View Full Version : Paattukku Paattu (Version 2021)
Pages :
1
2
3
4
5
[
6]
7
8
9
10
11
NOV
25th May 2024, 06:57 AM
உடல் தழுவத்தழுவ நழுவிப் போகுதே
கைகள் நழுவ நழுவத் தழுவிப் பார்க்குதே
அந்த வானம் மண்ணில் இறங்கும் நல்ல நேரமானதே
pavalamani pragasam
25th May 2024, 08:25 AM
நல்லநாள் பார்க்கவோ நேரம்
பார்த்தே பூமாலை சூட
NOV
25th May 2024, 09:19 AM
பூமாலை வாங்கி வந்தான் பூக்கள் இல்லையே
செவி இல்லை இங்கொரு இசை எதற்கு
pavalamani pragasam
25th May 2024, 10:42 AM
இசை கேட்டால் புவி அசைந்தாடும் அது இறைவன் அருளாகும்
NOV
25th May 2024, 12:37 PM
இறைவன் படைத்த உலகை எல்லாம்
மனிதன் ஆளுகின்றான்
மனிதன் வடித்த சிலையில் எல்லாம்
இறைவன் வாழுகின்றான்
pavalamani pragasam
25th May 2024, 06:09 PM
சிலை எடுத்தான் ஒரு சின்ன பெண்ணுக்கு கலை கொடுத்தான் அவள் வண்ண கண்ணுக்கு
NOV
25th May 2024, 08:28 PM
சின்ன பொண்ணு சேலை செண்பக பூ போல
கையே மாராப்பு அருகே நீ வா வேணாம் வீராப்பு
pavalamani pragasam
25th May 2024, 09:41 PM
வேணாம் வேணாம் விழுந்திடுவேனா கண்கள் கண்டால் கவிழ்ந்திடுவேனா
NOV
26th May 2024, 06:11 AM
கண்டா வர சொல்லுங்க
கர்ணன கையோட கூட்டி வாருங்க
pavalamani pragasam
26th May 2024, 08:35 AM
வரவேண்டும் வாழ்கையில் வசந்தம்
அது தரவேண்டும் வளர்க்காதல் இன்பம்
NOV
26th May 2024, 09:10 AM
வாழ்க்கை எனும் ஓடம் வழங்குகின்ற பாடம்
மானிடரின் மனதினிலே மறக்க ஒண்ணா வேதம்
pavalamani pragasam
26th May 2024, 10:33 AM
ஓடம் நதியினிலே ஒருத்தி மட்டும் கரையினிலே உடலை விட்டு உயிர்
NOV
26th May 2024, 11:46 AM
ஒருத்தி மகனாய்ப் பிறந்தவனாம்
உருவில் அழகாய் வளர்ந்தவனாம்
ஒருத்தி மனதில் நிறைந்தவனாம்
உயிரில் உயிராய்க் கலந்தவனாம்
pavalamani pragasam
26th May 2024, 12:16 PM
அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே
அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல்
உள்ளங்கள் பந்தாடுதே
NOV
26th May 2024, 02:12 PM
காதல் ஒரு butterfly போல வரும்
வந்தால் அது கண்ணாமூச்சி ஆடி விடும்
சிறு பிள்ளை போலே பின்னாலே ஓடும்
காணமல் போனால் கண்ணாலே தேடும்
pavalamani pragasam
26th May 2024, 06:40 PM
கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா…
நான் கண்ணாடிப் பொருள் போலடா…
NOV
26th May 2024, 08:46 PM
கண்ணாடி சிலையே கண்ணாடி சிலையே முன்னாடி நின்றாய் முகம் பார்த்தேன்
மின்சார மழையே மின்சார மழையே எனக்குள்ளே பெய்தாய் நான் சாய்ந்தேன்
pavalamani pragasam
26th May 2024, 08:56 PM
மின்சார கண்ணா மின்சார கண்ணா என் மன்னா என் ஆணை கேட்டு என் பின்னே வாராய்
NOV
27th May 2024, 05:56 AM
என் தாயின் மீது ஆணை எடுத்த சபதம் முடிப்பேன்
என் தாயின் மீது ஆணை பிறந்த கடனை அடைப்பேன்
pavalamani pragasam
27th May 2024, 08:03 AM
ஆணையிட்டால் ஆடுகிறேன்
அழுத வண்ணம் பாடுகிறேன்
மாலையிட்ட பாவத்திற்கு
பரிகாரம் தேடுகிறேன்
(அடடா, இதில் பரிகாரம் இருப்பது ஞாபகம் வரவில்லையே!)
NOV
27th May 2024, 09:16 AM
அழுத பிள்ளைக்கே பால் உணவளிப்பாள் அன்னை என்பர்கள்
அழவலி இல்லாக் கொழுது நேர்சிறு குழவிக்கும் கொடுப்பாள்
குற்றம் அன்றது மற்றவள் செயலே
pavalamani pragasam
27th May 2024, 09:53 AM
குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி கொள்வதென்பதேது
NOV
27th May 2024, 10:45 AM
நிம்மதி என்ன விலை
சொன்னால் வாங்குவேன் இந்த பூமியிலே
pavalamani pragasam
27th May 2024, 12:33 PM
இந்த மன்றத்தில் ஓடிவரும் இளம் தென்றலை கேட்கின்றேன் நீ சென்றிடும் வழியினிலே என் தெய்வத்தை காண்பாயோ
NOV
27th May 2024, 02:09 PM
என் தெய்வ வீணையே நீ பேசினால் என்ன
ஒரு தேவ கானமே நீ பாடினால் என்ன
pavalamani pragasam
27th May 2024, 02:57 PM
என்ன சத்தம் இந்த நேரம்…
குயிலின் ஒலியா…
என்ன சத்தம் இந்த நேரம்…
நதியின் ஒலியா…
கிளிகள் முத்தம் தருதா…
அதனால் சத்தம் வருதா
NOV
27th May 2024, 05:11 PM
இந்த நிமிஷம் என் நிமிஷம் எந்தன் வாழ்வில் பொன் நிமிஷம் பாலை வனத்தில் ஒரு தேவதை மேகம் பாலை வார்த்ததொரு பால் நிமிஷம்
pavalamani pragasam
27th May 2024, 06:00 PM
பொன் என்பேன் சிறு பூவென்பேன் காணும் கண் என்பேன் வேறு என்னென்பேன்
NOV
27th May 2024, 06:56 PM
சிறு தொடுதலிலேசின்ன சின்னதாய் சிறகுகள்
பூக்க வரும் இரவுகளில் இன்னும் இன்னும் நான் கேட்க
pavalamani pragasam
27th May 2024, 08:04 PM
இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் என்ன ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லுப் பொண்ணே
NOV
28th May 2024, 06:33 AM
நில்லு நில்லு மேகமே நிலவை மூடி மறைக்காதே
உள்ளம் மகிழும் மங்கையர் வருந்த
உலகில் இருளில் இறைக்காதே
pavalamani pragasam
28th May 2024, 07:33 AM
மங்கையரில் மகராணி · மாங்கனி போல் பொன் மேனி · எல்லை இல்லா கலைவாணி · என் உயிரே யுவராணி
NOV
28th May 2024, 08:25 AM
பொன் வானிலே எழில் வெண் மேகமே
பன்னீரில் நீராடும் பெண் அன்னமே
pavalamani pragasam
28th May 2024, 10:42 AM
பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க
பொன்மேகம் சிவந்த வானம் எங்கும் மிதக்க
NOV
28th May 2024, 11:30 AM
பொன்னான மனம் எங்கு போகின்றது சொல்லுங்கள் மேகங்களே
என்னாசை கண்ணன் நாள் பார்த்து வந்தான் இங்கே வா தென்றலே
pavalamani pragasam
28th May 2024, 11:39 AM
கண்ணன் ஒரு கைக்குழந்தை
கண்கள் சொல்லும் பூங்கவிதை
கன்னம் சிந்தும் தேன் அமுதை
கொண்டு செல்லும் என் மனதை
NOV
28th May 2024, 02:38 PM
தேன் மழையிலே தினம் நனையும் உன் நெஞ்சமே
வா ரசிகையே சங்கீதம் நானே
pavalamani pragasam
28th May 2024, 03:45 PM
நெஞ்சமே நெஞ்சமே
கொஞ்சியே சொல்லுதே ஆ-ரீ-ரோ
தஞ்சமே தஞ்சமே
சொந்தமாய் வந்ததே ஆராரிரோ
NOV
28th May 2024, 04:38 PM
கொஞ்சி பேசிட வேணாம் உன் கண்ணே பேசுதடி
கொஞ்சமாக பாா்த்தா மழைசாரல் வீசுதடி
pavalamani pragasam
28th May 2024, 06:17 PM
வேணாம் வேணாம் விழுந்திடுவேனா கண்கள் கண்டால் கவிழ்ந்திடுவேனா ஓரு முறை சிரிக்கிறாய் என் உயிரினை
NOV
28th May 2024, 06:56 PM
ஒருமுறை பிறந்தேன், ஒருமுறை பிறந்தேன்
உனக்கென உயிரையும் நான் கொடுப்பேன்
மனதினில் உன்னை சுமப்பதினாலே
pavalamani pragasam
28th May 2024, 08:19 PM
உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல
உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல
நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல
நீ இல்லாமல் நானும் நானல்ல
NOV
29th May 2024, 06:28 AM
நீ இல்லாத போது ஏங்கும் நெஞ்சம் சொல்லாத கதை நூறு
அது நில்லாத புது ஆறு
உன்னோடு தான் திருமணம் உறவினில் நறுமணம்
pavalamani pragasam
29th May 2024, 08:18 AM
ஆறு அது ஆழம் இல்ல
அது சேரும் கடலும் ஆழம் இல்ல
ஆழம் எது அய்யா
அந்த பொம்பள மனசு தான்யா
NOV
29th May 2024, 09:15 AM
அந்த அருவி போல் அன்ப தருவாளே
சின்ன அறிவிப்பும் இன்றி சுடுவாளே
ஐயோ தும்மிடுடி தும்மிடுடி ஆயிசு நூறாக
pavalamani pragasam
29th May 2024, 10:08 AM
ஐயோ பத்திகிச்சு பத்திகிச்சு பத்திகிச்சு ,
ஓஹ் , ஓஹ , கண்ணே ,
ஐயோ பத்திகிச்சு பத்திகிச்சு பத்திகிச்சு ,
வா வா பெண்ணே ,
நெஞ்சோ சிக்கிகிச்சு சிக்கிகிச்சு சிக்கிகிச்சு
NOV
29th May 2024, 02:45 PM
வா வா பெண்ணே
என் பாடலின் இசையே
நீ வா வா புது ராகம் செய்வோம்
pavalamani pragasam
29th May 2024, 03:30 PM
புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது
இங்கு சொல்லாத இடம் கூடக் குளிர்கின்றது
மனம் சூடான இடம் தேடி அலைகின்றது
NOV
29th May 2024, 04:16 PM
இடம் தருவாயா மனசுக்குள்ளே இடம்
தருவாயா மனசுக்குள்ளே
தர மாட்டேன் தர மாட்டேன் இடம் தர மாட்டேன்
உள்ளே சென்றால் மனசை விட்டு வர மாட்டாய்
pavalamani pragasam
29th May 2024, 05:51 PM
மனசுக்குள்ளே தாகம் வந்துச்சா வந்தல்லோ வந்தல்லோ மயிலிறகில் வாசம் வந்துச்சா
NOV
29th May 2024, 07:01 PM
மயிலிறகே மயிலிறகே வருடுகிறாய் மெல்ல
மழை நிலவே மழை நிலவே விழியில் எல்லாம் உன் உலா
pavalamani pragasam
29th May 2024, 08:13 PM
மெல்ல..மெல்ல மெல்ல எந்தன் மேனி நடுங்குது மெல்ல..
சொல்ல.. சொல்ல சொல்ல நெஞ்சம் துள்ளுது துள்ளுது
NOV
30th May 2024, 06:08 AM
எந்தன் கண்ணில் ஏழுலகங்கள் வாராய் கண்ணா வா
நான் இன்று நானும் இல்லை என் நெஞ்சில் நாணம் இல்லை
pavalamani pragasam
30th May 2024, 08:08 AM
நாணமோ
இன்னும் நாணமோ
இந்த ஜாடை நாடகம்
என்ன அந்த பார்வை
கூறுவதென்ன
NOV
30th May 2024, 10:48 AM
அந்த கண்ண பார்த்தாக்கா லவ்வு தானா தோனாதா
அவன் கிட்ட போனாக்கா மனம் மானா மாறாதா
pavalamani pragasam
30th May 2024, 01:38 PM
லவ்வுன்னா லவ்வு
மண்ணெண்ண ஸ்டவ்வு
ஒரு உள்ளத்தக் கவ்வு வானத்தில் தவ்வு
முதுவட்டம் எல்லாம் முடியாமல் வாட
இளவட்டம் எல்லாம் கொடி கட்டி ஆட
NOV
30th May 2024, 04:25 PM
இளவட்டம் கை தட்டும் டும் டும்
திசை எட்டும் கேட்கட்டும் டும் டும்
ஒரு சொந்தம் புது பந்தம் மலரட்டும் டும்
pavalamani pragasam
30th May 2024, 06:15 PM
டும்டும் என் கல்யாணம் டும்டும் கல்யாணம்
உங்களுக்கு திண்டாட்டம் உலமெல்லாம் கொண்டாட்டம்
பாம் பாம் பாம்
NOV
30th May 2024, 08:44 PM
கல்யாணமாம் கல்யாணம் அறுபதாம் கல்யாணம்
கருத்த கூந்தல் நரைத்த பின்னும் காதல் பேசும் நாலு கண்கள்
pavalamani pragasam
30th May 2024, 09:29 PM
கூந்தல் கருப்பு
ஆஹா
குங்குமம் சிவப்பு
ஓஹோ
கொண்டவள் முகமோ ரோஜாப்பூ
priya32
31st May 2024, 05:15 AM
ரோஜா ஒன்று உள்ளங்கையில் பூத்தது
வாசல் தாண்டி வந்து காதல் வேண்டி வந்து
ஆஹா நாணம் கொண்டு
NOV
31st May 2024, 06:22 AM
வாசல் இது வாசல் தலைவாசல்
வாழ்க்கை சொல்லும் வாசல் முதல்வாசல்
இரவுக்கு விடியல் தலைவாசல்
எங்களுக்கு உலகே தலைவாசல்
priya32
31st May 2024, 06:32 AM
உலகத்தில் உள்ள அதிசயம் எட்டு
உன்னையும் சேர்த்து
வானத்தில் உள்ள கிரஹங்கள் பத்து
உன்னையும் சேர்த்து
சங்கத்தமிழ் நான்கு உன்னை உன்னை சேர்த்து
என்னுடன் நீதான் சேர்ந்த போது
ரெண்டல்ல நாம் ஒன்று
NOV
31st May 2024, 06:46 AM
Vanakkam Priya :)
சங்கத் தமிழ்க் கவியே சந்தங்கள் சொல்லும் இசைக்குயிலே
தன்னந்தனியாக தவித்தால் தாகம் அடங்கிடுமோ
priya32
31st May 2024, 07:08 AM
Hi NOV! How are you doing? :)
தாகமே உண்டானதே திண்டாடுதே மனமே
உனைத்தொட தாகமே உண்டானதே
திண்டாடுதே மனமே
என் தேகமே பூமேடையே
தேரேறி நீ வா வா வா வா
NOV
31st May 2024, 07:47 AM
I'm good Priya, how's life with you?
திண்டாடுதே ரெண்டு கிளியே
கண்ணேறு ஒண்ணா சேர்ந்து ஆறாப் போகுதே
என்ன தலைவிதியோ இது என்ன தலைவிதியோ
pavalamani pragasam
31st May 2024, 08:12 AM
ஒண்ணா இருக்க கத்துக்கணும் இந்த உண்மையை சொன்னா ஒத்துக்கணும்
NOV
31st May 2024, 08:23 AM
இந்த உலகம் உனக்கு
நீ மனது வைத்தால் கிடைக்கும்
pavalamani pragasam
31st May 2024, 10:58 AM
உனக்கென இருப்பேன்…
உயிரையும் கொடுப்பேன்…
உன்னை நான் பிரிந்தால்…
உனக்கு முன் இறப்பேன்
NOV
31st May 2024, 11:40 AM
நான் பிழை நீ மழலை எனக்குள் நீ இருந்தால் அது தவறே இல்லை
நீ இலை நான் பருவ மழை சிறு சிறு துளியாய் விழும் தருணம் இல்லை
pavalamani pragasam
31st May 2024, 02:31 PM
மழை வருவது மயிலுக்கு தெரியும்
மகன் திருமுகம் மனதுக்கு தெரியும்
NOV
31st May 2024, 05:37 PM
மயில் போல பொண்ணு ஒன்னு
கிளி போல பேச்சு ஒன்னு
pavalamani pragasam
31st May 2024, 06:19 PM
ஒண்ணு ரெண்டு மூணு நாலு அஞ்சு ஆறு
எந்த ஊரு சொந்த ஊரு என்ன பேரு
நேரம் வந்தாச்சு மாலை தந்தாச்சு
கெஞ்சும் என்னை மிஞ்சலாமா
கொஞ்ச நேரம் கொஞ்சலாமா
NOV
31st May 2024, 08:02 PM
நேரம் வந்தாச்சு நல்ல யோகம் வந்தாச்சு
கூறைப்பட்டு எனக்காக
இந்த குமரிப்பொண்ணு உனக்காக
pavalamani pragasam
31st May 2024, 08:44 PM
குமரிப்பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்க நான் வரவேண்டும்
குடியிருக்க நான் வருவதென்றால் வாடகை என்ன தரவேண்டும்
NOV
1st June 2024, 07:21 AM
நா ready தான் வரவா
அண்ணன் நான் இறங்கி வரவா
தேள் கொடுக்கு சிங்கத்த சீண்டாதப்பா
எவன் தடுத்தும் என் route-ட்டு மாறதப்பா
priya32
1st June 2024, 07:33 AM
எவன் வந்தா அட்றா சக்க
எனக்கென்ன அட்றா சக்க
எடம் பாத்து அட்றா சக்க
அட்றா சக்க…அட்றா சக்க
Left-ல நுழைஞ்சி Right-ல அடிச்சா
Right-ஆ Wrong-ஆ கேட்டு அடிச்சா
NOV
1st June 2024, 08:00 AM
சக்க போடு போடு ராஜா உன் காட்டுல மழை பெய்யுது
சட்டப்படி தொட்டுப் பேசு நீ பயந்தா என்னாவது
மல்லியப் பூ மேனியடா நான் மெதுவா தொடுவேண்டா
pavalamani pragasam
1st June 2024, 08:24 AM
மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு மலரும் மலரும் புது தாளம் போட்டு புதுசா புதுசா அதை காதில் கேட்டு
NOV
1st June 2024, 08:52 AM
ஒரு காதல் என்பது உன் நெஞ்சில் உள்ளது
உன் நெஞ்சில் உள்ளது கண்ணில் வந்ததடி
pavalamani pragasam
1st June 2024, 10:08 AM
கண்ணில் தோன்றும் காட்சி யாவும் கண்ணா உனது காட்சியே
NOV
1st June 2024, 11:49 AM
உனது விழியில் எனது பார்வை உலகைக் காண்பது
pavalamani pragasam
1st June 2024, 12:59 PM
பார்வை ஒன்றே போதுமே
பல்லாயிரம்
சொல் வேண்டுமா
NOV
1st June 2024, 03:18 PM
சொல் சொல் சொல் அன்பே நீ சொல்
நில் நில் நில் போகாதே நில்
சொல் சொல் சொல் சொல்லாமல் சொல்
சொல்வதெல்லாம் கண்ணாலே சொல்
pavalamani pragasam
1st June 2024, 07:04 PM
கண்ணாலே பேசி பேசிக் கொல்லாதே
காதாலே கேட்டு கேட்டுச் செல்லாதே
காதல் தெய்வீக ராணி போதை உண்டாகுதே நீ
கண்ணே என் மனதை விட்டு துள்ளாதே
priya32
2nd June 2024, 04:38 AM
போதை ஏற்றும் நேரம்
இந்த பொண்ண பாரு மோகம்
ஒரு மொட்டு உன்னத் தொட்டு
இந்த சாம நேரத்துல
காம கோழி என கூவும்
NOV
2nd June 2024, 06:04 AM
சாம கோழி கூவ சமஞ்சேனே
ராசா ராசா என்ன பாக்காம
நீயும் போக ரெண்டு கண்ணுல நீரு
ஆறா ஓட தொல்லை கொடுக்காம சேரு சேரு
priya32
2nd June 2024, 06:29 AM
கோழி கூவும் நேரத்துல
கோலம் போட்டுப் பாக்கலாமா
நல்ல நாதஸ்வரம் ஊத வச்சி
மேளம் தட்டி கேக்கலாமா
அட கேக்காத சங்கதி எல்லாம் கேளு
அப்படி பாக்காத இன்னிக்கி நல்ல நாளு
pavalamani pragasam
2nd June 2024, 07:05 AM
மேளத்தை மெல்ல தட்டு
இந்த மேளத்தை மெல்ல தட்டு
அங்கங்க கிள்ளிக்கிட்டு..
பூட்டி வச்ச வீட்டுக்குள் ஜல்லிக்கட்டு
NOV
2nd June 2024, 07:05 AM
கூவாமல் கூவும் கோகிலம்
பொன் கொண்டாடும் காதல் கோமளம்
யாரும் காணாமல் நாம் பாடும் கீதமே
கலைமேவும் தமிழ் கூறும் நல் வேதமே
priya32
2nd June 2024, 07:48 AM
வச்ச பார்வ தீராதடி
மச்சான் குறி மாறாதடி
தேவியே வந்தனம்
பூசவா சந்தனம்
NOV
2nd June 2024, 07:52 AM
பூசு மஞ்சள் பூசு மஞ்சள் பூசிய பூவொன்று
பூமியோடு போன பின்னும் பூத்தது ஏன் இங்கு
priya32
2nd June 2024, 07:57 AM
பூமியே பூமியே பூமழை நான் தூவவா
வானமே வானமே என்னிடம் அதைக் கேட்பதா
உன் பதில் கீதமே மார்கழி மாதமே ஆகுமே
NOV
2nd June 2024, 08:56 AM
பூ மழை தூவி வசந்தங்கள் வாழ்த்த ஊர்வலம் நடக்கின்றது
எழில் பொங்கிடும் அன்பு தங்கையின் நெற்றியில் குங்குமம் சிரிக்கின்றது
pavalamani pragasam
2nd June 2024, 11:01 AM
அன்பு வந்தது என்னை ஆள வந்தது சொந்தம் வந்தது
NOV
2nd June 2024, 11:37 AM
சொந்தம் வந்தது வந்தது இந்த சுகமே மச்சான் தந்தது
pavalamani pragasam
2nd June 2024, 02:28 PM
மச்சானே அச்சாரம் போடு பொழுதோடு
நான் வெச்சேனே என் கண்ணை உன் மேலே தான்
நான் பித்தாகி போனேனே உன்னால தான்
NOV
2nd June 2024, 04:51 PM
உன் மேல ஒரு கண்ணு
நீதான் என் மொறப் பொண்ணு
pavalamani pragasam
2nd June 2024, 06:27 PM
கண்ணுபட போகுதைய்யா சின்ன கவுண்டரே
சுத்தி போட வேணுமைய்யா சின்ன கவுண்டரே
உனக்கு சுத்தி போடா வேணுமைய்யா சின்ன கவுண்டரே
NOV
2nd June 2024, 07:17 PM
சுத்தி சுத்தி வந்தீக சுட்டு விரலால் சுட்டீங்க
ஐயோ என் நாணம் அத்துபோக
pavalamani pragasam
2nd June 2024, 10:43 PM
ஐயோ ஐயோ…
உன் கண்கள் ஐயய்யோ…
உன் கண்கள் கண்ட நேரத்தில்…
எல்லாமே ஐயய்யோ
NOV
3rd June 2024, 05:55 AM
உன்னாலே கண்கள் தள்ளாடி உறங்காமல் எங்கும் என் ஆவி
நீராவியாய் என்னை நீ மோதினாய்
உன் பாா்வையில் ஈரம் உண்டாக்கினாய்
pavalamani pragasam
3rd June 2024, 08:00 AM
ஈரமான ரோஜாவே என்னை பார்த்து மூடாதே
கண்ணில் என்ன சோகம் போதும் ஏங்காதே
NOV
3rd June 2024, 09:07 AM
சோகம் இனி இல்லை அட இனி வானமே எல்லை
துாரம் இனி இல்லை அட இனி வானமே எல்லை
pavalamani pragasam
3rd June 2024, 10:45 AM
ஆர்வ கோளாறில் மீறாதே எல்லை
காதலா வெறும் கண்ணாமூச்சியா
NOV
3rd June 2024, 11:39 AM
ஆர்வ?
pavalamani pragasam
3rd June 2024, 12:06 PM
Oops!
அட வீட்டுக்கு வீட்டுக்கு வாசல் படி வேணும் தெரு கூத்துக்கும் பாட்டுக்கும் தாலக்கட்டி வேணும்
NOV
3rd June 2024, 02:27 PM
வீட்டுக்கு வீடு வாசப்படி விஷயங்கள் ஆசைப் படி
எங்கெங்கும் போராட்டம்தான் எல்லாரும் உன்னாட்டம்தான்
pavalamani pragasam
3rd June 2024, 03:42 PM
எல்லோரும்
கொண்டாடுவோம்
அல்லாவின்
பேரை சொல்லி
நல்லோர்கள் வாழ்வை
எண்ணி
NOV
3rd June 2024, 05:07 PM
அல்லா உன் ஆணைப்படி எல்லாம் நடக்கும் ஓ எல்லாம் நடக்கும்
தொல்லை இல்லாத வண்ணம் நன்மை பிறக்கும் ஓர் நன்மை பிறக்கும்
pavalamani pragasam
3rd June 2024, 06:28 PM
வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ
NOV
3rd June 2024, 07:46 PM
வாராயோ வாராயோ காதல்கொள்ள
பூவோடு பேசாத காற்றே இல்ல
pavalamani pragasam
3rd June 2024, 09:24 PM
காற்றே என் வாசல் வந்தாய்…
மெதுவாக கதவு திறந்தாய்…
காற்றே உன் பேரை கேட்டேன் காதல் என்றாய்
NOV
4th June 2024, 05:56 AM
மெதுவாக தான் மெதுவாக தான்
என்னை ஈர்க்கிறாய் பழி வாங்கவா
மயிலாசனம் அருகினில் நானே
மழை மேகமாய் இறங்கி வந்தேனே
உன் விழியோரத்தில் விழுந்து விட்டேனே நான்
pavalamani pragasam
4th June 2024, 08:25 AM
மேகமாய் வந்து போகிறேன்
வெண்ணிலா உன்னை தேடினேன்
NOV
4th June 2024, 09:33 AM
உன்னைத் தேடினேன் கண்ணனே
நானே கனவு காண்கிறேன்
ராதையின் கண்களில் சீதையின் வேதனை
pavalamani pragasam
4th June 2024, 10:26 AM
ராதையின் நெஞ்சமே கண்ணனுக்கு சொந்தமே
ஆயிரம் கனவுகள் கல்யாண நாளிலே
NOV
4th June 2024, 11:31 AM
ஆயிரம் நினைவு ஆயிரம் கனவு காணுது மனது ஓஹோ
pavalamani pragasam
4th June 2024, 02:38 PM
ஓஹோ எந்தன்
பேபி நீ வாராய் எந்தன்
பேபி கலை மேவும் வர்ண
ஜாலம் கொண்ட கோலம்
காணலாம்
NOV
4th June 2024, 04:47 PM
கலை வந்த விதம் கேளு கண்ணே
உடல் கட்டோடு அழகாக கூத்தாடும் பெண்ணே
pavalamani pragasam
4th June 2024, 08:22 PM
பெண்ணே நீயும் பெண்ணா…
பெண்ணாகிய ஓவியம்…
ரெண்டே ரெண்டு கண்ணா…
ஒவ்வொன்றும் காவியம்
priya32
5th June 2024, 05:43 AM
ஒவ்வொன்றாய் திருடுகிறாய் திருடுகிறாய்
யாருக்கும் தெரியாமல் திருடுகிறாய்
முதலில் என் கண்களை
இரண்டாவது இதயத்தை
மூன்றாவது முத்தத்தை
NOV
5th June 2024, 06:20 AM
முதல் காதல் கீதமே என் உயிருக்குள் உதயமே
மண்ணாளனே மயக்கினாய்
என்னுயிரே நீ என்னிதய துடிப்பை நீயும் கேளு
priya32
5th June 2024, 06:56 AM
கீதம் சங்கீதம்
நீதானே என் காதல் வேதம்
பாதம் உந்தன் பாதம்
என்னோடு வந்தாலே
போதும் எப்போதும்
கீதம் சங்கீதம்
NOV
5th June 2024, 07:08 AM
வந்தால் என்னோடு இங்கே வா தென்றலே
நீ மறந்தால் நான் வரவா
செம்பட்டு பூவில் வண்டு எனைக்கண்டதும்
சிரிக்கின்றது அழைக்கின்றதம்மா
priya32
5th June 2024, 07:29 AM
பூவே இது பூஜை காலமே இளம் பூவை தாகமே
மனம் தாவி வந்த வேகம் தீர்க்க நாளும் வேண்டுமே
நாளும் உன்னை நினைத்து நினைத்து
தவித்து தவித்து ஏங்கும் உள்ளம் பாடாதோ
NOV
5th June 2024, 07:55 AM
தவிக்குது தயங்குது ஒரு மனது
தினம் தினம் தூங்காமலே
ஒரு சுகம் காணாமலே
pavalamani pragasam
5th June 2024, 08:46 AM
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக பாடு பண் பாடு இரை தேட பறந்தாலும் திசை மாறி திரிந்தாலும்
NOV
5th June 2024, 10:03 AM
குயிலே குயிலே உந்தன் கீதங்கள் கேட்காதோ
உயிரே உறவே அந்த காலங்கள் வாராதோ
pavalamani pragasam
5th June 2024, 10:34 AM
உயிரே உயிரே அழைத்ததென்ன
ஓசை கேட்டு ஓடி வந்தேன்
மறைந்ததென்ன
NOV
5th June 2024, 11:41 AM
கேட்டேளே அங்கே அதை பார்த்தேளா இங்கே
எதையோ நெனச்சேள் அதையே நெனச்சேன் நான்
pavalamani pragasam
5th June 2024, 01:08 PM
அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவ சிரிப்பு இங்கே நீ சிரிக்கும் பொன் சிரிப்போ ஆனந்த சிரிப்பு
NOV
5th June 2024, 01:58 PM
நீ இன்றி நானும் இல்லை என் காதல் பொய்யும் இல்லை
வழி எங்கும் உந்தன் முகம்தான் வலி கூட இங்கே சுகம்தான்
pavalamani pragasam
5th June 2024, 03:12 PM
பொய்யிலே பிறந்து
பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே -
உம்மைப்புரிந்து கொண்டாள்
உண்மை தெரிந்து கொண்டாள்
இந்தப் பூவையர் குலமானே
NOV
5th June 2024, 04:53 PM
இந்தப் பொறப்புதான் நல்லா ருசிச்சு சாப்பிடக் கெடச்சது
அத நெனச்சுதான் மனம் ஒலகம் முழுவதும் பறக்குது
pavalamani pragasam
5th June 2024, 05:06 PM
உலகம் பிறந்தது எனக்காக…
ஓடும் நதிகளும் எனக்காக…
மலர்கள் மலர்வது எனக்காக…
அன்னை மடியை விரித்தாள் எனக்காக
NOV
5th June 2024, 08:43 PM
அன்னை மடியில் கண் திறந்தோம்
மண்ணின் மடியில் கண் மறைந்தோம்
உயிரில் உயிர்கள் ஜனனம்
ஜனனம் இருந்தால் மரணம்
இயற்கை தானடா ஏன் சலனம்
priya32
6th June 2024, 04:36 AM
கண்ணுக்கு தெரியாத அந்த சுகம்
நெஞ்சுக்கு தெரிகின்ற இன்ப சுகம்
ஒரு முறையா இரு முறையா
உன்னை கேட்க சொல்லும்
NOV
6th June 2024, 06:28 AM
ஒரு முறை இருமுறை பல முறை கேட்டபின்
இதயத்தின் கிளையினில் பூத்தாளே
அடி முதல் நுனிவரை அவளது நினைவுகள்
ஆஹா அழகாய் தொலைந்தேனே
pavalamani pragasam
6th June 2024, 08:33 AM
ஆஹா இன்ப நிலாவினிலே
ஓஹோ ஜகமே ஆடிடுதே
ஆடிடுதே விளையாடிடுதே
NOV
6th June 2024, 09:03 AM
ஆடிடும் ஓடமாய் ஆனதே காதலே
ஆறுதல் தேடியே யாரிடம் போகுமோ
pavalamani pragasam
6th June 2024, 11:03 AM
காதலே காதலே என்னை உடைத்தேனே…
என்னில் உன்னை அடைத்தேனே…
உயிர் கட்டி இணைத்தேனே
NOV
6th June 2024, 03:43 PM
உன்னை நான் அழைத்தேன்
உன் பெயரை பொறித்தேன்
என் பணிக்காய் தேர்ந்தெடுத்தேன்
கண்மணியாய் நான் காப்பேன்
pavalamani pragasam
6th June 2024, 05:38 PM
கண்மணியே பேசு மௌனம் என்ன கூறு
கன்னங்கள் புது ரோசாப்பூ
NOV
6th June 2024, 06:25 PM
மௌனம் என்பது கவிதை மொழி
இந்த மாங்குயில் பேசிடும் கண்கள் வழி
pavalamani pragasam
6th June 2024, 08:26 PM
மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு ஒன்ன
மாலையிடத் தேடி வரும் நாளு எந்த நாளு
priya32
7th June 2024, 05:28 AM
பூங்காத்தே அந்த பொண்ணு கிட்ட
ஒண்ணு சொல்லி வா தனியா
அவ இல்லாம நெஞ்சம் வாடுதே
NOV
7th June 2024, 06:19 AM
அந்த மாதிரி பொண்ண நா பாத்ததில்லடா முன்ன
அவளப் பாத்த பின்ன நா மூடலடா கண்ண
priya32
7th June 2024, 07:23 AM
முன்தினம் பார்த்தேனே பார்த்ததும் தோற்றேனே
சல்லடைக் கண்ணாக நெஞ்சமும் புண்ணானதே
இத்தனை நாளாக உன்னை நான் பாராமல்
எங்கு நான் போனேனோ நாட்களும் வீணானதே
வானத்தில் நீ வெண்ணிலா ஏக்கத்தில் நான்
NOV
7th June 2024, 07:37 AM
பாராமல் பார்த்த நெஞ்சம் ஜம்-ஜஜம்-ஜம்-ஜம்
போடாமல் போட்ட மஞ்சம் ஜம்-ஜஜம்-ஜம்-ஜம்
இரு பார்வை அது பாடட்டும்
இரு பார்வை பாடட்டும் ராகங்கள்
pavalamani pragasam
7th June 2024, 08:53 AM
பார்த்த ஞாபகம் இல்லையோ. பருவ நாடகம் தொல்லையோ
NOV
7th June 2024, 10:10 AM
பருவம் பார்த்து அருகில் வந்தும் வெட்கமா
இல்லை பழக வந்த அழகன் மீது கொண்ட கோபமா
pavalamani pragasam
7th June 2024, 11:24 AM
அழகன் முருகனிடம். ஆசை வைத்தேன். அவன் ஆலயத்தில். அன்பு மலர் பூசை வைத்தேன்.
NOV
7th June 2024, 11:35 AM
அன்பு மலர் ஆசை மலர் இன்ப மலர் நடுவே
அருளோடு மலர்வது தான் பாச மலரம்மா
pavalamani pragasam
7th June 2024, 02:08 PM
மலர் எது என் கண்கள் தான் என்று சொல்வேனடி !
கனி எது என் கன்னம் தான் என்று சொல்வேனடி!!
காலத்தின் வசந்தமடி ! நான் கோலத்தில் குமரியடி
NOV
7th June 2024, 04:33 PM
என் கண்கள் என்றும் உன் மீது
உன் கண்கள் நூறு பெண் மீது
எங்கு சென்றாலும் என்ன செய்தாலும் உன்னை விட மாட்டேன்
pavalamani pragasam
7th June 2024, 06:08 PM
நூறாண்டு காலம் வாழ்க நோய் நொடி இல்லாமல் வளர்க ஊராண்ட மன்னர் புகழ் போலே
NOV
7th June 2024, 07:06 PM
கால மகள் கண் திறப்பாள் சின்னையா
நாம் கண் கலங்கி கவலைப் பட்டு என்னையா
pavalamani pragasam
7th June 2024, 09:05 PM
கண்ணை நம்பாதே! உன்னை ஏமாற்றும்!
உன்னை ஏமாற்றும் நீ காணும் தோற்றம்!
உண்மை இல்லாதது! அறிவை நீ நம்பு!
உள்ளம் தெளிவாகும் அடையாளம் காட்டும்!
பொய்யே சொல்லாதது!
priya32
8th June 2024, 05:17 AM
நீ வெண் மல்லிகை தேன் உன் புன்னகை
மௌனமே காதலின் மாளிகை
என் பெயரை உச்சரித்துக் கொண்டு
இந்தச் செண்டு முழு நிலவு மேடையில்
கனவு காணுமே இன்று
NOV
8th June 2024, 06:11 AM
வெண்மேகம் பெண்ணாக உருவானதோ
என் நேரம் எனைப் பார்த்து விளையாடுதோ
உன்னாலே பல ஞாபகம் என் முன்னே வந்தாடுதே
priya32
8th June 2024, 07:16 AM
என் கண்மணி என் பாடல் கேளடி
என் ஜீவன் நீயடி தூங்கடி
என் கண்மணி என் பாடல் கேளடி
என் பொன்மணி என் கானம் கேட்டு
தூங்கு பூங்கொடி
கண்ணே கனா வரும்
அதில் நிலா வரும்
NOV
8th June 2024, 07:29 AM
நீயும் நானும் அன்பே கண்கள் கோர்த்து கொண்டு
வாழ்வின் எல்லை சென்று ஒன்றாக வாழலாம்
pavalamani pragasam
8th June 2024, 07:47 AM
அன்பே அன்பே கொல்லாதே…
கண்ணே கண்ணை கிள்ளாதே…
பெண்ணே புன்னகையில் இதயத்தை வெடிக்காதே
NOV
8th June 2024, 08:13 AM
புன்னகையில் கோடி பூங்கவிதை பாடி
கண்ணிரண்டில் மேவி காட்சி தரும் தேவி
பெண்ணொருத்தி உன் போலே இன்னொருத்தி ஏது
pavalamani pragasam
8th June 2024, 11:37 AM
பெண்ணொருத்தி பெண்ணொருத்தி படைத்துவிட்டாய்
என்னிடத்தில் என்னிடத்தில் அனுப்பிவைத்தாய்
உயிரோடு என்னை உலையில் ஏற்றினாய்
NOV
8th June 2024, 02:31 PM
என்னை சாய்த்தாலே உயிர் தேய்த்தாலே இனி வாழ்வேனோ இனிதாக
தடுமாறாமல் தரை மோதாமல் இனி மீள்வேனோ முழுதாக
pavalamani pragasam
8th June 2024, 03:56 PM
தரை மேல் பிறக்க வைத்தான் -
எங்களைத்தண்ணீரில் பிழைக்க வைத்தான்
கரை மேல் இருக்க வைத்தான் -
பெண்களைக்கண்ணீரில் குளிக்க வைத்தான்
NOV
8th June 2024, 05:34 PM
கரை வந்த பிறகே பிடிக்குது கடலை
நரை வந்த பிறகே புரியுது உலகை
pavalamani pragasam
8th June 2024, 06:32 PM
உலகம் ஒருவனுக்கா
உழைப்பவன் யார்?
விடை தருவான் கபாலி தான்
கழகம் செய்து ஆண்டவரின்
கதை முடிப்பான்
NOV
8th June 2024, 07:35 PM
விடை கொடு எங்கள் நாடே கடல் வாசல் தெளிக்கும் வீடே பனை மர காடே பறவைகள் கூடே
pavalamani pragasam
8th June 2024, 09:58 PM
பறவைகள் பலவிதம்
ஒவ்வொன்றும் ஒருவிதம்
பாடல்கள் பலவிதம்
ஒவ்வொன்றும் ஒருவிதம்
வானமெங்கும் ஓடி
வாழ்க்கை இன்பம் தேடி
நாமிருவரும் ஆடுவோம்
ஞானப் பாட்டுப் பாடி
NOV
9th June 2024, 06:46 AM
வானெங்கும் தங்க விண்மீன்கள் விழி இமை மூட
சூரியன் வந்து கடல் குளித்தேறும் நேரம்
pavalamani pragasam
9th June 2024, 07:52 AM
தங்கமகன்
இன்று சிங்க நடை
போட்டு அருகில்
அருகில் வந்தான்
இரண்டு புறம் பற்றி
எரியும் மெழுகாக
மங்கை உருகி
நின்றாள்
NOV
9th June 2024, 08:43 AM
சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறு
சிகரத்தை அடைந்தால் வானத்தில் ஏறு
pavalamani pragasam
9th June 2024, 10:36 AM
நடையா இது நடையா ஒரு நாடகமன்றோ நடக்குது இடையா இது இடையா அது இல்லாதது போல்
NOV
9th June 2024, 12:28 PM
ஒரு நாயகன் உதயமாகிறான் ஊரார்களின் இதயமாகிறான்
நினைத்ததை யார் முடிப்பவன் சொல்
pavalamani pragasam
9th June 2024, 02:26 PM
யார் அவள் யாரோ அவள் யாரோ கனா தானோ
யாரோ நிலா தானோ விடையில்லா வினா தானோ
வானின் புலம் தாண்டி நிலம் தீண்டும் மழை தானோ
நாளும் அவள் இல்லை எனில் இங்கே பிழைதானோ
NOV
9th June 2024, 05:11 PM
அவள் ஒரு மேனகை என் அபிமான தாரகை
கலையெனும் வானிடை மின்னும் தேவதை
pavalamani pragasam
9th June 2024, 05:55 PM
தேவதை போல் ஒரு பெண்ணிங்கு வந்தது நம்பி உன்னை நம்பி இந்த மைத்துனன் கைத்தலம் பற்றிட வந்தது தம்பி தங்க கம்பி பூச்சூடவும் பாய்
NOV
9th June 2024, 07:02 PM
ஒன்ன நம்பி நெத்தியிலே பொட்டு வச்சேன் மத்தியிலே
மச்சான் பொட்டு வச்சேன் மத்தியிலே
நெத்தியிலே பொட்டு வச்ச காரணத்த புரிஞ்சிக்க ராசா
விட்டுப் போனா உதிர்ந்து போகும் வாசனை ரோசா
pavalamani pragasam
9th June 2024, 07:38 PM
பொட்டு வைத்த முகமோ
கட்டி வைத்த குழலோ
பொன்மணிச் சரமோ
அந்தி மஞ்சள் நிறமோ
NOV
10th June 2024, 07:50 AM
கட்டி வச்சிக்கோ எந்தன் அன்பு மனச
தொட்டு வச்சிக்கோ உந்தன் சொந்த மனச
pavalamani pragasam
10th June 2024, 08:05 AM
எந்தன் நெஞ்சில் ஊஞ்சல் கட்டி ஆடிக் கொண்டே இருக்கிறாய் எனக்குள் புகுந்து எங்கோ
NOV
10th June 2024, 09:02 AM
ஊஞ்சல் மனம் உலா வரும் நாளில்
உன்னுடனே நிலா வரும் தோளில்
ஓவியம் என்பது பெண்ணானாள்
ஓடை மலர்கள் கண்ணானாள்
காதலித்தால் என்ன பாவமோ
pavalamani pragasam
10th June 2024, 10:17 AM
மலர்கள் நனைந்தன பனியாலே! என் மனதும் குளிர்ந்தது நிலவாலே
NOV
10th June 2024, 02:14 PM
என் மனது ஒன்றுதான் உன் மீது ஞாபகம்
வான் நிலவு ஒன்றுதான் வான் மீது சத்தியம்
pavalamani pragasam
10th June 2024, 02:34 PM
சத்தியம் இது சத்தியம் சத்தியம் இது சத்தியம் எல்லாம் வல்ல இறைவனின் ஆணை சொல்லப் போவது யாவையும் உண்மை
NOV
10th June 2024, 03:02 PM
யாவும் யாவுமே நீயானாய் காதல் நந்தலாலா
தேவ தேவனாய் நீயானாய் ராதை வந்ததாலா
pavalamani pragasam
10th June 2024, 04:02 PM
ராதையின் நெஞ்சமே கண்ணனுக்கு சொந்தமே
ஆயிரம் கனவுகள் கல்யாண நாளிலே
NOV
10th June 2024, 04:47 PM
கல்யாண நாள் பார்க்கச் சொல்லலாமா
நாம் கையோடு கை சேர்த்துக் கொள்ளலாமா
pavalamani pragasam
10th June 2024, 06:52 PM
கை கை கை கை கை வைக்கிறா. வைக்கிறா. கை மாத்தாஎன் மனச கேக்குறா
NOV
10th June 2024, 06:55 PM
என் மனசுல பாட்டுத் தான் இருக்குது
ஒன் மனசதைக் கேட்டுத் தான் தவிக்குது
pavalamani pragasam
10th June 2024, 08:06 PM
கேட்டேளே அங்கே அதை பார்த்தேளா இங்கே
எதையோ நெனச்சேள் அதையே நெனச்சேன் நான்
ஆம்படையான் மனசு போலே நடப்பேன்
இந்த ஆத்துக்காரி வேறெதுக்கு இருக்கேன்
NOV
11th June 2024, 06:19 AM
அங்கே ஏன் இந்த பார்வை அய்யயய்யே
இங்கே இன்னும் என்ன தேவை அய்யயய்யே
pavalamani pragasam
11th June 2024, 08:05 AM
இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய் அன்பே அன்பே... என்னை கண்டால் என்னென்னவோ ஆகிறாய்
NOV
11th June 2024, 09:27 AM
எனைக் காணவில்லையே நேற்றோடு
எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு
உயிர் ஓடிப் போனதோ உன்னோடு அன்பே
pavalamani pragasam
11th June 2024, 10:48 AM
அன்பே வா அழைக்கின்றதெந்தன் மூச்சே கண்ணீரில் துன்பம் போச்சே கரை
NOV
11th June 2024, 12:08 PM
வா வா வாத்தியாரே வா வஞ்சிக்கொடி
உன் கொஞ்சும் கிளி உன் இஸ்டபடி என்னை கட்டிப்புடி
pavalamani pragasam
11th June 2024, 02:08 PM
கொஞ்சும் புறாவே நெஞ்சோடு நெஞ்சம் ஜகமெங்கணும் உறவாடிடும் ஜாலமீதேதோ.
NOV
11th June 2024, 03:01 PM
நெஞ்சமடி நெஞ்சம் அன்று நான் கொடுத்தது
இதுதானா கணக்கு நினைவில்லை உனக்கு
pavalamani pragasam
11th June 2024, 05:36 PM
அன்று வந்ததும்
இதே நிலா
இன்று வந்ததும்
அதே நிலா
என்றும் உள்ளது
ஒரே நிலா
இருவர்
கண்ணுக்கும் ஒரே
நிலா
NOV
11th June 2024, 07:34 PM
கண்ணுக்கும் கண்ணுக்கும் மோதல்
நெஞ்சத்தை நீ தந்தால் காதல்
என்னென்ன இன்பம் வாழ்க வாழ்கவே
pavalamani pragasam
11th June 2024, 09:32 PM
இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே
என்னக்கண்டு.. உன்னைக் கண்டு
என்னைக் கண்டு மௌன மொழி பேசுதே
NOV
12th June 2024, 06:37 AM
மௌன மழையிலே மௌன மழையிலே
மண்ணின் விண்ணின் கண்கள் நம் தன் மீதிலே
அஞ்சி அஞ்சி என்னை கொஞ்சும் காதலே
pavalamani pragasam
12th June 2024, 08:03 AM
கண்கள் எங்கே
நெஞ்சமும் எங்கே
கண்டபோதே சென்றன அங்கே
NOV
12th June 2024, 09:08 AM
எங்கே உன்னை கண்டால் கூட நெஞ்சில் கொண்டாட்டம்
ஏக்கம் தீரச் சேர்த்துக் கொள்வேன் பாடும் வண்டாட்டம்
pavalamani pragasam
12th June 2024, 11:28 AM
பாடும்போது நான் தென்றல் காற்று பருவ மங்கையோ தென்ன(ங்) கீற்று நான் வரும்போது ஆயிரம் ஆடல்
NOV
12th June 2024, 12:01 PM
தென்னங்கீற்று ஊஞ்சலிலே
தென்றலில் நீந்திடும் சோலையிலே
சிட்டுக்குருவி ஆடுது
தன் பெட்டைத் துணையை தேடுது
pavalamani pragasam
12th June 2024, 02:23 PM
சிட்டுக் குருவிக்கென்ன. கட்டுப்பாடு. தென்றலே உனக்கெது. சொந்த வீடு
NOV
12th June 2024, 04:24 PM
சொந்த சுமையை தூக்கி தூக்கி சோர்ந்து போனேன்
வந்த சுமையை தாங்கி தாங்கி சோகமானேன்
pavalamani pragasam
12th June 2024, 07:39 PM
வந்த நாள் முதல் இந்த நாள் வரை
வானம் மாறவில்லை
வான் மதியும் மீனும் கடல் காற்றும்
மலரும் மண்ணும் கொடியும் சோலையும்
நதியும் மாறவில்லை
மனிதன் மாறிவிட்டான்
NOV
13th June 2024, 06:16 AM
இந்த நாள் நல்ல நாளே எந்தன் கையில் ஆடவா
தங்கமே சொந்தம் நீயே கொஞ்சிக் கொஞ்சி பேசவா
pavalamani pragasam
13th June 2024, 08:43 AM
கொஞ்சிக்கொஞ்சிப் பேசி மதிமயக்கும்
வஞ்சகரின் உலகம் வலை விரிக்கும்
NOV
13th June 2024, 01:35 PM
உலகம் உன்னைகை கழுவினாலும்
நடுத்தெருவில் உன்னை நிறுத்தினாலும்
முடியும் வரை முட்டி மோதி பாரு
pavalamani pragasam
13th June 2024, 04:31 PM
முடியுமென்றால் படியாது
படியுமென்றால் முடியாது
முடியுமென்றால் படியாது
படியுமென்றால் முடியாது
வஞ்சியரின் வார்த்தையில்லே
அர்த்தமே
NOV
13th June 2024, 06:36 PM
வார்த்தை தவறி விட்டாய் கண்ணம்மா
மார்பு துடிக்குதடி
காற்றில் கலந்து விட்டாய் கண்ணம்மா
கண்கள் கலங்குதடி
pavalamani pragasam
13th June 2024, 07:25 PM
காற்றினிலே வரும் கீதம்
கண்கள் பனித்திட பொங்கும் கீதம்
கல்லும் கனியும் கீதம்
NOV
14th June 2024, 06:30 AM
கீதம் சங்கீதம் நீதானே என் காதல் வேதம்
பாதம் உந்தன் பாதம்
என்னோடு வந்தாலே போதும் எப்போதும்
pavalamani pragasam
14th June 2024, 07:56 AM
பாத கொலுசு பாட்டு பாடி வரும் பாடி வரும் பாவ சொகுசு பாக்க கோடி பெறும் கோடி
NOV
14th June 2024, 08:53 AM
பாடி அழைத்தேன் உன்னை இதோ தேடும் நெஞ்சம்
வாராய் என் தேவி பாராய் என் நெஞ்சில் மின்னல்
கண்ணில் கங்கை
pavalamani pragasam
14th June 2024, 10:39 AM
வாராய் நீ வாராய்
போகுமிடம் வெகு தூரமில்லை நீ வாராய்
போகுமிடம் வெகு தூரமில்லை நீ வாராய்
ஆஹா மாருதம் வீசுவதாலே
ஆனந்தம் பொங்குதே மனதிலே
NOV
14th June 2024, 11:24 AM
தூரம் அன்றாடம் சொல்லுதே ஈரம் கண்ணோரம் மின்னுதே
நீயும் வாழும் பூமி மீதிலே நானும் வாழ்ந்தால் போதும் காதலே
pavalamani pragasam
14th June 2024, 01:31 PM
வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்
வையகம் இதுதானடா …..
வாழ்ந்தாரைக் கண்டால் மனதுக்குள் வெறுக்கும்
வீழ்ந்தாரைக் கண்டால் வாய்விட்டுச் சிரிக்கும்
இல்லாது கேட்டால் ஏளனம் செய்யும்
இருப்பவன் கேட்டால் நடிப்பென மறுக்கும்
NOV
14th June 2024, 02:53 PM
இது தான் உலகமா
இது தான் வாழ்க்கையா
இது வரை என் வாழ்வு கானாற்று வெள்ளமா
pavalamani pragasam
14th June 2024, 03:44 PM
வாழ்க்கையெனும் ஓடம்
வழங்குகின்ற பாடம்
மானிடரின் மனதினிலே
மறக்கவொண்ணா வேதம்
NOV
14th June 2024, 06:51 PM
மனதிலே ஒரு பாட்டு மழை வரும் அதைக் கேட்டு
இது பூபாளம் புது ஆலோலம்
விழிப்பூவும் மலரும் காலை நேரம்
pavalamani pragasam
14th June 2024, 08:39 PM
பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்
இரு மனம் சுகம் பெறும் வாழ் நாளே
NOV
15th June 2024, 07:52 AM
இரு மனம் கொண்ட திருமண வாழ்வில் இடையினில் நீ ஏன் மயங்குகிறாய்
pavalamani pragasam
15th June 2024, 08:50 AM
திருமண மலர்கள் தருவாயா தோட்டத்தில் நான் வைத்த பூச்செடியே தினம் ஒரு கனியே தருவாயா
NOV
15th June 2024, 08:59 AM
தோட்டம் கொண்ட ராசாவே
சூடிக் கொண்ட ராசாத்தி
காட்டுக் குயில் போல் பாட்டு படிச்சோம்
கங்கையம்மன் காவல் இருப்பா
pavalamani pragasam
15th June 2024, 10:25 AM
ராசாத்தி உன்ன
காணாத நெஞ்சு
காத்தாடி போல் ஆடுது
பொழுதாகிப் போச்சு
விளக்கேத்தியாச்சு
பொன்மானே உன்னத் தேடுது
NOV
15th June 2024, 11:01 AM
காத்தாடி போல ஏன்டி என்ன சுத்துற
சூ மந்திர காளி போட்டு சுத்த வைக்கிற
pavalamani pragasam
15th June 2024, 02:12 PM
மந்திர புன்னகையோ..
மஞ்சள் நிலவோ.. கண்ணே கண்ணே
வாழ்க்கை ஒரு வானம்
ஆசை அதில் மேகம்
பாசம் ஒரு தீபமே
பாவை மனம் பாடுதே
NOV
15th June 2024, 02:23 PM
வாழ்க்கை ஒரு வானம் போல
உறவு அதில் மேகம் போல
நட்பு மட்டும் சூரியன் போல நண்பன் வாழ்க
pavalamani pragasam
15th June 2024, 03:40 PM
வானத்தை பார்த்தேன் பூமியை பார்த்தேன்
மனுஷனை இன்னும் பார்க்கலையே
NOV
15th June 2024, 04:53 PM
இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொண்ணே
pavalamani pragasam
15th June 2024, 11:14 PM
நேரம் வந்தாச்சு
நல்ல யோகம் வந்தாச்சு
நேரம் வந்தாச்சு நல்ல யோகம் வந்தாச்சு
கூரைப் பட்டு எனக்காக
ட்ரியோ ட்ரியோ ட்ரியோ ட்ரியோ
இந்தக் குமரி பொண்ணூ உனக்காக
NOV
16th June 2024, 06:23 AM
ட்ரிய்யோ ட்ரிய்யோ ட்ரிய்யோ ட்ரிய்யோ ட்ர்ரு
சத்தியம் நீயே தரும தாயே குழந்தை வடிவே தெய்வ மகளே
pavalamani pragasam
16th June 2024, 07:31 AM
குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று
NOV
16th June 2024, 08:57 AM
தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்
தந்தை அன்பின் முன்னே
தாலாட்டு பாடும் தாயின் அன்பும்
தந்தை அன்பின் பின்னே
தகப்பனின் கண்ணீரைக் கண்டோர் இல்லை
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை
என் உயிரணுவின் வரம் உன் உயிரல்லவா
மண்ணில் வந்த நான் உன் நகல் அல்லவா
காயங்கள் கண்ட பின்பே உன்னைக் கண்டேன்
Happy Father's Day
pavalamani pragasam
16th June 2024, 10:19 PM
தாயிற் சிறந்த கோவிலும் இல்லை
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை
ஆயிரம் உறவில் பெருமைகள் இல்லை
அன்னை தந்தையே அன்பின் எல்லை
Happy Father's Day!
NOV
17th June 2024, 06:24 AM
அன்னை தந்தை ஆக்குவது யார் பிள்ளையன்றோ
இல்லை யென்றால் பெற்றோர் பிறப்பு மண்ணில் நன்றோ
pavalamani pragasam
17th June 2024, 08:59 AM
யார் அந்த நிலவு
ஏன் இந்தக் கனவு
யாரோ சொல்ல யாரோ என்று
யாரோ வந்த உறவு
காலம் செய்த கோலம்
இங்கு நான் வந்த வரவு
NOV
17th June 2024, 09:41 AM
நான் வந்த பாதை மான் வந்தது
தேன் தந்த போதை ஏன் தந்தது
கண் என்ற வாசல் கதவை திறந்து
பெண் என்ற தெய்வம் முன் நின்றது
pavalamani pragasam
17th June 2024, 11:09 AM
மானல்லவோ கண்கள் தந்தது ஆஹா மயில் அல்லவோ சாயல் தந்தது ஓஹோ தேனல்லவோ இதழைத்
NOV
17th June 2024, 11:59 AM
இதழின் ஒரு ஓரம் சிறிதாய் அன்பே
நிஜமாய் இது போதும் சிரிப்பாய் அன்பே
என் நாடியை சிலிர்க்க வைத்தாய்
என் இரவெல்லாம் வெளிச்சம் தந்தாய்
pavalamani pragasam
17th June 2024, 01:57 PM
இரவு முடிந்துவிடும்
முடிந்தால்?
பொழுது விடிந்துவிடும்
விடிந்தால்?
ஊருக்கு தெரிந்துவிடும்
தெரிந்தால்?
உண்மைகள் புரிந்துவிடும்
NOV
17th June 2024, 06:05 PM
ஊருக்கு நல்லதொரு உபகாரம் செய்ய
நாங்கள் எடுத்ததிந்த அவதாரம்
pavalamani pragasam
17th June 2024, 06:33 PM
நல்லதொரு குடும்பம்
பல்கலைக்கழகம்...
அன்பு மணி வழங்கும்
சுரங்கம்
வாழ்க
வாழ்க
Powered by vBulletin® Version 4.2.5 Copyright © 2024 vBulletin Solutions, Inc. All rights reserved.