PDA

View Full Version : தோழா ... தோழா ...



bingleguy
29th July 2013, 07:13 PM
சிவாவிற்கு பிறந்த நாள் என்று மிக உற்சாகத்துடன் இருந்தான் வடிவேல் ... ரொம்ப நாளைக்கு அப்புறம் வெளி நாட்டுலேந்து இந்தியா வந்திருக்கும் நண்பனை பார்க்கும் குஷியில் இருந்தான்...

தன் நண்பனுக்கு - இரண்டு குரங்குகள் தோள்களை கட்டி பிடித்திருப்பதை போல் ஒரு அழகான பொம்மையை வாங்கிருந்தான்..... "பிரிஎண்ட்ஸ் போறேவேர்" என்று நடுவில் ஒரு வளைவை பிடித்தபடி இருந்தன அந்த குரங்குகள்.... அவன் தம்பியிடம் பெருமையாக காட்டினான் ..... அதை பார்த்த அவன் தம்பி - ஐய ஒரு கிபிட் வாங்க தெரியுதா பாரு, சிவா எவ்வளவு பெரிய பணக்காரன், அவனுக்கு இந்த கிப்டா? கொடுமைடா என்றான் .....

போடா - அவன் என்னோட நண்பன்டா ....

"ஹி ஹி" என்று சிரித்த அவன் தம்பி - "எப்போ? - நீ ஸ்கூல்ல படிக்கும்போது .... இப்போ அவன் அமெரிக்கா ல இருக்கான் .... அவனை சுத்தி எல்லாம் பணக்கார பிரிஎண்ட்ஸ் இருப்பாங்க ..... அட போடா .... எதாவது பெரிய MALL போ .... கிபிட் வாங்கு" என்று சொல்லிவிட்டு சென்று விட்டான்...

இதை நினைத்து குழம்பி போன வடி.... சவாரிக்கு சென்றான் ..... EA MALL க்கு சவாரிக்கு சென்ற அவன் MALL ஐ பார்த்தான் ..... அதே நேரத்தில் ஆச்சரியத்தில் மால் ஐ நோக்கி விரிந்த கண்ணால் கடைகளை பார்த்தவாறு ஒருவன் நடந்து வந்து கொண்டிருப்பதை கவனித்தான் சிவா .. கூர்மையாக கவனித்த பிறகு ... "டேய் வடி" என்றான் .... தன் பெயரை உரக்க கேட்ட வடிவேல் நேராக பார்த்தான் !

எதிர்பாராத விதமாக சிவாவை கண்டதும் பொய்யாக புன்னகைதான்...

"என்னடா இந்த பக்கம்?" என்று கேட்டவுடன்

"ஒன்னும் இல்லியே சும்மா" என்று தடுமாறினான் வடி ....

"சரி வா நாம மால் உள்ள போவோம் என்றான்"

சிவா அருகில் ஜீன்ஸ் டீ ஷர்ட் போன்ற உடைகளை அணிந்து நின்ற அவனது நண்பர்களை பார்த்த வாடி தனது கிரீஸ் கரை படிந்த சட்டையை பார்த்தான், தயங்கினான்... .... இதை கவனித்த சிவா, வடி தோளில் கை போட்டபடி அழைத்து சென்றான் ... எங்கு பார்த்தாலும் சின்ன சூரியனை போல் பிரகாசித்த நியான் பல்புகள், இருக்கிறதா இல்லையா என்று தெரியாத அளவிற்கு மிக சுத்தமாக தோன்றிய கடை கண்ணாடிகள், காலை வைத்தல் கீச் கீச் என்று சப்தமிடும் பளிங்கு போன்ற தரைகள், வண்ண வண்ணமாக சித்திரங்கள், மயக்க வைக்கும் திரவிய வாடைகள், மேற்க்கத்திய பண்பாட்டின் பிரதிபலிப்பு.... இவை அனைத்தையும் வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டிருந்தான்

"அப்புறம் சொல்லுடா வடி.... அப்பா அம்மா நல்ல இருக்கங்களா? தம்பி நல்ல படிக்கிறானா? எவ்வளவு நாள் ஆச்சு அவங்க எல்லாரையும் பாத்து... எல்லாரும் என்னடா சாப்பிடுறீங்க ? பிசாவா ? இருடா வடி"...

"இல்ல சிவா" என்று பேச முயன்ற அவனை சிரிப்பினால் அடக்கினான் சிவா ....

சிவா இல்லாத சமயம் - "அப்புறம் பிரதர் சொல்லுங்க - என்ன செய்யறீங்க" என்று சிவாவுடன் வந்த ஒருவன் கேட்டான்....

"நான் ஆட்டோ ஓட்டுறேன்" என்றான் வடி ...

"அட இங்க என்ன பண்றீங்கன்னு கேட்டேன்" ...

"அது வந்து..." என்று இழுத்தான்...

"சும்மா, விண்டோ ஷாப்பிங் பண்ண வந்திருப்பருடா.... அவர் வாங்கற மாதிரி இங்க ஒன்னும் இல்ல ன்னு அவருக்கு தெரியாதா" என்ன என்று சிரித்தான் மற்றொருவன் ...

வடிவேலுக்கு மனதில் கோபம் வந்தாலும் அவன் சொல்வது சரி என்றே நினைத்து தலை குனிந்து கொண்டான்...

"Friend க்கு கிபிட் வாங்க வந்தேன்" என்று சிவா அருகில் இல்லை என்பதை உறுதி படுத்திக்கொண்டு சொன்னான் ....

அதை கேட்டு பின்னால் திரும்பி சிரித்தான் ஒருவன் ....
"
"எவ்வளவு வெச்சிருக்கீங்க?" தயங்கி அவன் இரண்டு நாட்கள் எக்ஸ்ட்ரா வேலை செய்து சேர்த்து வைத்த பணத்தை நினைத்து "500" என்றான் ....

"ஹா ஹா" என்று சிரித்த ஒருவன்,

"இப்போ சிவா உங்களுக்கு வாங்குற பிசா விலை தெரியுமா பிரதர்? 300 ருபாய்... அவனுக்கு பதிலுக்கு நீங்க என்ன கேட்சுப் பக்கெட் வாங்கி தர போறீங்களா?" என்று சொன்னதை கேட்டு நொந்து போனான் வடி .....

அடி மனதில் ஆழமாக குத்தப்பட்ட அவன் மனம் அங்கிருந்து போய்விடு போய்விடு என்று அடித்துகொண்டது ..... தாள முடியாமல் எழுந்து திரும்பினான் ..... அங்கே சிவா கையில் பிசா தட்டுடன் நின்றான்....

"என்னடா வடி சாப்டாம எங்க?" "இல்ல, அவசரமா வேலை" என்று இழுத்தான் வடி ... பின்னர் "மன்னிச்சுடுடா சிவா" என்று சொல்லி விரைந்தான் ..... வீட்டிற்க்கு வந்தவுடன் அந்த குரங்கு பொம்மையை வெளியில் எடுத்து தன் வாசல் திண்ணையில் வீசினான்

நீண்ட நேரம் ஆகியும் தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்தான் வடி .... தன் கூரை ஓட்டை வழியாக வானத்தில் தெரியும் நிலா வெளிச்சத்தில் கை கடிகாரத்தை பார்த்தான்.... பன்னிரண்டு அடிக்க இரண்டு நிமிடங்கள் .... கண்களை மறுபடியும் மூடி தூங்க முயன்ற அவனை வாசல் கதவில் பலமாக யாரோ தட்டுவதை கேட்டான்.... கதவை திறந்த அவனுக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை ... அங்கே சிவாவும் அவர்கள் இருவருடன் பள்ளியில் படித்த மூன்று நண்பர்களும் சிரித்தபடி கையில் பெரிய கேக்கை வைத்து கொண்டு நின்றிருந்தனர் ......

சிவா, வடி வாங்கிய குரங்கு பொம்மையை கையில் வைத்திருந்தான்...... அணைத்துக்கொண்டு ....

sudha india
30th July 2013, 11:39 AM
Friends for ever........ nice once.

Madhu Sree
30th July 2013, 02:23 PM
nanbenda... :D

Good one :)

bingleguy
30th July 2013, 09:38 PM
thanks Sudhanga and Madhu :) trying it in tamil for first time ...