண்டதும் நம் அன்பு பம்மலார் தான் நினைவுக்கு வருகிறார்).

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_04_1_VOB_002078693.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_04_1_VOB_002076491.jpg

ஸ்டைல் பாடகர் நிர்மல்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_04_1VOB_000895749.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_04_1VOB_002758075.jpg

தான்சேன் புலவரின் கம்பீரத் தோற்றம்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_04_1VOB_002009318.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_04_1VOB_001899331.jpg

RAGHAVENDRA
29th August 2013, 02:10 PM
ஆவணத் திலகம் பம்மலாரின் பொக்கிஷம் ... தொடர்ச்சி...



அரிய நிழற்படங்கள்

பேசும் படம் : ஏப்ரல் மலர் 1972

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4439a-1.jpg

ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில் : பிலிமாலயா : 1972

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4443a-1.jpg

அரிய நிழற்படங்கள் : பேசும் படம் : மே 1972

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4441a-1.jpg

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4450a-1.jpg

RAGHAVENDRA
29th August 2013, 02:13 PM
நடிகர் திலகத்துடன், அமரர் திக்குரிச்சி சுகுமாரன் நாயர் அவர்கள் நடிகர் திலகம் நடித்த பாடல் காட்சி

உலகின் முதலிசை தமிழிசையே

http://youtu.be/PGl6vdkTGQk

iufegolarev
29th August 2013, 02:14 PM
.......

KCSHEKAR
29th August 2013, 03:17 PM
திரு.ராகவேந்திரன் சார்,

திரு.கோபால் சாரின் தவப்புதல்வன் அலசலுக்கு, ஆய்வுக்கு பக்கபலமாக, பம்மலாரின் பொக்கிஷப் பதிவுகளை அளித்துள்ளது மிகவும் பொருத்தம்.

rsubras
29th August 2013, 04:35 PM
காமராஜர் செய்யாத சாதனைகளா? தலையிருக்க வாலை ஆட்ட முயல்வதேன்?
was referring to a brand of politics that I do not admire very much (but nevertheless being actively followed by politicians of today) and thatz why gave that name modern which should be considered subtly sarcastic :)

goldstar
29th August 2013, 06:52 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/TP3_zps889cd9ce.png

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/TP2_zpse882e3fb.png

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/TP1_zpsdafa63ae.png

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/TP5_zps239cb0a2.png

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/TP4_zps939ae85f.png

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/TP6_zps6c09c66f.png

goldstar
29th August 2013, 07:12 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/TP7_zpsf8dc4371.png

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/TP8_zps99d64049.png

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/TP9_zps9b4359a4.png


http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/TP10_zps45e23f07.png

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/TP12_zps72774506.png

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/TP11_zps95388c9d.png

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/TP1115_zps19a10780.png

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/TP1114_zps6a23e3d3.png

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/TP113_zps688a4786.png

ScottAlise
29th August 2013, 08:26 PM
Thavapudhalvan Mania

Thanks Gopal sir, Ragavendran sir for uploading images of Pammalar sir & Vasu sir

Gopal.s
29th August 2013, 09:09 PM
தவப் புதல்வன்(தொடர்ச்சி)

ஒரு மத்யதர குடும்பத்து கல்யாண விருந்துக்கு செல்கிறீர்கள் என்று வைத்து கொள்ளுங்கள். உங்களுக்கே தெரியும் traditional மெனு .breakfast ,டின்னெர் எல்லாமே நீங்கள் எதிர்பார்த்த படியே. ஆனால் உப்பு,உறைப்பு,இனிப்பு எல்லாமே சரியான விகிதத்தில் கலந்து சுவை கூடுதலாய், பரிமாறும் விதமும் பாந்தமாய் இருந்தால் மனதுக்கு ஒரு இதம் ஏற்படுமல்லவா?அதைத்தான் தவப்புதல்வனில் ரசிகர்கள் உணர்ந்தனர்.தூயவன் திரைக்கதை படு கச்சிதம்.

நிர்மல் இசையறிவு மிகுந்த ,இசைக்கருவிகள் பலவற்றில் இயல்பான வாசிப்பு திறமை கொண்ட ,அன்னையுடன் தனித்து வாழும் ஒரு பணக்கார இளைஞன்.டாக்டர் வசந்தி அவனை மணக்க இருக்கும் மாமன் மகள்.இருவருமே ஒருவரின் திறமை மீது மற்றவர் மரியாதை வைத்து,ஒருவரின் முன்னேற்றத்தில் மற்றவர் உண்மை அக்கறை செலுத்தும் தூய அன்பு கொண்டவர்கள்.

நிர்மல் தன் நண்பன் james வேண்டுகோளை தட்ட முடியாமல் ,அவன் ஹோட்டல் இல் trumpet வாசிக்க ஒப்பு கொள்ள,அதன் மூலம் நடன காரி விமலா அவள் குடிகார புல்லுருவி அண்ணன் ஜம்பு இவர்களுடன் அறிமுகமாகி ,அவர்களுடன் உரிய எச்சரிக்கையுடன் நடக்கிறான். இடையில், நிர்மலுக்கு அவன் பரம்பரை நோயான மாலைக்கண் தாக்க,தன் தந்தையை தாக்கி விபத்திலும் கொன்ற அந்த நோய் தாயை சித்த சுவாதீனம் இழக்க வைத்ததையும், தாய் இந்த உண்மையை தாங்க மாட்டாள் என்பதையும் ,வசந்தியிடம் ரகசியம் தங்காது என்பதால் இரவுகளில் தான் வாசிக்கும் ஹோட்டல் அறையில் தங்கி ரகசியம் காக்கிறான்.தற்செயலாய் திருட வரும் ஜம்புவிற்கு இந்த உண்மை தெரிய விமலா இதை வைத்து ,வசந்தியை அறைக்கு வரவழைத்து நிர்மல் தன்னுடன் அந்தரங்கமாய் இருப்பது போல தோற்றம் கொடுத்து அவர்கள் கல்யாணத்தை நிறுத்துகிறாள்.

நிர்மல் தாய் விரும்பும் பெண்ணிற்கே கல்யாணம் செய்து சொத்தும் சேரும் என்பதால் ,வசந்தியின் கார் முன் தற்கொலை செய்ய வருவது போல் நடித்து தனக்கும் நிர்மலுக்கும் தொடர்புண்டு என்று நிருபித்து, நிர்மலை மிரட்டி வீட்டிற்கே வருகிறாள்.james ,விமலாவை அங்கிருந்து விரட்ட அவள் அண்ணன் போல் விமலாவுடன் வருகிறான். விமலாவை விரட்ட சதி செய்யும் ஒவ்வொரு முறையும் சந்தர்ப்பம் விமலாவிற்கே சாதகமாகி ,கல்யாணம் வரை போக, தற்செயலாய் உண்மை வசந்திக்கு தெரிய, ஒரு வெளிநாட்டு டாக்டர் சிகிச்சையால் நிர்மல் குணமாகி ,விமலாவின் குட்டு வெளியாகி வசந்தியும் நிர்மலும் சேர james அரசியல் பஞ்ச் காமெடியுடன் சுபம்.

எனக்கு நினைவு தெரிந்த வரை ஒவ்வொரு அசைவுக்கும் லாஜிக் பார்த்து,மிக சுவையான திருப்பங்கள்,மனதை தொடும் பன்முகம் கொண்ட காட்சியமைப்புகள் என்று ஒரு சில மசாலா குடும்ப படங்களே ,ஒரு action பட விறுவிறுப்புடன் அமைந்தன. அவற்றில் ஒன்று தவப்புதல்வன். ஆரம்பம் முதல் இறுதி வரை தொய்வில்லாத திரைக்கதை,அளவான வசனங்கள்.உறுத்தாத executive வகை இயக்கம்.

சுவையான காட்சிகளுக்கு பஞ்சமே வைக்காத படம்.love is fine நடனம், வசந்தியுடன் ஹோட்டல் trumpet வாசிப்பதை வீட்டில் சொல்லாமல் மாட்டும் இடம், வாசு திருட வரும் இடத்தில் கண்தெரியாமல் சிவாஜி அவருடன் மோதும் இடம்,
அம்மாவுக்கு தவறுதலாய் விஷ மருந்து கொடுக்க முயலும் காட்சி ,தான்சேன் காட்சி,விமலா திட்டமிடும் காட்சிகள்,james (சோ),மனோரமா வசந்தியை மாட்ட வைக்க பார்த்து backfire ஆகும் சுவாரஸ்யம் (முக்தா பஞ்ச் ),சிவாஜியை சகுந்தலா ( பிரசித்தி பெற்று தொடர்ந்த ஜோடியின் முதல் படம்) tease பண்ணும் காட்சிகள்,தான் கொடுத்த கம்பு தனக்கே உதவும் காட்சி,சிவாஜி வாத்தியத்தை உடைத்து விரக்தியை வெளிப்படுத்த கே.ஆர்.விஜயா அதே பாணியில் தன் மருத்துவ கருவிகளை உடைக்கும் காட்சி,கிண்கிணி கிண்கிணி கிறிஸ்மஸ் தாத்தா காட்சி, போட்டி பாடல் காட்சி ,இரு பகுதி கொண்ட விறு விறு இறுதி காட்சி , வசந்தியின் நல்ல நோக்கம் கேள்விக்குள்ளாவது என்று பல நல்ல காட்சிகள் சிறந்த முறையில் திரைக்கதையுடன் இணைந்தே பயணிக்கும். மற்ற முக்தா படங்களை விட கூடுதல் professionalism தெரியும்.


சிவாஜியின் சிகை அலங்காரம்(முக்தா சிவாஜிக்கு நிறைகுடத்தில் ஆரம்பித்த பிரத்யேக ஸ்டைல் அக்கால கிருதாவுடன்),
வித விதமான டிசைன் குர்தா டைப் மேலுடை,இளமை தெறிக்கும் அழகு,அமெரிக்கையான நடிப்பு,படம் முழுதும் பிரமாதம். மாலைக்கண் நோய்க்கு முழு விளக்கம், கூடுதல் பிரச்சினை என்று மெடிக்கல் ஆகவும் நன்கு டீல் பண்ண பட்ட படத்தில் (Nyctalopia ,xerosis ,edema ) சிவாஜி dry eyes பிரச்சினையில் கண்ணை கொட்டுவதும், கண் தெரியாத போது காதை சிறிதே திசை நோக்கி சப்தம் உணர்வது என்று கலக்குவார். துள்ளல் ஸ்டைல் நானொரு காதல் சந்நியாசி,தான்சேன் இசை கேட்டால், உருக்க கிண்கிணி,முத்திரையுடன் போட்டி பாடல் காட்சி என ரசிகர்களுக்கு full மீல்ஸ் . வாத்தியங்களை உடைத்து முடித்து கடைசியாக கிடாரை எடுத்து வசந்தி போய் விட்டதை உணர்ந்து கடைசி நிமிடத்தில் உடைக்காமல் அணைத்து கொள்ளும் பரவச உருக்க ஈடுபாடு,கடைசியில் தன்னை படுத்தி எடுத்தாளே என்று விமலா கண்ணை கட்டி பரபரப்பாய் பழி வாங்கும் டீசிங் என்று இந்த படத்திலும் அவர் கொடி நாட்டி விடுவார்.

மெல்லிசை மாமன்னர் இந்த இசையுடன் சம்பந்தமுள்ள படத்திற்கு நன்றாக பங்களித்துள்ளார்.(திருப்தியா கார்த்திக் சார்?)
சோ,மனோரமா,வாசு ,பண்டரிபாய்,செந்தாமரை அவரவர் பங்கை உரிய முறையில் தர, விஜயா,சகுந்தலா செமையாய் ஸ்கோர் செய்வார்கள்.இந்த படத்திற்கு விஜயா ஓகே.(டூயட் கிடையாது)

வழக்கமாய் வெற்றி பெரும் முக்தா formula ,இந்த படத்தை சரியான விகித உணர்ச்சி,entertainment ,விறுவிறுப்பு, பாத்திர படைப்பில் முழுமை ,படம் முழுதும் தெரியும் sincerity &seriousness தன்மை இவற்றுடன் ரசிகர்கள்,பொதுமக்கள் (அனைத்து வயதினர்) திருப்தி தந்ததால் பெரிய ஹிட் என்ற status எட்டியது.

goldstar
30th August 2013, 06:53 AM
http://1.bp.blogspot.com/-wXSY3ZqkGpA/UepAxrSjjBI/AAAAAAAACAs/dSN9UhI3UAE/s1600/thavaputhalvan.jpg

http://s1.dmcdn.net/AOwcY/526x297-Urz.jpg

http://www.5eli.com/Lyrics/wp-content/uploads/2011/08/Thavapudhalvan-300x218.jpg

http://ttsnapshot.com/out.php/t5242_tp2.png

Gopal.s
30th August 2013, 07:29 AM
அடுத்து வாசு சாரின் அந்தோணி என்கிற கோடீஸ்வர அருண் உரிய முறையில் மனோதத்துவ முறையில் அலசி கூறு போட படுவார்.
தொடர்ந்து பாலாஜியுடன் அவர் ராஜா,நீதிக்கு ஒன்றாக ராஜநீதி புரிந்து, கோடீஸ்வர(முதல் கருப்பு வெள்ளை கோடீஸ்வரன்) மூக்கையன் புகழ்பாடி 1972 நிறைவு பெரும். வெள்ளிவிழா(வசந்த மாளிகை) தொடங்கி வெள்ளிவிழா(பட்டிக்காடா பட்டணமா) முடிவு ----1972.

joe
30th August 2013, 08:01 AM
அலசி கூறு போட படுவார்..
முள்ளை வளைத்ததும் மகுடம் தரித்ததும்
ஆணி அடித்ததும் சிலுவை அறைந்ததும்
அன்று நடந்தது ஆவி துடிக்குது
இன்று நடப்பது நெஞ்சு வெடிக்குது

:)

joe
30th August 2013, 08:14 AM
http://worldcinemafan.blogspot.sg/2013/07/blog-post_21.html

joe
30th August 2013, 08:30 AM
நடிகர் திலகமும் இசை ஞானியும்
http://oosssai.blogspot.com/2013/04/blog-post_15.html

Gopal.s
30th August 2013, 09:02 AM
நடிகர் திலகமும் இசை ஞானியும்
http://oosssai.blogspot.com/2013/04/blog-post_15.html
இந்த கட்டுரையில் சில தவறுகள் உள்ளன.
1)நடிகர்திலகத்துடன் ரஜினி இணைந்த படம் நான் வாழ வைப்பேன். சிவாஜிதான் ஹீரோ.
2)சாதனை மறக்க பட்ட படமல்ல. நூற்று இருபத்தைந்து நாட்கள் ஓடிய பேச பட்ட படம்.
3)இளைய ராஜா இசைத்துறையில் நுழைந்த அடுத்த வருடமே சிவாஜி பட வாய்ப்பு. இந்த இணைவில் 23 படங்கள் 1999 வரை. சிவாஜி 1976-1999 நடித்த 100 படங்களில் இது 23 %.
4)எம்.எஸ்.விஸ்வநாதன் -சிவாஜி productions ஒரு வின்னிங் combination (திரிசூல வெற்றி).அந்த வருட இளைய ராஜா இசையில் வேறெந்த படமும் இதன் வெற்றியை தொடவில்லை. எனினும் அறுவடை நாள் முதல் கிட்டத்தட்ட 6 படங்களுக்கு இளைய ராஜா சிவாஜி பிலிம்சால் பயன் படுத்த பட்டார்.
5) சிவாஜி படங்களுக்கு யார் இசையமைத்தாலும் சிவாஜிதான் ஹீரோ. யாரும் dominate செய்வதை கனவு கூட காண முடியாது.(மோகன்,ராமராஜன் படங்களில் இது சாத்தியம் இசையமைப்பாளருக்கு)

Gopal.s
30th August 2013, 09:22 AM
இளைய ராஜா இசையில் மிக சிறந்த நடிகர்திலகம் பட பாடல்கள்.
1)பூங்காற்று திரும்புமா
2)வெட்டிவேரு வாசம்
3)ராசாவே உன்னை நம்பி
4)எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்
5)எந்தன் பொன் வண்ணமே
6)பூவிழி வாசலில்
7)நல்லவர்கெல்லாம்
8)நெஞ்சில் உள்ள காயமொன்று
9)இங்கே நான் கண்டேன் அனார்கலி
10)ஒ மானே மானே மானே
11)மாலை தென்றல்
12) மான் கண்டேன் மான் கண்டேன்
13)சிந்து நதிக்கரை ஓரம்
14)பேசாதே வாயுள்ள ஊமை
15)ஆராரிரோ பாடியதாரோ

gkrishna
30th August 2013, 10:07 AM
இளைய ராஜா இசையில் மிக சிறந்த நடிகர்திலகம் பட பாடல்கள்.
1)பூங்காற்று திரும்புமா
2)வெட்டிவேரு வாசம்
3)ராசாவே உன்னை நம்பி
4)எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்
5)எந்தன் பொன் வண்ணமே
6)பூவிழி வாசலில்
7)நல்லவர்கெல்லாம்
8)நெஞ்சில் உள்ள காயமொன்று
9)இங்கே நான் கண்டேன் அனார்கலி
10)ஒ மானே மானே மானே
11)மாலை தென்றல்
12) மான் கண்டேன் மான் கண்டேன்
13)சிந்து நதிக்கரை ஓரம்
14)பேசாதே வாயுள்ள ஊமை
15)ஆராரிரோ பாடியதாரோ

innum sila paadalgal thiru gopal sir .

andhapurathil oru maharajan (hope it is one of the best mayamalava gowlai )

http://www.thehindu.com/features/friday-review/music/a-ragas-journey-the-magic-of-mayamalavagowla/article2618199.ece
“Anthapurathil oru maharani” from the film “Deepam,” in the music of Ilayaraja and sung by T.M.S. and S. Janaki, is an example of a free-flowing Mayamalavagowla. Starting in the top sadja, the opening phrase “ss n d p d m p,p,p” straightaway establishes the stamp of the raga. This song flagged off a successful innings in Mayamalavagowla for the maestro, and he would compose, over the next few decades, some of his best-known tunes in this scale.



raja yuva raja
kanna un leela vinotham inge unnale uruvatche pavam - nallodhor kudumbam
chacha chaca
ennodu padungal nalvazhudu koorungal - nan vazha veipan
thiru teril varum silayio - (seems to be mohanam)
vasantha kala kolangal - (like madha un koilil in atchani)
(seems to be Suddha Dhanyasi)

Gopal.s
30th August 2013, 10:32 AM
ஜீகே சார்,

தாங்கள் குறிப்பிட்ட படி சராசரி நல்ல பாடல்கள் உண்டு (ராகம் தழுவிய)

யோசியுங்கள்

நாத நாம கிரியா ராகத்தில் அமைந்த பொன்வண்ணமே very unique .இதுவே என் தேர்வின் அடிப்படை.

மோகனத்தில் நிலவும் மலரும் பாடுது(ஏ .எம்.ராஜா),கம்பன் ஏமாந்தான் (எம் எஸ்.வீ),மலர்கள் நனைந்தன பனியாலே(கே.வீ.எம்),நின்னுகோரி (இ..ரா) என்று பல சிறந்த பாடல்கள்.

மாயா மாளவ கௌளையில் துள்ளுவதோ இளமை,கல்லெல்லாம் (எம்.எஸ்.வீ.,டி.கே.ஆர்),மதுரை மரி கொழுந்து,காதல் கவிதைகள் (இ.ரா )

சுத்த தன்யாசியில் தொட்டால் பூ மலரும்,நீயே உனக்கு(எம்.எஸ்.வீ,டி.கே.ஆர்),விழியில் விழுந்து,மாஞ்சோலை கிளிதானோ (இ.ரா)

என்று சம்பத்த பட்ட ராகங்கள் பிழிய பட்டு விட்டதால் என் தேர்வில் நீங்கள் சொன்னவை விடு பட்டன.

rsubras
30th August 2013, 12:53 PM
இளைய ராஜா இசையில் மிக சிறந்த நடிகர்திலகம் பட பாடல்கள்.
1)பூங்காற்று திரும்புமா
2)வெட்டிவேரு வாசம்
3)ராசாவே உன்னை நம்பி
4)எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்
5)எந்தன் பொன் வண்ணமே
6)பூவிழி வாசலில்
7)நல்லவர்கெல்லாம்
8)நெஞ்சில் உள்ள காயமொன்று
9)இங்கே நான் கண்டேன் அனார்கலி
10)ஒ மானே மானே மானே
11)மாலை தென்றல்
12) மான் கண்டேன் மான் கண்டேன்
13)சிந்து நதிக்கரை ஓரம்
14)பேசாதே வாயுள்ள ஊமை
15)ஆராரிரோ பாடியதாரோ

IMHO, Poo pole un punnagaiyil song from Kavarimaan and oru kootu kiliyaga from Padikkathavan are better than many of the songs that are listed here ... If what I believe is right, IR was the first MD to start using Malaysia Vasudevan for Sivaji whose voice fitted Sivaji the most in the later part of his film life

gkrishna
30th August 2013, 12:59 PM
yes gopal sir.

Your knowledge in music/school of acting/writing etc., amazing one.

Only in IR music some more songs which are good and also hits are mentioned.

Not to criticise your comment

Regards

Gk

gkrishna
30th August 2013, 01:02 PM
http://nhstella.blogspot.in/2012/07/nadigar-thilagam-shivaji-ganesans.html

Seen some of the rare photos of NT which were also displayed in our thread

Gopal.s
30th August 2013, 02:29 PM
IMHO, Poo pole un punnagaiyil song from Kavarimaan and oru kootu kiliyaga from Padikkathavan are better than many of the songs that are listed here ... If what I believe is right, IR was the first MD to start using Malaysia Vasudevan for Sivaji whose voice fitted Sivaji the most in the later part of his film life
I think it is Gangai Amaran used MV Voice first to NT in Imaigal.(Mada puravo)

mr_karthik
30th August 2013, 05:39 PM
அன்புள்ள கோபால் சார்,

தவப்புதல்வன் ஆய்வு மிக மிக அருமை. ஒரு குடும்பச் சித்திரத்தில் இவ்வளவு திரில், சஸ்பென்ஸ் கலந்து தருவது என்பது உண்மையிலேயே பெரிய சாதனை. அதை கதாசிரியரும், நடிகர்திலகமும், இயக்குனரும் சேர்ந்து மிக அற்புதமாக உருவாக்கிவிட்டனர். இப்படத்தில் சகுந்தலாவின் பங்களிப்பு மிக அருமை. அந்த ஆண்டில் மூன்று பெரிய வெற்றிப்படங்களில் வில்லன்களைவிட வில்லிகளுடன்தான் அவருக்குபோட்டி. வசந்த மாளிகையில் சாந்தகுமாரி, பட்டிக்காடாவில் சுகுமாரி, தவப்புதல்வனில் சகுந்தலா. இவர்களில் சகுந்தலாவின் வில்லத்தனம் அட்டகாசம். நீங்கள் குறிப்பிட்டதுபோல இந்த இணையின் முதல் படம் இது. தவப்புதல்வன், வசந்த மாளிகை, நீதி, பாரத விலாஸ், ராஜராஜ சோழன், பொன்னூஞ்சல், எங்கள்தங்க ராஜா (அடுத்து கௌரவத்தில் 'ஜெயகுமாரி' இடைநுழைந்து அட்டகாசமாக அனுதாபத்தை ஸ்கோர் செய்தார்) அன்பைத்தேடி, அந்தமான் காதலி, ஜஸ்டிஸ் கோபிநாத், இமயம் என்று தொடர்ந்தது. அழகும் வில்லத்தனமும் சரிவிகிதமாக கலக்கப்பட்ட நடிகை சகுந்தலா.

நான்கு பாடல்களுக்கும் நான்கு சிறப்புக்காட்சிகள். விஜயாவுடன் டூயட் இல்லாதது பெரிய ரிலீப். நடிகர்திலகத்தின் தோற்றம், சிகையலங்காரம், அருமையான உடைகள், காட்சிகளின் அமைப்பு, தான்சேன், கிறிஸ்துமஸ் தாத்தா காட்சிகள் இவற்றைஎல்லாம் பார்த்தபோது தென்பட்ட ஒரே ஒரு குறை மற்றும் வருத்தம்........ "இப்படத்தை கலரில் எடுத்திருக்கலாமே" என்பதுதான்.

அட்டகாசமான அலசல் சார். அடுத்த படத்துக்குக் காத்திருக்கிறோம்....

iufegolarev
30th August 2013, 05:43 PM
கோபால் சார்,

நீங்கள், உயிரோடு இருக்கும் காதலிக்காக வசந்தமாளிகையை கட்டிய ஆனந்தை பற்றி எழுதும்போது, ஒரு விஷயம் இங்கு சொல்ல ஆவல் கொண்டுள்ளேன்.

1972, சென்னையை பொறுத்தவரையில் சாந்தி, கிரௌன், மற்றும் புவனேஸ்வரி ஆகிய மூன்று திரையரங்குகளிலும் 271 தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகள் கண்ட காவியம்.

அதாவது கிட்டத்தட்ட 90 நாட்களுக்கு மேல் மூன்று திரையரங்குகளிலும் அனைத்து காட்சியும் தொடர்ந்து அரங்கு நிறைவுபெற்று ஓடுவது என்பது சாதனைகளின் உச்சம் என்றே கருதுகிறேன்.

அதற்க்கு பிறகு மூன்று திரையரங்கு அதாவது சாந்தி, பாண்டியன் மற்றும் ராக்சியில் 162 தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகள் கண்டு, அந்த 271 தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகள் கண்ட சாதனையை, சாந்தியில் மட்டும் 288 தொடர்ந்து அரங்கு நிறைவு கண்டு முறியடித்த பெருமை பெற்ற திரைப்படம் திரையுலக சித்தரின் கீழ் வானம் சிவக்கும்.

252925312530

mr_karthik
30th August 2013, 05:52 PM
கோபால் சார்,

சிவாஜி புரொடக்ஷன்ஸ் - எம்.எஸ்.விஸ்வநாதன் 'லக்கி' காம்பினேஷன் பற்றி நீங்கள் குறிப்பிட்டது சரியே.

தங்கப்பதக்கம், திரிசூலம், சந்திப்பு - வெள்ளிவிழாப்படங்கள்.

அண்ணன் ஒரு கோயில், வா கண்ணா வா - 100 நாட்களைக்கடந்த மாபெரும் வெற்றிப்படங்கள்.

(என்ன சொல்றீங்க?. 'ரத்த பாசமா?' அட விடுங்க ஒருகை சோறு அள்ளும்போது ஒன்றிரண்டு பருக்கை சிந்தத்தான் செய்யும்)....

mr_karthik
30th August 2013, 06:00 PM
அன்புள்ள சுப்பு சார்,

வசந்த மாளிகை (1972) - 271 ஹவுஸ்புல் காட்சிகள்.
கீழ்வானம் சிவக்கும் (1981) - 288 ஹவுஸ்புல் காட்சிகள்
இரண்டும் சரியாக இருந்தாலும், இவற்றுக்கிடையே 1979-ல் 'திரிசூலம்' சாந்தி, கிரௌன், புவனேஸ்வரி மூன்று அரங்குகளிலும் தொடர்ந்து 100 நாட்களுக்கு மொத்தம் 900 தொடர் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடியிருக்கிறது. (ஆதாரம் திரிசூலம் 100வது நாள் தினத்தந்தி மற்றும் தினகரன் விளம்பரம்)...

iufegolarev
30th August 2013, 06:09 PM
அன்புள்ள சுப்பு சார்,

வசந்த மாளிகை (1972) - 271 ஹவுஸ்புல் காட்சிகள்.
கீழ்வானம் சிவக்கும் (1981) - 288 ஹவுஸ்புல் காட்சிகள்
இரண்டும் சரியாக இருந்தாலும், இவற்றுக்கிடையே 1979-ல் 'திரிசூலம்' சாந்தி, கிரௌன், புவனேஸ்வரி மூன்று அரங்குகளிலும் தொடர்ந்து 100 நாட்களுக்கு மொத்தம் 900 தொடர் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடியிருக்கிறது. (ஆதாரம் திரிசூலம் 100வது நாள் தினத்தந்தி மற்றும் தினகரன் விளம்பரம்)...

திரு கார்த்திக் சார்,

தகவலுக்கு நன்றி...!

நீங்கள் கூறியதை அனைவரும் அறிந்திருந்தாலும் இதோ அந்த விளம்பரம் !

100 நாட்களும் தொடர்ந்து அனைத்து திரையரங்கிலும் மொத்தம் 900 அரங்கு நிறைந்த காட்சிகள் ...!!

12 வாரத்தில் ஒரு கோடி ருபாய் வசூலை கடந்து விண்ணைமுட்டும் வெற்றியல்லவா திரிசூல வெற்றி !

திரை உலகையே புரட்டிபோட்ட வெற்றி அல்லவா ! முதன் முதலில் திரையுலக வரலாற்றில் ருபாய் இரண்டு கோடிக்கு மேல் வசூல் செய்த காவியமாயிட்ரே நம் agmark தமிழனின் திரிசூலம் !!

2532

Gopal.s
30th August 2013, 07:04 PM
Joe சார்,
உங்கள் இணைப்புகளுக்கு நன்றி. எழுத தூண்டும் இணைப்புகள்.

கார்த்திக் சார்,
சும்மா பேருக்காக சொல்லவில்லை. ஏற்கெனெவே பல முறை சொன்னது. உங்களுடைய,சாரதாவினுடைய,முரளியுடைய எழுத்துக்களே என்னை இங்கு இழுத்து வந்தவை. உங்களிடமிருந்து வரும் வார்த்தைகள் வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி போன்றது. நன்றி.

360 டிகிரி- திரும்ப சுறுசுறுப்பாகி விட்டீர்கள். எங்களுக்கு தினமும் விருந்துதான்.

ராகவேந்தர் சார்,
பம்மலாரின் நேரடி பங்களிப்பு இல்லாத குறையை உங்கள் மீள்பதிவுகள் தீர்த்து ,பம்மலார் அருகிலிருக்கும் உணர்வை ஏற்படுத்துகிறது.

iufegolarev
30th August 2013, 09:35 PM
1952 - இந்திய திரை உலகமே எதிர்பார்க்காத ஒரு புயல் தமிழகத்திலிரிந்து எழும் என்று எவருமே எதிர்பார்க்காத ஒரு வருடம்..! விழுப்புரம் சின்னையா கணேசன் என்ற ஒரு நடிகர் தமிழ் திரை உலகு, தென்னிந்திய திரை உலகு மட்டுமல்ல, இந்திய திரை உலகமே திரும்பிபார்க்கும் வண்ணம் தன்னுடைய திரையுலக தொடக்கத்தை ஆணித்தரமாக பதிய வைத்த ஆண்டு.

திரை உலகத்திருக்கு எப்படி தமிழ் பேசவேண்டும், எப்படி நடிக்கவேண்டும் என்று பல கோணங்களிலிருந்தும் கற்றுகொடுத்த மறத்தமிழன். பிற்காலத்தின் இந்திய மாகாணம் மட்டும் அல்ல உலக அளவில் பெயரும் புகழும் நிலைக்கும் வண்ணம் திறமையின் உச்சம் தொட்ட கலைஞன், நடிகர் திலகம்.

பல தருணங்களில் உலக திரை உலகையே தன பக்கம் திரும்பிபார்க்கவைத்த உன்னத கலைஞன்.

நடிக்க வந்த அந்த ஒரு வருடம் மட்டுமே இரண்டு படங்கள். 1953 முதல் கிட்டத்தட்ட 45 ஆண்டுகள் தமிழ் திரை உலகின் சராசரி 40 சதவிகித வியாபாரத்தை தன்னுள் கொண்டுவந்த உன்னத கலைஞன்.

தயாரிபாளர்களின் விநியோகஸ்தர்களின் முதல்தர விடிவெள்ளியாக என்றேண்டும் வரவேற்கபட்டவன்.

Producer என்ற அந்தஸ்து, கெளரவம் இவரை வைத்து ஒரு திரைப்படமாவது எடுத்தாலொழிய எவருக்குமே கிட்டாதது, நிறைவும் பெறாது .

நடிக்க வந்த 7 வருடத்தில் இந்திய திரை உலகையே, உலக திரை உலக அளவில் கௌரவபடுத்திய ஒரே தமிழன்.

கப்பலோட்டிய தமிழன், கட்டபொம்மன், கர்ணன், டான்சன், சலீம், செங்குட்டுவன், சோக்ரடீஸ், ஒதெல்லோ, பரதன், ராஜ ராஜ சோழன், அப்பர், சுந்தரர், கொடிகாத்த குமரன், பகத்சிங், பாரதி என பல தேசிய தலைவர்களையும், சரித்திர, இதிகாச நாயகர்களை தன்னுடைய தணியாத சேவை நோக்கம் கொண்டு தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல இந்திய திரையுலகமே வியக்கும் வண்ணம் திரையிலே பிரதிஷ்டை செய்த திரை உலக சித்தர்.

ஒவ்வொரு வருடமும் பல படங்கள் இருந்தாலும், குறைந்தபட்சம் ஒரு திரைப்படமாவது இந்திய திரை உலகை நம் தமிழ்திரைஉலகின் பக்கம் திரும்பிபார்க்கவைத்த பெருமை நம் நடிகர் திலகத்திற்கு உண்டு.

உதாரணமாக

1952இல் பராசக்தி
1953இல் திரும்பிப்பார்
1954இல் மனோஹர
1956இல் ரங்கூன் ராதா
1957இல் மக்களை பெற்ற மகராசி
1958இல் இரட்டை வேட வரலாற்றில் ஒரு நாயகன் ஒரு வில்லன் - எப்படி வித்தியாசம் காட்டவேண்டும் என்று அனைவர்க்கும் கற்றுத்தந்த உத்தமபுத்திரன்
1959இல் உலக அரங்கில் தமிழனை தமிழ் திரை உலகை தலை நிமிரச்செய்த வீரபண்டியகட்டபோம்மன்
1960இல் படிக்காத மேதை
1961இல் பார்போற்றும் பாசமலர்
1962இல் ஆலயமணி
1963இல் இருவர் உள்ளம்
1964இல் நவராத்திரி
1965இல் தெய்வ நிந்தனையும், நாத்தீகமும் தமிழகத்தில் தலைவிரித்து ஆடியபோது நெற்றிக்கண்ணால் பரமேஸ்வரன் தீமைகளை சுட்டெரிப்பது போல தன்னுடைய நடிப்பால் ஆதிகத்தையும், தெய்வ சிந்தனையையும் ஆலவ்ருட்சம் போல தழைக்க செய்து நாத்தீகமும் தெய்வ நிந்தனையையும் நடிப்பால் தலைதூக்கவிடாமல் சுட்டெரித்த திருவிளையாடல்
1966இல் சரஸ்வதி சபதம்
1967இல் ஊட்டி வரை உறவு
1968இல் தில்லான மோகனம்பாள்
1969இல் ஆஸ்கார் விருது பரிந்துரைத்த தெய்வமகன்
1970இல் வியட்நாம் வீடு
1971இல் பாபு
1972இல் பட்டிக்காடா பட்டணமா, வசந்த மாளிகை
1973இல் எங்கள் தங்கராஜா
1974இல் தங்கபதக்கம்
1975இல் அவன்தான் மனிதன்
1976இல் உத்தமன்
1977இல் அண்ணன் ஒரு கோயில்
1978இல் தியாகம்
1979இல் தமிழ் திரை உலகவரலாற்றிலயே ருபாய் 2 கோடிக்கு மேல் வசூல் குவித்த திரிசூலம்
1981இல் கீழ்வானம் சிவக்கும்
1982இல் தீர்ப்பு
1983இல் சந்திப்பு
1984இல் வாழ்கை
1986இல் சாதனை மற்றும் மருமகள்

இப்படி ஒவொரு வருடமும் தென்னிந்திய திரை உலகம் மட்டும் அல்ல...இந்திய திரை உலக, உலக திரை உலக வரலாற்றையே ஒரு முறை இரு முறை அல்ல பல முறை நாலா திசைகளிலும் புரட்டிபோட்ட மஹா கலைஞன், நம் தமிழகத்தின் பெருமை நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என்பது உண்மை தமிழர்கள் நன்றி மறந்தாலும் உள்ளத்தால் ஒத்துகொண்ட உண்மையாகும்.

iufegolarev
30th August 2013, 10:20 PM
திரு கார்த்திக் சார்,

தகவலுக்கு நன்றி...!

நீங்கள் கூறியதை அனைவரும் அறிந்திருந்தாலும் இதோ அந்த விளம்பரம் !

100 நாட்களும் தொடர்ந்து அனைத்து திரையரங்கிலும் மொத்தம் 900 அரங்கு நிறைந்த காட்சிகள் ...!!

12 வாரத்தில் ஒரு கோடி ருபாய் வசூலை கடந்து விண்ணைமுட்டும் வெற்றியல்லவா திரிசூல வெற்றி !

திரை உலகையே புரட்டிபோட்ட வெற்றி அல்லவா ! முதன் முதலில் திரையுலக வரலாற்றில் ருபாய் இரண்டு கோடிக்கு மேல் வசூல் செய்த காவியமாயிட்ரே நம் agmark தமிழனின் திரிசூலம் !!

2532

iufegolarev
31st August 2013, 08:58 AM
இந்திய திரை உலகை பொறுத்த வரை சமுதாய சிந்தனை மற்றும் மக்களால் தான் சம்பாதிகின்றோம் ஆகையால் மக்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளையும் எக்காலத்திலும் செய்யவேண்டும் என்ற மிகபெரிய நல்ல எண்ணம் கொண்டவர் நம் நடிகர் திலகம்.

நல்ல காரியங்களை செய்வதற்கு விளம்பரமோ அரசியல் அனுபவமோ தேவை இல்லை, நல்ல மனது மட்டுமே தேவை என்ற எண்ணம் கொண்டவர்,நடிகர் திலகம் அவர்கள்.

இது பல தருணங்களில் நிரூபித்தவர் நடிகர் திலகம். 1959இல் அகில இந்திய அளவில் முதன்முதலாக பண்டித ஜவஹர்லால் நேஹ்ருவிடம் குழந்தைகள் மதிய உணவு திட்டத்திற்கு பெருந்தலைவர் முன்னிலையில் மொத்தமாக ஒரே தவணையில் ஒரு லட்சம் ருபாய் வழங்கியவர் நடிகர் திலகம் அவர்கள்.

அதுமட்டுமா, 1965இல் இந்திய சீனா யுத்தசமயத்தில் அப்போதைய பிரதமர் திரு லால் பகதூர் சாஸ்திரியிடம் சுமார் 200 சவரனுக்கும் மேல் தங்கநகைகளை யுத்தநிதிக்காக வழங்கினார்.

மேலும் இந்திய எல்லைக்கு அனைத்து நல்லுள்ளம் கொண்ட நடிக நடிகையரை தனது செலவில் அழைத்துக்கொண்டு போர்வீரர்கள் உற்சாகபடுத்த அந்த எல்லையிலேயே கலைநிகழ்ச்சி சொந்த செலவில் இந்த நாட்டைகாப்பாற்றும் வீரர்களை உற்சாகபடுத்த செய்தவர் இந்த நாட்டின் மைந்தன் நடிகர் திலகம் என்பது அனைவரும் அறியவேண்டும்.

அதேபோல கடுமையான பஞ்சத்தால் ராமநாதபுர மாவட்டம் அவதியுற்றபோது கட்சிபேதம் பாராமல் ஒருலட்சம் ருபாய் நன்கொடை வழங்கியவர் நடிகர் திலகம். இதில் கொடுமை என்னவென்றால், நடிகர் திலகம் கொடுத்த நன்கொடையில் குற்றம் இருப்பதுபோல ஒரு மாயை ஏற்படுத்த முயற்சி செய்து, நடிகர் திலகத்தின் கொடைதன்மையில் ஒரு சிலர் வேறொரு கட்சி பெயரில் குழப்பம் விளைவித்து விளம்பரம் தேட முயற்சித்தது நகைப்புக்குரியது, பைசா செலவில்லாமல் இவர் பணத்தில் அவர்கள் விளம்பரம் தேடிகொண்டது அன்றைய செய்தித்தாளை படித்தால் அனைவரும் புரிந்துகொள்ளலாம்.

இதுமட்டுமல்ல, பல நல்ல காரியங்கள், பல நல்ல விஷயங்களை தமிழ்நாடிர்க்கும், மக்களுக்கும், சமுதாயத்திற்கும் எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் செய்தவர் தமிழகத்தின் உண்மையான மண்ணின் மைந்தன் நடிகர் திலகம்.

2533

2534

2535

2536

2537

தமிழகத்திற்கும், தமிழன் வாழ்விற்கும், இந்த சமுதாயத்திற்கும், இந்தியாவிற்கும், இந்திய மக்களுக்கும் அவர் தம்மாலான உதவிகளை ஒரு தனிப்பட்ட நல்ல மனிதனாக, சொல்லப்போனால் மனிதரில் மாணிக்யமாக எப்போதும் செய்தவர், செய்துகொடுத்தவர்.

அவர் நம் தமிழகத்திற்கும், இந்தியனாடிர்க்கும் தன்னால் ஆனதை மனிதரில் மாணிக்யமாக விளம்பரபடுத்தாமல் எந்த ஆதாயமும் தேடாமல் செய்துவிட்டார் !

ஆனால் நம் தமிழகமும், தமிழக மக்களும், தமிழன், தமிழ் உணர்வு என்று மேடையில் மட்டுமே முழங்கும் கனவான்களும் அந்த நன்றியை (அரசியலை விட்டுத்தள்ளுங்கள்....ஆகையால் தான் அதை சாக்கடையை என்று அரசியல் விற்பன்னர்களும் விமர்சகர்களும் கூறுகின்றனர் )அதற்குரியவிதத்தில் பிரதிபலித்தார்களா என்று ஒரு கேள்வி எழுகிறது அதற்க்கு பதில் ?

தலையைதான் குனிய வேண்டியிருக்கிறது !

மண்ணின் மைந்தனை எல்லாவிதத்திலும் தமிழகமும் தமிழுணர்வு இல்லாத மக்களும் கேவலம் தங்களுடைய காழ்புணர்ச்சிமட்டுமே கொண்டு அவமதித்ததற்காக ! அவமதித்துகொண்டிருப்பதர்க்காக !

JamesFague
31st August 2013, 10:15 AM
Vasanthathil Oar Naal & Chiranjeevi has come 2 in 1 combo DVD for the
benefit of crores of NT's fans.

Mr Gopal sir,

Your analysis on Thavaputhalvan is simply superb. During childhood days
watched the movie at Pilot with my Mother.

JamesFague
31st August 2013, 10:17 AM
Mr Subbu Sir,

Nijathil nadikka theriyatha vithagar our NT. Truth always triumph in the end.

joe
31st August 2013, 10:44 AM
Nijathil nadikka theriyatha vithagar our NT.

நிஜத்தில் நடிக்கத் தெரியாதது ஒரு வித்தகம் அல்ல . நிஜத்தில் நடிக்கும் வித்தகம் இல்லாதவர் என்று வேண்டுமானால் சொல்லலாம்.

JamesFague
31st August 2013, 02:24 PM
Expecting memorable post from Mr Karthik for his 2000th Post.

Advance wishes sir.

iufegolarev
31st August 2013, 03:21 PM
நடிகர் திலகம் பல தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களின் முதல் தர விடிவெள்ளியாக எந்தளவுக்கு இருந்திருக்கிறார் என்பதை கீழ்கண்ட தகவல்களிலிருந்து காணலாம். வருட வாரியாக நடிகர் திலகத்தை வைத்து திரைப்பட துறை வளர்ந்த வாழ்ந்த விபரங்கள்

Every 10 year of Release No of Nadigar Thilagam Films

1952 - 1962 ************** 83
1963 - 1973 ************* 84
1974 - 1984 ************* 81
1985 - 1988 ************* 27
Special appearances ********* 17

சிங்கப்பூரில் உடல் நலம் பாதிக்க படாமல் இருந்திருக்குமேயானால் அடுத்த பத்து ஆண்டுகளில் நிச்சயம் அதே அளவில் திரையுலகில் வலம் வந்திருப்பார். உடல் நலம் சற்று தேருவதற்குள் கலைத்துறையில் உள்ள தாகத்தினால் மருத்துவ ஆலோசனையையும் சரிவர செவிசாய்க்காமல், 1991 - 1, 1992 - 4, இதனால் மீண்டும் உடல் நலம் பாதிக்கபட்டாலும், 1993 - 1998 வரை தலா ஒரு திரைப்படமாக குறைத்துக்கொண்டு , 1999இல் மறுபடியும் 3 திரைப்படங்கள் அவரின் நடிப்பில் வெளிவந்தன.

இது தவிர அந்தந்த வருடத்தில் கௌரவவேடம் புனைந்து மொத்தம் 17 படங்கள்.

40ஆண்டு காலம் எத்தனை புதிய கதாநாயகர்கள், புதிய இயக்குனர்கள், புதிய தயாரிப்பாளர்கள், வசனகர்த்த, இசையமைப்பாளர்கள், பாடகர்கள், தொன்றீருப்பார்கள். எவருமே போட்டிபோட கூட நினைக்கமுடியாவண்ணம் 1953 முதல் வருடத்திற்கு சராசரி 8.58 திரைப்படங்கள் நடிகர் திலகத்தின் நடிப்பில் வெளிவந்திருக்கிறது.
இப்படி கலைதுறைக்காகவே தன்னை முழுவதுமாக அற்பனித்துக்கொண்ட உன்னத தமிழன் கலைக்குரிசில் சிவாஜி கணேசன்.

அப்படியென்றால், எத்தனை இயக்குனர்கள், நடிக நடிகையர், கதாசிரியர், வசனகர்த்த, டப்பிங் கொடுப்பவர், நடன அமைப்பாளர், பாடலாசிரியர், மற்றும் எவ்வளவு திரை துறையை சேர்ந்த தொழிலாளர்கள் இதனால் பயன்பெற்றிருபார்கள். திரை துறையின் வர்த்தகம் எத்தனை கோடிகள் இருந்திருக்கும் இவர் ஒருவரால் ....

நினைத்து பார்த்தால் புளகாங்கிதம் அடைகிறது ..!

அப்போது மட்டுமல்ல இப்போதும் எப்போதும் நடிகர் திலகம் பாடல் வரியில் கூறுவது போல " காலம்தனை நான் மாறவைப்பேன்....கண்ணே உன்னை நான் வாழவைப்பேன்...என் ராஜாத்தி கண்ணே கலங்காதிரு " என்பதுதான் !

iufegolarev
31st August 2013, 05:16 PM
சத்யராஜ் சிவாஜியுடன் இணைந்து நடித்த 'ஜல்லிக்கட்டு'
பதிவு செய்த நாள் : புதன்கிழமை, ஜூலை 31, 10:39 PM IST
Maalaimalar


சிவாஜிகணேசன் நடித்த 'ஜல்லிக்கட்டு' படத்தில் இன்னொரு ஹீரோவாக சத்யராஜ் நடித்தார். இந்தப்படமும் வெற்றி பெற்றது. சிவாஜியுடன் 'ஜல்லிக்கட்டு' படத்தில் நடித்த சத்யராஜூக்கு, படத்தில் முக்கியமான கேரக்டர். நீதிபதி ஒருவர் தனக்கு ஏற்பட்ட பாதிப்பை ஒரு அதிரடி இளைஞன் மூலம் சரி செய்து கொள்ளும் கதை.

இதில் பாதிக்கப்பட்ட நீதிபதியாக சிவாஜியும், அவருக்கு உதவும் இளைஞராக சத்யராஜூம் நடித்தார்கள். வித்தியாசமான கதைக்கருவைக் கொண்ட இந்தப்படமும் பெரிய அளவில் வெற்றி பெற்றது.

இந்தப் படத்தின் வெற்றி விழாவில், அன்றைய முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். கலந்து கொண்டு சிவாஜி உள்ளிட்ட கலைஞர்களை வாழ்த்தினார். எம்.ஜி.ஆர். கலந்து கொண்ட கடைசி சினிமா விழா இதுதான்.

சிவாஜியுடன் நடித்த 'ஜல்லிக்கட்டு' அனுபவம் குறித்து சத்யராஜ் கூறியதாவது:-

'ஜல்லிக்கட்டு படத்தை நண்பர் மணிவண்ணன்தான் இயக்கினார். சித்ரா லட்சுமணன் தயாரித்தார். கதையைக் கேட்கும்போதே இது நன்றாக ஓடும் என்று தோன்றியது. சில கதைகளை கேட்டதுமே, அது வெற்றி பெறும் என்று சொல்லிவிட முடியும்.

ஜல்லிக்கட்டு அப்படியொரு கதை. அப்போதெல்லாம் நானும் மணிவண்ணனும் செட்டிலே ஒருவரை ஒருவர் `தலைவா!' என்று கூப்பிட்டுக் கொள்வோம். இந்த `தலைவா' பழக்கம் செட்டில் இருந்த மற்ற டெக்னீஷியன்களையும் தொற்றிக் கொண்டது.

இது எதில் போய் முடிந்தது தெரியுமா? செட்டில் சிவாஜி சாரிடம் போன டான்ஸ் மாஸ்டர் பாபு அவரிடம், 'தலைவா! ஷாட் ரெடி' என்று சொல்லப்போக, பதிலுக்கு சிவாஜி சார் அவரை கேலி செய்யும் அளவுக்குப் போய்விட்டது. 'ஏண்டா! உங்க `தலைவா' என் வரைக்கும் வந்தாச்சா?' என்று கேட்க, மாஸ்டர் அவசரமாய் `எஸ்கேப்' ஆகியிருக்கிறார். நானும் பிரபுவும் `தலைவரே' என்று அழைத்துக் கொள்வதும் சிவாஜிசாருக்கு தெரிந்திருக்கிறது.

இப்போது அவரே செட்டில் 'தலைவா' என்று அழைக்கப்பட்டு விட்டதால், அன்று படப்பிடிப்பு முடிந்து வீட்டுக்குப் போனவர், பிரபு வரும் வரை காத்திருந்திருக்கிறார். பிரபு வீட்டுக்குப் போனதும் 'வாங்க தலைவரே!' என்று அழைத்து அவரை வெலவெலக்க வைத்திருக்கிறார்.

மறுநாள் இதுபற்றி பிரபு என்னிடம் சொன்னபோது, எங்களுக்கெல்லாம் அடக்கமுடியாத சிரிப்பு. நேரத்துக்கு மதிப்பு கொடுப்பதில் சிவாஜி சாருக்கு நிகர் அவரேதான். காலை 7 மணிக்கு படப்பிடிப்பு என்றால் நான் 7 மணிக்கு செட்டில் இருப்பேன். ஆனால் அதற்கு முன்பே சிவாஜி சார் செட்டில் இருப்பார்.

ஒருநாளாவது அவரை முந்திவிடவேண்டும் என்று இன்னும் சீக்கிரம் வரத்தொடங்கினேன். அப்போதும் சிவாஜி சார் எனக்கு முந்தி வந்திருந்தார். நடிப்பில் மட்டுமின்றி, `பங்ச்சுவாலிட்டி'யிலும் சிவாஜி சாருக்கு இணையாக யாருமில்லை என்பதை நானும் இந்த நாட்களில் கண்கூடாக உணர்ந்தேன். 'ஜல்லிக்கட்டு' படப்பிடிப்புக்காக பெங்களூரில் இருந்து மங்களூருக்கு விமானத்தில் போனோம்.

நான், மணிவண்ணன், கேமராமேன் சபாபதி, சித்ரா லட்சுமணன் எல்லோரும் ஒரே ரூமில் தங்கினோம். சிவாஜி சார் பக்கத்து ரூமில் தங்கினார். படப்பிடிப்பு முடிந்து ஊருக்கு கிளம்ப வேண்டிய நாள். காலை 6 மணிக்கு விமானம் ஏறவேண்டும். சிவாஜி சார் அதிகாலை 4 மணிக்கு விழித்தவர் எங்கள் அறைக்கு வந்திருக்கிறார்.

நாங்கள் முந்தின நாள் இரவு சிக்கன் பிரியாணி சாப்பிட்டு விட்டு அப்படியே தூங்கியிருக்கிறோம். அதிகாலையில் எங்களை வந்து பார்த்தவர், நாங்கள் படுத்திருந்த இடத்துக்கு அருகில் சிக்கன் எலும்புகள் கிடந்ததை பார்த்திருக்கிறார். அப்போதைக்கு ஒன்றும் சொல்லாமல் போனவர், நாங்கள் புறப்பட்டு தயாராகி வந்தபோது பிடித்துக்கொண்டார்.

'ஏண்டா! காலையிலேயே எழுப்பலாம்னு வந்தால் செத்துப்போன கோழியோட ஒண்ணா படுத்திருக்கீங்களே' என்று கிண்டல் செய்தார். அந்த கிண்டலில் ஒரு தந்தைக்கே உரிய அக்கறை இருந்தது. விமான நிலையத்துக்கு புறப்பட சிவாஜி சார் அவசரப்படுத்தின தால், ஆளாளுக்கு சீக்கிரமே கிளம்பி விட்டோம்.

கமலா அம்மாளும் சிவாஜி சாருடன் வந்திருந்தார்கள். 'மாமா இப்படித்தான் அவசரப்படுத்துவாங்க. நாமபோறப்போ விமான நிலைய கேட்டை திறந்திருக்க மாட்டாங்க' என்றார். கமலா அம்மாள் சொன்னதுபோலவே ஆயிற்று. நாங்கள் போய்ச் சேர்ந்த பிறகுதான் விமான நிலைய பயணிகள் கேட்டையே திறந்தார்கள்! அப்போது மங்களூரில் இருந்து பெங்களூருக்கு தினமும் ஒரு விமானம்தான்.

எனவே விமானத்தை தவறவிட்டால் தேவையில்லாமல் ஒருநாள் காத்திருக்க வேண்டியிருக்கும். இந்த வகையில் சிவாஜி சாரின் `அவசரம்' நியாயமானதுதான். பார்த்ததுமே 'வாங்க கவுண்டரே!' என்பார். படப்பிடிப்பின்போது கிடைக்கிற இடைவெளி நேரத்தில் குடும்ப விஷயங்கள் பற்றி பேசுவார்.

எங்கள் சித்தப்பா அவரது நண்பர் என்ற முறையில் எங்கள் குடும்பம் பற்றி ஆர்வமாய் விசாரிப்பார். என் சிறுவயதிலேயே விவசாய நிலங்கள் விற்கப்பட்டதை தெரிந்து கொண்டவர், 'நீ சம்பாதிச்சு சொந்த ஊர்லயே நிறைய தென்னந்தோப்பு வாங்கணும்' என்று சொன்னார்.

அவர் சொன்னதுபோலவே பொள்ளாச்சி பகுதியில் வாழவாடி ஊரில் 95 ஏக்கர் தென்னந்தோப்பு வாங்கியிருக்கிறேன். 'ஜல்லிக்கட்டு' படம் எதிர்பார்த்த மாதிரியே நன்றாக ஓடி, வெற்றி பெற்றது.

iufegolarev
31st August 2013, 05:22 PM
சிவாஜியுடன் நடித்த அனுபவங்கள்: குட்டி பத்மினி வெளியிடும் தகவல்கள்
பதிவு செய்த நாள் : திங்கட்கிழமை, ஜூலை 08, 9:35 PM IST
maalaimalar


சிவாஜியுடன் நடித்த அனுபவங்கள் குறித்து குட்டி பத்மினி கூறியதாவது:-

"நடிப்பில் சிவாஜி சார் இமயம் என்று தெரியும். ஆனால், அப்போது பேபி நட்சத்திரமாக இருந்த எனக்கு, இது தெரிந்திருக்க வாய்ப்பில்லையே. ஏ.பி.நாகராஜன் அங்கிள் அப்போது எடுத்த "திருவருட்செல்வர்'' படத்தில் சிவாஜி சார் நடித்தார். இந்தப் படத்தில் சிவாஜி சாருடன் விவாதம் செய்யும் ஒரு காட்சியில் நடிக்க என்னை `புக்' செய்தார்கள்.

புராணப்படம் என்பதால் தூய தமிழில் பேச ஏ.பி.நாகராஜன் அங்கிள் வீட்டில் ஒரு வாரம் எனக்கு `சுத்தத் தமிழ்' கற்றுத் தந்தார்கள். இந்த ஒரு வாரத்தில் ஏ.பி.என். அங்கிளின் பிள்ளைகளும் எனக்கு `பிரண்ட்ஸ்' ஆகிவிட்டார்கள். சிவாஜி சாருடன் நான் நடிக்க வேண்டிய காட்சி படமாகும் நாளும் வந்தது. அப்போதெல்லாம் எனக்கு `நடிப்பு' பற்றி பயமே இருந்ததில்லை.

படத்தில் திருமலை மன்னராக வரும் சிவாஜிசாருக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. அவருக்கு கடவுள் நம்பிக்கை ஏற்படுத்தும் சிறுமியாக நான் வந்தேன். கடவுள் நம்பிக்கை பற்றி நான் அவரிடம் பேசப்போக, அவரோ "கடவுள் இருக்கிறார் என்றால், அவர் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்?'' என்று கேட்பார்.

"இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டுமானால் என்னை திருமலை மன்னராக்கி அரியணையில் அமர வைக்கவேண்டும்'' என்பேன். உடனே திருமலை மன்னர் என்னை அரியணையில் அமர்த்தி மன்னராக மகுடம் சூட்டுவார். அடுத்த கணம் நான், "யாரங்கே! இதுவரை திருமலை மன்னராக இருந்த இவரை பிடித்து சிறையில் அடையுங்கள்'' என்பேன்.

அப்படி உத்தரவிட்டு விட்டு, "கடவுள் இப்போது இதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்'' என்பேன். இதன் பிறகு திருமலை மன்னர் கடவுள் நம்பிக்கை உடையவராக திருந்துவதுடன் அந்தக் காட்சி முடியும். இந்தக் காட்சியில் திருமலை மன்னராக நடிக்கும் சிவாஜி சார் உணர்ச்சி வேகத்தில் பேசிவிட்டு, என் காலில் விழுவதாக அந்தக் காட்சி முடியும்.

இந்தக்காட்சி பற்றி சிவாஜி சாரிடம் விளக்கிய உதவி இயக்குனர்கள், கடைசியில் `கடவுள் ஞானம்' கொடுத்த சிறுமியின் காலில் விழுவதுடன் காட்சி முடியும் என்பதை தயங்கித் தயங்கி சொன்னார்கள். ஆனால் சிவாஜி சார் அதற்கு பதில் எதுவும் சொல்லவில்லை. காட்சியில் உணர்ச்சிகரமாக பேசிக் கொண்டு வந்தவர், "அம்மா நீ சிறு பெண்ணல்ல; என் அறிவுக்கண் திறக்க வந்த தெய்வம்'' என்று சொல்லி என் கால் பக்கமாக விழுந்துவிட்டார்.

டைரக்டர் ஏ.பி.நாகராஜன் அங்கிள் `கட்' செய்யவும் மறந்து ஒரு கணம் பிரமித்து நின்றுவிட்டார். காட்சியின் கனம் கருதி எந்த நடிப்புக்கும் தயாராக இருந்த சிவாஜி சாரை நினைத்தால் இப்போதும் அவர் மீது ஒரு மரியாதை ஏற்படுகிறது. இந்தப்படம் பற்றி அப்போது விமர்சனம் எழுதிய ஒரு பத்திரிகை, இந்தக் காட்சி பற்றி குறிப்பிடும்போது "திமிங்கலத்தை சின்ன மீன் விழுங்கிவிட்டது'' என்று வர்ணித்திருந்தது.

அதுமாதிரி, "திருமால் பெருமை'' படத்திலும் ஒரு உணர்ச்சிமயமான காட்சி சிவாஜி சாருக்கும் எனக்கும் இருந்தது. படத்தில் குட்டி ஆண்டாளாக வரும் நான் திருமாலுக்கு என் தந்தை (சிவாஜி) சூடிய மாலையை என் கழுத்தில் எடுத்து போட்டுக்கொள்வேன். ஆத்திரமாகும் அப்பா என் மீது கோபப்படுவதாக காட்சி. இந்தக் காட்சியின்போது நான் கொஞ்சமும் எதிர்பாராமல் சிவாஜி சார் என் கன்னத்தில் ஓங்கி விட்டார் ஒரு அறை.

அந்த அறையின் வேகத்தில் என் காதில் இருந்த கம்மல் தெறித்து விழுந்தது. பொறி கலங்கிப்போனேன். என்றாலும் நான் தொடர்ந்து பேசவேண்டிய வசனத்தை பேசி முடித்தேன். காட்சி முடிந்ததும் சிவாஜி சார் ஓடிவந்து என் கன்னத்தை தடவிவிட்டார். பிறகு அம்மாவிடம் அந்தக் காட்சிக்கான விளக்கம் சொன்னார். "இந்தக் காட்சியில் நான் கன்னத்தில் அறைவதை முதலிலேயே சொல்லியிருந்தால் உங்கள் பெண், நான் அடிக்கும்போது கன்னத்தை திருப்பியிருப்பாள். அப்படிச் செய்திருந்தால் அந்தக்காட்சி இயல்பாக அமையாது. அதனால்தான் அடிப்பதை முன்கூட்டியே சொல்லவில்லை. ஆனால் இப்படி சொல்லாமல் கன்னத்தில் அடித்தும், நடிப்பதை நிறுத்தாமல் தொடர்ந்து அழுதுகொண்டே வசனம் பேசி நடித்த உங்கள் பெண் என்னை ரொம்பவே கவர்ந்து விட்டாள்'' என்று சொன்னவர், "உங்க கையை நீட்டுங்க'' என்றார், அம்மாவிடம்.

அம்மா `எதற்கு' என்று புரியாமல் பார்த்த நேரத்தில், "எனக்கு சத்தியம் பண்ணிக் கொடுங்க. உங்க பொண்ணு ஹீரோயினா நடிக்கிற கால கட்டத்துல என்கூட தான் முதல்ல நடிக்கணும்'' என்றார். அம்மா அப்படியே நெகிழ்ந்து போய்விட்டார்.

பெண்ணின் நடிப்பு மீது அந்த மகா கலைஞர் வைத்த நம்பிக்கையும், சிறு குழந்தை மாதிரி அவர் கேட்ட சத்தியமும் அம்மாவை ஆனந்த அதிர்ச்சிக்குள்ளாக்கிவிட்டது.'' இவ்வாறு குட்டி பத்மினி கூறினார்.

iufegolarev
31st August 2013, 05:37 PM
`கடினமான பாடலுக்கு பிரமாதமாக வாயசைத்தார்'- சிவாஜிகணேசனுக்கு இளையராஜா புகழாரம்

பதிவு செய்த நாள் : திங்கட்கிழமை, ஏப்ரல் 01, 11:30 PM IST
maalai malar


'கவரிமான்' படத்தில், கீர்த்தனை ஒன்றுக்கு புதிய முறையில் இசை அமைத்தார், இளையராஜா. பாடுவதற்கு கடினமான அந்தப்பாடலுக்கு மிகப் பொருத்தமாக வாயசைத்தார், சிவாஜிகணேசன். அதைக்கண்டு இளையராஜா வியந்து போனார்.

இசைப்பயணம் பற்றி இளையராஜா கூறியதாவது:-


எஸ்.பி.முத்துராமன் இயக்கிய 'கடவுள் அமைத்த மேடை'படத்தில்தான், ஒரு பரிசோதனை முயற்சி செய்யவேண்டும் என்று தோன்றியது.

அதாவது கர்நாடக சங்கீத ராகங்களை எடுத்துக்கொண்டு, அதன் ஆழம் குறையாமல் கிராமியப் பாணியின் சந்தங்களை மெட் டாக அமைத்து, பாடும்போது அதன் இரண்டு வேறுபட்ட தனிப்பட்ட தன்மைகளை இணைத்துப் பாடவைக்கலாமே என்று தோன்றியது.


பஞ்சு சார் அடுத்து 'கவரிமான்' என்ற படத்தில் நடிக்க சிவாஜியை ஒப்பந்தம் செய்தார். நடிகர் திலகத்தின் பாத்திரப் படைப்பை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. (மனைவி சோரம் போகிற காட்சியை பார்க்கும் கணவனின் கேரக்டர்)

என் இசையில் முதன் முதலில் ஒரு தியாகராஜ கீர்த்தனை இடம் பெற்றது இந்தப் படத்தில்தான். 'ப்ரோவ பாரமா?' என்ற கீர்த்தனையை ஜேசுதாஸ் பாட, டி.வி.கிருஷ்ணன் அவர்களின் வயலினும், டி.வி.கோபாலகிருஷ்ணனின் மிருதங்கமும் இணைந்தன.

சிவாஜி இந்தப் பாட்டுக்கு வாயசைத்ததை கண்டு வியந்து போனேன்.

ஆரம்பத்தில் ஜேசுதாஸ் ராகம்பாடி, தாளம் ஏதும் இல்லாமல் திடீரென்று `ப்ரோவபாரமா' என்று தொடங்குமாறு பதிவு ஆகியிருந்தது.

ராகம்பாடி, `ப்ரோவ பாரமா' தொடங்குவதற்கு இடையில் தாளத்தில் ஏதாவது வாசித்திருந்தால் நடிப்பவர்களுக்கு பாடல் தொடங்கும் இடம் சரியாகத் தெரிந்து வாயசைக்கலாம்.

ராகம்பாட, வெறும் தம்புரா மட்டும் போய்க்கொண்டிருக்க, அது எவ்வளவு நேரம் போகிறது என்று கண்டுபிடித்து, பாடல் ஜேசுதாஸ் குரலில் வரும் அந்த நொடியை எப்படியோ கண்டுபிடித்து சரியாக வாயசைத்தார்.

https://www.youtube.com/watch?v=cnIH0k44hRI

இதைப் பாராட்டி, அண்ணன் சிவாஜியிடம், 'எப்படிச் செய்கிறீர்கள்?' என்று கேட்டேன்.

'என்னை என்னடா நினைச்சிட்டே? சும்மா ஏனோதானோன்னு சினிமாவுக்கு வந்தவன்னு நினைச்சியா? இதெல்லாம் முடியாட்டா ஏண்டா ஒருத்தன் நடிகனா இருக்கணும்?' என்று கேட்டார் சிவாஜி.

'நடிகர் திலகம்' என்று சும்மாவா பட்டம் கொடுத்தார்கள்?

mr_karthik
31st August 2013, 06:22 PM
பிரபல தயாரிப்பு நிறுவனங்களின் முதல் வண்ணப்படங்கள்:

(இவர்கள் அனைவரும் தங்கள் முதல் வண்ணப்படங்களை நடிகர்திலகத்தை கதாநாயகனாக வைத்தே தயாரித்தனர்)

1) பத்மினி பிக்சர்ஸ் - வீரபாண்டிய கட்டபொம்மன் (1959) தமிழில் முதல் டெக்னிக் கலர் படம்.

2) ஆர். ஆர். பிக்சர்ஸ் - ஸ்ரீ வள்ளி (1961)

3) பத்மினி பிக்சர்ஸ் - கர்ணன் (1964) தமிழில் முதல் ஈஸ்ட்மன் கலர்ப்படம்.

4) சிவாஜி பிலிம்ஸ் - புதிய பறவை (1964)

5) ஸ்ரீ விஜயலட்சுமி பிக்சர்ஸ் - திருவிளையாடல் (1965)

6) ஏ.எல்.எஸ். புரொடக்ஷன்ஸ் - கந்தன் கருணை (1967)

7) கே.சி.பிலிம்ஸ் (கோவை செழியன்) - ஊட்டிவரை உறவு (1967)

8) ஸ்ரீவெங்கடேஸ்வரா மூவீஸ் - திருமால் பெருமை (1968)

9) ஈ.வி.ஆர்.பிக்சர்ஸ் - தங்க சுரங்கம் (1969)

10) சுஜாதா சினி ஆர்ட்ஸ் - எங்கிருந்தோ வந்தாள் (1970)

11) ஜேயார் மூவீஸ் - எங்க மாமா (1970)

12) சன்பீம் பிக்சர்ஸ் - பாதுகாப்பு (1970)

13) மல்லியம் புரொடக்ஷன்ஸ் - சவாலே சமாளி (1971)

14) பி.எஸ்.வி. - பிக்சர்ஸ் - இரு துருவம் (1971)

15) புவனேஸ்வரி மூவிஸ் - மூன்று தெய்வங்கள் (1971)

16) ராம்குமார் பிலிம்ஸ் - சுமதி என் சுந்தரி (1971)

17) விஜயா சுரேஷ் கம்பைன்ஸ் - வசந்த மாளிகை (1972)

18) சித்ரமாலா கம்பைன்ஸ் - ராஜபார்ட் ரங்கதுரை (1974)

19) வியட்நாம் மூவீஸ் - கௌரவம் (1973)

20) ஆனந்த் மூவீஸ் - ராஜராஜ சோழன் (1973)

21) சினி பாரத - பாரத விலாஸ் (1973)

22) ஜெகபதி ஆர்ட் பிக்சர்ஸ் - எங்கள் தங்க ராஜா (1973)

23) முக்தா பிலிம்ஸ் - அன்பைத்தேடி (1974)

நடிகர்திலகம் நடித்த கடைசி கருப்பு வெள்ளைப்படமான 'தாய்' 1974-ல் வெளியானது. எனவே அதன்பின்னர் தயாரித்த அனைத்து நிறுவனங்களும் வண்ணத்திலேயே தயாரித்திருப்பார்கள் என்பதால் பட்டியல் 1974 உடன் நிறுத்தப்படுகிறது....

Gopal.s
31st August 2013, 06:48 PM
(Continuation Till 1977 of Karthik Sir )

சன்பீம் -பாதுகாப்பு

பீ.எஸ்.வீ. பிக்சர்ஸ்- இரு துருவம்

மல்லியம் புரடக்ஷன்ஸ் - சவாலே சமாளி

புவனேஸ்வரி மூவீஸ்- மூன்று தெய்வங்கள்

ராசி enterprises -அவன்தான் மனிதன்

அமுதம் பிக்சர்ஸ் - அன்பே ஆருயிரே

ப்ராஸ்பரிடி பிலிம்ஸ்-கிரக பிரவேசம்

சண்முகமணி பிச்சர்- சத்யம்

கோமதி சங்கர் பிக்சர்- அவன் ஒரு சரித்திரம்

யோகசித்ரா - இளைய தலைமுறை

mr_karthik
31st August 2013, 07:15 PM
Dear Gopal sir,

I can understand why you extended the list uptp 1977.

But the last Black & White movie of our Nadigarthilagam "THAAI" released in 1974. After that no more b & w movies. So all other concerns should start their movies in colour only.

But I accept that, I have omitted Irudhuruvam, Moondru Dheivangal, Padhukappu and Savale Samaali.....

Gopal.s
31st August 2013, 07:19 PM
Dear Gopal sir,

I can understand why you extended the list uptp 1977.

But the last Black & White movie of our Nadigarthilagam "THAAI" released in 1974. After that no more b & w movies. So all other concerns should start their movies in colour only.

But I accept that, I have omitted Irudhuruvam, Moondru Dheivangal, Padhukappu and Savale Samaali.....
Sorry. I agree with you that it has relevance only upto 1974. You are correct and I was little over-enthusiastic .Thank God for stopping me as I was planning till 1999 ????? !!!!!!!!!!!!!
:-D:???:

Gopal.s
31st August 2013, 07:37 PM
Dear Friends,
I am starting Gnana Oli ,the special movie for many celebrities and to many of our Fans too. As there were many write-up on this movie in the past (recently by Murali and Vasu) ,I will not dwell much on story line and other peripheral matters. I am analysing the character psychology and the unique Acting approach of Nadigarthilagam. Generally this movie has very good performances by Gokul Nath(amazing and unforgettable),Saratha(some of the close-up shots with meaningful reactions ,she proved her mettle) and Sundararajan.But I will take only NT's performance in detail.

Richardsof
31st August 2013, 07:43 PM
Gopal sir
please read my posting . I have mentioned the nalla neram record in the year 1972 only.

Gopal.s
31st August 2013, 08:00 PM
Gopal sir
please read my posting . I have mentioned the nalla neram record in the year 1972 only.
I removed my post as I noticed it myself. Thanks for the clarification.
One more Doubt-As per my knowledge goes Malaikallan ran for 100 Days in only one theatre in Chennai. Prabath&saraswathi screened Ratha kanneer. Other centres also it didnt run as mentioned.Kindly correct it after verifying it as we take efforts to be accurate on historical recordings.

Richardsof
31st August 2013, 08:05 PM
[QUOTE=Gopal,S.;1070069]I removed my post as I noticed it myself. Thanks for the clarification.
One more Doubt-As per my knowledge goes Malaikallan ran for 100 Days in only one theatre in Chennai. Prabath&saraswathi screened Ratha kanneer. Other centres also it didnt run as mentioned.Kindly correct it after verifying it as we take efforts to be accurate on historical recordings.

AGREED .

mahendra raj
31st August 2013, 08:22 PM
Dear Gopal sir,

I can understand why you extended the list uptp 1977.

But the last Black & White movie of our Nadigarthilagam "THAAI" released in 1974. After that no more b & w movies. So all other concerns should start their movies in colour only.

But I accept that, I have omitted Irudhuruvam, Moondru Dheivangal, Padhukappu and Savale Samaali.....

What about 'Manitharil Maanikam' ( remember, the song with English introductory words 'I will sing for you')? It was in black & white and released in either 1974 or 1975. Was is it a guest role?

Gopal.s
31st August 2013, 08:34 PM
What about 'Manitharil Maanikam' ( remember, the song with English introductory words 'I will sing for you')? It was in black & white and released in either 1974 or 1975. Was is it a guest role?

Introductory word "you want me to sing?OK.Ok".Then I will sing for you,I will Dance for you. Brilliant portrayal as eccentric Doctor with caustic tongue and good by deeds.(Indeed it was a Guest role where A.V.M .Rajan was protagonist.)

மனிதரில் மாணிக்கம்- 7/12/1973

தாய்- 7/3/1974

iufegolarev
31st August 2013, 09:08 PM
Usually Nadigar Thilagam films release in 3 combination theaters - for black and white days, it would be mostly Chitra, Crown & Sayani and Later it was
Shanthi, Crown & Bhuvaneswari

However, Some of the films that were also released in 4 Theaters and the films that ran for over 100 days in all the 4 theaters as far as my knowledge goes were ...

Aalayamani ( SriKrishna, Paragon, Uma & Noorjehan) - 4 theaters 1962
Kai koduththa deivam ( Midland, Prabath, Saraswathi & Ram) - 4 theaters - 1964
Navarathiri (Midland, Maharani, Uma & Ram) - 4 theaters - 1964
SivandhaMann (Globe, Agasthia, Megala & Noorjehan) 4 theaters - 1969

Please correct me if am wrong...

If we talk about all release theaters ie., 3 Theaters then there are lot more to follow Before the above quoted year and after the above quoted year :

venkkiram
31st August 2013, 09:09 PM
இளைய ராஜா இசையில் மிக சிறந்த நடிகர்திலகம் பட பாடல்கள்.
1)பூங்காற்று திரும்புமா
2)வெட்டிவேரு வாசம்
3)ராசாவே உன்னை நம்பி
4)எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்
5)எந்தன் பொன் வண்ணமே
6)பூவிழி வாசலில்
7)நல்லவர்கெல்லாம்
8)நெஞ்சில் உள்ள காயமொன்று
9)இங்கே நான் கண்டேன் அனார்கலி
10)ஒ மானே மானே மானே
11)மாலை தென்றல்
12) மான் கண்டேன் மான் கண்டேன்
13)சிந்து நதிக்கரை ஓரம்
14)பேசாதே வாயுள்ள ஊமை
15)ஆராரிரோ பாடியதாரோ

இவைகளும் நான் அடிக்கடி கேட்டு ரசிப்பவை.

1) வெள்ளை ரோஜா - உலகமெலாம் பருவமழை என்ற தொகையறாவோடு தொடங்கும் தேவனில் கோயிலிலே
2) வெள்ளை ரோஜா - நாகூர் பக்கத்திலே
3) சாதனை - இங்கே நான் கண்டேன்
4) ரிஷிமூலம் - நேரமிது நேரமிது

iufegolarev
31st August 2013, 09:33 PM
Successful 200th Time Relay in SUN LIFE - Nadigar Thilagam's 200th Film "THIRISOOLAM"

joe
31st August 2013, 09:45 PM
http://devimanian.blogspot.in/2013/06/blog-post_6673.html

Subramaniam Ramajayam
31st August 2013, 09:48 PM
Usually Nadigar Thilagam films release in 3 combination theaters - for black and white days, it would be mostly Chitra, Crown & Sayani and Later it was
Shanthi, Crown & Bhuvaneswari

However, Some of the films that were also released in 4 Theaters and the films that ran for over 100 days in all the 4 theaters as far as my knowledge goes were ...

Punarjenmam ( Casino, Broadway, Uma & Ram) - 4 theaters - 1961
Aalayamani ( SriKrishna, Paragon, Uma & Noorjehan) - 4 theaters 1962
Kai koduththa deivam ( Midland, Prabath, Saraswathi & Ram) - 4 theaters - 1964
Navarathiri (Midland, Maharani, Uma & Ram) - 4 theaters - 1964
SivandhaMann (Globe, Agasthia, Megala & Noorjehan) 4 theaters - 1969

Please correct me if am wrong...

If we talk about all release theaters ie., 3 Theaters then there are lot more to follow Before the above quoted year and after the above quoted year :


Punarjenmam has not run for 100 days at all.
first movie ran 100 days very very successfully was ALAYA MANI at paragan krishna saraswathi and noorjehan. followed by kk deivam and navarathri our side. upcourse SIVANDAMANN too.

joe
31st August 2013, 10:02 PM
நடிகர் திலகத்தின் நையாண்டி
http://devimanian.blogspot.in/2012/09/blog-post_29.html

iufegolarev
31st August 2013, 10:10 PM
Punarjenmam has not run for 100 days at all.
first movie ran 100 days very very successfully was ALAYA MANI at paragan krishna saraswathi and noorjehan. followed by kk deivam and navarathri our side. upcourse SIVANDAMANN too.

Thanks sir... for your clarification....I will remove it....!

joe
31st August 2013, 10:30 PM
அது ஒரு வசந்த காலம்
http://devimanian.blogspot.in/2012/01/blog-post_4721.html

orodizli
31st August 2013, 11:11 PM
திரு கோபால் சார், நன்றி.- ஞானஒளி திரைபடத்தை nt -யின் நடிப்பை அலசி ஆராயும் கட்டுரை வரைவதற்கு...இந்த படம் நான் சிறிய வயதில் பெரிய எதிர்பார்ப்பின்றி பார்த்தது. எவ்வளவு சிறப்பான படத்தை பார்க்காமல் விட்டு விட்டோம் என்று வருந்தினேன் , இப்போதும் வெகு ஆவலாக உள்ளேன் -கட்டுரையை பார்க்க...

RAGHAVENDRA
1st September 2013, 01:40 AM
இன்று 01.09.2013 மாலை 4.30 மணிக்கு பொதிகை தொலைக்காட்சியில் நடிகர் திலகத்தின் உன்னதத் திரைக்காவியம் அன்புக் கரங்கள்.

செப்டம்பர் மாதம் முழுதும் வழக்கமாக வார நாட்களில் பிற்பகல் காட்சியில் நடிகர் திலகத்தின் திரைப்படங்கள் ராஜ் டிவியில் இடம் பெறுகின்றன.

இனி தொலைக்காட்சிகளில் இந்த வாரம் நடிகர் திலகத்தின் திரைப்பங்கள்

Theerppu J Movies 02.09.2013 1 pm
Amara deepam KTV 02.09.2013 1.30 am
Oorukku Oru Pillai Raj Digital 02.09.2013 1 pm
Mirudanga Chakravarthy Raj TV 02.09.2013 1.30 pm
Thunai Raj TV 03.09.2013 1.30 pm
Cinema Paithiyam Jaya TV 04.09.2013 10 am
Ennai Pol Oruvan Raj TV 04.09.2013 1.30 pm
Andavan Kattalai J Movies 05.09.2013 1 pm
Neethi Raj TV 05.09.2013 1.30 pm
Raja Raja Chozhan Raj TV 06.09.2013 1.30 pm
Chithra Pournami J Movies 07.09.2013 1 pm
Gowravam Jaya TV 07.09.2013 10 am
Mudhal Mariyadhai Jaya TV 07.09.2013 8 pm
Thambathyam Raj Digital 07.09.2013 8 pm
Mannukkul Vairam Raj TV 07.09.2013 1.30 pm

Gopal.s
1st September 2013, 04:50 AM
முரளி,ஜீகே சார்,கார்த்திக் சார் போன்ற சீனியர் ஹப்பர்களுக்கு ஒரு வேண்டுகோள். தங்கள் நேரம் பொன்னானது. தங்களின் பொன்னான நேரத்தை (அதுவும் முரளி ஆடிக்கொரு முறை) நம் திரிக்கு ஒதுக்கினால் நலம்.இல்லையேல் தொடர்ந்து கொண்டிருக்கும் என் போன்றவர்களுக்கு அலுக்க கூடும். உயிரை கொடுத்து தொடர்ந்து கொண்டிருக்கும் இங்கு வராமல்.... ( உன்னைத்தான் தம்பி....காலம் கண்ணானது ,கடமை பொன்னானது.... பிறகு உங்கள் இஷ்டம்..... !!!!)

Gopal.s
1st September 2013, 05:58 AM
Deleted.

RAGHAVENDRA
1st September 2013, 08:22 AM
ஞான ஒளி நிழற்படங்களின் அணிவகுப்பு ... வேறு இணைய தளங்களிலிருந்து ...

http://img823.imageshack.us/img823/1435/gnanaoli21.jpg

http://img600.imageshack.us/img600/7290/gnanaoli33.jpg

http://img90.imageshack.us/img90/9107/snapshot20080413231104wp6.jpg

http://i47.tinypic.com/2guysyd.jpg

http://oi45.tinypic.com/52ck01.jpg

http://i1273.photobucket.com/albums/y412/esvee6/gnanaoli00014_zps86822e10.png

http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/2011/GnanaOli00007.jpg

RAGHAVENDRA
1st September 2013, 08:25 AM
http://img42.imageshack.us/img42/1166/gnanaoli00033.png

http://img152.imageshack.us/img152/8799/gnanaoli49.jpg

http://i1.ytimg.com/vi/J6dVxnrgbRY/hqdefault.jpg

RAGHAVENDRA
1st September 2013, 08:28 AM
Fetched the Filmfare Award for the Best Performance by an Actor in a Leading Role in Tamil films for the Film Gnana Oli

RAGHAVENDRA
1st September 2013, 08:46 AM
ஞான ஒளி ... சில நினைவுகள் ... ஏற்கெனவே முன்னர் இடம் பெற்றிருக்கக் கூடும்...

அது வரை நடிகர் திலகத்தின் திரைப்படங்கள் செய்திருந்த சாதனைகள் அவ்வளவாக வெளியுலகில் தெரியாமல் இருந்திருந்தாலும் அவற்றையும் நினைவூட்டும் வண்ணம் தன்னுடைய box office ஆளுமையை ஆணித்தரமாக வலுவாக நிலைநிறுத்திய ஆண்டாக 1972 அமைந்தது. 20 ஆண்டுகளில் 200 ஆண்டுகள் பேசப் படக் கூடிய சாதனையை நிகழ்த்தி விட்டு அமைதியாக ஆரவாரமின்றி ஆர்ப்பாட்டமின்றி தொடர்ந்து கொண்டிருந்த நடிகர் திலகத்தின் வாழ்க்கையில் 1972 குறிப்பிடத் தக்கதாக அமைந்தது மட்டுமின்றி சிவாஜி ரசிகர்களின் உள்ளத்தில் உவகை பொங்க வைத்து லட்சக்கணக்கான புதிய ரசிகர்களை உருவாக்கிய ஆண்டாகவும் இருந்தது எனலாம்.

ஞான ஒளி திரைப்படத்தைப் பற்றி ஏற்கெனவே கூறியிருந்ததை மீண்டும் நினைவூட்டுவதில் தவறில்லை என எண்ணுகிறேன்.

முதல் வெளியீட்டில் முதல் இரு நாட்களிலேயே தலைநகராம் சென்னையில் 50க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் காலைக் காட்சியாக திரையிடப் பட்ட முதல் படம் ஞான ஒளியாகும். இவை யனைத்தும் சபாக்களின் காட்சிகள் என்பது குறிப்பிடத் தக்கது.

தற்போது திரையரங்குகளில் ஆயிரக்கணக்கான காட்சிகளாக புதுப்படங்கள் திரையிடப் படுவதற்கும் இதற்கும் உள்ள வேறுபாட்டினை புரிந்து கொள்ள வேண்டும். ஞான ஒளி திரைப்படம் அந்தக் காலத்து நடைமுறையில் ரெகுலர் காட்சிகள் எனப்படும் தினசரி 3 காட்சிகள் மட்டுமின்று கூடுதலாக நடைபெற்றது.

அது மட்டுமா, ஒரே சமயத்தில் சென்னை நகர் மற்றும் சுற்று வட்டாரங்களில் நடிகர் திலகத்தின் படங்கள் கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்டவை திரையிடப் பட்டு ஓடியதும் வரலாறு காணாததாகும். இது போன்ற சாதனைகளை நடிகர் திலகத்தால் மட்டுமே நிகழ்த்த முடிந்திருக்கிறது. அதற்கு முன் வெளியான ராஜா வெற்றிகரமாக அரங்கு நிறைந்த காட்சிகளோடு நடைபெற்றுக் கொண்டே இருந்த போதும் ஞான ஒளியும் பிரம்மாண்டமான வெற்றியோடு வசூலை வாரிக்குவித்து வெற்றி நடை போட்டதெல்லாம் சாதாரணமான விஷயமல்ல.

படத்தைப் பொறுத்த மட்டில் ஞான ஒளி திரைப்படத்தின் மூலம் புகழ் பெற்றவர் நடிகர் பாப்ஜி. இவர் ஓர் சகல கலா வல்லுநர். நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என பல்வேறு பரிணாமங்களில் தமிழ்த் திரையுலகில் தன் பங்காற்றியவர். இவரையும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தது ஞான ஒளி திரைப்படம். இவருக்கும் ஜெய கௌசல்யாவிற்கும் இடையே மிக இனிமையான டூயட் பாடல் இருந்தது. முதல் ஓரிரு நாட்களுக்கு இருந்த இப்பாடல் என்ன காரணத்தாலோ எடுக்கப் பட்டு விட்டது. படத்தின் நீளம் ஒரு காரணமாக இருந்திருக்கலாம். வேகத் தடையாக இருந்திருக்கலாம்.

ஆனால் பாடல் அருமையான பாடல். பல்லவி உள்ளம் போ என்றது எனத் தொடங்கும். இப்பாடலின் மெட்டை விட்டு விடாமல் மெல்லிசை மன்னர் மீண்டும் பயன் படுத்தி காலத்தை வென்று நிற்கும் பாடலைத் தந்து விட்டார். அதுவும் எஸ்.பி.பி.குரல், இதுவும் எஸ்.பி.பி.யின் குரல்.

ஞான ஒளி நினைவுகளை மீண்டும் அசை போட வைத்த கோபால் சாருக்கு நன்றி.

Subramaniam Ramajayam
1st September 2013, 09:31 AM
ஞான ஒளி ... சில நினைவுகள் ... ஏற்கெனவே முன்னர் இடம் பெற்றிருக்கக் கூடும்...

அது வரை நடிகர் திலகத்தின் திரைப்படங்கள் செய்திருந்த சாதனைகள் அவ்வளவாக வெளியுலகில் தெரியாமல் இருந்திருந்தாலும் அவற்றையும் நினைவூட்டும் வண்ணம் தன்னுடைய box office ஆளுமையை ஆணித்தரமாக வலுவாக நிலைநிறுத்திய ஆண்டாக 1972 அமைந்தது. 20 ஆண்டுகளில் 200 ஆண்டுகள் பேசப் படக் கூடிய சாதனையை நிகழ்த்தி விட்டு அமைதியாக ஆரவாரமின்றி ஆர்ப்பாட்டமின்றி தொடர்ந்து கொண்டிருந்த நடிகர் திலகத்தின் வாழ்க்கையில் 1972 குறிப்பிடத் தக்கதாக அமைந்தது மட்டுமின்றி சிவாஜி ரசிகர்களின் உள்ளத்தில் உவகை பொங்க வைத்து லட்சக்கணக்கான புதிய ரசிகர்களை உருவாக்கிய ஆண்டாகவும் இருந்தது எனலாம்.

ஞான ஒளி திரைப்படத்தைப் பற்றி ஏற்கெனவே கூறியிருந்ததை மீண்டும் நினைவூட்டுவதில் தவறில்லை என எண்ணுகிறேன்.

முதல் வெளியீட்டில் முதல் இரு நாட்களிலேயே தலைநகராம் சென்னையில் 50க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் காலைக் காட்சியாக திரையிடப் பட்ட முதல் படம் ஞான ஒளியாகும். இவை யனைத்தும் சபாக்களின் காட்சிகள் என்பது குறிப்பிடத் தக்கது.

தற்போது திரையரங்குகளில் ஆயிரக்கணக்கான காட்சிகளாக புதுப்படங்கள் திரையிடப் படுவதற்கும் இதற்கும் உள்ள வேறுபாட்டினை புரிந்து கொள்ள வேண்டும். ஞான ஒளி திரைப்படம் அந்தக் காலத்து நடைமுறையில் ரெகுலர் காட்சிகள் எனப்படும் தினசரி 3 காட்சிகள் மட்டுமின்று கூடுதலாக நடைபெற்றது.

அது மட்டுமா, ஒரே சமயத்தில் சென்னை நகர் மற்றும் சுற்று வட்டாரங்களில் நடிகர் திலகத்தின் படங்கள் கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்டவை திரையிடப் பட்டு ஓடியதும் வரலாறு காணாததாகும். இது போன்ற சாதனைகளை நடிகர் திலகத்தால் மட்டுமே நிகழ்த்த முடிந்திருக்கிறது. அதற்கு முன் வெளியான ராஜா வெற்றிகரமாக அரங்கு நிறைந்த காட்சிகளோடு நடைபெற்றுக் கொண்டே இருந்த போதும் ஞான ஒளியும் பிரம்மாண்டமான வெற்றியோடு வசூலை வாரிக்குவித்து வெற்றி நடை போட்டதெல்லாம் சாதாரணமான விஷயமல்ல.

படத்தைப் பொறுத்த மட்டில் ஞான ஒளி திரைப்படத்தின் மூலம் புகழ் பெற்றவர் நடிகர் பாப்ஜி. இவர் ஓர் சகல கலா வல்லுநர். நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என பல்வேறு பரிணாமங்களில் தமிழ்த் திரையுலகில் தன் பங்காற்றியவர். இவரையும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தது ஞான ஒளி திரைப்படம். இவருக்கும் ஜெய கௌசல்யாவிற்கும் இடையே மிக இனிமையான டூயட் பாடல் இருந்தது. முதல் ஓரிரு நாட்களுக்கு இருந்த இப்பாடல் என்ன காரணத்தாலோ எடுக்கப் பட்டு விட்டது. படத்தின் நீளம் ஒரு காரணமாக இருந்திருக்கலாம். வேகத் தடையாக இருந்திருக்கலாம்.

ஆனால் பாடல் அருமையான பாடல். பல்லவி உள்ளம் போ என்றது எனத் தொடங்கும். இப்பாடலின் மெட்டை விட்டு விடாமல் மெல்லிசை மன்னர் மீண்டும் பயன் படுத்தி காலத்தை வென்று நிற்கும் பாடலைத் தந்து விட்டார். அதுவும் எஸ்.பி.பி.குரல், இதுவும் எஸ்.பி.பி.யின் குரல்.

ஞான ஒளி நினைவுகளை மீண்டும் அசை போட வைத்த கோபால் சாருக்கு நன்றி.

Raghavender sir, your ninaivugal about ZZNAOLI abousoutely correct. apaert from specical shows arranged by all the leading sabhas, the film had a very big opening in maximum screens first time in the history of tamilfilms which was a very UNIQUE RECORD CREATED BY NT THOSEDAYS, STILL MY mind and thoughts are with the film created records. thank you for taking me way back to 1972 golden year of NT.

RAGHAVENDRA
1st September 2013, 05:05 PM
என் விருப்பம் - வெங்கிராம் அவர்களுக்காக

மனோரமா நடிகர் திலகத்துடன் ஜோடியாக நடித்த ஒரே படம் ஞானப் பறவை. யாகவா முனிவரின் ஞான தீட்சையை அடிப்படையாக வைத்து உருவாக்கப் பட்ட கதை. நடக்க இருப்பதை முன்கூட்டியே உணரும் சக்தி கொண்ட பெரியவராக நடிகர் திலகம். தன் மகளின் முடிவை உணர்ந்தும் அதை மனைவியிடம் தெரிவிக்காத சூழ்நிலையில், அந்த மரணம் சம்பவித்த பின்னர் மனைவி கணவனிடம் கோபித்துக் கொள்ளும் சூழ்நிலையில் இப்பாட்டு வருகிறது. வாலியின் வைர வரிகளில் ஒவ்வொரு வார்த்தையும் பொருள் பொதிந்த பாட்டு. கணவரின் அறிவுரையில் ஞானத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக மனைவி பெறுவதாக பாடல் காட்சி. இந்த இடத்தில் தன் கணவரை ராமகிருஷ்ணராகவும், விவேகானந்தராகவும் மகா பெரியவராகவும் உருவகம் செய்கிறாள் மனைவி.

மனோரமாவின் மிகச் சிறந்த நடிப்பிற்கோர் படம் ஞானப் பறவை. அதுவும் இந்தப் பாடல் காட்சியில் தன் விழிகளிலேயே பேசுவது பிரமிப்பூட்டுகிறது. நடிகர் திலகம் ... கேட்கவே வேண்டாம்... ஒவ்வொரு அசைவிலும் ஞானியின் தோற்றத்தை வெளிப்படுத்தும் பாங்கு...

இந்த ஜோடி முன்னமேயே இணைந்து நடித்திருக்கக் கூடாதா என்கிற ஏக்கத்தை உண்டாக்குகிறது. வெளியான போது சரியாக கவனிக்கப் படாமல் போனாலும் இப்போது பார்க்கும் போது இப்படத்தின் மகத்துவம் புரிகிறது.

1991ம் ஆண்டிலும் நானே ராஜா என்று மெல்லிசை மன்னரும் தன்னுடைய சிறந்த குரலுக்கு ஈடு இணையில்லை என நிரூபிக்கும் வண்ணம் டி.எம்.எஸ். அவர்களும் பங்களிப்பினைத் தந்திருக்கும் இப்பாடல் மறக்க முடியாத பாடலாகும்.

http://youtu.be/Mx1tJF-6ZoI

இப்பாடலில் நடிகர் திலகத்தின் நடிப்பில் பல நுட்பமான விஷயங்கள் நம்மை பிரமிப்பில் ஆழ்த்துகின்றன. ஞானப் பெண்ணே என்று சொல்லும் ஒவ்வொரு முறையும் தன் உடல் மொழியில் வித்தியாசமான பாவனைகளைக் காட்டுவதாகட்டும், மனோரமாவின் நெற்றிப் பொட்டில் கை வைத்து அறிவுரை கூறுவதாகட்டும், தரையில் உட்கார்ந்த வாறு விதியின் வலிமையைப் பற்றிக் கூறுவதாகட்டும், Frame by frame தன்னுடைய Supremacyயை அழுத்தமாக Establish செய்து விடுகிறார்.

80களுக்குப் பிறகு நடிகர் திலகத்தைப் பற்றி வந்த பாரபட்சமான விமர்சனங்களுக்கு சரியான சவுக்கடி கொடுத்த படங்களில் மற்றும் காட்சிகளில் இதுவும் ஒன்று.

ஞானப் பறவையாகட்டும், ஞான ஒளியாகட்டும், தன் ரசிகர்களை ஞானிகளாக உயர்த்தியவர் நடிகர் திலகம் என்பதற்கு இப்படமும் ஓர் உதாரணம். தவறாமல் பார்க்க வேண்டிய படம். இப்போது பார்க்கும் போது பல காட்சிகளில் நுணுக்கமாக பல விஷயங்களைத் தந்திருக்கிறார் நடிகர் திலகம்.

ஏனோ தெரியவில்லை, இப்பாடல் என்னை மிகவும் பாதித்த பாடல்களில் ஒன்றாகி விட்டது.

venkkiram
1st September 2013, 06:37 PM
நன்றி திரு ராகவேந்தர்! பார்க்க வேண்டிய படங்களுக்கான பட்டியலில் இதையும் சேர்த்துக் கொள்கிறேன்.

guruswamy
1st September 2013, 08:50 PM
Dear Mr. RAGHAVENDRA Sir,

Though I have been continuously reading this thread I have refrained my self writing because I'm heading towards my goal in education, which i will complete it by December'13. Once I'm successful will start writing about our Legend N.T. coz, this achievement i owe to our N.T.

I kindly request you to help to give me a digital photo copy of N.T. the one which is in the cloud, I WANT THIS WITHOUT THAT WOODS AND THAT DOG, I'm planning to Frame this big in my house.

Please do the needful.

JAIHIND
M. Gnanaguruswamy

guruswamy
1st September 2013, 08:51 PM
Dear Mr. RAGHAVENDRA Sir,

Though I have been continuously reading this thread I have refrained my self writing because I'm heading towards my goal in education, which i will complete it by December'13. Once I'm successful will start writing about our Legend N.T. coz, this achievement i owe to our N.T.

I kindly request you to help to give me a digital photo copy of N.T. the one which is in the cloud, I WANT THIS WITHOUT THAT WOODS AND THAT DOG, I'm planning to Frame this big in my house.

Please do the needful.

JAIHIND
M. Gnanaguruswamy

P.S. Its in page 130

Gopal.s
1st September 2013, 09:20 PM
Deleted.

anm
1st September 2013, 09:31 PM
திரு. ராகவேந்திர அவர்களே!!!!

எனக்கும் மிகவும் பிடித்த படம் ஞான பறவை ; நீங்கள் சொல்லியுள்ளது அத்தனையும் உண்மை.அவரது உடல் மொழி ஒரு உண்மையான ஞானியைப் போல்தான் இருக்கும்.நான் ஒருஆன்மீகக் குருவை பார்த்துள்ளேன், பழகியுள்ளேன்; அச்சாக நமது NT அப்படியே ஒரு ஆன்மிக வாதியைப் பிரதி பலித்துள்ளார்; எப்படி இவரால் மட்டும் இப்படிக் கூடு விட்டு கூடு பாயமுடிகிறதோ ?

உண்மையிலேயே, நமது Randor Guy போன்ற அறிவு ஜீவிகள் எத்தனை அறிவிலிகள் என்று நான் அவ்வப்போது எண்ணிப் பார்பதுண்டு !!!!

அவரோ கடல், நம்மால் அவரின் பரிமாணத்தை பார்க்க முடிவதோ, ஒரு கை அளவு கூட இல்லை !!!!!

ஆனந்த்

RAGHAVENDRA
1st September 2013, 10:48 PM
நன்றி திரு ராகவேந்தர்! பார்க்க வேண்டிய படங்களுக்கான பட்டியலில் இதையும் சேர்த்துக் கொள்கிறேன்.

Yes, Venkiram. The film may not be a worthwhile movie as a package, but the patches of scenes of NT would steal your heart, particularly in the present context. His somewhat weak physique (I do not know how to describe, this word may be inappropriate), suits this character as a T. He has very well brought in the highly self-confident personality of a saint in his portrayal. அருமையான வெளிப்பாட்டில் அந்தப் பாத்திரம் நம் கண்முன்னே நடமாடுகிறது என்பது உண்மை. Mind you, there is practically nil exaggeration in his presentation, which explains his control over his body language, tone and gait.

There is one contrived scene where the youngsters ask him to describe the dance form as an art, for which he replies with his bhavas. It is a noteworthy and perfectly suits his skill. Throughout the film he has underplayed the character and given what is required for, thus proving once again that he is THE MASTER.

Instead of me writing further, I shall be happy to have your views after watching the film.

There are many disappointing factors in the film as a product, but Nadigar Thilagam, sees that this is a selling product.

RAGHAVENDRA
1st September 2013, 10:53 PM
Anand,
Happy to see your post here.
தங்களுடைய எண்ண ஓட்டத்திலும் ஞானப் பறவை தனியிடம் பெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. தற்போது இப்படத்தைப் பார்க்கும் போது பல காட்சிகளில் நடிகர் திலகத்தின் உடல் மொழி, பாவனை, நடை உடை போன்ற அனைத்துமே பரவசப் படுத்துகின்றன. அது மட்டுமின்ற உடல் நலம் குன்றியிருந்த கால கட்டத்தில் அதையே தன்னுடைய மூலதனமாகக் கொண்டு இப்பாத்திரத்தை அவர் உருவகப் படுத்தியிருக்கிறார் என்பதை உணர்கின்ற போது பிரமிப்பு பல மடங்காகிறது.

இது வரை இப்படத்தைப் பார்க்காதவர்கள் அவசியம் பார்க்கவும்.

RAGHAVENDRA
1st September 2013, 10:54 PM
குருசாமி சார்
அந்த நிழற்படம் வேறோர் இணைய தளத்தில் வேறோர் நண்பர் தரவேற்றி, பகிர்வுக்காக இங்கே பதியப் பட்டது. அதனுடைய ஒரிஜினல் நிழற்படம் கிடைத்தால் அதிலிருந்து நாம் விரும்பியவாறு மாற்றிக் கொள்ளலாம்.

goldstar
2nd September 2013, 09:31 AM
http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcSqXwYhakoMqBS-gw9C0HYyJAwiyzEFhPGzik80d0Z0Gww90wxa

goldstar
2nd September 2013, 09:33 AM
http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcRQXEspYnGfPl7iDIQ87gnFOQJ-jKWOmwu8BDczLTZG1cd97MRa

JamesFague
2nd September 2013, 10:36 AM
Hope Mr Antony will bring Mr Neyveli Vasudevan Sir here.

KCSHEKAR
2nd September 2013, 11:03 AM
ஞான ஒளி-1972

ஒரு முரட்டு தகப்பனின் மகனான அந்தோணி, விவரம் தெரிந்த வயதில் அனாதையாக பட்டு ஒரு கிறிஸ்துவ பாதிரியால் ஆதரிக்க பட்டு ஓரளவு religious institution பாதிப்பில் ,அதுவும் பாதிரியாரின் மேல் உள்ள பக்தி என்ற ஒற்றை இலக்கில் பயணித்தாலும் ஆதார குணங்களை இழக்காதவன் அந்தோணி.
(தொடர்வேன்).

டியர் கோபால் சார்,
அந்தோணியைப் பற்றி சில வார்த்தைகளில் அழகாகக் குறிப்பிட்டிருக்கிறீர்கள்.

KCSHEKAR
2nd September 2013, 11:37 AM
பிரபல தயாரிப்பு நிறுவனங்களின் முதல் வண்ணப்படங்கள்:
(இவர்கள் அனைவரும் தங்கள் முதல் வண்ணப்படங்களை நடிகர்திலகத்தை கதாநாயகனாக வைத்தே தயாரித்தனர்)


டியர் கார்த்திக் சார்,
தகவல்கள் அருமை. நன்றி.

நடிகர்திலகத்தின் கலைப் பயணத்தில் முதன்முதலாய்....... என்ற சொற்றொடொருக்கு பலவகையில் உதாரணமாகத் திகழ்ந்திருக்கிறார் என்பதுதான் வரலாறு. ஏற்கனவே திரியிலும் அதுபற்றி அலசப்பட்டிருக்கிறது.

எனக்குத் தெரிந்த சில:
பாதுகாப்பு - கதை சொல்லப்பட்ட பாணியில் முதன்முதலாக Fast Forward Technique

பட்டிக்காடா பட்டணமா - 1 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை புரிந்த ஒரே கறுப்பு-வெள்ளை காவியம்

ராஜராஜ சோழன் - தமிழில் முதல் சினிமாஸ் ஸ்கோப் படம்

அந்தமான் காதலி - அந்தமானில் படமாக்கப்பட்ட முதல் தமிழ்ப் படம்

தச்சோளி அம்பு - மலையாளத்தின் முதல் சினிமாஸ் ஸ்கோப் படம்

வணங்காமுடி - முதன்முதலில் திரையரங்கில் 80 அடி உயர கட்-அவுட் வைக்கப்பட்ட படம்

வீரபாண்டிய கட்டபொம்மன் - லண்டனில் கலர் பிராசஸிங் செய்த முதல் தமிழ்ப் படம்

தெய்வமகன் - ஆஸ்கார் விருதுக்கு சிபாரிசு செய்யப்பட்ட முதல் தமிழ்ப்படம்.

சிவந்தமண் - ரோம், இத்தாலி, சுவிட்சர்லாந்து நாடுகளில் படமாக்கப்பட்ட முதல் தமிழ்ப்படம்.

சிரஞ்சீவி - கப்பலிலேயே படமாக்கப்பட்ட முதல் படம்

இப்படி சொல்லிகொண்டே போகலாம். சாதனையின் மறுபெயர்தான் நம் நடிகர்திலகம் என்றால் மிகையாகாது.

Gopal.s
2nd September 2013, 01:52 PM
ஞான ஒளி-1972

நான் சற்றே நேரம் எடுத்து சிலவற்றை விஸ்தாரமாய் விளக்கி விட்டு நடிகர்திலகத்தின் நடிப்பு வெள்ளத்தில் நீந்துவேன். தயவு செய்து உங்கள் புரிதல் பற்றிய உடன் வினை-எதிர்வினை இன்றியமையாதது.

பிறப்பில் தொடங்கி இறப்பில் முடியும் மனித வாழ்க்கை ,முடிந்து விடாத நிலையில் தொடர்வதை இருத்தல் என்று குறிப்போம். இருத்தல் என்பதன் சிறப்பம்சம் மானுட வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தை படைப்பதுவே ஆகும்.அவ்வப்போது அந்த அர்த்தத்தை புதுப்பித்து ,அதற்குண்டான பொறுப்பை ஏற்க வேண்டியுள்ளது.வாழ்க்கையின் மதிப்பு இடை விடாத முயற்சியில்தான் உள்ளது.நம் வாழ்க்கைக்கு ஒரு ஞாயம் தானாக கிடைப்பதில்லை என்றாலும்,தொடர்ந்த தங்களது செயல்கள்தான் அதை அளிக்க இயலும்.சுதந்திரமாக இருக்கும் மனிதனால்தான் தன் இருத்தலுக்குண்டான பொறுப்பை ஏற்க இயலும்.இந்த அடிப்படையில் இயங்கும் செயல்பாடுகள் ,ஒட்டுமொத்தமான அவன் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தை அளிக்கும்.மற்றவர் எண்ணங்களுக்கும் ,அவர்களுக்கும் தவிர்க்க முடியாத போராட்டம் இருந்து கொண்டே உள்ளது.ஒருவர் சுதந்திரம் ,மற்றவர் சுதந்திரத்தை அழுத்தி, அழித்து விட எத்தனிக்கிறது.

ஒரு அனாதையான மனிதன் வரம்புகளற்ற சுதந்திரம் பெற்றிருக்கிறான்.அவனுடைய பொறுப்புகளும் அதிகம்.அவனுடைய அவசிய தேவைகளுக்கு கூட அவனாகவே செயல் பட வேண்டி உள்ளது.(ஒரு சராசரி மனிதனுக்கு அவசிய தேவைகளுக்கு குடும்பம் பொறுப்பேற்கிறது,ஒழுக்க நெறிகள் வரையறுக்க பட்டு சுதந்திரம் எல்லைக்குள் கட்டமைக்க படுகிறது.) அநாதைகளோ தங்கள் morality என்பதை கூட தாங்களே வகுக்க வேண்டும். அவர்கள் தங்கள் நோக்கத்திற்கு உகந்த master morality என்பதை வகுத்து slave morality என்பதை தவிர்க்கும் கட்டாயத்துக்கு ஆட்படுகிறார்கள்.போலி மனசாட்சியை தவிர்க்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆட்படுகிறார்கள்.

ஒரு முரட்டு தகப்பனின் மகனான அந்தோணி, விவரம் தெரிந்த வயதில் அனாதையாக பட்டு ஒரு கிறிஸ்துவ பாதிரியால் ஆதரிக்க பட்டு ஓரளவு religious institution பாதிப்பில் ,அதுவும் பாதிரியாரின் மேல் உள்ள பக்தி என்ற ஒற்றை இலக்கில் பயணித்தாலும் ஆதார குணங்களை இழக்காதவன் அந்தோணி.

Typical Behaviours of an orphan-

1)Poor Self Regulation
2)Emotional Volatility.
3)Act on Impulse.
4)Immediate Urge for self-gratification.
5)Mixed Maturity levels.
6)Self parenting syndromes-Taking justice in their hands.
7)Learned Helplessness
8)Extreme Attention seeking.
9)Indiscriminate friendliness.
9)Absessive compulsive Tendencies.
10)Idiosynchrasies.


மேற்கூறிய எந்த விஷயங்களும் என் மூளையில் உதித்தவை அல்ல. இவையெல்லாம் பிரபல மெடிக்கல் journals இல் இருந்து post -orphanage behaviour பற்றி திரட்ட பட்ட சில points .

அந்தோணி ஒரு ஒழுங்கற்ற கோபகார தகப்பனுக்கு பிறந்து ஏழ்மையில் வாழ்ந்த போது இல்லாத பிரச்சினைகள், தகப்பன் தன்னை அடித்தவனை வெட்டி விட்டு தண்டனை பெற்று ,தாயையும் இழக்கும் போது ,அவன் trauma மற்றும் அநாதை நிலை ,பாதிரியாரால் படிப்பறிவின்றி , மத நம்பிக்கைகள் மட்டும் சொல்லி வளர்க்க பட்டு ஆதரிக்க பட்டாலும், அவன் அடிப்படை குணங்கள் மாறாமலே வாழும் ஒருவன். பாதிரியாரால் கூட அவன் அடிப்படை குணங்களை மாற்ற முடியாமல் ,பெயில் கொடுத்து போலீஸ் ஸ்டேஷன் போய் அடிக்கடி அழைத்து வந்து damage control தான் செய்ய முடிந்திருக்கிறது.

தனக்கென்று இலட்சியங்கள் இல்லாத அந்தோணி,பாதிரியாரின் லட்சியங்களை சுவீகரிக்கிறான்.. அது சார்ந்த கோட்பாடுகள் மட்டுமே ,அவன் master - morality என்பதை தீர்மானிக்கிறது.தொடர்ந்து தனக்கென்று அமைத்து கொண்ட உறவுகளை இழந்தோ,உறவுகள் சிதைந்தோ அவனின் மற்ற எல்லா ஆசைகளையும் தகர்க்கிறது.

poor self regulation and emotional volatility என்பது முதல் காட்சியில் இருந்தே வெளிபடுத்த படும். மற்ற கதாபாத்திரங்களின் வசனங்களும் அதையே நமக்கு சொல்லும். சிவாஜி அதை இளமையில் ஒரு விதமாகவும், நடு வயதில் ஒரு விதமாகவும், பணக்கார வயதான அருணில் வேறு விதமாகவும் வெளிப்படுத்தும் விதம் பிறகு விவரமாக அலச படும்.
தன் மகளிடம் கூட அவர் ஆசை brolier கோழி போல அவள் வளருவதே தான் தன் பாதிரி சார்ந்த விருப்பங்களை நிறைவேற்றவே ,அவளுக்கு மற்ற ஆசைகள் தவிர்க்க பட வேண்டும் என்று மகளின் விருப்பங்களை சாராத முரட்டு தனமான ஆதிக்க அன்புதான். ஊரில் அநியாயங்களை தட்டி கேட்பதில் சட்டத்தை கையில் எடுக்கும் புத்தி ,மகளுக்காக செய்யும் செயல்களிலும் வெளிப்பட்டு ,நினைத்ததை நினைத்த படி அப்பொழுதே செய்ய துடிக்கும் விளைவுகள் பாராத உணர்வெழுச்சி நிலை.மகள் தவறி விட்டாளே என்பதை விட கனவுகளை தகர்த்த கொடுமைதான் வாழைகளுக்கு யமனாகிறது.சில சமயம் அதீத புத்தியை காட்டி அதிசயிக்க வைத்தாலும், அப்பாவித்தனம் தொனிக்கும், சமயா சந்தர்ப்பம் தெரியாமல் எட்டி பார்க்கும் விளையாட்டு தனம், சவாலை ஜெயிக்க விரும்பும் (அல்லது ஜெயித்து விட்ட) அசட்டு தனம் கலந்த சவடால்கள், சிறு சிறு தற்காலிக வெற்றிகளில் இன்பம் காணும் mixed maturity,learned helplessness ,Idiosynchrasies எட்டி பார்க்கும் இடங்கள் ஏராளம்.

obsessive compulsive நிறைந்த தோள் தடவும் mannerism ,யாராவது ஒன்றை அழுத்தி சொல்லும் போது அதற்கு கூடுதல் அழுத்தம் கொடுப்பது (வரேன்டாடாடா )என இடது கை aggressive முரடனுக்கு இந்த படத்தில் நடிப்பிலும் , திரைக்கதை அமைப்பிலும் கொடுக்க பட்டிருக்கும் அற்புதமான psychology கொண்ட ஒத்திசைவு ,சிவாஜி இந்த பாத்திரத்தில் கூடு விட்டு கூடு பாய்ந்து ஒவ்வொரு அசைவிலும் நெளிவிலும் வெளிபடுத்தும் அதிசயத்தை எப்படி வியப்பது?

துளி கூட தன் நண்பனின் லட்சியங்களுக்கு,நம்பிக்கைக்கு,எதிர்காலத்துக்க ு உலை வைப்பதில் குற்ற உணர்ச்சி கொள்ளாமல், அவனை ஜெயித்து விட்ட தொனியில் சவால் விட்டு உலவும் அந்தோணியை எப்படி விவரிப்பது?

(தொடர்வேன்)

Rangarajan nambi
2nd September 2013, 04:44 PM
ஞான ஒளி(தொடர்ச்சி)

மேற்கூறிய எந்த விஷயங்களும் என் மூளையில் உதித்தவை அல்ல. இவையெல்லாம் பிரபல மெடிக்கல் journals இல் இருந்து post -orphanage behaviour பற்றி திரட்ட பட்ட சில points .

அந்தோணி ஒரு ஒழுங்கற்ற கோபகார தகப்பனுக்கு பிறந்து ஏழ்மையில் வாழ்ந்த போது இல்லாத பிரச்சினைகள், தகப்பன் தன்னை அடித்தவனை வெட்டி விட்டு தண்டனை பெற்று ,தாயையும் இழக்கும் போது ,அவன் trauma மற்றும் அநாதை நிலை ,பாதிரியாரால் படிப்பறிவின்றி , மத நம்பிக்கைகள் மட்டும் சொல்லி வளர்க்க பட்டு ஆதரிக்க பட்டாலும், அவன் அடிப்படை குணங்கள் மாறாமலே வாழும் ஒருவன். பாதிரியாரால் கூட அவன் அடிப்படை குணங்களை மாற்ற முடியாமல் ,பெயில் கொடுத்து போலீஸ் ஸ்டேஷன் போய் அடிக்கடி அழைத்து வந்து damage control தான் செய்ய முடிந்திருக்கிறது.

தனக்கென்று இலட்சியங்கள் இல்லாத அந்தோணி,பாதிரியாரின் லட்சியங்களை சுவீகரிக்கிறான்.. அது சார்ந்த கோட்பாடுகள் மட்டுமே ,அவன் master - morality என்பதை தீர்மானிக்கிறது.தொடர்ந்து தனக்கென்று அமைத்து கொண்ட உறவுகளை இழந்தோ,உறவுகள் சிதைந்தோ அவனின் மற்ற எல்லா ஆசைகளையும் தகர்க்கிறது.

poor self regulation and emotional volatility என்பது முதல் காட்சியில் இருந்தே வெளிபடுத்த படும். மற்ற கதாபாத்திரங்களின் வசனங்களும் அதையே நமக்கு சொல்லும். சிவாஜி அதை இளமையில் ஒரு விதமாகவும், நடு வயதில் ஒரு விதமாகவும், பணக்கார வயதான அருணில் வேறு விதமாகவும் வெளிப்படுத்தும் விதம் பிறகு விவரமாக அலச படும்.
தன் மகளிடம் கூட அவர் ஆசை brolier கோழி போல அவள் வளருவதே தான் தன் பாதிரி சார்ந்த விருப்பங்களை நிறைவேற்றவே ,அவளுக்கு மற்ற ஆசைகள் தவிர்க்க பட வேண்டும் என்று மகளின் விருப்பங்களை சாராத முரட்டு தனமான ஆதிக்க அன்புதான். ஊரில் அநியாயங்களை தட்டி கேட்பதில் சட்டத்தை கையில் எடுக்கும் புத்தி ,மகளுக்காக செய்யும் செயல்களிலும் வெளிப்பட்டு ,நினைத்ததை நினைத்த படி அப்பொழுதே செய்ய துடிக்கும் விளைவுகள் பாராத உணர்வெழுச்சி நிலை.மகள் தவறி விட்டாளே என்பதை விட கனவுகளை தகர்த்த கொடுமைதான் வாழைகளுக்கு யமனாகிறது.சில சமயம் அதீத புத்தியை காட்டி அதிசயிக்க வைத்தாலும், அப்பாவித்தனம் தொனிக்கும், சமயா சந்தர்ப்பம் தெரியாமல் எட்டி பார்க்கும் விளையாட்டு தனம், சவாலை ஜெயிக்க விரும்பும் (அல்லது ஜெயித்து விட்ட) அசட்டு தனம் கலந்த சவடால்கள், சிறு சிறு தற்காலிக வெற்றிகளில் இன்பம் காணும் mixed maturity,learned helplessness ,Idiosynchrosies எட்டி பார்க்கும் இடங்கள் ஏராளம்.

obsessive compulsive நிறைந்த தோள் தடவும் mannerism ,யாராவது ஒன்றை அழுத்தி சொல்லும் போது அதற்கு கூடுதல் அழுத்தம் கொடுப்பது (வரேன்டாடாடா )என இடது கை aggressive முரடனுக்கு இந்த படத்தில் நடிப்பிலும் , திரைக்கதை அமைப்பிலும் கொடுக்க பட்டிருக்கும் அற்புதமான psychology கொண்ட ஒத்திசைவு ,சிவாஜி இந்த பாத்திரத்தில் கூடு விட்டு கூடு பாய்ந்து ஒவ்வொரு அசைவிலும் நெளிவிலும் வெளிபடுத்தும் அதிசயத்தை எப்படி வியப்பது?

துளி கூட தன் நண்பனின் லட்சியங்களுக்கு,நம்பிக்கைக்கு,எதிர்காலத்துக்க ு உலை வைப்பதில் குற்ற உணர்ச்சி கொள்ளாமல், அவனை ஜெயித்து விட்ட தொனியில் சவால் விட்டு உலவும் அந்தோணியை எப்படி விவரிப்பது?

(தொடர்வேன்)

Gopal , A lovely series of analysis ! This movie I will cherish and close to my heart. A wonderful mix of emotional performance , top class work by Nadigar Thilagam. Looking forward to your further posts.

JamesFague
2nd September 2013, 06:08 PM
Mr Gopal Sir,

It is a treat for all the NT's Fans of the analysis of Mr Antony cum Mr Arun. Oh what a movie.
It is a class act by our NT. Awaiting your further analysis of Mr Arun.

kalnayak
2nd September 2013, 06:43 PM
கோபால் சார்,

ஞான ஒளியில் கலக்கிக் கொண்டிருக்கும் தங்களுக்கு வாழ்த்துக்கள். பல முறை பார்த்திருந்தாலும், அடுத்த முறை பார்க்கும்போதும், புதிதாக இந்த ஆண்டனி-யும், அருண்-உம் எதையாவது வழங்கிக் கொண்டுதானிருக்கிறார்கள். அதை நீங்கள் அக்கு வேறு ஆணி வேறாக அலசி எழுதி அதை நாங்கள் படிக்கும் போது சுகமாக உள்ளது.
ஒன்றிபோவதைப் பற்றியும் கொஞ்சம் சொன்னீர்களானால் பாவ மன்னிப்பு வாங்கிப் போவேன்.

Richardsof
2nd September 2013, 07:16 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/d8863b80-8209-4fa3-b875-d7dbe8c7facc_zps81245d1c.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/d8863b80-8209-4fa3-b875-d7dbe8c7facc_zps81245d1c.jpg.html)

Gopal.s
2nd September 2013, 07:40 PM
Deleted-

Gopal.s
2nd September 2013, 07:44 PM
கார்த்திக் சார்,
வாழ்த்துக்கள். எங்களுக்கு inspiration ஆக அமைந்த நீங்கள் இந்த மாதிரி ஏனோ தானோ என்றா லேண்ட்மார்க் பதிவை இடுவது? நம் திரியில் முத்திரை பதிவாகியிருக்க வேண்டாமா?

Gopal.s
2nd September 2013, 09:01 PM
ஞான ஒளி(தொடர்ச்சி)

இந்த படம் வெளிவரும் போது நடிகர்திலகம் மாநகரம்,நகரம்,பேரூர்,சிற்றூர்,கிராமம்,குக்கிர ாமம் அனைத்திலும் முடிசூடா மன்னன். வசூல் சக்கர வர்த்தி. சூப்பர் ஸ்டார். அதனால் இரும்பு திரை, தெய்வ பிறவி காலம் போல doing justice to the role என்று சென்று விட முடியாது. ஒரு பாத்திரத்தை உள்வாங்கி,அதன் செயல்பாடுகள் தன்மைகளை நிர்ணயித்து ,வெளியீட்டு முறையில் பாத்திரத்தின் தன்மையும் வேறு படாமல் scene stealing ,scene capturing gestures ,ஸ்டைல்,எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் சில antics எல்லாவற்றையும் கலந்து கொடுத்து அனைத்து தரப்பு ரசிகர்களையும் வசீகரித்து ஈர்த்தே ஆக வேண்டும்.படம் classic வகை என்றால் அந்த class maintain பண்ண பட்டே ஆக வேண்டும். இந்த ரசவாதம் ஞான ஒளியில் நிகழ்ந்தது.

இடைவேளைக்கு பிறகு திரைக்கதை cat -mouse cold war ,ரசிகர்களை கட்டி வைத்து,அந்த பாத்திர தன்மைகள் நீர்க்காமலும் பார்த்து கொண்ட அதிசயமும் நிகழ்ந்தது.

நடிகர்திலகம் அழகு, ஈர்ப்பு,ஆண்மை,கம்பீரம்,காந்த பார்வையுடன் கச்சிதமான உடலமைப்பு கொண்டு ரசிகர்களை கட்டி போட்ட காலகட்டம். இந்த படத்தில் இளைஞனாக half pant ,ஒரு கண்ணிழந்த நடுத்தர வயது, முதிய வயது கனவான் அனைத்து தோற்றங்களிலும் அவ்வளவு வசீகரம் இந்த திராவிட மன்மதனிடம். இப்போது கூட ராகவேந்தர் போட்ட படங்களை கிட்டத்தட்ட அரை மணி வைத்த கண் வாங்காமல் ரசித்தேன்.உலகிலேயே மிக சிறந்த ஆண்மகனாக ஒரு தமிழன் இருந்ததில் எனக்கு பெருமையே.

நடிகர்திலகத்தின் பிரத்யேக திறமைகளை கொண்டு வரும் படி அமைந்த படங்களுள் ஒன்று ஞான ஒளி. உதாரணம் மனைவி இறந்த செய்தி தெரியாமல் அவர் சவ பெட்டி செய்வதில் மும்முரமாக , பாதிரி படிப்படியாக ஏழு கேள்விகளில் முழு விஷயம் விளங்கும் படி செய்வார்.முதல் நிலை சந்தோசம் (குழந்தை பிறந்ததில்),இரண்டாவது குறை(தான் அருகில் இல்லாதது),மூன்றாவது மனைவியின் உடல் நிலை பற்றி சிறிய சந்தேகம், நான்காவது ஏதோ நடந்து விட்டதோ என்ற குழப்பம், ஐந்தாவதில் பாதிரி ஏதோ மறைக்கிறார் என்ற ஐயம் கலந்த வருத்தம், ஆறாவது நிலை நடந்ததை ஜீரணித்து உள்வாங்கும் பிரமையான நிலை, ஏழாவது துக்கத்தை உணர்ந்து கலங்கும் துடிக்கும் நிலை .இவையில் மற்ற நடிகர்களால் முதல், இறுதி ஆகியவற்றுக்குத்தான் முகபாவம் காட்டியிருக்க முடியுமே தவிர படி படியாக குறுகிய தொடர்ச்சியான கால நிலையில் ஏழு வித துரித மாற்ற பாவங்கள்!!!! குறித்து கொள்ளுங்கள்- கடவுள் தானே பூமிக்கு வந்து முயன்றாலும் முடியாது.

அந்தோணியின் rawness அந்த காதல் காட்சிகளிலேயே பளிச்சிடும். முதலிரவில் explicit ஆக திரும்பி நிற்க சொல்லி ரசிப்பது அந்த பாத்திரத்தின் ஆதார குணங்களுடன் இணைந்த காம வெளியீடு.சிறு சிறு வெளியீடுகளில் பின்னுவார். ராணியை திட்டி கொண்டே தொடர்ந்து வரும் போது,சர்ச்சுக்கு வருபவர் ஒருவருக்கு மிகையான சால்ஜாப்பு சலாம் போடுவதை சொல்லலாம்.

நான் பார்த்த உக்கிர ஆக்ரோஷ காட்சிகளில் காவல் தெய்வத்திற்கு அடுத்து இந்த படம்தான். கட்டு படுத்த படும் போது எட்றா என்று பாய யத்தனிப்புடன், கடைசியில் எதையும் ஏற்க முடியாத இயலாமையில் வாழைகளை வெட்டி சாய்க்கும் உக்கிரத்திற்கு இணையானதை இந்திய திரை கண்டதில்லை.

பாதிரி இறந்து கிடக்கும் வேளையிலும் , தப்பி போக முயலும் தன்னிடம் நண்பன் துப்பாக்கி நீட்டும் போது, நான்தான் குண்டை எடுத்துட்டேனே என்று குதூகல மனநிலையில் பேசும் கட்டம் இந்த பாத்திரத்தின் idiosynchrasy மனநிலையும் காட்டி ரசிகர்களையும் வசீகரிக்க முடியும் என்பதற்கு உதாரணம். தன்னிடம் இவ்வளவு உரிமையும் அக்கறையும் மிகுந்த நண்பனுக்கு ,தான் தப்பி சென்று இழைத்த துரோகத்தை பற்றிய சிறு மனசாட்சி தொந்தரவு கூட இன்றி, தன்னை திரும்ப பிடிக்க அலைவதில்,இறந்து விட்டதை நினைத்த மகளை உயிரோடு கண்டும் பேச முடியாத நிலைக்கு தன்னிரக்கம் கொண்டு, முடிந்தால் பிடித்து பார் என்ற சவாலை விட்டு சிறு சிறு தற்காலிக வெற்றிகளையும் explicit ஆகவே மகிழ்ந்து ரசிப்பார்.

இந்த மனநிலை நான் முன்னர் குறிப்பிட்ட mixed maturity கொண்ட idiosynchrasy வகை பட்டது.நடிகர்திலகம் நண்பனின் சந்திப்பு காட்சிகளில் ரசிகர்களை குதிக்க வைப்பார். சாத்துக்குடி பிழியும் காட்சியில் ,திடீரென்று எதிர்பாராமல் கண்ணாடியை உருவுவதில்,கணநேர கோபம் கலந்த ஆச்சர்யத்தை மீறி ,ஒரு விளையாட்டு தனத்துடன் தனது பார்வை திறனை வெளிபடுத்துவதாகட்டும்,ரேகைக்காக டம்ளர் மறைக்கும் நண்பனுடன் அதை குத்தி கையுறையை கழற்றும் காட்சிகள் பாத்திர தன்மை கெடாமல் சுவாரஸ்யம் கூட்டுவதற்கு உதாரணங்கள். லாரென்ஸ் தன்னை வெளியேற விடாமல் trap பண்ணி விட அவர் பேசும் monologue ஒரு வேதனை கூடிய விரக்தி,மிஞ்சி நிற்கும் சவடால் தன்மை, ஒரு uneasy sensation (நம்பிக்கை குலைவு), அத்தனையும் வெளிப்படும் உரத்து. ஆனால் அதனிடையிலும் அந்த பாத்திரம் அத்தனை தீவிரத்தின் நடுவிலும் சொல்லும் நல்ல வேளை பாதர் நீங்க இப்ப உயிரோட இல்லை .....

மகள் தேடி வந்த பரபரப்பில் மேரி என்று excite ஆகி தன்னிலை உணர்ந்து சாதாரணமாய் மேரி என்று மாற்றும் தன்மை,தன் மகளிடம் அடைந்த ஏமாற்றத்தை சொல்லி,அவளை குத்தி விட்டோமோ என்று ஆறுதல் படுத்தும் இடம், அவசர அவசரமாய் இருப்பதையெல்லாம் அள்ளி எடுத்து fridge கதவை உதைத்து சாத்தும் இன்ப அலைவு,தன்னுடைய பேத்திககாவது எல்லாம் சிறப்பாக செய்ய விழையும் தொண்டை அடைக்க கமரும் வசன வெளிப்பாடு,வேண்டாம்மா வயசாயிடுச்சு என்ற இனியும் ஓடி அலைய முடியாத விரக்தி வெளிப்பாடு என்று மகளை சந்திக்கும் கட்டத்தில் நடிகர்திலகம் விஸ்வரூபம் எடுப்பார்.

இந்த படத்தை பற்றி இன்னும் எவ்வளவோ எழுத கைகள் துடித்து கொண்டே உள்ளது. பிறகு ஒரு நாள் ஒவ்வொரு கணம்,காட்சியையும் விளக்கி எழுதுவேன் என்று உறுதி தந்து இப்போது விடை பெறுகிறேன்.

Harrietlgy
2nd September 2013, 09:24 PM
அருமை மிக மிக அருமையான விவரிப்பு மீண்டும் ஞானஒளி படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவல். நன்றி கோபால் சார். எப்படித்தான் நுணுக்கமாக அலச முடிகிறதோ? வியப்பில் இருக்கிறேன்.

RAGHAVENDRA
2nd September 2013, 10:28 PM
கார்த்திக் சார்
2000 பதிவுகள் கடந்த தங்களுக்கு என் உளமார்ந்த நல்வாழ்த்துக்கள். மென்மேலும் பல சாதனைகளை இது போல் தாங்கள் புரிய வேண்டும்.

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/unspecific/karthik2000congrats_zps82e1ca2e.jpg

Murali Srinivas
3rd September 2013, 12:09 AM
கோபால்,

ஞான ஒளி அந்தோனி அருண் கதாப்பாத்திரங்கள் பற்றிய ஒரு அலசலை மனோதத்துவ பின்புலத்தில் அமைத்து தொடக்கம் முதல் இறுதி வரை அது எப்படி manifest ஆகிறது என்பதை நீங்கள் விவரித்த விதம் மிக அற்புதமாகவே அமைந்திருகிறது. இந்த திரியின் வலிமையான பதிவாளராக உருவெடுத்துள்ள உங்களுக்கு வாழ்த்துக்கள். வாசு மிக மிக ஆனந்தம் அடைந்திருப்பார் என நினைக்கிறேன்.

அடுத்து ராஜநீதி படைக்கப் போகும் மூக்கையாவை வரவேற்க காத்திருக்கிறோம்.

அன்புடன்

Subramaniam Ramajayam
3rd September 2013, 05:36 AM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/d8863b80-8209-4fa3-b875-d7dbe8c7facc_zps81245d1c.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/d8863b80-8209-4fa3-b875-d7dbe8c7facc_zps81245d1c.jpg.html)

CONGRATS MR KARTIK for having achieved 2ooo landmark. wonderful
postings especially about 70-80 NT LANDMARKS. best wishes to score many more goals. all the very best,VALARGA NT FAME AND GLORY.

KCSHEKAR
3rd September 2013, 10:05 AM
2000 ஆவது பதிவைக் கடந்திருக்கும் திரு.கார்த்திக் சார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

kalnayak
3rd September 2013, 10:57 AM
கார்த்திக் சார்,

முன்னூறு பதிவை தாண்ட விட மாட்டேன்கிறார்கள். 2000 கண்ட உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

mr_karthik
3rd September 2013, 11:09 AM
எனது 2000 பதிவுக்கு வாழ்த்துக்களை அள்ளி வழங்கிய அன்புச்சகோதரர்கள் கோபால் சார், ராகவேந்தர் சார், வினோத் சார், ராமஜெயம் சார், சந்திரசேகர் சார் மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் என் இதயம் கனிந்த நன்றிகள்.

அருமையான டிசைன் வடிவமைத்த ராகவேந்தர் சார், வினோத் சார் ஆகியோருக்கு மிக்க நன்றி. உண்மையில் வினோத் அவர்களின் வாழ்த்துக்களை காணும்வரை இது என் நினைவுக்கே வரவில்லை. அதனால்தான் சிறப்புப்பதிவு எதையும் இடவில்லை. (அப்படியே இட்டிருந்தாலும், அது கோபால் சாரின் 'ஞான ஒளி' சுனாமியில் அடித்துச்செல்லப் பட்டிருக்கும். மனிதர் என்னமாய் எழுதுகிறார்...!!!!!!!!!!!) .

எல்லோரும் மிகக்குறுகிய காலத்தில் பல ஆயிரம் பதிவுகளை சர்வ சாதாரணமாக கடந்து செல்லும்போது, 2005-ல் திரியில் நுழைந்த நான் இப்போதுதான் 2000-த்தை தொட்டிருப்பது எந்த சிறப்பும் இல்லாத ஒன்று என்றே கருதுகிறேன்.

இந்த தருணத்தில் திரு. சிலோன் மனோகர் தெரிவித்த கருத்துதான் என் நினைவுக்கு வருகிறது. ஒருமுறை மேடையொன்றில், நிகழ்ச்சித்தொகுப்பாளர் ஒருவர் சிலோன் மனோகரிடம் அவருக்கு புகழைத்தந்த 'சுராங்கனி', 'சின்னமாமியே' பாடல்களை பாடுமாறு கேட்டபோது, மனோகர் "எல்லா பாடகர்களும் 40 ஆயிரம், 50 ஆயிரம் பாடல்கள் பாடியிருக்க, நீ 40 ஆண்டுகளாக நாலே பாடல்களை வைத்துக்கொண்டு வண்டி ஓட்டிக்கொண்டிருக்கிராயே என்று கேட்பது போலுள்ளது" என்று பதிலளித்தார். என் நிலையும் இப்போது அதுதான்.

வாழ்த்திய இதயங்களுக்கு நன்றி....

mr_karthik
3rd September 2013, 11:23 AM
அன்புள்ள கல்நாயக் சார்,

என் நன்றிப்பதிவை இட்ட பிறகுதான் தங்கள் வாழ்த்துப் பதிவை கண்ணுற்றேன். மிக்க நன்றி.

நண்பர்களுக்கு....

இம்மாதிரி குறிப்பிட்ட எண்ணிக்கையை தொட்டதற்காக பதியப்படும் வாழ்த்துக்களை Moderators முன்னொருமுறை கண்டனம் செய்திருப்பதால் மற்றவர்கள் தவிர்க்க வேண்டுகிறேன்....

mr_karthik
3rd September 2013, 03:50 PM
அன்புள்ள கோபால் சார்,

ஞானஒளி திரைக்காவியம் பற்றி ஒவ்வொரு முறையும் வாசுதேவன் அவர்களும் முரளி அவர்களும் எழுவதைப் படித்த பின்னர் ஞானஒளி படத்தை நான் பார்ப்பது வழக்கம். காரணம் ஒவ்வொரு முறை புதிய கண்ணோட்டத்தோடு பார்க்கும்போது அதுவரை பார்த்திராத, அறிந்திராத, உணர்ந்திராத விஷயங்கள் தென்படும்.

ஏனென்றால் ஞானஒளி ஒரு ஆராய்ச்சிப் புதையல்.

இப்போது உங்கள் ஆய்வைப் படித்தபின், இன்று இரவு ஞானஒளியை பார்க்கும்போது நிச்சயம் வேறொரு கோணத்தில் அப்படத்தைப் பார்க்கப்போகிறேன் (பார்க்கப்போகிறோம், என் மனைவியையும் சேர்த்து, அவளுக்கு மிகவும் பிடித்த திரைப்படம், தெய்வ மகனை அடுத்து).

தங்கள் அற்புத ஆராய்ச்சிக் கட்டுரையை எப்படிப் பாராட்டுவது என்றே தெரியவில்லை. தங்களுக்கு டாக்டர் பட்டம் வழங்குவதற்காகவேனும் நான் ஒரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஆகியே தீரவேண்டும்.....

abkhlabhi
3rd September 2013, 05:26 PM
http://ramaniecuvellore.blogspot.in/2013/09/blog-post_2.html

vasudevan31355
3rd September 2013, 09:27 PM
கோபால் சார்!

என்னவென்று சொல்ல! என் அபிமான 'ஞான ஒளி' பற்றி எழுதி என் நாடி நரம்புகளை முறுக்கேற்றி விட்டீர்கள். பொதுவாகவே ஆய்வுகளில் பின்னி எடுப்பீர்கள். ஆனால் இதை எனக்காக இன்னும் ஸ்பெஷலாய் வடிவமைத்து விட்டீர்கள். வீட்டில் நிறைய வேலைப் பளு. அத்தனையையும் விட்டு விட்டு ஒளிக்காக ஓடி வந்து விட்டேன். தங்கள் அற்புத ஆய்வு, பாத்திரங்களை அலசிய தன்மை, குறிப்பாக நம் ஆண்டவரின் அட்டகாசங்களை அழகாய் தொகுத்து ஒளிக்கு மேலும் ஒளி சேர்த்ததற்கு நன்றி! முரளி சார் சொன்னது போல பெருமகிழ்ச்சி எனக்கு.

என் வாழ்க்கையிலேயே மிக அதிக சந்தோஷமும், மிக அதிக சோகமும் ஒரு சேர அனுபவிக்கும் ஒரே காவியம் எனக்கு 'ஞான ஒளி' மட்டுமே. அதிக சந்தோஷம் அடைவது தலைவரை அணு அணுவைப் பார்த்து பார்த்து ரசிக்கும்போது. அதிக துக்கம் ஏற்படுவது இந்த பாழாய்ப் போன, வாழ்வில் சந்தோஷமே அறியாத பாவப்பட்ட என் ஆண்டனியையும், அருணையும் பார்க்கும் போது. எவ்வளவோ அதிசயப் படங்கள் இருந்தாலும் என் வரைக்கும் ஒளியின் ஓரம் கூட ஒரு படமும் வரமுடியாது. மறுபடியும் சொல்கிறேன். என் வரைக்கும். இனி என் பங்குக்கு கொஞ்சம்.

vasudevan31355
3rd September 2013, 09:28 PM
அனைத்து நண்பர்களுக்கும் என் வணக்கங்கள்.

RAGHAVENDRA
3rd September 2013, 09:33 PM
அருணும் அந்தோணியும் எங்கள் சகோதரரை அன்புச் சங்கிலியால் இழுத்து வந்து விட்டார்கள். இருவருக்கும் எங்கள் உளமார்ந்த நன்றி.

வாசு சார், தொடருங்கள்... தங்கள் பங்களிப்பை...

RAGHAVENDRA
3rd September 2013, 09:36 PM
சமீபத்தில் சில நாட்களுக்கு முன்னர் நடிகர் திலகத்தின் காலத்தை வென்ற காவியமாம் வசந்த மாளிகை திருப்பூரில் திரையிடப் பட்டு மிகப் பெரிய வெற்றி பெற்றுள்ளதாகவும், ஒரு நாள் ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க அதிகாலை 5.30 மணிக்கு சிறப்பு காட்சி நடைபெற்றதாகவும் அந்த வேளையிலும் அரங்கு நிறைவு கண்டதாகவும் செய்திகள் வந்துள்ளன. திருப்பூர் வட்டார நண்பர்கள் இங்கு இருந்தால் இச்செய்தியினை உறுதிப் படுத்திக் கொள்ளலாம்.

RAGHAVENDRA
3rd September 2013, 09:38 PM
தமிழகத்தின் பிரபலமான நாளிதழ் ஒன்றில் நடிகர் திலகத்தைப் பற்றிய தொடர் ஒன்று வாரா வாரம் வெளிவர உள்ளது. விவரங்கள் மிக விரைவில்.

vasudevan31355
3rd September 2013, 09:44 PM
என் தெய்வம் வழங்கிய

'ஞான ஒளி'

http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/2011/GnanaOli00001.jpg

முக்காலமும் உணர்ந்த ஞான நடிகரின் 'ஞான ஒளியை' கதையை மூன்று பகுதிகளாகப் பிரிப்போம். மூன்றும் வெவ்வேறு பரிணாமங்களைக் கொண்டவை. மூன்று பகுதிகளிலும் ஏகபோகச் சக்கரவர்த்தி நம் அன்பு நாயகர்தான். "அவனன்றி ஓர் அணுவும் அசையாது" என்பார்கள். அது உண்மையோ பொய்யோ! ஆனால் ஆண்டனி இன்றி வாசுதேவன் உயிர் அசையாது. அருணின்றி அவன் அக, புற வாழ்க்கை இனிக்காது. இப்போது ஞாலத்துக்கே நடிப்பொளி வழங்கிய நாயகன் வாழ்ந்த 'ஞான ஒளி'யின் கதை. (இணையத்து இளைஞர்களுக்காகவும், என்னுடன் இணைந்திருக்கும் அனைத்து நண்பர்களுக்காகவும்)

முதல் பகுதியாக (அப்பாவி இளைஞன் ஆண்டனி)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/GnanaOli-Uyirvanicomavi_000810601.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/GnanaOli-Uyirvanicomavi_000810601.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/GnanaOli-Uyirvanicomavi_001093592.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/GnanaOli-Uyirvanicomavi_001093592.jpg.html)


ஆண்டனி என்ற அனாதை முரட்டு இளைஞன் "பூண்டி' என்ற கிராமத்து மாதா கோவிலில் மணியடித்து, சவப்பெட்டி செய்தல், கல்லறை வெட்டுதல் போன்ற சிறு தொழில்கள் செய்து, தன்னை எடுத்து வளர்த்த பாதிரியாரின் மேல் கொண்ட கண்மூடித்தனமான அன்பு வெறியை வெளிப்படுத்தி, விளையாட்டுப் பிள்ளையாய் கவலை இன்னதென்று அறியாமல் சிறு சிறு அடிதடி கேஸ்களில் (நியாயமான விஷயங்களுக்காக) சிக்கி, பாதிரியாரால் அடிக்கடி ஜாமீன் எடுக்கப்பட்டு, தன் குணத்தையொத்த ஒரு பெண்ணை அவளை சீண்டியபடியே காதலித்து, பாதிரியாரின் ஆசியால் அவளை மணமும் புரிந்து, இனிமையான இல்லற வாழ்க்கையில் அவளும் கர்ப்பமுற்று, ஒரு அழகான பெண் குழந்தையை இவனுக்குத் தந்து, பிரசவத்தின் போதே அந்தப் பேதை உயிர் துறக்க, அனாதையான ஆண்டனி எப்படி அவளால் சொந்தம் ஏற்பட்டு குடும்பம், சொந்தம் என்று ஆனானோ அவளே போய்விட்ட பிறகு மீண்டும் அனாதையாகி அவள் பெற்றுத் தந்த செல்வத்தைப் பாதுகாக்க தந்தை என்ற ஸ்தானத்திற்கு சொந்தக்காரனாகிறான். இப்போது அவன் அனாதை இல்லை.

இரண்டாவது பகுதியாக (பாசமுள்ள முரட்டுத் தந்தை)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/GnanaOli-Uyirvanicomavi_001226725.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/GnanaOli-Uyirvanicomavi_001226725.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/GnanaOli-Uyirvanicomavi_001829744.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/GnanaOli-Uyirvanicomavi_001829744.jpg.html)

தன்னுடைய கிராமத்தில் பள்ளிக்கூடம், ஆஸ்பத்திரி, அனாதை விடுதி கட்ட வேண்டும் என்ற இயலாமை ஆசையிலே வாழும் பாதிரியார். அதற்காகவே அருமை மகளை அரும்பாடுபட்டு படிக்க வைக்கும் ஆண்டனி. பாதிரியாரால் வளர்க்கப்பட்ட இன்னொரு அனாதை சிறுவன் சிறு வயது ஆண்டனியின் நெருங்கிய நண்பன் லாரன்ஸ்... இப்போது படித்து வளர்ந்து அதே ஊரிலேயே இன்ஸ்பெக்டர். நண்பர்கள் இருவரும் நீள் பிரிவிற்குப் பின் சந்தித்து அடயாளம் கண்டு, பழைய நட்பை நினைவு கூர்ந்து, மீண்டும் நெருங்கிய நட்பு கொள்கிறார்கள்..

படிப்பின் போது கயவன் ஒருவனை காதலித்து லீவில் ஊருக்கு திரும்பும் மகள் மேரி ஒரு இடிமழை இரவில் சொந்த ஊரிலேயே அவனிடம் சோரம் போகிறாள். மகளைக் காட்ட நண்பன் லாரன்ஸை ஆசையுடன் தன் வீட்டுக்கு அழைத்து வரும் ஆண்டனி மகள் நாசமாவதை நேரே கண்டு விடுகிறான். கொதிப்பும், ஆங்காரமும், அதிகோபமும் அடைகிறான். பொங்கு கடலாய்க் கொந்தளிக்கிறான். லாரன்ஸ் நண்பனின் கோபத்தைக் கட்டுப் படுத்தி. மேரிக்கு அங்கேயே அவள் காதலனுடன் மோதிரம் மாற்றி மணமுடித்து வைக்கிறான். தன் வாழ்க்கையையே ஒரு வினாடியில் வெட்டிச் சாய்த்த மகளின் செய்கையில் கொந்தளித்து தன்னுடைய தோட்டத்து வாழைகளை வெட்டி சாய்த்து வெறிதீர்க்க முயன்று தோற்கிறான் ஆண்டனி.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/GnanaOli-Uyirvanicomavi_003018598.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/GnanaOli-Uyirvanicomavi_003018598.jpg.html)

பாதிரிக்கு விஷயம் போக, முறைப்படி இருவருக்கும் கல்யாணம் செய்து வைப்பதுதான் ஒரே வழி என்று சொல்ல, மான, அவமானத்திற்கு பயந்து, மேரி காதலித்த பையனை தேடிச் செல்லும் ஆண்டனி அவன் ஒரு நயவஞ்சகன்... பெண்களை ஏமாற்றும் காமாந்தகன் என்று தெரிந்து கொள்கிறான். இருந்தாலும் அவனைத் தேடிக் கண்டு பிடித்து தன் மகளுக்கு வாழ்வு தரச் சொல்லி மன்றாடுகிறான். அவன் காலைப் பிடித்துக் கதறுகிறான். ஆனால் அந்த நயவஞ்சகனோ கல்யாணத்துக்கு மறுத்துவிடுவதோடு மட்டுமல்லாமல் மேரியைப் பற்றி அவதூறாகவும் பேசிவிடுகிறான்.

அவனால் வெகுவாக அவமானப் படுத்தப்பட்ட போதும், மகளுக்காகப் பொறுத்துப் பொறுத்துப் பார்த்த ஆண்டனி ஒரு கட்டத்தில் கோபம் எல்லை மீற, ஆத்திரத்தில் அவனை முரட்டுத்தனமாக ஒரே ஒரு அடி அடித்து விட, ஆண்டனியின் இரும்புக்கை தாக்குதலில் பந்து போலத் துள்ளி விழுந்து உயிரை விடுகிறான் மேரியின் காதலன். இது அறியாத ஆண்டனி அவனை தூக்கிக் கொண்டு பாதிரியிடம் சேர்க்கிறான். பிறகுதான் தெரிகிறது மாப்பிள்ளையாய் வர இருந்தவன் மாமனாரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட விவரம்.

போலீஸ் நண்பன் தன் கடமையை செய்கிறான். யாருமே இல்லாமல் கற்பிழந்து ஆதரவற்று அனாதையாக நிற்கிறாள் மேரி. சிறைவாசத்தில் ஆயுள்தண்டனையில் ஆண்டனி. எதுவும் செய்ய முடியாத நிலையில் பாதிரியார். சிறையில் இருக்கும் ஆண்டனிக்கு மேலும் ஒரு அதிர்ச்சி... மகள் தற்கொலை செய்து கொண்டு மாண்டு விட்டாள் என்று. மீண்டும் அனாதையாகிறான் ஆண்டனி.

பாதிரியாருக்கு அதிக வயதாகி விட்டது. மரண வாசலை நெருங்கும் நேரம். தன் அன்பு ஆண்டனியைப் பார்க்க ஆசை. இன்ஸ்பெக்டர் லாரன்ஸிடம் தெரிவிக்கிறார். பாதிரியாரின் இறுதி ஆசை என்பதால் லாரன்ஸும் தன் சொந்தப் பொறுப்பில் சிறையிலிருந்து பரோலில் ஆண்டனியை பாதிரியாரிடம் அழைத்து வருகிறான். இரு தூய்மை உள்ளங்களும் உண்மையான அன்பின் உணர்வுகளின் சங்கமத்தால், உணர்ச்சிப் பெருக்கால் போராடுகின்றன. தன் ஆசைகள் எதுவுமே நிறைவேறாமல் தன் உயிர் பிரியப் போவதை எண்ணி பாதிரியார் கண்ணீர் விட, அதையே தன் மகள் மூலம் நிறைவேற்றுவதாய் வாக்குக் கொடுத்திருந்த ஆண்டனி அது பலிக்காமல் போனதை எண்ணி வேதனையுறுகிறான்.

தான் ஜெபம் செய்யும் புனிதமான மெழுகுவர்த்தியை ஆண்டனியிடம் தந்து ஆண்டனியை லாரன்சிடம் ஒப்படைத்து அவனை மனிதனாக்கும்படி கூறி பாதிரியார் கண் மூடுகிறார். ஊருக்கெல்லாம் சவப்பெட்டி செய்த ஆண்டனி தன் தெய்வத்திற்கான ஈமச் சடங்குகள் செய்ய லாரன்ஸிடம் பெர்மிஷன் கேட்க அவனோ மறுக்கிறான். வழக்கம் போல கோபமுறும் ஆண்டனி லாரன்ஸை அடித்துப் போட்டு விட்டு பாதிரியாரின் கனவுகளை நனவாக்குவதற்காகவே அங்கிருந்து தப்பித்து விடுகிறான்.

இனி மூன்றாவது பகுதி (பரிதாபத்துக்குரிய கில்லாடி மில்லியனர் அருண்)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/GnanaOli-Uyirvanicomavi_005384921.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/GnanaOli-Uyirvanicomavi_005384921.jpg.html)

தப்பித்த ஆண்டனி வெளிநாடு சென்று மிகப் பெரிய பணக்காரனாகி நீண்ட இடைவெளிக்குப் பின் தன் சொந்த கிராமத்துக்கு வருகிறான். இப்போது அவன் ஆண்டனி அல்ல. மில்லியனர் அருண். பாதிரியாரின் கனவுகளை நனவாக்கவே அருண் தன் சொந்த மண்ணுக்கே திரும்புகிறார். ஆனால் அவர்தான் ஆண்டனி என்று ஒரு பயலுக்கும் தெரியாது. அருணுக்கு இன்னொரு இன்ப அதிர்ச்சி. இறந்து விட்டதாக சொல்லப்பட்ட மகள் ஒரு ஏழை ஆசிரியையாக இப்போது அவர் கண் முன்னாலேயே உயிரோடு. தன்னையே நம்ப முடியவில்லை. மகளுக்கே தந்தையை அடையாளம் காண முடியாத அளவுக்கு அருணின் தோற்றம். மாற்றம். மகளிடமே தன்னைத் தெரியப்படுத்திக் கொள்ள முடியாத துர்ப்பாக்கிய சூழ்நிலையில், கண்கொத்திப் பாம்பாக லாரன்ஸ் அலைய, எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமலேயே அடிமனதில் அழுகிறான் ஆண்டனி. மகளுக்கே மகள் வேறு. பேத்தி. மறுபடியும் சொந்த பந்தங்கள். தான் கடவுளாக நேசித்த பாதிரியாரின் ஆசைகளை ஒவ்வொன்றாக நிறைவேற்ற ஆரம்பிக்கிறார் அருண். ஊராரின் உன்னத அன்புக்கும் பாத்திரமாகிறார் அவர்களுக்கு தான் பழைய ஆண்டனி என்பது தெரியாமலேயே அல்லது காட்டிக் கொள்ளாமலேயே.

இதன் நடுவில் வஞ்சம் வைத்த புலியாக வாழ்நாள் சபதமெடுக்கிறான் லாரன்ஸ். ஆண்டனியால் தன் பதவிக்கும், தனக்கும் ஏற்பட்ட களங்கத்தை, இழுக்கை சரி செய்யத் துடிக்கிறான். வேண்டுமென்றே நண்பனைத் தப்பிக்க வைத்தவன் என்ற இழிசொல்லை இல்லாமல் செய்ய இரை தேடும் சிங்கமாக மீண்டும் அந்த ஊருக்கே மாற்றலாகி வருகிறான். மீண்டும் நண்பர்கள் சந்திக்கின்றனர். ஆனால் நண்பர்களாக அல்ல. எதிரிகளாக.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/GnanaOli-Uyirvanicomavi_006614065.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/GnanaOli-Uyirvanicomavi_006614065.jpg.html)

அருண்தான் ஆண்டனி என்பதை பல சந்தர்ப்பங்களில் உணர்ந்து, தெரிந்து கொண்ட லாரன்ஸ் அதை நிரூபிக்க ஆதாரம் இல்லாமல் தவிக்கிறான். ஆண்டனியோ வித்தகனுக்கு வித்தகனாக எந்த ஆதாரத்தையும் விட்டு விடாமல், தன் மகள் மீதான அதீத பாசத்தையும் மறைத்துக் கொண்டு, லாரன்ஸ் தரும் சித்திரவதை தொல்லைகளையும் தாங்கிக் கொண்டு, ஒவ்வொரு முறையும் லாரன்ஸ் விரிக்கும் வலைக்குள் சிக்காமல் குள்ள நரியாக அவனிடமிருந்து தப்பித்துக் கொண்டே இருக்கிறான்.

மேரியின் மகள் லாரன்ஸின் மகனைக் காதலிக்க, கல்யாணத்திற்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்து திருமணப் பத்திரிக்கையை மேரி அருணிடம் கொடுக்கப் போகும் சந்தர்ப்பத்தில் தன் மகளிடமே பரிதாபமாக தன்னை அவள் தந்தை ஆண்டனிதான் இந்த அருண் என்று அறிமுகப்படுத்திக் கொள்கிறான் ஆண்டனி. ஆடிப் போகிறாள் மகள். இத்தனை நாள் பிரிந்திருந்த மொத்தப் பாசத்தையும் அவள் மீது அந்தக் கண நேரத்தில் கொட்டுகிறான் ஆண்டனி. அப்பாவைப் பார்த்த சந்தோஷத்தை விட அப்பாவின் எதிர்காலம்... அதை நிர்ணயிக்கப் போகும் லாரன்ஸ்... இவைதான் மேரி நெஞ்சில் இப்போது அதிகம் நிழலாடுகின்றன. பேத்தியின் கல்யாணத்தை ஜாம் ஜாமென்று நடத்தப் போவதாகக் மேரியிடம் கூறுகிறார் அருண். ஆனால் மேரி தடுத்து விடுகிறாள். தன் தந்தையை பிடிப்பதையே வாழ்க்கையின் லட்சியமாகக் கொண்டுள்ள தன் வருங்கால சம்பந்தி இன்ஸ்பெக்டர் லாரன்ஸிடம் தன் தந்தை மாட்டாமல் இருக்க வேண்டுமானால் வெளி உலகத்திற்கு தங்களது தந்தை மகள் உறவு தெரியக் கூடாது என்று ஆண்டனியிடம் இறைஞ்சுகிறாள் மேரி. அதுமட்டுமல்ல தந்தையை திரும்ப வெளிநாட்டுக்கே சென்று விடும்படியும் வேண்டுகிறாள். அனலிடை புழுவாக துடிக்கிறார் அருண். மகள், பேத்தி பாசம் ஒருபுறம்.... தன்னை வேட்டையாடவே அவதாரம் எடுத்திருக்கும் லாரன்ஸ் ஒரு புறம்... பாதிரியாரின் கனவுகள் ஒருபுறம்.

சித்ரவதை சிறகுகளுக்குள் சிக்கி, உள்ளுக்குள் உடைந்து, ஊமையாய் அழுது, துன்பங்களில் துவள்கிறார் ஆண்டனி இல்லை இல்லை அருண்.

அருணை ஆண்டனி என்று நிரூபிக்க எந்த வழியிலும் வெற்றி அடைய முடியாத லாரன்ஸ் இறுதியாக ஒரு வழியைத் தேர்ந்தெடுக்கிறான். அதைத் தன் மகனின் (அருணின் பேத்தியின்) கல்யாணத்தின் போது பயன்படுத்திக் கொள்கிறான். கல்யாணத்தை நடத்திக் கொடுக்க வரும் அருண் முன்னாலேயே தன் சம்பந்தியான மேரியின் கடந்தகால வாழ்க்கையைக் கூறி அவள் நடத்தை கெட்டவள் என்று ஊரார் முன் அவளை வேண்டுமென்றே அவமானப் படுத்துகிறான் லாரன்ஸ். (அப்போதுதான் அருண் மகள் மேல் உள்ள பாசத்தால் தன்னை ஆண்டனி என்று நிச்சயம் அடையாளம் காட்டிவிடுவான் என்ற நம்பிக்கை கொண்டு) அவளுடைய கணவன் யார் என்று கேலி பேசுகிறான் தான் அவளுக்கு செய்து வைத்த கல்யாணத்தை மறைத்தே. மேரியின் மகளுக்கான தகப்பன் யார் என்று சொற்சவுக்கால் அடிக்கிறான். உண்மையை மேரி உரைத்தால்தான் இந்தக் கல்யாணம் நடக்கும் என்றும் பயமுறுத்துகிறான்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/GnanaOli-Uyirvanicomavi_008754287.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/GnanaOli-Uyirvanicomavi_008754287.jpg.html)

தன் அருமை மகள் தன் கண் முன்னாலேயே லாரான்ஸால் ஊரார் முன் அவமானப்படுவதை சகிக்க முடியாத அருண் தன் நிலை இழக்கிறான். வெறி கொண்ட வேங்கையாகிறான். மேரிக்கு லாரன்ஸ்தான் மோதிரம் மூலம் திருமணம் செய்து வைத்தான் என்று தன்னையறியாமல் உண்மையை உடைக்கிறான். பழைய ஆண்டனியின் முரட்டுக் குணத்தைக் காட்டி, உச்ச கோபத்தில் லாரன்ஸை பாதிரியார் தந்த மெழுவர்த்திக் கேண்டிலால் அடிக்கக் கை ஓங்கி தன்னை அடையாளம் காட்டி விடுகிறான். அதைத்தான் லாரன்ஸும் எதிர்பார்த்தான். அவன் நினைத்தபடியே நடந்து விட்டது. பல வழிகளில் முயன்றும் அருணை ஆண்டனி என்று அடையாளம் காட்ட முடியாமல் தோல்வியுற்று துவளும் லாரன்ஸ் பாசம் என்ற தூண்டிலுக்குதான் ஆண்டனி மாட்டுவான் என்பதை வகையாகப் பயன் படுத்திக் கொண்டு அதில் வெற்றியும் அடைகிறான். அருணை அவர் வாயாலேயே ஆண்டனி என்று அனைவர் முனனால் சொல்ல வைக்கிறான்.

அருண் தான் தான் ஆண்டனி என்று அனைவர் முன்னும் ஒத்துக் கொண்ட பிறகு தன் முறையற்ற செயலுக்காக அவனிடம் மன்னிப்பு கோருகிறான் லாரன்ஸ். அவனைப் பிடிக்க வேறு வழி தெரியாததால்தான் தான் மேரியை அவமானப்படுத்த நேர்ந்தது என்றும் வருத்தப்படுகிறான். மேரி நல்லவள்தான் என்று ஊரார் முன் நிஜத்தை எடுத்துரைக்கிறான். தான்தான் மேரிக்கு கல்யாணம் செய்து வைத்தவன் என்ற உண்மையையும் கூறுகிறான். ஆண்டனி சாந்தமடைகிறான்.

தந்தை மாட்டக் கூடாது என்று நினைத்த மகளுக்கு ஏமாற்றமே!

பாதிரியாரின் ஆசைகளை நிறைவேற்றி விட்ட திருப்தி, மகளின் மானம் நண்பனால் சீண்டப்பட்டு பின் அவனாலேயே காக்கப்பட்ட கண்ணியம், பேத்தியின் கல்யாணம் என்ற சந்தோஷங்களில் மனம் லேசாக, முழு திருப்தியோடு தன்னை ஆண்டனி என்ற பழைய கைதியாக லாரன்ஸ் வசம் சந்தோஷமாக ஒப்படைக்கிறான் அருண் சிறைக் கதவுகளை எதிர்நோக்கியபடி.

'ஒளி' உலகுள்ளவரை வீசிக் கொண்டே இருக்கும்.

ஆண்டனி அனைவரையும் ஆட்டுவித்துக் கொண்டே இருப்பான்

அருண் அனுதினமும் அவரை நினைக்கச் செய்து கொண்டு தான் இருப்பார்.

இந்த விதி மாற்ற முடியாதது.

இனி....

'ஞான ஒளி' யில்

'நம் ஆண்டவனின் அரசாட்சி'

விரைவில் தொடரும்.

ஒளித் தாக்குதலில் சிக்குண்டு, சிதறிக் கிடக்கும்

வாசுதேவன்..

Russelldwp
3rd September 2013, 10:19 PM
i am the new visitor of this forum. I am very happy to join this. I am the deep fan of Great actor sivaji sir. I ready this and really enjoyed like anything. Your presentation is very good. Thanks for your information about only actor sivaji's Gnana oli story.

Regards
C.Ramachandran
Trichy

'ஞான ஒளி'

http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/2011/GnanaOli00001.jpg

முக்காலமும் உணர்ந்த ஞான நடிகரின் 'ஞான ஒளியை' கதையை மூன்று பகுதிகளாகப் பிரிப்போம். மூன்றும் வெவ்வேறு பரிணாமங்களைக் கொண்டவை. மூன்று பகுதிகளிலும் ஏகபோகச் சக்கரவர்த்தி நம் அன்பு நாயகர்தான். "அவனன்றி ஓர் அணுவும் அசையாது" என்பார்கள். அது உண்மையோ பொய்யோ! ஆனால் ஆண்டனி இன்றி வாசுதேவன் உயிர் அசையாது. அருணின்றி அவன் அக, புற வாழ்க்கை இனிக்காது. இப்போது ஞாலத்துக்கே நடிப்பொளி வழங்கிய நாயகன் வாழ்ந்த 'ஞான ஒளி'யின் கதை. (இணையத்து இளைஞர்களுக்காகவும், என்னுடன் இணைந்திருக்கும் அனைத்து நண்பர்களுக்காகவும்)

முதல் பகுதியாக (அப்பாவி இளைஞன் ஆண்டனி)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/GnanaOli-Uyirvanicomavi_000810601.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/GnanaOli-Uyirvanicomavi_000810601.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/GnanaOli-Uyirvanicomavi_001093592.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/GnanaOli-Uyirvanicomavi_001093592.jpg.html)


ஆண்டனி என்ற அனாதை முரட்டு இளைஞன் "பூண்டி' என்ற கிராமத்து மாதா கோவிலில் மணியடித்து, சவப்பெட்டி செய்தல், கல்லறை வெட்டுதல் போன்ற சிறு தொழில்கள் செய்து, தன்னை எடுத்து வளர்த்த பாதிரியாரின் மேல் கொண்ட கண்மூடித்தனமான அன்பு வெறியை வெளிப்படுத்தி, விளையாட்டுப் பிள்ளையாய் கவலை இன்னதென்று அறியாமல் சிறு சிறு அடிதடி கேஸ்களில் (நியாயமான விஷயங்களுக்காக) சிக்கி, பாதிரியாரால் அடிக்கடி ஜாமீன் எடுக்கப்பட்டு, தன் குணத்தையொத்த ஒரு பெண்ணை அவளை சீண்டியபடியே காதலித்து, பாதிரியாரின் ஆசியால் அவளை மணமும் புரிந்து, இனிமையான இல்லற வாழ்க்கையில் அவளும் கர்ப்பமுற்று, ஒரு அழகான பெண் குழந்தையை இவனுக்குத் தந்து, பிரசவத்தின் போதே அந்தப் பேதை உயிர் துறக்க, அனாதையான ஆண்டனி எப்படி அவளால் சொந்தம் ஏற்பட்டு குடும்பம், சொந்தம் என்று ஆனானோ அவளே போய்விட்ட பிறகு மீண்டும் அனாதையாகி அவள் பெற்றுத் தந்த செல்வத்தைப் பாதுகாக்க தந்தை என்ற ஸ்தானத்திற்கு சொந்தக்காரனாகிறான். இப்போது அவன் அனாதை இல்லை.

இரண்டாவது பகுதியாக (பாசமுள்ள முரட்டுத் தந்தை)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/GnanaOli-Uyirvanicomavi_001226725.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/GnanaOli-Uyirvanicomavi_001226725.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/GnanaOli-Uyirvanicomavi_001829744.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/GnanaOli-Uyirvanicomavi_001829744.jpg.html)

தன்னுடைய கிராமத்தில் பள்ளிக்கூடம், ஆஸ்பத்திரி, அனாதை விடுதி கட்ட வேண்டும் என்ற இயலாமை ஆசையிலே வாழும் பாதிரியார். அதற்காகவே அருமை மகளை அரும்பாடுபட்டு படிக்க வைக்கும் ஆண்டனி. பாதிரியாரால் வளர்க்கப்பட்ட இன்னொரு அனாதை சிறுவன் சிறு வயது ஆண்டனியின் நெருங்கிய நண்பன் லாரன்ஸ்... இப்போது படித்து வளர்ந்து அதே ஊரிலேயே இன்ஸ்பெக்டர். நண்பர்கள் இருவரும் நீள் பிரிவிற்குப் பின் சந்தித்து அடயாளம் கண்டு, பழைய நட்பை நினைவு கூர்ந்து, மீண்டும் நெருங்கிய நட்பு கொள்கிறார்கள்..

படிப்பின் போது கயவன் ஒருவனை காதலித்து லீவில் ஊருக்கு திரும்பும் மகள் மேரி ஒரு இடிமழை இரவில் சொந்த ஊரிலேயே அவனிடம் சோரம் போகிறாள். மகளைக் காட்ட நண்பன் லாரன்ஸை ஆசையுடன் தன் வீட்டுக்கு அழைத்து வரும் ஆண்டனி மகள் நாசமாவதை நேரே கண்டு விடுகிறான். கொதிப்பும், ஆங்காரமும், அதிகோபமும் அடைகிறான். பொங்கு கடலாய்க் கொந்தளிக்கிறான். லாரன்ஸ் நண்பனின் கோபத்தைக் கட்டுப் படுத்தி. மேரிக்கு அங்கேயே அவள் காதலனுடன் மோதிரம் மாற்றி மணமுடித்து வைக்கிறான். தன் வாழ்க்கையையே ஒரு வினாடியில் வெட்டிச் சாய்த்த மகளின் செய்கையில் கொந்தளித்து தன்னுடைய தோட்டத்து வாழைகளை வெட்டி சாய்த்து வெறிதீர்க்க முயன்று தோற்கிறான் ஆண்டனி.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/GnanaOli-Uyirvanicomavi_003018598.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/GnanaOli-Uyirvanicomavi_003018598.jpg.html)

பாதிரிக்கு விஷயம் போக, முறைப்படி இருவருக்கும் கல்யாணம் செய்து வைப்பதுதான் ஒரே வழி என்று சொல்ல, மான, அவமானத்திற்கு பயந்து, மேரி காதலித்த பையனை தேடிச் செல்லும் ஆண்டனி அவன் ஒரு நயவஞ்சகன்... பெண்களை ஏமாற்றும் காமாந்தகன் என்று தெரிந்து கொள்கிறான். இருந்தாலும் அவனைத் தேடிக் கண்டு பிடித்து தன் மகளுக்கு வாழ்வு தரச் சொல்லி மன்றாடுகிறான். அவன் காலைப் பிடித்துக் கதறுகிறான். ஆனால் அந்த நயவஞ்சகனோ கல்யாணத்துக்கு மறுத்துவிடுவதோடு மட்டுமல்லாமல் மேரியைப் பற்றி அவதூறாகவும் பேசிவிடுகிறான்.

அவனால் வெகுவாக அவமானப் படுத்தப்பட்ட போதும், மகளுக்காகப் பொறுத்துப் பொறுத்துப் பார்த்த ஆண்டனி ஒரு கட்டத்தில் கோபம் எல்லை மீற, ஆத்திரத்தில் அவனை முரட்டுத்தனமாக ஒரே ஒரு அடி அடித்து விட, ஆண்டனியின் இரும்புக்கை தாக்குதலில் பந்து போலத் துள்ளி விழுந்து உயிரை விடுகிறான் மேரியின் காதலன். இது அறியாத ஆண்டனி அவனை தூக்கிக் கொண்டு பாதிரியிடம் சேர்க்கிறான். பிறகுதான் தெரிகிறது மாப்பிள்ளையாய் வர இருந்தவன் மாமனாரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட விவரம்.

போலீஸ் நண்பன் தன் கடமையை செய்கிறான். யாருமே இல்லாமல் கற்பிழந்து ஆதரவற்று அனாதையாக நிற்கிறாள் மேரி. சிறைவாசத்தில் ஆயுள்தண்டனையில் ஆண்டனி. எதுவும் செய்ய முடியாத நிலையில் பாதிரியார். சிறையில் இருக்கும் ஆண்டனிக்கு மேலும் ஒரு அதிர்ச்சி... மகள் தற்கொலை செய்து கொண்டு மாண்டு விட்டாள் என்று. மீண்டும் அனாதையாகிறான் ஆண்டனி.

பாதிரியாருக்கு அதிக வயதாகி விட்டது. மரண வாசலை நெருங்கும் நேரம். தன் அன்பு ஆண்டனியைப் பார்க்க ஆசை. இன்ஸ்பெக்டர் லாரன்ஸிடம் தெரிவிக்கிறார். பாதிரியாரின் இறுதி ஆசை என்பதால் லாரன்ஸும் தன் சொந்தப் பொறுப்பில் சிறையிலிருந்து பரோலில் ஆண்டனியை பாதிரியாரிடம் அழைத்து வருகிறான். இரு தூய்மை உள்ளங்களும் உண்மையான அன்பின் உணர்வுகளின் சங்கமத்தால், உணர்ச்சிப் பெருக்கால் போராடுகின்றன. தன் ஆசைகள் எதுவுமே நிறைவேறாமல் தன் உயிர் பிரியப் போவதை எண்ணி பாதிரியார் கண்ணீர் விட, அதையே தன் மகள் மூலம் நிறைவேற்றுவதாய் வாக்குக் கொடுத்திருந்த ஆண்டனி அது பலிக்காமல் போனதை எண்ணி வேதனையுறுகிறான்.

தான் ஜெபம் செய்யும் புனிதமான மெழுகுவர்த்தியை ஆண்டனியிடம் தந்து ஆண்டனியை லாரன்சிடம் ஒப்படைத்து அவனை மனிதனாக்கும்படி கூறி பாதிரியார் கண் மூடுகிறார். ஊருக்கெல்லாம் சவப்பெட்டி செய்த ஆண்டனி தன் தெய்வத்திற்கான ஈமச் சடங்குகள் செய்ய லாரன்ஸிடம் பெர்மிஷன் கேட்க அவனோ மறுக்கிறான். வழக்கம் போல கோபமுறும் ஆண்டனி லாரன்ஸை அடித்துப் போட்டு விட்டு பாதிரியாரின் கனவுகளை நனவாக்குவதற்காகவே அங்கிருந்து தப்பித்து விடுகிறான்.

இனி மூன்றாவது பகுதி (பரிதாபத்துக்குரிய கில்லாடி மில்லியனர் அருண்)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/GnanaOli-Uyirvanicomavi_005384921.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/GnanaOli-Uyirvanicomavi_005384921.jpg.html)

தப்பித்த ஆண்டனி வெளிநாடு சென்று மிகப் பெரிய பணக்காரனாகி நீண்ட இடைவெளிக்குப் பின் தன் சொந்த கிராமத்துக்கு வருகிறான். இப்போது அவன் ஆண்டனி அல்ல. மில்லியனர் அருண். பாதிரியாரின் கனவுகளை நனவாக்கவே அருண் தன் சொந்த மண்ணுக்கே திரும்புகிறார். ஆனால் அவர்தான் ஆண்டனி என்று ஒரு பயலுக்கும் தெரியாது. அருணுக்கு இன்னொரு இன்ப அதிர்ச்சி. இறந்து விட்டதாக சொல்லப்பட்ட மகள் ஒரு ஏழை ஆசிரியையாக இப்போது அவர் கண் முன்னாலேயே உயிரோடு. தன்னையே நம்ப முடியவில்லை. மகளுக்கே தந்தையை அடையாளம் காண முடியாத அளவுக்கு அருணின் தோற்றம். மாற்றம். மகளிடமே தன்னைத் தெரியப்படுத்திக் கொள்ள முடியாத துர்ப்பாக்கிய சூழ்நிலையில், கண்கொத்திப் பாம்பாக லாரன்ஸ் அலைய, எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமலேயே அடிமனதில் அழுகிறான் ஆண்டனி. மகளுக்கே மகள் வேறு. பேத்தி. மறுபடியும் சொந்த பந்தங்கள். தான் கடவுளாக நேசித்த பாதிரியாரின் ஆசைகளை ஒவ்வொன்றாக நிறைவேற்ற ஆரம்பிக்கிறார் அருண். ஊராரின் உன்னத அன்புக்கும் பாத்திரமாகிறார் அவர்களுக்கு தான் பழைய ஆண்டனி என்பது தெரியாமலேயே அல்லது காட்டிக் கொள்ளாமலேயே.

இதன் நடுவில் வஞ்சம் வைத்த புலியாக வாழ்நாள் சபதமெடுக்கிறான் லாரன்ஸ். ஆண்டனியால் தன் பதவிக்கும், தனக்கும் ஏற்பட்ட களங்கத்தை, இழுக்கை சரி செய்யத் துடிக்கிறான். வேண்டுமென்றே நண்பனைத் தப்பிக்க வைத்தவன் என்ற இழிசொல்லை இல்லாமல் செய்ய இரை தேடும் சிங்கமாக மீண்டும் அந்த ஊருக்கே மாற்றலாகி வருகிறான். மீண்டும் நண்பர்கள் சந்திக்கின்றனர். ஆனால் நண்பர்களாக அல்ல. எதிரிகளாக.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/GnanaOli-Uyirvanicomavi_006614065.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/GnanaOli-Uyirvanicomavi_006614065.jpg.html)

அருண்தான் ஆண்டனி என்பதை பல சந்தர்ப்பங்களில் உணர்ந்து, தெரிந்து கொண்ட லாரன்ஸ் அதை நிரூபிக்க ஆதாரம் இல்லாமல் தவிக்கிறான். ஆண்டனியோ வித்தகனுக்கு வித்தகனாக எந்த ஆதாரத்தையும் விட்டு விடாமல், தன் மகள் மீதான அதீத பாசத்தையும் மறைத்துக் கொண்டு, லாரன்ஸ் தரும் சித்திரவதை தொல்லைகளையும் தாங்கிக் கொண்டு, ஒவ்வொரு முறையும் லாரன்ஸ் விரிக்கும் வலைக்குள் சிக்காமல் குள்ள நரியாக அவனிடமிருந்து தப்பித்துக் கொண்டே இருக்கிறான்.

மேரியின் மகள் லாரன்ஸின் மகனைக் காதலிக்க, கல்யாணத்திற்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்து திருமணப் பத்திரிக்கையை மேரி அருணிடம் கொடுக்கப் போகும் சந்தர்ப்பத்தில் தன் மகளிடமே பரிதாபமாக தன்னை அவள் தந்தை ஆண்டனிதான் இந்த அருண் என்று அறிமுகப்படுத்திக் கொள்கிறான் ஆண்டனி. ஆடிப் போகிறாள் மகள். இத்தனை நாள் பிரிந்திருந்த மொத்தப் பாசத்தையும் அவள் மீது அந்தக் கண நேரத்தில் கொட்டுகிறான் ஆண்டனி. அப்பாவைப் பார்த்த சந்தோஷத்தை விட அப்பாவின் எதிர்காலம்... அதை நிர்ணயிக்கப் போகும் லாரன்ஸ்... இவைதான் மேரி நெஞ்சில் இப்போது அதிகம் நிழலாடுகின்றன. பேத்தியின் கல்யாணத்தை ஜாம் ஜாமென்று நடத்தப் போவதாகக் மேரியிடம் கூறுகிறார் அருண். ஆனால் மேரி தடுத்து விடுகிறாள். தன் தந்தையை பிடிப்பதையே வாழ்க்கையின் லட்சியமாகக் கொண்டுள்ள தன் வருங்கால சம்பந்தி இன்ஸ்பெக்டர் லாரன்ஸிடம் தன் தந்தை மாட்டாமல் இருக்க வேண்டுமானால் வெளி உலகத்திற்கு தங்களது தந்தை மகள் உறவு தெரியக் கூடாது என்று ஆண்டனியிடம் இறைஞ்சுகிறாள் மேரி. அதுமட்டுமல்ல தந்தையை திரும்ப வெளிநாட்டுக்கே சென்று விடும்படியும் வேண்டுகிறாள். அனலிடை புழுவாக துடிக்கிறார் அருண். மகள், பேத்தி பாசம் ஒருபுறம்.... தன்னை வேட்டையாடவே அவதாரம் எடுத்திருக்கும் லாரன்ஸ் ஒரு புறம்... பாதிரியாரின் கனவுகள் ஒருபுறம்.

சித்ரவதை சிறகுகளுக்குள் சிக்கி, உள்ளுக்குள் உடைந்து, ஊமையாய் அழுது, துன்பங்களில் துவள்கிறார் ஆண்டனி இல்லை இல்லை அருண்.

அருணை ஆண்டனி என்று நிரூபிக்க எந்த வழியிலும் வெற்றி அடைய முடியாத லாரன்ஸ் இறுதியாக ஒரு வழியைத் தேர்ந்தெடுக்கிறான். அதைத் தன் மகனின் (அருணின் பேத்தியின்) கல்யாணத்தின் போது பயன்படுத்திக் கொள்கிறான். கல்யாணத்தை நடத்திக் கொடுக்க வரும் அருண் முன்னாலேயே தன் சம்பந்தியான மேரியின் கடந்தகால வாழ்க்கையைக் கூறி அவள் நடத்தை கெட்டவள் என்று ஊரார் முன் அவளை வேண்டுமென்றே அவமானப் படுத்துகிறான் லாரன்ஸ். (அப்போதுதான் அருண் மகள் மேல் உள்ள பாசத்தால் தன்னை ஆண்டனி என்று நிச்சயம் அடையாளம் காட்டிவிடுவான் என்ற நம்பிக்கை கொண்டு) அவளுடைய கணவன் யார் என்று கேலி பேசுகிறான் தான் அவளுக்கு செய்து வைத்த கல்யாணத்தை மறைத்தே. மேரியின் மகளுக்கான தகப்பன் யார் என்று சொற்சவுக்கால் அடிக்கிறான். உண்மையை மேரி உரைத்தால்தான் இந்தக் கல்யாணம் நடக்கும் என்றும் பயமுறுத்துகிறான்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/GnanaOli-Uyirvanicomavi_008754287.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/GnanaOli-Uyirvanicomavi_008754287.jpg.html)

தன் அருமை மகள் தன் கண் முன்னாலேயே லாரான்ஸால் ஊரார் முன் அவமானப்படுவதை சகிக்க முடியாத அருண் தன் நிலை இழக்கிறான். வெறி கொண்ட வேங்கையாகிறான். மேரிக்கு லாரன்ஸ்தான் மோதிரம் மூலம் திருமணம் செய்து வைத்தான் என்று தன்னையறியாமல் உண்மையை உடைக்கிறான். பழைய ஆண்டனியின் முரட்டுக் குணத்தைக் காட்டி, உச்ச கோபத்தில் லாரன்ஸை பாதிரியார் தந்த மெழுவர்த்திக் கேண்டிலால் அடிக்கக் கை ஓங்கி தன்னை அடையாளம் காட்டி விடுகிறான். அதைத்தான் லாரன்ஸும் எதிர்பார்த்தான். அவன் நினைத்தபடியே நடந்து விட்டது. பல வழிகளில் முயன்றும் அருணை ஆண்டனி என்று அடையாளம் காட்ட முடியாமல் தோல்வியுற்று துவளும் லாரன்ஸ் பாசம் என்ற தூண்டிலுக்குதான் ஆண்டனி மாட்டுவான் என்பதை வகையாகப் பயன் படுத்திக் கொண்டு அதில் வெற்றியும் அடைகிறான். அருணை அவர் வாயாலேயே ஆண்டனி என்று அனைவர் முனனால் சொல்ல வைக்கிறான்.

அருண் தான் தான் ஆண்டனி என்று அனைவர் முன்னும் ஒத்துக் கொண்ட பிறகு தன் முறையற்ற செயலுக்காக அவனிடம் மன்னிப்பு கோருகிறான் லாரன்ஸ். அவனைப் பிடிக்க வேறு வழி தெரியாததால்தான் தான் மேரியை அவமானப்படுத்த நேர்ந்தது என்றும் வருத்தப்படுகிறான். மேரி நல்லவள்தான் என்று ஊரார் முன் நிஜத்தை எடுத்துரைக்கிறான். தான்தான் மேரிக்கு கல்யாணம் செய்து வைத்தவன் என்ற உண்மையையும் கூறுகிறான். ஆண்டனி சாந்தமடைகிறான்.

தந்தை மாட்டக் கூடாது என்று நினைத்த மகளுக்கு ஏமாற்றமே!

பாதிரியாரின் ஆசைகளை நிறைவேற்றி விட்ட திருப்தி, மகளின் மானம் நண்பனால் சீண்டப்பட்டு பின் அவனாலேயே காக்கப்பட்ட கண்ணியம், பேத்தியின் கல்யாணம் என்ற சந்தோஷங்களில் மனம் லேசாக, முழு திருப்தியோடு தன்னை ஆண்டனி என்ற பழைய கைதியாக லாரன்ஸ் வசம் சந்தோஷமாக ஒப்படைக்கிறான் அருண் சிறைக் கதவுகளை எதிர்நோக்கியபடி.

'ஒளி' உலகுள்ளவரை வீசிக் கொண்டே இருக்கும்.

ஆண்டனி அனைவரையும் ஆட்டுவித்துக் கொண்டே இருப்பான்

அருண் அனுதினமும் அவரை நினைக்கச் செய்து கொண்டு தான் இருப்பார்.

இந்த விதி மாற்ற முடியாதது.

இனி....

'ஞான ஒளி' யில்

'நம் ஆண்டவனின் அரசாட்சி'

விரைவில் தொடரும்.

ஒளித் தாக்குதலில் சிக்குண்டு, சிதறிக் கிடக்கும்

வாசுதேவன்..[/QUOTE]

Russelldwp
3rd September 2013, 10:29 PM
Thank you for your information sir. We are eagerly awaiting for the issue about our only actor sivaji
Regards
C.Ramachandran, Trichy

Russelldwp
3rd September 2013, 10:35 PM
2545fig]2544[/attach]

Murali Srinivas
4th September 2013, 12:48 AM
மீள் வருகைக்கும் ஞானஒளி பதிவிற்கும் நன்றி வாசு சார். படத்தை ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் நடிகர் திலகத்தின் ஒவ்வொரு சின்ன சின்ன அசைவில் கூட அவர் கவிதை வடித்திருப்பதை உணர முடிகிறது. அண்மையில் பார்த்த போது மிகவும் ரசித்த ஒரு அசைவை நீங்கள் புகைப்படமாகவே அளித்து விட்டீர்கள்.

அருண் வீட்டிக்கு வரும் லாரன்ஸ். Mr. அருண் எங்கே என்று கேட்கும் லாரன்ஸிடம் அவர் இப்போதுதான் சாப்பிட போனார் என்று பதில் சொல்லும் வேலைக்காரன், அடாடா ஒரு விருந்து சாப்பாட்டை மிஸ் பண்ணிட்டேனே என போலியாக அங்கலாய்க்கும் லாரன்ஸ். எங்க எஜமானுக்கு விருந்து சாப்பாடே கஞ்சிதான் என கூறும் வேலைக்காரனிடம் பழக்க தோஷம் என நக்கலடிக்கும் லாரன்ஸ். அதிலிருந்து ஆரம்பிக்கும் இரண்டு பேரின் indirect மோதல். லாரன்ஸ் ரேடியோவை வைப்பது, அந்த நாள் ஞாபகம் பாடல் ஒலிப்பது, அந்நேரம் நடிகர் திலகம் மாடியில் நின்று மேஜரையே பார்ப்பது என தூள் கிளப்பும். அடுத்து சாத்துக்குடி பிழியும் ஷாட், மேஜரின் பொடி வைத்த கமன்ட், அப்படி எழுதிக் கொண்டே போகலாம். நான் சொன்ன புகைப்படத்திற்கு வந்து விடுகிறேன்.

அருண்தான் ஆண்டனியா என்பதை கண்டுபிடிக்க அருண் அணிந்திருக்கும் கூலிங் கிளாசை is it Ray Ban? என்று கேட்டுக் கொண்டே லாரன்ஸ் கழட்டி விட, அருணின் இரண்டு கண்களும் நன்றாகவே இருக்க, உங்க இடது கண் என்று இழுக்கும் மேஜரிடம், இடது கண்ணுக்கு என்ன நல்லாதானே இருக்கு என்றவாறு ஒரு கையால் வலது கண்ணை மூடிக் கொண்டு முதலில் டையை தொட்டு "You are wearing a black tie, பின் கையைப் பிடித்து -- ரிஸ்ட் வாட்ச் and the time is 4'o clock என்று சொல்லி விட்டு சோபாவின் பின் புறம் சென்று அதன் முதுகு புறத்தில் இடது கையை ஊன்றி, முகத்தின் இடது பக்கத்தை மட்டும் பக்கவாட்டில் காமிராவிற்கு காட்டிக் கொண்டே " இன்ஸ்பெக்டர், நம்ம அறிவுக்கு சரின்னு படற விஷயங்களை சில நேரங்களிலே நம்மாலே practical -a நிரூபிக்க முடியறதில்லை இல்லையா" என்று ஒரு மந்தகாச புன்னைகையுடன் கேட்கும் அந்த ஷாட்டை புகைப்படமாக்கி இங்கே பதிவு செய்ததற்கு மனமார்ந்த நன்றி.

ஒரு பக்கவாட்டு profile போஸிலேயே இவ்வளவு ஜால விதை காட்ட யாரால் முடியும்?

அன்புடன்

Murali Srinivas
4th September 2013, 12:52 AM
நடிகர் திலகத்தின் திரிக்கு புதிய வரவாக வந்திருக்கும் திருச்சி ராமச்சந்திரன் அவர்களே நல்ல இடம் நீங்கள் வந்த இடம் என கூறி மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன். இனி திருச்சி மாநகரில் நடிகர் திலகத்தின் முந்தைய சாதனைகள் மற்றும் தற்போது வெளியாகும் மறு வெளியிடுகளின் தகவல்களை அளிப்பீர்கள் என நம்புகிறோம்.

அன்புடன்

ஜோ,

பாச மலர் பற்றிய பதிவை வெகு விரைவில் பதிவிடுகிறேன்

Subramaniam Ramajayam
4th September 2013, 05:42 AM
நடிகர் திலகத்தின் திரிக்கு புதிய வரவாக வந்திருக்கும் திருச்சி ராமச்சந்திரன் அவர்களே நல்ல இடம் நீங்கள் வந்த இடம் என கூறி மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன். இனி திருச்சி மாநகரில் நடிகர் திலகத்தின் முந்தைய சாதனைகள் மற்றும் தற்போது வெளியாகும் மறு வெளியிடுகளின் தகவல்களை அளிப்பீர்கள் என நம்புகிறோம்.

அன்புடன்

ஜோ,

பாச மலர் பற்றிய பதிவை வெகு விரைவில் பதிவிடுகிறேன்

Hearty welcome to ramachandran trichy,
Great comeback to our beloved neyveliyar kindly keep writing every now and then. this request also for murali srinivas one of the stalwarts.
we are waiting and keep waiting for PAMMALAR master of thethread,

Gopal.s
4th September 2013, 06:31 AM
தமிழகத்தின் பிரபலமான நாளிதழ் ஒன்றில் நடிகர் திலகத்தைப் பற்றிய தொடர் ஒன்று வாரா வாரம் வெளிவர உள்ளது. விவரங்கள் மிக விரைவில்.
y .g .மகேந்திரா?

Gopal.s
4th September 2013, 06:40 AM
வாசு சார்,
தாங்களே ஒப்பு கொண்டாலும் ,ராகவேந்தர் சார் தங்களை வரவழைத்தது நானில்லை ,அந்தோனியும்,அருணும்தான் என்பதை பட்ட வர்தனம் ஆக்கி விட்டார். எப்படியாவது அற்புதமான கதையொன்றை சொல்லி திரும்பி வந்ததற்கு எல்லையற்ற மகிழ்ச்சி. இப்போதுதான் திரிக்கு உயிர் வந்தது போல் உள்ளது.

திரு ராமச்சந்திரன் அவர்களே ,வருக வருக என்று வரவேற்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம்.

ராகவேந்தர் சார், நீங்கள் பிறந்த நாள் விழா கொண்டாட்டங்கள் முன்னிட்டு பிசி என்று அறிகிறோம்.உங்கள் பங்களிப்பை எதிர்பார்க்கிறோம்.

முரளி- திருக்குறள் போல அழகான பதிவு.

கார்த்திக் சார்,ஆர்.நம்பி சார் ,கல்நாயக்,பரணி ஆகியோருக்கு நன்றிகள்.

joe
4th September 2013, 06:43 AM
ஜோ,

பாச மலர் பற்றிய பதிவை வெகு விரைவில் பதிவிடுகிறேன்
நன்றி

RAGHAVENDRA
4th September 2013, 07:04 AM
வாசு சார்,
தாங்களே ஒப்பு கொண்டாலும் ,ராகவேந்தர் சார் தங்களை வரவழைத்தது நானில்லை ,அந்தோனியும்,அருணும்தான் என்பதை பட்ட வர்தனம் ஆக்கி விட்டார். எப்படியாவது அற்புதமான கதையொன்றை சொல்லி திரும்பி வந்ததற்கு எல்லையற்ற மகிழ்ச்சி. இப்போதுதான் திரிக்கு உயிர் வந்தது போல் உள்ளது.

அவர் வருவார் வரவேண்டும் என எதிர்பார்த்து ஞான ஒளி சாக்கில் 1972ஐ ஆரம்பித்து, அருணையும் அந்தோணியையும் அழைத்துக் கொண்டு நெய்வேலி போய் அவர்களிடம் அந்த பொறுப்பை ஒப்படைத்து தரதரவென இழுத்து வரச் செய்தது யாராம்?

RAGHAVENDRA
4th September 2013, 07:06 AM
ராகவேந்தர் சார், நீங்கள் பிறந்த நாள் விழா கொண்டாட்டங்கள் முன்னிட்டு பிசி என்று அறிகிறோம்.உங்கள் பங்களிப்பை எதிர்பார்க்கிறோம்.

தொடர்ந்து கிட்டத்தட்ட தினமும் என் பெயரில் பதிவுகள் வருகிறதே... அதையெல்லாம் நான் போடவில்லையா... அய்யய்யோ.. யாரய்யா என் பெயரில் பதிவுகள் இடுவது... கண்டு பிடித்துச் சொல்லுங்களேன் ... புண்ணியமாய்ப் போகும் ... பொறுப்பை ஒப்படைத்து விட்டு அக்கடா என்று நடிகர் திலகத்தின் படங்களைப் பார்த்துக் கொண்டு பொழுதைக் கழித்துக் கொண்டிருக்கலாமே...

RAGHAVENDRA
4th September 2013, 07:08 AM
நடிகர் திலகத்தின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் 2013

திருச்சி மாவட்ட சிவாஜி மக்கள் நல இயக்கம் சார்பில் ஏற்பாடு செய்யப் பட்டுள்ள நடிகர் திலகம் பிறந்த நாள் நிகழ்ச்சியைப் பற்றிய ஓர் அறிவிப்பு

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTBirthDay2013/ANNATRICHY01fw_zps37c76484.jpg

அனுப்பிய திரு அண்ணாதுரை அவர்களுக்கு நன்றி.

Gopal.s
4th September 2013, 07:18 AM
நடிகர்திலகமும் success என்ற வார்த்தையும் உடன் பிறந்தவை. தொட்டதெல்லாம் வெற்றி என்பதுடன், தன்னுடைய நண்பர் பெயரை முன்மொழிந்து, தயாரிப்பாளரை நண்பரிடம் அனுப்பி வைத்த படமும் அந்த நண்பருக்கு திருப்பத்தை அளித்ததே திரைப்பட வாழ்வில்? தொட்டதெல்லாம் துலங்க வைத்து , படவுலகில் எல்லா வருடங்களும் அவருடைய வெற்றி வருடங்களே.

1972 நான் எடுத்தது ,அவருடைய திரையுலக வாழ்வின் சரியான நடு வருடம்.(1952-1999). அவருடைய நடிப்பின் variety அனைத்தும் கொண்ட வருடம். ராஜாவில் jamesbond ,ஞான ஒளியில் படு heavy சீரியஸ் ரோல்,பட்டிக்காடா பட்டணமா ஒரு கிராமத்து ஜாலி கலந்த குணசித்திரம், தவப் புதல்வன் பாதி குருடனாகும் பாடகன், வசந்த மாளிகை play boy &lover boy , நீதியில் தன்னால் பாதிக்க பட்ட குடும்பத்திற்கு பலன் தேடி தரும் ,அன்பு வேண்டி நிற்கும் லாரி டிரைவர்.

நான் 1972 தேர்ந்தெடுத்த காரணம் இந்த variety மட்டுமே. மற்ற படி எல்லா வருடங்களுமே நமக்கு சொந்தமான வெற்றி வருடங்களே.

ScottAlise
4th September 2013, 07:37 AM
Gopal Sir,

Even makers could not have thought in the angle of your character analysis of NT in ஞான ஒளி

Busy last week , so only today logged on to find ஞான ஒளி all the way

superb sir

Congrats to Karthik sir for 2000 posts

Subramaniam Ramajayam
4th September 2013, 07:38 AM
தமிழகத்தின் பிரபலமான நாளிதழ் ஒன்றில் நடிகர் திலகத்தைப் பற்றிய தொடர் ஒன்று வாரா வாரம் வெளிவர உள்ளது. விவரங்கள் மிக விரைவில்.

it should be DAILY THANTHI ---100percent my guess.

iufegolarev
4th September 2013, 07:42 AM
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/GnanaOli-Uyirvanicomavi_008754287.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/GnanaOli-Uyirvanicomavi_008754287.jpg.html)

ஞான ஒளி - இந்த ஆய்வை பார்ததுமுதல் ஞான ஒளி திரையில் இப்போது வந்தால் எப்படி இருக்கும் என்ற எண்ண அலைகள் என் மனதில் எழுகிறது ..!

எப்படி இருக்கும் நண்பர்களே ?

Subramaniam Ramajayam
4th September 2013, 07:42 AM
gopal sir.
what ever it is ,the selection of 1972 year very very apt choice. gana oli write-up a memorable POKKISAM for us and future generations.

JamesFague
4th September 2013, 11:08 AM
We are grateful to Mr Gopal Sir by bringing Mr Neyveliar to
post about Mr Antony & Mr Arun.

Now, we expect regular post from Mr Neyveliar.

Gopal.s
4th September 2013, 11:19 AM
ஒரு பாடல் காதலர்களின் காதல் ஆழத்தையும், அவர்கள் இணைவு நாடும் விழைவையும் , காம புயலால் அலைக்கழிக்க படும் மனதின் வன்மையையும், இன்பத்தை நாடி எதிர்பார்ப்பில் துடிக்கும் இரு உள்ளங்களையும் , ஒருசேர மெலடி மூலம் இணைக்க முடியுமா? கண்ணதாசன்- கே.வீ.எம்., TMS ,சுசீலா ,சிவாஜி-தேவிகா இணைவில் சாதித்தனர். முன்போ பின்போ இந்த வகை fusion நிகழவே இல்லை. என்னை மன அமைதியுடன் ,காம தீயில் வேக வைக்கும் இந்த அதிசய பாடல் "மடி மீது தலை வைத்து".

தேவிகா ஆசையுடன், எதிர்பார்ப்பு கலந்து காம விழைவு பார்வையை ,அழைப்புடன் கலந்து வீசி சிவாஜியின் முகத்தை வருட , அவர் அழைப்புக்கு முகமன் கூறி அந்த வருடலில் தோய இந்த காட்சி துவக்கம்.ஒரு போகன் வில்லா பூக்கள் சொரியும் மரத்தடியில் இருவரும் தழுவி ,தேவிகா உருண்டு சிவாஜியின் மனத்தை உருட்ட ,சேவல் குரலை கூவாதே என்ற செல்ல ஆணையிடுவார் கார்த்திக் சாரின் அண்ணி.

ஒரு இதமான ஓடல். துரத்தல் இன்ப விளையாட்டு.மணலில் ஒரு மூலையில் இருந்து இன்னொன்று ,பிறகு துவங்கிய இடத்திற்கு சென்று காதலனை வீழ்த்தியே விடுவார். தேவிகா ,சிவாஜியின் மார்பில் முகம் புதைக்கும் அழகே அழகு.(நீல வானம்,பலே பாண்டியா உதாரணங்கள்)பிறகு காதல் உள்ளங்கள் இணைவு,தேவிகாவின் நிறைவான அழைப்பு பார்வை, சிவாஜியின் வேட்கை நிறைந்த இதமான இன்ப பார்வை.கடைசியில் காட்ட படும் கலந்த காலடி சுவடுகள்

ஒரு erotic 1000வாலா வெடித்து நம் மனதை படார் படார் என துடிக்க வைக்கும், அந்த பாடல் இறுதி வரை தன் அமைதியை இழக்காது.

கடவுளே, எங்களை இப்படி இன்ப துடிப்பில் ஆழ்த்தவே இவர்களை படைத்து, எங்களையும் படைத்தாயோ??

KCSHEKAR
4th September 2013, 01:03 PM
திரு.ராமச்சந்திரன் அவர்களே

வருக!.

KCSHEKAR
4th September 2013, 01:06 PM
திரு.வாசுதேவன் அவர்களே

எவ்வளவோ சிரமங்கள், பணிகள் இருந்தாலும், கோபால் சாரின் ஞான ஒளி பதிவைக் கண்டவுடன் எழுச்சிபெற்று பதிவினை அளித்துள்ளீர்களே, அதுதான் நடிகர்திலகத்தின் வசீகரம், ஈர்ப்பு. ஞான ஒளி பதிவுடன் தங்களுடைய மீள் வருகைக்கு நன்றி.

JamesFague
4th September 2013, 02:00 PM
Mr Gopal Sir,

We can include the following songs in your love duet of NT.

1. Kannoru Pakkam with Vanishree in Niraikudam

2. Mannikanga Vendukiren with Padmini in Iru Malargal

3. Vellikinnamthan again with Vanishree in Uyarndha Manithan

4. Oru tharam with JJ in Sumathi En Sundari

etc.,

chinnakkannan
4th September 2013, 02:40 PM
இதையும் சேர்த்துக் கொள்ளலாம்..

நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய் - சாந்தி - என் டி.. தேவிகா
இனியவளே என்று பாடி வந்தேன் - சிவகாமியின் செல்வன் - வாணிஸ்ரீ யுடன்



Mr Gopal Sir,

We can include the following songs in your love duet of NT.

1. Kannoru Pakkam with Vanishree in Niraikudam

2. Mannikanga Vendukiren with Padmini in Iru Malargal

3. Vellikinnamthan again with Vanishree in Uyarndha Manithan

4. Oru tharam with JJ in Sumathi En Sundari

etc.,

IliFiSRurdy
4th September 2013, 03:10 PM
ஒரு பாடல் காதலர்களின் காதல் ஆழத்தையும், அவர்கள் இணைவு நாடும் அமைதியையும், காம புயலால் அலைக்கழிக்க படும் மனதின் வன்மையையும், இன்பத்தை நாடி எதிர்பார்ப்பில் துடிக்கும் இரு உள்ளங்களை ,மெலடி மூலம் இணைக்க முடியுமா? கண்ணதாசன்- கே.வீ.எம்., TMS ,சுசீலா ,சிவாஜி-தேவிகா இணைவில் சாதித்தனர். முன்போ பின்போ இந்த வகை fusion நிகழவே இல்லை. என்னை மன அமைதியுடன் ,காம தீயில் வேக வைக்கும் இந்த அதிசய பாடல் "மடி மீது தலை வைத்து".
கடவுளே, எங்களை இப்படி இன்ப துடிப்பில் ஆழ்த்தவே இவர்களை படைத்து, எங்களையும் படைத்தாயோ??

பொதுவாக காதலர்கள் தனியே சந்திக்கும் போதுஒரு fantasy நிலையிலேயே இருப்பார்கள்..அதில் பெண்ணின் romantic content அதிகமாகவும்,ஆணின் erotic content அதிகமாகவும் இருக்கும்.அந்த பெண்ணும் சாமர்த்தியமாக அந்த mix ratio நீர்த்து போகாமல் பார்த்துக்கொள்வாள்.அந்த ஆணோ அவளை தன பக்கம் இழுக்க முயற்சிப்பான்..இந்த erotica வை சரியான முறையில் வெளிப்படுத்த தலைவரை விட்டால் வேறு யார் உளர்??

கொஞ்சம் தவறினால் பெரியவர்(அவரேதான்) பாதைக்கு கொண்டு செல்லும். (பாலியல் பலாத்காரம்)

அடக்கி வாசிக்க முயன்றால் அது சிவகுமார் பாதை (சவலைக்குழந்தைபார்வை),

கொஞ்சம் கம்பீரத்தை சேர்க்க நினைத்தால் முத்துராமனின் குழப்ப பார்வையில் முடியும்.

ஜெமினியோ,அந்த பெண் "நீங்கள் வரலாம்" என stamp பேப்பரில் எழுதி கையெழுத்து இடும் வரை,
அவளிடமிருந்து தள்ளி சங்கல்ப முத்திரையில் நின்றிருப்பார்.

SSR அந்த பெண்ணை விட அதிகம் வெட்கப்படுவார்.

AVM ராஜன் எந்த பார்வையையும் "அருள்" பார்வையாக்கி விடுவார்..

ஜெய்ஷங்கரும்,ரவியும் அப்போ சின்ன பசங்க!

தலைவர் ஒருவர்தான் அவர் விரும்பிய அளவில் அதை வெளிப்படுத்துவார்..

இதை நண்பர் கோபால் அவர் "பாணியில்" அருமையாக விவரித்துள்ளார்.வாழ்த்துக்கள்.

Gopal.s
4th September 2013, 03:18 PM
நான் மிக மிக ரசித்த சிவாஜி காதல் பாடல் காட்சிகள் -

மயக்கம் என்ன - வசந்த மாளிகை
ஒரு தரம் ஒரே தரம்- சுமதி என் சுந்தரி
மடி மீது தலை வைத்து- அன்னை இல்லம்
நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய்-சாந்தி
அம்மா கண்ணு சும்மா சொல்லு- ஞான ஒளி
மன்னிக்க வேண்டுகிறேன்- இரு மலர்கள்
விண்ணோடும் முகிலோடும்-புதையல்
காணா இன்பம் கனிந்ததேனோ-சபாஷ் மீனா
கண்டேனே உன்னை கண்ணாலே -நான் சொல்லும் ரகசியம்
ஒரு நாளிலே உறவானதே-சிவந்த மண்
உந்தன் கண்ணுக்குள்ளே என்னை பாரு-மரகதம்
நெஞ்சில் குடியிருக்கும்-இரும்பு திரை
கண்ணொரு பக்கம் நெஞ்சொரு பக்கம்-நிறை குடம்
வெள்ளி கிண்ணந்தான்- உயர்ந்த மனிதன்
பொட்டு வைத்த முகமோ- சுமதி என் சுந்தரி
அங்கே மாலை மயக்கம்- ஊட்டி வரை உறவு
எத்தனை அழகு கொட்டி கிடக்குது-சிவகாமியின் செல்வன்
மேளதாளம்- சிவகாமியின் செல்வன்
இனியவளே- சிவகாமியின் செல்வன்
சிந்து நதிக்கரை ஓரம்- நல்லதொரு குடும்பம்
சந்தன குடத்துக்குள்ளே-தங்க சுரங்கம்
முத்துக்களோ கண்கள்-நெஞ்சிருக்கும் வரை
அலங்காரம் கலையாத-ரோஜாவின் ராஜா
வாழ நினைத்தால்- பலே பாண்டியா
அன்பாலே தேடிய என் அறிவு செல்வம்-தெய்வ பிறவி
காவியமா நெஞ்சின் ஓவியமா-பாவை விளக்கு
புது பெண்ணின் மனசை தொட்டு-பராசக்தி
ஆகாய பந்தலிலே- பொன்னூஞ்சல்
வருவான் மோகன ரூபன்- பொன்னூஞ்சல்
மதன மாளிகையில்-ராஜ பார்ட் ரங்கதுரை
வேலாலே விழிகள்- என்னை போல் ஒருவன்
பூ மாலையில்- ஊட்டி வரை உறவு
இதய ஊஞ்சல் ஆடவா- பேசும் தெய்வம்
ஒன்றா இரண்டா- செல்வம்
பாவை யுவராணி-சிவந்த மண்
கொடுத்து பார் பார் பார் உண்மை அன்பை-விடி வெள்ளி
பத்து பதினாறு முத்தம் முத்தம்-அஞ்சல் பெட்டி 520
காதலிக்க கற்று கொள்ளுங்கள்- தெய்வ மகன்
கல்யாண பொண்ணு- ராஜா
நீ வர வேண்டும்- ராஜா
கேட்டுக்கோடி உறுமி மேளம்-பட்டிக்காடா பட்டணமா
பள்ளியறைக்குள் வந்த- தர்மம் எங்கே
இரண்டில் ஒன்று நீ என்னிடம் சொல்லு-ராஜா
ரோஜாவின் ராஜா- ரோஜாவின் ராஜா
ஒஹஹோ லிட்டில் ப்ளவர் -நீல வானம்
ஓஹோஹோ ஓடும் எண்ணங்களே-நீல வானம்
இங்கே ஆஹா இங்கே-பாலாடை
கங்கை யமுனை- இமயம்
அந்தபுரத்தில்-தீபம்
நாலு பக்கம் வேடருண்டு- அண்ணன் ஒரு கோயில்
அந்தமானை- அந்தமான் காதலி
காதல் ராணி கட்டி கிடக்க-திரிசூலம்
திருமாலின் திரு மார்பில்-திரி சூலம்
யமுனா நதி இங்கே-கவுரவம்
இரவுக்கும் பகலுக்கும்-எங்கள் தங்க ராஜா
மும்மும்முமும் முத்தங்கள் நூறு-எங்கள் தங்க ராஜா
ஆடிக்கு பின்னே-சிவகாமியின் செல்வன்
வந்த இடம்- கலாட்டா கல்யாணம்
மெல்ல வரும் காற்று- கலாட்டா கல்யாணம்
தேவன் வந்தாண்டி- உத்தமன்
நாளை நாளை - உத்தமன்
தாஜா பண்ணினாத்தான்- டாக்டர் சிவா
செந்தமிழ் பாடும்- வைர நெஞ்சம்.
புது நாடகத்தில்-ஊட்டி வரை உறவு.
பாலக்காட்டு பக்கத்திலே-வியட்நாம் வீடு
இரவும் நிலவும்- கர்ணன்
கனவின் மாயா லோகத்திலே- அன்னையின் ஆணை
கண்களோ காதல் காவியம்- சாரங்கதாரா
தேனுண்ணும் வண்டு- அமர தீபம்
நிறைவேறுமா - காத்தவராயன்
முல்லை மலர் மேலே- உத்தம புத்திரன்
அன்பே அமுதே அருங்கனியே- உத்தம புத்திரன்
தேன் மல்லி பூவே- தியாகம்
ஆஹா மெல்ல நட -புதிய பறவை
சிட்டு குருவி- புதிய பறவை
எனது ராஜ சபையிலே - கல்யாணியின் கணவன்
அமைதியான-ஆண்டவன் கட்டளை
நான் என்ன சொல்லி விட்டேன்- பலே பாண்டியா
இன்று நமதுள்ளமே- தங்க பதுமை
மோகன புன்னகை வீசிடும்-வணங்காமுடி
இகலோகமே- தங்க மலை ரகசியம்
பாவாடை தாவணியில்- நிச்சய தாம்பூலம்
மாலை சூடும் மண நாள்-நிச்சய தாம்பூலம்.
வசந்த முல்லை போலே வந்து-சாரங்கதாரா
தாழையாம் பூ முடிச்சு- பாக பிரிவினை
என்னங்க சொல்லுங்க-எங்க மாமா
நதி எங்கே போகிறது- இருவர் உள்ளம்
அழகு சிரிக்கிறது-இருவர் உள்ளம்
கொடியசைந்ததும் -பார்த்தல் பசி தீரும்
யாருக்கு மாப்பிளை யாரோ- பார்த்தல் பசி தீரும்
கொக்கர கொக்கரக்கோ சேவலே- பதி பக்தி
மான் தோரண வீதியில்- பாட்டும் பரதமும்
கண்ணெதிரே தோன்றினாள்-இருவர் உள்ளம்
நான் பேச நினைப்பதெல்லாம்-பாலும் பழமும்

IliFiSRurdy
4th September 2013, 04:03 PM
நான் மிக மிக ரசித்த சிவாஜி காதல் பாடல் காட்சிகள் -


நான் பேச நினைப்பதெல்லாம்-பாலும் பழமும்

இந்த தளத்தில் நான் நுழைய பயப்படுவதே இதற்குத்தான்..

இப்படி ஒரு போஸ்டை பார்த்தே வெல வெலத்து போய் நிற்கையில்,இதை தொடர்ந்து
அத்தனை படங்களின் பாட்டு புஸ்தகங்களையும் ராகவேந்தர் சார் ஸ்கேன் செய்து போடுவார் பாருங்கள்..

நண்பர் கோபாலுக்கு ஒரு யோசனை..

தலைப்பை சற்று மாற்றியிருந்தால் ஓரிரு பாடல்களோடு முடித்திருக்கலாமே..

"நான் ரசிக்காத சிவாஜி காதல் பாடல் காட்சிகள் "-

mr_karthik
4th September 2013, 04:52 PM
ஞானஒளி யின் உணர்ச்சிப்பெருக்கில் மூழ்கியிருக்கும்போது இது என்ன இன்ப அதிர்ச்சி. வசந்த் தொலைக்காட்சியின் தேனருவி நிகழ்ச்சிக்கும், முரசு தொலைக்காட்சிக்கும் நான் அதிகமதிகம் நன்றி சொல்வது, இந்த 'மடிமீது தலைவைத்து' பாடலை அடிக்கடி ஒளிபரப்புவதற்காகத்தான். என்ன ஒரு அற்புதமான டூயட். கருப்பு வெள்ளையில், இன்டோரில் இவ்வளவு துல்லியமாக ஒரு காதல் பாடலை செதுக்கித் தந்த பி. மாதவனும் இங்கே நினைவு கூறப்பட வேண்டியவர்.

வாயின் சிவப்பு விழியிலே மலர்க்கண் வெளுப்பு இதழிலே
காயும் நிலவின் மடியிலே காலம் நடக்கும் உறவிலே
.................................................. ...................
இரவே இரவே விடியாதே இன்பத்தின் கதையை முடிக்காதே
சேவல் குரலே கூவாதே சேர்ந்தவர் உயிரை பிரிக்காதே
சேர்ந்தவர் உயிரை பிரிக்காதே..
.................................................. ...................
மங்கல குங்குமம் நெஞ்சிலே மல்லிகை மலர்கள் மண்ணிலே
பொங்கிய மேனி சிலிர்ப்பிலே பொழுதும் புலரும் அணைப்பிலே

மடிமீது தலைவைத்து விடியும்வரை தூங்குவோம்.

ஒவ்வொரு வார்த்தையும் துல்லியமாக கேட்கும் ஒலிப்பதிவு, ஒவ்வொரு அசைவும் துல்லியமாக தெரியும் ஒளிபபதிவு. ஒவ்வொரு வரியையும் அனுபவித்துப் பாடும் டி.எம்.எஸ். மற்றும் சுசீலா. நம்மை அடுத்த உலகத்துக்கு அழைத்துச் செல்லும் அண்ணனும் அண்ணியும். (ரொமான்ஸ்னா இதுதான் ரொமான்ஸ்). எக்காலத்துக்கும் திகட்டாத இளமை ஜோடி. பார்த்தாலே பரவசப்படுத்தும் பருவ ஜோடி. நினைத்தாலே நெஞ்சை அள்ளும் நிகரில்லா ஜோடி. மொத்தத்தில் 'மடிமீது தலைவைத்து' பாடல் காட்சி ஒரு பொக்கிஷம்.

பதிவிட்ட கோபால் அவர்களுக்கு பல்லாயிரம் நன்றிகள்....

chinnakkannan
4th September 2013, 05:14 PM
பாலிருக்கும் பழமிருக்கும் - பாவ மன்னிப்பு
இரவும் நிலவும் வளரட்டுமே - கர்ணன்
சிரிப்பில் உண்டாகும் ராகத்திலே - எங்கிருந்தோ வந்தாள்
எண்ணிரண்டு பதினாறு வயது (சோலோ தான்..பாட்டு வரிகள் அப்படியே கேப்ச்யூர் பண்ணியிருப்பார்)
ம்ம் இன்னும் வரும் நினைவுக்கு

mr_karthik
4th September 2013, 05:14 PM
தலைப்பை சற்று மாற்றியிருந்தால் ஓரிரு பாடல்களோடு முடித்திருக்கலாமே..

"நான் ரசிக்காத சிவாஜி காதல் பாடல் காட்சிகள் "-

பால் பொங்கும் பருவம் அதில்
நான் தங்கும் இதயம்

நடிகர்திலகம் - உஷா நந்தினி - குன்னக்குடி - மனிதனும் தெய்வமாகலாம்
(சொதப்பல்)

vasudevan31355
4th September 2013, 05:25 PM
ஆண்டனியின் அட்டகாசங்கள். (ஒரு கூர்பார்வை)

http://img214.imageshack.us/img214/479/gnanaoli00014.png


'ஞான ஒளி' டைட்டில் காட்சியில் ஆண்டனியாக ஆண்டவர் மணி அடிக்கும் போதே நடிகர் திலகத்தின் கொடி பட்டொளி வீசி பறக்க ஆரம்பித்து விடுகிறது. கள்ளங்கபடமில்லாமல் அவர் கோவில் மணியின் கயிற்றை லேசாக வலது கீழ் உதட்டை பற்களால் கடித்து சிரித்தபடியே அற்புத கேமராக் கோணங்களில் இழுத்து அடிக்கும் போது நம்மை நடிப்புக் கயிற்றால் கட்டிப்போட ஆரம்பித்து விடுவார். அப்போது வீச ஆரம்பிக்கும் நடிப்புப் புயல் 'வணக்கம்' கார்ட் போடும் வரை வலுப்பெற்றுக் கொண்டே போகுமே ஒழிய கொஞ்சம் கூட ஓயவே ஓயாது. குறையவும் குறையாது.

நடிகர் திலகத்திற்கும், விஜயநிர்மலாவுக்கும் ஏற்பட்ட குழாயடிச் சண்டையை பாதிரியார் தீர்த்து வைத்து அனுப்பியவுடன் வி .நிர்மலா பின்னாலேயே ஓடி வரும் இவர் "போறா பாரு நல்லா கோயில் காளை மாதிரி.... சும்மா லங்கு லங்குன்னு"... என்று சொல்லும்போது எதிரே ஒரு பாதிரியார் எதிர்பாராதவிதமாக வந்து விட 'டக்' கென்று கைகளைக் கோர்த்து குனிந்தபடியே ஒன்றும் தெரியாதவாறு ஒரு தோத்திர வணக்கத்தைப் போடுவார் பாருங்கள். படு நேச்சுரல்.

ஓட்டை பிரித்து வி.நிர்மலாவை கயிறு கொண்டு தூக்கும் போது அவருக்கே உரித்தான ஸ்பெஷல் காமெடி பஞ்ச் உண்டு. (குதிரு கனம் கனக்குறா) உடனே நாய் குரைக்கும். அதற்கு இவர் அலறுவதைக் கேளுங்கள் (உங்க அப்பா கூப்பிடறாரு...உங்க அப்பா கூப்பிடறாரு). என்னா ஒரு நக்கல்!... என்ன ஒரு சூப்பரான, கண்ணுக்கு மாறுதலான ஜோடி! இருவரின் உடல் வாகும் கனகச்சிதம். கோபால் சார் சொல்வது போல தலைவர், வி.நிர்மலா ஜோடி இன்னும் சில படங்களில் சேர்ந்து நம்மை சந்தோஷப் படுத்தியிருக்கலாம்.

(இந்த "பணமா பாசமா" புகழ் 'அலேக்' விஜய நிர்மலா தெலுங்குப் படவுலகின் சூப்பர் ஸ்டாராகத் திகழ்ந்த கிருஷ்ணா அவர்களின் மனைவி ஆவார். தலைவர் தெலுங்கில் நடித்த 'பெஜவாடா பெப்புலி' என்ற சூப்பர் ஹிட் படத்தை இயக்கியவர் இவரே! எனவே தலைவரை இயக்கிய பெண் இயக்குனர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.)

சேஷாத்திரி சவப்பெட்டி வேண்டாம் என்று மறுத்தவுடன் வரும் வேகம், கோபம் டாப். பிரசவ வேதனையில் மனைவி பக்கத்தில் இருக்க முடியாமல் காசாசை காட்டி இப்படி செய்து விட்டாரே என்ற ஆத்திரத்தில் கொதிக்கும் கொதிப்பு அற்புதம். ("இதுக்குன்னு யாராவது வராமலா போயிடுவாங்க" என்று சேஷாத்திரி பெட்டியைப் பார்த்து கூறியவுடன் "அடப் போய்யா...தெரியும்...என்ற அந்த சீற்றச் சீறல்,"யாரையாவது கொன்னுதான் உள்ள போடணும்" என்ற ஆத்திரக் கடுப்பு ஆங்காரமாய் வெளிப்படும்.)

ராணி இறந்து விட்ட சேதியை பாதிரியார் இவரிடம் சூசகமாகச் சொல்ல சொல்ல விஷயத்தை கொஞ்சம் கொஞ்சமாக புரிந்தும் புரிந்து கொள்ளாததுமான முக பாவங்கள்... மெல்ல சந்தேகப்பட்டு வாயிலிருந்து வரும் நம்ப முடியாத கேள்விகள்.

(பாதிரியார்: "இப்பவே தூக்கிக்கிட்டு போங்கன்னு சொல்லிட்டாங்கடா"....

ஆண்டனி: தூக்கிகிட்டா?... ஏன் சாமி! ராணியால நடந்து வர முடியாதா?")

"ராணி போயிட்டாடா" என்று பாதிரியார் இவரிடம் சொன்னவுடன் மிக மிக குளோஸ்-அப் காட்சியில் அதிர்ந்தபடியே இவர் முகத்தில் மற்ற இடங்கள் உணர்ச்சியற்ற நிலையில் அந்தக் கன்னக் கதுப்புக்கள் மட்டும் லேசாகத் துடிக்குமே... இவை யாவும் பூலோக விந்தைகள் அல்லாமல் வேறு என்ன!

ஊரிலிருந்து மகள் வந்தவுடன் தனக்காக அவள் என்ன வாங்கி வந்திருக்கிறாள் என்று ந.தி.கேட்க, சாரதா இவருக்காக தான் வாங்கி வந்திருக்கும் பொருள்களை எடுத்துக் கொடுக்க சற்று தூரத்தில் மரப்பெட்டியின் மேல் வைக்கப் பட்டிருக்கும் சூட்கேஸை எடுக்க ஓடுவார். நடிகர் திலகம் சாரதா ஓடுவதை திரும்பிப் பார்ப்பார். திரையில் பார்க்கும் நமக்கு நடிகர் திலகத்தின் பின் பக்க உருவம் முழுமையாகத் தெரியும். அந்தக் காட்சியை நன்கு கவனியுங்கள். இடது கை பழக்கம் உள்ளவனின் மானரிசங்கள் அப்போது அச்சு அசலாக அற்புதமாக நமக்கு இவரால் காட்டப்படும் ...அதாவது இடது கையை மிக லூஸாக விட்டு உடலை ஒட்டியபடி இல்லாமல் சற்று தள்ளி வைத்தவாறு, கொஞ்சம் மேல் நோக்கித் தூக்கியபடி அதுவும் கையை ஆட்டியவாறு இருப்பார். மிகக் கம்பீரமாக இயல்பான ஸ்டைலில் நிற்பார். அந்தப் பின்பக்கக் காட்சியின் போது கூட மார்பை இடது கையால் மறக்காமல் தடவி விடுவார். மருந்துக்குக்கூட தவறு நேராது.

ஊருக்கு வந்த மகளுடன் பாதிரியாரிடம் சென்றிருப்பார். உள்ளே போக மாட்டார். மகள் மாற்றி எடுத்து வந்த ஸ்ரீகாந்தின் இறுக்கமான பேண்ட், ஷர்ட்டை போட்டுக் கொண்டு ஒரு டையை ஏனோதானோவென்று கட்டிக் கொண்டு கூச்சப்பட்டுக் கொண்டு வெளியே நிற்பார். பாதிரியார் கூப்பிட்டவுடன் வருவதைப் பார்க்க வேண்டுமே! ("வாங்கோ... வாங்கோ துரை அவர்களே" என்று பாதிரியார் கிண்டலாகக் கூப்பிட்டவுடன் மகளிடம் "பார்த்தியா" நான்தான் அப்பவே சொன்னேன் இல்ல... சாமி என்னை துரைன்னு கூப்பிடுவாருன்னு" என்ற அர்த்தத்தில் சாரதாவிடம் கைகளால் சைகை செய்து பெருமிதத்தைக் காட்டுவார்)

பரீட்சை நல்லா எழுதியிருக்கியா? என்று பாதிரியார் சாரதாவிடம் கேட்பார். அதற்கு சாரதா "ஒ...யுனிவர்சிட்டியிலேயே பர்ஸ்ட்டா வருவேன் பாதர்" என்று பதிலுரைப்பார். இந்த உரையாடலை இடது கையால் மார்பை தேய்த்தபடியே கவனித்துக் கொண்டிருக்கும் என் தெய்வம் சாரதா பதில் கூறி முடித்தவுடன் இடது கையால் வலது கையை 'சபாஷ்' என்பது போல ஒரு தட்டு தட்டுவார். ஆஹா! என்ன அற்புதமான ரியாக்ஷன்.
மகள் யுனிவர்சிட்டியிலேயே பர்ஸ்ட்டா வருவாள் என்று சொன்னவுடன் தனக்கும் ஏற்படும் அந்தப் பெருமிதம், மகளின் படிப்பின் மேல் உள்ள நம்பிக்கை, "எம் பொண்ணு எம் பொண்ணுதான்" என்ற கௌரவ கர்வம், என்னுடைய வளர்ப்பு... வீண் போகுமா?....அனைத்தும் அந்த ஒரு கைகொட்டலிலேயே நமக்கு உணர்த்தப்பட்டு விடும். உரையாடல் செய்து கொண்டிருப்பது வேறு நபர்கள்... தான் சும்மாதான் நிற்கிறோம்... நமக்கென்ன என்று இருந்து விடாமல் அவர்களையும் கவனித்து அவர்களை மீறி இவர் காட்சிகளில் ஸ்கோர் செய்வதால்தான் உலக நடிகர்களின் குருவாகிறார். நமக்கு தெய்வமாகிறார்.

மேற்கூறிய காட்சி தொடரும். பாதிரியார் பேசியபடியே நடந்துவந்து சாய்வு நாற்காலியில் கைப்பிடிகளைப் பிடித்தபடி அமர்வார். வயது முதிர்ந்த பாதிரியார் அமர சிரமப்படும் போது அருகில் நிற்கும் நடிகர் திலகம் சட்டென பாதிரியார் உட்கார உதவி செய்ய பாதிரியாரின் தோள்களை ஆதரவாகப் பிடித்து அமரச் செய்வார். நடிப்பில் என்ன ஒரு கவனம்! என்ன ஒரு நேர்த்தி! என்ன ஒரு அசாத்திய ஞாபகத்தன்மை! வயதானவர்கள் அமரும் போது நம்மையறியாமல் நாம் உதவி செய்ய எத்தனிப்போமே அதை இந்தக் காட்சியில் அப்படியே நேரிடையாக இவரிடம் காணலாம். (சாரதாவிற்கும் அப்படி உதவி செய்யுமாறு காட்ட வேண்டும் என்று சொல்லிக் கொடுக்கப்பட்டிருக்கும்... hidden... புரிந்து கொள்க)

இன்னும் அந்தக் காட்சி தொடரும். "...... ஆண்டவன் இந்தப் பயலை எனக்குக் கொடுத்தாரு... இவன் மூலமா உன்னைக் கொடுத்தாரு" என்று சாரதாவிடம் பாதிரியார் கூற நடிகர் திலகம் சற்றே உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பாதிரியாரின் மடியின் கீழ் சிறு குழந்தை போல அமர்ந்து லேசான சிரிப்புடன் (உள்மனதில் தான் பட்ட கஷ்டங்களை நினைத்தபடி) அவரது கைகளைப் பிடித்தபடியே அமர்ந்திருப்பார். "பாவம்... வாழ்க்கையிலே எந்தவிதமான சுகத்தையும் காணாதவன்" என்று பாதிரியார் சாரதாவிடம் சொல்லி இவரிடம் இரக்கம் கொள்ளும்போது அமைதியான விசும்பலுடன் பாதிரியாரின் கைகளை இறுகப் பிடித்து அழுத்த முத்தங்கள் கொடுத்தபடியே முத்திரை நடிப்பைப் பதித்து பார்ப்பவர் இதயங்களை இடி விழுந்தது போல கலங்க வைப்பாரே! (எப்பேர்ப்பட்ட ஆய்வாளரும் இந்த ஒரு காட்சியில் நடிகர் திலகம் நடிக்கும் நடிப்புக்கான அர்த்தத்தை விளக்கி விடுங்கள் பார்ப்போம்!). அதுதான்யா என் தெய்வம்...எவராலும் நெருங்க முடியாத நடிகர் திலகம். இந்தக் காட்சியில் நான் எத்தனை முறை கதறி இருக்கிறேன் என்பதை என்னால் கூற முடியாது. நெஞ்சடைக்க, வாயடைக்க மேற்கண்ட பாராவை எழுதுவதற்குள் பெரும்பாடு பட்டு விட்டேன். இனி எழுதத் திராணி இன்று இல்லை.

நாளை தொடர்கிறேன்.

இனம் புரியா மனச் சுமையுடன்
ஆண்டனியின் அடிமை வாசுதேவன்.

mr_karthik
4th September 2013, 05:37 PM
சிறிது இடைவெளிக்குப்பின் தனக்கே உரித்தான முத்திரைப் பதிவுடன் வருகை புரிந்திருக்கும் 'நெய்வேலி ஆண்டனி அருண்' அவர்களை (முந்தைய பெயர் வாசுதேவன்) அன்புடன் வரவேற்பதுடன், அற்புதமான பதிவுக்கு நன்றியையும் சமர்ப்பிக்கிறோம்.

ஒவ்வொருவரையும் வரவழைக்க ஒரு யுக்தி இருக்கிறது. தங்களை வரவேற்கும் உத்தி, 'ஞானஒளி' பற்றி பதிவிடுவது.

(கோபால் சொல்கிறார்:: "கார்த்திக்கை வரவழைக்க வழி 'அண்ணனையும் அண்ணியையும்' இணைத்து ஒரு பதிவை இடுவது")...

Gopal.s
4th September 2013, 05:42 PM
அட பாவி!!? இப்படி போட்டு தாக்கறே ? மூர்க்கனும்,முதலையும் கொண்டது விடா என்ற வரிசையில் உன்னையும் சேர்க்கணும் போல.
பார்க்கும் போது கூட படம் இவ்வளோ பளிச்சுன்னு தெரியலை . நீ விளக்கும் போது ...அடடா....
முதலில் நீ போட்ட படங்களில், ராணி செத்த செய்தி அறிந்து, அவர் கண் துடித்து வேர்த்து விடும் ஸ்டில் ...
superb தலைவா....

Gopal.s
4th September 2013, 05:47 PM
(கோபால் சொல்கிறார்:: "கார்த்திக்கை வரவழைக்க வழி 'அண்ணனையும் அண்ணியையும்' இணைத்து ஒரு பதிவை இடுவது")...
தலைவா,
தலைவரை analyse பண்ணுவதில் கொஞ்சமாவது தொண்டர்களை பண்ண மாட்டோமா? என்னுடைய Achilles' heel உங்களுக்கும் தெரியுமே? "எத்தனை "தரம் சொல்லியாயிற்று?

Gopal.s
4th September 2013, 05:57 PM
ஐந்தாவது முடித்து ஆறாவது தொடங்க இருக்கும் மாற்று திரி நண்பர்கள் எஸ்வி,ரவிச்சந்திரன்,கலியபெருமாள்,ஜெய்ஷங்கர்,ராமமூர ்த்தி,மாசானம்,ரூப் ,சைலேஷ் பாபு,Selvakumar ஆகியோருக்கு வாழ்த்துக்கள்.

Richardsof
4th September 2013, 06:11 PM
1500 வது பதிவாக நம் மக்கள் தி லகம் பாகம் -6 திரிக்கு எங்கள் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்த இனிய நண்பர் திரு கோபால் அவர்களுக்கும் , நடிகர் திலகம் இனிய நண்பர்கள் அனைவருக்கும் மக்கள் திலகம் நண்பர்கள் சார்பாக நன்றியினை தெரிவித்து கொள்கின்றேன் .

ஒளியின் - பதிவுகளில் திக்குமுக்காடும் உங்களுக்கு எங்கள் ஒளிவிளக்கு சார்பாக வாழ்த்துக்கள் .

mr_karthik
4th September 2013, 06:32 PM
அன்புள்ள நெய்வேலி ஆண்டனி அருண் சார்,

நடிகர்திலகம் - விஜயநிர்மலா ஜோடிப்பொருத்தம் பற்றி திரியில் எல்லோரும் பலமுறை பேசியிருக்கிறோம். என்ன செய்வது நல்ல நல்ல ஜோடிகளை விட்டு விட்டு, 'கதறல்' விஜயாவுடனும், 'அழுகை' சுஜாதாவுடனும், 'அலட்டல்' ஸ்ரீபிரியாவுடனும் அதிக படங்களில் ஜோடியாகப் பார்க்க வேண்டும் என்றாகி விட்டது.

சிங்கம் ஒரு குட்டி போட்டாலும் அது சிங்கக்குட்டி என்பது போல ஒரே பாடல் என்றாலும் 'அம்மா கண்ணு சும்மா சொல்லு ஆசையில்லையோ' பாடல் நமக்குப் பொக்கிஷப் பாடலாகி விட்டதே.

கூரை மேட்டில் வைத்து தலையில் முட்ட கீழே உருண்டுவிழும் வி.நிர்மலாவைத் தேடி அதிர்ச்சியடைவதும், வைக்கோல் மீது விழுந்த நிர்மலா பொய்க்கோபத்துடன் எழுவதும், கோழிக்கூடைக்குள் ஒளிந்த காதலியை கூடையோடு உருட்டிக்கொண்டு போவதும், பின்னர் தானும் கூடைக்குள் நுழைந்து கொள்வதும், ஏணியை தலையில் மாட்டி சுழற்றுவதும் கவிதைக்குள் கவிதை அல்லவா?. எத்தனை முறை பார்த்தும் அலுக்கவில்லையே...

Russelldwp
4th September 2013, 06:50 PM
திரு.ராமச்சந்திரன் அவர்களே

வருக!.
Dear Sir

Thanks for your invitation and very happy to join this forum

Russelldwp
4th September 2013, 07:22 PM
Dear Gopal Sir

Thanks for your invitation and your analysis about nadigar thilagam is fantastic

Russelldwp
4th September 2013, 07:43 PM
Hearty welcome to ramachandran trichy,
Great comeback to our beloved neyveliyar kindly keep writing every now and then. this request also for murali srinivas one of the stalwarts.
we are waiting and keep waiting for PAMMALAR master of thethread,

Thanks for your invitation and surely i will provide all information about my nadigar thilagam sivaji's news in my district
Regards
C.Ramachandran

vasudevan31355
4th September 2013, 08:18 PM
திரியின் புதிய அங்கத்தினர் திரு.ராமச்சந்திரன் சார்,

வருக! வருக! நடிகர் திலகத்தின் புகழ் பாட வருக!

வரவேற்று வாழ்த்தும்

நெய்வேலி வாசுதேவன்.

RAGHAVENDRA
4th September 2013, 09:28 PM
அன்புள்ள நண்பரே,
வருக வருக... நடிகர் திலகத்தின் புகழ் பரப்ப தங்கள் பங்களிப்பைத் தருக...

இதோ தங்களுக்காக

http://youtu.be/pGTCW1HmBzU

RAGHAVENDRA
4th September 2013, 09:31 PM
வாசு சார்
கோபால் சாரின் ஆய்வுக் கட்டுரை ஒரு பக்கம் என்றால் மறுபக்கம் தங்களுடைய ஆய்வுக் கட்டுரை என ஞான ஒளி திரைக்காவியத்தை அக்கு வேறு ஆணிவேறாக அலசி விட்டீர்கள். இனி இதற்கு மேல் மற்றவர்களுக்கு புதியதாய்த் தோன்றினால் தான் உண்டு.

சூப்பர்... கலக்குங்கள்...

J.Radhakrishnan
4th September 2013, 09:50 PM
ஆண்டனியின் அட்டகாசங்கள். (ஒரு கூர்பார்வை)

http://img214.imageshack.us/img214/479/gnanaoli00014.png


இன்னும் அந்தக் காட்சி தொடரும். "...... ஆண்டவன் இந்தப் பயலை எனக்குக் கொடுத்தாரு... இவன் மூலமா உன்னைக் கொடுத்தாரு" என்று சாரதாவிடம் பாதிரியார் கூற நடிகர் திலகம் சற்றே உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பாதிரியாரின் மடியின் கீழ் சிறு குழந்தை போல அமர்ந்து லேசான சிரிப்புடன் (உள்மனதில் தான் பட்ட கஷ்டங்களை நினைத்தபடி) அவரது கைகளைப் பிடித்தபடியே அமர்ந்திருப்பார். "பாவம்... வாழ்க்கையிலே எந்தவிதமான சுகத்தையும் காணாதவன்" என்று பாதிரியார் சாரதாவிடம் சொல்லி இவரிடம் இரக்கம் கொள்ளும்போது அமைதியான விசும்பலுடன் பாதிரியாரின் கைகளை இறுகப் பிடித்து அழுத்த முத்தங்கள் கொடுத்தபடியே முத்திரை நடிப்பைப் பதித்து பார்ப்பவர் இதயங்களை இடி விழுந்தது போல கலங்க வைப்பாரே! (எப்பேர்ப்பட்ட ஆய்வாளரும் இந்த ஒரு காட்சியில் நடிகர் திலகம் நடிக்கும் நடிப்புக்கான அர்த்தத்தை விளக்கி விடுங்கள் பார்ப்போம்!). அதுதான்யா என் தெய்வம்...எவராலும் நெருங்க முடியாத நடிகர் திலகம். இந்தக் காட்சியில் நான் எத்தனை முறை கதறி இருக்கிறேன் என்பதை என்னால் கூற முடியாது. நெஞ்சடைக்க, வாயடைக்க மேற்கண்ட பாராவை எழுதுவதற்குள் பெரும்பாடு பட்டு விட்டேன். இனி எழுதத் திராணி இன்று இல்லை.

நாளை தொடர்கிறேன்.

இனம் புரியா மனச் சுமையுடன்
ஆண்டனியின் அடிமை வாசுதேவன்.

டியர் வாசு சார்,
மிக நீண்ட இடைவெளிக்கு பின் தங்கள் அபிமான ஞான ஒளி அற்புத பதிவின் மூலம் வந்து உள்ளீர்கள்.
திரு கோபால் அவர்கள் கூறியது போல் தாங்கள் பதிவு செய்த ஸ்டில் களை பார்க்கும் போது தெரியாத நுணுக்கங்கள் தங்களின் நீண்ட உணர்ச்சி மிக்க பதிவை கண்டவுடன் தெரிந்தது.

iufegolarev
4th September 2013, 10:14 PM
திரியின் புதிய அங்கத்தினர் திரு.ராமச்சந்திரன் சார்,

வருக! வருக! நடிகர் திலகத்தின் புகழ் பாட வருக!

வரவேற்று வாழ்த்தும்

நெய்வேலி வாசுதேவன்.

ஞானஒளி திரைப்படத்தில் வரும் பாதிரியாரின் குரலில் -

யாரது ......வாசுதேவனா .....இபுடிதான் நீ சின்ன வயசுல....எதுகெடுத்தாஆஆஆஆஆலும் பொசுக்கு..பொசுக்குன்னு கொவிசுப்பே...அபெல்லாம் உனக்கு இந்த ஞானஒளி ஒலிச்சித்திரம் தான் நான் போட்டு காட்டுவேன்.....மறந்துட்டியா...இங்க ரெகுலரா வாடா.....மொரட்டு பயலே ......

iufegolarev
4th September 2013, 10:21 PM
Dear RC,

Welcome to the family of nadigar thilagam hubbers forum.

Heartiest thanks for your contributions, comments etc., that have come, that are about to come and that will come !!

Dedicating a song for you

https://www.youtube.com/watch?v=XbRUcqDobU8

Regards

Gopal.s
5th September 2013, 07:31 AM
உலக தமிழர்களின் ஒரே பெருமையான நம் தேவர் குலத்தில் உதித்த நடிப்பு தேவன் பிறந்த விழா கொண்டாட்டங்களுக்கு தயாராகி கொண்டிருக்கும் ரசிக பக்த நிர்வாகி மக்களுக்கு எனது பணிவான வேண்டுகோள்.

அங்கீகாரம் வேண்டுவது மனிதனின் பிறந்த குணம். அவற்றை உணர்ந்து மற்றவர்களை அங்கீகரித்தவர்களே சிறந்த தலைவர்களாக,நிர்வாகிகளாக ,மனிதர்களாக உயர முடிந்தது. இதை public relations ,marketing ,Loyalty building என பல கோணங்களில் பார்க்க வேண்டும். உலகத்திலேயே அதி உன்னத திறமையின் பின் கட்டுண்டிருக்கும் நாம் நம்மவர்களை அங்கீகரிக்கவும் கற்க வேண்டும்,அதுவும் உரிய நேரத்தில்.

அவரோடு பணி புரிந்த,நம்மிடையே வாழும் கலைஞர்களை அங்கீகரித்து கவுரவிப்பது முக்கியம். மறுக்கவில்லை. ஆனால் அதே மேடையில், அவர் புகழை தரணியில் காலமெல்லாம் நிலைத்திருக்க பலன் கருதாது உழைக்கும் நம் கிரிஜா ,ராகவேந்தர்,பம்மல் சுவாமி நாதன், பேரவை சந்திர சேகர் போன்றவர்களையும் மேடையேற்றி மரியாதை செய்வது இன்றியமையாதது அல்லவா?

சச்சுவும் ,ராஜசுலோச்சனாவுமா ,விழுந்து விழுந்து அவர் மணி மண்டபத்துக்காகவும்,ஆவணங்கள் சேர்த்து சாதனைகளை உலகுக்கு ஓங்கி சொல்லவும்,வெப்சைட் தொடங்கி உயிரை கொடுத்து தினமும் அதை அப்டேட் செய்து, ஊரூராக நிகழ்ச்சிகள் நடத்தி பத்திரிகைகள் நாளிதழ்கள் நம்மை கவனிக்கும் படி செய்கின்றனர்?

அங்கீகாரத்தின் மூலம் பழைய மனமாச்சரியங்களை துறந்து அவருக்காக ஒருங்கிணைந்து பாடு பட வேண்டிய தருணம் வந்து விட்டதை கர்ணன் உணர்த்தவில்லையா?

நான் என் பணியை செவ்வனே செய்து விட்டேன்,அவரை உலகுக்கு எப்படி உணர்த்த வேண்டுமோ அப்படி உணர்த்தி விட்டேன் எனது எழுத்துக்களின் மூலம். எனக்கு அங்கீகாரம் வேண்டவில்லை .ஏனென்றால் எனது தொழிலும் வாழ்க்கை வெற்றியுமே அதை எனக்கு வழங்கி விட்டதால் அது எனக்கு தேவையுமல்ல. இது எனக்கு ஒரு ஆத்ம திருப்தியே. ஆனால் எல்லோரும் அப்படி எண்ண வேண்டிய தேவையில்லையே?

தயவு செய்து கவனிக்க வேண்டியவர்கள் கவனிப்பார்களா?

joe
5th September 2013, 08:27 AM
என்னைக் கேட்டால் இந்த மணிமண்டப விடயத்தில் அரசுகளையோ , நன்றி கெட்டவர்களால் நிரம்பியுள்ள நடிகர் சங்கத்தையோ எதிர்பார்த்திருப்பதில் பயனில்லை . சிவாஜியின் குடும்பத்தினர் நினைத்தால் அவர்களே இதை செய்ய முடியும் .அவர்களோடு ரசிகர்களும் தங்கள் பங்கை கொடுக்கலாம் . உலகெங்கும் வாழும் நடிகர் திலகம் ரசிகர்கள் கிள்ளிக் கொடுத்தாலே மணிமண்படம் கட்ட முடியும் . யார் அதை சரியாக ஒருங்கிணைப்பார்கள் என்பது மட்டுமே கேள்வி .

vasudevan31355
5th September 2013, 08:36 AM
என்னைக் கேட்டால் இந்த மணிமண்டப விடயத்தில் அரசுகளையோ , நன்றி கெட்டவர்களால் நிரம்பியுள்ள நடிகர் சங்கத்தையோ எதிர்பார்த்திருப்பதில் பயனில்லை . சிவாஜியின் குடும்பத்தினர் நினைத்தால் அவர்களே இதை செய்ய முடியும் .அவர்களோடு ரசிகர்களும் தங்கள் பங்கை கொடுக்கலாம் . உலகெங்கும் வாழும் நடிகர் திலகம் ரசிகர்கள் கிள்ளிக் கொடுத்தாலே மணிமண்படம் கட்ட முடியும் . யார் அதை சரியாக ஒருங்கிணைப்பார்கள் என்பது மட்டுமே கேள்வி .

இதே பதிலைத்தான் ஒரு வரி கூட மாறாமல் நேற்று 'கோல்ட் ஸ்டார்' சதீஷ் அவர்கள் என்னிடம் தொலைபேசியில் கேட்கும் போது கூறினேன்.

RAGHAVENDRA
5th September 2013, 08:42 AM
Contents removed.

Dear Gopal,
I hope you understand the context and my stance regarding your subject of posting. I do not want my post and never had intention to hurt any body any time any how which includes you too.
Pls continue your in-valuable postings here.
Don't bother about other threads.
Raghavendran.

P.S. தங்கள் ஆய்வுக்கேற்ற தீனி வர உள்ளது. தயாராகுங்கள்.

KCSHEKAR
5th September 2013, 10:32 AM
ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்!. எதிர்காலத் தூண்களை, வருங்கால சிற்பிகளை உருவாக்கும் பணியிலிருக்கும் ஆசிரியப் பெருமக்களை நினைவுகூர்வோம்.

இதோ நமது புரொபசர் கிருஷ்ணன்.
http://www.youtube.com/watch?v=02ppkGxBRi0

Gopal.s
5th September 2013, 01:23 PM
Deleted.